நல்வரவு_()_


Monday, 6 May 2013

அதிரா ஞானியாகிட்டேன்ன்:)
-LOURDES

ஹா அதிரா உண்மையாகவே ஞானியாகிட்டாவோ, இந்தக் காலத்திலயும் இப்பூடி நல்லவிஷயமெல்லாம் நடக்குதோ:) என ஓடி வந்திருப்பீங்க:) அதுதான் இல்ல:) அதிராவாவது ஞானியாகிறதாவது:)).. ஹையோ அதாரது கண்வெட்டாமல் முறைக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

சரி சரி வந்ததுதான் வந்தீங்க.. அப்பூடியே லூட்த்ஸ் மாதாவையும் தரிசிக்கலாம் வாங்கோ....

ஃபிரான்ஸ்க்குப் போனால் லூட்ஸ்க்குப் போய் வர மறக்காதீங்க. என்ன ஒரு அருமையான இடம். மலை, ஆறு.. அமைதி, நல்ல சுத்தம். எந்த வித பயமும் இல்லாத தன்மை. தேர்த் திருவிளாவுக்குப் போடப்படும் கடைகள்போல, வீதியெங்கிலும் சோவினியர் கடைகள். அதிகமா காப்புச் சங்கிலி தோடென ஒரே கலக்கலாக இருந்துது.

நாம் போனது ஏப்ரல் மாதமென்பதால், மக்கள் கூட்டம் பெரிதாக இருக்கவில்லை, இனி கோடை காலமெனில் முன் பக்கமே கூட்டம் அலைமோதும். இது கோயிலின் முகப்பு. ஒரு மலையில்தான் இருக்கு, ஆனா மலையேறுவதுபோல தெரியாமல் மெதுவாக உயர்ந்துகொண்டுபோகும்.  இதிலே மூன்று மாடியாக கோயில் இருக்கு.
--------------------------==========================-----------------------------
 இது கீழ் நிலத்தோடு இருக்கும் வாசல். மேலே போக இருபக்கத்தாலும் படிகள் போகுது.
--------------------------==========================-----------------------------
 இது கீழிருக்கும் கோயிலின் உள்பகுதி. வேலைப்பாடுகள் எனில் சொல்ல முடியாது அத்தனையும் மாபிள் வேலைப்பாடாக இருந்தது.
--------------------------==========================-----------------------------
இது இரண்டாவது மாடியில் உள்ள கோயில், இதன் பக்கத்தால் ஏறும் படிகளில் ஏறினால் மேலே ஒரு வாசல் தெரியுதெல்லோ அது மூன்றாவது கோயில் இருக்கு.

--------------------------==========================-----------------------------
து கோயில் மேல் மாடியில் நின்று எடுத்த படம், அருகிலே ஆறு ஓடுகிறது. கோயில் வீதியில் மக்கள் போய் வருவது தெரியுதெல்லோ. அதிகமாக சுகயீனமுற்றோரைத்தான் காண முடிந்தது, புனித நீரில் குளிக்க வைப்பதற்காக வீல் ஷெயார்களில் கூட்டி வந்தவண்ணம் இருந்தார்கள்.

இது மேலிருந்து எடுக்கப்பட்ட கோயிலின் முன் பக்கவீதி.
--------------------------==========================-----------------------------
இது கீழ் கீழ் தளத்தில் இருக்கும் கோயிலின் உள்ளே நுழையும் வாசல் கதவு. இதில் தெரிவது அத்தனையும் மாபிள் துண்டுகள். என்னாலே கதவை கொஞ்சம்கூட அசைக்க முடியாத பாரமாக இருந்துது.
--------------------------==========================-----------------------------
அந்த ஏரியாவில் பயமெனும் சொல்லுக்கே இடமிருக்கவில்லை. வொலண்டியராகவே அனைவரும் சேவை செய்கிறார்கள். 24 மணி நேரமும் கோயிலின் வெளிப் பகுதியில் பூஜை, விட்டுவிட்டு நடந்து கொண்டே இருக்கும், எப்பவும் மக்கள் போய் வந்துகொண்டே இருக்கினம். இப்படத்தைப் பாருங்கோ இது எடுக்கும்போது நேரம் இரவு 12 ஐத் தாண்டி விட்டிருந்தது. அப்பவும் மக்கள் கும்பிட்டுக்கொண்டிருக்கினம்.

இதில் இடது மேல் பக்கம் மேரி மாதாவின் உருவம் தெரியுதெல்லோ, அதில்தான் இந்த லூட்ஸ் கோயில் ஆரம்பித்த கதையின் தொடக்கமே இருக்கிறது, இந்த இடத்தில்தான் மலை இரண்டாகப் பிளந்து ஆறு ஓடத் தொடங்கியதாம், எனக்கு கதையின் விபரம் தெரியாது. அதனால் இவ்விடத்தில் எப்பவும் பூஜை நடக்கும், பூஜை முடிய மக்கள் வரிசையாக அந்த மலையைத் தொட்டு வணங்குகிறார்கள், இது ஒரு குட்டிக் குகை. இதிலிருக்கும் மெழுகுவர்த்திகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டே இருக்கும்.
இந்தப் படத்தைப் பாருங்கள், 
அதே இடம்தான், இது பகல் 9 மணிக்கு எடுத்தது.
--------------------------==========================-----------------------------
இதில் இன்னொரு விஷயம் சொல்லியே ஆகோணும், என்னவெனில் வெளிவீதியிலே, இப்படி மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டிருக்கு, ஆகவும் சின்னது 2.50 யூரோவில் ஆரம்பித்து ஆள் அளவுகூட இருக்கு. ஒவ்வொன்றும் இப்படி அடுக்கப்பட்டு, பக்கத்திலே அதன் விலையும் எழுதப்பட்டிருக்கு. அதில் ஒரு உண்டியல் இருக்கு. மக்கள் அதற்குள் அந்த விலையைப் போட்டுவிட்டு மெழுகுவர்த்தியை எடுத்துப் போகிறார்கள். அதுக்கு எந்த வித பாதுகாப்போ, கண்காணிக்க ஆட்களோ இல்லை, எல்லாம் நம்பிக்கையில் ஓடுது.

ஒவ்வொரு சைஸ் மெழுகுவர்த்திக்கும் ஒவ்வொரு இடமிருக்கு, அதில்தான் கொழுத்திவைக்க வேண்டும்...
--------------------------==========================-----------------------------
இது இந்தக் கோயிலில் இருந்து வெளியே செல்லும் இன்னொருபக்க பாதை, இதில் இடது பக்கத்தில் தூரத்திலே ஒரு யேசுநாதர் சிலை தெரிகிறதெல்லோ.. அதன் அருகிலே இன்னொரு பாதை போகிறது அது பக்கத்து மலைக்கு போகிறது, அதன் உச்சியிலும் ஒரு கோயில், உண்டு.
--------------------------==========================-----------------------------
அந்த மலைக்கு ஏறும் பாதையெல்லாம், இயேசுநாதரை சிலுவை சுமக்க வைத்த கதையை சிலையாக செய்து வைத்திருக்கினம், மலையேறும்போது ஒவ்வொரு இடத்திலும் மக்கள் நின்று அதற்குரியதை சொல்லி ஜெபம் பண்ணிப் பண்ணி ஏறுகிறார்கள்..


இதிலும் ஏதோ கதை இருக்கிறதுபோலும், நான் இப்படி எங்கேயும் கேள்விப்படவில்லை. நான் நினைக்கிறேன் கிரிஸ்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
--------------------------==========================-----------------------------
இது கோயிலின் நேர் எதிர்ப்பக்கம் முன் முற்றத்தில் அமைந்திருக்கு. இந்த மேரிமாதா உருவம்தான் படங்கள், போத்தல்கள் எங்கினும் இருக்கு, பெரும்பாலும் பார்த்திருப்பீங்க.
படம் எடுக்கும்போது கவனிக்கவில்லை, ஆரோ ஒருவர் வணங்கிக்கொண்டிருக்கிறார்..
இதில் பாருங்கள் விதம் விதமான போத்தல்கள் அனைத்திலும் இந்த மேரிமாதாவின் உருவம் இருக்கும். இதனை வாங்கிக் கொண்டுபோய், அங்கு கோயிலில் ஒரு பக்கத்தில், மலையிலிருந்து வரும் புனித நீரூற்றை ரப்களில்(குழாய்) விடுகிறார்கள், நாம் நிரப்பி வர வேண்டியதுதான்.
--------------------------==========================-----------------------------
இது கோயிலின் அருகாமை, சற்று தள்ளி, அது அந்த ஏரியா முழுவதும் இப்படித்தான் இருந்தது வீதிகள்...



