மீண்டும் பழைய நினைவுகளே...
அந்தக் கோயிலுக்கு நாம் அடிக்கடி போவதுண்டு. அங்கே ஒரு அண்ணன்... அவர் கிட்டத்தட்ட சாமியார்போல:)... ஆரையுமே, குறிப்பாக பெண்களை நிமிர்ந்தே பார்ப்பதில்லை, சரியான டோண்ட் கெயார் மாதிரி, சிலநேரம் விபூதி ஏதும் கொடுத்தாலும் நிலம் பார்த்தபடியே கொடுப்பார்.
ஐயருக்கு பூசையின்போது கெல்ப் பண்ணுவார். நல்ல ஸ்மார்ட் ஆக இருப்பார்... நல்ல தொழிலில் இருப்பதாகவும் அறிந்தோம்... அவர் இப்படி ரொம்ப அமைதியாக இருப்பதனால்.. ஹொஸ்டல் கேர்ள்ஸ் ஆகிய எமக்கு அவர் பற்றி அறிய ஒரு ஆர்வம் அவ்ளோதான். இது இப்படி இருக்க அந்தக் ஹொஸ்டலுக்குப் போயிட்டோம்.
நாமதான் எங்கின போனாலும் ஒட்டிவிடுவோமே... அங்கிருந்த கேர்ள்ஸ், மேட்ரன், வோச்சர்(செக்கியூரிட்டிகார்ட்:)) எல்லோருக்கும் எம்மைப் பிடித்துப் போயிட்டு. எப்பவும் கலகலப்பாக இருப்போம். அப்போ விடுமுறை என்பதால் அங்கு கொஞ்சம் வசதி அதிகம், ரிவி ரூமில் படம் போட்டுப் பார்க்க அனுமதி இருந்தது.
அங்கு இன்னொரு சம்பவம். அந்த ஹொஸ்டலில் அட்டாச் பார்த்ரூம் இல்லை. அது ஹொஸ்டலை விட்டு, அருகில்தான் மெயின் ரோட்டுப் பக்கமாக மதில் கரையிலேயே கட்டப்பட்டிருந்தது. அதனால மாலையாகிவிட்டால் வெளியே இறங்க எல்லோருக்கும் பயம். அந்த வயதான:) செக்கியூரிட்டி கார்ட்டை அழைத்துக்கொண்டுதான் போவார்கள். தூரமென நினைத்திடாதீங்கோ.. ஒரு பத்தடி தூரம்தான் இருக்கும், ஆனால் முன் வாசலால் இறங்கி பக்கத்தில் திரும்ப வேண்டும், அதனால பயம்.
அப்போ நாம் அங்கு போய் இரு நாட்களில், இரவு அந்த வோச்சரைக் கூப்பிட்டோம் வாங்கோ என, அவர் உடனே சொன்னார்.. “அதிரா.. என்று ஒரு துணிஞ்சபிள்ளை இருக்க, என்னை எதுக்குக் கூப்பிடுறீங்க, அதிராவைக் கூட்டிப் போங்கோ” என:))) அவ்வ்வ்வ்வ்... எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை, என் கதைகளைப் பார்த்து, நான் தைரியசாலி என நினைச்சிட்டார்போலும்...:)).
முன்பு எனக்கு ஏதும் பயமாக இருக்கு என்றால், அப்பம்மா சொல்லுவா “உந்தப் பயத்தைக் கழட்டி இங்க தா, நான் என் வெத்தலைப் பையில் போட்டிருக்கிறன், நீ பயமில்லாமல் போயிட்டு வா” என்று...
அது நினைவு வரவே... பயத்தைக் கழட்டி வைத்து விட்டு:) மனதில “வைரவா வைரவா” என வேண்டிக்கொண்டு.. அங்கிருந்த நாட்கள் முழுவதும், நான் தான் முன்னே நடப்பேன்:).. கடவுள் புண்ணியத்தில் பால்போல வெள்ளை:) நிலவாகவும் இருந்தது அப்போ:)). இமேஜ் டமேஜ் ஆகாமல் பாதுகாத்திட்டேன்.. என் பெஸ்ட் நண்பியும் என்னோடுதான் இருந்தா.
சரி இப்போ அந்த அண்ணனின் கதைக்கு வருவோம். நாங்கள் அங்கு போன அடுத்த நாள் காலையில் பார்க்கிறோம், அந்த அண்ணன் வந்து ஒபிஷில் மேட்ரனோடு கதைத்துவிட்டுப் போனார். எங்களுக்கு இன்னும் ஆர்வம் அதிகமாயிட்டுது.. அவர் எப்படி இங்கே வந்தார் என விசாரித்த இடத்தில், அங்கிருந்த பிள்ளைகள் சொன்னார்கள், அவர் ரொம்ப நல்லவர், அவர்தான் எங்கள் மேட்ரனுக்கு ஏதும் வெளி வேலைகள் செய்து கொடுப்பார்.. என.
அப்போ நாம் படம் பார்க்க வேண்டுமே... என் தலைமையில் படம் செலக்ட் பண்ணினோம்... நான் சொன்னேன் எனக்கு நீண்ட நாட்களாக ஒரு பெரிய ஆசை.. “அவள் ஒரு தொடர்கதை” படம் பார்க்க வேண்டும் என, நீங்களும் சரி என்றால் அதையே எடுப்போம் என்று. அனைவரும் ஒத்துக்கொண்டார்கள், மேட்ரனிடம் சொல்லியாச்சு, அவ சொன்னா “நாளைக்கு சிறி தம்பி வருவார், வந்ததும் சொல்லி வாங்கித்தாறேன்” என.
காவல் இருந்தோம், அடுத்த நாள் காலை.. அவர் வந்தார்.. நாமும் எல்லோரும் ஓடிப்போய் மேட்ரனைச் சுற்றி நின்றோம்... அப்படித்தான் அவர்கள் பழகியிருந்தார்கள், நாமும் இணைந்து கொண்டோம்... விடுமுறை என்பதால் மொத்தம் 10,12 கேர்ள்ஸ் போலதான் அங்கிருந்தோம்.
அப்போ எம்மைக் கண்டதும், அந்த அண்ணா, குனிந்த படியே நின்று கதைத்தார், யாரையுமே நிமிர்ந்து, தப்பித்தவறிக்கூட பார்க்கவில்லை, மேட்ரனை மட்டுமே இடைக்கிடை பார்த்தார்.. படத்தின் பெயர் சொல்லியாச்சு, ஒபீஷால் ஈவினிங் வரும்போது எடுத்து வாறேன், என்றிட்டுப் போயிட்டார்.
பின்னர் எப்ப வந்தாரோ தெரியாது, அடுத்த நாள் காலை நாம் மேட்ரன் ஒபீஷுக்குப் போனோம்... அவவுக்கும் ஒன்றும் புரியவில்லை, அதோ தந்திட்டுப்போயிருக்கிறார் என்ன எனப் பாருங்கோ.... ஏதோ எல்லா இடமும் தேடி கஸ்டப்பட்டுத்தான் எடுத்தாராம் எனச் சொன்னா.
நாங்க எடுத்து பாக்கைத் திறந்து பார்த்தோம்.. அது “அவள் ஒரு தொடர்கதை” கதைப் புத்தகம்... .....ஙேஙேஙேஙேஙேஙே.....!!.
=======================================================
சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன், “தமிழ்ப்படம்” என ஒரு படம், கொஞ்சம் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கு என. அப்போ அவருக்கு text பண்ணினேன்..
எனக்கு தமிழ்ப்படம் மூவி அனுப்ப முடியுமோ என...
அவரிடமிருந்து பதில் வந்துது, I bought "Thamizhan" movie, will send it 2moro.
நான் பதில் அனுப்பினேன்....
I asked "Thamizhpadam" என.
அதுக்கு அவரிடமிருந்து வந்த பதில்.... All of them are Tamil movies....
நான் அப்போதான் புரிந்துகொண்டேன்... விழுந்து விழுந்து சிரித்து, ஃபோன் பண்ணி விளக்கம் சொன்னோம்.
பார்த்தீங்களோ... ஒரு சொல்லுக்கு எத்தனை அர்த்த்த்த்த்த்தம்ம்ம்:))).
========================================================
குட்டி இணைப்பு
========================================================
பாசங்களும் பந்தங்களும் , பிரித்தாலும் பிரியாதது
Baby Athira:) 5.45 years:)
========================================================
|
Tweet |
|
|||
நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ.. எவ்ளோ கஸ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்குக் கொண்டு வந்திட்டேன்ன்ன்ன்:)
ReplyDeleteஅதிரா இல்லை நாந்தான் 1st ஊஊ !!!
ReplyDeleteமுதல் படத்தைப் பார்க்கும்போதே தெரியுது, ஹொஸ்டல்லே எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ மாடர்ன் யுவதியா இருந்திருக்கீங்க என்று!
ReplyDeleteஅண்ணா..பற்றிய வர்ணணையும் பிரமாதம்! பேஷ்,பேஷ்!;) நீங்க உந்த அண்ணா பற்றி சொல்லும்போது எங்க ஊர் கோயில்ல இருக்கும் அண்ணாக்கள் எல்லாரும் நினைவுக்கு வராங்க. :)
அவள் ஒரு தொடர்கதை..கதையாக் கிடைச்சுட்டது.ஹாஹ்ஹா!! பழைய நினைவுகள் எல்லாமே அவ்வப்பொழுது நினைச்சுப் பார்க்க சந்தோஷம்தான்!
/பாசங்களும் பந்தங்களும் , பிரித்தாலும் பிரியாதது/ உண்மைதேன்!
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது!
ஹேப்பி பர்த்டே ரீச்சர்!:))))))))))
/priya said...
ReplyDeleteஅதிரா இல்லை நாந்தான் 1st ஊஊ !!!/ கர்ர்ர்ர்ர்ர்!என்ர வடையப் பிரியா புடுங்கிட்டாங்களே! ;)
என்ன பிரியா,இன்னைக்கும் அடுப்பிலே குழம்பு குதிக்குதா? உங்களுக்குதான் கமென்ட் டைப் பண்ணவே டைமில்லாம சமையல் இருக்குமே??? இன்னிக்கு எப்புடி?! ;)
பாவம் அந்த அண்ணன் எப்படி பல்பு வாங்கியிருக்கார் அவ்வ்வ்வ்வ்
ReplyDeleteஒருவேளை பொண்ணுங்களை பார்க்காமல் குனிந்த தலையுடன் திரிந்தால் தான் பொண்ணுங்களுக்கு பிடிக்குமோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்ப இனி நானும் அப்படியே செய்கின்றேன் நன்றி அக்கா ஆலோசனைக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Miyaa... miyaa oodi vaa...
ReplyDeleteஅதிரா நீங்க ஹாஸ்டல்ல எல்லாம் தங்கி படிச்சீங்கன்னா காலேஜா, ஸ்கூலா? எப்படியோ படிச்சிருக்கீங்கன்னு சொல்ரீங்க ஓகே, ஓக்கே நம்பிட்டோம். அப்பலேந்தே நிறையா பல்பெல்லாம் வாங்க ஆரம்பிச்சீங்களா? குட் குட். பேபி அதிரா கொழு கொழுன்னு சூப்பரா இருக்கா. திருஷ்டி சுத்தி போடனும்.
