நல்வரவு_()_

****

Sunday, 28 May 2023

 ராமர் எப்படி இறந்தார்?:)

ஆண்டவா!!! இண்டைக்காவது எனக்கு இதன் 
உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீ!!!

னக்கொரு டவுட்டூஊஊஊஉ என்னதான் கம்பராமாயணம் படிச்சு, கரைச்சுக் குடிச்சாலும் (என்னைச் சொன்னேன்:)), ராமர் கடசியில எப்படி இறந்தார் என டவுட்டாகவே இருக்கெனக்கு:).. இந்த டவுட் உங்களில் ஆருக்கும் வந்திருக்காதே:).. ஏனெண்டால் அதிராதான், என்னோட குட்டிக் கிட்னியை வச்சு இப்படி எல்லாம் ஓசிப்பேன்:)), உங்களுக்கு இதுக்கெல்லாம் எங்கின நேரமிருக்கப் போகுது:)).

 சரி சரி முறைக்கக்கூடாது எனக்குப் பதில் வேணும்:), அதுக்காக இப்ப என்ன கம்பரைக் கூப்பிடவா முடியும், நாங்கதான் ஒரு முடிவுக்கு வரோணும்:)) ஹா ஹா ஹா.

பொன்னியிலன் செல்வன் படிச்சிட்டீங்களோ என எல்லோரும் கேய்க்கினம் கர்ர்ர்ர்ர்:)) ஆனா அதைவிட முக்கியம், ராமர் எப்படி இறந்தார் என்பதுதான்:), அதிராவுக்கு நட்பாக இருப்போருக்கு ராமாயணம் ஒழுங்காத் தெரியாதெனில், அதிராக்கு வெய்க்கம் வெய்க்கமா வருமெல்லோ:)).. ஹையோ இப்ப கீழ குனிஞ்சு என்ன தேடுறீங்கள்?... அதெல்லாம் எடுக்க வாணாம்ம்ம் மீ பாவம் இப்போ கம்பர் அங்கிளும் இல்லை [உடனே இப்ப ஒராள் கொடி தூக்குவா:), ஆ அவர் உங்களுக்கு அங்கிளோ, எனக்கு கொள்ளுத்தாத்தா என கர்ர்ர்ர்ர்ர்:)].

 இந்தக்காலத்தில 90 வயசாக்களையும் அன்ரி, அங்கிள் எனக் கூப்பிட்டால்தான் சந்தோசமாகக் கதைக்கினம், இல்லை எனில் முறைக்கினம், அதால நான் எல்லோரையும் அங்கிள் என்றிடுவன், அடுத்தவர்களுக்கு எது சந்தோசத்தைக் கொடுக்குதோ அதைத்தானே நாம் செய்யோணும்.

ஹையோ ரெயின் ட்ரக் மாறிப்போகுதே:).. எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈ... ஆஆ கம்பர் அங்கிள் இருந்தால் விளக்கம் சொல்லுவார், இப்போ ஆரிடம் போய்க் கேய்ப்பேன், எனக்கு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈ:), ராமபிரான் எப்படிக் காலமானார்???.. கவ்? கவ்? கவ்?:)...

அது கொலையா, தற்கொலையா? .. தற்கொலை எனில் அது தப்புத்தானே?, இதை , அதிராவைத்தவிர ஆருமே தட்டிக் கேய்க்க மாட்டீங்களோ?:)).

===========_____இடைவேளை_____===========

யார் யாரெல்லாம் கல்லெடுக்கப் போகினமோ தெரியேல்லையே கோவில்பட்டி முருகா!!!, எதுக்கும் ஒளிச்சிருந்துகொண்டே குரலை மட்டும் குடுப்போம்.. பூஸோ கொக்கோ:).. தண்ணியில் மீன்கள் மாட்டும் ஆனால் பூஸ் மாட்டுமோ ஹா ஹா ஹா

======இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்ச்:)======

சரி இப்போ கதையைச் சொல்றன், முடிவில ஒரு முடிவுக்கு வருவம்:).

