நல்வரவு_()_


Wednesday, 25 October 2017

ஒரு கிடாயின் கருணை மனு:)


து என்ன தலைப்பே புதுசா இருக்கே எனத்தானே ஓசிக்கிறீங்க:).. இப்போ சமீபத்தில, இந்தமாதம் தானாக்கும் வெளி வந்த கிடாய்:)...
சினிமா விமர்சனம் எழுதி கனநாளாகுதே.. அதிராவுக்கு சினிமா விமர்சனமும் எழுதத்தெரியும் என நினைச்ச நீங்களெல்லாம்,.. இப்போ மறந்திருப்பீங்களே.  என்ன இது நீண்ட நாளாகுதே.. அதிராவின் விமர்சனத்தைக் காணல்லியே எனும் கவலையில் இருப்பீங்க:).. அக்கவலையைப் போக்கவே இவ் விமர்சனம்:).

நான் எப்பவுமே தலைப்பு நல்லா இருந்தால் மட்டுமே உள்ளே போவேன்,  அப்படித்தான், இது தலைப்பு வித்தியாசமாக இருக்கே எனத் திறந்து,பார்க்கத் தொடங்கினால், 2 மணி நேரம் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை.. அவ்ளோ விறுவிறுப்பாகப் போச்சுது.

ரி மட்டருக்கு:) வருவோம். நடிகர்கள் பெயர் கேய்க்கக்கூடாது ஆரும்:) அதெல்லாம் தெரியாது... தெரிந்தவர்கள் எனச் சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை.. இருவர் மட்டுமே கொமெடிக்கு வருவோர் அதில் இருக்கிறார்கள். எழுத்து ஓடி முடிஞ்சுதா:)... படம் ஆரம்பம்...

ல்ல அழகிய கிராமப்புறச் சூழலில் ஒரு குடும்பத்தில் மகனுக்கு திருமணமாகி மருமகளை வீட்டுக்கு கூட்டி வந்திருக்கினம்.

வீட்டில் இருக்கும் வயதானோருக்கு, குறிப்பாப் பாட்டி மாருக்கு வேலை, ஆ எண்டாலும் ஊ எண்டாலும் கடவுளுக்கு நேர்த்தி வச்சுப் போடுவினம், பின்பு அதைச் செய்யச் சொல்லி நம்மை விடமாட்டினம்:).

ப்படித்தான் இந்த வீட்டுப் பாட்டியும் கலியாணம் நல்லபடி முடிஞ்சால் வீட்டில் வளர்க்கும் கிடாயை, தங்கள் குல தெய்வமான ஐயனாருக்கு, கிடாய் அடிச்சு தம் ஊர் மக்களைக் கூட்டிச் சென்று சமைச்சுக் குடுப்பதாக நேர்ந்திட்டா(இக்காலத்திலும் இவ்வழக்கம் இருக்கோ தெரியல்ல வியப்பாகவும், மிக கஸ்டமாகவும் இருந்துது)....ok ..நோ கார்ட் பிலிங்ஸ்.. தொடர்ந்து படிங்கோ:)

திகாலை எல்லோரும் எழுந்து குளிச்சு வெளிக்கிட்டு, ஒரு ட்றக் ஹயர் பண்ணி, அதில் அந்த ஊர்க்காரர் எல்லோரும் கிட்டத்தட்ட 30,35 பேர் ஏறி, கிடாய்ப்பிள்ளையையும் ஏத்தியாச்சு.. அத்தோடு சமையல் பாத்திரங்கள், இட்லி அவிக்க, உப்புமா செய்ய என, ஒரு தொகை உணவுகள் ... கிட்டத்தட்ட ஒரு சுற்றுலாவைப்போல ரெடியாக்கியாச்சு.

முன் சீட்டில், ட்றைவரோடு பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஏத்தியாச்சு... ட்றைவர் ஓடிக்கொண்டிருக்கிறார்... முழுக்க முழுக்க காட்டுப்பாதை, காடு தவிர வேறேதும் இல்லை. இடையில்
புதுப்பெண்ணுக்கு ஒரு ஆசை வந்து, தன் கணவரை ஓட்டச் சொல்லிட்டா, கஸ்டகாலம் அவர் ஓடும்போது, சைக்கிளில் வந்த ஒருவர் முன் ரயரோடு அடிபட்டு இறந்து விடுகிறார்... .

ளுக்கு அடிபட்டதாகவோ அல்லது காயமோ இல்லை ஆனா இறந்துவிட்டார். உடனே எல்லோரும் கீழே இறங்கி, பார்த்தால் அக் காட்டில் நடுவில் ஒரு 4 கால் மண்டபம் போல ஒன்று இருந்தது, பிரயாணிகள் தங்கிச் செல்வதற்கான ஒரு மண்டபம்..., அதில் எல்லோரும் போய் இருந்து, அக் கிடாய்ப்பிள்ளையையும் காட்டில் கட்டிக் குழை சாப்பிட விட்டாச்சு.

டம் முழுவதும் அக்காட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கு, கொமெடிக்கு அளவில்லை... நல்ல இன்றஸ்ரிங்காகவும் கொமெடியாகவும் போகிறது படம்,,,

ப்போ பிரச்சனை, அந்த உடலை என்ன பண்ணலாம் என்பதுதான், அதிகாலை வெளிக்கிட்டு, இப்போ இரவாகிட்டுது, அந்த மண்டபத்திலேயே உப்புமா செய்து எல்லோரும் சாப்பிட்டாச்சு. எல்ல்லோரும் கூடி, அந்த உடலைப் புதைச்சுப்போட்டுப் பேசாமல் போய் விடலாம் என முடிவெடுத்து, உடலைத் தூக்கிக்கொண்டு நடுக்காட்டுக்குள் போய், கிடங்கு வெட்டிய வேளை... யாரோ வரும் அரவம் கேட்டு எல்லோரும் சிதறி ஓட, இருவர் மட்டும் உடலையும் தூக்கிக் கொண்டு மீண்டும் மண்டபத்துக்கே வந்தாச்சு:)..
விடிய விடியக் காவல் இருந்து ஒரு உறவுக்கார வக்கீலை அழைக்கின்றனர்...

க்கீல் வந்து சூப்பராக ஐடியாக்கள் கொடுப்பார்... ஒரு வக்கீல் எப்படி எல்லாம் சிந்திப்பார் என்பது அழகாகக் காட்டப்படுது.... அந்த உடலை ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டு, இருவர் இருவராக ரேன் எடுத்துப் பாதுகாப்பார்கள்..

துக்குள் குட்டிக் குட்டியாக நிறையச் சம்பவங்கள் அத்தனையும் நகைச்சுவை.... இடைக்கிடை அந்தக் கிடாயையும் காட்டுவினம்:)...
முடிவில் 2 நாட்களாகி கோயிலுக்கும் போக முடியாமல் பொலிஸ் வந்து அனைவரையும் அப்படியே ட்றக்கில் ஏற்றி பொலிஸ் ஸ்டேஷன் அழைப்பார்கள்...

