நல்வரவு_()_


Friday 28 May 2010

பெண்வண்டாய்.... வந்தேனே!!!!!!!

இமாவைத் தொடராமல் விட்டிடுவோமா? பின்னாலே மலை உச்சிக்கே போனவர்களாச்சே நாங்கள்:):)...
ஆரம்பித்தது சந்து......
தொடர்ந்தது.. தொடரச்சொன்னது
இமா...

தக்காளி, கிரான்பெரி, உருளைக்கிழங்கு பயன்படுத்தி உருவான வண்டுகள்..




ஆப்பிள், கிரான்பெரி, உருளைக்கிழங்கு & அதிராவின் கிட்னியைப் பாவித்து உருவாக்கப்பட்ட இவர்களுக்கு, தரை பிடிக்காதாம், கோவா இலையில்தான் இருப்பார்களாம்...



நாங்கள் மலை ஏறுகிறோமே....



சும்மா மசமச என்று பார்த்துக்கொண்டிருக்காமல் தொடருங்கோவன்:).....




தொடர்வதற்கும் “அதிராவைப்போல” தைரியம் வேணுமெல்லோ..... இங்க யாருக்கு வரும்... கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈ



என் ஏனைய கைவண்ணங்கள் சில....

நேரம் போதவில்லை அவசரமாகச் செய்தது...

ரியூலிப்ஸ் வாஸ்... செரிரொமாட்டோ & வைன்ரொமாட்டோ.



கரட் இலைகள் தக்காளிப் பூ:




இது யார் இவர்கள்??:):) வெக்கை அதிகமோ இவர்கள் நாட்டில்????(பெயர்களைப் படித்து, ஆட்களைக் கண்டு பிடியுங்கோ)


இதன் அடுத்த பாகம் விரைவில் தொடரும். நான் மெதுவாகப் போடலாம் என இருக்க, இமா வண்டைத் தொடர அழைத்தமையால் உடனே வெளியிட்டிருக்கிறேன். அவசரப் பதிவிது, தவறுகள் இருப்பின் மன்னிக்கவேண்டும்.

பின் இணைப்பு:
நான் “ஆரோக்கியத்துக்காக:)” நடக்கப்போகும்போது என்னை அன்பாக பார்த்து விடைதரும் எங்கள் அயலவர்...



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“உன்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கோ,
அவற்றையெல்லாம் பயன்படுத்து,
நன்றாகப் பாடக்கூடியவற்றைத்தவிர,
ஏனைய பறவைகள் பாடக்கூடாதென்றிருந்தால்,
கானகம் மிக அமைதியாகவெல்லோ இருக்கும்”

....-வேன் டைக்-.....

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

46 comments :

  1. கலக்கல் அதிராக்கா.
    வண்டை பாத்த்வுடன் சாபிடும் ஆசை போய்விட்டது. விளையாடும் எண்ணமே மேலோங்குகின்றது. சூப்பர்.

    ReplyDelete
  2. //இவர்கள் நாட்டில்????(பெயர்களைப் படித்து, ஆட்களைக் கண்டு பிடியுங்கோ)//

    அதில் என்ன எழுதி இருக்கு எனக்கு தமிழ் படிக்க தெரியாதே!!!.

    ReplyDelete
  3. ஹி..ஹி..உருளை கிழங்கை பல் மாதிரி வெட்டி வச்சிருக்குன்னு மட்டும் புரியுது!!.

    கிட்னி ரொம்ப வேகமா வேலைச்செய்யுது .படங்கள் கிரியேட்டிவிடி சூப்பர்...ஆனா இந்த போட்டி எங்க போய் முடியுமோன்னு தெரியல :-)))))

    ReplyDelete
  4. அதிரா.ஜீனோவுக்கும் ஹைஷண்ணாவுக்கும் ஜெய்லானிக்கு மட்டும்தானா?அக்காவுக்கு இல்லையா?உங்க கூட கா..

    ReplyDelete
  5. அதிரா கிளாஸ் போய் கற்றுக்கொண்டீர்களா?இல்லை பிளாக் பார்த்தே ஓசியில் கற்றுக்கொண்டுவிட்டீர்களா?நானும் உங்களைப்பார்த்து டிரை பண்ணினேன்.தக்காளி விற்கும் விலையில் காய்தான் வீணானது.

    ReplyDelete
  6. கேரட் இலை சூப்பர்.

    ReplyDelete
  7. அதுசரி வெட்டிய பழம்.காய்களை எல்லாம் என்ன செய்வீர்கள் அதீஸ்?? பழங்களை ஜூஸ் போட்டும்,காய்களை சூப் போட்ட்டும் சாப்பிடுவீர்களா?

    ReplyDelete
  8. /ஆப்பிள், கிரான்பெரி, உருளைக்கிழங்கு & அதிராவின் கிட்னியைப் பாவித்து உருவாக்கப்பட்ட இவர்களுக்கு, தரை பிடிக்காதாம், கோவா இலையில்தான் இருப்பார்களாம்.../ கிக்..கி..கிக்!! அதிராக்காட கிட்னி...அதிராக்காவிண்ட மனதைப் போலவே..ஏ..ஏ.ஏ..கருப்பு கலர்! ஹா..ஹா!!

