நல்வரவு_()_


Thursday, 22 September 2011

வானவில்லும்!!!, முன்னால் நானும்:)

வானவில்லை மலை அடிவாரத்தில், ஆற்றுடன் சேர்த்துப் பார்ப்பதில் ஒரு தனி அழகே இருக்கு. சிலவேளைகளில் இரட்டை வானவில்லும் பார்த்திருக்கிறோம். இம்முறை பார்த்தபோது, உடனேயே படமெடுக்கும் எண்ணம் வந்துவிட்டது... மழையும் தூறியதால் நல்ல துலக்கமாக இல்லை, இருப்பினும் அழகாகத் தெரியுது.

கீழே பச்சை மரத்தோடு சிகப்பு மரம் தெரியுதோ? அதை இப்போதான் பார்த்தேன், அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அம்முலுவின் நினைவுதான் வரும்:).


மேலே வளைந்து போவது தெரியுதோ? வடிவா உத்துப்பாருங்கோவன் கர்ர்ர்ர்:))

ஆற்றைத் தொடுவது தெரியுதோ?
தலைப்பைப் பார்த்திட்டு, வானவில் இருக்கு, அதிராவைக் காணேல்லை எனத் தேடுறீங்களோ?:)), நான் “மாயா” மாதிரி கியூவில முன்னுக்கு நிற்கமாட்டன்:)), கொஞ்சம் “ஷை” ஆக்கும்:)), கடசிலதான் நிற்பன்... பாருங்கோ:)))

=====================================================
இங்கே கோடை முடிந்து, இலையுதிர்காலம் தொடங்கும்போது, ஒருவித காய்கள் காய்க்கும் கொத்துக் கொத்தாக, பார்க்கவே கொள்ளை அழகூஊஊஊ... சாப்பிடலாம்போல இருக்கும், ஆனால் ஆரும் சாப்பிடுவதில்லை. இவை அனைத்தும் எங்கட ஏரியாவே...


இது குட்டிக் குட்டிப் பற்றையாக இருக்கும்(ஈச்சம் பற்றைபோல)

சில வீடுகளில் வேலியாக வளர்த்திருக்கிறார்கள்...



இது ஒருவித செரி மரம்... பழங்கள் கொத்தாக ஆனா அடர்த்தி குறைவாக இருக்கும். சாப்பிடக்கூடாதாம்.


இது இன்னும் பெரிய மரம் கொத்துக் கொத்தாக காய்க்கும்... மரத்தைவிட்டு கண்ணை எடுக்க முடியாமல் அழகாக இருக்கும். இதிலே ஒரேஞ் கலரும் இருந்தது, அது எங்கள் ஏரியாவில் இல்லை, ஒரு தடவை எங்கோ போனபோது படமெடுத்து வைத்தேன், இப்போ தேடினால் எங்கின சேவ்:) பண்ணினேன் எனத் தெரியேல்லை அவ்வ்வ்வ்வ்வ்:))).


இதுவும் வேலியாக வளர்த்திருக்கிறார்கள், அழகான வெள்ளைக் கொத்துக் காய்கள்....



இதுவும் அழகுக்காக வளர்க்கப்பட்டிருக்கு... பசளி இலைபோல இலைகள்... கொத்தாக சைனிங் ஆன பழங்கள்(இது வேற ஷைனிங்:)).


உஸ்ஸ்ஸ்ஸ் ஓடாதீங்க..:)) இதையும் பார்த்திட்டு ஓடுங்கோவன்:)))..

இம் மரங்களின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், பூக்காது, நேரடியாக காய்களாக வெளியே வரும்.... ம்ம்ம்ம்.. நம்பவே முடியல்ல இல்ல:)))..... நோ சான்ஸ்ஸ்ஸ் நம்பித்தான் ஆகோணும்:))), இல்லாட்டில் பிராண்டிப்போடுவமே:))).
=====================================================

ஊசி இணைப்பு:
இரகசியம்...


=====================================================

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியவே இல்லை சாமீஈஈஈஈஈஈஈ...... நான் சூட்டைச் சொன்னேனாக்கும்:)).. இது வேற சூடு:))...




