என்ன நான் சொல்றது புரியுதோ?:)
இந்தப் போஸ்ட்டில் புதுசாப் பெரிசா ஒன்றுமில்லை.. எல்லாம் ஒரு கவலை, இழப்பின் வெளிப்பாடுதான் இப்போஸ்ட்:)) ஹா ஹா ஹா பயந்திடாதையுங்கோ.. நான் சொல்ல வருவது இப்போ ஜிம் போக முடியவில்லை, யோகா ரீச்சரையும் பார்க்க முடியவில்லை.. என்பதனால கவலையாகவும் இருக்குது:).. “yoga is your body".. இது எங்கட ரீச்சர் அடிக்கடி சொல்லும் வசனம்:)
எனக்கு அனைத்திலும் பிடிச்சது இப்போ யோகா தான்... இங்கு அனைத்திலும் போகக்கூடியவாறே மெம்பஷிப் எடுத்து வச்சிருந்தேன், நேரம் தான் போதாமல் இருந்தது, மற்றும்படி, ஜிம் களில் எந்த வகுப்புக்கள் நடந்தாலும் போகலாம், எங்கள் மாவட்டத்தில் இருக்கும் அத்தனை ஜிம்களுக்கும் போகலாம், மற்றும் யோகா, சுவிம்மிங், வோட்டர் ஏரோபிக் கிளாஸ், சோனா இப்படி அனைத்துக்கும் போகலாம்.. நேரம் இல்லாமையால ஜிம் ஐயும் யோகாவையும் மட்டுமே ஒழுங்காகப் போனேன், ஏனையவற்றுக்கு, நேரம் கிடைத்தபோது மட்டும் போனேன்..
இப்போ வீட்டில் யோகா செய்வது பிடிச்சுப் போச்சு:), நேரமும் தாராளமாகக் கிடைக்குதெல்லோ...
நான் யோகாக் கிளாஸ் க்கு முன்னர் ஒருபோதும் போனதில்லை, ஆனால் சின்ன வயசிலிருந்தே டான்ஸ் ஒரு பாடமாக எடுத்தமையால, வீட்டில் யோகா போல செய்வேன்..
இப்போ வகுப்புக்குப் போனதும் பயத்தில, கடசி வரிசையில போய் இருந்தேன் 2,3 வகுப்புக்கள், இதை அவதானிச்ச யோகா ரீச்சர், ஒருநாள் வழியில என்னை மடக்கிச் சொன்னா “நீ எப்பவும் என் கண்ணுக்கு தெரியாமல் ஒளிச்சிருக்கிறாய், இனி முன் வரிசையில் வந்திருக்கோணும்” என ஹா ஹா ஹா அதிலிருந்து, ஒளிப்பதை விட்டு விட்டேன்...
ஆனாப் பாருங்கோ இங்கு அதுவும் முழுக்க முழுக்க ஸ்கொட்டிஸ் மக்களே இருக்கும் நம் ஏரியாவில், யோகா வகுப்பில்... ஓம் சாந்தி... ஓம் சாந்தி..., ஒம் நம ஸ்....வா...ய.... இப்படி எல்லாம் ரெக்கோர்டில் போடுவார்கள், எனக்கோ மெய் சிலிர்க்கும்....
😹😹😹😹++++++++++இடைவேளை+++++++😹😹😹😹
வட்ஸப் யோகா,ஜிம் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன, சொல்லித்தருபவர் பிஞ்சு ரீச்சர் அதிரா:).. இடம் முடிஞ்சிடும் எனவே உடன் பதிவுக்கு முந்துங்கள்:))
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬
சரி அதை விடுங்கோ.. ஜிம் க்கு வருவோம்.. இப்போ ஜிம் இல் அனைத்தும் டிஜிட்டல் மயம், நமக்கென ஒரு பென் ட்றைவ் தந்திருக்கினம், அதில் நாம் என்ன என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை சேஃப் பண்ணி வைத்தால், அந்த மெசினில் அப் பெண்ட்றைவ் ஐப் போட்டதும், நம் பெயர் விபரத்தோடு, என்ன ஸ்பீட், எவ்வளவு நேரம் என்பதெல்லாம் சொல்லி, ஓட்டமெட்டிக்கா ஸ்ராட் ஆகும், பின்பு ரைம் வர நிற்கும்[தேவை எனில் கூட்டிக் குறைக்கலாம்]... இதில் மேலே வலது மூலையில் போட்டிருக்கிறேன் மஞ்சள் நிறத்தில்.. அதுதான் அந்தப் பென் ட்றைவ்.. அதை நாம் எப்பவும் வைத்திருப்ப்போம்.. அதில் நாம் செய்வதெல்லாம் சேஃப் ஆகிக் கொண்டிருக்கும்.
ட்ரெட்மில், சைக்கிள் போன்ற மெசின்களில் இப்படி அதனோடு ரிவியும் உண்டு, நம் விருப்பத்துக்கு ஷனல் ஐ மாத்திப் படம் பார்த்துக் கொண்டே செய்யலாம்..
இது யும்மா:), எங்கள் ஜிம் அமைந்திருப்பதும் ஒரு ஆத்தங்கரைதான், அப்போ ஜிம் செய்யும்போது வெளியே தெரியும் காட்சிகளைப் படமெடுத்தேன்.. இதுவும் ஒரு அழகும், மனதுக்கு இதமுமாக இருக்கும்.. பாருங்கோ.. ஆற்றங்கரை தெரிவதற்காக, ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடிச் சுவர்களே அங்குண்டு...
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
இது என்ன கப்பல் தெரியுமோ?, பென்னாம் பெரிசு,
இது கப்பல்களைத் திருத்தும் கப்பல் ...
ஊசிக் குறிப்பு
ஹா ஹா ஹா இது உண்மையோ? திகிலாக இருக்காது?:)
ஊசி இணைப்பு
அதிரா இணைப்பு..........:)
🙏🙏🙏😷🙏🙏🙏
|
Tweet |
|
|||
ஹலோஊஊ நான் வாக்கிங் போறேன் :) வந்து படிக்கிறேன்
ReplyDeleteஅது வாக்கிங் ஆ வோக்கிங் ஆ?:)) ஹா ஹா ஹா சரி சரி போயிட்டு வாங்கோ அஞ்சு.. வாங்கோ.
Deleteபடங்கள் அனைத்தும் அழகு.
ReplyDeleteயோகா சமாச்சாரமே எனக்கு கிடையாது.
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..
Deleteயோகா.. ஹா ஹா ஹா பலருக்கு இதில் விருப்பமில்லைத்தான், அது இன்றஸ்ட் இருந்தால் மட்டுமே செய்ய முடியும்..
மிக்க நன்றி.
அதிரா இணைப்பு அருமை & உண்மை
ReplyDeleteவாங்கோ ட்றுத் வாங்கோ.. நன்றி நன்றி அது கண்ணதாசன் அங்கிளின் வசனம்.
Deleteஎன்ன மாதிரி யங் ஜெனரேஷனுக்கு கண்ணதாசன் யார் என்ரு தெரியாது... ஆமாம் யாரு அவர்?
Deleteஆஆஆஆஆ ட்றுத்தும் கம்பி மேல:)) ஹா ஹா ஹா..
Deleteஅது ட்றுத், நீங்கள் 18 ம் நூற்றாண்டின் யங்கூஊஊஊஉ ஜெனரேற்றர்.. சே..சே ஜெனரேசன்:)) அதனால 19ம் நூற்றாண்டின் கண்ணதாசன் அங்கிளைத் தெரிய நியாயமில்லைத்தான்:)) ஹா ஹா ஹா... பூஸோ கொக்கோ:)).. கண்ணதாசன் அங்கிள் ஆரெனக் கேய்க்கிறார்:), நாளைக்கு அதிரா எண்டால் ஆரது? எனவும் கேய்ப்பாரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
//நீ எப்பவும் என் கண்ணுக்கு தெரியாமல் ஒளிச்சிருக்கிறாய், இனி முன் வரிசையில் வந்திருக்கோணும்///
ReplyDeleteஉங்க டீச்சரை ஒரு நல்ல கண் டாக்டரிடம் போய் கண்ணை செக் பண்ண சொல்லுங்க....
ஹா ஹா ஹா கர்ர்:) ஏன்? ட்றுத் ஏன்?:):), அது நான் ரொம்ப மெலிஞ்சு ஒல்லியாகிட்டதால கண்ணுக்கு தெரியல்ல:))
Delete
ReplyDeleteநீங்கள் கடைசி வரிசையில் நின்னது ரொம்ப நல்ல செயல்.. நீங்க முதல் வரிசையில் இருந்திருந்தால் என்ன இன்று அதிராவை தவிர்த்து வேறு யாரும் கிளாஸ்ஸுக்கு வரலைன்னு டீச்சர் நினைச்சிருப்பார்
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்போ முதல் வரிசையில்தான் இருக்கிறேனாக்கும்:)).. நன்கு முன்னேறிக் கொண்டு வரும்போது கொரோனா வந்து அனைத்தையும் மூடப்பண்ணி விட்டது பாருங்கோ.. இதுதான் என் ராசி:)).. நன்கு மேலே மேலே வரும் வெளையில் குறுக்கே வந்து தடுத்து விடும்... அனைத்திலும் இப்படியே:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.
Deleteஜிம்,படங்கள், தத்துவம் என நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவாங்கோ மாதேவி வாங்கோ.. என்ன ஆச்சரியம், இன்று உடனேயே வந்திருக்கிறீங்கள்.. மகிழ்ச்சி, நன்றிகள்,.
Deleteஉங்க ஊர் கப்பல் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteகாதல் பாட்டு நன்றாக இருக்கிறது.
யோகா டீச்சரோ இப்போது அதிரா? வகுப்பு நடத்த ஆரம்பித்து விட்டார் அதிரா. அதிரா டீச்சர் பாடத்தை அழகாய் செவிமடுத்து கேட்கிறார் பூஸார் அழகு.
//சின்ன வயசிலிருந்தே டான்ஸ் ஒரு பாடமாக எடுத்தமையால, வீட்டில் யோகா போல செய்வேன்.. //
பரதநாட்டியமா? அதிலும் நிறைய முத்திரைகள் இருக்கே. நடனகலையும் ஒரு யோகாதான்.
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
Deleteநன்றி நன்றி. ஆற்றையும் அதில் போவனவற்றையும் பார்த்தாலே ஒரு மனமகிழ்ச்சிதான்.
ஓம் கோமதி அக்கா, ஒன்லைன் ரீச்சராக்கும் நான்:)).. பீஸ் முதலில் அனுப்புவோருக்கே முன்னுரிமை:)..
பரதநாட்டியம்தான் கோமதி அக்கா.. அதனாலதான் இப்போ என்னால ஈசியாக யோகா செய்ய முடிகிறது..
படங்கள் அருமை
ReplyDeleteயோகா இனிமேல்தான் முயற்சி செய்ய வேண்டும்
நன்றி சகோதரி
வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ..
Deleteயோகா மிக நல்ல பயிற்சிதான் உடலுக்கும் மனதுக்கும்.. முயற்சி செய்யுங்கோ..
நன்றி நன்றி.
//ட்ரெட்மில், சைக்கிள் போன்ற மெசின்களில் இப்படி அதனோடு ரிவியும் உண்டு, நம் விருப்பத்துக்கு ஷனல் ஐ மாத்திப் படம் பார்த்துக் கொண்டே செய்யலாம்..//
ReplyDeleteமுன்பு யோகா என்றால் கண்களை மூடி செய்ய வேண்டும் வேறு எங்கும் கவனம் சிதறக்கூடாது என்பார்கள் இப்போது டிஜிட்டல் மயத்தில் மாற்றங்கள்.
ஆற்றங்கரையை ரசித்துக் கொண்டு செய்யலாம் சினிமா பார்க்காமல்.
ஆற்றங்கரை அழகு.
//முன்பு யோகா என்றால் கண்களை மூடி செய்ய வேண்டும் வேறு எங்கும் கவனம் சிதறக்கூடாது என்பார்கள் இப்போது டிஜிட்டல் மயத்தில் மாற்றங்கள்.//
Deleteகோமதி அக்கா.. அது நான் சொல்லியிருப்பது ஜிம் பற்றி..
