நல்வரவு_()_


Friday, 15 July 2011

அந்தநாள் ஞாபகம்:))



தலைப்பைப் பார்த்ததும், முன்பு ஐ லவ் யூ எண்டு தலைப்புப் போட்டா, இப்போ அந்தநாள் ஞாபகமாம்:), அதிரா ஏதோ அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் அவிழ்த்து விடப்போறாவாக்கும் என, வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்திருப்பீங்கள்:), முதல்ல இந்தாங்கோ இதைக் குடியுங்கோ... நிறைய ஐஸ் கட்டிகள் போட்டு கூலான மோர்:), ஏனெண்டால் கூல் வோட்டர் குடித்தால்/குளித்தால் கோபம் வராதாம்:) ஸாதிகா அக்கா சொல்லியிருக்கிறா.

வடிவா வயிறுமுட்டக் குடிச்சுப் போட்டுப் பதிவைப் படிக்கத் தொடங்குங்கோ, அப்பத்தான் இதெல்லாம் ஒரு பதிவோ எனக் கோபிக்க மாட்டீங்கள்:).

எங்கட “இளைய தளபதி நிரூபன்”, எனக்கு வெற்றிலை பாக்கெல்லாம்:) வச்சு அழைப்பு விடுத்திருந்தார் (தொட்டதுக்கெல்லாம் முறைக்கப்பிடா.. முதல்ல கண்ணாடில முகத்தைப் பாருங்கோ..ஸா.அ. சொல்லியிருக்கிறா:)) “நண்பேண்டா” தலைப்பில் தொடரும்படி.


ஆனா நான் என் நட்புக்கள்பற்றி பல விஷயங்கள் “அங்கின (டோண்ட் டச் கியர்:))” எழுதியிருக்கிறேன், நேரமுள்ள்போது, விரும்பினால், ஒரு எட்டுப் போய்ப் பார்த்திட்டு வாங்கோவன்.... காசா பணமா?:).  “இங்கின”யும் என் நண்பி பற்றிச் சொல்லியிருக்கிறன்... ஆனா..

இப்போ என்னிடம் இருப்பது, நட்புக்களின் சில மறக்கமுடியாத நினைவுகள், அவற்றையே பகிர்ந்து கொள்கிறேன்.. நன்றி நிரூபன்.

என் பேபிக்காலத்து நினைவுகளை மட்டுமே சொல்லுவன், பின் காலங்களைச் சொல்லமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).




நான் படித்த பிறைமறி ஸ்கூல், ஆண்+பெண் பாடசாலை. வகுப்பிலே குரூப் குரூப்பாகப் பிரித்துத்தான் இருந்தோம். என் குரூப்பில் 4 boys.... A,B,C,D.

A எப்பவும் நகைச்சுவையாளன்(எங்கள் பக்கத்து வீடு), சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார், கையைக் காட்டுங்கோ எனச் சொல்லி, அனைவருக்கும் கைரேகை சாத்திரம் சொல்வது இவருக்குப் பொழுது போக்கு.

ஒரு தடவை, நண்பியொருவரின் கொப்பியினுள் இருந்த ஒரு கடித்தத்தை எடுத்து ஆருக்கும் தெரியாமல் படித்துப்போட்டு,அந்த நண்பிக்குச் சாத்திரம் சொன்னார் (கடிதத்தில் இருந்த தகவல் பற்றி), நண்பி ஷொக்ட் ஆகிட்டா... எங்களுக்கெல்லாம் சொன்னா... உண்மையெல்லாம் சொல்கிறார் என,  நாங்களும் ஏங்கிட்டோம் (8 வயதுதானே அப்போ:)). பின்பு A தானாகவே உண்மையைச் சொல்லிச் சிரித்தார்.

இப்போது அவர் குடும்பத்தோடு வெளிநாட்டில்தான் இருக்கிறார்,  அதே நகைச்சுவையோடயே இருக்கிறார். ஒரு தடவை நாமும் மீற் பண்ணியிருக்கிறோம், இனியும் சந்திக்கலாம்.

B எப்பவும் போட்டி போட்டுப் படிப்பார். நாங்கள் எல்லோரும் ஒன்றாக விளையாடுவோம், பகிர்ந்து சாப்பிடுவோம். ஒருநாள் எங்கள் வகுப்புச் ரீச்சர் எம்மைப் பார்த்துச் சும்மா சொன்னா, “ பெரியாட்களானதும், B ஜீன்சுடன் போவார், அதிரா அவரைப் பார்க்கவே வெட்கப்படுவா” என்று:).

5ம் தரப் புலமைப் பரிட்சை(ஸ்கொலசிப்) வந்தது, எங்கள் வகுப்பில் எனக்கு 200 க்கு 194 புள்ளிகள், B க்கு 160 என நினைக்கிறேன், இருவரும்தான் பாஸ் பண்ணினோம் எங்கள் ஸ்கூலிலேயே.

அத்தோடு B ஆண்கள் பாடசாலைக்கும், நான் பெண்கள் பாடசாலைக்கும் போய்விட்டோம். இடையில் சந்திக்கவேயில்லை. உயர்தர வகுப்பிலிருந்தபோது, Double Maths  க்காக ரியூசன் சென்ரர் போனபோது, B உம் வந்திருப்பதைக் கண்டேன், நல்ல உயரமாக, ஜீன்ஸ்:) போட்டிருந்தார்.

வகுப்பு முடிந்து வெளியே வந்ததும், ஹலோ அதிரா எப்படி இருக்கிறீங்க எனக் கேட்டார், நானும் மரியாதையாக ஓரிரு சொற்கள் பேசிவிட்டு விலத்திவிட்டோம்,,, அதன்பின் கதைத்ததாக நினைவில்லை. தொடர்ந்து கதைத்தால், சும்மாவே பெயர் சூட்டி, ரோட்டால் போய்வரும்போது கூப்பிடுவார்கள் என்று பயம்.  ஆனா ரீச்சர் அன்று சொன்னது நினைவு வந்தது.

C நல்ல கெட்டிக்காரனாகத்தான் படித்தார், ஆனா பின்பு கேள்விப்பட்டேன், சின்ன வயதிலிருந்தே அவருக்கு இதயத்தில் துவாரம் இருந்ததாகவும், 16 வயதில் இறந்துவிட்டதாகவும்:(.

D படிப்புக் குறைவு(C இன் உறவுக்காரன்), மிகவும் அமைதி, சரியான சொவ்ட். 5ம் வகுப்பில் விலத்திய பின், 19ஆவது வயதில் ஒரு கோயிலில் எதிர்பாராமல் சந்தித்தோம், நன்கு கதைத்தார்.

அது முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்:).

பின்பு ஹொஸ்டலில் இருந்த காலத்தில், என் வகுப்புக்குக் கீழ் வகுப்பில், “பாரதி” நான் செல்லமாக “பார்(Bar)” என அழைப்பேன் அவவை. என்னோடு வலு ஒட்டு, எப்பவும் அதிராக்கா என்றே ஒட்டாக இருப்பா. பின்புதான் கண்டு பிடித்தோம், அவ என்னைவிட 8 நாட்கள் வயதில் மூத்தவ. ஆனா எனக்கு டபிள் புரொமோஷன் கிடைத்திருந்தமையால், ஒரு வகுப்பு அதிகமாகப் படித்து வந்தேன். வயது தெரிந்த பின்பும், அவ என்னை அக்கா என அழைப்பதை நிறுத்தவில்லை, நானும் அவவுக்கு பொஸ்:) ஆக இருப்பதை நிறுத்தவில்லை.

