நல்வரவு_()_


Monday 27 June 2011

கலரு கலருதான்:)))

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா என்பது உங்கட கண்களில்தான் தங்கியிருக்கூஊஊஊஊஊ....:).

இம்முறை எங்களுக்கு கோடை என்பது இல்லைப்போலவே தெரிகிறது, அவ்வளவு மழையும் குளிரும். ஆனாலும் அதுக்கிடைப்பட்ட காலத்தில் பூத்த மலர்களின் அழகிலே, கலரிலே  மயங்கி படமெடுத்தேன்...

என்ன என்ன கலர்கள்... திரும்பும் வீடுகள் எல்லாம் பூ மயம்தான்.... போனவருடம் போட்ட மலர்களை விடுத்து, இம்முறை கலருக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன், அதால திட்டமாட்டீங்க என நம்பிக்கை இருக்கூஊஊ...

நான், பூங்கா எங்கும் போய் எடுக்கவில்லை, இவை எல்லாம் எங்கள் அயல் வீடுகளில் இருக்கும் பூக்களே.... இங்கு வீடுகள் வீதியோரமெல்லாமே பூக்கள்தான், ஸ்பிரிங் ஆரம்பித்துவிட்டாலே... ஊரே பூங்காவனம்போல காட்சிதரும்..

இது பிங் கலர்தானே? கரெக்ட்:).


இது மரூண்?...


இது மஞ்சள்....?


லைட் பேப்பிள்?(இது வேற லைட்:))


குங்குமப் பூக்கலர்?:)

 இவை நிலத்திலே செடிபோல இருந்து பூக்கும், இவற்றில் பல நிறங்கள், கொத்துப்பூ, கொத்தில்லாதது என பல ரகம் இருக்கு...


இவர் பிங்கி:)



வெள்ளை நிற மல்லிகையோ?:)


(பிந்தியகுட்டி இணைப்பு:))

இது ஒரேஞ்:

இது பிங் அண்ட் ஒரேஞ்:

இவர் பேப்பிள்:


கீழே இருப்பவை மூன்றும், பிரவுண் நிற மரங்கள், அதாவது வின்ரர் முடிந்து, பட்டமரம்போல இருப்பதில், இலைகள் முளைக்கத் தொடங்கும்போது இப்படித்தான் வரும், பின்பு நல்ல வெப்பநிலை உருவானதும்(கோடை) பச்சையாக மாறிவிடுமென நினைக்கிறேன், ஆனா இப்பவும் ஒரு கண்ணை இவற்றின் மேல் போட்டபடிதான் போய் வருகிறேன், இன்னும் பச்சையாகவில்லை:(.




இது மட்டும், அருகிலிருக்கும் ஒரு குழந்தைகள் பூங்காவில் எடுத்தேன்:)


இது என்னவெனத் தெரிகிறதோ? ஒரு குட்டி நீரோடை, மலைப்பகுதி என்பதால் வீடுகளுக்கிடையே சில நீரோடைகள் இப்படி இருக்கும், இத்தண்ணி ஓடிச்சென்று எங்கள் முன் இருக்கும் எங்கட:) ஆற்றிலே இரண்டறக்:) கலக்கும்..
 =========================================================
மெசின் ஊசி இணைப்பூஊஊ:)
இந்தக் கதையைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கோ.. இங்குள்ள மக்கள் தமக்கு செலவழிக்கிறார்களோ இல்லையோ, பூனை நாய்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மிகச் செல்லமாக வளர்க்கிறார்கள். ஆரம்பகாலத்திலே என் கணவர் எனக்குச் சொன்னார்,  இங்கே பூனை நாய்களைக் கண்டால் தொட்டுத் தடவிடாதீங்கோ, படமெடுக்கக் கூடாது, உணவேதும் கொடுக்கக்கூடாது, என்ன செய்வதாயினும் உரிமையாளரின் அனுமதிபெற்றே செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்களுக்குக் கோபம் வரும்.

அதனால நான் படமெடுக்கவும் பயப்பிடுவேன். அன்று ஒருநாள், லேசான மழைநாள், ஆரோக்கியத்துக்காக:)  நடந்துகொண்டிருந்தபோது, எதிர்பார்க்கவில்லை, ஒரு பூஸார் ஓடிவந்து கால்களைச் சுத்தத் தொடங்கிட்டார்... சுத்தக் கறுப்புப் பூஸார்.. காலை நகர்த்த மனமில்லை, படமெடுக்காமல் விடவும் மனமில்லை,  நின்றபடியே மேலிருந்து படமெடுத்துவிட்டேன்...:).