    /கோவா இலையில்தான்/ அதென்ன இலை அதிராக்கா?ஜீனோக்கு பால் கோவா தான் தெரியும்..பால் கோவா பச்சே கலர்ல இருக்குமா??!!!

    தோஸ் ஆர்க்கிட்ஸ் ஆர் க்யூட்..ஆர் தே ரியல் ப்ளவர்ஸ்?

    /சும்மா மசமச என்று பார்த்துக்கொண்டிருக்காமல் தொடருங்கோவன்:)...../ kirrrrrrrrrr...ர்ர்ர்! நாங்க 'ஞே'ன்னு தான் பாக்குறம்..மசமச எல்லாம் நீங்கோ பாக்குறது..கர்ர்ர்...ர்ர்!!

    /ரியூலிப்ஸ் வாஸ்... செரிரொமாட்டோ & வைன்ரொமாட்டோ.//கரட் இலைகள் தக்காளிப் பூ:/ கலைக்கண் இருக்கவங்கள்க்கு அல்லாம் தெரியும்! அதர்வைஸ் ஜீனோ மாரி ஊனக் கண் ஒன்லி எல்லாம் என்ன செய்ய? நல்ல வேளை,எல்லாப் போட்டோக்கும் கேப்ஷன் போட்டீங்கள்!!

    / வெக்கை அதிகமோ இவர்கள் நாட்டில்????/ எஸ் அதிராக்கா! சூடு தாங்கவே முடில..ஜீனோவே டெய்லி ஒன்ஸ் கோல்ட் வாட்டர்ல குளிக்குதுன்னா பாருங்கோவன்.
    அதென்னா,எங்களுக்கு பனியன் மட்டும் போட்டிருக்கீங்கள்? நாங்கள்லாம் டக்சீடோ,வான் ஹூசைன் எல்லாம் தூங்கும் போதும் கூட கழற்ற மாட்டோம்..எங்களைப் போயி..ச்சீ..சீ..இந்த கிழங்கு புளிக்கும்!!

    /இதன் அடுத்த பாகம் விரைவில் தொடரும். /ஓ..எம்.ஜி!! ஜீனோவ ஆரும் காப்பாற்றுங்கள்!! ஜீனோ ரன் பாஸ்ட்..ஸ்விம் பாஸ்ட்..ஓடிரு!

    /நான் “ஆரோக்கியத்துக்காக:)” நடக்கப்போகும்போது/ அதிராக்கா, டூ ஒன் திங்..சந்திரிகா சோப் போட்டு குளிங்கோ..குளிர்ல இப்பூடி நடக்கரீங்கோ..குளிக்க மட்டும் என்னவாம்? லைப்பாய்=பாய்ஸ் எண்டால் சந்திரிகா=கல்ஸ். ஓக்கை?

    /அயலவர்/ நல்லா, பால் வெள்ளை நிறமா இருக்க அயலவர் போடுங்கோ..ஜீனோக்கு அதான் புடிக்கும்.கர்ர்..ர்ர்!

    ReplyDelete
  9. எப்ப அதிரா வெஜ் கார்விங் செய்ய ஆரம்பிச்சீங்க,சூப்பர்.முதல் பரிசு கொடுப்பதில் தான் குழப்பம்.எல்லாமே அழகு.கலர் கலரா வண்டு,அண்ணன்,தம்பி,ஜெய் எல்லாரும் உருளை தானா?

    ReplyDelete
  10. கலக்கிடீங்க அதிரா. சூபர்ப். ;)

    படம் 2 - அழகு.
    3 - அதுக்கும் மேல. ;)
    4 - இன்னும் மேல. நல்ல ஐடியா.
    7 & 8 - Neat work. பாராட்டுக்கள்.
    8 - sweet ;)
    9 - எனக்கு ஒருவரையும் தெரியாது. மூன்று பேரும் நல்ல குண்டாக இருப்பாங்களோ!!!
    இங்க ம.பொ ஆக இருக்கிற மீனிங் என்ன என்றால்... 'இப்பிடி' இருக்காமல் கத்தியை எடுத்துக் கொண்டு தொடருங்கோ என்பதுதான். ;)

    //“உன்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கோ,
    அவற்றையெல்லாம் பயன்படுத்து// நன்றி அதிரா.

    ReplyDelete
  11. @@@asiya omar--//எப்ப அதிரா , அண்ணன் , தம்பி,ஜெய் எல்லாரும் உருளை தானா//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  12. அதீஸ், கரட், தக்காளி அழகோ அழகு. பூசார் அழகு. ஆனால் மேலே இருப்பவை ஏதோ கவச வாகனங்கள் மாதிரி இருக்கு. அண்ணனும், கொசு புகழ் ஜெய்லானியும் நல்ல அழகு & ஒபிஸிட்டிபிரச்சினையா? இப்படி ஊதிப்போய் இருக்கிறார்கள்.

