நல்வரவு_()_


Friday, 24 August 2018

வாழ்த்துக்கள்.. கதம்ப வாழ்த்துக்கள்!

பிறந்தநாள்.. இன்று பிறந்தநாள்.. பிள்ளைகள் போலே.. தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்..


யாருக்குப் பிறந்தநாள் எதுக்காகப் பாடுகிறேன் எனத்தானே யோசிக்கிறீங்க?.. எங்கள் பிரியசகி புளொக் உரிமையாளர், அம்முலு என  என்னால் அழைக்கப்படும் பிரியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்[26/08/18]..

என்றும் நலமோடும் மகிழ்வோடும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம்..

என் ஊஞ்சல் பிள்ளையார் ஆசீர் வதிக்கிறார்ர்.. அருகினில் பிரதரின் வேலுடன்..

ம்முலுவோடு நான் அறிமுகமாகி இப்போ 10 வருடங்களாகி விட்டது, ஆனா அப்பப்ப எப்பவாவது மெயிலில் ஏதாவது வாழ்த்துச் சொல்வதோடு நட்பு நீடிக்கிறது, அதிலும் உண்மையைச் சொல்லியே ஆகோணும், என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அம்முலு பேஸ் புக்கில் இருந்த காலத்திலும், இம்முறைகூட எனக்காக வாழ்த்துப் பதிவு போடத் தவறுவதில்லை, அவவின் புளொக்கில் எனக்காக வாழ்த்துப் போட்டது மட்டும்தான் இந்த வருடம் அவ புளொக்கில் எழுதிய எழுத்து. நான் இதுவரை போஸ்ட் போட்டு எங்கேயும் வாழ்த்தும் சந்தர்ப்பம் அமையவில்லை, இம்முறையாவது  எப்படியாவது போஸ்ட் போடோணும் என கங்கணம் கட்டிக் களம் இறங்கி விட்டேன்.

நான் இத்தனை வருட பழக்கத்தில் எல்லோரோடும் பப்ளிக்கிலேயே என் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இருக்கும், அதைவிட நெருங்கிப் பழகுவதில்லை, நெருங்கினால் என் எதிர்பார்ப்புகள் அதிகமாகும்:), அதிகமாகும்போது அது நிறைவேறாத சந்தர்ப்பங்களில் கவலை, மனக் கசப்பு உருவாகிடவும் வாய்ப்பிருக்கு, இதனால்கூட... அனைத்தையும் பப்ளிக்குடனேயே நிறுத்திக் கொள்வேன்.

சே..சே... என் நட்புக்களில் பெரும்பாலானோர் சைவமாகவே இருப்பதால் ஆசைக்கு ஒரு மட்டின் ரோல்:), அவிச்ச முட்டைகூடப் போட வழியில்லை:)).. சரி இம்முறையும் ஆடி வெள்ளிக் குறிப்பையே போட்டு விடுகிறேனே:)..

கோமதி அக்கா சொன்னா.. ஆடி வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்குப் போடோணும் என, அதனால ஒரு வெள்ளி மாவிளக்கும், ஒரு வெள்ளி கொழுக்கட்டையும் அவித்துக் குடுத்தேனாக்கும் அம்மனுக்கு.. மிகுதி ரெண்டு வெள்ளி என்ன பண்ணினீங்க எனத்தானே முறைக்கிறீங்க?:).. அது கோமதி அக்கா தகவல் தரும்போதே ரெண்டு முடிஞ்சிடுச்சூஊஊஊ:))

இம்முறை நான் சொக்கப்பனை எரிக்கவில்லை:) என்பதனை நெல்லைத்தமிழன் அண்ணாவுக்கும்:) அவரின் பெரிய ஆன்ரிக்கும்[5 வுக்கும்:)] சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்:)). தினையை ஊறவிட்டு அரைத்து, மாவெடுத்து, தேனில் குழைத்தேன் சக்கரை சேர்த்து...ஆனால் வாழைப்பழத்தில் குழைத்து, போதாததுக்கு தேன் சேர்த்திருக்கோணுமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என் முந்தைய மாவிளக்கு குறிப்புக் காண..இங்கு
தேனும் தினை மாவும் கலந்துனக்கு நான் தருவேன்...
சங்கத் தமிழ் இரண்டும்[ழ,ள] தாங்கோ அம்மனே_()_:)!!

இது எங்கள் ஆற்றங்கரையில் ரோஜாவின் அழகு...

எங்கள் செவ்வந்தி நிறையப் பூக்கள் வந்திருக்குது.. டெய்சிப்பிள்ளை மணந்து பார்க்கிறா:)

இந்தப் பிங்கி ஃபியூஸியாவிலும் நிறையப் பூக்கள் இப்போ..


இந்தப் பழங்கள் சாப்பிட்டதுண்டோ? இவை லைச்சி பழங்கள்....Lychee.

ஊசி இணைப்பு:

ஒரு கவிதை ஊசிக்குறிப்பு... 
சொந்தக் காரர் வைரமுத்து அங்கிள்:).

எறும்புகளே!! நீங்கள் நேசிப்பது? வெறுப்பது?

வெறுப்பது..
வாசல் தெளிக்கையில் 
வந்து விழும் கடல்களை

நேசிப்பது
அரிசிமாக் கோலம்போடும்
அன்ன பூரணிகளை

சேமிக்கும் தானியங்கள் முளைகொண்டால் என்ன செய்வீர்?

அவற்றைக் கவரும்போதே
கருத்தடை செய்து விடுகிறோம்
முளைகளைந்த மணிகள்
முளைப்பதில்லை மனிதா...
==========_()==========

156 comments :

  1. ஆஅவ் !!! இப்போதான் ப்ரியாக்கு மெயிலில் வாழ்த்து சொல்லிட்டு சும்மா எங்கள் பிளாக் பார்த்தேன் உங்க போஸ்ட் !!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. முதலாவதா வந்திருக்கிறீங்க ஒரு மாவிளக்கு எடுத்துக் கொள்ளுங்கோ:).. பிரியாக்கு நான் மெயிலேதும் போடவில்லை.. கொஞ்ச நாளாக புளொக் பக்கம் காணவில்லை .. ஊரில் இல்லையோ தெரியாது... எங்கிருந்தாலும் நம் வாழ்த்துப் போய்ச் சேரும்...

      Delete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரியா ..
    ஹலோ மியாவ் அந்த டேபிள் மேலேறி உங்க தங்கச்சியை ஆசீர்வாதம் பண்ணுங்க .மறக்காம நான் பரிசா அனுப்பி வச்ச அந்த பவுண்ட்ஸ் 1001 உம் கொடுங்க ..
    அடுத்த தங்கச்சிக்கு இதோட டிசம்பர் மாசம் டேபிளேரினா போதும் :)))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றி அஞ்சு.

      Delete
    2. ஆஆஆஆஆஆ அம்முலு வந்திட்டீங்களோ.. எப்படியும் வந்திடுவீங்க எனும் நம்பிக்கையில் இருந்தேன்.. இன்றும் காணாது விட்டால் நாளைக்கு வாழ்த்துடன் மெயில் போட இருந்தேன்.. வந்திட்டீங்க... மிக்க நன்றி... மிக்க நன்றி.

      Delete
    3. //ஹலோ மியாவ் அந்த டேபிள் மேலேறி உங்க தங்கச்சியை ஆசீர்வாதம் பண்ணுங்க //

      பெரியம்மாக்களை வாழ்த்தும்போது எதிலாவது ஏறித்தான் சிறியவர்கள் வாழ்த்தோணுமாக்கும்:)).. நிட்சயம் உங்களையும் மேஜை:) மேலேறி வாழ்த்துகிறேன்ன்ன்:)).. சந்தடி சாக்கில நினைவு படுத்தி விட்டிட்டீங்க டிசம்பரை கர்ர்ர்:)) அதுக்கு இன்னும் 4 மாதம் இருக்காக்கும்:))

      Delete
  3. ப்ரியாவுடன் பிறந்தநாள் கொண்டாடும் மியாவின் அம்மாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஞ்சு நன்றி.. எல்லாமும் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கு:))

      Delete
  4. ஹலோவ் மியாவ் அந்த மூணாவது படத்தில் இருக்கே அதென்ன ??சின்ன சின்ன மூட்டையா இருக்கே ? இதான் பொற்கிளியா ??

    ReplyDelete
    Replies
    1. ///பொற்கிளியா///
      ஹா ஹா ஹா அரசன் அன்று கொல்வாராம் தெய்வம் நின்று கொல்லுமாமே ஹா ஹா ஹா சந்தோசம் பொயிங்குதேஏஏஏஏஏ சந்தோசம் கிட்னியில் பொயிங்குதே ஹா ஹா ஹா

      Delete
    2. garrrrrr 1tggluyiyq4212334567890-34rtyuiooiuytreqa\zxcvbnmiujhgfd

      Delete
    3. இதுவும் தப்பில்லை. தங்கக் கிளி, பொன் கிளி என்று அர்த்தம் எடுத்துக்கலாம்

      Delete
    4. ஏஞ்சல் , அதிராவிற்கு எவ்வளவு சந்தோஷம் உங்கள் கருத்தில் பிழை கண்டவுடன்.

