நல்வரவு_()_


Saturday, 25 May 2013

வெ...ளாடலாம் வாங்கோ:)

ஐ மீன்... “டிஸ்னி” ல:).
ன்னடா அதிரா ஓய்ஞ்சுபோயிட்டாவே.. இனி ஃபிரான்ஸ் படங்கள் இல்லையாக்கும் என நினைச்சு நிம்மதியா இருந்திருப்பீங்க:) அதுதான் இல்ல..:) அதிரா.. மீ...  றிரேன்:).

பரிஸ்.. என்றாலே நினைவுக்கு வருவது "DISNEY WORLD"  தானே. அங்கு இரண்டு வகையான உலகமாகப் பிரிச்சு வச்சிருக்கினம், ஒன்று விளையாட்டுக்களுக்காகவும், இன்னொன்று அதிகமாக மூவி தயாரிப்பதுபோலவும், அது சம்பந்தமானதுமானது. இரண்டுமே சுற்றிப் பார்க்க, அதுவும் அழகாக ரசிச்சுப் பார்ப்பதாயின் குறைந்தது 3 நாட்களாவது தேவை.

நாங்கள் உள்ளே போன நேரத்தை மிக்கி மவுசார் தொட்டுக் காட்டுவது தெரியுதோ?:).
உள்ளே போனால், நடந்தே முடிக்க முடியாது.. அவ்ளோ பெரிய இடம்..

நாங்கள் ஹயர் பண்ணிய வான் ட்ரைவர் சொன்னார்.. “எதுக்கு டிசுனிக்கு:) ப்போறீங்க, அதைவிட நல்ல நல்ல பார்க்குகள் இருக்கு, அங்கு போய் ஏன் காசை அதிகம் வீணாக்குறீங்க என.  நாம் போன நேரம், இரு உலகமும் பார்ப்பதாயின் 79 யூரோக்கள். ஒன்று மட்டும் பார்ப்பதாயின் 69 யூரோக்கள். விலையில் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் ஒன்று பார்க்கவே ஒருநாள் போதாதே. அடுத்தநாளுக்கு ரிக்கெட் பாவிக்க முடியாதுதானே.

சிறியவர்களுக்காக எல்லாம் நிறைய விளையாட்டுக்கள் இருக்கு.

நாங்கள் உள்ளே நுழைந்ததும்.. ஒரு பக்கமாகப் போய், இதென்ன பெரிய விஷயம், நாங்க ஏறாத ரோல ஹோஸ்டரோ என ஒன்றில ஏறி இருந்திட்டோம்:))... ஹையோ முருகா நான் கூப்பிடாத தெய்வமில்லை:).. அதை தலை கீழாக எல்லாம் சுழட்ட வெளிக்கிட்டு விட்டது. ஏறி இருந்ததும் மூடிய கண்:), இருப்பிடத்துக்கு வந்ததும்தான் திறந்தேன்:).. ஒவ்வொரு முறையும் இப்படித்தான், ஆனா ஏறுவதை நிறுத்தவே மாட்டேன்ன்:) அதிராவோ கொக்கோ:).
========================================

இதில் தெரிகிறதே.. இதுதான்  “டிஸ்னி காசில்”, ரோய் ஷொப் களில் பார்த்திருப்பீங்க, பெண்பிள்ளைகளுக்காக, குட்டி குட்டியாக இது விற்பனையாகும்.


இது சுற்றுவர லேக்போல செய்து, நடுவிலே மண் புற்றுப்போல ஒரு காசில் கட்டி வச்சிருக்கினம். தூரப் பார்க்க கழிமண்ணினால் கட்டியதுபோலவே இருந்துது, கிட்டப் போய்ப் பார்த்தால் அத்தனையும் பிளாஸ்டிக்.

 இதிலே ரோலர் ஹோஸ்டர் ரெயின் ஓடித்திரிகிறது, இது பார்க்கப் பயம் ஆனா ஏறி இருந்தால் சூப்பராக இருந்துது. ரெயினில் சுழட்டி அடித்தது என்னமோ ஐந்தே ஐந்து நிமிடங்கள்தான், ஆனா அதுக்காக கியூ:) வரிசையில்:) காத்திருந்தது.. நம்ப மாட்டீங்க சரியா ஒரு மணித்தியாலம். ஆனா இனி summer ரைமில் எனில் 2,3 மணித்தியாலங்கள் கியூவில் நிற்கவேண்டி வருமாம். நாம் போனது நல்ல நேரம்:).. God is great பாருங்கோ:)).

கீழே இருக்கும் படத்தில் பாருங்கோ ரெயின் பெட்டிகளும் ஆட்கள் இருப்பதும் தெரியுதெல்லோ:).. அனைத்தும் ஆதிகாலம்போல கறள் பிடித்த இரும்புபோல அமைத்திருக்கினம் ரெயினை.

========================================
அங்கு "Molly Brown" என ஒரு ஷிப்பும் சுற்றி வந்தது எம்மை ஏற்றிக்கொண்டு.
========================================
%%%%%%%%%%%%%%%%%%%%--இடைவேளை--%%%%%%%%%%%%%%%%%
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னாதிது , இப்பத்தானே “இடைவேளை” வந்திருக்கு:) அதுக்குள் ஒரே அடைமழையாக் கொட்டுதே:)).. ஐ மீன்... பின்னூட்டங்களுக்குச் சொன்னேன்:).

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இதில் தூர ஒரு பில்டிங் தெரியுதெல்லோ இதுதான் hunted house எனப்ப்டுவது, கிட்டத்தட்ட பேய்வீடுபோல இருக்கும். லைட் இருக்காது, ஒரே மயான அலறல்கள்போல ஒலிகள் இருக்கும்.ொரு ரெயினில் ஏறி இருக்கோணும்... அது இருட்டுக்குள் சுற்றி சுற்றி ஓடும்:) நாம் பயந்து நடுங்கிக் கொண்டு, ஆரோடு ஆர் இருப்பதென பதறிக்கொண்டு ஏறினோம், ஆனா பயந்தளவுக்கு பெரிதாக பயம் இருக்கவில்லை. சில இடங்களில் எலும்புக்கூடெல்லாம் தோளில தட்டும்:).. இங்கு அப்படியிருக்கவில்லை.. Thank GOD:).
=========================================

இது ஓரிடத்தில் NEW WORLD என ஒரு BOAT TRIP  செய்து இருக்கினம், அதில் ஏறி இருந்தால். ஒரு புது உலகை சுற்றி வரும் ஃபீலிங் கிடைக்கும். 

 BOAT போவது தெரியுதோ?..
என்ன புறுணம்:) எனில்.. உலகிலுள்ள அத்தனை நாடுகளையும் குட்டி குட்டியாக வடிவமைச்சிருக்கினம், நாம்தான் படம் பார்த்துக் கண்டுபிடிக்கோணும் எந்த நாடென்பதை.

அவசரமாக படமெடுத்ததில் சில நாடுகளே அகப்பட்டது... இது அஃப்றிக்காவெல்லோ?:)
 இது சிவனின் உருவம் தெரிந்தது பார்த்ததும் ஒரு பரவசமாகிட்டேன்ன் இங்கயுமா என:)...

 இது எங்கட முகப்பெருமானின் அண்ணனெல்லோ...
========================================

இதில் கங்காருப்பிள்ளை இருக்கிறார்.. அப்போ ஒஸ்ரேலியா..
========================================
இது எந்த நாடாக இருக்கும்?..
========================================
இன்னும் எத்தனையோ எத்தனையோ இருந்துது.. படம் போட்டதில நானே களாஇச்சுட்டேன்:) அப்போ உங்கட கதி?:)) அதனால பெரிய மனது பண்ணி டிஷ்னி வேல்டை விட்டு வெளில வாறேன்ன்..:).. இது சின்னவருக்காக “மிக்கி மவுஸாரையும்” சந்தித்தோம்:)) எனக்கும் காண்ட் சேக் பண்ணினாரே:) என்னா தைரியம்?:) ஆனா நான் பிராண்டி.. கடிச்சு ஒண்ணும் பண்ணல்ல:).. மீ தான் குட் கேள் ஆச்சே:) சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:)..

