நல்வரவு_()_


Friday, 26 April 2013

அதிராவும்.. அண்டாட் ..டிக்காவும்:)

அதிரா அண்டாட்டிக்கா போட்டா என்பது மட்டும் தெரிஞ்சு எல்லோரும் நல்ல ஹப்பியா இருந்திருப்பீங்கள்:), ஆனா அவ சேஃப் ஆ திரும்பி வந்திட்டா என்பது தெரியாமல் இருப்பீங்களென நினைக்கிறன்:).. அது ஒரு பெரிய கதை பாருங்கோ:). இனி அதிராவின் தொல்லை ஆரம்பம்:)..பம்..பம்:).


நாங்கள் எல்லோரும் பெல்ட் எல்லாம் போட்டுக்கொண்டு பிளேனில ஏறி இருந்தம்:)... ஒரு மணித்தியாலத்தில பைலட் அங்கிள் எனவுன்ஸ் பண்ணினார், பிளேன் சில்லுக்கு காத்துப் போயிட்டுது:) அதனால அவசரமா ஃபிரான்ஸ்ல இறங்கோணும் என:).

அதுவும் நல்லதுதான் என எண்ணி பரிஷில இறங்கினம். இறங்கினதுதான் இறங்கினம்.. பிறகு சென் நதியையும், ஈபிள் டவரையும் பார்க்காமல் விடுவமோ?:)...

அதுக்கு முன்பு வாங்கோ லா ஷபேல் அம்மனைத் தரிசிக்கலாம்ம்... அங்கு உள்ளே போனதும் என் கண்ணில முதலில் தெரிந்தது இந்தக் குண்டுப் பூஸார்தான்:). இதில இருந்து நான் சொல்ல வரும் உண்மை என்னன்னா:) படத்தைப் பார்த்து உருவத்தைக் கணிச்சிடாதீங்க:) நேரில் பார்த்த பின்பே முடிவுக்கு வாங்க:) சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).


படத்தில் உருவத்தின் அளவு தெரியவில்லை... ஆனா நேரில நல்ல குண்டர் இவர்:). கோயிலின் உள் புறத்தில என்னமோ தெரியவில்லை எல்லாம் படத்திலும் நாங்கள் நிற்கிறோம்:) அதனால இங்கு போட முடியாமல் போச்ச்ச்ச்:)..

இது ஈபிள் டவருக்கு போகும் பாதை ஸ்டேஷனிலிருந்து. அது என்னமோ தெரியவில்லை, ஸ்டேஷனால் இறங்கினால்.. உயரத்தில் நின்றோம்.. கீழே இறங்கிப் போய்த்தான் கிட்டக் கிட்டப் போனோம்.

இது ஈபிள் டவருக்கு முன்னால் இருக்கும் வெளியில், தண்ணியால் அலங்கரிச்சிருக்கினம். ரொக்கட் லோஞ்சர்போல வைத்து இடையிடை மேலெழும்பி பறக்கும் அளவுக்கு தண்ணி அடிக்கினம்.



இங்கே தேம்ஸ் ஐப்போல, பரிஷில் “சென்நதி” ஓடுது. இங்கின ஒருவர்:) அடிக்கடி போட்டிபோட்டுச் சொல்வாரெல்லோ சென்நதியில் குதிக்கிறேன் என:) அதையும் பார்த்திட்டேன்:), ஐ மீன் அந்த நதியை எனச் சொன்னேனாக்கும்:).

இதுதான் ரிக்கெட்.. இதுக்கு ஒருமணித்தியாலம் குளிரில நடுங்கி நடுங்கி கியூவில நின்றுதான் எடுத்தோம்... ஸ்ஸ்ஸ் ரிக்கெட்டைப் பார்க்கச் சொன்னேனாக்கும்:).. 


இது ஈபிள் டவரின் நடுப்பகுதியில் இருந்து எடுத்ததென நினைக்கிறேன். மேல் உச்சி மாடியில் சுற்றிவர கண்ணாடிகள் போட்டு அறுக்கை செய்யப்பட்டிருக்கு... அங்கிருந்தபோது மழையும் குளிருமாக இருந்தது.

இது பரிஷில் இருக்கும் ஒரு மிக உயர்ந்த கட்டிடம், “மொம்பர்நாத் பில்டிங்”... இதுக்கும் ரிக்கெட் எடுத்தால் உச்சியி்ல் ஏறிப் பார்க்கலாம்.. விடமாட்டமில்ல, மட்டின் ரோல்ஸ் உம் வாங்கிச் சாப்பிட்டபடி ஏறிட்டோம்ம்... அங்கிருந்து பார்க்க சூப்பராக இருந்துது சிற்றி. ஈபிள் டவரும் தூரத்தில தெரிஞ்சுது.


அந்த பில்டிங் அமைந்திருக்கும் சுற்றாடல்..


இது மொம்பர்நாத் பில்டிங்கின் உச்சியில் இருந்தபோது எடுத்த காட்சி...

இதுவும் பரிஷின் ஒரு பகுதிதான்.. இடம் சரியாகச் சொல்ல முடியவில்லை...


பின் இணைப்பு:
நல்ல அழகான இடமாக இருக்கு ஃபிரான்ஸ், சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கு.. இது ஆரம்பம்தானே:).. இன்னும் நிறைய இடங்கள் என்னோடு சுத்தப் போறீங்க எல்லோரும்:).. தெம்பா இருங்கோ:).

===============================================
 “ ‘முடியாது’ என்று நீங்கள் சொல்வதை எல்லாம், 
யாரோ ஒருவர் எங்கோ செய்து கொண்டிருக்கிறார்” 
இதைச் சொன்னவர்  டாக்டர் அப்துல் கலாம் அல்ல:)) 
மேன்மைதங்கிய புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)..
===============================================

80 comments :

  1. //குளிரில நடுங்கி நடுங்கி கியூவில நின்றுதான் எடுத்தோம்... ஸ்ஸ்ஸ் ரிக்கெட்டைப் பார்க்கச் சொன்னேனாக்கும்:)..//ஓஓஓம்ம்ம்ம்...எல்லாரும் ரிக்கெட்ட மட்ட்ட்ட்டும் பாருங்கோ. கையிலிருக்கும் மந்திரிச்ச தாயத்து;), ஒரேஞ்ச் கலர் வளவி;), நகப்பூச்சு ;) இதெல்லாம் பார்க்க்க்கவே கூடாஆஆஆது!! :))))
    பக்ரவுண்டில;) இருக்கும் ரெட் ப்ளங்கட்டையும்;) பார்க்காதேங்கோ!! ரைட் அதிரா? ;) ;)