என் காலைத்தான் அதிகம் சுத்தினார்... தூரத்து உறவாக இருப்பாரோ?:))).
முடிவு என்னன்னாஆஆஆ:
புளொக் ஆரம்பித்தமையால் ஒரு நன்மை, ரசனை அதிகமாகியிருக்கு, ஆராயும் திறன் கூடியிருக்கு. அ-து... ஒவ்வொரு கால மாற்றத்துக்கும் இயற்கையின் மாற்றம் எப்படி இருக்கு என்பதையெல்லாம், ரசித்து ரசித்துப் படமெடுக்கிறேன்.

பொன்னான குறிப்பு:
என் பக்கத்தில ஸ்மைலி வேர்க் பண்ணவில்லை, அதனால தயவு செய்து ஆரும் ஸ்மைலி போட முயற்சித்து ஏமாந்திடாமல், ஒண்ணொண்ணாத் தட்டுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்.. நான் எழுத்தைச் சொன்னேன்...

-----()-----


Thursday 23 June 2011

அதிராவோ கொக்கோ?:))

தலைப்பைப் பார்த்து அடிக்கப்புடாதூஊஊ... பதிவுக்குப் பொருத்தமாகப் படம் போடுறதெல்லாம் ஓல்ட்டூஊஊஊ பாஷனாம்.... அப்துல் காதர் சொல்லியிருக்கிறார். அப்பூடியெண்டால், பதிவுக்குப் பொருத்தமாக தலைப்புப் போடுவதும் ஓல்ட்டூஊஊ பாஷன்தானே?:) ... எப்பூடி என் கிட்னியின் திங்கிங்யா?:)))).

சரி சரி, இந்தப் பற்றனைப் பாருங்கோவன்.....



 என்னை எங்கு கண்டாலும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஒரு வழிப் பண்ணிடுவார்கள் இவர்கள், அது எந்த இடமானாலும் விடவே மாட்டார்கள் அவ்வளவு ஆசை என்னில அவிங்களுக்கு:). அவர்களுக்காகவே பெயிண்ட் பண்ணி, நானே தைத்த தலையணை உறைகள்.



3333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
  
இவ பெயர் கிரெட்டா.... போனகிழமைதான் 90 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினா, இவவுக்கு சிகப்பு நிறமெண்டால் சரியான விருப்பம், பெரும்பாலும் கான்ட்பாக், தோடு, சூஸ் எல்லாமே சிவப்பாக போடுவா...

அவவுக்காக சிவப்பிலே தைத்துக் கொடுத்தேன்...
3333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
 இவ ஜீன். 93 வயது, இருவரும் இணைபிரியா நண்பிகள்.... நல்ல ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள், இவ கண்ணாடிகூட அணிவதில்லை. 
 இவவுக்கு நீல நிறமென்றால் நல்ல விருப்பம், அவவுக்காக நீல நூலிலேயே பற்றன் போட்டு தைத்தேன்.  “இந்த பெயிண்டிங்கில் உள்ள கலரில்தான் தன் அறையும் அலங்கரித்திருக்கிறேன்.... இது நல்ல பொருத்தமாக இருக்கும்” என மிகவும் சந்தோஷப்பட்டா.
3333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
  
பார்த்தீங்களோ? அதிராவுக்கு 6:) வயசில இருந்து 93 வயசுவரைக்கும் நண்பர்கள் இருக்கிறாங்கோ..... உங்களுக்கு?:).

8888888888888888888888888888888888888888888888888888888888
குண்டூசி இணைப்பு:
ஹா.....ஹா.....ஹா....... இண்டைக்கு முளுக்க, ரீவில ஒரே பகிடி பகிடியாகப் போடுறாங்கப்பா.... சிரிச்சதில வயிறு வலிக்குது:))))).
888888888888888888888888888888888888888888888888888888888
ஓடினால்தான் நதி
மலர்ந்தால்தான் மலர்
சிரிச்சால்தான் மனிதன்
88888888888888888888888888888888888888888888888888888888


Monday 13 June 2011

எங்கள் ஊர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

பிள்ளையாரப்பா, இன்றுமட்டுமாவது என்னைக்காப்பாத்திப் போடுங்கோ:)
 என்னத்தைச் சொல்ல? எப்பூடிச் சொல்ல? நான் பிறந்த ஊர்தான் என் சொந்த ஊர், படித்த ஊரும் பிடித்த ஊர்தான், வேலை பார்த்த ஊரும் எனக்குப் பிடித்த கொழும்புதான், இப்போ இருப்பதும் மிகவும் பிடித்த ஊர்தான்.... எதைச் சொல்வேன்? எதை விடுவேன்? அவ்வ்வ்வ்வ்வ்:))).