ராமபிரானுக்கு ஒரு தம்பி, அதாவது அஞ்சுவுக்கு, நான்(அதிரா) ஒரு தங்கை இருப்பதைப்போல[ ஹா ஹா ஹா கொஞ்ச நேரம் நில்லுங்கோ, சிரிச்சு உருண்டு பிரண்டிட்டு வாறேன்:), இப்படிச் சந்தடி சாக்கில சொல்லிடோணும், இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் அமையுதோ இல்லையோ ஆரு கண்டா:) ஹா ஹா ஹா], லக்ஸுமனன் இருந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிவதில்லையாம் [ஆரு கண்டா, கம்பர் அங்கிள் சொல்லியிருக்கிறார், சரி இருக்கட்டும்:)]. அப்போ ஒரு முனிவர் ராமரைச் சந்திக்கப்போகிறேன் என அவர்களின் கோட்டைக்கு வந்தாராம், வந்த முனிவர் சொன்னாராம், ராமரிடம், நான் உன்னோடு தனியே பேச வேண்டும், பேசும்போது யாரும் உள்ளே வரவும் கூடாது, பேசுவதை ஒட்டுக் கேட்கவும் கூடாது, அப்படி இதை மீறி ஆராவது செய்தால், அவர்களைக் கொல்ல வேண்டும், என.

இதற்கு ராமர் சம்மதித்து, தன் தம்பி, லட்சுமனனைக் கூப்பிட்டு, இதைச் சொல்லி, இந்தப் பொறுப்பை நீதான் ஏற்க வேண்டும் , யாரும் உள்ளே வராதபடி காவல் காத்துக்கொள் என,  தம்பியும் அதற்குச் சம்மதித்து, அறைக்கு வெளியே காவல் காத்தாராம்.

உள்ளே வந்த முனிவர், கதவைச் சாத்தியதும், தன் வேசத்தைக் கலைத்தாராம், அவர் வேறு யாருமில்லை, எமன் அங்கிளாம்[கடவுளே பேரைச் சொல்லவே பயம்மாக் கிடக்கு], அப்போ அவர் ராமரிடம் சொன்னாராம், நீங்கள் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவிட்டீங்கள்[ இந்தக் காலத்தில 100 வயசைத் தொட்டாலே அவார்ட் எல்லாம் குடுக்கினம் ஹா ஹா ஹா இது பத்தாயிரமாமே], இனி உங்கள் காலம் முடிஞ்சுபோச்சு, நீங்கள் என்னோடு வரவேண்டும் என, இதைக் கேட்ட ராமர் ஷாக்க்க்க்க் ஆகி அமர்ந்திருந்தாராம், ஏனெனில் அவர்தான் ஆட்சியில் இருந்தார், அப்போ மனைவி பிள்ளைகள் காட்டிலாம்....

எனக்குப் பாருங்கோ இந்த இடத்தில கெட்ட கோபம்தான் வருது, மனைவி பிள்ளைகளைக் காட்டில விட்டுப்போட்டு, இவர் தம்பியோடு அரசாழ்வதானால், எதுக்கு காதலிச்சுத் திருமணம் பண்ணினார்ர்?.. இக்காலத்தில எனில் கண்டபடி கிளவி.. சே..சே பயத்தில டங்கு ஸ்லிப்பாகுதே:), அது சரித்திரக் கதைகள் எண்டாலே எனக்கு காண்ட்ஸும் ஓடாது லெக்ஸ்சும் ஆடாது பாருங்கோ:)..  

சரி விட்ட இடத்துக்கு வாறன், கேள்வி கேட்பினம்... இதை எல்லாம் அறியும்போது, அக்காலத்தில நம் கடவுள்கள் பண்ணியதைத்தானே, இப்போ சில மக்கள் பண்ணுகிறார்கள், ஆனா இப்போ தவறு என்கிறோம்.. இது எந்த வகையில் ஞாயம்... எனக்குத் தேவை.. நீதி, நியாயம், கடமை நேர்மை எருமை:)).. ஆவ்வ்வ்வ் ஒரு ப்ளோவில வந்திட்டுத்து பெரிய மனசு பண்ணி விட்டிடுங்கோ:).

அந்த நேரம் பார்த்து இன்னொரு முனிவர்[துருவாச முனிவர்] அங்கு வந்தாராம், வந்தவர், லட்சுமனனிடம், ராமரைச் சந்திக்கோணும் எனச் சொன்னாராம்,  அப்போ லட்சுமணன் எவ்வளவு சொல்லியும் அடம்பிடித்தாராம் முனிவர்,  அவர் மிகவும் கோபக்காரராம், சந்திக்க விடவில்லை எனில் அயோத்தி அழியோணும் எனச் சாபம் விட்டு விடுவேன் என மிரட்டினாராம், அதனால் பயந்துபோன லட்சுமனன், வேறுவழியின்றி,  அண்ணாவைக் கூப்பிடுவமே என, கதவைத்திறந்து உள்ளே போனாராம், விதி விழையாடிவிட்டது... சொன்ன வாக்கை மீறி உள்ளே போய் விட்டதனால்,.

