ஜொன்னா நம்போணும்:) மீ ஒரு அப்பாஆஆஆஆவி:)
அது ஒண்டுமில்லைப்பாருங்கோ.. ஒரு கிழமைக்கு புளொக் எழுதாமல், புளொக் பக்கம் எட்டிப் பாராமல் இருந்து பாருங்கோ.. பிறகு புளொக்ஸ் ஐ ஓபின் பண்ணவே மனம் வருகுதில்லை, பேசாமல் இருப்பதுதான் சுகந்திரம் போல தெரியும். அதேபோல ஒரு ஃபுல் ஸ்ரெந்துடன் களம் இறங்கினால்:) டெய்லி போஸ்ட் போடோணும் என நினைக்குது மனம்:)).. ஆனா பல நாட்கள் நினைவுடனேயே நின்று விடுகிறது ..
சரி படங்கள்தானே காட்டப்போகிறேன், தொகுத்துப் போட்டிடலாம் என நினைச்சேன், தொகுக்கவே நேரம் போதுமானதா இல்லை:).. இருப்பினும் பூசோ கொக்கோ... நான் செய்த பயிரைப் போட்டுக் காட்டி என் பெருமையை உலகறியச் செய்யாட்டில் ... தேம்ஸ்ல கூடக் குதிக்க மாட்டேனாக்கும்:)).. சரி சரி ஸ்ரெயிட்டா மற்றருக்கு வந்திடுவோம், போன பாகத்தில உருளைக்கிழங்குச் செடியும் வெங்காயமும் மட்டும் காட்டியிருந்தேன், இப்போ பாருங்கோ என் பயிர்ச் செய்கையையும் அறுவடையையும்:).. அடுத்த வருடம் ஜனவரியிலயே ஓடர்களைத் தந்திட்டால், இன்னும் நிறையச் செய்து அனுப்புவேன்ன்:))..
இது மர பீன்ஸ், மரமாக நின்று காய்க்கும். சாடியிலும், நிலத்திலும் வைத்திருக்கிறேன்.
இது புதினா, போன வருடம் ஒரு தடி ஊன்றி விட்டேன், இம்முறை இப்படி வளர்ந்திட்டுது.
இது நிலத்தில் வைத்திருக்கும் கபேஜ் லீவ்ஸ், நிறையத் தடவைகள் சுண்டி விட்டோம்.. இன்னும் இலைகள் வந்து கொண்டிருக்குது.
இது snow peas or sugar snap peas எனப்படும் , குளிரிலும் காய்க்கும் நன்கு.. இப்பவும் நிறையப் பூக்கள் வந்து கொண்டிருக்கு, ஆனா இனிப் பூக்காது, குளிர் ஓவரானால் இலைகள் கறுத்து விடும், வளர்ச்சி நின்று விடும்..
இது கிச்சின் வாசல் படி, கார்டின் செல்லும் பாதை, இதில் பெரிதாக புழுப்பூச்சி தாக்கம் இருக்காது என்பதால் சாடியிலும் வச்சிருக்கிறேன், ஆரம்பம் இப்படி இருந்து....
இப்போ இப்படி ஆகியிருக்கு, கம்பியைச் சுற்றி வளருது..
=========+++++++++++இடை...வேளை+++++++++++========
++++++++++++++(((((((((((())))))))))))))+++++++++++++
இது கார்டினில், நிலத்தில் வைத்தது.
இது இன்னொரு அறுவடை:)
இதில் தக்காழியைச் சுற்றி பீன்ஸ் வளருது.. தக்காளிக்காய்கள் தெரியுதோ?
இது இன்னொரு இடத்தில், பெட்டிபோல அடிச்சு அதில கடுகு விதைச்சேன், இப்பூடி வளர்ந்திட்டுதே அவ்வ்வ்வ்:))
கடுகு இலைகள் பிடுங்கிச் சுண்டி விட்டேன்:).. என் ஹெல்ப்பர்+கார்டியன்:) தெரிகிறாவோ.. ஒரு பூச்சி எனக்குக் கிட்ட வர விடமாட்டா.. கலைச்சுப் பிடிச்சிடுவா:)) இதில வண்ணாத்துப் பூச்சியும் அடங்கும்:)
இது பூசணிக் கொடு, இப்போதான் பூக்கள் வருது, இனி 3 லேட்ட்:)) ஒண்ணும் பண்ண முடியாது:(
இதுதான் நான் நட்ட மிளகாய்க்கன்று:).. நட்டு கொஞ்சம் வளர்ந்துது நிறையப் பூத்துது, ஆனா காய்கள் நகத்தளவு சைஸ்ல இருக்கு ஹா ஹா ஹா.. இதைத்தான் அன்று சொன்னேன், ஸ்ரீராம் வீட்டு மிளகாய்க்கன்று பார்த்து, எங்கள் வீட்டு மிளகாய்களைப் பார்த்தால் ஸ்ரீராம் மயங்கி விழுந்திடுவார் என்று:).. நம்மிடத்தில் கத்தரி+ மிளகாய் நல்லா வராது..
ஊசி இணைப்பு
ஊசிக்குறிப்பு:
என் புளொக்கில் வெஜ்ஜெட் எரர் எனக் காட்டியது, புளொக் ஓபின் ஆகவில்லை, சரி என்னவெனப் பார்போம் எனத் தேடிய இடத்தில், இனிமேல் http க்குப் பதில் https எனப் போடட்டாம் எனச் சொல்லியது. உங்களுக்கு என் புளொக் கொம்பியூட்டரில் ஓபின் ஆகாமல் இருப்பின்.. இப்படி ரைப் பண்ணினால் ஓபின் ஆகும்.. https://gokisha.blogspot.com
+++++++++++============_()_============+++++++++++
|
Tweet |
|
|||
வீட்டுத்தோட்டம் அழகு.
ReplyDeleteவிவரித்த விதம் அதைவிட அழகு.
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. வெள்ளை ரோஜாவா மாறி வந்திருக்கிறீங்க..
Deleteவீட்டுத் தோட்டம் பார்க்கவும் உடனேயே பிடுங்கி வந்து சமைக்கவும் அழகும் சுவையும் .. கூடவே பெருமையும்:).. இது எங்கள் கார்டின் வெஜிடபிள் அதனால சாப்பிடோணும் எனச் சொன்னாலே கடகடவென சாப்பிட்டு விடுவினம் ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.
தக்காளி காய் அழகு.
ReplyDeleteஇடைவேளை குறிப்பு சிரிப்பை ஏற்படுத்தியது.
ஊசி இணைப்பு நன்றாக இருக்கிறது.
