நல்வரவு_()_


Friday 7 May 2010

ஒரு நிலவு!! இரண்டு கமெரா!!!

நிலவு தெரியுதோ?? மலைக்கு மேலே ஒரு புள்ளியாய்...




நானும் படம் எடுத்திடலாம் என கமெராவோடு சாமம் வரை காத்திருந்தேன்... நிலவு வரவேயில்லை...(வழமையாகவே தெரிவது குறைவு, அதிலும் இது தேய்பிறைகாலம்:)). இது விடியற்காலை, காரில் வேகமாகப் போகும்போது அவசரமாக எடுத்தது.... நிலவு தெரியுதோ?? இது இந்தப்பக்கத்துப்பாதி, மற்றப்பாதியை இது இமாவின் உலகம் போய்ப் பாருங்கோ:) Better Half??

நிலவின் புலம்பல்:

நிலா அழுதது
வானம் தன்னைப்
புறக்கணிப்பதாகப்
புலம்பியது
ஒவ்வொரு
நட்சத்திரத்தையும்
சந்தேகப்பட்டது
வால் வெள்ளிகளைத்
திட்டித் தீர்த்தது

த்தனை
நட்சத்திரங்களைத்
தன்னகத்தே
கொண்டிருக்கும்
வானத்தை
நம்பமுடியாதென
அறிக்கைவிட்டது

வானம் சிரித்தது..
நிலவுக்கு வானம்
ஒரு கடல்
வானத்துக்கு நிலவு
ஒரு புள்ளி..

ருப்பினும்
வானம் சொல்லியது
என்னை நீ
வெறுத்தாலும்
என்னுள்தான் நீ
இருந்தாக வேண்டும்!!!
இரு எனக்கு
ஆட்சேபனை இல்லை..

உற்றுப்பாருங்கோ... கீழே குட்டிப்புள்ளியாக இருப்பதுதான் நிலவு(மு.கு: எல்லோருக்கும் நிலவு தெரியாது:))


எனக்குப் பிடித்த குட்டிக்கவிதைகள் சில.. உங்களுக்கும் பிடிக்குமே என்று...

*விழிகள் நட்சத்திரங்களை
வருடினாலும்
விரல்கள் என்னவோ..
ஜன்னல்கம்பிகளோடுதான்...



*ருட்டில் வழிதேடி
எழுந்துவந்தேன்
உன் கண்களின்
வெளிச்சத்தை நீ
காட்டியபின்
திசைகளே தெரியாமல்
திகைக்கின்றேன்





“வாழ்க்கை”

வெளிச்சத்தை
மட்டும் நேசிக்காதே
இருளையும்
நேசிக்கப்பழகு!!!

சுட்ட கழிதான்
மட்பாண்டமாகும்
அதுபோல்
நம் வாழ்க்கையும்
சுடப்படட்டும்!!!

முள் குத்துகிறது
என்பதற்காக
பாதங்களை
வெட்டி வீசலாமா?
பாதையைத்தான்
சுத்தப்படுத்த வேண்டும்!!!

டிகார முள்
சுற்றாமல் இருக்கலாம்
ஆனால் காலம்
கடந்துகொண்டுதானிருக்கும்!!!



ரோசா என்றால்
இலை இருக்கும்
பூ இருக்கும்
முள்ளும் இருக்கும்
அதுபோலவேதான்
வாழ்க்கையில் துன்பமும்!!!

முகத்தில் கீறிவிட்டதே
என்பதற்காக
விரல்களை வெட்ட
வேண்டியதில்லை
நகத்தை வெட்டு
அதுபோதும்!!!

ண்ணுக்குள் போட்டு
மூடினாலும்
முளைத்து தலைகாட்டும்
விதைபோல
தடைகளையே உரமாக்கி
எதிர்நீச்சல் போடுவதுதான்
வாழ்க்கை!!!

துன்பம் வந்தால்
மெல்ல அழு
பின் சிரி
சோகம் இல்லாத
வாழ்க்கை
சுவைப்பதில்லை!!!.
~~~~~~~~~~~~~~~~~~~டொட்டொடாங்~~~~~~~~~~~~~~~~~~~~இவர்களை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கோ???

~~~~~~~~~~~~~~~~~~~டொட்டொடாங்~~~~~~~~~~~~~~~~~~~~

பின் இணப்பு:பூப்பறிக்கச் சொல்லி..... பூவா கேட்டுக்கொள்ளும்....
நான் பறித்துச் சென்றால்... வேண்டாம் என்றா சொல்லும்....