 இதுதான் மறு பக்கத்தில் இருந்த, நான் ஆரம்பத்தில் சொன்ன மூவி வேல்ட்.. அங்கு போகவில்லை.. அடுத்ததடவை பார்க்கலாம்ம்..:). இறைவன் நாடினால்:)

ஊசி இணைப்பு:
டிசினி:) வேல்டின்மீது ஆணையாக, இதை நான் எங்கேயும் களவெடுக்கவில்லையாக்கும்..:) இவர் அந்த ஷிப் போகும் லேக்கில் இருந்தார், அவருக்கு பொப்கோன் போட்டதும் படமெடுக்க விட்டார்ர்.. கடைக்கண் போஸும் தந்தார்ர்... எங்கட சொந்தக் கமெராவில:) கிளிக் பண்ணி வந்தேனாக்கும்:)..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
“ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு,சிதறவிட்ட நமக்குத் தெரியாது.. 
அதை எடுத்துச் செல்லும், எறும்புக்குத்தான் தெரியும்”


இதை மக்களுக்காக இங்கின சொன்னவர்:...
பெருமதிப்பிற்குரிய, மேன்மைதங்கிய:),அன்பும் பண்பும் + அதிக பாசமும் நிறைந்த:), விட்டுக்கொடுக்கும் தன்மை அதிகமுள்ள:)அடுத்தவரை அடக்கியாளும் குணமற்ற:)மிகமிக நல்ல குணங்கள் அதிகமுள்ள:), சொல்வழிகேட்கும் தன்மை நிறைந்த:), அதி புத்திசாலியாக இருக்கும்:).. புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)..

உஸ்ஸ்ஸ்ஸ்..., நானும்தான் பிறந்தன்றிலிருந்து, பதினாறு வருஷமா:).. அதாவது இன்றுவரை:) ஆராவது நம்மளை இப்பூடியெல்லாம் சொல்லுவினமோ.. சொல்லுவினமோ:) என்றால்.. ம்ஹூம்ம்.. ஒருசனமும் சொல்லீனமில்லை:) அதுதான் டக்கென மாத்தி ஓசிச்சு.. நம்மளை நாமளே புகழாட்டி:), அடுத்தவர்களா புகழ்வாங்க எனும் முடிவுக்கு வந்திட்டேன்ன்:). பூஸோ கொக்கோ:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆரோ ஓடி வாறமாதிரி இருக்கே:)
=============================================================

108 comments :

  1. On the way to a road trip athira! Will comeback soon.

    Disney world pictures are good! See yaa later! :)

    ReplyDelete
  2. அழகான படங்கள் மூலம் நாங்களும் சுற்றிப் பார்த்து ரசித்து விட்டோம்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. விசா டிக்கெட் செலவெ இல்லாமல் பிரன்சை சூப்பராக சுற்றிப்பார்த்து விட்டோம்:)

    ReplyDelete
  4. ரோலர் கோஸ்டரில் சுற்றிக்கொண்டிருக்கும் அதிரவை படம் எடுத்துப்போட்டு இருக்கலாமே:(

    ReplyDelete
  5. பூசாரே அடுத்து எந்த இடத்துக்கு போகப் போறீங்க?.. ஏன்ன இப்படி ஓசியில அழகா நாங்களும் எல்லா இடத்தையும் பார்த்து ரசிப்போமில்ல :)

    ReplyDelete
  6. அதீஸ்... அருமையாக இருக்கு படங்கள் எண்டு இங்கு நண்பர்கள் சொல்லுறதை மட்டும்தான் கேட்கிறேன். என்னால் பார்க்க முடியவில்லை. எனது ஐ பாட் காட்டுதில்லை... :(. இருக்குமிடத்தில் நெற் பிரச்சனையும்....
    படங்களை பிறகு பார்த்து கருத்தெழுதுறேன்...
    பதிர்வு உங்க கதைவசனம் சூப்பர்!...

    வந்தேன் சென்றேன்...
    வழங்கினேன் வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
  7. இதென்ன பெரிய விஷயம், நாங்க ஏறாத ரோல ஹோஸ்டரோ என ஒன்றில ஏறி இருந்திட்டோம்:)).

    ரோலர் கோஸ்டரில் சுற்றிக்கொண்டிருக்கும் அதிரவை வீடியோ படம் எடுத்து யூட்யூப்பில் போட்டிருந்தால் அருமையாக இருந்திருக்குமே..!

    மிஸ்பண்ணிட்டீங்களே..!
    மிஸ்பண்ணிட்டீங்களே..!

    ReplyDelete
  8. 369.photobucket.com/albums/oo140/sberthelette/RollerCoasterCats.jpg

    ReplyDelete
  9. http://www.infomandala.com/wp-content/uploads/2013/12/Animated-Cats-LitteronaRollerCoaste.gif

    ReplyDelete
  10. “ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு,சிதறவிட்ட நமக்குத் தெரியாது..
    அதை எடுத்துச் செல்லும், எறும்புக்குத்தான் தெரியும்”

    யானை தான் சாப்பிடும்போது சிதறும் உணவைப்பற்றிக் கவலைப்படாதாம் .. அது ஆயிரக்கணக்கான எறும்புகளுக்கு உணவாகுமாம் ...

    ReplyDelete
  11. அழகழகான படங்கள். அற்புதமான விளக்கங்கள். அனைத்தும் அருமை.

    சிரிக்கும் இரட்டையர் மிகவும் ஜோர்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. ஆஹா அருமையான படங்கள் டிஸ்னி எல்லாம் அழகாய் படம் பார்த்து பார்த்து பிடித்து இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  13. //உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னாதிது , இப்பத்தானே “இடைவேளை” வந்திருக்கு:) அதுக்குள் ஒரே அடைமழையாக் கொட்டுதே:)).. ஐ மீன்... பின்னூட்டங்களுக்குச் சொன்னேன்:).//

    ரஸித்தேன். அதனால் மேலும் சில பின்னூட்டம் கொடுக்க வந்துள்ளேன். ;)))))

    ReplyDelete
  14. // BOAT போவது தெரியுதோ?..//

    போட்டில் அதிரா போவதும் கூட தெளிவாகத் தெரியுதூஊஊஊஊ, [எனக்கு மட்டுமே.]

    ReplyDelete
  15. //இதை நான் எங்கேயும் களவெடுக்கவில்லையாக்கும்..:) //

    அதிரா களவெடுத்ததாக நாங்கள் யாருமே சந்தேகப்படவில்லை.

    ”எங்க அப்பன் குதிருக்குள்ளே இல்லை’என்ற் கதைபோல நீங்களே களவெடுக்கவில்லையாக்கும் என்று சொல்வதால் மட்டுமே எல்லோருக்கும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது.

    அந்தக்கதை தெரியுமா அதிரா. நானே சொல்லிவிடுகிறேன். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

    -=-=-=-=-

    கடன் வாங்கிய ஒரு தந்தை தன் வீட்டில் இருந்தார்.

    கடனை வசூலிக்க ஆள் வருவது அவருக்குத் தெரிந்து போனது.

    டக்குன்னு தன் சின்னப்பிள்ளையிடம் சொன்னார் “ நான் இந்த நெல் குதிருக்குள் புகுந்து ஒளிந்து கொள்கிறேன். நான் இங்கு இருப்பதாக அந்த ஆளிடம் சொல்லிவிடாதே” என்று சொல்லிவிட்டு நெல் வைக்கும் குதிருக்குள் குதித்து விட்டார்.

    கடன் கொடுத்தவன் வந்தான்.

    பையனிடம் ’உன் அப்பா எங்கே? அவரைக்கூப்பிடு வெளியே” என்று சத்தம் போட்டான்.

    ”எங்க அப்பன் இந்தக்குதிருக்குள் இல்லவே இல்லை” என்றான் பையன்.

    வந்த ஆளுக்கு இந்த ஒரு தகவல் போதாதா? ;)))))

    ReplyDelete
  16. //“ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு,சிதறவிட்ட நமக்குத் தெரியாது.. அதை எடுத்துச் செல்லும், எறும்புக்குத்தான் தெரியும்”//


    இதை மக்களுக்காக இங்கின சொன்ன பெருமதிப்பிற்குரிய,மேன்மைதாங்கிய:) அன்பும் பண்பும் + அதிக பாசமும் நிறைந்த:), விட்டுக்கொடுக்கும் தன்மை அதிகமுள்ள:), அடுத்தவரை அடக்கியாளும் குணமற்ற:), மிகமிக நல்ல குணங்கள் அதிகமுள்ள:), சொல்வழிகேட்கும் தன்மை நிறைந்த:), அதி புத்திசாலியாக இருக்கும்:).. புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:).. வாழ்க வாழ்கவே !

