ஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)

Monday, 13 June 2011

எங்கள் ஊர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

பிள்ளையாரப்பா, இன்றுமட்டுமாவது என்னைக்காப்பாத்திப் போடுங்கோ:)
 என்னத்தைச் சொல்ல? எப்பூடிச் சொல்ல? நான் பிறந்த ஊர்தான் என் சொந்த ஊர், படித்த ஊரும் பிடித்த ஊர்தான், வேலை பார்த்த ஊரும் எனக்குப் பிடித்த கொழும்புதான், இப்போ இருப்பதும் மிகவும் பிடித்த ஊர்தான்.... எதைச் சொல்வேன்? எதை விடுவேன்? அவ்வ்வ்வ்வ்வ்:))).

அந்த ஊரைச் சொன்னா இந்த ஊர் திட்டும், இந்த ஊரைச் சொன்னா அந்த ஊர் திட்டும், சொல்லாட்டில் கீழக்கரை ஸாதிகா அக்கா திட்டுவா:) அதனால வாணாம் கட்டிலுக்குக் கீழயே இருந்திடலாம் என முடிவெடுத்தேன்.... அதுவும் முடியல்ல.. அதனால எடுக்கிறேன் பேனாவை, ஆரம்பிக்கிறேன் என் ஊரின் பெருமைகளை...

அதிராவோ கொக்கோ... கொஞ்சம் பெரிசுதான்( பதிவு) அஜீஸ் பண்ணிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:).

 “இந்துமா ஆழியில் இலங்குகின்ற முத்தென
வந்து போன வெள்ளையர் வாழ்த்தி நின்ற தீவடா”

என்ற பாடல் இயற்றப்பட்ட மாங்காய்போல் தோன்றிடும் மாணிக்கத் தீவான இலங்கையிலே, வடபகுதி யாழ்ப்பாணம்தான் எங்களிடம். யாழ் ரவுனிலிருந்து பரந்திருக்கும் ஊர்களில், கிட்டத்தட்ட 4 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் அழகான ஒரு குட்டி ஊர் எங்களூர்.

வெளிமாவட்டத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போது,  “அதோ யாழ்ப்பாணம் வருகிறது” என்றாலே முதலில் தெரிவது பனைமரங்கள்தான். நான் போய்வந்த காலம் வேறு இப்போ இருக்கும் காலம் வேறு, அதனால் எதைச் சொல்வதெனத் தெரியவில்லை, என் பேபிக் காலத்து நினைவுகளையே பகிர்ந்து கொள்கிறேன்.

நானறிந்து சைவத்திலே தளைத்தோங்கிய ஊர் எங்களூர். திரும்பும் பக்கமெல்லாம் கோயிலும் மணி ஓசையும்தான். ஊரிலிருப்போர் அசைவம் உண்பதே விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களே. ஒரு கோயில் முடிய அடுத்த கோயில் கொடியேறி.. தேர், தீர்த்தம் என கொண்டாட்டமாகவே இருக்கும். இதனால் எங்களூரில் பலபேர் சைவமாகவே இருக்கிறார்கள். எங்கள் அம்மம்மா + அவவின் வயதை ஒத்தவர்கள் பெரும்பாலும் சைவம்தான்.

கலை உணர்வு அதிகமுள்ள ஊர். அதாவது வீணை, வயலின், மத்தளம், நடனம், சங்கீதம் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊர், பெரும்பாலான கோயில்களில் வகுப்புக்கள் நடைபெறும், இதற்கெனப் பல நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.  புகழ்பெற்ற வித்துவான்களும் உருவாகியிருக்கும் ஊர்.

நான் ஊரிலிருந்த காலங்கள் மிகவும் குறைவே. விடுமுறைகளில் மட்டுமே ஊருக்குப் போய் வருவோம். இறுதியாக இரவு 7.30 மணிபோல் ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள்.. இரண்டு மணி நேரத்துள் யாழ் நகரை விட்டு வெளியேறுங்கள் இராணுவத்தினர் முன்னேறி வருகிறார்கள் என்று... அன்று ஒரு சூட்கேசுடனும், என் புதுச் சைக்கிளையும் உருட்டிக்கொண்டு நாவற்குழி நோக்கி புறப்பட்ட பயணம்தான், நாவற்குழியில் என் சைக்கிள் களவாடப்பட்டுவிட்டது:(.... 

((ஊசிக்குறிப்பு: தயவுசெய்து என்  “றலி” லேடீஸ் சைக்கிளை ஆராவது கண்டால், என்னிடம் ஒப்படைக்கும்படி மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.... அதை நான், என் குழந்தைபோல அழகாக மினுக்கி துடைத்து ,ஸ்ரிக்கர் ஒட்டி  எப்பவும் பழபழப்பாக வைத்திருந்தேன்:( ))

அதன்பின் திருமணமாகி கணவர் குழந்தையோடு ஒரே ஒரு தடவை போனேன்... வீட்டை ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன் நிற்கவில்லை. வைத்துவிட்ட வந்த கியூரெக்ஸ் கூட அப்படியே அதே இடத்தில் இருந்தது, பழைய நினைவு வரவே நெஞ்செல்லாம் கனத்தது... என்னவோ செய்தது......  இன்றுவரை ஊரை  மிஸ் பண்ணுகிறேன்.

முக்கியமான ஒரு விஷயம் எங்களூர்க்கிணறு(எனக்கு அது வியப்பூட்டும் ஒரு விஷயம்). குடிதண்ணீர் மிகவும் சுவையானது. நான் ஓரளவு சின்னனாக இருந்த காலத்திலேயே, சிலர் முற்றத்திலே குழாய்க்கிணறு வெட்டிவிட்டார்கள், பெரும்பாலும் எல்லோரும் மோட்டார் போட்டுவிட்டார்கள். 

ஆனால் முன்பு 6,7 காணிகளுக்குப் பொதுவாக ஒரு கிணறு வெட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும், கிணற்றுக்கென தனித்தனிப் பாதை இருக்கும். பெரிய தூரமென நினைத்திட வேண்டாம், காணியின் அளவைப் பொறுத்து சிலருக்கு முற்றத்திலும் கிணறு அமைந்திருக்கும். அதற்கு காரணம், கிணற்றின் ஆழம் கிட்டத்தட்ட 1 அல்லது அதற்குகூடிய  பனைமரத்தின் உயரமளவு இருக்கும்

விட்டமும் பெரிதாக இருக்கும்(கல்பூமியாக இருக்குமோ தெரியாது). கிணற்றுக்கு உயரக் கட்டெல்லாம் இருக்காது, மிதி என்று சொல்வார்கள் அதில் நின்றுதான் தண்ணி அள்ளுவார்கள், அழகாக, நின்று குளிக்க எல்லாம் சீமெந்தால் கட்டப்பட்டிருக்கும், துலா மூலம்தான் தண்ணி அள்ளுவார்கள். ஒருவாளி தண்ணி அள்ளிக் குளித்துவிட்டு, மற்றவாளி அள்ளுவதற்குள் உடம்பு காய்ந்துவிடும்:).

