நல்வரவு_()_


ஹா ஹா ஹா:)

Thursday, 19 October 2017

அன்புள்ள ஜெபா ஆன்ரிக்கு:(

உங்கள் ஆத்மா அமைதியடையவும், நிம்மதியான உறக்கம் கொள்ளவும் ...நாம் பிரார்த்திக்கிறோம்.

இமாவின் அம்மா , ஜெபா ஆன்ரி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் எனக் கேட்டதிலிருந்து பல பழைய நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது..

2008 ஆம் ஆண்டென நினைக்கிறேன், அறுசுவைத் தளத்தில், ஜெபா எனும் பெயரோடு ஒருவர் வந்து, இடைக்கிடை ஒரு வரிக் கொமென்ட்ஸ் போடுவார், என் எழுத்துக்களை ரசிப்பார், அப்போ நான் நினைச்சேன் குட்டிப் பெண்ணாக இருப்பா என, ஜெபா ஜெபா என அழைத்தேன்... பின்னர் சில காலங்களின் பின்புதான் தெரிந்தது அவ இமாவின் அம்மா என...
அன்றிலிருந்து மனம் சங்கடமாகி விட்டது இவ்வளவு பெரிய ஒருவரையா பெயர் சொல்லி அழைத்தேன் என, பின்பு ஜெபா ஆன்ரி எனக் கூப்பிடத் தொடங்கினேன்.

அவவும் ஒரு புளொக் வைத்திருந்தா, அங்கும் நாம் போய் அவ போடுவதை எல்லம் ஊக்கப்படுத்துவோம்,  2010,11 இலிருந்து அவவுக்கு முடியாமல் போய் விட்டது எழுதுவதை நிறுத்தி விட்டா என நினைக்கிறேன்...

இப்போ இந்த மாதம் இமா புதுப் போஸ்ட் போட்டபோது, முதலாவதாக ஜெபா ஆன்ரி நலமோ எனத்தான் கேட்டேன், இல்லை அதிரா:(, இனி அவ நலமாவா எனச் சொல்ல முடியாது என்றா, சொல்லி ஒரு மாதம் கூட முடியவில்லை, ஜெபா ஆன்ரி மறைந்திட்டா...

ஜனனம் என்ற ஒன்று இருப்பின் மரணம் என்பதும் இருக்கும் தானே, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனத்தைரியத்தை அனைவரும் வளர்த்துக் கொள்வோம்..

ஜெபா ஆன்ரி கெவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும், இமாவின் மனம் ஆறுதல் பெறவும் வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

"ஆண்டாண்டு தோறும், அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ?"

எனக்கு என்ன எழுதுவது எப்படி எழுதுவது என தெரியவில்லை, மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன், என் கொம்பியூட்டர் வேறு மூட் ஓவ் ஆகி இருக்கு , அதனால எழுதுவதும் கஸ்டமாக இருக்கு, இப்பதிவை தமிழ் மணத்தில் இணைக்கிறேன், ஆனால் யாரும் இம்முறை இப்போஸ்ட்டுக்கு வோட் போட வேண்டாம்...
நன்றி,
அதிரா.

21 comments :

 1. //ஜெபா ஆன்ரி கெவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும், இமாவின் மனம் ஆறுதல் பெறவும் வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...//

  நானும் பிரார்த்திக்கிறேன்.

  நட்பின் பிரிவு வருத்தம்தான்.

  ReplyDelete
 2. அன்னாரின் ஆன்மா இறைபதம் அடைய பிரார்த்திப்போம் !

  பிரிவால் துயருறும் இமாவுக்கும் அவர்களது உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

  மன்னிக்கவும் பூஸ் முதலில் வாக்குப் போட்டு விட்டுத்தான் வாசிக்காத தொடங்கினேன் !

  ReplyDelete
  Replies
  1. பறவாயில்லை மேஜரே... பழக்கதோசத்துக்கு நன்றி.

   Delete
 3. வருத்தமான செய்தி அவரின் ஆன்மா அமைதி பெற பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி:)..

   Delete
 4. May Her soul rest in peace .செபா ஆன்டியின் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திப்போம் .இந்த கடினமான வேளையில் இறைவன் எல்லா ஆறுதலையும் இந்த துக்கத்தை தாங்க இமாவுக்கும் ஆன்ட்டியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தரவும் வேண்டுகிறேன்

  ReplyDelete
 5. ஜெபா அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். இமாடீச்சர் இத்துயரில் இருந்து விடுபடவேண்டி பிரார்த்திக்கின்றேன்.

  ReplyDelete
 6. அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 7. ஜனனம் என்ற ஒன்று இருப்பின் மரணம் என்பதும் இருக்கும் தானே, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனத்தைரியத்தை அனைவரும் வளர்த்துக் கொள்வோம்..//

  மிக மிக உண்மையான வரிகள் அதிரா.