    ReplyDelete
  17. சிரிக்கும் இரட்டையர், மொட்டையர், ரோசாப்பூச்சட்டையர் கொழுகொழு குண்டர்கள் அழகோ அழகு ஸாரி அய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்கூஊஊஊ.

    சுமார் பத்து தடவைகளுக்கு மேல் பார்த்துப்பார்த்து ரஸித்தேன்.

    ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவின் குழந்தைகளோ அல்லது பேரன் பேத்திகளோ என நினைத்துக்கொண்டேன். ;)))))

    என் வாய்த்தான் நேக்கு எதிரி. அதனால் நான் இப்போ எஸ்கேப்.

    ReplyDelete
  18. Miyaaaav :)) me aaaaw ...

    this is for you


    ReplyDelete
  19. நீங்க முந்தாநாள் மழையில் நனைஞ்சு விளாடி ரொம்ப அச்சும் வந்துதாமே ?? பி பி சி நியூசில் சொன்னாங்க:))
    அதான் சின்ன கிப்டு :))
    பெரியச எதாச்சும் வேணும்னா தம்பிகிட்ட சொல்லி அரேஞ் செய்றேன்

    ReplyDelete
  20. அதிராவோ கொக்கோ:)//

    ஆத்தாடி !!!!!இம்புட்டு நாளும் அதிரா பூனைன்னு இல்லையா நினைச்சேன் ...எப்போ கொக்கா மாறினீங்க ???
    doubt 2020:))

    ReplyDelete
  21. சில இடங்களில் எலும்புக்கூடெல்லாம் தோளில தட்டும்:).. இங்கு அப்படியிருக்கவில்லை.. Thank GOD:)//


    டோன்ட் வொர்ரி :)) அடுத்த முறை நாங்க ...................................அனுப்பி வைக்கிறோம் எலும்பே கூடு மாதிரி இருக்காது ..12 அடி லென்க்தில் sssssssssssssssssss மட்டும் சொல்லும்

    ReplyDelete
  22. இது எங்கட முகப்பெருமானின் அண்ணனெல்லோ...//

    ஆமா அவங்களேதான் !!!! நேர்த்திகடன் தந்தீங்களா அங்க வச்சாவது

    ReplyDelete

  23. அங்கே சார்லி சாப்ளின் இருந்தாரா அதிஸ் ?நாங்க போனப்போ அவருக்கு croissant வாங்கி கொடுத்தேன்

    என்னை மறக்கவே மாட்டார் :))

    ReplyDelete
  24. எக்ஸ் கியூஸ் மீ....! வீட்டில யாராச்சும் இருக்கறீங்களா? இல்ல.... ச்சும்மா ஒரு பரிசு தந்துட்டுப் போகலாம்னு வந்தேன் :)

    ReplyDelete
  25. வெ...ளாடலாம் வாங்கோ:) ///

    எனக்கு கிட்டுப் புள்ளும் பம்பரமும் தான் விளையாடத் தெரியும்! இது உங்களுக்குத் தெரியுமோ?

    ReplyDelete
  26. என்னடா அதிரா ஓய்ஞ்சுபோயிட்டாவே.. இனி ஃபிரான்ஸ் படங்கள் இல்லையாக்கும் என நினைச்சு நிம்மதியா இருந்திருப்பீங்க:) ///

    ஆஹா...! எப்படி இவ்வ்வளவு கரெக்டா சொல்றீங்க? இதுக்குப் பேர் தான் நீதிபதி........ ஸாரி டெலிபதியா?

    ReplyDelete
  27. வாங்க மகி வாங்க... முதலாவதா வந்த உங்களுக்கு இந்தாங்க ஒண்ணுக்கு ஒண்ணு ஃபிரீ:) டிஸ்னி ரிக்கெட்... ஜோடியா போயிட்டு வாங்கோ... அந்த நான் ஏறிய:) ரோல ஹோஸ்டரில ஏற மறந்திடாதீங்க..:))..

    Still... on the way? karrrrrrrrrrrrrrrrr:))..

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  28. திண்டுக்கல் தனபாலன் said...
    அழகான படங்கள் மூலம் நாங்களும் சுற்றிப் பார்த்து ரசித்து விட்டோம்... நன்றி... வாழ்த்துக்கள்...

    வாங்கோ வாங்கோ... பார்த்து ரஸிச்சிட்டீங்க.. அப்போ பீஸைத் தந்திட்டுப் போய்வாங்கோ:)).. ஹா..ஹா..ஹா... மியாவும் நன்றி.

    ReplyDelete
  29. ஸாதிகா said...
    விசா டிக்கெட் செலவெ இல்லாமல் பிரன்சை சூப்பராக சுற்றிப்பார்த்து விட்டோம்:)

    வாங்கோ ஸாதிகா அக்கா வாங்கோ...என்னாது செலவே இல்லாமலோ?:).. ஆர் சொன்னது.. பின்னால என் செகட்டறி நிண்டு பீஸை வாங்குறா மறக்காமல் கொடுத்திடுங்க:)..

    ஸாதிகா said...
    ரோலர் கோஸ்டரில் சுற்றிக்கொண்டிருக்கும் அதிரவை படம் எடுத்துப்போட்டு இருக்கலாமே:(

    அதை ஏன் கேட்கிறீங்க... தலைகீழாக சுழட்டி அடிச்சுப் போட்டு அதுவும் வெளியில இல்ல, எல்லாமே உள்ளுக்குள்.. அதாவது ஒரு கட்டிடத்துக்குள்... இடையில கொண்டுவந்து.. ஒரு சடின் பிரேக் போட்டுது... அந்த இடத்தில வச்சு ஒரு மின்னல் வெளிச்சம் கண்ணில பட்டுது, சரி வந்திட்டமாக்கும் என நம்பினால்ல்..

    மீண்டும் எடுத்துதே ஸ்பீட்ட்... அந்த மின்னல் வெளிச்சம் என்னடான்னா படம் எடுத்ததாம்ம்.. ஒரு கார்போல பெட்டியில் நால்வர் இருக்கலாம், 4,4 பேரா தனிப்படங்கள்... வெளியில வந்து பார்த்தால் ரீவியில் ஓடுது.. மீ கண்ணை மூடிக்கொண்டே இருக்கிறேன்ன்:) அதிராவோ கொக்கோ:)).. மியாவும் நன்றி.

    ReplyDelete
  30. Ambal adiyal said...
    பூசாரே அடுத்து எந்த இடத்துக்கு போகப் போறீங்க?.. ஏன்ன இப்படி ஓசியில அழகா நாங்களும் எல்லா இடத்தையும் பார்த்து ரசிப்போமில்ல :)///

    வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ.. இருங்க இருங்க என்ன அவசரம்.. இந்த படங்களை வச்சே ஒரு மாதத்தை ஓட விட்டிடுவேனே:))..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  31. இளமதி said...
    அதீஸ்... அருமையாக இருக்கு படங்கள் எண்டு இங்கு நண்பர்கள் சொல்லுறதை மட்டும்தான் கேட்கிறேன். என்னால் பார்க்க முடியவில்லை. எனது ஐ பாட் காட்டுதில்லை...

    வாங்கோ இளமதி வாங்கோ.. அப்படியோ? ஏனெனப் புரியவில்லை..ஐ பாட்டிலும் இங்கு தெரியுதெனக்கு.

    ஆறுதலா வாங்கோ.. முதலில உங்களைக் கவனியுங்கோ.

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  32. இராஜராஜேஸ்வரி said...
    இதென்ன பெரிய விஷயம், நாங்க ஏறாத ரோல ஹோஸ்டரோ என ஒன்றில ஏறி இருந்திட்டோம்:)).

    ரோலர் கோஸ்டரில் சுற்றிக்கொண்டிருக்கும் அதிரவை வீடியோ படம் எடுத்து யூட்யூப்பில் போட்டிருந்தால் அருமையாக இருந்திருக்குமே..!

    மிஸ்பண்ணிட்டீங்களே..!
    மிஸ்பண்ணிட்டீங்களே..!
    வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ... ஹா..ஹா..ஹா.. மேலே ஸாதிகா அக்காவின் கேள்விக்கு.. பதில் போட்டிருக்கிறன் படிச்சுப் பாருங்கோ.. இதுக்கான பதில் இருக்கு:)..

