நல்வரவு_()_

போன போஸ்ட்டில், கமலாக்காவும், அம்முலுவும் அறிமுகப் படுத்திய பாடல் இது,
கேட்டேன் என்னா ஒரு அழகுப்பாட்டு..
இப்போஸ்ட்டுக்குப் பொருந்துமே எனப் போட்டேன்ன்

Tuesday, 11 May 2010

எனக்குப் பொழுது போகவில்லை:):)

நிலவுக்கு எசப்பாட்டு.... சூரிய அஸ்தமணம்.... சீ இதென்ன இது, அஸ்தமனம்..
இரவு 9..9.30 மணிபோல் எடுத்தேன்... சூடு ஆறமுன்....


பாருங்கோ... பாருங்கோ... இவர்தான் எங்கட “சூஊஊஊரியன்”
சூப்பரா இருக்கு இல்ல???? (எனக்கு நானே சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்.. :)..)ஹைஷ் அண்ணன், ஜீனோ சூரியனை, சன்னைக் காணவில்லை எனக் கேட்டதனால், காவல் இருந்து, இன்று இரவு எடுத்தேன்... மலையில் மறையமுன் ஒரு கிளிக்க்க்..


என்னைக் கண்ட:) நாணத்தால் மலையின் பின் மறைகிறார்...


முகிலை இழுத்துப் போர்த்துக்கொள்கிறார்....
பின் இணைப்பு:
நாங்களெல்லாம் பேபியாக இருக்கும்போதே... எவ்ளோ பாரத்தையும் தாங்குவோம்.. சிரித்தமுகத்தோடு.. சுமைதாங்கீஈஈஈஈஈஈஈ.

*******************************
இயற்கை வனப்பை வர்ணிக்கும்போது
இயல்பாகவே கவிதை உருவாகி விடுகிறது
*******************************

39 comments :

 1. ஹா ஹா புஸாரும், அவஙக் தல மேல உள்ள கோழி குட்டியும் ரொமப் கியுட்,

  ஆ சின்ன வயதில் இது போல் வீட்டில் கோழி குட்டிகள் வளர்த்து அது தத்தி தத்தி ஓடியது நினைவுக்கு வருதே

  ReplyDelete
 2. தொடுவானம்தானே இருக்கு அதில் தொட்டுக் கொண்டு இருக்கிற சூரியன் எங்கே???

  பி.கு: பூஸூக்குட்டி என்ன லஞ்சை தலைக்கு மேலே எடுத்து போகுதோ??

  ReplyDelete
 3. அடிரா அக்கா..வாட் இஸ் திஸ்? சன் காணவே காணோம்???!!!
  ஜீனோ லைக்ஸ் தி செகன்ட் போட்டோ வெறிமச் யா..க்யூட் க்ளிக்!! மேல வைங்கோ!

  ReplyDelete
 4. மிக்க நன்றி இலா.

  ReplyDelete
 5. ஜலீலாக்கா எங்கே போயிருந்தீங்கள் காணவில்லையே சில நாளாக பிசியோ?

  கோழிக்குட்டி இல்லை ஜலீலாக்க்கா குஞ்சு... பூஸார்தான் குட்டி... எனக்கும் கோழிக்குஞ்சென்றால் சரியான விருப்பம். இரவில் படுக்கும்போது பார்க்க முட்டையாக இருக்கும், சிறு ஓட்டை வந்திருக்கும், காலையில் ஓடிப்போனால் கீச் கீச் என 3,4 பேர் கத்திக்கொண்டிருப்பினம்..... மிக்க நன்றி ஜலீலாக்கா.

  ReplyDelete
 6. ஹைஷ் அண்ணன்..///தொடுவானம்தானே இருக்கு அதில் தொட்டுக் கொண்டு இருக்கிற சூரியன் எங்கே???/// இப்பூடி எல்லாம் கேட்பீங்களெனத் தெரிஞ்சுதான்... சூரியன் என எழுத்திலும் போட்டேன்.... போட்டும் தெரியேல்லையோ?
  மலை தெரியுதோ? கப்பல் நிற்பது தெரியுதோ? எங்கள் எதிர்வீடு தெரியுதோ? முன் மரங்கள் தெரியுதோ? மஞ்சள் வானம் தெரியுதோ????? இவ்வளவும் தெரிந்தால் ஏன் சூரியன் மட்டும் தெரியேல்லை உங்களுக்கு???? வடிவாப்பாருங்கோ ஹைஷ் அண்ணன்.