ப்போ பாட்டி கத்துவா, நேர்ந்த கிடாயை திரும்ப வீட்டுக்கு எடுத்துப் போகக்கூடாது தெய்வக் குற்றமாகிடும், அதனால அவிட்டு விட்டிட்டு வாங்கோ என:)... கிடாய் காட்டில் அவிட்டு விடப்படும்:)...

குற்றவாளி புதுமாப்பிள்ளைதானே.. அப்போ முடிவு என்ன என்பதைக் கறுப்புத்:) திரையில் பார்த்து மகிழவும்... இடையில் ஒரே ஒரு கட்டம் அந்த இறந்தவரின் தாய் வந்து அழும் காட்சி மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாமோ என நினைக்கிறேன்.. தாய் அழும்போது ஊரே கூடி அழும்...

டம் பார்க்க விரும்புவோர் என்னை நம்பிப் பார்க்கவும்:) சூப்பரான காட்டுப்பகுதி, முழுக்க முழுக்க நகைச்சுவை... சரி பார்த்திட்டு பிடிக்காவிட்டால் என்னைத் தேட வேண்டாம்.. இனி என்னைக் கண்டு பிடிக்க முடியாதே:)  விரதம் இன்றோடு முடிஞ்சுதே... நாளை பாறணை:).. இனி நான் தேம்ஸ் லதான் ஒளிப்பேன்:)..

ஊசிக்குறிப்பு:
என் கொம்பியூட்டர் இல்லாமையால், என்னால வழமையான போஸ்ட் போல போட முடியவில்லை, அதனால தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்...  நீண்ட காலம் ஆகுதே என நினைச்சே கஸ்டப்பட்டு இதைப் போடுகிறேன்..

ஊசி இணைப்பு:
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
"உங்களுக்குப் பேசவும் சிரிக்கவும் நேரமில்லை எனில், நீங்கள் கட்டாயம் தவறாக வாழ்ந்து வருகிறீங்கள்"... ippadikku :புலாலியூர்ப் பூஸானந்தா
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

99 comments :

  1. நானே முதல் :)
    எப்பவும்போல கமெண்ட் மட்டும் ரிவர்ஸ் ஆர்டரில் வரேன் :)
    அந்த புலாலியூர் பூசானந்தா தத்துவம் செம :)
    நானெல்லாம் ஜாலி டைப் :) பேசிட்டே இருப்பேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு.... முதலாவதா வந்திருக்கிறீங்க உங்களுக்கு ஒரு கிடாய்க் குட்டி இலவசம்:)..

      இங்கு டெய்சிப்பிள்ளை என்னை கொமென்ட்ஸ் போட விடுறாவில்லை, கையைக் கடிச்சு செயாரில் ஏறி, குறுக்கே குறுக்கே நடக்கிறா.. தன்னோடு விளையாடட்டாம்ம்ம் கர்ர்ர்:).

      Delete
  2. துடுப்பு நீரில் மூழ்கினா நதி சேர்க்கும் சரி அப்போ படகில் ஓட்டை விழுந்தா என்னாகும்னு கேட்டு சொல்லுங்க :)

    ReplyDelete
    Replies
    1. தியானம் பண்ணும்போது கடவுளோடு ஐ கொன்டக்ட் வைப்பேன்:) அப்போ கேட்டுச் சொல்றேன்:)... அநேகமா படகை மாத்தத்தான் சொல்வார் என நினைக்கிறேன்:)..

      Delete
    2. தியானம் பண்ணும்போது ஐ காண்டாக்ட் :) கர்ர்ர் கண்ணு மூடினா எப்படி கான்டக்ட்டா முடியும் :))

      Delete
    3. அதுதான் குழந்தாய்:) ஆழ்நிலைத் தியானம்:) இது உங்களுக்கு இந்த வருசம் 80 ஆவது பிறந்ததினம் வந்தாலும் புய்யாது:).. haa haa haa:).. அதிராவைப்போல ஞானியாக்கி:) அடிக்கடி காசிக்குப் போய் வரோணுமாக்கும்:)..

      நோகாமல் நொங்கெடுக்கப்பார்க்கினம் முருகா கர்ர்ர்ர்ர்:)..

      Delete
  3. ஹையோ இம்முறை புது படமா :) நான் நினைச்சேன் எதோ சரத்பாபு படம் ரிவ்யூ வரப்போதுன்னு .

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஓம் என்ன? கொம்பியூட்டர் சேட்டை பண்ணியதால் அதை மறந்தே போயிட்டேன்ன்... அது கதை பார்த்திட்டேன் படப்பெயர் மறந்திட்டனே.. கில்லர்ஜியிடம் தான் கேட்டு நினைவுபடுத்திக் கொண்டு எழுதோணும்:).. விடமாய்ட்டேன்ன்ன்.. ரிவியூ எழுதி எல்லோரையும் படம் பார்த்து அலறி ஓடும்வரை விடவே மாட்டேன்ன்:)

      Delete
  4. அழகா ரிவ்யூ எழுதியிருக்கீங்க :) நிறைய நகைச்சுவை காட்சிகள் இருக்கும்போலிருக்கு ஆனா this is not my cup of tea :)
    எனக்கு சின்ன வயசில் இருந்தே எந்த படம்னாலும் அதில் கதாநாயகன் படத்துக்கு மாலை போட்டாலும் அந்த படத்தில் ஒரு புறாவுக்கு கூட அடிபடக்கூடாதுனு நினைப்பேன் :) அதனால் படம் பார்த்தவர்களை வறுத்தெடுத்து எல்லாம் எனக்கு ஓகேன்னாதான் பார்ப்பேனாக்கும் :)

    ReplyDelete
    Replies
    1. நான் படம் கொஞ்சம் ஆரம்பிப்பேன்.. நல்லா இருந்தால் ஓகே இலையெனில் ஓட விட்டுப் பார்ப்பேன்.. அப்பவும் சரியில்லை எனில் வெளியே வந்திடுவேன், மற்றும்படி அலசி ஆராய்ந்து பார்க்க எல்லாம் நேரமுமில்லை... படப்பெயர் தெரிஞ்சால்தானே அதுபற்றி அலச முடியும்.

      ரேடியோவில் ஏதும் நல்ல பாட்டுப் போனால்,, உடனே அது எந்தப் படம் எனத் தேடிக் கண்டு பிடிச்சுப் பார்ப்பதும் உண்டு... மனிதர்கள் பலவிதம்..:) அதில அதிரா ஒரு விதம் ஹா ஹா ஹா:).

