நல்வரவு_()_


Saturday 22 January 2011

கனியிருப்பக் காய் கவர்தல்


நெடுநாள் மனதில் இருந்த புதையல், இன்று எப்படியும் மேடையேற்றிட எண்ணி களம் இறங்கிட்டேன்.

எனக்கு சின்ன வயது ஞாபகங்கள் அப்படியே பசுமரத்தாணிபோல மனதிலே இருக்கு. நான் முதன் முதலில் கடிதம் எழுதத் தொடங்கியது என் 7 ஆவது வயதில் என நினைக்கிறேன்.

எமது ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவர், அப்போது யூனிவசிட்டி கிடைத்துப் போயிருந்தார். அவர் எப்போதும் என்னோடு நன்கு பாசமாக இருப்பார். யூனி போனதும் அங்கிருந்து எனக்கு மட்டும் தனியாக ஒரு என்வலப்பில் என் பெயர்போட்டு முகவரி இட்டு மெயில் அனுப்புவார், வீட்டில் ஏனையோருக்கு ஒரு மெயில் அனுப்புவார். அந்த வயதில் என் பெயரில் முகவரியிட்டு மெயில் வருவது எனக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். வீட்டில் அண்ணன், அக்கா எல்லோரும் என்னைக் கலைப்பார்கள் கடிதம் படிக்க, நான் ஏதாவது அவர்களிடம் பெற்றுக்கொண்டு (கன்டோஸ், மிட்டாய்... etc.,) படிக்கக் கொடுப்பேன்.

பின், அம் மெயிலை என்னிடமிருந்த குட்டி சூட்கேஷில் பத்திரமாக அடுக்கி வைப்பேன். அவரின் எழுத்து முத்து முத்தாக இருக்கும். எனக்குப் புரியவேண்டும் என்பதற்காக, இன்னும் அழகாக அச்சிட்டதுபோல எழுதுவார். எழுதும் பேப்பரிலும் கோடுகள் வரைந்து அழகாக்கி அனுப்புவார். நான் எப்பவும் எனக்குப் பிடித்தவர்களை என் ரோல் மொடலாக எடுத்துக்கொள்வது வழக்கம், அவர்களின் நடை உடை பாவனைக்கு நானும் மாற முயற்சிப்பேன்(இப்பவும்தான்). அதுபோல் அவரின் எழுத்துக்களை பார்த்துப் பார்த்து நானும் அழகாக்கி எழுதப்பழகுவேன்.

எனக்கு கவிதை, பழமொழிகள், பொன்மொழிகள்.... ஏன் கண்ணதாசனில்கூட ஆர்வம் உருவாக வித்திட்டவர் அவரென்றே சொல்லலாம். அந்தளவுக்கு கடிதத்தில் எப்படியும் ஒரு பொன்மொழியோ பழமொழியோ அல்லது தத்துவமோ எனக்குப் புரியக்கூடிய வகையிலே எழுதுவார். அவரது கடிதம், கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் புத்திமதியாக, நல்ல அன்பாக, ஒரு குழந்தைக்கு எது நல்லதோ அவ்வகையில் அமைந்திருக்கும். இரு பக்கங்களாவது எழுதுவார், நானும் அப்படியே ஸ்கூல் நியூசிலிருந்து வீட்டு நியூசெல்லாம் கொடுப்பேன் பெரிய பதிலாக.

அப்போது எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம், அவரது கடிதம் வந்த மறுநாளே நான் போட்டுவிடுவேன், ஸ்கூலால் வந்ததும் கடிதம் வந்திருப்பின் வாசித்த கையோடு, மேசையில் எல்லாம் இருக்கமாட்டேன், நடுக் ஹோலிலே, நிலத்திலே படுத்திருந்துதான் எழுதுவேன், பின்புதான் சாப்பிடப்போவேன். அதேபோல என் கடிதம் கிடைத்ததும், என்ன படிப்பென்றாலும் பதில் போட்டுவிடுவார்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், எனக்கு அட்ரஸ் எழுதவெல்லாம் தெரியாது, எனவே கடிதத்தை எழுதி அப்பாவிடம் கொடுத்துவிடுவேன், அவர் ஒபீஸ் போகும்போது/வரும்போது போஸ்ட் பண்ணிவிடுவார்.. அப்பாதான் எனக்கு அப்போ தபால்காரர்:).

ஒரு தடவை கடிதம் எழுதி அப்பாவிடம் கொடுத்தேன், எத்தனை நாளில் பதில் வருமெனத் தெரியும், ஆனால் பதில் வரவில்லை, மீண்டும் இன்னொரு கடிதம் எழுதினேன், அப்பாவிடம் கொடுத்தேன், பதில் இல்லை. அப்போ வீட்டில் ரெலிபோன் வசதியெல்லாம் இல்லை. எப்பவாவது விடுமுறை தினத்தில் அப்பாவின் ஒபீஸ் போய் ரெலிபோன்(ஆசைக்கு) யாருடனாவது கதைப்பதுண்டு, ஆனால் இவருடன் கதைக்கமுடியாதென நினைக்கிறேன், கதைத்ததாக நினைவில்லை.

மூன்று கடிதங்கள் போட்டுவிட்டேன் பதில் இல்லை. எனக்கு கோபம்தான் வந்தது, அப்படிப் பதில்போடமுடியாமல் போய்விட்டதே அவரால், ஒருவேளை மறந்துபோய்விட்டாரோ என்றெல்லாம் அந்தக் குட்டி மனதில் கோபம் வந்துவிட்டது.

உடனே அதேபோல குப்புறக்கிடந்து இன்னொருமடல், என் கடிதத்துக்கு ஏன் பதில் போடவில்லை என கோபமாக என்ன எழுதினேனோ நினைவில்லை எழுதி, மீண்டும் என் மதிப்புக்குரிய, நம்பிக்கைக்குரிய தபால்காரரான அப்பாவிடம் கொடுத்து, கொடுக்கும்போது, அப்பாவுக்கும் ஏசினேன், பாருங்கள் அப்பா எத்தனை நாளாகிவிட்டது, நானும் மூன்று கடிதங்கள் போட்டுவிட்டேன் பதில் இன்னும் வரவில்லையே எனச் சொல்லியபடி கொடுத்தேன். அப்பா ஒரு புன் முறுவலோடு, கடிதத்தை வாங்கி, அப்படியா ஆச்சி? என சொல்லிக்கொண்டு பொக்கட்டில் வைத்துக்கொண்டு போய் விட்டார்.