அவ வகுப்பில் நல்ல கெட்டிக்காரி. என்னைப்போலவே கதை கவிதை எழுதுவா:)), பொன் மொழிகள், பழமொழிகள் சேகரிப்பா. நான் அவவுக்கு கண்ணதாசனின் எழுத்துக்கள் பற்றி நிறையக் கூறுவேன். காதலில் சிக்கிடக்கூடாது, நன்கு படிக்க வேண்டும் என அறிவுரை:) எல்லாம் சொல்வேன்.

நான் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பா. என் பேச்சுக்கு மறுபேச்சே சொல்ல மாட்டா, அவவின் பிறந்த எண்ணும், என் பிறந்த எண்ணும் ஒன்றுதான்:). ஆனா அவ எனக்கு ஒரு வகுப்பு கீழே என்பதால், ஹொஸ்டலில் மட்டும்தான் என்னோடு, வகுப்பில், ரியூசன் எல்லாம் வேறொரு நண்பியோடுதான்.

இடையிலே அறிந்தேன், தன் வகுப்பிலே படிக்கும் ஒருவரை இவ விரும்புவதாக. கூப்பிட்டுக் கேட்டேன், இல்லையக்கா அது நண்பிகள் சும்மா பகிடி பண்ணுகிறார்கள் என்றிட்டா. இவவோடு கூடவே திரியும் இவவின் நண்பிக்கும்(மிகவும் அழகானவ), அதே வகுப்பில் இன்னொருவரோடு காஆஆஆதலாம் எனவும் அறிந்தேன்.

நான், இந்த “பார்” க்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன், இப்போ 9ம் வகுப்பில் இருக்கிறீங்க, அந்த boy உம் 9ம் வகுப்பு, இந்தக் காதல் எங்கே வருங்காலம் எங்கே... இது எதிலபோய் முடியப்போகிறது, அப்பா அம்மா உங்களை நம்பியெல்லோ ஹொஸ்டலில் விட்டுப் படிப்பிக்கினம், இதையெல்லாம் விட்டுப் போட்டு ஒழுங்காப் படியுங்கோ என. அனைத்துக்கும் ஓம் அக்கா.... ஓம் அக்கா என சொல்லுக் கேட்டா, நானும் நம்பிவிட்டேன்.

திடீரென ஒருநாள் பார்த்தால், இந்த பார் உம், அந்த அழகிய நண்பியும், காதலர்களோடு போகிறோம் எனக், ஹொஸ்டலில் கடிதம் எழுதி வைத்துப்போட்டு  ஓடிவிட்டார்கள்,  கதை அறிந்து பிரின்சிபால் பெற்றோருக்கும் அறிவித்து பெரிய அமளி. அனைவரும் ஷொக்ட் ஆகிட்டோம். இதுக்கு முன் இப்படி நடந்ததாக இல்லை அங்கு. எனக்கும் கோபமாக இருந்தது, என்னையும் ஏமாற்றி விட்டாரே என.

பின்புதான் அறிந்தோம், இவர்கள் இருவரையும், இரு காதலர்களும், வேறொரு ஊர் பஸ் ஸ்ராண்டுக்கு வந்து நிற்கும்படியும், அங்கு தாம் வந்து மீற் பண்ணிக் கூட்டிப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதை நம்பி, இவர்கள் இருவரும், தம், தோடு, தங்க மோதிரங்களை , ஹொஸ்டலுக்குக் கிட்ட இருந்த நகைக் கடை ஒன்றிலே அடைவு வைத்துப் பணத்தை எடுத்துக் கொண்டு, அந்த பஸ் ஸ்ராண்டுக்குப் போயிருக்கிறார்கள் அங்கே அந்த boys  வரவில்லை(அவர்கள் விளையாட்டுக்குச் சொன்னார்களோ தெரியாது).

அப்போதெல்லாம் மொபைல், படிக்கும் யாரிடமும் இல்லை. இருட்டியும் விட்டது, இவர்களுக்குப் பயம் வந்துவிட்டது, புது ஊர், திரும்பி வரவும் பஸ் நேரம் முடிந்து விட்டது. ஆரையோ பிடித்து ஒரு லொஜ்ஜில் தங்கி மறுநாள், நேரே தத்தமது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள்.

அதன் பின், அவர்கள் பெற்றோரே வந்து ஸ்கூலில் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் சேர்க்கும் படி கேட்டதால், பல ரூல்ஸ் போட்டு, மீண்டும் படிக்க அனுமதி கொடுத்தார்கள். இதற்குள் புதினம் என்னவென்றால், மோதிரம் அடைவு வைத்தபோது, கடைக்காரர் கேட்டிருக்கிறார், முளுப்பெயர் சொல்லுங்கோ என, அதுக்கு இந்த “பார்”, என் முளுப்பெயரை அதாவது எங்கள் அப்பாவின் பெயரையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்.

அந்த ரிசீட்டை, அவவின் தாய் தந்தையே கொண்டு வந்து, எம் ஹொஸ்டல் மிஸ் க்குக் காட்டி மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள்.

காதலித்தது, ஓடியது.... அதையெல்லாம் வயதுக்கோளாறு என நினைத்து, மன்னித்து, மீண்டும் பார் உடன் கதைத்திருப்பேன், ஆனா, என் பெயரைக் கொடுத்ததை என்னால் மன்னிக்கவே முடியவில்லை ( வேறு ஒரு பொய்ப் பெயர் சொல்லியிருக்கலாம்தானே).  அத்தோடு அந் நட்புக்கும் முற்றுப் புள்ளி வைத்து விட்டேன்.

இன்னும் ஒரு கதை மட்டும் சொல்லி முடித்து விடுகிறேன். யாழ்ப்பாணத்தில் கொஞ்சக்காலம் இருந்தபோது ஒரு ஸ்பெஷல் கிளாஸுக்காகப் போய் வந்தேன். நான் அங்கு படிக்காததால் யாரும் நட்புகள் அங்கில்லை. என் பாட்டில் போய் வந்து கொண்டிருந்தேன். பெரும்பாலும் எல்லோருமே சைக்கிளில்தான் வருவார்கள், ஒருசிலர் மட்டும் நடந்து வருவதுண்டு.

கொஞ்ச நாட்களாகப் பார்த்தேன், நான் வீட்டுக்குத் திரும்பி வரும் பக்கமாக ஒரு நண்பி, மெயின் ரோட்டில், நெஞ்சோடு புத்தகத்தை அணைத்தபடி வகுப்பு முடிய தனியே, அமைதியாக நடந்து போவார். பார்க்கப் பாவம்போல ஒரு உணர்வு எனக்குள். ஆனா நான் நானாக ஆரோடும் வலியப் போய்க் கதைக்கப் பயமெனக்கு, ஆனா சிரிச்சால் சிரிப்பேன், கதைத்தால் கதைப்பேன்... அது ஆராக எவராக இருந்தாலும் சரிதான், ஆண் பெண் பேதமோ, வேறு எந்தப் பேதமோ பார்க்க மாட்டேன். என் அப்பாவின் அட்வைசும் எமக்கு அதுதான். எல்லாக் கதையும் வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் ஒப்புவித்து விடுவேன், அதனால் எப்பவும் எப்பிரச்சனையும் வந்ததில்லை.