மிகவும் ஆழத்திலே 5,6 அடி உயரத்துக்கு தண்ணி இருக்கும். ஆனால் எட்டிப்பார்த்தால் பளிங்குபோல அடிக்கிணற்றில் இருக்கும் கற்கள் தெரியும், சிலநேரம் சிலரின் தோடு, மோதிரம் விழுந்துவிடும், எட்டிப்பார்த்துக் கண்டுபிடிப்போம் எங்கே இருக்கு என்பதை அவ்வளவு துலக்கமான நீராக இருக்கும். அதன் சுவையோ தனிதான்

நல்ல கோடையில் நேரடியாக தண்ணீரை அள்ளிக்குடித்தால், பிரிஜ்ஜில் இருந்து எடுத்த கோல்ட் வோட்டர்போல இருக்கும். மதிய வேளைகளில் எம் வீட்டுக்கு வருவோர் கேட்பார்கள், எதுவும் வேண்டாம் ஒரு செம்பு பச்சைத்தண்ணீர் தாங்கோ என்றுதான்.... அவ்ளோ சுவை.சரி சரி கண்படுத்திடாதீங்கோஓஓஒ... நான் தண்ணியைச் சொன்னேன்:).

எம்மிடத்தில், திருமணத்தின் பின்பு ஆண்கள்தான் பெண் வீட்டில் வந்து இருப்பார்கள்(சட்டம் எல்லாம் கிடையாது, பரம்பரையாக இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது), அதனால் பரம்பரை பரம்பரையாக பெண்பிள்ளைகளுக்கே வீடுகொடுப்பார்கள் பெற்றோர். 

எத்தனை பெண் பிள்ளைகள் இருப்பினும், வீடு கட்டிக் கொடுத்திடுவார்கள் அல்லது காணியாவது கொடுப்பார்கள்(கூட்டுக் குடித்தனம் எல்லாம் கிடையாது).அதனால் எப்பவுமே அம்மாவழி ஊரைத்தான் நாம் எம் சொந்த ஊர் என்போம்.

நான் கதைப்பதெல்லாம் பல வருடங்களுக்கு முந்தின ஊர்க் கதைகளே. எனக்கு ஊரில் மிகவும் பிடித்த விஷயம், அதிகாலை 4.30/5 மணிக்கெல்லாம், வீட்டில், அயலில் எல்லோரும் எழுந்திடுவார்கள். முற்றம் கூட்டிக் கேட்கும், தண்ணி அள்ளும் சத்தம் கேட்கும், கோயில் மணி ஓசைகள் ஒலிக்கத்தொடங்கிவிடும், அதிகாலையிலேயே தேநீர், ரீ ரெடியாகிடும்.... அதெல்லாம் பசுமை நினைவுகளே.

அதிகமாக எங்கும் பூவரசம் மரங்கள் காணலாம்.... இப்போ எல்லாம் மதில்களாகிவிட்டமையால் அவையும் குறைந்திருக்குமென்றே நினைக்கிறேன்.

முக்கியமான ஒண்ணை மறந்திட்டனேஏஏஏஏ.... எங்கட ஊர்மண்ணின் நிறமென்ன தெரியுமோ? சிகப்பூஊஊ. மேல்மண் சிகப்பு மணல்போல இருக்கும், கீழ் மண் தண்ணிபட்டால் களிமண்போல வரும். நாங்கள் விடுமுறையில் போய் நிற்கும்போது, இம்மண்ணைக் குழைத்து வடை, மோதகம், கொழுக்கட்டை எல்லாம் செய்து வெய்யிலில் காயவைப்பேன். 

காய்ந்தபின் கல்போல ஆகிவிடும். அதை ஒரு பையில் போட்டு, அங்கு எங்காவது வைத்து, அன்ரியாட்களிடம் சொல்வேன், அடுத்தமுறை நான் வரும்வரை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கோ என்று. நாம் புறப்பட்டபின், அந்த வடை மோதகத்தைப் பார்த்துப் பார்த்து அன்ரியாட்கள் மிகவும் கவலைப்படுவார்களாம் என்னை நினைத்து:(((.

பார்த்தீங்களோ, ஆறு வயசிலிருந்தே நான் ரொம்ப நல்ல பொண்ணு:), இல்லையென்றால் என்னை நினைத்து அவர்கள் கவலைப்படுவார்களோ?:)) சரிசரி முறைக்காதீங்க...:))கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

என்னில் இப்பவும் ஒரு பழக்கம், எங்காவது போனால் என் நினைவாக, அவர்கள் வீட்டுச் சுவரிலாவது, ஒரு குட்டி அடையாளம் வைத்துவிட்டு வருவேன். ஆரோ சொன்னார்கள், வீட்டுக்குப் பெயிண்ட் பண்ணும்போது, என் அடையாளத்தை அழிக்க விரும்பாமல், அதைவிட்டுவிட்டுப் பெயிண்ட் பண்ணியதாக..... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்..:(.


ஊரைப் பற்றிக் கேட்டால், உங்களைப்பற்றிச் சொல்றீங்களே என அடிக்க வரப்பிடா... அடிச்சா வலிக்குமில்ல?:). இப்பூடிச் சான்ஷை மிஸ் பண்ணிட்டா, பிறகு எப்போதான் நான் என்னைப்பற்றிச் சொல்றதாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:).

குட்டி பின் இணைப்பு:
தின்ன தின்ன ஆசை.... தீராத ஆசை.... முத்து முத்து ஆசை.... முத்தமிட ஆசை.... என்ன இந்தப் பூமி.... செத்துவிட ஆசை:)))).
==============================================49 comments :

 1. யாழ் ரவுனிலிருந்து பரந்திருக்கும் ஊர்களில், கிட்டத்தட்ட 4 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் அழகான ஒரு குட்டி ஊர் எங்களூர்.//

  அரியாலை தானே....ஹி...ஹி...
  எப்பூடி?

  ReplyDelete
 2. முதல் பந்தியினைப் படித்து விட்டு அரியாலை என்று ஊகித்தால், அடுத்த பந்தியில் குழப்புறீங்களே,

  //நானறிந்து சைவத்திலே தளைத்தோங்கிய ஊர் எங்களூர். திரும்பும் பக்கமெல்லாம் கோயிலும் மணி ஓசையும்தான். ஊரிலிருப்போர் அசைவம் உண்பதே விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களே. //

  இப்ப தெரிஞ்சிடுச்சே,
  நல்லூரடி தானே.

  ReplyDelete
 3. ஊசிக்குறிப்பு: தயவுசெய்து என் “றலி” லேடீஸ் சைக்கிளை ஆராவது கண்டால், என்னிடம் ஒப்படைக்கும்படி மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்....//

  சத்தியாம் அந்தச் சைக்கிளை எடுத்த ஆள் நான் இல்லை.