      Delete
    5. //
      நெல்லைத் தமிழன்Saturday, August 25, 2018 12:06:00 am
      இதுவும் தப்பில்லை. தங்கக் கிளி, பொன் கிளி என்று அர்த்தம் எடுத்துக்கலாம்//

      நோஓஓஓஓஓஓஓ நெ.தமிழன்.. உங்களுக்கு நடந்த விசயம் தெரியாதுபோல... சில மாதம் முன்பு கீசாக்கா பக்கம் பொற்கிழி எனக் கதைத்தார்கள்.. அப்போ எனக்கு பொற்கிழி என்றால் என்னவெனத் தெரியாது.. நான் நினைச்சேன்.. பொன் கிளியை.. தப்பு ழி போட்டு எழுதுறாங்க என.. அதுக்கு அஞ்சு விளக்கம் சொல்லித்தராமல் சிரிச்சவ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நானும் விட்டிட்டேன்ன்:)..

      பின்பு துரை அண்ணன் தான் இன்னொரு சந்தர்ப்பத்தில எனக்கு எங்கள்புளொக்கில் விளக்கமா விளங்கப் படுத்தினார்... அதனாலதான் இப்போ பாருங்கோ அவவுக்கு டங்கு ஸ்லிப்பாச்சூஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா.. இப்போ காத்து ஸ்கொட்லாந்துக்கு வீசுதாக்கும்:))

      Delete
    6. ஹா ஹா ஹா கோமதி அக்கா.. அது பிழை கண்டதால வந்த ஜந்:) தோசமில்லை:)).. மேலே நெ.தமிழனுக்கு குடுத்த பதிலைப் பாருங்கோ அதனால வந்த சந்தோசமாக்கும்:)).. ஹா ஹா ஹா கோட் இஸ் வோச்சிங்ங்ங்ன்ங்ங்:))

      Delete
  5. சாமீஈ :) நாரோடு சேர்ந்து நானும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்க்கி :)

    அது பொற்கிழி :)

    மக்களே எல்லாரும் ஒரு refresher தமிழ் வகுப்புக்கு போயிட்டு வந்துடுங்க :)
    இல்லேனா நம்ம தமிழை மறக்கடிச்சிடும் பூஸ்

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆவ்வ்வ்வ்வ் ஒரு உண்மை தெரியுமோ அஞ்சு... நீங்க இந்த விளக்கம் சொல்லியிருக்காட்டில் மீ கவனிச்சிருக்கமாட்டேன்ன்ன்ன்ன்...

      ஆடு கத்தியைக் கொடுத்து என்னை வெட்டு வெட்டு என்றதாமே ஹா ஹா ஹா அது பிபிசில சிட்டுவேஷன் பயமொயி போகுதூஊஊ:)...

      நல்ல ஐடியா..., அதிராவிடம் வாங்கோ டமில் ரிபிரெஸ் பண்ண:) பிக்கோஸ் மீக்கு டமில்ல டி ஆக்கும்:) ...

      இது மொபைல் பதில்.. மிகுதிக்கு பின்பு கொம்பியூட்டர் ஊடாக வருகிறேன்ன்ன்...

      Delete
    2. ஹலோ கர்ர்ர்ர் என் வட்டத்தில் யாரும் இனிமே ஆடு அசைவம் ன்னு talks ideas varave koodathu ஆணை இடுகிறேன் ..
      அதெல்லாம் என் சிஸ்டர்ஸ் பிரதர்ஸ்

      Delete
    3. ஆடு இலை தழைகள்தான் சாப்பிடுது. அதனால் ஆடு சைவம்னா சொல்றீங்க? நல்ல லாஜிக்காத்தான் இருக்கு

      Delete
    4. //அதெல்லாம் என் சிஸ்டர்ஸ் பிரதர்ஸ்//

      அப்போ திரிசா மே:)) போல.. இன்றிலிருந்து அஞ்சுமே:)) எனப் பெயர் சூட்டி மகிழ்கிறோம்ம்:)) ஆட்டுக்கு சிஸ்டர் என்றால் அப்பூடித்தானே இருக்கோணும்:)).. ஹா ஹா ஹா.

      இல்ல நெல்லைத்தமிழன்.. அஞ்சு ஜொள்ள வருவது ஆடு சைவம் என்றால்.. அதாவது அதிரா இனி தயக்கமில்லாமல் வெள்ளி செவ்வாயிலும் மட்டின் ரோல் சாப்பிடலாமாம்:) பிக்கோஸ்ஸ் ஆடு சைவம்:)) ஹா ஹா ஹா .. டாங்ஸ் அஞ்சு:))

      Delete
  6. /இம்முறை நான் சொக்கப்பனை எரிக்கவில்லை:) //

    ஹாஹாஆ :) அந்த சொக்கப்பனையே இன்னும் கண்ணுக்குள் இருக்கு :)

    //சங்கத் தமிழ் இரண்டும்[ழ,ள] தாங்கோ அம்மனே_()_:)!!//

    கர்ர்ர் நோ :) இப்போ எனக்கே பொற்கிழி /கிளி சந்தேகம் வரவச்சது போதாதா :)

    ReplyDelete
    Replies
    1. / ஒரு வெள்ளி மாவிளக்கும், ஒரு வெள்ளி கொழுக்கட்டையும் அவித்துக் குடுத்தேனாக்கும் அம்மனுக்கு..//

      எங்கே வெள்ளியில் ஒன்றும் தெரிலையே ..எங்கே சில்வர் மாவிளக்கு அன்ட் கொழுக்கட்டை ??

      Delete
    2. //ஹாஹாஆ :) அந்த சொக்கப்பனையே இன்னும் கண்ணுக்குள் இருக்கு :)//

      அதிரா எது செய்தாலும் அது வரலாற்றில் இடம் பிடிச்சிடுது ஹா ஹா ஹா:)

      //எங்கே வெள்ளியில் ஒன்றும் தெரிலையே ..எங்கே சில்வர் மாவிளக்கு அன்ட் கொழுக்கட்டை ??///

      ஐயா ஜாமீஈஈஈஈ இது வேற புதுப் புரளியைக் கிளப்புறா:) இதை விட பிக்பொஸ் பார்ப்பது எவ்வளவோ மேல் போல இருக்கே:)) அவ்வ்வ்வ்வ்வ்:))

      Delete
  7. ஆற்றங்கரை ரோஸ் அழகு

    டெய்சிக்கு என்னவாம் ஆராய்ச்சி :) உள்ளேருந்து wasp வந்தா தெரியும் :)

    ReplyDelete
    Replies
    1. மம்மியை ஏதுக் குத்திடக்கூடாதே எனச் சேவ் பண்ணுவதற்காக செக் பண்றாவாம்ம்:)) நான் ஒரு படம் எடுக்க முடியாது அவவை விட்டு விட்டு:)) தாந்தான் ஹீரோயின் என முன்னே வந்து நிற்பா:).. சில சமயம் ஆளைத்தூக்கிப்பிடித்துக் கொண்டே படமெடுக்க வேண்டி வருது:).

      Delete
  8. உங்க வீட்டு fuchsia உங்களமாதிரியே குண்டூ :)

    ReplyDelete
    Replies
    1. ஹல்லோ மிஸ்டர்ர்.. அனுக்காவும் குண்டுதான்:) அதுக்காக அனுஸ்[ஸ்ரீரம் முறையில ஜொன்னேன்:)] க்கு ரசிகர் இல்லாமலா போயிட்டினம்:)).. இஞ்சிக்குப் போட்டியா நானும் “உள்ளி”[பூண்டு] இடுப்பழகி.. என ஒரு படம் நடிக்கப் போறேன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா.. தியேட்டரில போய்ப் பார்க்கோணும் நீனகளெல்லாம் ஜொள்ளிட்டேன்ன்:))..

      Delete
  9. ஹாஹா ஜெர்மனியின் செந்தேன் மலரே பாட்டு செம .பொருத்தமா போட்ருக்கிங்க .

    ReplyDelete
    Replies
    1. டாங்ஸ் அஞ்சு..
      ஒருமுறையும் பாட்டுப் பற்றி வாயே திறக்க மாட்டீங்க:)) திறந்தால் வயசாகிடுத்தோ என நினைச்சிடுவாங்க எனும் பயம்தானே காரணம் ஹா ஹா ஹா:)).. வயசுக்கும் பாட்டுக்கும் சம்பந்தம் இருக்கா?.. இது பட்டிமன்றத் தலைப்பு:)).

