நல்வரவு_()_


Tuesday 13 December 2011

எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்:)

சமீபத்தில் பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு பிரசங்கம். 


எதையும் எதிர்பார்க்காதீர்கள், எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும். உங்கள் கடமையை நீங்கள் சரிவரச் செய்யுங்கள். நாம் பெற்றோராக இருக்கும்போது பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகச் செய்திட வேண்டும். ஆனா அக்கடனை திருப்பி பிள்ளைகளே எமக்கு அடைப்பார்கள் என எதிர்பார்க்கக்கூடாது. தாம் பட்ட கடனை பிள்ளைகள், தம் மக்களுக்கு அடைப்பார்கள், பெற்றோருக்கல்ல. 


 நாம் அடுத்தோருக்கு நல்லது செய்தால், அவர்களிடம் இருந்தே திரும்ப எமக்கு பலன் கிடைக்காது போகலாம், ஆனால் அதற்குரிய பலன், ஆரோ தெரியாதோர் மூலமாக எமக்குக் கிடைக்கும். 

 டொட்ட டொயிங்....

 அடுத்து அமெரிக்கன் இட்லி:).. 

 இதென்ன பெரிய விஷயமோ எண்டெல்லாம் நினைச்சிடாதீங்க.... இட்லி மல்லிகைப்பூப்போல வரோணும் எண்டால் சரியாப் பாடுபடோணும்:))..

அதுவும் அரிசியில் செய்யும்போது இன்னும் கஸ்டம். இம்முறை மகியின் உதவியோடு செய்திட்டேன். அம்மாவுக்குச் சொன்னேன், அரிசியில் இட்டலிக்கு வைத்திருக்கிறேன் என... அம்மாவுக்குச் சிரிப்பு.. நல்லா வருதோ எனச் சொல்லு என்றா. பின்னர் சொன்னேன் சூப்பராக வந்திருக்கு என.. அவவால நம்ப முடியேல்லை... கர்ர்ர்ர்ர்ர்:)).

 அடுத்த நியூஸும் குடுத்திட்டன், அம்முலு எனக்கு அப்பம் சுட ரெசிப்பி அனுப்பியிருக்கிறா, சூப்பராக வந்துதாம் என்றேன், உண்மையாகவோ செய்துபோட்டுச் சொல்லு பார்ப்பம் என்றா. நான் ஓடிப்போய் அப்பச் சட்டியும் வாங்கி வந்திருக்கிறேன், இனி எப்ப செய்வனோ தெரியேல்லை.. ஆனா விரைவில் நடக்கும்:). ஊரில் இருக்கும்போது, அம்மா அரிசி ஊறவைத்து அப்பம் சுடுவா, சூப்பராக இருக்கும், ஆனா இப்போ அதெல்லாம் கைவிட்டாச்சு.

 சரி விஷயத்துக்கு வருவம்...

மகியின் மல்லிகே இட்லிஇது.. நான் செய்த சம்பலும், ஆம்பாறும்... எங்கள் நாட்டில் சம்பல் என்போம், அதை ஸ்ரைலாக தேங்காய் சட்னி என்பீங்கள் தமிழ் நாட்டில்... 

இருப்பினும் மகியினுடையதைப்போல, நல்ல பஞ்சாக வரவில்லை எனக்கு:(இம்மாதம் எங்கள் ஏரியா Street lights  ...கிரிஸ்மஸ் சோடனை லைட்டுக்கள்...   

அதை ஆரம்பிக்க சுவிஜ் ஓன் பண்ணுவதற்காக எங்கள் மகனின் வகுப்பிலிருந்து 8 பேரை தெரிவு செய்தார்கள், அதில் மகனும் ஒருவர்... இன்னொரு ஸ்கூலும் வந்திருந்தார்கள்... ஓரிடத்தில் எல்லோரும் கூடி,  குட்டித் திருவிளாப்போல இருந்தது, இவர்கள் பாட்டுப்பாடி, முடிவில் சன்ராவை  கூப்பிடுங்கள் அவர் வந்தால்தான் சுவிஜ் ஓன் பண்ணலாம் என எனவுன்ஸ் பண்ணினார்கள்... எல்லோரும் சன்ரா... சன்ரா.. எனக் கோஷமிட... அருகிலே பாதுகாப்புக்காக பார்க் பண்ணியிருந்ததுபோல இருந்த ஒரு போலீஸ் ஜீப்பிலிருந்து, சன்ரா ஸ்டைலாக இறங்கி வந்தார்... உடனே சுவிஜ் ஓன் பண்ணியதும்... அனைத்து கிரிஸ்மஸ் அலங்கார லைட்டுகளும் பளாஜ் என மின்னின... பின்பு சன்ரா அனைத்துப் பிள்ளைகளுக்கும் சுவீட்ஸ் கொடுத்தார்.....


எங்கட மலை, பனி (snow) மலையாகிவிட்ட காட்சி:)


ஊசி இணைப்பு:)
இம்முறை, ஊசி இணைப்பு பெருத்து விட்டது, அஜீஸ் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))


சமீபத்தில்  Restaurant (Hotel + Restaurant)ஒன்றுக்குப் போயிருந்தோம்.... அது 18 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆனா இப்பவும் என்ன அழகாக இருக்கு பளீச்சென.. அதன் அழகில் மயங்கி படமெடுத்தேன்.. 

இது toilet,  படத்தில் படம் கிளியர் போதாது, நேரிலே இப்போ புதுசாக் கட்டியதுபோலவே இருந்தது..