  ReplyDelete
 4. மிகவும் ஆழத்திலே 5,6 அடி உயரத்துக்கு தண்ணி இருக்கும். ஆனால் எட்டிப்பார்த்தால் பளிங்குபோல அடிக்கிணற்றில் இருக்கும் கற்கள் தெரியும்,//

  குடா நாட்டின் சுவையான நிலத் தடி நீருக்கான காரணம் பொஸ்பேற் தன்மையுடன் கூடிய சுண்ணாம்புக் கற்பாறைகள் அதிகளவில் குடாநாட்டில் நிலத் தடியில் இருப்பது தானாம். .

  ReplyDelete
 5. சிலநேரம் சிலரின் தோடு, மோதிரம் விழுந்துவிடும், எட்டிப்பார்த்துக் கண்டுபிடிப்போம் எங்கே இருக்கு என்பதை அவ்வளவு துலக்கமான நீராக இருக்கும். அதன் சுவையோ தனிதான்.//

  வாவ்....ஊர் நினைவுகளை அழகாக மறக்காமல் எழுதுறீங்க.

  ReplyDelete
 6. //“இந்துமா ஆழியில் இலங்குகின்ற முத்தென
  வந்து போன வெள்ளையர் வாழ்த்தி நின்ற தீவடா”//

  பொருத்தமான வரிகள்..

  //பழபழப்பாக//

  ஹி ஹி.. விடமாட்டோம்ல..

  //ஒருவாளி தண்ணி அள்ளிக் குளித்துவிட்டு, மற்றவாளி அள்ளுவதற்குள் உடம்பு காய்ந்துவிடும்:).//

  ஏன்.. நிறைய சேந்தி வச்சுட்டு அப்புறமா குளிக்க ஆரம்பிக்கறது? அப்படியே வாளி வாளியா மொண்டு ஊத்தினாத்தான் குளிச்சா மாதிரி இருக்குமோ? :)

  //ஒரு செம்பு பச்சைத்தண்ணீர் தாங்கோ என்றுதான்.... அவ்ளோ சுவை.சரி சரி கண்படுத்திடாதீங்கோஓஓஒ... நான் தண்ணியைச் சொன்னேன்:).//

  ஓ.. செம்பைத் தான் சொல்லுறீங்கள் என்று நாங்கள் நினைத்திட்டினம்..

  நன்றாக இருந்தது அதீஸ், உங்கட நினைவுகள்...

  ReplyDelete
 7. ஊர் நினைவுகள், சிறு வயதில் செய்யும் களி மண் உருவங்கள் பற்றிய பகிர்வுகள், தாய் வழிச் சொந்தம் பற்றிய விளக்கம் என அனைத்தையும் தொகுத்து அழகுறத் தந்துள்ளீர்கள்.

  ReplyDelete
 8. வாங்க நிரூபன்..

  ஹா...ஹா..ஹா.... என்னால சிரிப்பை அடக்கவே முடியேல்லையே...:))). பைனாகுலேர்ஸ்சுடந்தான் இருக்கிறீங்க.. ஊர்ப்பதிவு வரட்டும் எந்த ஊர் எண்டு கண்டுபிடிக்கலாம் என..:). நாங்க எல்லாம் ரொம்ப விபரமானவங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

  நல்லூரடி யாழ்ப்பாணத்திலிருந்து 2 கிலோமீற்றர் தூரம்தான் நிரூபன்:).

  //சத்தியாம் அந்தச் சைக்கிளை எடுத்த ஆள் நான் இல்லை.// ஹா..ஹா..ஹா... என் காதில அப்பவே ஏதோ “என்” இல ஆரம்பிக்கும் பெயருடையவர்தான் எடுத்ததாக அடிபட்டுதே... கொஞ்சக்காலம் இதை மறந்திருந்தேன், உஇப்போ ஸாதிகா அக்கா... ஊர்த்தொடர் ஆரம்பித்தமையால் எல்லாமே நியாபகம் வந்திட்டுது.... என் சைக்கிளை எடுத்தவரைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்:))).

  ReplyDelete
 9. //குடா நாட்டின் சுவையான நிலத் தடி நீருக்கான காரணம் பொஸ்பேற் தன்மையுடன் கூடிய சுண்ணாம்புக் கற்பாறைகள் அதிகளவில் குடாநாட்டில் நிலத் தடியில் இருப்பது தானாம். //

  உண்மைதான் நிரூபன்... அந்தப் பச்சைத்தண்ணியின் சுவையே சுவைதான்... அதுவும் செம்பில், அண்ணாந்து குடிக்கும்போதுதான் இன்னும் சுவை அதிகமாகும்:)).

  எனக்கு கிட்டத்தட்ட 4,5 வயதிலிருந்து நடந்த நிகழ்வுகள் அனைத்துமே பசுமையாய் மனதில் இருக்கு. நிறைய எழுத ஆசை, ஆனால் பதிவு இனியும் பெருத்தால் பொரிங்காகிடும் என சுருக்கிட்டேன்... சுருக்கமே இந்தளவெனில்?:))).

  ஊர்ப்பதிவென்றதும் ஒன்றும் விடாமல் படித்து பின்னூட்டங்கள் போட்டிருக்கிறீங்க... தானாடா விட்டாலும் தசையாடும் என்பதுபோல.

  இங்கு நாம் எவ்வளவு வெள்ளையர்களோடு ஒட்டி உறவாடினாலும்... எம் இனத்தவர்போல ஒருவர் போனால், ஒருகணம் திரும்பிப்பார்க்காமல் இருக்கமுடியாது... தமிழராக இருக்குமோ என மனம் எண்ணும்.

  மிக்க நன்றி நிரூபன்.

  ReplyDelete
 10. வாங்க சந்தூ... ஊர்க்களைப்பெல்லாம் எடுபட்டுவிட்டதோ?.

  அது சின்ன வயதில் பாடிய கீதம்.

  ////பழபழப்பாக//

  ஹி ஹி.. விடமாட்டோம்ல..//

  ஹா...ஹா..ஹா... இப்பதிவில் நிறையவே ள/ழ வந்திட்டுது, எனக்கு ஒரே குழப்பம்... கீழே ஒரு குறிப்பு இதைப்பற்றிப் போடுவோமா என சத்தியமாக நினைத்தேன். மியாவும் நன்றி சந்து.

  இந்த ள/ழ பற்றிய சொற்கள் நெற்றிலே எங்காவது தேடிப்பிடிக்கலாமோ? உண்மையாகத்தான் கேட்கிறேன்.