      படத்தில் பெரிதாக எதையும் சீரியஸாக எடுக்கக்கூடாதஞ்சு.. பொழுதுபோக்குத்தானே...

      Delete
    2. அது ஒண்ணுமில்லை :) சில நேரம் எமோஷனலாகிடுவேன் pets அனிமேல்ஸ் பார்த்து ..

      Delete
    3. அப்போ மீயைப் பார்த்தால்ல்ல்????:)... சரி சரி முறைக்காதீங்க:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)...

      Delete
    4. ஹாஹா :) நீங்களும் பெட்ஸில் சேர்த்தி தான் :) எனக்கென்னமோ உங்களை ஹியூமனாவே நினைக்க தோணல்ல

      Delete
    5. ஒரு வால் இருந்தா நல்லா இருந்திருக்கும் ஹா ஹா ஹா:).. டெய்சி பிடிச்சுப் பிடிச்சு விளையாடுவா:)...

      Delete
  5. //நான் எப்பவுமே தலைப்பு நல்லா இருந்தால் மட்டுமே உள்ளே போவேன், அப்படித்தான்,//
    கர்ர்ர் நான் இதில் அப்படியே ஆப்போஸிட் :) ட்ரெய்லர் பார்த்து அப்புறம் 10 ரிவ்யூஸ் பார்த்தே மனசுக்கு திருப்தினா மட்டும் படம் பார்ப்பேன்

    ReplyDelete
    Replies
    1. இரு கொமென்ட்ஸ் உம் என் கண்ணுக்கு ஒன்றுபோல தெரிஞ்சுதே:) அதனால மேலேயே பதில் கொடுத்திட்டேன்ன்:).. ஜொந்தக் கொம்பியூட்டர் இல்லாமையால் படும் பாடு:).. haa haa haa..

      Delete
  6. //அந்த உடலை என்ன பண்ணலாம் என்பதுதான், அதிகாலை வெளிக்கிட்டு, இப்போ இரவாகிட்டுது, அந்த மண்டபத்திலேயே உப்புமா செய்து எல்லோரும் சாப்பிட்டாச்சு.//

    அவ்வ் டெட் பாடி வச்சிக்கிட்டு உப்புமாவா :)

    ReplyDelete
    Replies
    1. அது மட்டுமோ அடுத்தநாள் காலையில் இட்லி:).. ஹா ஹா ஹா ..

      அதுசரி, புறாவை, கிடாயை எல்லாம் பற்றிக் கவலைப்படும் நீங்க... இங்கு ஒரு மனிதர் முடிஞ்சிட்டார்ர் அதுபற்றிக் கொஞ்சம்கூடக் கவலையில்லாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

      இறைவா இப்பூடி ஆட்களோடெல்லாம் ஏன் என்னை நட்பாக்கி வச்சிருக்கிறாய்:) அடுத்த பிறவியில் என்னைத் தேம்ஸ் நதியாக்கிவிடு:)....

      Delete
    2. ஆமா அங்கே கூட்டமே கவலையில்லாம உப்புமா இட்லி எல்லாம் சாப்பிட்டிருக்காங்க :) அவங்களை கேளுங்க அப்புறம் நதி ஓடை கடல் எல்லாமுமாகலாம் :) எல்லா பிளாஸ்டிக் குப்பை உங்ககிட்டத்தான் வரும் ஹையோ ஹையோ

      Delete
    3. ஹா ஹா ஹா அஞ்சூஊஉ அடுத்த பிறவி எடுத்த உடன:) நீங்கதான் தேMஸ் காவலாளி ஆகோணும்:) குப்பைக்குப் பதில் வைரம் வைடூரியமாக் கொட்டச் சொல்லுங்கோ:) அப்பவாவது வள்ளியின் வைர நெக்லெஸ் ஐக் கொடுத்து என் நேர்த்தியை நிறைவேத்திடுவேனே:) ஹா ஹா ஹா

      Delete
    4. ஆசை தோசை அப்பள வடை :) உங்களுக்கு பிளாஸ்டிக் மைக்ரோபீட்ஸ் இரும்பு கண்ணாடித்துண்டு அப்புறம் இதான் கிடைக்கும் போங்க அதை வச்சு நேர்த்தியை நிறைவேற்றுங்க

      Delete
    5. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)... தப்பித்தவறி ஆராவது கொட்டிட்டாலும் வைரத்தை என, இப்பவே அலேர்ட் பண்றாவாம் மக்களை கர்ர்ர்ர்ர்:)..

      Delete
  7. சரி படிச்சிட்டேன் :) விரைவில் அடுத்து ஒரு படம் இராம நாராயணன் படத்துக்கு ரிவ்யூ எழுத வேண்டுகிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்:) எல்லாம் பற்றியும் எழுதிட்டேன்:) இனிக் கம்பராமாயணம் தான் பாக்கி:)... சீதை ராமனை மன்னிச்சா என ஒண்டு எழுதோணுமெல்லோ:)

      Delete
  8. இருங்க டிக்ஷ்னரி பொழிப்புரை abbreviation எல்லாம் சொல்லிட்டு தூங்க போறேன் :)

    மட்டருக்கு:) வருவோம்//// இது matter கு வருவோம்
    ரயரோடு// tyre /அவங்க போன வாகனத்தின் wheel சக்கரம் ??

    கிடங்கு//குழி

    //ரேன் எடுத்துப்// turn எடுத்து

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நல்லவேளை முதேல்ல் ஆளாக வந்தமையால்ல்.. ஏனையோரின் சந்தேகத்தைப் போக்கிட்டீங்க:) அதுக்காக அஞ்சுவுக்கு ஒரு நீல ஆடை போர்த்தபோறேன்:)..

      //கிடங்கு//குழி ////
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது ஒத்த சொற்கள்தானே.. இது தெரியாதோ?:)

      சரி சரி மிக்க நன்றி அஞ்சு.. நல்லிரவு:) கிடாய்க் கனவுகள்:).

      Delete
    2. godown கிடங்கு //means warehouse :)

      Delete
    3. குழி எனில் சின்னது.. கிடங்கு எனில் கொஞ்சம் பெரிசு...:)... வெயா ஹவுஸ் நிலத்துக்கு கீழயா வரும்? கர்ர்ர்ர்ர் இதென்ன புயுக்கதை...:... யாராவது டமில் நிபுனேர்ஸ் பார்த்தால் பதில் சொல்லுவினம் பார்ப்போம்...

      Delete

  9. ஹலோ ப்ர்ஸ்ட் வந்தது நான் ஆனால் வோட்டு பட்டை லிங்க் லோடு ஆகவில்லை கமெண்ட் பாக்க்ஸும் லோட் ஆகலை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ...நல்லவேளை இம்முறை உங்களைத்தேடிக் கண்டுபிடிச்சு வெளியே பப்ளிஸ் பண்ணிட்டேன் ரைமுக்கு:)..

