Friday, 3 February 2012

என்னாச்சு மாயா?:(((


மாயாவுக்கு என்னாச்சு? என்னால் நம்ப முடியவில்லை, சிலகாலம் வந்து பலகாலம் பழகியவர்போல பழகிவிட்டு... திடீரென என்ன நடந்தது.

வலையுலகில் கிடைத்த உண்மையான நட்பு நீங்கள் மியாவ், கடசிவரை இதே நட்போடு இருக்கவேண்டும் என்றெல்லாம் பல மெயில்கள் அனுப்பினார், எனக்கு என் பக்கத்தில் இருக்கும் பூஸ் தந்தார், படம் போடும் வசதி, மற்றும் நான் கேட்காமலேயே எத்தனையோ வசதிகள், அதுவும் என் மெயில் ஐடிகூட இல்லாமல் அனுப்பிக்கொண்டிருந்தார், பின்புதான் நான் என் ஐடி கொடுத்தேன்...

என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை... எனக்கு என்னாச்சுதெனத் தெரியாது.. M.R  இன் பின்னூட்டத்தையும்..
M.R said...
அன்பு தோழி அதிரா ...

தாங்கள் மேலே சொல்லி உள்ள கவிதை வரிகள் உண்மை ஆகிவிட்டதே

மாய உலகம் ராஜேஷ் என்னை வருத்ததில் தள்ளி விட்டு என்னை விட்டு சென்று விட்டான் தோழி ,மன வருத்தமாக உள்ளது

இந்த தகவலை சொல்ல வந்தேன் மேலே உள்ள கவிதை வரிகள் படிக்கும் பொழுது அவன் மறைந்தது மனதில் பாரமாக .....

மேற்கொண்டு எழுத வரவில்லை கண்களில் கண்ணீர் ,பிறகு வருகிறேன் தோழி..

................................................................................................................
இதில் பாருங்கள்...

தகவல் சொன்னமைக்கு மிக்க நன்றி ரமேஸ், இல்லையெனில் நான் மெயிலில் மாயாவைத் தேடிக்கொண்டே இருந்திருப்பேன்:((.ரமேஸின் தளத்தில் இருக்கும் தலைப்பையும் நம்பித்தான் இப்பதிவைப் போடுகிறேன்... மாயாவின் படமும் என் பக்கத்தில் பின்னூட்டத்தில் இருக்கு, ஆனா எடுத்து இதில் போடப் பயமாக இருக்கு... நடந்ததெதுவுமே எனக்கு தெரியவில்லை... எனக்கு மட்டுமில்லை, சில நாட்கள் பழகினாலும் அனைவர் மனதிலும் இடம்பிடித்த நல்ல உள்ளம் கொண்ட தம்பி மாயா. அவரின் பிறந்ததினம் இம்மாதம் 27ம் திகதி வருகிறது எனச் சொன்னார்.


அவரை சிலகாலமாகக் காணவில்லை, காணாமல் போனாலும்,  நெட்டுக்கு வந்தால் நிட்சயம் உங்கள் பக்கம் வருவேன் மெயில் அனுப்புவேன் என்றார்.


நான் அவர் பார்க்காதுபோனாலும் பறவாயில்லை 27ம் திகதி தலைப்புப் போட்டு வாழ்த்த இருந்தேன்.


2 நாட்களுக்கு முன்புகூட ஒரு மெயில் அனுப்பினேன்... மாயாவைக் காணவில்லை என்னாச்சு மாயா? என. எவ்வளவு பிசியாக இருப்பினும், தேடினால் பதில் போடுகிறவர்... இப்போ கிட்டத்தட்ட ஒரு மாதமாக மெயில் இல்லை.


வலை உலகில் பழகியோரோடு சேர்ந்து அழவேண்டும்போல இதயம் அடைக்கிறது.


நம்பமுடியவில்லை... மாயாவின் ஆத்மா எனச் சொல்லி சமாதானம் கேட்க முடியாமல் இருக்கு.... அதற்குள் மாயா மறைந்து ஆத்மாவா?.. முடியவில்லை நண்பர்களே... வாய் திறக்கக்கூட முடியவில்லை..

72 comments :

 1. ஆம் அதிரா என் பதிவுக்கும் தவறாமல் வருவார்.
  ஆனால் கொஞ்சம் நாள் பிஸியில் நான் யார் வலைப்பக்கமும் சரியாக போக முடியல

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. மாயா பிளாக் சென்று பார்த்தேன், நம்பவே முடியல, என்ன ஆயிற்றுன்னும் தெரியலையே.

  ReplyDelete
 4. என்னாச்சு அதிரா, பதிவுலகில் நான் மிகவும் அறிந்த பெயர் என்னால் ஜீரணிக்க முடியலை.:)

  ReplyDelete
 5. அதிரா என்ன இப்புடி ஒரு குண்டை தூக்கி போடுறீங்க? நம்ப முடியல. உங்க ப்ளோக் ல தான் மாயாவ பார்த்து அப்புறம் என் ப்லோக்ளையும் வந்து குறும்பா கமெண்ட் போடுவாரு.