======================_( )_-======================

Friday, 16 September 2011

பூஸ் வேணுமோ?:) பப்பி வேணுமோ?:)


((((((((((((((((((((****************)))))))))))))))))))))

ஹைஷ் அண்ணன் + லதா அக்கா வுக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் 17.09.20011

((((((((((((((((((((****************)))))))))))))))))))))


நோஓஓஓஓஓஓ... இவரைத் தரமாட்டேன்ன்ன்ன்ன்ன்:)))



இங்கு BUILD A BEAR WORKSHOP என ஒரு கடை இருக்கிறது(எல்லா இடத்திலும் இருக்கும் என நினைக்கிறேன்). அங்கு எல்லா வகையான பொம்மைகளும், தைத்தபடி மட்டும் இருக்கும். அங்கு போய், விருப்பமானதை தெரிவு செய்து, பின் மெஷினில் பஞ்சு இருக்கும், அங்கிருக்கும் ஒரு பட்டினை அமத்தி, குழாயில் பொம்மையைப் பிடிக்க நன்கு பஞ்சு அடையும், எம் விருப்பப்படி, இறுக்கமாகவோ, அல்லது மென்மையாகவோ பஞ்சை உள்ளடைத்துக் கொடுக்க, அந்த இடைவெளியை தைத்துத் தருவார்கள்.

பின் அங்கு குளிக்க வார்க்கும் இடம் இருக்கிறது, அதுவும் ஆக்‌ஷிலரேட்டர்மாதிரி காலால அமத்த, காத்தடிக்கும், அதில் பிரஸ் போட்டு தேய்த்து கிளீன் பண்ணி, பின்பு தாமே, உடைகள், தொப்பி, சப்பாத்து.... இன்னும் என்னவோ எல்லாம் இருக்கு, போட்டு மேக்கப் பண்ணிக் கொடுத்தால், பின்னர் கொம்பியூட்டரில், ஒரு ஃபோம்... அது பேர்த் சேட்டிபிகேட்டாம்:)), அதையும் பிள்ளைகளே நிரப்பி, தாம் செலக்ட் பண்ணியதுக்கு பெயரும் சூட்டினால், அப்பெயரோடு பேர்த் சேர்டிபிகேட்டும் சேர்த்து, பில் போட்டுத் தருவார்கள்.

கிட்டத்தட்ட, ஒரு ஹொஸ்பிட்டலுக்குப் போய், ஒரு குழந்தையை வாங்கி வந்த பீலிங் கிடைக்கும்:)).

வீட்டில் பிள்ளைகள் இருவரும் கொஞ்ச நாளாகக் கேட்டார்கள், பொம்மைகள் வைத்திருக்க ஆசையில்லை, ஆனால் இப்படி மேக் பண்ண வேண்டும் என ஆசை. சின்னவர் மட்டும் எப்பவும் தன்னோடு கொண்டு திரிவார். வாங்கித்தரலாம் எனச் சொல்லியிருந்தோம். அதுக்குள் அவர்களின் மாமி வந்தவ, அவ இங்கு வரமுன்பே  லிஸ்ட் ரெடி பண்ணச் சொன்னா, என்ன என்ன வாங்க வேண்டும் என்று:). அந்த லிஸ்ட்டில இதுவும் சேர்ந்து கொண்டது:).

இவை இரண்டுக்குமான செலவு.. £62 பவுண்டுகள்தான். உடை, சப்பாத்து... அனைத்தும் சேர்த்து.

இதுதான் SHOP:)


மேலே, செய்து வைக்கப்பட்டிருக்கு, கீழே தைத்த பொம்மை இருக்கு, விரும்பியதை செலக்ட் பண்ணிவிட்டு....


 இதுதான் பஞ்சு இருக்கும் மெஷின், இந்த சிகப்பு குழாயில் வைத்து, பட்டினைப் போட்டு, நன்கு பஞ்சை நிரப்ப வேண்டும்.



பின்னர் இதில் குளிக்க வார்க்க வேண்டும்:))




அதன் பின்பு, விரும்பியபடி, அனைத்தையும் தெரிவு செய்து, சோடிக்கலாம்..


இது நான் மேக்கப் பண்ணிய பூஸார்.. எப்பூடி இருக்கிறார்?:))



இது அவர்கள் மேக்கப் பண்ணி வைத்திருந்த நீலப் பூஸார்:))


இது எங்கள் மூத்தவர் செய்த Panda Bear...உம் உடைகளும், அதுக்குப் PANDY எனப் பெயர் வைத்திருக்கிறார். செய்ததோடு சரி, பின்னர் தொடுவதில்லை, நான்தான் சிலநேரம் தூக்கி வைத்திருப்பேன், ஆசையாக இருக்கும்.

இது சின்னவருடையது.. பப்பி. இதுக்கு FLOPPY எனப் பெயரும் வைத்தாச்சு:)). அவருக்கு ஹிட்டார் பிடிக்கும், அதனால ஹிட்டாரும் வாங்கிக் கொழுவிக்கிடக்கூஊஊ:)).