 இதில் என், பவளம் பதித்த:) பிரேஸ்லெட் தெரியுதோ? நாம் விரும்பும் வகையைச் சொன்னால் உடனே அளந்து வெட்டுகிறார்கள், உடனேயே ஒரு நிமிடத்தில் கொழுக்கி எல்லாம் போட்டு தருகிறார்கள், நீளத்துக்கு ஏற்ப விலை உண்டு.
--------------------------==========================-----------------------------
இது நாங்கள் தங்கிய ஹொட்டேலில் இருந்து கோயிலுக்கு போகும் பாதை..


--------------------------==========================-----------------------------
அங்கு புனித நீரூற்று இருக்கிறது. அதில் குளித்தால் உடல் வருத்தங்கள் நீங்குமென, நேர்த்தி வச்சு வந்து குளிக்கிறார்கள். அங்கு போவோர் குளிக்காமல் வருவதில்லை. ஆண், பெண்களுக்கென புறிம்பான ஹோல்கள் இருக்கின்றன. வரிசையில் உள்ளே போகவேண்டும், போகப் போக குட்டி அறையாக முடிவில் வரும் அங்கு ஒரு பெரிய தொட்டியில் அந்த நீரூற்றை விடுகிறார்கள், எமக்கு  புது ஆடை தரப்படும், அதனை மாற்றியதும், இருவர், எம் இரு கையைப் பிடித்து அத்தொட்டியில் இருக்கவைத்து எழுப்பிவிடுவார்கள்(குளிருது, மாட்டேன் எனத் திரும்பி ஓட முடியாது:)).

நாம் போனநேரம் தண்ணியோ ஐஸ் வோட்டர்போல இருந்துது, அப்படியே ஃபிறீசரில் இருப்பதுபோல டபக்கென இறங்கி ஏறினோம். ஆனா குளித்தபின் குளிர் தெரியவில்லை, நன்றாக இருந்தது. சிறுகுழந்தைகளைக்கூட குளிக்க வைக்கினம், ஒரே குழந்தைகள் அழும் சத்தம் கேட்ட வண்ணம் இருந்துது, குளிரல்லவா.

அனைத்தையும் நடாத்த, நிறைய வொலன்ரியேர்ஸ் இருக்கிறார்கள். கடகடவென 5 நிமிடத்தில் அலுவல் முடிக்குமளாவுக்கு சேவை நடக்கிறது. இதில் விஷேஷம் என்னவெனில், கோயில் சம்பந்தப்பட்ட எந்த ஒன்றுக்கும் ஒரு சதம் கூட ரிக்கட் எனும் பெயரால் செலவில்லை, அனைத்துமே ஃபிரீயாக நடக்கிறது.
===============================================================

சரி சரி படங்கள் பார்த்திருப்பீங்க சந்தோசமாகப் போய் வாங்கோ மீண்டும் சந்திப்போம்:). அதுக்கு முன் மொய் எழுத மறந்திடாதீங்க:). மொய் எழுதாவிட்டால், பட்டனைத் தட்டி விட்டிடுவேன்ன்ன்... கனவிலதான்ன்ன்:))

=======================()()()()()()========================
போர்க்களத்தில் கூட,
 பூக்களை ரசிக்கும் மனநிலை வாய்த்தவருக்கு
 வாழ்க்கை என்றும் இனிக்கிறது
இதை உங்கள் எல்லோருக்கும் காட்டோணும் எனும் நல்லெண்ணத்தில:) 
வெற்றியோடு, கூகிளில் களவாடி எடுத்து வந்தவர்... 
பெருமதிப்பிற்குரிய:) புலாயியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)!!


=======================()()()()()()========================
()()()()()()()()()()()()()()()

95 comments :

  1. அழகான அருமையான படங்கள்... இடங்கள்...

    தகவல்களுடன் நல்லா சுற்றிக் காண்பித்து விட்டீர்கள்... நன்றி...

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன் said...

    வாங்கோ வாங்கோ முதலாவதா இம்முறை நீங்கதான் வந்திருக்கிறீங்க.. மியாவும் நன்றி.

    ReplyDelete
  3. த்லைப்பைப்பார்த்ததும் தலைதெறிக்க ஓடியாந்தேன்.

    ஞானியைக்கண்டு நமஸ்கரித்துப் போகலாமே என்று.

    பிறகு சற்றே படித்ததும் தான் எனக்கு மூச்சே வந்தது.

    >>>>

    ReplyDelete
  4. //ஆஹா அதிரா உண்மையாகவே ஞானியாகிட்டாவோ, இந்தக் காலத்திலயும் இப்பூடி நல்லவிஷயமெல்லாம் நடக்குதோ:) என ஓடி வந்திருப்பீங்க:) அதுதான் இல்ல:) அதிராவாவது ஞானியாகிறதாவது:))..

    அதானே, அதெல்லாம் ஞானமில்லாதவர்கள் செய்வதாக்கும்.

    //ஹையோ அதாரது கண்வெட்டாமல் முறைக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..//

    நானில்லை .... நானில்லை.

    ReplyDelete
  5. //சரி சரி வந்ததுதான் வந்தீங்க.. அப்பூடியே லூட்த்ஸ் மாதாவையும் தரிசிக்கலாம் வாங்கோ....//

    வந்தேன் ... வந்தேன்.

    //ஃபிரான்ஸ்க்குப் போனால் லூட்ஸ்க்குப் போய் வர மறக்காதீங்க.//

    அங்கெதற்கு வெட்டியாகப்போகணும் என்று இங்கேயே படத்தில் பார்த்து விட்டேன்.

    அதிரா காட்டிடும் படங்கள் யாவும் அற்புதம் அல்லவோ !

    >>>>

    ReplyDelete
  6. //இது கீழ் கீழ் தளத்தில் இருக்கும் கோயிலின் உள்ளே நுழையும் வாசல் கதவு. இதில் தெரிவது அத்தனையும் மாபிள் துண்டுகள். என்னாலே கதவை கொஞ்சம்கூட அசைக்க முடியாத பாரமாக இருந்துது.//

    அதிரடி அதிராவாலேயே அசைக்க முடியாததா!!!!! ஆச்சர்யமாக உள்ளதூஊஊஊ.

    >>>>>

    ReplyDelete
  7. //இதில் இன்னொரு விஷயம் சொல்லியே ஆகோணும், என்னவெனில் வெளிவீதியிலே, இப்படி மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டிருக்கு, ஆகவும் சின்னது 2.50 யூரோவில் ஆரம்பித்து ஆள் அளவுகூட இருக்கு. ஒவ்வொன்றும் இப்படி அடுக்கப்பட்டு, பக்கத்திலே அதன் விலையும் எழுதப்பட்டிருக்கு. அதில் ஒரு உண்டியல் இருக்கு. மக்கள் அதற்குள் அந்த விலையைப் போட்டுவிட்டு மெழுகுவர்த்தியை எடுத்துப் போகிறார்கள். அதுக்கு எந்த வித பாதுகாப்போ, கண்காணிக்க ஆட்களோ இல்லை, எல்லாம் நம்பிக்கையில் ஓடுது.//

    நம்பிக்கையை நினைட்து நானும் மெழுகாய் உருகிப்போனேன்.

    நீங்க உண்டியலில் காசு போட்டுவிட்டுத்தான் எடுத்திருப்பீர்க்ள் என நம்புகிறேன்.

    ஏனெனில்

    எல்லாம் நம்பிக்கையில் ஓடுது.

    >>>>>

    ReplyDelete
  8. //மலையிலிருந்து வரும் புனித நீரூற்றை ரப்களில்(குழாய்) விடுகிறார்கள், நாம் நிரப்பி வர வேண்டியதுதான்.//

    வரும்போது நிறைவாக நிரப்பிக்கொண்டுதான் வந்தீர்களோ !

    வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  9. //இதில் என், பவளம் பதித்த:) பிரேஸ்லெட் தெரியுதோ?//

    நல்லாவே ஜோராவே தெரிகிறதூஊஊ ;)

    // நாம் விரும்பும் வகையைச் சொன்னால் உடனே அளந்து வெட்டுகிறார்கள், உடனேயே ஒரு நிமிடத்தில் கொழுக்கி எல்லாம் போட்டு தருகிறார்கள், நீளத்துக்கு ஏற்ப விலை உண்டு.//

    பிரித்தானியா இளவரசிக்குமா விலை உண்டு?

    நோ நோ நோ இது அநியாயம். அக்ரமம்.

    >>>>>>

    ReplyDelete
  10. //அங்கு போவோர் குளிக்காமல் வருவதில்லை. ஆண், பெண்களுக்கென புறிம்பான ஹோல்கள் இருக்கின்றன. வரிசையில் உள்ளே போகவேண்டும், போகப் போக குட்டி அறையாக முடிவில் வரும் அங்கு ஒரு பெரிய தொட்டியில் அந்த நீரூற்றை விடுகிறார்கள், எமக்கு புது ஆடை தரப்படும், அதனை மாற்றியதும், இருவர், எம் இரு கையைப் பிடித்து அத்தொட்டியில் இருக்கவைத்து எழுப்பிவிடுவார்கள்(குளிருது, மாட்டேன் எனத் திரும்பி ஓட முடியாது:)).