யோகாவின் போது, எதுவும் பார்க்க முடியாது, தொடர்ந்து செய்து கொண்டிருக்கோணுமெல்லோ..
உண்மைதான், ரீ குடிக்கும்போது ஆற்றப்பார்த்தபடி குடிப்பதில் ஒரு சுகம்.
பென்னாம் பெரிசு,
ReplyDeleteஇது கப்பல்களைத் திருத்தும் கப்பல் ...//
பென்னாம் பெரிய கப்பலும் அழகு. கப்பலை திருத்தும் கப்பலும் அழகு.
ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.
அதிரா இணைப்பு உண்மை.
மிக்க நன்றி கோமதி அக்கா, இன்று நீங்களும் நானும் சேர்ந்து போஸ்ட் போட்டிருக்கிறோம் ஹா ஹா ஹா.
Deleteஅதிராவின் கையெழுத்தில் பொன்மொழி நல்லா இருக்கு.
ReplyDeleteகப்பலைத் திருத்தும் கப்பல்- இப்போதான் பார்க்கிறேன்
வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.
Deleteமிக்க நன்றி....,நீங்களும் இப்போ கீழிருந்து மேலாகப் படிக்கிறீங்களோ ஹா ஹா ஹா..
இப்படிப் பலப் பல வகையான கப்பல்கள், போர்ட் கள், யொட்ஸ் , நீர்மூழிகி , நேவிக்கப்பல் என வந்து போகும் நெல்லைத்தமிழன்.. நமக்கே பலது என்னவெனப் புரியாது..
ஆற்றில் கப்பல் போவது - இதை பத்தாயிரத்து நாலாவது தடவையாக எடுத்து வெளியிடறீங்க.
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா இல்லை, எல்லாமே புதுசு புதுசா எடுப்பவை, அத்தோடு புதிய கப்பல்களும் கூட:)).. இன்னும் வர வர எடுத்துப் போடுவேன்.. நீங்கள் யோகா, தியானம் எல்லாம் பண்ணிப், பொறுமையை வர வச்சிருங்கோ ஜொள்ளிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா..
Deleteஜிம் ஃபெசிலிட்டி மனதைக் கவர்கிறது. இங்க இன்னும் மேனுவல் கார்டுதான்.
ReplyDeleteயோகா - முன்பு எங்கள் வீட்டுக்கு வாரம் ஒரு தடவை யோகா மாஸ்டர் வந்து சொல்லிக்கொடுப்பார். அப்போ அப்போ யோகா செய்யாமல் டபாய்ப்பேன். கொரோனாவுக்கு முன்னால் இங்கு யோகா கிளாஸ் போய்க்கொண்டிருந்தேன். நீங்க யோகா செய்வது நல்லது. பாராட்டுகள்.
இங்கும் சிலதில் அப்படியும் இருக்கிறது, ஆனால் பெரும்பாலானவை இப்படி மாற்றப்பட்டுவிட்டன. நிறைய நிறைய புதுவித மெசின்களும் வந்திருக்கின்றன...
Deleteஇன்னொன்று சொல்ல விட்டுப்போய் விட்டது, மசாஜ் செயாரும் உண்டு.. ஈசிச்செயார்போல பெரிது.... ஜிம் முடிய அதில் ஏறிக் கொஞ்ச நேரம் படுத்திருந்தால், முதுகு கால் எல்லாம் நன்கு மசாஜ் பண்ணி விடும்.. அதுவும் இந்த மெம்பஷிப்பில் இன்குளூடட்.
யோகாக் கிளாஸ் போய்ப் பழகி விட்டமையால, இப்போ யூ ரியூப்பிலும் சிலதைப் பார்த்துச் செய்ய முடிகிறது..
நன்றி.
மசாஜ் சேர் - கல்ஃபில் நிறைய மால்களில் இது உண்டு. சும்மா 30 ரூபாய்க்கான காயினை (அந்த ஊர் காயின்) போட்டால் ஐந்து நிமிடம் மசாஜ் செய்துவிடும்.
Deleteநான் சென்னைக்கு ஆபீஸ் விஷயமா வந்ததில் ஒரு தடவை, தி நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். அங்கு ஒவ்வொரு அறைக்கும் ஒரு மசாஜ் சேர் இருந்தது. நானோ ஒரு இரவுதான் தங்கியிருந்தேன். இரவு 9 மணி வரை வேலை. உடனே தூங்கணும். ரூம்ல சேர் இருக்கேன்னு கொஞ்ச நேரம் அதில் உட்கார்ந்திருந்தேன்.
இங்கும் அப்படித்தான் நெல்லைத்தமிழன் மோல்களில் உண்டு.
Deleteஇது மோல்களில் இருப்பதை விடப் பெரிசாக வைத்திருக்கிறார்கள்.. பெட் போல படுத்திருப்பது... தலையை அஜஸ்ட் பண்ணி உயர்த்தலாம், ஆனா பொதுவாக எல்லோரும் நேராகப் படுத்திருப்பதுதான், அப்பொதான் பிடரி, கழுத்து எல்லாம் சூப்பராக மசாஜ் பண்ணுது ஹா ஹா ஹா..
Happiness is waking up on a new country - உண்மையாத்தான் இருக்கும், வாழும் தேசத்தில் குற்றம் புரிந்தவர்களுக்கும், அரசை ஏமாற்றி, பிடிபடும் தறுவாயில் இருப்பவர்களுக்கும்.
ReplyDeleteஹா ஹா ஹா.. உண்மைதான்.. எஸ்கேப் ஆக நல்ல வழி.
Deleteமிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.
அடடா... என்னவொரு இடம்... ஆகா...!
ReplyDeleteயோகா வேண்டாம்... யோகம் வேண்டும்...!
வாங்கோ டிடி வாங்கோ.. நன்றி.
Deleteயோகா இருந்தால் யோகமும் வருமாக்கும் ஹா ஹா ஹா நன்றி.
//எங்கள் மாவட்டத்தில் இருக்கும் அத்தனை ஜிம்களுக்கும் போகலாம், மற்றும் யோகா, சுவிம்மிங், வோட்டர் ஏரோபிக் கிளாஸ், சோனா இப்படி அனைத்துக்கும் போகலாம்..//
ReplyDeleteஎல்லாம் ஓகே அந்த sauna வை எதுக்கு சோனா ஆக்கினீங்க :) நனையும் இங்கே வந்த புதிதில் fitnes கிளப்பில் சேர்ந்தேன் இப்படித்தான் அங்கே sauna jacuzzi எல்லாம் இருந்துச்சி நமக்கு நின்ன இடத்தில இருந்தே ஓடற ட்ரெட்மில் தான ரொம்ப பிடிக்கும் ஒரு வெறியோட காதில் ஹெட் போன் போட்டுட்டு நடப்பேன் கடைசியில் கால் டெண்டன் போச்சு இனிமே இந்த விளையாடடு வேணாம்னுட்டார் டாக்டர் .எதையும் அளவோடு செய்யணும் என்பதை கற்றுக்கொடுத்தது என் ஜிம் அனுபவம்
அல்லோ அதெல்லாம் சரி, ஒரு நாளாவது சுவிம்மிங் ஃபூல் க்குள்ள இறங்கி ஏறினனீங்களோ?:).. ஹா ஹா ஹா.. அந்தக் குழாய்க்குள்ள போயிருப்பீங்களோ?:) மீ எதையும் விடுவதில்லை:)) மூக்குடை பட்டாலும் ஹா ஹா ஹா:))
Delete//காதில் ஹெட் போன் போட்டுட்டு நடப்பேன்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உண்மையைச் சொல்லோணும்... தேம்ஸ் நதியில மிதக்கும் அந்தப் பபபபச்சைப்பாசிமேல அடிச்சு சத்தியம் பண்ணுங்கோ.. உங்கட காதுக்கு இயஃபோன் எண்டால் என்னவெனத் தெரியுமோ?:) ஹா ஹா ஹா..
//எதையும் அளவோடு செய்யணும் என்பதை கற்றுக்கொடுத்தது என் ஜிம் அனுபவம்//
இது..இதுதான் முக்கியம் ஜிம் இல்.. சிலர் ஜிம் இல ஜொயின் பண்ணினவுடனேயே ஓடத் தொடங்கிடுவினம்... எதையும் கொஞ்சம் ஸ்லோவாக மூவ் பண்ணினால்தான் நீண்ட நாட்கள் இழுபடும்.
//ஒரு நாளாவது சுவிம்மிங் ஃபூல் க்குள்ள இறங்கி ஏறினனீங்களோ?:).. ஹா ஹா ஹா.. அந்தக் குழாய்க்குள்ள போயிருப்பீங்களோ?:) //
Deleteஎன்னை கொல்ல சதீ:)
////காதில் ஹெட் போன் போட்டுட்டு நடப்பேன்//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உண்மையைச் சொல்லோணும்...//
அஆவ் இன்னிக்கு வெளில ட்ரைவ் போயிட்டு வந்து அவசர டைப்பிங் அதில் பாதி வரி எழுத்து மிஸ்ஸிங் .நான் காதில் ஹெட் போனை கனெக்ட் பண்ணாமாதானே போட்டேன் எனக்கு வெளிச்சத்தம் எந்த சத்தமும் கேக்ககூடாததுன்னு :) பிக்காஸ் அங்கே எல்லாம் பாட்டுக்கு கூட சேர்ந்து பாடுவாங்க லேடிஸ் :)மற்றபடி இயர்போன் ஹெட் போன் இதெல்லாம் எனக்கு கிட்டயும் வராதே .ஒருமுறை பிளைட்டில் என் பின் பக்கம் ரெண்டு தமிழர்கள் இருந்தாங்க ப்லைட்டே கொயட்டா இருக்கும்போது அந்த இருவரும் காட்டுக்கத்தல் பைலட்டுக்கே கேட்குமளவு அமெரிக்கபுராணம் வணங்கின சொத்து நகை வீடுன்னு எல்லாத்தையும் பேசியிட்டிருந்தாங்க .அன்னிக்கு நான் ட்ராவல் பண்ணுவது எங்கம்மாக்கு குட் பய் சொல்ல :( அப்போ என்ன மனநிலையில் இருந்திருப்பேன் ஆனா அந்த அறிவீலிகள் அவ்ளோ சத்தமா பேசுனாங்க வேற வழியில்லாமா ஹெட்போன் எடுத்து காதில் போட்டு அமர்ந்திருந்தேன்
ஆத்தீ என்னமோ நடக்கு ஒரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் :)
Deleteவாங்கின சொத்து //
//நான் காதில் ஹெட் போனை கனெக்ட் பண்ணாமாதானே போட்டேன்//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
------
உண்மைதான் அஞ்சு, சிலருக்கு அடுத்தவர்கள் நினைப்பு இருப்பதில்லை, அதிலும் குறிப்பாக சைனீஸ், தன் பக்கத்தில் இருப்பவரைக்கூடக் கவனிக்காமல் தம் பாஷையில சத்தமாகப் பேசுவர்...
அதுவும் அடுத்தவங்க என்ன மனநிலையில் இருக்காங்க இருப்பாங்கன்னு கூட புரியலை பாருங்க :( டிராவல் பண்றவங்க எல்லாரும் ஜாலிட்ரிப்புன்னு நினைச்சிட்டாங்க அந்த இருவர் .எனக்குன்னே வினோத அனுபவங்கள் வருது இதையும் சொல்லிட்டு தூங்க போறேன் .அவங்க அமெரிக்கா இங்கிலாந்து டு துபாயில் இறங்கிட்டாங்க பிறகு நானா 7 hours வெயிட்பண்ணி சென்னை பிளைட்டில் ஏறி கண்ணை மூடினேன் டயர்டில் திடீர்னு காச் மூச்னு ஒரு பெருஞ்சத்தம் ஒரு பெண் தனக்கு வேறொரு ஆண் அருகில் சீட் குடுத்துட்டாங்கன்னு கத்துறார் .non ஸ்டாப் சத்தம் கடைசில அந்த ஆண் அருகில் நான் இடம் மாறி உக்கார்ந்தேன் என் சீட்டை அப்பெண்ணுக்கு கொடுத்து .கடவுளே இவர்களையெல்லாம் மார்ஸுக்கு அனுப்பிடுங்கன்னும் ப்ரே பண்ணிக்கிட்டேன் :)
Delete//எல்லாம் ஓகே அந்த sauna வை எதுக்கு சோனா ஆக்கினீங்க//ஹா..ஹா.. அஞ்சு.. நானும் ஏதோ புதுசா அங்கே இருக்காக்கும் என நினைத்தேன். ஹா..ஹா..ஹா அது sauna வா. கர்ர்ர்ர்ர்ர்.