இது ஹொரிடோ.... கிரிஸ்மஸ் அலங்காரமும்.. செய்யப்பட்டிருக்கு...======================================================
கூரையில் ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவர்கள்
வானத்தில் ஏறி வைகுண்டம் காண்பினமோ?
======================================================
உஸ் எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல... ஏனெண்டால் இது தொண்ணூத்தி ஒன்பதூஊஊஊஊஊஊஊ:))).. நான் பதிவைச் சொன்னேன்:))

Tuesday 6 December 2011

பூஸ் குட்டிகள் உயகம்:)
என்னை எழுதட்டாம் குழந்தைகள் உலகம் பற்றி... அஞ்சு என்னை அன்பாக அழைத்திருக்கிறா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... நான் முடியாதுவிட்டால் உடனேயே சொல்லிடுவேன், ஆனால் முடியும் எனச் சொல்லிவிட்டால் சொன்ன வாக்கை காப்பாற்றாமல் விடுவதில்லை... அது என் கொள்கை என்று கூடச் சொல்லலாம். இது சொல்லிட்டேன்.. 


ஆனா அப்போ என்னமோ சரக்கு நிறைய இருப்பதுபோல ஒரு நினைவு:)), இப்போ எழுதலாம் என்றால் எதுவுமே வருகுதில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).


இன்னுமொன்று... இத்தலைப்பு குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதா, அல்லது குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதா, அல்லது குழந்தைகளைப் பெற்றோர் எப்படி வளர்க்கிறார்கள் என்பதா.. எனப் புரியவில்லை... அதனால ஏதோ எனக்குத்தெரிந்த பாஷையில... அதாங்க மியாவ்..மியாவ்:))) ஏதோ என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.


குழந்தைப் பருவம் மிக இனிமையானதே கள்ளங்கபடமில்லை எந்தக் கவலையுமில்லாத பருவம்... ஆனால் அதில் வறுமையோ.. அல்லது ஏதும் பிரச்சனையோ இல்லாமல் இருக்க வேண்டும். ஆனா குழந்தையாக இருக்கும்போது விரைவாக வளர்ந்திட வேண்டுமென்றே எக்குழந்தையும் எண்ணுகிறது அது ...இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதை பின்னாளில்தான் உணர்வார்கள்:).

ஹாய்... நலமோ? ஏன் ஒருமாதிரிப் பார்க்கிறீங்க:)) நான்தான் குட்டி மியாவ். அம்மா சொன்னவ, குழந்தைகள் பற்றி தான் எழுதுவதைவிட, நான் சொன்னால்தான் நல்லதாம்.. அதுதான் நான் வந்திருக்கிறன்.

நான் ஓரளவுக்கு நல்லாத் தமிழ் கதைப்பன். ஆனா எனக்கு தமிழ், எழுதப் படிக்க வருகுதில்லை, அது சரியான ஹார்ட்டாக இருக்கு, ஆனா எண்ட கிரான் பேரன்ஸ் எல்லாம் சொல்லுவினம், தமிழ் தான் எங்கட பாஷையாம், அதால நாங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று,  அம்மா சொல்லித் தருவா, ஆனா ஃபோஸ் பண்ண மாட்டா. நானும் தம்பியும் கொஞ்சம் கொஞ்சம் எழுத்துக்கள் எழுதுவம்.

நாங்கள் வெளிநாட்டில இருக்கிறமையால் எங்களுக்கு இங்கத்தைய பழக்கவழக்கம்தான் தெரியுதாம், ஊர்ப்பழக்கம் தெரியாதென, அப்பா, அம்மா சொல்லித் தருவினம்.

வீட்டுக்கு ஆரும் வந்தால், நாங்கள் எங்கிருந்தாலும் அப்பா கூப்பிட்டு வந்தவைக்கு ஹலோ சொல்லுங்கோ, வந்திருந்து கதையுங்கோ என்பார். அதேபோல, அவை திரும்பிப் போகும்போது இருந்தபடி பாய்(BYE) சொல்லப்படாது எழும்பி வாங்கோ... கிட்ட வந்து பாய் சொல்லுங்கோ என்பார்.

அம்மா சொன்னவ, சில வீடுகளில், வீட்டுக்கு ஆரும் போனாலும் அங்குள்ள பிள்ளைகள் ரீவி பார்த்தபடி, கேம் விளையாடியபடி இருப்பினமாம், கதைகேட்டாலும் காதில விழாதாம்.. அப்படி நீங்கள் பழகப்படாது, பிறகு அப்பா அம்மாவின் தவறுதான் என ஆட்கள் சொல்லுவினமாம். இந்த வயதிலயே எல்லாப் பழக்கத்தையும் பழகிட வேணும், வளர்ந்தால் மாத்துவது கஸ்டமாம்.

எங்கட வீட்டுக்கு, எங்கட ஒரு சொந்தக்கார ஆன்ரியும் அங்கிளும் வந்திருந்தவை. அவர்களுக்கும் எங்கட வயதிலேயே 2 boys. ஆனா அவயளிடம் எந்த ரோயிஸோ அல்லது கேம்சோ இல்லை. எங்கட வீட்டுக்கு வந்திருந்த நேரம் அந்த 2 வது தம்பிக்கு 4 வயதிருக்கும். அவர்கள் எங்கட கேம்ஸை எடுத்து ஆசையாக விளையாடினார்கள்.

அப்போ எங்கட அம்மா கேட்டா, ஏன் இப்போ எல்லாப் பிள்ளைகளிடமும் நிண்டெண்டோ, ஐபொட் டச் இருக்கே, உங்கள் பிள்ளைகளுக்கு ஏன் வாங்கிக் கொடுக்கவில்லை என்று.

அதுக்கு அவர்களின் அம்மா சொன்னா, அவர்கள் எதுவும் கேட்க மாட்டார்கள், அதனால் வாங்கிக் கொடுக்கவில்லை என.