      ///ஆனால் வோட்டு பட்டை லிங்க் லோடு ஆகவில்லை ///

      இவர்தான் மாப்பிள்ளை, ஆனா இவர் போட்டிருக்கும் ட்றெஸ் பற்றி நான் எதுவும் பேசமாட்டேன்:)... ஹா ஹா ஹா படையப்பா வசனம் நினைவில வந்து தொலைக்குதே...:).

      //கமெண்ட் பாக்க்ஸும் லோட் ஆகலை///

      அது ஏனோ தெரியல்ல... அஞ்சுவைப்போல:) என்பக்கமும் கொஞ்சம் ஹெவியா இருக்குது:) அதனால ரைம் எடுக்குது:)..(ஹையோ படிச்சதும் கிழிச்சு நயகராவில் வீசிடவும் பிளீஸ்ஸ்:))

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
    2. ஹா ஹா ஹா:).. எதுக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      Delete
  10. உங்களுக்கு விமர்சனம் நல்லா எழுத வருவது அறிந்து நான் வியக்கேன்.....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      ஹா ஹா ஹா நீங்க வியந்தால்தானே போஸ்ட் போடும் எனக்கு வெற்றி.

      உங்களின் போஸ்ட்டில் பாட்டுக்கு கருத்துச் சொன்ன படம் பார்த்திட்டேன் ஆனா பெயர் மறந்திட்டேன் சரத்குமார்.. வடிவுக்கரசி நடிச்சது.. அதைத்தான் அஞ்சு மேலே நினைவு படுத்துறா..

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  11. வாழக்காய் புரட்டலைப் பார்த்து பயந்து ஓடிப் போன பூஸார் திரும்பி வந்துடுச்சா!?...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ...

      ஹா ஹா ஹா என் வாழைக்காய்ப் பிரட்டலை நீங்க இன்னும் மறக்காமல் நினைவில் காவிக்க்கொண்டு வந்திருப்பதைப் பார்க்க:) மீ புல்ல்லா அரிச்சிட்டேன்ன்.. அவ்ளோ சூப்பராவா இருந்துது என:).. சரி சரி எனக்குத் தற்பெருமை பிடிக்காது துரை அண்ணன்:)
      ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
    2. அந்த வாழைக்காய் ரெசிப்பி கண்ணால் பார்த்தத்துக்கே துரை அண்ணனை புரட்டி போட்டு விட்ருச்சு பாவம் பாருங்க அவர் சொல்றார்

      Delete
    3. அவரால இன்னும் அதை மறக்க முடியல்லயாமே:) அப்போ பாருங்கோ என் கறியின் பெருமையை:).... சரி சரி இந்தாங்கோ அஞ்சு ஒரு கப் மோர்:)... ச்ச்ச்சும்மா குடிங்கோ அதெல்லாம் சரியாயிடும்:)...

      Delete
  12. ஒரு கிடாயின் கருணை மனு:...

    கேள்வி படாத படம்....எங்கேந்துதான் இதெல்லாம் எடுக்குரீங்க்களோ
    அதிரா...


    சூப்பர்...சூப்பர்...

    உங்க வழக்கமான நடையில் ரொம்ப சுவையாய் சொல்லிருகீங்க....

    இப்போதைக்கு செய்ய நிறைய வேலை லிஸ்ட்ல இருக்கு..சோ
    அதுல இதையும் சேர்த்துக்குறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ....

      ///கேள்வி படாத படம்....எங்கேந்துதான் இதெல்லாம் எடுக்குரீங்க்களோ
      அதிரா...///

      இப்போதானே வெளிவந்திருக்கு.. அதிராவின் கண்ணுக்கு யாரும் .. வெரி சொறி டங்கு ஸ்லிப் ஆச்சு.. எதுவும் தப்ப முடியாதெல்லோ:)..

      நேரம் கிடைச்சால் பாருங்கோ.. நாங்க அதிகம் விரும்புவது கொமெடிப் படங்களைத்தான்.. அந்த வரிசையில் இது இடம்பிடிச்சிட்டுது.

      மிக்க நன்றி அனு.

      Delete
  13. இந்த மாதிரி படம் வெளியாயிற்றா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..

      ஏன் அப்பூடிக் கேட்கிறீங்க இந்தமாதிரிப் படம் என ஹா ஹா ஹா.. இவை பெயர் சொல்லத் தெரியாத நடிகர் நடிச்சமையால் பெரிதாக வெளியே பெயர் அடிபடவில்லை.

      மிக்க நன்றி.

      Delete
  14. ஹான் !! படமா நான் கூட உங்க அஞ்சு உங்களை கிரான்மாம் சொன்னதுக்கு எதோ ஒரு பதிவு போலன்னு படத்தை பார்த்துட்டு படிச்சா காட்டுக்குள் சுத்திவிட்டுட்டீங்க கிடாயோட எப்படியோ கிடாய் தப்பிடுச்சி
    கடைசில வர பூஸானந்தா சொன்னது செம கரெக்டு
    துடுப்பு தொலைஞ்சா நதி சேர்க்க வேண்டிய இடத்தில சேர்த்திடுமா ???எங்கிட்டு ??தத்துவம் டேஞ்சரா இருக்குதே :-):-D

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி வாங்கோ..

      உங்களின் பேச்சுப் போக்கைப் பார்க்க எப்பவோ நன்கு பழகியவர்போல ஒரு உணர்வு வந்து விடுது...

      ///துடுப்பு தொலைஞ்சா நதி சேர்க்க வேண்டிய இடத்தில சேர்த்திடுமா ???எங்கிட்டு ??///

      ஹா ஹா ஹா குட் குவெஷன்:).. நீங்க முதல்ல நல்ல பிள்ளையாக இருந்து, தேம்ஸ்க்கு வாங்கோ:) நான் பிரக்டிக்கலா செய்து காட்டுறேன்:)...

      ஹா ஹா ஹா மிக்க நன்றி பூவிழி.

      Delete
    2. yes she reminds me of keeri girija

      Delete
    3. அப்படியா தன்யனான்....:))) உங்களோட ஸ்டெயில் சுலபமாகிடுதே என்னையும்..:))) ஹான்! வாராய் நீ வாராய் என்று கூப்பிடுவது போல் கூப்பிட்டு தேம்ஸ் நதியில் போட்டு அமுக்கதானா.:((( ஆனா எனக்கு ரொம்பநாளா ஒரு டவ்ட் ;) தேம்ஸ் ல குதிக்க போறேன் குதிக்க போறேன் நீங்க சொல்லும் போது எல்லாம் அதுல அப்ப தண்ணியே இருக்காதோ நினைத்து கொள்வேன் ஹா ஹா

      Delete
    4. அஞ்சு மீ பூவிழி நீங்க யாரையோ நியாபகம் வருதே நியாபகம் வருதே பாடுறீங்க :'-( எங்கிருந்தாலும் kg-தோழி வாழ்க

      Delete
    5. ///) தேம்ஸ் ல குதிக்க போறேன் குதிக்க போறேன் நீங்க சொல்லும் போது எல்லாம் அதுல அப்ப தண்ணியே இருக்காதோ ///
      ஹையோ நீங்க வேற பூவிழி..:).. தளதளவென ததும்பி நிக்கும் தண்ணி:)... அதிலயே குதிக்கிறேன் எனச் சொல்லும் மீக்கு எவ்ளோ தெகிறியம் இருக்கும் டொல்லுங்கோ?:)... ஹா ஹா ஹா:)..