அந்த ஊரைச் சொன்னா இந்த ஊர் திட்டும், இந்த ஊரைச் சொன்னா அந்த ஊர் திட்டும், சொல்லாட்டில் கீழக்கரை ஸாதிகா அக்கா திட்டுவா:) அதனால வாணாம் கட்டிலுக்குக் கீழயே இருந்திடலாம் என முடிவெடுத்தேன்.... அதுவும் முடியல்ல.. அதனால எடுக்கிறேன் பேனாவை, ஆரம்பிக்கிறேன் என் ஊரின் பெருமைகளை...

அதிராவோ கொக்கோ... கொஞ்சம் பெரிசுதான்( பதிவு) அஜீஸ் பண்ணிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:).

 “இந்துமா ஆழியில் இலங்குகின்ற முத்தென
வந்து போன வெள்ளையர் வாழ்த்தி நின்ற தீவடா”

என்ற பாடல் இயற்றப்பட்ட மாங்காய்போல் தோன்றிடும் மாணிக்கத் தீவான இலங்கையிலே, வடபகுதி யாழ்ப்பாணம்தான் எங்களிடம். யாழ் ரவுனிலிருந்து பரந்திருக்கும் ஊர்களில், கிட்டத்தட்ட 4 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் அழகான ஒரு குட்டி ஊர் எங்களூர்.

வெளிமாவட்டத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போது,  “அதோ யாழ்ப்பாணம் வருகிறது” என்றாலே முதலில் தெரிவது பனைமரங்கள்தான். நான் போய்வந்த காலம் வேறு இப்போ இருக்கும் காலம் வேறு, அதனால் எதைச் சொல்வதெனத் தெரியவில்லை, என் பேபிக் காலத்து நினைவுகளையே பகிர்ந்து கொள்கிறேன்.

நானறிந்து சைவத்திலே தளைத்தோங்கிய ஊர் எங்களூர். திரும்பும் பக்கமெல்லாம் கோயிலும் மணி ஓசையும்தான். ஊரிலிருப்போர் அசைவம் உண்பதே விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களே. ஒரு கோயில் முடிய அடுத்த கோயில் கொடியேறி.. தேர், தீர்த்தம் என கொண்டாட்டமாகவே இருக்கும். இதனால் எங்களூரில் பலபேர் சைவமாகவே இருக்கிறார்கள். எங்கள் அம்மம்மா + அவவின் வயதை ஒத்தவர்கள் பெரும்பாலும் சைவம்தான்.

கலை உணர்வு அதிகமுள்ள ஊர். அதாவது வீணை, வயலின், மத்தளம், நடனம், சங்கீதம் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊர், பெரும்பாலான கோயில்களில் வகுப்புக்கள் நடைபெறும், இதற்கெனப் பல நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.  புகழ்பெற்ற வித்துவான்களும் உருவாகியிருக்கும் ஊர்.

நான் ஊரிலிருந்த காலங்கள் மிகவும் குறைவே. விடுமுறைகளில் மட்டுமே ஊருக்குப் போய் வருவோம். இறுதியாக இரவு 7.30 மணிபோல் ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள்.. இரண்டு மணி நேரத்துள் யாழ் நகரை விட்டு வெளியேறுங்கள் இராணுவத்தினர் முன்னேறி வருகிறார்கள் என்று... அன்று ஒரு சூட்கேசுடனும், என் புதுச் சைக்கிளையும் உருட்டிக்கொண்டு நாவற்குழி நோக்கி புறப்பட்ட பயணம்தான், நாவற்குழியில் என் சைக்கிள் களவாடப்பட்டுவிட்டது:(.... 