  //ஏன்.. நிறைய சேந்தி வச்சுட்டு அப்புறமா குளிக்க ஆரம்பிக்கறது?//
  இதுபற்றி நிறைய எழுத இருந்துது, நான் சுருக்கமாக்கிவிட்டேன். காலை 9 மணிக்கு முன் பெரும்பாலும் ஆண்கள் குளித்துவிட்டுப் போய்விடுவார்கள், அதன்பின் தொடங்கி 12 மணிவரை பெண்கள் +குழந்தைகள் ஆட்சியில் கிணற்றடி களை கட்டிவிடும். கிணற்றின் எதிரெதிர்ப் பக்கங்களில் மிதி போடப்பட்டிருக்கும்... பாதிப்பேர் அப்பக்கமும் மீதிப்பேர் இப்பக்கமுமாக நின்று குளிப்பார்கள்.... அப்போதான் கறிக்கதையில் தொடங்கி ஊர்க்கதை எல்லாம் நடக்கும்...


  தொட்டிகள்(பக்) கட்டியிருக்கும் அதை நிரப்பி குழந்தைகள் அதில் குளிப்போம், பெரியாட்கள் அள்ளித்தான் குளிப்பது 90 வீதமும் வழக்கம். ஒருவர் சோப் போடும் நேரத்தில் மற்றவர் குளிப்பார், பின் இவர் சோப் போட மற்றவர் சோப்பைக் கழுவிக்குளித்து முடிப்பார்... அதெல்லாம் ஒரு அழகிய நிலாக்காலம்... இப்போ கிணறுகள் எல்லாம் வெறிச்சோடி... மோட்டாரும் பார்த்ரூமும் என்றாகிவிட்டது குளிப்பு.

  //ஓ.. செம்பைத் தான் சொல்லுறீங்கள் என்று நாங்கள் நினைத்திட்டினம்.. //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். முந்திய காலத்திலெல்லாம் பித்தளைச் செம்பும், பித்தளையிலேயே மூக்குப்பேணி என இருக்கும்..... அதாவது கப்புக்கு மூக்குப்போல நீளமாக இருக்கும், அதில்தான் தேநீர் குடிப்பார்களாம்.. அதாவது வாய் வைத்துக் குடிப்பதில்லை. பின்பு எங்கள் காலத்தில் எல்லாமே சில்வராகிவிட்டது. இப்பவும் ஊரில் சில்வர் டம்ளர்களில்தான் தேநீர் பரிமாற்றம் நடக்கும்.... மக், கிளாஸ் எல்லாம் பாவிக்க மாட்டார்கள்.

  மியாவும் நன்றி சந்து.

  ReplyDelete
 11. //பிள்ளையாரப்பா, இன்றுமட்டுமாவது என்னைக்காப்பாத்திப் போடுங்கோ://இதற்கும் குட்டி9 பின் இணைப்புக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கே?

  ReplyDelete
 12. //நானறிந்து சைவத்திலே தளைத்தோங்கிய ஊர் எங்களூர். // அம்மிணி இப்ப எப்பூஊஊஊஊஊஊஊஊடி?
  //சிக்கின் பிரட்டல் அண்ட் குழல் புட்டு சாப்பிடட்டோ?

  பொரித்திடித்த சம்பலும் இடியப்பமும் சாப்பிடட்டோ?

  மட்டின் பிரியாணி அ.கோ.மு உடன் சாப்பிடட்டோ?
  // சைவ ஊரில் இருந்து வந்தவர் போல் தெரியலியே அம்மிணியைப்பார்க்க??

  ReplyDelete
 13. // புகழ்பெற்ற வித்துவான்களும் உருவாகியிருக்கும் ஊர்.

  // கம்பன் வீட்டு கட்டுத்த்றிய்டும் கவி பாடும் என்று சொல்லுவார்கள்.அதற்கு உதாரணம் உங்களை சொல்லலாம்.டீ ஷர்டில் காலர் வச்சி இருந்தால் தூக்கி விட்டுக்குங்க?

  ReplyDelete
 14. எங்கள் ஊரிலும் இந்த சிக்கபு மணல் சில இடங்களில் உண்டு.இதனை செம்மண் என்பார்கள்.அந்நெகமாக தோட்டப்புறங்களில் இம்மண் இருக்கும்.இந்த நிலம் உள்ள த்ப்பை செவ்வல்தோப்பு என்பார்கள்.

  ReplyDelete
 15. //அதைவிட்டுவிட்டுப் பெயிண்ட் பண்ணியதாக..... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்..:(.

  // அதீஸ் ஹார்ட்டை அப்படியே டச் பண்ணிட்டீங்க.மொத்ததில் ஸாதிகா அக்கா பிரம்பை தூக்கிடுவா என்ற பயத்தில் தொடர் பதிவை அழகாக எழுதி அசத்திட்டீங்க.மிக மிக நன்றி அதீஸ்.

  ReplyDelete
 16. வாங்க ஸாதிகா அக்கா...

  //ஸாதிகா said... 11
  இதற்கும் குட்டி9 பின் இணைப்புக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கே?//

  அடக் கடவுளே... எப்பூடி இப்பூடிக் கிட்னியை யூஸ் பண்ணிட்டிட்டீங்ங்ங்ங்ங்ங்ங்க?:)).. செண்டிமெண்ட்டா ஒரு வசனம் போட்டா, ஓடிவந்து கவலைப்படுவீங்க எனப் பார்த்தால் சப்டரையே நகைச்சுவையாக்கிட்டீங்களே:))) அவ்வ்வ்வ்வ்:))..

  /// சைவ ஊரில் இருந்து வந்தவர் போல் தெரியலியே அம்மிணியைப்பார்க்க??//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
  ஸாதிகா அக்கா... என்னைப் பார்த்தால் சைவப்பயம்:) மாதிரித் தெரியேல்லையோ?:). இல்ல ஸாதிகா அக்கா, நாங்க நெடுகவும் வெளி ஊரில் இருந்தமையால், சில கோயில்களை மட்டும்தான் கவனிப்போம்.. இப்பவும்தான்.

  ஊரில் தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா,திருமணம் போன்றவற்றுக்கு மட்டுமே பெரும்பாலும் நாம்((திருமணமாகாத சின்னப்பிள்ளைகள்) சாறி உடுப்பது வழக்கம், மற்றும்படி உடுப்பதில்லை.) சாறி உடுத்து பூமாலை எல்லாம் கட்டுவோம்.. அதனால் தேர்த்திருவிழா என்றாலே பெரிய சந்தோசமாக இருக்கும் சாறி உடுக்கலாமே என.

  ஒரு தடவை இப்படித்தான், சாறி வாங்கி, பிளவுஸ் எல்லாம் தைத்து, பூமாலைகூட, நானே பூப்பறித்துக் கட்டி, அடுத்தநாள் தேருக்குப் போக ஆயத்தமாகி இருந்தேன். அப்பாவின் ஊரிலிருந்து(பக்கத்து ஊர்தான்) மாமியின் மகள் இருவர் வந்திருந்தார்கள் கோயிலுக்குப் போக.