  பி.கு: பூஸூக்குட்டி என்ன லஞ்சை தலைக்கு மேலே எடுத்து போகுதோ?? /// ஹா....ஹா....ஹா... கிக்..கிக்...கீஈஈஈ.... காக்கா போங்கோ.....

  எவ்வளவு லெவலாக சுமைதாங்கி எண்டெல்லாம் போட்டிருக்கிறன் இதை விட்டுப்போட்டு பப்ளிக்கில இப்படிக்கேட்டு..... :):):):) * 19

  மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்.

  ReplyDelete
 7. ஜீனோ.. தம்பி ஜீனோ... ஹைஷ் அண்ணனுக்குச் சொன்னதில முதலாவது பந்தியை ரிப்பீட்டூஊஊஊஊஊஊஊஊஊஊ:):)..
  அல்லது சன் எண்டால் மகன் எண்டுதானே அர்த்தம்... ஆற்ற மகனைப் பற்றிக் கேட்டனீங்கள்?? அக்காவுக்கு ஒரே குயப்பமாக இருக்கு.

  மிக்க நன்றி ஜீனோ... மேலே வைக்கிறேன்.. ஜீனோ கேட்டதுக்காக சுவீட்டாக... என்ன போடலாம் என சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.. அதுவும் விரைவில் வெளி..... ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 8. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்...தம்மாதுண்டு கோழி குஞ்சை சுமந்து கொண்டு அதீஸின் அலட்டலைப்பாரு..?நீங்கள் கிளிக்கிய படங்கள் அழகோ அழகு.பேசாமல் ஒருபுகைப்படகண்காட்சி வைத்துவிடுங்கோ.அப்படியே அப் அண்ட் டவுண் டிக்கெட்டும் அனுப்பி வையுங்கோ.நானு பார்த்துடுறேன்.

  ReplyDelete
 9. அதீஸ் உங்கட ஏரியா?நீங்களே இந்த ஏரியை குத்தகைக்கு எடுத்து விட்டீர்களா?

  ReplyDelete
 10. //இரவு 9..9.30 மணிபோல் எடுத்தேன்... சூடு ஆறமுன்..//உங்கட நாட்டில் எத்தனை மணிக்கு சூடு ஆறும்??உங்கட நாட்டைப்பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்.குத்தகைக்கு எடுத்த ஏரியையையே திருப்பி திருப்பி படம் காட்டாமல் ஆங்காங்கே சுற்றிப்பார்த்து கெதியா படம் போடுங்கோ..உங்கட ஊர் சாலை,மார்க்கெட்,ஷாப்பிங்மால்.பார்க்,பீச் இப்படி..ஒகேவா?

  ReplyDelete
 11. க்யூட் குட்டீஸ்.
  க்யூட் படங்கள்.
  க்யூட் கொமண்ட்ஸ்.
  மொத்தத்தில்...
  ஒரு க்யூட் பொழுது. ;)

  ReplyDelete
 12. படங்கள் அருமை...சூப்பர்ப்....

  ReplyDelete
 13. ஸாதிகா அக்கா... எவ்ளோ சிம்பிளாகச் சொல்லிட்டீங்கள்... கோழிக்குஞ்சை சுமந்த பூஸ்குட்டிக்குத்தான் தெரியும் எவ்ளோ பாரமென...

  //அப் அண்ட் டவுண் டிக்கெட்டும் // இப்படியும் ஒரு ரிக்கெட் இருக்கோ ஸாதிகா அக்கா?:), கேட்டுப்பார்க்கிறேன் கிடைத்தால் அனுப்புறேன்... குரோசரிக் கடையில இருக்குமோ??:):, உங்களுக்கிலாததோ?.

  ஸாதிகா அக்கா, மார்கட், மோல் எல்லாம் எல்லா இடத்திலயும் இருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தானே எல்லாநாட்டிலும் இருக்கு. ஆனால் இயற்கைக் காட்சி என்பது எல்லா இடத்திலும் கிடைக்காதெல்லோ... அதுதான் இப்பூடி..., என் பிகாசா அல்பம் பாருங்கோ அதில் சுற்றாடல் ஓரளவு தெரியும்.