((ஊசிக்குறிப்பு: தயவுசெய்து என்  “றலி” லேடீஸ் சைக்கிளை ஆராவது கண்டால், என்னிடம் ஒப்படைக்கும்படி மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.... அதை நான், என் குழந்தைபோல அழகாக மினுக்கி துடைத்து ,ஸ்ரிக்கர் ஒட்டி  எப்பவும் பழபழப்பாக வைத்திருந்தேன்:( ))

அதன்பின் திருமணமாகி கணவர் குழந்தையோடு ஒரே ஒரு தடவை போனேன்... வீட்டை ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன் நிற்கவில்லை. வைத்துவிட்ட வந்த கியூரெக்ஸ் கூட அப்படியே அதே இடத்தில் இருந்தது, பழைய நினைவு வரவே நெஞ்செல்லாம் கனத்தது... என்னவோ செய்தது......  இன்றுவரை ஊரை  மிஸ் பண்ணுகிறேன்.

முக்கியமான ஒரு விஷயம் எங்களூர்க்கிணறு(எனக்கு அது வியப்பூட்டும் ஒரு விஷயம்). குடிதண்ணீர் மிகவும் சுவையானது. நான் ஓரளவு சின்னனாக இருந்த காலத்திலேயே, சிலர் முற்றத்திலே குழாய்க்கிணறு வெட்டிவிட்டார்கள், பெரும்பாலும் எல்லோரும் மோட்டார் போட்டுவிட்டார்கள். 

ஆனால் முன்பு 6,7 காணிகளுக்குப் பொதுவாக ஒரு கிணறு வெட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும், கிணற்றுக்கென தனித்தனிப் பாதை இருக்கும். பெரிய தூரமென நினைத்திட வேண்டாம், காணியின் அளவைப் பொறுத்து சிலருக்கு முற்றத்திலும் கிணறு அமைந்திருக்கும். அதற்கு காரணம், கிணற்றின் ஆழம் கிட்டத்தட்ட 1 அல்லது அதற்குகூடிய  பனைமரத்தின் உயரமளவு இருக்கும்

விட்டமும் பெரிதாக இருக்கும்(கல்பூமியாக இருக்குமோ தெரியாது). கிணற்றுக்கு உயரக் கட்டெல்லாம் இருக்காது, மிதி என்று சொல்வார்கள் அதில் நின்றுதான் தண்ணி அள்ளுவார்கள், அழகாக, நின்று குளிக்க எல்லாம் சீமெந்தால் கட்டப்பட்டிருக்கும், துலா மூலம்தான் தண்ணி அள்ளுவார்கள். ஒருவாளி தண்ணி அள்ளிக் குளித்துவிட்டு, மற்றவாளி அள்ளுவதற்குள் உடம்பு காய்ந்துவிடும்:).

மிகவும் ஆழத்திலே 5,6 அடி உயரத்துக்கு தண்ணி இருக்கும். ஆனால் எட்டிப்பார்த்தால் பளிங்குபோல அடிக்கிணற்றில் இருக்கும் கற்கள் தெரியும், சிலநேரம் சிலரின் தோடு, மோதிரம் விழுந்துவிடும், எட்டிப்பார்த்துக் கண்டுபிடிப்போம் எங்கே இருக்கு என்பதை அவ்வளவு துலக்கமான நீராக இருக்கும். அதன் சுவையோ தனிதான்

நல்ல கோடையில் நேரடியாக தண்ணீரை அள்ளிக்குடித்தால், பிரிஜ்ஜில் இருந்து எடுத்த கோல்ட் வோட்டர்போல இருக்கும். மதிய வேளைகளில் எம் வீட்டுக்கு வருவோர் கேட்பார்கள், எதுவும் வேண்டாம் ஒரு செம்பு பச்சைத்தண்ணீர் தாங்கோ என்றுதான்.... அவ்ளோ சுவை.சரி சரி கண்படுத்திடாதீங்கோஓஓஒ... நான் தண்ணியைச் சொன்னேன்:).

எம்மிடத்தில், திருமணத்தின் பின்பு ஆண்கள்தான் பெண் வீட்டில் வந்து இருப்பார்கள்(சட்டம் எல்லாம் கிடையாது, பரம்பரையாக இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது), அதனால் பரம்பரை பரம்பரையாக பெண்பிள்ளைகளுக்கே வீடுகொடுப்பார்கள் பெற்றோர். 