ReplyDelete//என்ன பிரியா,இன்னைக்கும் அடுப்பிலே குழம்பு குதிக்குதா? உங்களுக்குதான் கமென்ட் டைப் பண்ணவே டைமில்லாம சமையல் இருக்குமே??? இன்னிக்கு எப்புடி?! ;)//
ReplyDeleteஇன்னக்கி குழம்பு இல்லை , சப்பாத்தி ,பனீர் மசாலா,கொத்தமல்லி சட்னி
வாங்க சாபிடலாம்.
பனீர் மசாலா-கொத்தமல்லி சட்னி??ஹ்ம்ம்ம்..புதுக் காம்பினேஷனா இருக்குதே..பரவால்ல,அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். ;):)
ReplyDeleteஇந்த கமென்ட்டை ப்ரைவேட் ஃப்ளைட்ல இருந்துதான் டைப்பண்ணறேன்,இன்னும் ஒன் அவர்ல உங்க வீட்டுக்கு முன்னால(!) ஃப்ளைட் லேண்ட் ஆகிடும்,அதுக்கேத்த மாதிரி சப்பாத்திய போடுங்க பிரியா,எனக்கு சூடா சாப்புடத்தான் பிடிக்கும்!:D
மியாவ் தூங்கி எந்திரிச்சு வந்து கர்ச்ச்ச்ச்ச்சிக்கப்போறாங்கோ..அதுக்குள்ளே மீ த எஸ்கேப்பூ!
ஊசிக்குறிப்பு:அதிரா,தமிழ்ப்படம் பாத்தீங்களா இல்லையா?? நல்லாருக்குதா? நான் இன்னும் பாக்கல,அதான் கேக்குறேன். ;)
/படிச்சீங்கன்னா காலேஜா, ஸ்கூலா? எப்படியோ படிச்சிருக்கீங்கன்னு சொல்ரீங்க ஓகே, ஓக்கே நம்பிட்டோம்./ லஷ்மிம்மா,நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க போல இருக்கே? :D :D
ReplyDeletepபேபி அதிரா பேபி அதிரா என்று எத்தனை பேபி படத்தைத்தான் காட்டிட்டு இருப்பீங்க.உங்க உண்மையான படத்தை எப்ப போடப்போறீங்க மியாவ்?
ReplyDelete//எப்படியோ படிச்சிருக்கீங்கன்னு சொல்ரீங்க ஓகே, ஓக்கே நம்பிட்டோம். ////லக்ஷ்மிம்மா நம்மை எல்லாம் பார்த்து நம்மைப்போல ஆகிட்டாங்க.:)
ReplyDelete//அதிரா நீங்க ஹாஸ்டல்ல எல்லாம் தங்கி படிச்சீங்கன்னா காலேஜா, ஸ்கூலா? எப்படியோ படிச்சிருக்கீங்கன்னு சொல்ரீங்க ஓகே, ஓக்கே நம்பிட்டோம். //
ReplyDeleteஹா...ஹா... அட்ரஸ் கேக்காம விட்டீங்களே :-)))
// குட் குட். பேபி அதிரா கொழு கொழுன்னு சூப்பரா இருக்கா. திருஷ்டி சுத்தி போடனும்.//
யாரு பெத்த பிள்ளையோ ஐயோ பாவம் ஹி..ஹி... :-)))
//Mahi said...
ReplyDeleteமுதல் படத்தைப் பார்க்கும்போதே தெரியுது, ஹொஸ்டல்லே எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ மாடர்ன் யுவதியா இருந்திருக்கீங்க என்று! //
உருண்டு பிரண்டு சிரிச்சதில..பக்கத்தில இருக்கிற ஆள் என்னை வித்தியாசமா பாக்கிறான் ஹா..ஹா... :-)))
//நாங்க எடுத்து பாக்கைத் திறந்து பார்த்தோம்.. அது “அவள் ஒரு தொடர்கதை” கதைப் புத்தகம்... .....ஙேஙேஙேஙேஙேஙே.....!!//
ReplyDelete’ஜகன் மோகினி’ன்னு கேட்டிருந்தா ஒரு வேளை அவர் திரும்ப வந்தே இருக்க மாட்ட்ரோ என்னவோ ..:-))
வாங்கோ அதிரா.. இம்முறை மட்டின் பிர்ராணி உங்களுக்கே.. என்சோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:))..
ReplyDeleteபிரியாவுக்கு ஆயாஆஆஆஆ:)).
ஆ... வங்கோ பிரியா.. சப்பாத்தி சுடாமல் வந்திருந்தா நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊ:))... இட்ஸ் ok.. வந்திட்டீங்க.... ஆயாவைப் பத்திரமாக் கூட்டிப்போங்கோ..... இனி உங்களுக்கு சப்பாத்தி சுடும் வேலை இல்லை, அவவே எல்லாம் பார்த்துக்கொள்ளுவா:)).
ReplyDeleteமியாவும் நன்றி பிரியா.. இம்முறை முதலாவதா வருகை தந்திட்டீங்க....
வாங்கோ மஞ்சள் பூ வாங்கோ...
ReplyDelete//ஹொஸ்டல்லே எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ மாடர்ன் யுவதியா இருந்திருக்கீங்க என்று! //
சிறு பிழை திருத்தம்.. மாடர்ன் “பேபீஈஈஈஈஈ”... ஹையோ ரொம்ப ஷை ஆ வருதூஊஊஊஉ:)).
//ஹேப்பி பர்த்டே ரீச்சர்!:))))))))))//
றீச்சர் தலைமறைவு:)).
மியாவும் நன்றி மகி..
பேபி அதிரா ஏன் கோவமா இருக்காங்க?
ReplyDelete//Mahi said...
ReplyDelete/priya said...
அதிரா இல்லை நாந்தான் 1st ஊஊ !!!/ கர்ர்ர்ர்ர்ர்!என்ர வடையப் பிரியா புடுங்கிட்டாங்களே! ;)//
நோ... மகி நோஓஓ.. அவவ்ங்க ஆயாவைத்தான் கூட்டிப் போறா:)).
//அதுக்கேத்த மாதிரி சப்பாத்திய போடுங்க பிரியா,எனக்கு சூடா சாப்புடத்தான் பிடிக்கும்!:D //
நோ எனக்கு ”சூடு” பிடிக்கவே பிடிக்காது, ஆறியிருக்கோணும்... குளிந்திருந்தாகூட சூடாக்க்காமல் சாப்பிட்டிடுவென், ஆனா ஹொட்டாக இருந்தால் பிடிக்காது அவ்வ்வ்வ்:)).
வாங்கோ ராஜ் வாங்கோ..
ReplyDelete//ஒருவேளை பொண்ணுங்களை பார்க்காமல் குனிந்த தலையுடன் திரிந்தால் தான் பொண்ணுங்களுக்கு பிடிக்குமோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்ப இனி நானும் அப்படியே செய்கின்றேன் நன்றி அக்கா ஆலோசனைக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ஹா..ஹா..ஹா... நீங்கதான் கரெக்ட்டாப் பொயிண்டைப் பிடிச்சிருக்கிறீங்க ராஜ்:)).. இனிமேல் அப்பூடி ட்ரை பண்ணிப் பாருங்கோவன்... ரொம்ப நல்ல பிள்ளைபோல:))).
மிக்க நன்றி ராஜ்.
ஆ... இதாரது மயில் குரல் போல இருக்கே... நம்பவே முடியேல்லை...
ReplyDelete//இலா said...
Miyaa... miyaa oodi vaa.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நாங்க கத்தி ஓய்ந்து... மறந்துபோகிற நேரம்:)) ஓடிவந்து ஓடிவாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
வந்ததுதான் வந்தீங்க... என்னை வாழ்த்தாட்டிலும் பறவாயில்லை றீச்சரை வாழ்த்தியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
மியாவும் நன்றி இலா.. இனி எப்போ வருவீங்க... டிஷம்பர் 23 க்கு முன் வந்திடுங்க OK?.
baby miyaaaa azaku
ReplyDeletepresent apparam vareen
inRUm vadai kidaikkala///
வாங்கோ லக்ஸ்மி அக்கா வாங்கோ..
ReplyDelete//எப்படியோ படிச்சிருக்கீங்கன்னு சொல்ரீங்க ஓகே, ஓக்கே நம்பிட்டோம்.//
ஹா..ஹா..ஹா.. என் பக்கம் வந்தவுடன் எல்லோருக்கும் குசும்பும் தானா வந்திடுதே அவ்வ்வ்வ்:))... அது காலேஜ்ஜும் இல்லை, ஸ்கூலும் இல்ல “நேசறீஈஈஈஈஈஈஈ”:)).
//பேபி அதிரா கொழு கொழுன்னு சூப்பரா இருக்கா. திருஷ்டி சுத்தி போடனும்.//
உஸ்ஸ் மெதுவா லக்ஸ்மி அக்கா... எல்லா இடத்திலிருந்தும் புகைப் புகையா வருதே:)).... இப்பத்தைய அதிராவுக்கும் சேர்த்தே திருஸ்டி சுத்துங்கோ லக்ஸ்மி அக்கா:)), ஏணெண்டால்.. இவவும் கொழு கொழு என்றுதான் இருக்கிறா:)))...
ஹையோ துவக்கு, பொல்லெல்லாம் எடுத்தெல்லோ துரத்தி வருகினம்... மீ எஸ்ஸ்ஸ்:)).
மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.
//ஊசிக்குறிப்பு:அதிரா,தமிழ்ப்படம் பாத்தீங்களா இல்லையா?? நல்லாருக்குதா? நான் இன்னும் பாக்கல,அதான் கேக்குறேன். ;)//
ReplyDeleteமகி, உங்கட கேள்வியைப் பார்த்ததும், எல்லோரும் நினைக்கப்போகினம், என்ன இது அதிரா தமிழ்ப்படம் பார்க்கிறேல்லையோ என அவ்வ்வ்வ்:))).
மகி அது நான் கேள்விப்பட்டது, எமது தமிழ் சினிமாப் படங்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதன் ஒரு மொத்த தொகுப்பாம்.. கிட்டத்தட்ட நகைச்சுவைபோல்:).
அதாவது, தமிழ் சினிமாவிலதானே... ஹீரோ.. கையில ஏதும் ஆயுதமும் இல்லாமல், நின்ற இடத்திலேயே பத்துப் பேரை அடித்து விழுத்துவார்:)).. அப்படி நம்ப முடியாது பேய்க்காட்டுக்களை எல்லாம் ஒரு தொகுப்பாக்கி இருக்காம்.
