நல்வரவு_()_


Thursday, 27 January 2011

“மை லைலா”


ஆ..... என்னதிது, தலைப்பைப் பார்த்ததும் இலாவும் ஜெய்லாவும் பொல்லோட துரத்துறீங்க... அடிக்காதீங்க “அடிச்சா வலிக்குமில்ல?”:).  நான் சொல்லியிருக்கிறேனில்ல? “விழுவதை எல்லாம் பொறுக்குவதுதான் என் வேலை:)”. இத் தலைப்பைப் பார்த்தபிறகாவது தண்ணிக்குள்ள இருக்கிற ஆட்கள் வெளில வருகினமோ பார்ப்போம்.

சே...சே.. சொல்ல வந்ததை மறந்தே போனேன் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லை. கிட்டத்தட்ட 6 மாத இடைவெளியில் எனக்கு ரெண்டே ரெண்டு அவார்ட்ஸ்தான் கிடைச்சிருக்கு:(, அதையும் ஜல்...ஜல்.... ஜலீலாக்காதான் குடுத்திருக்கிறா. மியாவும் நன்றி ஜலீலாக்கா.


இது சூப்பரா இருக்கில்ல?


இது பற்றி நான் இப்போ எழுதமாட்டேனே....

ஒழுங்கா, தினமும் புளொக்குக்கு வாறவர்களுக்கு, புளொக்கை ஒழுங்கா எழுதுபவர்களுக்கு.... பார்த்துப்பார்த்து, கூப்பிட்டுக் கூப்பிட்டு அவோர்ட் குடுக்கினம். ஆனால் புளொக்குக்கு இடையில வராமல் இருப்பவர்களுக்கு அவோர்ட்டே குடுக்கமாட்டினமாம். இது எவ்ளோ பெரிய கொடுமை?:).

உண்மையில கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க,  தினமும் புளொக் பக்கம் வாறம், படிக்கிறம்.... ஆனால் தொடர்ந்து ஒருமாதமாவது புளொக் பக்கம் எட்டிப் பார்க்காமல் ஆருக்காவது இருக்க முடியுதா?. இப்போ எமக்குப் பிடித்தவர்களோடு தினமும் கதைக்கிறம்.. சிரிக்கிறம்...., ஆனால் ஒரே ஒருநாள் அவர்களை முன்னால் வைத்துக்கொண்டு பேசாமல் இருக்க முடியுதா எம்மால்? அது எவ்ளோ கொடுமை?. அப்போ நீங்களே சொல்லுங்க எதுக்கு அவோர்ட் கொடுக்கோணும்.

அம்மா வாங்க, ஐயா வாங்க, அண்ணா வாங்க, அக்கா வாங்க, தம்பி வாங்க..(முன்பும் சொல்லிட்டேன்:)... எனக்கு தங்கை யாருமில்லை:) இங்கு தங்கை நான் தேன்..:)).. எல்லோரும் வாங்க... எல்லோருக்கும் இடது பக்கத்தில இதயம் இருக்குதில்ல? இதயத்தின் இடதுபக்க அறையின்மேல் கையை வச்சுக்கொண்டு இப்போ சொல்லுங்க.... முறையாப்பார்த்தால்... அதிராவுக்கு அதிகம் அவோர்ட் கொடுத்திருக்கோணுமெல்லோ?:)... ஆ... முறைக்காதீங்க, நீங்க முறைச்சா இதயம் வலிக்குமில்ல?(எனக்கு).

எனக்கு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம், என்னைப்பார்த்து ஏசீனம், முறைக்கினம் அடிக்க வருகினம்.... ஒருவேளை எனக்கு இதயமே இல்லையோ என்று, அதால டொக்ரரிடம் செக்பண்ணினேன்... அவர் சொல்லிட்டார்(நேற்றுத்தான்:)) யூ ஹாவ் எ குட் கார்ட்... என்று. அதில இடது பக்க இதயவறையும் பத்திரமா இருக்காம்.... இனியென்ன... தங்கியூ சொல்லிட்டேன் டொக்ரருக்கு.

இதைச் சொன்னதும் எப்பவோ ஒரு காலத்தில படித்த கவிதை நினைவுக்கு வந்துவிட்டது....

“இதயமே இல்லாத எனக்கு
இதய நோயாம்
என்னைப் பரிசோதித்த
டாக்டர் சொன்னார்
அவருக்கு எப்படித் தெரியும்
நான் - என் இதயத்தை
உன்னிடம் தந்ததையும்
அதை நீ கசக்கி
வீதியிலே வீசிஎறிந்ததையும்”

இந்தாங்கோ ரிசூ... சே.. டிஷ்யூ.... வீட்டுக்கு வாறவைக்கு கேக், வடை அப்படி ஏதும் கொடுத்தால் டிஷ்யூவும் சேர்த்துக் குடுக்கிறமெல்லோ? அப்படித்தான், இப்படிக் கவிதை எழுதினாலும் டிஷ்யூக் குடுக்கோணும், அது கை துடைக்க, இது கண்ணீர் துடைக்க:).


ஊசி இணைப்பு:).
வெளியில நேரா நின்றாக்கூட இப்படி ஒரு படம் அனுப்ப முடியுமோ?:), இது தண்ணிக்குள்ள(இது வேற தண்ணி:)) தலை கீழாக நின்றும் எவ்ளோ சூப்பர் படம் எடுத்து அனுப்பியிருக்கினம்..  இது மணி கட்டின பூஸார்..ர்..ர்..ர்..:).

==========================================================
படித்ததில் பிடித்தது:
என்ன வேண்டுதலோ…
மொட்டை போட்டது மரம்
இலையுதிர் காலம்!
==========================================================

காக்கா போங்கோ:
இல்ஸ்ஸ் நீங்க சொன்னதுபோல, பிளேன் தண்ணிக்குள்ளதான் லாண்ட் ஆயிட்டுதோ? எனக்குப் பக்குப் பக்கெண்டிருக்கு...
.................................................................................................................................................................................

76 comments :

  1. வாங்க...வாங்க அதிரா...அடிக்கடி atleast உங்க ப்ளாக் பக்கமாவது வாங்க...ரொம்ப நாள் ஆச்சு...விருதுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. வவ்..வவ்..வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
    தம்பி வந்தாச்சு அதிராக்கா.நலம்,நலமறிய ஆஆஆஆஆஆவல்!

    மேற்கில் போன பறவை ஒன்று..
    மே மாதத்தில் ஜீனோவுக்கொரு
    அக்கா வருவீங்கோ என்று காதில்
    பண் பாடிவிட்டுச் சென்றது...
    என்ன வியப்பு,அந்தப் பாடல்பண் தேயுமுன்னே
    அக்கா நீங்க வந்துட்டீங்கோ!