  கொஞ்ச நாளா காணோம் ன்ன போது சரி எல்லார் போலவும் வேலை போல இருக்கு அப்படின்னு தான் நெனைச்சேன். நம்ப முடியல. ஒரே குழப்பமா இருக்கு. மேலும் விபரங்கள் தெரிஞ்சா நல்லா இருக்கும். ஏதும் உடம்பு சரி இல்லாம இருந்தாரா?  விபரங்கள் தெரிஞ்சால் எனக்கு ஈமெயில் பண்ணுங்க ப்ளீஸ்

  ReplyDelete
 6. அதிரா அக்கா,
  என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

  நான் மாயாவுடன் டெலிபோனில் கூட பேசியிருக்கேன்.

  அவர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து போய் விட்டார் என்று தான் நினைத்தேன்.
  அதனால் தான் அண்மைக்காலமாக அவரை தொடர்பு கொள்ளாதிருந்தேன்.

  இப்போது ஓர் வேதனையான செய்தியினை அறிந்திருக்கிறோம்.
  வருத்தமாக இருக்கிறது.

  உங்கள் வலையில் பல நடிகர்களின் மொழி நடையில் மாயா எழுதிய பின்னூட்டங்கள், அவரின் குறும்பு பின்னூட்டங்கள் யாவுமே ஓர் நெருங்கிய நண்பனின் உணர்வினை தந்து மனதில் நிற்கிறது.

  ReplyDelete
 7. அக்கா, விபரம் ஏதும் அறிந்தால் மெயில் பண்ணுங்க.

  ReplyDelete
 8. நம்பவே முடியவில்லை அதீஸ்.உங்கள் பிளாகில் காமெடியாகவும் சீரியஸாகவும் சளைக்காமல் பின்னூட்டம் போட்டவர் இப்ப்ழொஉது இல்லையா?

  இறைவா!அவரது குடும்பத்தினருக்கு பொறுமையை கொடுத்தருள் என்று கேட்பதைத்தவிர வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை.மேலும் விபரங்கள் ஒன்றுமே புரியவில்லையே?

  ReplyDelete
 9. வணக்கம் அக்கா
  என்னால் நம்பமுடியவில்லை,மிகவும் வேதனையாக இருக்கு.என்ன நடந்தது என்று அறிந்தால் சொல்லுங்கள்.

  ReplyDelete
 10. அதிரா நானும் ராஜேஷை எங்க காணோம்னு தேடினேன் இப்படி ஒரு அதிர்ச்சி தகவலா இருக்கும்னு நினைச்சுக்கூட பார்க்கமுடியல்லே.

  ReplyDelete
 11. ராஜேஷ் எனது கூட பிறந்த தம்பி தான் தோழி , 31 வருடம் என்னோடு உறவாடி வளர்ந்தவன் ,செல்லமாக அவனை வளர்த்தேன் ,பெற்றவர்களைக்காட்டிலும் அவன் மீது பாசம் காட்டி வளர்த்தேன் ,ஆனால் ............ என்னை தனிமையில் விட்டு விட்டு சென்று விட்டான் .எனது தாயை தேற்ற முடியாமல் தவிக்கிறேன் ,பிறகு வந்து உங்களுக்கு தகவல் சொல்கிறேன் .

  மனதில் பாறாங்கல் வைத்தது போல் உள்ளது என்னால் தற்பொழுது உள்ள மன நிலையில் எதுவும் சொல்ல இயலவில்லை

  பிறகு வருகிறேன் தோழி

  ReplyDelete
 12. ஆ.. ராஜேஷ்... மாயா உங்கள் கூடப்பிறந்த சகோதரரா? தான் தன் சகோதரனோடு இருப்பதாகத்தான் எனக்குச் சொன்னார். நான் சொல்வதைக் கேட்பேனேதவிர, மேலதிகமாக எதுவும் கேட்பதில்லை.

  எனக்கு மெயில் அனுப்பினார், நான் எங்கு போனாலும் உங்கள் 100 வதுக்கு வந்து வாழ்த்துவேன், தலைப்பைப் போடுங்கள் என, மிகவும் எதிர்பார்த்தேன் ஆனா மாயா வரவில்லை.

  முன்பும் அப்படித்தான் திடீரெனக் காணாமல் போனார், பின்பு வந்து சொன்னார், நான் சபரிமலை போய் வந்தேன் உங்களுக்குச் சொல்லாமல் போனதற்கு 100 தோப்புக்கரணம் போடுகிறேன்... 1,2,3, ஆஆஆ மியாவ் கவனிக்கவில்லை..... 99, 100 இப்படி மெயில் அனுப்பினார்.. என்னால எதையும் மறக்க முடியவில்லை, நகைச்சுவைக்கு மாயாதான்.

