நல்வரவு_()_


Showing posts with label சிரிக்கலாம் வாங்கோ. Show all posts
Showing posts with label சிரிக்கலாம் வாங்கோ. Show all posts

Sunday, 27 May 2018

கொஞ்சம் சிரிக்கக்கூடாதோ:)

======================================
நம் காதலைக் கொன்று
தன் காதலை உயிர்ப்பிக்கிறாரே
அவர் காதலாவது நிலைக்கட்டும்
.... ஒரு பூவையின் சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:) ஒரு பூவின் புலம்பல்:)).. கவித.. கவித.. படைத்தவர்.. கவிப்பேரரசு.. கவிமாமணி.. அதிரா:).
========================================================
காதலன்: அன்பே உனக்காக நான் உயிரையும் தரத் தயாராக இருக்கிறேன்..

காதலி:. உயிர் தருவது இருக்கட்டும், முதல்ல என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தாங்க அது போதும்:)
========================================================

========================================================
ருவர் மிக மிகக் குண்டாகிட்டாராம், அப்போ உடலைக் குறைக்க முடியல்லியே எனும் கவலையில் இருந்தபோது, அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைச்சதாம்... அங்கு போனதும் “உடல் எடையைக் குறைக்க வேண்டுமோ?.. வருக வருக” என ஒரு போர்ட் கண்டு, உள்ளே போய் விசாரிச்சாராம்.

அங்கிருந்த பெண் சொன்னாராம் இது ஜாலியாக விளையாடி எடையைக் குறைப்பது, சாதாரண ரிக்கெட் எனில் 50 டொலர்கள்.. லக்‌ஷரி எனில் 200 டொலர்கள் என.

இவர் நினைத்தார், சாதாரணமே போதும், எதுக்கு அவ்ளோ பணம் செலவு பண்ணோனும் என 50 டொலர் ரிக்கெட்டை வாங்கினாராம்.

சற்று நேரத்தில் அவரைச் சொன்னார்களாம் சரி உள்ளே போங்கள் என. இவர் உள்ளே போனாராம், பெரிய ஹோல் இருந்ததாம்.. அங்கு மேசை கதிரை எல்லாம் தலைகீழாக உருண்டு அலங்கோலாமாக இருந்ததாம்.. தூரத்தே பார்த்தால் ஹோலின் மூலையில் ஒரு 18 வயசு  பெண்.. அரை குறை ஆடையுடன் .. மிக அழகாக இவரைப் பார்த்து கூப்பிட்டதாம்..

இவரும் அப்பெண்ணைத் தொடலாம் என ஓடினாராம்.. அப்பெண் அக் ஹோல் முழுவதும் சுற்றிச் சுற்றி ஓடினாவாம்.. இவரால் பிடிக்க முடியவில்லையாம்.... களைச்சுப் போய் வெளியே வந்தாராம்.

வெளியே வந்தவருக்கு ஆசை அதிகமானதாம்.. அதாவது ஓடினறி ரிக்கெட்டுக்கே இப்படி எனில் லக்‌ஷரி ரிக்கெட்டுக்கு எப்படி இருக்கும் எனும் ஆசையில் போனால் போகுதென, லக்‌ஷரி ரிக்கெட் தாங்கோ என கேட்டு வாங்கிக்கொண்டு உள்ளே போனாராம், அதேபோல உள்ளே பெரிய ஹோலில் கதிரை மேசை எல்லாம் உருண்டு பிரண்டு அலங்கோலமாகக் கிடந்ததாம்.. ஆனா மூலையிலே ஒரு 90 வயது ஆச்சி.. அதே அரை குறை ஆடையுடன்.. இவரைத் துரத்தத் தொடங்கியதாம்:).. ஆச்சியிடம் இருந்து தப்பினாலே போதும் என இவர் ஓடோடெண்டு ஓடி தப்பி வெளியே வந்தாராம்:).. ஆசை படுத்தும் பாடு:).[தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்.]
========================================================
========================================================

மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்குப் பார்த்திருக்கிற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக்கூடாதா?
கணவன்: நான் ஏன் சொல்லணும்
மனைவி: நீங்க அவர் பிரண்டுதானே
கணவன்: அவன் மட்டும் எனக்குச் சொன்னானா என்ன?:)
*******************************
அடுத்த வீட்டுக்காரர்: சார்.. பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாமல் போய் மூணு மாசமாகுது
இன்ஸ்பெக்டர்: அதுக்கு ஏன்யா பொலீஸ் ஸ்ரேஷனுக்கு, நீ வந்து புகார் குடுக்கிற?
அடுத்த வீட்டுக்காரர்: சார்.. அந்த ஆளு புகாரே குடுக்காம சுத்திட்டு இருக்கார் சார்:))
========================================================
சத்து இருங்கோ... தொண்டை வரண்டு போச்சு:) கொஞ்சம் கூலா ஊஸ்:) குடிச்சிட்டு வாறேன்:)
========================================================



===================================

இந்த இடத்தில நான் ஜிரிக்கல்ல.. ஜிரிக்கல்ல:)) மீ ரொம்ப நல்ல பொண்ணு:))
=================================================================
கணவன்: நெஞ்சு வலிக்குது.. டாக்டருக்குப் ஃபோன் பண்றியா?
மனைவி: உங்க ஃபோன் பாஸ்வேர்ட் சொல்லுங்க
கணவன்: இல்ல இப்ப பறவாயில்ல.. ஃபோன் பண்ண வேண்டாம்..
================================================================




ஊசிக்குறிப்பு:
======000======
அஞ்சூஊஊஊஊஊஉ அஞ்சூஊஊஊஊஊஉ வாணாம் வாணாம் எந்த விபரீத முடிவும் எடுத்திடாதீங்க.. கீழே இறங்குங்கோ.. பீஸ்ஸ்ஸ் நீங்க தேவதைக் கிச்சினில் போடும் சமையல் எல்லாம் நாங்க வாயை மூடிக்கொண்டே:) சாப்பிடுறோம்ம்:)).. இறங்கிடுங்கோ அஞ்சூஊஊ:).

ஊஞ்சல் ஆடுபவர் ஆஷா.. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே:)) ஆடுபவர் அஞ்சு:)).. இனிமையான சுவிட் 16 குரலில் பாடுபவர் உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஆஷா போஸ்லே அதிரா:)

வீடியோ இங்கு தெரியாட்டில் இந்த லிங்கில் பாருங்கோ பிளீஸ்ஸ்..
https://youtu.be/J4IZj8pxcXc

நன்றி.. இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)
======_()_======

Sunday, 18 March 2018

ஹா ஹா ஹா என்னா முசுப்பாத்தி:) ஒரே பகிடிதான் ஹா ஹா ஹா:)

ஆராவது இண்டைக்குச் சிரிக்காமல் போய் விட முடியுமோ?:)
வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமாமே:) ஆனா சிலபேர் சிரிக்கவே பயப்பிடுவினம் கர்ர்ர்ர்:)).. சிரிப்போரையும் முறைச்சுப் பார்த்து சிரிக்க விடாமல் பண்ணுவோரும் உண்டு ஹா ஹா ஹா பன்னி:) பீப்பிள்:))[ஹையோ இது ஃபனி funny:) என்பதை  ஜொன்னேன்:)].

Monday, 6 November 2017

சிரிச்சுக் கன நாள் ஆச்சு:)..  சிரிக்கலாம் வாங்கோ:)

சிரிக்கலாம் வாங்கோ என அம்பாக்:) கூப்பிட்டால், சிரிச்சுக்கொண்டே வரோணும்:) சொல்லிட்டேன்:)..

Monday, 1 October 2012

நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)

என் தலைப்பைப் பார்த்ததும் உலகத்திலுள்ள அத்தனை நாடுகளிலிருந்தும்:) ஓடி வருவீங்க படிக்க:)).. படிங்க!!!..
நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)...
படிச்சிட்டு சும்மா போக மனம் வராது உங்களுக்கு:)) பின்னூட்டம் போடுவீங்க:).. போடுங்க!!!
நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:))..

ஹையோ இது ரெண்டாம் சுற்று:) அறிவிப்பு:) அதாவது வந்து “இத் தலைப்பு என் கொப்பிரைட் தலைப்பூஊ:))” இதை நான் எங்கினயும் களவாடல்ல:).. சுட்டிட்டு வரல்ல:)).. எங்கட “பறம்பறை” யிலயே இப்பூடிப் பழக்கமில்ல:) என்பதை மிகவும் ஏழ்மையுடன்.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:)) தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்:)).