    பல மாதம் கழித்து வந்து பாத்தால்....மெய்ல் பொக்ஸ்லே ஆன்ரி எப்பவோ 'டொக்,டொக்,டொக்!' என்று தட்டிப் பாத்திருக்கறவர்..அண்ணே புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிருக்கிறவர்..இங்கவந்து பாத்தா அக்கா கொஸிப் அடிக்கிறவர்!!!!!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ம்ம்ம்...நல்லது,நல்லது! இருங்கோ லைலாவைப் பாத்துட்டு, ச்சீ,ச்சீ..படித்துட்டு வருது ஜீனோ!

    ReplyDelete
  3. //ஒருவேளை எனக்கு இதயமே இல்லையோ என்று, அதால டொக்ரரிடம் செக்பண்ணினேன்... அவர் சொல்லிட்டார்(நேற்றுத்தான்:)) யூ ஹாவ் எ குட் கார்ட்... என்று. அதில இடது பக்க இதயவறையும் பத்திரமா இருக்காம்.... இனியென்ன... சொல்லிட்டேன் டொக்ரருக்கு.// ஹையோ,ஹையோ,ஹைய்ய்ய்ய்யோஓஓஓ! ஸ்ரிக்ட்லி நோ கொமெண்ட்ஸ் அடிராக்கா!

    கார்ட்..அதூ ஒருவேளை ஷொப்பிங் ஹார்ட்,நோ கார்ட்டைச் சொல்லிருப்பாரோ?! கிக் கிக் கிக் கீ!!

    //உண்மையில கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, தினமும் புளொக் பக்கம் வாறம், படிக்கிறம்.... ஆனால் தொடர்ந்து ஒருமாதமாவது புளொக் பக்கம் எட்டிப் பார்க்காமல் ஆருக்காவது இருக்க முடியுதா?. இப்போ எமக்குப் பிடித்தவர்களோடு தினமும் கதைக்கிறம்.. சிரிக்கிறம்...., ஆனால் ஒரே ஒருநாள் அவர்களை முன்னால் வைத்துக்கொண்டு பேசாமல் இருக்க முடியுதா எம்மால்? அது எவ்ளோ கொடுமை?. அப்போ நீங்களே சொல்லுங்க எதுக்கு அவோர்ட் கொடுக்கோணும்.// தெளிவாக் குழப்புறீங்கள்!! ஒன்னியுமே ஜீனோஸ் மண்டைலே ஏறல..பட்,இட்ஸ் ஓக்கே யா! தம்பி எப்பமும் அக்காக்கு சப்போட்தான்! ஜீனோவும் அதே கொஸ்டின் கேட்டுக்குது பா..
    அப்போ நீங்களே சொல்லுங்க எதுக்கு அவோர்ட் கொடுக்கோணும்?கொடுக்கோணும்?கொடுக்கோணும்?


    அவோர்ட்டுக்கு வாழ்த்துக்கள் அதிராக்கா! மொப்ஸி சுகம்தானே? ஜீனோ கேட்டதாச் சொல்லுங்கோ அவரிட்ட,ஓக்கை?

    ReplyDelete
  4. 2 கவிதைஸ்,பெல்ட் நெக் பூஸார் எல்லாரும் அயகா இருக்கினம்! :)

    அதாரு அக்காவை //என்னைப்பார்த்து ஏசீனம், முறைக்கினம் அடிக்க வருகினம்.... // இப்படி செய்தது? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கிர்ர்ர்ர்ர்ர்ர்! வவ்,வவ்வ்வ்வ்வ்,வவ்வ்வ்!! ஆருன்னு சொல்லுங்க,ஒரு கால் பாத்திடலாம் அதிராக்கா! நம்மள்லாம் ஆரு,சிங்கம்ல?சிங்கம்ல?சிங்கம்ல?

    ReplyDelete
  5. தம்பீஈஈஈஈஈஈஈஈ... தம்பீஈஈஈஈஈஈஈஈஈஈ... ஜீனோத் தம்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ... இதுக்குமேல முடியல்ல.... அக்காவுக்கு கண்ணீர் மறைக்குது நேரமும் அழைக்குது..... நான் அப்புறமா வருகிறேன்..... ஜீனோ.... அண்ணாவை எங்காவது கண்டனீங்களே?:(((.(அந்தரமாவத்துக்கு தம்பிக்கு ஒருபாட்டுத் தேடினால் பாட்டேதும் கிடைக்குதில்ல... நான் ரொம்ப வீக்கு... பாட்டுத் தேடுவதில்)

    தம்பி நீங்க சிங்கம்ல.... உங்களால முடியுமோ இது?
    http://www.youtube.com/watch?v=pMLKxzgydXc&feature=related

    கீதாச்சல் வாங்க, பின்பு வாறேன்.

    ReplyDelete
  6. அதிரா நலமா? வெல்கம்.கம்..கம் ஜீனோ.நலமா இருக்கீங்களா?டோரா நலமா?
    அக்காவை ஒருவழியா வரச்செய்தாச்சு.உங்களை அக்காவாலதான் வரச்செய்யமுடியும்.வரவைச்சிட்டா.இனி இன்னுமொரு பாசப்பூதான்.சீக்கிரம் வருவார்.

    //புளொக்குக்கு இடையில வராமல் இருப்பவர்களுக்கு அவோர்ட்டே குடுக்கமாட்டினமாம். இது எவ்ளோ பெரிய கொடுமை.//கொடுமையிலும் கொடுமை.
    அவர்களுக்கு ஒரு பங்ஷன் வைத்து பெரிய அவார்ட் கொடுக்கோணும்.

    அன்புத்தம்பி வந்திட்டார்.”தம்பி உடையான் பிரச்சனைகளுக்கு அஞ்சார்.” {எப்படி புதுமொழி} அதிரா நீங்க பயப்பிடாதேங்கோ.தம்பிவந்திட்டார்ரெல்லோ.அதிரா எப்பவும் ஸ்ரோங்தானே.

    மணிபூஸார் அழகு. அதைவிட கவிதை அழகோ அழகு.{இதை எழுதும்போது ரேடியோவில கண்ணுக்கு மை அழகு படிக்குது. அதுதான் இந்த எபெக்ட்}
    நியூஆன்ரி இல்லாட்டிலும் நீங்க ரிசூ தாரீங்களே அதிரா.தாங்ஸூ.
    ஒருவேளை தண்ணியில நிற்கிறதாலதான் உப்புடி யோசிக்கினமோ??
    //முறையாப்பார்த்தால்... அதிராவுக்கு அதிகம் அவோர்ட் கொடுத்திருக்கோணுமெல்லோ?:)//.அதுதானே.யோசிக்க வேண்டிய{வைத்த} விசயம்.

    ReplyDelete
  7. விருதுக்கு வாழ்த்துக்கள் அதிரா.மேலும் பற்பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்.

    //எனக்கு தங்கை யாருமில்லை:) இங்கு தங்கை நான் தேன்..:)).. // என்ன்ன்ன்ன்ன்ன்ந்தூஊஊஊஉ?தங்கை யாருமில்லையா?பூனை கண்ணை மூடிட்டா லோகமே இருட்டாயிடுச்சின்னு நினைச்சுக்குமாம்.அதீஸ்..வேணுன்னா நான் உங்களை இனி அதிரா அக்கா என்று கூப்பிடவா?
    அதிராக்கா..அதிராக்கா..ஐ நல்லாஇருக்கோல்லியா?