அது என்னமோ தெரியல்ல கோமதி அக்கா.. எப்பவும் செரி ரொமாட்டோதான் என் கைக்குக் கிடைக்குது, பெரிய காய் காய்க்கும் கன்று கிடைப்பதில்லை, நாம் தக்காழி சமைப்பதில்லை என்பதால அதிகம் நடுவதில்லை, ஒரே ஒரு கன்று வாங்கி நட்டேன்.. அதுவும் தக்காழியை காயாகப் பிடுங்கி பால் விட்டுக் கறி வைத்தால் சூபர் சுவையாம் அதனால.. கடையில் பழம் மட்டும்தான் கிடைக்குது.
Deleteஒரு காய் பிடுங்கி பீன்ஸ் உடன் சமைச்சிட்டேன் ஹா ஹா ஹா:))
// ஒரு கிழமைக்கு புளொக் எழுதாமல், புளொக் பக்கம் எட்டிப் பாராமல் இருந்து பாருங்கோ.. பிறகு புளொக்ஸ் ஐ ஓபின் பண்ணவே மனம் வருகுதில்லை, பேசாமல் இருப்பதுதான் சுகந்திரம் போல தெரியும். அதேபோல ஒரு ஃபுல் ஸ்ரெந்துடன் களம் இறங்கினால்:) டெய்லி போஸ்ட் போடோணும் என நினைக்குது மனம்:)).. ஆனா பல நாட்கள் நினைவுடனேயே நின்று விடுகிறது//
ReplyDeleteநீங்கள் சொன்னது மிகவும் உண்மை அதிரா .
அதேதான் கோமதி அக்கா.. அனுபவப்பட்ட ஞானி[அது நாந்தேன்ன்:)] சொன்னாக் கேட்கோணும்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி கோமதி அக்கா.
Deleteபசுமையாக இருக்கிறதே தோட்டம் வாழ்க வளமுடன்
ReplyDeleteவாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. தோட்டம் எனில் பசுமைதானே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வேறு ஏதாவது ஜொள்ளுங்கோ:))..
Delete//வாழ்க வளமுடன்//
ஆஆஆஆ கில்லர்ஜியும் ஞானி ஆகிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா மிக்க நன்றி.
நான் தோட்டத்தைதான் வாழ்க வளமுடன் என்றேன்.
Deleteஇது மர பீன்ஸ், மரமாக நின்று காய்க்கும். / ஜாக் அண்ட் தெ பீன்ஸ் ஸ்டாக் என்னும்கதையில் வருமே அதுபோலவா
ReplyDeleteவாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..
Deleteஹா ஹா ஹா அந்த பீன்ஸ் கிடுகிடுவென வானத்தை நோக்கி வளரும்.. இது வளருதில்லையே:)) ஆனா இன்னும் கய்த்துக் கொண்டிருக்குது. இன்றுகூட மழை தூறிக்கொண்டிருக்குது, இடைவெளியில் போய் ஒரு 200 கிராம் வரை பீன்ஸ் அறுவடை செய்தேன்.
மிக்க நன்றி.
"நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" என்கிற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... ஹா ஹா ஹா நான் ஒரு பெரிய விவசாயியாக இருந்தாலும் இப்பூடி அடக்கொடுக்கமாக இருக்கிறேன் என்றுதானே?:) ஹையோ இதை அ.. பார்த்திடக்கூடா:)).. ஹா ஹா ஹா.
Deleteமிளகாயா? இது குடைமிளகாய் போல இருக்கிறதே...! எங்கள் மிளகாய் ஊசி மிளகாய்!!!
ReplyDeleteஇது குடை:) மிளகய்தான் ஆனா மிளகு சைஸ்ல காய்த்து அப்படியே இருக்குது கர்ர்:) இப்போ தூக்கி கிச்சினுள் வச்சிருக்கிறேன் குளிர் பிடிக்காமல்.. படுகுதுமில்லை பெருக்குதுமில்லை:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதனால ஒரு முடிவுக்கு வர முடியவில்லை ஹா ஹா ஹா:)
Deleteஉங்கள் செல்லம் பூச்சிகளைப் பிடிக்கிறது. எங்கள் செல்லம் நாங்கள் வைத்திருந்த கொத்துமல்லி இலைகளை கடித்துச் சேதப்படுத்தி விடுகிறது!
ReplyDeleteஹா ஹா ஹா அவ எனக்குக் கார்டியன், அவவை என்னோடு பார்ப்போருக்கு சரியான பொறாமை.. ஏனெனில் நான் கார்டினில் கால் வைத்தால் போதும்.. என் கூடவே அப்படியே அருகிலேயே சுற்ரி சுற்றி வருவா.. உருளைக்கிழங்கு நட்டபோது மட்டும் எடுத்து போல் போல விளையாடினா, மற்றும்படி, கீரை, கடுகு விதைச்சவுடன் அந்த மண்ணில் புரண்டு படுத்தா..
Deleteஉங்கள் செல்லம் பூனாச்சின் படங்கள் பார்த்தேன் ஸ்ரீராம் ஆறிய கஞ்சியாகிட்டமையால் பேசாமல் விட்டு விட்டேன்..
ஒளிந்து கொண்டிருக்கும் தக்காளியைக் (தக்காழியை அல்ல!) கண்டுபிடித்து விட்டேன்! கடுகு அறுவடை எப்படி... கஷ்டமில்லையோ அது!
ReplyDeleteஹா ஹா ஹா ஓ அது ளி:)) ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்:)..
Deleteகடுகு கடையில் வாஅங்குவது ஒவ்வொரு இலையும் குட்டி வாழை இலை சைஸ்சில இருக்கும்:).. இது நான் கிச்சினில் சமையலுக்கு இருந்த கடுகையே விதைத்தேன், அதனால துளசிபோல வாசம், சுண்டல் நன்றாக இருந்தது, மணம் கொஞ்சம் கஸ்டம்:)..
அப்படியே கீரை பிடுங்குவதுபோல வேரோடு பிடுங்கி, பின்னர் பிஞ்சுத்தண்டுடன் அரிந்து சுண்டல் செய்வேன்.
இடைவேளை ஜோக் ரசித்தேன். இன்ஜினியர் மகனிடம் அப்பா பேசும் (காட்டில், டென்டில்) ஜோக் நினைவுக்கு வருகிறது!
ReplyDeleteஹா ஹா ஹா ..ஓ எஞ்சினியர் ஜோக் எனக்குத் தெரியாதே..
Deleteஆக வீட்டைச் சுற்றிலும் செடி, மரங்கள் நிறைய வளர்க்கிறீர்கள் என்று தெரிகிறது. பாராட்டுகள். எனக்கு அந்தப் பொறுமை எல்லாம் கிடையாது.