ராமர், முனிவராக வந்த எமதர்மருக்கு கொடுத்த வாக்கின்படி, தம்பியைக் கொல்ல வேணுமெல்லோ, இப்போ என்ன பண்ணுவது எப்படி அப்படிச் செய்ய முடியும், அதனால மனமுடைந்த ராமர், தம் ராஜ்ஜியத்தில் இருக்கும் முனிவரிடம் ஓடிச் சென்று ஆலோசனை கேட்ட இடத்தில, அவர் சொன்னாராம், உன்னை விட்டு விலகிச் செல்லச் சொல் லட்சுமனனிடம்.. அதுவே ஒருவித மரண தண்டனைதான் என...

ராமனும் வேறு வழியின்றி, தம்பியிடம் சென்று, இனிமேல் என் முகத்தில் முழிக்காதே, என்னை விட்டு விலகிச் சென்றுவிடு எனக் கூறினாராம், ஒரு கணமேனும் ராமனைப் பிரியாத லட்சுமணன், இந்த வார்த்தையைக் கேட்டதும், ஓடிப்போய் அயோத்தியில் இருக்கும் "சரயு நதியில்" குதிச்சு, மறைந்திட்டாராம்.

இதை அறிஞ்ச ராமர், உடனே தன் மகன்களை அயோத்திக்கு அழைத்து,


அவர்களுக்குப் பட்டாபிசேகம் நடத்தி, நாட்டை ஒப்படைத்துவிட்டு, தானும் போய் அந்த நதியில் மூழ்கி, மறைஞ்சிட்டாராம்... இதுதான் நடந்த சம்பவம்..

ஆனா, இது தற்கொலைக்குச் சமனாகிடும் என்பதால, கம்பன் அங்கிள் இதை நம்மிடம் மறைத்து, கதையை முன்கூட்டியே முடிச்சுப் போட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்போ சொல்லுங்கோ, இந்த மரணத்தை எப்பூடி அழைப்பது?..

இன்னொரு விசயம் பாருங்கோ, சீதாப்பிராட்டி மறைஞ்சபோதுகூட, அசையாத ராமர், தன் தம்பியின் பிரிவு தாங்காமல் , தன்னை மாய்த்திட்டார்... எவ்ளோ விசயம் இந்த ராமாயணத்தில மறைஞ்சிருக்குது, இதெல்லாம் அதிரா கண்ணுக்குத்தான் தெரியுமாக்கும்:)... 

நேக்கு.. நீதி வேணும், நியாயம் வேணும்..  நெஞ்சு பொறுக்குதில்லையே... ஆஆஆ ரெம்ம்ம்ப ஹொட்டா இருக்கு, ஒரு கப் ஐஸ் இல்லாத மோர் தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. அந்தர ஆபத்துக்கு இங்கின என் செக்:) ஐயும் காணம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)..

கொண்டை ஊசிக்குறிப்பு:
நீங்கள் யாராவது சரயு நதி பார்த்ததுண்டோ?.. எனக்கு இப்போ பார்க்கும் ஆவல் அதிகமாகிவிட்டது

**************************************************

ஊசிக்குறிப்பு:

எய்தவர் இருக்க அம்பை நோகப்பிடாதாம்:)), அதனால என் எழுத்தில என்ன தப்பிருந்தாலும் என்னோடு சண்டைக்கு வரக்கூடாதாக்கும் ஜொள்ளிட்டேன், ஏனெனில் என்னை இப்போஸ்ட் எழுதத் தூண்டியதே, கீழே இருக்கும் இந்த மீம்ஸ் தான்:)))


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday, 22 May 2023

 அப்படி எதுவும் நடக்காது!! நடக்கவும் கூடாது!!!


ப்படி ஆரம்பிப்பேன் எங்கின ஆரம்பிப்பேன் ஒண்ணுமே பிரியல்ல உலகத்திலே:). ஹெட்ல இருந்து ரெயில் நுனி வரைக்கும் சுத்துது, ஆனாலும் விடக்கூடாது எப்படியாவது புளொக்கில் திரும்படியும் வாலெடுத்து சே சே  ... ஆரம்பமே டங்கு ஸ்லிப் ஆகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்:)... காலெடுத்து வைக்கிறேன்_/\_.

பலபேர் என்னை மறக்கும் நிலையில இருப்பீங்களெனத் தெரிஞ்சுதான், மறப்பதற்குள் ஓடி வந்திட்டேன்..

மறக்க முடியாதே.. மறக்கும் உருவமில்லை அதிரா:)).. ஹா ஹா ஹா என்னென்னமோ எல்லாம் எழுதத்தோணுது  அஅஅடக்கிடுறேன்.