    நானும் எங்கள் வீட்டில் கார்டினில் திரியும் மண்புழுக்களை படம் எடுக்க போறேன். எனவே மக்கள்ஸ் எல்லாரும் ரெடியாக இருங்கோ.

    ReplyDelete
  13. asiya, //அண்ணன்,தம்பி,ஜெய் எல்லாரும் உருளை தானா? // ;) x 646464

    ReplyDelete
  14. அதீஸ்,

    க்றிஸ் பார்த்து விட்டு, வடிவாச் செய்து இருக்கிறீங்கள் என்று சொல்லச் சொன்னார். ;)
    பச்சை அப்பிள் வண்டும், கரட் இலை & பூக்கள் பெஸ்ட் என்று சொல்லுப்பட்டுது. ;)

    சந்தூஸ் ஊர்ப் பெண்வண்டுகளும் காட்டியாச்சுது. ;)) அதுவும் எல்லாம் வடிவா இருக்கு எண்டு சொல்லுப்பட்டது. ;)

    ReplyDelete
  15. மேனகா மிக்க நன்றி. அன்னூஊஊஊஊஊஊ எப்போ அக்காவுக்கு மாறினனீங்கள்?:) இட்ஸ் ஓக்கை. வண்டைச்சாப்பிடக்கூடாது :) அயகா வச்சு அழகு பார்க்கவேண்டும். மிக்க நன்றி அன்னு.

    ReplyDelete
  16. ஆ... ஜெய்..லானி தமிழ் தெரியாதோ? அல்லது பகலிலும் கண் தெரியாதோ?:) உண்மையைச் சொல்லவேணும்.... சரி சரி முறைக்கவாணாம் அடுத்த தடவை ஹிந்தியில் எழுதுகிறேன், அதுவரை இமாரீச்சரிடம் படிக்க ஒழுங்கு செய்துவிடுகிறேன்... பீஸ்ஸை அட்வான்சாக இப்பவே என்னிடம் தந்திடுங்கோ.

    வடிவாப்பாருங்கோ ஜெய்..லானி அது வெஸ்ட் அண்ட் சோட்ஸ் போட்டிருக்கும் மூன்று குண்டுகள்:):) ஹிக்ஹிக்ஹிக்க்க்க்க்க்.

    //ஆனா இந்த போட்டி எங்க போய் முடியுமோன்னு தெரியல :-))))) //
    நான் சின்ன வகுப்பில் படிக்கும்போது எங்கள் ரீச்சர் சொன்னா, படிப்பில போட்டி கட்டாயம் இருக்க வேணும், அப்பத்தான் முன்னேறுவீங்கள் ஆனால் பொறாண்மை என்பது இருக்கவே கூடாது என்று. ஆனால் இங்கே எதுவுமில்லை, எல்லாம் ஒரு அன்பால் விழையும் ஆசைதான்...... நீங்கள் தொடருங்கோவன்...

    மிக்க நன்றி ஜெய்..லானி....

    ReplyDelete
  17. ஸாதிகா அக்காஆஆஆஆஆ “கா” எல்லாம் சொல்லப்பூடாது... உங்களுக்கு உருளைக்கிழங்கு ரோஸ் ட்ரை பண்ணுறேனே.... எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ளவேணும் ஓக்கை?

    ///அதிரா கிளாஸ் போய் கற்றுக்கொண்டீர்களா?///ஸாதிகா அக்கா .. எல்லாமே இமாவின் உபயம்தான்... இமா செய்வதைப்பார்த்து எனக்கும் செய்யவேணும்போல ஆர்வம் வந்தது அப்பவே. முதன்முதலில் ஹைஷ் அண்ணனின் அல்பம் பார்த்து மயங்கினேன். அவற்றையெல்லாம் மனதில் கொண்டு, கடைக்கு ஓடிப்போய் கத்திகூட புதிதாக வாங்கிவந்து முதன்முதலில்(வாழ்க்கையில்) செய்தது உந்த ரியூலிப்ஸ் வாஸ் தான்.

    கரட் இலை ஓரிடத்தில் பார்த்தேன் மிக அழகாக செய்திருந்தார்கள், அதுக்கு கை பழகவேணும். நான் வெட்டிய சிறு துண்டுகளையெல்லாம் எறிந்துவிட்டேன் ஸாதிகா அக்கா. இங்கே கிழங்கு,(கோழிமுட்டை:)) புழுத்த மலிவு. தக்காழியும் அப்படியே. பழங்களும் பெரிதாக விலை என்றில்லை. எப்படித்தான் கணக்குப் பார்த்தாலும் 4-5 பவுண்டுகளுக்கு மேலே வரப்போவதில்லை. செய்தவற்றை கலைக்காமல் வைத்திருக்கிறேன் வாடியதும் எறிந்திடுவேன். யூஸ் போட்டாலும் முக்கி முக்கி நான்தான் குடிக்கவேணும் யாரும் தொடமாட்டார்கள்.