      ஸ்கொட்லாந்தைப்போட்டு இப்படி ஒரு பாட்டு பாடாமல் விட்டிட்டினமே கர்ர்ர்:))

      Delete
    2. உண்மையா எனக்கு சினிமா பாட்டு கேப்பதில் ஆசையில்லை .பழையசோ புதுசான்னு எனக்கு தெரியுமா ??
      but i am a big fan of daasettan because of my mom

      Delete
    3. we used to watch tamil movies but always when songs came they were fast forwarded .thats why i have no idea about cinema songs

      Delete
    4. first i thought it was nalam vazha song .thats why clicked it :)

      Delete
    5. அல்லோ ஆங்கிலீசுக் கொமென்சை ஓட்டமெட்டிக்கா டிலீட் பண்ணிடும் என் புளொக்:).. தணிக்கை செய்யப்பட்டிருக்குதாக்கும்:)).. எனக்கும் ஜேசுதாஸ் அங்கிள் வொயிஸ் தான் பிடிக்குது அஞ்சு எப்பவும்.. எத்தனையோ புதுக்குரல்கள் வந்தாலும் மனம் பெரிசா ஏற்குதில்லை.. அப்ப அப்ப ரசித்து விட்டுப் போய் விடுது.. நிலைத்து நிற்பது ஜே அங்கிள்தான்:)).. இதை அவரிடம் ஜொள்ளி விடுங்கோ:).

      அல்லோ ரேடியோக் கேட்கும் பழக்கத்தை உருவாக்குங்கோ பின்பு நிறுத்தவே மாட்டீங்க... ஊ ரியூப் நான் சொன்னதிலிருந்து இப்போ நீங்க என்னை விட அதிகமாக மூழ்கி இருப்பதைபோல தெரியுதே ஹா ஹா ஹா..

      நலம் வாழவும் எனக்கு மிகவும் பிடிச்ச பாடல்.. அடிக்கடி ரேடியொவிலும் போகுது.

      Delete
    6. ஹா ஹா தலைவி குருவே எனக்கு யூ டியூபை இன்ட்ரொட்யூஸ் செஞ்சதே நீங்கதானே :)
      அது சரி உங்க பேத்தி க்ராண்ட் டாட்டர் பாட்டு இப்போ ட்ரெண்டிங்கில் இருக்கே பார்த்திங்களா :)
      ஸ்ஸ்ஸ் அதன் உங்க தம்பி மகன் சிவகார்த்திகேயனின் மகள் பாடுறா :)

      Delete
    7. ஹலோ மிஸ்டர்:) சிவகார்த்தி நேக்கு அண்ணாவாக்கும்:).. அது என் குட்டி மருமகளாக்கும்:) ம்ஹூம்ம்:))

      Delete
  10. இங்கேயும் நிறைய கிடைக்குதே lychees .நான் இதில் அகரகர் ஜெல்லி சேர்த்து செஞ்சேன் நல்லா வந்தது

    ReplyDelete
    Replies
    1. இங்கு இது கிடைக்கும்தானே அஞ்சு.. இருப்பினும் ஆரும் தெரியாதோர் உண்டோ என செக் பண்ணினேன்...

      Delete
  11. ஒரு பொண்ணு ஏஞ்சல் மாதிரி அடக்க ஒடுக்கமா இருந்தா உடனே வடிவேலு மீம்ஸ் போட்டு கலாய்க்கிறாங்க .பேட் பீப்பிள் .

    ReplyDelete
    Replies
    1. அல்லோஓஒ அடக்கொடுக்கமான பொண்ணு எனில் வீட்டில் வச்சே லிஸ்ட் எடுத்திட்டுப் போகாமல் எதுக்கு சூப்பமார்கட்டில வச்சு கேட்டுக் கேட்டு:)) ஹா ஹா ஹா...

      Delete
  12. ம்க்கும் வைரமுத்து தாத்தா தப்பா சொல்லிட்டார் இப்போல்லாம் அன்னபூரணீஸ் இல்லை கோல மாவு கோகிலாஸ் :))))))))))
    ஓகே மியாவ் .குட் நைட்

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அஞ்சு, உங்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்? எங்களோட பதிவுக்கு எல்லாம் வரலை. இங்கேயே முகாம் போட்டிருக்கீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      Delete
    2. அதிரடி, இம்முறை மாவிளக்குப் பூப்போல் எரியுது நிதானமா! அல்லது நீங்க சொக்கப்பனை ஆகும் முன்னே படம் எடுத்துப் போட்டுட்டீங்களோ? இஃகி, இஃகி, கொழுக்கட்டை பார்க்க நல்லாத் தான் இருக்கு. சாப்பிடலாமா, வேண்டாமானு தெரியலை! ஒருவேளை இது கொழுக்கட்டை பொம்மையோ? நவராத்திரி கொலுவுக்கு வாங்கியதோ? ஏன்னா நல்லா வந்திருக்கிறதாலே ஜந்தேகம்!

      Delete
    3. கோலமாவு கோகிலா என்று படம் வந்து இருக்கிறது. அதில் கோலமாவு விற்பவரா, கோலம் போடுபவரா நயன்தாரா?

      Delete
    4. லைச்சி பழம் இன்னும் சிவப்பாய் மேல் தோல் இருக்கிறது. இங்கு கிடைக்கிறது.
      சாப்பிட்டு இருக்கிறேன். ஜூஸ் கிடைக்கிறது.

      Delete
    5. @ Geethaa Akkaa
      எச்சூஸ்மீ கீதாக்கா .செப்டம்பர் 4 வரைக்கும் ப்ளீஸ் மன்னிச்சி விட்ருங்க .இந்த மாசம்தான் இத்தனை வ்ருக்ஷத்தில் ரொம்ப பிசியா வாலண்டியரிங் செய்றேன் ...செப் 5 லருந்து வரேன் எல்லார் பக்கமும் நாம் குண்டு பூஸை சேர்ந்தே தள்ளுவோம் ஓட்டுவோம்னு உறுதி அளிக்கிறேன் .
      எடுத்துக்கோங்க உங்களுக்காக ஸ்பெஷலா களவாடிவந்த மைசூர் பாக்

      Delete
    6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என் இனிப்பு சாப்பிடாத தவத்தைக் கலைக்க நினைக்காதீர்கள் ஏஞ்சலின். கர்ர்ர்ர்ர்ர்ர்ர். நல்லவேளை நீங்க 'களவாடியது' என்று சொல்லிட்டீங்க. நீங்க செய்தது என்று சொல்லியிருந்தால் என்னை 'சுட்டாறிய' இல்லை இல்லை 'சுடு தண்ணீரை' விட்டு எழுப்பினால்தான் மயக்கத்திலிருந்து எழுப்பியிருக்கமுடியும்.. ஹா ஹா ஹா.

      Delete
    7. //இப்போல்லாம் அன்னபூரணீஸ் இல்லை கோல மாவு கோகிலாஸ் :)//
      ஓ ஹா ஹா ஹா நாகரீகம் பிளேன் ஏறிவிட்ட காலமாயிட்டே இது..

      நன்றி அஞ்சு அனைத்துக்கும்.. நேற்றுச் சொன்னதுக்கு இன்று நல்லிரவு.. இப்பவும் இரவுதானே இங்கு:)

      Delete
    8. //Geetha SambasivamSaturday, August 25, 2018 2:17:00 am
      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அஞ்சு, உங்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்? எங்களோட பதிவுக்கு எல்லாம் வரலை. இங்கேயே முகாம் போட்டிருக்கீங்க? //

      விடாதீங்க கீசாக்கா நல்லாக் கேளுங்கோ:) ம்ஹூம்ம் எதுக்குக் கீசாக்கா பக்கம் போகல்ல.. அஞ்சு நீங்க பாராபட்சம் பார்க்கிறீங்க:)) இதனால கீசாக்கா இனி உங்களோடு பேச மாட்டாவாக்கும்.. கா சொல்லுங்கோ கீசாக்கா:)) இல்லை எனில் காவிரியில தள்ளுவேன் என மிரட்டுங்கோ:))..

      ஹா ஹா ஹா இதை விட்டா எனக்கு நல்ல சந்தர்ப்பம் அமையாது இருவரையும் கொழுவிவிட ஹா ஹா ஹா:))..