Delete//காச் மூச்னு ஒரு பெருஞ்சத்தம் ஒரு பெண் தனக்கு வேறொரு ஆண் அருகில் சீட் குடுத்துட்டாங்கன்னு கத்துறார்//
Deleteஹா ஹா ஹா நாம் புக் பண்ணுவதைப்பொறுத்துத்தானே சீட் அமையும் ஹையோ ஹையோ..
இங்கு சென்னையிலிருந்து வந்த தமிழ் லேடி ஒருவர், ஆண்கள் இல்லாத ஜிம், இங்கு எங்காவது இருக்குதோ எனக் கேட்டபடி இருந்தார்... ஹா ஹா ஹா.. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்..
//ஒரு பெண் தனக்கு வேறொரு ஆண் அருகில் சீட் குடுத்துட்டாங்கன்னு கத்துறார்// - நான் கல்ஃபில் பஹ்ரைன்-துபாய்லாம் போகும்போது, ஃப்ளைட் பெரும்பாலும் ஃபுல்லா இருக்கும். திரும்ப வரும் ஃப்ளைட்டில் சமயத்தில் அரபிக் லேடி பக்கத்துல சீட் போட்டிருந்ததுனா, அவங்கள்ட கேட்பேன் வேற இடம் மாறி உட்கார்ந்துக்கறாங்களான்னு. தவறுதலா மேல பட்டுடுச்சுன்னா பெரிய பிரச்சனை.
Deleteஎங்க ஆஃபீஸ்ல ஒரு தடவை இரண்டு அரபிக் லேடீஸ் வேலை பார்த்தாங்க. அவங்க என்னிடம் ரொம்ப ஃப்ரெண்ட்லியா பேசுவாங்க (நான் இன்னொரு துறைத் தலைவர்). அவங்க இரண்டு பேரும் போட்டோக்களைக் காட்டி இன்னொரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த போது, அது என்ன போட்டோ என்று நான் டக் என்று எடுத்துப் பார்த்தேன். அந்தப் பெண் ரொம்ப ஷாக் ஆகிட்டாங்க. அப்புறம்தான் எனக்குத் தெரிந்தது, தலைமுடியை மறைக்காமல், மாடர்ன் டிரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை கணவனைத் தவிர வேறு ஆண்கள் பார்க்கக்கூடாது என்ற அவர்களின் கல்ச்சர்.
இப்போ நினைத்தாலும் சிரித்துக்கொள்வது... நான் 89ல் மும்பைக்குச் சென்றிருந்தேன். அங்க பஸ் பிரயாணத்தில் (உள்ளூர்), ஒரு பெண் என் அருகில் உட்கார்ந்தாள். உடனே நான் எழுந்துவிட்டேன். ஃப்ளைட்ல பெரும்பாலும் அவங்க செக் பண்ணித்தான் (ஆண், பெண்) இடம் அலாட் பண்ணுவாங்க, மேற்கத்தைய நாடுகளைத் தவிர.
//priyasakiFriday, May 15, 2020 9:28:00 am
Delete//எல்லாம் ஓகே அந்த sauna வை எதுக்கு சோனா ஆக்கினீங்க//ஹா..ஹா.. அஞ்சு.. நானும் ஏதோ புதுசா அங்கே இருக்காக்கும் என நினைத்தேன். ஹா..ஹா..ஹா அது sauna வா. கர்ர்ர்ர்ர்ர்.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்குத்தான் அதிராவைப்போல டமில்ல டி எடுத்திருக்கோணும் என்பது:)).. எனக்கு இவ்விடத்தில்.. சேனா எனச் சொல்லியிருந்தாலும் புரிஞ்சிருக்குமே:)).. அதுசரி அப்போ எப்பூடித்தமிழில் எழுதுவீங்க இதை இருவரும்?:)) ஆவ்வ்வ்வ் இரண்டு பேருமே இப்போ மாட்டீஈஈஈஈஈஈஈஈஈஈ:)) ஹா ஹா ஹா..
பெரிய கொமெண்ட் போட்டேன், ஏதொ எரர் ஆம் அது காணாமல் போயிந்தி:),.. திரும்ப எழுதுகிறேன்..
Delete@நெ தமிழன்
//தவறுதலா மேல பட்டுடுச்சுன்னா பெரிய பிரச்சனை.//
ஹா ஹா ஹா சத்தியமா?
// அது என்ன போட்டோ என்று நான் டக் என்று எடுத்துப் பார்த்தேன். //
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னா பழக்கம் இது கேட்காமல் எடுப்பது?:)) நல்லவேளை கடவுள் உங்களைக் காப்பாற்றினார்ர்... அது நோர்மல் போட்டோ என்பதால் ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா...
//அப்புறம்தான் எனக்குத் தெரிந்தது, தலைமுடியை மறைக்காமல், மாடர்ன் டிரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை கணவனைத் தவிர வேறு ஆண்கள் பார்க்கக்கூடாது என்ற அவர்களின் கல்ச்சர்.//
ஓம் எனக்கும் தெரியும் இது, ஆனா முந்தின காலங்களில் இப்படிப் போட்டோ எடுக்க மாட்டினம், ஏனெனில் ஸ்ரூடியோவில குடுத்தெல்லோ பிரிண்ட் பண்ணோனும், இப்போ நாமே பிரிண்ட் பண்ணலாம் என்பதனால எடுக்கிறார்கள் போலும்..
// ஃப்ளைட்ல பெரும்பாலும் அவங்க செக் பண்ணித்தான் (ஆண், பெண்) இடம் அலாட் பண்ணுவாங்க, //
ஓ.. இது எனக்கு அதிர்ச்சியான புதுத் தகவல்... ஆனா இதுவும் ஒரு நல்ல முறைதான், வெளிநாட்டவர்கள் பிரச்சனை இல்லை, ஆனா அங்கு பயணம் செய்வோர் நம் நாட்டினர்தானே... அதனால அருகில் இருப்பது கொஞ்சம் சங்கடம் தான்... நம் ஊர் பஸ்களில்கூட, “சில..” ஆண்களுக்கு அருகில், சீற்றில் இருந்து பயணம் செய்வது கடினம்... அனுபவப்பட்டிருக்கிறேன்..
இங்குள்ள வெளிநாட்டினர் இந்த இருக்கை விஷயத்தில் மிகவும் கவனம் .ஆசிய பெண்கள் குறிப்பா இந்திய பாகிஸ்தானியன்னா மிக கவனம் .அவர்களிடம் அனுமதி பெற்றபின்தான் சீட் காலியா இருந்தா உக்காருவாங்க ..2003 இல் ஜெர்மனியில் இருந்தப்போ ஒரு கிண்டர்கார்டன் FOREST ட்ரிப்புக்கு என் கணவரால் வர இயலவில்லை போகும்போது ஹெட்டீச்சர் உடன் போனேன் வரும்போது இன்னொரு ஆண் அவர் எங்கள் வீட்டருகில் இருந்ததால் ஹெட் டீச்சர் என்னிடம் //ஏஞ்சலின் ஒரு பேரண்ட் உங்கள் வீட்டரிங்கில் இருக்கார் அவர் ஆண் அவருடன் செல்வதில் உனக்கு ஓக்கேவா என்று கேட்டார் :)நம்மூர் மேட்டர் அப்போவே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு :)
Delete//அவங்கள்ட கேட்பேன் வேற இடம் மாறி உட்கார்ந்துக்கறாங்களான்னு. தவறுதலா மேல பட்டுடுச்சுன்னா பெரிய பிரச்சனை.//
Deleteபாவம் நெல்லைத்தமிழன் :) ஆண்கள் எப்படியெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு பாருங்க
ஹலோ மியாவ் இதுக்குத்தான் ஒன்று முழுத்தமிழில் எழுதணும் சோனா தான் ப்ரொனன்சியேஷனில் வருது .ஆனா சோனங்குறது ஒரு பெயரும் :)நீராவி குளியல் வெப்ப அறைனும் சொல்லலாம்
Delete//ஹலோ மியாவ் இதுக்குத்தான் ஒன்று முழுத்தமிழில் எழுதணும்//
Deleteஇனி ஆரும் இங்கின டீ குடிச்சேன்.. டீச்சர் சொன்னா என்றெல்லாம் எழுதட்டும் இருக்குது வெடி:)).. ஒழுங்கா “தேயிலைப் பானம் குடிச்சேன்”.. என் ஆசிரியர் சொன்னார் என மட்டும் தான் நீங்க இருவரும் எழுதோணும்.. ஜொள்ளிட்டேன் ம்ஹூம்ம்... சோனா வை சோனா என எழுதாமல்... நீராவிக் குளியலாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...
Teacherனா ஆசிரியை இல்லையா? (சொன்னா என்று எழுதியிருப்பதால்). சர்வ சாதாரணமாக ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாத்தறீங்களே 'அறிவி' (ஞானி என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ் ஹா ஹா ஹா)
Delete@நெலைத்தமிழன்
Delete//
அச்சச்சோ இதைத் தட்டீஈஈஈத்தட்டிக் கேய்க்க இங்கின ஆருமே இல்லையோ?:) ஒரு டமில்ல டி எடுத்திருப்பதால எவ்ளோ அடிகளைத் தாங்க வேண்டி இருக்குது பாருங்கோ.. அம்மம்மா அப்பவே சொன்னா, பிள்ள காச்ச மரம்தான் கல்லெறி படும் என்ண்டு:)).. நாம ஆரூஊஊஊஊ மண்ணுண்ணி ஆச்சே .. செத்துப் போயிட மாட்டோமாக்கும் ஹா ஹா ஹா:)).. ஆனா செத்ததைப்போல அப்பப்ப நடிப்பேன்ன்:)) ஹா ஹா ஹா..
சரி அது போகட்டும் மற்றவருக்கு வாறேன்...
அது நெல்லைத்தமிழன் மரியாதையாகச் சொல்லும் பழக்க வழக்கம்,
நம் நாட்டுப் பழக்க வழக்கம்..
இப்போ பெண்களைச் சொல்லும் போது, பேச்சு வழக்கில்.. சொன்னா, பேசினா, வந்தா, போனா.. இப்படிப் சொல்லுவோம் மரியாதையாக, அதேபோல் ஆண்களை எனில்.. வந்தார், போனார் சொன்னார் இப்படிச் சொல்வோம்... ஆனா சொன்னார் பேசினார் வந்தார் என்பது எழுத்து வடிவில் சொல்லும்போது இரு பாலாருக்கும் எழுதுவோம்.
ஆனாலும் ஒரு மகிழ்ச்சியான தகவல் சொல்கிறேன் கேட்டுக்கோங்க:)).. நீங்கள் எல்லோரும் பெண்களைப் பற்றிப் பேசும்போது, வந்தாள், செய்தாள்.. இப்படிச் சொல்வதுண்டுதானே... அது எப்பவும் எனக்குக் கொஞ்சம் சங்கடமான சொல்லாகவே இருக்கும்.. ஆனா சமீபத்தில் எ.புளொக்கில் பார்த்தேன், நீங்கள் எழுதியிருந்தீங்கள்.. “என் மனைவி இதைச் சமைச்சா” .... என்பதுபோல... ஆவ்வ்வ்வ் அடிரா கண்ணுக்கு எல்லாமும் தெரியுமாக்கும்.. இப்போ பேச வந்திட்டார்ர் “பால்”.. பற்ரிக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
//'அறிவி' (ஞானி என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ் ஹா ஹா ஹா)//
ஆஆஆஆஆஆ என்னாதூஊஊஊஊ ஞானி எண்டால் தமிழ்ச் சொல் இல்லையோ?:)) அப்போ அதிராவுக்குச் சமஸ்கிருதமும் தெரியுமாக்கும்... ஹா ஹா ஹா...