ReplyDeleteகாலம் முழுக்க இப்படியே காலநிலை இருந்தால், எவ்ளோ நன்றாக இருக்கும்.. இது இப்போ 3 கிழமையாக தொடர் மழை சிணுங்கிக் கொண்டே இருக்கு.. இனி இப்படியே குளிராகி.. கடும் குளிராகிவிடும்.. செடிகளின் இலைகளும் மெதுவா பழுக்கத் தொடங்குது.. ஆனானுல் இந்த பீன்ஸ் மட்டும் நிறையக் காய்த்துக் கொண்டே இருக்குது... நட்டதன் பயனை அனுப்பவிப்பதுபோல இருக்கு.
Delete//கபேஜ் லீவ்ஸ்,//
ReplyDeleteஇலைகள் வருகிறது சரி... கேபேஜ் வருகிறதா? இதுதான் எங்கள் கேள்வி!
ஹா ஹா ஹா அதுதான் லீவ்ஸ் என்றேனே.. இவை வெறும் இலைகள் மட்டுமே தரும்.. இது நம் நாடுகளில் இல்லை என நினைக்கிறேன்..
Deleteபேசில் ஸ்பிரவுட்ஸ் உம் நட்டிருக்கிறேன்.. இலைகள்தான் வருது காயைக் காணோம்.. இனி எங்கே வரப்போகிறது... இலைகள் சுண்டலுக்கு உதவும்.
தேம்ஸில் குதிக்கப் போகிறேன் தேம்ஸில் குதிக்கப் போகிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.. கேரளாவில் தூங்கி கொண்டிருந்தவர்களை எல்லாம் தன்னில் குதிக்கச் சொல்லி வெள்ளம் வந்துவிட, அலறி ஓடி இருக்கிறார்கள் எல்லோரும்... :((
ReplyDeleteகுதிப்பேன் என்றுதானே ஜொன்னேன்ன்:) ஹா ஹா ஹா இது கிட்டத்தட்ட 10 வருடத்துக்கும் மேலாகச் சொல்லிச் சொல்லி என் நட்புக்களுக்குப் பழகி விட்டது:)..
Deleteகேரளா வீடுகள் இடிந்து விழும் வீடியோக்கள் பார்த்தேன் என்ன கொடுமை..இதனால்தான் பயம், நமக்கு எப்ப்போ எந்த வடிவில் எந்தப் பிரச்சனை வருமெனத் தெரியாது.. அதனால எப்பவும் அடக்கி வாசிக்கோணும்:).
இன்னொன்று, நான் பாவம் பார்ப்பது அதிகம்.. கொஞ்சம் ஓவராக ஐயோ பாவமே என,.. எது எதுக்கோ எல்லாம் ஃபீல் பண்ணுவேன், ஆனா அப்படி பாவம் பார்ப்பது தப்பு என்கிறார்கள்.. அது நமக்கே திரும்பி வரும் என மிரட்டுகிறார்கள்.. சரி பிழை தெரியல்ல.. ஆனா மனதைக் கொன்றோல் பண்ண முடிவதில்லை..
// ஆனா அப்படி பாவம் பார்ப்பது தப்பு என்கிறார்கள்... அது நமக்கே திரும்பி வரும் என மிரட்டுகிறார்கள்... //
Deleteஅடப்பாவிகளா...? இப்படியும் ஒரு மூடநம்பிக்கையா...?
இனிமேல் "இரக்கம் பற்றிய பதிவுகள் எழுதி என்ன பயன்...? என்று மேலே உள்ள உங்களின் கருத்துரையை சொல்லலாம் என்று நினைக்கிறேன்...
இருங்க, ஒரு நாள் நானும் ஸ்ரீராம் சாரும் வந்து தள்ளி விடுகிறோம்...! உங்களை அல்ல... மேலே உங்களை அற்பமாக நினைத்து மிரட்டியவங்களை... ஆமாம், அவங்களுக்கு நீச்சல் தெரியும் தானே...?
ஹா ஹா ஹா உண்மையில் டிடி இதில் எனக்கு நிறையவே குழப்பமாகிட்டேன், பாவம் பார்ப்பது அடுத்தவர்களுக்காக அதிகம் என் மனதை வருத்துவது.. அது தெரிந்தவர்கள் என்றில்லை... சதாமை தூக்கிலிட்ட அன்று நான் சாப்பிடவில்லை.. கடாபிக்கு நடந்த அன்று சாப்பிட முடியவில்லை.. சாகப்போகிறோம் நாளை எனத் தெரிந்தவுடன் ஒருவரது மனநிலை எப்படி இருக்கும் என எண்ணி எண்ணி நான் உடைஞ்சு போயிட்டேன்... இப்படி நிறையச் சம்பவங்கள் சொல்லலாம்ம்.. இப்படி ஓவர் ஃபீலிங்ஸ் வருவது தப்பு என்கிறார்கள்.. அது நான் வேணுமென்றா நடிக்கிறேன்ன்.. தானா வருவதுதானே.
Deleteஆனா அடுத்தவர்களுக்கு உதவி செய்வதை ஆரும் தப்பெனச் சொல்லவில்லை.. மாறிக் கணக்குப் போட்டு அவசரப்பட்டு தேம்ஸ்ல தள்ளிப்போடாதையுங்கோ ஆரையாவது, ஸ்ரீராமுடன் சேர்ந்து ஹா ஹா ஹா:)).
என்னில் இன்னொரு குணம், சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் கண்ணில் தண்ணி முட்டிவிடும்.. இதனால மிகவும் சங்கடப் படுவேன்..
அதாவது என் குடும்பத்தை அல்லது என்னை ஆரவது நல்லது.. நல்ல விசயம் இப்படிச் சொன்னால் கண்ணில் நீர் முட்டிவிடும்.. அதை காட்டிக் குடுத்திடாமல் வேறு பக்கம் பார்த்து கீழே பார்த்து அக்கண்ணீரை அடக்க நான் படும் பாடிருக்கே அப்பப்பா சொல்லி முடியாது ஹா ஹா ஹா.
இதனால்தான் சிலர் பெண்களின் ஆயுதம் கண்ணீர்..அழுதே சாதித்து விடுவார்கள் என்றெல்லாம் சொல்லும்போது எனக்கு தாங்க முடியாத கெட்ட கோபம் வரும்... ஏனெனில் அது தானாக வருவது.. சில வேளைகளில் அழ வேணும் என நினைச்சாலும் கண்ணீர் வராதே.
இதில இன்னொன்றும் தெளிவா சொல்லிடுறேன்.. என் வீட்டிலும் எல்லோரும் இப்படித்தான் என்னோடு சேர்ந்து பாவப்பட்டு இரக்கப்படுவார்கள்.