அப்போ ஒருநாள், இப்படித்தான் நான் வரும்போது அந் நண்பியைக் கண்டேன், சைக்கிளை நிறுத்தி, எங்கே போகிறீங்கள், வாங்கோவன் என் கரியரில் ஏறுங்கோ கொண்டுபோய் விடுகிறேன் என்றேன். எதிர்பார்த்திருந்தவர்போல மறு பேச்சில்லை தடாரென ஏறி என் தோளைப் பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போதான் முதன் முதலாக வாய் திறந்து அவ என்னிடம் பேசிய முதன் வசனம்.... “ அதிரா நான் இந்த வகுப்பிற்கு, தொடர்ந்து வருவதே.. நீங்கள்  போடும் அழகான சட்டைகளைப் பார்ப்பதற்காகவே “ என்றார்.

எனக்கு அப்படியே இதயமெல்லாம் என்னவோ போலாகிவிட்டது. கண்கூட கலங்கிவிட்டது. நான் நினைத்திருந்தது, நான் அங்கு படிக்காததால் என்னை ஆரும் கவனிக்க மாட்டார்கள், தம் நட்புக்களையே கவனிப்பார்கள் என. ஆனா இவ இப்படிச் சொன்ன வார்த்தை, என் மனதை விட்டு நீங்காததாகிவிட்டது.

அதன் பின்பு, ஒவ்வொரு தடவையும் ஏத்தி இறக்குவேன், மெயின் ரோட்டிலேயே விடுவேன், அவ சைட்ரோட்டில் உள்ளே போகவேண்டும் வீட்டுக்கு, இங்கு இறக்கினால் போதுமென்பா, அப்படியே இறக்கிவிட்டுப் போய் விடுவேன். பின் அவவின் குடும்பக் கதையெல்லாம் பகிர்ந்து கொள்வா, கொஞ்சம் வறிய குடும்பம். அக்கா ஒருவர் ரீச்சராம், பொல்லாதவவாம், தன்னை வேலை வாங்குவாவாம்... இப்படி நிறையச் சொன்னா... நானும் முடிந்தவரை ஆறுதல் சொல்வேன். அவவின் பெயர் நினைவில்லை, ஒரு கொஞ்ச மாதங்கள்தான் பின் விலத்தியாச்சு:(.

பொறுமையோடு கதை படித்த அனைவருக்கும் நன்றி.... படிப்பவர்கள்.. கடேசீஈஈஈ ஸ்மைலியாவது போட்டுவிட்டுப் போங்கோ... இல்லாவிட்டால் வழியில கடிநாய் கடிக்கும்:)).( கடவுளே ஆருமே ஸ்மைலி போட்டிடாமல், பின்னூட்டம் போடும்படி, பார்த்துக்கொள்ளப்பா:)).

அனைவர் வாழ்விலும் நட்பு பின்னிப் பிணைந்ததே... அதனால.. முடிந்தால் இல்லாவிட்டால் அழாதீங்கோ இந்தாங்கோ ரிசூ... தொடரும்படி அழைப்பது..
ஸாதிகா அக்கா, இமா, மகி, சந்தனா, வான்ஸ், ஜெய், ஆசியா, மனோ அக்கா, புது வரவு கிரிஜா..... இல்ஸ் ஐ எழுதிட வாண்ட்டாமென மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

ஊசி இணைப்பு:

எனக்கொரு தம்பி இருந்தார்... ஜீனோ:) எண்டு பெயர், தம்பிதான், ஆனாலும் நாங்க பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்.... ஆனா அவரையும் இப்போ மறக்கமுடியாத, காணாமல் போய் விட்ட நட்பில, சேர்க்க வேண்டியதாப்போச்ச்ச்ச்ச்... இமாஆஆஆஆ டிஷ்யூ பிலீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

=====================================================
 “பணத்தால், நீ விலைக்கு வாங்கும் நண்பனை,
இன்னொருவர் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வார்”

 “தெளிந்த சிந்தனையும், அனுதாபமுமுள்ள 
ஒரு நண்பரைப் பெற்றவர்,
தன் அறிவாற்றல்களை இரட்டிப்பாக்கிக் கொண்டவராவார்”
=====================================================

69 comments :

  1. ஹாய் அதீஸ் எப்படி இருக்கீங்க? எப்படி விண்வெளிப்பயணம் காணி என்ன விலையாம்? ஆல் டீய்டெய்ல்ஸ் வேணும்.அல்லது இன்னும் இறங்காமலே அங்கேதானோ???
    உங்க கூல்ரிங்ஸ் வேணாம்.சூடாஆஆ தேத்தண்ணி தாங்கோ.இங்கு மழை.
    அந்த நாள் ஞாபகம் வந்துட்டுதோ உங்களுக்கு.நல்ல அனுபவங்கள்தான்.அதை உங்க பாணியில் வழக்கம்போல் தந்திருக்கிறீங்க.
    இந்தநாள் ஞாபகங்களையும் கொஞ்சம் தந்திருக்கலாம் என நான் நினைத்தேன்.
    ஆனாலும் அதிராவா கொக்கா!!!!!!
    கவலைப்படாதீங்க. ஜீனோ வராமல் எங்கே போகப்போகிறார்.வருவார்.உங்கட பீலிங்ஸூக்கு வருவார்.
    //“தெளிந்த சிந்தனையும், அனுதாபமுமுள்ள
    ஒரு நண்பரைப் பெற்றவர்,
    தன் அறிவாற்றல்களை இரட்டிப்பாக்கிக் கொண்டவராவார்”//
    என் அப்பா கூறும்(இதே கருத்துடன் ஒத்த)அறிவுரை.

    ReplyDelete
  2. அருமையான நினைவுகள்.
    நான் ஸ்மைலி போட்டேன் ஏன் கமெண்ட்ல வர மாட்டேங்குது ?????
    ஸ்மைலி ஸ்மைலி ஸ்மைலி ஸ்மைலி .

    ReplyDelete
  3. வாங்கோ அம்முலூ? நலம்தானே? மீயும்தான்:).

    உங்களுக்கு மழையோ? அவ்வ்வ்வ்வ்?:), எங்களுக்கு இங்கு நல்ல வெயில், இன்றோடு மாறுகிறதாம்... இனி சோஓஓஓஓஓஒ வெனப் பெய்யப்போகுதாம்:(((.

    இந்தாங்கோ தேத்தண்ணியும்(நிறையச் சீனி பொட்டனான்:)) அனியன் பக்கோறாவும்(ரெஸ்கோவில் வாங்கினனான்).

    //இந்தநாள் ஞாபகங்களையும் கொஞ்சம் தந்திருக்கலாம் என நான் நினைத்தேன்.
    ஆனாலும் அதிராவா கொக்கா!!!!!!//

    அதானே... கிக்.கிக்...கீஈஈஈஈ... இதெல்லாம் இனி 2012க்குப் பிறகுதான் சொல்ல முடியும்... அங்கின போய்:)).

    //என் அப்பா கூறும்(இதே கருத்துடன் ஒத்த)அறிவுரை. //

    ஓ... உண்மைதான்... நட்புக்கள்தான் அனைத்துக்கும் காரணம்..

    மியாவும் நன்றி அம்முலு..

    பனை ஈர்க்குக் குறிப்பு:
    நீங்க சொன்னதுபோல தம்பி இம்முறை வருவார்தானே அம்முலூ?...

    ReplyDelete
  4. வாங்க அஞ்சலின்.....

    தலைப்புப் பார்த்தவுடன் ஓடிவந்தமைக்கு மியாவும் நன்றி.

    //நான் ஸ்மைலி போட்டேன் ஏன் கமெண்ட்ல வர மாட்டேங்குது ?????
    ஸ்மைலி ஸ்மைலி ஸ்மைலி ஸ்மைலி . //

    ஹா....ஹா......ஹாஆஆஆஆஆ.... அது கடவுள் விடமாட்டாராம்ம்ம்ம்ம்ம்..