நன்றி நெல்லைத்தமிழன்... “திருநெல்வேலி ஸ்பெஷல்”.. கடகங்களில் வைத்து ரெயினில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்ர்கள்.. ரெயின், 24 மணி நேரத்துள் புறப்பட்டு வந்து நிற்கும் “மியாவ் ஸ்ரேஷனில்”:)) ஹா ஹா ஹா ஓடாதீங்கோ:))
//Teacherனா ஆசிரியை இல்லையா?//
Deleteஓ இதுக்குப் பதில், Teacher என்பது பொதுச்சொல் தான் நெல்லைத்தமிழன்.. ஆண் பெண் இருவருக்கும் Teacher எனத்தான் வரும். நம் நாடுகளில்தான், ரீச்சர் எனில் பெண் எனவும், மாஸ்டர் எனில் ஆண் எனவும் நினைப்பது, ஆனா அப்படி இல்லை.. இங்கு ஆண்களையும் ரீச்சர் தான்... மாஸ்டர் எனும் சொல் புழக்கத்தில் இல்லை இங்கு.
//என்ன நான் சொல்றது புரியுதோ?:)//ஹையோ அச்சு அசலா இதை சொல்லும் பூனை உங்களை க்ளோன் செஞ்சப்பலேயே இருக்கே :)
ReplyDeleteஆமா அஞ்சு ஆமா.. ரொம்ப அப்பாவி இல்ல?:)) அதிராவைப்போலவேதேன்:)) பிஞ்சு அப்பாவிப் பூஸ்:) ஹா ஹா ஹா..
Delete/“நீ எப்பவும் என் கண்ணுக்கு தெரியாமல் ஒளிச்சிருக்கிறாய், இனி முன் வரிசையில் வந்திருக்கோணும்” என ஹா ஹா ஹா அதிலிருந்து, ஒளிப்பதை விட்டு விட்டேன்...//
ReplyDeleteஹாஹாஹா நம்ம இனமாச்சே :) எனக்கும் மறைந்து லாஸ்ட் ரோவில் இருப்பதே பிடிக்கும் .கேள்வி டவுட்ஸ் கூட நோட்டில் எழுதுவேன் தவிர கையுர்த்தி கேட்க மாட்டேன் அப்படித்தேன் ஆன்சர்ஸ்ம் பக்கத்தில் இருக்கவகிட்ட முணுமுணுப்பேன் அவ சொல்லி //வெறி குட் //னு பெயர் வாங்குவா :) இதே பழக்கம் என் மகளுக்கும் உண்டு ஆரம்பத்தில் இப்போ சொல்லி திருத்தியாச்சு .எதுக்கு சொல்றேன்னா இப்படி லாஸ்ட் றோவில் மறைவது நாம செய்யும் நல்ல விஷயங்கள் பலர் கண்ணுக்கு படாமலே போகும் .
புதுசுக்கு கூச்சமாக இருந்துதா அதேன்:)).. அத்தோடு, ஏனையோர் பலர் பழகி விட்டவர்கள், அவர்களுக்கு ஸ்ரெப்ஸ் எல்லாம் தெரியும், நான் பழகிப்பழகி.. இப்போ ஓரளவு தெரியும்...
Delete✋ ✋ ஆ...நானும் பின்னாடிதான். (விளையாட்டுக்கும்தான்) ஆனா தமிழ் மாஸ்டர் , social study master கூப்பிட்டு முன்னுக்கு இருத்திவிடுவினம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
Deleteஆனால் நான் படிக்கும் காலத்தில் எப்பவும் முதல் பெஞ்சிலதான் இடம் பிடிப்பேன்... எனக்குப் பின்னுக்கு இருப்பது பிடிப்பதில்லை..
Delete// யோகா வகுப்பில்... ஓம் சாந்தி... ஓம் சாந்தி..., ஒம் நம ஸ்....வா...ய.... இப்படி எல்லாம் ரெக்கோர்டில் போடுவார்கள், எனக்கோ மெய் சிலிர்க்கும்//உண்மைதான் வெள்ளையர் எந்த பேதம் பார்ப்பதில்லை சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஆராய்ச்சி செய்து குற்றம் கண்டுபிடிப்பதுமில்லை எல்லாம் அவர்களுக்கு ஒன்றுதான் .இந்த நல்ல விஷயத்தை எல்லாருமே கற்றுக்கணும்
ReplyDeleteஉண்மைதான் அஞ்சு... மத பேதமில்லாமல் அதனைப் போடும்போது கேட்க இதமாக இருந்தது...
Deleteஎப்படி என் கமெண்ட்டில் இவ்ளோ பெரிய இடைவெளி !! எனக்கே கண் கூசுது டெலீட் பண்ணுங்க மியாவ்
ReplyDeleteஹா ஹா ஹா மேலே போட்டதோ?.. பண்ணியாச்சென நினைக்கிறேன்.
Delete/யோகா ரீச்சரையும் பார்க்க முடியவில்லை.. என்பதனால கவலையாகவும் இருக்குது:).. “yoga is your body".. இது எங்கட ரீச்சர் அடிக்கடி சொல்லும் வசனம்:)///
ReplyDeleteஇப்போ என்னதான் பிரச்சினை உங்களுக்கு அவ்ளோ ஆசையான டீச்சர்னா ஒரு எட்டு பார்த்து ஹாய் சொல்லி விட்டு வரலாமே :)
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
Deleteஸ்ஸ்ஸ்ஸ் யப்பப்பா ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் நடுவில் பிளேன் ரன்வே மாதிரி கேப் :) அதான் டிலீட்ட்டினேன்
ReplyDeletecat ட்ரெட்மில் :)) எங்க குட்டி ஜெஸி நிஜம்மா இப்படித்தான் செய்வா :) டாய்லட் ரொலோடு விளையாட அவ்ளோ ஆசை :)
ReplyDeleteபூஸ் என்றாலே அப்படித்தானே அஞ்சு.. அவர்களின் மனநிலை தெரிஞ்சவர்கள் தான் இப்படிப் படங்கள் போடுகின்றனர்... இப்பூடி மூன்று கட்ஸ் வீட்டில் இருந்தால், நம் நிலைமை என்னாவது... நல்லவேளை உங்களுக்கு மல்ட்டி குட் கேள்.. அப்பாவி.. லைக் அதிரா:)..
Deleteஹலோ அந்த குட் கேர்ள் இப்போ ஜெசிக்கு கெட்ட பழக்கம்லாம் காட்டி குடுக்குது :) ஜன்னல் ஏறி குதிச்சி காட்டி குடுத்திருக்கா ..ஆனா உங்களை மாதிரி தான் அது உண்மை :) எப்படின்னா வெளியே குதிக்க கத்து குடுத்தவ மீண்டும் எப்படி உள்ளே வரேன்னு சொல்லித்தரலை இவை மட்டும் ஜம்ப் பண்ணி வந்திருக்கா .ஜெசி வெளில மாட்டி :) அதுவும் கூரையில் :)
Deleteஹா ஹா ஹா ஜெஸிக்கு கிட்னிப் பவர் அதிகம்:) அதனால திரும்பி உள்ளே வந்திட்டா:) அல்லது நைஸா ஜெஸிப்பிள்ளையை எங்காவது இரவோடிரவாக நாடு கடத்திட்டு, தான் மட்டும் அரசாளுவோம் என நினைச்சாவோ என்னமோ ஹா ஹா ஹா..
Delete//இரவோடிரவாக நாடு கடத்திட்டு, தான் மட்டும் அரசாளுவோம் என நினைச்சாவோ என்னமோ ஹா ஹா ஹா..//
Deleteஹையோ இதைத்தான் என் கணவரும் சொன்னார் எப்புடி நீங்க ரெண்டுபேரும் ஒரேமாதிரி வில்லங்கமா திங்கிங் :)
கிட்னி பெரிசாக இருப்போரெல்லாம் இப்பூடித்தான் திங் பண்ணுவினமாக்கும்:)).. உங்களுக்குத்தான் குட்டிக் கிட்னியாச்சே:)) ஹா ஹா ஹா...
Delete//அதில் நாம் என்ன என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை சேஃப் பண்ணி வைத்தால், அந்த மெசினில் அப் பெண்ட்றைவ் ஐப் போட்டதும், நம் பெயர் விபரத்தோடு//
ReplyDeleteஆனா இதில் உங்க வயசும் வெய்ட்டும் காட்டலையே :)))))))))
அது ரெண்டும் காட்டாதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆ தோ வ மு:)
Deleteஅதானே பார்த்தேன் :) அப்பளம் வடைன்னு வரதையும் :) ஆசை தோசை வடை முட்டைன்னு :) எங்கேடா முட்டை நினைவே போச்சோ உங்களுக்குன்னு
Deleteஹா ஹா ஹா அதை நீங்களாகவே முட்டை என முடிவெடுத்திட்டீங்களோ?:) ஹா ஹா ஹா பார்த்தீங்களோ உங்களுக்கு எவ்ளோ தங்க மனசு:)) ஹா ஹா ஹா ஆனா நான் உங்களுக்காக முறுக்குப் போட்டேன்:))
Deleteஎன்ன பண்றது அதிரா வும் அகோமு வும் பிரிக்கமுடியாததாச்சே
Deleteஹா ஹா ஹா:).. என்னாலயும்தான் அதைப் பிரிய முடியவில்லை.. சாப்பிடாமல் டயட்டில் இருந்தாலும்.. சாப்பிடும்போது ஒரு அ மு சாப்பிட்டு விடுவேன்:)).. என் ஆசை.. ஒரு நாளைக்கு நிறைய அவிச்சு வச்சுப்போட்டுச் சாப்பிடோணும் என்பது, ஆனால் பயத்தில.. 2 கூடச் சாப்பிடுவதில்லை கர்ர்:)).
Deleteஆத்தங்கரை கப்பலும் அதை திருத்தும் கப்பலும் அழகா இருக்கு ..
ReplyDelete//ஹா ஹா ஹா இது உண்மையோ? திகிலாக இருக்காது?:)//
எனக்கு என் வீடு என் தோட்டம் என் அணிலன் என் பேர்ட்ஸ் எல்லாம் கூட வந்த ஓகேதான்
அப்போ நாளைக்கு கண் முழிக்கும்போது நீங்க நியூயோர்க்கில இருந்தால் ஒகேயா?:)) இப்பவே சொல்லுங்கோ:) ட்றம்ப் அங்கிளிடம் பெர்மிஷன் வாங்கி வைக்கிறேன்:))
Deleteநான் போனா கூடவே உங்களையும் இழுத்துட்டுதான் போவேன் பூனைகளும் தான் கூட இருக்கணும் :)
Deleteஇல்ல இப்போ பூஸ் பாஸ்போர்ட் எல்லாம் கொஞ்சக்காலத்துக்கு செல்லுபடியாகாதாம்:) அதனால நீங்க தனியே போயிட்டு வாங்கோ.. வேணுமெண்டால் ரிக்கெட் போட்டால் அம்முலு வருவா டுணையாக:))
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்.. நியூயோர்க்குக்கா. எனக்கு போகனும் என இருந்த சிட்டி. ஆனா இப்ப மாட்டேன். அங்கேதான் அதிகமாம்.
Deleteச்ச்ச்ச்சும்மா போய்ப் பார்த்துக்கொண்டு வரலாமே அம்முலு:) ஹா ஹா ஹா..