அது புதுப்படம் அல்லவாம், அதனால் வீடியோக் கடையில் கிடைக்கவில்லைப்போலும்... நெட்டிலதான் தேட வேண்டும், கிடைத்தால் எனக்கும் லிங் அனுப்புங்க... ஓசில பார்க்கத்தான்:)).
http://www.youtube.com/watch?v=vqC1aZns_t4&feature=related
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=bcjyE5P1YvQ&feature=related
http://www.youtube.com/watch?v=BJYB878WSMw&feature=related
http://www.youtube.com/watch?v=RKnmhg2LrMc&feature=related
http://www.youtube.com/watch?v=krPbbS446_o&feature=related
http://www.youtube.com/watch?v=5A92eXmeazc&feature=related
http://www.youtube.com/watch?v=HWH6sZ7bnFs&feature=related
http://www.youtube.com/watch?v=8uy8TSLiK7w&feature=related
இப்படியே பார்த்துகிட்டே போங்க :-))) பார்த்துட்டு கதை சொல்லுங்க :-))))
//எனக்கும் லிங் அனுப்புங்க... ஓசில பார்க்கத்தான்:)).//
ReplyDeleteயாரோ ஒருத்தர் இதே பிளாகில ஓசியில பேரை கேட்டதும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னதா நினைவு ஹி..ஹி... :-)))
//ஏணெண்டால்.. இவவும் கொழு கொழு என்றுதான் இருக்கிறா:)))...//
ReplyDeleteஇந்த நேரம் பார்த்து படம் போடும் கமெண்ட் கிடைக்காம போச்சே...(வடை போச்சே ஸ்டைலில் படிங்க ))) :-))))
//ஆயாவைப் பத்திரமாக் கூட்டிப்போங்கோ..... இனி உங்களுக்கு சப்பாத்தி சுடும் வேலை இல்லை, அவவே எல்லாம் பார்த்துக்கொள்ளுவா:)).//
ReplyDeleteநா தப்பிச்சேன் இனி முதல் கமெண்ட் நா கேட்கவே மாட்டேன்ன்ன்ன்ன்ன் :-))))))))))))))).
ஹா..ஹா..ஹா... ஜெய்.. இதுவோ அந்தப்படம்... முதலாவது பார்த்தே உருண்டு பிரண்டு சிரித்திட்டேன்ன்ன்ன்ன்... மிச்சம் எப்பூடி இருக்கப்போகுதோ? அவ்வ்வ்வ்வ்.. கருத்தம்மாவை அப்பூடியே புரட்டிப்போட்டினம்:)))).... மிக்க மிக்க நன்றி ஜெய்ய்ய்ய்ய்... சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்:).
ReplyDeleteவாங்கோ ஸாதிகா அக்கா..
ReplyDelete//ஸாதிகா said...
pபேபி அதிரா பேபி அதிரா என்று எத்தனை பேபி படத்தைத்தான் காட்டிட்டு இருப்பீங்க.உங்க உண்மையான படத்தை எப்ப போடப்போறீங்க மியாவ்//
என்ன இப்பூடிக் கேட்டிட்டீங்க? 5 வயதில ஒரு மாதிரி, 6 வயசில ஒரு மாதிரி, சுவீட் சிக் ரீன்ல:) ஒருமாதிரி இப்பூடி வளர வளர முகமும் மாறிக்கொண்டுதானே இருக்கும் ஸாதிகா அக்கா? அவ்வ்வ்வ்.. அதில உண்மை பொய்யெண்டு பீதியைக் கிளப்புறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.
வாங்கோ ஜெய் வாங்கோ...
ReplyDelete//யாரு பெத்த பிள்ளையோ ஐயோ பாவம் ஹி..ஹி... :-)))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). (ஒரு)அம்மா பெத்த பிள்ளைதான்:), நான் பேபி அதிராவைச் சொன்னேனாக்கும்:))..
//உருண்டு பிரண்டு சிரிச்சதில..பக்கத்தில இருக்கிற ஆள் என்னை வித்தியாசமா பாக்கிறான் ஹா..ஹா... :-)))//
விடுங்க ஜெய்:)) அவருக்கு இதெல்லாம் புதுசா?:)) உங்களுக்கு அடிகிடி படேல்லைத்தானே? ஐ மீன் உருண்டு பிரண்டதில:)).. ஹையோ.. முறைக்கிறாரே:)))
வாங்கோ ராஜி வாங்கோ..
ReplyDeleteமுதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு, மிக்க நன்றி.
உங்கட புரொஃபைல உங்களை ஆரெனக் கண்டு பிடிக்கவே முடியேல்லை... பப்பியைப் பார்த்துத்தான் கொஞ்சம் ஊகிக்கிறேன்... எங்கட ஜீனோவைப்போல இருக்கு:).
//ராஜி said...
பேபி அதிரா ஏன் கோவமா இருக்காங்க//
அதுவா அது, அவட 100 ஆவது பதிவுக்கு தெரிஞ்சவங்க பலபேர் வாழ்த்தவில்லையாம் அவ்வ்வ்வ்வ்வ்:))).
மிக்க நன்றி ராஜி.
//விடுங்க ஜெய்:)) அவருக்கு இதெல்லாம் புதுசா?:)) உங்களுக்கு அடிகிடி படேல்லைத்தானே? ஐ மீன் உருண்டு பிரண்டதில:)).. ஹையோ.. முறைக்கிறாரே:))) //
ReplyDeleteஇது பகல்ல நடந்ததால தப்பிச்சான் ..ராத்திரியா இருந்திருந்தா பயந்து அலறி அடிச்சி ஓடியிருப்பான் ஹா..ஹா.. :-)))
வாங்கோ ஜலீலாக்கா வாங்கோ...
ReplyDeleteஉப்பூடி வந்து பிரசண்ட் எண்டு மட்டும் சொன்னால், நான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான் சொல்லுவன்.. என்று சொல்ல மாட்டன்:)) மியாவும் நன்றி ஜல் அக்கா... வந்தது மகிழ்ச்சி.
//ஹா..ஹா..ஹா... ஜெய்.. இதுவோ அந்தப்படம்... முதலாவது பார்த்தே உருண்டு பிரண்டு சிரித்திட்டேன்ன்ன்ன்ன்...//
ReplyDeleteநீங்களுமாஆஆஆ..... இது எல்லா தமிழ் படத்தையும் கிண்டலடிச்சு எடுத்தது :-))
//ஜெய்லானி said...
ReplyDelete//எனக்கும் லிங் அனுப்புங்க... ஓசில பார்க்கத்தான்:)).//
யாரோ ஒருத்தர் இதே பிளாகில ஓசியில பேரை கேட்டதும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னதா நினைவு ஹி..ஹி... :-)))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) அதுதானே அண்டைக்கு பப்ளிக்கிலயே போட்டுக்குடுத்திட்டீங்களே.. ஓசில பாருங்க என:)))... அற நனைஞ்சவருக்கு கூதலென்ன குளிரென்ன என ஆகிப்போச்சு என் நிலைமை:))))...
//இந்த நேரம் பார்த்து படம் போடும் கமெண்ட் கிடைக்காம போச்சே...(வடை போச்சே ஸ்டைலில் படிங்க ))) :-))))//
ஹா..ஹா... மகி, இமா அனுப்பிய குண்டுப் பூனைகள் நினைவுக்கு வருது... கடவுள் என் பக்கம் போல:)(இண்டைக்கு மட்டும்தேன்:)).
//
http://manithan.com/view-2011121215650.html
//
மேலே இருக்கும் லிங் பாருங்கோ.. இமா அனுப்பினவ:). ஒரு அப்பாவிப் பூஸை,, சாப்பிடு சாப்பிடு எனச் சொல்லி சாப்பிடப் பண்ணி, இப்பூடி நடக்கமுடியாமல் பண்ணினதுக்காக, பிரித்தானிய நீதிமன்றத்தில வழக்குப் போடப்போறேன்ன்ன்ன்ன்ன்:)))
//நீங்களுமாஆஆஆ..... இது எல்லா தமிழ் படத்தையும் கிண்டலடிச்சு எடுத்தது :-))//
ReplyDeleteஅதேதானாம் ஜெய்... ஆரம்பம் பார்க்கவே தெரியுது.. ஆனா பெயர் தமிழ் என வருதே...
//ஒரு அப்பாவிப் பூஸை,, சாப்பிடு சாப்பிடு எனச் சொல்லி சாப்பிடப் பண்ணி, இப்பூடி நடக்கமுடியாமல் பண்ணினதுக்காக, பிரித்தானிய நீதிமன்றத்தில வழக்குப் போடப்போறேன்ன்ன்ன்ன்ன்:))) //
ReplyDeleteவழக்கு வேனாம் அவரை சோமாலியாவுக்கு நாடு கடத்திடலாம் :-))
//ஜெய்லானி said...
ReplyDelete//ஆயாவைப் பத்திரமாக் கூட்டிப்போங்கோ..... இனி உங்களுக்கு சப்பாத்தி சுடும் வேலை இல்லை, அவவே எல்லாம் பார்த்துக்கொள்ளுவா:)).//
நா தப்பிச்சேன் இனி முதல் கமெண்ட் நா கேட்கவே மாட்டேன்ன்ன்ன்ன்ன் :-)))))))))))))))//
ஹா..ஹா..ஹா.. பயப்பூடாதீங்க ஜெய்... முதல் கமெண்ட்டுக்கு... நல்ல நல்ல ப்ப்பிரசண்ட்:)) எல்லாம் உண்டு.. இது 2 வதுக்குத்தான் ஆயா:)) நான் கொடுத்த வாக்கை எண்டைக்கும் மீற மாட்டேன்:))..
இல்லையெனில் இனிமேல் டக் டிக் டோஸ் போடட்டோ?:)) ஆயாவுக்குத்தான்:)))
அந்த ஆள் மனைவியை விட பூஸ் ஓவர் கொழு கொழு ஹா..ஹா.. :-)))
ReplyDelete//வழக்கு வேனாம் அவரை சோமாலியாவுக்கு நாடு கடத்திடலாம் :-))//
ReplyDeleteபூஸையோ? எஜமானையோ?:))..
//இது பகல்ல நடந்ததால தப்பிச்சான் ..ராத்திரியா இருந்திருந்தா பயந்து அலறி அடிச்சி ஓடியிருப்பான் ஹா..ஹா.. :-)))//
ஜெய்!! ஒரு தடவை ராத்திரில ட்ரை பண்ணிப்பாருங்கோ... உங்களுக்கு ரூம் தனியாக் கிடைச்சிடும்:)))
//.. ஆனா பெயர் தமிழ் என வருதே...//
ReplyDeleteஓசியில பார்க்கும் போது ஹெட்டிங் எந்த பேர்ல இருந்தா என்ன...ஹி..ஹி... படத்தை உள்ளே பாருங்க டைட்டில் அதுல இருக்கு ஹா..ஹா... .. இதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லப்பிடாது
:-))))))))))))))))))))))))))
//ஜெய்!! ஒரு தடவை ராத்திரில ட்ரை பண்ணிப்பாருங்கோ... உங்களுக்கு ரூம் தனியாக் கிடைச்சிடும்:)))//
ReplyDeleteதனி ரூம் இப்பக்கூட கிடைக்கும் ஆனா தனியா இருக்க பயமா இருக்குமே... யாராவது கூட ரெண்டு பேர் இருந்தா நடுராத்திரியில அவங்களையும் பயங்காட்ட முடியுமே ஹா..ஹா... :-))))
//ஜெய்லானி said...
ReplyDeleteஅந்த ஆள் மனைவியை விட பூஸ் ஓவர் கொழு கொழு ஹா..ஹா.. :-)))//
ஹா..ஹா..ஹா.. இப்பவாவது புரிஞ்சுகொள்ளுங்க... பூஸுக்கு எவ்ளோ பவர் இருக்கென:)))... ஹையோ நான் ஒண்ணுமே சொல்லல்லே நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))..