இது எங்கள் வீட்டில் இரண்டாவதாகப் பூத்திருக்கும் “பாரிஜாதப் பூ”

இது அன்பு அம்முலு எனக்கு அனுப்பியது.... இது ஜீனோவா? சன்னியா? குயப்பமா இருக்கு அதிராவுக்கு...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
“மனம் நம்பிக்கையை இழப்பது,
மரம் வேரை இழப்பதற்குச் சமமானது” ">
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

27 comments :

  1. //துன்பம் வந்தால்
    மெல்ல அழு
    பின் சிரி//????!!!!அவ்வ்வ்வ்..வ்வ்வ்...வ்வ்..வ்! ஞே...ஞே! நீங்க என்னா சொல்ல வாறீங்க? ஜீனோக்கும் ஒன்னியுமே புர்ல.

    ரோஸா அயகா இருக்கு. பூஸ் அண்ட் பப்பி (நாட் த ஜீனோ..நாட் த சன்னி..இட் இஸ் பப்பி,ஓக்கை? கரீக்ட் தான அம்முலு அக்கா? ) போட்டோ க்யூட்டா இருக்கு. குட்டி குட்டி பூஸும் எழிலா இருக்கு.

    //உற்றுப்பாருங்கோ... கீழே குட்டிப்புள்ளியாக இருப்பதுதான் நிலவு(மு.கு: எல்லோருக்கும் நிலவு தெரியாது:))// பட்டப்பகல்லயும் நிலா காட்டும் அதிராக்கா வாள்க..வளர்க..அதிராக்கா கார்டனில் இன்னும் நெறையாச் செடிகள் வளர்க!

    நல்ல கவிதைகளா சேகரித்திருக்கீங்கள்..நல்லாருக்கு!

    ReplyDelete
  2. நிலவும் தெரியுது. கார் ஓடுறதும் தெரியுது. ஆனால் நிலவுக்கு மேல தெரியுறது என்ன? சூரியனோ!!
    /நிலவு வரவேயில்லை// ஒரு நேரத்தில ஒரு நிலவுதான் வருமாம்.
    எனக்கும் ஃப்ரீ பிரமோஷனா? மிச்சம் பெரிய உபகாரம் அதிரா. இதுக்கு நான் பிரதியா என்ன செய்யப் போறனோ தெரியாது!!

    பூக்கள் எல்லாம் மரத்தில கருகத்தானே! என்ன பிடுங்கப் பார்க்கிற மாதிரி இருக்கு அதீஸ்!!

    குட்டிக் குட்டிப் பூசெல்லாம் கலக்கலா இருக்கு. படம் வடிவா இருக்கு அம்முலு. ஜீனோவும் வடிவா இருக்கிறார்.

    ReplyDelete
  3. இருங்க சரியா பாத்துட்டு வரேன்!!!!

    ReplyDelete
  4. கவிதை எல்லாம் ஒரே தத்துவ மழையா இருக்கு.
    நனைஞ்சா ஜல்ப்பு பிடிச்சிக்கும்.
    ஓடுர வண்டியிலிருந்து எடுத்த படம் சூப்பர். கரெக்டா சொல்லுங்க எத்தனை படம் எடுத்தீங்க .

    ReplyDelete
  5. ஜீனோ... நீங்க சிரிச்சுக்கொண்டே இருங்கோ இப்ப ஒண்ணும் புரிய கஸ்டப்படவாணாம்...

    பூஸ் அண்ட் பப்பி (நாட் த ஜீனோ..நாட் த சன்னி..இட் இஸ் பப்பி,ஓக்கை? கரீக்ட் தான அம்முலு அக்கா? /// ஐஸ்லாண்ட் புகையைவிட இது மோசமாக புகைக்குதுபோல இருக்கே.... அது ஜீனோதான் ஜீனோ....

    பட்டப்பகல்லயும் நிலா காட்டும் அதிராக்கா வாள்க..வளர்க../// வாள்த்துக்கு நன்றி ஜீனோ.. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக ள,ழ பழகிக்கொண்டுவந்தேன்.... இப்போ இருந்ததையும் இளந்தாய் போற்றி ஆகிட்டேன்.... சும்மா வி”ழை”யாட்டுக்குச் சொன்னேன் ஜீனோ.