பிறகு அம்மாவும் அப்பாவும் கதைத்ததை நான் கேட்டேன்.. அவர்கள் வேறு நாட்டிலிருந்து எங்கட நாடு பார்க்க வந்தவையாம். நல்ல பெரிய வீடு, கார் எல்லாம் இருக்கு.

ஆனா ஒரு ஒழுங்கான உடுப்பு குழந்தைகளுக்கு போடவில்லை, காலையில் ஊர் பார்க்க வெளிக்கிடும்போது சீரியலை பாலில் கரைத்து வேண்டாம் வேண்டாம் என அழ அழ கலைத்துக் கலைத்து இருவருக்கும் ஊட்டி விட்டுத்தான் புறப்படுவினம். பின்னேரம் களைத்துப் போய் வருவினம், அம்மா கேட்பா சின்னாட்களுக்கு என்ன சாப்பாடு கொடுத்தீங்கள் என்று, அதுக்கு bun  வாங்கிக் கொடுத்தோம், எங்களுக்கு பசிக்கவில்லை, சாப்பிடாமல் வந்திட்டோம் என்பார்கள்.

அப்பிள்ளைகளுக்கு, வெளி உணவு, ஒரு பாஸ்ட் ஃபூட் கொடுப்பதில்லை. அப்படி பணம் மிச்சம் பிடிக்கினம். ஆனா ஊர் சுத்திப் பார்க்கினம், ஏனெனில் அது சகோதரங்களுக்குள் போட்டியாம், நான் இந்த நாடு போனேன், நீ எங்கு போனாய் இப்படி.

ஆனா இதனால பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். எங்களுக்கு இப்ப இப்பத்தான் வெளியில எங்காவது போய்வர விருப்பம், மற்றும்படி கேம்ஸ் விளையாடத்தான் பிடிக்கும். அந்தப் பிள்ளைகளும் அழுவார்கள் வெளியே வரமாட்டோம் வீட்டிலிருக்கப் போகிறோம் என, ஏனெனில் அப்போ அவர்கள் சின்னப்பிள்ளைகள்... ஆனா விடாமல் கூட்டிப் போவினம். அப்பத்தான் அம்மா கதைச்சா, பிள்ளைகளுக்கு எந்த வயசில எது தேவையோ அதைச் செய்யாமல், ஒழுங்கான, சாப்பாடு, உடை, ஹேம்ஸ் எதுவும் இல்லாமல், பெருமைக்காக ஊர்சுற்றி என்ன செய்யப்போகினம் என.

ஊருக்குப் போனால் அந்த மூத்த மகன் வீட்டில் நிற்க முடியாதாம்... வயலின், ஹிட்டார், மியூசிக்.. ரை குவென் டூ, சுவிமிங் என தொடர்ந்து வகுப்பாம்... அப்போ அவருக்கும் ஆசை இருக்கும்தானே வீட்டில நின்று விளையாட, அவர்கள் விடமாட்டினமாம். ஏனெனில் சகோதரரின் பிள்ளை எல்லாத்துக்கும் போகிறாராம், அதற்குப் போட்டியா இவரையும் அனுப்புகிறார்களாம்.

எனக்கு இந்த பருவம் பிடிச்சிருக்கு, ஆனா தம்பி சொல்லுவார் தான் big  ஆக இருப்பதுதான் தனக்கு விருப்பமாம், ஏனெண்டால் எல்லா இடமும் தனியே போய் வரலாமாம்.

பாட்டு உண்மைதானே?:)

எங்கட வகுப்பில என் ஃபிரெண்ட்ஸ் சேர்ந்து தனியே போய் படம் பார்ப்பினம், என்னையும் கேட்டவை, ஆனா எனக்கு தெரியும் வீட்டில விடமாட்டினம் என அதனால நான் வரமாட்டேன் எனச் சொல்லிடுவேன். அம்மாவிடம் கேட்டனான் அம்மா சொன்னவ, ஹை ஸ்கூல் முடிச்ச பிறகு நீங்க தனியே போய் வரலாம் என்று.

எங்களிடம் மணி ஆல்பம் இருக்கு, அதில தாள் காசுகள் சேர்ப்பம், ஸ்பைடர்மான் உண்டியலில் கொயின்ஸ் சேர்ப்பம்... அடிக்கடி அதை எடுத்து நானும் தம்பியும் எண்ணிப் பார்ப்பம்.. அது எங்களுக்கு பிடித்தமான பொழுது போக்கு.

PUSS IN BOOTS படம் வெளிவருது... (http://www.pussinbootsmovie.co.uk/?utm_source=google&utm_medium=ppc&utm_term=puss+in+boots+movie&utm_campaign=Puss+In+Boots+-+Brand+)நாங்கள் பார்க்கப்போறோம்...

நீங்களும் மறக்காமல் பாருங்கோ.. கனடா அமெரிக்காவில வந்திட்டுது, நல்லா இருக்குதாம் அந்தப் பூஸ்ஸ்ஸ்... அம்மாதான் எங்களை விட மும்முரமாக நிற்கிறா, தான் அந்தப்படம் பார்க்கோணுமெண்டு:)).

எனக்கு நித்திரை வருது.... குட்நைட்.


======================================================
ஊசி இணைப்பு:
பெற்ற மனம் பித்து என்பார் - சிலர் 
பிள்ளை மனம் கல்லு என்பார்
பெற்றவரும் அந்நாளில் பிள்ளைகள்தானே - மனம்
பித்தாகிப் போகுமுன்னர் கல்லுகள்தானே?
======================================================


அஞ்சு கேட்டதுக்கு, என்னால பெரிசா எதுவும் எழுத முடியவில்லை, ஏதோ என் கிட்னிக்கு தக்க சுருக்கமாக:)) உளறியிருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கோ.

Wednesday 23 November 2011

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்....