    மிக்க நன்றி ஸாதிகா அக்கா.
    பி.கு:
    அட்வான்ஸை இப்போ அனுப்பிடுங்கோ, நான் உங்களுக்கு கார்விங் சொல்லித் தருகிறேன்.... இமாவுக்குச் சொல்லிடாதையுங்கோ அதிரா கிளாஸ் எடுக்கத் தொடங்கிட்டா என...

    ReplyDelete
  18. ஜீனோஓஓஓஓஓ//கிக்..கி..கிக்!! அதிராக்காட கிட்னி...அதிராக்காவிண்ட மனதைப் போலவே..ஏ..ஏ.ஏ..கருப்பு கலர்! ஹா..ஹா!!// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். கறுப்பென்றால் வைட் கலர்தானே??? அப்ப ஓக்கை...

    //நல்ல வேளை,எல்லாப் போட்டோக்கும் கேப்ஷன் போட்டீங்கள்!!// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உடன்பிறந்த தம்பி எண்டால், அக்காவை ஊக்குவிக்கவேணும், அதைவிட்டுவிட்டு... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    நாங்கள்லாம் டக்சீடோ,வான் ஹூசைன் எல்லாம் தூங்கும் போதும் கூட கழற்ற மாட்டோம்.//// புரியுது புரியுது.....:) கழட்டினால் பாத் பேசினுக்குள் தள்ளிக் குளிக்க வச்சிடுவினம் என்ற பயம்தானே காரணம்...:).

    எங்களைப் போயி..ச்சீ..சீ..இந்த கிழங்கு புளிக்கும்!!/// வெட்கப்படாதீங்க ஜீனோ.... வெளிநாட்டுக்கு வந்தபின்பும் இப்பூடி வெட்கப்படுறீங்களே.....

    //ஓ..எம்.ஜி!! ஜீனோவ ஆரும் காப்பாற்றுங்கள்!! ஜீனோ ரன் பாஸ்ட்..ஸ்விம் பாஸ்ட்..ஓடிரு!// கிக்..கிக்..கிக்.... ஜீனோ பயப்படவாணாம்... கோட்சூட் போட்டு பெல்ட் எல்லாம் கட்டி அடுத்த கார்விங் ஜீனோவுக்காக ஓக்கை:)?.

    //நல்லா, பால் வெள்ளை நிறமா இருக்க அயலவர் போடுங்கோ..ஜீனோக்கு அதான் புடிக்கும்.கர்ர்..ர்ர்! // கடவுளே உடனடிச் சட்டம் போடச்சொல்லி ஒபாமா அங்கிளுக்குச் சொல்லவேணும் “நாட்டிலுள்ள வெள்ளைப் பூனைகளுக்குப் பாதுகாப்புத் தேவை” என.

    மிக்க நன்றி ஜீனோ. நீங்களும் வண்டைத் தொடருங்கோவன்...

    ReplyDelete
  19. அன்புள்ள அதிரா!

    சிறப்பாக உணர்வுகளையும் அனுபவங்களையும் எழுதி வரும் உங்களுக்கு- இதோ இந்த அன்பு விருதைப் பெற்றுக்கொள்ளுங்கள்!!

    http://www.muthusidharal.blogspot.com/

    ReplyDelete
  20. ஆஹா.. அதீஸ்.. என்ன கற்பனை! ரசித்தேன் ரசித்தேன்.. அதுவும் எல்லாமும் அணிவகுத்துச் செல்லும் அந்த நாலாவது புகைப்படம்!!

    அந்த வெஸ்ட் அண்ட் ஷார்ட்ஸ் நல்ல கற்பனை அதிரா!!

    ஒரே ஒரு சந்தேகம்... எங்கட வண்டுகளுக்கு ரெண்டே கண்கள் தானிருக்கும்.. உங்கட வண்டுகளுக்கு உடம்பெல்லாம் கண்ணாயிருக்கிறதே!! :))

    //,அண்ணன்,தம்பி,ஜெய் எல்லாரும் உருளை தானா?//

    ஹாஹ்ஹா.. நச் பின்னூட்டம் ஆசியா!!

    ஜீனோ பண்ணும் அலப்பறை தாங்க முடியல!! ஆராவது காப்பாத்துங்கோவன்!!

    ReplyDelete
  21. ஆசியா மிக்க நன்றி. எல்லா கார்விங்கும் போட்டு முடிந்தபின் பரிசை மொத்தமாத் தந்திடுங்கோ??.