    நாம் போனநேரம் தண்ணியோ ஐஸ் வோட்டர்போல இருந்துது, அப்படியே ஃபிறீசரில் இருப்பதுபோல டபக்கென இறங்கி ஏறினோம். ஆனா குளித்தபின் குளிர் தெரியவில்லை, நன்றாக இருந்தது. //

    அப்போ நீங்களும் குளிச்சிட்டீங்களா?

    சந்தோஷம்.

    >>>>>

    ReplyDelete
  11. //சரி சரி படங்கள் பார்த்திருப்பீங்க சந்தோசமாகப் போய் வாங்கோ மீண்டும் சந்திப்போம்:). அதுக்கு முன் மொய் எழுத மறந்திடாதீங்க:). மொய் எழுதாவிட்டால், பட்டனைத் தட்டி விட்டிடுவேன்ன்ன்... கனவிலதான்ன்ன்:))//

    ஆஹ்ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    ”ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கை வெய்யடா தாண்டவக்கோனே” ன்னு ஒரு பாட்டு சிவாஜி பாடுவார் - தூக்குத்தூக்கி என்ற படத்தில்.

    ஏனோ இந்த மொய் பற்றி படித்ததும் எனக்கு அது ஞாபகம் வந்தது. ;)

    >>>>>

    ReplyDelete
  12. அதிரா, மிகவும் அழகழகான படங்களுட்ன் அற்புதமான விள்க்கங்களுடன் மிகச் சிறந்த பதிவாகக்கொடுத்து அசத்திப்புட்டீங்கோ.

    என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  13. //போர்க்களத்தில் கூட, பூக்களை ரசிக்கும் மனநிலை வாய்த்தவருக்கு
    வாழ்க்கை என்றும் இனிக்கிறது//

    அழகான பொன்மொழி தந்த அதிராவுக்கு ஒரு குட்டு ஸாரி டங்க் ஸ்லிப்பாகிறது ஒரு ஷொட்டு என இருக்க வேண்டும்.

    ooooo அன்புடன் கோபு ooooo

    ReplyDelete
  14. அம்மா வாங்க, ஐயா வாங்க, ஆச்சி வாங்க, அப்பு வாங்க, மற்றும் நம் உறவினர் எல்லோரும் வாங்கையா வாங்க....!! :)

    ஞானியாகி, நாடு விட்டு....., நாட்டு மக்களை விட்டு, இமய மலைக்கு ( அல்லது ஏதோ ஒரு மலைக்கு ) செல்ல இருக்கும், பேரன்பிற்கும், பெரு மதிப்புக்கும் :) உரிய புலாலியூர் பூஸானந்தா அவர்களை வாழ்த்தி வணங்குவோம்! :)

    அனைவரும் வாரீர்! அணி திரண்டு வாரீர்! :)

    பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்!

    ( தொடர்ந்து இடம்பெறும் மதிய போஷண நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் ) :)

    ReplyDelete
  15. அதிரா ஞானியாகிட்டேன்ன்:) ///

    வெரி குட்! பூஸார் ஞானி ஆவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் என்றால்....,

    அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால்,

    ஆசை, பாசம், பற்று எல்லாத்தையும் துறந்திட்டுத்தான் ஞானி ஆகோணும்!

    ஹையோ ஹையோ சிலர் இனி மட்டன் ரோல்ஸை மறந்தாகோணும்,
    சிக்கன் கொத்தை மறந்தாகோணும்!
    முனியாண்டி விலாசை மறக்கோணும்!

    அவ்வளவு ஏன் ஒபாமா அங்கிளைக் கூட மறக்கோணும்!

    இவ்வளவையும் மறந்திட்டு ஞானி ஆக ரெடி யாமோ?

    என்ர லூட்ஸ் மாதாவே, இது இந்த ஜென்மத்தில் நடக்கிற கதையோ?

    ReplyDelete
  16. ஹையோ ஹையோ சிலர் இனி மட்டன் ரோல்ஸை மறந்தாகோணும்,
    சிக்கன் கொத்தை மறந்தாகோணும்!
    முனியாண்டி விலாசை மறக்கோணும்!
    //

    ஆஹா !!! வெல்டன் தம்பி

    ReplyDelete
  17. நான் ப்ளூ பெல் கார்டன் போறேன் வந்து முழுதும் ரசிக்கிறேன் athiraaaaaaav:))

    ReplyDelete
  18. Thats Capitoline she Wolf with twins ROMULUS AND I CANT REMEMBER THE OTHER NAME ...

    ReplyDelete
  19. இதிலும் ஏதோ கதை இருக்கிறதுபோலும், நான் இப்படி எங்கேயும் கேள்விப்படவில்லை. நான் நினைக்கிறேன் கிரிஸ்தவர்களுக்கு தெரிந்திருக்கும். //


    *
    ஜூபிடருக்கும் ஜு னோவுக்கும் பிறந்தவர் யுத்த களத்துக்கு உரிய தேவதை மார்ஸ் ..செவ்வாய் கிரகம் ...
    ரோமானியர்களின் இதிகாசப்படி ரோமுலஸ், ரேமஸ்
    என்ற இரட்டையர்களின் தகப்பனார் மார்ஸ். ரோமுலஸ்,
    ஓநாயிடம் பால்குடித்து வளர்ந்த இரட்டையர்கள் ரேமஸ் இருவரும்தான் ரோம்நகரை ஸ்தாபித்தவர்கள்.

    ReplyDelete
  20. Very nice photos, atheese. Love your post. Seeya meeya.

    ReplyDelete
  21. நலமா அதிராக்கா...

    மாமா மாமிலாம் கடந்த வருடம் போய் வந்தார்கள்...நாலைந்து வருடத்தில் ஐரோப்பிய பயணம் செய்ய ப்ளான்...நேரம் கிடைக்கனுமே SAINT ATHIRA...:)

    ReplyDelete
  22. ஆஹா பூசார் லூர்ட்ஸ் மாதாவையும் சுற்றிக்காட்டிவிட்டா :))) படங்கள் அருமை .

    ReplyDelete
  23. தனிமரமாக சென்றுவந்தேன் மாதாவிடம் இனி தோப்பாக போகும் காலம் கிடைத்தால் சந்தோஸம் வசந்தகாலத்தில்:))))

    ReplyDelete
  24. வை.கோபாலகிருஷ்ணன் said...

    வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ:))

    த்லைப்பைப்பார்த்ததும் தலைதெறிக்க ஓடியாந்தேன்.

    ஞானியைக்கண்டு நமஸ்கரித்துப் போகலாமே என்று.

    அவரா நீங்க?:) ஹா..ஹா..ஹா... ஞானிகளை எல்லாம் கும்பிடுபவரோ எனக் கேட்டேனாக்கும்:)

    பிறகு சற்றே படித்ததும் தான் எனக்கு மூச்சே வந்தது//

    நல்லவேளை, இல்லையெனில் ஆன்ரிக்கு நான் எல்லோ பதில் சொல்லவேண்டி வந்திருக்கும்:)

    ReplyDelete
  25. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //சரி சரி வந்ததுதான் வந்தீங்க.. அப்பூடியே லூட்த்ஸ் மாதாவையும் தரிசிக்கலாம் வாங்கோ....//

    வந்தேன் ... வந்தேன்.

    //ஃபிரான்ஸ்க்குப் போனால் லூட்ஸ்க்குப் போய் வர மறக்காதீங்க.//

    அங்கெதற்கு வெட்டியாகப்போகணும் என்று இங்கேயே படத்தில் பார்த்து விட்டேன்.

    அதிரா காட்டிடும் படங்கள் யாவும் அற்புதம் அல்லவோ !

    இல்ல கோபு அண்ணன், படத்திலயே இப்படி எனில், நேரில் பார்ப்பதும் ஒரு அழகிய அனுபவம்தான், ஆனா குளிரால நன்கு ஆறுதலா வெளியே எங்கேயும் நின்று ரசிக்க முடியாமல் போச்சு.

    ReplyDelete
  26. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //அங்கு போவோர் குளிக்காமல் வருவதில்லை. ஆண், பெண்களுக்கென புறிம்பான ஹோல்கள் இருக்கின்றன. வரிசையில் உள்ளே போகவேண்டும், போகப் போக குட்டி அறையாக முடிவில் வரும் அங்கு ஒரு பெரிய தொட்டியில் அந்த நீரூற்றை விடுகிறார்கள், எமக்கு புது ஆடை தரப்படும், அதனை மாற்றியதும், இருவர், எம் இரு கையைப் பிடித்து அத்தொட்டியில் இருக்கவைத்து எழுப்பிவிடுவார்கள்(குளிருது, மாட்டேன் எனத் திரும்பி ஓட முடியாது:)).