  ஆனால் அடுத்த நாள் என்னால் போகமுடியாமல் போய்விட்டது, சரியான கவலை:(.எல்லோரும் போய்விட்டார்கள் நானும் அம்மம்மாவும் மட்டுமே வீட்டில்... என்னை அம்மம்மா மத்தியானம் சாப்பிடச் சொன்னா, பார்த்தேன் சைவக் கறிகளோடு... ஒன்றல்ல இரண்டல்ல 6 முட்டைகள் அதுவும் அவித்த கோழி முட்ட்ட்டை... தந்தா... எனக்கு ஒருகணம் சொர்க்கலோகம் தெரிஞ்சுது...

  என்ன அம்மம்மா முட்டை தாறீங்கள் என்றேன்.. அது நீ சாப்பிடலாம் சாப்பிடு என்றா..... இதுதான் அம்மம்மா.. தான் சைவம் என்றாலும் பேரப்பிள்ளைகளை விடமாட்டா...
  அதனாலதான் நான் இப்பூடி:)))

  ReplyDelete
 17. //கம்பன் வீட்டு கட்டுத்த்றிய்டும் கவி பாடும் என்று சொல்லுவார்கள்.அதற்கு உதாரணம் உங்களை சொல்லலாம்.டீ ஷர்டில் காலர் வச்சி இருந்தால் தூக்கி விட்டுக்குங்க? //

  உஸ் மெதுவா ஸாதிகா அக்கா... நான் உங்கட பதிவு பார்த்த உடனேயே, ஓடிப்போய்த் தேடி கொலர் வைத்த சேட் எடுத்துப்போட்டு... தூக்கி விட்டிட்டேன்ன்ன்ன்ன்ன்ன் .. நான் கொலரைச் சொன்னேன்ன்... அதிராவோ கொக்கோ...:)).

  ///அதீஸ் ஹார்ட்டை அப்படியே டச் பண்ணிட்டீங்க.///

  நீங்க உண்மையைச் சொல்லிட்டீங்க, சிலபேர் டச் பண்ணினாலும் சொல்லமாட்டினமாம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

  ///மொத்ததில் ஸாதிகா அக்கா பிரம்பை தூக்கிடுவா என்ற பயத்தில் தொடர் பதிவை அழகாக எழுதி அசத்திட்டீங்க.மிக மிக நன்றி அதீஸ்.///

  சில தொடர்களில் எழுத எதுவுமே இருக்காது ஸாதிகா அக்கா... ஆனா இது எழுத எழுத பல விஷயங்கள் மனதில தோன்றின.. இரு பகுதியாக்கிப்போடுவமோ எனவும் நினைத்தேன், பின்பு வாணாம் இதுவே போதுமென விட்டுவிட்டேன்.

  மியாவ்...மியாவ்... ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 18. //இப்பவும் ஊரில் சில்வர் டம்ளர்களில்தான் தேநீர் பரிமாற்றம் நடக்கும்....//

  அதே அதே தான் எங்கட ஊரிலும்..

  //தொட்டிகள்(பக்) கட்டியிருக்கும் அதை நிரப்பி குழந்தைகள் அதில் குளிப்போம், பெரியாட்கள் அள்ளித்தான் குளிப்பது 90 வீதமும் வழக்கம். ஒருவர் சோப் போடும் நேரத்தில் மற்றவர் குளிப்பார், பின் இவர் சோப் போட மற்றவர் சோப்பைக் கழுவிக்குளித்து முடிப்பார்... அதெல்லாம் ஒரு அழகிய நிலாக்காலம்... இப்போ கிணறுகள் எல்லாம் வெறிச்சோடி... மோட்டாரும் பார்த்ரூமும் என்றாகிவிட்டது குளிப்பு//

  ஆமாம் அதீஸ்.. முன்பெல்லாம் பல்லு விளக்கவாவது கிணற்றடிக்குப் போவதுண்டு... இப்போ எல்லாமே ரூமுக்குள் தான் அங்கே போனாலும்..

  கிணற்றடியில் குளித்திருக்கிறேன் சிறு வயதில்.. ஆண்கள் குளிப்பதுண்டு, பெண்கள் அப்படிச் செய்வதில்லை.. ஆனால் துணி துவைப்பார்கள்.. அதனால் தொட்டி எல்லாம் உண்டு..

  ReplyDelete
 19. அதீஸ், நல்ல பதிவு. நீங்களும் ஊர் பெயரை சொல்லவில்லையா? ஏன்ன்ன்ன்ன்ன்???
  நான் சொல்லாமல் விட்டதற்கு ஒரு காரணம் இருக்கு!!! அது என்ன என்று கேட்கபூடாது???

  உங்கடை சைக்கிள் காணாம் போன நேரம் நிருபன் பிறந்திருக்கவே மாட்டார் ( அட! நானும் அப்ப பிறக்கவில்லை ).

  ஸாதிகா அக்கா, சைவ ஊரில் இருந்து வந்தவர் போல் தெரியலியே அம்மிணியைப்பார்க்க??////hahaahehe..ஹிஹி... நல்லா கேளுங்கோ!!!!
  // முட்டை தாறீங்கள் என்றேன்.. அது நீ சாப்பிடலாம் சாப்பிடு என்றா..... இதுதான் அம்மம்மா.. தான் சைவம் என்றாலும் பேரப்பிள்ளைகளை விடமாட்டா... //
  திருவிழா நேரம் முட்டையும் சாப்பிட்டு போட்டு, அப்பாவி அம்மம்மா மீது பழி போடக்கூடாது. சொல்லிப் போட்டன்.

  ReplyDelete
 20. ///கிணற்றடியில் குளித்திருக்கிறேன் சிறு வயதில்.. ஆண்கள் குளிப்பதுண்டு, பெண்கள் அப்படிச் செய்வதில்லை.. ஆனால் துணி துவைப்பார்கள்.. அதனால் தொட்டி எல்லாம் உண்டு..///

  சந்தூ... எங்கட ஊர்க் கிணற்றடி பெண்களுக்குத்தான் சொந்தம்:)))...

  வீட்டிலயே நின்றுகொண்டு எட்டிஎட்டிப் பார்த்து ஒரு பெண்ணும் கிணற்றடியில் இல்லை என்பதை உறுதிசெய்த பின்பே, ஆண்கள் குளிக்கப் போவார்கள்... எங்கட ஊர் ஆண்கள் ரொம்பாஆஆஆஆஆ நல்லவங்கப்பா:)))). நான்கூட சிலசமயம் கிணற்றடி ஃபிரீயாகிட்டுதோ என பார்த்துச்சொல்லி வீட்டு ஆண்களுக்கு யெல்ப் பண்ணியிருக்கிறேன்..... பார்த்தீங்களோ நானும் ரொம்பாஆஆஆ நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)).