நிலவுக்குத் தெரியாது...
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் பூஸுக்குக் கிடையாது:)....நிலவு எழும்பி வருவது தெரியுதோ? நான் படமெடுத்தது ஒரு மலையிலிருந்து, அதனால்தான் அம்புலிமாமா கீழே தெரிகிறார்.இலை உதிர்ந்த மரங்களும் நிலவாரின் உதயமும்:))


பறந்தாலும் விடமாட்டேன்.... நான் நிலவுக்குச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்:)...


நாங்களெல்லாம் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து, தியானம், ஹீலிங், யோகா செய்வோமாக்கும்..க்கும்..க்கும்...:)) அதனாலதான்... சூரியன் எழும்பும் காட்சி... இது வேற:))


அருகிலே பாருங்கோ பயப்புடாமல் ஒரு பைலட்:) பிளேனைக் கொண்டு போயிருக்கிறாரே அவ்வ்வ்வ்வ்வ்:))).. அது பிளேன் போன அடையாளம்...:)))


காலைக் கதிரவன் தான், கண் விழிக்கும் முன் , நாம் எழும்போணும் ஓக்கை:))... நான் எனக்குச் சொல்லவில்லை:)))


இலை உதிர் காலம்....ம்ம்...ம்ம்ம்...


குட்டி இணைப்பு:)
நான் தொட்டிட்டனோ? தொட்டிட்டனோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 100 ஐத் தொட்டிட்டனோ எனக் கேட்டேன், கரீட்டா எண்ணிச் சொல்லுங்க மாயா:)), சிவா தப்புத்தப்பா எண்ணுறார்:). 

ஊசி இணைப்பு:))
அதிகாலையில் எழுந்து யோகாச் செய்வதால... இப்போ பாருங்கோ... உங்களால முடியுமோ?:))).

====================================================== 
“உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு, இடிக்குப் பயப்பட முடியுமோ? எதிர்கொண்டேதான் ஆகவேண்டும்”
======================================================

Thursday 17 November 2011

நாஆஆஆன் உன்னை அழைக்கவில்லை:)


இன்று ஒரு பகிடி ...:)) என் சொந்தக்கதை சோகக்கதையைக் கேளுங்கோ:))).பார்ஷல் போஸ்ட் பண்ண வேண்டியிருந்தது. ஸ்கூலுக்குப் போகும்போது போஸ்ட் பண்ணிடலாம் என இருந்தேன். வேலை முடித்து வெளிக்கிட, நேரம் மட்டுமட்டாக இருந்துது. 25 நிமிடங்களே இருந்தன ஸ்கூல் முடிய.

கொஞ்சம் விரைவாகப் போனால் நேரம் போதும், ஸ்கூலுக்கு கொஞ்சம் தள்ளி போஸ்ட் ஓபிஸ், அங்குபோய் மீண்டும் திரும்பி வர வேண்டும் ஸ்கூலுக்கு.

சரி இன்று எப்படியாவது பார்ஷலை அனுப்பிடோணும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டேன்:) (நான் தான் சொன்னேனே, எதையாவது நினைத்தால், அதை உடனே முடிக்காதுவிட்டால், எனக்கு ஏதோபோல் இருக்கும்).

வழியில் ரோட் வேலை நடக்கிறது. அப்போ ஒரு பக்கம் கார்கள் பார்க் பண்ணியிருக்கு, மறுபக்கம் ரோட் திருத்தும் மெஷின்கள் பார்க் பண்ணி வேலை நடக்குது...

ரோட்டின் நடுவிலே உள்ள இடைவெளியால் போக வேண்டும். அது போதும் போகலாம். ஆனா எதிரே ஒரு பெரிய கார்.. அதில் ஒரு நல்ல வயதானவதான் ரைவர்.. அவ அந்த இடைவெளியால் எடுக்க முற்பட்டுவிட்டு, பயத்தில போலும், முன் பக்கத்தை மட்டும் கரைக்கு திருப்பி விட்டு, பின் பகுதி நடு ரோட்டிலே நிற்குது கார்.        எதிரே வந்து, கரையில் நின்ற என்னை, வா..வா.. என லைட் போட்டா, அவவின் பின்னாலும் பல கார்கள், என் பின்னாலும் பல கார்கள்.

இங்கே ஒரு முறை இருக்கிறது, கார் லைட்டை அடித்தால், நீங்கள் முதலில் காரை எடுங்கள், அல்லது வழி விடுகிறேன் போங்கள் என அர்த்தம்.

ஆனா அவதான் வர முடியும் நான் போக முடியாது, அப்போ நான் லைட் அடித்தேன் நீ வா என... அவ கையைக் காட்டினா நீ வா என.. கிழிஞ்சுது போ என எண்ணிக்கொண்டு, சரி அவ கூப்பிடுறா, வயதானவ, நான் கிட்டப்போவம் என, ஒரு மாதிரி வெட்டி எடுத்தேன், ஆனா அங்கால போக முடியாது....

 அவவின் கார் பின்பக்கம் புளொக் பண்ணிச்சுது, அவவோ அசையாமல் நிற்கிறா, அப்போ நான் விண்டோவைத் திறந்து மரியாதையாகச் சொன்னேன், பிளீஸ் கொஞ்சம் முன்னுக்கு எடுங்கோ என, அப்போ அவ சொன்னா, நான் பேவ்மண்ட்டில எல்லாம் ஏத்த மாட்டேன் என....  வேலில போன ஓணானை, வீட்டுக்குள் எடுத்துவிட்ட கதையாக என்னைக் கூப்பிட்டுப்போட்டு, இப்படிச் சொன்னால்... நான் என்ன பண்ணுவது..