    நாம் போனநேரம் தண்ணியோ ஐஸ் வோட்டர்போல இருந்துது, அப்படியே ஃபிறீசரில் இருப்பதுபோல டபக்கென இறங்கி ஏறினோம். ஆனா குளித்தபின் குளிர் தெரியவில்லை, நன்றாக இருந்தது. //

    அப்போ நீங்களும் குளிச்சிட்டீங்களா?

    சந்தோஷம்.அங்கு போவோர் எவரும் புனித நீராடாமல் வருவதில்லை,பிறகு சாமிக்குத்தமாகிடுமெல்லோ..

    ReplyDelete
  27. //அதிரடி அதிராவாலேயே அசைக்க முடியாததா!!!!! ஆச்சர்யமாக உள்ளதூஊஊஊ.//

    ஹா..ஹா..ஹா... நான் ரொம்ப மெலிஞ்சிட்டனாக்கும்:).

    ReplyDelete
  28. நம்பிக்கையை நினைட்து நானும் மெழுகாய் உருகிப்போனேன்.

    நீங்க உண்டியலில் காசு போட்டுவிட்டுத்தான் எடுத்திருப்பீர்க்ள் என நம்புகிறேன்.

    ஏனெனில்

    எல்லாம் நம்பிக்கையில் ஓடுது.//

    ReplyDelete
  29. ”ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கை வெய்யடா தாண்டவக்கோனே” ன்னு ஒரு பாட்டு சிவாஜி பாடுவார் - தூக்குத்தூக்கி என்ற படத்தில்.

    ஏனோ இந்த மொய் பற்றி படித்ததும் எனக்கு அது ஞாபகம் வந்தது. ;)///

    haa..haa..haa.. சொல்லாது விட்டால் மறந்து போய்விடுகினம் எல்லோரும் கோபு அண்ணன்:).

    ReplyDelete
  30. உடன் வரவுக்கும், பொறுமையான பின்னூட்டங்களுக்கும் மியாவும் நன்றி கோபு அண்ணன்.

    ReplyDelete
  31. சரி சரி படங்கள் பார்த்திருப்பீங்க சந்தோசமாகப் போய் வாங்கோ மீண்டும் சந்திப்போம்:). அதுக்கு முன் மொய் எழுத மறந்திடாதீங்க:). மொய் எழுதாவிட்டால், பட்டனைத் தட்டி விட்டிடுவேன்ன்ன்... கனவிலதான்ன்ன்:))

    எத்தன பேரு தான் கிளம்பி இருக்குறீங்க ?...சாமியாராகீற்றன் எண்டதும் அடிச்சுப் புடிச்சு ரெயின் ஏறி வந்து ஆக்கத்தைப் படிச்சு முடிச்சு மூச்சு விடுவம் எண்டு நிமிர்ந்து பார்த்தால் சுட்டுப் போடுவீங்களோ ?....:)) எங்க சுடுங்க பாக்கலாம் ?....! (ஓசியில போய் லூட்ச் மாதாவ பார்த்த மாதிரியும் இருக்கும்
    பரம சிவனிட்ட போன மாதிரியும் இருக்கும் :) ) இது எப்புடி ?...:)) ஹா ...ஹா ..ஹா ..

    ReplyDelete
  32. ஆஹா அதிரா உண்மையாகவே ஞானியாகிட்டாவோ, இந்தக் காலத்திலயும் இப்பூடி நல்லவிஷயமெல்லாம் நடக்குதோ:) என ஓடி வந்திருப்பீங்க:) அதுதான் இல்ல:) அதிராவாவது ஞானியாகிறதாவது:))..

    அட, அதானே பார்த்தேன்! பூஸாராவது ஞானி ஆகிறதாவது! அந்த 5 பவுண் சங்கிலியை வாங்காமல் உவா ஞானி ஆகவே மாட்டா!

    அதுசரி பிரித்தானிய ஹை கோட்ஸ்ல வழக்குப் போட்டிச்சினம்! ஒரு “வெள்ளைக்கார” :) லோயரை வைச்சு வாதாடிச்சினம்! இப்ப ஒண்டையும் காணேல!

    ஓ டயர்ட் ஆகிட்டினம் போல :)

    ReplyDelete
  33. தேர்த் திருவிளாவுக்கு

    ஹொஸ்டல் வாடன் அன்ரி - பிரம்போட வாங்கோ - சிலபேர் ஜன்னலைத் திறந்து மற்றப் பக்கம் பார்த்துக்கொண்டு நிண்டுட்டு இப்ப எழுத்துப் பிழை விடுகினம் :)

    ReplyDelete
  34. எல்லா படங்களும் அழகு அதிஸ் ..நாங்க போனப்ப எடுத்த படங்கள் எல்லாம் பெட்டில இருக்கு ..எடுத்து பார்க்கணும் .

    ReplyDelete
  35. மணி ஏற்க்கனவே மேடம்// கொழுத்தி /இருக்காங்க இதும் பிரம்படி உண்டுதானே :))

    ReplyDelete
  36. நிறைய படங்கள் போட்டிருக்கிறீங்கள். போஸ்ட் வாசிக்க மனதுக்கு போய்வந்த மாதிரியே இருக்கு. இப்ப ஸ்கூலுக்கு கிளம்புறன். நேரம் கிடைகேக்க வந்து மிச்சம்.

    http://en.wikipedia.org/wiki/Capitoline_Wolf

    ReplyDelete
  37. கல்யாண தேன்நிலா.. விருப்பம்.

    ReplyDelete
  38. மாத்தியோசி மணி மணி said...
    அம்மா வாங்க, ஐயா வாங்க, ஆச்சி வாங்க, அப்பு வாங்க, மற்றும் நம் உறவினர் எல்லோரும் வாங்கையா வாங்க....!! :)

    வாங்கோ மமணி வாங்கோ... இதென்ன இது நான் கூப்பிட வேண்டிய இடத்தில இருந்து நீங்க கூப்பிடுறீங்க..:).. இப்போ எதுக்கு எல்லோரையும் கூப்பிடுறீங்க?:) லூட்ஸ் படம் காட்டவோ?:)

    ///ஞானியாகி, நாடு விட்டு....., நாட்டு மக்களை விட்டு, இமய மலைக்கு ( அல்லது ஏதோ ஒரு மலைக்கு ) செல்ல இருக்கும், பேரன்பிற்கும், பெரு மதிப்புக்கும் :) உரிய புலாலியூர் பூஸானந்தா அவர்களை வாழ்த்தி வணங்குவோம்! :)////

    வெயிட்.. வெயிட்.. வெயிட்:)... ஹையோ!!!! முழுவதையும் வாசிக்காமல் இப்பூடி பாதியைப் படிச்சுப் போட்டு ஊரைக் கூப்பிடுறாரே:).. என்ர திருவெண்காட்டு முருகாஆஆ நான் எப்போ ஞானியானேன் எனச் சொன்னேன்:). ஒரு பேச்சுக்கு வாய் திறக்க முடியுதா இங்க:).

    தலைப்பு பார்த்து, பரிதாபப் பட்டு, ஹையோ வாணாம் உந்தச் சின்ன சுவீட் 16 வயசில உதெல்லாம் எதுக்கு எனச் சொல்லுவினம் எனப் பார்த்தால்ல்ல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இனியும் பேசாமல் இருந்தால்ல்.. உண்மையாகவே பூஸானந்தா ஆக்கிடுவினம் போல இருக்கே:)

    ReplyDelete
  39. அனைவரும் வாரீர்! அணி திரண்டு வாரீர்! :)

    பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்!//

    என்னாது பட்டாசோ?:) ஒரு சுவீட் 16 ஞானியாவது உங்களுக்கெல்லாம் தீபாவளிக் கொண்டாட்டமா இருக்குதோ?:))... இஞ்ச விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ... வெயார் இஸ் தேம்ஸ்ஸ்ஸ்:))


    ( தொடர்ந்து இடம்பெறும் மதிய போஷண நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் ) :)///
    திருத்தணி முருகாஆஆஆஆ இந்த வசனம் மட்டும் அஞ்சுட கண்ணில பட்டிடப்பூடா:)).. இதைப் பார்த்தாவோ பூட்ஸ் குடிச்ச மாதிரி எழும்பி ஓடிப்போய் இப்போ தலைப்பாக்கட்டு பிர்ராஆஆஆஆஆணி செய்து வந்து விருந்து வைப்பாவே...:)...

    திருப்பரங்குன்றத்து கிழக்கு பக்க முருகா.. வள்ளிக்கு ரெண்டு காதுக்கும் பவளத் தோடு போடுவன்.. காப்பாத்துங்கோ என்னை:)..