    ReplyDelete
  33. இராஜராஜேஸ்வரி said..//

    இரு படங்களும் பார்த்தேன் சூப்பர்ர்.. பாருங்கோ முகத்தில ஏதும் பயம் தெரியுதோ என:)) இல்லையெல்லோ:))..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  34. இராஜராஜேஸ்வரி said...
    “ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு,சிதறவிட்ட நமக்குத் தெரியாது..
    அதை எடுத்துச் செல்லும், எறும்புக்குத்தான் தெரியும்”

    யானை தான் சாப்பிடும்போது சிதறும் உணவைப்பற்றிக் கவலைப்படாதாம் .. அது ஆயிரக்கணக்கான எறும்புகளுக்கு உணவாகுமாம் ...
    இது என்ன புதுக்கதையாக்கிடக்கு.. யானை எங்கே சிதறும் உணவு சாப்பிடுது?... அது இலை, குழை, பழங்கள் எல்லோ சாப்பிடும்... இப்பூடித்தான் எனக்குத் தெரியுமே..
    மியாவும் நன்றி.

    ReplyDelete
  35. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அழகழகான படங்கள். அற்புதமான விளக்கங்கள். அனைத்தும் அருமை.

    சிரிக்கும் இரட்டையர் மிகவும் ஜோர்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்///

    வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. இரட்டையர் அழகெல்லோ... இங்கு எங்களிடத்தில் இருக்கும் மக்களுக்கு இரட்டைக் குழந்தைகள் அதிகம்... ஸ்கூலிலும் சரி மோல்களிலும் சரி இரட்டைக் குழந்தைகளை அதிகமாகக் காணலாம்..

    மியாவும் நன்றி..

    ReplyDelete
  36. தனிமரம் said...
    ஆஹா அருமையான படங்கள் டிஸ்னி எல்லாம் அழகாய் படம் பார்த்து பார்த்து பிடித்து இருக்கின்றீர்கள்.

    வாங்கோ நேசன் வாங்கோ மிக்க நன்றி.

    ReplyDelete
  37. வாங்கோ நேசன் வாங்கோ.. நீங்க போயிருப்பீங்க.. போகாட்டில் ஜோடியாப் போய் வாங்கோ மிக்க நன்றி.

    ReplyDelete
  38. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னாதிது , இப்பத்தானே “இடைவேளை” வந்திருக்கு:) அதுக்குள் ஒரே அடைமழையாக் கொட்டுதே:)).. ஐ மீன்... பின்னூட்டங்களுக்குச் சொன்னேன்:).//

    ரஸித்தேன். அதனால் மேலும் சில பின்னூட்டம் கொடுக்க வந்துள்ளேன். ;)))))
    வாங்கோ வாங்கோ அதிக பின்னூட்டம் போடுவோருக்கு ரோல ஹோஸ்டர் ரிக்கெட் இலவசம்:)

    ReplyDelete
  39. வை.கோபாலகிருஷ்ணன் said...
    // BOAT போவது தெரியுதோ?..//

    போட்டில் அதிரா போவதும் கூட தெளிவாகத் தெரியுதூஊஊஊஊ, [எனக்கு மட்டுமே.]

    என்ன கோபு அண்ணன்.. ரொம்ம்ம்ம்ம்ம்ப அதிகமா கரட் சாப்பிடுவீங்கபோல இருக்கே:))

    ReplyDelete
  40. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //இதை நான் எங்கேயும் களவெடுக்கவில்லையாக்கும்..:) //

    அதிரா களவெடுத்ததாக நாங்கள் யாருமே சந்தேகப்படவில்லை.

    ”எங்க அப்பன் குதிருக்குள்ளே இல்லை’என்ற் கதைபோல நீங்களே களவெடுக்கவில்லையாக்கும் என்று சொல்வதால் மட்டுமே எல்லோருக்கும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது.
    ஹா..ஹா..ஹா.. இப்பூடிச் சொல்லாட்டில் ஆருமே நம்ப மாட்டினமாம்:) கோபு அண்ணன்.. வீட்டில ஒரு விசிட்டர் வந்தால், நான் ஏதும் ஸ்பெஷலா சாப்பிடக் கொடுத்தால்... என் கையாலயே செய்து... உடன கேட்கினம்... இது எந்த ரெஸ்ரோரண்ட்டில வாங்கினனீங்க என:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))


    அந்தக்கதை தெரியுமா அதிரா. நானே சொல்லிவிடுகிறேன். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

    எனக்கந்த வசனம் தெரியும், கதை தெரியாது.. நேரமொதுக்கி எழுதியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  41. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //“ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு,சிதறவிட்ட நமக்குத் தெரியாது.. அதை எடுத்துச் செல்லும், எறும்புக்குத்தான் தெரியும்”//


    இதை மக்களுக்காக இங்கின சொன்ன பெருமதிப்பிற்குரிய,மேன்மைதாங்கிய:) அன்பும் பண்பும் + அதிக பாசமும் நிறைந்த:), விட்டுக்கொடுக்கும் தன்மை அதிகமுள்ள:), அடுத்தவரை அடக்கியாளும் குணமற்ற:), மிகமிக நல்ல குணங்கள் அதிகமுள்ள:), சொல்வழிகேட்கும் தன்மை நிறைந்த:), அதி புத்திசாலியாக இருக்கும்:).. புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:).. வாழ்க வாழ்கவே !

    உஸ்ஸ்ஸ்ஸ் மெல்லமா வாழ்த்துங்கோ கோபு அண்ணன்:)) அங்க பாருங்கோ ஊரெல்லாம் புகை மூட்டம்:)).. ஹையோ பிரித்தானியாவிலயே புகை ஆரம்பிச்சுட்டுதே:)).. ஹா..ஹா..ஹா..... மியாவும் நன்றி.



    ReplyDelete
  42. வை.கோபாலகிருஷ்ணன் said...
    சிரிக்கும் இரட்டையர், மொட்டையர், ரோசாப்பூச்சட்டையர் கொழுகொழு குண்டர்கள் அழகோ அழகு ஸாரி அய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்கூஊஊஊ.

    சுமார் பத்து தடவைகளுக்கு மேல் பார்த்துப்பார்த்து ரஸித்தேன்.

    ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவின் குழந்தைகளோ அல்லது பேரன் பேத்திகளோ என நினைத்துக்கொண்டேன். ;)))))

    என் வாய்த்தான் நேக்கு எதிரி. அதனால் நான் இப்போ எஸ்கேப்.///

    வை.கோபாலகிருஷ்ணன் said...
    சிரிக்கும் இரட்டையர், மொட்டையர், ரோசாப்பூச்சட்டையர் கொழுகொழு குண்டர்கள் அழகோ அழகு ஸாரி அய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்கூஊஊஊ.

    சுமார் பத்து தடவைகளுக்கு மேல் பார்த்துப்பார்த்து ரஸித்தேன்.

    மிக்க சந்தோசம்.... மியாவும் நன்றி.

    ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவின் குழந்தைகளோ அல்லது பேரன் பேத்திகளோ என நினைத்துக்கொண்டேன். ;))))////

    என் வாய்த்தான் நேக்கு எதிரி. அதனால் நான் இப்போ எஸ்கேப்.

    நோஓஓஓஓஓஒ இது என் “கொப்பிவலது” வாக்கியம்..:).. அதை எப்பூடி நீங்க எழுதலாம்ம்.. விடுங்கோ இதோ.. இப்பவே போகிறேன்ன் பிரித்தானியாக் ஹை கோர்ட்டுக்கு:)).

    மிக்க நன்றி கோபு அண்ணன் அனைத்து பின்னூட்டங்களுக்கும்...

    ReplyDelete
  43. angelin said...
    Miyaaaav :)) me aaaaw ...

    this is for you

    ஆஆஆஆஆஆ கோல்ட்டு பிஸ்ஸ்ஸ் லாண்டட்ட்:)) எங்க எங்க அந்த பாபகியூ மெஷின்:).. ஹையோ இந்த குளிருக்கும் தடிமனுக்கும் எவ்ளோ சூப்பரா இருக்கும்:))..

    நோஓஓஓஒ... ஐ நீட் பிங் கலர் டிஷ்யூ:)).