    ReplyDelete
  8. அதீஸ், நல்லா இருக்கு. ஆனால், ஒரு மன வருத்தம். உங்கள் கடைசி தங்கையான என்னை எப்படி மறக்கலாம் ????? அவ்வ்வ்வ்வ்வ்.... இன்னொரு தங்கை ஸாதிகா அக்காவை மறந்தாலும் பரவாயில்லை இனிமேல் என்னை மறக்கபடாது.

    ReplyDelete
  9. //மை லைலா //

    ஆஆஆஆஆஆஆஆஆஆ..எங்கேயோ கேட்ட குரல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்......

    ReplyDelete
  10. //இத் தலைப்பைப் பார்த்தபிறகாவது தண்ணிக்குள்ள இருக்கிற ஆட்கள் வெளில வருகினமோ பார்ப்போம்.//

    குரு : சிஷயா தம்பிடிச்சி உள்ளே சிரசாசனத்தில் இருக்கும் போது யார் என்னை அழைப்பது..?
    சிஸ்யர் : குருவே..!! சிரசாசனத்திலும் கனவா..? யாருமில்லை தொடருங்கள் தவத்தை....
    குரு : இல்லையே $$$$$ வரும் முன்னே மனியோசை கேட்குதே
    சிஸ்யர் :(மனதுக்குள் ) அடப்பாவி மனுசா உள்ளுக்குள்ளே இருந்தாலும் சத்தம் மட்டும் தெளிவா கேக்குதே ..அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  11. ஆ இந்த மாசத்துல மூனு போஸ்டா....வெல்கம் பேக்..(( ரொம்ப லேட்டோ நா என்னைய சொனனேன் ))... இனிய பிப்ரவரி வாழ்த்துக்கள்... ((ஒ..அதுக்கு இன்னும் மூனு நாள் இருக்கோ ))

    சிரசாசனம் நல்ல வேலை செய்யுது .....டாக்டர்....எனக்கு பழசெல்லாம் மறந்து போயிடுச்சி..டாக்டர் ..ஆமா நீங்க டாக்டரா..? இல்லை கொசு மருந்து அடிப்பவரா..( அதே வெள்ளை கோட்)

    ReplyDelete
  12. யாரது தூங்கி கிடந்த பூஸார தட்டி எழுப்பியது நானல்லவோ.

    ReplyDelete
  13. மைலா என்றதும் பாட்டோன்னு நினைத்தேன்.

    இருதயமே இல்லாதவங்களுக்கு இதய நோயா

    ReplyDelete
  14. வாங்கோ கீதாச்சல் மிக்க நன்றி. நானும் இப்போ ஏதோ வரத்தொடங்கியிருக்கிறேன்.

    ReplyDelete
  15. ஆ.... அம்பி ஜீனோ... வெல்கம் பக் ஜீனோ... எப்பூடி இருக்கிறீங்க? நலம்தானே? டோரா புச்சியும் நலம்தானே? இப்பவும் மாமரத்துக்கு கீழதானோ?:) இல்லை வாணாம்... இதெல்லாம் இங்க வாணாம்:).

    ///மேற்கில் போன பறவை ஒன்று../// ஆ.... மேற்கிலயோ? அது 7 சுடுதண்ணியில குலி..க்கப்போன பறவை ஜீனோ..:).

    ///இங்கவந்து பாத்தா அக்கா கொஸிப் அடிக்கிறவர்!!!!!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
    /// ஜீனோ இது கொசிப்பூ... இல்ல ஜீனோ... கொதிப்பூ.....உள்ளக்கொதிப்பூ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    லைலாவைப் பார்க்கலாம் ஆனா படிக்கப்பூடாது ஜீனோ... மீ எஸ்ஸ்ஸ்.

    ///கார்ட்..அதூ ஒருவேளை ஷொப்பிங் ஹார்ட்,நோ கார்ட்டைச் சொல்லிருப்பாரோ?! கிக் கிக் கிக் கீ!!
    /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அது புஸுக் பூஸ்... புஸுக் பூஸ்ஸ் என்றடிக்கும் பூஸ் கார்ட்ட்ட்ட்ட்ட்ட்:).

    ///தம்பி எப்பமும் அக்காக்கு சப்போட்தான்! ஜீனோவும் அதே கொஸ்டின் கேட்டுக்குது பா..
    அப்போ நீங்களே சொல்லுங்க எதுக்கு அவோர்ட் கொடுக்கோணும்?கொடுக்கோணும்?கொடுக்கோணும்?
    // கையைக் கொடுங்கோ தம்பி... ஷேக் கான்ட்:).. தம்பி கைகொடுப்பார் என நம்பித்தான் தைரியமாக இப்பூடியெல்லாம் எழுதினனான்....

    முறையாப்பார்த்தா, ஜீனோவுக்கும் அவோர்ட் கொடுக்கோணும், ஆனா..காணாமல் போனால் உடனே கொடுக்கக்கூடாது, மீண்டும் வந்து புளொக் எழுதத் தொடங்கினால்தான் கொடுக்கோணும்...

    ஜீனோ...
    “சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை, அதுபோல எழுதாத புளொக்குக்கும் விலையேதுமில்லை” இது எப்பூடி... தத்துவம் தத்துவம்... ஆனா அது வேஏஏஏஏஏற, இது வேஏஏஏஏஏற...:).

    அவோர்ட்டுக்கு வாழ்த்துக்கள் அதிராக்கா! /// நண்டி நண்டி நண்டி....

    ReplyDelete
  16. மொப்ஸி சுகம்தானே?///:((((

    //ஜீனோ கேட்டதாச் சொல்லுங்கோ அவரிட்ட,ஓக்கை?/// மொப்பியை திரும்பக் கொடுத்திட்டம் ஜீனோ... வீட்டுக்குள் வைத்திருக்க முடியேல்லை... குண்டரெல்லோ... வின்ரர் வந்ததும் ஒரே வீடெல்லாம் மயிர் கொட்டத் தொடங்கிட்டார்.... சின்னாட்களுக்கு கூடாதென பெரியவங்க :) பேசத்தொடங்கிட்டினம்.... அழுதழுது கொடுத்தாச்சு.

    இப்போ வீட்டில எல்லோரும் என்னைத்தான், மொப்பி மொப்பி என அழைக்கினம்... “நான் என்ன மொப்பியர்போல அப்பூடிக் குண்டாகவா இருக்கிறேன்?”:).

    ///ஆருன்னு சொல்லுங்க,ஒரு கால் பாத்திடலாம் அதிராக்கா! நம்மள்லாம் ஆரு,சிங்கம்ல?சிங்கம்ல?சிங்கம்ல?/// அப்பூடிச் சொல்லுங்க தம்பி... அறைக் கதவை லொக் பண்ணி இறுக்கிப் பூட்டிப்போட்டிருந்தாலும் நீங்க சிங்கம்தான்...:).