  மியாவும் நன்றி சந்து. களைப்பாயிருப்பீங்க சில்வர்கப்பில ரீ குடியுங்கோவன்:)).

  ReplyDelete
 21. வாங்க வான்ஸ்ஸ்...

  //நான் சொல்லாமல் விட்டதற்கு ஒரு காரணம் இருக்கு!!! அது என்ன என்று கேட்கபூடாது???//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்ல சாட்டு:)).

  //நீங்களும் ஊர் பெயரை சொல்லவில்லையா? ஏன்ன்ன்ன்ன்ன்???// நான்தான் அக்குவேறு ஆணிவேறாகக் குளூக் கொடுத்திருக்கிறேனே (இதுவேற குளூ:)). கண்டு பிடிங்க(இதுவும் வேற கண்டு பிடிக்கிறது:)). உங்கள் எல்லோருக்கும் எதுக்கு தனீஈஈஈஈத்தனியாக் கிட்னியைக் கடவுள் கொடுத்திருக்கிறார்? சரி இல்லையென்றால் ஒன்று பண்ணலாம்... கடலுக்குள் போட்டுவிட்டு(கிட்னியைச் சொன்னேன்:)), மெடிகல் சேர்டிபிக்கட்டோட வாங்க நான் சொல்றேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்:)). கடவுளே தெரிஞ்சவங்க ஆரும் சொல்லிடாதீங்கோ...:))).

  ReplyDelete
 22. //உங்கடை சைக்கிள் காணாம் போன நேரம் நிருபன் பிறந்திருக்கவே மாட்டார் ( அட! நானும் அப்ப பிறக்கவில்லை ). //
  ஆங்ங்ங்ங்ங்ங் கூட்டுச்சதி நடந்திருக்கு:))... கடவுளே என் சைக்கிள் இப்ப இருந்தால் நான் இந்த மலையெல்லாம் கலக்கிக்கொண்டு வருவேனே:))))).

  //திருவிழா நேரம் முட்டையும் சாப்பிட்டு போட்டு, அப்பாவி அம்மம்மா மீது பழி போடக்கூடாது. சொல்லிப் போட்டன். //

  நான் 6 முட்டை சாப்பிட்டேன் என்றுதானே இந்தப் பொறாமை:)). அன்றைக்குப் பின் இன்றுவரை 2 முட்டைக்குமேல அவிச்சு சாப்பிடவேயில்லை, மலிஞ்சமுட்டை ஆனா பயமாக்கிடக்கே...

  ஒரு நாளைக்கு பிளேட் முட்ட அவிச்சு வச்சுப்போட்டு பெப்பரும் சோல்ட்டும் தொட்டூஊஊஊஊஊஊஉ தொட்டுச் சாப்பிடவேணும் என நினைக்கிறேன்... காலநேரம் சரிவருதேயில்லை:))))).

  மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்ஸ்.

  ReplyDelete
 23. ஊசிக்குறிப்பு:
  புகையால ஃபிளைட்ஸ் தான் கான்சல்ட் ஆம்.... புளொக்குகளுக்கெல்லாம் ஃபிளைட்லயா வாறாங்க?.. ஆங்ங்ங்ங்ங்ங்ங்... ஆரும் கொயம்பிடாதீங்க... இது பத்திடும் கற்பூரம்மாதிரி:)))))))))))).

  இல்ஸ்ஸ் அரக்கி இருங்கோ... வாயைக்கொடுத்தே... ஆபத்தை விலைக்கு வாங்கிடுவேன் நான்:)))))).

  ReplyDelete
 24. ரொம்ப அழகாக உங்க ஊரினை பற்றி சொன்னீங்க..சில இடங்களில் கஷ்டமாக இருந்தது..

  உங்களுக்கும் சைகிள் காணாம போச்சா..எனக்கும் சின்னை வயதில் என்னுடைய புதிய சைகிளினை யாரோ எடுத்து கொண்டு போய்விட்டாங்க...

  ReplyDelete
 25. நல்ல பதிவு அதிரா,ரீடர்லே நேத்தே படிச்சிட்டேன். அந்தக்கால நினைவுகளை அழகா எழுதிருக்கீங்க.எங்க ஊர்லயும் எவர்சில்வர் டம்ளர்தான்.:)

  கமென்ட்ஸ் படிக்க நாளைக்கு வரேன்,இப்ப டின்னருக்கு டைமாச்சு.;)

  ReplyDelete
 26. ஆ..அதிரா இவ்வளவு கெதியில உங்க ஊர் பற்றி எழுதிப்போட்டிட்டீங்க. முதலே எல்லாம் தயாரா வைத்திருந்திருக்கிறீங்க போல.இப்படி ஒரு பதிவை எழுத வைத்த‌ ஸாதிகாக்காவுக்கு முதலில நன்றி.
  உங்க ஊர் எது என எனக்கு தெரியுமே.உண்மையில நான் அங்கு இருந்த காலத்தில‌
  அந்த அரச‌ பிள்ளையார் கோவிலுக்கு வருவேன். பின்வீதியில் ஒரு நாட்டிய ஆசிரியர் நல்ல famous ஆக இருந்தவர். பாடல்கள் ,கவிதை நன்றாக எழுதுவார். அவர் எழுதிய பாடல் ஒன்று மிகப்பிரபல்யம்.(பாட்டைச்சொன்னா ஊரைக்காட்டிவிடும்.)
  அந்த மண்ணில் பிறந்த உங்களுக்கும் கலை(ஞி)கள் வருவதில் ஆச்சர்யப்படஒன்னுமில்லை அதிரா.

  பூவரசம் இலைகளை பறித்து உருட்டி ஊதுவோம் நல்ல சத்தமாக வரும்.செம்மண்ணை எங்க ஊரில செம்பாட்டு மண் எனக் கூறுவார்கள்.உங்க ஊரில இருந்து கிழக்கு பக்கமாகத்தான் என் ஊர்.
  ஊரைப்பற்றி நினைத்தாலே கவலையாக இருக்கும். அது ஒரு பசுமையான நினைவுகள்.
  ஊர் நினைவுகளை ஞாபகப்படுத்தியமைக்கு(கிணற்றடிக்குளியல்,மண்பொம்மை,திருவிழா,அதிகாலைமணியோசை இன்னும்,,,,,,,,,,,,)நன்றி,thanks, danke.

  ReplyDelete
 27. வாங்க கீதா.

  உங்கட சைக்கிள் எப்போ காணாமல் போச்சு? 89-99 கால கட்டத்தில் என்றால் சந்தேகமே இல்லை... இங்கு வைத்தே அடுத்தமுறை வரும்போது ஆளைப் பிடித்திடலாம்... 10 வருடம் இந்தியாவைக் கலக்கிய ஆள்தான்:))).

  மிக்க நன்றி கீதா.

  ReplyDelete
 28. வாங்க மஹி...