Deleteஆனா என்னைப்பார்த்து வெளியே இருந்துதான் சிலர் சொல்கிறார்கள் எப்படி எனில், நீ இப்படி அடுத்தவர்களுக்காக பாவம் பார்த்தால் அப்பாவம் உன் குடும்பத்தைத்தான் தாக்கும்.. அதனால ஓவராக பாவம் பார்க்காதே என:)) அப்போ நான் பயபடுவேனா மாட்டேனா?:). ஹா ஹா ஹா.
அப்பாவியின் பார்வை அழகாய்தான் இருக்கு. இப்போல்லாம் பூனைக்குட்டியின் பாஷையை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். காதிலேயே விழாமல் வாயைத் திறந்து "மியாவ்" என்று மியூட்டில் வைத்த டீவி போல சத்தம் செய்கிறது எங்கள் செல்லம்!
ReplyDeleteஹா ஹா ஹா உண்மைதான் ஸ்ரீராம், எங்கட பொம்பிளையின் ஒவ்வொரு சத்தத்துக்கும் எனக்கு அர்த்தம் புரியும்.. ஹா ஹா ஹா டோரைத் திறக்கச் சொல்லி கேட்கும்போது ஒருவித சவுண்ட்... சாப்பாடு கேட்கும்போது அப்பாவியாக முகத்தை வைத்து அது ஒரு வித சவுண்ட்...
Deleteஎன் கேள்விக்குப் பதில் சொல்லும்போது மட்டும் பூனாச்சுக் குட்டி மாதிரி வாயை மட்டும் திறப்பா.. சவுண்ட் வராது ஹா ஹா ஹா.. அதாவது தான் ரயேட்டாம் இருப்பினும் என் கேள்விக்கு மரியாதை கொடுத்து வாயசைக்கிறாவாமாம்ம்ம்ம் ஹா ஹா ஹா
தீபம் படத்தில் பூவிழி வாசலில் பாடலில் யேசுதாஸ் கிலியே கிலியே என்று கிலி மூட்டுவார்! அவருக்கு ளி வராது!!! மற்றபடி நல்ல பாடல்! இதே படத்தில் அந்தப்புரத்தில் ஒரு மகாராணி பாடல் கூட நன்றாய் இருக்கும்.
ReplyDeleteஹா ஹா ஹா படம் பார்த்து விட்டேன்.. அதில் அத்தனை பாடலும் அருமை..
Deleteஎன் ஜேசுதாஸ் அங்கிளைப் பழிக்கக்கூடாதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
வீட்டுத் தோட்டமும் வர்ணனையும அருமை சகோதரியாரே
ReplyDeleteவாங்கோ கரந்தை அண்ணன், மிக்க நன்றி.
Delete// புளொக்ஸ் ஐ ஓபின் பண்ணவே மனம் வருகுதில்லை, பேசாமல் இருப்பதுதான் சுகந்திரம் போல தெரியும். //
ReplyDeleteஹாஹா ட்ரூ :)
இன்னிக்கு கொஞ்சம் free அதனால் எட்டி பார்த்தேன் அதோட யாரோ போட்டோ போடறேன்னு ஷொன்னாங்களா அதையும் பார்ப்போம்னு வந்தா :) இருக்கட்டும் நிறையா கை கால் லாங் ஷாட் படங்கள் இருக்கு எல்லாத்தையும் ரிலீஸ் பன்னிரவேண்டியதுதான் :)
வாங்கோ அஞ்சு வாங்கோ..
Deleteஉண்மைதானே நாமெல்லாம் ஒரு இனம்:) ஹா ஹா ஹா..
பார்த்திட்டீங்களோ பார்த்திட்டீங்களோ.. அதாவது ஆனை:)) வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேயாம்ம்ம்:)).. இப்போ நிழலாகிய டூப்பூ இனித்தான் நிஜம் எனச் சொல்லிட்டார்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.
கும்பகர்ணனுக்குதான் ஆறுமாத தூக்கம் ஆறுமாத விழிப்புன்னு சொல்வாங்க. லண்டன் காரங்களுக்குமா?
Deleteகண்ணதாசன் அங்கிளின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருது.. பகலினில் தூக்கம்.. ஹா ஹா ஹா...
Deleteஇது ஏஞ்சலினுக்கான பாடல் என்றால், முழுப் பாடல்வரிகளையும் எழுதுங்க.
Deleteஉங்களுக்காக நான் எழுதியிருக்கிறேன். (இது ஏஞ்சலினைக் குறித்து).
பகலினில் தூக்கம்.... பின்பு
இரவினில் உறக்கம்...
நேரம் கிடைத்தால்
கணிணிக்கு வருவோம் (இப்படித் தூங்கினா நேரம் எப்படிக் கிடைக்கும்?)
//இது ஏஞ்சலினுக்கான பாடல் என்றால், முழுப் பாடல்வரிகளையும் எழுதுங்க. //
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எதையாவது சொல்லி என் வாயைக் கிளறாமல் விட மாட்டார் போலிருக்கே:))..
ஹா ஹா ஹா
பகலினின் தூக்கம்..பின்பு
இரவினில் நீந்.. நீந்:)) ... சமைக்காட்டில் புளொக் பக்கம்:)) விசிட் ஹா ஹா ஹா..
என்னமோ சொல்ல வர்றீங்க. ஆனால் புரியலை... மொத்தத்துல இப்போதைக்கு ஏஞ்சலினை "காணாமல் போனவர்கள்" பட்டியல்ல சேர்த்துடச் சொல்றீங்க. இங்க ரெகுலரா வரும் பலரும் காணலை (தனிமரம், சீராளன், இளமதி, நிஷா மற்றும் பலர்).
Deleteஅஞ்சு இங்கினதான் இருக்கிறா:).. அப்ப அப்ப கண்விழிக்கும்போது எட்டிப்பார்ப்பா:))ஹா ஹா ஹா.
Deleteஏனையோர் வருவாங்க.. பார்ப்போம்ம் எதுக்கும் முதல்ல நான் காணாமல் போயிடாமல் ஸ்ரெடியா நிண்டெல்லோ எல்லோரையும் தேடோணும்:))
படங்கள் ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு எப்போதும் காய்கறிச் செடிகள் படங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteஅவரைக் காயுடன் உங்கள் இடது கை என்றால், உங்களுக்கு வெகு நெடிய ஆயுள் காலம், பணத்துக்குக் குறைவே கிடையாது. ஆயுள் அதிகம் என்பதால், உடல் நலத்தில் கண்ணாக இருங்கள். இப்படிக்கு, ஜோசியர்... ஹா ஹா ஹா
வாங்கோ நெ.தமிழன் வாங்கோ.. இப்போதான் கவனிக்கிறேன் என்ன இது நெடில் குறிலாகி திரும்படியும் நெடிலாகி விட்டது:) நான் பெயருக்குச் சொன்னேன்:)) ஹா ஹா ஹா.