    கிக்கிக்கீஈஈஈஈஈஈஈஈஈ/// இங்கு பகல் இரவெல்லாம் இப்ப ஒண்ணாத்தான் இருக்கு. அது தன்பாட்டுக்கு வரும் போகும்... நான் நிலவைச் சொன்னேன்.

    ReplyDelete
  6. அதிகாலை நிலவு நல்ல அழகா தெரிஞ்சுது, ஆனால் மோட்டவே ஓட்டம் 70 மைல்/அவர், நான் ஓடினேன், நிலவைக் கண்டதும் விட மனமில்லை, கமெரா எடுத்துப்போகவில்லை, மகன் மட்டும்தான் என்னோடிருந்தார், என் மொபைலில் எடுக்கச் சொன்னேன், பிளாஸ் ஓவ் பண்ண முடியாது, அது ஜன்னலில் பட்டு சூரியனாக தெரியுது. பார்க் பண்ண முடியாமல் இருந்துது. இடைக்கிடை மரமும் மறைக்கத் தொடங்கிட்டுது. இனி அடுத்த போயா வந்தால் பார்ப்போம்.

    எனக்கும் ஃப்ரீ பிரமோஷனா? மிச்சம் பெரிய உபகாரம் அதிரா/// ஓ.... நோ.. மென்ஷன்... ஒரு பெரீஈய ... சலாட் பவலில அ.கோ.மு.... தந்தாலே ஓக்கை.

    என்ன பிடுங்கப் பார்க்கிற மாதிரி இருக்கு அதீஸ்// நோப் பூக்களைப்பறிக்கக்கூடாது... அது போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஸ்ஸ்ஸ்ஸ்.

    நன்றி இமா.

    ReplyDelete
  7. இருங்க சரியா பாத்துட்டு வரேன்!!!! // என்னத்தை???????

    கரெக்டா சொல்லுங்க எத்தனை படம் எடுத்தீங்க // ஜெய்..லானி பப்ளிக்கில இப்பூடி எல்லாம் கேட்கப்படாது... கிக்...கிக்..கீஈஈஈஈ அது ஒரு 10 இருக்கலாம்...நன்றி ஜெய்..லானி.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. அதிரா.. பார்த்தேன்.. படித்தேன்.. ரசித்தேன்.. நிலவு தான் எங்கயுன்னு தேட வேண்டியதாயிருக்கு.. இன்னம் கொஞ்சம் கிட்டப் போயி எடுத்திருக்கக்கூடாதா?? :)) நான் எடுத்ததையும் போட்டிருக்கனான்.. பாருங்கோ.. இது ஒரு தொடர் பதிவு மாதிரி போயிட்டு இருக்கு :))

    கவிதைகள் க்யூட் அதிரா.. ரோஸ் வாசகம் அருமை..

    ReplyDelete
  10. நன்றி சந்து. உண்மைதான் யாராவது தொடர்ந்தால் நன்றாக இருக்கும்..

    ReplyDelete
  11. மிகவும் நல்ல கவிதைகளை போட்டிருக்கிறீங்க அதிரா.பின் இணைப்பு சூப்பர்.நிலவு வர நீங்க 27 ந்திகதி வரை காத்திருங்கள்.படங்கள் இணைப்பிற்கு ரெம்ப நன்றிகள்.இமாவுக்கும் நன்றி.

    ReplyDelete
  12. அதீஸ், நல்ல கவிதை. அழகான படங்கள்.

    //நானும் படம் எடுத்திடலாம் என கமெராவோடு சாமம் வரை காத்திருந்தேன்... நிலவு வரவேயில்லை...( //
    நிலவு வந்த நேரம் நான் கொர்ர்.... இது கவிதை

    //Better Half?? //
    நிலவோ அல்லது திரு. இமாவோ????

    ReplyDelete
  13. நிலவு பற்றிய கற்பனைக் கவிதை பிரமாதம் அதிரா!

    ReplyDelete
  14. @@@athira--//நன்றி சந்து. உண்மைதான் யாராவது தொடர்ந்தால் நன்றாக இருக்கும்//

    உங்க ஆசையை நான் தீர்த்து வைக்கிறேன். பேபி அதிரா அழக்கூடாதூஊஊஊஊஊஊ

    ReplyDelete
  15. மிக்க நன்றி அம்முலு.. அதிராவோ கொக்கோ... 27ம் திகதி நிலவார் சூப்பரா மாட்டப்போகிறார்... ஓடிடுவாரோ பார்ப்போம்.