    ReplyDelete
  44. angelin said...
    நீங்க முந்தாநாள் மழையில் நனைஞ்சு விளாடி ரொம்ப அச்சும் வந்துதாமே ?? பி பி சி நியூசில் சொன்னாங்க:))
    அதான் சின்ன கிப்டு :))
    பெரியச எதாச்சும் வேணும்னா தம்பிகிட்ட சொல்லி அரேஞ் செய்றேன்//

    வாங்கோ அஞ்சு வாங்கோ...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்ப எதுக்கு ரொம்ப அடக்கொடுக்கமாக:) சிவனே எனத் தன்பாட்டில இருக்கும் தம்பியைக் குழப்புறீங்க:).. அவர் டயட்டில இருப்பதால கொஞ்சம் அடக்கொடுக்கமா இருப்பதுபோல ஃபீல் பண்ணுறேன்ன்:)) பாருங்க புரொஃபைல் பிக்‌ஷரை:) ரொம்ப வயக்கெட்டமாதிரி இல்ல?:)) .

    ReplyDelete
  45. ப்ரான்ஸ் சுற்றுபயணம் மிக அருமையாக தொகுத்து தரீங்க அதிரா..உங்க காமெடி தான் ப்ரான்ஸ் விட ஹைலைட்டாக இருக்கு.தொடருங்கோ..வெரி இண்ட்ரெஸ்டிங் ட்ரிப்...

    ReplyDelete
  46. angelin said...
    அதிராவோ கொக்கோ:)//

    ஆத்தாடி !!!!!இம்புட்டு நாளும் அதிரா பூனைன்னு இல்லையா நினைச்சேன் ...எப்போ கொக்கா மாறினீங்க ???
    doubt 2020:))

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  47. angelin said...
    இது எங்கட முகப்பெருமானின் அண்ணனெல்லோ...//

    ஆமா அவங்களேதான் !!!! நேர்த்திகடன் தந்தீங்களா அங்க வச்சாவது

    haa...haa..haa.. நோஓஓஓஓஓஒ:)) முதல்ல நான் கேட்டதை அவர் நிறைவேத்தினால்தானே மீ கொடுப்பனாக்கும்:) எங்கிட்டயேவா:) பூஸோ கொக்கோ?:) நாங்க இப்பூடிக் கணக்கு வழக்கிலெல்லாம் ரொம்ப விபரமாக்கும்:)).

    ReplyDelete


  48. angelin said...

    அங்கே சார்லி சாப்ளின் இருந்தாரா அதிஸ் ?நாங்க போனப்போ அவருக்கு croissant வாங்கி கொடுத்தேன்

    என்னை மறக்கவே மாட்டார் :))
    அதெங்கின அஞ்சு?:) காணவில்லை அப்படி.. நாங்க முற்றும் முழுதா பார்த்து முடிக்கவில்லை.. நல்ல ரெயின் ட்ரிப்... சுத்தி சுத்தி ஓடிச்சுது அதில ஏறி கொஞ்சம் சுத்தினோம்ம்... காலை 9 க்கு போய் நைட் 8 வரை நின்றும் முழுவதும் பார்க்கவில்லை.. ஆனா இடையில ரெஸ்ரோரண்ட் போய் சாப்பிட்டது இப்படியெல்லாம் ரைம் போயிட்டுது.

    மியாவும் நன்றி அஞ்சு.

    ReplyDelete
  49. மாத்தியோசி மணி மணி said...
    எக்ஸ் கியூஸ் மீ....! வீட்டில யாராச்சும் இருக்கறீங்களா? இல்ல.... ச்சும்மா ஒரு பரிசு தந்துட்டுப் போகலாம்னு வந்தேன் :)

    அவ்வ்வ்வ்வ்வ்வ் மணிச்சத்தம் கேட்குதே.. ட்ராம் ஆகா இருக்குமோ என ஓசிச்சேன்ன்ன்:)).. கிரீன் கஃபே ஓனர்ர்.. ச்ச்ச்சே அதென்னமோ பரிசு என எங்கின அந்த “ப” எழுத்தைப் படிச்சாலே..:) டங்கு லெக்கு எல்லாம் ஸ்லிப் பாகிடுதே:))... ஆங்ங்ங்ங்ங்ங்ங்... மணியம் கஃபே ஓனர் வந்திருக்கிறார் வாங்கோ வாங்கோ....

    என்ன நல்லா டயேட் பண்ணுறீங்களோ?:) ரொம்ப வயக்கெட்டுப் போனீங்க:).. பழையபடி கறுப்புக் கண்ணாடியையும் தூக்கிப் போட்டீங்க போல:)).. இதுக்குத்தான் அம்மம்மா சொல்றவ ஓவரா டயட் பண்ணினால்ல்:)).. நல்லதுக்கில்ல என:))

    ReplyDelete
  50. மாத்தியோசி மணி மணி said...
    வெ...ளாடலாம் வாங்கோ:) ///

    எனக்கு கிட்டுப் புள்ளும் பம்பரமும் தான் விளையாடத் தெரியும்! இது உங்களுக்குத் தெரியுமோ?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதெல்லாம் ஓல்ட்டு:).. அதுசரி அதென்ன கிட்டுப்புள்ளும் பம்பரமும்:).. கிட்டுப் பொல்லும் கிளித்தட்டும் எல்லோ??:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்.. இந்தாங்கோ உங்களுக்கு ஒரு ரோலர் ஹோஸ்டர் ரிக்கெட்:).. ஒண்டுதான் இலவசம் அஜீஸ் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்:))..

    உஸ்ஸ் அப்பாடா இப்பூடி எதையாவது கொடுத்து சமாதானமாகிப் போயிட வேண்டியதுதான்ன்ன்:)).. எப்பூடியாவது அவர் பரிசு தருவதை மறந்தால் போதுமெனக்கு:)).. முருகா.. இம்முறை நிட்சயமா போடுவேன்ன்..:) ஏமாத்தமாட்டேன்ன்:)).. வள்ளிக்கு நவரத்தின மூக்குத்தி கன்ஃபோம்ம்ம்:))

    ReplyDelete
  51. மாத்தியோசி மணி மணி said...
    என்னடா அதிரா ஓய்ஞ்சுபோயிட்டாவே.. இனி ஃபிரான்ஸ் படங்கள் இல்லையாக்கும் என நினைச்சு நிம்மதியா இருந்திருப்பீங்க:) ///

    ஆஹா...! எப்படி இவ்வ்வளவு கரெக்டா சொல்றீங்க? இதுக்குப் பேர் தான் நீதிபதி........ ஸாரி டெலிபதியா?

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இங்கின எங்கட “கிரேட் குருவோடு”:)இருந்தால்தான் எங்களுக்கு எப்பவுமே பாதுகாப்பு:).. இனி பரிசு வந்தாலும் பயமில்லையாக்கும்..:))

    மியாவும் நன்றி மணியம் கஃபே ஓனர்.. வரவுக்கும்.. பரிசுதர மறந்தமைக்கும்:)) நோஒ மீ ஒண்ணுமே சொல்லல்ல:))




    ReplyDelete
  52. Asiya Omar said...
    ப்ரான்ஸ் சுற்றுபயணம் மிக அருமையாக தொகுத்து தரீங்க அதிரா..உங்க காமெடி தான் ப்ரான்ஸ் விட ஹைலைட்டாக இருக்கு.தொடருங்கோ..வெரி இண்ட்ரெஸ்டிங் ட்ரிப்...//

    வாங்கோ ஆசியா வாங்கோ.. மோட்டசைக்கிள்:) ஹப் ல வந்துபோயிருக்கிறீங்க..:)).. இன்னும் இருக்கு டொரரும்:)))..

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  53. இது அந்த டிஸ்னி காசிலுக்கு உள்ளே கொஞ்சம் ஷொப்ஸ் இருந்துது, அதில் ஒன்றில இப்படி கிளாசை உருக்கி உடனுக்குடன் அழகிய பூக்கள், வடிவங்கள் செய்து கொடுக்கிறார்கள்.

    ReplyDelete
  54. இது நான் மேலே கூறிய “மொலி பிரவுன்” ஷிப் இல் ஏறி சுற்றி வரும்போது, அங்காங்கு இப்படி புராதன வீடுகள்போல செய்து வைத்திருக்கினம்.. இதிலிருக்கும் நாயார்.. வவ் வவ் என ஆடி ஆடிக் குரைத்து சாப்பாடு கேட்பதுபோல அசைவும் .. அந்த ஏரியா முழுவதும் ஒலியும் கேட்டுக்கொண்டிருக்கும். ஏதோ ஒரு காட்டினுள் தனித்த ஒரு வீட்டில் இப்படி இருப்பதாகவே ஃபீல் பண்ண வைக்கும்..