    முன்பென்றால் அக்கா வந்து.... தம்.....பீஈஈஈஈ என த சொல்ல முன்பே தம்பி ஓடிவருவார், அ... சொல்ல முன் அண்ணனோடி வருவார்... இப்ப்போ அப்பூடி இல்லாமல் போச்சா, அதுதான் கார்ட் (இது வேற கார்ட்) இருக்கோ என சந்தேகம் வந்திட்டுது...

    பை த வே.... இந்த வின்ரர் ஸ்னோவையும் பொருட்படுத்தாமல்... அம்பி பிசியாகியிருக்கிறார் என காதில குயிலோசை கேட்டுதே.... அம்பீஈஈஈ இது உங்களுக்கே ஞாயமா?

    சிப்பாய் அண்ணனை விட்டு ஒரு ஒன்றுகூடலா?
    பேபி சிஸ்டரை விட்டு ஒரு ஹெட்டுகெதரா?
    அக்காவும் அங்கே வந்து நின்று
    மட்டின் குருமா சாப்பிடக்கூடாதா?......

    கவனம் ஜீனோ பார்த்து.... உங்க ஊரில இம்முறை ஸ்னோ அதிகமாமே விழுந்துபோயிடாதீங்க... முன்னங்காலை ஸ்ரோங்கா வச்சு நடவுங்க... இலா அக்காவும் இதுபற்றித்தான் இங்கு வந்து கவலைப்பட்டுப் போனா...

    மிக்க மிக்க நன்றி ஜீனோ.... மீண்டும் பூத்தமைக்கும் அக்காவுக்கு சப்போட் பண்ணியதுக்கும்..

    ReplyDelete
  17. அம்முலு வாங்கோ அம்முலு மிக்க நன்றி.

    //வரவைச்சிட்டா.இனி இன்னுமொரு பாசப்பூதான்.சீக்கிரம் வருவார்./// கைகொடுங்க அம்முலு.... பாசப்பூ என்றிட்டீங்க இல்ல... இனியும் வராமல் இருந்திடுவினமோ?.... எங்க இருக்கிறாரோ என்ன பண்ணுறாரோ... இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.

    ///கொடுமையிலும் கொடுமை.
    அவர்களுக்கு ஒரு பங்ஷன் வைத்து பெரிய அவார்ட் கொடுக்கோணும்/// மியாவும் நன்றி அம்முலு, உங்களுக்குத் தெரியுது, அம்பிக்கும் தெரியுது.... ஆனா..., வாணாம் விட்டிடலாம்..:).

    ///தம்பிவந்திட்டார்ரெல்லோ.அதிரா எப்பவும் ஸ்ரோங்தானே./// தம்பியைப் பிடிச்சு வக்கோணும்... ரெண்டுகால் ஆட்களையே பிடிச்சுவைக்க முடியேல்லை... இது நாலுகால் எல்லோ:). பேஸ்மெண்ட் ஸ்ரோங்தான் அம்முலு:), ஆனா கட்டிடம்தான் அப்ப அப்ப ஆடிப்பூடுது....

    ///மணிபூஸார் அழகு. அதைவிட கவிதை அழகோ அழகு./// மியாவும் நண்டி அம்முலு. கவித அழகுதான், ஆனா... கவிதைக்குப் பொய்யழகு என்ற பாட்டையும் பாட்டுவாக்கில சொல்லிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    //நியூஆன்ரி இல்லாட்டிலும் நீங்க ரிசூ தாரீங்களே /// உஸ்ஸ்ஸ் மெதுவா அம்முலு, அவட பேர் சொல்லிக் கேய்க்கப்பூடாதாம் ஸ் டிக்கா..(இது இங்கிலீசு) சொல்லிட்டா..., இப்ப அவ இல்லை என்ற தைரியம்தேன்....

    மிக்க நன்றி அம்முலு, வேலையாக இருந்தாலும் இங்கு வந்து பதில் போட்டமைக்கு.

    ReplyDelete
  18. ஸாதிகா அக்கா வாங்கக்கா(அடிக்கடி அக்கா போட்டாத்தான் நான் தங்கைதேன் என நிரூபிச்சிடலாம்... கொஞ்சம் கண்ணயர்ந்தா... அதிராக்காவாமே:))).

    வரவுக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா, என்னோட ஏதும் கோபமில்லையே?:), சும்மாதான் கேட்டேன்:).

    ///பூனை கண்ணை மூடிட்டா லோகமே இருட்டாயிடுச்சின்னு நினைச்சுக்குமாம்./// அப்போ அந்தத் தத்துவம் பொய்யா?:). கண்ணைமூடினா இருட்டாத்தான் தெரியுது ஸாதிகா அக்கா.... பூஸ் எஸ்ஸ்ஸ்.

    மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  19. வான்ஸ்ஸ்ஸ் வாங்க வான்ஸ்ஸ்.

    ///உங்கள் கடைசி தங்கையான என்னை எப்படி மறக்கலாம் ????? /// ஆ..... கடசித் தங்கையா? எனக்கு ஆராவது சுட்டாறிய தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..:).

    ///இன்னொரு தங்கை ஸாதிகா அக்காவை மறந்தாலும் பரவாயில்லை இனிமேல் என்னை மறக்கபடாது. //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், படம் பார்த்தபிறகும் உங்களை மறப்பேனோ? என்லாச் பண்ணி அறைச் சுவரில கொழுவி(இது வேற கொழுவி) வச்சிருக்கிறேன்..... தப்பித் தவறி மறந்திட்டா என்ன பண்ணுவது என்ற பயத்திலதான்:))).

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.

    ReplyDelete
  20. ஆ... லைலா.... லைலா... சே..சே... இதென்னப்பா இது எல்லாமே தடுமாறுதெனக்கு... ஜெய்லா.... ஜெய்லா.... ஜெய்லா... வந்திட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். வாங்க ஜெய்... நல்வரவு.

    குரு சிஷ்யா படிச்சு.... சிரியோ சிரியெனச் சிரித்ததில என்னவோபோலாகிட்டேன் ஜெய்...... அதுசரி ஆசனம்தான் செய்கிறீங்க எனக் கேள்விப்பட்டேன்.... இப்போ பார்த்தால் சிஷ்யை:) எல்லாம் வச்சு ஜெய்லானந்தாவா:) இருக்கிறீங்களே...... இது நல்லாயில்லை ஜெய், மீடியால எல்லாம் பெயர் வரமுன் வெளியில வந்திடுங்க:).... மீயா எஸ்ஸ்ஸ்ஸ்.