  இப்போ இங்கு 9.30 க்கு தான் சூரியன்பிள்ளை மறைகிறார்... அதிகாலை 4 மணிக்கெல்லாம் வந்திடுவார். நேற்று ராத்திரி கேர்டினில் கொஞ்சம் இடைவெளி இருந்துவிட்டது, அதனூடாக வெயில் முகத்தில் அடிக்கவே விடிஞ்சிட்டுதோ எனப் பார்த்தேன் அப்பத்தான் 4.10, வடிவாப்போர்த்துக்கொண்டு படுத்திட்டேன்.

  ஓகஸ்ட்டில் 11.30 வரை சூரியன் இருக்கும் அதிகாலை 3.30 க்கு வந்துவிடுவார் மீண்டும், அந்தக்காலத்தில் நாம் இருட்டைப்பார்ப்பது குறைவே... உஸ் அப்பாடா... நாட்டைப் பற்றி எழுண்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன். முடிகிறபோதெல்லாம் படங்கள் எடுத்துப்போடுறேன் ஸாதிகா அக்கா, எனக்கென்ன பயமென்றால் யாருக்கும் போறிங் வந்திடப்படாதே என்பதுதான்.. மிக்க நன்றி.

  ஜெய்..லானி.... பதிவு படித்தேன் இப்போ காணவில்லையே????

  ReplyDelete
 14. ஆ... இயற்கையைப் பார்த்து இமாவுக்கு கவிதை வந்திட்டுதூஊஊஊஊஊஊஊஊஉ... மிக்க நன்றி இமா(கவிஞை).

  ReplyDelete
 15. மிக்க நன்றி கீதாச்சல்.

  ReplyDelete
 16. ஹைஷ் அண்ணன், ஜீனோ.... உங்களுக்காக இன்று படமெடுத்து “சூரியன் ப்பிரதரை” இணைத்திருக்கிறேன்... பார்த்திட்டு சும்மா போனால்.. நாளைக்கு உங்களுக்கு சூரியன் தெரியாதூஊஊஊஊஊஊஊஊஊ

  ReplyDelete
 17. அதீஸ், படங்கள் கொள்ளை அழகு. கனடாவிலும் உப்புடி தான் இரவு 9. 30 க்கும் சூரியன் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கும்.


  //எனக்குப் பொழுது போகவில்லை:):) //
  நான் இமாவுக்கு எழுதி copy ரைட்ஸ் தொடக்கம் எல்லாம் வாங்கி வைச்ச தலைப்பு இது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

  உங்கட ஊர் சூரியனை விட எங்கட ஊர் சூரியன் அழகு. சரி முறைக்கப் படாது.

  ReplyDelete
 18. //பார்த்திட்டு சும்மா போனால்..// பார்த்தாச்!! ச்சும்மா அல்லாம் போல அதிராக்கா..ஜீனோவிண்ட காவி பர்முடாஸ் உங்கட கண்ணுக்குத் தெரியலையாஆ..ஆ..ஆ?

  ReplyDelete
 19. அதிரா.. முதலில் இருக்கும் படங்கள் ஏன் இந்தக் கலரில் இருக்கின்றன? க்ரேயான் படங்களைக் காட்டி ஏமாத்தவில்லையே? :)))))))

  சும்மா சொன்னேன் அதீஸ்.. நான் பார்த்து ரசித்த அதே வ்யூ தான்.. இப்போ சன் செட்டாகிக் கொண்டிருக்கும் போது ரொம்பவே அழகாகவும் கலர்ஃபுல்லாகவும் இருக்கு.. தலைப்பு ரொம்பவே பிடித்திருக்கு அதிரா.. எங்களுக்கும் தான் போகவில்லை பொழுது :))

  லன்ச் எப்படி இருந்தது அதிரா? :))

  ReplyDelete
 20. //உங்கட ஊர் சூரியனை விட எங்கட ஊர் சூரியன் அழகு.//

  ஹாஹ்ஹா.. நானும் ரிப்பீட்டு.. அதுக்குக் காரணம் - எங்க அழகான கண்களும் கண் பார்வையும் தான்.. முறைக்காதீங்க அதீஸ்.. ஓடிடறோம்..

  ReplyDelete
 21. "இது ஒரு பொன்மாலைப் பொழுது
  வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்"
  இந்த பாட்டுதான் என‌க்கு ஞாபகம் வருகிறது அதிரா.
  சூப்ப்ப்ப்ப்பரா இருக்கு.