Deleteபுத்தர் சொல்றது சரிதான் நிறையபேர் துன்பத்தை தேடியிருப்பாங்க ஹையோ அதிரா இணைப்பு !!! ஆஆ யாரது எதிர்ப்பு காட்டினது
ReplyDeleteஹா ஹா ஹா ஆரும் காட்டிட முன் சொல்லிட்டேன்:)
Delete///வட்ஸப் யோகா,ஜிம் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன, சொல்லித்தருபவர் பிஞ்சு ரீச்சர் அதிரா:).. இடம் முடிஞ்சிடும் எனவே உடன் பதிவுக்கு முந்துங்கள்:))//
ReplyDeleteமிக்க நன்றி பிஞ்சு டீச்சர் :) எனக்கும் யோகா செய்ய ஆசைதான் ஆனா ஒரே இடத்தில உக்கார்ந்து இல்லைனா நின்னு செய்றதில் ஆர்வமில்லை . எனக்கு என் குட்டித்தோட்டம் அதில் வரும் பெர்ட்ஸ் பட்டாம்பூச்சி பம்பில் bee சிட்டுக்குருவிஸ் புறா மணிப்புறா அப்புறம் தொட்டது மலர்கள் இவைதராத சந்தோஷத்தை இவைதராத மகிழ்வை எந்த யோகாவும் தராதே :)
அவற்றை விட்டுவிட்டா யோகா? இல்லையே.. அவற்றோடுதான் யோகா:))
Delete//அது தோட்டத்து //
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது புரிஞ்சுதே... மிக்க நன்றிகள் அஞ்சு.. இதில் பெரிசா ஒன்றுமில்லை என ஏற்கனவே சொல்லிட்டேன்... நிறையப் போடக்கூடாதென்பதால போஸ்ட்டை அடக்கி வாசிச்சேன்:))
Deleteயோகா க்ளாஸ் முன்னால் சென்றிருக்கிறேன். வீட்டில் ரொம்ப நாள் தொடர முடியவில்லை - வழக்கம்போல. நான் ஒரு சோம்பேறி!
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
Deleteநெடுகவும் வீட்டில் செய்வதென்பது கஸ்டம்தான் ஸ்ரீராம், இப்படி வகுப்புக்கள் போனால்தான் உசாராக, போட்டியாக செய்ய முடியும்..
இங்கு கிளாஸ் போனால் ஒரு மணி நேரம், ஆனால் வீட்டில் எனில் 20-30 நிமிடங்கள் செய்வதே பெரும்பாடாக இருக்குது, நான் தொடர்ந்து செய்யாமல்... காலை மாலை எனச் செய்வதுண்டு.
ஆற்றங்கரையோரம் ஜிம்.. ஜம் என்றுதான் இருக்கும். ஆனாலும் உங்களுக்கு பொறுமை ஜாஸ்திதான். எனக்கு அதெல்லாம் கிடையாது.
ReplyDeleteஜிம், யோகா எல்லாம் வெளிக்கிட்டுப் போவதுதான் கஸ்டமாக இருக்கும் ஸ்ரீராம், போகத்தான் வேணுமோ என மனம் சொல்லும், ஆனா அதை வென்று வெளிக்கிட்டுப் போயிட்டால், பின்பு ஜிம் ஐ விட்டு வெளியே வரவே மனம் வராது, நேரம் போகுதே, ஏனைய வேலைகள் இருக்கே எனத்தான் வெளியே வருவது ஹா ஹா ஹா...
Deleteஎன்னதான் வீட்டில் இருந்து செய்கிறோம் என்றாலும், இப்படி போய்ச் செய்வதைப்போல வராது, மனதுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும் அங்கு போனால்.
நீங்கள் நாட்டியம் கற்றுக் கொண்டவரா? அடடே்
ReplyDeleteஓம் ஸ்ரீராம்... எனக்கு அது பிடிச்சிருக்கவில்லை, ஆனால் அம்மாவுக்கு சரியான ஆசை, ஒரு பிள்ளையாவது பழகோணும் என, அதனால என்னைப் பிடிச்சுக் கொண்டா...
Deleteஒரு அரசியல் மீட்டிங் நடந்தது, எங்கள் ஊர்ச் சந்தியில் பெரிய மேடை போட்டு.... அதில் “கண்ணன் எங்கள் கண்ணனாம் கார் மேக வண்ணனாம்”.. பாட்டுக்கு நான் நடனம் ஆடினேன் ஹா ஹா ஹா அப்போ ஒரு 9-10 வயசிருக்கும்...
// “நீ எப்பவும் என் கண்ணுக்கு தெரியாமல் ஒளிச்சிருக்கிறாய், இனி முன் வரிசையில் வந்திருக்கோணும்” என ஹா ஹா ஹா அதிலிருந்து, ஒளிப்பதை விட்டு விட்டேன்...//
ReplyDeleteஅதிலிருந்து க்ளாஸ் போவதை விட்டு விட்டேன் என்று சொல்வீர்கள் என நினைத்தேன். ஹா.. ஹா... ஹா...
ஹா ஹா ஹா இல்லை, என்னை ஆரும் கவனிக்கவில்லையே எனில்தான் போவதை நிறுத்த யோசிக்கலாம்.. இப்படி ஸ்பெஷலாக என்னைக் கவனிச்சுக் கேட்கிறாவே ரீச்சர் எனும்போது ஒரு பாசம் வந்து விட்டது, ரீச்சரையும் பிடிச்சுப் போச்சு ஹா ஹா ஹா.. அவவுக்கு எப்படியும் ஒரு 55-60 வயசிருக்கலாம்... இன்னொரு ரீச்சரும் இருக்கிறா அவவுக்கு 30 வயசு இருக்கும்...
Deleteஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு, அதிரா இணைப்பு அனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteஅதற்குள் 72 கமெண்ட்ஸ்.
ஹா ஹா ஹா நேற்றுக் கும்மி போட கொஞ்ச நேரம் கிடைச்சது போட்டு விட்டோம்..
Deleteமிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
அன்பு அதிரா , உங்கள் யோகா தியானத்துக்கு
ReplyDeleteமேல் வெளிக்காட்சிகள் மிக அழகு.
சீக்கிரம் நிலைமை சரியாகி எல்லா வகுப்புக்கும் போகுமாறு இறைவன் செய்யட்டும்.
பதிவின் வாசகங்கள் உண்மைதான்.
நாம் மிகவும் எதிர்பார்க்கும் நல் வார்த்தைகள்
அன்புமிக உறவுகளிடமிருந்து வராவிட்டால்
மனம் நொந்துதான் போகிறது.
வாங்கோ வல்லிம்மா வாங்கோ..
Deleteநிலைமை மெதுவாகத்தான் சீராகும்.. அதிலும் இப்படி வகுப்புக்கள் லேட்டாகும் என்றே நினைக்கிறேன்... பார்ப்போம்.. இன்றைய நிலையில் இப்போ இதுவோ முக்கியம் என அடிக்க வரப்போகினம் ஹா ஹா ஹா..
//நாம் மிகவும் எதிர்பார்க்கும் நல் வார்த்தைகள்
அன்புமிக உறவுகளிடமிருந்து வராவிட்டால்
மனம் நொந்துதான் போகிறது//
உண்மை வல்லிம்மா.
மிக்க நன்றிகள்.
ரொம்பப் பெரிய பதிவா இருக்கு. யோகா பத்தி நிறையச் சொல்லலாம். மத்தியானமா வரேன். இப்போதைக்கு வந்தேன் என ஒரு பதிவு.
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ..
Delete//யோகா பத்தி நிறையச் சொல்லலாம்//
ஆவ்வ்வ்வ்வ்வ்.. ஹொட் யோகாவும் இருக்குதெல்லோ.. அது இங்கு, கிட்டடியாக இல்லை, அது இன்னும் சூப்பராம்..
நானும் கொஞ்சம் லேட்டா வருகிறேன்.
..முழுக்க முழுக்க ஸ்கொட்டிஸ் மக்களே இருக்கும் நம் ஏரியாவில், யோகா வகுப்பில்... ஓம் சாந்தி... ஓம் சாந்தி..., //
ReplyDelete’ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!’ என்பது ஒருத்தருக்கானதோ, ஒரு சமூகத்திற்கானதோ அல்ல, உலகத்திற்கானது. எங்கும் சாந்தி நிலவட்டும் என்கிறது அந்த உபநிஷத மந்திரம். வேதகாலத்திலேயே இந்த ‘சாந்தி’ முக்கியமானவளாக இருந்திருக்கிறாள்!
வாங்கோ ஏ அண்ணன் வாங்கோ..
Deleteஆவ்வ்வ்வ் சாந்தியைப் பார்த்ததும் களம் இறக்கிட்டீங்கள் ஹா ஹா ஹா..
உலகத்துக்காக நாம் நினைச்சுச் சொன்னாலும் அது தமிழ் வார்த்தைதானே.. சாந்தி என்பது தமிழில் மட்டும்தானே உண்டு, அதை.. அதுவும் ஸ்கொட்டிஸ் இடத்தில் கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது...
ஓம் என்பதை மந்திரமாகப் பாவிக்கிறார்கள், நாம் இலங்கையர்கள் அதை நம் வார்த்தையாகவே தினம் தினம் சொல்கிறோம்.. ஆமா என்பதற்குப் பதிலாக. அதனால இங்கு அதிகமாக “ஓம்” பாவிப்பது அதிராதேன் ஹா ஹா ஹா..
மிக்க நன்றி ஏ அண்ணன்.
ஸாந்தி (ச எனும்போது சரியான உச்சரிப்பு புரியாது) சமஸ்கிருத வார்த்தை. அமைதி என்பது தமிழ்.
Deleteஉபநிஷதத்தில் உள்ளதைச் சொல்லும்போது ஓம் ஸாந்த் திஸ்ஸாந் திஸ்ஸாந்திஹி என்று கொஞ்சம் நீட்டிச் சொல்லுவோம்.
"ஓம்" - இதை மந்திரமாகச் சொல்லணும்னா, ஓஓஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று ஐந்து மாத்திரைகளாவது நீட்டிச் சொல்லணும்.
//"ஓம்" - இதை மந்திரமாகச் சொல்லணும்னா, ஓஓஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று//
Deleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா அடிக்கடி ஓம் எனச் சொல்கிறா:), அதனால அதிக பலன் கிடைச்சிடப்போகுதே:).. எனும் பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஆமையிலதானே இப்பூடி நீட்டிச் சொல்லோணும் என்கிறீங்க நெல்லைத்தமிழன்?:).. ஹா ஹா ஹா, இனிமேல் நான்... ஆராவது வீட்டில கூப்பிட்டால்... “ஓம் வாறேன்”.. எனச் சொல்வதற்குப் பதில்... “ஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வாறேஏஏஏஏஎன்” எனச் சொல்லுவேனாக்கும் ஹா ஹா ஹா...
அது நீங்கள் சொல்வது சரிதான் நெல்லைத்தமிழன், ஆனாலும்.. ஓம் ..... நமக, இப்படியும் மந்திரம் சொல்லுவர் எல்லோ.. கடகட வென ஸ்பீட்டாக... சரி அதையும் விடுங்கோ..
வீட்டில் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எனும் சொல் மட்டும் ரிப்பீட்டில் ஒலிச்சால், வீட்டுக்கு நல்லது என்பினம், எங்கட அப்பா முன்பு எங்கட மூத்தவரை, மடியில இருத்திப் போட்டுச் சொல்லிக் கொடுத்தார்ர்.. கும்பிடும்போது.. ஓஓஓஓஒம்ம்ம்ம்ம்ம் என பலதடவைகள் சொல்லுங்கோ என்று..
நன்றி நெ தமிழன் மீள் வருகைகளுக்கு.. மீண்டும் வருக... விரைவில் வர இருக்கிறது..”திருநெல்வேலி ஸ்பெஷல்”.. ஹா ஹா ஹா இது நமக்குள் இருக்கட்டும்.. அஞ்சுவின் காதுக்கு இப்போ வாணாம்:)) ஹா ஹா ஹா
ஒரு நிமிசத்தில் 80 மீட்டர். ஸ்பீட் ஒரு மணிக்கு 4.5 கி மீ. ஏன் 3 வயசு பேத்தி இதைக்காட்டிலும் ஸ்பீடா நடப்பா. இதுக்கு ஜிம்முக்கு காரில் போய் நடக்கணும்!!!.
ReplyDeleteஆற்றங்கரை கப்பல் போட்டோ நன்று.
அதிரா இணைப்பின் பதில்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
Jayakumar
வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..