  டின்னருக்கு அடிதானே? சே..சே.. என்னப்பா எனக்கு குழம்புது எல்லாமே... டின்னருக்கு அடைதானேன்னு கேட்க வந்தேன்...

  மிக்க நன்றி, மெதுவா வாங்க.

  ReplyDelete
 29. வாங்க அம்முலு... தயாராக எல்லாம் இல்ல.. இதெல்லாம் என்ன யூனிவசிட்டி ஃபைனலா?:))). ஸாதிகா அக்காவின் பதிவை திரும்ப திரும்ப படித்தேன்... அப்படியே என் பிளாஸ்பக்... கண்ணில வந்துது... எழுதிட்டேன்ன்ன்ன்.

  ஊரைக் கண்டுபிடிச்சிட்டீங்களோ? எனக்குத் தெரியும் உங்களுக்குத் தெரியுமென:))).

  மேலே இருக்கும் கோயில் படமும் எங்களூர்க்கோயில்தான்:).

  சில ஊர்களில் செம்பாட்டு மண் எனச் சொல்வார்கள் ஆனா எங்கள் ஊரில் அப்படிச் சொல்வதில்லை/ நான் அறியவில்லை.

  அப்போ நீங்க ரோட்டுக்குக் கிழக்கால:))).

  மியாவும் dankes.. thanks...சே..சே.. நன்றி அம்முலு.

  ReplyDelete
 30. உங்கட சைக்கிள் எப்போ காணாமல் போச்சு? 89-99 கால கட்டத்தில் என்றால் சந்தேகமே இல்லை... இங்கு வைத்தே அடுத்தமுறை வரும்போது ஆளைப் பிடித்திடலாம்... 10 வருடம் இந்தியாவைக் கலக்கிய ஆள்தான்:))).//
  சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரி ரேஞ்சுக்கு என்னை ஒப்பிட்டமைக்கு என் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன். போற போக்கை பார்த்தா காணாமல் போன சேவல், கோழிக்குஞ்சு கேஸ் எல்லாம் வரும் போல இருக்கே. இந்தியாவில் இருந்த போது நான் பால் குடி மறக்காத ஒரு பச்சிளம் குழந்தை போல தான் இருந்தேன் என்று சொல்லிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 31. ஹா..ஹா..ஹா... வரவர பூவுலகில எல்லோரும் ரொம்பத்தான் விபரமாக இருக்கினம்ம்ம்ம்ம்ம்:)).

  //போற போக்கை பார்த்தா காணாமல் போன சேவல், கோழிக்குஞ்சு கேஸ் எல்லாம் வரும் போல இருக்கே. //

  இது வேற இருக்கோ? அடிப்பெட்டியில இருந்த விஷயமெல்லாம் அதிராவால கிளறுப்பட்டு இப்பத்தான் மேல வருகுதூஊஊஊஊஊஊ:).

  //இந்தியாவில் இருந்த போது நான் பால் குடி மறக்காத ஒரு பச்சிளம் குழந்தை போல தான் இருந்தேன் என்று சொல்லிக் கொள்கிறேன். //

  இப்ப எப்பூடி? இல்ல..இல்ல... நான் ஒண்ணுமே கேட்கவே இல்லை... முருங்கைமரமே வெயார் ஆ யூஊஊஊஊஊஊ:)))).

  ReplyDelete
 32. //விட்டமும் பெரிதாக இருக்கும்// அது நிலத்தடி நீரை வீணாக்காமல் இருக்கிறதுக்காக அப்பிடி ஆளம் குறைவாக ஆனால் பரப்பால பெரிசாகக் கிணறு எடுக்கிறவங்கள் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன் அதிரா. //முருங்கைமரமே வெயார் ஆ யூஊஊஊஊஊஊ// ;))) அதிராவின்ர ஊரில இருக்குதாம். ;)
  //றலி சைக்கிள்// நான் கண்டனான். நல்லூர்க் கோயிலடியில 'ஃபான்' சுத்திக் கொண்டு நிண்டது. ;))

  எத்தினையோ தரம் வாறதும் போறதுமா இருந்து இப்பதான் கமண்ட் போட முடிஞ்சுது. லேட்டா வந்து இருக்கிறன் எண்டு கோவிக்காதைங்கோ.

  ReplyDelete
 33. வாங்க இமா..

  // அது நிலத்தடி நீரை வீணாக்காமல் இருக்கிறதுக்காக அப்பிடி ஆளம் குறைவாக ஆனால் பரப்பால பெரிசாகக் கிணறு எடுக்கிறவங்கள் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன் அதிரா.//

  ஒரு பனையளவு அல்லது அதுக்குமேல் ஆளம் என்றேனே... பனையளவு உயரமெனில் அண்ணாந்து பார்த்தால் ஆகாயத்தைத் தொடுவதுபோல அல்லவோ இருக்கும்.

  இல்லை நான் நினைக்கிறேன், அதிக ஆளம் என்பதால் தப்பித்தவறி ஆரும் விழுந்தாலும் பயப்பூடாமல் நிற்கலாமெல்லோ:)) இன்னொன்று கிணற்றுக்கு இரு பக்கமும் நின்று தண்ணி அள்ளும் வசதி இருக்கும், இரு துலாக்கள் போடப்பட்டிருக்கும், சிறிய விட்டமெனில் இதெல்லாம் கஸ்டமெல்லோ... அதுவாகவும் இருக்கலாம், இல்ல இதுவாகவும் இருக்கலாம்:))...

  மியாவும் நன்றி இமா.

  ReplyDelete
 34. எங்கட ஊரில முருங்கைக்காய் நல்ல சுசி(ருசி):))).

  அடக்கடவுளே.... என் சைக்கிளை இப்போ நல்லூரடியிலயோ வச்சிருக்கினம்... ஒருவேளை மியூசியம் மாதிரி இருக்குமோ?..:)))

  ReplyDelete
 35. அதிரா உங்கள் ஊர் பற்றிய உங்கள் மறக்க முடியாத நினைவுகள் விவரித்த விதம் அருமை,ஆஹா தூத்துக்குடியில் இருந்து கப்பல் போக்குவரத்து இலங்கைக்கு ஆரம்பித்தாயிற்று,சந்தர்ப்பம் கிடைத்தால் போய்வர எண்ணம்.சின்ன சின்ன ஆசை பாடல் மிகவும் ரசிக்கும் பாடல்.பகிர்வு சூப்பர்.

  ReplyDelete
 36. வாங்கோ ஆசியா? இன்னும் பிஸிதானோ?. ஊரைப்பற்றிய தலைப்போடு விரைவில் உங்களை எதிர்பார்க்கிறேன்.