    ReplyDelete
  55. இந்தப் படங்களும் அந்த ஷிப்பிலே சுற்றி வந்தபோது எடுக்கப்பட்டவை. அதாவது உண்மையிலயே அழகிய ஒரு காட்டுப் பகுதியிலே சுற்றி வருகிறோம் எனும் ஃபீலிங்ஸை அது தந்துது..




    ReplyDelete
  56. இதுவும் அந்த ஷிப்ல இருந்து எடுத்தது, பாருங்கோ இதுதான் அந்த ரோலகோஸ்டர் ரெயின் போகும் தண்டவாளம்.. இடிபட்டு கழண்டு போயிருப்பதுபோல பாழடைந்ததுபோல பார்க்க ரெயின் உடைஞ்சு விழுமோ எனுமளவுக்கு செய்து வைத்திருக்கினம்.

    ரெயினும் தெரியுதெல்லோ.. கறள்பிடித்து இத்துப்போனதுபோல ஒரு தோற்றம்.. ஆனா மின்னி முழங்கிக்கொண்டு ஓடிச்சுதே...


    ReplyDelete
  57. இதுவும் அங்கு பார்வைக்காக செய்து வைக்கப்பட்டிருந்துது.. தமிழ் எழுத்துக்கள் பார்த்ததும்.. சொல்லொணா ஆனந்தம்.. உடனே படமெடுத்தேன்ன்..

    ReplyDelete
  58. சரி சரி சுசிச்சு சுசிச்சு படங்கள் பார்த்ததுபோதும்:).. இந்த மியாவ் பேஸில:)) பீஸை வச்சிடுங்க:)).. சில்லறை வாணாஅம்ம்ம்.. ஒன்லி தாள் மணீஸ்ஸ்ஸ்:)) பிளீஸ்ஸ்ஸ்:)..

    ReplyDelete
  59. அன்பான மக்களே, நான் சொல்வதெல்லாம் உண்மை! உண்மையைத் தவிர வேறில்லை!

    கடந்த 07.04.2013 அன்று - ஒரு சன்னியான ஞாயிற்றுக்கிழமை, பூஸார் குடும்பத்தினருடன் சேர்ந்து நாமும் டிசுனி லாண்ட் போயிருந்தோம்!

    அங்கு போய், முதலாவதாக ஏறியது - விண்வெளிப் பயணம் எனும் ரோலர் ஹோஸ்டில் தான்!

    நாம் பூஸாரின் பிள்ளைகளுடன் பின் வரிசையில் அமர்ந்திருக்க, பூஸாரும், அவரது கணவரும் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்!

    அப்புறம் ஒன்..... டூ... த்ரீ.....ரெடி ஜூட்ட்ட்ட்ட்ட் என்று இருளைக் கிழித்துக்கொண்டு ரோலர் ஹோஸ்ட் மின்னல் வேகத்தில் பறக்க.....,

    திடீரென்று.... முருகா, ஞான பண்டிதா...., வரைவா..., திருப்பதி வெங்கடேசா....., நல்லூர் கந்தா...... மதுரை மீனாட்சி அம்மா.... என்று உலகத்தில் உள்ள சாமி பேர் எல்லாம் சொல்லிக் கேட்டுது...!

    என்னடா இது வம்பா போய்ச்சுதே என்று பார்த்தால்...... அது பூஸார் தான்..!

    என்ன ஒரு அழுகையப்பா...!!!

    ஐயோ நான் மாட்டன்! ஐயோ நான் மாட்டன் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்திச்சினம்!:)

    பிறகு மத்தியானம் லஞ்சுக்கு சாண்ட்விச் குடுக்க.... அதற்கும் “ஐயோ நான் மாட்டன்” :) என்று பூஸார் சொல்ல,

    நமக்கு ஒரே சிரிப்புத்தான் போங்கோ :)

    ReplyDelete
  60. என்ன நல்லா டயேட் பண்ணுறீங்களோ?:) ரொம்ப வயக்கெட்டுப் போனீங்க:).. ///

    அதை ஏன் கேக்கிறீங்கள்??

    உந்த கனடா மாமியின் டொல்லை தாங்க முடியல...!

    டெயிலி 2 கிலோ மீட்டர் நடக்கட்டாம்!
    ரைஸ் சாப்பிட வேண்டாமாம்!
    சிக்கின் வாயிலையே வைக்க கூடாதாம்!
    டின்னருக்கு கால் கோப்பையில அரைவாசிதானாம் சாப்பிடட்டாம்!

    இப்படி ஏகப்பட்ட நிபந்தனைஸ்...!!!

    அதான், மன்சூர் அலிகான் மாதிரி இருந்த நான், மனோபாலா அளவுக்கு மெலிஞ்சிட்டன் :)

    ReplyDelete
  61. இதுவும் அங்கு பார்வைக்காக செய்து வைக்கப்பட்டிருந்துது.. தமிழ் எழுத்துக்கள் பார்த்ததும்.. சொல்லொணா ஆனந்தம்.. உடனே படமெடுத்தேன்ன்.. ////

    ஓம் இதைச் சொல்லியே ஆகணும்! கொக்க கோலா என்று தமிழில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! அதிலும் enjoy என்பதை, தமிழில் “ஆனந்தியுங்கள்” என்று போட்டிருந்தார்கள்!

    அப்படி ஒரு சொல்லை அன்றுதான் கேள்விப்பட்டேன்!

    ஆனந்தியுங்கள்...!! ஆகா என்ன ஒரு தமிழ் :)

    ReplyDelete
  62. டிஸ்னி லேண்டில் எடுக்கப் பட்ட இன்னும் சில படங்களை இங்கே போடுவதற்கு அனுமதிக்குமாறு, கனம் ப்ளாக் ஓனர் அவர்களை,

    அன்புடனும்,
    பண்புடனும்,
    பாசத்துடனும்,
    நேசத்துடனும்
    ஒரு முட்டை ரோல்ஸ் லஞ்சமாக கொடுத்தும்

    கேட்டுக் கொள்கிறேன் :)

    ReplyDelete
  63. அப்புறம் ஒன்..... டூ... த்ரீ.....ரெடி ஜூட்ட்ட்ட்ட்ட் என்று இருளைக் கிழித்துக்கொண்டு ரோலர் ஹோஸ்ட் மின்னல் வேகத்தில் பறக்க.....,

    திடீரென்று.... முருகா, ஞான பண்டிதா...., வரைவா..., திருப்பதி வெங்கடேசா....., நல்லூர் கந்தா...... மதுரை மீனாட்சி அம்மா.... என்று உலகத்தில் உள்ள சாமி பேர் எல்லாம் சொல்லிக் கேட்டுது...!

    என்னடா இது வம்பா போய்ச்சுதே என்று பார்த்தால்...... அது பூஸார் தான்..! ///

    ReplyDelete
  64. மாத்தியோசி மணி மணி said...
    என்ன நல்லா டயேட் பண்ணுறீங்களோ?:) ரொம்ப வயக்கெட்டுப் போனீங்க:).. ///

    அதை ஏன் கேக்கிறீங்கள்??

    உந்த கனடா மாமியின் டொல்லை தாங்க முடியல...!
    இப்படி ஏகப்பட்ட நிபந்தனைஸ்...!!!

    அதான், மன்சூர் அலிகான் மாதிரி இருந்த நான், மனோபாலா அளவுக்கு மெலிஞ்சிட்டன் :)////

    ஹா..ஹா..ஹா...உங்களுக்கு கிடைச்ச கனடாமாமியைப் போல.. எல்லோருக்கும் ஒரு மாமி கிடைச்சால்.. எல்லோரும் எங்கயோஓஓஓஓஓஓஓஓஓஓஒ போயிடுவினம்:))..

    மனோபாலா அங்கிள்போல ஆனவரைக்கும் ஓகே,,,:).. ஆனா இனியும் ஓமக்குச்சி அங்கிளைப்போலாக முன்.., ஒரு பக்கட் கே எஃப் சி வாங்கிச் சாப்பிட்டு:) டயட்டை நிறைவு செய்யலாமே:))

    .. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிறகு கனடா மாமி இதைப் பார்த்தால்ல் :) என்னையும் ஓமக்குச்சி ஆகிடுவா:) ஏற்கனவே நான் அப்பூடித்தான் இருக்கிறனாக்கும்:).


