நல்வரவு_()_


Sunday, 10 November 2013

GRAVITY ... 3D ஊடாகப் பார்த்ததில் தெரிந்தது..

இப்போ, 8ம் திகதி முதல்... இங்கின தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆங்கிலப் படம். நேற்றுப் பார்த்தமா.. உடனேயே அதுபற்றி ஒரு விமர்சனம் எழுதோணும் எனும் ஆவல் தூண்டப்பட்டு விட்டது.

சரி படம் பற்றிய விமர்சனத்துக்கு முன்பு கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்கிறேனே.. ஏனெனில், எனக்கு படம் ஏன் பிடித்தது என்பதை நீங்க அறிய இது உதவிபண்ணுமெல்லோ:)... “இந்த விருப்பம்” உங்களுக்கு இல்லாவிடில், படம் பிடிக்காமலும் போகலாம்.. அதனாலயே முன்னறிவித்தல்..

எனக்கு விண்வெளி.. ஸ்பேஸ் புரோகிராம் எனில் கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி.[ இந்தத் தகவல் இங்கே பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும்:)] அங்கிருந்து சட்லைட்டில் படமெடுக்கும்போது, நம் உலகம் ஒரு புறம் தெரியும், சந்திரன் ஒருபக்கம் தெரியும்.. நட்சத்திரங்கள் கல்லுகள் என.. சுற்றிய வண்ணம் இருக்கும்.. அதை ரசிச்சே முடியாதெனக்கு. அவ்ளோ விருப்பம். அப்போ இப்படம் எனக்காகவே எடுக்கப் பட்டதுபோல:) என்னுள் ஒரு மகிழ்ச்சி:)..

சரி கதைக்கு வருகிறேன்ன்.. இதில் கதையே இல்லை:).. அதை விடுங்கோ.. தியேட்டருக்குள் போய் இருந்து பொப்கோனும் நச்சூஸ் சும்(nachos chips) வாங்கி சாப்பிட்டபடி, இருந்தமா.. அட்ஸ் ஓடிக்கொண்டிருந்துது. டக்கென ஸ்கிறீனை ஸ்ரொப் பண்ணி விட்டு.. தியேட்டரில் ஒருவர் வந்து எனவுன்ஸ் பண்ணினார்ர்.... அதாவது என்ன மெயினா சொன்னாரெனில்.. கொஞ்சம் பயமாக இருக்கும் காட்சிகள் எனில் கண்ணை மூடிடுங்கோ என. 3டி கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது, எல்லாமே நமக்கு கிட்ட வருவதுபோல இருக்குமெல்லோ..

அப்போ அப்படிச் சொன்னதும்.. கொஞ்சம் பயம் எனக்கு வந்திட்டுது என்றால் பாருங்கோவன்:).

சரி கண்ணாடி எல்லாம் போட்டுப் படம் பார்க்கத் தொடங்கியாச்சு...

ஸ்பேஸிலே ஒரு ஸ்பேஸ் ஷிப் நிற்கிறது.. அதில் சிலர் போயிருக்கிறார்கள்,ஒரு 6/7 பேர்தான். அவர்கள் அந்த ஷிப்பில் சில வேலைகள் செய்கிறார்கள், அதனை பூட்டி நேராக்குகிறார்கள். அந்த ஷிப் இருப்பது விண்வெளிதானே.. ஒரு பக்கம் உலகம் தெரிகிறது, சந்திரன் தெரிகிறது, கற்கள், உடைந்த சில துண்டுகள் பறந்த வண்ணமிருக்கின்றன. அதனுள் இவர்களும் பறந்து பறந்து பூட்டுகிறார்கள்.

அப்போ வெளியில் இருந்து பறந்து வந்த வேறு சில ஷிப்ஸ் இன் பகுதிகள் வந்து அடிக்கிறது, அதனால் இவர்களில் சிலர் அந்த ஷிப்பை கையால் பிடிக்க முடியாமலும், மற்றும் ஒட்ஷிசன் போதாமல் போயும் இறந்து விடுகிறார்கள். எல்லாமே பறந்து சுற்றிக் கொண்டிருக்கும், ஒன்றுமே கீழே விழாதுதானே.
=============================INTERVAL==============================
========================================================================
கடசியாக ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மட்டுமே எஞ்சுகிறார்கள். இருவரும் வெளியே பறந்து மீண்டும் பூட்ட முயலும் போது, பெண் தவறிப்போக.. அந்த ஆண்தான் காப்பாற்றுகிறார். இப்படி நடந்து பின்னர் ஒரு கட்டத்தில், அந்த ஆண் இந்த விண்வெளிக் கப்பலைப் பிடிக்க முடியாமல் தூரமாக எட்டித் தவிப்பார்.... அப்போ பெண் என்ன செய்வார், அவரைக் காப்பாற்ற, எட்டிப் பிடிப்பார்...

இந்த நிலை எப்படி இருக்குமெனில், இவர்களின் விண்வெளிக் கப்பலில் இருந்து சில நாடாக்கள் பெண்ணின் காலில் சுற்றப்பட்டிருக்கும், அதன் மூலம் பறந்த வண்ணமே அந்த ஆணை இழுத்துப் பிடிப்பார்...பலமான காற்றுப்போல பிச்சு அறுத்துக் கொண்டு போவது போல இருக்கும், அப்போ அந்த ஆண் சொல்வார், என்னை விடு, நான் போகிறேன், என்னை இழுத்தாயானால் அந்த நாடா அறுந்துவிடும், அப்போ இருவரும் இறந்திடுவோம், ஆருமே மிஞ்சமாட்டோம் என.

அப்போ அவ பெரிதாக கத்தி கூச்சல் எல்லாம் போட மாட்டா[வெள்ளைக்காரப் பெண்ணல்லவா:)].. ஆனா முகபாவனையில் கவலை தெரியும்... கையைப் பிடித்து இழுத்தபடி சொல்லுவா... பிளீஸ்ஸ் போயிடாதே வா.. என, ஆனா அவரோ இல்லை, நாடா அறுமுன் நான் கிளிப்பைக் கழட்டுகிறேன் என, அவ இழுக்கும் அந்த பட்டியில் இருக்கும் கிளிப்பைக் கழட்டுவார்ர்.. ஸ்லோ மோசனில்.. அவ அழுவா.. பிளீஸ்ஸ் பிளீஸ்ஸ் போகாதே என.. அவர் இல்லை நீ தப்பிப்போ என கிளிப்பைக் கழட்டுவார்ர்..

அப்படியே அவர் தூரப் பறந்து போவது தெரியும். இவவுக்கு ஒட்ஷிசன் போதாமல் வந்து விடும், பலமாக மூச்சு வாங்குவா, உடனே சிப்பின் டோரை இறுக்கித் திறப்பா, திறந்து உள்ளே வந்து கதவை மூடிவிட்டு, ரீவியின் முன்னால் வந்து இருப்பா. எல்லாமே பறந்துதான்.. நடப்பதில்லை. செயாரில் இருந்து பெல்ட்டைப் போட்டால்தான் எழும்பிப் பறக்காமல் இருக்கலாம்.