    ReplyDelete
  2. //நகங்களைப் பாருங்கோ:) என் நகம் மட்டுமலல்ல, கணவரின் பெருவிரலுக்கும் மேக்கப் பண்ணியிருக்கிறனாக்கும்:)..// ஙேஙேஙேஏஏஏஏ.....என்ன கொடும என்ன கொடும என்ன கொடும??! எ.கொ.அ. இ?! ஆனாலும் திஸ் இஸ் ரூ மச்! இப்பூடியே ஹொஸ்பிடல் போய் பேஷண்ட்ஸையும் பார்க்கிறாரா டொக்டர்?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    நகப்பூச்சும் பூவும் அழகாய் இருக்கிறது. உங்கட கை எப்படி இருக்கு என நான் எதுவுமே சொல்லேல்ல! ஹிஹிஹ்ஹ்ஹ்ஹீ! ;)

    ReplyDelete
  3. பரீஷ் சுற்றுப்பயணம் இனிதே நிறைவுற்றதில் மிக்க மகிழ்ச்சி. சென்ற இடங்களிலும் விடாமல் (இன்னொரு)குண்டுப்பூஸாரையும் படமெடுத்து வந்தது மிக்க மகிழ்ச்சி! ;) ;))) உங்கட படத்தைக் காட்டாட்டிலும் உந்த குண்டுப்பூஸாரையும் பக்கத்தில இன்னொரு (மனுஷ) பூஸ்குட்டியையும் ;)) காட்டியது மெத்த மகிழ்ச்சி!

    பம்..பம்..ஆரம்பம்! பம்..பம்..பேரின்பம்! ஏழு எட்டு வாரமாச்சு அதிராவ்..என்பக்கத்தில பதிவு வந்து அதிராவ்! :))) இனிமே ஒயுங்கா டெய்லி 7 பதிவு போடோணும் என அன்புடன் கேட்டுக் கொல்;)கிறேன்.

    ReplyDelete
  4. 4 என் நம்பர் அல்ல என்பதால் இன்னுமொரு கமண்ட்டு கமண்ட்டிட்டு நடையக் கட்டுறேன்..டாட்டா! :)

    ReplyDelete
  5. அதிரா... வந்து ஃப்லிம் போடத்தொடங்கியாச்சோ... :)

    சந்தோஷம். முன்னுக்கு வாறவையிட்ட ரிகற் கேட்கமாட்டீங்கள்தானே...:)))
    அழகா இருக்கு எல்லாமே... படங்கள், கைப்பூச்சு, குண்டுப்பூனை....எல்லாமே. சூப்பர்...

    ReplyDelete
  6. எங்களின் மகியும் இங்கினதானோ... வணக்கமுங்கோ...:)

    ReplyDelete
  7. ஹாஆ.. அந்த குண்டுப்பூனையோடை குட்டீஸ் இரண்டுபேர்... ஒராள் வடிவாத்கெரியுது...
    அம்மாஜாடை...:)
    அப்புடியோன்னு கேட்டன். இதுக்கு ஓமெண்டால் இந்த ஜாடையில படத்தில அங்கங்கே நிக்கிறவையுக்கை உங்களை கண்டிடலாமெல்லோ...:)

    எப்புடீ என் கிட்னியும்.. நல்ல பவர் சரியோ...:)))

    ReplyDelete
  8. மீயும் லாண்டட் :)))))))
    எனக்கு அந்த பவழ ப்ரேஸ்லட் கண்ணுக்கு தெரியுது ..:))

    ReplyDelete
  9. தமிழ் மணம் மொட்டாவே இருக்கு. பூக்கவே இல்லை...:) வோட் பண்ணினால் எடுக்கேலை....

    சரி.. மிச்சத்துக்கு பிறகு வாறன்...:)

    ReplyDelete
  10. நேரில் பார்த்த பின்பே முடிவுக்கு வாங்க:) சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)//

    ஓகே குண்டு பூஸை
    பார்த்தாச்சு இப்ப முடிவுக்கு வந்தாச்சு அதிராரொம்ப ----------வான்ஸ் ஐ நீட் யுவர் ஜெல்ப் :)))

    ReplyDelete
  11. படங்கள் எல்லாம் அழகா இருக்கு அதிஸ் ஆனா ..முன்பு போகும்போதே நான் கண்ணை மூடிக்கிட்டு தான் போனேன் ..இன்னும் வெட வெட ன்னு இருக்கு...இப்ப நினைச்சாலும்

    ReplyDelete
  12. வேணாம் எண்டாலும் நித்திரையிலயாவது அலங்கரிச்சு விட்டிடுவேன்ன்:) எங்கிட்டயேவா?:) அதிராவோ கொக்கோ?:).//

    வேணாம் :))) நான் அழுதிடுவேன் ..கிரி எங்கிருந்தாலும் ஓடி வாங்க

    ReplyDelete
  13. நல்லிரவு வணக்கம் .....அனைவருக்கும் ..குண்டு பூனை ட்ரீம்ஸ் அதிராவுக்கு மட்டும்

    ReplyDelete
  14. அதிராவும்.. அண்டாட் ..டிக்காவும்:)

    என்ற தலைப்பே சூப்பராக உள்ளது.

    இனிமேல் தான் படிக்கப்போறேன்

    மீண்டும் வருவேன்.

    >>>>>

    ReplyDelete
  15. படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயனித்தது போல ஓர் உணர்வை ஏற்படுத்தியது.;)

    >>>>>

    ReplyDelete
  16. //இதுதான் ரிக்கெட்.. இதுக்கு ஒருமணித்தியாலம் குளிரில நடுங்கி நடுங்கி கியூவில நின்றுதான் எடுத்தோம்... ஸ்ஸ்ஸ் ரிக்கெட்டைப் பார்க்கச் சொன்னேனாக்கும்:).. //

    ரிக்கெட் கிடக்கட்டும். அதில் என்ன பெரிய விஷயம் உள்ளது?

    எப்படி இருந்த அதிராவின் கை இப்படி ஆகிப்போச்சே. வருத்தமாக உள்ளது. பனி தான் காரணமோ?

    http://gokisha.blogspot.in/2012/11/blog-post_16.html

    முத்துக்களோ கண்களில் கிரான்பெரீஸ்... பழம் பறிக்கும் கையைப்பார்த்து விட்டு இந்தக் கையையும் பார்த்ததில் அப்படியே அப்செட் ஆகிப்போனேன். ;((((((

    அழுதே விட்டேனாக்கும். ஹுக்க்கும்.