      நான் முசல் :)) மாதிரி:)).. முயல்க்கதை தெரியுமோ உங்களுக்கு... அதாவது.. முயலுக்கு பிற மிருகங்கள் தாக்கிடும் எனப் பயமாம்.. அதனால ஒரு பற்றையிலிருந்து மற்றப் பற்றைக்குள் போகும் வரை.. பிள்ளையாரே.. பிள்ளையாரே எனச் சொல்லிக்கொண்டு ஓடுமாம்:).. பற்றைக்குள் நுழைஞ்சதும்.. அதேபோல ஒரு கெட்ட வார்த்தையில் பிள்ளையாரைத் திட்டுமாம்:)) இனி எதுக்கு பிள்ளையார் என.. பின்பு திரும்ப அடுத்த பற்றைக்கு ஓடும்போது மீண்டும் பிள்ளையாரைக் கூப்பிட்டுக் கொண்டே ஓடுமாம்:)).. ஹா ஹா ஹா அதேபோல மீயும் கும்பிட்டுக் கூத்தாடி மிரட்டி அஞ்சுவைக் கொமெண்ட் போடப் பண்ணிட்டேன்ன், இனி அடுத்த போஸ்ட் வரும்வரை நன்கு எதிரணியில் நின்று பேசுவேனாக்கும்:)) பூஸோ கொக்கோ:)) ஹா ஹா ஹா.

      Delete
    9. //Geetha SambasivamSaturday, August 25, 2018 2:21:00 am
      அதிரடி, இம்முறை மாவிளக்குப் பூப்போல் எரியுது நிதானமா! அல்லது நீங்க சொக்கப்பனை ஆகும் முன்னே படம் எடுத்துப் போட்டுட்டீங்களோ? இஃகி, இஃகி,//

      வாங்கோ கீசாக்கா வாங்கோ:)).. இங்கேயும் இதுக்குப் பதில் இஃகி..இஃகி தான்:)) ஹா ஹா ஹா[இது என் ஜொந்தச் சிரிப்பு:)]

      //கொழுக்கட்டை பார்க்க நல்லாத் தான் இருக்கு. சாப்பிடலாமா, வேண்டாமானு தெரியலை!//

      நான் கொழுக்கட்டை.. மோதகம் பிடிப்பதில் எக்ஸ்பேர்ட் ஆக்கும்.. எங்கட அம்மாவுக்குப் பிடிக்க வராது.. அதேபோல உழுந்து வடையும் சூப்பர் வட்டமாச் சுடுவேனாக்கும்:)) ஜொன்னா நம்போணும்..
      கொழுக்கட்டை.. இதில எனக்கு சந்தேகம் அது கொளுக்கட்டையோ என, இருப்பினும் ஒரு தன்னம்பிக்கையில் போட்டேன் கரீட்டூஊஊஊ:)) ஹா ஹா ஹா ரெசிப்பி வரும் வெயிட் அண்ட் சீ:))..

      மியாவும் நன்றி கீசாக்கா.

      Delete
    10. ///AngelSaturday, August 25, 2018 9:04:00 am
      @ Geethaa Akkaa
      எச்சூஸ்மீ கீதாக்கா .செப்டம்பர் 4 வரைக்கும் ப்ளீஸ் மன்னிச்சி விட்ருங்க //

      அல்லோ மிஸ்டர்:)... செப்டெம்பர் 4 க்குள் காவிரி வத்தினாலும் வத்திடும்:)).. அதுக்குப் பிறகு குமுதா வயசுக்கு வந்தென்ன விட்டென்ன?:)) என்ன கீசாக்கா?:)) நான் ஜொள்றது?:)) கரீட்டுத்தானே?:) ஹா ஹா ஹா:) ஹையோ மீயும் செப்டெம்பர் 5...6. வரை அநேகமாக இனி வரமாட்டேன்ன்ன்:)) அந்த தெகிரியத்திலதான் ஜொள்றேன்ன்ன் என்னை ஆரும் கலைக்க முடியாதே:)) ஹா ஹா ஹா..

      ஸ்ரீரங்கத்துக்கே அல்வாவோ?:)..., கீசாக்கா.. அம்மா மண்டபத்துக்கே நடந்து போயிட்டு வந்திட்டாவாக்கும்:)) அல்வாக்கெல்லாம் அசைய மாட்டா:)).. நீங்க ஸ்ரெடியா[கோபமா] நில்லுங்கோ கீசாக்கா:)) ஹா ஹா ஹா:))..

      Delete
    11. @ நெ.தமிழன்
      //நீங்க செய்தது என்று சொல்லியிருந்தால் என்னை 'சுட்டாறிய' இல்லை இல்லை 'சுடு தண்ணீரை' விட்டு எழுப்பினால்தான் மயக்கத்திலிருந்து எழுப்பியிருக்கமுடியும்.. ஹா ஹா ஹா.//

      ஹா ஹா ஹா என்னாது அல்வாவோ?:) அஞ்சு செய்றதோ?:) ஹா ஹா ஹா ஆடு மே மே எனக் கத்துவதை மாத்தினாலும் மாத்தலாம் ஆனா அல்வா அஞ்சுவுக்கு வராது:)) ஹா ஹா ஹா நீங்க மயங்கியே இருக்க வேண்டியதுதேன்ன் ஹா ஹா ஹா இண்டைக்கு எனக்கு என்னமோ ஆகிக்கொண்டிருக்குது ஜாமீஈஈஈஈ:) எல்லாம் அந்த ஊஞ்சல் பிள்ளையாரின் சதிலீலை:) ஹா ஹா ஹா.

      Delete
    12. //
      கோமதி அரசுSaturday, August 25, 2018 2:49:00 am
      லைச்சி பழம்//

      கோமதி அக்கா.. அப்போ இது எல்லா இடத்திலும் கிடைக்குது போலும்.. ஓம் யூஸ் உம் கிடைக்குது.. நல்ல சுவை.

      கோலமாவு கோகிலாவா மீ இன்னும் பார்க்கல்லியே:))

      Delete
    13. ஹலோவ் நெல்லை தமிழன் :) எப்படி இப்படி ஒரு டவுட் உங்களுக்கு வரலாம் :)))
      ஆனால் வரலாறு மாறும் ஒரு நாள் இந்த மாதிரியே நானும் செய்து பிளாக்கில் போடலாம் :) ஹாஹ்ஹா

      Delete
    14. 10 மினிட்ஸ்க்கு கூகிள் தமிழ் work ஆகல எனக்கு !!!!!!!!!

      Delete
    15. ///ஆனால் வரலாறு மாறும் ஒரு நாள் இந்த மாதிரியே நானும் செய்து பிளாக்கில் போடலாம் :) ஹாஹ்ஹா///

      இப்போ அவருக்கு சுடுதண்ணி தெளிச்சு மயக்கம் தெளிவிக்கிறதோ வாணாமோ?:) இதுக்கொரு முடிவு ஜொள்ளுங்கோ:))

      Delete
    16. //இந்த மாதிரியே நானும் செய்து பிளாக்கில் போடலாம் :) // - ' 50 வருஷம் கழிச்சு, குமுதா வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன// - கேள்வி ஏஞ்சலின். பதில் அதிரா. இதில் என் வேலை ஒன்றும் இல்லை. ஹாஹாஹா

      Delete
    17. ஹா ஹா ஹா முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈ:)) அஞ்சு இப்போ கட்டிலுக்குக் கீழே:)

      Delete
  13. உங்கள் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மற்றவை பிறகு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.

      Delete
    2. வாங்கோ நெ.தமிழன் வாங்கோ..

      ஆவ்வ்வ்வ்வ் டமில் புரொஃபிசர் பிலை:) விட்டிட்டார்ர்ர்ர்:) நண்பர் என்றால் பொதுவா ஆண்பால்தானே?:) நேக்கு நீடி வேணும்ம்ம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா.

      Delete
  14. முதலில் பிரியசகி அம்முக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
    உங்கள் நட்பு இனிமையானது. ஏஞ்சல், அம்மு, அதிரா நட்பு இன்று போல் என்றும் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றி கோமதி அக்கா.

      Delete
    2. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. பெயர் லிஸ்ட் இன்னும் நீளுது.. முக்கால்வாசிப்பேர் புளொக் உலகில் இப்போ இல்லை ஆனா இருக்கினம்:))

      Delete
  15. //தேனும் தினை மாவும் கலந்துனக்கு நான் தருவேன்...
    சங்கத் தமிழ் இரண்டும்[ழ,ள] தாங்கோ அம்மனே_()_:)!!//
    முருகனுக்கு பிடித்த தினைமாவில் மாவிளக்கு செய்து விட்டு அம்மனிடம் வேண்டுதலா?
    நல்லா இருக்கே!

    மாவிளக்கில் தேன் அதிகமாகி விட்டது போலும் கொஞ்சம் இளகி விட்டது.
    கோமதி அக்கா சொன்னது போல் ஆடி வெள்ளிக்கு அம்மனுக்கு மாவிளக்கு பார்த்து விட்டீர்கள்.
    சொக்கபனை கார்த்திகை மாதம் தானே!