//ஜெய்லானி said...
ReplyDelete//.. ஆனா பெயர் தமிழ் என வருதே...//
ஓசியில பார்க்கும் போது ஹெட்டிங் எந்த பேர்ல இருந்தா என்ன...ஹி..ஹி... படத்தை உள்ளே பாருங்க டைட்டில் அதுல இருக்கு ஹா..ஹா... .. இதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லப்பிடாது
:-))))))))))))))))))))))))))///
ஹா..ஹாஆஆஆ...ஹா....ஹா..... சிரிச்சதில கதிரையால விழுந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்... சே இதுக்குத்தான் சொல்றது கீழயே இருந்து கமண்ட்ஸ் படிக்கோணும் என:))))...
இருந்தாலும் ஓவரா இன்சல்ட் பண்ணப்பூடா:)).. மாத்தி யோசிக்கோணும் ஜெய்:)) ஓசில எண்டாலும் பார்க்கிறமே:))..
நேத்து நைட் 2.30 மணிப்போல தூக்கம் வரல .. டெரார் சவுண்ட் விட்டேன் ((பெட் சீட்டை திறக்காமலேயே )). அதுக்கு பிறகு அவனுங்க தூங்கல..நான் தூங்கிட்டேன் .. காலையில கேட்டதுக்கு நானா அப்படியான்னு கூலா கேட்டேன் ..
ReplyDeleteஅவனுங்க அதுக்கு பிறகு தூங்க வே இல்லை ... இது எபப்டி இருக்கு ஹா..ஹா.. :-))))))))))))))))
//தனி ரூம் இப்பக்கூட கிடைக்கும் ஆனா தனியா இருக்க பயமா இருக்குமே... யாராவது கூட ரெண்டு பேர் இருந்தா நடுராத்திரியில அவங்களையும் பயங்காட்ட முடியுமே ஹா..ஹா... :-))))//
ReplyDeleteஜெய் வேணுமெண்டால் சொல்லுங்கோ... உதவிக்கு ஒரு “எலி” அனுப்பி விடுறேன்:)) ஓசிலதான்:))... மழை காலத்துக்கு உதவுமே என பிடிச்சு வச்சிருக்கு கொஞ்சம்:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
//டெரார் சவுண்ட் விட்டேன் ((பெட் சீட்டை திறக்காமலேயே )). அதுக்கு பிறகு அவனுங்க தூங்கல..நான் தூங்கிட்டேன் .. காலையில கேட்டதுக்கு நானா அப்படியான்னு கூலா கேட்டேன் ..
ReplyDeleteஅவனுங்க அதுக்கு பிறகு தூங்க வே இல்லை ... இது எபப்டி இருக்கு ஹா..ஹா.. :-))))))))))))))))//
ஹா..ஹா..ஹா.. டெரர் சவுண்டோ? அது எப்பூடி இருக்கும்:)).. நீங்க ரொம்ப டேஞ்சர் பேர்வழிதான்போல:)).
பழைய நினைவு ஒன்று வருது....
ஒருநாள் ராத்திரி, நானும் என் மாமியின் மகள் 2 பேருமாக நித்திரையானோம்.. எனக்கு சாமம் முழிப்பு வந்திட்டுது, வெளியே நல்ல நிலவு....
மாமியின் 2 வதுமகள்: சத்தமாக, கோழி துரத்துவதுபோல.. சூ..சூ துரத்துங்கோவன் எனச் சொன்னா...
அது கனவில்:)) எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, ஆனா சாமம் எண்டதால சிரிக்கப் பயம், பிறகு நானே பயந்து கத்திடுவன், அப்போ 2 நிமிடமாகவில்லை,
மூத்தவ ஹா..ஹா..ஹாஅ.... எனப் பெரிதாகச் சிரித்தா... எனக்கு சந்தோசம் தாங்க முடியாமல் போச்சு, அவ முழிப்பென நினைத்து நானும் பலமாக, அடக்கிய சிரிப்பை எல்லாம் சிரித்துப்போட்டுப் படுத்தாச்சு:))....
காலையில் நடந்ததைச் சொல்லி மாமியின் மூத்த மகளைக் கேட்டேன்.. சிரிச்சீங்களே என..
அவ கேட்டா, நானா எப்போ சிரிச்சேன் என?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).
Happy Birthday Ima
ReplyDeleteஅடடா வாங்க அஞ்சு வாங்க... கரெக்ட்டா 50 ஆவது பதிவுக்குள் நுழைஞ்சு.. இருந்த மீதி வடையைத்தட்டிப் பறிச்சிட்டீங்க... :). காணல்லியே எனத் தேடினேன்.. உள்ளே வந்திட்டீங்க.. கிரிசாவும்:) எட்டி எட்டிப் பார்ப்பது தெரிஞ்சுது.. அவ்வ்வ்வ்..
ReplyDeleteநலம்தானே அஞ்சு?.. மிக்க நன்றி .. நீங்க உங்கட வேலையெல்லாம் முடிச்சிட்டு மெதுவா வாங்கோ.
ஆ.....மீன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் :-))))
ReplyDeleteமேலே இருக்கிற ஜெய் போட்ட படத்தின் லிங் எல்லாம் பூஸுரைட்டூ:))).. ஆரும் படம் பார்த்தால் வந்து விமர்சிக்கோணும், இல்லையெனில் தொடப்பூடா சொல்லிட்டேன் ஆமா....:)
ReplyDeleteஹையோ எங்கே முருங்கமரம்.... இங்கினதானே நிண்டுது, அடிச்ச காத்துக்கு விழுந்துட்டுதோ... இது தெரியாம சவுண்டு விட்டிட்டனோ அவ்வ்வ்வ்வ்வ்.... எலி வேகத்தில ஓடித்தப்பிட வேண்டியதுதான்..:)))
என்ன ஜெய் என்ன ஆச்சு? ஒட்டி மீன் ஃபிஸ் வேணுமோ:)))))
ReplyDeleteஓ.. மஞ்சள் மீனுக்கோ இவ்ளோ சவுண்டூஊஊஊஊஊஉ.. அவங்க வந்து போய்... நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட நேரமாச்சு:)) ரைமைப் பாருங்கோ:)).. அவ்வ்வ்வ்வ்வ்:)).
ReplyDelete//கிரிசாவும்:) எட்டி எட்டிப் பார்ப்பது தெரிஞ்சுது.. அவ்வ்வ்வ்../// மாறு வேஷத்துல வந்தாலும் கண்டு பிடிச்சிடுராங்களே போக்கிரி வடிவேலு மாதிரி என் கொண்டைய மறைக்க மறந்திட்டேனோ ???
ReplyDelete//,இன்னைக்கும் அடுப்பிலே குழம்பு குதிக்குதா? உங்களுக்குதான் கமென்ட் டைப் பண்ணவே டைமில்லாம சமையல் இருக்குமே??? இன்னிக்கு எப்புடி?! ;)// இதுல ஏதும் உள் குத்து இல்லையே மகி?? அது சரி உங்க வீட்டு குழம்பெல்லாம் இந்த மாதிரி குதிச்சு துள்ளி விளையாடுமோ ??
ReplyDelete//எப்படியோ படிச்சிருக்கீங்கன்னு சொல்ரீங்க ஓகே, ஓக்கே நம்பிட்டோம்.// அதே அதே நானும் நம்பிட்டேன்
ReplyDelete//அதிரா,தமிழ்ப்படம் பாத்தீங்களா இல்லையா?? நல்லாருக்குதா? நான் இன்னும் பாக்கல,அதான் கேக்குறேன். ;)// மகி தமிழ் படம் பாருங்க எல்லா தமிழ் படத்தையும் கிண்டல் அடிச்சிருக்காங்க ! என்ன அவங்க கிண்டல் அடிச்சிருக்க படத்தை நம்ம பார்த்து இருக்கணும் அப்போதான் காமெடி
//உருண்டு பிரண்டு சிரிச்சதில..பக்கத்தில இருக்கிற ஆள் என்னை வித்தியாசமா பாக்கிறான் ஹா..ஹா... :-)))// நீங்க பொரண்டு சிரிக்காமலே அவங்க இவ்ளோ நாளும் அப்படித்தான் பார்த்தாங்களாம் உங்களுக்குத்தான் தெரியல பாவம் ஜெய் !!
ReplyDeleteவாகை சூடவா, ஏழாம் அறிவு, மயக்கம் என்ன, வந்தான் வென்றான், போராளி , மௌன குரு, எங்கேயும் எப்போதும், கோ , வேலூர் மாவட்டம், ரௌத்திரம், முரண் , மங்காத்தா, வேலாயுதம், வேங்கை , யுவன் யுவதி இதெல்லாம் நாங்க சமீபத்துல பார்த்த படங்கள். நெட்ல தான் என்னவர் டவுன் லோட் பண்ணுவாரு. எந்த லிங்க் ன்னு கேட்டு சொல்லறேன்
ReplyDelete//அதுக்கு பிறகு அவனுங்க தூங்கல..நான் தூங்கிட்டேன் .. /// ஆகா என்ன நல்ல மனசு உங்களுக்கு ஜெய்
ReplyDelete//
ReplyDelete//அதுக்கு பிறகு அவனுங்க தூங்கல..நான் தூங்கிட்டேன் .. /// ஆகா என்ன நல்ல மனசு உங்களுக்கு ஜெய் //
இன்னைக்கும் டிரை பண்ணுவதா இருந்தேன் ..சுடு தண்ணியை தலையில ஊத்திடுவேன்னு மிறட்டுறானுங்க அவ்வ்வ்வ்வ்வ் :-)))
//நெட்ல தான் என்னவர் டவுன் லோட் பண்ணுவாரு. எந்த லிங்க் ன்னு கேட்டு சொல்லறேன்//
ReplyDeleteயூ டோரண்ட் ,பிட் டோரண்டாதான் இருக்கும் :-)
//நீங்க பொரண்டு சிரிக்காமலே அவங்க இவ்ளோ நாளும் அப்படித்தான் பார்த்தாங்களாம் உங்களுக்குத்தான் தெரியல பாவம் ஜெய் !!//
ReplyDeleteஎன்னிய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே ஹி...ஹி.... :-)))
//..சுடு தண்ணியை தலையில ஊத்திடுவேன்னு மிறட்டுறானுங்க அவ்வ்வ்வ்வ்வ் :-))) // நல்ல வேளை சுடு தண்ணியோட விட்டாங்களே :))
ReplyDelete//என்னிய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே ஹி...ஹி.... // ச்சே ச்சே உங்கள வெச்சி காமெடி யா நாங்க எல்லாம் ரெம்ப நல்ல.....வங்க
மணி 8 பூஸ் வீட்டில சப்பாத்தி ஸ்மெல் வருதூஊஊஊஊஊ :-)))
ReplyDelete//மணி 8 பூஸ் வீட்டில சப்பாத்தி ஸ்மெல் வருதூஊஊஊஊஊ :-)//
ReplyDeleteசப்பாத்தியோடு வெள்ளரி தோசை வாசமும் வருதா ????
அது எங்க வீட்ல .குட்டிபெண்ணுக்கு சப்பாத்தி எங்களுக்கு தோசை .