அப்போ அவவுக்கு தாங்க முடியாத கவலையாக இருக்கும்.. ஆருமே இல்லை.. ஒரு சுவிட்சைப் போடுவா... அதில் ஏதோ ஒரு ஷைனீஸ் ரேடியோ சனல் போகும்.. இவ அவரோடு கதைக்க வெளிக்கிடுவா.. அது ரேடியோத்தானே .. தன் பாட்டில் போகும்.. அதில் ஒரு குழந்தையின் மழலை மொழி எல்லாம் கேட்ட்கும்... இவ துக்கம் தாளாமல் வாய் மூடி அழுவா...

அப்போது ஒரு துளி கண்ணீர் வந்து கன்னத்தால் வழிந்து.. அது ஒரு உருண்டையாகி விழும்.. விழுந்து.. அந்த ஒரு துளியும்.. அப்படியே கீழே விழாமல்.. பறந்து சுற்றிப்போகும்... மிகவும் ஒரு கவலையான கட்டமாக இருக்குமது.

அந்நேரம் அவவுக்கு ஒட்ஷிசன் காணாமல் மூச்சு வாங்கும், ஆனா அவ கவலையால் செயலிழந்ததுபோல, மாஸ்க் கை எடுத்து மாட்டாமல் அப்படியே இருப்பா... அப்போ அந்த ஸ்பேஸ் சிப்பின் கதவை ஒருவர் தட்டுவார்ர்... தட்டி விட்டு திறந்து உள்ளே வருவார்ர்... பார்த்தால், கடசியில் என்னை விடு எனச் சொல்லி கிளிப்பைக் கழட்டிப் போன அவரேதான்... அவர் உள்ளே வந்து இவவின் பக்கத்துச் செயாரில் பெல்ட்டைப் போட்டு இருப்பார்..

உடனே அவவுக்கு ஒரு புத்துணர்வு வரும்.. டக்கென மாஸ்க்கைப் போட்டிடுவா, உடனே உஷாராகிடுவா.... பின்பு அவவை மட்டுமே காட்டுவார்கள்... அப்போ எமக்கு ஒரு குட்டி டவுட்.. வந்தவர் எங்கே????

அது அப்படி இருக்க.. மீண்டும் இவவின் ஸ்பேஸ் சிப்.. துண்டு துண்டாக வெடிக்கும்... முடிவில் அவவாவது உயிர் பிழைக்கிறாவா? இல்லை.. அவவும் இறந்து விடுவாவா????? முடிவை தியேட்டரில் பாருங்கோ... 

அந்த வந்தவர் எங்கே???? பின்புதான் நாம் உணர்வோம்ம்.. அது உண்மையல்ல... அவவை உஷார் பண்ண, ஒரு ட்ரீம் வந்தது அப்படி...

என்னைப் பொறுத்து படம் சூப்பர். நல்ல 3டி தியேட்டரில் பாருங்கோ.. அப்படியே நாமும் உள்ளே போவதுபோல, ஸ்பேஷில் சுற்றுவது போல இருக்கும்... படம் முடிந்த பின்னும்.. இன்னும் தொடராதா.. அதுக்குள் முடிந்து விட்டதா எனும் உணர்வை உருவாக்கிய படம்... தியேட்டரைக் கண்டாலே நித்திரையாகும் என்னையே.. சொக்க வைத்திருந்தது...

அதிகமான ஆங்கிலப் படங்கள்.. டொமார்ர்.. டும்.. எனச் சத்தமாக இருக்கும்.. பளீச் பளீச்ச் என வெளிச்சம் வரும்... இதனால் எனக்கு தலையிடி வந்திடும்.. ஆனா இதில் பெரிதாக அப்படி எதுவுமே இருக்கவில்லை.. எல்லாமே அளவாக இருந்துது. ஆரம்பம் ஒரு 20 நிமிடம் தவிர்த்து, படம் முழுவதும் இருவரே நடிக்கின்றனர்.. விண்வெளியல்லவா மருந்துக்கும் ஆட்கள் இல்லை.

சிறியவர்களையும்(குட்டீஸ்) கூட்டிப் போய்ப் பார்க்கலாம். திரும்பவும் சொல்கிறேன், ஸ்பேஸ் புரோகிராம் பிடித்தவர்களுகு இப்படம் 100 வீதமும் பிடிக்கும்.


=========================================================================
ஊசி இணைப்பு:

61 comments :

  1. //GRAVITY ... 3D ஊடாகப் பார்த்ததில் தெரிந்தது..//

    அதிராவுக்கு என்ன தெரிந்ததோ?

    இனி மேற்கொண்டு படித்தால் மட்டுமே எனக்குத் தெரியவரும்.

    ReplyDelete
  2. //எனக்கு விண்வெளி.. ஸ்பேஸ் புரோகிராம் எனில் கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி.[ இந்தத் தகவல் இங்கே பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும்:)] அங்கிருந்து சட்லைட்டில் படமெடுக்கும்போது, நம் உலகம் ஒரு புறம் தெரியும், சந்திரன் ஒருபக்கம் தெரியும்.. நட்சத்திரங்கள் கல்லுகள் என.. சுற்றிய வண்ணம் இருக்கும்.. அதை ரசிச்சே முடியாதெனக்கு. அவ்ளோ விருப்பம். அப்போ இப்படம் எனக்காகவே எடுக்கப் பட்டதுபோல:) என்னுள் ஒரு மகிழ்ச்சி:)..//

    எனக்கும் இந்த SPACE RESEARCH விவகாரங்களில் மிகவும் ஈடுபாடு உண்டு அதிரா.

    >>>>>

    ReplyDelete
  3. //டக்கென ஸ்கிறீனை ஸ்ரொப் பண்ணி விட்டு.. தியேட்டரில் ஒருவர் வந்து எனவுன்ஸ் பண்ணினார்ர்.... அதாவது என்ன மெயினா சொன்னாரெனில்.. கொஞ்சம் பயமாக இருக்கும் காட்சிகள் எனில் கண்ணை மூடிடுங்கோ என. 3டி கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது, எல்லாமே நமக்கு கிட்ட வருவதுபோல இருக்குமெல்லோ..

    அப்போ அப்படிச் சொன்னதும்.. கொஞ்சம் பயம் எனக்கு வந்திட்டுது என்றால் பாருங்கோவன்:).//

    என்னது ......
    அதிரடி அதிராவுக்கே பயம் வந்துடுத்தா??????

    நம்ப முடியவில்லை ... யில்லை ... யில்லை ... யில்லை ..... அவளா சொன்னால் இருக்காது ... அப்படி எதுவும் நடக்காது ... நம்ப முடியவில்லை .....

    >>>>>

    ReplyDelete
  4. வீடியோ சூப்பர் .....

    பயங்கரமாக த்ரில்லிங்காக படம் எடுத்துள்ளார்கள்.