    ReplyDelete
  40. நாம் போனது ஏப்ரல் மாதமென்பதால், மக்கள் கூட்டம் பெரிதாக இருக்கவில்லை, இனி கோடை காலமெனில் முன் பக்கமே கூட்டம் அலைமோதும். ///

    அப்ப கோயிலின் பின் பக்கம் கூட்டம் அலைமோதாதோ? கிளியர் மை டவுட் :)

    ReplyDelete
  41. அதிரா... மிகவும் அருமையாக இருக்கு படங்களைப் பார்க்கும்போது. உங்கள் வர்ணனை நாமும் அங்கேயே நின்று நேரில் பார்ப்பதைபோல இருக்கிறது. அத்தனை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்கள்.

    புனித ஊற்றைப்பார்க்கும் போது, அதுபற்றி நீங்கள் விபரிக்கும்போது மனம் எங்கோ தாவுகிறது அதிரா...

    படங்களும் உங்கள் பதிவும் உண்மையிலேயே மிகப் புனிதமானதாய் அத்தனையும் சொல்லமுடியாத மனவுணர்வினைத்தருகிறது.
    அருமை. நல்ல பதிவு + பகிர்வு...

    எங்களுக்கும் பார்க்க இங்கு தந்தமைக்கு மிக்க நன்றி அதிரா!

    ReplyDelete
  42. என்ன கொடுமை லூட்ஸ் மாதாவே? நான் போடுற கொமெண்ட்ஸ் 5 நிமிஷம் நிக்குது! பிறகு மறையுது...... சிலருக்கு ஸ்பாம் செக் பண்ண கூட நேரமில்லைப் போல :) :) :)

    ReplyDelete
  43. ஆசை, பாசம், பற்று எல்லாத்தையும் துறந்திட்டுத்தான் ஞானி ஆகோணும்!

    ஹையோ ஹையோ சிலர் இனி மட்டன் ரோல்ஸை மறந்தாகோணும்,
    சிக்கன் கொத்தை மறந்தாகோணும்!
    முனியாண்டி விலாசை மறக்கோணும்!

    அவ்வளவு ஏன் ஒபாமா அங்கிளைக் கூட மறக்கோணும்!

    இவ்வளவையும் மறந்திட்டு ஞானி ஆக ரெடி யாமோ?

    என்ர லூட்ஸ் மாதாவே, இது இந்த ஜென்மத்தில் நடக்கிற கதையோ?///

    தலை தப்புவதே தம்பிரான் புண்ணியம் சாமீஈஈஈஈஈ:)

    ReplyDelete
  44. வாங்கோ அஞ்சு வாங்கோ..

    angelin said...
    ஹையோ ஹையோ சிலர் இனி மட்டன் ரோல்ஸை மறந்தாகோணும்,
    சிக்கன் கொத்தை மறந்தாகோணும்!
    முனியாண்டி விலாசை மறக்கோணும்!
    //

    ஆஹா !!! வெல்டன் தம்பி//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:) கரீட்டா.. மூக்கு வியர்த்திட்டுதே... இவ எப்பூடி இப்ப இங்கின வந்தா சாமீஈஈஈஈஈ:)).. எதையாவது சொல்லி உசுப்பேத்திவிட்டு, எப்படியாவது அதிராவை ஞானியாக்கிறதிலயே குறியா இருக்கினமே.. வைரவா.. இதைக் கேட்க இங்கின ஆருமே இல்லையோ:)

    ReplyDelete
  45. மக்கள் அதற்குள் அந்த விலையைப் போட்டுவிட்டு மெழுகுவர்த்தியை எடுத்துப் போகிறார்கள். அதுக்கு எந்த வித பாதுகாப்போ, கண்காணிக்க ஆட்களோ இல்லை, எல்லாம் நம்பிக்கையில் ஓடுது. ///

    ம்ம்ம் இதுதான் வெளிநாடு..! நான் ஒருமுறை இலங்கை - மடு மாதா கோயிலுக்குச் சென்றிருந்தேன்! ஒரு பெரிய மெழுகுதிரியை வாங்கி கொழுத்தி, மாதாவை வணங்கிவிட்டு, நிமிர்ந்து பார்க்கிறேன் - மெழுகுதிரியைக் காணேல! என்ர கண் எதிரேயே :) கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் மெழுகுதிரியை எடுத்துக்கொண்டு போய் அணைத்து விட்டு, அதை மறுபடியும் விற்பனைக்கு வைத்தார்! :)

    அந்த கோயில் நிர்வாகம் எங்கே? இந்த கோயில் நிர்வாகம் எங்கே? :)

    ReplyDelete
  46. athira said...
    angelin said...
    Thats Capitoline she Wolf with twins ROMULUS AND I CANT REMEMBER THE OTHER NAME ...///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கஸ்டப்பட்டு.... பெற்று... வளர்த்து.... யூனிஃபோம் போட்டு.... ஸ்கூலுக்கு அனுப்பி ... படிப்பிச்சு விட்டால்... இப்போ மறந்திட்டினமாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  47. // மாத்தியோசி மணி மணி said...//

    ஹையோ முருகா... இந்த நடுச்சாமத்தில ஆற்றையோ தலை தெரியுதே:))... உஸ்ஸ் அப்பாடா லொக்கர் கீ பத்திரமா இருக்கு:) அது போதும் சாமி:)

    ReplyDelete
  48. மணி {........... .....}
    ஓகேப்பா நான் சொன்னதெல்லாம் செய்ய்திடுங்க ..
    இந்த லாங்க்வேஜ் பூசாருக்கு புரியவே புரியாது :)))

    ReplyDelete
  49. மாத்தியோசி மணி மணி said...
    என்ன கொடுமை லூட்ஸ் மாதாவே? நான் போடுற கொமெண்ட்ஸ் 5 நிமிஷம் நிக்குது! பிறகு மறையுது...... சிலருக்கு ஸ்பாம் செக் பண்ண கூட நேரமில்லைப் போல :) :) :)

    இல்ல இதப் பார்த்ததும் ஓடிப்போய்ச் செக் பண்ணினேன், ஸ்பாமில் எந்த மெயிலும் இல்லை... அங்கிருந்த மயிலெல்லாம்ம்ம் கூட்டை விட்டுப் பறந்திடுச்சேஏஏஏஏஏ:)).. ஐ மீன் ஸ்பாம் எம் ரி யாயிருக்குன்னேன்:))

    ReplyDelete
  50. நிஜமாவே சிறப்பான பதிவு! லூட்ஸ் மாதாவை ஃபிரான்ஸுக்கு வரும் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டும்! அந்த ஊரே மிகவும் புனிதமானது! அழகிய படங்களோடு சிறப்பாக பதிவை எழுதியுள்ளீர்கள்!

    அப்புறம் லூட்ஸிலே தமிழ் கடைகள் இருந்தனவே - நீங்கள் கூட அம்மா உணவகத்தில் கொத்துரொட்டி சாப்பிட்டதாக பி பி சியில சொல்லிச்சினமே?

    அதைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கலாமே?

    எனிவே சூப்பரா பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  51. angelin said...
    மணி {........... .....}
    ஓகேப்பா நான் சொன்னதெல்லாம் செய்ய்திடுங்க ..
    இந்த லாங்க்வேஜ் பூசாருக்கு புரியவே புரியாது :)))//

    என்ர சிவபெருமானேஏஏஏஏ:) மூக்கோடு சேர்ந்து காதும் வியர்த்திருக்கே:)).. நாங்க.. ஓல் இன் வன் ஆக்கும்:)).. ஃபிரெஞ் இல இருந்து...:)) டொச்சு:)) வரைக்கும் அத்துப்படியாக்கும்:)) மீ பாஷையைச் சொன்னேன்:)).. உஸ்ஸ் அப்பா எதையாவது சொல்லி முத்ல்ல அமத்திடோணும்:)) பிறகு சமாளிச்சிடலாம்:)

    ReplyDelete
  52. மணி {........... .....}
    ஓகேப்பா நான் சொன்னதெல்லாம் செய்ய்திடுங்க ..
    இந்த லாங்க்வேஜ் பூசாருக்கு புரியவே புரியாது :))) //

    சரி அக்கா! அப்படியே செய்கிறேன்! பூஸார் ஞானி ஆகும் வரை நானும் அக்காவும் ஓயோம்! இது லூட்ஸ் மாதா கோயிலுக்கு முன்னால், பூஸார் வாங்கிச் சாப்பிட்ட ஹொட் டோக் மீது சத்தியம் :)

    ReplyDelete
  53. நான் என்ன செய்ய அதிஸ் தூங்கினாலும் அந்த பவழ ப்ரேஸ்லட் மட்டுதான் நினைவில் வருது :))

    ReplyDelete
  54. ஹொட் டோக்//

    அவ்வ்வ்வ் அப்ப அது hot dog ஆஅ
    எனக்கு சொல்லும்போது கொட்டொக் என்று சொன்னாங்க ..நானும் எப்பவும்போல புரிஞ்சமாதிரி தலையை ஆட்டினேனே கர்ர்ர்ர் மியாவ் :))
    .. ..