    >>>>>

    ReplyDelete
  17. //படத்தில் உருவத்தின் அளவு தெரியவில்லை... ஆனா நேரில நல்ல குண்டர் இவர்:).//

    ரொம்ப முக்கியம் ;)))))

    //கோயிலின் உள் புறத்தில என்னமோ தெரியவில்லை எல்லாம் படத்திலும் நாங்கள் நிற்கிறோம்:) அதனால இங்கு போட முடியாமல் போச்ச்ச்ச்:)..//

    வெறுப்பேத்தாதீங்கோ, அதிரா.‘((

    அதிராவைப்படத்தில் ’காணாத கண்ணும் கண்ணல்ல’ என எல்லோரும் சேர்ந்து கோரஸாக சோக கீதம் பாடுகிறார்களாக்கும்.

    >>>>>>

    ReplyDelete
  18. அழகான பயணக்கட்டுரை, அருமையான படங்கள், வாடிக்கையான வேடிக்கைப்பேச்சுகள், அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    தொடர்ந்து எழுதுங்கோ, அதிரா.

    ReplyDelete
  19. இனிய வணக்கம் சகோதரி அதிரா...
    உங்க புண்ணியத்தில ஈபிள் டவர் பார்த்தாச்சு...
    பிரான்சின் நீள அகலங்களை
    அப்படியே எங்கள் கண்முன்னே காட்டிவிட்டீர்கள்...

    ReplyDelete
  20. நிறை...ய ஸ்மைலியாக் கிடக்கே! சந்தோஷம்.
    போஸ்ட் சுப்பர்ப். ஒரு சந்தேகம்... உங்கட சின்ன ஆளை எங்க விட்டுவிட்டுப் போனனீங்கள்????

    பெருவிரல்ல... பூவும் தெரியுது. ;)) உங்கள்ட்ட வந்து மாட்டி... பாவம். ;)
    //இமா றீச்சருக்கு போட்டியா// ம். அப்ப இது தொடர்பதிவா? . ;))க்ளோசப்ல பூ வடிவா இருக்கு.

    அடுத்தது எந்த இடம் அதிரா??

    ReplyDelete
  21. ஆவ்வ்வ் முதலாவதா மகி வந்திருகிறாக.. வாங்க மகி வாங்க.. இந்தாங்கோ முதலாவதா வந்திருக்கும் உங்களுக்கு ஒரு ஈபிள் டவர் ரிக்கெட் இலவசம்:)... டகெனக் காண்ட் பாக்ல வையுங்கோ இல்லாட்டில் ஆராவது:).. வாணாம் நான் ஒண்ணும் சொல்ல மாட்டன் சாமி:)).

    நீங்க ஏற்கனவே பார்த்துவிட்டீங்க என ஞாபகம்.. இருப்பினும்.. இன்னொருக்கா ஏறுங்கோ:).

    ReplyDelete
  22. Mahi said...
    //குளிரில நடுங்கி நடுங்கி கியூவில நின்றுதான் எடுத்தோம்... ஸ்ஸ்ஸ் ரிக்கெட்டைப் பார்க்கச் சொன்னேனாக்கும்:)..//ஓஓஓம்ம்ம்ம்...எல்லாரும் ரிக்கெட்ட மட்ட்ட்ட்டும் பாருங்கோ. கையிலிருக்கும் மந்திரிச்ச தாயத்து;), ஒரேஞ்ச் கலர் வளவி;), நகப்பூச்சு ;) இதெல்லாம் பார்க்க்க்கவே கூடாஆஆஆது!! :))))
    பக்ரவுண்டில;) இருக்கும் ரெட் ப்ளங்கட்டையும்;) பார்க்காதேங்கோ!! ரைட் அதிரா? ;) ;)
    ////
    ஹா..ஹா..ஹா.. எக்ஸ்சக்ட்லி:)) இனி ஆருமே வேற எதையும் பார்க்க மாட்டினம் எல்லோ?:)) மியாவும் நன்றி மகி:) இன்னொரு ரிக்கெட் எடுத்துங்கோங்க இதுக்காக:).

    ReplyDelete
  23. ஙேஙேஙேஏஏஏஏ.....என்ன கொடும என்ன கொடும என்ன கொடும??! எ.கொ.அ. இ?! ஆனாலும் திஸ் இஸ் ரூ மச்! இப்பூடியே ஹொஸ்பிடல் போய் பேஷண்ட்ஸையும் பார்க்கிறாரா டொக்டர்?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ///
    ஹா..ஹா..ஹா..... :) சில கேள்விகளுக்காம் இப்பூடிப் பெரிசா சிரிச்சே விட்டிடோணுமாம்:)) இதுவும் தப்புவதற்கான ஒரு ட்ரிக்தான்:).. ஹா..ஹா..ஹா...:)

    நகப்பூச்சும் பூவும் அழகாய் இருக்கிறது. உங்கட கை எப்படி இருக்கு என நான் எதுவுமே சொல்லேல்ல! ஹிஹிஹ்ஹ்ஹ்ஹீ! ;)///
    ஆஹா.. ஆஹா.... என்னே பெருந்தன்மை:) திருக்குறள்போல சொல்லிட்டீங்க கையின் அழகை:) இப்படிச் சொல்ல அஞ்சுவாலும் முடியாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதாவது மக்கள்ஸ்ஸ்.... மகி என்ன சொல்ல வாறா எண்டால்ல்.. சுவீட் சிக்ஸ் ரீன் கைகளுக்கெல்லாம் விளம்பரம் தேவையில்லயாம்... ஆம் ஐ கரீட்டு மகி?:)) .....

    உஸ்ஸ்ஸ் ஸப்பா புளொக் நடத்துவது ஒரு கொடுமைன்னா... அதைவிடக் கொடுமை பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லித் தப்புவது:))) .. அடுத்து என்ன வெடியோ:)).. ம்ம்ம்ம் சமாளிச்சிடலாம்ம் பூஸோ கொக்கோ.. எங்கிட்டயேவா?:))

    ReplyDelete
  24. பம்..பம்..ஆரம்பம்! பம்..பம்..பேரின்பம்! ஏழு எட்டு வாரமாச்சு அதிராவ்..என்பக்கத்தில பதிவு வந்து அதிராவ்! :))) இனிமே ஒயுங்கா டெய்லி 7 பதிவு போடோணும் என அன்புடன் கேட்டுக் கொல்;)கிறேன்.////

    ஆவ்வ்வ்வ்வ்வ் தெரியாம வார்த்தைகளை விட்டிட்டீங்க மகி:)).. இனி உங்களுக்குத் தொல்லைதான் “அதிரா தியேட்டர்” முடியும்வரை:)...