இந்தமுறை பேர்த்டேக்கு லப்டொப் கிடைச்சுதா, அதில இனி புளொக் எழுத ஆரம்பிக்கோணும் என, இவ்ளோ காலமா, தமிழ் பொண்ட் டவுன்லோட் பண்ண நேரம் போதாமலும், பலதை மறந்த காரணத்தாலும் நாட்கள் நகர்ந்து விட்டது.

என்னையும் அஞ்சுவையும் தேடி, கூப்பிட்டு அலுத்துப் போய்க் கை விட்டிருப்பீங்கள், கோமதி அக்கா சமீபத்தில தேடி மெயில் போட்டா, அப்பவே வந்திடலாம் என அஞ்சுவை முன்னால போங்கோ மீ பின்னால வாறேன் எனச் சொன்னேன், அஞ்சுவும் சொன்ன பேச்சுக்கு ஓடினா, ஆனா என்னிடம் தமிழ் பொண்ட் செட் பண்ணாததால், எனக்கு கொப்பி பேஸ்ட் எல்லாம் பிடிக்காத காரணத்தாலும்.. அத்துடன், வந்தால் கொஞ்சம் பேசோணும் எல்லோருடனும் எனும் காரணமாகவும், எல்லாம் செட் பண்ணி வரக் கொஞ்சம் லேட்டாயிடுத்து:) அது டப்பா கீசாக்கா?.   

பொதுவா, கொமெண்ட் இல் தேடுவோருக்குப் பதிலாவது போட்டிடுவேன், விட்டு விட்டு இரு தடவைகள் கில்லர்ஜி தேடினார், பதில் போட முடியாமல் போயிட்டுது, மன்னிச்சுக்கோங்கோ கில்லர்ஜி.

இதுக்கு மேல நான் என்ன பேசுறது எனத் தெரியேல்லை, இது வெள்ளோட்டம்தானே அதனால அப்படி இப்படித்தான் இருக்கும்.. இனிமேல்தான் ஒழுங்கா எல்லாம் செட் பண்ணோணும்.

Saturday, 6 March 2021

     “அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏

 

பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))

மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை.. அது என்னமோ கொஞ்சக்காலமாக ஒரு வெறுப்பு, புளொக்கே வேண்டாம் என ஒரு எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது, வேலையும் முழுநேரமானதும், எதுவும் வேண்டாம் என மனம் சொல்லியது, அப்படி இருந்தும் விடக்கூடாது என இடைக்கிடை ஃபோஸ் பண்ணி புளொக் வந்தாலும் ஏதோ ஒன்று மனம் வெறுக்க வைத்து, ஓஃப் ஆக்கிக் கொண்டே இருந்தது, அது என் ராசி அப்படித்தான், எப்பவும் எதிலும் நிலையாக இருக்க விடாது:))..

அப்படி இருக்கையில்தான், போன வருட மார்ச் லொக்டவுனில் ஆரம்பித்த யோசனை, ஒரு யூ ரியூப் சனல் திறக்கோணும் என்பது, எங்கள் ஆட்களும் எல்லோரும் அப்பப்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஒரு சனல் திறக்கலாமே என... பொறுத்திருந்தேன், 2021 வந்ததும் டமால் எனக் குதித்து விட்டேன்.

ஆனா இங்கு சொல்ல ஒரே ஷை ஷையா இருந்துதா:)).. அதனால கொஞ்ச நாள் போகட்டும் என இருந்தேன், ஆனா என் செக் அதுக்குள் போஸ்ட் போட்டு விட்டா:)), அதனால எனக்கும் கொஞ்சம் ஷை குறைஞ்சு போச்ச்ச்:)).

உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் அஞ்சு மூலம் என் சனல் முகவரி[நன்றி அஞ்சு].. இருப்பினும் நானும் நினைவு படுத்தோணும் எல்லோ:))..

இதுதான் என் சனல்...   athees palace

ஆரம்ப காலம் பலரும் என்னை அதீஸ் எனவே அழைப்பினம், அப்போ அந்தப் பெயரிலேயே ஆரம்பித்தேன், அதிராவாக இல்லையாக்கும்:)).

இதுவரை பார்க்காதோர், subscribe பண்ணாதோர், ஒரு தடவை பண்ண முடிஞ்சால் பண்ணி விடுங்கோ பிளீஸ். அஞ்சு மூலம் அறிந்து, வந்து பண்ணிய அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்_()_.

என்னில எப்பவும் ஒரு பழக்கம், ஒரு அலுவல் எனில், ஒழுங்காகச் செய்யோணும், இல்லை எனில் செய்யாமலே இருக்கலாம் என எப்பவும் நினைப்பேன்.. அதாவது “செய் அல்லது செத்துப்போ” என.