    ReplyDelete


  55. இது லூட்ஸ் மாதா கோயிலின் நகல் உருவம்! பாரிஸ் நகருக்கு அருகிலே ஓரிடத்தில் செய்து வைத்திருக்கிறார்கள்! பூஸார் ஒரிஜினல் காட்டினால், நாங்கள் டுப்ளிக்கேட்டும் காட்டுவோமாக்கும்ம் :) :) :)

    ReplyDelete


  56. இது லூட்ஸ் மாதா கோயிலின் நகல் உருவம்! பாரிஸ் நகருக்கு அருகிலே ஓரிடத்தில் செய்து வைத்திருக்கிறார்கள்! பூஸார் ஒரிஜினல் காட்டினால், நாங்கள் டுப்ளிக்கேட்டும் காட்டுவோமாக்கும்ம் :) :) :)

    ReplyDelete
  57. வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ..

    இராஜராஜேஸ்வரி said...
    இதிலும் ஏதோ கதை இருக்கிறதுபோலும், நான் இப்படி எங்கேயும் கேள்விப்படவில்லை. நான் நினைக்கிறேன் கிரிஸ்தவர்களுக்கு தெரிந்திருக்கும். //

    ஜூபிடருக்கும் ஜு னோவுக்கும் பிறந்தவர் யுத்த களத்துக்கு உரிய தேவதை மார்ஸ் ..செவ்வாய் கிரகம் ...
    ரோமானியர்களின் இதிகாசப்படி ரோமுலஸ், ரேமஸ்
    என்ற இரட்டையர்களின் தகப்பனார் மார்ஸ். ரோமுலஸ்,
    ஓநாயிடம் பால்குடித்து வளர்ந்த இரட்டையர்கள் ரேமஸ் இருவரும்தான் ரோம்நகரை ஸ்தாபித்தவர்கள்//

    ஆஹா சைவம் மட்டுமல்ல கிறிஸ்தவத்துக்கும் விளக்கம் அளிச்சு நீங்க எங்கயோ போயிட்டீங்க.. மியாவும் நன்றி.

    ReplyDelete
  58. angelin said...
    நான் என்ன செய்ய அதிஸ் தூங்கினாலும் அந்த பவழ ப்ரேஸ்லட் மட்டுதான் நினைவில் வருது :))///

    ஹா..ஹா..ஹா..




    ReplyDelete
  59. என்ர திருப்பெரூர் சிவபெருமானே:) இப்பவே மீ பாதி ஞானியாகிட்டேன் போல இருக்கே:)).. முடியல்ல முருகா.. மீ தோஞ்சதால நித்திரை அழைக்கிறதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அஞ்சு தோய்றதெண்டால் தூங்குவதா எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    இளமதியும் சைக்கிள் கப் ல வந்து போயிருக்கிறா இப்போ:) .. . . அக்காவுக்கும் தம்பிக்கும்(அவங்கட முறையிலயே சொன்னேன்ன்:)) மற்றும் அல்லோருக்கும்.. மெல்லிரவு:) சே..சே.. நித்திரையால டங்கும் ஸ்லிப்பாகுதே:) நல்லிரவு சுவீட் ஸ்டீம்ம்ஸ்ஸ்:)) நாளைக்கு மிகுதிப் பதில்கள் தொடர்கிறேன்ன் அதுவரை மன்னிச்சுக் கொள்ளும்படி கேட்டு உங்களிடம் இருந்து விடைபெறுபவர்..
    அன்புக்கும், பண்புக்கும், பாசத்துக்கும்.. பெயர்போன:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது சொல்லி முடிக்க முந்தி முறைக்கிறது:)) புலாலியூர்ப் பூஸானந்தா:)

    ReplyDelete


  60. தும்புத்தடியை வச்சுக்கொண்டு படுத்தால் கெட்ட கனவேதும் கிட்ட வராதாம்:) அதேன்ன்ன்ன்:))

    ReplyDelete
  61. பூஸாருக்கும் அக்காவுக்கும், இளமதிக்கும் மற்றும் எல்லோருக்கும் குட் நைட்!

    பூஸாருக்கு இனிய தும்புத்தடி கனவுகள் வருவதாக....!!!!!

    ReplyDelete
  62. பிரான்ஸ் செல்பவர்கள் நிச்சயம் லூர்ட்ஸ் போகாமல் வரமாட்டார்கள்.கட்டாயம் போகவேண்டிய இடம். அப்படியொரு அழகான,அமைதியான இடம். நான் 3த‌டவை போய்விட்டேன்.
    திரும்பி வரமனமிருக்காது. அழகாக படங்கள் க்ளிக் செய்திருக்கிறீங்க.
    நல்லதொரு பதிவு+பகிர்வு. இப்பதிவு அங்கு போய்வந்தமாதிரி இருக்கு. கல்யாண தேன்நிலா நல்லபாட்டு.பூஸானந்தா நல்லெண்ணத்தில எடுத்த படம்+கருத்து நன்றாகத்தான் இருக்கு. நன்றிஅதிரா.

    ReplyDelete
  63. இராஜேஸ்வரியக்காவுக்கு கொடுத்த கார்ட் நீங்க நீங்க செய்ததோ????
    //அதுக்கு முன் மொய் எழுத மறந்திடாதீங்க:). மொய் எழுதாவிட்டால்...//
    நான் எழுதிவிட்டன் அதிரா.அதான் கொமன்ட். நீங்கஎழுதியதை வாசியுங்கோ.""மொய் எழுதாவிட்டால்""

    ReplyDelete
  64. விளக்கமான படங்களுடன் நல்லதொரு பதிவு அதிராவ்! எல்லாரும் சொன்னது போல, உங்களுடன் நாங்களும் வந்த மாதிரியே ஒரு உணர்வு ஏற்பட்டது பதிவைப் படிச்சு முடிச்சதும்!

    அந்த ப்ரேஸ்லெட் கடையில நண்பிகளுக்கெல்லாம் ஆளுக்கொரு பிரேஸ்லெட் செய்து வாங்கிவந்து அனுப்பியிருந்தா என்னவாம்?! சரியான கஞ்ச மகாராணியா இருக்கீங்களே?! ;) :)

    அழகான இடமாக இருக்கிறது. இங்கெல்லாம் போய்ப்பார்க்க எங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கவேணும் என பூஸார் நேர்ச்சை வச்சால்தான் நான் மொய் எழுதுவேனாக்கும்! ஆங்!! :))))

    ReplyDelete
  65. படங்களும் அதற்கான வர்ணனைகளும்..
    சுண்டு விரல் பிடித்து
    அன்னையுடன் மலைக்க மலைக்க
    விழித்து பார்க்கும்
    குழந்தை போல...
    நானும் பார்த்துக்கொண்டே இருந்தேன்...
    அவ்வளவு அழகு சகோதரி..

    ReplyDelete
  66. கடைசில.. அங்கே உங்ககிட்டே மாட்டிக்கிட்டு இருக்கிற
    வாத்து குஞ்சுகள் யாரோ??

    ReplyDelete
  67. அதீஸ்..தலைப்பை பார்த்து ரொம்ப சிரித்து விட்டேன்.

    ReplyDelete
  68. வணக்கம்.
    Please visit my blog for a new post.
    http://gopu1949.blogspot.in/2013/05/blog-post.html அன்புடன் கோபு

    ReplyDelete
  69. vanathy said...
    Very nice photos, atheese. Love your post. Seeya meeya.//

    வாங்க வான்ஸ்ஸ்.. என்ன அதுக்குள் புறப்பட்டுவிட்டீங்க?:) என்னகலர் பிரேஸ்லட் வேணும் உங்களுக்கு?:)) இல்ல அடுத்தமுறைபோகும்போது வாங்கிவரலாமே என்றுதான்..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  70. மாத்தியோசி மணி மணி said...


    பூஸாருக்கு இனிய தும்புத்தடி கனவுகள் வருவதாக....!!!!!

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  71. ரெ வெரி said...
    நலமா அதிராக்கா...

    மாமா மாமிலாம் கடந்த வருடம் போய் வந்தார்கள்...நாலைந்து வருடத்தில் ஐரோப்பிய பயணம் செய்ய ப்ளான்...நேரம் கிடைக்கனுமே SAINT ATHIRA...:)

    வாங்கோ ரெவெரி வாங்கோ... இங்கு அனைவரும் நலம், உங்களிடத்திலும் நல்ல வெதர் வந்திட்டதா கேள்வி. நாங்களெல்லாம் பக்கத்திலதானே ரெவெரி இருக்கிறோம், அதனால ஒரேயடியா ஐரோப்பாவை பார்க்க வெளிக்கிடாதீங்க.. கிடைக்கும் லீவில் ஒவ்வொரு நாடாக நன்று சுத்திப் பாருங்க.

    நம்மவர் சிலர் ஒரேயடியாக எல்லா நாட்டையும் முடிப்பது, அதனால் பெயர்மட்டும்தான் தவிர இடம் பார்த்து அனுபவிக்க முடியாது.