    மியாவும் நன்றி அஞ்சலின்.

    ReplyDelete
  5. தலைப்பைப் பார்த்ததும், முன்பு ஐ லவ் யூ எண்டு தலைப்புப் போட்டா, இப்போ அந்தநாள் ஞாபகமாம்:), அதிரா ஏதோ அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் அவிழ்த்து விடப்போறாவாக்கும் என, வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்திருப்பீங்கள்:),//

    வணக்கம், பூசார்....

    ஒரு மார்க்கமாத் தான் எழுதியிருக்கிறீங்க.

    ReplyDelete
  6. எங்கட “இளைய தளபதி நிரூபன்”,//

    இது உங்களுக்கே ஓவரா இல்லே, என்னைப் பார்த்தால் அப்படியா தெரியுது, விஜய் ரசிகர்களுக்கும், எனக்கும் இடையில் ஒரு பெரும் போரை உருவாக்கும் சதித் திட்டத்தின் பின்ணனியில் தானே இப்படி ஓர் அடை மொழி;-)))

    ஹா...ஹா....

    ReplyDelete
  7. “ அதிரா நான் இந்த வகுப்பிற்கு, தொடர்ந்து வருவதே.. நீங்கள் போடும் அழகான சட்டைகளைப் பார்ப்பதற்காகவே “ என்றார்//

    மனசை கனக்க வைத்து விட்டீங்க.

    ReplyDelete
  8. வித்தியாசமான ரசனையுடன் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    நான் படித்த நண்பேன்டா, பதிவினுள், கொஞ்சம் வித்தியாசமானதும், பல்வேறு மெய் சிலிர்க்கும் அனுபவங்களையும் கொண்ட பதிவாக உங்கள் பதிவு அமைந்துள்ளது.

    அழைப்பை ஏற்றுக் கொண்டு அசத்தலாக எழுதியமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. அந்த நாள் நட்பின் ஞாபகத்தை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி !! நட்பு தொடரட்டும்...!

    //ஒருநாள் எங்கள் வகுப்புச் ரீச்சர் எம்மைப் பார்த்துச் சும்மா சொன்னா, “ பெரியாட்களானதும், B ஜீன்சுடன் போவார், அதிரா அவரைப் பார்க்கவே வெட்கப்படுவா” என்று:).

    உயர்தர வகுப்பிலிருந்தபோது, Double Maths க்காக ரியூசன் சென்ரர் போனபோது, B உம் வந்திருப்பதைக் கண்டேன், நல்ல உயரமாக, ஜீன்ஸ்:) போட்டிருந்தார்.//

    நீங்க வெட்க்கப்பட்டீங்களானு சொல்லவே இல்லையே... ;) ஓஓ வெயர் இஸ் நாய்குட்டி...???

    ReplyDelete
  10. இங்கட வந்து உங்கட கதை எல்லாம் வாசிச்சிண்ட போது
    ,.....டிச்சு ப்ளீஸ்....

    அம்புட்டு அருமையா கதைத்து இருந்தீங்கள்.
    ஒருவர் நேர்ல கதைத்தது போல இருந்தது

    உங்கட பெயரை சொன்ன அந்த அக்காவுக்கு ஒரு கொட்டு போட்டீங்கள இல்லையா

    மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
  11. அதிரா நான் இந்த வகுப்பிற்கு, தொடர்ந்து வருவதே.. நீங்கள் போடும் அழகான சட்டைகளைப் பார்ப்பதற்காகவே “ என்றார்//

    மனசை கனக்க வைத்து விட்டீங்க...repeatu

    ReplyDelete
  12. எங்கட “இளைய தளபதி நிரூபன்”,//

    ethai avaru padicha avlothan...

    sago nirupan konjam jaakirathiyaga erungoo...

    ReplyDelete
  13. வாங்க மகி...

    சிரிச்சு மழுப்பினாலும் விடமாட்டேன்... தொடரை எழுதுங்கோ.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    இப்போ நான் கண்டுபிடிச்ச ஒரு விஷயம் என்னவெண்டால்:)... ஆட்களை:)) வலையுலகை விட்டுத் துரத்தோணுமெண்டால்... தொடருங்கோ.. தொடருங்கோ.. எனப் போட்டால் போதும்... பிச்சை வேண்டாம் நாயைப் பிடிங்கோ என்ற கதையா ஓடீனம் எல்லோரும் கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈ:))).

    மியாவும் நன்றி மகி, உங்களை மட்டும் எப்பூடிக் கடவுள் ஸ்மைலிபோட அனுமதிச்சார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  14. வாங்க நிரூபன்.. மன்னிக்கவும்,இளைய தளபதி .... மோர் குடிச்சனீங்கதானே?:).

    //நான் படித்த நண்பேன்டா, பதிவினுள், கொஞ்சம் வித்தியாசமானதும், பல்வேறு மெய் சிலிர்க்கும் அனுபவங்களையும் கொண்ட பதிவாக உங்கள் பதிவு அமைந்துள்ளது. //

    உண்மையாகவோ? புல்லரிக்க வச்சிட்டீங்க... அது குப்புறக் கிடந்து கிட்னியை யூஸ் பண்ணி எழுதிய பதிவெல்லோ அதனால்தான், இனிமேல் நீங்களும் திங் பண்ண, கிட்னியை யூஸ் பண்ணுங்கோ ஓக்கை:))).

    மியாவும் நன்றி நிரூபன்.

    ReplyDelete
  15. வாங்க சிவா..

    இப்பூடி லேட்டா வந்தால், இனி உங்கட கொப்பி ரைட் வாசகத்தை ஆராவது களவெடுத்திடப் போகினம்... (mee the firstu:)).

    //.....டிச்சு ப்ளீஸ்....// உஸ்ஸ்... உப்பூடி டமில்ப் பிழை விட்டால் “இங்கின” ரீச்சர் பேசுவா தெரியுமோ?:)))) அது டிஷ்யூ வாம்ம்ம்ம்ம்:))).

    //உங்கட பெயரை சொன்ன அந்த அக்காவுக்கு ஒரு கொட்டு போட்டீங்கள இல்லையா//

    நான் சண்டைக்கெல்லாம் போகமாட்டேன் சிவா, பிடிக்கவில்லையாயின் மெதுவா விலத்திடுவேன் ... அப்படியே கதைப்பதை நிறுத்திட்டேன்.

    //மனசை கனக்க வைத்து விட்டீங்க...repeatu //

    ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாஆஆஆ... ஏற்கனவே எழும்பின புகையால:), என் புளொக் தெரியாமல் இருக்கு எனக்கு:))... அதில நீங்க வேற ரிப்பீட்டு எண்டெல்லாம் சொல்லி..:))) வாணாம் ஒண்ணுமில்லே...:)).

    //எங்கட “இளைய தளபதி நிரூபன்”,//

    ethai avaru padicha avlothan...

    sago nirupan konjam jaakirathiyaga erungoo...//

    ஹா...ஹா...ஹா... நிரூபன் மட்டும் என்னவாம் அவரும் இளைய தளபதிதான்... எதிலை எண்டெல்லாம் ஆரும் குறுக்குக் கேள்வி கேட்டிடப்பூடாது:))))..

    மியாவும் நன்றி சிவா. ஏன் உங்கட வலையை தூசு தட்டாமல் விட்டிருக்கிறீங்க?.

    ReplyDelete
  16. வாங்க கவிக்கா...

    ///நீங்க வெட்க்கப்பட்டீங்களானு சொல்லவே இல்லையே... ;)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) நான் தான் அப்பவும் ஏன், இப்பவும் சரியான “ஷை” தெரியுமோ?:)).

