நாம் பரிஷிலே(Paris) போயிருந்தபோது, பலதடவைகள் ஈபிள் டவருக்குப் போயிருக்கிறோம், பிள்ளைகளுக்கு அதிகம் பிடித்த இடமாக அது இருந்தது, அதனால் பெரும்பாலான பின்னேரங்கள், அங்கு போனோம்.
அங்கு அதிகமாக சைனீஸ்தான் இப்படியான தொழில் செய்கிறார்கள்.. அதாவது, எமது முகத்தை வரைகிறார்கள்.. முன்னாலே இருக்க விட்டு கடகடவென வரைவார்கள்.. அதுக்கு எடுத்துக் கொள்வது வெறும் 5, 6 நிமிடங்கள் மட்டுமே... அப்படம் இன்னொரு நாளில் வெளிவர இருக்கிறது:).
இப்போ இது என்ன தெரியுமோ? இதுவும் ஒருவர், இரண்டு நிமிடங்களுக்குள் வரைந்தவையே இவை. சும்மா பக்குப் பக்கென கீறித் தள்ளுகிறார். முன்னாலே பிரஷும் பெயிண்ட்டும் இருக்கும்.. அவரின் கை பின்னி பெடலெடுக்குது.
சரி, படம் போல பார்த்திட்டுப் போகாமால்.. படத்தில் இருப்பது என்ன? கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.. தீபாவளிக்கு இலவச இனிப்பு உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும்:)
அங்கு அதிகமாக சைனீஸ்தான் இப்படியான தொழில் செய்கிறார்கள்.. அதாவது, எமது முகத்தை வரைகிறார்கள்.. முன்னாலே இருக்க விட்டு கடகடவென வரைவார்கள்.. அதுக்கு எடுத்துக் கொள்வது வெறும் 5, 6 நிமிடங்கள் மட்டுமே... அப்படம் இன்னொரு நாளில் வெளிவர இருக்கிறது:).
இப்போ இது என்ன தெரியுமோ? இதுவும் ஒருவர், இரண்டு நிமிடங்களுக்குள் வரைந்தவையே இவை. சும்மா பக்குப் பக்கென கீறித் தள்ளுகிறார். முன்னாலே பிரஷும் பெயிண்ட்டும் இருக்கும்.. அவரின் கை பின்னி பெடலெடுக்குது.
சரி, படம் போல பார்த்திட்டுப் போகாமால்.. படத்தில் இருப்பது என்ன? கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.. தீபாவளிக்கு இலவச இனிப்பு உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும்:)
இது ஒன்று:)
இது ரெண்டு:)
இரண்டையும் கரீட்டாக் கண்டு பிடித்துச் சொல்லோணும்:)
_________________________(^-^)__________________________
குண்டூசி இணைப்பு:
கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும் எனத் தெரியுமெல்லோ உங்களுக்கு? ஆனா அதை நேரில் பார்த்ததுண்டோ?:)) இதோ குயிலிங் செய்யுதே அஞ்சு வீட்டுச் செல்லம்:)).. என்ன அயகா:) கதிரையில் இருந்து.... ஸ்ஸ்ஸ் எல்லாம் அதிராட ட்ரெயினிங்தான்ன்ன்ன்:)))
ஊசி இணைப்பு:)
தேம்ஸ் கரைமீது அடித்துச் சத்தியம் பண்ணுறேன்ன்ன்:) இதை அதிரா செய்யவில்லையாக்கும்:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உஸ்ஸ்ஸ்ஸ் ஸப்ப்பாஆஆஆஆ.. இரவோடிராப் போய் ஒவ்வொரு வீடாய்த் தேடி:), இருட்டில சுட்டெடுத்து:) வருவதுக்குள் வாழ்க்கையே வெறுத்துப் போகுதே சாமீஈஈஈஈஈஈஈ:))
[[நான் முதலில் போட்டது அவசரமா சுட்டது, அதில் இருக்கும் எழுத்துக்கள் எனக்கே பிடிக்கல்ல, அதனால மாத்திட்டேன்ன்:))]]
என அலுக்காமல் சளைக்காமல், அடுத்த சூட்:) டுக்கு ஆயத்தமாபவர்... உங்கள் பேரன்புக்கும் + பெரு மதிப்புக்கும் உரிய : புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..
==================================================================================
|
Tweet |
|
|||
கீறீன படத்தைக்கானவில்லையே ???
ReplyDeleteபடத்தில் ஈபிள் படம் மட்டும் ஒழுங்கா தெரியுது அதன் ஊடே சுற்றுலா வாசிகள் அவர்களைப்பார்க்கும் சூரியன் இவையே இந்த தனிமரத்துக்கு தெரியுது:)))
ReplyDeleteதத்துவம் வழமைபோல சூப்ப்ப்ப்ப்ர் :))) அப்படியே ஒரு பால்க்கோப்பியும் தாந்தாள் தீபாவளி வாழ்த்துச்சொல்லியவண்ணம் குடிப்போம் இல்லையா?? :))
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குடும்பத்தார் அனைவருக்கும்!