    எங்கள் ஒரு உறவினர் ஒரேயடியாக எல்லா இடமும் சுற்றி வந்ததாகச் சொன்னார், அப்படியா ஜேர்மனி போனீங்களோ எனக் கேட்க, ஓம் போனோம், எங்கட ரெயின் ஜேர்மனை குறொஸ் பண்ணித்தான் போனது எண்டார்ர்:)).. அப்ப பாருங்கோவன்.. பெயருக்காக இடம் பார்ப்பவர்களும் இருக்கினம்.

    லூட்ஸ் போனால், அங்கால 3,4 மணித்தியாலம் ஓடினால் ஸ்பெயின் வந்திடும், நாங்க பரிஷில் இருந்து வான் ஹயர் பண்ணிப் போயிருந்தோம், ஸ்பெயின் போக எண்ணினோம், ஆனா ரைவர் சொன்னார், இப்போ குளிர், அங்கு போய் ஒன்றும் பார்க்க முடியாதென, அதனால் திரும்பிட்டோம்.

    மிக்க நன்றி ரெவெரி, போய் வாங்கோ.

    ReplyDelete
  72. வாங்கோ தனிமரம் வாங்கோ.. அங்கு எங்காவது லா ஷ்பேலில், மொம்பர்நாஸில நீங்க அகப்படுவீங்களோ எனப் பார்க்கத் தவறவில்லை:)).. ஆனா எங்கயும் நீங்க அகப்படவில்லை:)..

    நிட்சயம் குடும்பமா லூட்ஸ் போய் வாங்கோ நேசன்.

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  73. அம்பாளடியாள் said...
    சரி சரி படங்கள் பார்த்திருப்பீங்க சந்தோசமாகப் போய் வாங்கோ மீண்டும் சந்திப்போம்:). அதுக்கு முன் மொய் எழுத மறந்திடாதீங்க:). மொய் எழுதாவிட்டால், பட்டனைத் தட்டி விட்டிடுவேன்ன்ன்... கனவிலதான்ன்ன்:))

    எத்தன பேரு தான் கிளம்பி இருக்குறீங்க ?...சாமியாராகீற்றன் எண்டதும் அடிச்சுப் புடிச்சு ரெயின் ஏறி வந்து ஆக்கத்தைப் படிச்சு முடிச்சு மூச்சு விடுவம் எண்டு நிமிர்ந்து பார்த்தால் சுட்டுப் போடுவீங்களோ ?....:)) எங்க சுடுங்க பாக்கலாம் ?....! (ஓசியில போய் லூட்ச் மாதாவ பார்த்த மாதிரியும் இருக்கும்
    பரம சிவனிட்ட போன மாதிரியும் இருக்கும் :) ) இது எப்புடி ?...:)) ஹா ...ஹா ..ஹா

    வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ...

    நோஓஓஓஓஓ மொய் எழுதின ஆட்களை எல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டோம்ம்:))..

    அதுசரி சுட்டால் நேரே பரமசிவனோ?:) ஹா..ஹா..ஹா.. முடியல்ல:) இடையில வைரவர் , பிள்ளையார் மறிச்சால்ல்ல்?:))

    மியாவும் நன்றி அம்பாளடியாள்...

    ReplyDelete
  74. மாத்தியோசி மணி மணி said...
    தேர்த் திருவிளாவுக்கு

    ஹொஸ்டல் வாடன் அன்ரி - பிரம்போட வாங்கோ - சிலபேர் ஜன்னலைத் திறந்து மற்றப் பக்கம் பார்த்துக்கொண்டு நிண்டுட்டு இப்ப எழுத்துப் பிழை விடுகினம் :)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதென்ன புயுக்:) கதையாக் கிடக்கு:) யோசியம் ஏதும் பார்த்துக் கண்டுபிடிக்கிறாரோ:). மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்:) சின்ஸ்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:).

    ReplyDelete
  75. angelin said...
    மணி ஏற்க்கனவே மேடம்// கொழுத்தி /இருக்காங்க இதும் பிரம்படி உண்டுதானே :))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்பூடியா எழுதினேன்ன்:)) அப்போ “உந்த~ ழு இல்லியோ?:) அவ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  76. இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் முன்தினமே
    கூறிகொள்கிறேன்

    அழகான விளக்கங்களுடன் படங்கள்

    பில்லா...

    ReplyDelete
  77. வாங்கோ இமா... எல்லாம் பாருங்க மெதுவா. விக்கிட பீடியாவுக்கும் நன்றி.

    ஓம் கல்யாணத் தேன் நிலா.. அலுக்காது கேட்டு.

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  78. மாத்தியோசி மணி மணி said...
    நாம் போனது ஏப்ரல் மாதமென்பதால், மக்கள் கூட்டம் பெரிதாக இருக்கவில்லை, இனி கோடை காலமெனில் முன் பக்கமே கூட்டம் அலைமோதும். ///

    அப்ப கோயிலின் பின் பக்கம் கூட்டம் அலைமோதாதோ? கிளியர் மை டவுட் :)//

    ஹையோ லூஸ்ட்ஸ் மாதாவே.. நான் மீண்டும் வரோணும் என நினைச்சேன்.. அது நடக்கத்தான் போகுதுபோல:).. இந்த டவுட்டை ஒருக்கால் எனக்காக கிளியர் பண்ணிவிடுங்கோ.. மணியின் கனவில தோன்றி:).

    ReplyDelete
  79. இளமதி said...
    அதிரா... மிகவும் அருமையாக இருக்கு படங்களைப் பார்க்கும்போது. உங்கள் வர்ணனை நாமும் அங்கேயே நின்று நேரில் பார்ப்பதைபோல இருக்கிறது. அத்தனை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்கள்.

    புனித ஊற்றைப்பார்க்கும் போது, அதுபற்றி நீங்கள் விபரிக்கும்போது மனம் எங்கோ தாவுகிறது அதிரா...//

    வாங்கோ இளமதி வாங்கோ... உண்மைதான் எங்கிருந்தோ எல்லாம் நேர்த்தி வைத்து சுகயீனமானவர்களாஇக் கொண்டு வருகிறார்கள். நாம் நின்றபோது ஒரு நடக்கமுடியாத பெண்ணை, ஸ்டெஷ்சரில் படுக்க வைத்து கூட்டி வந்து அந்நீரில் குளிக்க வைத்துக் கூட்டிச் சென்றார்கள்.. எல்லாம் நம்பிக்கைதான்.

    மியாவும் நன்றி இளமதி.

    ReplyDelete
  80. மாத்தியோசி மணி மணி said...
    மக்கள் அதற்குள் அந்த விலையைப் போட்டுவிட்டு மெழுகுவர்த்தியை எடுத்துப் போகிறார்கள். அதுக்கு எந்த வித பாதுகாப்போ, கண்காணிக்க ஆட்களோ இல்லை, எல்லாம் நம்பிக்கையில் ஓடுது. ///

    ம்ம்ம் இதுதான் வெளிநாடு..! நான் ஒருமுறை இலங்கை - மடு மாதா கோயிலுக்குச் சென்றிருந்தேன்! ஒரு பெரிய மெழுகுதிரியை வாங்கி கொழுத்தி, மாதாவை வணங்கிவிட்டு, நிமிர்ந்து பார்க்கிறேன் - மெழுகுதிரியைக் காணேல! என்ர கண் எதிரேயே :) கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் மெழுகுதிரியை எடுத்துக்கொண்டு போய் அணைத்து விட்டு, அதை மறுபடியும் விற்பனைக்கு வைத்தார்! :)

    அந்த கோயில் நிர்வாகம் எங்கே? இந்த கோயில் நிர்வாகம் எங்கே? :)///

    உண்மைதான் மணி வியக்க வைத்துது அங்கிருக்கும் முறைகள். கடவுளின் மேல் போடப்பட்டிருக்கும் நகையையே திருடும் இக்காலத்தில் இப்படியும் இருக்கிறது. அதற்கு காரணம் அங்கிருப்போர் களவெடுக்காயினம், அவ்ளோதூரம் கோயிலைத் தரிசிக்க எனப் போவோர் களவெடுக்காயினம்...

    ReplyDelete
  81. மாத்தியோசி மணி மணி said...
    நிஜமாவே சிறப்பான பதிவு! லூட்ஸ் மாதாவை ஃபிரான்ஸுக்கு வரும் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டும்! அந்த ஊரே மிகவும் புனிதமானது! அழகிய படங்களோடு சிறப்பாக பதிவை எழுதியுள்ளீர்கள்!

    அப்புறம் லூட்ஸிலே தமிழ் கடைகள் இருந்தனவே - நீங்கள் கூட அம்மா உணவகத்தில் கொத்துரொட்டி சாப்பிட்டதாக பி பி சியில சொல்லிச்சினமே?

    அதைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கலாமே?