    ///டாக்டர்....எனக்கு பழசெல்லாம் மறந்து போயிடுச்சி..டாக்டர் ..ஆமா நீங்க டாக்டரா..? இல்லை கொசு மருந்து அடிப்பவரா..( அதே வெள்ளை கோட்)
    /// கிக்..கிக்....கீஈஈஈஈஈஈ, வெள்ளைபஸ்ல போனாலும் வெள்ளைக்கோட்தான் தருவினமாம்.... ஆ... இதுக்குமேலயும் இங்க நின்றால் ஆபத்து பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்.

    மிக்க நன்றி ஜெய் வரவுக்கும் சிரிக்க வைத்தமைக்கும்.

    ஊசிக்குறிப்பு: இனித் தண்ணிக்குள்ள போகாமல் இருக்கக் கடவது.

    மிகுதிப் பதிலுக்கு பின்பு வருகிறேன்.

    ஜல் ஜல் ஜலீலாக்கா.... வாங்க பின்பு வாறேன் பதிலுக்கு.

    ReplyDelete
  21. விருதுக்கு வாழ்த்துக்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்.....!
    ஆஸ்கார் விருது, Golden Globe விருது உள்ளடக்கிய, மேலும் பல சிறந்த விருதுகள் பெற வாழ்த்துக்கள் :D :D :))
    (இதுக்கெல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல கூடாது)

    கவிதை சூப்பர்...!

    ReplyDelete
  22. அவார்டுகளுக்கு வாழ்த்துக்கள் அதிரா! என் பையனுக்கு பூஸ் என்றால் ரொம்ப பிரியம். அதனால் உங்க ப்ளாக் ரொம்ப பிடிச்சிருக்கு அவருக்கு :) எங்கு பார்த்தாலும் பூஸாவே இருக்காம். என்னைப் படிக்கவிடாமல் அதையே பார்த்துக் கொண்டு... ஸ்..அப்பா..! இப்போதான் ஒருவழியா கெஞ்சி அவரை நகர்த்திவிட்டு கமெண்ட் போடுறேன் :-)

    ReplyDelete
  23. //இப்போ பார்த்தால் சிஷ்யை:) எல்லாம் வச்சு ஜெய்லானந்தாவா:) இருக்கிறீங்களே...... இது நல்லாயில்லை ஜெய், மீடியால எல்லாம் பெயர் வரமுன் வெளியில வந்திடுங்க:).... மீயா எஸ்ஸ்ஸ்ஸ்.//

    ஆஹா...வான்ஸ் போகிற போக்கில கொழுத்தி போட்டது இப்படி வெடிக்குதே ..அவ்வ்வ்வ்

    ReplyDelete
  24. ஜெய், அந்த பயம் இருக்கோணும். இன்னும் போட்டுக் குடுத்திடுவன்.

    ReplyDelete
  25. ///யாரது தூங்கி கிடந்த பூஸார தட்டி எழுப்பியது நானல்லவோ.

    /// வாங்க ஜலீலாக்கா, உண்மைதான்

    ///இருதயமே இல்லாதவங்களுக்கு இதய நோயா// அதுதானே? அது எப்பூடி வரும்??? :)

    மிக்க நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete
  26. ஆ.... வான்ஸ்,
    இப்பத்தான் ஜெய் வந்திருக்கிறார் மீண்டு தண்ணிக்குள்ள அனுப்பிடாதீங்க, இதுதான் சாட்டென மீண்டும் சிஷ்யையோடு போய் இருந்திடுவார்... எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்:)

    ReplyDelete
  27. வாங்க கவிக்கா, கர்ர்ர்ர் சொல்ல வந்தேன்... பெரிய எழுத்தில கர் சொல்லப்படாதென எழுதிட்டீங்க அதால வாபஸ் வாங்கிட்டேன் கர் ஐ.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  28. வாங்க அஸ்மா,
    எனக்கு இப்போ குட்டீஷ் ஆதரவாளர்களும் கூடிட்டு வருகிறார்கள்:), இன்னும் கொஞ்சம் பூஸாரை இணைக்கோணும்:).

    மிக்க நன்றி அஸ்மா.

    ReplyDelete
  29. ஜெய் இதுக்கெல்லாம் பயந்தா எப்பூடி? இன்னும் இருக்கில்ல?:).

    ReplyDelete
  30. அக்கா விருதுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. புஜ்ஜியை நலம் விசாரித்த அன்பு சகோஸ் அனைவருக்கும் டாங்ஸு.புஜ்ஜி இஸ் டூயிங் வெறி குட்.:) ஜீனோ இஸ் டூயிங் குட் டூ!

    அதிராக்கா,ஹூ டோல்ட்? ஜீனோஸ் ப்ளேஸ்லே வின்ரர்..ஸ்னோ என்று? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஜீனோ லிவ்ஸ் இன் காட்'ஸ் ஓன் கன்ரி,யூ நோ??!! நோ ஸ்னோ..நோ வின்ரர்! ஒன்லீ ப்ளெஸென்ட் சன்லைட் ஹியர்.ரீசன்ட்லி,ஜீனோ நிக்கான் ஆக்ஷன் 7X35 அல்ட்ராவைட் பைனாகுலேர்ஸ் வாங்கிருக்கு. அக்கம்பக்கம்லாம் கூர்ந்து கவனிக்கலாம்ல?;) ;) ஹிஹி!

    இப்பம் புஜ்ஜி கே ஸாத், சும்மா ஒரு 14மணி நேரம் காட்டுக்குப் போறம்,வாறீங்களா? வேடிக்கை பாத்துட்டு வரலாம்!!

    என்ன தவம் செய்தனை? யசோதா...
    என்ன தவம் செய்தனை?
    பரபிரும்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை?

    திஸ் ஸோங் தான் இப்பம் கதரி கோபால்நாத் ஸாக்ஸஃபோன்லே ப்ளே பண்றார்.நல்லார்க்கு,நீங்களும் கேளுங்கோ அதிராக்கா!
    ஜீனோ லிட்டில் பிஸி! காட்டுக்கு போயி தவம் பண்ணிட்டு வரூஊஊம்!

    ReplyDelete
  32. வாங்க யூஜின், கண்டுபிடித்து வந்திருக்கிறீங்க மிக்க நன்றி.

    ReplyDelete
  33. புஜ்ஜி இஸ் டூயிங் வெறி குட்.:) /// நல்லது, நன்றி.

    ஜீனோ இஸ் டூயிங் குட் டூ!/// இதைப்பற்றி யாரும் கேட்டதாகத் தெரியேல்லையே:)..

    ///ஜீனோ லிவ்ஸ் இன் காட்'ஸ் ஓன் கன்ரி,யூ நோ??!! நோ ஸ்னோ..நோ வின்ரர்! ஒன்லீ ப்ளெஸென்ட் சன்லைட் ஹியர்.ரீசன்ட்லி/// ஆ... கடவுளே... நுணலும் தன் வாயால் கெடுமாமே:), ஜீனோவைக் காப்பாத்த நினைத்தேன்... இல்லை நான் எல்லாம் சொல்லுவன் என கங்கணம் கட்டினால்.... ஜீனோவை எப்பூடி நான் காப்பாத்துவேன்...:).

