ஒரு கற்பனைக் கவிதை:)
திருவிழாக் கூட்டத்திலே
தொலைந்துபோன சங்கிலிபோல்
இடம் பெயர்ந்த மக்களோடு
காணாமல் போன என் நண்பியே!!
நீ எங்கே இருக்கிறாய்?
முகவரிகள் மாறியதால்
தொடர்புகள்
துண்டிக்கப்பட்டனவே!!
பின்புறத்தைப் பார்த்து
நீயாக இருக்காதா
என எண்ணி ஓடிச்சென்று
முகம் பார்த்ததும் - அது
நீயில்லை என்று எத்தனைநாள்
ஏமாந்திருக்கிறேன்!!
என்னைப்போலவேதான்
நீயும் எங்காவது
ஏமாந்துகொண்டிருக்கிறாயா?!!
நம் உருவங்கள்
மாறியிருக்கலாம் - ஆனால்
என்றைக்குமே - நம்
நட்பு மாறாது!!
ஏனெனில்
முகம் பார்க்க முன்பே
பேனாவினால்
கருத்தரித்த நட்பல்லவா
நம் நட்பு!!
*********************************************************************************
ஊசி இணைப்பு:)
“பிறர் என்ன சொன்னாலும், அவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதீர்கள்,உங்கள் மனச்சாட்சி என்ன சொல்கிறதோ, அதன்படியே உங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ளுங்கள்”.
**********************************************************************************
விடுங்கோ தம்பி வாறன்:), ஏதோ சத்தம் கேட்குது.. ஓஓஓஓ... பிளேன்போலதான் இருக்கு.... கொஞ்சம் பதிஞ்சதுபோல போகுதே.. எப்பத்தான் லாண்ட் பண்ணப்போகுதோ???:(.....
விடுங்கோ தம்பி வாறன்:), ஏதோ சத்தம் கேட்குது.. ஓஓஓஓ... பிளேன்போலதான் இருக்கு.... கொஞ்சம் பதிஞ்சதுபோல போகுதே.. எப்பத்தான் லாண்ட் பண்ணப்போகுதோ???:(.....
**********************************************************************************
கொசுக்கடிக்கு சே..சே... கொசு மயிலுக்கு தம்பி அனுப்பினவர்... இங்க மட்டுமில்ல, தம்பிக்கு எங்கபோனாலும் இலவச:) அனுமதியும் பல்கனில சீற்றும் குடுக்கினம்ம்ம்ம்ம்ம்ம்ம்:).
**********************************************************************************
|
Tweet |
|
|||
உங்க பாடல் தெரிவுக்கு ஒரு சல்யூட்.உண்மையில் அருமையான வரிகள்.நடிகர் முரளி நடித்த படங்களை விரும்பிப்பார்ப்பேன்.
ReplyDeleteகவிதை சூப்பர் அதிரா.என் உணர்வோடு கவிதை ஒன்றிவிட்டது.ஏனெனில் நான் என் நண்பி ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறேன்.என் நாட்டில்தான் என்பவர் சிலர்.பழைமை பேணும் நாடுதான் என்பவர் பலர்.இன்னும் தேடுதல் தொடர்கிறது.
படங்களுக்கு பொருத்தமாக எழுதுறீங்க அதிரா.சூப்பர்
வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஸாதிகா அக்கா... மாட்டிவிட்டிட்டீங்களே... அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).
ReplyDeleteவாங்க அம்முலு...
ReplyDeleteஎனக்கும் முரளியின் படங்கள் நன்கு பிடிக்கும் நிறையவே பார்த்திருக்கிறேன்.. இப்பாடலில்வரும் கெளசல்யாவை என கணவருக்கு நன்கு பிடிக்கும், எனக்கும்தான். நான் மீண்டும் மீண்டும் அலுக்காமல் பார்க்கும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
ஓ... உங்களுக்கேற்ற கவிதை.. எப்பவோ எழுதினேன்.. இன்றுதான் வெளியீடு:).