    எனிவே சூப்பரா பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள்!//

    ஓம் மணி, அங்கு நாம் தங்கிய ஹோட்டல்,இரு அறைகளும் ஒரு கிச்சினும், அதாவது, சுவீட் ரூம் என்பினமே, ஒரு செக்‌ஷனில்,பிள்ளைகளுக்காக bunk bed போட்டு ஒரு அறையும், இன்னொரு அறையும் அதுக்காக தனி கிச்சினும் என இருந்துது.

    எம்மோடு வந்த றைவருக்கும் ஒரு அறை கிச்சினோடு எடுத்துக் கொடுத்திருந்தோம், அவர் சொன்னார், பொருட்களை வாங்குங்கோ நான் சமைத்து தருகிறேன் என. 4 நாட்கள் அங்கு நின்றோம், நல்ல மட்டின் பிரட்டல், அவித்தமுட்டை:) என றைவர் ஒரு கலக்கு கலக்கி விட்டார்ர்:))..

    பல தமிழ்க் கடைகள் இருந்ததைப் பார்த்தோம். ஸ்பெஷலா அம்மா உணவகம் 2 இடங்களில் இருந்துது, அங்கு புட்டும், கறியும், கொத்து ரொட்டியும் சாப்பிட்டோம்.

    ReplyDelete
  82. மாத்தியோசி மணி மணி said...


    இது லூட்ஸ் மாதா கோயிலின் நகல் உருவம்! பாரிஸ் நகருக்கு அருகிலே ஓரிடத்தில் செய்து வைத்திருக்கிறார்கள்! பூஸார் ஒரிஜினல் காட்டினால், நாங்கள் டுப்ளிக்கேட்டும் காட்டுவோமாக்கும்ம் :) :) :)/////

    ஆவ்வ்வ்வ்வ் டுப்ளிகேட்டும் சூப்பரா இருக்கே.. நன்றி மணி.

    மியாவும் நன்றி மணி அனைத்துப் பின்னூட்டத்துக்கும்.

    ReplyDelete
  83. வாங்கோ அம்முலு வாங்கோ.. ஒரு மூச்சில் அனைத்தையும் விபரித்து விட்டீங்க. உண்மைதான் அழகிய இடம். இங்கு எங்களிடமும் அப்படித்தான், ஆறும் மலைகளுமாக இருக்கும்.

    ReplyDelete
  84. priyasaki said...
    இராஜேஸ்வரியக்காவுக்கு கொடுத்த கார்ட் நீங்க நீங்க செய்ததோ????
    //அதுக்கு முன் மொய் எழுத மறந்திடாதீங்க:). மொய் எழுதாவிட்டால்...//
    நான் எழுதிவிட்டன் அதிரா.அதான் கொமன்ட். நீங்கஎழுதியதை வாசியுங்கோ.""மொய் எழுதாவிட்டால்""//

    ஹா..ஹா..ஹா.. இல்ல அம்முலு நான் செய்யவில்லை அது கூகிள் உபயம்.

    நல்லவேளாஇ மொய் எழுதியதால் தப்பிச்சீங்க:).

    எனக்குப் புரியவில்லை முடிவில் நீங்க சொன்னது...

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  85. Mahi said...
    விளக்கமான படங்களுடன் நல்லதொரு பதிவு அதிராவ்! எல்லாரும் சொன்னது போல, உங்களுடன் நாங்களும் வந்த மாதிரியே ஒரு உணர்வு ஏற்பட்டது பதிவைப் படிச்சு முடிச்சதும்!

    அந்த ப்ரேஸ்லெட் கடையில நண்பிகளுக்கெல்லாம் ஆளுக்கொரு பிரேஸ்லெட் செய்து வாங்கிவந்து அனுப்பியிருந்தா என்னவாம்?! சரியான கஞ்ச மகாராணியா இருக்கீங்களே?! ;) :)

    வாங்க மகி வாங்கோ.. அந்த பிரேஸ்லட் ஒரு கடை இல்லை சுற்றிச்சுற்றி ரோட்டுக்கள்.. ரோட்டோரமெல்லாம் விதம் விதமான கடைகள்.. பெரும்பாலும் எல்லாக் கடையிலும் இப்படி இருந்துது. அங்கிருக்கும்போது அருமை தெரியவில்லை.

    இப்போ படம் பார்க்கும்போது எனக்கும் கவலை வருது அனைத்துக் கலரிலும் வாங்கியிருக்கலாமே என. ஆனா அந்த ஒரு பவள பிரேஸ்லட்டே 10 பவுண்டுகள் வந்துது. அது தண்ணி பட்டாலும் கறுக்காது.

    ReplyDelete
  86. அழகான இடமாக இருக்கிறது. இங்கெல்லாம் போய்ப்பார்க்க எங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கவேணும் என பூஸார் நேர்ச்சை வச்சால்தான் நான் மொய் எழுதுவேனாக்கும்! ஆங்!! :))))

    ஆங்ங்ங்ங்.. பூஸோ கொக்கோ மீ நேர்த்தி வச்சுட்டேன்ன்ன்ன்:) மகி வந்து புனித நீரில் குளிரக் குளிர நீராடுவா என.. தவறாமல் என் நேர்த்தியை நிறைவேத்தி, எங்களுக்கும் இப்பூடிப் படங்கள் காட்டிடுங்கோ:)..

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  87. மகேந்திரன் said...
    படங்களும் அதற்கான வர்ணனைகளும்..
    சுண்டு விரல் பிடித்து
    அன்னையுடன் மலைக்க மலைக்க
    விழித்து பார்க்கும்
    குழந்தை போல...
    நானும் பார்த்துக்கொண்டே இருந்தேன்...
    அவ்வளவு அழகு சகோதரி..///

    வாங்கோ மகேந்திரன் அண்ணன்.. வாங்கோ உண்மையேதான்.. மலை ஆறு என அது ஒரு அழகிய ஊராக இருந்துது.

    ReplyDelete
  88. மகேந்திரன் said...
    கடைசில.. அங்கே உங்ககிட்டே மாட்டிக்கிட்டு இருக்கிற
    வாத்து குஞ்சுகள் யாரோ??

    ஹா..ஹா..ஹா... அதெல்லாம் இங்கின வந்துபோகும் என் சொந்த பந்த உறவுகளில் இரு என் பாலார்தான்:).. நல்லவேளாஇ எல்லோரும் கொமெண்ட் போட்டு அவர்களைச் சேவ் பண்ணிட்டீங்க...

    மிக்க நன்றி.

    ReplyDelete
  89. ஸாதிகா said...
    அதீஸ்..தலைப்பை பார்த்து ரொம்ப சிரித்து விட்டேன்.//

    வாங்கோ ஸாதிகா அக்கா.. எங்க கொஞ்ச நாளா காணாமல் போயிட்டீங்க.

    ஹா..ஹா..ஹா.. அப்பூடி எதையாவது சொல்லித்தானே எல்லோரையும் அழைக்க வேண்டி இருக்கு:). லீட்ஸ் பார்க்க வாங்கோ எண்டால்ல்.. ஆரும் வரமாட்டினம்:).. அதிரா ஞானியாகிட்டால் என்றால்ல் சந்தோசத்தில ஓடிவருவினம்:))

    அநியாயத்துக்கெல்லாம்ம்ம்ம் ரொம்ப நல்லவங்களா இருக்கினமே:)..

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  90. வை.கோபாலகிருஷ்ணன் said...
    வணக்கம்.
    Please visit my blog for a new post.
    http://gopu1949.blogspot.in/2013/05/blog-post.html

    நன்றி கோபு அண்ணன். என் பக்கத்தில் இடது பக்கம் பாருங்கோ, அதில் “மின்னல்மியா” என ஒரு புது இணைப்பு உள்ளது.. அதில் அனைத்துமே காட்டும்.. so don't worry..:).

    http://miyaavbear.blogspot.co.uk/

    ReplyDelete
  91. வணக்கம் அதிரா மேம்,நலமா?///அருமையான நிழற் படப் பிடிப்பு.அழகாக இருந்தது.இரண்டு/மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போய் வரும் இடம் தான்.பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  92. ஏன் இப்படி ஒரு திடீர் ஞானோதயம்
    நான் நினைச்சேன் காசி ராமேஸ்வரம் நு போய் விட்டீங்களொன்னு ஹிஹி

    அந்த பவளம் எனக்கும் பிடிக்கும் எனக்கு சின்ன அளவில் தான் கை சுற்றளவு , எனக்கும் ஒன்று சேர்த்தே ஆர்டர் பண்ணூங்கோ

    ReplyDelete
  93. தலைப்பும் பகிர்வும் அட்டகாசம்..நல்ல பகிர்வுக்கு நன்றி அதிரா..

    ReplyDelete
  94. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

    வலைச்சர தள இணைப்பு : தனிமரங்கள் கூட நடப்பது போல !

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.