நானோ என் கணவரோ, கார் ரயர் எல்லாம் பார்க்க மாட்டோம், பேவ்மண்டில் ஏத்தோணும் என்றாலும், கல்லோ முள்ளோ ரயர் போனால் மாத்தலாம், முதலில் பிரச்சனை தீரட்டும் என்றுதான் முடிவெடுப்போம்.... ஆனா இது எப்படியும் 70 வயதிருக்கும், சரியான மேக்கப்பும் போட்டிருக்கிறா, காரும் நல்ல புதுக்கார், இங்குள்ள வயசானோருக்கு, நல்ல பெரிய ரோட்டில் நேராக போய் பார்க் பண்ணித் திரும்புவினம், ஆனா இப்படி ஏதும் இடக்கு முடக்கென்றால், அவர்களால முடியாது, ரிவேசும் பண்ணக் கஸ்டப்படுவார்கள்... அதனால அப்படியே அசையாமல் நிற்பார்கள், நாம்தான் வெட்டி எடுக்க வேண்டும்.... அதுதான் பிரச்சனையே..

 என்னாலும் கோபிக்க முடியவில்லை, ஆனா ஒருவித விசராகிட்டேன், என் பக்கம் பேவ்மண்டும் இல்லை, இருந்திருந்தால் ஏத்தியிருப்பேன்..பின்பு மீண்டும் விண்டோவைத் திறந்து சொன்னேன், பிளீஸ் கொஞ்சம் அப்போ, பின்னால எடுக்கிறீங்களோ என, பின்னால் நின்ற காரெல்லாம் ரிவேஸ் எடுத்து, இடம் விட்டுவிட்டார்கள், இவவின் கார் boot  மட்டும் நடு ரோட்டில், அப்போ அவ சொன்னா.. என்ன ஜோக் பண்ணுகிறாயா? என்னால் பின்னுக்குப் போக முடியாது என்று...., சும்மா நிண்ட என்னை அவதானே வா வா எனக் கூப்பிட்டா, நான் நம்பியெல்லோ வந்தனான்... என மனதில எண்ணினேன், அதன்பின் மெதுமெதுவாக வெட்டி வெட்டிப் பின்னுக்கு எடுத்தா.... நான் கடந்து போய் விட்டேன்...

 “இதுவும் கடந்து போகும்” என மனதில் எண்ணிக்கொண்டேன்... ஆனாலும் உடம்பு ஒருவித டென்ஷனாகிவிட்டது, மனதில் ஒரு அரியண்டமான உணர்வு ஏற்பட்டது, கோபமல்ல. அதில் பத்து நிமிடம் போய் விட்டது.

பறவாயில்லை, போஸ்ட் ஓபிஷில் பார்க்கிங் இருக்கோணும் ஆண்டவா.. என எண்ணியவாறு விரைந்து போனேன், அங்கு பக்கத்திலே பொலீஸ் ஸ்டேஷன் இருக்கு, அதன் முன்னால்தான் சில நேரம் பார்க்கிங் கிடைக்கும் . அதில் சில பார்க்கிங் போலீசுக்கென ரிசேவ் பண்ணப்பட்டிருக்கும். அப்போ நினைத்தேன் பார்க்கிங் கிடைத்தால் இன்று, கிடைக்காதுவிட்டால், இன்று போய் நாளை வருவோம்.... இனி என்ன செய்வது என. ஆனா அங்கு ஒரு பார்க்கிங் இருந்துது. அப்பாடா என பார்க் பண்ணினேன்.

நல்ல மழை ஊஊ எனக் காத்தோடு பெய்து கொண்டிருந்தது. தொப்பியெல்லாம் போட்டு, கீழே இறங்கி பார்ஷல்களையும் நனைந்திடாமல் நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக்கொண்டு, விறுவிறு என போஸ்ட் ஒபீஷை நோக்கி நடந்தேன்... அப்போ பின்னாலிருந்து பீம்...பீஈஈஈஈஈம் என கார்க் கோன் சத்தம் கேட்டுது.

இங்கு யாருமே கோன் பண்ணுவதில்லை, அப்படிப் பண்ணுவதாயின், ஆரையும் அவசரமாகக் கூப்பிட, அல்லது ஆராவது தவறு செய்தால் மட்டுமே. அப்போ கோன் சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன், என் ஜீப்பின் பக்கத்திலே போலீஸ் கார், அவர்கள்தான் கோன் பண்ணினார்கள்... எனக்கு ஏற்கனவே இருந்த டென்ஷனோடு, இன்னும் டென்ஷனாகிட்டேன். தொட்டில் பழக்கம்:), இப்பவும் போலீஸ், ஆமியைக் கண்டால் மனம் பதட்டமாகிவிடுது.

அப்போ, நான் அவர்களிடத்தில் பார்க் பண்ணிவிட்டேனோ, இல்லையே, சரியாகத்தானே பார்க்பண்ணினேன்... என்னில் எந்தப் பிழையும் இல்லையே, அப்போ ஏன் கூப்பிடுகிறார்கள், சரி புதுசாக ஏதும் சட்டம் வந்திட்டுதோ, அதில் பார்க் பண்ணப்படாதென, எனக்குத் தெரியாதுதானே, தெரிந்து செய்தால்தான் பயப்பட வேணும்.. என எண்ணியபடி திரும்ப நடந்து கிட்டப் போனேன், போலீஸ்காரர்கள், வானம் பார்ப்பவர்கள்போல இருந்தார்கள்.... கிட்டப் போய்க் கேட்டேன்... என்னையோ கூப்பிட்டீங்கள் என...

அப்போதுதான் திடுக்கிட்டவர்களாக... நான் உன்னை அழைக்கவில்லை....... என்றார்கள்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))). (பயந்திடாதீங்க... வெள்ளையர்கள்தான்:)) இவ்வளாத்துக்கும் 20 நிமிடம் செலவாகியிருக்கும், துன்பம் வரும்போது சிரிங்க... என அடிக்கடி நான் மனதில் எண்ணுவதுண்டு, அப்படித்தான் நினைத்து மனதில் ஹா..ஹா..ஹா.. என சிரித்துக்கொண்டே...