    அண்ணன்,தம்பி,ஜெய் எல்லாரும் உருளை தானா? /// மூவரும் சாப்பாட்டுப் பிரியர்கள் என்பதால, அப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு கணிப்பு.. கிக்..கிக்...கீஈஈஈஈ

    ReplyDelete
  22. மிக்க நன்றி இமா. உங்களைப்பார்த்துத்தான் எனக்கு செய்யும் ஆசையே வந்தது. நேற்றும் நான் சிலபழங்கள் வாங்கி வந்து கார்விங் செய்வதைப்பார்த்த என் கணவர் (கப்ஸ்... நானும் அவருக்கு பெயர் வச்சிட்டேன் எல்லாம் ஸ் மயமாக:):)) சொன்னார், சும்மா இருக்காமல் எப்பவும் எதிலயும் இன்ரஸ்ராக இருக்கிறீங்கள் என்று, நான் சொல்லிட்டேன் எல்லாம் இமா படுத்தும்பாடு என:), நேற்றுப்பகல், புறா, தாரா பின்னால் ஓடி ஓடிப்படமெடுத்ததையும் சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தவர்..

    //மூன்று பேரும் நல்ல குண்டாக இருப்பாங்களோ!!!/// நல்ல வேளை, மூவரும் உருளைமாதிரி நல்ல வெள்ளையோ எனக் கேட்காமல் விட்டதால அதிரா தப்பிவிட்டேன்:):).

    //'இப்பிடி' இருக்காமல் கத்தியை எடுத்துக் கொண்டு தொடருங்கோ என்பதுதான். ;)// ஆ... எண்டமுதல் தம்பி கட்டிலுக்குக் கீழ ஒளிச்சுவிடுறார், ஊ எண்டமுதல் அண்ணன் துவக்கோட ஓடிவாறார்(பயம்மாக்கிடக்கு:)), யோ.... எண்டமுதல் ஜெய்..லானி... சுடுதண்ணி எப்பூடி வைப்பது? யூஸ் எப்பூடிப்போடுவது எனக் கிளாஸ் எடுக்கிறார்....... இந்த அழகில எப்பூடித் தொடர்வது?? அப்பப்பா இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்காமல் குல்ட்டினுள் படுத்துவிடுவதுதான் நல்லது எனக்கு::

    ReplyDelete
  23. @@@asiya omar--//எப்ப அதிரா , அண்ணன் , தம்பி,ஜெய் எல்லாரும் உருளை தானா//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///// kik...kik....kiiiiiiiiiiiiiiiiii

    ReplyDelete
  24. கால் வச்ச வனி மிக்க நன்றி. பூஸார் எப்பவும் அழகுதானே:).

    அண்ணனும், கொசு புகழ் ஜெய்லானியும் நல்ல அழகு /// அப்போ தம்பி அழகில்லையோ?கர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேரடியாகச் சொல்லாமல் இப்படி மெளனமாக இருந்தால் என்ன அர்த்தம்?:):).... ஆனாலும் அக்காவுக்குத் தம்பி எப்பவும் அழகுதான்.. நான் பப்பியைச் சொன்னேன்:):).

    ஒபிஸிட்டிபிரச்சினையா? இப்படி ஊதிப்போய் இருக்கிறார்கள்/// சே..சே...சே.... குண்டாக இருப்பதுதான் இப்போ கவர்ச்சியாம் அதனால்தான் “பொப் த பில்டேர்ஸ்”....

    நானும் எங்கள் வீட்டில் கார்டினில் திரியும் மண்புழுக்களை படம் எடுக்க போறேன்/// ஆ..... இது என்ன புதுக்கதை??? அதிராவை புளொக்குக்கு வரவிடாமல் தடுக்கும் ஐடியாவோ?.

    ReplyDelete
  25. இமா said...
    asiya, //அண்ணன்,தம்பி,ஜெய் எல்லாரும் உருளை தானா? // ;) x 646464///
    இமா உஷ்..... ஷ்ஷ்ஷ்ச்ஷ் சிரிச்சதும் கிழிச்சிடவேணும்.... ஓக்கை??? அடிக்கடி உப்பூடிச் சிரிக்கப்படாதூஊஊஊ:).62462462

    க்றிஸ் பார்த்து விட்டு, வடிவாச் செய்து இருக்கிறீங்கள் என்று சொல்லச் சொன்னார். ;)
    பச்சை அப்பிள் வண்டும், கரட் இலை & பூக்கள் பெஸ்ட் என்று சொல்லுப்பட்டுது. ;)//// imaa!!அதிரா நன்றி சொன்னேன் என உடனேயே சொல்லிடுங்கோ. எங்கள் இடதுபக்க அயலவர் பெயர் கிரிஷ் & சரண்(இந்நாட்டவர்கள்). நான் அவரை அடிக்கடி ஹைஷ் என்றுதான் கூப்பிட்டிருக்கிறேன், ஹைஷ் அண்ணனோடு இங்கே பேசிப்பேசி வாயில அப்பூடி வந்திடுது.... கடசியில எல்லாம் ஷ் எண்டதால பிரச்சனையில்லாமல் சமாளிச்சிடலாம். இன்னொரு இங்கத்தவர்தான் அவரது பெயர் ஹரிஷ்... என்னை எங்கு தூரக் கண்டாலும்.... கைகாட்டிக் கூப்பிட்டு ஹலோ ஹவ் ஆர் யூ எனக் கேட்காமல் போகமாட்டார்..... அவருக்கு என் பெயர் வாயில் நுழையாது, அதனால் என்னவோ ஒரு பெயர் பாடமாக்கி வைத்துக் கூப்பிடுவார் நானும் சரி அப்படியே இருக்கட்டுமே என விட்டுவிட்டேன்......