    ReplyDelete
  25. Mahi said...
    4 என் நம்பர் அல்ல என்பதால் இன்னுமொரு கமண்ட்டு கமண்ட்டிட்டு நடையக் கட்டுறேன்..டாட்டா! :)

    என்ன கொடுமை சாமி:) அது எங்கட நம்பராக்கும்:).. மியாவும் நன்றி மகி.. மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete
  26. இளமதி said...
    அதிரா... வந்து ஃப்லிம் போடத்தொடங்கியாச்சோ... :)

    வாங்கோ இளமதி வாங்கோ.... இனி கோடைதானே:) அதுதான் தியேட்டரைத் தூசு தட்டி ஓடவிட்டிருக்கிறேன்ன்:)

    ReplyDelete
  27. இளமதி said...
    ஹாஆ.. அந்த குண்டுப்பூனையோடை குட்டீஸ் இரண்டுபேர்... ஒராள் வடிவாத்கெரியுது...
    அம்மாஜாடை...:)
    அப்புடியோன்னு கேட்டன். இதுக்கு ஓமெண்டால் இந்த ஜாடையில படத்தில அங்கங்கே நிக்கிறவையுக்கை உங்களை கண்டிடலாமெல்லோ...:)

    எப்புடீ என் கிட்னியும்.. நல்ல பவர் சரியோ...:)))
    கிட்னி 1000 வோல்ட் பவரில வேர்க் பண்ணுது:).. இப்போ உங்களிட்ட இருந்து மீ கொஞ்சம் கடன் வாங்கப்போறன்:) ஹா..ஹா..ஹா... மியாவும் நன்றி.

    ReplyDelete
  28. angelin said...
    மீயும் லாண்டட் :)))))))
    எனக்கு அந்த பவழ ப்ரேஸ்லட் கண்ணுக்கு தெரியுது ..:))///



    என்ர முருகாஆஆஆஆ முதல்ல இந்த ப்ரேஸ்லெட்டை ஒளிச்சுப் போட்டு வருவம்:)

    ReplyDelete
  29. இளமதி said...
    தமிழ் மணம் மொட்டாவே இருக்கு. பூக்கவே இல்லை...:) வோட் பண்ணினால் எடுக்கேலை....

    சரி.. மிச்சத்துக்கு பிறகு வாறன்...:)//

    அது திருத்த வேலை நடந்துகொண்டிருக்கு:) இளமதி, லிங் எடுத்துப் போட்டு வோட் பண்ணலாம் இங்கு, ஆனா விட்டிருக்கிறேன், சரியானபின் வோட் பண்ணலாம் என. அதுவரை அழகுக்காக இருக்கட்டுமே:)) என விட்டிருக்கிறேன்:).

    ReplyDelete
  30. angelin said...
    நேரில் பார்த்த பின்பே முடிவுக்கு வாங்க:) சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)//

    ஓகே குண்டு பூஸை
    பார்த்தாச்சு இப்ப முடிவுக்கு வந்தாச்சு அதிராரொம்ப ----------வான்ஸ் ஐ நீட் யுவர் ஜெல்ப் :)))

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பபோய் எதுக்கு வான்ஸை டிசுரேப்புப் பண்ணிக்கொண்டு:) பாவம் அவவே ஆரை அனுப்பலாம் மார்ஸ் க்கு:) என ஓசிச்சு கடசில தானே போய்வரலாம் என முடிவெடுத்திட்டா போல:)

    ReplyDelete
  31. angelin said...
    படங்கள் எல்லாம் அழகா இருக்கு அதிஸ் ஆனா ..முன்பு போகும்போதே நான் கண்ணை மூடிக்கிட்டு தான் போனேன் ..இன்னும் வெட வெட ன்னு இருக்கு...இப்ப நினைச்சாலும்///

    ஏன் அஞ்சு பயமாக இருந்ததோ? கீழ நின்று பார்க்கப் பயம்தான் எல்லாம் இரும்புக் கேடராலதானே கட்டப்பட்டிருக்கு... ஆனா லிஃப்ட் மின்னிக்கொண்டு போய் மேலே விட்டுது... எனக்கு இப்போ டவருகளில் ஏறி ஏறி பயம் போயிந்தி:)... ரொம்பத் தைரியசாலியாக்கும் மீ:)

    ReplyDelete
  32. angelin said...
    வேணாம் எண்டாலும் நித்திரையிலயாவது அலங்கரிச்சு விட்டிடுவேன்ன்:) எங்கிட்டயேவா?:) அதிராவோ கொக்கோ?:).//

    வேணாம் :))) நான் அழுதிடுவேன் ..கிரி எங்கிருந்தாலும் ஓடி வாங்க////

    ஹா..ஹா..ஹா.... எதுக்கு இப்போ கீரி?:)) சே..சே.. கீரியைக் காணம்:( நினைக்க மனதில என்னமோ செய்யுது அஞ்சு.

    ReplyDelete
  33. மியாவும் நன்றி அஞ்சு... ஹாஃபீல்உம் போயிருக்கிறாரோ ஈபிள் பார்க்க:)... நைட் லைட்டுடன் பார்க்க நேரமில்லாமல் போச்சு.. இன்னொருமுறை முடிஞ்சால் பார்க்கலாம்.

    ReplyDelete
  34. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அதிராவும்.. அண்டாட் ..டிக்காவும்:)

    என்ற தலைப்பே சூப்பராக உள்ளது.

    இனிமேல் தான் படிக்கப்போறேன்

    மீண்டும் வருவேன்.//

    வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... அது அண்டாட்டிக்கா போறோம் எனச் சொல்லிட்டேன் எல்லோ?:)) அதுதான் கொடுத்த வாக்கை காப்பாத்த இப்படியெல்லாம் தலைப்புப் போட வேண்டியதாப் போச்சு:)

    ReplyDelete
  35. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //இதுதான் ரிக்கெட்.. இதுக்கு ஒருமணித்தியாலம் குளிரில நடுங்கி நடுங்கி கியூவில நின்றுதான் எடுத்தோம்... ஸ்ஸ்ஸ் ரிக்கெட்டைப் பார்க்கச் சொன்னேனாக்கும்:).. //

    ரிக்கெட் கிடக்கட்டும். அதில் என்ன பெரிய விஷயம் உள்ளது?

    எப்படி இருந்த அதிராவின் கை இப்படி ஆகிப்போச்சே. வருத்தமாக உள்ளது. பனி தான் காரணமோ?

    ஹா..ஹா..ஹா.. ஊசிபோல உடம்பிருந்தா தேவையில்லைப் ஃபாமசி என இருக்கும் உலகில் உப்பூடிச் சொல்லலாமோ?:) கோபு அண்ணன்?

    ReplyDelete
  36. வை.கோபாலகிருஷ்ணன் said...