      Delete
    6. ///kg-தோழி வாழ்க/////
      ஆஆஆஆவ் அஞ்சுவை வம்பில மாட்டி விட்டிட்டீங்க வந்த வேகத்தில:).. கெள அண்ணன் இதைப் பார்த்துப் பொயிங்கப் போறாரே:).... அஞ்சூஊ ஓடுங்கோ ஓடுங்கோ ஓடிப்போய் அதிராட காருக்கு கீழ ஒளிங்கோ:)...

      ஹா ஹா ஹா மீள் வருகைக்கு நன்னி பூவிழி...

      Delete
  15. விமரிசனம் நல்லாத்தான் இருக்கு. படம் பார்த்தபின்புதான், எங்களைப் பழிவாங்கினீங்களா இல்லையா என்று தெரியும்.

    "மட்டர்"- மேட்டர்
    'பாறணை" - 'பாரணை' (ஐயகோ... என்ன மாதிரி தவறுகள். நான் பாறையின் மேல் அணை எதுக்குக் கட்டறாங்கன்னு பார்த்தேன்)


    "என்னால வழமையான போஸ்ட் போல போட முடியவில்லை, அதனால தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.." - இது என்ன அநியாயம். கம்யூட்டர் இருந்தபோது 10 தவறுகள்னா, இப்போ 8 தவறுகள். அவ்வளவுதான் வித்தியாசம். இடுகை நீளம் ஜாஸ்தியாக ஜாஸ்தியாக, தவறுகள் எண்ணிக்கை ஜாஸ்தியாகும்னு லண்டன் மீனார் சொன்னார்.

    ஊசி இணைப்பை நீங்கள் நம்பினால் - தேம்ஸில் குதித்துப் பாருங்கள். நீங்கள் நல்லவர் என்றால், தண்ணீர் வற்றி நீங்கள் வெளியே வந்துவிடலாம். இல்லையென்றால், ஏஞ்சலின் உங்கள் உதவிக்கு வருவார்.

    குறிப்பு: நீங்கள்லாம் தவறா வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஜாலியா கமென்ட் எழுதி உங்களைச் சிரிக்கவைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      ///படம் பார்த்தபின்புதான், எங்களைப் பழிவாங்கினீங்களா இல்லையா என்று தெரியும்.//

      பார்க்க முன் எனக்கொரு எஸ் எம் எஸ் அனுப்பவும்:) என்னை ட்றம்ப் அங்கிள் ஒரு மீடிங்குக்காக அவசரமா அழைக்கிறார்:).. அதனாலதன்:)...

      ///பாறணை" - 'பாரணை'//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) இது என் எழுத்துப் பிழைதான் ஒத்துக் கொள்கிறேன்:)..

      ///கம்யூட்டர் இருந்தபோது 10 தவறுகள்னா, இப்போ 8 தவறுகள். அவ்வளவுதான் வித்தியாசம். இடுகை நீளம் ஜாஸ்தியாக ஜாஸ்தியாக, தவறுகள் எண்ணிக்கை ஜாஸ்தியாகும்னு லண்டன் மீனார் சொன்னார்.///

      ஹா ஹா ஹ எனக்குத் தெரியாமல் மீன் இப்போ ரகசியத் தகவலும் அனுப்புறாவோ:).. karrrrrr:)

      நெல்லைத்தமிழன் நீங்கள் ஒருக்கால் தேம்ஸ் பக்கம் வாங்கோவம் நாங்க முக்கோண மேசை மாநாடு ஒன்று நடாத்துவோம்..:) அப்போ கரீட்டாக் கண்டு பிடிப்பீங்க பேசும்போது ஆர் அதிகம் டப்பு டப்பா பேசுறாங்க என:)... ஹா ஹா ஹா ஹையோ மீ அஞ்சுவைச் சொல்லல்லே:)..

      ///நீங்கள் நல்லவர் என்றால், தண்ணீர் வற்றி நீங்கள் வெளியே வந்துவிடலாம். இல்லையென்றால், ஏஞ்சலின் உங்கள் உதவிக்கு வருவார்.///

      ஹா ஹா ஹா அப்போ மொத்தத்தில எப்படியோ மீ காப்பாற்றப் பட்டிடுவேன் என்கிறீங்க:))... ஆர் இல்லையெனினும் 3ஷா மே..மே... :) ஆன்ரி வந்து காப்பாத்துவா என்னை:)..

      Delete
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) இதெல்லாம் நீங்க சொல்லோணும் என்றில்லை:) எனக்குத் தெரியும்... இதுக்கெல்லாம் சந்தோசம்தான் படுவேன்.. கோபம் எதுக்கு வருது.. நான் எப்பவும் அனைத்தையும் ஸ்போட்டிவ்வா எடுத்துக் கொள்வேன்,.

      ஆகவும் ஏதும் மனமொடிவதுபோல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் மட்டுமே கஸ்டமாக இருக்கும்:)...

      ...மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
  16. ப்ர்ஸ்ட் பட விமர்சனம் உங்க பாணியில் அருமையா எழுதியிருக்கீங்க..
    ஆவ்வ்..இது என் ஹஸ் பார்க்க விரும்பிய படம். தேடிட்டிருக்கார். இன்னும் பார்க்க கிடைக்கலை. நானும் என்னதான் இருக்கு என யோசித்தேன். நீங்க சொன்னா டபுள் ஓகே. இந்த படம்பார்க்கிற விடயத்தில் ஹஸ் கொஞ்சம் டிபரண்ட். லோ பட்ஜெட்,முகம் தெரியாத(அதிகம் அறிமுகமில்லா) நடிகர்கள் படம்தான் கூடுதலா பார்ப்பார். நானும் கொஞ்சம் மனமில்லாமல் பார்ப்பேன். ஆனா பிறகு பிடிச்சுடும்.கதை இருக்கும். பிரபலமான, பெரிசா விளம்பரம் பெரிய அலப்பறையோட வாற படங்கள் எல்லாம் இப்ப கதையும் இல்லை. பிடிக்குதும் இல்லை.
    அஞ்சு ஹை பைவ்...... நானும் அதேதான். பேசிட்டே இருப்பேன்.
    ஊசி இணைப்பும் ,பூசானந்தா தத்துவமும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ நிட்சயம் பாருங்கோ.. நல்ல கொமெடி கலந்த கலவை .. பெரிசா சோங்ஸ் உம் இல்லை... சண்டையும் இல்லை, ஓரிடத்தில் சண்டை வருது அது உண்மைச் சண்டைபோல பார்க்க நல்லாயிருக்கு...