ரெடியாருக்கு
ஆ... கீரி..கீரி.. சே சே.. என்னப்பா இது.. கிரிஜா வாங்கோ.. எங்கிட்டயே ஒளிச்சுப்பிடிச்சு விளையாடுறீங்க விட்டிடுவனோ நான் அவ்வ்வ்வ்வ்வ்:)).
ReplyDeleteதமிழ்ப்படம் பாதிக்கு மேல பார்த்திட்டேன்.. சூப்பராக இருக்கு நகைச்சுவை:)).
வாகை சூடவா, மயக்கம் என்ன, வேலாயுதம்.. படங்கள் கிடைச்சிருக்கு.. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்திட வேண்டியதுதான்.
எமக்கு என்னவோ தெரியேல்லை, டவுன்லொட் பண்ணிப் பார்ப்பது பிடிப்பதில்லை...
//ஆகா என்ன நல்ல மனசு உங்களுக்கு ஜெய்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னா பெரிய கண்டுபிடிப்பு.. புல்லாஆஆஆஆஆஆஅ அரிக்குதே:)).
மியாவும் நன்றி கிரிஜா.... இனிமேலும் இப்பூடி ஒட்டிப் பார்த்திட்டு உள்ளே வராமல் போனால்:)... இன்னும் பலமா சவுண்ட் விடுவேன்:))).
//என்னிய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே ஹி...ஹி.... :-)))//
ReplyDeleteசே..சே..சே.. அப்பூடியெல்லாம் பண்ணுவமா ஜெய்... நாங்க ரொம்ப நல்லவிங்க:) ஐ மீன் பிரித்தானியால இருப்பவங்க மட்டும்ம்ம்ம்:)).
// ஜெய்லானி said...
மணி 8 பூஸ் வீட்டில சப்பாத்தி ஸ்மெல் வருதூஊஊஊஊஊ :-)))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) அது அஞ்சு வீட்டிலயாம்... நாங்க புட்டூஊஊஊஊஊஊஊஊஊஉ:))))
அஞ்சூஊஊஊஊ.. வெள்ளரித்தோசையோ? அவ்வ்வ்வ்வ்வ்:)).
ReplyDeleteநான் ஏதோ அஞ்சுவுக்கு சரியான வேலை, அதுதான் பிசியாகிட்டா என, நொந்து நூடில்சாகி.. கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறன் இங்கு... அங்க வெள்ளரித்தோசையாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).
பொங்கலுக்கு என்ன ஸ்பெஷல் செய்றீங்க அதிரா ?
ReplyDelete//பொங்கலுக்கு என்ன ஸ்பெஷல் செய்றீங்க அதிரா ? //
ReplyDeleteமுதல்ல பிங்கல் செயய் தெரியுமான்னு கேளுங்க ..ஹி...ஹி..அதுவே ஸ்பெஷல் ஐட்டம்தான் ஹா..ஹா.. :-)
வேலையெல்லாம் முடிஞ்சு .நாளைக்கு மீதி அரேன்ஜிங் கணவர் செய்வார் .
ReplyDeleteஅட பொங்கல்..பிங்கலா மாறிட்டுதே.... அவ்வ்வ்வ்
ReplyDeleteசிங்கம் ஒன்று புறப்பட்டதேஏஏஏ
ReplyDelete//ஜெய்..ஜெய்... “அங்கின” எப்பத்தான் உடனே ஏதும் தெரிஞ்சிருக்கு:)).. 2,3 நாள் போனபின்புதான் டிஷ்..டிஷ் ஆ திரைக்கு வரும்ம்ம்ம்:)))).. கண்பட்டுப்போகுமாக்கும்....:))) //
ReplyDeleteஇப்போ மூனு வித கேக் போட்டிருக்காங்க ’அங்கே’ :-)))
இப்போ மூனு வித கேக் போட்டிருக்காங்க ’அங்கே’ :-)))//
ReplyDelete,ங்கே ங்கே ??????????
அஞ்சு பொங்கலோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))... செய்வதில் ஒன்றுமில்லை, நானேதான் சாப்பிடோணும்:)).. வடை ஒன்றுதான் எல்லோருக்கும் பிடிக்கும்...
ReplyDeleteஎன்ன ஜெய் கேக்கோ? அவ்வ்வ்வ்வ்:)).. இங்கின மேல வரேல்லையே?:))
தோசையும் தக்காளி தொக்கும் சாப்ட போறேன் .ஜெயிக்கு ஸ்பெஷலா சிக்கன் சால்னா ஓகே
ReplyDeleteகிரிஜா... பத்தோடு பதினொன்றா... இதையும் பார்த்திடுங்க.. அலுக்காமல் சளைக்காமல் பார்க்கலாம்.. ஒரு வித்தியாசமான கதைபோல எனக்கு தெரிஞ்சுது...
ReplyDelete“நான் சிவனாகிறேன்”
ஒரு தடவை டேபிளில் விரல் எதுக்குன்னு கேட்டீங்களே ’அங்கே’தான் :-))))
ReplyDeleteபுட்டு சாப்பிட்டவங்களுக்கு ஒரு கப் கிரீன் டீ /ஓர் கமொமாயில் டீ
ReplyDelete//angelin said...
ReplyDeleteதோசையும் தக்காளி தொக்கும் சாப்ட போறேன் .ஜெயிக்கு ஸ்பெஷலா சிக்கன் சால்னா ஓகே//
இது ரொம்ப அநியாயம்... அக்கிரமம், :))) நான் ஒத்துக்கொள்ள மாட்டேன், எனக்கு பாதி சிக்கின் சால்னா வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))).. இல்லாட்டில் தீக்குளிப்பேன்ன்ன்ன்.. தேம்ஸ் கரையில:))( அப்பத்தானே, சடாரென தேம்ஸ்ல பாய்ந்து தப்பிடலாம்))
//தோசையும் தக்காளி தொக்கும் சாப்ட போறேன் .ஜெயிக்கு ஸ்பெஷலா சிக்கன் சால்னா ஓகே //
ReplyDeleteஇந்த இந்த சாப்பிட்டா இங்கே மோகினி பிசாசுதான் வரும் ..அவ்வ்வ்வ் :-))))
//ஜெய்லானி said...
ReplyDelete//தோசையும் தக்காளி தொக்கும் சாப்ட போறேன் .ஜெயிக்கு ஸ்பெஷலா சிக்கன் சால்னா ஓகே //
இந்த இந்த சாப்பிட்டா இங்கே மோகினி பிசாசுதான் வரும் ..அவ்வ்வ்வ் :-)))//
ஹா..ஹா..ஹா.. என்னமோ புதினமாக் கதைக்கிறீங்க.. இவ்ளோ நாளும் அங்க என்ன அப்போ “மோகன்” பிசாசோ வந்துது?:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்க வடிவாக் கவனிக்காமல் தப்பா நினைச்சிட்டீங்க.. ஹையோ ஹையோ:)).. இண்டைக்கும் ஜெய்யின் நித்திரை போச்சே... கொஞ்சம் ஜன்னல் பக்கம் பாருங்க ஜெய்.. ஏதோ ஆடுற மாதிரி தெரியுதா?:))))
இங்கே டைம் 12.54 A M ஹா..ஹா... :-))))))
ReplyDelete//ஜெய்லானி said...
ReplyDeleteஇங்கே டைம் 12.54 A M ஹா..ஹா... :-)))))//
கரெக்ட்டா.. மோகி/க...ன்/னி வாற நேரம்தேன்ன்ன்ன்:))).. நேற்று விட்டமதிரி அதே டெரர் சவுண்டு விடுங்க ஜெய்.. ரூம் மெட்ஸ் எழும்பி ஓடட்டும்... ஹா..ஹா...ஹா...:)))
ஜெய்.. சொல்ல மறந்திட்டேன், பார்த்தனீங்களோ மயில் வந்திட்டு ஓடினதை:))).. அவ்வ்வ்வ்வ்வ்..
ReplyDelete//நேற்று விட்டமதிரி அதே டெரர் சவுண்டு விடுங்க ஜெய்.. ரூம் மெட்ஸ் எழும்பி ஓடட்டும்... ஹா..ஹா...ஹா...:))) //
ReplyDeleteடிராகுலா சவுண்ட் மொபைலில் வைத்திருக்கேன் .இது அலாரமா 2 மணிக்கு அடிகிறமாதிரி செட்டிங்...ஹா....ஹா...:-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
//ஜெய்லானி said...
ReplyDeleteஒரு தடவை டேபிளில் விரல் எதுக்குன்னு கேட்டீங்களே ’அங்கே’தான் :-)))//
ஓ.. அதுதானே பார்த்தேன்... வரவர எல்லோரும் ரொம்ப விபரமா... பூஸ் கண்ணில படாமப் படம் போடுறாங்கோ:)).
அஞ்சு என்னாது கிரீன் ரீ ஆஆஆஆஆஆஆஆ?:)).. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. அம்மா அடிக்கடி சொல்லுவா, கிரீன் ரீ குடி என:)).. ஒரு சுவீட் சிக்ஸ் ரீன்ல இருக்கிற பிள்ளையைப் பார்த்து சொல்லுற வசனமோ அது அவ்வ்வ்வ்வ்:))))
ஊசிக்குறிப்பு:
உஸ்ஸ்ஸ் அப்பாடா, ஆருமே கவனிக்கேல்லை, சிக்ஸ் ரீன் என்பதுக்குப் பதிலா, சிக்ஸ் ரீ:)ல எனப் போட்டு, நானே கண்டுபிடிச்சு திருத்திட்டேன்ன்ன்ன்ன்:)))
//டிராகுலா சவுண்ட் மொபைலில் வைத்திருக்கேன் .இது அலாரமா 2 மணிக்கு அடிகிறமாதிரி செட்டிங்...ஹா....ஹா...:-//
ReplyDeleteஅப்போ தப்பித்தவறி 2 மணிக்கு முன்னால நீங்க நித்திரை ஆயிட்டா..:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நீங்களும் அலறிக்கொண்டு வெளில ஓட வேண்டியதுதான் போல:))
நித்திரை வருது.. அனைவருக்கும்.. குட்நைட்.. நல்லிரவு...__()__
ReplyDeleteஅஞ்சு வெள்ளரித்தோசை எப்பூடி இருக்கு...:)). நாளைக்கு வருகிறேன்...
சிக்ஸ் ரீன் என்பதுக்குப் பதிலா, சிக்ஸ் ரீ:)ல எனப் போட்டு, நானே கண்டுபிடிச்சு திருத்திட்டேன்ன்ன்ன்ன்:)))///
ReplyDeleteநீங்க திருத்துமுன் நான் பார்த்தேன் .இன்னிக்கு மட்டும் தப்பிச்சு போக விடறேன்
குட்நைட்
Hi Akka, how is going? Happy pongal. Sorry, I can type in my mother tounge 8 hours after. You fits are used to be naughty? Lol
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அதிரா.
ReplyDeleteபூஸ் கலெக்ஷனே வைத்திருக்கிறீங்க போல.அழகா இருக்கு.
ReplyDeleteநல்ல சுவாரஸ்யமான பழைய நினைவுகள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபேபி அதிரா அழகா வ(ள)ருகிறா.