Delete//எனக்கு எப்போதும் காய்கறிச் செடிகள் படங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும்.////
நீங்களாவது திட்டாமல் ஆசையாகப் படங்கள் பார்ப்பீங்கள் எனும் நம்பிக்கையில்தான் ஒரே படம் படமாப் போடுகிறேன்ன்:))
காய் கறி சரி, பூக்கள் சரி அருகில் நின்று ரசிப்பதும் ஒரு அழகு.. இன்பம்..
//இப்படிக்கு, ஜோசியர்... ஹா ஹா ஹா///
நன்றி நன்றி... ஆனா நெல்லைத்தமிழன்.. நோய் துன்பத்துக்குத்தான் எனக்குப் பயம்:) சாவின் பயம் போயிந்தி:)) ஹா ஹா ஹா எனக்கு ஆயுள் 80 வயசுவரை என ஒரு ஜோசியர் சொல்லியிருக்கிறார்:) அப்போ இன்னும் 64 வருசம் இருக்கே:) அவ்வ்வ்வ்:))
ஜோசியரின் வட்ஸப் நெம்பரூஊஊஊஉ போட்டோ டேட் ஒஃப் பேர்த்.. எல்லாம் கேட்கினம்:).. வெரி சொறி:) ஒரு ஃபுளோல எல்லாம் வந்திட்டுதூஊஊஊ:)).. ஜோசியரை நிறையப் பேர் தேடுகின்றனர் இங்கு:))
Delete//ஹா ஹா ஹா எனக்கு ஆயுள் 80 வயசுவரை என ஒரு ஜோசியர் சொல்லியிருக்கிறார்:) அப்போ இன்னும் 64 வருசம் இருக்கே:) அவ்வ்வ்வ்:))//
Deleteஅதாவது.....அதிராவுக்கு இப்போது வயது 16! எப்போதும் 16தான் என்பதால், அதிரா இனி.....
'மார்க்கண்டேயனி அதிரா'!
வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ..
Deleteமார்க்கண்டேயனி... ஹா ஹா ஹா வர வர என் பட்டங்கள் கூடுது:) இதனல பல பட்டத்தை மறந்தே போயிடுறேன் என்றால் பாருங்கோவன்:)..
இன்னொன்று அறிவுப்பசிஜி... எனக்கு ஒரு விருப்பம்... அடுத்தவர்களை அனுப்பிவிட்டு துன்பப்படுவதை விட, நானே முன்னுக்குப் போய் விட வேண்டும்:)).. இது ஒருவகை சுயநலம்தான்:)).
மிக்க நன்றி அ..ஜி.
நானும் ஒரு வாரம் தொலைக்காட்சி பக்கமே போகாமல், கணிணியில் ஆழ்ந்திருந்தேன். பிறகு நேற்று தொலைக்காட்சி பார்த்தால் பார்க்கவே முடியலை. கண்ணுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.
ReplyDeleteஎந்தப் பழக்கத்தையும் விட்டுவிட்டால், பிறகு அந்தப் பழக்கம் மீண்டும் வர நேரமெடுக்கும்.
அதேதான் நெ.தமிழன், கொஞ்சம் ஓய்வாகி நம் மைண்ட் வேறு பக்கம் திரும்பிவிட்டால் பின்பு திரும்ப உள்ளே கொண்டு வருவது கஸ்டம்.. இப்படியே இருப்பதும் சுகமா இருக்கே என மனம் சொல்லுது.
Deleteநல்ல பச்சை பசேல்ல்னு இருக்கு மியாவ் உங்க தோட்டம் .இங்கே மணத்தக்காளி ,பிரென்ச் பீன்ஸ் உருளை போட்டேன் உருளை அறுவடை முடிஞ்சி .பீன்ஸ் தயாரா இருக்கு .பறிக்க நேரமில்லை :) எங்க ஹெல்பர்ஸ் ரொம்ப மோசம் மண்ணில் கைய வச்சா ஓடி வந்து பிடிப்பாய்ங்க
ReplyDeleteஅதேதான் அஞ்சு.. எனக்கே ஆசையா இருந்துது என் கை வண்ணம் பார்க்க, இன்னும் கூடுதலாக செய்திருக்கலாமோ எனவும் எண்ணினேன், ஆனா நமது வெதர் பற்றி நம்ப முடியாதே. இம்முறை எதிர்பாராத வெயில் எல்லோ... மழை பெய்து கொண்டிருந்தால், குட்டி நத்தை.. ஸ்லக் ஆக்கிரமிப்பு அதிகமாகிவிடும், அப்போ எதையும் காப்பாற்ற முடியாது.
Deleteஇது வெயில் அதிகம் என்பதால் அவர்களின் நடமாட்டம் இருக்கவில்லை. இப்போ தலை காட்டத்தொடங்கி விட்டனர் கர்ர்ர்ர்:))
செடிகள் படங்கள் ரொம்ப அருமையா இருக்கு. கொத்தமல்லியைக் காணலியே. கீரைலாம் வராதா?
ReplyDeleteகொத்தமல்லி போடவில்லை நெ.தமிழன்.
Deleteகீரைக்கு என் ஜொந்தக் கதை ஜோகக் கதை கேளுங்கோ:).. கீரை போட விதை இருக்கவில்லை, பின்பு அஞ்சுவின் ஆலோசனையில் இங்கு ஒரு ஷொப் இருக்கு அங்கு அமர்நாத் கீரை விதைகள் கிடைக்கும் எனத் தேடிக் கிடைக்காமல் முடிவில் அமேசனில் ஓடர் பண்ணி வாங்கி.. கடுகுடன் ஒரு பக்கமாகப் போட்டேன், ஆனா மொத்தம் 3000 விதைகள் என இருந்ததா நினைவு.. அதில் 4,5 தான் முளைச்சு இப்போ 1.5 மாதமாகுது ஒரு இஞ்சி உயரத்தில நிற்குது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
மிக்க நன்றிகள். அடுத்த வருடம் இன்னும் இதேபோல செய்து காட்டட்டோ?:) எங்கும் சுற்றுலாப் போகவில்லை எனில் மட்டுமே:).
கீரை விதைகள் என்ற பெயரில் அவர்கள் கல்லுருண்டைகளை அனுப்பினாங்களா இல்லை அவசரத்தில் கார்னட் மணலை ஆர்டர் பண்ணிட்டீங்களா? இல்லை... பூமிக்குள் மண்ணில் போடாத்துனால பறவைகள் சாப்பிட்டுவிட்டதா?