சரி வாங்க!!! ஓன் பண்ணுங்க பூஸ் ரேடியோவை:)


நண்பன்: நீ ரொம்பக் குடித்திருக்கிறாய், நான் வேண்டுமென்றால் கூட்டிப்போய் வீட்டில விடட்டோ?

குடித்தவர்: அதெல்லாம் நான் ஸ்ரெடியாத்தான் இருக்கிறேன், ஆனா இங்கு ரெண்டு ரோட்டுப் போகுதே, இதில எந்த ரோட்டில் நான் போக வேண்டுமெனக் காட்டு.. அதுபோதும்.
(என்ன பார்க்கிறீங்க:) விழுந்தூஊஊஊஊஊஉ விழுந்தூஊஊஊஊ சிரிங்கோ:))


குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால்.... பூஸை மறந்துவிடலாம்:),
மறப்பதுக்கு ஒரு மனமிருந்தால், குடித்து விடலாம்:),
இருப்பதோ ஒரு மனம்.. நான் என்ன செய்வேன்:)!!..
ல்ல குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர், கதவைத் திறக்கமுடியாமல் தள்ளாடினார், இதைப் பார்த்த...

பக்கத்து வீட்டுக்காரர் ஓடிவந்து,
“தாங்க திறப்பை, நான் திறந்து விடுகிறேன்”

குடித்தவர்:  "அதெல்லாம் ஒண்ணும் வாணாம், நான் ஸ்ரெடியாத்தான் நிற்கிறேன், ஆனா இந்த வீடுதான் ரொம்ப ஆடுது, கொஞ்சம் ஆடாமல் பிடிங்க நான் திறக்கிறேன்"..
( தட்டுங்க தட்டுங்க.... கை தட்டுங்க.. இது நக:)ச்சுவை:) எல்லே.., கர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னால்தான் புரியுமாக்கும்:))

ஒரு வீடுக்குத் திருடப் போனான் திருடன், வீடு திறந்திருந்துது. ஆனா அவர் வாசல் வழியா உள்ளே போகாமல், பின்பக்கம் போய், குழாயைப் பிடித்து கஸ்டப்பட்டு ஏறி உள்ளே குதித்தார், அதைப் பார்த்த 

வீட்டிலிருந்தவர் கேட்டார்..
 "கதவெல்லாம் திறந்துதானே இருக்கு, எதுக்கு அதன் வழியே வராமல் இப்படிக் கஸ்டப்பட்டு வருகிறாய்?".

திருடன்:  "எங்கட அப்பா சொல்லியிருக்கிறார், “கஸ்டப்பட்டுச் சம்பாதித்த பணம்தான் தங்கும்” என அதனால தான்.
(ஒடிடாதீங்க.. இன்னொன்று இருக்கு:), அதையும் படிச்சிட்டு மொய் எழுதிட்டுப் போங்க:))

ஒரு வீட்டுக்குள் போய் பார்க்கிறார் திருடன், அலுமாரி நிறைய, பணமும் நகையும் இருக்கு ஆனா அதை எடுக்காமல், அங்கிருந்த பெண்ணின் கழுத்தில் இருக்கும், தாலியை அறுக்கப் போனார்,

உடனே பெண் கேட்டா
“இவ்ளோ நகை, பணம்.. அதுவும் திறந்தே இருக்கு, அதை எடுக்காமல் என் தாலியை அறுக்கிறியே எதுக்கு இந்த அநியாயம்” என.

அதுக்கு திருடன்: இது என் முதல் திருட்டு, அதுதான் மங்களகரமாக ஆரம்பிக்கிறேன்”.
* * *

ஊசி இணைப்பு:
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது..
பறந்தோடி புளொக் தேடி பின்னூட்டம் போடுகின்றது:)....
சிறு பூஸு நான் செய்த பாவம் என்ன?:)...
என் மீதுதான் கொண்ட கோபம் என்ன?....:)
படிச்சிட்டும் பின்னூட்டம் போடாமல் போகும் எண்ணம் என்ன?:)
மணி மாளிகை உங்க புளொக்குத்தான் ...:)
தேம்ஸ் கரையிலே  “என் பக்கம்” தான்..:)..