ReplyDelete[co="blue green"] வாங்கோ நேசன் வாங்கோ... முதலாவதா வந்திருக்கிறீங்க..தீபாவளி சுவீட் எடுங்கோ.. நல்லவேளை.. உங்களுக்கு இதுபற்றி ஏதும் தெரியாமல் போய்விட்டது:).. நான்,
ReplyDeleteமுக்கிய குறிப்பு,ஃபிரான்ஸ்சில இருப்போர் சொல்லிட வேண்டாம்..
எனப் போட நினைத்துப் போடாமல் விட்டேன்ன்:).. அப்போ உங்களுக்கு இதுபற்றி தெரியாதுபோல..:) வெயிட் அண்ட் சீ:)
மிக்க நன்றி நேசன் உடன் வருகைக்கு. [/co]
[co="blue green"] ஓ மிக்க மிக்க நன்றி.. உங்களுக்கும் இனிய தலைத் தீபாவளி வாழ்த்துக்கள் நேசன்... [/co]
ReplyDeleteதனிமரம் said...
ReplyDeleteகீறீன படத்தைக்கானவில்லையே ???
[co="blue green"]ஓ.. எனக்கே தடுமாறுதே.. கீறின படம் விரைவில் வெளிவரும்... அதில் ஒரு சொந்தக் கதை:) சோகக் கதையுமுண்டு:) [/co]
ATHIRA MIYAAV :)))
ReplyDeleteits written in chinese :))
i want the prize money in dhinaars :)
இன்னாது டிரெஇனிங்கா:)) ஓஹோ ::)) என் க்வில்லிங் டூல் இப்போ காணோம் ..நீங்க தான் அதுக்கும் பொறுப்பு :))
ReplyDeleteGarrrrr for athira and Jessie :)
அது சீன மொழி calligraphy யில் அதிர மிஇயாவ் @:)) முன்பு இமாவும் இப்படிஎழுதின பேரை போட்ட்ருந்தாங்க
ReplyDelete//படத்தில் இருப்பது என்ன? கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.. தீபாவளிக்கு இலவச இனிப்பு உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும்:)//
garrrrr no i wont agree ..நான் ஒத்துக்க மாட்டேன் ...தெரிஞ்சிருந்தா பதில் தந்திருக்க மாட்டேன் ...வேணும்னா ஒன்னு செயலாம் ..நம்ம ஜெய் வருவார் அவருக்கு கொடுங்க நீங்க செஞ்ச ஸ்விட்சை
ரசித்தேன்...
ReplyDeleteஇனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
செமக்கலக்கல் பதிவு அதிரா!
ReplyDeleteஅதில என்ன இருக்கு... சின்னப்பிள்ளை படங்கீறின மாதிரி இருக்கு...
இதில என்னா இருக்கூஊ...
ம்ஹும்.. தெரியேலை.. ஆனா படம் அழகா இருக்கு!
ஒருவேளை அஞ்சு சொன்னதுதானோ.. இருக்கும்!
நேரம் இண்டைக்கு போதேலை எனக்கு. மீ ரயேட்...:(
நாளைக்கு வாறன்...:)
உங்கள் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் அதிரா!
த ம.6
ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
ReplyDeleteதமிழ் மனம் ஏற்ற எனது 7-வது வோட்டு
இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்..!
ReplyDeleteஎன் அறிவுக்கு எட்டிய வரை ஒன்றும் புலப்படவில்லை சகோதரி..
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ...
Happy Diwali to Athira & Family! :)
ReplyDeleteNice photos, I can't find what's there in those drawings. Eifle tower, some fishes, sun, swans are things I could see! :)
Jessie is a cutie pie..did her Mom know u r going to publish her photo in public? ;)
Nice quilled card..where did u shoot it Ms.Myav?
Cherub Crafts said...
ReplyDeleteATHIRA MIYAAV :)))
[co="blue green"] வாங்கோ அஞ்சு வாங்கோஓஓஓஒ.... [/co]
its written in chinese :))
[co="blue green"] ஹையோ என்ர வைரவா... முச்சந்தி முனியாண்டீஸ்வரா...... அஞ்சுவை ஆர் ஒரு ஆங்கில நாட்டில் இருக்க விட்டதூஊஊஊஊஊஊஊ:)).. ஆண்டவா இதை மட்டும் எங்கட குயின் அம்மம்மாட கண்ணில படாமல் பாரப்பா:).. you are nearly there:)). [/co]
i want the prize money in dhinaars :)//
[co="blue green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பதிலே சொல்லல்ல:) அதில பரிசாம்ம் அதுவும் தினார் மணியிலயாம்ம்ம்ம்... இதைக் கேட்க ஆருமே இல்லையாஆஆஆஆஆ:).. [/co]
Cherub Crafts said...