மீண்டும் போஸ்ட் ஓபிஷை நோக்கி ஓடினேன்.... நல்லவேளை அங்கு கியூ இருக்கவில்லை. பார்ஷல்களைப் போஸ்ட் பண்ணிவிட்டு, ஸ்கூல் வாசலுக்கு வரவும் பெல் அடிக்கவும் நேரம் சரியாக இருந்தது.

இவ்ளோ சிரமப்பட்டு அனுப்பிய பார்ஷல்கள் நேர காலத்தோடு, உரிய இடத்தில் கிடைத்திட வேண்டுமென, வேண்டச்சொல்லி நீங்களையும்:) கேட்டுக்கொள்கிறேன்.

இதைப் பின்னூட்டமாகப் போட நினைத்தே ரைப் பண்ணினேன்... ஆனா நீஈஈஈஈஈண்டு விட்டதால்... இதுக்கடிச்சது யோகம்... ஒரு தலைப்புப்போடக் கொடுத்து வச்சிருக்கு:))).

ஊசி இணைப்பு:
இதுதான் வழி எனத் தெரிந்தால், 
முள்ளிலேயும் நடந்துவிட முடியும் - ஆனால் 
எது வழி எனத் தெரியாதபோது,
என்ன செய்ய முடியும்?..  
                                                                                                      .....கண்ண......தாசன்.
(((((((((((((((((((((((((((((((((*******************)))))))))))))))))))))))))))))))))

Tuesday 15 November 2011

“வீட்டில ஆருமே இல்லை”:)
இரவு 11.15 ஆகிவிட்டது, நித்திரை வரவில்லை, அப்போது... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஓ என் மொபைல் வைபிரேட் பண்ணுதே.. அடடா இந்த நேரத்தில மெசேஜ் ஆரிடமிருந்து.....

ஓ பூஸ் அனுப்பியிருக்கு... “வீட்டில ஆருமே இல்லை”... மெஷேஜ்ஜைப் பார்த்ததும் பதறிப்போய் எழும்புகிறேன்....

என்னாது வீட்டில் ஆருமில்லாமல் பூஸ் தனியா இருக்குதா?... இந்தச் சாமத்திலயா? சும்மாவே இருட்டென்றால் நடுங்கும் பூஸ், இப்போ எப்படித் தனியே வீட்டில் இருக்கப்போகுது, சே... பாவம், பயத்திலதான் எனக்கு மெஷேஜ் அனுப்பியிருக்கு.. இல்லாவிட்டால் இப்படி மெஷேஜ் அனுப்பாதே... 

அட சீ... என்ன பெற்றோர் இவர்கள், வயசுக்கு வந்த பெண்ணை தனியே விட்டுவிட்டுப் போயிருக்கினம், என்னதான் பாதுகாப்பானா ஏரியாவாக இருப்பினும் பொம்பிளைப்பிள்ளையைத் தனியே விட்டுவிட்டுப் போகலாமோ...  நான் ஒரு காதலனாக இருந்தும் இப்போ போகாவிட்டால் என்ன உபயோகம்?..

 ஓடிப்போய், அக்கா வாங்கி வைத்த சந்தன சோப்பைப் போட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து....

 அந்த ரீ ஷேட்டைத் தேடுறேன்...அன்று நண்பன் கார்த்தியோடு கடைக்குப் போன இடத்தில் ஒரு கொலர் வைத்த, நீல ரீ ஷேட் கண்டு வாங்கிவந்து, போட்டேன்...

அதைக் கண்ட தோழி அதிரா.. ஆ...முகில்.. நீ இந்த ரீ ஷேட்டில் சூப்பர் ஸ்மாட்டாக இருக்கிறாய், ஸ்லிம்மாகவும் தெரிகிறாய் எனச் சொன்னதிலிருந்து எங்கு போனாலும் அதைப்போடச் சொல்லியே மனம் சொல்லுது. அதிரா எனக்கு நல்ல தோழி... எதையும் பட்டெனச் சொல்லி, என்னை உஷார்ப்படுத்திவிடுவார்.

இப்போ அந்த ரீ ஷேட் போட்டு பூஸ் வீட்டுக்குப் போனால், ஆஹா... பூஸ் என்ன சொல்லுமோ. நல்ல வேளை, இன்று காலைதான் அம்மா “உதை எத்தனை நாளைக்குத்தான் போடுவாய்?” எனக் கேட்டபடி தோய்க்க எடுத்துப்போனா,  “இப்ப தோய்க்காதீங்கோ” என வாங்கி வச்சது நல்லதாகிவிட்டது.

அவசரமாக அதைப்போட்டு, என் பேவரிட் “CK” பேர்பியூமை நன்கு அடிக்கிறேன்.

பின்னேரம் கார்த்தி ஃபோன் பண்ணிக் கேட்டான்,  “மச்சான்!!!! மியாவ் தியேட்டரில ஏழாம் அறிவு படம் ஓடுது, வாறியா போவம்” என...

இல்லடா எனக்கு கால் நோகுது, மோட்டர் பைக் ஸ்ராட் அடிக்க கஸ்டம், இன்னொரு நாளைக்குப் போகலாம் என ஏதோ ஒரு யோசனையில் சொன்னது, இப்போ எவ்வளவு நல்லதாகிவிட்டது.

பல தடவை கடவுளைத் திட்டியிருக்கிறேன், நீ என்ன கல்லா... உனக்கெதுக்கு தேங்காயும் கற்பூரமும் என, ஆனா இப்பூடித்தான் அப்பப்ப எதையாவது செய்து, என் நம்பிக்கையை கூட்டிடுவார்...