காதோடு கிசுகிசு:
இன்று நான் வெளியே வரமாட்டேன், அமாவாசையாக்கும்:))நாளைதான் வருவேன்.... அதுவரை கோச்சிடப்பூடா:) ஆரும்:).
====================================================
உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் 
நேரமில்லை எனில், நீங்கள் கட்டாயம் 
தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்...
ஓடினால்தான் நதி..  பறந்தால்தான் பறவை....
சிரிச்சால்தான் மனிதன்....
இப்படிக்கு... புலாலியூர் பூஸானந்தா...
====================================================

Sunday, 23 October 2011

இதில ஒண்டுமே இல்லை:))

ஆண்டவா எல்லோரையும் காப்பாத்தூஊஊ... என்னையும்....தேன்ன்ன்:)))
ஹா..ஹா..ஹா.... அதுதான் தலைப்பிலேயே சொல்லிட்டனே இதில ஒண்டுமே இல்லை:) என்று, பிறகேன் ஓடிவந்து முறைக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:)))).

சரி வந்திட்டீங்கள்... நான் கேட்ட பூஸ் ரேடியோவிலிருந்து ஒரு நெயில்சுவை... அதுதான் நக(கை)ச்சுவை:)))....

ஒரு ஊரில் பிரபலமான ஒரு பிக்பொக்கட் காரர் இருந்தார். அந்த ஊரில் அவரைப்போல் ஆராலேயுமே அவரை வெல்ல முடியாது, அவ்வளவு திறமைசாலி.

ஒருமுறை அவர் பக்கத்து ஊருக்குப் போயிருக்கிறார், அங்கு போய்க் கொஞ்ச நேரத்தில் பார்க்கிறார், அவரது பொக்கட்டில் இருந்த பேர்ஸைக் காணவில்லை, அதை ஆரோ களவெடுத்திட்டினம்.

அப்போ அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தன்னிடமே களவெடுத்தவரென்றால் அவர் எவ்வளவு திறமைசாலியாக இருக்க வேண்டும் என நினைத்து, அங்கிருந்தோரை விசாரித்திருக்கிறார்.

அவர்கள் சொன்னார்கள், அது அந்த ஊரில் இருக்கும் ஒரு பெண் தான், இதில் அவ மிகவும் கெட்டிக்காரி என்று.

இவருக்கு உடனே யோசனை தோன்றிட்டு, அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, அவவையே திருமணம் செய்துகொண்டால்... எவ்வளவு நல்லது என எண்ணி, அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, திருமணம் முடித்து விட்டாராம்.

அவர்களுக்கு ஒரு குழந்தை கிடைத்தது, ஹொஸ்பிஸ்டலில் குழந்தை கையை இறுக்கிப் பொத்திப்பிடித்தபடி இருந்ததாம்.... எல்லோரும் அதைப் பார்த்து, கஸ்டப்பட்டு கையை திறந்தார்களாம்.... அங்கே பிரசவம் பார்த்த ஒரு நேர்ஸின் மோதிரம் குழந்தையின் கைகளில் இருந்ததாம்:)))))(பிறக்கும்போதே பிக்பொக்கட்:))))....  

ஹா..ஹா..ஹா... இது எப்பூடி????..  இரு திறமைசாலிக்குப் பிறந்த, திறமைசாலி:))))).

குட்டியூண்டு இணைப்பு:)).
இதுவும் ஒருவிதப் புய்ப்பம்:). இங்கு ஓகஸ்ட் மாதம் தொடங்கி... அநேகமாக எல்லா வீட்டிலும் ரோட்டிலும் நிற்குது, நிறையப் பூக்கும் அழகாக இருக்கு. 2,3 நிறங்களில் கண்டேன்... அதிகம் பிங்தான்... குட்டியாகவும் இருக்கு, பெரியதாகவும் இருக்கு, அழகான புய்ப்பம்:)).

இவை குட்டி...



இவை பெரியவை..