      விஜய் சேதுபதியின் ஒரேஞ் முட்டாய் பார்த்தனீங்களோ? அப்படத்தில் அம்பியூலன்ஸ் இல் ட்றைவருக்கு கெல்ப்பராக கொமெடியன் ஒருவர் வருவார்... இதிலும் அவர்தான்... முடிஞ்சால் அப்படமும் பாருங்கோ அதுவும் நல்ல கொமெடி...

      இப்போ இன்னொன்று பார்த்து பாதியில் நிக்கிது... பொதுவாக என் மனசு தங்கம்... சூரி.. ஸ்டாலின் ... மை இன்னொரு பேவரிட் ஹீரோ பார்த்தீபன் அங்கிள் சேர்ந்து நடிக்கினம்.. இதுவும் சூப்பர்...

      மிக்க நன்றி அம்முலு:)...

      Delete
    2. ஓரேஞ் மிட்டாய், பொ.எ.ம.தங்கம் 2ம் பார்த்தாச்சு.

      Delete
  17. இப்படி ஒரு படம் வந்ததா? நான் கேள்விப் பட்டதில்லையே...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ....
      கர்ர்ர்ர்ர்ர் நீங்க எப்பூடி கிளவிப்படுவீங்க?:).. ஹையோ கேள்விப்படுவீங்க?.. எல்லோரும் மெர்ஷல் பற்றியே பேசுவதால் இப்படிப் படமெல்லாம் மறைஞ்சு போயிடுது... இப்படியானவற்றிற்கே என் வோட்... ஹையோ இது வேற வோட்:)..

      Delete
  18. இறந்த உடலை வைத்முக்கொண்டே ராப்பகலாக கூத்தடித்தால் பயம்தான் வாராதோ... பிணம்தான் நாறாதோ...!

    ReplyDelete
    Replies
    1. ஹையோ சத்தியமா கொஞ்சம் இந்தப் படம் பாருங்கோ:).. அந்த உடலை வச்ச்சு அவர்கள் படும் பாடிருக்கே.:).. சூப்பரா இருக்கு அனைத்தும்... பூனை குட்டி காவுவதைப்போல கொண்டு திரிவார்கள் ஒரு ஓலைப்பாயால் கட்டி ஹா ஹா ஹா:)..

      Delete
  19. கண்ணதாசன் வாக்கு நல்ல வாக்கே தவிர நடக்கும் வாக்கு அல்ல...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எனக்குக் கண்ணதாசன் அங்கிளை ரொம்ப ரொம்பப் பிடிக்கும் என்பதால் அவர் சொல்வதும் அப்படியே பிடிச்சுப் போகும்:)...

      அதை நேரடிக் கருத்து எடுக்கக்கூடாது... நல்லவரா இருந்தால் நல்லதே நடக்கும் என்பதைத்தான் அப்படிப் படகுக் கதையாக்கிச் சொல்றார்:)..

      Delete
  20. வாக்கு வாக்கு என்றதும் நினைவுக்கு வருகிறது. மொபைல் வழி வருவோருக்கு வாக்களிக்கும் வசதி தரப்படவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. ஹையோ ச்ச்ச்ச்சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்கப் பார்க்கிறீங்க கர்ர்ர்ர்ர்:)... இப்போ நான் தெனாலி ஆகிட்டேன்... எதைப் பார்த்தாலும் பயம்மாக்கிடக்கூஊஊ:)...

      நாட்டு நிலைமையைப் பார்த்து அடுத்த போஸ்ட்டுக்கு ட்றை:) பண்றேன்:).... பிச்சை வாணாம் நாயைப் பிடிங்கோ எனும் நிலைமையாகுதே ஜாமீஈஈஈ:)... ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  21. அருமையான பட விமர்சனம். பார்க்க வேண்டும்.
    கண்ணதாசன் சொன்னது அருமை.

    புலாலியூர்ப் பூஸானந்தா சொன்னது சரியே!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ... ஹா ஹா ஹா நீங்க அனைத்தையும் ஒத்துக் கொண்டிட்டீங்க மிக்க நன்றி.

      Delete
  22. Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ... அத்தி பூத்தாற்போலதான் வாறீங்க:).. ஹா ஹா ஹா மிக்க சந்தோசம் மிக்க நன்றி.

      Delete
  23. @ அப்பாவி athira :

    //..தியானம் பண்ணும்போது கடவுளோடு ஐ கொன்டக்ட் வைப்பேன்..//

    இந்த உலகத்திலே எதுவுமே சரியா நடக்கறமாதிரி தெரியலையே..குழப்பமும் கூத்துமாப் போகுதே..ஒரு வேளை கடவுளால சரியா மேனேஜ் பண்ண முடியலையோ? எல்லாத்தயும் படைச்சுப்போட்டு எதயும் சரியாச் செய்யத்தெரியாம, சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம இந்த மனுஷன் –சே- கடவுள் கெடந்து தவிக்கிறாரோ என்று நெனச்சு மெர்ஸலாகிக்கெடந்தபோது உருண்டு வந்தேன் ஒங்கப்பக்கத்துக்கு. படிச்சவுடனே பேரதிர்ச்சி..கடவுளோடு ஐ கொண்டக்ட்..! ஆ! இதுவல்லவோ காரணம்.. அந்த அப்பாவிக்கடவுள்தான் என்ன செய்வாரு? எங்கன்னு ஓடுவாரு ? ஐயஹோ !


    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் வாங்கோ ஏகாந்தன் அண்ணன் வாங்கோ... முதன் முதலா வந்திருக்கிறீங்க நேக்கு லெக்ஸ்சும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல,... ஹையோ வலது காலை எடுத்து வச்சு வாங்கோ.....

      ஹா ஹா ஹா கடவுளால ஒரு அப்பாவி அதிராவையே:) மனேஜ் பண்ண முடியல்லயாம், அப்போ அவர் எங்கின போய் உலகத்தை மனேஜ் பண்ணுவார்:).. அதனால்தான் லூசில விட்டிட்டார்போல:)...

      Delete
    2. அஞ்சூஊஊஊ மசமச எனப் பார்த்துக் கொண்டிருக்காமல் அந்தப் பிரம்புக் கதிரையை எடுத்துப் போடுங்கோ:).. ஹையோ திரும்பிப் போயிடப்போறாரே....