 நான் படம் பார்க்கப் போயிருந்தால், இப்போ பூஸ் வீட்டுக்குப் போயிருக்க முடியுமோ?  ...

“பிள்ளையாரப்பா இப்ப சொல்றேன் கேட்டுக்கொள்.. நாளைக்கு காலையில, முதல் வேலையா, உனக்கு நான், புஸ்பா அங்கிள் கடையில, புகை வராத கற்பூரம் வந்திருக்காம், அதில ஒரு பெட்டி வாங்கிக் கொழுத்துறேன்..”..

என எண்ணியபடி, என் சன் கிளாஸசையும் தூக்கிப் போட்டேன், அதிராதான் சொன்னா.. நீல ரீ ஷேட்டுக்கு சன் கிளாஸும் போட்டுப் போகேக்கைதான் இன்னும் எடுப்பாயிருக்குதென, அதில இருந்து இருட்டிலயும் கழட்டுறேல்லை:))......

பூஸ் பகிடி பண்ணும்தான், அது இரவில பூச்சி அதிகம் அதுதான் எனச் சொல்லி சமாளிச்சிட வேண்டியதுதான்... நான் என்ன செய்தாலும் பூஸுக்குப் பிடிக்கும், என்னில நல்ல விருப்பம் எதுக்கும் கோபிக்காது.

ஆனா சரியான கண்டிஷன் எல்லாம் போட்டிருக்குது பூஸ், கிழமையில ஒருநாள் மட்டும்தான்.. நேரில சந்திப்போம், மற்றும்படி ஃபோன் மட்டுமே.

முந்தநாள்தான் சந்தித்தோம், இப்படி திடுதிப்பென ஒரு சந்திப்பு வருமென நான் கனவிலயும் நினைச்சிருக்கேல்லை, இண்டைக்கு விடிய விடியக் கதைக்கலாம். 

ஒரு அடியில மோட்டார் பைக் ஸ்ராட் ஆகிட்டுது, பூஸ் வீடு நோக்கிப் பறக்கிறேன்....

“செத்தாலும் உனை நான் விடமாட்டேன் - ஆனா
உன் உத்தரவு இல்லாமல் தொடமாட்டேன்” .... 

சே..சே... சிட்டுவேஷனுக்கு ஏற்றமாதிரி அப்பப்ப பாட்டு வேற வந்து தொலைச்சிடுது மனசில....

 ஆனா திருமணமாகும்வரை நான் ஒரு ஒழுக்கமான, நல்ல காதலனாக இருக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்... அதையேதான் பூஸும் எதிர்பார்க்குது, ஆனா அதிலிருந்து கடுகளவும் நான் தவறமாட்டேன்.

சரியா 35 நிமிடத்தில பூஸ் வீட்டு வாசலில் நிற்கிறேன், மாலையானாலே சப்பரத் திருவிளா மாதிரி, எல்லா லைட்டையும் பயத்தில போட்டிடுமாம் பூஸ், ஆனா இன்று ஒரு லைட் கூட இல்லையே... பயத்தில போர்த்திட்டுப் படுத்திட்டுதுபோல, பாவம், நான் பதில் மெஷேஜ்ஜும் அனுப்பாமையால், நான் நித்திரையாக்கும் என நினைச்சிருக்கும்.

நொக்....நொக்...
நொக்...நொக்... கதவைத்தட்டுகிறேன்... ம்ஹூம் சத்தமில்லை.... பாவம் பயந்திடப்போகுது, எதுக்கும் ஃபோன் பண்ணுவோம்...

பூஸிட ஃபோன் ரிங் போகுது.....

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்....
நீ பேசாவிட்டால் நானும் பேச மாட்டேன்...

பூஸ் விழித்துக் கொண்டது...  “ஆஆஆஆஆ.. ஹலோ முகில்.. என்ன இந்த நேரத்தில?”...

முகில்: இல்ல பூஸ் வாசல்லதான் நிற்கிறேன் பயப்பிடாமல் கதவைத் திறங்க..

பூஸ்: ...ஙேஙேஙே.... எந்த வாசல்ல?

முகில்: உங்கட வீட்டு வாசல்லதான்...

பூஸ்: அதுதானே முகில்!!!! மெசேஜ் அனுப்பினேனே பார்க்கவில்லையா? “வீட்டில ஆரும் இல்லை” என்று. 

முகில்: அப்போ நீங்களும் இல்லையா பூஸ்?:(

பூஸ்: நாங்க காலையிலயே எங்கட அப்பம்மா வீட்டுக்கு வந்திட்டம், உங்களுக்குத்தான் தெரியுமே, என்னைத் தனியே விட்டு விட்டு, அப்பா அம்மா எங்கேயும் போக மாட்டார்களே!!!!.. ஃபோனில கதைக்க முடியாமல் போச்சா அதுதான் டெக்ஸ்ட் அனுப்பினேன்..., திருப்பி ஃபோன் பண்ணியிருக்கலாமெல்லோ?

முகில்: அது வந்து .. நேரில் (மனதில்... ஃபோன் பண்ணினால் வரவேணாம் எனச் சொல்லிட்டாலும் என்ற பயம்தான்:)) பேசலாம் என.. ஓக்கை.. ஓக்கை பூஸ், குட்நைட் நாளைக்கு பேசலாம்.....

 “பிள்ளையாரப்பா, நீ எல்லாம் ஒரு கடவுளா:))))? என்னை இப்படி ஏமாத்திப்போட்டியே? உனக்கு புகையில்லாத கற்பூரம் கேட்குதா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))”.

 கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்..... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்... வரும்போது ஒரு அடியில் ஸ்ராட் ஆன மோட்டர் பைக், இப்போ அடிக்க அடிக்க ஸ்ராட் ஆகாதாமே...