    அதிராவைப்படத்தில் ’காணாத கண்ணும் கண்ணல்ல’ என எல்லோரும் சேர்ந்து கோரஸாக சோக கீதம் பாடுகிறார்களாக்கும்///

    ஹா..ஹா..ஹா.. நோஓஓஓஓ அது சந்தோஷ கீதம்:) கண்டால்.. பிறகு இப்பக்கம் வராமல் விடாலும் விட்டிடுவினம்:))

    ReplyDelete
  37. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அழகான பயணக்கட்டுரை, அருமையான படங்கள், வாடிக்கையான வேடிக்கைப்பேச்சுகள், அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    மியாவும் நன்றி கோபு அண்ணன்..

    ReplyDelete
  38. மகேந்திரன் said...
    இனிய வணக்கம் சகோதரி அதிரா...
    உங்க புண்ணியத்தில ஈபிள் டவர் பார்த்தாச்சு...
    பிரான்சின் நீள அகலங்களை
    அப்படியே எங்கள் கண்முன்னே காட்டிவிட்டீர்கள்...//

    வாங்கோ மகேந்திரன் அண்ணன் வாங்கோ. நான் கூகிள் ரீடரில் அனைத்து புளொக்குகளும் சேஃப் பண்ணியிருந்தேன், அதில்தான் புதுப் போஸ்ட் வந்தவுடன் உடனுக்குடன் காட்டியது. இப்போ அவர்கள் அதை நிறுத்திவிட்டினம், சொல்லிப்போட்டுத்தான். அதனால திரும்ப ஏதும் ஆரம்பிக்கோணும் நான்... ஆரும் பதிவு போட்டாலும் எனக்கு தெரியுதில்லை இப்போ, அதனால்தான் உங்கள் பக்கமும் வரமுடியவில்லை.

    மியாவும் நன்றி


    ReplyDelete
  39. இமா said...
    நிறை...ய ஸ்மைலியாக் கிடக்கே! சந்தோஷம்.
    போஸ்ட் சுப்பர்ப். ஒரு சந்தேகம்... உங்கட சின்ன ஆளை எங்க விட்டுவிட்டுப் போனனீங்கள்????///

    றீச்சர் வந்திருக்கிறாக.. வாங்கோ இமா வாங்கோ..

    சின்ன ஆள்?:) ஹா..ஹா..ஹா.. அவரின் வீடு முட்ட மேல கீழ எல்லாம் சாப்பாடு போட்டு:) ரெண்டு வோட்டர் பொட்டில் வச்சு அலங்கரித்து விட்டோம், இடையில் எங்கட ஃபிரெண்ட் ஃபமலி வந்து பார்த்துக் ஹலோ சொன்னவையாம்:) ஆள் ஹப்பி:).


    பெருவிரல்ல... பூவும் தெரியுது. ;)) உங்கள்ட்ட வந்து மாட்டி... பாவம். ;)
    //இமா றீச்சருக்கு போட்டியா// ம். அப்ப இது தொடர்பதிவா? . ;))க்ளோசப்ல பூ வடிவா இருக்கு.

    அடுத்தது எந்த இடம் அதிரா??

    தொடர்ப் பதிவு? ஹா..ஹா..ஹா.. நல்ல ஐடியாவா இருக்கே:) அப்படியும் செய்திருக்கலாம் ஜஸ்ட்டு மிஸ்ட்டு:)..

    அடுத்து ஆவ்வ்வ்வ்வ் ஆண்டவன் சித்தம்:) யூரோப் ட்ரிப்:) இன்னும் இருக்கெல்லோ நிறைய:).. மூத்தவருக்கு நியூசிலண்ட் ஒஸ்ரேலியா வரத்தான் விருப்பமாம், ஆனா கனநேரம் ஃபிளைட்ல இருக்க விருப்பமில்லையாம்:))...

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  40. Jaleela Kamal said...
    ஒகே ரைட்டு...

    வாங்கோ ஜல் அக்கா வாங்கோ..

    நோஓஓஓஓஓஓ என் வன்மையான கண்டனங்கள்:) ஒரு சொல்லில் பதில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    மியாவும் நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  41. வணக்கம்! வந்தனம், சுஸ்வாதனம், ஆயூபோவான், நமஸ்தே.....!

    நாங்கள் பதிவு படிக்க வரேலை...! படம் பார்க்கத்தான் வந்தனாங்களாக்கும்ம்!!

    ReplyDelete
  42. அதிரா அண்டாட்டிக்கா போட்டா என்பது மட்டும் தெரிஞ்சு எல்லோரும் நல்ல ஹப்பியா இருந்திருப்பீங்கள்:) //

    அதெப்படி அவ்வளவு கரெக்டா கண்டு பிடிச்சீங்க? நாங்கள் லா சப்பல் சந்தியில வெடியெல்லாம் கொழுத்தி, ஃபிரெஞ்சுப் பொலீஸிண்ட பொக்கேட்டுக்குள்ள போட்டம்! :)

    ReplyDelete
  43. நாங்கள் எல்லோரும் பெல்ட் எல்லாம் போட்டுக்கொண்டு பிளேனில ஏறி இருந்தம்:)...///

    ப்ளேனில ஏற முன்னரேயே பெல்ட் போட்டாச்சோ? எப்படி? விளக்கம் ப்ளீஸ்!

    ReplyDelete
  44. கோயிலின் உள் புறத்தில என்னமோ தெரியவில்லை எல்லாம் படத்திலும் நாங்கள் நிற்கிறோம்:) அதனால இங்கு போட முடியாமல் போச்ச்ச்ச்:).. ///

    நல்ல வேளை நாங்கள் தப்பிட்டம்!

    ReplyDelete
  45. ப்ளேனில ஏற முன்னரேயே பெல்ட் போட்டாச்சோ? எப்படி? விளக்கம் ப்ளீஸ்//

    வெல்டன் தம்பி அப்படித்தான் ...இன்னும் நிறைய கேள்வி கேளுங்க :)):))
    ROFL:)

    ReplyDelete
  46. இது ஈபிள் டவருக்கு போகும் பாதை ஸ்டேஷனிலிருந்து. அது என்னமோ தெரியவில்லை, ஸ்டேஷனால் இறங்கினால்.. உயரத்தில் நின்றோம்.. கீழே இறங்கிப் போய்த்தான் கிட்டக் கிட்டப் போனோம். ///

    இது, உயரமாக கட்டப்பட்ட ஒரு மேடைதான்! தூரத்தில் நின்று டவரை ரசிப்பதற்காக இது கட்டப்பட்டதாம்!

    ஒன்றுதெரியுமா? ஹிட்லர் ஃபிரான்ஸைக் கைப்பற்றிய பின்னர் பாரிசைப் பார்ப்பதற்காக வந்தாராம்! வந்து இந்த இடத்தில் நின்றுதானாம் பார்த்தார்!