    >>>>>

    ReplyDelete
  5. //அப்போ அவ பெரிதாக கத்தி கூச்சல் எல்லாம் போட மாட்டா[வெள்ளைக்காரப் பெண்ணல்லவா:)].. ஆனா முகபாவனையில் கவலை தெரியும்... கையைப் பிடித்து இழுத்தபடி சொல்லுவா... பிளீஸ்ஸ் போயிடாதே வா.. என, ஆனா அவரோ இல்லை, நாடா அறுமுன் நான் கிளிப்பைக் கழட்டுகிறேன் என, அவ இழுக்கும் அந்த பட்டியில் இருக்கும் கிளிப்பைக் கழட்டுவார்ர்.. ஸ்லோ மோசனில்.. அவ அழுவா.. பிளீஸ்ஸ் பிளீஸ்ஸ் போகாதே என.. அவர் இல்லை நீ தப்பிப்போ என கிளிப்பைக் கழட்டுவார்ர்..//

    அதிரா எழுதியுள்ள இதைப் படித்துவிட்டு கண் கலங்கிப்போனேன்.

    >>>>>

    ReplyDelete
  6. //கடசியில் என்னை விடு எனச் சொல்லி கிளிப்பைக் கழட்டிப் போன அவரேதான்... அவர் உள்ளே வந்து இவவின் பக்கத்துச் செயாரில் பெல்ட்டைப் போட்டு இருப்பார்..

    உடனே அவவுக்கு ஒரு புத்துணர்வு வரும்.. டக்கென மாஸ்க்கைப் போட்டிடுவா, உடனே உஷாராகிடுவா.... பின்பு அவவை மட்டுமே காட்டுவார்கள்...//

    ஆஹா, பிரிந்தவர் மீண்டும் கூடுவிட்டனரா, சந்தோஷம், அதிரா.

    //அப்போ எமக்கு ஒரு குட்டி டவுட்.. வந்தவர் எங்கே????//

    அவளுடன் கலந்து ஒன்றாகி போய் விட்டாரோ ?

    அர்த்தநாரீஸ்வரர் போல !

    >>>>>

    ReplyDelete
  7. //அது அப்படி இருக்க.. மீண்டும் இவவின் ஸ்பேஸ் சிப்.. துண்டு துண்டாக வெடிக்கும்... முடிவில் அவவாவது உயிர் பிழைக்கிறாவா? இல்லை.. அவவும் இறந்து விடுவாவா????? முடிவை தியேட்டரில் பாருங்கோ...//

    தியேட்டரில் போய்ப் பார்த்தால் அதிரா சொல்வதுபோல சுவாரஸ்யமாக இருக்காதூஊஊஊஊஊ

    >>>>>

    >>>>>

    ReplyDelete
  8. //அந்த வந்தவர் எங்கே???? பின்புதான் நாம் உணர்வோம்ம்.. அது உண்மையல்ல... அவவை உஷார் பண்ண, ஒரு ட்ரீம் வந்தது அப்படி...//

    அடடா .. அத்தனையும் கனவா ?

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_10.html

    நான் எழுதிய கதையைக் காப்பி அடிச்சுட்டாங்கோ, அதிரா. ;(

    >>>>>

    ReplyDelete
  9. //தியேட்டரைக் கண்டாலே நித்திரையாகும் என்னையே.. சொக்க வைத்திருந்தது...//

    ஆஹா, நித்திரைக் கோலத்தில் அதிராவைப்பார்க்கணும்னா தியேட்டருக்குக் கூட்டிப் போனால் போதும் போலிருக்கு. ;)))))


    >>>>>

    ReplyDelete
  10. தங்களின் இந்த விமர்சனம் மிக அருமையாக உள்ளது அதிரா.

    சினிமா விமர்சனங்களைப் படித்தாலே நித்திரையாகி விடும், என்னையே அதிராவின் விமர்சனம் அப்படியே சொக்க வைத்து விட்டது. ;)))))

    பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.மிக்க நன்றி.

    ReplyDelete
  11. கடைசி இணைப்பில் உள்ள ஊசி என்னை நன்றாகக் குத்தி விட்டது. ;(((((

    ReplyDelete
  12. Arun wanted to to this movie, but am scared of this space, 3D movies etc., but heard that it's a good movie n Sandra Bullock acted well in the movie. :)

    ReplyDelete
  13. ஆஆஆ மீஈ லாண்டட் :)) ஸ்பேசில் தான் :) உங்க புண்ணியத்தில் :)

    எனக்கும் பிடிக்கும் இந்த மாதிரிபடங்கள் ..ஆனா மன திடம் கொஞ்சூண்டுதான் என்பதால் எப்பவும் எண்டிங் ஹாப்பி ஆகஇருந்தால் மட்டுமே பார்ப்பேன் :))

    TITANIC பார்த்திட்டு என்னைசுற்றிலும் ஒரு குளம் உருவாகிடுசின்னா பார்த்துக்கோங்க :) I've literally never cried so much in my life...for a movie !!


    ஆனா சும்மா சொலக்கூடாது அதிஸ் :)) பேஷ் பேஷ் விமரிசனத்தில் கலக்கிட்டேள் போங்கோ ..


    அப்படியே தியேட்டர்ல உக்கார்ந்து பார்க்கிற அனுபவம் எனக்கு ..தொடருங்கள் உங்கள் விமரிசனங்களை :))

    அப்புறம் ஒரு ரகசியம் சொல்வேன் யாருக்கும் சொல்ல கூடாது ..நான் தியேட்டரில் ஒன்லி கார்ட்டூன் படங்களை மட்டுமே ஆசைப்பட்டு பார்ப்பேன் :))

    ReplyDelete
  14. விமர்சனம் சூப்பர். எனக்கு எப்பவும் டமார், டுமீர் என்று சுட்டு, ஓடித் திரிந்தால் தான் படம் பார்க்கும் மூட் வரும். இப்படி படம் என்றால் நித்திரை தான். எனிவே உங்கள் விமர்சனம் படிக்க படம் பார்க்க ஆவலாக இருக்கு.

    இந்த ஹீரோயினுக்கும் சாம்பு போல கனவோ ( சுறா? யாயா? ). hehe...

    ReplyDelete
  15. விமர்சனம் சூப்பர். உங்கள் விமர்சனம் படிக்க படம் பார்க்க ஆவலாக இருக்கு.

    ReplyDelete
  16. //athira has left a new comment on the post "78 ] கனியாகும் காய் !":

    எனக்கு வேணுமென்றே:):) வோட் பண்ணாத காரணத்தால்ல்:)) இப்பதிவு படிக்கவும் மாட்டேன்ன்:) பின்னூட்டம் போடவும் மாட்டேன் என்பதை:) அந்தக் கணக்குப் பார்க்கும் பச்சைக் கிளியாரின்.. அருகிலிருக்கும் உடைந்த கால்மேல் அடித்துச் சத்தியம் செய்கிறேன்ன்ன்:)))...

    உஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆஆஆ ஒவ்வொரு முறையும்.. எதையாவது சொல்லி மிரட்டியே:) வாங்க வேண்டியிருக்கே முருகா:)) //

    வெரி ஸாரி ... அதிரா
    உண்மையில் மறந்துட்டேன்.