Deleteஹா ஹா ஹா ஜிம் க்குப் போய் நடப்பது வெறும் பத்து நிமிடங்கள்தான், ஆனால் அங்குதான் 100 வைகைக்குக் கிட்ட மெஷின்கள் இருக்குதே.. அதில் ஒரு 7,8 இல் மட்டுமே ஒரு நாளைக்கு செய்ய முடியும்.. 2 மணி நேரத்துக்கு மேல செய்ய முடியாது என்னால.. டெய்லி போனால் ஒரு மணி நேரம் செய்தாலே போதும்... மற்றும்படி இங்கத்தைய ரோட்டுக்கள் ஏற்ற இறக்கம் அதிகம், அத்தோடு காலநிலையையும் நம்ப முடியாது.. அப்போ ரோட்டில் நடக்க சாத்தியம் குறைவு..
இங்கு நான் வடகம் எல்லாம் போட்டு எடுத்தேன் ஆனால், இப்போ தொடர்ந்து குளிர்க்குணமாக ஒரு டல் வெதராக இருக்குது, இப்படி எனில் நடக்கவும் முடியாது.
//அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
///
ஹா ஹா ஹா இது பொதுக்கருத்து, நான் சொல்வது, அன்பில்லாதோர்கூட, நம்மோடு அன்பாக இருப்பினமெல்லோ.. அது அவரவரின் ராசிப்பொருத்தங்களைப் பொறுத்து:)) ஹா ஹா ஹா அல்லது நாம் அன்பு காட்டும் ஒருவர் என்றுகூடச் சொல்லலாமே...
அது கண்ணதாசன் அங்கிளின் வசனம்:))
மிக்க நன்றி ஜேகே ஐயா.
/ஸ்பீட் ஒரு மணிக்கு 4.5 கி மீ.// - ஹா ஹா ஹா.
Deleteநான் 6.6 (அதிகபட்சம்) வேகத்தில் ட்ரெட்மில்லில் நடப்பேன். பிறகு அது குறைந்து 6.2-6.4 ஆகிவிட்டது. முதல் இரண்டு நிமிடங்கள் 4.5, மூன்றாவது நிமிடத்தில் 6ஐத் தொட்டுவிடுவேன், பிறகு 6.4ல் ஸ்டெடியாக 40 நிமிடங்கள் (பல வருடங்களுக்கு முன்பெல்லாம் 60 நிமிடங்கள் தொடர்ந்து)
ஒரு தடவை துபாயில் தங்கியிருந்த ஹோட்டல் ஜிம்மில் அப்படி நான் ட்ரெட்மில்லில் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு ரஷ்யன், அருகிலிருந்த ட்ரெட்மில்லில் 11 கி.மீ வேகத்தில் சுமார் 1 மணி நேரம் ஓடினார். எனக்கு மயக்கம் வராத குறைதான்.
//(பல வருடங்களுக்கு முன்பெல்லாம் 60 நிமிடங்கள் தொடர்ந்து)//
Deleteஆவ்வ்வ்வ்வ்வ்வ் .. நான் 5.5 வரை விட்டு ஸ்பீட் வோக் செய்வேன்[20-30 நிமிடங்கள்], ஆனா 6 எனில் நடக்க முடியாது என்னால், ஓட வேண்டும்...
//அருகிலிருந்த ட்ரெட்மில்லில் 11 கி.மீ வேகத்தில் சுமார் 1 மணி நேரம் ஓடினார். எனக்கு மயக்கம் வராத குறைதான்.//
இங்கும் பல லேடீஸ் கூட இப்படிப் பயங்கர ஸ்பீட்டில் ஓடுவார்கள் ஜிம் வந்து... அது ஆராவது ஸ்போர்ட்ஸ் காரர்களுக்கு ஓகே, சாதாரண மக்களுக்கு அப்படி ஓடுவது நல்லதல்ல, ரோட்டில் ஓடலாம், ரெட்மில்லில் கூடாது, முழங்காலைத் தாக்கும்.
நாங்கள், வீட்டுக்கு.. முதல் ட்ரெட்மில் வாங்கியது 2003 இல், அப்பவே நிறைய ஆராய்ந்து கணவர் சொல்லிட்டார்ர்.. ஸ்பீட் வோக் பண்ணுங்கோ, ஓடினால் கூடாது என.. நாம் நம் உடம்பை கொஞ்சம் பேணுவதற்குத்தானே இதனை செய்கிறோம்.. மருதன் ஒடப்போகிறோமா என்ன? ஹா ஹா ஹா..
எங்கள் ஜிம் ட்ரெயினேர்ஸ் சொன்னார்கள்.. ஒவ்வொரு மெசினிலும் குறைந்தது 10 நிமிடங்கள் செய்யுங்கோ.. போகப்போக ஸ்பீட்டை,வெயிட்டை கூட்டினால் போதும் என..
ஆஹா யோகா...
ReplyDeleteநான் ஒன்னு இரண்டு செய்வேன்...ஆனா முழுசா கத்துகிட்டது இல்லயே...
அதே மாதிரி இப்படி ஜிம் க்கு போகணும் ன்னு ஆசை...
நான் walking போற lake எதிர்புறம் ஒரு ஜிம் இருக்கும் அவங்க எல்லாரும் lake பார்த்து ஓட... நான் lake யே ஓடுவேன்😂😂😂😂..
கப்பல் காட்சிகள்...😍😍😍😍⛵⛵
ஊசி குறிப்பு....பல நேரம் மறந்து போகும் உண்மை
வாங்கோ அனு வாங்கோ..
Deleteரோட்டில் நடப்பது சிலசமயம் நன்றாக இருக்கும் சிலசமயம் போரடிக்கும்.. ஆனா ஜிம் எனும்போது, அருகில் இருப்பவரைப் பார்த்தே மனம் போட்டி போட்டு நம்மை இன்னும் செய்யச் சொல்லும்...
எங்கட ஜிம்மில ஒரு ஆச்சி இருக்கிறா.. 70 வயசாவது இருக்கும்... நான் கிட்டத்தட்ட 12 வருடமாக அவவை அங்கு பார்க்கிறேன்... இப்பவும் அதே அழகு, நல்ல ஃபிட்டான சேப் ஆன உடம்பு.. களைக்காமல் செய்வா, புது மெசின்கள் வரும்போது அதிலயும் ஏறி ட்றை பண்ணுவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அவவைப் பார்த்துத்தான் நான் இன்னும் உசாராவேன்:).. ஆனால் அவ டெய்லி வருவா:)).
மிக்க நன்றி அனு.
தேம்ஸ் கப்பல்கள் யாவும் இனிய காட்சி. யோகா எல்லாம் வகுப்புகளுக்குச் செல்லாமல் அவ்வப்போது தேசியத் தொலைக்காட்சியில் பார்த்து, முப்பது செகண்டுகள் முயற்சி செய்து, மூச்சு வாங்கியதும் நிறுத்தி விடுவேன்!
ReplyDeleteவாங்கோ கெள அண்ணன் வாங்கோ..
Delete//யோகா எல்லாம் வகுப்புகளுக்குச் செல்லாமல் அவ்வப்போது தேசியத் தொலைக்காட்சியில் பார்த்து, முப்பது செகண்டுகள் முயற்சி செய்து, மூச்சு வாங்கியதும் நிறுத்தி விடுவேன்!//
ஹா ஹா ஹா நானும் ரிவியில் பார்த்துப் பலதடவை முயன்று விட்டுவிட்டேன் முன்பு, ஆனால் பின்னர் சொன்னார்கள், முதலில் முறைப்படி ஒருவரிடம் பயிற்சி எடுத்த பின்பே நம் பாட்டில் யோகா செய்வது நல்லதென...
அத்தோடு ரிவியில் செய்கிறார்கள் என, நாமும் அப்படியே செய்திடக்கூடாது, நமக்கு முடிஞ்சவரைதான் உடம்பை வளைக்க வேண்டுமாம்.. அதுதான் யோகா இஸ் யுவ பொடி என்கிறார்கள்...
ஆனா உண்மையில் 35 -40 வயசுக்கு மேல் யோகா செய்வது நல்லதே...
மிக்க நன்றி கெள அண்ணன்.
//உண்மையில் 35 -40 வயசுக்கு மேல் யோகா செய்வது நல்லதே...// - நல்லதைச் செய்யும் அதிராவுக்கு வாழ்த்துகள். (ஹா ஹா)
Delete//யோகா இஸ் யுவ பொடி // - கோபால் பல்பொடி தெரியும். இது என்ன யுவ பல்பொடி? (யோகா இஸ் யுவர் பாடி... இதுதான் தமிழன் இங்கிலீஷ் ஹா ஹா)
"நெல்லைத்தமிழன்//
Delete//நல்லதைச் செய்யும் அதிராவுக்கு வாழ்த்துகள். (ஹா ஹா)//
ஹா ஹா ஹா :)) இந்தச் சிரிப்புக்குப் பின்னால என்ன இருக்குது என எனக்குத் தெரியாதோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது நம் மக்களுக்காகச் சொன்னேனாக்கும்:)).. மீ இப்போ சுவீட் 16 லயே ஆரம்பித்திட்டேன் யோகா:))..
அது இங்கு நாங்கள் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐ அழுத்தி உச்சரிப்பதில்லை நெல்லைத்தமிழன்.. அதனால பழகிப்போச்சூஊ... :))
ட்ரெட்மில் வாங்கனும்; அதில் காலையில் எழுந்ததும் தினமும் ஓடனும்னு ஆசை எல்லாம் இருக்கு.
ReplyDeleteஇப்போதைக்கு அது சாத்தியம் இல்லை அக்கா.
இன்னும் ஒரு இரண்டு ஆண்டுகல் பிடிக்கும்.
இப்போதைக்கு முடிந்தது
ப்ராணயாமம் மற்றும் யோகா செய்ய நினைத்தால்
சோம்பல் ஓடிவருகிரதே அக்கா:)))))
வாங்கோ மகேஷ் வாங்கோ..
Deleteஉண்மைதான் இப்போதைக்கு எதுவும் சாத்தியமில்லாமல் இருக்கு.. இங்கு சொல்கிறார்கள், மக்கள் எல்லோரும் வீட்டில் இருப்பதால், ட்ரெட்மில் கூட கடைகளில் முடிஞ்சுபோச்சாம்.. வாங்க முடியாதாம், எந்த ஜிம் உபகரணமும் வாங்க முடியாமல் இருக்கு.. சிலது கிடைச்சாலும் விலை மிக கூடியிருக்கு.
யோகா செய்யுங்கோ மகேஷ். யாராவது நட்போடு/உறவோடு போட்டி போட்டால் செய்ய முடியும், நானும் செய்கிறேன் நீயும் செய்... இன்று இவ்வளவு நேரம் செய்யொணும்.. இப்படி ஹா ஹா ஹா.
மற்றும் வீட்டிலும் சில எக்ஸசைஸ் செய்யலாம் தானே... எங்கள் மகன்களும் அப்படித்தான் செய்கிறார்கள்..
மிக்க நன்றி மஹேஷ்.
எனக்கென்னவோ இந்த ஜிம் போவது என்றாலே கால் வருவதில்லை. என் மகன் கூட "ஏம்மா, இங்கு இருக்கும் ஜிம்முக்கு போகக்கூடாதா? அதற்கும் சேர்த்துதான் மெய்ன்டெனென்ஸ் கட்டுகிறோம்" என்பான். நிலைமை சீராகி, ஜிம் திறக்கட்டும் பார்க்கலாம். யோகா வகுப்பில் ஒளிந்து கொள்வீர்களா? ஹாஹா! ஆனால் அந்த டீச்சர் கில்லாடிதான், கண்டுபிடித்து விட்டாரே?
ReplyDeleteவாங்கோ பானு அக்கா வாங்கோ...
Deleteஹா ஹா ஹா அதானே பில்டிங்களில் இருப்போருக்கு அங்கு ஃபிறீ ஜிம் உண்டுதானே..
ஆனாலும் ஒன்று, எந்த ஒன்றும் காசு கட்டி இணைஞ்சால்தான், நம்மால் ஒழுங்காக செய்ய வரும்.. ஆஆஆஆஆஅ காசைக் கட்டிவிட்டோமே என ஓடுவோம்.. ஃபிறீயாக எது இருந்தாலும்.. ஆஆ நாளைக்குப் போகலாம், ஈவினிங் போகலாம் என விட்டு விடுவோம்.. இது மனிதக் குணம் ஹா ஹா ஹா..