Deleteஹா ஹா ஹா இது சைனாவிலிருந்துதான் வந்துது, அதனால எதுவும் சொல்ல முடியாது:).. ஆனா நிட்சயம் பூச்சி பறவை எதுவும் சாப்பிடவில்லை.. எனக்குத்தான் எப்பவும் கார்டியனாக கார்டினில் ஒருவர் இருக்கிறாவே..டெய்சிப்பிள்ளை.
Deleteபென்னாம் பெரிய சீஹல் ஐக்கூட குறிபார்த்து ஜம்ப் பண்ணுவா ஹா ஹா ஹா அவ்ளோ நம்பிக்கை தன்மேலே அவவுக்கு.. அவட மம்மியைப் போலவேதான்ன்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா.
தக்காளியும் போட்டேன் இப்போதான் குட்டியா காய்ச்சிருக்கு .முழுசா வளராது :(
ReplyDeleteவீட்டில் இல்லாததால் தோட்டம் இந்த முறை சரியா கவனிக்கலை நான் .
கடுகு கீரை நல்லா இருக்கு .எனக்கு அதோட சுவை அவ்ளோ பிடிக்கலை .ஆனா பாகிஸ்தாங்கறாங்க ஆசையா சாப்பிடுவாங்க அதை
இங்கு செரி ரொமாட்டோதான் கடைகளில் கன்று கிடைக்குது அஞ்சு.
Deleteகடுகு இலைகள் எப்பவும் ஒரு பாகிஸ்தான் கடையிலதான் வாங்குவேன், நல்ல கரும்பச்சை நிறத்தில் பென்னாம் பெரிய இலையாக இருக்கும்.. அதன் சுவையே தனி அஞ்சு.. ஒருவித இனிமையா இருக்கும். கண்டால் விடமாட்டேன், வீட்டிலும் விரும்பி சாப்பிஒடுவினம்.
ஆனா என்னுடையது ஏதோ ஒரு துளசி இனம் போல .. மணம் வித்தியாசமாக இருந்துது.
புதினாவிலும் பல வகை இருப்பதைப்போல கடுகிலும் இருக்குதென இப்போதான் தெரியும்.
அது கடுகுதானா? கேழ்வரகா இருக்கப்போவுது. எல்லா இலை தழைகளையும் சாப்பிடறீங்க
Deleteஎனக்கு விதம் விதமான இலைகுழைகள் சமைக்க விருப்பம் நெ.தமிழன்.. ஆனா இங்குதான் கிடைக்குதில்லை.
Deleteஎன் ஒரு சுண்டல் குறிப்பு செப்டெம்பரில் இங்கு போடுவேன் பாருங்கோ:) அதைப் பார்த்தால்.. மருந்தடிச்ச பூச்சி மாதிரி மயங்கி விழப்போறீங்க ஹா ஹா ஹா:)
எதோ ஆட்டோமேட்டிக் அப்டேட்ஸ் ஆகி ஸ்க்ரீன் ரெசொல்யூஷன் எல்லாத்தையும் மாத்தி விட்டு :( இனிமேதான் சரி செய்யணும் சில படங்கள் பளீர்னு தெரியுது .
ReplyDeleteஓ அது சிலசமயம் கை தட்டுப்பட்டு மாறி விடும், சட்டவுன் பண்ணி ஓன் பண்ணினால் அநேகமாக வந்துவிடும்.. எல்லோரும் ஓஃப் ஆகி இருக்கிறோமே ஒன்றாவது போஸ்ட் போடுவோமே எனப் போட்டேன்.. இனி எப்பவோ தெரியல்ல.
Deleteமிக்க நன்றி அஞ்சு. செப்டெம்பர் 2 ன்ட் வீக்கில் இருந்து தான் நான் இங்கின நோர்மலாவேன் என நம்புகிறேன்..
அப்போ இப்போ அதிரா, 'அப் நோர்மலா' - அர்த்தமே அநர்த்தமாகுதே...
Deleteஹா ஹா ஹா எப்பூடியாவது குனிஞ்சு யோசிச்சு நிமிந்து ஓசிச்சு.. குப்புறப்படுத்து ஒசிச்சு வானம் பார்த்துப் பூமி பார்த்து ஓசிச்சு:)) அதிராவை ஒருவழிப் பண்ணுவதே வேலையாப்போச்சு:)).. ஆனா “வலையில் மீன்கள் சிக்கலாம்:), தண்ணி சிக்காது”.. ஹா ஹ ஹா இப்போ மீ தண்ணி மாதிரி:)..
Deleteஅதூஊஊஊஊஊ நெ.தமிழன் உறவினர் வருகை:)) ஆர் எவர் என்பதை பின்பு சொல்றேன்ன்:))
அட, அஞ்சு, இங்கெல்லாம் வந்திருக்கீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதிரடியின் தக்கா"ழி" தோட்டத்தைப் பார்க்கவா? நாங்கல்லாம் தக்கா"ளி" போட்டு அறுவடை செய்தால் இவங்க தக்கா"ழி" போட்டு அறுவடை செய்யறாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த அழகிலே தமிழிலே "டி"! :))))))))
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ...
Deleteஹா ஹா ஹா எதுக்கு இப்பூடிப் புகையுது:)) அவ இங்கு வராட்டில் மீ தேம்ஸ்ல தள்ளிடுவேன் எனப் பயம்:)) ஆனா நீங்க ஒண்ணும் பண்ண முடியாதே:))..
நீங்க காவிரியைப் போட்டிட்டுக் கூப்பிடுறீங்க:)) இப்பூடித்தோட்டம் செய்து போட்டிட்டுக் கூப்பிடுங்கோ:)) ஹா ஹா ஹா..
//இந்த அழகிலே தமிழிலே "டி"!//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பூடியாவது என் பட்டத்தைப் பிடுங்கிடோணும் எனத்தான் எல்லோரும் துடிக்கிறீங்க:) அதனாலதான் அதை நான் ட்றம்ப் அங்கிளின் ஒபிஸ் லாச்சியில் வச்சுப் பூட்டிப்போட்டேன்:) பூசோ கொக்கோ:)
தக்காளிக்காயில் பாசிப்பருப்புச் சேர்த்துக் கூட்டுச் செய்யலாம். புளியே விடாமல் மி.வத்தல், கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, தேங்காய் அரைத்து விட்டுக் கூட்டுப் பண்ணலாம். இரண்டுமே சப்பாத்திக்கோ, சாதம் சாப்பிடவோ அருமையான சைட் டிஷ்! தக்காளிக்காயில் பிட்லையும் பண்ணலாம். இங்கே காய் கிடைக்கிறதே இல்லை!