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கோமதி அக்கா.. முருகனுக்குத்தானே மாவிளக்குப் போடுவார்கள்.. நீங்கதானே ஆடிவெள்ளியில அம்மனுக்கு எனச் சொன்னீங்க அதனாலதான் போட்டேன்ன் இப்போ முருகனுக்குப் பிடிச்சது எனச் சொல்லிட்டீங்க ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

      அது கோமதி அக்கா, இது 2ம் தடவை செய்கிறேன் அதனால கொஞ்சம் பெட்டராகிட்டுது. அடுத்தமுறை செய்தால் சரியாக்கிடுவேன். இது தனித்தேனை அதுவும் தேன் இறுக்கம் என்பதால் யோசிக்காமல் டக்கென ஊத்தினேன்.. அது கசிந்து கசிந்து இழகி.. நிறைய மாப் போட வேண்டி வந்துவிட்டது.

      பிடிக்கொழுக்கட்டையும் செய்யலாம் என மா எடுத்திருந்தேன்.. ஆனா முழு மாவும் இதனுள் போட்டாச்சு. அது தினை மாவுக்கு வாழைப்பழம் சேர்த்து குழைப்போமாம் ஊரின், பின்பு கொஞ்சமாக தேன் சேர்ப்போமாம்.. இது வாழைப்பழமே சேர்க்கவில்லை நான்:).

      சொக்கப்பனை கார்த்திகையிலதான்:) ஆனா போன என் மாவிளக்குக்கு நிறைய திரி போட்டு பெரிதாக எரித்தேன் அதுக்குச் சொன்னார்கள் சொக்கப்பனைபோல என ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:))

      Delete
    2. முருகனுக்கு தினை மாவிளக்கு மிகவும் சிறப்பு.
      அம்மனுக்கு பச்சரிசியில் செய்வோம். அதுதான் சொன்னேன்.
      அம்மா எதில் செய்தாலும் ஏற்றுக் கொள்வாள்.
      குழத்தை எது செய்தாலும் பிடிக்கும் தானே அம்மாவிற்கு.

      Delete
    3. கோமதி அக்கா.. ஓம் நீங்க சொல்வது சரி, யூ ரியூப்பில் தேடினால் அரிசி மாவில்தான் செய்கிறார்கள்.. எனக்கது சாப்பிட்ட பழக்கம் இல்லை.. தினை/சாமி யில்தான் செய்து சாப்பிட்டிருக்கிறேன்..அதனால இதுதான் பிடிச்சிருக்கு.. மிக்க நன்றி மீள் வருகைக்க்கு:))..

      Delete
  16. கொழுகட்டை இருட்டில் இருக்கிறது. மோதக கொழுகட்டை செய்து இருக்கிறீர்கள், உள்ளே பூரணம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் வழமையாக மோதகத்தோடு கொழுக்கட்டையும் மாறி மாறிப் பிடிப்போம். உள்ளே பயற்றம்பருப்பு, சக்கரை, தேங்காய்ப்பூ த்தான் கோமதி அக்கா.. ரெசிப்பி விரைவில் வரும்.

      Delete
  17. அக்கா ஏரிக்கரை போனால், தங்கை ஆற்றம்கரை!
    ரோஜாக்கள் அழகு.

    //செவ்வந்தி நிறையப் பூக்கள் வந்திருக்குது.. டெய்சிப்பிள்ளை மணந்து பார்க்கிறா:)//

    மணம் பிடித்து இருக்கா டெய்சிப்பிள்ளைக்கு?

    ReplyDelete
    Replies
    1. //அக்கா ஏரிக்கரை போனால், தங்கை ஆற்றம்கரை!//

      ஓ இது புதுசு எனக்கு.. அப்போ அக்கா ஆற்றங்கரை போனால் தங்கை கடற்கரை ஹா ஹா ஹா:)..

      டெய்சிப்பிள்ளை, பூனைபோல இல்லாமல் ஒரு நாய்க்குட்டிபோல கோமதி அக்கா.. என் பின்னாலேயே என்னோடு வீட்டைச் சுற்றி வருவா.. நான் ரெஸ்ட் பண்ண இருந்தால் தானும் படியிலே அருகில் இருப்பா ஹா ஹா ஹா..

      Delete
  18. Replies
    1. நன்றி கோமதி அக்கா.. அது இப்போ நிறைய மொட்டுக்கள் வந்திருக்கு.. நான் எதிர்பார்க்கவில்லை..

      Delete
  19. சூப்பர் மார்கெட் பெண் கணவரிடம் இந்த பொருள் வாங்கவா கேட்டு வாங்குவதற்கு இப்படி ஒரு அர்த்தமா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எப்படி எல்லாம் திங் பண்ணி எழுதுகிறார்கள்.. சூப்பர் கிட்னி இவர்களுக்கு:)) .. அனைத்துக்கும் மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  20. மாவிளக்கு ரொம்ப அழகாக வந்திருக்கு. உங்களுடையதுதான் என்பதற்காக சுவாமி படங்களை நிறைய போட்டிருக்கிறீர்கள். குறை சொன்னால் சாமி குத்தமாகப் போயிடப்போகுது.

    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. மாவிளக்கு இன்னும் முன்னேற இடமிருக்கு.. அடுத்ததடவை கரெக்ட்டாப் பிடிச்சிடுவேன் பதம்..

      //குறை சொன்னால் சாமி குத்தமாகப் போயிடப்போகுது.//

      ஹா ஹா ஹா அப்போ என் ஊஞ்சல் பிள்ளையார் என்னைக் காப்பாத்திவிட்டார்..:)).

      //பாராட்டுகள்//

      இது பயத்தில சொல்லும் பாராட்டோ? இல்ல உண்மைப் பாராட்டோ:) எதுவாயினும் மியாவும் நன்றி..

      Delete
  21. படத்தை உத்துப் பார்த,தால் அம்மன் சிரிப்பது தெரிகிறது. என்ன காரணமாயிருக்பும் என்று யோசித்தால், இந்தப் பெண்ணுக்கு ழ, ள மட்டும்தான் தமிழ்ல சரியா வரலையா? கேட்கும்போதே சங்கத் தமிழ் மூன்று மட்டும் வேண்டாம், இனைத்தும் தா என்று கேட்கத் தெரியலையே. ழ, ள மட்டும் சரியா வந்து மத்த தவறுகள்லாம் அப்படியே இருந்தால் கலாய்ப்பது குறைந்துவிடுமா என்று நினைத்து சிரித்திருப்பாரோ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அம்மன் சிரிப்பதுவும் தெரியுதோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))..

      உண்மையில சங்கத்தம்ழ் மூன்றும் என்றால் ல ள ழ? வோ? நான் ச்சும்மாதான் எடுத்து விட்டேன்ன் ஹா ஹா ஹா.

      ஜத்தியமா நெல்லைத்தமிழன்.. எனக்கு தெரியாதது.. இந்த ழ.. ள மட்டும்தான்... மற்றபடி அனைத்து எழுத்துக்களும் பிழை விடமாட்டேன்ன்.. அது கை மாறி வரும் தவறுகளாக இருக்குமே தவிர தெரியாத பிழைகள் அல்ல.

      இன்னொன்று.. கருப்பு என்பதை கறுப்பு எனவும்.. பரவாயில்லை என்பதை பறவாயில்லை எனவும் எழுதுவேன் ஏனெனில் எனக்கு இந்த இரு சொற்களுக்கும் ர போட்டுப் பேசுவது பிடிக்கவே பிடிக்காது என்பதால்:)) ஹா ஹா ஹா.

      Delete
  22. ரோஜாத் தோட்டங்கள், பூக்கள் மிக அருமை. இன்னும் க்ளோஸப் படங்கள் போட்டிருக்கலாம்.

    ஆனால் அந்தப் படத்தில் தெரியும் பெஞ்சுகள்தான் நேற்றுப் பார்த்த கான்சரிங்2 வை ஞாபகப்படுத்துது. ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஓ எனகும் நிறைய விதமாக ஒரு பூவை எடுத்துப் போட ஆசை.. அதாவது பகம் பக்கமாக சுழட்டிச் சுழட்டி எடுக்க ஆசை:)) ஆனா அனைத்தையும் போட்டால் போறிங் ஆகிடுமெல்லோ:).. ஜூலை முழுக்க ரோஜா மாதம்.. இப்போ பூக்கள் உதிரத்தொடங்கிட்டுது...

      Conjuring 2 ஓடவிட்டு விட்டாவது பார்க்கலாம் என ஒபின் பண்ணினேன்.. அது சைன் அப் பண்ணு எனக் கேட்டுது விட்டிட்டேன்... ஹா ஹா ஹா அதில இப்படி பெஞ்சுகள் இருக்க்கோ? பிரித்தானியாவில் இவை அதிகம் என நினைக்கிறேன்.. ஏனைய நாடுகளை விட..

      Delete
  23. ஏஞ்சலினுக்கு கொழுக்கட்டை செய்முறையைப் படங்களோடு அனுப்பக்கூடாதா? தேவதை கிச்சன் அடுப்பில் சாம்பல் பூத்து பூனைகள் உட்கார்ந்திருக்கு பாவம்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. புளொக்கைத்திறப்பது மட்டும்தானே அவவின் வேலை:))..