    மியாவும் நன்றி கவிக்கா. ஓடர் மாறிவிட்டது மன்னிச்சுக் கொள்ளுங்கோ.

    ///ஓஓ வெயர் இஸ் நாய்குட்டி...???///
    ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.... நாய்க்குட்டி இன்னும் பிறக்கேல்லை, எனக்கு கேள் குட்டிதான் வேணும் என ஓடர் குடுத்து அட்வான்சும் பே பண்ணிட்டன்:)... இந்த மாதத்துக்குள் வந்திடும், போய்(boy) கடிக்காதாம் புறுணம் பார்க்குமாம்:)... கேள் குட்டிதான் பாய்ஞ்சு பாய்ஞ்சு கடிக்குமாம் என நாயின் ஓனர் சொன்ன இடத்தில, பாய்ந்து கடிக்கிற குட்டிதான் வேணும் என புக் பண்ணிட்டேன்... இனிமேல் பயப்பூடாமல் வாங்கோ:)))).

    ReplyDelete
  17. 1. 'இங்கின' கேட் லொக் பண்ணி இருக்கோ!!!
    2. ;)
    3. ;) @ மகி & ஏஞ்சல்.
    4. சிவா... //;(( ,.....டிச்சு ப்ளீஸ்....
    5. //ஆட்களை:)) வலையுலகை விட்டுத் துரத்தோணுமெண்டால்...// ம்... இதுதான் என்னைக் கூப்பிடுற காரணமா!! ;)
    6. //ரீச்சர் பேசுவா தெரியுமோ?// சிவா நான் மைக் பிடிக்கப் போறன் எண்டு நினைக்கப் போறார். ;))
    7. சிவா நல்ல நாள் பார்த்து //தூசு// தட்டுவார். எல்லோரும் ஒஃபீஸ்ல இருக்கிற நேரம்தான் தட்ட வேணுமாம். ஹச்சும்ம்ம்... ;)
    8. முதலில் ஸாதிகாவின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும். அதன் பின் நிச்சயம் தொடர்கிறேன் அதீஸ்.

    ReplyDelete
  18. இங்ஜிருங்கே படிச்சி போட்டு வாரேன் ..!! :-)

    ReplyDelete
  19. http://imaasworld.blogspot.com/2011/07/blog-post_17.html

    ReplyDelete
  20. இனியாரும் நம்ம பூஸை தொடர் எழுத கூப்பிடவேனாமுன்னு ..!! கடவுளே..!!! காப்பாத்து ...!!! இல்லாட்டி தொடர் எழுத என்னையும் கூப்பிட்டுடுவாங்க... அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  21. அந்த நாள் ஞாபகம் செஞ்சிலே வந்ததே நண்பனே..நண்பனே..!!

    நிறைய தொடர் பாக்கி இருக்கு ..கொஞ்சம் பொருமையாக தொடர்கிறேன் :-)

    ReplyDelete
  22. வாங்கோ இமா,

    //1. 'இங்கின' கேட் லொக் பண்ணி இருக்கோ!!!//

    கண்ணுபோட்டிடாதையுங்கோ:))).

    5. நான், ஆட்கள எனக் குறிப்பிட்டது, தொடருக்கு நான் அழைத்திருக்கும் ஆட்கள்:))).

    சிவா, என்ன வேணுமெண்டாலும் நினைக்கட்டும்:)).

    தாலி கட்டத்தான் நாள் பார்க்கோணும் தூசு தட்டவுமோ?:).

    //முதலில் ஸாதிகாவின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும். அதன் பின் நிச்சயம் தொடர்கிறேன் அதீஸ். //

    நல்ல வேளை இமா, இந்நேரம் பார்த்து ஸாதிகா அக்கா தலைமறைவு:)), அவ வருவதற்குள் படிச்சிட்டுக் கிழிச்சிடுவோம்..... ஜெய்க்கும் சொல்லுங்க காட்டிக்கொடுத்திட வாணாம் எண்டு:)).

    மிக்க நன்றி இமா ... சுடச்சுடச் தொடர்ந்தமைக்கு.

    ReplyDelete
  23. வாங்க ஜெய்.. பாய்ந்து கடிக்கிற பப்பிக்கு ஓடர் கொடுத்திருக்கு, பயப்பூடாமல் வாங்கோ எண்டு சொன்ன பின்புதானே... எல்லோரும் வந்திருக்கினம்:).

    //ஜெய்லானி said... 19

    இங்ஜிருங்கே படிச்சி போட்டு வாரேன் ..!! :-//
    கடல்ல குளிர் அதிகமோ?:) தடுமாறுது அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //இனியாரும் நம்ம பூஸை தொடர் எழுத கூப்பிடவேனாமுன்னு ..!! கடவுளே..!!! காப்பாத்து ...!!!//

    ஹா....ஹா...ஹா.... என்னை ஆரும் இனித் தொடர்ப்பதிவுக்குக் கூப்பிட்டுப் பார்க்கட்டும்:), உடனே நான் எல்லோரையும் கை காட்டுவன்:)))).

    //அந்த நாள் ஞாபகம் செஞ்சிலே வந்ததே நண்பனே..நண்பனே..!!
    // இந்தப் பாட்டைத்தான், மேலே போட, யூ ரியூப்பில் தேடினேன் கிடைக்கவில்லை.

    ReplyDelete
  24. //ஜெய்லானி said... 23
    நிறைய தொடர் பாக்கி இருக்கு ..கொஞ்சம் பொருமையாக தொடர்கிறேன் :-)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), இனியும் ஆரும் பொறுமை பற்றிக் கதைத்தால்.. என்ன பண்ணுவேன் என எனக்கே தெரியாது அவ்வ்வ்வ்வ்வ்:).

    ஒன்றில் எழுத வேணும், இல்லாவிட்டால் முடியாதெனச் சொல்லிடோணும்... தொடரை தொடர்கதையாக்கப்பிடா:).

    நான் அவிச்ச கோழி முட்டை நிறையச் சாப்பிடுவதால, ஞாபகசக்தி வர வர அதிகமாகுதூஊஊஊஊஉ:))). ஊரால வந்ததும், “பெண் எழுத்து” எழுதுவேன் என, கற்பூரத்தில அடிச்சுச் சத்தியம் பண்ணினதை, நான் இன்னும் மறக்கேல்லை:))))). சரி சரி பழசு முடியாட்டில் போகட்டும்... புதுசு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    மியாவும் நன்றி ஜெய்...

    ReplyDelete
  25. நாங்கள், அண்டாட்டிக்கா போகப்போகிறோம்:), போகிற வழியில ஸ்பெயினை ரச்... பண்ணிட்டு, அண்டாட்டிக்காவில ஒரு 5 பரப்புக் காணி வாங்கிப் பென் குயின் வளர்க்கப்போறோம்:)...

    பென்குயின் முட்டை சாப்பிட்டால்:), வின்ரருக்குள் கோர்ட் போடாமலே போகலாமாம்:), குளிராதாம்...