    ///ஜீனோ நிக்கான் ஆக்ஷன் 7X35 அல்ட்ராவைட் பைனாகுலேர்ஸ் வாங்கிருக்கு. அக்கம்பக்கம்லாம் கூர்ந்து கவனிக்கலாம்ல?;) /// ஜீனோ பீ கெயார்ஃபுல், மெய்மறந்து பைனாக்குலருக்குள்ளால பார்க்கேக்கை ஆராவது கோபத்தில வாலைக் கட் பண்ணிடுவினம் ... வாலைப் பத்திரமா வச்சுக்கொண்டு பாருங்கோ ஜீனோ.... அழகை ரசிப்பதில தப்பேயில்லை(இது வேற அழகு:)).

    ///இப்பம் புஜ்ஜி கே ஸாத், சும்மா ஒரு 14மணி நேரம் காட்டுக்குப் போறம்,வாறீங்களா? வேடிக்கை பாத்துட்டு வரலாம்!!
    /// வாணாம் ஜீனோ வாணாம்... 14 மணி ரூ மச் ஃபோர் யூ:). வேணுமெண்டால் எல்லோரும் காசிக்குப் போகலாம் வாங்க...:).

    எனக்கு ஸாக்ஸஃபோன் புடிப்பதில்லை ஜீனோ... ஏதாவது சிட்டுவேஷன் சோங்காப் பாடுங்க.

    என்ன நடந்தது சகோஸ்க்கெல்லாம்?:) ஒருவர் தண்ணில தவம், ஜீனோ காட்டில தவம்... ஒன்னுமே பிரியல்லே உலகத்திலே:).... கவனம் ஜீனோ காட்டில பெரிய:) பெரிய:) சிங்கமெல்லாம் உலாவுதாமே.. சாக்கிரத்தையா இருங்க.

    தொலைந்து போயிடாதீங்க ஜீனோ. மியாவும் நன்றி.

    ReplyDelete
  34. // குரு : இல்லையே $$$$$ வரும் முன்னே மனியோசை கேட்குதே

    சிஸ்யர் :(மனதுக்குள் ) அடப்பாவி மனுசா உள்ளுக்குள்ளே இருந்தாலும் சத்தம் மட்டும் தெளிவா கேக்குதே ..அவ்வ்வ்வ்வ்வ் //

    இங்க யாரு குரு?? யாரு சிஷ்யர்?? ச்சொல்லுங்கோ??

    ReplyDelete
  35. ஆமா ஜெய்லாசனமா பண்றீங்க! தலைகீலெல்லாம் பண்ணாதீங்க பாஸ்!! பிறகு தண்ணி கர்ர்ர்ர்ர்ர்ர் ஆகிடும்..

    ReplyDelete
  36. அதிரா விருதிற்கு வாழ்த்துக்கள்.லேட்டாக வந்ததால் என்னத்த சொல்ல எல்லா பின்னூட்டமும் பார்த்தாச்சு.

    ReplyDelete
  37. வாங்க எம் அப்துல் காதர்... நல்வரவு மிக்க நன்றி.

    குப்புறக்கிடந்து கிட்னியை யூஸ் பண்ணியும் உங்களுக்கு ஒரு சோட் அண்ட் சுவீட் நேம் வைக்க முடியேல்லை என்னால:).... இது ரொம்ப பெரிசா இருக்கிறதால.... எங்கட மேன்மைதங்கிய தண்ணிக் குரு ஜெய்யிடம் ஆலோசனை கேட்கலாம் என்றிருக்கிறேன்...

    ///இங்க யாரு குரு?? யாரு சிஷ்யர்?? ச்சொல்லுங்கோ??
    /// இதிலென்ன சந்தேகம் குரு ஜெய்தான், ஆனால் சிறு மாற்றம்.... அது சிஷ்யர் அல்ல சிஷ்யை...

    ஆ..... வழிவிடுங்க பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  38. வாங்க ஆசியா மிக்க நன்றி.

    ReplyDelete
  39. குன்றத்தில் குமரனுக்கு கொண்டாட்டம் இருக்கோ தெரியாது.ஆனால் அதிரா(என்)பக்கத்தில் பூஸாருக்கு ஒரே கொண்டாட்டம்தான்.பார்த்ததில் ரசித்து சிரித்து வயிற்றில் வலி தான். என்ரமுருகா.
    சூப்பர்.

    ReplyDelete
  40. ஆஹா.. அதிரா வந்தது ம்யாவினதும் தம்பி வந்து குறைக்க ஆரம்பித்துட்டார்.. இதர சொந்த பந்தங்களும் வர ஆரம்பிச்சாச்சு!

    சரி,. இந்தக் கலாசாரம் பத்தி எப்போ எயுதப் போறீங்க அதீஸ்? ஆவலா இருக்கோம் :)))))

    அண்ணாத்த யப் (உங்களுக்கு மட்டும்.. எங்களுக்கு அங்கிள் :) ) பத்தி ஏதும் தெரிந்ததோ? அது சரி, அங்கிளுக்கு தங்கச்சி அத்தையா இல்ல சித்தியா? :)

    ReplyDelete
  41. //இதிலென்ன சந்தேகம் குரு ஜெய்தான், ஆனால் சிறு மாற்றம்.... அது சிஷ்யர் அல்ல சிஷ்யை...//

    போகிற போக்கை பார்த்தால் என் தவத்தை கலைச்சிடுவீங்க போலிருக்கே அவ்வ்வ்வ்

    ReplyDelete
  42. விருதுக்கு வாழ்த்துக்கள்.
    மீண்டும் களம் கண்டதற்கு வாழ்த்துக்கள்.
    //“இதயமே இல்லாத எனக்கு
    இதய நோயாம்
    என்னைப் பரிசோதித்த
    டாக்டர் சொன்னார்
    அவருக்கு எப்படித் தெரியும்
    நான் - என் இதயத்தை
    உன்னிடம் தந்ததையும்
    அதை நீ கசக்கி
    வீதியிலே வீசிஎறிந்ததையும்”//

    அருமையான கவிதை. எங்கேர்ந்து புடிச்சீங்க??

    ReplyDelete
  43. எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?!!!!!! ;)))))))))

    ReplyDelete
  44. வாங்க ஆசியா, நான் பெற்றுக்கொண்டேன் மிக்க நன்றி.

    அம்..அம்..அம்முலு.... பூஸார் சிரிக்கிறாரோ இல்லையோ... பூஸைப்பார்ப்பவர்கள் சிரிப்பதே பெரிய சந்தோசம்தான்... பலதடவை பார்த்தாலும் அலுக்காது பூஸின் டான்ஸும் குன்றத்திலே குமரனும் மிக்க நன்றி அம்முலு.

    ReplyDelete
  45. சந்து வாங்க சந்து வாங்க.... வரும்போதே.. சீனவெடி சரவெடி(சார வெடியல்ல:)) எல்லாம் வெடிக்குதே:)..