மிக்க நன்றி அம்முலு.... நான் நல்லது எழுதுறேனோ இல்லையோ..., ஆனா நீங்கள் அனைத்தையும் ரசிச்சு, விரும்பிப் படிக்கிறீங்க + கேட்கிறீங்க.. சந்தோஷமாக இருக்கு... மியாவ் மியாவ்... :).
அதென்ன கற்பனைக்கவிதை?கனவில் வந்த கவிதை?கற்பனை செய்தால்தானே கவிதை பிறக்கும் அதீஸ்?
ReplyDelete////ஏனெனில்
ReplyDeleteமுகம் பார்க்க முன்பே
பேனாவினால்
கருத்தரித்த நட்பல்லவா
நம் நட்பு!!
///ஆஹா..அருமை வரிகள்.நான் கூட ஷாப்பிங் போகும் பொழுதும்,வெளியிடங்களிலும் இலங்கைத்தமிழ் பேசும் பெண்களைக்கணடால் அட நம்ம அதீஸா என்று ஆர்வத்தோடுத்தான் பார்ப்பேனாக்கும்.
//“பிறர் என்ன சொன்னாலும், அவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதீர்கள்,உங்கள் மனச்சாட்சி என்ன சொல்கிறதோ, அதன்படியே உங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ளுங்கள்/./ அதீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ் எங்கேயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ போய்ட்டீங்க.
ReplyDelete// “பிறர் என்ன சொன்னாலும், அவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளா தீர்கள்,உங்கள் மனச்சாட்சி என்ன சொல்கிறதோ, அதன்படியே உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்”. //
ReplyDeleteஆஹா இது கவிதையல்ல நிஜம். சல்யூட் பூஸ்..!!
நட்பை நட்பே எழுதிக் கொண்டாடுவது நட்பின் அழகை இன்னும் கூட்டினமோ! இருந்தாலும் இங்கே ரெண்டு கவிதையானிகள் (பூஸார்-ஸாதிகாக்கா) களமிறங்கி விட்டார்கள் ஆகவே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
ReplyDelete//இங்கே ரெண்டு கவிதையானிகள் (பூஸார்-ஸாதிகாக்கா) களமிறங்கி விட்டார்கள் // அப்துல்காதர்,எதனை வைத்து இருவரையும் கவிதயானிகள் என்று கூறுகின்றீர்கள்.உச்சஸ்தாயியில் கூப்பாடு போடுவதைப்பார்த்தா?இந்த் விஷயத்தில் பூஸ் எனக்கு அக்காவாக்கும்.பூஸை பார்த்து பார்த்துத்தான் எனக்கு இப்படி..ஹி..ஹி..மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ReplyDeleteவாங்க ஸாதிகா அக்கா.. உங்களுக்குத் தெரியாதோ? காரிலபோகேக்கை வாற கவிதை... சமைக்கேக்கை வாற கவிதை, ரெட்மில் செய்யேக்கை வாற கவிதை... இப்பூடியும் இனி வரும்:))... ஏனெண்டால் இப்பூடியான நேரங்களில்தான் எனக்கு பட்டுஊஊஊஊஊ பட்டெனக் கவிதை கதை தோன்றும்ம்ம்ம்:)).
ReplyDelete//வெளியிடங்களிலும் இலங்கைத்தமிழ் பேசும் பெண்களைக்கணடால் அட நம்ம அதீஸா என்று ஆர்வத்தோடுத்தான் பார்ப்பேனாக்கும்//
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா பேசுங்கோ ஸாதிகா அக்கா... இதைப்பார்த்தால் புகை இன்னும் அதிகமாகும்.. இன்னும் பல இடங்களிலிருந்து... :))))).
//அதீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ் எங்கேயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ போய்ட்டீங்க. /// ஸாதிகா அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ வர வர என்னை மாதிரியே ஆகிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).