  சந்தர்ப்பம் கிடைத்தால் போய் இலங்கையை ஒரு சுற்று சுற்றிக்கொண்டு வாங்கோ ஆசியா. இங்கு எம் நண்பரின் தந்தை இந்தியாவிலிருந்து லயன்ஸ் கிளப்மூலம் கொழும்புக்கு போய் வந்தாராம், வந்ததிலிருந்து என்ன ஒரு அழகாக இருக்கு கொழும்பு என சொல்லிக்கொண்டேயிருந்தாராம்.

  சின்ன சின்ன ஆசைகள் .... மறக்கமுடியாத ஒரு பாடல்தான்... அப்பாடல் வந்த புதிதில் என் ஒன்றுவிட்ட அக்கா ஒருவர்... ஜோக்காகப் பாடுவா... “என்ன இந்தப் பூமி செத்துவிட ஆசை” என:) அதை நினைத்துத்தான் எழுதியிருக்கிறேன் கீழே:))).

  மிக்க நன்றி ஆசியா.

  ReplyDelete
 37. // இம்மண்ணைக் குழைத்து வடை, மோதகம், கொழுக்கட்டை எல்லாம் செய்து வெய்யிலில் காயவைப்பேன். நாம் புறப்பட்டபின், அந்த வடை மோதகத்தைப் பார்த்துப் பார்த்து அன்ரியாட்கள் மிகவும் கவலைப்படுவார்களாம் என்னை நினைத்து
  :(((.//

  நினைவாலே சிலைசெய்து உனக்காக வைத்தேன் என்று வடிவா பாடினது இந்த பூஸ்தானோ!!

  ReplyDelete
 38. // என்னில் இப்பவும் ஒரு பழக்கம், எங்காவது போனால் என் நினைவாக, அவர்கள் வீட்டுச் சுவரிலாவது, ஒரு குட்டி அடையாளம் வைத்துவிட்டு வருவேன். ஆரோ சொன்னார்கள், வீட்டுக்குப் பெயிண்ட் பண்ணும்போது, என் அடையாளத்தை அழிக்க விரும்பாமல், அதைவிட்டுவிட்டுப் பெயிண்ட் பண்ணியதாக..... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்..:(. //

  நல்ல பழக்கம். நீங்களே உங்கள மெச்சிகிட்டு, உங்க முதுகிலே நீங்களே ரெண்டு தட்டு தட்டிங்க பூஸ். அவ்வவ்... புது பெயிண்ட் பண்ணியதும் இதுமாதிரி அடையாளமிட்டால் யாரும் முதுகில் ரெண்டு தப்பு தப்பிவிடமாட்டர்களே !! அப்படியெண்டால் டிஸ்யூ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் எண்டு கேட்கப் படாது ஆமா... சொல்லிப்புட்டேன்.. க்ர்ர்ர்ர்..

  ReplyDelete
 39. பதிவினூடே ஒரு சின்ன சோக மென்டாலும், சொல்லவந்ததை சுவையாய் சொன்ன பூஸுக்கு ஒரு தேங்க்ஸ்!!

  ReplyDelete
 40. வாங்கோ அப்துல் காதர்..

  // நினைவாலே சிலைசெய்து உனக்காக வைத்தேன் என்று வடிவா பாடினது இந்த பூஸ்தானோ!!
  ///

  ஆஆஆஆஆ இது என் கொப்பி ரைட் பாடலாச்சே:) உங்களுக்கு எப்பூடிக் கிடைச்சுது?:).

  //நல்ல பழக்கம். நீங்களே உங்கள மெச்சிகிட்டு,// தங்கியூஊஊஊ தங்கியூஊஊஊஊஉ... நல்ல பயக்கம் என்றது மட்டும்தேன் என் கண்ணுக்குத் தெரியுதூஊஊஊஊஊஊஊ:))..

  நீங்களும் இப்போ கர் சொல்லப் பழகிட்டீங்களோ?:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்:).

  மியாவ் மியாவ் அப்துல் காதர்..

  ReplyDelete
 41. “இந்துமா ஆழியில் இலங்குகின்ற முத்தென
  வந்து போன வெள்ளையர் வாழ்த்தி நின்ற தீவடா”
  என்ற பாடல் இயற்றப்பட்ட மாங்காய்போல் தோன்றிடும் மாணிக்கத் தீவான இலங்கையிலே//

  வாவ்வ்வ்வ்வ் வாவ் வாவ்

  ReplyDelete
 42. என் பேபிக் காலத்து நினைவுகளையே பகிர்ந்து கொள்கிறேன்.//

  பகிருங்க பகிருங்க ரீ சாப்பிட்டு வாரேன்ன்ன்ன்ன்...

  ReplyDelete
 43. கலை உணர்வு அதிகமுள்ள ஊர். அதாவது வீணை, வயலின், மத்தளம், நடனம், சங்கீதம் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊர், பெரும்பாலான கோயில்களில் வகுப்புக்கள் நடைபெறும், இதற்கெனப் பல நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற வித்துவான்களும் உருவாகியிருக்கும் ஊர்.//

  நான் அங்கு இல்லாமல் போய்விட்டேனே... இசையில் மயங்கியே காலத்தை ஓட்டிருப்பேனே.. நான் என்ன செய்வேன்

  ReplyDelete
 44. நாவற்குழியில் என் சைக்கிள் களவாடப்பட்டுவிட்டது:(.... //

  அடப்பாவிகளா.. களவானிங்க இல்லாத இடமே இல்லையா

  ReplyDelete
 45. சிலநேரம் சிலரின் தோடு, மோதிரம் விழுந்துவிடும், எட்டிப்பார்த்துக் கண்டுபிடிப்போம் //

  திரும்ப எடுப்பீங்களா இல்லையா ;-)))))))))

  ReplyDelete
 46. திருமணத்தின் பின்பு ஆண்கள்தான் பெண் வீட்டில் வந்து இருப்பார்கள்//

  அட இது கூட நல்லாருக்கே.....;-)

  ReplyDelete
 47. என்னில் இப்பவும் ஒரு பழக்கம், எங்காவது போனால் என் நினைவாக, அவர்கள் வீட்டுச் சுவரிலாவது, ஒரு குட்டி அடையாளம் வைத்துவிட்டு வருவேன். ஆரோ சொன்னார்கள், வீட்டுக்குப் பெயிண்ட் பண்ணும்போது, என் அடையாளத்தை அழிக்க விரும்பாமல், அதைவிட்டுவிட்டுப் பெயிண்ட் பண்ணியதாக..... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்..:(.//

  என்னால தாங்க முடியலையே.. எனக்கும் டிஸ்யூ ப்ளீஸ்

  ReplyDelete
 48. தின்ன தின்ன ஆசை.... தீராத ஆசை.... முத்து முத்து ஆசை.... முத்தமிட ஆசை.... என்ன இந்தப் பூமி.... செத்துவிட ஆசை:)))).//

  ஆஹா ஆஹா... புதுசா இருக்கே,..... ;-)

  ReplyDelete
 49. செத்துவிட ஆசையா... ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.