    இப்போ வோட் அளித்து விட்டேன். என் வோட் எண்: 5 [அஞ்சு]

    தங்கள் மெயில் விலாசம் தெரியாததால் இது விஷயமாக விரிவாகப் பேச இயலவில்லை.

    நம் அஞ்சு மூலமாக உங்களுக்குத் தகவல் தருகிறேன்.

    அது உங்களுக்கு மிகவும் சாதகமாகவே இருக்கும்.

    அதாவது நீங்களே என் சார்பில் வோட் போட உங்களுக்கு உரிமை தரப்படும். ஓக்கேவா ?

    [அப்பாடா ... இனி எனக்கும் தொல்லை இல்லை ;)))))]

    அன்புடன் கோபு

    ஊசிக்குறிப்பு:

    இனி என் பதிவுக்கு மீண்டும் வாங்கோ. கலக்குங்கோ.

    ReplyDelete
  17. இங்குள்ள டிவிசானலில் ஸ்பேஸ் ப்ரோக்கிராம் அடிக்கடி போடுவாங்க. நானும் விரும்பி பார்ப்பேன்.அதுவும் 3டி வேறு.சொல்லத்தேவையில்லை. இப்படம்பற்றி நல்ல அழகா விமர்சனம் செய்திருக்கிறீங்க அதிரா. ட்ரெய்லரும், நீங்க எழுதியவிதமும் படத்தினை உடனே பார்க்க பார்க்க வேணும் போல ஆவலை ஏற்படுத்தி யிருக்கு.
    எனக்கும் வோட்டிங்கார்ட் கிடைச் சாச்சு.வோட்டும்பண்ணியாச்சு.

    ReplyDelete
  18. ஆகா... பட விமர்சனமோ...:)

    ம்... நான் இம்மாதிரிப் படங்கள் எப்பவாலுந்தான்
    பார்ப்பேன்... அதுவும் வீட்டிலதான்.. இந்த 3 டி, 4 டி.. ஒண்ணுமில்லாமல்..:))).

    இப்ப உங்கட இந்த விமர்சனம் பார்க்கேக்கை ஒரு ஆவல் வருகுது...
    சும்மா அக்குவேறு ஆணிவேறாப் பிடுங்கி.. ஐயோ பிடுங்கி இல்லை..
    அலசி விமர்சிச்சிருக்கிறீங்க..:)
    பார்ப்போம் சந்தற்பம் வந்தால்..:)

    த ம.7

    ReplyDelete
  19. வை.கோபாலகிருஷ்ணன் said...
    நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊ//

    வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ...
    ஆமா .. ஆமா... இங்கின நீங்கதான் 1ஸ்ட்டூ:) ஆனா வோட் பண்ணியதில் 1ஸ்ட்டூ இல்லையாக்கும்:)).. ஹா..ஹா..ஹா.. எங்கின ஆரம்பிச்சாலும் அங்கினதானே போய் நிக்குது:)).. ஒரு வோட்ட் வங்கவே... தீயா வேலை செய்ய வேண்டியிருக்கே சாமீஈஈஈ:).

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் said..
    அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் நன்றி. உண்மையில் படம் சூப்பர். ஒவ்வொரு நொடியையும் ரசிச்ச வண்ணமே பார்த்தேன். அதில் ஒரு விஷயம் என்னவெனில் ஆங்கிலப் படங்கள்.. 1.30, 2 மணித்தியாலத்துள் முடிந்துவிடுமெல்லோ அதனால் போறிங் இருப்பதில்லை.

    உங்களின் கனவுக் கதை படிக்க வருகிறேன்... மியாவும் நன்றி வரவுக்கும்.. வோட் போட மறந்து போனமைக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))


    ReplyDelete
  21. மேலே முதன் முதலாக காட்டியுள்ள பூனை குதிக்கும் அனிமேஷன் இப்போது தான் கவனித்தேன்.

    ரொம்ப நல்லா இருக்குது.;)

    ஒருவேளை புதிதாக பிறகு தான் சேர்த்தீங்களோ!

    தேம்ஸில் அடிக்கடி குதிப்பதாகச்சொல்லும் அதிரா போலவே இந்த மியாவும் குதிப்பது போல குதித்து விட்டு, மீண்டும் இந்தப்பக்கம் மீண்டு ஓடிவந்து மீண்டும் குதித்து
    ஒரே கலாட்டா பண்ணுது.

    இனி என்னிடம் நீங்க வோட் கேட்கவே தேவை இருக்காது.

    அஞ்சுவைக் கேளுங்கோ ... அனுப்பி விட்டேன் ... அஞ்சாமல், நம் அஞ்சுவுக்கு.

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    [பரிசு ஏதும் இருந்தால் கொரிக்கக் கொரியரில் அனுப்பி வையுங்கோ.
    [care! ONLY "V" ITEMS]

    ReplyDelete
  22. Mahi said...
    Arun wanted to to this movie, but am scared of this space, 3D movies etc., but heard that it's a good movie n Sandra Bullock acted well in the movie. :)//

    வாங்க மகி வாங்க... நீங்க பயமெனில் பார்க்காதீங்க.. அப்பப்ப திடுக்கிட வைக்கும்... ஸ்பேஸுடன் சேர்ந்து நம் தலையும் சுழல்வது போல எல்லாம் வந்துது...

    முன்பு இப்படிட்தான் NEMO கிட்ஸ் படம் பார்த்து 3 டி யில்.. அது மீன்கள் எல்லாம் முகத்தினுள் வருவதுபோல வரத்தொடங்கிட்டுது:)... நாம் எல்லாம் கையால அடிச்சுக் கலைச்சு..:)) தியேட்டரில் அனேகம் பேர் கையால விசிக்கிய வண்ணம் இருந்தார்கள்.. ஹா..ஹா..ஹா.. பின்பு படம் முடிந்ததும் ஒரே சிரிப்புத்தான்ன்..

    அவரைப் பார்க்கச் சொல்லுங்க, நீங்க பயமெனில், டிவிடி வந்தபின் பாருங்க..

    மியாவும் நன்றி மகி.


    ReplyDelete
  23. Cherub Crafts said...
    ஆஆஆ மீஈ லாண்டட் :)) ஸ்பேசில் தான் :) உங்க புண்ணியத்தில் :)//

    ஆவ்வ்வ்வ் வாங்க மஞ்சு வாங்க.. ஆ லாண்டட் ஆஆஆ?:) அப்போ மேலே ஸ்பேஷில் குதிக்கும் பூஸுக்கு... சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை எனச் சொல்லுறீங்க?:))

    எனக்கும் பிடிக்கும் இந்த மாதிரிபடங்கள் ..ஆனா மன திடம் கொஞ்சூண்டுதான் என்பதால் எப்பவும் எண்டிங் ஹாப்பி ஆகஇருந்தால் மட்டுமே பார்ப்பேன் :))//

    உண்மைதான் அஞ்சு.. ஆனா இது ஓகே... பார்க்கலாம்:).