    ReplyDelete
  47. இங்கே தேம்ஸ் ஐப்போல, பரிஷில் “சென்நதி” ஓடுது. ////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! மொட்டையா, மரியாதை இல்லாமல் சென் என்று சொல்லுகினம்! அப்ஜெக்‌ஷன் யுவ ஆனர்! ”லா சென்” ( La Seine )என்று மருவாதியோட சொல்லோணுமாக்கும்!

    ReplyDelete
  48. என் நகம் மட்டுமலல்ல, கணவரின் பெருவிரலுக்கும் மேக்கப் பண்ணியிருக்கிறனாக்கும்:).. வேணாம் எண்டாலும் நித்திரையிலயாவது அலங்கரிச்சு விட்டிடுவேன்ன்:) எங்கிட்டயேவா?:) அதிராவோ கொக்கோ?:).

    அருமையான மேக் அப் .. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  49. இதுதான் ரிக்கெட்.. இதுக்கு ஒருமணித்தியாலம் குளிரில நடுங்கி நடுங்கி கியூவில நின்றுதான் எடுத்தோம்... ஸ்ஸ்ஸ் ரிக்கெட்டைப் பார்க்கச் சொன்னேனாக்கும்:)..  ///

    டிக்கட் எடுக்க கியூவில் நின்ற போது, ஒரு முகமூடி அணிந்த மனிதனின் சுவாரசியமான நிகழ்வு நடந்தி்ச்சே! அதைப் பற்றியும் எழுதுவீங்க என்று நினைத்தேன்

    ReplyDelete
  50. மாத்தியோசி மணி மணி said...
    வணக்கம்! வந்தனம், சுஸ்வாதனம், ஆயூபோவான், நமஸ்தே.....!

    அவ்வ்வ்வ்வ் மணி வாங்கோ வாங்கோ நலம்தானே?..

    நாங்கள் பதிவு படிக்க வரேலை...! படம் பார்க்கத்தான் வந்தனாங்களாக்கும்ம்!!//

    ஸ்ஸ்ஸ் அப்பாடா நான் கும்பிட்ட திருத்தணி வைரவர் என்னைக் கைவிடேல்லை:)).. நீங்கள் படம் பாருங்கோ அதுதான் எனக்கும் சேஃப்ரி:).

    ReplyDelete
  51. மாத்தியோசி மணி மணி said...
    அதிரா அண்டாட்டிக்கா போட்டா என்பது மட்டும் தெரிஞ்சு எல்லோரும் நல்ல ஹப்பியா இருந்திருப்பீங்கள்:) //

    அதெப்படி அவ்வளவு கரெக்டா கண்டு பிடிச்சீங்க? நாங்கள் லா சப்பல் சந்தியில வெடியெல்லாம் கொழுத்தி, ஃபிரெஞ்சுப் பொலீஸிண்ட பொக்கேட்டுக்குள்ள போட்டம்! :)////

    ஃபிரான்ஸ்க்கு வந்தும் திருந்தீனமோ பாருங்கோ:) அப்பூடியெண்டெல்லாம் கேட்க மாட்டம்:) ஏனெண்டால் மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)..

    நாங்கள் லா ஷபேல் அம்மன் கோயிலில கும்பிடேக்க வெடிச்சத்தம் கேட்டது:) அதுவா இருக்குமோ?:)..

    ReplyDelete
  52. மாத்தியோசி மணி மணி said...
    நாங்கள் எல்லோரும் பெல்ட் எல்லாம் போட்டுக்கொண்டு பிளேனில ஏறி இருந்தம்:)...///

    ப்ளேனில ஏற முன்னரேயே பெல்ட் போட்டாச்சோ? எப்படி? விளக்கம் ப்ளீஸ்!///

    ஹையோ முருகா:) இந்தக் கேள்வியைவிட Iron man 3 எவ்ளோ பெட்டர்:)..

    இப்பத்தான் தியேட்டரில அந்த பும்..பும்.. எனும் சத்தத்துக்கும், லைட் வெளிச்சத்துக்கும்.. தலையிடிக்காமல் நித்திரையாகி சிவனே எண்டு வீட்ட வந்து சேர்ந்தம்:)..

    ஒவ்வொரு முறையும் தியேட்டரால வீட்டுக்கு வரும்போது, இனிமேல் வாழ்க்கையில் தியேட்டர் பக்கமே போவதில்லை எனக் கங்கணம் கட்டி வருவேன்:) ஆனா மீண்டும் போயிடுவேன்:).. அதாவது 3 தடவை திரும்பத் திரும்பக் கூப்பிட்டால் போயிடுவனாக்கும்:).

    ReplyDelete
  53. angelin said...
    ப்ளேனில ஏற முன்னரேயே பெல்ட் போட்டாச்சோ? எப்படி? விளக்கம் ப்ளீஸ்//

    வெல்டன் தம்பி அப்படித்தான் ...இன்னும் நிறைய கேள்வி கேளுங்க :)):))
    ROFL:)///



    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நல்லவேளை இண்டைக்கு மட்டின் பிர்ராஆஆஆஆணிப் பார்ஷலும் செய்து கொடுக்காமல் விட்டிட்டா:).. உஸ்ஸ் அதை நினைச்சாவது சந்தோஷமா இருப்பம் சாமி:)

    ReplyDelete
  54. மாத்தியோசி மணி மணி said...
    இது ஈபிள் டவருக்கு போகும் பாதை ஸ்டேஷனிலிருந்து. அது என்னமோ தெரியவில்லை, ஸ்டேஷனால் இறங்கினால்.. உயரத்தில் நின்றோம்.. கீழே இறங்கிப் போய்த்தான் கிட்டக் கிட்டப் போனோம். ///

    இது, உயரமாக கட்டப்பட்ட ஒரு மேடைதான்! தூரத்தில் நின்று டவரை ரசிப்பதற்காக இது கட்டப்பட்டதாம்!

    ஒன்றுதெரியுமா? ஹிட்லர் ஃபிரான்ஸைக் கைப்பற்றிய பின்னர் பாரிசைப் பார்ப்பதற்காக வந்தாராம்! வந்து இந்த இடத்தில் நின்றுதானாம் பார்த்தார்!
    ///


    ஓ!! அப்படியோ? மிக்க நன்றி மணி.. அப்போ ஹிட்லர் ஏறி நின்ற இடத்தில் அதிரா ஏறிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)

    ReplyDelete
  55. இராஜராஜேஸ்வரி said...
    என் நகம் மட்டுமலல்ல, கணவரின் பெருவிரலுக்கும் மேக்கப் பண்ணியிருக்கிறனாக்கும்:).. வேணாம் எண்டாலும் நித்திரையிலயாவது அலங்கரிச்சு விட்டிடுவேன்ன்:) எங்கிட்டயேவா?:) அதிராவோ கொக்கோ?:).