  //ஜெபா ஆன்ரி கெவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும், இமாவின் மனம் ஆறுதல் பெறவும் வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...//

  எங்கள் பிரார்த்தனைகளையும் இணைத்துக் கொள்ளுங்கள்! ஆழ்ந்த அஞ்சலிகள். அக்குடும்பத்தாருக்குத் தாங்கும் சக்தியை இறைவன் நல்குவாராக.

  எனக்கு என்ன எழுதுவது எப்படி எழுதுவது என தெரியவில்லை, மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன், என் கொம்பியூட்டர் வேறு மூட் ஓவ் ஆகி இருக்கு , அதனால எழுதுவதும் கஸ்டமாக இருக்கு, இப்பதிவை தமிழ் மணத்தில் இணைக்கிறேன், ஆனால் யாரும் இம்முறை இப்போஸ்ட்டுக்கு வோட் போட வேண்டாம்... //

  நீங்கள் மிக அழகாக உங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உண்மையான உணர்வு.

  நாங்கள் இது போன்ற அஞ்சலிப் பதிவுகளுக்கு என்றுமே ஓட்டுப் போடுவதில்லை அதிரா. அதை வழக்கமாகவே கொண்டுள்ளோம்.

  மீண்டும் எங்களது அஞ்சலிகள் பிரார்த்தனைகள்.  ReplyDelete
 8. அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திபோம்....

  ReplyDelete
 9. நான் இறந்துட்டா மூட் அவுட்டாகிவிட்டது அதனால மதுரைத்தமிழனை பற்றி என்ன எழுதுவது என்று தெரியவில்லை என்று சொல்லி இப்படி சின்ன பதிவுகாக போட்டுடாதீங்க....


  எனக்கு எல்லாம் பெரிய பதிவா போடனுமாக்கும் அதனால இப்பவே எழுத ஆரம்பிச்சுடுங்க


  அப்படி எழுதியதை எனக்கு காண்பிச்சுடுங்க இல்லைனா நான் இறந்தப்பிறகு நீங்க எழுதினதை என்னால் படிக்க முடியாது

  ReplyDelete
  Replies
  1. கண்ணதாசன் இப்படி 'தான் இறந்த செய்தியை'ப் பரப்பி, எம்.எஸ்.விசுவனாதன் அடித்துப்பிடித்து வீட்டுக்கு வந்தபோது, உயிரோடு காட்சிகொடுத்தார். அந்த ஆசை உங்களுக்கு எதுக்கு?

   பூரிக்கட்டை சுவற்றில் பட்டு கீழே விழுவதாக ஒரு கார்டூன் போட்டால் பத்தாதா?

   Delete
 10. ஆன்மா அமைதி பெற பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 11. >>> ஜனனம் என்ற ஒன்று இருப்பின் மரணம் என்பதும் இருக்கும் தானே, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனத்தைரியத்தை அனைவரும் வளர்த்துக் கொள்வோம்..<<<

  இறைநிழலில் ஆன்மா சாந்தியடையட்டும்..

  ReplyDelete
 12. வருத்தம்... இறைவனடி அடைந்திருப்பார் நலமாய் நம்புவோம்... வேண்டிக்கொள்வோம்

  ReplyDelete

 13. ///ஜெபா ஆன்ரி கெவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும், இமாவின் மனம் ஆறுதல் பெறவும் வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...///


  எங்களின் பிராத்தனைகளும்.....

  ReplyDelete
 14. இமாவிற்கு செபாஅம்மாவின் இழப்பு ஈடு செய்யமுடியாதது. தாங்கும் சக்தியை இறைவன் அவாவுக்கும்,குடும்பத்தினருக்கும் கொடுக்கவேண்டும். செபா அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 15. எனக்கு ரெம்ப பிடிச்ச அம்மா மகளை பிரிச்சு கடவுள் எடுத்துக்கொண்டது மிக வருத்தமே .கடந்த சில நாட்களாக எனக்கு பேஸ்புக் போகவே பிடிக்கவில்லை .அங்கு போவதே இம்ஸ் ம் இன்னும் வெகு சிலருடன் பேசுவதற்குத்தான்.செபாம்மா இம்ஸ் ,க்ரிஸ் அங்கிள் எல்லோருக்கும் என் அன்பு .இம்ஸ் ஐ மறுபடி பார்க்கும்போது இறுக கட்டி ஒரு முத்தம் வைப்பேன்

  ReplyDelete
 16. ஜெபா அன்ரி க்காக அஞ்சலி செலுத்தியும் பின்னூட்டங்கள் கொடுத்த அனைவருக்கும் அதிராவின் நன்றிகள்_()_

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.