    சரி சரி அதிராவைப் பென்குயின் கடிச்சிடுமோ எண்டெல்லாம் யோசிச்சுப் பயந்து, கவலைப்பட்டு, உங்கட புளொக் எழுதாமல் இருந்திடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))). பென்குயினும் நானும் அந்தமாதிரிப் ப்ஃபிரெண்ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  26. ////அந்த நாள் ஞாபகம் செஞ்சிலே வந்ததே நண்பனே..நண்பனே..!!
    // இந்தப் பாட்டைத்தான், மேலே போட, யூ ரியூப்பில் தேடினேன் கிடைக்கவில்லை. //////// கண்ணை மூடிட்டு யூ ரியூபில் தேடக்குடாது அதிரா,கண்ணைத் திறந்து தேடினா பாட்டு கிடைக்கும். இந்த லிங்க் பாருங்க.

    http://www.youtube.com/watch?v=GdonVRecq9s&feature=related

    ReplyDelete
  27. /சிரிச்சு மழுப்பினாலும்/மழுப்பவெல்லாம் இல்லை, ஸ்மைலி போட்டா வொர்க் ஆக்தான்னு செக் பண்ணினேன். ஹிஹிஹீ!!
    :)
    :)
    :)
    :)))))))))

    ReplyDelete
  28. :-)
    :-)
    :-)
    :-)
    ஒன்றுக்கு நாண்கு ஸ்மைலி போட்டு விட்டேன்.இப்ப நாய் கடிக்காது இல்லே?

    ReplyDelete
  29. இங்கே இருக்கே அதீஸ் http://www.youtube.com/watch?v=GdonVRecq9s

    ReplyDelete
  30. ஏன் அதீஸ்..பேபி காலத்து நட்பை மட்டுமே சொன்ன நீங்கள் இப்ப முதுமை காலத்து நட்பை சொல்லக்கூடாது?(நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)

    ReplyDelete
  31. போன முறை நீங்கள் அழைத்த தொடர் பதிவினைத்தான் எழுத இய்லவில்லை.இந்த முறை கண்டிப்பாக எழுதுகின்றேன்.

    ReplyDelete
  32. // “பணத்தால், நீ விலைக்கு வாங்கும் நண்பனை,
    இன்னொருவர் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வார்”

    “தெளிந்த சிந்தனையும், அனுதாபமுமுள்ள
    ஒரு நண்பரைப் பெற்றவர்,
    தன் அறிவாற்றல்களை இரட்டிப்பாக்கிக் கொண்டவராவார்”// இந்த பூஸ் மொழிகள் அருமை.சொந்தமா?சுட்டதா?

    ReplyDelete
  33. ஆஆஆஆ...அவிச்ச முட்டை...பெண் எழுத்து ....ஓக்கை முதல்ல அந்த தொடரையே தொடருகிறேன் ...ஆசனத்தில கொஞ்சம் குளருபடி யானதால் கொஞ்சம் அஜிஸ் பண்னுங்க மக்கள்ஸ்... :-))


    ஓ.... அதே லிங்க் மஹியும் குடுதிருக்காங்க ...பூஸ் பகல்லேயே கண்ணு தெரியல ஹி..ஹி.. வரதுக்குள்ளே எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

    ReplyDelete
  34. அதிரா...உங்களுடைய நினைவுகள் அனைத்துமே அருமை...

    எப்படி மறக்காமல் அனைத்துமே நினைவில் வைத்து கொண்டு இருக்கின்றிங்க.....எனக்கு 8 வயதில் நடந்த நிறைய நிக்வுகள் ஞாபகம் இருக்கவில்லை....

    ReplyDelete
  35. http://shadiqah.blogspot.com/2011/07/blog-post_18.html
    பூஸ்..இங்கே வாங்க.

    ReplyDelete
  36. அன்பு அதிரா!

    உங்களின் அருமையான பதிவைப்படித்ததும் மனதில் ஊறிக்கொன்டிருந்த பல நட்பு அலைகள் சீறிப்பாய்ந்து கொன்டு வெளியே வ்ந்து விட்டன.

    நட்பு பற்றிய தொடர்பதிவிற்கு அழைத்ததற்கு என் அன்பு நன்றி!! விரைவில் தொடர்கிறேன்!!

    ReplyDelete
  37. வாங்க மகி...

    இருட்டிலகூட.. கரெக்க்டா எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவேன்(வைத்த பொருட்களை:), ஆனா இந்தப் பாட்டுத் தேடுவதில மட்டும் நான் ரொம்பாஆஆஆ வீக்கூஊஊஊஊஊஊஉ:)).

    //மழுப்பவெல்லாம் இல்லை, ஸ்மைலி போட்டா வொர்க் ஆக்தான்னு செக் பண்ணினேன். //
    உதெனக்கு அப்பவே தெரியுமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மியாவ் மியாவ் மகி.

    ReplyDelete
  38. வாங்க சிவா.... கடிநாய் துரத்தியிருக்குதுபோல:)) அதுதான் ஓடிவந்து, வந்த வேகத்திலயே ஸ்ஸ்ஸ்ஸ்மைலி போட்டிட்டீங்காஆஆஆஆஆஅ:)))).

    உஸ்ஸ்ஸ் அப்பாடா ஒரு ஸ்மைலி போட வைக்கவே எப்பூடியெல்லாம் மிரட்ட வேண்டிக்கிடக்கு:))).

    மியாவ் மியாவ் சிவாஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  39. வாங்க ஸாதிகா அக்கா...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஒளிச்சிருந்துபோட்டு இப்பத்தான் வாறீங்க நான் கோஓஓஓஓஓஓஓஓஓபம்ம்ம்ம்ம்:)))).

    //ஒன்றுக்கு நாண்கு ஸ்மைலி போட்டு விட்டேன்.இப்ப நாய் கடிக்காது இல்லே?//

    நாய் இனிக் கடிக்காதூஊஊஊஊஊ... நான் சொல்லிட்டேன் நாயைக் கடிக்கப்பண்ண வேண்டாம் என:) ஏனெண்டால்...

    பின்னூட்டம் போடாமல் போனவையளை நாய் கடிச்சு, டொக்டரிடம் ஊசிக்குப் போன இடத்தில, டொக்ரர் கேட்டாராம் “நாய் எங்க கடிச்சது?” எண்டு.... அதுக்கு எல்லோருடைய பதிலும்... “அதிராட வீட்டால திரும்பி வரேக்கை”:))) எண்டு இருந்துதாம்...

    கடிச்ச இடத்தைக் காட்டுறதை விட்டுப்போட்டு.... என் பெயரை ஏன் இழுக்கவேணும்.. அவ்வ்வ்வ்வ்வ்:))... அதுதான் கடவுளிடம் சொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்:))).

    முதுமை காலத்து நட்போ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதெல்லாம் 2012 க்குப் பின். அதுதான் 90,93.. வயசுக்காரர் ..+ தலையணை உறை எல்லாம் போட்டனே:))).

    http://gokisha.blogspot.com/2011/06/blog-post_23.html

    //இந்த பூஸ் மொழிகள் அருமை.சொந்தமா?சுட்டதா? // சுட்டுச் சொந்தமாக்கினதூஊஉ:)).

    இது நான் மேலே கூறியுள்ள அடைவுக்கடையில் என் பெயர் கொடுத்த நண்பி, சேகரித்து வைத்திருந்த கொப்பியில் இருந்தது. அக்கொப்பி எப்படியோ என்னோடு ஒட்டி வந்து இப்பவும் வைத்திருக்கிறேன், அவவின் கைப்பட எழுதியது.... அதிராவோ கொக்கோஓஓஓஓஓ:)).

    மியாவ் மியாவ் ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  40. //ஆசனத்தில கொஞ்சம் குளருபடி யானதால் கொஞ்சம் அஜிஸ் பண்னுங்க மக்கள்ஸ்... :-))///

    ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஙேஙேஙே:))... ஹா...ஹா..ஹா... சுறாவுக்கு நான் கொடுத்த ரெயினிங் தப்பேல்லைப்போல:)), ஆசனத்தில குளறுபடியை ஏற்படுத்திட்டுதூஊஊஊஊஊஊ:))).