மீண்டும் பழையகணக்குப்படி சரியான நாளில் பதில் வந்திருந்தது. இம்முறை பெரிய கடிதமாக பல பக்கங்களில் பதில் வந்திருந்தது. அவர் எழுதித்தான் எனக்கு உண்மை தெரியவந்தது. நடந்தது என்னவென்றால்...

நான் கடிதத்தை எழுதி அப்பாவிடம் கொடுக்க, அப்பாவுக்கு அந்நேரம் ஒபீஷில் ஏதோ கடும் வேலைபோலும், அதனால் என் கடிதங்களை ஒபீஷ் ரேபிள் லாச்சியில் போட்டு வைத்திருக்கிறார், அனுப்பவில்லை.

நாலாவது கடிதம் கொடுத்தபோது நான் ஏசினேன் தானே, அதன்பின்புதான் போஸ்ட் பண்ணவில்லை என நினைவு வந்து, அப்பா தானும் ஒரு கடிதம் எழுதி, தான் தான் மறந்துவிட்டேன் என, எல்லாக் கடிதத்தையும் ஒரு என்வலப்பிலே வைத்து அனுப்பியிருக்கிறார்.

அப்போதான் அவர் எழுதியிருந்தார், உங்கள் பதில் பார்த்து மிகவும் கவலையடைந்துவிட்டேன். ஏன் என்னோடு கோபித்தீங்கள்? தவறு என்னில் இல்லை, நீங்கள் எப்படி என்னைத் தவறாக நினைத்தீங்கள், என் பதில் வராவிட்டாலும்கூட, நான் பதில் அனுப்பவில்லையே என தப்பான முடிவுக்கு வரக்கூடாது. எனக்கும் எக்ஸாம் நேரமாகவும் இருந்தது, உங்களிடமிருந்தும் பதில் வரவில்லை எனவேதான், எக்ஸாம் முடியட்டும் என விட்டிருந்தேன். எமக்கு கோபம் வந்து, அக்கோபத்தோடு ஒரு கடிதம் எழுதும்போது, அந் நேரம் அது எமக்கு சரிபோலத்தான் தெரியும். ஆனால், எப்பவுமே நாம் ஒரு கடிதமோ பதிலோ அடுத்தவருக்கு அனுப்பும்போது, எழுதுபவராக மட்டும் இருக்கக்கூடாது, வாசிப்பவராகவும் இருந்து, அந் நேரம் வாசிப்பவரின் மனநிலை எப்படி இருக்குமென்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.



“அன்பற்ற இடத்திலிருந்து வரும்
மலையளவு எதிர்ப்பையும்
தாங்குகிற இதயம்,
அன்புள்ள இடத்திலிருந்து வரும்
கடுகளவு எதிர்ப்பைக்கூட
ஏற்க மறுக்கிறதே”

இப்படியெல்லாம் இன்னும் ஏதேதோ... (இப்ப இருந்திருந்தால் அக் கடிதத்தையே ஸ்கான் பண்ணிப்போட்டிருக்கலாம், இடம்பெயர்வுகளோடு அந்த குட்டி சூட்கேஷும் தொலைந்துவிட்டது) எழுதி, முடிவிலே இதை எழுதியிருந்தார்...

“இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக் காய் கவர்ந்தற்கு”

அவர் இதுக்கு மட்டும் கருத்துக்கூறவில்லை, கண்டுபிடியுங்கள் என்றுதான் எழுதியிருந்தார். அத்துடன் அப்பிரச்சனை முடிந்து கடித எழுத்துக்கள் தொடர்ந்தது. எனக்கு அது திருக்குறள் எனத் தெரியாது, ஏதோ பழமொழி என நினைத்துவிட்டேன். ஏன் அப்பா அம்மாவிடம்கூட விளக்கம் கேட்காமல் விட்டேன் எனவும் நினைவில்லை.

ஆனால் சின்ன வயதென்பதால், அதெல்லாம் பசுமரத்தாணிபோல மனதிலே பசுமையாக படிந்துவிட்டிருந்தது. அதனால் இன்றுவரை, ஒரு மெயில் எழுதும்போதுகூட அது நினைவுக்கு வரும். இருப்பினும் என்னதான் கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் விதி தவறாகி, கண்ணை மறைத்து,  வேண்டுமன்றல்ல, யோசிக்காமல் மெயில் அனுப்பி விடுவதுமுண்டு. அது தவறுதான். கடிதம் போஸ்ட் பண்ணியபின், ரேசர் போட்டு அழிக்கவா முடியும்.

“தவறு செய்யாதவர் மனிதர் அல்ல - அதே நேரம்
தன் தவறை உணர்ந்து (மன்னிப்பு கேட்டு) திருந்தாதவரும் மனிதர் அல்ல”.

பின் குறிப்பு:
இக்கடிதம் உணர்த்தும்(எனக்கு உணர்த்தியிருக்கும்) இரு உண்மைகள் என்னவென்றால். குழந்தைப்பிள்ளைதானே என அலட்சியம் கொள்ளாமல், முடிந்தவரை அதுக்கும் புத்திமதிகள், அறிவுரைகளை அன்பாக சொல்லிக்கொடுக்கோணும்... நிட்சயம், அது புரியாதுவிட்டாலும் மனதில் பதியும், வளர வளர அர்த்தம் புரிந்துகொள்ளும். எமது குழந்தையென்றல்ல, எமக்கு பிடித்த யாரின் குழந்தையானாலும் சரி.. அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறலாம்.



அடுத்தது, எப்பவுமே நாம் எழுத்தாளராக மட்டும் இல்லாமல் அதை வாசிப்பவராகவும் இருந்து, வாசிக்கும்போது அடுத்தவரின் மனநிலை எப்படியிருக்கும்.. அதாவது ஒருவேளை எனக்கு இப்படியொரு கடிதம் வந்திருந்தால், என் மனநிலை எப்படி இருக்கும் என எண்ணியபின்னே போஓஓஓஒஸ்ட் பண்ணோனும்.

இந்தக் கண்ணில ஏதாவது தெரியுதா?

47 comments :

  1. கடிதங்கள் எழுதியது ஒரு காலம்..பழைய நினைவுகளை நினைவுபடுத்திட்டீங்க அதிரா!

    குழந்தைகளுக்குப் புத்திமதி சொல்லும்படி கடிதம் எழுதுவது மிகவும் நல்லதுதான்,ஆனால் இந்தக் காலத்தில் ஈமெயில்,கொசுமெய்ல் எல்லாம் வந்துடுச்சே..குட்டீஸுக்கும் ஒரு மெய்ல் அக்கவுண்ட் ஓபன் பண்ணிதந்துட வேண்டியதுதான்! :)

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு அதிரா.