  "சுமைதாங்கியே நின்று விழுகின்றது.
  பாவம் சுமைதாங்க முடியாமல் அழுகின்றது."
  சிச்சுவேஷன் சோங்தான் நினைவு வருகுது அதி.
  தாங்ஸ் பப்பி)

  ReplyDelete
 22. //ஜெய்..லானி.... பதிவு படித்தேன் இப்போ காணவில்லையே????///

  வேற ஒன்றை டெலிட் பண்ணும் போது மாறிப்போச்சி வேற ஒன்னுமில்லை.


  அழகான படங்கள் . ரெண்டு நாளா நிலாவை தேடி அலையிறேன் கண்ணுலயே மாட்ட மாட்டுதே. ஏங்க அமாவாசைக்கு நிலா வராதா ??.

  ReplyDelete
 23. கவித...கவித....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  கடைசி மூனு படம் முதல்ல வரனும் , அப்பதான் சின்டக்ஸ் எர்ரர் வராது.

  ReplyDelete
 24. வாணி... முடியேல்லை நேரம் கிடைக்கவே மட்டுதாம்..எனக்கு.

  நான் இமாவுக்கு எழுதி copy ரைட்ஸ் தொடக்கம் எல்லாம் வாங்கி வைச்ச தலைப்பு இது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....../// காக்கா போகோணும் வாணி ஓக்கை?

  உங்கட ஊர் சூரியனை விட எங்கட ஊர் சூரியன் அழகு//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், திரும்பவும் உங்கட எங்கட என பிரிச்சுப்பேசிக்கொண்டு.... நான் சொன்னனானெல்லோ எதையும் பிரிச்சுப்பேசப்படாதென.... அதாவது உங்கட டொமார் எங்களுக்கும் டொமார்தான்:)... சரி சரி கர்ர்ர்ர் வேண்டாம்.. மிக்க நன்றி.

  ReplyDelete
 25. ஜீனோவிண்ட காவி பர்முடாஸ் உங்கட கண்ணுக்குத் தெரியலையாஆ..ஆ..ஆ? /// தெரியுது தெரியுது எல்லாம் தெரியுது. ஜீனோ அப்போ உங்களுக்கு சூரியன் தெரியும், “அவருக்கு” சூரியன் தெரியாது, ஒருவேளை நிலவு தெரிஞ்சால் போதுமாக்கும் இட்ஸ் ஓக்கை,. முடிந்தால் உங்க நாட்டு சூரியனை போட்டுத் தொடருங்கோவன் ஜீனோ இதை.

  ReplyDelete
 26. அதிரா.. முதலில் இருக்கும் படங்கள் ஏன் இந்தக் கலரில் இருக்கின்றன/// சந்து எங்களுக்கு சில நாட்களில் இப்படித்தான் ஒரு சொல்லமுடியாத அழகாக இருக்கும். நான் கவனிக்கவில்லை கணவர்தான் வானத்தைக் காட்டினார் உடனே ஓடிப்போய் கமெராவை எடுத்திட்டேன்ன்ன்.

  எங்களுக்கும் தான் போகவில்லை பொழுது :))// போகவில்லையோ? அப்போ இன்னும் கொஞ்சம் போட்டு அலுக்க வைத்திட வேண்டியதுதான்.. ஆகா ஆள் கிடைச்சிட்டார் எனக்கு....படம் போட்டுக்காட்ட...

  லன்ச் எப்படி இருந்தது அதிரா? :)) /// நீங்களுமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

  முறைக்காதீங்க அதீஸ்.. ஓடிடறோம்.. /// உந்தப் பயம் எப்பவும் இருக்கோணும்..ஹக்..ஹக்..ஹாஆஆஆ அதிராவோ கொக்கோஓஓஓஒ? மிக்க நன்றி சந்து..

  ReplyDelete
 27. அம்முலு மிக்க நன்றி.

  சிச்சுவேஷன் சோங்தான் நினைவு வருகுது அதி.
  தாங்ஸ் பப்பி) /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர், இருந்தாலும் சுமைதாங்கி என ஒத்துக்கொண்டமைக்கு இந்தாங்கோ புரூட் அண்ட் நட்ஸ் சொக்கலேஏஏஏட்.

  ReplyDelete
 28. ஜெய்..லானி ///வேற ஒன்றை டெலிட் பண்ணும் போது மாறிப்போச்சி வேற ஒன்னுமில்லை.// ஓ அப்படித்தான் இருக்கும், எனக்கும் தெரியும் அது நிட்சயம் கூகுளின் எரர்தான்....