எத்தனை பெண் பிள்ளைகள் இருப்பினும், வீடு கட்டிக் கொடுத்திடுவார்கள் அல்லது காணியாவது கொடுப்பார்கள்(கூட்டுக் குடித்தனம் எல்லாம் கிடையாது).அதனால் எப்பவுமே அம்மாவழி ஊரைத்தான் நாம் எம் சொந்த ஊர் என்போம்.

நான் கதைப்பதெல்லாம் பல வருடங்களுக்கு முந்தின ஊர்க் கதைகளே. எனக்கு ஊரில் மிகவும் பிடித்த விஷயம், அதிகாலை 4.30/5 மணிக்கெல்லாம், வீட்டில், அயலில் எல்லோரும் எழுந்திடுவார்கள். முற்றம் கூட்டிக் கேட்கும், தண்ணி அள்ளும் சத்தம் கேட்கும், கோயில் மணி ஓசைகள் ஒலிக்கத்தொடங்கிவிடும், அதிகாலையிலேயே தேநீர், ரீ ரெடியாகிடும்.... அதெல்லாம் பசுமை நினைவுகளே.

அதிகமாக எங்கும் பூவரசம் மரங்கள் காணலாம்.... இப்போ எல்லாம் மதில்களாகிவிட்டமையால் அவையும் குறைந்திருக்குமென்றே நினைக்கிறேன்.

முக்கியமான ஒண்ணை மறந்திட்டனேஏஏஏஏ.... எங்கட ஊர்மண்ணின் நிறமென்ன தெரியுமோ? சிகப்பூஊஊ. மேல்மண் சிகப்பு மணல்போல இருக்கும், கீழ் மண் தண்ணிபட்டால் களிமண்போல வரும். நாங்கள் விடுமுறையில் போய் நிற்கும்போது, இம்மண்ணைக் குழைத்து வடை, மோதகம், கொழுக்கட்டை எல்லாம் செய்து வெய்யிலில் காயவைப்பேன். 

காய்ந்தபின் கல்போல ஆகிவிடும். அதை ஒரு பையில் போட்டு, அங்கு எங்காவது வைத்து, அன்ரியாட்களிடம் சொல்வேன், அடுத்தமுறை நான் வரும்வரை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கோ என்று. நாம் புறப்பட்டபின், அந்த வடை மோதகத்தைப் பார்த்துப் பார்த்து அன்ரியாட்கள் மிகவும் கவலைப்படுவார்களாம் என்னை நினைத்து:(((.

பார்த்தீங்களோ, ஆறு வயசிலிருந்தே நான் ரொம்ப நல்ல பொண்ணு:), இல்லையென்றால் என்னை நினைத்து அவர்கள் கவலைப்படுவார்களோ?:)) சரிசரி முறைக்காதீங்க...:))கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

என்னில் இப்பவும் ஒரு பழக்கம், எங்காவது போனால் என் நினைவாக, அவர்கள் வீட்டுச் சுவரிலாவது, ஒரு குட்டி அடையாளம் வைத்துவிட்டு வருவேன். ஆரோ சொன்னார்கள், வீட்டுக்குப் பெயிண்ட் பண்ணும்போது, என் அடையாளத்தை அழிக்க விரும்பாமல், அதைவிட்டுவிட்டுப் பெயிண்ட் பண்ணியதாக..... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்..:(.


ஊரைப் பற்றிக் கேட்டால், உங்களைப்பற்றிச் சொல்றீங்களே என அடிக்க வரப்பிடா... அடிச்சா வலிக்குமில்ல?:). இப்பூடிச் சான்ஷை மிஸ் பண்ணிட்டா, பிறகு எப்போதான் நான் என்னைப்பற்றிச் சொல்றதாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:).

குட்டி பின் இணைப்பு:
தின்ன தின்ன ஆசை.... தீராத ஆசை.... முத்து முத்து ஆசை.... முத்தமிட ஆசை.... என்ன இந்தப் பூமி.... செத்துவிட ஆசை:)))).
==============================================



Friday 10 June 2011

காணாமல் போன நண்பிக்கு!!!!



ஒரு கற்பனைக் கவிதை:)


திருவிழாக் கூட்டத்திலே
தொலைந்துபோன சங்கிலிபோல்
இடம் பெயர்ந்த மக்களோடு
காணாமல் போன என் நண்பியே!!