ReplyDeleteஇன்னாது டிரெஇனிங்கா:)) ஓஹோ ::)) என் க்வில்லிங் டூல் இப்போ காணோம் ..நீங்க தான் அதுக்கும் பொறுப்பு :))
Garrrrr for athira and Jessie :)
//[co="blue green"] இதென்ன வம்பாப் போச்சு ஆண்டவா:)) டூலைக் காணல்லியாமே...:) அது, சிம்பு வச்சிருந்ததைப் பார்த்தோம் அஞ்சு:))) [/co]
[im]http://www.cutestpage.com/pictures/Hiding_Cat.jpg[/im]
Cherub Crafts said...
ReplyDeleteஅது சீன மொழி calligraphy யில் அதிர மியாவ் @:)) முன்பு இமாவும் இப்படிஎழுதின பேரை போட்ட்ருந்தாங்க.
[co="blue green"] ஹா..ஹா..ஹா... கரெக்ட்டா நினைவு வச்சுப் பிடிக்கிறீங்க அஞ்சு.. ஆனா இது உங்களுக்குத் தெரியுமே... முதல் படத்தில் முதலாவது படத்தை மட்டுமாவது உற்றுப் பாருங்க.. அதிலிருக்கும் படத்தை கவனிக்க வேண்டாம்ம்:)) [/co]
//படத்தில் இருப்பது என்ன? கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.. தீபாவளிக்கு இலவச இனிப்பு உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும்:)//
garrrrr no i wont agree ..நான் ஒத்துக்க மாட்டேன் ...தெரிஞ்சிருந்தா பதில் தந்திருக்க மாட்டேன் ...வேணும்னா ஒன்னு செயலாம் ..நம்ம ஜெய் வருவார் அவருக்கு கொடுங்க நீங்க செஞ்ச ஸ்விட்சை
[co="blue green"] ஆவ்வ்வ்வ்வ்வ்.. போன தடவை ஏதோ கனவில ரோட்டு மாறி இங்கின வந்திட்டார் ஜெய்:)).. இப்போ பழையபடி கடலினடியில் தலைகீழ் ஆசாஆஆஆஆஆஅனம் செய்யப் போயிட்டார்போல இருக்கே:))
மியாவும் நன்றி அஞ்சு... என்சோய் யுவ வீக்கெண்ட்.[/co]
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteரசித்தேன்...
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
[co="blue green"] வாங்கோ தனபாலன் வாங்கோ.. உங்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்.
மியாவும் நன்றி. [/co]
இளமதி said...
ReplyDeleteசெமக்கலக்கல் பதிவு அதிரா!
[co="blue green"] வாங்கோ இளமதி வாங்கோ... ஹா..ஹா..ஹா.. எதை வச்சுச் சொல்றீங்க?:) [/co]
அதில என்ன இருக்கு... சின்னப்பிள்ளை படங்கீறின மாதிரி இருக்கு...
இதில என்னா இருக்கூஊ...//
[co="blue green"]ஓஓஒ நோஓஓஓஓ.. எல்லோரும் படத்தைமட்டுமே ருசிச்சு ருசிச்சு பார்க்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஈசியாயிருக்கு உங்களுக்கு புரியும் கண்டுபிடிங்க:)
மியாவும் நன்றி இளமதி.
உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். [/co]
நம்பள்கி said...
ReplyDelete[co="blue green"] வாங்கோ நம்பள்கி வாங்கோ.. [/co]
ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
[co="blue green"] ஹா..ஹா..ஹா... இதுதான் நசுக்காக சொல்லிவிடுவது என்பதோ?:)).. அதனாலென்ன மொய்க்கு பொய்:).. சே..சே.. டங்கு ஸ்லிப்பாச்சு..:) மொய் வச்சிட்டால் போச்சூ:)) [/co]
தமிழ் மனம் ஏற்ற எனது 7-வது வோட்டு
[co="blue green"] அடடா வந்த வேகத்திலேயே வோட் பண்ணிட்டீங்களோ... மியாவும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.. [/co]
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஇனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்..!
[co="blue green"]வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ... உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். புது உடுப்பு அணிஞ்சிட்டீங்களோ???? [/co]
மகேந்திரன் said...
ReplyDeleteஎன் அறிவுக்கு எட்டிய வரை ஒன்றும் புலப்படவில்லை சகோதரி..
[co="blue green"] வாங்கோ மகேந்திரம் அண்ணன் வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. முடிவில் சொல்கிறேன்ன்.. அட இதுவோ என ஆச்சரியப் படுவீங்க... ஆனா சூப்பரா இருகும்:). மியாவும் நன்றி. [/co]
[ma][co=" green"]உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
அதிரா உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்படி இங்கும் வரைபவர்களை பார்த்திருக்கேன் அதிரா. இந்த ஆர்ட்டில்
ReplyDeleteஆங்கில எழுத்துக்களை உருவங்கள் மூலமாக வரைந்திருக்கிறார். முதலாவது எழுத்து E.சரியா.எனக்கு இப்படித்தான் தெரியுது.
அஞ்சுவின் செல்லம் ஸோ ஸ்வீட்.நல்ல குறும்பு செய்வா ர் போல.