  இப்பவும் அப்படித்தான் நினைத்தேன், மீண்டும் அங்குதான் போயிருப்பாராக்கும், வந்திடுவார் என்று.

  ஆனா, நான் இனி வரமாட்டேன் என பதிவு போட்ட, சில நாட்களிலேயே நீங்களும் பதிவு போட்டீங்கள் நான் சிலகாலம் வரமாட்டேன் என, அதனால் எனக்கு மனதில் சிறு சந்தேகம் எழுந்தது நண்பர்களாக இருக்குமோ என, இருப்பினும்... வேறு வேறு ஆட்கள் என்றே நினைத்திருந்தேன்.

  கொஞ்சக் காலம் பழகிய எம்மாலேயே மனதைத் தேற்ற முடியவில்லை, உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எப்படி இருக்கும் ரமேஸ்.. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

  நான் ஃபோனிலும் எங்கள் அம்மாவுக்கு உறவினருக்குச் சொன்னேன், மாயா பற்றி.. அவ்வளவு தூரம் மனம் கனத்து விட்டது.

  ReplyDelete
 13. மகி, யூஜின், ஆசியா, கிரிஜா, நானும் உங்களைப்போலவேதான், இங்கு பின்னூட்டங்களில் மாயாவோடு கதைத்ததுதான் அதிகம், அதிலும் என்னோடும் அஞ்சுவோடும்தான் , என் பக்கத்தில் மாயா அதிகம் கதைத்தார் என நினைக்கிறேன்..

  அதுக்குமேல் மெயில் தொடர்பு மட்டும்தான் வேறு யாரையும் எனக்குத் தெரியாதே... இனி ரமேஷ் வந்து சொன்னால்தான் விபரம் தெரியும்.

  ரமேஷ் இப்போ இப்படியான சூழலில் எமக்குத் தகவல் தந்தமையே பெரிய விஷயம்... அதுக்கு ரமேஷுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  அவர் மனம் கொஞ்சம் அமைதியாகி வந்ததும் சொல்வார்தானே.

  [co="blue"]நான் நேற்றிலிருந்து நினைத்துக்கொண்டிருந்தேன், கடவுளே ரமேஸ் வந்து பின்னூட்டம் போடவேண்டும், “நான் நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன், மாயா நலமாக இருக்கிறார், வந்திடுவார் என” எண்ணிக்கொண்டே இருந்தேன்.[/co]

  ReplyDelete
 14. நிரூபன், ஸாதிகா அக்கா, ராஜ், ஆமினா, லக்ஸ்மி அக்கா....

  மாயா எஞ்சினியரிங் முடித்தவர், ஆனா முடித்த கையோடு சினிமா வாய்ப்பு வந்ததால், அதைவிட்டு சினிமாவுக்குள் போய்விட்டாராம், பின்பு சினிமாவும் சரியாக வரவில்லை.. என மனமொடிந்து போயிருந்தார் என நினைக்கிறேன்.

  நான் அவ்ருக்குச் சொல்லியிருந்தேன், 2012 ஜனவரியோடு சனிமாற்றமும் நிகழ்வதால், நிட்சயம் ஏப்ரலுக்குள் உங்களுக்கு நல்லது நடக்கும் மாயா,,, படித்த படிப்புக்கே ஜொப் தேடுங்கள் , நல்லது நடக்கும் என.. ஆனா இப்படியாச்சே...

  மாயா எனக்குச் சொன்ன அட்வைஸ், வாழ்க்கையில் யாரையும் நம்பாதீர்கள், 90 வீதமான மக்களும் நல்லவர்கள்போல நடித்துக்கொண்டிருக்கிறார்கள், நான் சினிமாவுக்குள் போனபின்பே இதைத் தெரிந்துகொண்டேன் என.

  ReplyDelete
 15. என்ன சொல்வது
  என்ன பேசுவது
  தெரியவில்லை
  வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
  ஆண்டவன் அவரின் ஆத்மஅமைதி அடையட்டும்.

  என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்ல
  இருந்தாலும்
  என்னை சமாதனம் நானே பண்ணிக்கொண்டேன்
  திரு ரமேஷ் அவர்கள் குடும்பதினருகாக பிராத்திக்கிறேன்

  ReplyDelete
 16. மாயாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாரும் வேண்டிப்போம்.

  ReplyDelete
 17. ஏனய்யா இந்த இடியேறு பதிவுலகின் மீது திடிரென விழுந்தது?
  அன்னாரின் குடும்பத்துக்கு கூகிள்சிறியின் இரங்கல்களும் வார்த்தையில்லா மௌனம் கலந்த ஆறுதல்களும்.
  ஆண்டவன் தன்மடியில் ராயேஷை தாலாட்டி சிராட்டி தூங்கவைக்க வேண்டுமென எல்லோரும் இணைந்து எல்லாம்வல்ல அந்த இறைவனிடம் இறைஞ்சுவோம்

  ReplyDelete
 18. Athees, I am very sorry to hear this. His soul may rest in peace. I do not know what else to say.