    ReplyDelete
  65. //மாத்தியோசி மணி மணி said...
    இதுவும் அங்கு பார்வைக்காக செய்து வைக்கப்பட்டிருந்துது.. தமிழ் எழுத்துக்கள் பார்த்ததும்.. சொல்லொணா ஆனந்தம்.. உடனே படமெடுத்தேன்ன்.. ////

    ஓம் இதைச் சொல்லியே ஆகணும்! கொக்க கோலா என்று தமிழில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! அதிலும் enjoy என்பதை, தமிழில் “ஆனந்தியுங்கள்” என்று போட்டிருந்தார்கள்!

    அப்படி ஒரு சொல்லை அன்றுதான் கேள்விப்பட்டேன்!

    ஆனந்தியுங்கள்...!! ஆகா என்ன ஒரு தமிழ் :)//


    கனடாமாமி ஓடிவாங்கோஓஓஓஓ:)) “ஆனந்தி...” என்பதைப் பார்த்ததும் ஆனந்தமாகுதாம் சிலருக்கு:)).. ஹையோ வச்சிட்டேன்ன் ஆப்பு:)) பூஸோ கொக்கோ:) எங்கிட்டயேவா?:)).. முருகா வெயார் ஆ யூஊஊஊஊஊஊ.. வள்ளிக்கு நவரத்தின மூக்குத்தி கன்ஃபோம்ம்.. மீயை காப்பாத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்:)))


    ReplyDelete
  66. மாத்தியோசி மணி மணி said...
    டிஸ்னி லேண்டில் எடுக்கப் பட்ட இன்னும் சில படங்களை இங்கே போடுவதற்கு அனுமதிக்குமாறு, கனம் ப்ளாக் ஓனர் அவர்களை,

    அன்புடனும்,
    பண்புடனும்,
    பாசத்துடனும்,
    நேசத்துடனும்
    ஒரு முட்டை ரோல்ஸ் லஞ்சமாக கொடுத்தும்

    கேட்டுக் கொள்கிறேன் :)///

    மணியம் கஃபே ஓனராச்சே... ச்சோஓஒ.. பெமிஸன் கிராண்டட்:)) ஆனா அதுக்கு முன் பீஸை என் பேஸில வையுங்கோ:)).. சில்லறையா வாணாம் பிளீஸ்ஸ்ஸ்:).. ஒன்லி தாள்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

    ReplyDelete
  67. ஆனா இனியும் ஓமக்குச்சி அங்கிளைப்போலாக முன்.., ஒரு பக்கட் கே எஃப் சி வாங்கிச் சாப்பிட்டு:) டயட்டை நிறைவு செய்யலாமே:)) ////

    ஆஹா என்ன ஒரு பரந்து விரிந்த மனப்பான்மை! உங்கள் வாய்க்கு லாசப்பல் செல்லப்பா கடையில டீ வாங்கி ஊத்தோணும் :) ஏனெண்டா அதுதான் நல்ல இனிப்பு :)

    கனடா மாமியின் டொல்லை தாங்கேலாமல் கடந்த 2 மாசமா நான் கே எஃப் ஸி பக்கமே போகேல!

    ஆனா இன்னிக்கு இரவைக்கு வெளுத்து வாங்கலாம் எண்டு இருக்கிறன்!

    கே எஃப் ஸி யைத்தான் :)

    ReplyDelete
  68. கனடாமாமி ஓடிவாங்கோஓஓஓஓ:)) “ஆனந்தி...” என்பதைப் பார்த்ததும் ஆனந்தமாகுதாம் சிலருக்கு:)).. ///

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ் ! நீங்கள் ஆனந்தி எண்டு சொல்லத்தான் எனக்கு நினைவுக்கு வருது............

    1998 ம் ஆண்டு, நான் படிச்சுக்கொண்டு இருக்கேக்க..............,

    வேணாம்! இப்ப எதுக்கு அந்த நாள் ஞாபகங்கள்????

    ReplyDelete
  69. ஆனா அதுக்கு முன் பீஸை என் பேஸில வையுங்கோ:)).. சில்லறையா வாணாம் பிளீஸ்ஸ்ஸ்:).. ஒன்லி தாள்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. ///

    அதுக்கென்ன? இதோ நீங்கள் கேட்ட தாள் காசு! இது கனடா மாமி, ஒரு ஞாபகத்துக்கு தந்தவ! ( இப்படிக் காசு எல்லாம் தராட்டி நான் அவவை மறந்தெல்லோ போடுவன்! அதான் தந்தவ )

    ReplyDelete
  70. இனி டிஸ்னி வேர்ல்ட் படங்களுக்கு வருவம்!

    இது பார்த்தவுடன் பிடித்துப் போன அழகிய பூ மரங்கள்! இதன் வடிவமைப்பு சூப்பரா இருக்குல்ல!!

    ReplyDelete
  71. விண்வெளிக்குப் போகலாம் வாங்கன்னு சொல்லி, பூஸாரை சாமியாராக்கிய அந்த ரோலர் இவர்தான் :)

    ReplyDelete
  72. பழங்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் மரவீடுகள், மாடு, குதிரை வண்டில்கள், பழைய ரெயில்வே நிலையம் இப்படியான அம்சங்கள் நிறைந்த FRONTIERLAND ன் ENTERENCE !

    ReplyDelete
  73. டிஸ்னியில் மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடிக்கொண்டிருந்த இரண்டு தமிழ் சிறுவர்கள்!

    -- இவர்கள் யார் என்பதை பூஸாரிடம் கேட்கவும் --

    ஐய்ய்ய் ஜாலி ஜாலி...! பூஸார் செம மாட்டி :) :)

    ReplyDelete

  74. டிஸ்னி வேர்ல்டைச் சுற்றி ஓடும் அழகிய, சூப்பர் ரெயின்! இதில் ஏறி அமர்ந்தால் டிஸ்னி வேர்ல்டை சுற்றி வரலாம்! அதுவும் உயரத்தில்....!!


    இத்துடன் படம் காட்டும் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெறுகின்றன! மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில் வந்து படம் காட்டும்வரை விடைபெறுவர்..............,

    நான் தானுங்கோ :)

    ReplyDelete
  75. மாத்தியோசி மணி மணி said...


    இத்துடன் படம் காட்டும் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெறுகின்றன! மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில் வந்து படம் காட்டும்வரை விடைபெறுவர்..............,

    நான் தானுங்கோ :)///

    உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆஆ.. போஓஓஓஓஓஓயிட்டாராஆஆஆஆஆ?:)) கன்ஃபோமா?:) ஆ.. இனி மீ கீழ இறங்கலாம்ம்ம்:))...



    நல்ல தெளிவான அழகிய படங்கள் மணி... பகிர்ந்துகொண்டமைக்கு மியாவும் நன்றி.


    ReplyDelete
  76. அதிராக்கா நலமா ?

    டிஸ்னி ப்ரீயா சுத்து காமிச்சுட்டீங்க..எல்லா இடத்துலயும் ஒரே மாதிரி தான் போல...

    ReplyDelete
  77. வாங்கோ ரெவெரி வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆர் சொன்னது ஃபிரீ என:).. பீஸை அனுப்பிடுங்க..:)..

    இன்னும் இருக்கு ரெவெரி.. அனைத்தையும் காட்டாமல் விடமாட்டேனே.. :)

    மியாவும் நன்றி ரெவெரி.

    இல்ல, இது டிஸ்னி எனும் பெயருக்கு பேமஸ்.. மற்றும்படி லண்டன் தோப் பார்க் பெரிசு என்பேன்ன்..

    ReplyDelete
  78. //Still... on the way? karrrrrrrrrrrrrrrrr:))..// We came back on Monday night Ms.MiyavBear! :)

    We live near to the disney land, California! Its been more than 2 years we visited. Thanks for the Disney land tickets. ;)

    Nice post with nice clicks!

    ReplyDelete
  79. http://gopu1949.blogspot.in/2013/05/1.html

    இது ஒன்று நடுவில் விட்டுப்போச்சு.
    மின்னல் மியாவின் தகவலுக்காக.