      Delete
  24. அதிரா... லிச்சீஸ், தாய்வானில்தான் ரொம்ப அட்டஹாசமா இருக்கும். நான் பல தேசங்களில் சுவைத்திருக்கிறேன். தாய்வானில் டிராபிகல் பகுதி என்பதால் ஜூசியாகவும் சதைப் பற்று மிக அதிகமாகவும் இருக்கும்.

    நீங்கள் ரம்பூட்டான் சுவைத்திருக்கிறீர்களா?

    லண்டனுல் சுவையான பழம் என்னைப் பொறுத்தவரையில் ஸ்டிராபெர்ரிதான். ஆப்பிளும் ஓகே. (உடனே ஸ்காட்லாந்தில் மற்ற பெர்ரிகள்னு சண்டைக்கு வராதீங்க. அது சுமார்தான்)

    ReplyDelete
    Replies
    1. //அதிரா... லிச்சீஸ், தாய்வானில்தான் ரொம்ப அட்டஹாசமா இருக்கும்//

      ஓ இது வெப்ப நாட்டுப் பழம் என நினைக்கிறேன். இங்கும் நல்ல சதையாக இருக்கு.. யூஸ் உம் நல்லா இருக்கு.

      //நீங்கள் ரம்பூட்டான் சுவைத்திருக்கிறீர்களா?//

      இது என்ன கேள்வி? அதன் பூர்வீகம் இலங்கைதானே?:).. அங்கும் ரம்புட்டான் மரங்கள் உண்டு, நான் நேரில் பார்த்ததில்லை.. நாங்கள் ரம்புட்டான் + மங்குஸ்தான் சாப்பிட்டு வளர்ந்த கொயந்தைகள்:)).. மங்குஸ்தான் சுவை அதிகம்.

      ஆனா நீங்க வெளிநாடுகளில் இருந்தமையாலதான் இந்த ரம்புட்டான் தெரிஞ்சிருக்கு.. இந்தியாவில் இல்லையாமே .. விசாரித்த இடத்தில் தெரியாது என்றார்கள்.

      // (உடனே ஸ்காட்லாந்தில் மற்ற பெர்ரிகள்னு சண்டைக்கு வராதீங்க. அது சுமார்தான்)///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இங்கு பழங்கள் விளைவிப்பது குறைவு... பழம்.. மரக்கறி எல்லாமே இறக்குமதிதான்.. யூரோப் இலிருந்து.. பெரும்பாலும் பழங்கள் ஸ்பெயின், ஓக்லாண்ட் போன்ற இடங்களிலிருந்தே வருது... பப்பாப்பழம்.. பாசன் ஃபுருட் எல்லாம் கிடைக்குது அவை எங்கிருந்தோ தெரியாது..

      அனைத்துக்கும் மிக்க நன்றி நெ.தமிழன்.

      Delete
  25. சகோதரி பிரியா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  26. //.. சங்கத் தமிழ் இரண்டும்[ழ,ள] தாங்கோ அம்மனே_()_:)!!//

    சங்கத்தமிழ் மூன்றல்லவோ!?.. ல, ழ, ள!..

    ல - மட்டும் ஒயிங்கா வருதாக்கும்!..:(

    என்னவோ போங்கோள்... ஒரே கொயப்பமா க்கீது!.:>)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. இப்போதெல்லாம் ஓசிச்சு ஓசிச்சுத்தான் வாறீங்க:))..

      //சங்கத்தமிழ் மூன்றல்லவோ!?.. ல, ழ, ள!..//
      உண்மையில் இவைதான் சங்கத்தமிழோ?:) ஹா ஹா ஹா இதை மேலே நெ.தமிழனிடமும் கேட்டிருக்கிறேன்..:).

      ல.. ஒழுங்கா வருமே.:) ஹா ஹா ஹா.. பிக்கோஸ் இலங்கை யிலயே ல இருக்கே:))..

      //ஒயிங்கா//
      ஒயுங்கா:) - இப்பூடி எழுதோணுமாக்கும்:)..

      //என்னவோ போங்கோள்... ஒரே கொயப்பமா க்கீது!.:>)///
      ஹா ஹா ஹா கோபு அண்ணனை நினைவு படுத்துறீங்க..

      மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  27. எங்கிருந்த்தாலும் வாழ்க எல்லோரும்வாழ்க லிச்சீஸ் பார்த்ததுண்டு சுவைத்ததில்லை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. லைச்சீஸ் நல்ல இனிப்பாகவே இஞ்கு கிடைக்குது..

      மிக்க நன்றிகள்.

      Delete
  28. ப்ரியசகி அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்....

    மற்றவையும் சிறப்பு 👌.

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.

      Delete
  29. ஏஞ்சல் மேல் கோவிச்சதில் ப்ரியசகி அம்முவுக்குப் பிறந்த நாள் வாழ்த்தே சொல்லலை. ப்ரியசகி அம்முவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இருவரின் நட்பும் இப்படியே தொடர்ந்து உறுதியாக நிலைத்து நீடிக்கப் பிரார்த்தனைகள்.

    அதிரடி, என்ன கிஃப்ட் கொடுத்தீங்க? அந்தப் பச்சைக்கல் நெக்லஸா? :))))

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கீதாக்கா. கிப்டா ஆ பூசார் கொழுக்கட்டை, மாவிளக்கோடு விட்டுட்டாங்க. அந்த ப.நெக்லஸ் பற்றி கேக்காதீங்கோ...

      Delete
    2. Geetha Sambasivam
      //ஏஞ்சல் மேல் கோவிச்சதில் ப்ரியசகி அம்முவுக்குப் பிறந்த நாள் வாழ்த்தே சொல்லலை//

      வாழ்த்தை மட்டுமோ சொல்லாமல் விட்டீங்க?:))..

      //அந்தப் பச்சைக்கல் நெக்லஸா? :))))//
      ஹையோ ஆண்டவா
      .. இப்போ கொஞ்ச நாளாகத்தான் எல்லோரும் இதை மறந்திட்டினம் என என் தொண்டையால தண்ணி ஒயுங்கா இறங்கிச்சுது:)) திரும்படியும் நியாஆஆஆஆபகப்படுத்திட்டாவே கீசாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா..

      //
      priyasaki//. அந்த ப.நெக்லஸ் பற்றி கேக்காதீங்கோ...

      ஆங்ங்ங் இது பேர்த்டே பேபிக்கு அயகு:)) இப்பூடித்தான் இருக்கோணூம்:).. சே..சே இந்தப் பயம் புய்க்கும்:)) ஹா ஹா ஹா.

      Delete
  30. உங்க அன்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் அதிரா. என்ன சொல்வதென்றே தெரியல. மிக்க மகிழ்ச்சி
    கொஞ்சம் பிசி அதனால் வரமுடியல.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. இன்று வருவீங்க என நான் எதிர்பார்க்கவே இல்லை.. இது இன்ப அதிர்ச்சி.. மிக்க நன்றி.. பார்த்ததும் வந்தமைக்கு.. வராவிட்டால் நாளை மயில் தூது விடலாம் என இருந்தேன்...

      Delete
  31. அழகான பிள்ளையார். எந்னிடமும் இருக்கு சின்னதா. இப்ப கொண்டாட்டங்களில் இப்படியான கிப்ட் தானே கொடுக்கிறாங்க. அப்படி கிடைத்தது. கொழுக்கட்டை, மாவிளக்கு நல்லாயிருக்கு. சொக்கப்பனை ஞாபகம் இருக்கு.
    மாவிளக்கு கீதாக்கா சொன்ன மாதிரி அழகா,நிதானமா எரியுது.
    ரோஜா படம் அழகா இருக்கு. அதிலும் 2வது படம் கூடுதல் அழகு. செவ்வந்தி பூ இங்கு வைத்தால் நத்தை வந்து வளரவிடாமல் செய்துவிடும். வளர்க்க ஆசை.பொட் ல் அடுத்த முறை வைத்து மேலே வைக்கிற ப்ளான்.
    என் பேவரிட் Lychee. ஊசி இணைப்பு,ஊசி குறிப்பு அருமை.
    மீண்டும் நன்றிகள் அதிராஆஆ.

    ReplyDelete
    Replies
    1. //இப்ப கொண்டாட்டங்களில் இப்படியான கிப்ட் தானே கொடுக்கிறாங்க.//

      ஆவ்வ்வ்வ் அதில்தான் எனக்கும் கிடைச்சுது.. இவர் ஒரு சாண் உயரமாக இருப்பார்..

      // செவ்வந்தி பூ இங்கு வைத்தால் நத்தை வந்து வளரவிடாமல் செய்துவிடும்.//
      அதனால்தான் நான் எப்பவும் வாங்குவதில்லை.. இம்முறை அதனால சாடியில் வைத்துப் பாதுகாக்கிறேன்ன்.. ஆனா ரோட்டோரமெல்லாம் பென்னாம் பெரிய ஏரியாவில் அழகாக நட்டிருக்கினம் அங்கு நத்தைத்தொல்லை இல்லையோ என்னமோ..