பின் இணைப்பு::
ஆசைகுப் படம் படமாப் போட்டு, ஆசை தீர வெளயாடியாச்சு:)))... அதனால இம்முறை படம் போடும் பசளிக்குட்டியை:)) நீக்கியிருக்கிறேன்(அதுதாங்க. ..facility:)). என்னாது... ஜெய்!!! வாயில கைவச்சுச் சிரிக்கிறமாதிரித் தெரியுது:)))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

 என் கணவர் சொல்வார், ஆராவது எம் இடத்தில் ஏதும் புதுசா ரெஸ்ரோரண்ட், ரேக் எவே ஷொப் ஓபின் பண்ணியிருக்கு... அதில் அந்தச் சாப்பாடு ரேஸ்ட் இந்தச் சாப்பாடு ரேஸ்ட்... எனச் சொன்னால்... அப்பூடியா..... தெரியாதே என விளிக்கப்படாது:))... கேள்விப்படுவதெல்லாம் சாப்பிட்டுப் பார்க்கோணும் என(எல்லாம் ஒரு சாட்டுத்தான்:))... புதிதாக என்ன உணவுப்பெயர் கேள்விப்பட்டாலும் விடமாட்டார்... பெரும்பாலும் நாம் போகாத ரெஸ்ரோரண்ட், புஃபே இல்லை எனலாம்... இங்கு:)).

அதுபோலத்தான்... புளொக்கில் படம் போடலாமே என்றால்...ஙேஙேஙேஙேஙேஙேஙே...:)) என விளிக்காமல், மாயா புண்ணியத்தில் போட்டு, அஞ்சுவின்  உதவியோடு  ருசிச்சு,ருசிச்சு.. அனுபவித்திட்டோம்.... அலுத்தே விட்டது,  இனியும் ஆசை மீண்டும் வரும்போது, மீண்டும் போடுகிறேன்.

ஊசி இணைப்பு:
ஆரைப் பார்த்தாலும் அடிக்க வருகினம்:))).. இதுதான் இப்போதைக்குப் பாதுகாப்பான இடம்.
பட்டப் படிப்பு படிக்க வந்தேன், பரம்பரையை உயர்த்த வந்தேன் மியாவ்வ்வ்:)))
இது.... மாயாவுக்காக.. ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்ஸ்ஸ் உடன், நானே படம் பிடித்த  ரோஜாக்கூட்டம்..
============================================
 “உண்மையான வீரன் யார் என்றால், 
எதிரிகளை அதிகமாகத்தாக்கும்
 உடல் வலிமை பெற்றவர் அல்ல, 
தனக்கு வரும் கோபத்தை
 அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”
============================================

Saturday, 7 May 2011

கிச்சு..கிச்சு..கிச்சு.. வருதோ?:))))

வருதோ? வருதோ? நான் சிரிப்பைக் கேட்டேன்:)...


வீட்டில... எல்லோரையும் உருட்டி உருட்டி கிச்சு கிச்சு.. காட்டிச் சிரிக்க வைப்பதென்றால் எனக்கு ரொம்ப புய்க்கும்:)..., ஆனா நான் தப்பி விடுவேன்.. சரி சரி ஆவலா கதை கேட்டது போதும்:)), இங்கே அதுக்குப் பதிலா எழுத்தில “பகிடிகளாம்” படிச்சிட்டு முடிஞ்சால் சிரிங்க மக்ஸ்ஸ்ஸ்ஸ்:)).





உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே உங்களுக்குத் தெரியுமா?

இல்ல சார் எனக்கு சிகரெட்டெல்லாம் பிடிக்கும் பழக்கமில்லை.




நாம நினைப்பதெல்லாம் நடக்க வெளிக்கிட்டால் என்ன ஆகும்?

தெரியல்லியே... ராஃபிக் ஜாம் ஆகிடும்:).

oo

உங்க சொந்த ஊர் எது?

அந்தளவுக்கெல்லாம் வசதி இல்ல சார், சொந்த வீடுதான் இருக்கு.

oo
Cat Funny Drives Car Driving Kitty Cats LOL Laughs Laughing icon icons emoticon emoticons animated animation animations gif gifs kitten kittens animal animals

உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிக்கிறாண்ணா என்ன அர்த்தம்?

என்ன அர்த்தம்? உன் பின்னால நான் நிற்கிறேன் என்று அர்த்தம்.

oo

கடவுள் நம்ம பாவங்களையெல்லாம் மன்னிகணும் என்றால் நாம என்ன பண்ணணும் சாமி?