    எப்பவுமே நாம் எழுத்தாளராக மட்டும் இல்லாமல் அதை வாசிப்பவராகவும் இருந்து, வாசிக்கும்போது அடுத்தவரின் மனநிலை எப்படியிருக்கும்..

    அருமையாக சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  3. வரேன் வரேன் பூஸார் வரமாட்டார் வந்தால் 10 பக்கத்து மிகாமல் எழுத மாட்டா

    முடியல
    பாதி தான் படிக்க நேரம் கிட்டியதும், பிற்கு வரேன்

    ReplyDelete
  4. ஓ படித்து விட்டேன்
    தத்துவம், குறளுடன், ஊசிகுறிப்போடு அருமை, குழ்ந்தைகள் உள்ள்ளதை புரிந்து கொள்ள ஒரு நலல் பதிவு, கடிதம் யாருக்கும் எழுதியது கிடையது, என் ஹஸ் சவுதியில் இருந்த போது அவருகு எழுதியது அப்ப போன் வசதி கிடையாது, அபப்ரம், இங்கு வந்தபிறகு அம்மா அப்பாவுக்கு,
    இப்ப தான் தடுக்கி விழுந்தா போன் கிடைகுதேன்.
    மெயில் என்று கை எழுத்தே மற்ந்துவிட்டது போல் இருக்கு எல்லாமே தட்ட்டச்சு தான்

    ReplyDelete
  5. உங்க மனதின் புதையல் அருமையாக இருந்தது அதிரா!

    "அன்பற்ற இடத்திலிருந்து வரும்
    மலையளவு எதிர்ப்பையும்
    தாங்குகிற இதயம்,
    அன்புள்ள இடத்திலிருந்து வரும்
    கடுகளவு எதிர்ப்பைக்கூட
    ஏற்க மறுக்கிறதே"

    இதை பலமுறை அனுபவித்திருக்கிறேன். உண்மையான வார்த்தைகள்! என்ன எங்க பக்கமெல்லாம் வரமாட்டீங்களா அதிரா..?

    ReplyDelete
  6. அருமையா இருந்தது அதிரா

    ReplyDelete
  7. உங்க கடிதப்புதையல் மிகவும் சுவாரஸ்யமாகவும்,கருத்தாழமிக்கதாகவும்,படிப்பினையாகவும் இருக்கு.
    நான் ஆசிரியராக வேலைபார்த்த சித்தப்பாவுக்கு முதல் கடிதம் எழுதினேன்.ஞாபகம்
    இப்பவும் இருக்கு. கடிதம் இப்பவும் ஊருக்கு எழுதுகிறேன்,
    சகோதரியிடம் கணனி,தொலைபேசி இல்லாத
    காரணத்தால்.

    //எப்பவுமே நாம் எழுத்தாளராக மட்டும் இல்லாமல் அதை வாசிப்பவராகவும் இருந்து, வாசிக்கும்போது
    அடுத்தவரின் மனநிலை எப்படியிருக்கும்.// சூப்பர் கருத்து.

    பூஸார் மன்னிப்பு கேட்பது யாரிடம்?
    நன்றி அதிரா.

    ReplyDelete
  8. மனதினுள் புதையுண்டு போய் இருந்த புதையலை வெளிக்கொணர்ந்து இருந்த விதம் அருமை.இப்பொழுது பேனா பிடிக்கவே கை வலிக்கின்றது.அனைவரிடமும் கணினி,இண்டர்நெட் வசதி,ஓரளவு கம்பியூட்டர் அறிவு என்றாகிப்போன இந்த காலகட்டத்தில் கண் இமைக்கும் நேரத்தில் நம் மனதில் பட்டதை பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருப்போரையும் சென்று அடைந்து விடும் விஞ்ஞான வளர்ச்சி கிடைத்ததும் கடிதங்கள் கொஞ்சம்,கொஞ்சமாக மறைந்து வருவது என்பது வருந்ததக்க உண்மை.

    ReplyDelete
  9. வாங்க மஹி. கடிதம் என்றில்லை அனைத்துக்கும் இப்போ இது பொருந்துதே, பின்னூட்டமானாலும்கூட.
    குட்டீசுக்கு இப்போ மெயில் படிக்க கூட நேரமில்லை ஹேம்ஸ் தலைக்குமேல வந்திட்டுது. ஆனாலும் கடிதம் வைத்து பார்த்துப் பார்த்துப் படிப்பதைப்போன்ற சந்தோசம், இந்த ஈ கடிதங்களில் குறைவுதான் இல்லையா?

    மிக்க நன்றி மஹி.

    ReplyDelete
  10. மிக்க நன்றி ஆசியா. உண்மைதான், ஆனால் இதை சிறுவயதுமுதல் மனதில் தெரிந்து வைத்திருக்கும் நானே சில நேரங்களில் தவறு செய்திருக்கிறேன்.

    ஆனால் தவறிச் செய்வது தவறு, தெரிந்து செய்வதுதான் தப்பாம். எனவே தவறு என்பது மன்னிக்கப்படலாம்?:).

    ReplyDelete
  11. ஜல் ஜல் ஜலீலாக்கா வாங்க, எப்பவுமே ”கிணற்று விளிம்பிலே குழந்தையைக் கிடத்திப்போட்டு வந்ததுபோல”:) அவசர அவசரமாக வந்திட்டு ஓடுறீங்க.

    கடிதம் எல்லாம் ஒருகாலம்தான். நான் சின்ன வயதிலேயே விடுமுறை நாட்களில் என் வகுப்புத் தோழிகளோடு கடிதம்மூலம் கதைப்பதுண்டு. அம்மம்மா வீடு அப்பம்மா வீட்டினருக்கெல்லாம் கடிதம் எழுதிப்போடுவேன். எங்கள் வீட்டில் பொறுமையாக இருந்து இப்படியான வேலைகள் செய்வது நான் தான்...... பொறுமையின் சிகரம்.... ஆ.... முறைக்காதீங்க. மிக்க நன்றி.