மியாவ் மியாவ்(மிக்க நன்றி அப்பூடின்னேன்:)).
வாங்க அப்துல் காதர்...
ReplyDelete//ஆஹா இது கவிதையல்ல நிஜம். சல்யூட் பூஸ்..!!// தங்கியூ.. தங்கியூஊஊஊஊ.
//இருந்தாலும் இங்கே ரெண்டு கவிதையானிகள் (பூஸார்-ஸாதிகாக்கா) களமிறங்கி விட்டார்கள் ஆகவே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..//
கடவுளே.... ஆழ/ளம் அறியாமல் காலை விட்டுவிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))... அதாவது ஸாதிகா அக்காவோட பூஸை ஒப்பிட்டுவிட்டீங்க... கதை எழுதுவதில அவவை நான் இன்னும் தூசியளவுகூடத் தொடவில்லை... இப்பூடிப்பட்ட என்னைப் போய் அவவோட ஒப்பிட்டதால கையில பெரீஈஈஈஈஈய பொல்லோட துரத்திட்டு வாறா:)).. ஓடிவாங்க ஓடிவாங்க... எங்கட முருங்கையில இடமில்லை, மரம் வேற இல்ஸ்ஸ் இன் எடை தாங்க முடியாமல் ஒருபக்கம் சரிஞ்சுபோய்க்கிடக்கே:))), கெதியா ஏறுங்க பக்கத்தில நிற்கிற பப்பா மரத்தில, உச்சிக்கு போயிடுங்க.. இறுக்கிப் பிடிச்சுக்கொண்டிருங்கோ... அவ நிண்டு பார்த்திட்டுப் போயிடுவா:))...
உஸ் அப்பாடா.. என் பக்கம் வந்தோரை காப்பாத்தி பத்திரமா அனுப்பிவைக்கவேண்டியது என் பொறுப்பாயிட்டே:)))).
மியாவ் மியாவ் அப்துல் காதர்.
ஸாதிகா அக்கா நீங்க வரவர அதிராமாதிரியே கதைக்கிறீங்க:)))).
ReplyDeleteமாணவன்: சேர்!! நீங்க எங்க அப்பா மாதிரியே பாடுறீங்க சேர்..
ஆசிரியர்: ஏன் உங்கட அப்பா மிக நல்லாப் பாடுவாரோ?
மாணவன்: இல்ல சேர்!!! அவருக்குப் பாடவே தெரியாது...:)))).
இது நினைவு வந்துது என்னை நினைச்சேன்...
மியாவ் மியாவ் ஸாதிகா அக்கா!!.
நான் கூட ஷாப்பிங் போகும் பொழுதும்,வெளியிடங்களிலும் இலங்கைத்தமிழ் பேசும் பெண்களைக்கணடால் அட நம்ம அதீஸா என்று ஆர்வத்தோடுத்தான் பார்ப்பேனாக்கும்///
ReplyDeleteவர வர ப்ளாக் பக்கம் எல்லோரும் சென்டிமென்டாவே பேசுறாங்கப்பா!
அதீஸூ, நல்ல கவிதை. நானும் முன்பு தேடுவதுண்டு. இப்ப இல்லை. என் ப்ரண்ட்ஸ் முகம் கூட எனக்கு மறந்து விடும் போல இருக்கு ( 16 வயதுக்கு முதல் பார்த்த முகங்கள் ) . நான் இன்னும் யங்கோ யங் தான் ஆனா என் ப்ரண்ட்ஸ் எல்லாம் எப்படி டொக்கு விழுந்து இருக்கிறார்களோ ( ஹிஹி... ) என்று பார்க்க ஆசை.