    இப்போ என் கணவருக்கும் அதுதான் பெயர் வைத்திட்டேன் கப்ஸ்ஸ்ஸ்ஸ்(புளொக்கில் கதைக்க). இது எப்பூடீஈஈஈ? கிக் கிக் கீஈஈஈஈஈ கடவுளே அவர் இதைமட்டும் பார்த்திடப்பூடாதூஊஊஊஊஊஊ.

    சந்தூ அங்க எலி பூனை எல்லாம் பிடிச்சுவச்சிருக்கிறா.... எல்லோரும் போவம் சூ பார்க்க(இது வேற சூ:))

    ReplyDelete
  26. மனோ அக்கா விருதுக்கு மிக்க நன்றி பெற்றுக்கொண்டேன்.

    ReplyDelete
  27. சந்து மிக்க நன்றி.

    அந்த வெஸ்ட் அண்ட் ஷார்ட்ஸ் நல்ல கற்பனை அதிரா!!/// டபிள் தேங்ஸ்ஸ்ஸ்

    உங்கட வண்டுகளுக்கு உடம்பெல்லாம் கண்ணாயிருக்கிறதே!! :))/// அதிராவைப்போல:) ஒரே பார்வையில பின்னால முன்னால இருப்பதையெல்லாம் பார்த்திடலாம்:).

    ஜீனோ பண்ணும் அலப்பறை தாங்க முடியல!! ஆராவது காப்பாத்துங்கோவன்!! /// ஜீனோவைத்தானே:)? அதுதான் அன்னத்தை அனுப்பியிருக்கிறேன், ஆற்றிலே ஜீனோவைக் கலைத்துப்பிடிக்க:),(ஜீனோஸ் கோனரில) டோண்ட் வொறி சந்து, இண்டைக்கு எப்படியும் காப்பாத்திடலாம்:).

    ReplyDelete
  28. அதிரா என்ன இது எனக்கு

    ஜெய்லானிக்கு மட்டும் டிசைன் போட்டு வச்சிட்டீஙக்
    அந்த கேரட்ட எப்படி வெட்டுனீங்க

    ம்ம்ம்ம்ம் ரொம்ப ஜூப்பரா இருக்கு

    ReplyDelete
  29. இப்ப அடுத்து ஜெய்லானி டீவியில உருளைகிழங்கு சமையல் தான் போங்க

    ReplyDelete
  30. ஜலீலாக்கா மிக்க நன்றி. ஜெய்..லானிக்கும் அண்ணன் தம்பிக்கும் சேர்த்துத்தான் டிசைன் போட்டிருக்கிறேன்:), கரட் மட்டுமா... இன்னும் வருது பொறுத்திருங்கோ....

    ஜெய்..லானியை, உருளைக்கிழங்கு எண்டெல்லாம் பப்ளிக்கில சொல்லப்பூடாது ஜலீலாக்கா......:):)

    ReplyDelete
  31. ஸாதிகா அக்கா காதைக்கொண்டுவாங்கோ..., கிழங்கு சகோஸ் மூவரையும் எறிய மனம் வரேல்லை..... அதனால் பொரித்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் சூப்பர் சுவை..... படிச்சதும் கிழிச்சிடுங்கோஓஓஓஓஓஓஒ

    ReplyDelete
  32. தம்பி ஜீனோ!!! அப்போ கவனிக்க மறந்திட்டேன்.. யாழ் தமிழில் ஏ லெவல் முடிச்சனீங்களே இப்பூடிக் கேட்கலாமோ? கோவா எண்டால் கபேஜ்..... ஆ யூ க்ளியர் நவ்?

    ReplyDelete
  33. அதீஸ், ஓஓஓ .. இது உங்கட அண்ணன், தம்பி இல்லையோ. ஜெய்லானி தெரியும். மற்றது உங்கள் அண்ணன், தம்பி என்று நினைத்து கருத்து சொல்லிப் போட்டேன். இப்ப விளங்குது. எனவே நோ காமன்ட்ஸ்...

    ReplyDelete
  34. ஜெய்லானி தெரியும். மற்றது உங்கள் அண்ணன், தம்பி என்று நினைத்து கருத்து சொல்லிப் போட்டேன்///என் அண்ணனும் தம்பியுமேதான் வாணி:), வேறு யாருடைய.... என நினைத்தீங்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அண்ணன் இதைப்பார்த்து காக்காபோயிடுவார், ஆனால் தம்பி "Bபார்க்”:) பண்ணாமல் போகமாட்டார்... ஓடாதீங்கோ வாணீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  35. நல்லா, நல்லா, நல்லாயிருக்கு!