    ReplyDelete
  80. ஸ்வீட் 16 ...!! பார்க்க..!!!

    https://www.google.co.in/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&source=lnms&tbm=isch&sa=X&ei=1husUe2EAcb5rAfw0oGwBQ&ved=0CAoQ_AUoAQ&biw=822&bih=442

    ReplyDelete
  81. Mahi said...//

    We came back on Monday night Ms.MiyavBear! :) //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மியாவ்பெயாரை பார்க்கக்கூடாதெனச் சொல்லியும் கள்ளமாப் பார்த்த குற்றத்திற்காக டிசுனி:) ரிக்கெட் கான்சல்ட்ட்ட்ட்:))..

    ஓ அநீங்க அங்கினயா இருக்கிறீங்க.. சூப்பர்ர்.. எங்கட நெருங்கின ஒரு சொந்தமும் அங்கிருக்கினம்... :))

    மியாவும் நன்றி திங்கள் இரவே திரும்பி வந்தமைக்கு:)))))).. ஹா..ஹா..ஹா...

    ReplyDelete
  82. Siva sankar said...
    :) .../\///

    வாங்கோ சிவா வாங்கோ.. நீங்க வந்தால் றீச்சர் வாறாவில்லை:)) றீச்சர் வந்தால் நீங்க வாறேல்லை:) என்ன நடக்குதிங்க..


    ஆஆஆஆஆஆஆஅ வழி விடுங்கோ வழிவிடுங்கோ... மீ ஓடோணும்:))...

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  83. வை.கோபாலகிருஷ்ணன் said...
    http://gopu1949.blogspot.in/2013/05/1.html

    இது ஒன்று நடுவில் விட்டுப்போச்சு.
    மின்னல் மியாவின் தகவலுக்காக.///

    மின்னல் வந்து போயிடிச்சி:)).. மிக்க நன்றி கோபு அண்ணன்.

    ReplyDelete
  84. இராஜராஜேஸ்வரி said...
    ஸ்வீட் 16 ...!! பார்க்க..!!!///

    ஹா..ஹா..ஹா... இந்த விஷயம் ஊருக்குத் தெரியாது:) உங்களுக்கும் எனக்கும்:)).. + உங்கட பின்னூட்டம் பார்த்தோருக்கு மட்டும்தேன்ன் தெரியும்:))..

    மியாவும் நன்றி ராஜேஸ் அக்கா.

    ReplyDelete
  85. ;))))) எல்லாவற்றிற்கும் மியாவுக்கு மிக்க நன்றி.

    மீண்டும் அதிராவின்[பேரன்/பேத்தி??] இரட்டையரைப் பார்க்கணும் போன்ற ஆசையில் இங்கு ஓடிவந்தேன்.

    ஆசைதீரப் பார்த்து விட்டேன். மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

    என் புதிய தொடரில் பின்னூட்டமிட்டுள்ள் யாருக்குமே நான் பதில் தர ஆரம்பிக்கவில்லை அதிரா.

    அதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன.

    இந்தத்தொடர் முடிந்தபிறகு, வெளியிடப்படும், என் எல்லாப்பதிவுகளுக்கும் வழக்கம்போல எல்லோருக்கும் விரிவான பதில்கள் தருவேன்.

    மியா கோச்சுக்கொள்ளக்கூடாது, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  86. அதுசரி புதுப் பதிவு போடுற நோக்கம், சிந்தனை, ஐடியா ஏதாச்சும் இருக்கோ என்று கேட்டுச் சொல், அமேஷன் காட்டு, பச்சைப் பாம்பே!!!!

    ReplyDelete
  87. ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆ .... டிஸ்னி வேல்ட் சுத்திப் பார்த்து மூச்சுவாங்ஸ்..... பூஸார் அதோட கொஞ்சம் கொக்ககோலாவும் சப்ளை பண்ணியிருக்கலாம்... சூப்ப்ப்ப்பர் டூர்.... நன்றி அதிரா..... :))

    ReplyDelete
  88. கடைசிப்பெட்டியிலாவது ஏறி டிஸ்னியை சுற்றிபார்த்தாச்சு. அழகா இருக்கு. நாங்க அப்ப டிஸ்னிக்கு போகத்தேவையில்லை.இலவசமா இங்கே பார்த்தாச்சு.நன்றி.

    ReplyDelete
  89. வாங்கோ கோபு அண்ணன்.. நான் எதுக்கு கோபிக்கப் போறேன்ன்:) ஆனா உங்கட வழக்கு கோர்ட் படி ஏறிடுச்சு:) அதனால திருச்சி வீட்டை அடவு வச்சாவது பிரித்தானியா நீதிமன்றத்தில ஆஜராகிடுங்க:)..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி.

    ReplyDelete
  90. வாங்கோ மாட்ஜி ஓசி.. மண்யம் கஃபே ஓனர்:)) அப்பாடா பெயர் சொல்வதுக்குள்.. நாக்கு சுழுக்குதே:))..

    தயவு செய்து “ப” நா.. “பா”.. நா இந்த ரெண்டு எழுத்தையும் உச்சரிச்சிடாதீங்க பிளீஸ்ஸ்ஸ்:))..

    பதிவு போட்டிட்டேன்ன்ன்:) பூஸோ கொக்கோ:))..

    மியாவும் நன்றி மாட்ஜி ஓச்ச்ஜி மனீ:).

    ReplyDelete
  91. வாங்கோ பூங்கோதை வாங்கோ.. நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கிறீங்க ... சந்தோஷம்.. இன்னும் ரூர் இருக்கு.. வடிவா சுத்திப் பாருங்கோ.. முடிவில .. எலிபண்ட் பிராண்ட் நெக்டோ தருவன்:)..

    மியாவும் நன்றி கோதை.

    ReplyDelete
  92. வாங்கோ அம்முலு வாங்கோ.. நலம்தானே?.. நீங்க போகோணும் கட்டாயம்.. அந்த நான் ஏறிய ரோல ஹோஸ்டரில ஏறி, கத்தாமல் இருந்து இறங்கி வரோணும்:))..

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  93. ஓசியில நாங்களும் சுற்றிப் பார்த்தாச்சுது, தாங்ஸ் அதீஸ். அருமை.

    ;)) எந்த ரீச்சரை நான் கூப்பிடுவேன்!! இப்பவும் இமா க.கா.போ.... ;))))

    ReplyDelete
  94. ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ இமா வாங்கோ... நியூஷிலாண்டில் இருந்துகொண்டே.. பிரித்தானியாவின் 100 ஐத் திட்ட இமாவுக்காக இப்பரிசு:).. மியாவும் நன்றி இமா..... :)) என்னாது என் எழுத்தில் பிழையோ?:)நோஓ இருக்காதூஊஊஊஊஊஉ:) அப்படி எதுவும் ஈக்காதூஊஊ ஈக்கவும் கூடாதூஊஊஊஊ:))

    ReplyDelete
  95. ;)) மிச்சத்தைச் சொல்ல முதல் ரோஸை வாங்கி... காம்பை முறிச்சுப் போட்டு வைச்சுக் கொள்ளுவம். தாங்ஸ் அதீஸ்.

    என்னது!! திட்டவோ!! ;)))

    ReplyDelete
  96. ஹா..ஹ..ஹா... தொ நா:)) தி நாவாகிட்டுது:))..

    என்னாது காம்பை முறிச்சுப் போட்டோ?:)) நோஓஓஓஓஒ மீ “அண்ணா பற்பொடி” போட்டு:) பல்லுத்தீட்டி, சுவிங்கமும் சாப்பிட்டுப் போட்டுத்தான் கடிச்சதாக்கும்:).. ஐ மீன் காம்பை:)

    ReplyDelete
  97. You mean.. The நா!! ;))

    எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? ;))

    ReplyDelete
  98. //இமா said...
    You mean.. The நா!! ;)) ///

    ஹையோ முச்சந்தி முனீஸ்வரா என்னைக் காப்பாத்துங்கோ:)).. நான் றீச்சர் எங்கே இதை எல்லாம் படிக்கப்போறா எண்டெல்லோ நினைச்சேன்ன்ன்:))).. அது நாஆஆஆஆஆஆ இல்லை ...னா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ:)))) ச்ச்சே..சே... ஆசைக்கு ஒரு “நா” எழுத முடியுதா இங்கின?:))

    ReplyDelete
  99. _()_ ;)))

    ஒரு கூட்டுத் தேனீ முழுக்க உள்ள போகலாம் போல இருக்கே!!! ;))))

    ReplyDelete
  100. ரொம்ப அழகாக இருக்கு ஓசியில் ஊர் சுற்றி காண்பித்தமைக்கு ரொம்ப தாங்க்ஸ்

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.