    ReplyDelete
  12. அஸ்மா வாங்க அஸ்மா. என்ன அப்படிக் கேட்டுவிட்டீங்கள், நான் வருவேன். என்னிலுள்ள ஒரு குறை, இங்கே என் பக்கத்திலே இணைத்திருக்கும் புளொக்குகளை மட்டுமே போய் பார்வையிடுகிறேன், ஃபலோவராக இணைந்திருந்தாலும், மெயில் ஐடியினுள் போய்ப் புதுப்பதிவு பார்க்கும் பழக்கம் இன்னும் எனக்கு வரவில்லை அதனால்தான். மன்னிக்கவும் வருகிறேன் உங்கள் வீட்டுக்கு.

    இன்னுமொன்று, எப்பவும் நேரத்தோடு போராடியே நெட்டுக்கு வருவதுண்டு, அதனால் சில புளொக்குகளுக்கு பதில் போட்டதும், நேரம் போதாமலிருக்கும் ஏனையவற்றுக்கு தாமதமாகப் போடுவது, இதனால் ஏனையோர் குறை நினைப்பார்களோ என்ற ஏக்கத்தில் சிலநேரம் மொத்தமாக ஒன்றுக்குமே போகாமல் இருப்பேன்...

    மிக்க நன்றி அஸ்மா, தேடி வந்து தேடியமைக்கு.

    ReplyDelete
  13. வாங்க ஆமினா முதன்முதலில் வந்திருக்கிறீங்க நல்வரவு. உங்களை முதன்முதலில் பார்த்தேன் ஹைஷ் அண்ணனின் புளொக்கிலே.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  14. வாங்க அம்முலு மிக்க நன்றி. எனக்கும், பிடித்தவர்களுக்குக் கடிதம் எழுதப்பிடிக்கும். எழுத்துவேலை இல்லாமல் இன்ரநெற்றிலேயே காலம் போவதால் எழுத்தின் அழகும் குறையப்பார்க்குது, தீட்டத்தீட்டத்தானே தங்கம் துலங்குமாம்.. அப்பூடித்தான்:).

    ///பூஸார் மன்னிப்பு கேட்பது யாரிடம்?/// பலமாகச் சிரித்திட்டேன் அம்முலு:):), மெயின் சுவிச்லயே கை வைத்திட்டீங்க:)).

    மிக்க நன்றி அம்முலு.

    ReplyDelete
  15. வாங்க ஸாதிகா அக்கா. மிக்க நன்றி. உண்மைதான், கடித்தத்தைப் போஸ்ட்டிலே போட்டுவிட்டு கிடைத்துவிட்டுதோ கிடைத்திருக்குமோ என தினமும் எண்ணி, பதில் காணும்வரை காத்திருந்த காலம்போய், இப்போ எல்லாம் டக்கு பக்கு என்றாகிவிட்டது.

    எங்கள் அம்மம்மா முறையான ஒருவர் ஒருமுறை என்னிடம் சொன்னார், ஆன்ரி ஒருவருக்கு ஒரு மெயில் ஒன்றை அனுப்பும்படி, நான் ஈ மெயிலில் அட்டாச் பண்ணி அனுப்பிவிட்டுச் சொன்னேன், அனுப்பிவிட்டேன் நெற் மூலம் என, உடனே அவ கேட்டா, வெளி நாடெல்லோ எத்தனை நாள்ல போய்ச் சேரும் என்று:).

    ReplyDelete
  16. வணக்கம்... முதலில் பாரட்டுக்கள் கூடவே ஒரு சல்யூட்...! உங்களுக்கு பின்னால் இப்படி ஒரு விடயம் இருக்குனு நான் நினைச்சு கூட பார்க்கல... ஆச்சரியமாகவும், அதிக மகிழ்ச்சியாகவும் இருக்கு. உங்களூடைய எழுத்துக்கள் வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கு...! பொதுவாகவே கவிதைகளை தவிர ப்ளாக்களில் எதையும் நான் அதிகம் வாசிப்பதில்லை(பொறுமை இல்ல & bore அடிச்சிடும்). ஆன நீங்க எழுதிருக்கிறது bore அடிக்குற மாதிரி இல்லை. அது ஏன்னா, நீங்க எழுதிருக்குற விதம் சூப்பர்( சத்தியமா இது உண்மை தாங்கோ)...! மீண்டும் ஒரு முறை பாரட்டுக்கள்... தொடர்ந்து கலக்குங்க...! உங்களுக்காகவும் உங்க பதிவுகளுக்காகவும் இங்கே நிறைய பேர் காத்துகிட்டு இருக்காங்க(ஒரு பதிவை வாசித்த போது புரிந்தது). பயப்படாதீங்க 2012 ல எல்லாம் உலகம் அழிஞ்சிடாது...! so தொடர்ந்து கலக்குங்க...! தொடர்ந்து நிறைய எழுதுங்க...! வாழ்த்துக்கள் & மீண்டும் ஒரு முறை பாரட்டுக்கள்..!

    ReplyDelete
  17. அதிரா மலரும் நினைவுகளைக்கிளப்பி விட்டுட்டீங்க. என் அம்மா எனக்கு எழுதும் கடிதங்களை என்னால் மட்டுமே படிக்க முடியும்.எழுத்து ஆரம்பிப்பது ஓரிடம் முடிவது ஓரிடம்,எறும்பு போல குட்டி எழுத்துக்கள்.கமா, முற்றுப்புள்ளி இது போல எந்த அடையாளங்களும் அன்பு மட்டுமே தெரியும்.

    ReplyDelete
  18. கவிக்கா... வாங்கோ வாங்கோ நல்வரவு. முதன்முதலில் வந்து வாழ்த்தியிருக்கிறீங்க மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி.

    //உங்களுக்கு பின்னால் இப்படி ஒரு விடயம் இருக்குனு நான் நினைச்சு கூட பார்க்கல... // இந்தக்காலத்தில நினைக்காததுதான் நடக்குது, நினைப்பது நடப்பது அரிதுதான்:).

    //ஆன நீங்க எழுதிருக்கிறது bore அடிக்குற மாதிரி இல்லை. அது ஏன்னா, நீங்க எழுதிருக்குற விதம் சூப்பர்( சத்தியமா இது உண்மை தாங்கோ)...! // மிக்க நன்றி. வந்த முதல்நாளே உருக வச்சிட்டீங்க. ஒவ்வொருவர் ஒவ்வொருவிதம். உங்கள் கவிதை கண்டு, எப்படி இப்படியெல்லாம் சிந்தித்து எழுதுகிரீங்கள் என வியந்திருக்கிறேன். எனக்கும் கவிதை என்றால் ரொம்ப பிரியம்.... மனதைத் தொடும் கவிதைகளாக இருக்க வேண்டும்.