அழகாய் இருக்கு க்விலிங்.நீங்க செய்ததுதானே.
பூஸானந்தா மொழி மிக அருமை.
HAPPY DIWALI
Mahi said...
ReplyDeleteHappy Diwali to Athira & Family! :)
[co="blue green"] வாங்கோ மகி வாங்கோ.. [/co]
Nice photos, I can't find what's there in those drawings. Eifle tower, some fishes, sun, swans are things I could see! :)
[co="blue green"]ஹா..ஹா..ஹா.. எல்லோருமே வெளி அழகில மயங்கிட்டீங்க:) அதனால அதனுள் ஒளிஞ்சிருக்கும் விஷயம் கண்ணில தெரியுதில்லை:) வெயிட் அண்ட் சீயா:))
எங்கட றீச்சரைக் காணல்ல:) அவ பார்த்திருப்பா:) ஆனா முடிவு தெரியாமல் கால் வைக்க மாட்டா:))) இப்போ ஓசிச்சுக் கொண்டிருந்து ஓசிப்பா:)).. வந்து சொல்லுவா பாருங்கோ:)).. றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) [/co]
[ma][co=" green"]உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
Mahi said...
ReplyDeleteJessie is a cutie pie..did her Mom know u r going to publish her photo in public? ;)
[co="blue green"]அச்சச்சோஒ.... திருத்தணி முருகா... மேல்மருவத்தூர்க் குமரா.... புளியடி வைரவாஆஆஆஆஆஆ... அமெரிக்காவில இருந்தமா, ஒபாமா அங்கிளைப் பார்த்தமா:) என இருக்காமல், பூஸிட வாலையும் அஞ்சுட ஜெஷிட வாலையும் பிடிச்சுக் கட்டிப்போட்டுப் பத்த வைக்கப் பார்க்கினம்ம்ம்:)).. ...
நாங்க மகிட, அஞ்சுட படங்களைக்கூட கேட்காமல் போட்டாலும் போடுவம் இங்கின:) ஆனா அவிகட செல்லங்களின் படங்களைச் சொல்லாமல் கொள்ளாமல் போட மாட்டமாக்கும்:))...
ஆவ்வ்வ்வ்வ்வ்வ் அதாரது ஓடுறது:)) ஓடாதீங்க ஓடாதீங்க.. நில்லுங்கோ:) அப்பூடி என்ன சொல்லிட்டேன்ன் நான்ன்ன்:)).. இதென்ன வம்பாப் போச்செனக்கூஊஊஊஊ:)) எல்லோரும் பயந்து ஓடீனமே:)) [/co]
Nice quilled card..where did u shoot it Ms.Myav?
[co="blue green"] ஹையோ விடுங்கோ விடுங்கோ.. என்னைத் தடுக்காதீங்க.. மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:)).... எதைப் பார்த்தாலும் எங்கின சுட்டாய் எனக் கேட்கினமே:) இதைக் கேட்க ஆருமே இல்லையாஆஆஆஆஆஆ?:))..
சே..சே.. இண்டைக்கு தீபாவளி என்பதால என் முடிவை மாத்திக்கிறேன்ன்:))... நாளைக்கு வச்சிக்கலாம்ம்:) தேம்ஸ்க்குப் போவதைத்தான்ன்:))..
ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மகி.. [/co]
[ma][co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
தமிழ்மணத்தில் 9வது வோட் என்னுடையது, அதிரா.
ReplyDeleteகருத்துக்கள் சொல்ல அப்புறமா வருவேன். ஜாக்கிரதை,
மங்களம் பொங்கும் திருநாளாக
ReplyDeleteமனதினில் இந்நாள் நிலைத்திடவே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !
[im]http://3.bp.blogspot.com/-ZKc-rTZDsDc/UnTToYv9DZI/AAAAAAAAFxA/KZccUIwdZtw/s640/anchana.jpg[/im]
ReplyDelete[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
ReplyDeletepriyasaki said...
ReplyDeleteஅதிரா உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
[co="blue green"]வாங்கோ அம்முலு வாங்கோ.. மியாவும் நன்றி வாழ்த்துக்கு. [/co]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
priyasaki said...
ReplyDeleteஇப்படி இங்கும் வரைபவர்களை பார்த்திருக்கேன் அதிரா. இந்த ஆர்ட்டில்
ஆங்கில எழுத்துக்களை உருவங்கள் மூலமாக வரைந்திருக்கிறார். முதலாவது எழுத்து E.சரியா.எனக்கு இப்படித்தான் தெரியுது.
[co="blue green"] ஹா..ஹா..ஹா... கரிட்டு.. சூப்பர் அதேதான்ன்.. எங்கே ஏனையவற்றை ஆர் கண்டு பிடிக்கினம் எனப் பார்ப்போம். [/co]
அழகாய் இருக்கு க்விலிங்.நீங்க செய்ததுதானே.