  ReplyDelete
 19. ராஜேஷ் என்கின்ற பதிவரை எனக்கு தெரியாது என்றாலும் 'யாரோவாக இருந்தாலும் கூட விலையேறப் பெற்றது உயிரினம் அதில் எது இயற்க்கை எய்தினாலும் மனம் வருந்துவது இயல்பு இவர் மனிதராயிற்றே இவருக்காக இன்னொரு மனிதன் வேதனையடைவதற்க்கு அவரை அறிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன், உங்கள் அனைவரின் பின்னூட்டங்களை வாசித்ததில் என் மனம் கனக்கிறது.

  @நிரூபன் //மாயா எனக்குச் சொன்ன அட்வைஸ், வாழ்க்கையில் யாரையும் நம்பாதீர்கள், 90 வீதமான மக்களும் நல்லவர்கள்போல நடித்துக்கொண்டிருக்கிறார்கள், நான் சினிமாவுக்குள் போனபின்பே இதைத் தெரிந்துகொண்டேன் என// அவரது அனுபவம் அவருக்கு இந்த பாடத்தை கொடுத்திருக்கிறது, இது 100 % உண்மை.

  ReplyDelete
 20. அதிர்ச்சியாக உள்ளது அதிரா :'( என்னாச்சுன்னு தெரிந்தால் சொல்லுங்க.‌

  ReplyDelete
 21. யாழ் மஞ்சு, நிரூபன் மாயாவுக்காகப் போட்டிருக்கும் அஞ்சலித்தலைப்புப் பார்த்தேன்... இன்னும் எங்கெல்லாம் இருக்கோ எனக்குத் தெரியவில்லை, நான் எங்கும் போகவில்லை..

  நிரூபனின் பின்னூட்டத்தில் சுரேஸ்குமார் சொல்லியிருப்பதுபோல, ஏதாவது நாம் எல்லோரும் ஒன்றுகூடிச் செய்யவேண்டும் மாயாவுக்கு.

  என் மனம் அமைதி அடைகிறதே இல்லை.

  ஏதோ பிரார்த்திக்கிறோம், அஞ்சலி எனச் சொல்லிவிட்டு, பழையபடி பதிவைத்தொடர மனம் ஏவுதேயில்லை... எம்மோடிருந்து ஒன்றாகக் கூடிக் கதைத்த ஒரு வலைப்பூவின் சொந்தக்காரர்... கதைத்துக்கொண்டிருக்கும்போதே காணாமல் போய்விட்டார், மனமே ஏற்குதில்லை... நாம் துக்கதினமாக ஒருநாளோ அல்லது 2,3 நாட்களோ அனுஸ்டிக்க வேண்டும்..

  இன்று மாயா.. நாளை நாம்...

  ReplyDelete
 22. //ரத்னா said...
  ராஜேஷ் என்கின்ற பதிவரை எனக்கு தெரியாது என்றாலும்//

  ரத்னா அக்கா... இதே தான் உங்களையும் இதுவரை நான் பார்த்ததில்லை, தெரியாது, இருப்பினும் இழப்பு என்றதும் ஓடி வந்து பின்னூட்டம் போடுகிறீர்களே இதுதான்... உண்மையான மனித நேயம்...

  பழகிய எம்மால் மாயாவை மறக்க முடியவில்லை.. வலைப்பூ என்பது ஒரு ஊரில் எல்லோரும் கிட்டக்கிட்ட தனிவீடு கட்டிக் குடியிருப்பதுபோலத்தானே... இதில் தெரிந்தவரோ தெரியாதவரோ... நம் ஊரில் ஒருவருக்கு ஒன்றெனில் நாம் ஓடிப் போக மாட்டோமா.. அதேபோலத்தானே...

  ReplyDelete
 23. சிவா, ராஜி, யாழ் மஞ்சு, வானதி, அஸ்மா...

  எனக்கும் ரமேஸ் சொல்வதைத்தவிர வேறேதும் தெரியாது... என்னைப்பொறுத்து என்ன நடந்தது என்பதை அறியவேண்டுமென்றில்லை, அறிந்து என்ன பண்ணப்போகிறோம்..மாயா மறைந்துவிட்டாரே.. அது ரமேஸின் மனம் ஆறி, முடிந்தால் வந்து சொல்லட்டும், அல்லது வேண்டாம்..

  நாம் மாயாவை இழந்துவிட்டோம்... மாயாவுக்காக எம்மால் முடிந்தால் துக்கம் அனுஸ்டிப்போம்... அனைவரும் ஒன்று சேர்ந்தால்:(((.