    ReplyDelete
  16. வாணி //நிலவு வந்த நேரம் நான் கொர்ர்.... இது கவிதை // உண்மைதான்.. சூப்பர்.. நான் கவிதையைச் சொன்னேன்..

    நிலவோ அல்லது திரு. இமாவோ???? /// இமாவை, திரு எண்டெல்லாம் சொல்லப்படாது வாணீஈஈஈஈஈஈஈஈஈஈ:):):)...

    நன்றி வாணி.

    ReplyDelete
  17. மனோ அக்கா மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  18. உங்க ஆசையை நான் தீர்த்து வைக்கிறேன். பேபி அதிரா அழக்கூடாதூஊஊஊஊஊஊ // மிக்க நன்றி ஜெய்..லானி. ஆனால் ஒரு கண்டிஷன்(பெண்குலத்துக்கு கண்டிஷன் எல்லாம் போடமாட்டோமில்ல)) கிட்டப்போய் எடுக்கோணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். விரைவில் எதிர்பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. கவிதை,படங்கள் அனைத்தும் அருமை அதிரா.பயணம் செய்த பொழுது எடுத்ததா?நிலவுப்படங்கள் வேகமாக இருக்கிறது.அம்முலு அனுப்பிய படத்தில் இருப்பது சன்னி தான்.கண்ணை பார்த்தால் தெரியலையா?

    ReplyDelete
  20. மிக்க நன்றி ஆசியா. காரில் போகிறபோதுதான் எடுத்தது.

    அம்முலு அனுப்பிய படத்தில் இருப்பது சன்னி தான்.கண்ணை பார்த்தால் தெரியலையா?//ஹா...ஹா...ஹா.. ஆசியா... அடங்கிய புகையை மீண்டும் வரவைக்கிறீங்கள்.... எனக்கல்ல:):).

    ReplyDelete
  21. //நிலவோ அல்லது திரு. இமாவோ???? /// இமாவை, திரு எண்டெல்லாம் சொல்லப்படாது// திரு-திரு...திருதிரு..துறு-துறு..திருதிரு,துறுதுறு!!

    ஹா..ஹா...அதிரா அக்கா, திரு.இமா எண்டால் ஆன்ரி இல்லை..அங்கிள்!! ஹி,ஹி,ஹி!!

    ReplyDelete
  22. அதாவது இப்பம்,...
    திரு.அதிரா எண்டால் உங்கட பெட்டர் ஹாப்.
    திரு.வாணி எண்டால் வாணியக்காவிண்ட பெட்டர் ஹாப்.
    திரு.புஜ்ஜி எண்டால் அது ஜீனோ.
    காட்ச்சா?

    ReplyDelete
  23. திரு. புஜ்ஜி அவர்களே! என்னை வச்சு கொமடி நடக்குதோ!! ;) நடத்துங்கோ, நடத்துங்கோ. ;))

    ReplyDelete
  24. ஜீனோஓஒ //ஹா..ஹா...அதிரா அக்கா, திரு.இமா எண்டால் ஆன்ரி இல்லை..அங்கிள்!! ஹி,ஹி,ஹி!! /// உது எனக்கு அப்பவே தெரியுமே....கிக்..கிக்..கிக்..

    திரு.புஜ்ஜி எண்டால் அது ஜீனோ.
    காட்ச்சா? // சுத்தியே சுத்தியும் சுப்பரின் கொல்லையில்தானாம் என்று ஊரில ஒரு பழமொழி இருக்கு, அதுபோலதான்.... எங்க சுத்தினாலும் தன் பெயரில முடிப்பதில “சிலருக்குப்” பெருமை... முறைக்க வாணாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    திரு. புஜ்ஜி அவர்களே! என்னை வச்சு கொமடி நடக்குதோ!! ;)// நோப்.. நாங்கள் சீரியஸ் டிஷ்கஷனில இருக்கிறது உங்களுக்கு கொமடியாத் தெரியுதோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * :) = ?????

    ReplyDelete
  25. அனைத்து வரிகளும் கவியும் அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  26. தமிழ்த்தோட்டத்திலிருந்து புதிதாக வருகை தந்த உங்களுக்கு மிக்க நன்றி. நல்வரவு.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.