    ReplyDelete
  24. Cherub Crafts said...
    அப்படியே தியேட்டர்ல உக்கார்ந்து பார்க்கிற அனுபவம் எனக்கு ..தொடருங்கள் உங்கள் விமரிசனங்களை :))

    படங்களுக்கு விமர்சனம் எழுதுங்கோ எனச் சொல்லி ஆவலைத் தூண்டி விட்டவர் மணிதான். இப்படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போதே.. உடனேயே விமர்சனம் எழுதோணும் என மனம் துடிக்கத் தொடங்கிட்டுது.. அதுதான் அவசரமாக எழுதிப் போட்டேன்ன்.. அவ்ளோ பிடிச்சிருந்ததெனக்கு..

    அப்புறம் ஒரு ரகசியம் சொல்வேன் யாருக்கும் சொல்ல கூடாது ..நான் தியேட்டரில் ஒன்லி கார்ட்டூன் படங்களை மட்டுமே ஆசைப்பட்டு பார்ப்பேன் :))
    ஹா..ஹா..ஹா.. எனக்கு உடனேயே நித்திரை வந்திடும்..:) கொஞ்சமும் நித்திரை கொள்ளாமல் முழிச்சிருந்து பார்த்த ஒரே படம்.. Poosh in Boots:))

    மியாவும் நன்றி அஞ்சு.

    ReplyDelete
  25. அது மீன்கள் எல்லாம் முகத்தினுள் வருவதுபோல வரத்தொடங்கிட்டுது:).///

    garrrrrrrrr :))

    ReplyDelete
  26. எனக்கு நீங்க கதை சொன்ன விதம் மிகவும் பிடித்திருக்கு,பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன்.அதென்ன ஃபிஷ் or சிக்கன் ..எனக்கு ஃபிஷ் தான்..

    ReplyDelete
  27. vanathy said...
    விமர்சனம் சூப்பர். எனக்கு எப்பவும் டமார், டுமீர் என்று சுட்டு, ஓடித் திரிந்தால் தான் படம் பார்க்கும் மூட் வரும்///

    வாங்கோ வான்ஸ் வாங்கோ.. அச்சச்சோ.. எனக்கு உப்படியான படங்கள் எனில் அந்தப் பக்கமே போகமாட்டனே:)).. சண்டை சச்சரவு இல்லாமல் இருப்பின் தான் படம் பார்க்க பிடிக்குது... ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்...

    எங்கள் பெரியம்மாவின் மகள் இருக்கிறா... அவவுக்கும் சண்டை எனில் நல்லா பிடிக்கும்.. அவவும் சேர்ந்து கைதட்டிக் கத்துவா... அடி அடி விடாதே துரத்து.. எண்டெல்லாம்ம்ம் ஹா..ஹா..ஹா..

    மியாவும் நன்றி வான்ஸ்.

    ReplyDelete
  28. வை.கோபாலகிருஷ்ணன் said...

    வெரி ஸாரி ... அதிரா
    உண்மையில் மறந்துட்டேன்.

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதில சொறி சொல்ல என்ன இருக்கு கோபு அண்ணன்...

    நம் அஞ்சு மூலமாக உங்களுக்குத் தகவல் தருகிறேன்.

    அது உங்களுக்கு மிகவும் சாதகமாகவே இருக்கும்.

    அதாவது நீங்களே என் சார்பில் வோட் போட உங்களுக்கு உரிமை தரப்படும். ஓக்கேவா ?//

    இல்லை கோபு அண்ணன் எனக்கு வேண்டாம்.. அப்படியெல்லாம் எனக்கு நானே வோட் போட எனக்கு விருப்பமுமில்லை, அப்படி ஐடி இருந்தால் மட்டும் போட முடியாது. ஒரு கொம்பியூட்டரில், ஒரு நெட்வேர்க்கில் இருந்து ஒரு வோட் மட்டுமே போட முடியும்... இல்லையெனில் எல்லோரும் பல ஐடி கிரியேட் பண்ணி பல வோட்டுக்கள் போட்டு விடுவினமே.

    ஆனாலும் நீங்க மனமுவந்து தர நினைத்தமைக்கு மிக்க மிக்க நன்றிகள். எனக்கு அது வேண்டாம்.

    எனக்கு முன்பு இப்படி தமிழ் மணத்தில் இணையும் ஐடியா இருக்கவில்லை, முன்னர் ஜலீலாக்கா, ஸாதிகா அக்கா.. இன்னும் சிலர்.. இப்படி இணையுங்கோ அப்போ நல்லம் என சொல்லியிருக்கினம், ஆனா நான் இணையவில்லை... எனக்கென ஒரு குட்டி உலகம் இங்கிருக்கு அது போதுமே என நினைத்திருந்தேன்.

    பின்பு மாத்தியோசி மணிதான் சொன்னார், பின்னூட்டத்துக்காக என இல்லை, நீங்க இப்படி இணைத்தால், உங்களின் நகைச்சுவை கலந்த பதிவு பொதுவாக எல்லோருக்கும் பிடிக்குது, அப்போ அது ஒரு வட்டத்துக்குள் நின்றிடாமல்... நிறையப்பேர் பார்ப்பினம், எனக்கூறி அவர்தான் த.மணத்தில் இணைத்து விட்டார்.

    அதன் பின்னர் எனக்கு ஆர்வக் கோளாறு அதிகமாகிட்டுது.. அப்போ வோட்டுக்கள் கிடைத்து தமிழ் மணத்தின் என் பெயரோடு பதிவு தெரியவும், ஓன்லைனில்5,6,8,9 பேர் படிச்சுக்கொண்டிருக்கினம் என விட்ஜெட்டில் காட்டும்போதும் சந்தோசம் அதிகமாகி.. இது ஒரு கேம்போல ஆகிட்டுது.

    அதனால நான் எல்லோரையும் மிரட்டுவதில்லை:)... குறிப்பா அஞ்சுவை இளமதியை மிரட்டுவேன்ன்ன்:).. வோட் பண்ணுங்கோ இல்லையெனில் பாம்பு காலை சுத்தும்... பூச்சி கடிக்கும் எண்டெல்லாம்ம்:)... இது கூட ஒரு நகைச்சுவையே[ஆனா அதுக்கு முன்பே அவர்கள் வோட் பண்ணியுமிருப்பினம் ஹ்ஹா..ஹாஅ.. ஆனாலும் நான் மிரட்டுவதை நிறுத்துவதில்லை:))(எனக்கு பிடிச்சிருக்கு.. கேட்கிறேன்ன் அவ்வளவுதான்..:))].. மற்றும்படி எல்லோரிடமும் நான் வோட் போடச் சொல்லி கேட்பதில்லை...


    ஊசிக்குறிப்பு:

    இனி என் பதிவுக்கு மீண்டும் வாங்கோ. கலக்குங்கோ.///

    அதுக்காக வோட் பண்ணினால்தான் பின்னூட்டம் போடுவாவாக்கும் அதிரா என நினைச்சிடாதீங்கோ.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்படியெனில் நான் தமிழ் மணத்தில் இணையாத காலங்களில் எல்லாம், ஏனையோருக்குப் போட்ட பின்னூட்டம்ம்ம்????...