ReplyDeleteஅங்கே இருக்கும்போது இருட்டில் தனிய போவதானால் வைரவரைத்தான் துணைக்கு அழைப்பார்கள். நீங்கள் கவனித்தனீங்களோ அதிரா அங்கே புளியடி(!)வைரவரே அதிகம்.ஏன் மாமரம்,தென்னைமரம் அடியில் வைரவரை வைக்கிறதேயில்லை.யாரும் வரமுன் நான் எஸ்கேப்..
ReplyDeleteபொங்கல்
ReplyDeleteதமிழ்படம் நானும் (டிவியில்)பார்த்தேன். சிரித்ததில் வயிற்றுவலியே வந்துவிட்டது. எனக்கு பார்த்ததில் பிடித்தது.எங்கேயும் எப்போதும், தெய்வத்திருமகள்.7ம் அறிவு.வாகைசூடவா.உச்சிதனை முகர்ந்தால். மிகுதி பார்க்கவில்லை.
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் இமா.
ReplyDeleteangelin (156)
ReplyDeleteஜெய்லானி (113)//
நோ OOOOOOOOO (1000000000000) times
அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் கூடாது
//நோ OOOOOOOOO (1000000000000) times
ReplyDeleteஅப்படி எதுவும் நடக்காது நடக்கவும் கூடாது //
ஹா..ஹா... போட்டிக்கு இருந்த ஒரு ஆளும் தலைமறைவு ஹா..ஹா.. வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் :-))
//அப்போ தப்பித்தவறி 2 மணிக்கு முன்னால நீங்க நித்திரை ஆயிட்டா..:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நீங்களும் அலறிக்கொண்டு வெளில ஓட வேண்டியதுதான் போல:))//
ReplyDeleteஅதுதான் இல்லை ..நான் தூங்கும் போது ஏர் போன் காதுல இருக்கும் . ஹா..ஹா.. நோ வெளி சவுண்டூஊ :-)))
மீ லாண்டட்டூஊஊஊஊஊ:))
ReplyDeleteஉஸ்ஸ்ஸ் எல்லோரும் பொயிங்கி முடிஞ்சுதோ? அப்போ வாங்கோ அறையலாம்.. சே.சே.. என்னப்பா இது விடிய எழும்பி என்ன கதைக்கிறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. எனக்கே என்னமோ ஆகிப்போச்ச்ச்ச்... வாங்கோ பறையலாம்.... ஐ மீன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. பேசலாமின்னேன்:))...
எதோ 156 113 எல்லாம் பார்த்தேன்.. இப்போ நேரமில்லை ...வருகிறேன்..
ஆரையுமே, குறிப்பாக பெண்களை நிமிர்ந்தே பார்ப்பதில்லை, //
ReplyDeleteகொய்யாலே...ஆனால் நீங்க மட்டும் அவரை கடைக் கண்ணால....பார்த்த படியா தானே..அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்கலை என்ற விடயம் தெரிஞ்சிருக்கு
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹொஸ்டல் கேர்ள்ஸ் ஆகிய எமக்கு அவர் பற்றி அறிய ஒரு ஆர்வம் அவ்ளோதான். இது இப்படி இருக்க அந்தக் ஹொஸ்டலுக்குப் போயிட்டோம்.//
ReplyDeleteஇதை நாம நம்பனுமாக்கும்!
அறிய ஆர்வமா’? இல்லே.....
நான் ஒன்னுமே சொல்லலை! ஏதாவது வில்லங்கம் ஆகிட்டா வீம்பா போயிடும்!
தமிழ்ப்படம், அவள் ஒரு தொடர்கதை இரண்டு வார்த்தைகளையும் தவறாகப் புரிந்து கொண்டு பல்பு கொடுத்திருக்கிறாங்க அதிரா அக்கா
ReplyDeleteஆமா உங்க கிட்ட மட்டும் எப்படி இப்படி வில்லங்கப் பேர்வழிகள் மாட்டிக்குறாங்க?
//அதுவா அது, அவட 100 ஆவது பதிவுக்கு தெரிஞ்சவங்க பலபேர் வாழ்த்தவில்லையாம் அவ்வ்வ்வ்வ்வ்:))).//
ReplyDeleteஒரு அரசியல் வாதி ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களே...!! எப்போ 6 வயசிலிருந்தா..ன்னு நான் கேட்க ..கேட்கவே மாட்டேன்ன்ன்ன்ன் :-))))
வாங்கோ நிரூபன் வாங்கோ..
ReplyDelete//நிரூபன் said...
Hi Akka, how is going? Happy pongal. Sorry, I can type in my mother tounge 8 hours after. You fits are used to be naughty? Lol//
அவ்வ்வ்வ்வ் பின்னூட்டம் பார்த்ததுமே தெரிஞ்சுபோச்சு, நிரூபன் இப்ப சொந்த நாட்டிலை இல்லைப்போல என:)).. எங்கட ஆட்களுக்கு, வெளிநாட்டுப் பிளேனில கால் வச்சதுமே டமில்..டமில் மறந்துபோகுதாமே:)).. இதை சமீபத்தில “பூஸ் ரேடியோவிலும்” உரையாடினார்களே... வெளி நாட்டில கால் வச்ச உடனேயே.. “ஓம்” மறந்து “யா..யா” என்கீனமாமே அவ்வ்வ்வ்:)). சரி சரி கோபிக்கப்பூடா நிரூபன்.. நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே... ஆனா இங்கின சிலபேர் தான் என் வாயைக் கிளறீஈஈஈஈஈஈ.. வாணாம் நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்:)))....
//கொய்யாலே...ஆனால் நீங்க மட்டும் அவரை கடைக் கண்ணால....பார்த்த படியா தானே..அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்கலை என்ற விடயம் தெரிஞ்சிருக்கு
ReplyDeleteகொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
கடைக் கண்ணால என்ன கடைக் கண்ணால... நெரிலயோ பார்ப்போம்:)) அவர்தான் தப்பிப்த்தவறியும் எம்மைப் பார்க்க மாட்டார் என கன்போம் பண்ணிட்டமே:)))..
எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமோ நிரூபன்..? ஓடுற நாயை விட்டுத்துரத்துவோம்:))... ஆனா, ஓடுற நாய் திரும்பி நின்று ஒரு லுக்கு விட்டாலே போதும்... பறந்திடுவோம்.... இது எல்லாம் அந்தக்காலம்:))).
அதுக்காக, நாய் எனச் சொல்லலாமோ என, ஒரு சொல்லு பல அர்த்தம் எடுக்கப்படா கர்ர்ர்ர்ர்ர், நான் பழமொழியைத்தான் சொன்னேன்:)))
நிரூபன் said...
ReplyDeleteதமிழ்ப்படம், அவள் ஒரு தொடர்கதை இரண்டு வார்த்தைகளையும் தவறாகப் புரிந்து கொண்டு பல்பு கொடுத்திருக்கிறாங்க அதிரா அக்கா
ஆமா உங்க கிட்ட மட்டும் எப்படி இப்படி வில்லங்கப் பேர்வழிகள் மாட்டிக்குறாங்க///
அதுதானே ஒண்ணுமே புரியுதில்ல நிரூபன்.. எப்பவும் இப்பூடித்தான்.. நான் சொல்வதை ஆர்தான் கரீட்டாப் புரியுறாங்க அவ்வ்வ்வ்வ்:))))).
மியாவும் நன்றி நிரூபன்.
//ஜெய்லானி said...
ReplyDelete//அதுவா அது, அவட 100 ஆவது பதிவுக்கு தெரிஞ்சவங்க பலபேர் வாழ்த்தவில்லையாம் அவ்வ்வ்வ்வ்வ்:))).//
ஒரு அரசியல் வாதி ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களே...!! எப்போ 6 வயசிலிருந்தா..ன்னு நான் கேட்க ..கேட்கவே மாட்டேன்ன்ன்ன்ன் :-)))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு:))) ...
எப்பூடியெல்லாம் சந்தர்ப்பம் பார்த்து அட்டாக் பண்றாங்கப்பா..:))))...
இது சரிவராது, இனி ஆராவது ஆமி போலிசைத்தான் யெல்ப் கேட்கப்போறேன்:))).... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே.. ஆனா சுவீட் 16 உடனேயே என்னை மாத்திடுவாங்க போலிருக்கே அவ்வ்வ்வ்வ்:)))).
//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு:))) ...டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...இவங்க தப்பு தப்பா சொல்றாங்க ..அது ஓடுமீன் ஓட...
ReplyDeleteஐ ..மீன் நீங்க யாரை சொல்றீங்க ....???
மீன்...
மீன்....
மீன்.....
//angelin (156)
ஜெய்லானி (113)//
நோ OOOOOOOOO (1000000000000) times
அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் கூடாது //
ஹி...ஹி... இந்த மீனையா..???
மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))))
//கொய்யாலே...ஆனால் நீங்க மட்டும் அவரை கடைக் கண்ணால....பார்த்த படியா தானே..அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்கலை என்ற விடயம் தெரிஞ்சிருக்கு
ReplyDeleteகொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
ஐயோ...பாவம் ,லேடிஸ் ஹாஸ்டல் பக்கம் போனால் கொக்கு போலதான் போகனும் , அங்கே நாமதான் பெண் பிள்ளை ஹி..ஹி.... :-)))
//ஜெய்லானி said...
ReplyDelete//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு:))) ...டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...இவங்க தப்பு தப்பா சொல்றாங்க ..அது ஓடுமீன் ஓட.ஜெய்லானி said...
//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு:))) ...டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...இவங்க தப்பு தப்பா சொல்றாங்க ..அது ஓடுமீன் ஓட.///
ஹா..ஹா..ஹா... இல்ல இதிலயும் ஏதோ தப்பிருக்கு.. மீன் ஓடி எனத்தான் வரோணும்போல:)) எங்கிட்டயேவா:)...
//ஐயோ...பாவம் ,லேடிஸ் ஹாஸ்டல் பக்கம் போனால் கொக்கு போலதான் போகனும் , அங்கே நாமதான் பெண் பிள்ளை ஹி..ஹி.... :-)))//
ஹா..ஹா..ஹா.. அனுபவம் பேசுது:))).. விடமாட்டமில்ல:))... ஹொஸ்டல் அனுபவங்கள் ஒரு இனிமையான காலங்கள்தான்.. அதை நான் நல்லா அனுபவித்திருக்கிறேன்...
அம்முலுவுக்கு கோபம் வரப்போகுது, நேரமாகுது, பின்பு வந்து பதில் போடுவேன், கோபித்திடாதீங்க ம்முலு:))).
//ஹா..ஹா..ஹா... இல்ல இதிலயும் ஏதோ தப்பிருக்கு.. மீன் ஓடி எனத்தான் வரோணும்போல:)) எங்கிட்டயேவா:)...//
ReplyDeleteஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு வாடி இருக்குமாம் கொக்கு .... என்னையவே குழபிட்டாங்களே...அவ்வ்வ்வ்வ்
//ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு வாடி இருக்குமாம் கொக்கு .... என்னையவே குழபிட்டாங்களே...அவ்வ்வ்வ்வ்//
ReplyDeleteஹா..ஹா..ஹா... பழமொழியை முழுசாச் சொல்ல வச்சிட்டமில்ல எங்கிட்டயேவா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))..