[co="blue green"]ஹா...ஹா..ஹா.. கிக்..கிக்...கீஈஈஈஈஈ தீபாவளி இண்டைக்கே என்னை ஜெயிலுக்குள் தள்ளப்போகினமே முருகாஆஆஆஆஆ.. நான் உன் சூரன்போர் பார்க்கோணும்:))..
ஹா..ஹா... மியாவும் நன்றி அம்முலு... [/co]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
//அப்படம் இன்னொரு நாளில் வெளிவர இருக்கிறது:).//
ReplyDeleteஅந்தப்படம் எனக்கு உடனே இப்போதே வேண்டும்.
முக்கியமான அதை விட்டுவிட்டு ஏதேதோ கதை விடுறீங்களே, அதிரா. ;((((((
நியாயமா?
//தீபாவளிக்கு இலவச இனிப்பு உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும்:)//
ReplyDeleteஎனக்கு இலவச இனிப்பு வேண்டாம்.
அந்த ஓவியர் பின்னிப் பெடலெடுத்த, கீறப்பட்ட, அதிராவின் முகமுள்ள படம் தான் வேண்டும். ;)))))
//குண்டூசி இணைப்பு:
ReplyDeleteகம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும் எனத் தெரியுமெல்லோ உங்களுக்கு? ஆனா அதை நேரில் பார்த்ததுண்டோ?:)) இதோ குயிலிங் செய்யுதே அஞ்சு வீட்டுச் செல்லம்:)).. என்ன அயகா:) கதிரையில் இருந்து.... //
அஞ்சு வீட்டிலிருந்து சுட்டதா?
பாவம் நம் அஞ்சு !
//ஸ்ஸ்ஸ் எல்லாம் அதிராட ட்ரெயினிங்தான்ன்ன்ன்:)))//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
சுட்டதோடு இல்லாமல் இது வேறயா ?
//ஊசி இணைப்பு:)
ReplyDeleteதேம்ஸ் கரைமீது அடித்துச் சத்தியம் பண்ணுறேன்ன்ன்:) இதை அதிரா செய்யவில்லையாக்கும்:)//
சத்தியம் என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் எதற்கு அதிரா?
எப்படியும் நாங்கள் நம்பப்போவது இல்லை.
எங்கோ சுட்டுவந்தது என நல்லாவே எல்லோருக்கும் தெரியுமே! ;)
கடைசி படமும் பொன்மொழிகளும் அருமை, அதிரா.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
அன்புடன் + இனிய தீபாவளி நல்வாழ்த்துகளுடன் .. கோபு
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதமிழ்மணத்தில் 9வது வோட் என்னுடையது, அதிரா.
[co="blue green"] வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. ஹாஅ..ஹா..ஹா... வோட் பண்ணாட்டில்.. கிளிக்கு நித்திரைக் குளிசை கொடுத்திடுவேனாக்கும்:)...
ஊசிக்குறிப்பு: அம்முலு எனக்கு வோட் பண்ணவில்லையாக்கும்:( [/co]
கருத்துக்கள் சொல்ல அப்புறமா வருவேன். ஜாக்கிரதை,//
[co="blue green"] வாங்க வாங்க.. அதுசரி எதுக்கு ஜாக்க்ர்தையாம்ம்ம்?:))..நாம சுட்ட இடத்துக்கு ஏதும் தகவல் அனுப்பிட்டாரோ... சே..சே... அப்பூடி இருக்காது நாம என்ன இண்டைக்கு நேற்றா சுடுறம்:)).. எதுகும் ஜாக்ர்ர்தையா மேல ஏறி இருப்பம் சாமீஈஈஈஈ:).. நாங்க ஆரு? வருமுன் காப்போனாக்கும்..க்கும்..க்கும்:) [/co]
[im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRa4o-xd3QFyPS0Kz99ZRplzDKIjBBwCapSUc2peG9lqNBE1xlv[/im][ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
E I L E E N, இரண்டாவது C A M I L U
ReplyDeleteபிழையான எழுத்துக்களுக்கு குறைத்துக் கொண்டு பரிசைக் கொடுங்கள். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
Viya Pathy said...
ReplyDeleteE I L E E N, இரண்டாவது C A M I L U//
[co="purple"] வாங்கோ வையாபதி வாங்கோ... ஆவ்வ்வ்வ்வ்வ் முதலாவது கரெக்ட்ட்.. ரெண்டாவது தும்பி இருப்பது எழுத்தல்ல.. அது டிஷைனாம்ம்... நீங்க கரெக்ட்டாப் பிடிச்சிட்டீங்க.. அது AHIL என வரும்...
அப்போ இம்முறை தீபாவளி ஸ்வீட்ஸ்ஸ் உங்களுக்கே....:) லேட்டா வந்தாலும்.. கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க.. பரிசு ஷிப்பில் போடுகிறேன்ன் வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்:))
மியாவும் நன்றி. [/co]
[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
[co="blue green"] வாங்கோ அம்பாளடியாள் மியாவும் நன்றி. [/co]
ReplyDelete[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
படத்தில் இருப்பது என்ன? கண்டு பிடித்துச் சொல்லுங்கள்....படத்தில் இருப்பது அந்த சைனீஸ் ஆள் கீறிய படங்கள். இது எப்பூடி? படம் விளங்குற மாதிரி தெளிவா இருக்கு. இதிலை இவக்கு ஒரு சந்தேகம்! மீ எஸ்....