    ///சரி,. இந்தக் கலாசாரம் பத்தி எப்போ எயுதப் போறீங்க அதீஸ்? ஆவலா இருக்கோம் :)))))/// எதப் பத்திப் பத்தவைக்கிறீங்க:)? எனக்குத்தான் ப”ல”செல்லாம் மறந்து போச்சே.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

    ///அண்ணாத்த யப் (உங்களுக்கு மட்டும்.. எங்களுக்கு அங்கிள் :) ) பத்தி ஏதும் தெரிந்ததோ?///

    பறக்கும்போது பிளேன் மட்டும்தான் தெரியுது சந்து வேற எதுவும் தெரியேல்லை... தெரிஞ்சால் புளொக்கில போடாமல் விட்டிடுவேனா?:).

    /// அது சரி, அங்கிளுக்கு தங்கச்சி அத்தையா இல்ல சித்தியா? :)/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதல்ல எந்த வழியில அங்கிள் எனத் தெரியணுமே? :), அப்பத்தானே அத்தையா சித்தியா... பேபி சிஸ்டரா எனச் சொல்ல முடியும்.... எதுக்கும் இதுக்குப்பதிலை கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைத்திடலாம்... பிளேன் லாண்ட் பண்ணட்டும்:))).

    வரவுக்கு நன்றி சந்து.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. ஜெய்லானி said... 42
    போகிற போக்கை பார்த்தால் என் தவத்தை கலைச்சிடுவீங்க போலிருக்கே அவ்வ்வ்வ்
    ////

    ஆ... இன்னும் தவத்திலதான் இருக்கிறீங்களோ? அவ்வ்வ்வ்... சிஷ்யையை விட்டிட்டு வரமாட்டீங்கபோல இருக்கே... கடலுக்கடியில போனால் சிஷ்யை தேவைப்படுது... மலை உச்சிக்குப் போனால் நேர்ஸ் தேவைப்படுது:).... ஆ... இந்தக் கொடுமையைக் கேட்க ஆருமே இல்லையா.... எனக்கு ஸ்ரோக் வந்திடும்போல இருக்கே... அந்தர அவசரத்துக்கு வீட்டில உள்ளி கூட இல்லாமல் போச்சே....:))).

    ReplyDelete
  48. இமா said... 45
    எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?!!!!!! ;)))))))))

    ///
    ஆ...யாரங்கே... உடனே இழுத்து வந்து பிரித்தானிய ரீவிபோட்ட ரூம் சிறைச்சாலையிலே அடையுங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. ஜலீலாக்காவின் புளொக்கிலுள்ள அத்தனை தங்கத்தையும் களவெடுத்தெண்டாலும் தருகிறேன்:)...

    நான் சொன்னது இமாவையல்ல... கூகிளாண்டவரை...

    சிரிச்சதுக்காக அல்ல, இன்னமும் அந்த பாழாப்போன ஸ்ஸ்ஸ்ஸ்மலியை உலகிலே விட்டுவைத்திருப்பதற்காக....:))).

    ஊ.கு:

    மக்கள்ஸ்ஸ் படிச்சதும் கிழிச்சிடுங்க... மீயா கட்டிலுக்குக் கீழ பத்திரமா இருக்கிறேன்... இம்ஸ்ஸ் வந்தால், இல்ஸ்ஸ் சமாளிச்சிடுவா...

    ReplyDelete
  49. ஜலீலாக்கா நான் இன்னும் ஃபிறீ இல்லை...

    ReplyDelete
  50. அன்னு வாங்கோ அன்னு, நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறோம் மிக்க மகிழ்ச்சி.

    ஓடர் மாறிவிட்டது பதில், குறை நினைத்திடாதீங்க.

    வரவுக்கு மிக்க நன்றி.

    இமா வரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  51. நலம்தானேஅதிரா.உங்களுக்கும்,உங்களவருக்கும் வாழ்த்துக்கள்.அழகான(வசனம்)படம்.

    ReplyDelete
  52. அம்முலு வாங்க அம்முலு, என் புதுப்படத்தைப் பார்த்து தேடிவந்து வாழ்த்தியிருக்கிறீங்க.... மிக்க மகிழ்வாக இருக்கு மிக்க நன்றி.

    நாள் முடிவதுக்குள் உங்களையும் வாழ்த்திட வேண்டுமென அவசரமாக பதிலிடுகிறேன்.

    உங்களிருவருக்கும் செல்ல மகனுக்கும் இனிய வலண்டைன் சே..சே.. அப்பூடி வாணாம்.... தமிழ்ல வாழ்த்துவம்... காதலர்தின வாழ்த்துக்கள்.

    வாழ்த்துறதுக்கு.... தலைப்பெல்லாம் ஒரு பொருட்டல்லவே... எதுக்கு வேணுமெண்டாலும் வாழ்த்தலாம்தானே... வாழ்த்துவதில் தப்பில்லை. ஹைஷ் அண்ணன் சொல்லியிருக்கிறார்... தினமும் வாழ்த்துவதால்... நட்பு, அன்பு பாசம் எல்லாம் அதிகரிக்குமாம்...

    ReplyDelete
  53. Athira.. If you just change in header I wont know :)) Please make a post for these nice stuff like the kannadasan song....

    ReplyDelete
  54. அதிரா நலமா?
    எப்பூடி? இப்படியெல்லாம் எழுது{யோசிக்கி}றீங்க?
    சூப்பர் பாட்டு அதிரா. நிறைய்ய்ய் அர்த்தங்கள் கொண்டபாட்டு.எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.நன்றி.

    ReplyDelete
  55. நானும் இலா சொல்வதை வழி மொழிகிறேன் :)

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  56. நம்ப சகோ ஜெய் மாதிரி சொந்த குரலில் : ஒட்டக சிவிங்கி கழுத்தில் இருந்து ஜீப்ரா கேட்டது என்று பாடி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் :))))))

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  57. IlaVeera said... 55
    Athira.. If you just change in header I wont know :))//
    இல்ஸ் இதுக்குத்தான் சொல்றது விடிய எழும்பினவுடனேயே ஓடிவந்து பூஸ்..பூஸ் குட்மோனிங் எனச் சொல்லோணும்...:)

    Please make a post for these nice stuff like the kannadasan song....///பதிவாகப் போட நினைத்தேன், ஆனால் எனக்கென்னவோ சின்ன சின்ன பதிவு போட மனம் வருவதில்லை, பதிவாகப் போட.... அதுக்கு ஓடிவந்து பதில் சொல்லோணுமே என எல்லோரும் சங்கடப்பட.... அதைவிட, இப்படிப் போட்டால் விரும்பியவர்கள் ரசித்திட்டுப் போவார்கள், அதிகம் விரும்புபவர்கள் பாராட்டிச் சொல்லிவிட்டுப் போவார்கள் என விட்டுவிட்டேன்.