ஆரம்பம் பயத்தில,பின் வரிசையில போய் ஒளிச்சிருந்தேன் பானு அக்கா ஹா ஹா ஹா, எடுத்த எடுப்பில செய்ய வராதெல்லோ:))
மிக்க நன்றி.
https://freetamilebooks.com/ebooks/yogasanam/ இங்கே போய்ப் பாருங்க! யோகாசனம் பற்றி நான் எழுதிய மின்னூல் கிடைக்கும். தமிழில் நீங்க "டி"எல்லோ? அதனால் நல்லாப் புரிஞ்சுக்கலாம். நானும் 2002 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 வருடங்கள் யோகா கற்றுக்கொண்டு (உங்களை மாதிரிக் கண்ணாடி வழியே வெளியே கப்பல் எல்லாம் பார்க்கலை) தொடர்ந்து செய்து வந்தேன். 2014-15 ஆம் ஆண்டில் வந்த sciatic nerve வலி தாங்க முடியாமல், எழுந்திருந்தால் கொஞ்ச நேரம் குனிந்தே தான் நடக்கும்படி இருக்கும். ஆங்கில மருத்துவருக்குத் தெரிஞ்சு விடச் சொல்லிட்டார். ஆனால் அதுக்கப்புறமாத் தான் நடையும் அதிகம் முடியாமல் போய்விட்டது. யோகாவை நிறுத்தி இருக்கக் கூடாது என்பது மாமாவின் கருத்து. மருத்துவரிடம் சொல்லி இருக்கக் கூடாதோனு நினைச்சுப்பேன்.
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ் கீசாக்கா நீங்க யோகா பற்றியும் புக் வெளியிட்டிருக்கிறீங்களோ எனக்கு இது தெரியாதே.... பாருங்கோ அதிரா ஒரு போஸ்ட் போட்டதால பல உண்மைகள் வெளிவருது...
Delete//தமிழில் நீங்க "டி"எல்லோ?// யா யா...இதிலென்ன சந்தேகம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா...
//(உங்களை மாதிரிக் கண்ணாடி வழியே வெளியே கப்பல் எல்லாம் பார்க்கலை)//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது ஜிம் ஆக்க்கும்:))..
//மருத்துவரிடம் சொல்லி இருக்கக் கூடாதோனு நினைச்சுப்பேன்//
அப்படி என்றில்லை, அவர் சொன்னாலும், நீங்கள் உங்கள் யோகா ரீச்சர் ஆரிடமாவதும் அட்வைஸ் கேட்டிருக்கலாம், பல இப்படி வருத்தங்களும், யோகாவால குறைகிறது என்கின்றனர் எல்லோ.. அதில் உண்மை இல்லாமல் இல்லை.. ஆனா டொக்டர் சொன்னது, நோ இருக்கும்போது யோகா செய்யாதீங்கோ என்றிருப்பார்.. அது சரிதானே... நோக நோகச் செய்யக்கூடாது, ஆனா நலமானதும் தொடர்ந்திருக்கலாம் நீங்கள்..
இப்பகூட சின்னச் சின்னப் பயிற்சிகள் செய்யலாமே.
எனக்கும் ஆரம்பம் அடிவயிற்றில் பயங்கர நோ வரத் தொடங்கிட்டுது.. அப்போ கொஞ்ச நாட்கள் ஓய்வு கொடுத்தேன் யோகாவுக்கு.. பின்னர் அது போயே விட்டது..
சொல்ல மறந்திட்டேன் கீசாக்கா, புத்தகம் பார்க்கிறேன் போய்.
Deleteநீங்களும் ட்ரெட்மில் மேலே ஏறி நின்னுட்டு உடல் பயிற்சினு சொல்லிட்டுக் கப்பலை வேடிக்கை பார்த்திருக்கீங்க! நானெல்லாம் ஒரு மணி நேரம் விடாமல் யோகா பண்ணி இருக்கேனாக்கும்! இப்போ உள்ள கால்வலியில் அதை எல்லாம் நினைச்சுக் கூடப்பார்க்க முடியாது. நாங்க திருநெல்வேலி போனப்போ ஒருத்தர் (சித்தராம்) என்னைப் பார்த்துட்டு, அவராகவே, " இந்த அம்மாவுக்கு உடம்பெல்லாம் வலி! எப்படியோ சமாளிச்சுட்டு இருக்கு!" என்றார். மருத்துவமும் செய்யறதாச் சொன்னார். நாங்க பின்னர் சொல்றோம்னு சொல்லிட்டோம்.
ReplyDelete/உடல் பயிற்சினு சொல்லிட்டுக் கப்பலை வேடிக்கை பார்த்திருக்கீங்க!// - ட்ரெட்மில்ல, நான் சில சமயத்தில், பத்து நிமிட இடைவெளி விட்டு, மூன்று மணி நேரம்லாம் நடந்திருக்கிறேன். (7 வருடங்கள் முன்பு). பின்பு அது தவறு என்று உணர்ந்திருக்கிறேன். ட்ரெட்மில்ல நடக்கும்போது மனசு வேற எதிலாவது இருந்தால்தான் நடக்கமுடியும். சும்மா நேரத்தையே பார்த்துக்கொண்டிருந்தால் போதும்னு தோணிடும்.
Delete// நானெல்லாம் ஒரு மணி நேரம் விடாமல் யோகா பண்ணி இருக்கேனாக்கும்! //
Deleteகிளாஸ் போனால் ஒருமணி நேரம் செய்கிறோம் கீசாக்கா, வீட்டில் அப்படி முடிவதில்லை, உடம்பும் மனமும் இடம் கொடுக்குது ஆனா போறிங்கா வந்திடுது....
//ட்ரெட்மில்ல நடக்கும்போது மனசு வேற எதிலாவது இருந்தால்தான் நடக்கமுடியும். சும்மா நேரத்தையே பார்த்துக்கொண்டிருந்தால் போதும்னு தோணிடும்.//
Deleteஹா ஹா ஹா உண்மை நெல்லைத்தமிழன், அதனாலதான் ஜிம் போகிறோம்.. வீட்டு ட்ரெட்மில்லில் ரிவி பார்த்தபடி செய்தாலும்.. 10 நிமிடம் செய்தாலே.. கீழே குதி கீழே குதி போதும் என மனம் சொல்லுது ஹா ஹா ஹா...
சில விசயங்களுக்கு ஆட்கள் வேணும்.. ஜிம்மில எனில், பக்கத்தில இருப்பவர் இன்னும் செய்கிறாரே, அப்போ நானும் இன்னும் கொஞ்சம் செய்வோமே என்றெல்லாம் மனம் நினைக்கும்:))
நாட்டியத்தின் முத்திரைகளை வைச்சே பிரபல நாட்டியக் கலைஞர் சந்திரலேகா என்பவர் ஓர் நாட்டியப் பயிற்சியை ஏற்படுத்திக் கற்றுக் கொடுத்து வந்தார். பெரும்பாலான நடனமணிகள் அதை ஏற்கவில்லை. ஆனாலும் அவர் உடல் வளைவும், செய்யும் யோகாசன நிலையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
ReplyDeleteஓ.. இப்படி எத்தனையோ பயிற்சிகள் இருக்குதுதான்.. இங்கு இப்படி உடற்பயிற்சிக்கென டான்ஸ் உண்டு...
Deleteநமக்கு எது பிடிக்குதோ அதைத் தொடர்ந்தால் நல்லதே.
மிக்க நன்றிகள் கீசாக்கா.
ஆ....இந்த பாட்டு கனகாலத்துக்கு பிறகு. கேட்கிறேன். என்னா முழி முழிக்கிறா பூஸார். உங்களை மாதிரி இருக்கு. ஹா..ஹா..ஹா
ReplyDeleteஅதிரா இணைப்பு சூப்பர் உண்மைதான். அளவுக்கு அதிகமா அன்பு வைக்கப்படாது. வைத்தால் சின்ன முகச்சுழிப்பு வந்தால் கூட தாங்கமுடியாது.
யாருடனும் மனத்தாங்கல் படாமல் நல்லவிதமா உறைவை பேணி போவதே நல்லது.இப்ப இருக்கிற நிலமை அதைதான் உணர்த்துகிறது. யாருக்கு என்ன நடக்கும் என தெரியாது. இல்லாத போது வருந்தவேண்டாமே. ஊசி இணைப்புக்கு சொன்னேன்.
இங்கும் யோகா நல்ல பிரபல்யமா வந்துவிட்டது. வகுப்புகளும் நடக்கிறது. ஜிம் கேட்கவே வேணாம். நிறைய இருக்கு. நானும் கேட்டேன். மகன் சிரித்துவிட்டு சொன்னார், அம்மா நீங்க நடந்தால் மட்டும் போது. என்கிறார். அதனால் அந்த ஆசை விட்டாயிற்று. ஒன்லி மெடிடேஷன். அதிலே நிறைய பலன் கண்டாச்சு.
உங்க ஜிம் இடம் சூப்பர்.. உடம்புக்கு பயிற்சியோடு மனதுக்கும் புத்துணர்வா இருக்கும். சூப்ப்ப்பர் . அழகாஆஆஆ இருக்கு. 5ம் படம் காரிலிருந்து எடுத்த மாதிரி இருக்கு.
சின்ன போஸ்ட்க்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
cat tread mill இதை பார்த்தபோது எங்க வீட்டு ரோஸி நூல்கண்டோடு விளையாடுவா. அப்போ யோசிச்சிபார்ப்பேன் இங்கு இருந்தா டொய்லட் பேப்பர் ரோல் எல்லாம் விளையாடி குழப்பிவைப்பா என. ஹா..ஹா..ஹா.
வாங்கோ அம்முலு வாங்கோ..
Delete// என்னா முழி முழிக்கிறா பூஸார். உங்களை மாதிரி இருக்கு. ஹா..ஹா..ஹா//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா...
//அளவுக்கு அதிகமா அன்பு வைக்கப்படாது.//
இப்பூடித்தான் பல பொன்மொழிகள் எனும் பெயரில உலா வருகுது அம்முலு, ஆனா அது தப்பானது என்பது என் கருத்து... அன்பு எனில்.. அது தானாக வருவது.. அதை எப்படி அளந்து செலுத்த முடியும்.. பழகுவதை வேணுமெனில் குறைக்கலாமே தவிர, அன்பு என்பது நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது என் கருத்து.
//ஒன்லி மெடிடேஷன். அதிலே நிறைய பலன் கண்டாச்சு.//
ஆஆஆஆஆஆஆ அப்படியோ? உங்களைப் பார்த்தால் மெடிரேஷன் செய்பவர்போலத் தெரியல்லியே:) ஹா ஹா ஹா
//5ம் படம் காரிலிருந்து எடுத்த மாதிரி இருக்கு.//
இல்லை அம்முலு அது எல்லாம் ஜிம் இல் இருக்கும் மெசின்கள்தான் தெரியுது... இதில் காரிலிருந்து எடுத்த படம் ஏதுமில்லை.
மிக்க ந்ன்றி அம்முலு.
அதிரா ஜிம் செண்டர் நன்றாக இருக்கிறதே. ரொம்ப அட்வான்ஸ்ட் இல்லையா? ஆற்றங்கரை மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் ஊரே அழகாக இருக்கும் என்று படங்களில் இருந்து தெரியும்.
ReplyDeleteஇரு மாதங்கள் யோகா ஆசிரியர் வீட்டிற்கு வந்து யோகா வகுப்பு எடுத்தார். அதன் பின் இப்போது வீட்டில் தினமும் செய்கிற்ன். ஜிம் எல்லாம் இங்கு நாங்கள் இருக்கும் பகுதியில் இல்லை. யோகா மிகவும் நல்லது.
ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாமே வழக்கம் போல் ரசித்தேன்.
துளசிதரன்
வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. நீண்ட நாட்களின் பின்பு இங்கு பார்க்கிறேன் மகிழ்ச்சி.
Delete//உங்கள் ஊரே அழகாக இருக்கும் என்று படங்களில் இருந்து தெரியும்.//
உண்மைதான் நன்றி.. ஆறும் மலையும் இருந்தாலே ஊர் அழகுதான்.. அதிலும் இங்கு சுத்தமும் சேர்வதால்தான் அதிக அழகு துளசி அண்ணன்.