உடுப்பெல்லாம் போட்டுக்கொண்டு, சோஃபா வில் இருக்கினம்:))


பின் இணைப்பு:
இது அஞ்சலினுக்காக...(தாமதத்துக்கு மன்னிக்கவும்).


உண்டானாம் ஒடியற் கூழ்... என, 2ம் வகுப்புத் தமிழ்ப் புத்தகத்தில ஒரு பாடல்/பாடம் இருந்தது, அதில் எப்படி ஒடியல் கூழ் செய்வது என்ற செய்முறையையும் கதைபோல சொல்லியிருந்தார்கள்.. இப்பவும் மனதில் நிற்குது... இதிலிருந்து என்ன தெரியுது மக்கள்ஸ்ஸ்:))... நாங்களெல்லாம் 6 வயசிலயே சமையல் குறிப்பு படிச்சனாங்கள் தெரியுமோ?:))).  சரி சரி குறிப்புக்கு வருவோம்.

நான் இக்கூழ் பெரிதாக செய்ததில்லை, அம்மாதான் செய்வா, ஆனா எனக்கும் தெரியுமில்ல:)

ஒடியல் மா - ஒரு கப்
செத்தல் மிழ(ள)காய்..(ஊ.கு: பாழாய்ப்போன ள,ழ வால மனிசனுக்கு நிம்மதியே போச்ச்ச்:)))-- 5--10(உங்கள் விருப்பம்)
பழப்புளி, பயற்றங்காய், மரவள்ளிக்கிழங்கு, பலாக்கொட்டை முக்கியம். 

அசைவக்கூழுக்கு... நிறைய மீன் பொரித்துப் போடவேணும், இரால், நண்டு, மீன் அவித்துச் சேர்க்கவேண்டும்.

சைவக்கூழுக்கு, வேறு ஏதாவது காய்கறிகள் கொஞ்சமாக விருப்பம்போல் சேர்த்துக் கொள்ளலாம். முருங்கை இலைதான் கட்டாயம். இங்கு கிடைக்காதென்பதால், கொஞ்சம் கீரையை குட்டியாக வெட்டிப் போடுவோம்.

இலங்கைத் தமிழ்க் கடைகளில் கிடைக்கும்,  “ஒடியல்மா” எனக் கேட்டு வாங்க வேண்டும். புளுக்கொடியல்மா அல்ல.

செய்முறை:
முதலில் ஒடியல் மாவை ஒரு பாத்திரத்தில்போட்டு, நிறையத் தண்ணி ஊற்றி ஊற விடுங்கள். அரை மணிக்கொருக்கால், அத்தண்ணியை மெதுவாக சரித்து ஊத்தி விட்டு மீண்டும் தண்ணி ஊத்தி ஊறவிடுங்கள். இப்படி 3 அல்லது 4 முறை செய்தால் நல்லது. அதிலுள்ள கயர்த் தன்மை போய்விடும்.

அந்த ஊறும் இடைவெளியில், மரவள்ளிக் கிழங்கில் பாதிப்பங்கை சின்னதாக வெட்டிப் பொரித்தெடுங்கள். இரால், சின்ன மீன் அனைத்தையும் பொரித்து புறிம்பாக வைத்துக்கொள்ளுங்கள்.  பொரியல்தானே... அது உங்கள் விருப்பம்...
அதைவிட மீன், நண்டு(குட்டி நண்டுதான் நல்லது, ஆனால் நண்டு முக்கியமில்லை, நாம் போடுவது குறைவு). மீனை உப்பு போட்டு அவித்து புறிம்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

செத்தல் மிளகாயை கொஞ்ச நேரம் தண்ணியில் ஊறவிட்டு, பின் மிக்ஸியில் அல்லது அம்மியில், இருவல் நருவலாக அரைத்து எடுத்து, புளியைக் கரைத்து வடித்தெடுத்து இரண்டையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பிலே பெரிய பாத்திரத்தை வைத்து, அதில் பயற்றங்காய், மீதி மரவள்ளிக்கிழங்கு, பலாக்கொட்டை போட்டு, உப்பு + மஞ்சள் தூள் (கொஞ்சம்) போட்டு, நன்கு அவிய விடுங்கள். அவிந்து வந்ததும் புளி + மிளகாய் கரைசலை ஊற்றி அவிய விடுங்கள். எப்பவும் தண்ணி வற்றாதபடி இருக்கவேண்டும். அவிந்ததும் கரைத்து வைத்துள்ள ஒடியல்மா கரைசலை சேருங்கள். மா சேர்த்தவுடன்.... டக்கென தடித்து கெட்டியாகப் பார்க்கும், அதனால் எப்பவுமே கேற்றலில் கொதி தண்ணி ரெடியாக இருக்கட்டும்.