    வோட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை... நான் எதுக்காகவும் ஆரோடும் கோபிப்பதுமில்லை... எல்லாம் நகைச்சுவையே... நேரம் கிடைக்கையில் எல்லாம் வந்து பின்னூட்டமிடுவேன்ன்ன்.. அது வேறு இது வேறு:))

    உஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆஆஆஆஆ.. பிச்சை வாணாம் நாயைப் பிடிச்சாலே போதும்ம்ம் என்றாகிட்டுது என் நிலைமை:).. ஹா..ஹா..ஹா.. தகவலுக்கு மிக்க நன்றி கோபு அண்ணன்.

    ReplyDelete
  29. viyapathy said...
    விமர்சனம் சூப்பர். உங்கள் விமர்சனம் படிக்க படம் பார்க்க ஆவலாக இருக்கு.

    வாங்கோ வையாபதி வாங்கோ.. கொஞ்ச நாட்களாக உங்களைக் காண முடியவில்லையே.. பிசியாக இருந்தீங்களாக்கும்...

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  30. priyasaki said...
    எனக்கும் வோட்டிங்கார்ட் கிடைச் சாச்சு.வோட்டும்பண்ணியாச்சு.
    வாங்கோ அம்முலு வாங்கோ... நேரம் கிடைச்சால் ஓடி முடியமுன் தியேட்டரில் பாருங்கோ..

    ஹா..ஹா..ஹா.. வோட் பண்ணியாச்சோ விடமாட்டனில்ல:)).. போன பதிவிலும் பின்னூட்டம் போட நேரமில்லாமல் போனாலும் வோட் பண்ணியிருக்கிறீங்க... மியாவும் நன்றி அனைத்துக்கும்.

    ReplyDelete
  31. இளமதி said...

    வாங்கோ இளமதி வாங்கோ.. உண்மையில் இது 3டி யில் பார்க்கும்போதுதான் சூப்பர்... நாஅமும் அதனுள் போய்ப் பார்ப்பதுபோல ஃபீல் பண்ணுவோம்ம்...

    மியாவும் நன்றி..


    த ம.7/// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
  32. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மேலே முதன் முதலாக காட்டியுள்ள பூனை குதிக்கும் அனிமேஷன் இப்போது தான் கவனித்தேன்.

    ரொம்ப நல்லா இருக்குது.;)

    ஒருவேளை புதிதாக பிறகு தான் சேர்த்தீங்களோ!

    இல்லை கோபு அண்ணன்... என் பக்கத்தில் எப்பவுமே... “பூனை வரும் பின்னே:), மணி ஓசை வரும் முன்னே”:) என்பதுபோல, புதுப்பதிவு வருவதற்கு சற்று நிமிடங்களுக்கு முன்பு, மேலே புதியது மாற்றி விடுவது என் வழக்கம்:).. இனிமேல் .. புதிப்பதிவு படிக்கு முன்.. மேலேயும் படியுங்கோ..

    இனி என்னிடம் நீங்க வோட் கேட்கவே தேவை இருக்காது.

    அஞ்சுவைக் கேளுங்கோ ... அனுப்பி விட்டேன் ... அஞ்சாமல், நம் அஞ்சுவுக்கு.

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !//

    எப்பவுமே நாங்களே.. ரீ ஊத்தி நாங்களே குடிச்சால்ல் அதில் ஒரு சுவை இருப்பதில்லை:).. அதுபோலத்தான்ன்ன்... ஏனையோரை மிரட்டி:) அவர்கள் வந்து வோட் போட்டு.. அதனால் எண்ணிக்கை கூடி, தமிழ் மணத்தில் தெரியும்போதுதான் ஒரு ஹப்பி:)).. என்னைப் பொறுத்து இதை ஒரு கேமாகவே நினைப்பேன்ன்ன்..:). மற்றும்படி எனக்கு ஏதும் வேண்டாம்.

    ReplyDelete
  33. Cherub Crafts said...
    அது மீன்கள் எல்லாம் முகத்தினுள் வருவதுபோல வரத்தொடங்கிட்டுது:).///

    garrrrrrrrr :))//

    அச்சச்சோஒ மீன், பூஸ் போல உறுமுதே:)) றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவ்வ்வ்வ்வ் பழக்க தோஷத்தில கூப்பிட்டு விட்டேன்ன்ன்ன்.. வெடி சொடி றீச்சார்ர்ர்:)))..

    இன்னுமொன்று கூப்பிடும்போது லெவலாக இருக்கும்:)... ஆனா கூப்பிடாமலே விட்டால்ல் ஹையோ அதிரா இப்போ கூப்பிடுவதை நிறுத்திட்டாவே எனக் கவலை வரும்:))).. ஹா..ஹா..ஹா.. அந்தக் கவலை றீச்சருக்கு வந்திடக்கூடாது எண்ட:) ஒரே காரணத்தால்தான் மீயும் கூப்பிடுறனான்ன்:))).. ஹா..ஹா.. எப்பூடியெல்லாம் சமாளிக்க வேண்டிக் கிடக்கு:)).

    ReplyDelete
  34. Asiya Omar said...
    எனக்கு நீங்க கதை சொன்ன விதம் மிகவும் பிடித்திருக்கு,பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன்.அதென்ன ஃபிஷ் or சிக்கன் ..எனக்கு ஃபிஷ் தான்..//

    வாங்கோ ஆசியா வாங்கோ.. இப்போதான் தியேட்டர்களில் ஓடும்.. சந்தர்ப்பம் கிடைச்சால் பாருங்கோ பிடிக்கும்.

    ஹா..ஹா..ஹ.. அது இப்போ நாங்க கிட்டத்தட்ட 36,37 நாட்கள் விரதமாக்கும்.. அது முடிஞ்சுது.. அதுதான்ன்ன்.. முதன் முதலா எதில கை வைக்கலாம் என யோசனை:))..

    மியாவும் நன்றி ஆசியா.. வோட் பண்ணியமைக்கும்.

    ReplyDelete
  35. அதிரா படம் அனுப்பி கண்ணாடியும் அனுப்பினால் பார்க்கலாம். ;)

    விமரிசனம் சூ...ப்பர் அதீஸ்.

    ReplyDelete
  36. இமா said...
    அதிரா படம் அனுப்பி கண்ணாடியும் அனுப்பினால் பார்க்கலாம். ;)
    ஆவ்வ்வ்வ் றீச்சர் வந்திருக்கிறாக.. நான் கூப்பிடேல்லை:) நான் கூப்பிடேல்லை:)) ஹையோ இப்ப அதுவா முக்கியம்?:)).. வாங்கோ இமா வாங்கோ...

    ஹா..ஹா..ஹா.. என்னாது படமும் கண்ணாடியும் அனுப்புறதோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ பொப்கோனும் கோக்கும் வாணாமோ?:)) நல்லாத்தான் கிட்னி வேர்க் பண்ணுது:))..

    மியாவும் நன்றி இமா.