அஞ்சு இங்கின கணக்கு ஏறிட்டே போகுது:)).. அங்கின நீங்க பிராக்குப் பார்த்திட்டு இருக்கிறீங்களே அவ்வ்வ்வ்வ்:))))
கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
angelin (157)
ஜெய்லானி (117)//
பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))
//அஞ்சு இங்கின கணக்கு ஏறிட்டே போகுது:)).. அங்கின நீங்க பிராக்குப் பார்த்திட்டு இருக்கிறீங்களே அவ்வ்வ்வ்வ்:))))//
ReplyDeleteஇவ்வளவு நேரம் அங்கே ’வயல்ல’ ரெண்டு பேருமா ஓட்டிகிட்டு இருந்துட்டு நைஸா கிளம்பிட்டீங்களே ஹா..ஹா... :-))))))))))))))))
ஹா..ஹா..ஹா.. ஜெய் ஆரிட்டத் தப்பினாலும் ஜெய்யிடம் தப்பவே முடியாது அவ்வ்வ்வ்வ்வ்:)).. அதெல்லாம் ஜெய்க்குத் தெரியுமோ என நினைச்சு சிரிச்சுக்கொண்டேதான்... இங்கயும் அங்கயும் ஓடினேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்.. அண்டவாளம் தண்ட வாளம் எல்லாம் இப்பூடி அவிழ்த்து விட்டிட்டீங்களே.. நான் ஒரு எக்ஸ்டா ரீ குடிக்கப்போறேன்:))))
ReplyDeleteஇனி தலையை நல்லா மூடிக்கொண்டுதான் திரியப்போறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்...:))
//இனி தலையை நல்லா மூடிக்கொண்டுதான் திரியப்போறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்...:))//
ReplyDeleteபுளியமரம் ஃபால்கன் ஐ ரிடர்ன்ஸ் ஹா..ஹா.. :-)))
ஓடு மீன் ஓட உரு மீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு ."//
ReplyDeleteஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் மீன் ஓடுமா எப்பூடி ?
//எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் மீன் ஓடுமா எப்பூடி ? //
ReplyDeleteபயமொளி சொன்னா கேல்வி கேக்ககூடாது அனுபவிக்கனும் அப்டின்னு ஒர்த்தர் சொல்லிருக்கார் ஹி..ஹி.... :-)))))
சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.
ReplyDeletecat fish pazhamolis
பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்.
ReplyDelete//பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல். //
ReplyDelete//சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.//
ஆஹா...கண்டுபிடிச்சிட்டாங்களே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்பூடி என்னதான் கண்டுபிடிச்சிட்டீங்க? எனக்கு ஒண்ணுமே பிரியல்லே:)) கர்ர்ர்ர்ர்.. ஆனா ஒண்ணு மட்டும் பிரிஞ்சிடுச்சு:))... பழையபடி ப.ரோ இப்போ புளில:))))).. ஹா..ஹா..ஹா....
ReplyDelete.இது வேலைக்கு ஆகாது .அதிரா நான் புதுசா ஒரு ஸ்வீட் செய்து ரெடியா கொண்டு வரேன்
ReplyDeleteஅதிரா ஹெல்ப் ப்ளீஸ் .புது ரெசிப்பி எதாவது தரீங்களா
ReplyDeleteஅதிரா நான் ஜெர்மனில இருந்தப்போ ஒரு அக்கா உங்க ஊர் தான் ,மகி செய்த ஸ்வீட் ஷேல்ஸ் மாதிரி ஒரு ஸ்வீட் தந்தாங்க ஆனா அது பிரவுன் நிறமா இருந்தது எப்படீன்னு உங்க அம்மா கிட்ட கேட்டு ரெசிப்பி தாங்க .
ReplyDeleteஅது ரொம்ப டேஸ்டியா இருந்தது
ஹெல்ப் ப்ளீஸ் .புது ரெசிப்பி //
ReplyDeletenote it its for jai.ok
ஒரு ஸ்வீட் தந்தாங்க ஆனா அது பிரவுன் நிறமா இருந்தது //
ReplyDeleteஇது எனக்கு .
அப்புறம் நான் பேபிஸ்கிட்ட ரெசிப்பி எடுத்துக்கறதில்ல அதனால் அம்மாவிடம் கேட்டு சொல்லுங்க
//அதிரா ஹெல்ப் ப்ளீஸ் .புது ரெசிப்பி எதாவது தரீங்களா //
ReplyDeleteஅடடா நான் ஒருத்தன் இருக்கிறதையே மறந்துட்டீங்களே...
//http://kjailani.blogspot.com/2011/07/blog-post.html//
//அப்புறம் நான் பேபிஸ்கிட்ட ரெசிப்பி எடுத்துக்கறதில்ல அதனால் அம்மாவிடம் கேட்டு சொல்லுங்க //
ReplyDeleteஇன்னும் வேனுமுன்னா வேற ஒரு ரெஸிபி தரேன் ஹா..ஹா.. :-)))
அதிஸ்...இன்னைக்கு ராசிபலன் என்ன போட்டிருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க .யாருக்கு நான் கேட்க மாட்டேன் ஹி..ஹி....
//இது வேலைக்கு ஆகாது .அதிரா நான் புதுசா ஒரு ஸ்வீட் செய்து ரெடியா கொண்டு வரேன்//
ReplyDeleteபொரிவிலங்கா டைப் இல்லைதானே...!!! எதுக்கும் சேஃப்டியா இருக்கோனும் நான் :-)))))
angelin said...
ReplyDeleteஅதிரா ஹெல்ப் ப்ளீஸ் .புது ரெசிப்பி எதாவது தரீங்க// ஓ விரைவில் எதிர்பாருங்கள் என் முட்டை ஆப்பம்ம்ம்ம்:))
//அப்புறம் நான் பேபிஸ்கிட்ட ரெசிப்பி எடுத்துக்கறதில்ல/// அவ்வ்வ்வ் எவ்ளோ பெரிய மனசு உங்களுக்கு:)
/// அதனால் அம்மாவிடம் கேட்டு சொல்லுங்க//
அது சிகப்பு அரிசியை இடிச்சு உடனே செய்வதாக நினைவு எங்கடதும் சிகப்பாத்தான் இருந்ததாக நினைவு, எதுக்கும் அம்மாவுக்கு ஒரு கோல் போட்டு மெஷேஜ் தாறேன்:))
//ஜெய்லானி said...
//அதிரா ஹெல்ப் ப்ளீஸ் .புது ரெசிப்பி எதாவது தரீங்களா //
அடடா நான் ஒருத்தன் இருக்கிறதையே மறந்துட்டீங்களே...
//http://kjailani.blogspot.com/2011/07/blog-post.html////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்திட்டீங்களே அஞ்சூஊஊஊ:)) இது தேவையா உங்களுக்கு? இன்று காலையிலதான் சடாரென ஒரு மின்னல்... ஜெய்யிட ஒரு ரூபா வைத்தியத்தை நீண்ட நாளாகக் காணேல்லையே... இன்று போய் விசாரிக்கோணும் என நினைச்சேன்.. அதுக்குள் ரெசிப்பியா... அவ்வ்வ்வ்:))).
//ஜெய்லானி said...அடடா நான் ஒருத்தன் இருக்கிறதையே மறந்துட்டீங்களே...//
ReplyDeleteROFL:))). ROFL:))). ROFL:))).
ஆஹ்ஹா!!!!!!!!!!!௧
நான் ரெசிப்பி கேட்டதே உங்களுக்க்காகதானே
இப்படி நீங்களே வசதி செஞ்சு கொடுத்திடீங்க
உங்க டிப்ஸ் எல்லாமே சூப்பர் .நீங்க எங்க வீட்டுக்கு வரும்போது அத்தனை
குறிப்புகளையும் மறவாமல் உபயோகிப்பேன்
அஞ்சு... ஜெய் உங்கட வீட்டுக்கு வந்த உடனேயே அந்த “லெமன் ஜூஸ்” போட்டுக்கொடுத்திடுங்க.. ரொம்ப ரயேட்டா இருப்பாரெல்லோ.. அத்தோட மறவாமல் 3 மேசைக்கரண்டி பெனாயிலோ என்னமோ:))).. அதுவும் சேர்த்திடுங்க.. பிறகு ஸ்ராட்டர்.. அந்த முட்டைப்பொரியல்தான்..:)))
ReplyDelete//அதிஸ்...இன்னைக்கு ராசிபலன் என்ன போட்டிருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க .யாருக்கு நான் கேட்க மாட்டேன் ஹி..ஹி....//
ReplyDeleteஹா..ஹா..ஹா.. பலமான காத்தூஊஊஊஊஊஊ என இருந்திச்சே:))... ஜெய் புளியங்கொப்பு உடைஞ்சு தேம்ஸ்ல விழுந்திடப்போறீங்க. எதுக்கும் இறுக்கிப் பிடிச்சிட்டே இருங்க.. நான் புளியங்கொப்பைச் சொன்னேன்:)).
//நான் ரெசிப்பி கேட்டதே உங்களுக்க்காகதானே
ReplyDeleteஇப்படி நீங்களே வசதி செஞ்சு கொடுத்திடீங்க
உங்க டிப்ஸ் எல்லாமே சூப்பர் .நீங்க எங்க வீட்டுக்கு வரும்போது அத்தனை
குறிப்புகளையும் மறவாமல் உபயோகிப்பேன் //
என்னது எனக்கா..??? வந்தா புளியோதரை 10 ஆகி இருந்தாலும் பார்ஸலோடத்தான் வருவேன் :-))))
//ஜெய்லானி said...
ReplyDelete//இது வேலைக்கு ஆகாது .அதிரா நான் புதுசா ஒரு ஸ்வீட் செய்து ரெடியா கொண்டு வரேன்//
பொரிவிலங்கா டைப் இல்லைதானே...!!! எதுக்கும் சேஃப்டியா இருக்கோனும் நான் :-))))//
ஹா..ஹா..ஹா.. கற்பூரம் மாதிரி:))
//என்னது எனக்கா..??? வந்தா புளியோதரை 10 ஆகி இருந்தாலும் பார்ஸலோடத்தான் வருவேன் :-))))///
ReplyDeleteகொண்டு வாறது வீட்டுக்காரருக்கு, வீட்டில சமைக்கிறது விருந்தாளிக்கு.. ஐ மீன்ன்ன்ன்ன் ஜெய்க்கு:))
//அஞ்சு... ஜெய் உங்கட வீட்டுக்கு வந்த உடனேயே அந்த “லெமன் ஜூஸ்” போட்டுக்கொடுத்திடுங்க.. ரொம்ப ரயேட்டா இருப்பாரெல்லோ.. அத்தோட மறவாமல் 3 மேசைக்கரண்டி பெனாயிலோ என்னமோ:))).. அதுவும் சேர்த்திடுங்க.. பிறகு ஸ்ராட்டர்.. அந்த முட்டைப்பொரியல்தான்..:)))//
ReplyDeleteஅதிஸ் இதெல்லாம் அநியாயம் ...அவ்வ்வ்வ்வ்வ் :-))))
//கொண்டு வாறது வீட்டுக்காரருக்கு, வீட்டில சமைக்கிறது விருந்தாளிக்கு.. ஐ மீன்ன்ன்ன்ன் ஜெய்க்கு:)) //
ReplyDeleteவர வழியிலேயே சாப்பிட்டுதான் வருவேன் ..யப்பா..உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல:-)))
அத்தனை பின்னூட்டங்களைப் படித்ததில், பதிவில் என்னதான் எழுதி இருக்கிறீர்கள் என்பதே மறந்து போய்விட்டது. ஆங் ஹாஸ்டல் அனுபவங்களை நன்கு நினைவுவைத்து எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்.