    அருமையான மேக் அப் .. பாராட்டுக்கள்..///

    ஹா..ஹா..ஹா.. வாங்கோ ராஜேஷ்வரி அக்கா வாங்கோ... வந்த வேகத்திலயே பொயிண்டில கை வச்சிட்டீங்க:).. மியாவும் நன்றி.

    ReplyDelete
  56. மாத்தியோசி மணி மணி said...
    இதுதான் ரிக்கெட்.. இதுக்கு ஒருமணித்தியாலம் குளிரில நடுங்கி நடுங்கி கியூவில நின்றுதான் எடுத்தோம்... ஸ்ஸ்ஸ் ரிக்கெட்டைப் பார்க்கச் சொன்னேனாக்கும்:).. ///

    டிக்கட் எடுக்க கியூவில் நின்ற போது, ஒரு முகமூடி அணிந்த மனிதனின் சுவாரசியமான நிகழ்வு நடந்தி்ச்சே! அதைப் பற்றியும் எழுதுவீங்க என்று நினைத்தேன்//

    ஹையோ அதை மறந்திட்டேன்ன்.. அந்த முன் கடையில் வாங்கிய சீஸ் ஹொட்டோக் பன்னைப் பற்றியும் சொல்ல மறந்திட்டேன்ன்.. சரி இன்னொருமுறை பார்க்கலாம்ம்..

    ஆராவது ஃபிரான்ஸ் போக இருப்பின் என்னிடம் ஐடியாக் கேழுங்கோ:)..

    மியாவும் நன்றி மணி.

    ReplyDelete
  57. ஐடியாக் கேழுங்கோ:)..//
    spelling mistake..

    அஆங் நான் இப்ப இங்கே எதுக்கு வந்தேன் ஆஹ் ஆஹ் ஓகே நினைவு வந்திடுச்சி
    மணி உங்களுக்கு தலப்பா கட்டு பிரியாணி பார்சல் அனுப்பிட்டேன் ,,சாப்பிட்டுக்கிட்டேகேள்விகளை கண்டின்யூ பண்ணுங்க :)))))

    ReplyDelete
  58. angelin said...
    ஐடியாக் கேழுங்கோ:)..//
    spelling mistake..///

    ஹா....ஹா..ஹா... {இப்பூடியான விஷயத்துக்கெல்லாம் பலமாச் சிரிச்சுச் சமாளிச்சிடோணுமாம் என கதிரவேலு அங்கிள் சொல்றவர்:)}

    ReplyDelete
  59. அதிரா, Please visit .......

    http://gopu1949.blogspot.in/2013/04/12.html

    அன்புள்ள கோபு அண்ணன்.


    ReplyDelete
  60. angelin said...


    அஆங் நான் இப்ப இங்கே எதுக்கு வந்தேன் ஆஹ் ஆஹ் ஓகே நினைவு வந்திடுச்சி
    மணி உங்களுக்கு தலப்பா கட்டு பிரியாணி பார்சல் அனுப்பிட்டேன் ,,சாப்பிட்டுக்கிட்டேகேள்விகளை கண்டின்யூ பண்ணுங்க :)))))////

    ஹா....ஹா..ஹா... அஞ்சு.. அப்பூடியே பிர்ராணியை என்னிடம் குடுத்திடுங்கோ:) ஏனெண்டால் அவர் கொஞ்சக்காலமா டயட்டாம்ம்ம்ம்:))..

    ReplyDelete
  61. ஆஆஆஆஆ கோபு அண்ணன் , மீ ஓல்ரெடி விசிரெட்:) நேரம் போதவில்லை அதனால் பின்னூட்டாமல் வந்திட்டேன்ன்... வருவேன் விரைவில். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  62. ஈபில்டவர்,பரிஸ் படங்கள் எல்லாம் அழகாக இருக்கு.பில்டிங் ல் இருந்து எடுத்தபடத்தில் சிட்டி அழகாக இருக்கு. கன‌காலத்துக்கு முன் போனது. முதன்முதல் ஏறும்போது நடுக்கமா இருந்தது. இப்ப இந்தப் படங்களைப் போட்டு ஆசை வர‌வைச்சிட்டீங்க. பாட்டில சொல்லியிருக்கிறமாதிரி கையளவு நெஞ்சுக்குள்ளகடலளவுஆசை.நல்லபாட்டு.அழகான படங்கள்,அழகான நகப்பூச்சு(பிங்க்??)பூ.அப்ப டூர் தொடரும்..

    ReplyDelete
  63. வாங்கோ அம்முலு வாங்கோ.. உண்மையில் அழகான சிற்றி. எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது.. மக்கள் கூட்டம்தான் ரொம்ப அதிகம் அதுதான் கஸ்டமாக இருந்துது. கொஞ்சம் கள்ளர் பயமும்கூட.

    யேஸ்ஸ் யேஸ்ஸ் உங்களை எல்லாம் நிம்மதியாகவே இருக்க விடமாட்டனே.. சுற்றுலா டொடரும்ம்ம்..

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  64. அதிரா வந்திட்டீங்க தானே! மூச்சு வாங்க ஓடி வந்தேன்..பதிவும் போட்டாச்சு.படங்கள் பகிர்வும் அருமை.பாரிஷ் விளக்கமாக சுற்றிக் காட்டுங்க,இனி எல்லாரும் வரிசையாக அங்கே கிளம்பி போனாலும் உதவியாக இருக்குமே!
    மகியோட 2,3 கமெண்ட்டை ரிப்பீட்டிகிறேன்.தொடர்ந்து அசத்துங்க.

    ReplyDelete
  65. //குளிரில நடுங்கி நடுங்கி கியூவில நின்றுதான் எடுத்தோம்... ஸ்ஸ்ஸ் ரிக்கெட்டைப் பார்க்கச் சொன்னேனாக்கும்:)..//

    நலமா அதிராக்கா...WEEK DAYS ல போனீங்களா?

    நேசனை பார்த்தீங்களா? படங்கள் நல்லா இருக்கு...குறிப்பா டிக்கட் படம்...HA HA...

    ReplyDelete

  66. வணக்கம்!

    தொல்லையை மெல்லத் தொடரும் அதிரவே!
    சொல்பவை யாவும் சுகம்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  67. வணக்கம்,அதிரா மேம்!நலமா?///கொஞ்ச நாள் தொல்லை இல்லாம இருந்திச்சு.மறுபடியும்..................///பிரான்ஸ் பார்த்தது சந்தோஷம்.பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  68. அன்புள்ள அதிரா, வணக்கம்.