பாவம் பண்ணனும்.

oo

என்னால வாயே திறக்க முடியல்ல டாக்டர்..

சரி சரி இருங்க, உங்க மனைவியை வெளியே போகச் சொல்றேன்.

oo

உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்?

வாயாலதான்.

oo

கடைக்காரர்:
"அம்மா உங்க நாய், என் கடைப் பழங்களைத் தின்னுது பாருங்க...!"

அந்தப் பெண் நாயிடம் திரும்பி:
"ஜிம்மி... பழத்தை கழுவாம சாப்பிடக் கூடாதுன்னு உனக்கு எத்தன வாட்டி சொல்லறது...?"

oo

தாத்தா!! ஏன் உங்க தலை மட்டும் வெள்ளையாவும் தாடி கருப்பாகவும் இருக்கு?

...அதுவா…அது வந்து என்னோட தாடி என் தலைமுடியை விட 20 வருஷம் இளையது.

oo

ஆசிரியர்:`காளையும் பசுவும் புல் மேய்ந்தன`, இதனைச் சரியா சொல்லு.

மாணவன்: `பசுவும் காளையும் புல் மேய்ந்தன`.

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: லேடீஸ் ஃபர்ஸ்ட் இல்லியா சார்?

oo

சர்தார் Electric கடையில்: "ஒரு ஆம்பளை Fan-ம், ஒரு பொம்பளை Fan-ம் கொடுங்க..."

கடைக்காரர்: "என்னய்யா உளர்ற? Fan-ல ஏது Ladies, Gents...?"

சர்தார்:  "அட.. Bajaj-ல ஒன்னும், Usha-ல ஒன்னும் கொடுப்பா..."

==========================================================
இடைவேளை

பேபி அதிராவும்...ம்ம்ம்..
இதுக்கு மேல ஆரும் குறுக்க கேள்வி கேய்க்கப்பிடா..:(((
==========================================================

முளைச்சு மூணு இலை விடலை.... அதுக்குள்ள என் பையன் இப்படி பண்ணிட்டானே..."

"அடடா...அப்படி என்னங்க பண்ணிட்டான்?"

"அந்த செடியை பிடுங்கிட்டான்...."

oooooooooooooooooooooooooooooooooo




இது ரொம்ப ஓவரா இல்ல????.....

கணவன் : என்னை ஒரு முட்டாள்னு எல்லார் கிட்டேயும் சொல்றதா கேள்வி பட்டேன் .

மனைவி : சாரிங்க . எனக்கு அது ஒரு ரகசியம்ன்னு தெரியாது .

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? அது மூளைக் காய்ச்சல்தான் பரவுதாம்!, அது எப்பிடி உங்களுக்கு வரும்?

oo

தாத்தாவும் பேரனும் TV பார்க்கிறார்கள்....

தாத்தா:
கரண்டைக் கண்டுபிடிச்சவன் நல்லா இருக்கோணும்.

பேரன்: ஏன் தாத்தா?

தாத்தா: கண்டுபிடிச்சிருக்காட்டில் நாங்க இப்போ இருட்டில இருந்தெல்லோ TV பார்க்கோணும்.

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
பின் இணைப்பு:
வாழ்க்கை ஒண்ணும் எம்.பி.3 பிளேயர் இல்லை,  
நமக்குப் பிடிச்சபாட்டைக் போட்டுக் கேட்கிறதுக்கு....-



அது பூஸ் ரேடியோ மாதிரி, 
வாற பாட்டை நாம்தான் ரசிச்சுப்பழகோணும்..! ஓக்கை?!!!
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
 

நாங்கெல்லாம் ஆரு???
சைக்கிள் ஹப்பிலயே பிளேன் ஓட்டின ஆட்களாச்சே....
ஆர் துரத்தினாலும் ஓடித் தப்பிடுவோம்:))...


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது தத்துவம்
காரணம் இல்லாமல் யார்மீதும் அன்பு வருவதில்லை.
ஆனால், அந்தக் காரணம்தான் யாருக்கும் புரிவதில்லை...!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Sunday, 13 March 2011

பூஸ் "ஆர் ஏ டீ ஐயோ....."