    ReplyDelete
  36. //ஜெய்..லானியை, உருளைக்கிழங்கு எண்டெல்லாம் பப்ளிக்கில சொல்லப்பூடாது ஜலீலாக்கா......:):) //

    யப்பா சாக்லெட்ட எல்லாரும் மறந்து போயிட்டாங்க

    // கிழங்கு சகோஸ் மூவரையும் எறிய மனம் வரேல்லை..... அதனால் பொரித்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் சூப்பர் சுவை..... படிச்சதும் கிழிச்சிடுங்கோஓஓஓஓஓஓஒ //

    மிளகாய் போட்டிங்களா இல்லையா ? ஹி..ஹி..


    டிரஸ் போட்ட உருளை .தெரியாத மாதிரி கமெண்ட் போட்டா எல்லாம் பிச்சி பீஸா ஆக்கிட்டாங்களே!!அவ்வ்வ்வ்

    ReplyDelete
  37. NIZAMUDEEN said...
    நல்லா, நல்லா, நல்லாயிருக்கு!/// மிக்க நன்றி. நல்வரவு. நல்லா.. நல்லா... நல்லாயிருங்கோ என வாழ்த்தியதுபோலுள்ளது.

    ReplyDelete
  38. யப்பா சாக்லெட்ட எல்லாரும் மறந்து போயிட்டாங்க/// ஆ... சொக்கலேட்டாஆஆஆ? ஞாபகம் வந்திட்டுதூஊஊஊஊஊஉ, ஆனா, அது வேஏஏஏஏற, இது வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏற:).

    மிளகாய் போட்டிங்களா இல்லையா ? ஹி..ஹி../// சே...சே..சே.... அப்பூடியெல்லாம் செய்வேனா? சும்மாதான் பொ ஓஒ ஒ ஒ ஒ ஒ ஓ ரித்தெடுத்தேன்ன்ன்ன்ன்ன்:).

    தெரியாத மாதிரி கமெண்ட் போட்டா எல்லாம் பிச்சி பீஸா ஆக்கிட்டாங்களே!!அவ்வ்வ்வ் /// தெரியாதமாதிரி கொமெண்ட்:) போட்டதாலயே.... இத்தனையும்... கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  39. / உடன்பிறந்த தம்பி எண்டால், அக்காவை ஊக்குவிக்கவேணும்,/ என்னாது? ஊக்கு விக்கணுமா? நோப் அதிராக்கா..ஜீனோ இஸ் அ கன்சல்டன்ட்..அதுக்கு ஊக்கு,ஊசி,பாசி அல்லாம் விக்கத் தெர்யாது..கர்...ர்ர்ர்! அக்காவிண்ட கலை வண்ணம் தம்பிட மனதை கொள்ளை கொண்டது..பாராட்டுகள்? இப்போ ஓக்கை??

    /கடவுளே உடனடிச் சட்டம் போடச்சொல்லி ஒபாமா அங்கிளுக்குச் சொல்லவேணும் “நாட்டிலுள்ள வெள்ளைப் பூனைகளுக்குப் பாதுகாப்புத் தேவை” என./ அது எதுக்கு அந்தோ அங்கிளை டிஸ்ரேப் பன்னரீங்கோ நீங்கோ? ஜீனோ இப்பம் இருப்பது ஆப்ப்பிர்ரிக்க தேசம்..உகாண்டாக் கண்டம். அங்கன ஆருக்கும் எச்சரிக்கை தாரதேண்டால் செய்யுங்கோ. கிக்..கிக்!

    /நீங்களும் வண்டைத் தொடருங்கோவன்.../ ச்சு..ச்சு..சீ..ச்சீ..பெண் வண்டையோ? நோ சான்ஸ் அதிராக்கா! லேடீஸ் பின்னால தொடர்வதில்லை எண்டு ஜீனோ புஜ்ஜிக்கு ப்ராமீஸ் பண்ணிருக்கு..குடும்பத்திலை குயப்பம் பன்னாதைங்கோ..ப்ளீ.ஈஈ..ஈ..ஸ்!

    //அந்த வெஸ்ட் அண்ட் ஷார்ட்ஸ் நல்ல கற்பனை அதிரா!!//கர்ர்ர்..ர்ர்ர்! வவ்..வ்வ்வ்! என்னவாக்கும் நல்..ல்ல்...ல்ல கற்பனை?
    //ஹாஹ்ஹா.. நச் பின்னூட்டம் ஆசியா!!// வவ்வவ்..வ்வ்வ்...வ்வ்! கர்ர்..ர்ர்..ர்ர்! என்னவாக்கும் நச்..ச்ச்ச்ச்..ச் பின்னூட்டம்?
    //ஜீனோ பண்ணும் அலப்பறை தாங்க முடியல!! ஆராவது காப்பாத்துங்கோவன்!!// எஸ்..ஆராவது சீக்கிரமா ஜீனோவைக் காப்பாத்துங்கோவன்!