      மிக்க நன்றிகள் அம்முலு. ஹப்பி பேர்த்டே எகயின்.

      Delete
  32. //பிறந்தநாள்.. இன்று பிறந்தநாள்.. பிள்ளைகள் போலே.. தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்..// அதிராவின் இந்தக் கவிதை[கவிதைதான்] வைரமுத்துவின் கவிதையை[ஊசிக்குறிப்பு]விடச் சிறந்தது.

    இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசி ஜி வாங்கோ..
      அது எங்கள் இலங்கை வானொலியில் முன்பு காலை 7 மணிக்கென நினைக்கிறேஎன் எப்பவும் ஒலிக்கும்.. பின்பு வாழ்த்துக்கள் கூறுவார்கள்.. அதனால பாடம் எனக்கு.. பின்பு பார்த்தால் அது ஒரு சினிமாப் பாட்ட்டு:)) ஹா ஹா ஹா..

      https://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY

      மிக்க நன்றிகள்.. உங்கள் கொமெண்ட் எப்பவும் என்னை உச்சிக்கு கொண்டுபோய் விடுகிறது உற்சாகப்படுத்தி.

      Delete
  33. தங்களின் நண்பருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  34. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அம்முலு என்றும் மகிழ்வான தருணங்கள் உமதாக நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க நூறாண்டு வளத்துடனும் நலத்துடனும்

    ReplyDelete
    Replies
    1. என்ன கவிஞர் நீங்க சீராளன். சட்டுனு ஒரு கவிதை எடுத்துவிட்டிருக்கவேண்டாமா? ரொம்ப பிஸியாயிட்டீங்களா? சித்திரமும் கைப்பழக்கமல்லவா?

      Delete
    2. வாங்கோ மேஜரே வாங்கோ.. என்ன இம்முறை கருமமே கண்ணாக வாழ்த்து மட்டும் சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டீங்க...

      நெல்லைத்தமிழனும் உங்களைத் தேடினார்ர்.. அவர் கேட்கும் கிளவியைத்தான் ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே.. கேள்வியைத்தான் மீயும் கேட்கிறேன் கவிதை எங்கே?:))..

      கவிஞர்கள் பொய் சொல்பவர்கள் மட்டுமல்ல..
      காணாமல் போபவர்களும் கூட...

      ஆவ்வ்வ்வ் கவித கவித.. நேக்கும் இன்ஸ்டண்ட் கவிதை வருதே:)).. ஹா ஹா ஹா நன்றி மேஜரே.

      Delete
    3. வாழ்த்துக்கு மிக்க நன்றி சீராளன்.

      Delete
  35. என் கணவருக்கும் பிறந்தநாள் நேற்றும் இன்றும். நடசத்திர பிறந்த நாள் நேற்றும் வந்து விட்டது, இன்று மதியம் வரை இருக்கிறது.

    பாடல் இப்போது தான் கேட்டேன். இதுவும் பிடித்தபாடல்தான் எனக்கு.

    நேற்று பாடல் காட்டவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஓ கோமதி அக்கா மாமாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. எங்கள் வீட்டிலும் 26..27 எல்லாம் கொட்டாட்ட நாட்கள்தான்:))

      Delete
    2. மாமாவுக்கு நடசத்திர பிறந்தநாள் அதிரா. ஆவணி
      அவிட்டம் சனிக்கிழமையும், ஞாயிறும் அந்த நட்சத்திரம் இருந்தது.
      பிறந்த நாள் வருகிறதா?

      Delete
  36. பூக்களும் மணக்கின்றன, பழங்களும் இனிக்கின்றன, அதிரா! lycheeக்குக்கீழே உள்ளவை திராட்சையா?
    பிரியசகிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத்தெரிவியுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ ..
      நீங்களும் அடிக்கடி காணாமல் போயிடுறீங்க..

      லைச்சிப்பழத்தை.. தோல் உரித்தும் பின்பு சாப்பிட்ட பின்னர் அதன் உள்ளே இருந்த பருப்பையும் போட்டு வைத்திருக்கிறேன்.. அதுதான் திராட்சை போல தெரியுது.. ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி. பிரியசகி படிப்பா.. இப்போ பிசியாக இருப்பதால் ரைம் உள்ளபோது வருவா.. மிக்க நன்றி.

      Delete
    2. உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி மனோக்கா

      Delete
  37. இளையராஜா - எஸ் பி பி - எஸ் ஜானகி காம்பினேஷனில் ஒரு அருமையான பாடல். எவர்க்ரீன் துள்ளாட்டப் பாடல். பல வருடங்களாய் இந்தப் பாடல்தான் என் ஒன்று விட்ட தம்பியின் ரிங்க்டோன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. உங்களை இம்முறை நான் எதிர்பார்க்கவில்லை.. வரமாட்டீங்க எனத்தான் நினைச்சேன் திடீர் ஷொக் குடுத்திட்டீங்க... எப்பவும் கஸ்டப்பட வேண்டாம்.. ஒன்றும் குறையில்லை.

      ஓ மிக அருமையான பாடல்தான்.. கேட்க கேட்க இனிமை... பிரியசகி ஜேர்மனியில் இருப்பதால்.. இப்பாடல் போட்டேன் அவவுக்காக:).

      Delete
  38. ஓ... இன்று சகோதரி ப்ரியசகி அம்முலுவுக்கு பிறந்த நாளா? எங்கள் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு ரெம்ப நன்றி சகோ. ஶ்ரீராம்

      Delete
  39. எங்கள் அம்மாஅப்பாவின் திருமணநாள் இன்றுதான்!

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் நிறையப் பேருக்கு இன்றும் நாளையும் நீங்க நினைவு நாட்களாகி விட்டனவே.. இம்மாதத்தில்:))

      Delete
  40. ரொம்ப நெருங்கிப் பழகும்போது நீங்கள் சொல்லும் ஏமாற்றங்கள் வரும், எனவே நெருங்கிப் பழக வேண்டாம் என்று நானும் நினைப்பதுண்டு. அப்போதும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தால் ஓகே...

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்ப்புக்கள் இல்லாமலும் வாழ முடியாது ஸ்ரீராம், ஆனால் நெருங்காமல் இருந்தால்.. கொஞ்சம் மனதை சமாதானப் படுத்தலாம்.. நாம் ஒன்றும் பெரிய நெருக்கமில்லையே.. அதனால அவர்கள் ஒன்றும் பெரிய தப்பு பண்ணி விடவில்லையே.. என நம்மை நாம் தேற்றும் வாய்ப்பு அதிகம், ஆனா நெருங்கிப் பழகிட்டால்ல்.. நம்மை நாமே சமாதானம் செய்வது ரொம்ப கஸ்டம்:).

      Delete
  41. ஆடி வெள்ளியில் என் பாஸ் கேசரியோ, சர்க்கரைப் பொங்கலோ செய்து விடுவார். கேசரி எனக்குப் பிடிக்காது. ச.பொ இஷ்டமான வஸ்து!

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்போ ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கும் இனிப்புச் செய்து குடுக்கோணுமோ அம்மாள் ஆச்சிக்கு.. இனி அடுத்த முறை தொடர்கிறேன்ன்.. கே சரி.. புய்க்காதோ... அவ்வ்வ்வ்வ்... எங்கள் மூத்தவருக்கு சக்கரைப்புக்கை பிடிக்காது ஆனா கேசரி நல்லாப் பிடிக்கும் ஹா ஹா ஹா... என்னா ஒரு பொருத்தம் இந்த இருவருக்கும்:)).. சக்கரைப்புக்கை ஒரு வாய்கூட எடுக்க மாட்டார்ர்.. நான் சுவாமிக்கு வைத்தது சாப்பிடோணும் என கலைச்சுப் பிடிச்சு கொஞ்சம் குடுத்திடுவேன்ன்..

      Delete
  42. நீங்கள் செய்திருக்கும் கொழுக்கட்டை வெள்ளை நிறமாய் இல்லாமல் இருக்கிறது! மாவிளக்கு படம் அழகாய் இருக்கு. கொழுக்கட்டை என் உயிருக்கு உயிரான வஸ்து!!!

    ReplyDelete
    Replies
    1. நான் சிவப்பு அரிசிமாத்தான் சேர்த்தேன்.. அதனாலதான் சிவப்பு.. பொதுவா நாங்கள் ஊரில் சிவப்பு அரிமாத்தான் சேர்ப்போம்ம்.. பெரும்பாலும் நம் ஊர்க் கொழுக்கட்டை மோதகம் எல்லாமே சிவப்புத்தான்:).

      மாவிளக்கில் இப்பொ முன்னேறி இருக்கிறேன் .. இன்னும் இடமிருக்கு:)) நன்றி.