இது காந்தித்தாத்தா சொன்ன வசனம். நான் குட்டியாக இருந்தபோது, எங்கட அண்ணன், அவர் படிக்கும் மேசை, ஒரு கோனரில் இருந்தது, அந்தக் கோனர் சுவரில பென்சிலால சில வசனங்கள் அழகாக எழுதியிருப்பார். அதில இந்த வசனம் இருந்தது, அப்பவே எழுத்துக் கூட்டிப் படிச்சு மனதில பதிச்சுக் கொண்டேன், விளக்கமே தெரியாமல்:)).. அதனால நிறைய நேரத்தை எடுக்கிறது சனல் இப்போ:))

நான் சமைப்பதை முதல் ஆளாகச் சுவை பார்க்கும் என் “செக்”:), அவவுக்கும் இப்போ பதவி உயர்வு குடுத்திட்டேன்:)..  “செக் + பேசனல் அட்வைஸர்”

ஆனால் சம்பளம் இன்னும் தீர்மானிக்கவில்லையாக்கும்:)). பாருங்கோ மூக்கில கட்ட வேண்டியதைத் தலையில கட்டிக்கொண்டிருக்கிறா கர்ர்ர்ர்:)).

உப்புப் புளி எல்லாம் கரெக்ட்டாக இருக்குதோ எனப் பார்க்கிறேனாக்கும்:))
🙏🙏🙏😻🙏🙏🙏

இது எங்கள் புளொக்குக்காக செய்த என் கை வண்ணம், பெயிண்ட் பண்ணி, தலையணை உறையாகத் தைத்து எடுத்து, தலையணையிலும் போட்டு வச்சிட்டேன், இன்னும் பாவிக்கவில்லை... நாங்க சென்னை போனால் ஸ்ரீராமுக்கு குடுக்கப்போறேன்:))

EB = Engal Blog


முடியும்போது அப்ப அப்ப போஸ்ட் உம் இங்கு போட இருக்கிறேன், அனைவருக்கும் நன்றி.

ஆஆஆஆ ஜொள்ள மறந்திட்டேன், நெல்லைத்தமிழன் 2019 இல் இங்கு சொன்னார், 2021 இல் தங்களுக்கு ஒரு விஷேசம் உண்டு என, அப்போ நினைச்சேன், அதுக்கு இன்னும் எவ்ளோ காலமிருக்குது எண்டு, ஆனா திரும்பிப் பார்க்க முன் வந்திட்டுது, நெல்லைத்தமிழன், விசேசத்துக்கு எங்களை அழைக்காவிட்டாலும் கோபிக்க மாட்டோம், ஆனா சமையல் ஓடர் மட்டும் அதீஸ் பலஸ் லதான் குடுக்கோணும்:)).. இதுபற்றிப் பேச என் “செக்” ஐத் தொடர்பு கொள்ளவும்:)).

ஊசி இணைப்பு:
இது ஆருடைய வெயிட்டாக இருக்கும்...?:))

ஊசிக் குறிப்பு:
 “முன்னே செல்பவரை விட்டு விடுங்கள், பின்னால் வருபவரிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள், அவரால்தான் உங்களை முந்த முடியும்”

 “மீண்டும் ஒருமுறை முகம் பார்த்துப் பேச வேண்டியிருக்கும் என்ற ஒரு காரணத்துக்காகவே, நமது பல கோபங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன”

இவ்வரிய தத்துவங்களை உங்களுக்காக இங்கு கஸ்டப்பட்டுக் காவி வந்திருப்பவர்:- உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய.. “புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்”
🌹🌹🌹🌻🌻🌻🐱🐱🐱🌻🌻🌻🌹🌹🌹

Friday, 18 December 2020

Monday, 7 December 2020

 சகுனங்களை நம்பலாமோ??

போஸ்ட் எழுதி கனகாலம் ஆகிவிட்டது, எப்படி எழுதுவதென்றும் தெரியவில்லை, மனமும் ஒரு நிலையில் இல்லை, அடுத்தடுத்த மனம் தாங்காத சம்பவங்களால், புளொக்கே வேண்டாம் எனக்கூட அப்ப அப்ப எண்ணம் வந்து செல்கிறது... இந்த ஆண்டு கடகடவென ஓடி முடிஞ்சு புத்தாண்டு விரைவில் வந்திடோணும் எனப் பயமாக இருக்கிறது.. அப்படிப் பயந்தவண்ணம் இருந்தபோதே, கோமதி அக்காவின் மாமாவின் செய்தி காதுக்கு வந்தது, அதிலிருந்து மீளவே முடியவில்லை:(..