    ஜெய்.. நீங்க ஊரால இப்பத்தான் திரும்பியிருப்பதால, ஆணிபுடுங்குவதில நிறைய வேலை இருக்கும், அதால ஒன்றும் அவசரம் வேண்டாம்.. முடியும்போது எழுதுங்க...

    கண்ண்ண்ண் பகல்லயே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒண்ணுமே சொல்றதுக்கில்ல:)))).

    பாட்டு லிங்... மிக்க நன்றி.

    மியாவ் மியாவ் ஜெய்.

    ReplyDelete
  41. வாங்க கீதா....

    எனக்கு சின்னனாக இருக்கும்போது தலையில் தண்ணி ஊத்தினால் பயம், நின்ற இடத்திலேயே துள்ளுவேன்... அதனால, அம்மா தன்னோடு அணைத்துப் பிடிக்க, அப்பா தண்ணி ஊத்துவார்... அம்மாவும் என்னோடு தொப்பலாக நனைஞ்சூஊஊஊ:)).. அதெல்லாம் நினைவிருக்கு...

    ஏன், ஹைஷ் அண்ணன் முன்பு ஒருநாள் சொன்னார், தான் 2 வயசில இருந்தபோது, அம்மா தன்னைத் தூக்கிக் காட்டிய, குரங்கு இப்பவும் நினைவிருக்காம் ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்:))(அதுதான் அவர் பார்த்த முதேல்ல்ல்ல் குரங்காம்.. உண்மையாகத்தான்.).

    நீங்க பறவாயில்லைக் கீதா, என் நண்பிக்கு ஹொஸ்டல் வாழ்க்கையே மறந்துபோச்சாம்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    மியாவும் நன்றி கீதா.

    ReplyDelete
  42. //ஸாதிகா said... 38

    http://shadiqah.blogspot.com/2011/07/blog-post_18.html
    பூஸ்..இங்கே வாங்க//

    நான் எழும்பின உடனேயே வந்துட்டேன்ன்ன்ன்ன், நீங்கதான் இன்னும் ஒண்ணுமே தரல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). மிக்க நன்றி ஸாதிகா அக்கா... சுடச்சுட.. தொடர்ந்தமைக்கு.

    ReplyDelete
  43. வாங்கோ மனோ அக்கா...

    //உங்களின் அருமையான பதிவைப்படித்ததும் மனதில் ஊறிக்கொன்டிருந்த பல நட்பு அலைகள் சீறிப்பாய்ந்து கொன்டு வெளியே வ்ந்து விட்டன.

    நட்பு பற்றிய தொடர்பதிவிற்கு அழைத்ததற்கு என் அன்பு நன்றி!! விரைவில் தொடர்கிறேன்!! //

    இதுதான்... “கதவைத் தட்டாத காரணத்தால், எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டிருக்கின்றனவாம்” அதனால்தான் அனைவர் கதவையும் தட்டினேன்... முடிந்தவர்கள் எழுதினால் சந்தோசம், முடியாவிட்டாலும் குறையில்லை..

    மிக்க நன்றி மனோ அக்கா. எழுதுங்கோ வருகிறேன்.


    இங்கு நான் பெயர் குறிப்பிடாதவர்களுக்கும், நட்பு பற்றி பழைய எண்ணங்கள் தோன்றினால் எழுதுங்கோ...

    ReplyDelete
  44. பேபி கால நினைவுகள் மட்டும் சொல்வேன். பிற்காலம் சொல்ல மாட்டேன்..... அதெல்லாம் எங்களுக்கு தெரியுமே. 90 வயதுகளில் உங்களுக்கு இரண்டு தோழிகள் இருப்பது.
    என் வகுப்பிலும் ஒரு பெண் லெட்டர் எழுதி வைச்சுட்டு ஓடிப் போனார். பிறகு என்ன நடந்தது என்று தெரியாது.
    ஏன் இந்த ஆண்களுக்கு A,B, C, D என்று பெயர்???? இது மட்டும் தான் என் மண்டையை குடையும் சந்தேகங்கள்.

    ReplyDelete
  45. வாங்கோ வான்ஸ்ஸ்..

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), ஏன் இவ்வளவு நாளும் வெளிவளவில நிண்டு யோசிச்சனீங்க உள்ளுக்கு வராமல்:)).. சரி அது போகட்டும்..

    லெட்டர் எழுதி வச்சுப்போட்டு ஓடுறதொண்டும் பெரிய விஷயமில்லை:)), எங்களால முடியாதோ என்ன:))) முறைக்காதீங்க.. ஆனா.. நல்லபடி வாழ்க்கை அமைஞ்சால் சரிதான்.

    எமது ஊரில் இருவர் விரும்பி.. வீட்டில் அனுமதி கிடைக்காமல் வெளிக்கிட்டு ஓடி(இருவருக்கும் தொழில் இல்லை), கையில கழுத்தில இருந்ததையெலாம் வித்து, ஒரு கிழமை லொஜ்ஜில தங்கிப்போட்டுப், பணம் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து, நஞ்சு வாங்கி, இருவரும் தத்தமது வீட்டில வச்சுக் குடிச்சு, ஆண் இறந்திட்டார்... பெண் தப்பிட்டார்(எப்பூடியெணு தெரியேல்லை), பின் பெண்ணுக்கு திருமணம் முடித்துக் கொடுத்து, குழந்தைகளோடு நல்லாயிருப்பதாக அறிந்தேன்.

    //ஏன் இந்த ஆண்களுக்கு A,B, C, D என்று பெயர்???? இது மட்டும் தான் என் மண்டையை குடையும் சந்தேகங்கள். //

    ஹா..ஹா..ஹா... அதிராவோ கொக்கோ:)) கிட்னியை யூஸ் பண்ணிக் கண்டு பிடியுங்கோ..

    அதிராவைக் காணவில்லையே என ஆருமே திட்டிடாமல் இருங்கோ, பின்பு எனக்கு, அ.பென்குயின் முட்டை சாப்பிடும்போது புரக்கேறிடப்போகுதூஊஊஊஊஊஉ:)))).

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.

    ReplyDelete
  46. ஹே ஐம்பதாவது வடை எனக்குத்தான்

    ReplyDelete
  47. athira super always old memories are gift and treasures too.
    How is vacation going? I send one email.Did u got it?
    We are ready to go for vacation.

    ReplyDelete
  48. மூன்று முடிச்சு தொடர் பதிவு எழுத உங்களை அழைக்கிறேன் இயன்ற நேரம் தொடரவும் .

    ReplyDelete
  49. அதிராஆஆஆஆஆஅ எப்பூடி இருக்கீங்கோ ??? கொஞ்ச நாள் வேலை பளுவில் வலைப்பக்கம் வரமுடியலேன்னா என்னெல்லாம் நடந்து ஓடி ஊர்ந்து போகுது !! மன்னிச்சுக்கோங்க ! !உங்க நட்பு பத்தின பதிவு அமர்க்களம் போங்க. படிச்சு முடிச்சு கொஞ்ச நேரம் என் சின்ன வயது ( ரொம்ப நாளைக்கு முன்னே ன்னு தப்பா நெனைச்சிடாதீங்க. எனக்கு இப்போதான் ஸ்வீட் 18 ஆக்கும்!! ) நட்புக்கள எல்லாம் அசை போட்டுக்கிட்டு இருந்தேன்.