ஓ அங்கு எல்லோரும் வீட்டுக்குக் கூப்பிட்டுப் பழகுகிறீங்கள் போலும் நெ தமிழனும் அதையே சொல்லியிருக்கிறார்...
நீங்கள் இப்பவும் யோகாவைத் தொடர்வது நல்லது... மகிழ்ச்சி..
மிக்க நன்றிகள் துளசி அண்ணன்.
அதிரா பேக் டு வலை.
ReplyDeleteஓ பிஞ்சு ஞானி!!!! ஹா ஹா ஹா
அடுத்து பிஞ்சு யோகா ரீச்சரா?!! முதல்ல யோகா ரீச்சர் அப்புறம் தானே ஞானின்னு வந்திருக்கோணும்!! இதென்ன மாத்தி!! ஹா ஹா ஹா ஹா
கீதா
ஆஆ கீதா வாங்கோ வாங்கோ.. இப்போ காணாமல் போவதும் வருவதும் உங்களுக்குப் பழகிப் போச்ச்ச்ச்:)).. எங்களுக்கும்தான் ஹா ஹா ஹா... நானும் இப்படித்தான் அடிக்கடி காணாமல் போய் விளையாடி எல்லோரையும் பழக்கப் போகிறேன்:))..
Deleteஞானம் பிறந்தபின்புதான் கீதா.. எல்லாமுமே வருது ஹா ஹா ஹா..
உங்க ஊரு ஆற்றங்கரை மீது எனக்கு கண்! என்ன அழகு. அந்தப் பக்கம் மலை போல பகுதி...அழகான படங்கள் அதில் ஒரு கப்பலும் போகுது ரசித்தேன்
ReplyDeleteநான் ஜிம் சென்றதில்லை ஆனால் யொகாதான். வீட்டில் ரெகுலராகச் செய்வதுண்டு. இடையில் சில வலிகள் வரும் போது செய்வதில்லை. யோகாவில் குறிப்பாக மூச்சுப்பயிற்சி அதை விடுவதில்லை. நடைப்பயிற்சி அதுவும் விடுவதில்லை
நீங்க யோகா ஜிம் எல்லாம் செய்வது நல்ல விஷயம்.
கீதா
//இடையில் சில வலிகள் வரும் போது செய்வதில்லை//
Deleteஅப்படித்தான் சொல்கிறார்கள் கீதா, நிறுத்திப் பின் தொடர வேண்டுமென.
//யோகாவில் குறிப்பாக மூச்சுப்பயிற்சி அதை விடுவதில்லை.//
இதைத்தான் நான் ஒழுங்காகச் செய்வதில்லை.... அதை ஒழுங்காக செய்யப் பழகோணும்..
உங்க ஊர் ஜிம் அசத்தல். நல்ல டைம் பாஸ் நு நினைக்கிறேன் ஹா ஹாஹ் ஆ சினிமா எல்லாம் வருதே!! ஹிஹி
ReplyDeleteஊஇ,சூப்பர்.
அதிரா இணைப்பு செம...அதே அதே என்று ஹைஃபைவ் தட்டுவேன்!! உண்மைதான்...
வ்டகங்கள் 16ம் பார்த்தேன் நல்லா இருக்கு ஆனா வரலாறு இன்னும் வாசிக்கவில்லை ஹிஹிஹி...வாசிக்கிறேன்.
நெட் ரொம்ப ஸ்லோ...பழைய பதிவுகள் பதில்கள் பார்த்தேன் அதிரா. ஆனா மீண்டும் வம்பு செய்ய முடியலை!!!!!!!!!! ரொம்ப லேட்டு அப்புறம் வலை வருவதாற்கான ப்ராக்ட்டிக்கல் பிரச்சனைகள் ..அதான்.
கீதா
ஹா ஹா ஹா சுவரிலே பெரிய பெரிய ரிவிகள் ஓடும் கீதா, அதைவிட இப்படி மெசினில் குட்டிக் குட்டி ஸ்கிறீன் இருக்குது, அதில் விரும்பிய ஷனலை செலக்ட் பண்ணிப் பார்க்கலாம்..
Deleteஅதனாலென்ன கீதா, முடிந்ததுக்கு வரோணும் என்றில்லை, புதுப்போஸ்ட்டுக்களுக்கு முடியும்போது வாங்கோ.. மிக்க நன்றிகள் கீதா.
வணக்கம் சகோதரி
ReplyDeleteயோகா பதிவு அருமை.நீங்கள் யோகா ஜிம் என அனைத்து உடற் பயிற்சி வகுப்புகளுக்கும் சென்று வருவது குறித்து சந்தோஷம். அந்த ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் ஜிம் வகுப்புகள் மிகவும் ரசிக்கத்தக்கதாக உள்ளது. தினமும் இயற்கையை ரசித்தபடி உடற்பயிற்சி செய்யும் போது களைப்பு தெரியாது. கப்பல் படங்கள், இயற்கை வனப்புடன் இருக்கும் ஆற்றங்கரை படங்கள் மிக அழகாக எடுத்துள்ளீர்கள். கப்பலை திருத்தும் கப்பல் என்றால், ஒரு கப்பலின் பாதிக்கப்பட்ட இயந்திரத்தை சரி செய்யும் கப்பலா? படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது.
நான் இதெல்லாம் செய்ததே இல்லை. ஜிம்முக்கும் சென்றதில்லை. வழக்கப்படி காலையிலிருந்து ஒவ்வொரு வேலைகளுடன், ஒவ்வொரு வேளைகளும், காற்றாக ஜம்மென பறந்தபடி இருக்கிறது. என் குழந்தைகள் ஒரு காலத்தில், ஒவ்வொரு இடத்திலும் பத்து, பதினைந்து என ரூபாய் கட்டி சென்று வந்தார்கள். இப்போது அவர்களாலும் செல்ல இயலவில்லை. ஆனால் ஆர்வமிருந்தால் கண்டிப்பாக இதில் விடாமல் ஈடுபட முடியும். அத்தியாவசியமும் கூட. வாரம் ஒரு முறை குடும்பத்தினருடன் காலாற நடந்து விட்டு வருவேன். இப்போ இரு மாதங்களாக அதற்கும் தடை. இதெல்லாம் என்னால் முடியவில்லையே எனக்கும் எப்பவாவது வருத்தம் வந்து பின் போய் விடும் ஹா.ஹா
ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு இரண்டுமே அருமை. அதிராவின் அழகான எழுத்துக்களில், எழுதப்பட்ட வாக்கியங்கள் உண்மை.மிகவும் அன்பாக நாம் நினைப்பவர்களிடம் ஒரு பேச்சு கேட்டு விட்டால், மனம் விழுந்துதான் போகிறது. அழகாக சொல்லியுள்ளீர்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நேற்றைய பதிவிலும் அனைத்து வடாகங்களும் மிக அழகாக இருந்தன.மிகவும் பொறுமையாக வடாம், இட்டு அதை பொரித்தும் காட்டிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மற்றும் உருளை. கி பூரி, அனைத்துமே படங்களுடன் சிறப்பாக இருந்தன. அதனுடைய கருத்துக்களையும் இங்கேயே தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வாரம் முழுமையும் என்னால் பதிவுகளுக்கு உடனடியாக வந்து கருத்திட இயலவில்லை. அதனால் எல்லோர் பதிவுக்கும் தாமதமாகத்தான் செல்கிறேன். அடுத்த வாரம் அனைத்தும் சரியாகி விடுமென நம்புகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா...வாங்கோ...
Deleteஉங்கள் கொமெண்ட்டை முடிஞ்சால், 2,3 ஆகப் பிரித்துப் போட்டால், பதில் போட நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம், பறவாயில்லை உங்கள் வசதிபோல போடுங்கோ.
//கப்பலை திருத்தும் கப்பல் என்றால், ஒரு கப்பலின் பாதிக்கப்பட்ட இயந்திரத்தை சரி செய்யும் கப்பலா?//
அதே அதே.. ஹா ஹா ஹா சரியாகத் தெரியவில்லை.. அப்படித்தான் இருக்கோணும் ..
ஊரில் வீட்டு வேலைகள் செய்தாலே வியர்க்கும்.. அதுவே போதும்.. இங்கு அப்படி எதுவும் இல்லை, வீட்டு வேலைகள் நாம் தான் இங்கு செய்கிறோம் இருப்பினும் அது உடல் அசைப்பது போதாது.. அதனாலதான் இந்த ஜிம்.. மற்றும் உடம்புக்கு மட்டுமில்லை மனதுக்கும் புத்துணர்வு கிடைக்குது.
நீங்கள் நடப்பது நல்ல விசயம்.. அதென்ன வாரம் ஒருமுறை கர்:)).. டெய்லி வீட்டைச் சுத்திக் கொஞ்சம் நடவுங்கோ.
//அதனுடைய கருத்துக்களையும் இங்கேயே தெரிவித்துக் கொள்கிறேன்.
//
ஓ நீங்கள் அதுக்கு வரவில்லையோ.. வந்திட்டீங்கள் என நினைச்சிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆஆஆ ஹா ஹா ஹா பறவாயில்லை அதனாலென்ன... சிலசமயம் வரமுடிவதில்லைத்தான்..
மிக்க நன்றிகள் கமலாக்கா..
வணக்கம் அதிரா சகோதரி
Deleteசென்ற பதிவுக்கும் வந்தேன். ரசித்தேன். கருத்து தந்தேன்.ஆனால் வழக்கம் போல் விரிவாக (நெட் உபத்திரவம்) கருத்துக்"கள்" தர இயலவில்லை. அதற்குள் உங்களின் மறு போஸ்ட் கண்டு இங்கேயே அதற்கும் மறுபடி ஒரு கருத்துரை. ஹா ஹா.
உங்களின் ஆலோசனைபடி இனி நடக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஆஆஆ கமலாக்கா திரும்படியும் வருகை தந்திருக்கிறா.. வாங்கோ ..
Delete////சென்ற பதிவுக்கும் வந்தேன். ரசித்தேன். கருத்து தந்தேன்//
அதுதானே பார்த்தேன், போனதடவை நீங்கள் ஏழியாகவே வந்த நினைவு எனக்கு... ஆனா இதிலிருந்து ஒன்று தெரியுது எனக்கு:)).. போன போஸ்ட் பற்றி, இந்தப் போஸ்ட்டிலும் பேசுறீங்கள் எனில், அவ்ளோ சூப்பராக அதிரா வடகம் எல்லாம் செய்திருக்கிறேன் என அர்த்தமாக்கும் ஹா ஹா ஹா..[இந்தக் காலத்தில நம்மள நாமளேதேன் புகழோணுமாக்கும்:)].
ஆஆஆஆ மறந்து போனேன், உங்கட ஒரு டிஸ் செய்தேன், சூப்பராக வந்தது, படம் இணைக்க மறந்துபோனேன்.. விரைவில் இணைக்கிறேன்...
ஜிம் அசத்தலாக இருக்கிறது. யோகாவும் உடற்பயிற்சியும் நன்று.
ReplyDeleteபூசாருக்கான ட்ரெட்மில் - :)
ஊசிக்குறிப்பு இணைப்புகள் நன்று.
தொடரட்டும் பதிவுகள்.
வாங்கோ வெங்கட் வாங்கோ..
Deleteமிக்க நன்றிகள்..
அதிராவின் இணைப்பு மிகவும் அருமை!
ReplyDeleteஜிம்மிலிருந்து தெரியும் காட்சிகள் மிகவும் அழகு! இந்தக்காட்சிகளை பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்தால் உடல் களைப்பே தெரியாது!
வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. நலம்தானே..
Deleteஉண்மைதான் நேரம் போவது தெரியாது.. மிக்க நன்றிகள் மனோ அக்கா.
’அதிரா இணைப்பு’ என்பதைப் படித்ததும், பின்னூட்டமிட ஓடோடி வந்துள்ளேன். அன்புள்ள இடத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கடுகளவேயான இந்தப் பின்னூட்டத்தை, தயவுசெய்து மலையளவாகவோ அல்லது மிகப்பெரிய பூசணிக்காயாகவோ நினைத்து ஏற்றுக்கொள்ளுங்கோ.
ReplyDelete