  ReplyDelete
 24. வணக்கம் அதிரா!நேற்றே செய்தி தெரிந்திருந்தது,"அன்பு உலகம்"தளம் மூலம்.அதிகம் படித்ததில்லை,எனினும் திடிரென ஒருவர் எங்களுடன் இல்லாது போவது வருத்தமே!எல்லாம் அவன் செயல் என்று ஆறுதலடைய வேண்டியது தான்.இன்றிருப்போர் நாளை இல்லை.இது நியதி!பிரார்த்திப்போம்!

  ReplyDelete
 25. யோகா அண்ணன், உண்மைதான்.. கனவில்கூட நினைத்திராத விஷயம்.. திடீரென அதிர்ச்சி, எனக்கு முதலில் ரமேஸ் நகைச்சுவைபோல ஏதும் சொல்கிறாரோ என்றுதான் எண்ணினேன்(ரமேஸ், மாயாவின் சகோதரர் எனத் தெரியாதெனக்கு).

  //இன்றிருப்போர் நாளை இல்லை.இது நியதி!பிரார்த்திப்போம்!//

  எல்லாம் விதி வரைந்த பாதை வழியேதானே ஓடிக்கொண்டிருக்குது.. எம்மாலேயே மனதைத் தேற்ற முடியவில்லை, அவரின் குடும்பத்தால் எப்படி முடியுமோ.. ஆண்டவந்தான் அவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்க வேண்டும்...

  இதுதான் மாயா கடேசியாக வந்து கலக்கலாகப் பின்னூட்டங்கள் போட்டுச் சென்ற என் பதிவு, இதன் பின் வரமுடியாமல் போய்விட்டது.. ஒரு தடவை மட்டுமே வந்தார்...

  http://gokisha.blogspot.com/2011/11/blog-post_612.html#

  ReplyDelete
 26. அதிரா!

  அதிர்ச்சியை தரும் செய்தி.
  எல்லோரையும் தவிக்கவிட்டு மாயமாக மறைந்துவிட்டார் மாயா.
  அவர் தனக்கு இப்படி விரைவிலேயே இந்த உலக வாழ்க்கைப் பயணம் முடிந்திடுமென அறிந்திருந்தார் போலும். அதனால்தான் தன்வலைப்பூவிற்கு மாய உலகமென பெயரிட்டு நடத்தியிருக்கிறாரோ?
  காலனின் கணக்கினை அறிந்திருக்கிறார்.

  என்ன சொல்வதென்றே தெரியவில்லை. துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அவர் பிரிவால் துயருறும் அனவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களுடன் அவரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றேன்.

  ReplyDelete
 27. Blogger காட்டான் said...

  நீண்ட நாள் பழகிய ஒரு சகோதரனை இழந்த வருத்தம் எனக்கும்தான்.. நிருபனின் ஒரு பதிவில் என்னுடன் விடிய விடிய கும்மியடித்து நினைவில் வருகின்றது.. சந்தோஷமாக மாமா மாமா என்று அழைத்த மாயாவை என்றுமே மறக்கமுடியாது.. அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். ;-(

  11:35 PM

  ReplyDelete
 28. //இன்றிருப்போர் நாளை இல்லை.இது நியதி!பிரார்த்திப்போம்!//

  மிகச்சரியே அதிரா

  ReplyDelete
 29. மனசு ரொம்ப கனத்துப் போச்சி ...

  அவரோட ஆத்மா சாந்தி அடிட்டும்

  ReplyDelete
 30. அதிரா எனக்கு வலைப்பக்கம் வரமுடியாமல் போயிற்று.ஆனால் அதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது. வாசித்ததும் இதயத்தில் ஏற்பட்ட படபடப்பு இன்னும் அடங்கவில்லை. மாயாவுக்கா இப்படி?? கொஞ்சநாட்களாகதான் வந்தார். உங்கள் பக்கத்தில் அவர் நகைச்சுவையாக எழுதி எல்லாரையும் சிரிக்கவைத்துவிட்டு, இப்போ இப்படி அழ‌ வைத்துவிட்டு போய்விட்டாரே அதிரா. என்னால் ஏதும் எழுத முடியவில்லை. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது குடும்பத்தினருக்கு.

  ReplyDelete
 31. இளமதி, ஜலீலாக்கா, கலை..

  மாயாவின் எழுத்துக்கள் எதையுமே மறக்க முடியவில்லை...

  தோ... வந்திட்டேன்.. எனச் சொல்லிக்கொண்டே உள்ளே வருவார்...

  ..ங்கோ..ங்கோ... இது எக்கோ எனச் சொல்லி.. எக்கோ போடப் பழக்கியதும் மாயாதான்...

  உண்மைதான் இளமதி... எதுவும் சொல்லத் தெரியவில்லை... மனம் கனமாகவே இருக்கு.