    பூஸின் மனச்சாட்சி இஸ் ரோக்கிங்:)
    புதுத்தலைப்பு போட்டாமட்டும் ஏதோ உடனே ஓடிவந்து வடை எடுக்கிறமாதிரிக் கதையைப் பாருங்கோ.... கடவுளே இது மனதில் முணுமுணுப்பது , வெளியில கேட்காதில்ல...

    மிக்க நன்றி இலா.

    ReplyDelete
  58. வாங்க யூஜின், மறக்காமல் வந்திருக்கிறீங்க மிக்க நன்றி.

    ReplyDelete
  59. வாங்க அம்முலு... மியாவும் நன்றி. தவறாமல் என் பக்கம் பார்த்துப் பதிலும் போடுறீங்க, எனக்கும் இது மிக மிகப் பிடித்த பாடல்.... எனக்குப் பிடித்தவர்களும் இதிலிருக்கிறார்கள்... இதில் போட்டதிலிருந்து கிட்டத்தட்ட 40/50 தடவைகள் கேட்டிருப்பேன்.

    ReplyDelete
  60. ஆஹா.... எங்கேயோ கேட்ட குரல்...ஒரு காலத்தில மிக அதிகமாகக் கேட்ட குரல்.... ஆஆஆ.. ஹைஷ் அண்ணன் வாங்கோ... நல்வரவு... நம்பவே முடியவில்லை..


    ///நம்ப சகோ ஜெய் மாதிரி சொந்த குரலில் : ஒட்டக சிவிங்கி கழுத்தில் இருந்து ஜீப்ரா கேட்டது என்று பாடி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் :))))))/// நீங்க வந்தால் சும்மா வரமாட்டீங்களே.. லாபிங் காஸைக்(இது வேற காஸ்) கூடவே கொண்டு திரியிறீங்க...

    கொஞ்சம் பொறுங்க இப்பத்தான் பூனைப்பாடல் பாடி ஒத்திகை நடக்குதாம்:) அடுத்து இந்த ஓடரைக் கொடுத்திடலாம்... மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்.

    ஊசிக்குறிப்பு:
    என்னால் முடிந்தவரை ஜெய்யின் குரலை பரப்பிட்டேன் உலகெங்கும்...:)))

    ReplyDelete
  61. //வடிவாக் கேட்க வேணும், எங்கட கண்ண..தாசன் பாடுறார்...
    எங்கட முத்துராமன் மாமா கேட்டுக்கொண்டிருக்கிறார்.....
    இப்பூடி வேறு எங்கு கிடைக்கும்//

    எப்போது மனம் கொஞ்சம் கனமாக (வெயிட்டாக ) இருக்கோ அப்போது 2 பாட்டு தானா வாய் உளற ஆரம்பிக்கும் அதுல ஒன்னு இது


    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத பாட்டு வரிகள் அசத்தல்
    ஷேட்ஸ் அஃப் ஷேக்கின் பிறாண்டிடாம கையை குடுங்கோ ...!! :-))

    ReplyDelete
  62. //கொஞ்சம் பொறுங்க இப்பத்தான் பூனைப்பாடல் பாடி ஒத்திகை நடக்குதாம்:) அடுத்து இந்த ஓடரைக் கொடுத்திடலாம்... மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்.//


    எது ’அந்த’ மி....ய.....வ் பாட்டா ஹா..ஹ...

    ReplyDelete
  63. //என்னால் முடிந்தவரை ஜெய்யின் குரலை பரப்பிட்டேன் உலகெங்கும்...:))) //

    ஆஹா.ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல :-)))

    ReplyDelete
  64. ஆ... இப்போ என் பக்கத்தை ஓபின் பண்ணும்போதெல்லாம் ஒரே மல்லிகைப்பூஊஊஊ வாசமா வருதே... எப்பதொடக்கம் இப்பூடி எனக் குப்புறக்கிடந்து கிட்னியை யூஸ் பண்ணிய இடத்தில கண்டு பிடிச்சேன்.... ஹைஷ் அண்ணன் வந்ததிலிருந்து.... ஏன்ன்ன்ன்ன் ஹைஷ் அண்ணன்?...

    ReplyDelete
  65. ///எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத பாட்டு வரிகள் அசத்தல்
    ஷேட்ஸ் அஃப் ஷேக்கின் பிறாண்டிடாம கையை குடுங்கோ ...!! :-))
    /// ஜெய் பயப்பூடாதீங்க.... கைல எல்லாம் விறாஆஆஆஆஆண்டிட மாட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)). உங்களுக்குப் பிடிச்ச அடுத்த பாட்டைச் சொல்லவேயில்லை...

    அதே பூஸ் பாட்டுத்தான் மீ வெயிட்டிங்...

    மிக்க நன்றி ஜெய்.. ரசித்தமைக்கு... கண்ண..தாசன் என்றால் சொல்லவா வேண்டும்?.

    ReplyDelete
  66. காட்டுக்குப் போன அம்பியை இன்னும் காணவில்லை ஆராவது நினைச்சீங்களோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இன்று காலை, மனோவுடன் நான் புரோகிராமில, திருமதி விஜயலஸ்மி என்பவர் வந்து, ஒரு பாட்டுப் பாடினார்... என்னா பாட்டென்றால்...

    என்ன தவம் செய்தனை? யசோதா...
    என்ன தவம் செய்தனை?
    பரபிரும்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை?

    கேட்டதும் அம்பியின் நினைப்பு வந்து ஒரே பீலிங்ஸாப்போச்சு.... இ..... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

    ReplyDelete
  67. அக்கா என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  68. மிக்க நன்றி யூஜின், தமிழ்த் தோட்டத்திலே தலைப்புப் போட்டு வாழ்த்தியது போதாதென இங்கும் வந்து வாழ்த்தியிருக்கிறீங்கள்.

    ReplyDelete
  69. கர்ர்ர்ர்ர்ர்ர், ஒரு வரிப்பதில்...

    பயப்பூடாதீங்க யூஜின் நான் இப்பூடித்தான்...:))

    ReplyDelete
  70. Athira! Happy birthday dear ! me always forgets dates :(

    ReplyDelete
  71. மியாவும் நன்றி இல்ஸ்ஸ்.

    ஊசிக்குறிப்பு:
    விடுங்க இல்ஸ்ஸ்... இப்ப போய் எங்கட வயசை பப்ளிக்கில சொல்லிக்காட்டிக்கொண்டு:)..., நான் மறதிக்குச் சொன்னேன்... ஆ.... காப்பாத்துங்கோ...

    ReplyDelete
  72. “இதயமே இல்லாத எனக்கு
    இதய நோயாம்
    என்னைப் பரிசோதித்த
    டாக்டர் சொன்னார்
    அவருக்கு எப்படித் தெரியும்
    நான் - என் இதயத்தை
    உன்னிடம் தந்ததையும்
    அதை நீ கசக்கி
    வீதியிலே வீசிஎறிந்ததையும்”//

    அப்போ அவர் போலி டாக்டரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  73. ஹா..ஹா..ஹா... சேர்டிபிகேட் வாங்கிப் படிச்சுப் பார்க்கோணும்:))

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.