    /// 2012 ல எல்லாம் உலகம் அழிஞ்சிடாது...! /// என்ன உலகம் அழியாதோ? வந்த முதல்நாளே இப்படிக் குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டீங்களே... இது ஞாயமா?.

    இதையும் படிச்சுப் பாருங்க...

    http://www.z9tech.com/view.php?22AOld0bcZ90Qd4e3AMC202cBnB2ddeZBn5203eCAA2e4609racb3lOo42

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிக்கா.

    ReplyDelete
  19. லக்ஸ்மி அக்கா வாங்கோ மிக்க நன்றி.
    உண்மைதான் கடிதங்கள் ஒருகாலத்தில் பொக்கிஷமாகவே பேணப்பட்டு வந்தது.

    ஆனாலும் இப்பகூட நான் மெயில்களை... அதுவும் எனக்கு முதன்முதலில் வரும் மெயில்களை எப்பவும் சேகரித்து வைக்கும் பழக்கம் உண்டு. டிலீட் பண்ண மனம் வராது. ஏன் எனக்கு முதன் முதலில் ஒருவரிடமிருந்து போனுக்கு வரும் ரெக்ஸ்ட்டைக்கூட சேர்த்துத்தான் வைத்திருப்பேன்.

    ReplyDelete
  20. //இந்தக்காலத்தில நினைக்காததுதான் நடக்குது, நினைப்பது நடப்பது அரிதுதான்:).//ஆமா உண்மைதான்...


    //இதையும் படிச்சுப் பாருங்க...

    http://www.z9tech.com/view.php?22AOld0bcZ90Qd4e3AMC202cBnB2ddeZBn5203eCAA2e4609racb3lOo42
    //
    இது எல்லாம் முன்னமே கேள்விப்பட்ட விடயங்கள் தான்... பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லை...! பூமி தானா எல்லாம் அழியாது...! நாம எல்லாருமா சேர்ந்து ஒரு அழிப்பான்(eraser) கண்டுபிடிச்சு அழித்தாதான் உண்டு..(எங்கப்பா இங்கே தப்பி ஓடுறதுக்கு நாய்குட்டி எல்லாம் வராதா...)

    ReplyDelete
  21. அதீஸ்! சூப்பர் போங்க!!! எனக்கும் இப்படி பல நேரம் தோன்றி இருக்கு.. நல்லவிதமாக சொல்லவேண்டிய விசயங்களை கூட எதிர்மறையாக பேசும் மக்களை என்ன சொல்ல. தெரியாம சொல்லிட்டேன்னு சொன்னாலும் சொன்ன சொல்லை வாங்க முடியுமா... உமியும் அரிசியும் நெல்லாகிடுமா

    அதைவிடுங்க... இன்னொரு சங்கதி எனக்கு ரொம்ப பிடித்தமானது. குழந்தைகளிடையே நல்ல குணங்களை வளர்ப்பது. கடிதம் எழுதுவது ஒரு ஃபார்ம் ஆஃப் எக்ஸ்ப்ரெஷன். அதுவும் பேப்பருக்கு பேனாவை முத்தம் கொடுக்க செய்யும் போது அந்த நொடி சுகமே சுகம் தான்... சில நேரம் சொல்ல முடியாம இருக்கும் உள்மன விசயங்களுக்கு எழுத்து ( பேப்பர்/பேனா) ரொம்ப பெரிய வடிகால். அடிப்படை கம்யுனிகேஷன் ஸ்கில் வளர்க்க உதவுது. இப்பல்லாம் பிள்ளைகள் எப்படி லீவு லெட்டர் எழுதராங்க தெரியுமா??
    நீங்க "மூஞ்சுறு" புத்தகத்தில பாத்திருக்கலாம் :)
    லின்க் அனுப்பறேன்..கர்ர்ர் சொல்லக்கூடாது ஒகேவா

    அன்பான அறிவுரை : மருமகன் ப்ரீஸ்கூல் போனது அடிக்க கத்துக்கொண்டார்..
    நிக்கில் இங்க பாருங்க ... அத்தைய பாருங்க... அடிக்கறது தப்பு தானே ????
    தலைய குனிந்து ஓரக்கண்ணால் நான் பார்க்கிறேனா என்று ஒரு கள்ள பார்வை.. தப்பு நிக்கில்... மீண்டும் அதே கள்ளப்பார்வை :)) அடிச்சா வலிக்குமில்ல... {{XOXOXO}}

    ReplyDelete
  22. நாம எல்லாருமா சேர்ந்து ஒரு அழிப்பான்(eraser) கண்டுபிடிச்சு அழித்தாதான் உண்டு..//
    சேர்ந்தவங்களே பிரிஞ்சுபோறாங்க இப்போ, பிறகெங்க சேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்து அழிப்பானைக் கண்டுபிடிக்கிறது.. நீங்க வேற எரியுற நெருப்பில எண்ணெய ஊத்துறீங்க:)

    (எங்கப்பா இங்கே தப்பி ஓடுறதுக்கு நாய்குட்டி எல்லாம் வராதா...) ... /// கவிக்கா... இங்க “அந்த” நாய்க்குட்டி எல்லாம் கிடைக்காது:), ஜீனோ பப்பிதான் உண்டு... அதுதாங்க என் உடன் பிறப்பு.. இமா/இல்ஸ்ஸ் டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... நினைவு வெள்ளம் பெருகிவர நெருப்பெனவே சுடுகிறது..(நான் தம்பிக்குப் பாடுவேனா அண்ணனுக்குப் பாடுவேனா).

    எச்சூஸ்மி கவிக்கா..., ஜீனோவை நினைச்சனா அதுதான் பீலிஸ்சாப்போச்சு:)வேறொன்றுமில்லை,புதுசா வந்திருக்கிறீங்க பயந்திடாதீங்க நா...... ன் இப்புடித்தான்:).

    மிக்க நன்றி கவிக்கா.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. இல்ஸ்ஸ் வாங்க...
    ///தெரியாம சொல்லிட்டேன்னு சொன்னாலும் சொன்ன சொல்லை வாங்க முடியுமா... உமியும் அரிசியும் நெல்லாகிடுமா ///
    என்ன நீங்க வந்தா வந்த வேலையைப் பார்த்திட்டுப் போறதை விட்டுட்டு:):) வயிற்றில புளியைக் கரைக்கிறீங்க:).

    இல்ஸ்ஸ் உள்ளத்தாலை நினைச்சுச் செய்தாத்தான் பிழை.