  ஏங்க அமாவாசைக்கு நிலா வராதா ??. /// இது என்ன கேள்வி அமாவாசைக்கு நிலவு வராதோவோ? அன்றுதானே முழுநிலவே தெரியும்.. நித்திரை கொள்ளாமல் முழிச்சிருங்கோ கமெராவோடு ஓக்கை??? கெதியா நிலவை எடுத்திடுங்கோ.. அடுத்த தொடரை நான் வெளியிடப்போகிறேன்... அதையும் தொடரோணுமெல்லோஓஓ..

  கடைசி மூனு படம் முதல்ல வரனும் , அப்பதான் சின்டக்ஸ் எர்ரர் வராது./// உண்மைதான், ஆனால் அது பின்னூட்டங்கள் படிக்கும்போது குழப்பமாக இருக்குமெல்லோ...அதனால் மாத்தவில்லை. மிக்க நன்றி ஜெய்..லானி.

  ReplyDelete
 29. அருமையான படத்தை போட்டு விட்டு அடிக்கிற லூட்டி தாங்கலைடா சாமி.படத்தை ரசிக்க விடாம பின்னூட்டத்தை வாசிக்க வைக்கிறாங்களே.

  ReplyDelete
 30. அதிரா ரொம்ப பிஸியாய் போனேன்.

  ReplyDelete
 31. ஆசியா// அருமையான படத்தை போட்டு விட்டு// பார்த்தீங்களோ.. உங்களுக்குப் புரியுது...

  மிக்க நன்றி ஆசியா.. எனக்கு வரும் பின்னூட்டங்கள்தான் என்னையும் அதிகம் பதிவுகள் போடவைக்குது.

  ReplyDelete
 32. ஜலீலாக்கா உப்பூடி அடிக்கடி பிஸியானால், உங்களை எல்லாம் நம்பியிருக்கும் எங்கள் புளொக்குகளின் நிலைமை என்னாவது? கொஞ்சம் யோசியுங்கோ?:):).

  ReplyDelete
 33. Nice pics!நானும் இந்த மாதிரி சில‌ படங்கள் எடுத்து இருக்கேன்.

  ReplyDelete
 34. அருமை...அருமை...வாழ்த்துகள்!

  ReplyDelete
 35. பிரியா, முதலில் மன்னிக்கவும். நான் உங்கள் பதிவை இன்றுதான் பார்க்கிறேன். மிக்க நன்றி. வைத்திருந்தால் வெளியிடுங்கோ பார்த்து மகிழலாம்.

  ReplyDelete
 36. ஆதவனைப் பார்க்க யாதவன் வந்திருக்கிறீங்கள். எனக்கு நீங்கள் யாரெனத் தெரியாது, நல்வரவு, மிக்க நன்றி.

  ReplyDelete
 37. அதீஸ்,
  //எனக்கு நீங்கள் யாரெனத் தெரியாது, //
  உது என்ன பழக்கம். வந்த ஆட்களை வாங்கோ இருங்கோ என்று சொல்லோணும். டீ, கோப்பி குடுக்கோணும். அதை விட்டுட்டு நீங்கள் யார் என்று தெரியவில்லை என்று சொல்லப்படாது. நான் எஸ்........கேப்பூபூ...

  ReplyDelete
 38. ஆ.... கலியுகம்...கலியுகம்... நான் பந்திபந்தியாகப் பதிவு போட்டால்... ஒரு வரிப்பதில்ல பின்னூட்டம் போடுவார்கள், ஆனாலும் பாருங்கோ.... தப்பித்தவறி ஒரு பேச்சுக்கு ஏதாவது சொல்லிட்டால் போதுமே.. லண்டன் பிபிசியை விட வேகமாக வெளியே அறிவிக்கிறார்களே.....

  கால்வச்ச வனீஈஈஈஈஈஈ, தெரியாதாக்களைப்பார்த்து, உங்களை எனக்கு நல்லாத் தெரியும் எப்பூடி இருக்கிறீங்கள் என்றால் அடிக்க வருவார்களெல்லோ... அதுதான் பயம்மாஆஆஆக்கிடக்கு...

  யாதவன் நீங்கள் பயந்திடாதீங்கோ, இது எங்கட வாணி இப்பூடித்தான், அடிக்கடி “சிவகாமி”(http://vanathys.blogspot.com/2010/04/blog-post_08.html) மாதிரி எதையாவது சொல்லுறவ... மீயா எஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.