என்ன தலைப்பைப் பார்த்ததும் தலை சுத்துதோ?:) அதுதான் ரேடியோவிற்கு ஸ்பெலிங்...(RADIO).. சின்ன வயதில் இப்பூடித்தான் பாடமாக்கினேன்:).


பூஸ் ரேடியோ.... இது பூஸ் வானொலி நிலையம், 24 மணிநேர சேவை, நேரடி ஒலிபரப்பு...

ஒரு தலைப்பு போட நினைக்க இன்னொன்று இடையில் வந்துவிடுகிறது... சரி இதைப் போட்டுவிட்டு, அதைப்போடலாமே என ஆரம்பிக்கிறேன்.


இன்று அதிகாலை 5 மணிபோல ஒரு ஃபோன் வந்து தட்டி எழுப்பியது.. கண்விழித்துவிட்டேன்.. பின் நித்திரை வரவில்லை,  அடுத்தவரை டிஷ்ரேப்புப் பண்ணக்கூடாதே அதனால், ரேடியோ கேட்டுக்கொண்டு
படுக்கலாமே என, ஐ போனுக்கு இயர்போனைப்போட்டுக் காதில போட்டபடி படுத்திருந்தேன்.....



ரேடியோவிலே, கீழே நான் சொல்லியுள்ளவை ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாகப் போனது, மனதில் போட்டுக்கொண்டு, என் பாஷையில் எழுதியிருக்கிறேன், நிறையச் சொன்னார்கள் ஆனால் அனைத்தையும் பதிக்க முடியவில்லை. 

இரு எறும்புகள் ஒரு ஸ்கூட்டரிலே போய் ஒரு பெண்டிலே திரும்பியது, அங்கு ஒரு யானை போய்க்கொண்டிருந்ததாம், யானையிலே மோதப்பார்த்து, எறும்புகள் காலை ஊன்றி பிரேக் பிடித்துவிட்டு, யானையைப் பார்த்துத் திட்டியதாம் “நீ சாவதற்கு என் ஸ்கூட்டரோ கிடைத்தது” என, எறும்பு யானையில் மோதினால் யானையோ சாகும்? எறும்புக்கு அப்படி ஒரு நினைப்பு:). என்ன கொடுமை இது?:)).

=========================================================

ஒரு கல்லூரியிலே படிப்பித்துக்கொண்டிருந்த பிரம்மச்சாரியான(யாருமற்ற) ஆசிரியர் காலமாகிவிட்டாராம். உடனே பொதுமக்கள் அக்கல்லூரி மாணவர்களிடம் கேட்டார்கள் “அடக்கம் செய்ய 4000 ரூபா தேவை,  பணம் திரட்டித் தர முடியுமா?” என்று. அதற்கு மாணவர்கள் அவசராவசரமாக 12,000 ரூபா பணம் திரட்டிக் கொடுத்தார்கள்.

மக்கள் சொன்னார்கள் “4000 ரூபா தானே தேவை, எதுக்கு மும்மடங்காக தருகிறீர்கள்” என்று. மாணவர்கள் சொன்னார்களாம் “பறவாயில்லை இன்னும் இரு ஆசிரியர்களைச் சேர்த்து அடக்கம் செய்துவிடுங்கள்”..


==========================================================
மன்னிக்கவும் அலைவரிசையில் சிறு குழப்பம்:)... சற்று நேரத்தில் தொடரும்..

அது வேறொன்றுமில்லை, தம்பிக்கு நகைச்சுவை பிடிக்கும்,
அதுதான் ஆ.கோ றினால் ரேடியோவின் மேலே ஏறிவிட்டார்.....:)

தடங்கலுக்கு வருந்துகிறோம்...:)
==========================================================

நாசாவிலிருந்து சில விண்வெளி ஆராட்சியாளர்கள் விண்வெளிக்குப் போயிருந்தார்கள், அங்கு போனதும் பேனையை எடுத்தார்கள் எழுத, ஆனால் அவர்களால் எழுத முடியவில்லை, அங்கு புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால், பேனையின் இங்(ink) பேனை முனைக்கு வரவில்லை. அதனை நாசாவுக்கு அறிவித்தார்கள்.