ReplyDeleteஓ விதம் விதமாக செய்யலாம் போல இருக்கே கீசாக்கா.. இங்கும்தான் பளபளா என நல்ல சிவப்பு நிறத்தில பழுத்த ப்ழம் மட்டுமே கிடைக்குது.. இது அக்கா, அண்ணன் வீட்டில் நட்டு நிறையக் காய் காயாக பிடுங்கிச் சமைத்துப் பார்த்து சுவை சொன்னதில் இருந்து எனக்கும் ஒரு ஆசை.. கிடைக்குதில்லையே.. அடுத்த வருடம் பெரிய தக்காளி[ஐ கரிட்டு ளி] வாங்கி நடோணும்:).
Deleteவட இந்தியாவில் கடுகுக்கீரை சப்ஜி மிகவும் பிரபலம். மக்கி கா ரோட்டி(சோள ரொட்டி) அதற்கு சைட் டிஷாக சர்ஸோன்(கடுகுக் கீரை)கா சாக்(gh) என்று சப்ஜி செய்வார்கள். அதில் கடுகுக்கீரையோடு முள்ளங்கிக்கீரையும் சிலர் சேர்ப்பார்கள். கடுகுக்கீரை+வெந்தயக்கீரை+பாலக் சேர்த்த சப்ஜியும் உண்டு. பெரும்பாலும் பஞ்சாபில் அடிக்கடி இருக்கும். அதிலும் குளிர்காலத்தில் இது கட்டாய உணவு.
ReplyDeleteஓ நான் சுண்டல் மட்டும்தான் பண்ணுவேன் கடுகு இலையில், படங்கள் எடுத்து வச்சு பல நாளாகுது.. எ.புளொக்குக்கு அல்லது இங்காவது போடோணும் விரைவில் பார்ப்போம்.. மிக்க நன்றி கீசாக்கா.
Deleteமிகவும் அருமையாக கண்காணித்து வளர்கிறீர்கள்... வாழ்த்துகள் சகோதரி...
ReplyDeleteவாங்கோ சகோ டிடி வாங்கோ.. மிக்க நன்றி.
Deletehttps-என்பது நல்லது தான்... ஆனால் சில gadgets-கள் வேலை செய்யாது...
ReplyDeleteஎனக்கு இதுபற்றி தெரியவில்லை.. எப்பவும் என்பக்கம் ஓபின் பண்ணும் போது சேர்ஜ் பார் இடது பக்கத்தில் not secure எனத்தான் காட்டுது.. ஆனாலும் ஓபின் ஆகுது. பட் கொஞ்ச நாட்கள் ஓபின் ஆகமாட்டேன் வெஜ்ஜெட் எரர் எனச் சொல்லிச்சுது.. அஞ்சுவைக் கேட்ட இடத்தில அவவுக்கும் அப்படியே காட்டியதாம்.. ஆனா மொபைலில் எந்தப் பிரச்சனையுமில்லை. ஒருவேளை பிரித்தானியாஅவில் அப்படி ஏதும் கோளாறோ தெரியவில்லை.
Deleteஅதனாலதான் உள்ளே html ஓபின் பண்ணி தேடிய இடத்தில் எஸ் சேர் எனச் சொல்லியது சேர்த்தேன் ஓபின் ஆச்சு.. ஆனா சேர்ஜ் பார்ல மட்டும்தான் ரைப்பண்ணி ஓபின் பண்ணினேன் மற்றும்படி உள்ளே எந்த மாற்றமும் செய்யவில்லை.
ஆனா இப்போ பழையபடி நோர்மலாக ஓபின் ஆகுது ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.
செடிகள் ரொம்பவும் அலகு. பாராட்டுக்கள்.
ReplyDeleteவாங்கோ வெங்கட் வாங்கோ மிக்க நன்றி.
Deleteசினிமாவில் விஜயக்குமார், சுஜாதா நடித்த பாடல், படத்தில் சிவாஜியும் இருப்பதால் அவ்ர் படம் இடம் பெற்று இருக்கிறது போலும்.
ReplyDeleteபாடல் பிடித்த பாடல்தான்.
கோமதி அக்கா என் பாடல் பற்றிப் பேசவில்லையே ஒருவேளை மொபைலால வந்திட்டுப் போனீங்களோ என நினைச்சேன்..
Deleteஓம் தீபத்தில் மெயின் சிவாஜி அங்கிள்தானே.
நான் சொன்னதைப்போல, மாஅமியின் எம்பி 3 க்கள் தான் என் காரில் அதிகம் இருக்கு.. அப்பப்ப சிடி யை மாத்துவேன், மாத்திக் கேட்கும்போது போகும் பாடல்களில் ஒன்றைத்தான் இங்கும் போடுகிறேன்.. ஹா ஹா ஹாஅ..
மிக்க நன்றி கோமதி அக்கா.
மா அமியின் MP3? இது யாரோடது?
Deleteஹா ஹா ஹா எலு:)த்துப்பிலை:)) கண்டு பிடிச்சிட்டாராம்ம்ம்ம்ம்:)).. கர்ர்:)) அது என் மாமி.. மதர் இன் லோ:).. எமி ஜாக்ஷன் நினைப்பில இருக்கிறாரோ?:) ஹா ஹா ஹா. அது “த” வில ஆரம்பிக்காதே:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).
Deleteமீள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி நெ.த.
அடாடா..
ReplyDeleteகண் கொள்ளா காட்சிகள்..பார்க்க பார்க்க ஆசை வருதே..
சூப்பர் அதிரா வாழ்த்துக்கள்...
வாங்கோ அனு வாங்கோ..
Deleteமிக்க மிக்க நன்றிகள்.
மண்ணிலிருந்து பறித்த உடனேயே செய்யும் உருளைக் கிழங்கு ரொம்ப நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஆமாம் உருளைக் கிழங்கில் பல வெரைட்டி உண்டே. அது தெரியுமா? சில, ரொம்பக் குழைந்துவிடும், சில வெந்தாலும் கொஞ்சம் கட்டியாக இருக்கும், அப்புறம் இனிப்புச் சத்து கூடியது என்றெல்லாம். நீங்கள் அறுவடை செய்தது எந்த வகை?
உண்மைதான் நெல்லைத்தமிழன் உரு.கி மட்டுமில்லை அனைத்தும் உடனே பிடுங்கி வந்து செய்வதில் ஒரு தனி நுசி. அதிலும் இது எந்த கிருமி நாசினியும் இல்லாத ஓகானிக் எல்லோ.
Delete//ஆமாம் உருளைக் கிழங்கில் பல வெரைட்டி உண்டே//
ஓம்.. இங்கு பக்கட்டிலேயே எழுதி இருக்கும்.. சலாட் பொட்டாட்டோ.. பேக்கிங் பொட்டாட்டோ.. குக்கிங்.. இப்படி.. இது சாதாரண சமையல் பொட்டாட்டோதான்.