    ReplyDelete

  37. ஜனனீ ஜனனீ
    ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ
    பரிபூரணி நீ
    ஜகத் கா...ரணி நீ...
    பரிபூரணி நீ...
    ஜனனீ ஜனனீ...ஜனனீ ஜனனீ
    ..
    ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடைவார்குழலும் இடை வாஹனமும்
    கொண்ட நாயகனின் குளிர் தேஹத்திலே
    நின்ற நாயகியே இட பாகத்திலே

    ஜகன்மோகினி நீ
    சிம்ஹவாஹினி நீ
    ஜகன்மோஹினி நீ
    சிம்ஹவாஹினி நீ
    ஜனனீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ..
    சதுர் வேதங்களும்
    பஞ்ச பூதங்களும்
    ஷண் மார்க்கங்களும்
    சப்த தீர்த்தங்களும்
    ஷண் மார்க்கங்களும்
    சப்த தீர்த்தங்களும்
    அஷ்ட யோகங்களும்
    நவ யாகங்களும்
    தொழும் பூங்கழலே
    மலைமாமகளே
    அலைமாமகள் நீ
    கலைமாமகள் நீ
    அலைமாமகள் நீ
    கலைமாமகள் நீ
    ..
    ஜனனீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

    ..
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
    லிங்கரூபிணியே மூகாம்பிகையே
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
    லிங்கரூபிணியே மூகாம்பிகையே
    பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
    பணிந்தேத்துவதுன் மணி நேத்திரங்கள்
    பணிந்தேத்துவதுன் மணி நேத்திரங்கள்
    ஷக்திபீடமும் நீ...ஆ. ...ஆ....ஆ.....
    அ......ஆ.....
    ஷக்திபீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
    ஷக்திபீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
    ஷக்திபீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
    ஷக்திபீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
    ஷக்திபீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
    ஜனனீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜனனீ ஜனனீ ஜனனீ ஜனனீ
    ஜனனீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ

    ReplyDelete
  38. யூ ட்யூப் மூலமும் கொடுத்து அருமையாய் கதையும் சொல்லி -அதிரா- த கிரேட் அதிரா -
    ஆகிட்டீங்க ..பாராட்ட்டுக்கள்..

    ReplyDelete
  39. அதிரா நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பக் கொடுத்து வச்சவங்க !

    அம்பாள் மூலம் அம்பாள் பாட்டுக் கிடைத்துள்ளதே !!
    ;)))))

    பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் !

    புதன் கிழமையும் அதுவுமா பொன்னைவிடச் சிறந்த ஜனனீ ஜனனீ பாடலே கிடைத்துள்ளது ....

    இந்தப்பாடலைப் பாடியவரின் சொந்தக்குரலிலேயே, அதுவும் நேரில் கேட்கும் பாக்யம் சமீபத்தில் எனக்கு திருச்சியில் கிடைத்தது.

    ALL THE BEST ATHIRA !

    VGK

    ReplyDelete
  40. வணக்கம் சகோதரி..
    3D படம் பற்றிய தங்கள் விமர்சனம் மற்றும் செய்திகள் அருமையாக இருந்தது. படம் பார்க்க வேண்டுமெனும் ஆவல் பிறந்துள்ளது. தங்கள் ரசிப்புத்தன்மை மற்றும் குறும்புத்தனம் கண்டு வியப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி சகோதரி. தங்கள் தளத்தை பின் தொடர இயலாமைக்கு மன்னிக்கவும் சகோதரி..

    ReplyDelete
  41. இராஜராஜேஸ்வரி said...

    ஜனனீ ஜனனீ////

    ஆவ்வ்வ்வ் வாங்கோ ராஜேஷ்வரி அக்கா... ஒரு “கர்” க்கு இவ்ளோ பவரா?:) ஹா..ஹா..ஹா..

    மிக்க மிக்க நன்றிகள்... இதுக்கான மிகுதிப் பதிலை.. கீழே கோபு அண்ணனின் பின்னூட்டத்துக்குச் சொல்கிறேன்ன்ன்.

    ReplyDelete
  42. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அதிரா நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பக் கொடுத்து வச்சவங்க !

    அம்பாள் மூலம் அம்பாள் பாட்டுக் கிடைத்துள்ளதே !!//

    ஓம் கோபு அண்ணன், எனக்கு இப்பாடல் மிக மிகப் பிடிக்கும்... ஆனா ஏனோ தேடி எடுக்கோணும் என நினைப்பதில்லை... இப்போ கிடைச்சிட்டுதே... பிரிண்ட் பண்ணி காண்ட் பாக்கில் வச்சிருக்கப் போகிறேன்ன்ன்...

    ராகத்தோடு பாடப் போகிறேன்ன்ன்.. :)).. இனிமேல் பாருங்கள் அதிராவை:))

    மிக்க மிக்க நன்றி கோபு அண்ணன்.

    ReplyDelete
  43. அ. பாண்டியன் said...
    வாங்கோ பாண்டியன் வாங்கோ.. மிக்க நன்றிகள். நேரம் கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.

    என்பக்கத்தை பின் தொடர முடியாவிட்டாலும்.. பின்னூட்ட விட்டிட்டீங்கள்.. அதுக்கு மியாவும் நன்றி.


    ReplyDelete
  44. நீங்கள் கூறிய சில காட்சிகள் இன்னொரு ஸ்பேஸ் படமான யூரோப்பா மிசன் என்கிற படத்திலும் இருக்கு...

    நல்ல படம் என்று பலர் சொல்லிவிட்டீர்கள் ...
    இங்கே வர பல நாட்கள் ஆகும்

    ReplyDelete
  45. ஒரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுவதால் சில நேரங்களில் நீங்கள் குறிப்பிட்டது போல வர முடியாமல் போகிறது. (நேரம் கிடைக்கும்போது நிச்சயம் உங்கள் பதிவுகளைத் தேடி படிப்பேன்.மியாவ் மேல் ஆணை)

    ReplyDelete
  46. படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகின்ற விமர்சனம்! அடுத்த வருடம் பார்க்கலாம் 3டியை!

    ReplyDelete
  47. பூனைக்கு மீனா? இறைச்சியா ?இல்லை சைவப்பூனையோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  48. Mathu S said...
    நீங்கள் கூறிய சில காட்சிகள் இன்னொரு ஸ்பேஸ் படமான யூரோப்பா மிசன் என்கிற படத்திலும் இருக்கு...
    வாங்கோ மது வாங்கோ.. முதல் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி...

    ஓ அப்படியா, நான் யூரோப் மிஷன் பார்க்கவில்லை... முடிந்தால் டிவிடியில் பார்க்கிறேன்.


    நல்ல படம் என்று பலர் சொல்லிவிட்டீர்கள் ...
    இங்கே வர பல நாட்கள் ஆகும் //

    உண்மையில் மிக நல்ல படம், நானறிந்து ஒருவர்கூட, படம் சரியில்லை என்றோ, அல்லது பெரிசா நல்லாயில்லை என்றோ சொல்லவில்லை.