    புது வரவு கிரிஜா..... //

    அது யாருங்க புதுசா நான் கேள்விப்பட்டதில்லையே? ஏன் இந்த மாதிரி அட்ரஸ் இல்லாதவங்கள எல்லாம் தொடர் பதிவுக்கு கூப்பிட்டு விஷப்பரீட்சை வைக்குறீங்க? இது என் மிக தாழ்மையான கருத்து கேக்கலேன்ன அப்புறம் உங்க குஷ்டந்தேன்.


    //இப்போ நான் கண்டுபிடிச்ச ஒரு விஷயம் என்னவெண்டால்:)... ஆட்களை:)) வலையுலகை விட்டுத் துரத்தோணுமெண்டால்... தொடருங்கோ.. தொடருங்கோ.. எனப் போட்டால் போதும்... பிச்சை வேண்டாம் நாயைப் பிடிங்கோ என்ற கதையா ஓடீனம் எல்லோரும் கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈ:))).//


    யாரங்கே நான் குளிர் ஜுரத்துல இருக்குற விஷயத்த அதிராகிட்ட போட்டு கொடுத்தது ?? அத்தோட நாயின்னா நான் தெனாலி கமல் மாதிரி ஸ்பீட் breaker இல்லாம ஒடுவேனாக்கும்.

    :):):):) ஹைய் எனக்கும் smiley வொர்க் பண்ணுது! ஹீ ஹீ ஹீ


    ஓகே இப்போ அடுத்த வீட்ட பார்த்து போவோம் அப்புறமா வரேன் அதிரா

    ReplyDelete
  50. ம்ம்ம்ம்ம் ஒகே ரொம்ப ஜூப்பரு

    ReplyDelete
  51. // “தெளிந்த சிந்தனையும், அனுதாபமுமுள்ள
    ஒரு நண்பரைப் பெற்றவர்,
    தன் அறிவாற்றல்களை இரட்டிப்பாக்கிக் கொண்டவராவார்”//

    உங்களை நண்பராக பெற்றதால் என் அறிவாற்றல் இரட்டிப்பாக்கப்பட்டன...

    ReplyDelete
  52. ஐஸ் வாங்கலையே ஐஸ்

    ReplyDelete
  53. வாங்க சிவா..

    // ஹே// :((

    // ஐம்பதாவது வடை எனக்குத்தான்//
    ஐம்பது வடை வேணுமோ இல்ல ஐம்பதாவது வடை வேணுமோ? வியக்கம்:))(விளக்கம்:)) பிலீச்ச்ச்ச்:)). கர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மியாவ் மியாவ் சிவா.

    ReplyDelete
  54. வாங்க விஜி....
    விபரம் அங்கு:). வக்கேஷனை முடிச்சுக்கொண்டு வாங்கோ விஜி பழகலாம்.

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  55. வாங்க அஞ்சலின்...
    தொடர் பதிவு:).... உங்கள் தலைப்பை பார்த்து உள்ளே வந்தேன், தொடர்ப்பதிவென்றதும்.... நெஞ்செல்லாம் ஒரு பட படப்பு.... முடிவில என் பெயரும் இருக்குமோ என:)... ஆனாலும் உள் மனம் சொல்லிச்சுது... பழையாட்கள் இருக்க:), புதுசா வந்த என்னை அழைக்க மாட்டீங்க என:), அதனால ரொம்ப தைரியமா படிச்சுட்டே வந்தேனா.. முடிவில அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    எனக்குத் தெரியும் என்னைக் கை காட்டினா:) எல்லோரையும் அழைத்ததுக்குச் சமன் என:), ஏனெண்டால் நான் எல்லோரையும் கியூ வரிசையில:)) அழைப்பேன் பாருங்கோ:)... காதைக் கொண்டு வாங்கோ... சனமெல்லாம் எனக்கு, துவக்கில குண்டு வச்சுச் சுடப்போகினம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))).

    இல்லை அஞ்சலின்.... என்னை அழைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியே... விரைவில் எழுதிப் போடுகிறேன்.. மிக்க நன்றி.

    ReplyDelete
  56. வாங்க கிரிஜா...

    //என்னெல்லாம் நடந்து ஓடி ஊர்ந்து போகுது !! // இது சூப்பர்.... சிலது தவழ்ந்தும் போகுதே:)).

    //ஏன் இந்த மாதிரி ///////அட்ரஸ் இல்லாதவங்கள/////// எல்லாம் தொடர் பதிவுக்கு கூப்பிட்டு விஷப்பரீட்சை வைக்குறீங்க?//

    கிக்..கிக்....கீஈஈஈஈஈஈஈஈஈஈ:)) ஒண்ணுமே சொல்றதுக்கில்ல:)).

    ///ஓகே இப்போ அடுத்த வீட்ட பார்த்து போவோம் அப்புறமா வரேன் அதிரா ///
    இருங்கோ இருங்கோ... என்ன அவசரம் வந்தவுடனேயே புறப்படுறீங்க:), ரீ குடிச்சிட்டுப் போங்கோவன்... டபக் லபக்:) எண்டு ஊத்தித்தாறன்:). (இது “ஜெய் ரீ” இல்லை:)), பயப்புடாமல் குடியுங்கோ:)).

    ஸ்மைலி வேர்க் பண்ணுதோ?:), அப்பாடா... 16 ஊசி போடத் தேவையில்லை:).

    மியாவ் மியாவ் கிரிஜா.

    ReplyDelete
  57. அட வாங்க ஜலீலாக்கா... எவ்ளோ நாளாச்சு உங்கட புவஹா... சிரிப்புக் கேட்டு... ஊரில் அம்மா நலம்தானே?

    மியாவும் நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  58. மாய உலகம் said... 55

    //
    உங்களை நண்பராக பெற்றதால் என் அறிவாற்றல் இரட்டிப்பாக்கப்பட்டன..//

    /////ஐஸ் வாங்கலையே ஐஸ் ////

    வாங்க மாயா...

    காதைக் கொண்டுவாங்கோ, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மியாவ் மியாவ் மாயா.

    ReplyDelete
  59. ஐம்பது வடையும் வேணும்
    இருபது இட்லியும் வேணும்
    காரசட்னியும்
    புதினா சட்னியும் வேணும்
    அப்புறம் ஒரு எட்டு சப்பாத்தி போதும்

    ReplyDelete
  60. புது போஸ்ட் ரெண்டுக்குமே கமெண்ட் ஆப்ஷனை வைக்கலையா? ஒரு வேளை அந்த உலகத்தை பார்த்து நீங்களும் காப்பியா...அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  61. நானும் கொலை வெறியாய் கமெண்ட் பாக்ஸை தேட்றேன் காணோம்.

    ReplyDelete
  62. கமெண்ட்ஸ் ?????????????????????

    ReplyDelete
  63. ஆரது பட்டப்பகலில் என் கமெண்ட்ஸ் பொக்ஸைத் திருடியது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), பதிவுகளைத் திருடி முடிஞ்சு இப்போ கமெண்ட் பொக்ஸ் ஆஆஆஆஆஅ? அடுத்தது ச்ரெயிட்டா புளொக்ஸ்தானாக்கும் கடவுளே... நான் என் புளொக்கையும் கட்டிலுக்குக் கீழ மூவ் பண்ணப்போறேன்.....

    என்ன பண்ணியும் வருகுதில்லையே கொ.பொக்ஸ்ஸ்ஸ்ஸ்:((((.

    ReplyDelete
  64. அங்கே இன்னொரு பாக்ஸ பாருங்க :-)))

    ReplyDelete
  65. ஆ அதிரா தேடிப்பிடித்து விட்டேன் அழைப்பை,விரைவில் தொடர்வேன்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.