    “நல்ல நண்பர்கள்/உள்ளங்கள் மறப்பார்கள்
    நம்மையல்ல நாம் விட்ட தவறை”

    சரி சரி அதை விடுங்க...
    //நீங்க "மூஞ்சுறு" புத்தகத்தில பாத்திருக்கலாம் :)// இல்ல இல்ஸ்ஸ், நீங்கதான் லொக் பண்ணி வச்சிருக்கீங்களே... நான் எப்பவாவது ஒரு தடவைதான் போவதுண்டு... ஹைஷ் அண்ணனின் ஜீனோ டோராவுக்கும் செய்தும் ஹெல்ப் பார்த்தேன் புல்லாஆஆஆஆஅ அரிச்சுது....

    லீவ் லெட்டர் சூஊஊஊப்பர்.

    ///மீண்டும் அதே கள்ளப்பார்வை :)) அடிச்சா வலிக்குமில்ல../// அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும்... ஆனா (அத்தையை) சைட் அடிச்சா வலிக்குமா?:).

    இல்ஸ் நீங்க ஐபோன் வாங்கின காலத்திலயே சொல்ல நினைத்து வருஷமே கடந்திட்டுது...

    அப்ஸ் ஸ்ரோர் போய் “Talking Tom" டவுன்லோட் பண்ணுங்க இலா(ஃபிறீ தான்)... கால்ல அடிச்சா பூஸ் ஐயோ என கத்தும், வால்ல அடிச்சா நோஓஓஓஓ எனச் சொல்லும் தடவிவிட்டா சந்தோசப்படும்.... இப்பூடியே இருக்கு.. அதில இப்படி நிறைய இருக்கு இருந்தாலும் “பூஸ்” என்றால் ஒரு “இது” இல்ல... பிறகு மருமகன் விடவே மாட்டார் உங்களை:).

    மிக்க நன்றி இல்ஸ்ஸ்.

    வானுயர்ந்த சோலையிலே... அது சிட்டுவேஷன் சோங் இலா... பிபிசில போகுது... முடியல்ல மக்கள்ஸ்ஸ்.

    ReplyDelete
  25. //புதுசா வந்திருக்கிறீங்க பயந்திடாதீங்க //
    ஓஓ... நான் கொஞ்சம் தைரியசாலி ஆனதால பயப்படல... வீக் ஹார்ட் இருக்குறவங்க வந்திருந்தாங்கனா பயந்திருப்பாங்க... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்( எனக்கும் உங்களை மாதிரி கோபப்பட தெரியும்):P

    அதுசரி உங்க ஜீனோ பப்பி எங்கே...?

    ReplyDelete
  26. //அதுசரி உங்க ஜீனோ பப்பி எங்கே...? ///

    கவிக்கா அந்த சோக ஸ்ரோறிய ஏன் கேக்குறீங்க... அதெல்லாம் ஒரு காலம்.... கொஞ்சம் பொறுங்கோ கண்ணைத் துடைச்சிட்டு வாறேன்...

    இங்கபோய்ப் பாருங்கோ... அக்காவும்(அது நாந்தேன்:)..) தம்பியும் நிற்கும் அழகை...

    http://genos-corner.blogspot.com/

    ReplyDelete
  27. //இங்கபோய்ப் பாருங்கோ... அக்காவும்(அது நாந்தேன்:)..) தம்பியும் நிற்கும் அழகை...

    http://genos-corner.blogspot.com/ //
    ஓகேய்... கண்டிப்பாக பார்க்கிறேன்...!

    ReplyDelete
  28. எப்பவுமே நாம் எழுத்தாளராக மட்டும் இல்லாமல் அதை வாசிப்பவராகவும் இருந்து, வாசிக்கும்போது அடுத்தவரின் மனநிலை எப்படியிருக்கும்..
    அதிரா நிஙக எதை எழுதினாலும் அதில் ஒரு நல்ல கருத்து+உண்மையா உங்க எழுத்தில் ஏதோ ஒன்று எனக்கு எப்பவுமே பிடித்து இருக்கும். அது என்று சொல்வது என்றால் கொஞ்சம் கடினம். ஏன்னா நிங்க எது எழுதினாலும் அது அர்த்தம்,அழகு, நகைச்சுவை, நட்பு,வெளிப்படை இப்படி எழுதிட்டே போகலாம். உங்க எழுத்து எப்பவுமே பிடிக்கும். நானும் ஒருதடவையாவது முதலில் வ்ந்து பதிவு போடனும் என்று நினைப்பேன்.என்ன நிங்க சொல்வது போல் நான் என்றைக்கும் எல்லா ப்ளாக்கும் போக இயலாது. ஆனால் கண்டிப்பா போயி நல்லா படித்து கருத்தை சொல்லும் பழக்கம் உண்டு.

    ReplyDelete
  29. கொஞ்ச நேரத்துல என்னுடைய சின்ன வயசுக்கே போயிட்டேன் ...நிறைய நினைவுகள் ..என்ன சொல்றதுன்னே புரியல.....

    ReplyDelete
  30. //“இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக் காய் கவர்ந்தற்கு”//

    இதை படிச்சதும் பழைய நினைவு ஒன்னு வந்து சிரிச்சதில் வயிற்று வலியே வந்துட்டது எனக்கு..

    நான் 5 வது படிக்கும் போது தமிழ் வாத்தியார் ( பக்கத்துல போனா கப்படிக்கும் , குளிக்கவே மாட்டார் . ஓரு வேளை தண்ணி அலர்ஜியோ என்னவோ )) இதை சொல்லி விட்டு இதுக்கு ஒரு உதாரணம் கேட்டார் என்னிடம் ..

    எல்லாரும் ஆளுக்கு ஒன்னு சொல்ல நான் மட்டும் “” சார் சோப்பிருக்க , கோவனம் இருக்க தண்ணி இருக்க குளிக்காமல் இருப்பது “” அப்படி சொன்னேன்...

    அவ்வளவுதான் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி அவர் என்னை துறத்த நான் ஓட ஸ்கூலையே மூனு ரவுண்ட் அடிச்சிட்டு அப்படியே வீட்டுக்கே ஓடிட்டேன்..

    வீட்டுக்கு போனா ஏண்டா ஸ்கூலை இந்த வயசிலேயே கட்டடிக்கிறியான்னு அவங்க விரட்ட அன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ ஒரே ரன்னிங்க் ரேஸ்தான்...ஹா..ஹா..

    ReplyDelete
  31. பாருங்க கவிக்கா மிக்க நன்றி.