    இன்று நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன்னுடைய வெற்றிகரமான 900th POST ஐ, வெளியிட்டுள்ளார்கள்.

    தலைப்பு: ”ஸ்வர்ண குண்டல அனுமன்”

    இணைப்பு:

    http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_4256.html

    தாங்கள் மேற்படி வலைத்தள இணைப்புக்கு அன்புடன் வருகை தந்து, அவர்களை வாழ்த்தி சிறப்பிக்க வேண்டுமாய், அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

    மிக்க நன்றி,

    இப்படிக்குத்தங்கள் அன்புள்ள,

    கோபு அண்ணன்

    gopu1949.blogspot.in

    ReplyDelete
  69. வாங்கோ ஆசியா.. என்னா தைரியம் உங்களுக்கு:) பாரிஷை விளக்கமா சுற்றிக் காட்டுங்க என.. தெரிஞ்சோ தெரியாமல் சொல்லிட்டீங்க:)... அதுதான் சொல்லிட்டனே அதிராவின் தொல்லை ஆரம்பம் என:).. மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  70. வாங்கோ ரெவெரி வாங்கோ..

    நலமா அதிராக்கா...WEEK DAYS ல போனீங்களா?
    ஓம் ரெவெரி திங்கட் கிழமை போனோம்ம்.

    நேசனை பார்த்தீங்களா? படங்கள் நல்லா இருக்கு...குறிப்பா டிக்கட் படம்...HA HA...

    இல்ல நேசனைப் பார்க்கவில்லை, ஆனா இன்னொரு பிரபல பதிவரைச் சந்தித்தோம்ம்.. முடிஞ்சால் கண்டு பிடிங்கோ:) மியாவும் நன்றி நேசன்.

    ReplyDelete
  71. வாங்கோ கவிஞர் பாரதிதாசன்... ஹா..ஹா..ஹா.. தொல்லை உங்களுக்கும் பிடிச்சிருக்கோ?:) மிக்க நன்றி.

    ReplyDelete
  72. மிக்க நன்றி கோபு அண்ணன்.. நீங்க சொன்ன பின்பு, போய்வந்திட்டனாக்கும்:))

    ReplyDelete
  73. thira said...
    மிக்க நன்றி கோபு அண்ணன்.. நீங்க சொன்ன பின்பு, போய்வந்திட்டனாக்கும்:))

    மிக்க நன்றி அதிரா. போய் வந்தது இருகட்டும். கமெண்ட் போட்டீங்களா? அது தான் எனக்கு முக்கியம்.

    நேற்று இரவு 12 மணிவரை உங்க கமெண்ட் பப்ளிஷ் ஆகவில்லை.

    அநேகமாக 100 க்கு 100 கிடைக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்கோ.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  74. பின்னூட்டமும் போட்டேன் கோபு அண்ணன் ஆனா 100 கிடைக்கல்ல.. அதை ராஜேஸ்வரி அக்கா .. காத்திருந்து பறிப்பதுபோல டமார் எனப் பறிச்சுப்போட்டா...:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    இப்போதான் கவனிச்சேன்ன்.. ஒருவருக்கு மட்டுமே, அதுவும் 100 ஐப் பறிக்கும் நோக்கில்:) ராஜேஸ்வரி அக்கா ஓடிவந்து பதில் போட்டிருக்கிறா:)).. இது நியாஜமில்லை:), அநீதி:), மீ உண்ணாவிரதமிருக்கப்போறேன்ன்ன்ன்:))

    ReplyDelete
  75. // athira said...

    பின்னூட்டமும் போட்டேன் கோபு அண்ணன் ஆனா 100 கிடைக்கல்ல.. அதை ராஜேஸ்வரி அக்கா .. காத்திருந்து பறிப்பதுபோல டமார் எனப் பறிச்சுப்போட்டா...:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    இப்போதான் கவனிச்சேன்ன்.. ஒருவருக்கு மட்டுமே, அதுவும் 100 ஐப் பறிக்கும் நோக்கில்:) ராஜேஸ்வரி அக்கா ஓடிவந்து பதில் போட்டிருக்கிறா:)).. இது நியாஜமில்லை:), அநீதி:), மீ உண்ணாவிரதமிருக்கப்போறேன்ன்ன்ன்:))
    //

    கோச்சுக்காதீங்கோ அதிரா. உங்க அக்கா ரொம்ப ரொம்ப நல்லவங்க. தங்கமானவங்க. சொக்கத்தங்கம். கொங்கு நாட்டுக்கோவைத்தங்கம்.

    நம்மைப்போல லொடலொடா டைப் கிடையாது. அழுத்தம். மஹாஅழுத்தம். எதையுமே லேஸில் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். எனக்கே சமயத்தில், எதையும் வெளிப்படையாகப் பேசாமல் இருக்கிறாரகளே என மிகவும் எரிச்சல் ஏற்படுவது உண்டு.

    ஆனாலும் அவர்கள் ரொம்பச் சமத்து. அழுந்தச்சமத்து. அந்தகுணமும் எனக்கு மிகவும் பிடிக்கும் தான்.

    இருந்தாலும் ஒருசிலவற்றை, ஒருசில நேரங்களில் வாய்விட்டு, மனம்விட்டுப் பேசினால் தான் நல்லது.

    இல்லாவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்?

    அத்னால் எனக்காக ப்ளீஸ் அதிரா ... உங்கள் அக்காவை ஒன்றும் சொல்லாதீங்கோ. அப்புறம் அதைத்தாங்கும் சக்தியில்லாமல் நான் ஒரேயடியாக அழ ஆரம்பித்து விடுவேனாக்கும்.

    உட்னடியாக குல்பி குடித்து விட்டு, உங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு விடுங்கோ, ப்ளீஸ். ;)

    இப்படிக்கு,

    பிரியமுள்ள கோபு அண்ணன்

    ReplyDelete
  76. Subramaniam Yogarasa said...
    வணக்கம்,அதிரா மேம்!நலமா?///கொஞ்ச நாள் தொல்லை இல்லாம இருந்திச்சு.மறுபடியும்..................///பிரான்ஸ் பார்த்தது சந்தோஷம்.பகிர்வுக்கு நன்றி!//

    வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ. பெயரெல்லாம் மாத்தி வந்திருக்கிறீங்க, ஆரம்ப புரியேல்லை ஆரென:) பின்பு அந்த “மேம்” ஐ வச்சே கண்டுபிடிச்சனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    மியாவும் நன்றி.. உங்கள் நாடு அழகாகத்தான் இருக்கு.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.