இதைக் கேட்டதும் நாசாவில் சொன்னார்கள், முதலில் இதற்கொரு வழியைக் கண்டுபிடித்த பின்பே, ஆராட்சியைத் தொடர்வோம் என. அதன்படி பத்துவருடங்களாக குப்புறக்கிடந்து, கிட்னியை யூஸ் பண்ணி, 1 1/2 கோடி டொலர்கள் செலவுபண்ணி கண்டுபிடித்தார்களாம்.

இதைக் கேட்ட பிரித்தானிய:)  நாட்டவர் கேட்டாராம்.. “அப்போ ரஷ்யாக் காரர், அப்போதே எல்லாம் எழுதி அனுப்பினார்களே விண்வெளியிலிருந்து, அது எப்பூடி?” என. அதுக்கு நாசா விஞ்ஞானி சொன்ன பதில்... “ரஷ்யாக்காரர் பென்சிலை உபயோகித்தார்கள்”. இதில் முடிவு என்னவென்றால்..... எதிலும் எளிமையாக இருக்கப் பழக வேண்டும்:).

==========================================================

ஒரு ஊரிலே ஒரு பெண் இருந்தவாம், அவ எப்பவுமே அடுத்தவருக்கு சேவை செய்து, அடுத்தவரை மகிழ்விப்பதே தன் தொழிலாகக் கொண்டிருந்தா. அவவிடம் ஒருநாள் ஒரு தேவதை வந்ததாம்.

அது சொன்னதாம் “என்னிடம் ஒரு புத்தகம் இருக்கு, அதில் அடுத்தவருக்கு சேவை செய்து அடுத்தவர்களை மகிழ்விப்போரின் பெயரெல்லாம் இருக்கும், பார்க்கலாம் உன் பெயரிருக்கா என”, சொல்லியபடியே புத்தகத்தில் தேடியதாம், அதில் அப்பெண்ணின் பெயர் இல்லை. அதற்கு அப்பெண் சொன்னாவாம், பறவாயில்லை, பெயரில்லாவிட்டால் என்ன, அடுத்தவருக்கு சேவை செய்வதில் எனக்கு மகிழ்ச்சியே என்று.

தேவதை மீண்டும் இன்னொரு புத்தகத்தைக் காட்டிச் சொன்னதாம், இது கடவுளின் புத்தகம், இதில் கடவுளுக்கு யாரை பிடித்திருக்கோ அவர்களின் பெயர்கள் இருக்கும், இதில் உன் பெயர் இருக்கா பார்ப்போம் எனக்கூறிக் கொண்டே புத்தகத்தைத் திறந்ததாம், முதலாவதாக அப்பெண்ணின் பெயர் இருந்ததாம். இதில முடிவு என்னெண்ணா.... நாம் அடுத்தவருக்கு சேவை செய்து, அடுத்தவரை மகிழ்வித்தால், கடவுளுக்கு நம்மைப் புய்க்கும்ம்ம்ம்ம்.
========================================================

இத்தனை நேரமும் மிகவும் பொறுமையாக, அடக்கமாக இருந்து கேட்டு ரசித்தமைக்கு மியாவும் நன்றி.... இத்துடன் இன்றைய நிகழ்ச்சி நிறைவடைகிறது, மீண்டும் நாளை காலை வழமைபோல் தொடரும்.. அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுபவர்... உங்கள் அன்பு அறிவிப்பாளர்.. மியாவ் பூஸ்:)


=========================================================
ஃபோன் இணைப்பு:

I remember the time, I was kidnapped and they sent a piece of my finger to my father. He said he wanted more proof.
=======================================================

பின் ஊசி இணைப்பு:


ஹா..ஹா....ஹா... கஸ்டப்பட்டுப் படிச்சு எக்ஸாம் எழுதினது..(தெரியும்தானே ஆரென?? பீஈஈஈஈகொக்:))..., ஆனா தொப்பி கிடைச்சதென்னமோ எங்களுக்குத்தான்...(உதென்ன தொப்பி என ஆரும் கேட்டிடப்பூடா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

=======================================================
இது எங்கட சொந்த பந்தம்தான்...  “அங்கின” (ஆசனம் செய்வோர் பக்கம்:))
படத்தில இருந்தவங்களும் இவிங்களும் சொந்தபந்தம்தானாம்.....


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~