நீ எங்கே இருக்கிறாய்?
முகவரிகள் மாறியதால்
தொடர்புகள்
துண்டிக்கப்பட்டனவே!!

பின்புறத்தைப் பார்த்து
நீயாக இருக்காதா
என எண்ணி ஓடிச்சென்று
முகம் பார்த்ததும் - அது
நீயில்லை என்று எத்தனைநாள்
ஏமாந்திருக்கிறேன்!!

என்னைப்போலவேதான்
நீயும் எங்காவது
ஏமாந்துகொண்டிருக்கிறாயா?!!

நம் உருவங்கள்
மாறியிருக்கலாம் - ஆனால்
என்றைக்குமே - நம்
நட்பு மாறாது!!

ஏனெனில்
முகம் பார்க்க முன்பே
பேனாவினால்
கருத்தரித்த நட்பல்லவா
நம் நட்பு!!

*********************************************************************************
ஊசி இணைப்பு:)
 
“பிறர் என்ன சொன்னாலும், அவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதீர்கள்,உங்கள் மனச்சாட்சி என்ன சொல்கிறதோ, அதன்படியே உங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ளுங்கள்”.

**********************************************************************************


விடுங்கோ தம்பி வாறன்:), ஏதோ சத்தம் கேட்குது.. ஓஓஓஓ... பிளேன்போலதான் இருக்கு.... கொஞ்சம் பதிஞ்சதுபோல போகுதே.. எப்பத்தான் லாண்ட் பண்ணப்போகுதோ???:(.....

**********************************************************************************
கொசுக்கடிக்கு சே..சே... கொசு மயிலுக்கு தம்பி அனுப்பினவர்... இங்க மட்டுமில்ல, தம்பிக்கு எங்கபோனாலும் இலவச:) அனுமதியும் பல்கனில சீற்றும் குடுக்கினம்ம்ம்ம்ம்ம்ம்ம்:). 


**********************************************************************************

Friday 3 June 2011

பட்டமரம் தளிர்த்திடுமோ பாரினிலே .... அன்றும் இன்றும்...

தளிர்க்கிறதே.....



இரு காலங்களையும் இணைத்து ஒரு தொகுப்பாக்கிப் போடவேண்டும் என்பது நெடுநாள் ஆசை, அதனால் எப்பவோ பிளாஆஆஆஆன் பண்ணி படம் எடுக்கத் தொடங்கினேன். ஆனால் அதை எங்கெங்கெல்லாம் சேவ் பண்ணி வைத்தேன் எனத் தெரியாது, அதனால் முடிந்தவரை ஒன்றொன்றா பொறுக்கிச் சேர்த்து... ஒரு பதிவாக்கி... உஸ் அப்பா... போதும் என்றாகிவிட்டது:)...

ஸ்னோ காலத்தையும், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்னோக்கு முந்தின காலத்தையும் இன்றோடு ஒப்பிட்டு ஒரு இடுகை:).

இது அன்று...
இன்று...



அன்று...
இன்று..

அன்று...


அன்று........................................




அன்று.......................



அன்று................................


==========================================================
கெதியா வெளிக்கிட்டு நில்லுங்கோ அடிராக்கா, அஞ்சுமணிக்கு வந்திடுவன் எனச் சொல்லிப்போன அம்பியை இன்னும் காணேல்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... எவ்ளோ நேரம்தான் தண்ணியும் குடிக்காமல் காத்திருக்கிறது... தண்ணி குடிச்சு லிப்ஸ்ரிக் அழிஞ்சிட்டாலும் என்று பயம்மாக்கிடக்கே.......கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
=========================================================

ஊஊஊஊஊசி இணைப்பூஊஊஊஊஊஊ

இல்ஸ்ஸ்ஸ்:-
நாம பெரிய ஆளா வரணும்னா ஏற்கெனவே பெரிய ஆளா‏(அறிவில:)) இருக்கறவங்க கூட கை கோர்த்துக்கணுமாம்.

பூஸ்ஸ்ஸ்ஸ்:-
"அப்படியா! வித் ப்ளெஷர்! நீங்க எல்லோரும் எ‎ன் கூட கை கோர்த்துக்கறதுல எனக்கு எந்த ஆட்சேப‎னையும் இல்ல..!"

மீ...... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கூல்...கூல்....:).
========================================================