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteதூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
//மேல்மருவத்தூர்க் குமரா....//
ReplyDeletebiggggggggg mistake :)
haa haaa haaa thats kundrathoor kumaran athis ...:))
இதுக்குத்தான் நான் வரணும் :)) மெகா மகா ஜனங்களே மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி மட்டும் தானே இருக்காங்க
மேடம் சொல்றது சரியா தப்பா :))
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அதிரா ...!
ReplyDeleteஒண்ணுமே புரியல்லே ஒலகத்திலே....!
சரி, படம் போல பார்த்திட்டுப் போகாமால்.. படத்தில் இருப்பது என்ன? கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.. தீபாவளிக்கு இலவச இனிப்பு உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும்:)//
ReplyDeleteஈபிள் டவரு
அருமையாய்
வரைந்திருக்கே...!!!
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//தீபாவளிக்கு இலவச இனிப்பு உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும்:)//
எனக்கு இலவச இனிப்பு வேண்டாம்.//
[co="red purple"]நோஓஓஓஓஓ அது வையாபதி அடிச்சிட்டார்ர்.. உங்களுக்கு கிடையாது:) [/co]
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//
அஞ்சு வீட்டிலிருந்து சுட்டதா?
பாவம் நம் அஞ்சு !
[co="red purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))[/co]
//ஸ்ஸ்ஸ் எல்லாம் அதிராட ட்ரெயினிங்தான்ன்ன்ன்:)))//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
சுட்டதோடு இல்லாமல் இது வேறயா ?
[co="red purple"]ஹா..ஹா..ஹா.. இது சைட் பிஸ்னஸ்:) [/co]
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//ஊசி இணைப்பு:)
தேம்ஸ் கரைமீது அடித்துச் சத்தியம் பண்ணுறேன்ன்ன்:) இதை அதிரா செய்யவில்லையாக்கும்:)//
சத்தியம் என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் எதற்கு அதிரா?
[co="red purple"]அப்பூடியா சொல்றீங்க?:)) [/co]
எப்படியும் நாங்கள் நம்பப்போவது இல்லை.
எங்கோ சுட்டுவந்தது என நல்லாவே எல்லோருக்கும் தெரியுமே! ;)[co="red purple"]அட ஆண்டவா கடசியில கவிட்டுப் போட்டாரே... விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறது போறதுதான்ன்... அஞ்சூஊஊஊஊஊஊஊஉ எதுக்கும் என் கையைப் பிடிங்க அஞ்சு.. :)[/co]
[co="red purple"] மிக்க நன்றி கோபு அண்ணன்.. வருகைக்கும் கருத்துக்களுக்கும்.[/co]
ReplyDelete[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
vanathy said...
ReplyDeleteபடத்தில் இருப்பது என்ன? கண்டு பிடித்துச் சொல்லுங்கள்....படத்தில் இருப்பது அந்த சைனீஸ் ஆள் கீறிய படங்கள். இது எப்பூடி? படம் விளங்குற மாதிரி தெளிவா இருக்கு. இதிலை இவக்கு ஒரு சந்தேகம்! மீ எஸ்....
[co="red purple"] ஆவ்வ்வ்வ் வாங்க வான்ஸ்ஸ் வாங்க... என்னா ஒரு கண்டு பிடிப்பூஊஊஊஊஊஊ:) இப்ப புரியுது ஒபாமா அங்கிள் அமெரிக்கர்களை எல்லாம் விட்டுப் போட்டு ஏன் பிரித்தானியாவுக்கு வந்து, அதிராவை செக்கரட்டரியாப் போட்டவர் என:)).. ஹா..ஹா..ஹா...
மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்.. அதுசரி எங்கட றீச்சர் எங்க வான்ஸ் போயிட்டா? என்ர கேள்வியைப் பார்த்ததோட காணாமல் போயிஒட்டாவோ?:)[/co]
[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
கி. பாரதிதாசன் கவிஞா் said...
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
[co="red purple"]வாங்கோ கவிஞர் பாரதிதாசன் வாங்கோ வாழ்த்துக்கு மிக்க நன்றி.[/co]
[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
Cherub Crafts said...
ReplyDelete//மேல்மருவத்தூர்க் குமரா....//
biggggggggg mistake :)
haa haaa haaa thats kundrathoor kumaran athis ...:))
இதுக்குத்தான் நான் வரணும் :)) மெகா மகா ஜனங்களே மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி மட்டும் தானே இருக்காங்க
மேடம் சொல்றது சரியா தப்பா :))
[co="red purple"]ஆவ்வ்வ்வ்வ்வ் கண்ணுக்குள்ள எண்ணெய் விட்டு, அதிராவை “மட்டும்” ஆராட்சி செய்கினமே வைரவா:)..