  ReplyDelete
 32. காட்டான் அண்ணன்...

  //சந்தோஷமாக மாமா மாமா என்று அழைத்த மாயாவை என்றுமே மறக்கமுடியாது.//

  உங்கள் பக்கத்திலே சுயம்வரம் நடத்தியபோது, மாயாவும் போட்டிபோட்டுக் கதைத்தது இன்னும் மனதில் இருக்கு.

  எல்லோரோடும் சேர்த்து மாயாவுக்கும் நான் தான் பொம்பிளை பார்க்கிறேன் எனச் சொல்லித்திரிந்தேன்... மிகவும் மனவருத்தமாக இருக்கு.. நெட்டுக்கு வராமல் இருக்கும் நேரங்களில்.. பெரிதாக தெரியவில்லை, ஆனா என் பக்கம் வந்தாலே கண்ணீர்தான் வருகுது எனக்கு.

  ReplyDelete
 33. அம்முலு நான் நினைத்தேன், நீங்கள் இன்னும் நெட் பக்கம் வரவில்லை என, எனக்குத் தெரியும் எம்மோடு மாயாவையும் நீங்கள் நேசித்து அன்பாகப் பழகியது,...

  இழப்பை ஆராலும் ஈடு செய்யவே முடியாது...

  “நாள் செய்வதுபோல், நல்லோர் செய்யார்...”... நாளாக ஆகத்தான் மனப்பாரம் குறையும்...

  ReplyDelete
 34. ஏதாவது செய்யவேணும் மாயாவுக்காக, ஆனா என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, பிளீஸ்ஸ்ஸ்... ஆராவது ஏதும் மனதில் தோன்றினால் சொல்லுங்கள்.. வலையுக நட்புக்களோடு சேர்ந்து எப்படி அஞ்சலி செலுத்தலாம் என.. ஆறினால் பழங்கதைபோலாகிவிடும்...

  யாருக்காவது மனதில் ஏதும் தோன்றினால் சொல்லுங்களேன்...

  ReplyDelete
 35. அதிரா அக்கா, கவலையை விடுங்கள்
  எமது நாற்று பேஸ்புக் குழுமத்தில் உள்ள சொந்தங்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம்!
  எதிர்வரும் செவ்வாய்கிழமையினை வலையுலக முழு நேர துக்க நாளாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்கின்றோம்!

  அது தொடர்பான இடுகை இன்னும் சில நிமிடங்களில் வரும்!

  ReplyDelete
 36. அப்படியா நிரூபன்... நான் சத்தம் எதனையும் காணவில்லையே என யோசித்தேன்... ஒரு சிறு விண்ணப்பம்... ஒரு நாள் என்பதை குறைந்தது 3 தினங்கள் ஆக்கினால் என்ன?

  ReplyDelete
 37. அக்கா, அதற்கு எல்லாப் பதிவர்களும் ஒத்துழைக்கனும்!

  ReplyDelete
 38. அடுத்த விடயம்,
  இப்போது இந்த அறிவிப்பினை பொதுப்படையாகத் தான் கேட்க இருக்கிறேன்.

  ஏலவே ஈழப் பதிவர்கள் என்று எம்மை ஒரு சிலர் புறக்கணித்து புறம்பாடுகிறார்கள்.
  எவ்வளது தூரம் ஏனைய பதிவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று தெரியவில்லை.

  ReplyDelete
 39. எம்மால் முடிந்த வரை ஒரு நாளை ஒதுக்குவோம். துக்கத்தினுள் புரண்டு கொண்டிருந்தால் எம்மைச் சுத்தி மேலும் துன்பங்கள் தான் கூடும்!
  விதி வலியது என்று, தடைகளை உடைத்து நடை போடனும் என்று சொல்லித் தந்திருக்கிறார்கள்.

  ஆகவே எம்மால் முடிந்த பங்களிப்பினைச் செய்வோம்/

  ரமேஷுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர் நம்பர் இல்லை.
  மெயில் ஐடி இல்லை.

  ReplyDelete
 40. நிரூபன் இது கட்டாயப்படுத்தி செய்யப்பட வேண்டிய அலுவல் இல்லை.

  தலைப்பை போடுவோம்... நாம் நாமே அனுஸ்டிப்போம், விரும்பியவர்கள் கலந்து கொள்ளட்டும்,ஆனா என்னைப்பொறுத்து... இதில் ஆரும் எதிர்ப்புசொல்ல என்ன இருக்கிறது, அனைவரும் மனிதர்கள்தானே... எல்லோருக்குமே கவலைதானே..

  நீங்கள் இப்போ எதுவும் சொல்லாதுவிட்டால் 5 நாட்கள் என தலைப்பு போட நினைத்திருந்தேன்... எனக்கு என்னவோ தெரியவில்லை மாயாவுக்காக ஏதும் செய்தால்தான் மனம் ஆறுதலடையும் என இருக்கு.