    /என் கணவர் (கப்ஸ்... நானும் அவருக்கு பெயர் வச்சிட்டேன் எல்லாம் ஸ் மயமாக:):)) / திஸ் இஸ் வெறி வெறி வெறி வெறி பேட் அதிராக்கா..ஒரு மட்டு மரியாதை வேணாமோ? இருங்கோ,டாக்டர்கிட்ட சொல்லி உங்களுக்கு பன்னிரண்டு ஊசி போடச் சொல்லும் ஜீனோ.

    /ஆனாலும் அக்காவுக்குத் தம்பி எப்பவும் அழகுதான்.. / ஹிஹிஹி..ஜீனோ இஸ் வெறி பார்ச்சுநெட் டு ஹேவ் சிஸ்டர் லைக் யூ பேபி அதிரா சிஸ்டர்!
    /அப்போ தம்பி அழகில்லையோ?கர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேரடியாகச் சொல்லாமல் இப்படி மெளனமாக இருந்தால் என்ன அர்த்தம்?:):)../வாணியக்கா கவனமாக ஜீனோவைத் தவிர்க்கிறார் என்று அர்த்தம்! சரிதானே வாணியக்கா? /ஓஓஓ .. இது உங்கட அண்ணன், தம்பி இல்லையோ. ஜெய்லானி தெரியும். மற்றது உங்கள் அண்ணன், தம்பி என்று நினைத்து கருத்து சொல்லிப் போட்டேன். இப்ப விளங்குது. எனவே நோ காமன்ட்ஸ்... / நீங்கோ என்ன சொல்லிருக்கீங்கோ என்று உங்களுக்கே புரியாது..இதிலே ஜீனோஸ் மெட்டல் மண்டைக்கு என்கர்ந்து புரியப் போகுது? எனிவேஸ்..ஜீனோ ஆரையும் டிஸ்ரேப் பண்ணாது.
    அதிராக்கா, பார்க் அல்லாம் பண்ண மூட் இல்லை..ஜீனோ காக்கா போறார். எப்பூடி? எப்பூடி?எப்பூடி?

    ReplyDelete
  40. Those bugs are so cute.

    ReplyDelete
  41. நீங்கள் இமாம்மாவின்ட பக்கம் அடிக்கிற கூத்தைப் பாத்திட்டு உங்களை எட்டி பாக்கோணும் என்டு நெடுக‌ நினைக்கிறனான். இன்டைக்குத் தான் நேரம் வந்தது. இருங்கோ எல்லாத்தையும் படிச்சுப்போட்டு வாரன். ஒரு நாலைஞ்சு நாள் தாங்கோ.

    ReplyDelete
  42. ஜீனோ தமாதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் இதைக் கவனிக்கவில்லை. இப்போ அநாமிகாவின் பதிவுபார்த்தே இதைக் கண்டுகொண்டேன்.

    அக்காவிண்ட கலை வண்ணம் தம்பிட மனதை கொள்ளை கொண்டது..பாராட்டுகள்? இப்போ ஓக்கை??/// கர்ர்ர்ர்ர் இப்போ டபிள் ஓக்கை..மிக்க நன்றி.

    நான் ஒபாவிடம் சொன்ன சட்டம் உலகெங்கும் இருக்கும் நாட்டுக்கெல்லாம் போடச்சொல்லி.... அப்பத்தானே.... கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஜீனோவையும் பிடிக்கலாம்.

    லேடீஸ் பின்னால தொடர்வதில்லை எண்டு ஜீனோ புஜ்ஜிக்கு ப்ராமீஸ் பண்ணிருக்கு..குடும்பத்திலை குயப்பம் பன்னாதைங்கோ..ப்ளீ.ஈஈ..ஈ..ஸ்!/// ஆ.... இது எப்ப தொடக்கம்?..... அப்படியெண்டால் ஜீனோ!!! வண்டைக்கூட... வாணாம் நான் ஒண்டும் சொல்லல்லே...

    ஜீனோ மூட் வரும்போது வாங்கோ ஓக்கை மிக்க நன்றி.

    ReplyDelete
  43. அநாமிகா வாங்கோ நல்வரவு. உங்கள் பெயர் பார்த்து பார்த்து, நீங்கள் நன்கு பழகியவர் போல் எனக்கு இருக்கு.
    நேரம் கிடைக்கும்போது பதிவுகள் படியுங்கோ. வரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  44. இப்ப தான் இத பார்த்தேன். வான் கொள்ளை அழகு அதி. எப்படி இதை எல்லாம் என்னிடம் சொல்லவே இல்லை. சரி பொன்வண்டுகளை எல்லாம் பார்சல் செண்ட் டு அமெரிக்கா.

    ReplyDelete
  45. //பின் இணைப்பு:
    நான் “ஆரோக்கியத்துக்காக:)// நடக்கப்போகும்போது//

    hahhahaah :)கிக்கிக்கீ :) ஹாஹு :)
    நாங்க எங்களுக்கா மட்டும் நடப்போம் நீங்க யாருக்காக நடக்கறீங்க ? ஹூ இஸ் ஆரோக்கியம் :)

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.