அதுவந்து அஞ்சு.. பராசக்தியின் யங் சன்னைக்:) கூப்பிட்டேன் அது டப்பாஆஆஆஆஆ???:)).. தாயோடதானே மகன் இருப்பார்ர்??:)).. ஹையோ எப்பூடி எல்லாம் சமாளிக்க வேண்டிக் கிடக்கே:)).. இதைவிட, பேசாமல் குல்ட்க்குள் படுப்பது, இந்தக் குளிருக்கு எவ்வளவோ மேல்..:)) [/co]
[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
சீராளன் said...
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அதிரா ...!
[co="red purple"]வாங்கோ சீராளன் வாங்கோ... [/co]
ஒண்ணுமே புரியல்லே ஒலகத்திலே....!
[co="red purple"] நேக்கும்தான்ன்.. ஹா..ஹா..ஹா...
மியாவும் நன்றி சீராளன்.[/co]
[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
[co="purple"]அடடா மீண்டும் ராஜேஸ்வரி அக்கா!!! வாங்க.. வாங்க..
ReplyDeleteநோஓஓஓஓஓஒ.. அதுக்கு சரியான விடையை வையாபதி அவர்கள் சொல்லி.. தீபாவளி ஸ்வீட்ஸைத் தட்டிச் சென்று விட்டார்ர்......
முதலாவது EILEEN, 2nd AHIL .. எனும் எழுத்துக்கள். ஒரு பேப்பரில் நாங்க எழுதிக்கொடுக்க, அவர் கடைக்கண்ணால் பார்த்திட்டு, பிரசை எடுத்து பெயிண்ட்டைத் தொட்டு.. மின்னி முழக்குகிறார்ர்... [/co]
[co="OrangeRed"] இது, சரியான விடையைக், கரெக்ட்டாக்:) கண்டுபிடித்த வையாபதி அவர்களுக்கு.. தீபாவளி சுவீட்ஸ்ஸ்.. பெட்டி பெட்டியா வழங்குகிறோம்ம்:)).. [நாங்க சொன்னால் சொன்னதுதானாக்கும்:)]
ReplyDeleteமுழுவதும் அவருக்கே.. வேற ஆரும் டச்ச்சு பண்ணிடப்பூடா:) அதுக்காக பூஸார் காவல்:))[/co]
[im]http://images.sodahead.com/polls/000543879/polls_cat_gun_5307_144501_answer_1_xlarge.jpeg[/im]
[im]http://webylife.com/wp-content/uploads/2010/11/25-Diwali-Sweet-shopping.jpg[/im]
Happy Diwali Athira &your family!
ReplyDeleteஅஞ்சூஊஊஊஊஊஊஊஉ எதுக்கும் என் கையைப் பிடிங்க அஞ்சு.. :)[/co]//
ReplyDeletenooooooooo :))
எனக்காகவைர நெக்க்லஸ் வெயிட்டிங் ..நீங்க தனியாவே தேம்சில் குதிங்க :))
நித்திரைக் கலக்கத்தில தட்டுறன். என்னதான் நடந்தாலும் ஒருவரும் ரீச்சரைக் கூப்பிடுறேல்ல, இப்பவே சொல்லீட்டன்.
ReplyDeleteம்.... ஒரு விரலில தும்பி நிற்கப் போகுது. மற்ற விரல் நகம் இதயத்தைக் குத்தப் பார்க்குது. குளத்தில் தாரா சோடி, தாமரை பறக்கும் மீன், பூவில வண்ணத்துப்பூச்சி தேன் குடிக்குது, ஈஃபில் டவருக்குக் கீழ பூஸானந்தா தியானம் செய்யுறார், ட்ராகன், தங்கமீன்கள், மூங்கில், பறவை, சூரியன், மீண்டும் ஒரு இதயம்.
இரண்டாவது.... தும்பி, 'தாரா', ஈஃபில் டவரைப் பார்க்க வணக்கம் என்று கை கும்பிடுற மாதிரி இருக்கு, 'லவ்' ஃபிஷ், பூ & வ.பூச்சி, சூரியோதயம் / அஸ்தமனம், பறக்கும் பறவைகள், தும்பி & பூஸானந்தா (பன்டாதானே அது!) ம். கதை முடிஞ்சுது.
ஜெஸி... கம்பன் வீட்டுக் கட்டுத்தறி ;D ஸ்வீட்.
தீபாவளி வாழ்த்தும் வடிவா இருக்கு அதீஸ்.
நான் ரொம்பவும் லேட் போல.தீபாவளி வாழ்த்தும் பகிர்ந்த ஆர்ட்டும் அருமை.பறப்பன,ஊர்வன, மிதப்பன என்று அசத்தலாக இருக்கு.கருத்துக்கள் சூப்பர்.
ReplyDelete[co="red purple"] வாங்கோ விஜி வாங்கோ... நலம்தானே?.. மியாவும் நன்றி.[/co]
ReplyDelete[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
Cherub Crafts said...