    இங்கத்தைய ஒரு வெள்ளைக்காரப் பெண், சுமார் 20 வருடங்களாக சினிமாவே பார்ப்பதில்லையாம்.அவகூட ைப்படம் பற்றிக் கேள்விப்பட்டு, ஓடிப்போய்ப் பார்த்துவிட்டு, சூப்பர் படம் என்றாவாம்.

    மியாவும் நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  49. தனிமரம் said...
    படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகின்ற விமர்சனம்! அடுத்த வருடம் பார்க்கலாம் 3டியை!
    வாங்கோ நேசன் வாங்கோ... ஹா..ஹா..ஹா.. அடுத்த வருடம் 3டி பார்க்கலாம்:) ஆனா கிரேவிட்டி இருக்காதே:))..

    உங்கட பரிஸ் மோல்லில்.. ஒரு பெரீய ஆப்பிள் ஸ்டோர் இருக்கும் மோல்ல்.. அதிலிருக்கும் தியேட்டரில் ஓடுது போய்ப் பாருங்கோ:))


    தனிமரம் said...
    பூனைக்கு மீனா? இறைச்சியா ?இல்லை சைவப்பூனையோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    நோஓஓஓஓஓஒ.. சைவம் எல்லாம் முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்:)))..

    மியாவும் நன்றி நேசன்.

    ReplyDelete
  50. Viya Pathy said...
    ஒரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுவதால் சில நேரங்களில் நீங்கள் குறிப்பிட்டது போல வர முடியாமல் போகிறது. (நேரம் கிடைக்கும்போது நிச்சயம் உங்கள் பதிவுகளைத் தேடி படிப்பேன்.மியாவ் மேல் ஆணை)//

    அடடா.. இதை மிஸ் பண்ணிட்டனே.. வெறி சொடி:)... வாங்கோ வியபதி வாங்கோ...

    ஓ நீங்க ஒரு பேராசிரியரா... இங்கு சொன்னால் மட்டுமே தெரியுது.. புரொஃபைலில் எதுவும் இருப்பதில்லை.... அப்போ பயங்கர பிசியானவராகத்தான் இருப்பீங்க.. அதன் மத்தியிலும் வருகை தருவதற்கு மியாவும் நன்றி.

    நோஓஓஓஓஓஓ மியாவ் மேல வாணாம்ம்:) “என்பக்க” வழக்கப்படி, புஷ்பா அங்கிள் கடையிலே வாங்கின:) புகை வராத கற்பூரம்:) வச்சிருக்கிறேன்ன்.. அதன் மீதுதான் ஆஆஅடிச்சு சத்தியம் பண்ணோனும்:)).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி.

    ReplyDelete
  51. நல்ல விமர்சனம் அதிரா படம் பார்க்க தூண்டுகிறது வீடியோவும் நன்றாக உள்ளது

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
  52. வாங்கோ சீராளன் வாங்கோ.. நான் கொஞ்சம் பிசியாகிட்டேன்ன், இனி புதுவருடத்தோடுதான் பழையபடி கலக்குவேன் என நினைக்கிறேன்.

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  53. அருமையான விமர்சனம் அதிரா. போன மாதம்தான் தியேட்டரில் இப்படத்தைக் குடும்பத்தோடு கண்டுகளித்தோம். நீங்கள் சொல்வது போல் சீக்கிரமே படம் முடிந்துவிட்டாற்போன்று இருந்தது. இன்னும் கொஞ்சம் நீளாதா என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம். மேலும் கதாநாயகியின் மனோபலம் நம்மை வியக்கவைக்கும். விண்வெளியிலேயே ஒரு திரைப்படத்தை எடுத்துமுடிக்க எவ்வளவு திறமை வேண்டும். இதற்காக நாசா விண்வெளிக்கூடத்தில் விண்வெளி வீரர்கள் பயிற்சியெடுக்கும் தளத்தில் நடிகர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டதாம். மேலும் காமிராமேன் உதவியாளர்கள் போன்றவர்களுக்கும் விண்வெளியில் மிதந்து படம்பிடிக்கப் பயிற்சியளிக்கப்பட்டதாம். எவ்வளவு சிரத்தையோடும் சிரமத்தோடும் படம் எடுக்கிறார்கள். வியக்கவைத்த அற்புதமான படம். உங்கள் விமர்சனம் வாசிக்கையில் மீண்டும் படம் பார்த்த உணர்வு. பாராட்டுகள் அதிரா.

    ReplyDelete
  54. வணக்கம்
    3D படம் பற்றிய விமர்சனம் மிக நன்றாக உள்ளது விமர்சனத்தை பார்த்த பின் படம் பார்த்த மாதிரியான மகிழ்ச்சி... இந்த விமர்சனத்தை பார்த்தும் படம் பார்க்கா விட்டால் எப்படியிருக்கும்......
    என் வருகை இனிதொடரும்.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  55. வணக்கம்
    3D படம் பற்றிய விமர்சனம் மிக நன்றாக உள்ளது விமர்சனத்தை பார்த்த பின் படம் பார்த்த மாதிரியான மகிழ்ச்சி... என் வருகை தொடரும்.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  56. வாங்கோ கீத மஞ்சரி வாங்கோ.. நல்ல தகவல்கள் சொல்லியிருக்கிறீங்க.. உண்மைதான் இப்படி ஒரு படம் எடுப்பது எவ்ளோ கஸ்டம்.. அதிலும் நடிப்பவர்கள் எவ்வளவு ஹெல்த்தியானவர்களாக இருக்க வேண்டும்.

    இதற்காக நாசா விண்வெளிக்கூடத்தில் விண்வெளி வீரர்கள் பயிற்சியெடுக்கும் தளத்தில் நடிகர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டதாம். //
    உந்தப் பயிற்சி எடுக்கும் தளத்துக்குத்தான் ஒருமுறையாவது போய் நானும் அங்கு மிதந்து திரிய வேணும் என்பது என் தீராத ஆசை.... நிறைவேறுமோ தெரியல்ல:))..

    மியாவும் நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete
  57. வாங்கோ ரூபன் வாங்கோ... படம் தியேட்டரில்... 3 டியில் அதுவும் ஐமக்ஸ் தியேட்டரில் பார்க்கோணும்.. சூப்பரோ சூப்பர்.

    நீங்க தொடர்ந்து வாறீங்க.. நான் உங்கள் பக்கம் வந்து பின்னூட்டம் போட்டேன், ஆனா அது என்னமோ தடுக்குது, அக்‌ஷெப்ட் பண்ணுதில்லை, இளமதி பக்கம் இதை சொல்லியிருந்தேன் நீங்க கவனித்தீங்களோ தெரியவில்லை, மீண்டும் வந்து ட்ரை பண்ணுவேன்ன்..

    மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்களுக்கும்.

    ReplyDelete
  58. நல்ல அறிமுகம்

    படத்தின் ஸ்பாயிலரை படித்த மாதிரியே இருந்தது

    நானும் பார்தேன்
    ஃப்ரோசன் பார்த்தாச்ச?
    http://www.malartharu.org/2013/12/frozen.html

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.