 கொதி தண்ணியை ஊற்றி ஊற்றி, மா இறுக விடாமல், கூழ் பதமாக கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்ததும், கடைசியாக முருங்கையிலை(கிடைக்காட்டில்) கீரை அல்லது கோவா இலைகூட குட்டியாக அரிந்து சேர்த்திடலாம், இல்லாவிட்டாலும் ஓக்கே.  பூண்டு பாதி உடைத்து தட்டிப் போடலாம்(முக்கியமில்லை), இஞ்சி சேர்ப்பதில்லை.

அப்படியே மெல்லிய தீயில் அல்லது இடைக்கிடை அடுப்பை ஓன் பண்ணி, ஹீட் பண்ணிக்கொண்டே குடிப்பதுதான் ருசி. ஆறினால் இறுகிவிடும். ஒருகப் மா(250 மி.லீ) போதும், 3,4 பேர் குடிக்கலாம். பலாக்கொட்டையும் பொரித்தும் போடலாம், பொரியல் எவ்வளவு சேர்த்தாலும் சுவை அதிகமாகும். சைவக் கூழாயின் சோயாமீற் பொரித்து, பலாக்கொட்டையும் பொரித்துச் சேர்க்கலாம். மீன் கிடைக்காதுவிட்டால், நெத்தலிக் கருவாடும், பொரித்தும் அவித்தும் போடலாம்.

குடிக்கும் டிஸ் இனுள் கூழை எடுத்து, எம் தேவைப்படி பொரியல், மீன் அனைத்தையும் போட்டு நாம் குடிப்பது வழக்கம். சிலர் கிழங்கு பயற்றங்காய் அவியும்போதே... மீன் எல்லாம் போட்டு அவிப்பார்கள். ஆனா நாம் அப்படிச் செய்வதில்லை, சைவக் கூழாகச் செய்து, டிஸ் இல் எடுக்கும்போது அசைவம் சேர்ப்போம். வேண்டுமாயின் இரால் மட்டும் சேர்த்து அவிக்கலாம், ஏனெனில் அது கரையாதெல்லோ.

இதில் புளியும், உறைப்பும் கொஞ்சம் அதிகமாக இருந்தால்தான் சுவையும் அதிகமாகும். இதுக்கு அம்மா, செத்தலும், வெங்காயமும் தாளித்துக் கொட்டுவா. பயற்றங்காய் அதிகம் சேர்க்கத் தேவையில்லை. ஏதாவது சொல்ல மறந்திட்டனோ தெரியேல்லை:)), அப்பூடி இருக்காது, இருந்தால் பின்பு சொல்கிறேன்.


உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ... முடியேல்லை மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:)).


====================================================
கூடி இருந்து குலாவுவார் வீட்டில்... 
ஓடி உண்ணும் கூழும் இனிதே.. 
.....................இது இலங்கைப் பயமொயி:)))
====================================================

Thursday, 8 September 2011

அதிராவைக் காப்பாத்துங்கோ:)))

நடு ரோட்டில நிற்கிறா... லொறி கிறி அடிச்சிடப்போகுது மக்கள்ஸ்ஸ்ஸ்... ஓடிவாங்கோ வந்து காப்பாத்துங்கோ...:)))


காப்பாத்தினால் சந்தோஷம், காப்பாத்தாட்டில் அதைவிடச் சந்தோஷம்...:)))).


முன் பதிவு நீண்டு விட்டதாலதான் இது, அரட்டைப் பதிவு, எனக்கு வீட்டில் உறவினர் என்பதால் நேரமில்லை பதிவெழுத. அதனால இது விரும்புபவர்கள் வந்து கதைத்து, திட்டிப் போகலாமே:).... நானும் நேரம் கிடைக்கும்போது வந்து ரிலாக்ஸ் பண்ணுவேன்.


இல்ல உங்களுக்கும் ரைம் இல்லையென்றால் ஓக்கே, கடிக்கவெல்லாம் மாட்டேன், நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)), பார்த்தால் தெரியல்ல?:)))))).

இது இம்முறைதான் ஒரு வீட்டில் பார்த்தேன் பேப்பிள் ரோஜா..... இப்படி கலரில் எங்காவது கண்டனீங்களோ? இங்கு ரோஜா என்றால் தேடுவாரில்லாமல் பல வர்ணக் கலர்களில், வடிவங்களில் பூத்துக் குலுங்குது, ஆனால் இக்கலரை நான் எங்கேயும் கண்டதேயில்லை... பார்த்தவுடன் படம் எடுத்திட்டேன்... நீங்களும் என்சோய்ய்ய்ய்ய்:)).



=====================================================
=====================================================