அதிலயும் சிவப்புக் கிழங்கு, வெள்ளைக்கிழங்கு என இரு வகை உண்டு.. போன தடவை சிவப்புக் கிழங்கு நட்டேன்.. அதன் பூக்களின் அழகோ அழகு.. தூதுவளைப்பூக்கள் பார்த்ததுண்டோ? அந்த பேப்பிள் கலரிலேயே இருந்துது.
இம்முறை வெள்ளைக்கிழங்கு.. இதன் பூக்கள் பெரிதா அழகில்லை.. ஆனாலும் பூ என்றாலே அழகுதானே.. ஹா ஹா ஹா .. மிக்க நன்றி.
வணக்கம் சகோதரி
ReplyDeleteதங்கள் தோட்டம் மிக அழகாக இருக்கிறது. அழகான பயிர்கள் வளர்த்து அருமையான பயன்களை அடைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
அவரைக்காய், தக்காளி. உருளை என அனைத்துச் செடிகளும் பார்க்க பசேலென்று நன்றாக இருக்கின்றது. தங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முதலில் கூறியது உண்மை. மனம் எதை நினைத்தாலும், நாம் அதை மீறி வெளியில் வந்தால், கொஞ்சம் நன்றாகத்தான் உள்ளது.முடிவில் மனந்தான் வெற்றியடைகிறது.அது வேறு விஷயம்.
இடைவேளை ஜோக் அருமை.
ஊசி இணைப்பு மிகவும் கவர்ந்தது. உண்மையான வாசகம். தன்னை விட மற்றவர் உயர்வதை யாரும் விரும்புவதில்லை. அதே சமயம் நம் அமைதி நம் உயர்வை பிறரிடம் காட்டிக் கொள்வதில்லை. நல்ல கருத்து.
அனைத்தும் நன்றாக இருந்தது. இதிலும் நான் கடைசிதான் என நினைக்கிறேன். வருந்துகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ வாங்கோ..
Delete//அவரைக்காய், தக்காளி. உருளை என அனைத்துச் செடிகளும் பார்க்க பசேலென்று நன்றாக இருக்கின்றது. தங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிகள்.
//இடைவேளை ஜோக் அருமை.
ஊசி இணைப்பு மிகவும் கவர்ந்தது.//
மிக்க நன்றி.. சந்தோசமாக இருக்கு ...
//இதிலும் நான் கடைசிதான் என நினைக்கிறேன். வருந்துகிறேன். //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதிலென்ன மன வருத்தம் இருக்கிறது, உடனேயே தான் வந்திருக்கிறீங்க பெரிய லேட் ஒன்றுமில்லை.. அத்தோடு என் போஸ்ட் எப்பவும் குறைந்தது 3,4 நாட்களாவது இப்படியே இருக்குமே... மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
மரபீன்ஸ்! முதன்முதலாகப் பார்க்கிறேன். கடுகு மண்டிக்கிடக்கிறதே.. மிளகாயும் கத்திரிக்காயும் ஏன் வரமாட்டேன் என அடம் பிடிக்கின்றன? முன் ஜென்ம விரோதமா!
ReplyDelete’விவசாயத் திலகம்’ என்கிற பட்டத்தை எப்போது கழுத்தில் மாட்டிக்கொண்டு வரப்போகிறீர்கள்! செப்டம்பர் ரிலீஸோ?
வாங்கோ ஏ அண்ணன் வாங்கோ.. நீங்க எப்போ போஸ்ட் படிக்கிறீங்க.. எப்போ கொமெண்ட் போடுவீங்க என்றே கண்டு பிடிக்க முடிவதில்லை... ஆனாலும் ஒரு விசயம் கண்டு பிடிச்சிட்டேன்.. விளையாட்டுக்கு அடுத்து தோட்டம் செய்கை.. விவசாயத்தில் உங்களுக்கு விருப்பம் இருக்குது என்பதை:).. எப்பூடி என் கண்டு பிடிப்பூ?:)..
Deleteமிளகாய் கத்தரிக்கு இங்கு காலநிலை ஒத்துழைப்பதில்லை.. வெயில் எனினும் இரவில் குளிர் இருக்கும்... பகலில் வெக்கையாக இருந்தாலும்.. இரவில் குல்ட் இல்லாமல் நம்மால் படுக்க முடிவதில்லை.. இக்குளிர் அவற்றுக்கு ஒத்துக் கொள்வதில்லை. அத்தோடு எப்பவும் சில்லென ஆற்றம் காற்று வீசும் நமக்கு.
//’விவசாயத் திலகம்’ என்கிற பட்டத்தை எப்போது கழுத்தில் மாட்டிக்கொண்டு வரப்போகிறீர்கள்! செப்டம்பர் ரிலீஸோ?//
ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் புதுமையான பட்டத்துக்கு மியாவும் நன்றி.. பாருங்கோ வடக்கால கிழக்கால எல்லாம் புகைப்போகுது:))..
மிக்க நன்றிகள்_()_ ஏ அண்ணன்.
ஆஹா. அவரை(இதை நாங்க அவரை என்பது) எல்லாம் வைச்சிருக்கீங்களா. உங்க இடம் லண்டனில் பிரச்சனையில்லை நிலத்தில் வைக்கலாம். இங்கு மைனஸ் வரை போவதால் ஒன்னும் செய்யமுடியாது வீட்டுக்குள் எத்தனை மரங்களை வைப்பது...
ReplyDeleteஇதை பொடியா நறுக்கி பொரியலா செய்யலாம் நல்ல டேஸ்ட்.
பார்க்க எல்லா அழகா இருக்கு. கேபேஜ் வறை சூப்பர் டேஸ்ட். ஆனா எனக்கு ட் ரை ஆக வருவதில்லை. தண்ணியா இருக்கும். அதாவது குழைஞ்சு வரும்.
நாங்களே செய்த உணவு பயிர்கள் மூலம் வரும் மரக்கறிகளில் சமைத்து சாப்பிடுவதில் உள்ள சந்தோஷம் எதிலும் வராது. இம்முறை எங்க வீட்டு அப்பிள்,பியர்ஸ் மரத்தில் நிறைய காய்கள் காய்த்திருக்கு. ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறோம்.
முதல் 2பந்தியில் சொல்லியிருக்கும் விடயம் உண்மையோ உண்மை. எழுதனும் .ப்ளாக் ல். பதிவுகள் எல்லாமே ட்ராப் ல் இருக்கு. படங்கள் தொகுத்து போட கஷ்டமா இருக்கு. எழுத வேணும். ப்ளாக் ல்.
ReplyDelete