      ///மெர்ஸலாகிக்கெடந்தபோது உருண்டு வந்தேன் ஒங்கப்பக்கத்துக்கு. படிச்சவுடனே பேரதிர்ச்சி..கடவுளோடு ஐ கொண்டக்ட்..! ஆ! இதுவல்லவோ காரணம்.. அந்த அப்பாவிக்கடவுள்தான் என்ன செய்வாரு? எங்கன்னு ஓடுவாரு ? ஐயஹோ !////

      ஹா ஹா ஹா என் பக்கம் வந்தமையால், கடவுள் எப்படி மனேஜ் பண்ணுறார் எனும் காரணத்தைக் கண்டுபிடிச்சிட்டமை கேட்டு மெய்ய்சிலிர்த்திட்டேன்ன்ன்:)...

      மிக்க நன்றி... மிக்க நன்றி.

      Delete
    3. கஞ்சூஸ் cat :) எதுக்கு பிரம்பு நாற்காலி நல்லா சாய்ந்து உக்கார லெதர் சோஃபா போடறேன் :))
      அவர் நல்லா அமர்ந்து பார்க்கட்டும் உங்க லூட்டியை

      Delete
    4. ஹையோ திருச்செந்தூர் பின் வீதியிலே இடப் பக்கம் இருக்கும் வைரவாஆஆ நீ எனக்குக் குட்டியாக் கிட்னியைத் தந்தாலும்:) பெரீஈஈஈசா அதில் அறிவைத் தந்தமையால:) எப்படியோ தப்பிப்பிழைச்சு :) இப்போ 16 வருசத்தை ஓட்டி வந்திட்டேன்:)... அதிராவுக்குக் கெட்ட பெயர் எடுத்துக் குடுக்கிறதிலயே குறி வச்சுத் திரியினமே கர்ர்ர்ர்ர்:)...

      ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சூஊஊஊ அது, நம் நாடுகளில்தான் லெதருக்கு மருவாதை... இங்கு வீட்டுக்கு வீடு லெதர்தானே ஆனா இந்நாடுகளில் விதம் விதமான பிரம்பு ஷோபா வுக்குத்தானே மவுஸ்:)... கையோ இது வேற மவுசு... அதிகம்:)......

      கடவுளே இந்த அஞ்சுவால:)... பிரம்புக்கதிரையோ நேக்கு வாணாம் மீ வரமாட்டேன் என ஏகாந்தன் அண்ணன் சொல்லிடப்போறாரே...:)... முருகா இம்முறை வள்ளிக்கு கன்போமா வைர மூக்குத்தி :) போடுவேன் என்னைக் காப்பாத்திடப்பா:)...

      Delete
  24. தங்கள் ஒட்டு சேர்க்கப்பட்டது நன்றி !

    மன்னியுங்கோ பூசாரே மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ... விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சு இன்னும் காணல்லியே என ஓசிச்சேன்ன்ன்...

      ///தங்கள் ஒட்டு சேர்க்கப்பட்டது நன்றி////
      ஹையோ மெதுவாப் பேசுங்கோ:) அந்தச் சித்தாண்டி முருகன் உங்களைக் காப்பாத்துவாருக்கும்:)..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி மேஜரே.

      Delete
  25. மன்னிக்கவும் இப்பொழுதுதான் தங்களுக்கு ஓட்டு போடமுடிந்தது
    (ஜேம்ஸ் நதிமீது சத்தியமாக ப்ளஸ் ஓட்டுதான்)
    காரணம் இதுவரை பட்டை திறக்கவே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் அப்போ இதுவரை நீங்க போடல்லியா?:).. மொபைலூடாகவே வருவதால் ஒண்ணும் கண்டு பிடிக்க முடியுதில்ல...
      அப்போ எனக்கும் யாரோ பூசணிக்காய் வெட்டிக் "கழி" ச்சிட்டினமோ? ... ஹையோ கொம் போனால்தான் கண்டுபிடிக்கலாம் என்ன நடக்குதென...

      இல்ல கில்லர்ஜி... நம் நட்பு வட்டத்துக்குள் யாரிலும் எனக்கு எப்பவும் சந்தேகமே வந்ததில்லை... நண்பர் என ஆனபின் ஓவரா எல்லோரையும் நம்பிடுவேன்... பின்பு நம்பிக்கைக்கு துரோகமாக எதுவும் நடந்தால்.. அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.... இது கண்ணதாசன் அங்கிள் சொல்லித் தந்தார்:).

      இம்முறை என் புளொக்குக்கு யாரோ சூனியம் வச்சிட்டினம்:)... என்ன சொல்றீங்க எனக் கேட்டிடாதீங்கோ:) ... உங்கட ஜேம்ஸ்ல... சொறி என் தேம்ஸ்ல தள்ளினாலும் ஜொல்ல மாட்டேன்ன்ன்ன்:)...

      ஹா ஹா ஹா மீள் வருகைக்கு நன்றி.. மேலே அப்படப்பெயரைக் கொஞ்சம் சொல்லுங்கோ.. கண்கள் என வரும்...

      Delete
  26. கமெண்ட்டை போடா ரொம்ப தூரம் வரவேண்டியிருக்கே ...நானும் அஞ்சு ,எப்பவும்போல கமெண்ட் மட்டும் ரிவர்ஸ் ஆர்டரில் வரேன் :)ன்னு சொல்லிக்கிறேன் ,பொறுமையா படிச்சி கமெண்ட் போடுறேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ...

      ஹா ஹா ஹா நீங்க எந்த ஓடரில எனினும் கொமெண்ட் போட்டால் சந்தோசமே...

      Delete
  27. ஒரு கிடாயின் கருணை மனுவை பார்க்கணும் போல் இருக்குது (நான் உங்க சிபாரிசை சத்தியமா சொல்லலே :)

    துடுப்பு தொலைந்தாலே தெரியுதே ,அவர் நல்லவர் இல்லையென்று:)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா என் சிபார்சால் பார்க்க வேணாம், ஆனா முடிஞ்சால் பாருங்கோ .. உங்களுக்குப் பிடிக்கும்.

      அது துடுப்பு தொலைந்தது சோதனை பண்றார் கடவுள்...
      நல்லவர்களைக் கடவுள் சோதிப்பார் ஆனாக் கைவிட மாட்டார்ர்... அதிராவுக்கு பைபிளும் தெரியுமாக்கும்..
      மிக்க நன்றி பகவான் ஜீ.

      Delete
  28. @ அப்பாவி athira, @ angelin:

    பிரம்போ, லெதரோ எதுவானாலும் போடுங்கோ - உட்கார்ந்து அதிராவின் கச்சேரியை ரசிப்போம்.