    ReplyDelete
  32. வாங்க விஜி,

    ///ஏன்னா நிங்க எது எழுதினாலும் அது அர்த்தம்,அழகு, நகைச்சுவை, நட்பு,வெளிப்படை இப்படி எழுதிட்டே போகலாம். உங்க எழுத்து எப்பவுமே பிடிக்கும்/// என்னைப் புல்லா அரிக்க வச்சிட்டீங்களே.... இதை அப்படியே கொப்பி பண்ணி.. மேலே போட்டுவிடப்போகிறேன்:), எல்லா இடமும் புகைக்கிறமாதிரி இருக்கே:)..

    உண்மைதான் விஜி, 100 புளொக்குக்குப் போய் அருமை, சூப்பர், நல்லாயிருக்கு என ஒரு சொல்லில் பிரசெண்ட் போடுவதில் என்ன இருக்கு. அதை வாசித்து நல்லதோ கெட்டதோ அதுபற்றி 4 வார்த்தை சொன்னால்தானே/ ஏசினால்தானே:) எழுதியவர்களுக்கும் ஊக்கமாகும்.

    மிக்க நன்றி விஜி.

    ReplyDelete
  33. ஜெய்லானி said... 29
    கொஞ்ச நேரத்துல என்னுடைய சின்ன வயசுக்கே போயிட்டேன் ...நிறைய நினைவுகள் ..என்ன சொல்றதுன்னே புரியல..... ///
    மனதில் நினைவு வந்தவுடன் எழுதிடோணும் ஜெய்.. படிக்க நாங்க ரெடியாஆஆஆஆ இருக்கிறமில்ல:).

    //“” சார் சோப்பிருக்க , கோவனம் இருக்க தண்ணி இருக்க குளிக்காமல் இருப்பது “” அப்படி சொன்னேன்.../// விழுந்து விழுந்து சிரித்தேன் ஜெய்.. இது தேவையா உங்களுக்கு?:)).

    மிக்க நன்றி.

    ReplyDelete
  34. //என்னைப் புல்லா அரிக்க வச்சிட்டீங்களே.... இதை அப்படியே கொப்பி பண்ணி.. மேலே போட்டுவிடப்போகிறேன்:), எல்லா இடமும் புகைக்கிறமாதிரி இருக்கே:)..//

    சோப்புக்கு பதில் செங்கல் வச்சிதான் தேய்க்கனுமோ..வடிவா பாருங்க ..ச்சே..எனக்கு ஏன் புகையுது :-))

    ReplyDelete
  35. நீங்க கப்படிக்கிற (ஸ்மெல் ) வாத்திகிட்ட படிச்சிருந்தா அந்த வே(சா)தனை புரியும்...கி..கி.... குறளுக்கு அர்த்தம் சரிதானே..!! :-))

    ReplyDelete
  36. ஜெய், தண்ணிக்குள்ள இருந்தே இப்பூடி புகை வருதே... அப்போ வெளியில இருந்தெல்லாம் எப்பூடிப் புகைக்கும்...:)))))))))).

    //நீங்க கப்படிக்கிற (ஸ்மெல் ) // கப்படிக்கிற என்றால் இதுவோ அர்த்தம் நான் நினைப்பதுண்டு அல்ககோல் அருந்துபவர்களைத்தான் அப்பூடிச் சொல்வதாக்கும் என.

    அதுசரி, எதுக்கு நீங்க வாத்தியாருக்கு கிட்ட கிட்டப் போய் மணந்து பார்க்கிறீங்க? தள்ளி நிற்க வேண்டியதுதானே?:).... அதென்ன மணமாக இருக்குமென ஆராட்சி செய்தீங்களோ:)... ஆ.... அடிக்காதீங்க, அடிச்சா வலிக்குமில்ல?:)))).

    ReplyDelete
  37. //அதுசரி, எதுக்கு நீங்க வாத்தியாருக்கு கிட்ட கிட்டப் போய் மணந்து பார்க்கிறீங்க? தள்ளி நிற்க வேண்டியதுதானே?:).... அதென்ன மணமாக இருக்குமென ஆராட்சி செய்தீங்களோ:)... ஆ.... அடிக்காதீங்க, அடிச்சா வலிக்குமில்ல?:)))). //

    பக்கத்துல போனாவே குப்பை லாரி கிராஸ் பண்ன ஸ்மெல் அடிக்கும் இதுல ஆராய்ச்சியா அவ்வ்வ்வ்

    ReplyDelete
  38. அதிரா...,அழகான நினைவலைகளை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி.இதில் நாங்களும் முக்கியமான ஒன்றை கற்றூ கொள்ள முடிந்தது.
    படிப்பவர் நிலையிலிருந்தும் ஒரு கடிதம் அனுப்ப வேண்டும் என்பது நல்ல விஷயம்.நானும் என் மனதிற்க்குள் போட்டு கொள்கிறேன்.அதிலும் குறிப்பாக
    “அன்பற்ற இடத்திலிருந்து வரும்
    மலையளவு எதிர்ப்பையும்
    தாங்குகிற இதயம்,
    அன்புள்ள இடத்திலிருந்து வரும்
    கடுகளவு எதிர்ப்பைக்கூட
    ஏற்க மறுக்கிறதே”
    மிகவும் அழகான வரிகள்... உண்மையானதும் கூட...
    சுந்தரகண்டம் என்ற படத்தில் பாக்கியராஜ் ஆசிரியராக இருப்பார்.அதில் அவர் க்ளாஸ் எடுக்கும் போது..
    *** நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஆசிரியரே... அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள ஏதோ ஒரு விஷயம் இருக்கும் ***
    என்று சாக்ரடீஸோ...ப்ளூட்டோவோ... சொன்னதாக பாடம் நடத்துவார்.
    அதை அந்த விஞ்ஞானி சொன்னா கூட எனக்கு பதிந்திருக்குமோ என்னவோ தெரியாது.இந்த படம் பார்த்ததும்,மனதில் பதிந்தது.... அதே போல் நானும் ஒவ்வொருவரிடமும் எதேனும் ஒரு விஷயத்தை கற்று கொள்வேன்.அப்படியே இன்று தி க்ரேட் அதிராவிடம் இந்த விஷயத்தை கற்று கொள்கிறேன்.
    மிகவும் நன்றி அதிரா...
    பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.....
    ((( கருத்து சொல்ல சொன்னா கதையா சொல்றேன்னு பூனை ஸ்டைலில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ந்னு முறைக்காதீங்க அதிரா...)))