  அவரோடு பழகிய அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்றே நினைகிறேன்... புதிய தலைப்பு போடாமல் இருப்பதால் , மாயாவை விட என்ன இழப்பு நிகழ்ந்துவிடப்போகிறது சொல்லுங்கள்...

  ReplyDelete
 41. நீங்கள் சொல்லும் கருத்துக்கள் ஓக்கே அக்கா

  ஆனால் தனியாக எல்லோரிடமும் கேட்க முடியாது.
  பொதுப்படையாக ஓர் அறிவிப்பினை இன்று வெளியிடுகிறேன்.

  ReplyDelete
 42. எனக்கு மாயா தவிர, ரமேஷுடனோ, அல்லது மாயாவின் ஆரும் நெருங்கிய நட்பினருடனோ எந்தத்தொடர்பும் இல்லை நிரூபன்.

  ReplyDelete
 43. என்னால் முடிந்த வரை, எல்லோரிடமும் இந்த தகவலை எடுத்துச் செல்ல முயற்சிக்கிறேன்.

  உங்கள் தளத்திற்கு வர முன்பதாக
  மாயாவும், கோகுல் என்ற பதிவரும் என் தளத்தில் அறிமுகமான ஆளுங்க
  எனக்கு இரவில் அதிக கமெண்ட் போட்டு காமெடி பண்ணுபவர் மாயா.

  எனக்கும் அவரை நினைக்கையில் வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete
 44. அக்கா, அறிவிப்பினை நண்பர்களின் உதவியுடன் பதிவர்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 45. //ஐடியா மணியின் அல்லக்கை நிரூபன் said...
  நீங்கள் சொல்லும் கருத்துக்கள் ஓக்கே அக்கா

  ஆனால் தனியாக எல்லோரிடமும் கேட்க முடியாது.
  பொதுப்படையாக ஓர் அறிவிப்பினை இன்று வெளியிடுகிறேன்.//

  அதைத்தான் நானும் சொல்கிறேன் நிரூபன்.. குறிப்பிட்ட நாளைச் சொல்லுங்கள்... எமக்குத் தெரிந்து பின்னூட்டம் போட்டோர் மாயாவோடு பழகியோருக்கு தெரியப்படுத்துவோம்... மற்றும்படி ஆரையும் வற்புறுத்த வேண்டாமே..

  ReplyDelete
 46. நாம் விவாதிக்கையில்
  காட்டான் அண்ணர் எனக்கு அனுப்பிய கமெண்ட் இது

  // காட்டான் காட்டான் இப்படி செய்வோமா என்று கேட்டு பதிவை போடு மோனே.. இப்படித்தான் செய்யுங்கள் என்றால் நாங்கள் ஏதோ அதிகாரம் செய்வதுபோல் ஆகிவிடும். அத்தோடு இந்த ஆலோசனையை வீடு சுரேஸ் முன் வைத்ததையும் நினைவு கூறி ஆதரவை கேள்..;

  நாற்று குழுமமும் சேர்ந்தே அனுஷ்டிப்போம். நாற்றில் செவ்வாய் யாரும் கும்மியடிக்காமல் இருப்போம்.. இதை உடடே பதிவாய் போடு.,!!
  5 hours ago via Mobile · Unlike · 3

  Write a comment...//

  ReplyDelete
 47. இங்கே தான் விவாதித்தோம்.
  ஆமினா அக்கா ஏனைய நண்பர்களும் தமது ஆலோசனையை வெளியிட்டிருந்தார்கள்.

  https://www.facebook.com/groups/thamilnattu

  ReplyDelete
 48. Amina Mohammed இன்று இருப்பவன் நாளையே இல்லாமல் போகலாம். யாருடன் பகை கொண்டாலும் மனதால் வெறுத்தாலும் உடனே மன்னிப்பு கேட்டு உறவாடி விடு- என்னும் படிப்பினையை எனக்கு விட்டு சென்று விட்டார் :-(

  miss you maya. சீக்கிரமா இதெல்லாம் வதந்தின்னு சொல்லிட மாட்டீயான்னு கத்தி அழுகணும் போல இருக்கு

  ReplyDelete
 49. Selvarajah Nirupan
  எல்லோருக்கும் வணக்கமுங்க,
  உங்கள் எல்லோரிடமும் ஓர் அன்பு வேண்டுகோள்,
  பதிவுலகில் மாயாவின் நினைவாக, அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஓர் நாளை துக்க தினமாக அனுஷ்டிப்போம். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.
  மாயா உயிர் நீத்த செவாய்க்கிழமையினை துக்க நாளாக அனுஷ்டிப்போமா?

  ReplyDelete
 50. You, Varun Prakash Paulraj, காட்டான் காட்டான், பொன்னர் அம்பலத்தார் and 5 others like this.