முரளி பிடிக்குமா? சத்யராஜ் ஒரு முறை சொன்னது, " முரளி பாவம். நாற்பது வயதிலும் இன்னும் கல்லூரிக்கு போய், வந்திட்டு இருக்கிறார். இந்த முறை எங்க முதல்வரிடம் சொல்லி எப்படியாவது பாஸ் பண்ணி விட்டுடணும்." எனக்கு சோகப் படங்கள் பிடிக்காது. அதிலும் முரளியின் படங்கள் எல்லாமே சோகமா இருப்பதால் பார்ப்பது குறைவு.
ReplyDeleteஅழகான கவிதை,கூடவே க்யூட் போட்டோஸ்! நல்லா இருக்கு அதிரா.
ReplyDelete/சத்யராஜ் ஒரு முறை சொன்னது, " முரளி பாவம். நாற்பது வயதிலும் இன்னும் கல்லூரிக்கு போய், வந்திட்டு இருக்கிறார். இந்த முறை எங்க முதல்வரிடம் சொல்லி எப்படியாவது பாஸ் பண்ணி விட்டுடணும்." / :) ஆமாம் நானும் இதைப் படிச்சிருக்கேன். பாவம் டிகிரி வாங்காமலே மறைந்தும் விட்டார்.
எனக்கு இந்தப்பாட்டில் முரளி கூட பாடும் பெண்ணை ரொம்பப்பிடிக்கும். ;)
வாங்க வான்ஸ்ஸ்..
ReplyDelete//வர வர ப்ளாக் பக்கம் எல்லோரும் சென்டிமென்டாவே பேசுறாங்கப்பா! //
கரெக்ட்டா கண்ணில பட்டிடுமே வசனமெல்லாம் கிக்..கிக்..கீஈஈ:), எல்லாம் ஒரு சேஞ்சுக்காகத்தானாக்கும்:).
//நான் இன்னும் யங்கோ யங் தான்// நடுக்கமில்லாமல் நேரா எழுதுறதைப் பார்த்தே:)) நான் கண்டுபிடிச்சிட்டேன் நீங்க யங்கோ யங் என... சோ டோண்ட் வொரி வான்ஸ்ஸ்ஸ். வயசானா எழுத்தெல்லாம் சொத்தியாகவெல்லோ வரும்:)))).
தலையை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). முரளியின் படங்கள் பெரும்பாலும் குடும்பக்கதைபோல இருக்கும், குடும்பத்தோடு பார்க்கலாம் அதனால எனக்குப் பிடிக்கும்... சோகப்படங்கள்தான் அதிகம் முன்பு என்னைக் கவரும், இப்போ நிறுத்திட்டேன் சோகமானகதைகள் பார்ப்பதை:((.
ஆனா முரளியின் தஞ்சாவூரு மண்ணெடுத்து.. பாட்டை ஆராலும் மறக்க முடியாதெல்லோ.
மியாவ் மியாவ் வான்ஸ்ஸ்.
வாங்க மஹி...
ReplyDeleteஎல்லாமே ஏனோதானோ என்றிருக்கு எனக்கு....
//அழகான கவிதை,கூடவே க்யூட் போட்டோஸ்// மிக்க நன்றி மஹி.
//பாவம் டிகிரி வாங்காமலே மறைந்தும் விட்டார். //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நீங்களுமோ? எனக்கென்னமோ சத்தியராஜின் படங்களைவிட முரளியின் படங்கள்தான் அதிகம் நல்லவைபோல தெரியுது. ச.ராஜின் பொம்முக்குட்டி அம்மாவுக்கு எனும் படம் மறக்கமுடியாதது... வேறு ஒன்றும் பெரிதாக நினைவு வரேல்லை:(.
மியாவ் மியாவ் மஹி.
ஒரு கற்பனைக் கவிதை..//
ReplyDeleteகவிதையின் தலைப்பிற்கு கீழேயே என்ன ஒரு டெரர் தனம்..
கற்பனைக் கவிதை...
ஹி...ஹி...
நட்பின் பிரிவினை யாதார்த்த நடையில் எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteபிரிவுக் கவிதை அருமை,..