    பிரம்பு என்று சொன்னதும் ‘புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை..’ என்று திருவிளையாடலில் டி.எம்.எஸ். உருகிப்பாடிய உமையின் கணவன் சிவன் வேறு நினைவுக்கு வர்றாரு..! சரி வரட்டும்; அவரும் அதிராவின் வீட்டில் பிரம்பு நாற்காலியிலோ, புலித்தோல் ஸோஃபாவிலோ உட்காரட்டும். அப்பத்தான் அதிராவின் புகழ் தேவலோகத்திலும் பரவும்.

    ஆனா, உமை இதைக் கண்டால்..!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா :) ஏகாந்தன் சார் ..எனக்கு பிரம்பு என்றதும் மைலாப்பூர் பிரம்பு நாற்காலி கடைங்க ஒரு ஏரியா முழுக்க லைனா இருக்கும் அதுவும் நினைவுக்கு வருது ..

      பிட்டுக்கு மண் சுமந்த கதை நாங்க சிக்ஸ்த் ஸ்டான்ட்அர்ட் தமிழ் பாடத்தில் படிச்சு அதுவும் நினைவுக்கு வருது :)
      உமையவள் பார்த்தா தாண்டவம்தான் :)

      ஆனா :) அதிராவ் சிவபெருமான் கண்ணில் உங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் மட்டும் படக்கூடாதுன்னு வேண்டிக்கோங்க :)நெற்றிக்கண்ணை திறப்பார் உங்க வீட்டு சோபாவில் உக்கார்ந்து :)

      இதை எழுதும்போது எனக்கொண்ணு தோணுது இப்படி திடீர்னு சிவபெருமான் அதிரா முன் வந்து அவர் வீட்டு ஹாலில் உக்கார்ந்தா அதிரா என்ன செய்வாங்க :) ஹையோ ஹையோ

      Delete
    2. ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன்... பிரம்பப் பார்த்து நீங்க புட்டுப் பாட்டுப் பாடினீங்க:).. நான் உங்கள் பாட்டில் புட்டைப் பார்த்து இன்று எங்கள் மெனுவில் புட்டையும் இணைச்சிட்டேன்:)...

      /// புலித்தோல் ஸோஃபாவிலோ உட்காரட்டும். அப்பத்தான் அதிராவின் புகழ் தேவலோகத்திலும் பரவும். ///
      ஆஹா நீங்களே சொல்லிட்டீங்க:).. மீ அடிக்கடி காடிக்குப் போவதால்:), தேவலோகம் செல்லும் புரொமோஷன் கிடைச்சிட்டுது போல:)... சரி சரி எல்லோரும் ரெடியா இருங்கோ நான் தேவலோகம் போய் வந்தவுடன் எல்லோருக்கும் ஆஜீர்வாதம்:).. தருவேன்:).. பழம்.. பூ,,, புடவை,,, நகை.. பணத்தோடு வாங்கோ... எதுக்கோ?:) ஆஜீர்வாதம் வாங்கினால் மீக்கு தெட்சணை தரோணுமெல்லோ:)..

      ///ஆனா, உமை இதைக் கண்டால்..!///
      ஹா ஹா ஹா நீங்களே வம்பில மாட்டி விட்டிடுவீங்க போலிருக்கே:).. கொயந்தைகளோடு:) யாரும் கோபிக்க மாட்டினம்:)...

      மிக்க நன்றி மீள் வருகைக்கு.

      Delete
    3. ஹா ஹா ஹா அஞ்சு... திடீரெனக் கடவுள் வருவதுபற்றி முன்பு ஒரு கவிதை எழுதி வதனப்புத்தகத்தில் போட்டனே... அதைக் காணல்ல எங்கும்.. திரும்ப எழுதிப் போட்டிடுறேன்:)...

      கண்ணை மூடித் தியானம் செய்து, கண்ணுக்குள்ளே தேடுறேன் தேடுறேன் ஒரே ஒரு கண் மட்டும் உள்ளே தெரிஞ்சுது... அப்போ மீயும் சிவபெருமானின் நெற்றிக் கண்ணைத்தான் தியானத்தில பார்த்திருக்கிறேன்:)... சரி சரி முறைக்கப்பிடாது:).. சிரிச்சால்தான் நீங்க அழகு:)...

      Delete
  29. அருமை என்னவொரு விளக்கம்...!
    சினிமா விமர்சனம் எழுதலாமே...!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ....

      ஹையோ நான் எது பேசினாலும் பப்ளிக்கிலதான்... இதோ என் கையுக்கு காப்புப் போட்டாலும் பறவாயில்லை... மீ ஒரு கொலையாளி ஆகிறேன்ன்ன்ன்:) தம்பி மொகமட்டைத் தேம்ஸ்ல தள்ளாமல் சொட்டுத் தண்ணிகூடக் குடிக்க மாட்டேன்ன்ன்ன்:)... இது அந்த அஞ்சுவின் லவேரியின் மேல் அடிச்சுச் சத்தியம் பண்றேன்ன்ன்:)))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி மொகமட்...

      Delete
  30. கீதா: அருமையான அழகான ஒரு படத்தைப் பற்றி இங்கு சொல்லியமை சூப்பர் அதிரா.....நல்ல ரிவியூ தான் கொடுத்திருந்தார்கள். ஆனால் பார்க்கலை...

    துளசி: இப்படி ஒரு படம் இங்கு நான் இருக்கும் ஊரில் வரலை....ஆனா நல்ல படம்னு கேள்விப்பட்டேன். எங்க ஊர்ல கேரளத்துல பெரிய பாப்புலர் நடிகர்களின் தமிழ்ப் படங்கள்தான் வரும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா , துளசி அண்ணன்...

      பொழுது போகாத நேரத்தில் பார்க்க முயற்சியுங்கோ...

      மிக்க நன்றி.

      Delete
  31. Replies
    1. வாங்கோ சகோ அப்பாத்துரை வாங்கோ...

      கர்ர்ர்ர்ர்:).. மேலே தம்பி மொகமட் சொல்றார்:) பட விமர்சனம் எழுதலாமே என:) நீங்க படத்தின் பெயரே கேட்டு... ஒரு அப்பாவியை பபுளிக்குப் பிளீசில மானபங்கப் படுத்திட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

      Delete
  32. அருமையான பதிவு
    பாராட்டுகள்

    ReplyDelete
  33. இடைவேளை தாண்டி கொஞ்ச நேரம் வரை நேற்று இரவு பார்த்தேன். சில இடத்துல கொஞ்சம் நீளமாக காட்சி இருந்தாலும் செம சிரிப்பு. ரொம்ப மாதங்களுக்கு அப்புறம் இரவு 10 மணிவரை முழித்து படம் பார்த்தேன். ஙழமையா 8:30-9 க்குள்ள படுத்துடுவேன். மீதி இப்போ பார்க்கணும். நல்ல படம். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் சந்தோசம் பொயிங்குதே. சந்தோசம் பொயிங்குதே... மியாவும் நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.