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  39. ஜெய்... பூனைப் பாடல் ஒன்று இயற்றிப் பாடுங்களேன் யூஊஊஊஊஊஊஊஊ ரியூப்ல இணைத்துக் கேட்போம்....

    இதைப் படிச்சதும் பழையபடி தண்ணியை நாட வேண்டாமென பிரித்தானிய நீதிமன்றம் ஆணையிடுகிறது.:))))

    ReplyDelete
  40. //ஜெய்... பூனைப் பாடல் ஒன்று இயற்றிப் பாடுங்களேன் யூஊஊஊஊஊஊஊஊ ரியூப்ல இணைத்துக் கேட்போம்....//

    இப்பதான் அங்கே நல்லா திட்டிட்டு வரேன்..இது வேறயா அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  41. வாங்க அப்ஷரா, உண்மைதான் எங்க என்ன விழுகுதோ அதையெல்லாம் பொறுக்குவதுதான் என் தொழில்.... அப்படித்தான் சேகரித்து வைத்திருக்கிறேன்... ஒவ்வொரு சம்பவம் நிகழும்போதும் ஒவ்வொன்று திடீரென நினைவு வரும்.

    பின்னூட்டம் என்றால் கருத்து மட்டும்தான் சொல்லவேண்டுமா இல்லவேயில்லை... என்ன சொன்னாலும் எனக்குப் பிடிக்கும்.... என் பக்கம் வந்துபோவதுதான் சந்தோஷம்...

    மிக்க நன்றி அப்ஷரா.

    ReplyDelete
  42. ஜெய்.... இருக்கிறீங்களா? நான் சிரித்ததைப் பார்த்து எங்கள் சின்னவர் கேட்கிறார் வட் இஸ் தட் என......

    இல்ல ஜெய்... முன்பு கேட்டமா இல்லையே, இப்போ உங்கட குரலைப் பார்த்தபின்னர்தானே ஓடர் வந்திருக்கு.... முதல் ஓடர் என்பதால சாமியைக் கும்பிட்டு பூசை எல்லாம் வச்சு எடுங்க ஜெய்... அடுத்து யாரெல்லாம் கேட்கப்போறாங்களோ?:))).

    ReplyDelete
  43. //பின்னூட்டம் என்றால் கருத்து மட்டும்தான் சொல்லவேண்டுமா இல்லவேயில்லை... என்ன சொன்னாலும் எனக்குப் பிடிக்கும்//

    அதானே டெம்பிளேட் கமெண்ட் மாதிரி ரெண்டே வரி பதில் யாருக்கு வேனும் ஹா..ஹா..

    சர்தார்ஜியிடம் ஒரு பெண்...

    “நான் உன்னைக் காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்”

    “அது முடியாது. எங்க வீட்டுலே எல்லோரும் சொந்தத்துலேதான் கல்யாணம் பண்ணிக்குவாங்க. எங்க தாத்தா, எங்க பாட்டியைத்தான் கல்யாணம் பண்ணினார்; எங்க மாமா எங்க அத்தையைத்தான் கல்யாணம் பண்ணினார்; எங்க அப்பா எங்க அம்மாவைத்தான் கல்யாணம் பண்ணினார். அதனாலே உன்னை என்னால கல்யாணம் பண்ண முடியாது. மன்னிச்சுடு...”

    ReplyDelete
  44. அதானே டெம்பிளேட் கமெண்ட் மாதிரி ரெண்டே வரி பதில் யாருக்கு வேனும் ஹா..ஹா..

    // அதுதானே ஜெய் அப்பூடிச் சொல்லுங்கோ...

    சர்தாஜி படும்பாடு சொல்லவே முடியாது... அப்போ இந்த ஜென்மத்தில சர்தாஜிக்கு திருமணமே ஆகாதுபோல...:):) ஒருவேளை 2012 க்குப் பிறகு நடக்கலாம்...:))) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  45. இது ஜெய்ய்யுக்கு:

    எனக்கு அப்போ 6 வயசு, 2ம் வகுப்பில் படிக்கிறேன்,வகுப்பில் நால்வர் இருந்தோம், ஆங்கில ஆசிரியை, மேசையிலே 3 ஆப்பிள்களை வைத்துவிட்டு என்னிடம் கேட்டா... அதிரா இதை எப்படி 4 ஆக புறிப்பீங்கள் என, நான் சொன்னேன்... ரீச்சர் எனக்கு வேண்டாம், அதை ஏனைய மூவரிடம் கொடுத்துவிடுங்கோ என....

    இதிலிருந்து என்ன தெரியுதெண்டால்......
    நான் அப்போ தொடக்கமே ரொம்ப நல்ல பொண்ணு.... ஆஅ...... ஆரது முறைக்கிறது ஒரு அப்பாவிப் பூஷைப் பார்த்து....

    ஊசிக்குறிப்பு:
    இது “கவிக்கா” விடமிருந்து களவெடுத்து வந்துதான் இங்கு எழுதியிருக்கிறேன்...

    ReplyDelete
  46. //3 ஆப்பிள்களை வைத்துவிட்டு என்னிடம் கேட்டா... அதிரா இதை எப்படி 4 ஆக புறிப்பீங்கள் என, நான் சொன்னேன்... ரீச்சர் எனக்கு வேண்டாம், அதை ஏனைய மூவரிடம் கொடுத்துவிடுங்கோ என....//

    இதுவே நானா இருந்தா ஒன்னை எடுத்து சாப்பிட்டு விட்டு மீதி ரெண்டை பாதி பாதியா நாலு பேருக்கும் குடுத்து இருப்பேன் எப்பூடி....


    ஒரு வேளை ஆப்பிள் பிடிக்காதோ....இதே பொரிச்ச மீனா இருந்திருந்தா பூஸ் விட்டுகுடுத்து இருக்குமோ..? இல்லை அ.கோ.மு வா இருந்தா வேனான்னுதான் சொல்லி இருக்குமா..? :-)))

    ReplyDelete
  47. ஹா...ஹா...ஹா.. ஜெய் இதுக்கும் ஒரு பதிலிருக்கு...
    ////இதுவே நானா இருந்தா ஒன்னை எடுத்து சாப்பிட்டு விட்டு மீதி ரெண்டை பாதி பாதியா நாலு பேருக்கும் குடுத்து இருப்பேன் எப்பூடி....

    //// எல்லோரும் தெரிஞ்சு கொள்ளுங்க ஜெய் சொல்றார்.., அப்போ தொடக்கம் நான் ரொம்பாஆஆஆஆஆ பொல்லாத ஆள்......

    ஜெய் இது எப்பூடி.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்யா...

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.