நாங்களும் எத்தனையோ நபர்களைப் பின்னால் பார்த்து= அட எங்களோடு முன்பு படித்த நண்பன் இவராகத் தான் இருக்கும் எனும் ஊகத்தின் அடிப்படையில் தொடர்ந்து சென்று ஏமாந்த சம்பவங்களும் உண்டு,
பிளேன் லாண்ட் ஆவதை வரவேற்க ரெடி ஆவோர், என்ன உங்க வீட்டுச் செல்லப் பிராணிகளா;-))
ReplyDelete/ச.ராஜின் பொம்முக்குட்டி அம்மாவுக்கு எனும் படம் மறக்கமுடியாதது... வேறு ஒன்றும் பெரிதாக நினைவு வரேல்லை/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!அதெப்புடி எங்கூர்க்காரர் படம் நினைவுக்கு வரலைன்னு சொல்லலால் நீங்க? ;)
ReplyDeleteச.ராஜ் பலபடங்களில் வில்ல்லேன் :) ரோல்தான் செய்திருக்கார்.விக்ரம் படம் பாக்கலையா நீங்க? கடலோரக்கவிதைகள்,அமைதிப்படை,வேதம் புதிது இன்னும் பல நல்லபடங்கள் இருக்கே.:)
வாங்க நிரூபன்..
ReplyDelete//கற்பனைக் கவிதை...
ஹி...ஹி... //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), பயந்திடாதீங்க நான் இப்பூடித்தான்:).
உண்மைதான், அதுவும் எம் நாட்டில் திடீர் இடம்பெயர்வுகள், கரண்ட் இல்லாமை, ஃபோன் இல்லாமை இருந்ததை எல்லாம் நினைத்தேன்... இப்படி பலபேர் வாழ்க்கையில் நடந்திருக்குமே என மனம் சொல்லிச்சா.... உடனே கவிதையாக்கிட்டேன்.
//பிளேன் லாண்ட் ஆவதை வரவேற்க ரெடி ஆவோர், என்ன உங்க வீட்டுச் செல்லப் பிராணிகளா;-))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), ஆத்தா ஆடு வளர்த்தா, மாடு வளர்த்தா, கோழி வளர்த்தா... ஆனா பூனை நாய் வளர்க்கலியே.... அதுக்குப் பதிலா என்னையும் தம்பியையும்தானே வளர்த்தா:))))..... அது நானும் தம்பியும் பைலட் அண்ணனைக் கனநாளாக் காணவில்லையே என பார்த்துக்கொண்டிருக்கிறோம்ம்ம்ம்ம்.
மியாவும் நன்றி நிருபன்(பெயர் சரிதானே?:)).
வாங்க மகி,
ReplyDeleteகடவுளே சத்தியராஜ் அங்கிள்(ஒரு மரியாதைதான்:)) உங்க ஊர்க்காரரோ? இதை முன்பே சொல்லியிருக்கப்பிடாதோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))அதிலயும் வில்லன் என சொல்லிட்டீங்க....
தெரியாம கதைச்சுட்டேன்... நான் வாபஸ் வாங்கிட்டு மர உச்சிக்கே போய் இருந்திடுறேன் பழையபடி... ஆங்ங்ங்ங்ங்ங்ங்.
ஆசைக்கு நல்ல கூலா காத்துவாங்கலாம் என ஒருக்கா, ஒரே ஒருக்கால்தான் கீழ இறங்கினேன்.... அடிக்க வருகினம்ம்ம்ம்... இல்ஸ்ஸ்ஸ் வெயார் ஆ யூஊஊஊஊஊஊ.. நானும் உச்சிக்கே வந்திடுறேன்:)).
மியாவ் மியாவ் மஹி.
mee the firstu..
ReplyDeleteபின்புறத்தைப் பார்த்து
ReplyDeleteநீயாக இருக்காதா
என எண்ணி ஓடிச்சென்று
முகம் பார்த்ததும் - அது
நீயில்லை என்று எத்தனைநாள்
ஏமாந்திருக்கிறேன்!!///
நாங்கலாம் திட்டே வாங்கி இருக்கோம்
கவிதை அனைத்தும் சூப்பர்..