ReplyDeleteஅஞ்சூஊஊஊஊஊஊஊஉ எதுக்கும் என் கையைப் பிடிங்க அஞ்சு.. :)//
nooooooooo :))
எனக்காகவைர நெக்க்லஸ் வெயிட்டிங் ..நீங்க தனியாவே தேம்சில் குதிங்க :))
[co="red purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதென்ன புயுக்கதையாக்கிடக்கூஊஊஊஊஊஊ:) மீ தானே வைர நெக்லஸுக்கு ஓடர் கொடுத்தேன்ன்ன்ன்:)).. மணத்திட்டுதோ அஞ்சுக்கு:))... இனிக் கொஞ்சம் ஜாக்க்க்ர்தையாத்தான் இருக்கோணும் சாமீஈஈஈஈஈஈஈ:)[/co]
[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
இமா said...
ReplyDeleteநித்திரைக் கலக்கத்தில தட்டுறன்.
[co="red purple"]ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ இமா வாங்கோ.. ரீ தரட்டோ? இல்ல கொஃபியோ?:) [/co]
என்னதான் நடந்தாலும் ஒருவரும் ரீச்சரைக் கூப்பிடுறேல்ல, இப்பவே சொல்லீட்டன்.
[co="red "]அது..அது.... றீச்சர் எண்டால் றீச்சர்தான்ன்ன்:)) மக்கள்ஸ்ஸ் பாருங்கோ றீச்சர் என்ன சொல்லியிருக்கிறா புரியுதோ?:)...”அதாவது, அதிராவைத் தவிர, ஆருமே, என்ன நடந்தாலும் றீச்சரைக் கூப்பிடுறேல்லையாம்ம்:))... ஆஆஆஆஆஆவ்வ்வ்வ் அதிரா மட்டும்தான் கூப்பிடுறாவாம்ம்ம்ம்”..(இப்பூடி பொஸிட்டிவ்வா சிந்திக்கோணுமாக்கும்):)..தங்கூ றீச்சர் தங்கூ.. இதுக்குத்தான் சுவீட் 16 ஆட்களோட மட்டும் பழகோணும் எண்டு அம்மம்மா அடிக்கடி சொல்றவ:))[/co]
[co="red purple"] இது அதிராவின் மனச்சட்டி.. சே..சே... டங்ஸ் ஸ்லிப்பாகுதே சாமி.. மனச்சாட்சி:- [/co][co="red "]அதிரா அடங்கு.. அடங்கு:) றீச்சர் தன்னைக் கூப்பிட வாணாம் எண்டுதான் சொல்லியிருக்கிறா.. வடிவாப் படிச்சுப்பார்:)) [/co][co="red purple"]ஓஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அதுவா சங்கதி:).. அப்போ இனி க்றிஸ் அங்கிளைக் கூப்பிட்டுச் சொல்லிட வேண்டியதுதான்ன்ன்...:)) [/co][co="red purple"]ஹையோ.. அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊ.. யெல்ப் மீ.. ஜெல்ப்மீஈஈஈஈஈஈ றீச்சர் தடியெடுத்துக் கலைக்கிறா... என்னால ஓட முடியல்ல... எஸ்கேஏஏஏஏஏஏஏஏஏப்ப்ப்ப்ப்ப்ப்:)) [/co]
[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
[co="red purple"]மியாவும் நன்றி இமா, சரியான விடை மேலே சொல்லிட்டான்ன்ன்ன்.. பரிசும் கொடுத்தாச்சூஉ... அஞ்சுவிலதான் சந்தேகம்:) ஏதோ பார்ட்டிக்கு சுவீட் தேவை எண்டவ:) அதுதான் பூஸார் காவல் இருக்கிறார்ர்..:).. ஸ்ஸ்ஸ் படிச்சதும் கிழிச்சு, டிக்ஷி விளையாடக் கொடுத்திடுங்க இமா:). [/co]
ReplyDelete[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
[co="red purple"] வாங்கோ ஆசியா வாங்கோ... நலம்தானே?.. மியாவும் நன்றி.[/co]
ReplyDelete[ma]
[co=" green"] இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. [/co][/ma]
http://gopu1949.blogspot.in/2013/11/75-2-2.html
ReplyDeleteஅன்புள்ள அதிரா,
இதை வெளியிட்டு 28 மணி நேரம் ஆச்சு. ஏனோ இது டேஷ் போர்டில் தெரியவே இல்லை.
தங்கள் தகவலுக்காக மட்டும்.
பச்சைக்கிளி, முத்துச்சரம், முல்லைக்கொடி .. யாரோ!
நீங்களும் தான், வந்து பாருங்கோ.
அன்புடன் கோபு அண்ணன்
இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
ReplyDeleteதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.
தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .
பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)
நன்றி தீபாவளி ஸ்வீட்ஸ் வந்தவுடன் தகவல் தருகிறேன். நன்றி நன்றி
ReplyDelete