முக்கியமா அந்த வைட்டமின் E மறக்கவே மாட்டேன் .
ReplyDeleteவெம்ப்ளி ஏரியாவில சுத்தியாவது வாங்கிடுவேன் (பிடிச்சிடுவேன்)
//
பெனாயிலோ என்னமோ:))).. அதுவும் சேர்த்திடுங்க.. பிறகு ஸ்ராட்டர்.//
இந்த பினாயில் செய்முறை எங்கேயோ படிச்சேன்
அதையும் தயார் பண்ணிடறேன்
THANKS A LOT ATHIRA :))).. :))).. :)))..
ஸ்கூல் போகணும் பிறகு வரேன்
ReplyDelete149
ReplyDeleteஹையா எனக்குதான் கேக் 150
ReplyDelete//இந்த பினாயில் செய்முறை எங்கேயோ படிச்சேன்
ReplyDeleteஅதையும் தயார் பண்ணிடறேன் //
நான் சொல்லமாட்டேனே நான் எங்கே போட்டிருக்கேன்னு ஹி...ஹி... :-)))
//ஜெய்லானி said...
ReplyDelete//இந்த பினாயில் செய்முறை எங்கேயோ படிச்சேன்
அதையும் தயார் பண்ணிடறேன் //
நான் சொல்லமாட்டேனே நான் எங்கே போட்டிருக்கேன்னு ஹி...ஹி... :-)))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பெரீஈஈஈஈஈஈய சிதம்பர ரகசியமாக்கும்..க்கும்..க்கும்:))..
// ஜெய்லானி said...
//கொண்டு வாறது வீட்டுக்காரருக்கு, வீட்டில சமைக்கிறது விருந்தாளிக்கு.. ஐ மீன்ன்ன்ன்ன் ஜெய்க்கு:)) //
வர வழியிலேயே சாப்பிட்டுதான் வருவேன் ..யப்பா..உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல:-))//
என்னாது 10 பார்ஷலையுமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) படத்தில பார்த்தால் அப்பூடித் தெரியல்லியே:)))))) நான் கைவிரல் இருக்கிற படத்தைச் சொன்னேன்:)))..
உஸ்ஸ்ஸ் இந்த முசுப்பாத்தியில, அம்முலுவுக்குப் பதில் போடோணும் என்பதையே மறந்திட்டேன்.. இப்போ மூக்குக்கு மேல வந்திருக்கும் அவவுக்கு:))). ஹையோ இதோ வாறேன்..
வாங்கோ அம்முலு வாங்கோ...
ReplyDeleteபதில் தர தாமதமாகிட்டுது அதனால மன்னிச்சிடுங்க... என்னில பிழை இல்லை, அப்பப்ப என் “மூடு” கீழ போயிடுது... அதுதான் காரணம்:).
// ammulu said...
பேபி அதிரா அழகா வ(ள)ருகிறா//
ஸ்ஸ்ஸ் ரொம்ப ஷையா வருதூஊஊஊஉ:)).. கன்னமெல்லாம் சிவப்பாகிட்டுதூஊஊஊஊ:))..
//கவனித்தனீங்களோ அதிரா அங்கே புளியடி(!)வைரவரே அதிகம்.ஏன் மாமரம்,தென்னைமரம் அடியில் வைரவரை வைக்கிறதேயில்லை.//
அதென்னமோ உண்மைதான் அம்முலு.. புளியடி வைரவர்தான் அதிகம்... ஞானவைரவர், ஆனந்தன் வைரவர், இன்னும் என்னவோ இருக்கு மறந்திட்டேன்..
மாமரம் தென்னைமரம் எல்லாம் இனிப்பான பழமெல்லோ... வைரவருக்கு புளிப்புத்தான் விருப்பம்போல “என்னைப்போலவே”... ஹையோ.. ஹையோ...:)))
//ammulu said...
ReplyDeleteதமிழ்படம் நானும் (டிவியில்)பார்த்தேன். சிரித்ததில் வயிற்றுவலியே வந்துவிட்டது. எனக்கு பார்த்ததில் பிடித்தது.எங்கேயும் எப்போதும், தெய்வத்திருமகள்.7ம் அறிவு.வாகைசூடவா.உச்சிதனை முகர்ந்தால். மிகுதி பார்க்கவில்லை//
நானும் தமிழ்ப்படம் பார்த்து முடித்துவிட்டேன்.. நல்ல சிரிப்புக்கள்... எல்லோரும் தெய்வத் திருமகளை பெரிதாகச் சொல்கிறார்கள், எனக்கெனமோ அதில புதுசாப் பெரிஷா ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை..
ஆனா எங்கள் பிள்ளைகள் இருவரும் முதன்முதலாக, அதுவும் முழுமையாகப் பார்த்த தமிழ்ப்படம் அதுதான்...
உச்சிதனை முகர்ந்தால் மட்டும் இன்னும் பார்க்கவில்லை நான்.. ஆனா இந்த தமிழ்ப்படக் கதை தொடங்கியதிலிருந்து பை வன் கெட் வன் ஃபிரீ என்பதுபோல, அதைத்தட்ட, “ஓடிவாராயோ” வலிய வந்து நின்றுது முன்னால, போனால்போகுதென பார்த்தேன்.. முழுவதும் பார்த்திட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்:))).
மியாவும் நன்றி அம்முலு...
ReplyDeleteவாங்கோ வியபதி வாங்கோ... முதன்முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு மிக்க நன்றி.
ReplyDeleteஅப்போ நீங்க, பதிவை மட்டுமல்லாமல் பின்னூட்டங்களையு படிச்சிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).. சந்தோசமாக இருக்கு... மியாவும் நன்றி.
//, “ஓடிவாராயோ” வலிய வந்து நின்றுது முன்னால, போனால்போகுதென பார்த்தேன்.. முழுவதும் பார்த்திட்டேன்//
ReplyDeleteஇப்பதான் நல்ல பிள்ளையா வறீங்கப்போல ..இன்னும் இதுப்போல நிறைய ஓ.......(ஐ)சி படங்கள் பார்க்க வாழ்த்துக்கள் ...:-)))))))))))
//இன்னும் இதுப்போல நிறைய ஓ.......(ஐ)சி படங்கள் பார்க்க வாழ்த்துக்கள் ...:-)))))))))))// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. நான் ரொம்ப நல்ல பொண்ணாக்கும், ஓசியில எல்லாம் படம் பார்த்து, சினிமா உலகை நஸ்டத்தில போக விட மாட்டேன்.. ட்டேன்...ட்டேன்..:))))
ReplyDelete//உண்மைதேன்!
ReplyDeleteபாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது!// சரியாச் சொன்னீங்கள் மகி.
//ஹேப்பி பர்த்டே ரீச்சர்!:))))))))))// ஹா!! இப்புடி அங்கங்க ஈஸ்டர் எக் வைக்கிறது போல ஒழிச்சு ஒழிச்சு வாழ்த்தி இருக்கிறீங்கள் எல்லாரும். தேடிப் பிடிச்சு இதெல்லாத்துக்கும் நன்றி சொல்லி முடிய ஒரு வருஷம் எடுக்கும் போல. ;) மிக்க நன்றி மகி. அன்று முதல் முதலாக எங்கள் குண்டு ரோஜாவில் ஒரு அழகான மஞ்சள் பூ பூத்தது, உங்கட வாழ்த்து என்று நினைத்துக் கொண்டேன். இரண்டாவது பூ விரிந்ததும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
//றீச்சர் தலைமறைவு// க்ர்ர். இல்லை... கணனி தலை குனிவு. கர்ர்ர்
ReplyDelete//அவட 100 ஆவது பதிவுக்கு தெரிஞ்சவங்க பலபேர் வாழ்த்தவில்லையாம் அவ்வ்வ்வ்வ்வ்:))).// க்ர்ர்ர்ர்ர்ர் sorryyyyyyyyyyyy ;)
ReplyDelete//இமா அனுப்பினவ:). ஒரு அப்பாவிப் பூஸை// எப்பயோ சங்கிலி மன்னன் காஅல்த்தில அனுப்பின மயிலை இப்ப பார்த்துப் போட்டு... ஹும்!! ;)
ReplyDeleteவாழ்த்துக்கு தாங்ஸ் அஞ்சூஸ்ஸ்ஸ்.
ReplyDelete//வைரவருக்கு புளிப்புத்தான் விருப்பம்போல “என்னைப்போலவே”// ஹா!! ;)
ReplyDeleteமீதி பிறகு ;)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteathira said...
ReplyDeleteவாங்கோ நிரூபன் வாங்கோ..
//நிரூபன் said...
Hi Akka, how is going? Happy pongal. Sorry, I can type in my mother tounge 8 hours after. You fits are used to be naughty? Lol////
அக்கா, மொபைலில் அந்த கமெண்டை போட்டேன்.
மற்றும்படி எனக்கு வெளிநாடு வந்ததும் ஆங்கிலம் வரவில்லை. உண்மையிலே மொபைலில் கமெண்ட் அடித்தேன், நம்புங்க.
அவ்வ்வ்
அதுவும் அந்த கமெண்டில you girls are used to be naughty? என்று வரனும்,
அவசரத்தில் ஒரு வார்த்தையை மாறி டைப் செஞ்சிட்டேன்.
மூணாவது முறையா நான் இப்போ இதுக்கு டைப் பண்றேன்...! :(
ReplyDelete//ஐயருக்கு பூசையின்போது கெல்ப் பண்ணுவார். நல்ல ஸ்மார்ட் ஆக இருப்பார்... நல்ல தொழிலில் இருப்பதாகவும் அறிந்தோம்... அவர் இப்படி ரொம்ப அமைதியாக இருப்பதனால்.. ஹொஸ்டல் கேர்ள்ஸ் ஆகிய எமக்கு அவர் பற்றி அறிய ஒரு ஆர்வம்//
//அந்தக் கோயிலுக்கு நாம் அடிக்கடி போவதுண்டு. அங்கே ஒரு அண்ணன்... அவர் கிட்டத்தட்ட சாமியார்போல:)...//
என்னாது அண்ணாவா..? அவ்வளவு நல்லவங்களா நீங்க..?? :-O
காலேஜ் படிக்குற பொண்ணுங்க, இப்படி ஒரு பையனை அண்ணானு கூப்பிட்டா அவர் சாமீயாராதான் ஆகணும்...!
//ஆரையுமே, குறிப்பாக பெண்களை நிமிர்ந்தே பார்ப்பதில்லை, //
அவரை குற்றம் சொல்லவே முடியாதுங்க...
அவரை எங்க நீங்க நிமிர்ந்து பார்த்து சைட் அடிக்க விட்டீங்க...? அதான் அண்ணானு சொல்லிட்டீங்களே...! அதான் சோகத்துல தலை குனிஞ்சு நடந்திருப்பார்...! :):)
நன்றி...!