உங்கள் நட்பு என்றும் தொடரட்டும்..
25vathu vadai enakuthana..:)
ReplyDeleteவாங்க சிவா,
ReplyDeleteபிந்தி வந்தாலும் நீங்கதான் ஃபெஸ்ட்:).
உங்களுக்கு இம்முறை வடை கிடையாது, ஏனெண்டால் இன்று பிறந்தநாளெல்லோ... அதால இனிப்பா குலாப் ஜாமூன்... ஹப்பி பேர்த்டே.
மிக்க நன்றி சிவா.
ரொம்ப அருமையாக அழகாக எழுதி இருக்கின்றிங்க..எனக்கும் இப்படி சிலர் நண்பர்கள் இருக்காங்க...ஆனா இப்பொழுது காணாமலே போய்விட்டாங்க..
ReplyDeleteமேலே கொடுத்துள்ள பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும்...
நம் உருவங்கள்
ReplyDeleteமாறியிருக்கலாம் - ஆனால்
என்றைக்குமே - நம்
நட்பு மாறாது!!
ஏனெனில்
முகம் பார்க்க முன்பே
பேனாவினால்
கருத்தரித்த நட்பல்லவா
நம் நட்பு!!
நல்ல கவிதை எனக்கு பிடித்தது இந்த வரிகள்.
உண்மை தான் அதிரா. இதை நானும் எண்ணி பார்ப்பேன்.
சூப்பரா கவிதை எழுதறிங்க. அதிரா என்றால் எப்பவுமே அதில் ஒரு ஸ்பெஷல் எபக்ட் இருக்கும்.
மீண்டும் வருகிறேன்.
வாங்க கீதா.. பலபேர் வாழ்க்கையில் இது நடந்திருக்கும் சம்பவமே..
ReplyDeleteபாடல்... இப்போ மாறிப்போச்ச்ச்ச்ச்ச்:).
மிக்க நன்றி கீதா.
வாங்க விஜி...
ReplyDeleteஉங்கள் புளொக்கை ஏன் தூசு தட்டாமல் விட்டிருக்கிறீங்க? நீண்டநாள் ஆகிறதே...
//அதிரா என்றால் எப்பவுமே அதில் ஒரு ஸ்பெஷல் எபக்ட் இருக்கும்.// ஆஆஆஆ என்னை எங்கேயோ கொண்டுபோய் விட்டிட்டீங்க.... :))).
மிக்க நன்றி விஜி.
கவிதை நன்றாக இருக்கிறது அதிரா.
ReplyDelete//ஏனெனில்
முகம் பார்க்க முன்பே
பேனாவினால்
கருத்தரித்த நட்பல்லவா
நம் நட்பு!!//
இங்க இருக்கிற பல நட்புக்கள் இப்பிடித்தான் ஆனால் கீபோர்ட்ல உருவான நட்பு. ;)
வாங்க இமா...
ReplyDeleteஇப்படித்தான் வலைப்பூவிலோ என்னத்திலோ இன்ரநெட் மூலம் உருவான நட்பு, காதலாகி, திருமணம் முடிப்போம் என உறுதி எல்லாம் பூண்டபின்பு, இருவரும் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தார்களாம்.
சந்தித்தபோது, பெண் அழகில்லாமல் இருந்தாவாம், எதுவுமே பண்ண முடியாத நிலையில அந்த boy ஓடிப்போய் தண்டவாளத்திலோ எங்கோ குதித்து தற்கொலை பண்ணிட்டாராம்... இது இந்தியாவில்தான் நடந்திருக்கு.. நியூஸில் வந்த நியூஸ்ஸ்.
நம்ம படம் அடவான்ஸா வந்திருக்கேஏஏஏஏஏஏஏ
ReplyDelete