      //கொழுக்கட்டை என் உயிருக்கு உயிரான வஸ்து!!//

      என்ன இது வர வர இனிப்பு லிஸ்ட் நீளுதே..:)) ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனின் இடத்தைப் பிடிச்சிடப்போறீங்க இனிப்புப் பிரியர் வரிசையில்:)).. எங்கள் வீட்டில் இது இறங்காது,,, கடவுளுக்காக செய்து போட்டு.. நானே சாப்பிடுவது.. மிகுதியை எறிவது இப்படியும் நடக்கும்... பல சமயம் இங்கு இங்கத்தைய நட்புக்களுக்கு குடுத்திடுவேன்ன்.. சில சமயம்.. இந்தக் குளிருக்குள் ஆர் கொண்டு போய்க் குடுப்பது எனும் அலுப்பில் விட்டு விடுவதும் உண்டு:))

      Delete
  43. வடிவேலு இதே போஸில் ன்னும் என்னென்ன ஜோக்ஸ் எல்லாம் சொல்வார்!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் பாருங்கோ.. நான் கையில் கிடைப்பதத்தனையும் சேர்த்து வைச்சுப் போட்டூ பின்னர் போஸ்ட் க்கு ஏற்ப போடுவேன்ன்.. இம்முறை போஸ்ட்டுக்குப் பொருத்தமாக இல்லாட்டிலும் ஓகே கொமெடி நல்லாத்தானே இருக்கு எனப் போட்டேன்ன்:)

      Delete
  44. வைரமுத்துக் கவிதை இம்முறை அந்த ளவு கவரவில்லை. இதைவிட பெட்டர் கவிதைகள் அவர் கலெக்ஷனில் இருக்காக்கும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.. அவசரமாய்த் தேடினால்ல்.. பிறந்தநாள் போஸ்ட்டுக்கு மகிழ்ச்சியான கவிதை கிடைக்கவில்லை.. நீங்க சொன்னீங்க மேத்தாவின் கனவுக்குதிரையில் இருந்தும் அப்பப்ப போடுங்கோ என.. அதிலும் தேடினேன்ன்.. கவலைக் கவிதையே கிடைச்சுதா, அதனால விட்டுப்போட்டு.. இதையே போட்டு விட்டேன்ன்:).

      Delete
  45. நான் வருவதற்குள் பின்னூட்டங்கள் நூறைத் தாண்டி விட்டனவே,,, கடைசிப்பெட்டிக்கு முதல் பெட்டியில் ஏறியிருக்கிறேனோ....!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்ன பின்பே பார்த்தேன்ன் 130 ஐத் தாண்டியிருக்கு.. நான் செக் பண்ணாமலே 100 ஐத்தொடவில்லை என நினைச்சிருந்தேன் ஹா ஹா ஹா..

      கடசிப்பெட்டி கார்ட் பெட்டியாக்கும்:))... நீங்க அதுக்கு முந்தினதில ஏறிட்டீங்க:)).. இன்றோடு ரெயின் புறப்படப்போகிறது.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.. நீங்க ஏதும் வரக் கஸ்டம் எனில் பறவாயில்லை... குறை ஒன்றுமில்லை.. வேணுமென்றே என்னிடம் மட்டும் வராமல் மற்ற இடங்கள் போனால் மட்டும்தான் மீ சண்டைக்கு வருவேனாக்கும் ஹா ஹா ஹா:))
      மிக்க நன்றி.

      Delete
  46. வணக்கம் சகோதரி

    தங்கள் உயிர் தோழிக்கு பிரியசகி அவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    என் மகனுக்கும் நேற்றுதான் பிறந்தநாள். இந்த தடவை நட்சத்திரம், பிறந்த நாள் இரண்டும் ஒன்றாகவே வந்திருந்தது. தங்களின் பதிவு நன்றாக உள்ளது. மலர்களின் படங்கள், மாவிளக்குமா படங்கள், அனைத்தும் அருமை. கொழுக்கட்டை படங்களும் அருமை. உங்கள் வீட்டு பூஜை அறையும் அழகாக உள்ளது. விநாயகர் என் இஷ்ட தெய்வம். தங்கள் வீட்டு ஊஞ்சல் பிள்ளையாரை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
    என் பதிவில் மைசூர்பாகை சுவைக்க நீங்கள் வரவேயில்லையே? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ..

      ஹா ஹா ஹா அவ உயிர் அவவிடம் தான் இருக்கு:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      ஓ உங்கள் மகனுக்குமோ அவ்வ்வ்வ் அடுத்தடுத்து ஒரே பிரசவ மாதமாக இருந்திருக்கே ஓகஸ்ட்:) ஹா ஹா ஹா.. மகனுக்கு இனிய மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

      //தங்கள் வீட்டு ஊஞ்சல் பிள்ளையாரை மிகவும் ரசித்தேன்//

      மிக்க நன்றி, எனக்கும் அவரை நன்கு பிடிச்சிருக்கு.. அடிக்கடி நூலை இழுத்து ஊஞ்சலை ஆட்டி அவரை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறேன் ஹா ஹா ஹா.. மேலே ஒரு குட்டி மணியும் தொங்குது பாருங்கோ... என்னா ஒரு அலங்கரிப்பு அவருக்கு...

      ஓ மைசூர் பாகு.. மன்னிச்சுக்கோங்க.. இன்னும் நான் ஒழுங்காக வலையுலகில் கால் பதிக்கவில்லை.. சமர் ஹொலிடே விட்டதிலிருந்து.. இன்னும் இருவாரத்தின் பின்புதான்.. ஒழுங்கா வந்து எல்லோரையும் ஓட ஓட விரட்டி கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருக்கப் பண்ணுவேன்ன்:)).. அதுவரைக்கும் எல்லோரும் எஞ்சோய் பண்ணிக் ஹப்பியாக இருங்கோ ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி.

      Delete
    2. ரெம்ப நன்றி உங்க வாழ்த்துக்களுக்கு.

      Delete
  47. மியாவ் ரெயின் புறப்பட்டு விட்டது... இன்னும் குறைஞ்சது பத்து நாட்கள் கூடியது பதினைந்து நாட்களில்.. வருகிறேன்ன்.. அதுவரை அனைவருக்கும் நன்றி.

    “இன்று அமாவாசை
    வீட்டுக்குத்தூரம்
    வெளியே வர முடியாது
    அம்மா கத்துவா
    நாளைக்கு இதே நேரம்
    பளீச்செனத் தோன்றுவேன்
    அதுவரை காத்திருங்கோ”
    நன்றி_()_

    ReplyDelete
    Replies
    1. இனிய பயணத்திற்கு எனது வாழ்த்துக்களும்..

      Delete
  48. பயணமா? பயணம் இனிமையானதாக இருக்கட்டும்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அக்கா.. விடுமுறை எல்லாம் முடிச்ச பின்பே நன்றி சொல்கிறேன்ன்.. மன்னிக்கவும்.

      Delete
  49. ஊர் சுற்றி இங்கு வர தாமதம் அதிரா..

    அம்முக்கு எனது வாழ்த்துக்களும் ..என்றும் மகிழ்வுடன் மன நிறைவுடன் உங்கள் நாட்கள் அமையட்டும்...அம்மு

    பூக்கள் எல்லாம் ரொம்ப அழகு...ரசித்தேன்...அதிரா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ.. கோடை காலம் என்பதனால் எல்லோரும் பிசிதான்.. அதனால குறையேதும் இல்லை:)..

      மிக்க நன்றி.

      Delete
  50. புது இடுகை இன்று வெளிவரும் என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஏச்சுப்புட்டேனே அதிரா ஏச்சுப்புட்டேனே:) ஆனா அங்கு வெளி வந்துதே:))

      Delete
  51. சகோ பிரியசகி அவர்களுக்கு எமது தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பூக்களின் படங்கள் ஸூப்பர்.

    இப்பதிவு இதுவரை எனது டேஷ்போர்டுக்கு வரவில்லை.

    அ.அ.அ. எனது பதிவுகளுக்கு வருவதில்லையே காரணமென்ன என்று உங்களது அங்கிள் ட்றம்ப் அவர்களுக்கு ஓலை அனுப்பியும் தகவல் வரவில்லை.

    பிறகு நானாக யோசித்து இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தேன் இப்போது புரிந்து கொண்டேன்.

    ம்....ம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. அது அப்படித்தான் சில நேரங்களில் கோளாறு பண்ணும்.. நாங்கதான் கிட்னியை ஊஸ் பண்ணிக் கண்டு பிடிகோணும்:)..

      மிக்க நன்றி.

      Delete
    2. ///அ.அ.அ.//

      அதுசரி ரெண்டு அ தெரியும்:) அதென்ன மூன்று அ?:)) ஹா ஹா ஹா... அதிரடி அதிராவின் அலப்பறைகள் என வருமோ கர்ர்ர்ர்ர்ர்?:))

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.