  Amina Mohammed எல்லா வலைப்பூக்களிலும் இந்த விஷயத்தை கமென்டாக போட்டு விடலாம்
  8 hours ago · Unlike · 2
  Selvarajah Nirupan இன்று மாலை இது தொடர்பான அறிவிப்பினை பதிவாக வெளியிடுவோம்.
  8 hours ago · Like · 2

  ReplyDelete
 51. அக்கா, நான் பதிவெழுதி விட்டு வருகிறேன்.

  இன்னும் கொஞ்ச நேரம் கொடுங்க

  ReplyDelete
 52. http://kuttisuvarkkam.blogspot.com/2012/02/blog-post_04.html

  மாயாவிற்கு

  ReplyDelete
 53. அனைத்தையும் பார்த்தேன் நிரூபன், பேஸ் புக்கில் அனுஸ்டியுங்கள் அது உங்கள் விருப்பம், வலைப்பூவுக்காக நாள் குறித்து ஒரு தலைப்பு போடுங்கள்... பொதுவாகத்தான்.. யாரையும் கட்டாயப்படுத்தியோ, காட்டான் அண்ணன் சொன்னதுபோல கட்டளையிட்டோ அல்ல...

  நான் கொஞ்சத்தால வருகிறேன்.

  ReplyDelete
 54. தெரியாதோருக்காக இதனை சொல்கிறேன், தயவு செய்து.. இங்கு சென்று படித்துப் பாருங்கள்... 7.2.12 அன்று துக்கதினமாக அனுஸ்டிப்போம்.

  http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html

  ReplyDelete
 55. உண்மைதான் ஜெய்..

  மாயா தன்னலம் கருதாமல் எம்மோடு பின்னூட்டங்கள் போட்டவர் ... எதையும் மறக்க முடியவில்லை.

  பிரார்த்தனை செய்வதன் மூலமாவது, மாயாவுக்கும் எமக்கும் அமைதி நிலவட்டும்...

  ReplyDelete
 56. ரெண்டு நாளா என்ன வேலைய செஞ்சிகிட்டு இருந்தாலும், மனசொரமா மாயாவுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு தான் கலக்கமா இருக்கு. எல்லாரும் ஒரு நாள் போக தான் போறோம் ஆனா சின்ன வயசுல இப்படி ஆகி இருக்க வேண்டாம்.


  செவ்வாய்கிழமை துக்கம் அனுஷ்டிப்பதில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன்.


  ஒரு நாலைந்து பதிவு போட்ட என்னை எல்லாம் மாயா அறிமுகபடுத்தி இருந்தாரு. பல காரணங்களால் அப்போ என்னால் திரும்ப வர முடியல. ரொம்ப நகைச்சுவையோடு பின்னூட்டம் போட்டு எல்லாரையும் கவனிக்க வைத்த மாயா இல்லேன்னு சொன்னா நெஜம்மா இன்னும் நம்ப முடியல.


  நீங்க சொன்னது போல கேக்காமலே நெறைய உதவி செஞ்ச நல்ல மனிதர். அவருக்காக துக்கம் அனுஷ்டித்து பிரார்த்தனை செய்வோம்.

  ReplyDelete
 57. 7ஆம் தேதி துக்கம் அனுஷ்டித்து பிரார்த்தனை செய்வோம்.

  ReplyDelete
 58. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகிறோம்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 59. செவ்வாய்கிழமை துக்கம் அனுஷ்டிப்பதில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன்.

  ReplyDelete
 60. கிரிஜா, வியபதி, யூஜின், சிவா... கண்டிப்பாக அனைவரும் ஒன்றுகூடி அஞ்சலிப்போம் மாயாவுக்காக.

  ReplyDelete
 61. மாய உலகம் ராஜேஷ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள். அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 62. மாய உலகம் ராஜேஷின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள் - துயரப்படும் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 63. வானதி.... அனைவரும் பிரார்த்திப்போம் மாயாவின் அமைதிக்காக.

  ReplyDelete
 64. சீனா அண்ணன்,
  நானும் மனதில் நினைத்தேன்.. வலைப்பூ ஆரம்பித்து சில மாதங்களிலேயே, மாயாவுக்கு உங்கள் வலைச்சரத்தில் ஒருவார ஆசியராகும் வாய்ப்புக் கிடைத்திருக்கு என.

  மாயாவுக்காகவும் அவரின் குடும்பத்தினர் உறவினர், நண்பர்களுக்காகவும் நாம் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 65. என்னையறியாமல் அழுதுவிட்டேன்.பிறகு வருகிறேன்.

  ReplyDelete
 66. அமைதிச்சாரல், கோகுல்...

  மற்றும் இத்தலைப்பில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய அனைத்து உள்ளங்களுக்கும்... மனம் நிறைந்த நன்றி.

  GOD BLESS YOU.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.