அவ்வ்வ்வ்வ்வ் வலிமை உடலிலல்ல... மனதில்தான்:))))...

“இதுவும் கடந்து போகும்”... வீட்டை நோக்கிப் பறக்கிறேன்.

இது பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு ஜோக், இரு வரியில் சொன்ன ஜோக்கை, நான் ஒரு கதையாக்கிட்டேன்.

====================================================
பின் இணைப்பு:

அவரா சொன்னார்.... ஈஈக்காது...
அப்படி எதுவும் ஈஈக்காது....
ஈஈக்கவும் கூடாது.... 
ல்லை....ல்லை.... நம்ப முடியவில்லை:))))..

(படிக்கும் காலத்தில் , நாம் எமக்குள் சொல்லிச் சிரிக்கும் ஒரு பாடல் வசனம்...)
======================================================

Wednesday 9 November 2011

இதுவும் கடந்து போகும்....


மியாவ் படம் பார்த்து ஆரும் சிரிச்சால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))

ஒரு அரச சபையிலே, ஒரு மந்திரி இருந்தாராம். அவர் மிகவும் புத்திசாலியாம். அங்கு எப்படிக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லியே அனைவரையும் மடக்கிடுவாராம். அதனால அரசருக்கு கொஞ்சம் இந்த மந்திரியில் பொறாமையாம்.

அரச சபையில் அவர் இருப்பது, அரசருக்கு நல்லதுதானாம், இருப்பினும் பொறாமை காரணமாக, இந்த மந்திரியை எப்படியும் கலைத்திட வேண்டும் என அரசர் முடிவெடுத்தாராம். அவர் மிகவும் புத்திசாலி என்பதால், அவரை கலைப்பது சுலபமில்லை. எனவே ஏதும் முடியாத வேலையாக சொல்ல வேண்டும் என எண்ணி....

அந்த மந்திரியை அழைத்துச் சொன்னாராம்,  “எனக்கு அணிந்துகொள்ள ஒரு மோதிரம் வேண்டும், அந்த மோதிரத்தை, நான் துக்கமாக இருக்கும்போது பார்த்தால், எனக்கு சந்தோசம் கிடைக்க வேண்டும், அதேபோல சந்தோசமான நேரம் பார்த்தால், உடனே மனம் துக்கமாகிட வேண்டும்”,  என்று.

அதுவும் ஆறு மாதங்களுக்குள் கண்டுபிடித்து தர வேண்டும், இல்லையெனில் அரச சபையை விட்டு ஓடிப்போயிட வேண்டும் எனவும், அரசர் கட்டளையிட்டாராம்.

இதைக் கேட்டு, மோதிரத்தைத் தேடி மந்திரி புறப்பட்டாராம். ஒவ்வொரு இடமாக, ஊராகத் தேடுறாராம் எங்கேயும் அப்படி மோதிரம் கிடைக்கவில்லையாம்.

ஆறுமாதங்கள் முடியும் நாள் நெருங்கி விட்டதாம், மந்திரி, இனிச் சரிவராது என நினைத்த வேளை, ஒரு ரோட்டோரத் தட்டிக் கடையில், மோதிரங்கள் இருப்பதைக் கண்டு, அங்குபோய், இந்த நிபந்தனையைச் சொல்லிக் கேட்டாராம், உடனே கடைக்காரர் என்னிடம் இருக்கிறதே அப்படி மோதிரம், எனச் சொல்லி, எழுத்துக்கள் போட்ட மோதிரம் ஒன்றைக் கொடுத்தாராம்.

மந்திரிக்கு அதைப் பார்த்ததுமே கவலை மறைந்து மகிழ்ச்சி வந்துவிட்டதாம். அதை எடுத்துக்கொண்டு அரச சபைக்குப் போய்ச் சேர்ந்தாராம்.

இவரின் வரவைக் கண்டதும் அரசருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லையாம், ஏனெனில், மோதிரம் எங்கே கிடைத்திருக்கப் போகிறது, முடியவில்லை எனச் சொல்லிவிட்டு போயிடப் போகிறார் என சந்தோஷப் பட்டுக்கொண்டிருக்கும்போது, மந்திரி மோதிரத்தைக் கொண்டு வந்து “இந்தாருங்கள் அரசே, கண்டு பிடித்துவிட்டேன்” எனக் கொடுத்தாராம்.

அந்த மோதிரத்தைப் பார்த்ததுமே, அரசருக்கு சந்தோசம் மறைந்து, துக்கம் வந்துவிட்டதாம், காரணம் மந்திரி கண்டு பிடித்துவிட்டாரே என.

அந்த மோதிரத்தில் எழுதப்பட்டிருந்தது.. “இதுவும் கடந்து போகும்” எனும் மூன்று வார்த்தைகள்தானாம்.

இதேபோல்தான் மனித வாழ்வில் இன்பமோ துன்பமோ எதுவுமே நிலையில்லாதது, இன்று மகிழ்ச்சியாக இருக்கும்போது அதிகம் துள்ளப்படாது, இதுவும் கடந்து போகும் என எண்ண வேண்டும். அ-து.. அடடடடக்கி வாசிக்க வேண்டும்:)))))...

அதேபோல, அதிக துன்பத்தில் இருக்கும்போதும், மனதில் எண்ண வேண்டும் “இதுவும் கடந்து போகும்”.

இன்றிருப்பது போலவேதான், நாளையும் இருக்குமென்றில்லை... “இதுவும் கடந்து போகும்”


பின் இணைப்பு:
தொப்பி போட்டு, மவ்ளர் கட்டி....


கிளவுசும் போட்டாச்சூஊஊஉ:))..
குளிர் ஆரம்பமாகிவிட்டது.... “இதுவும் கடந்து போகும்”.


ஊசிக்குறிப்பு:
தொப்பி, மவ்ளர் கலர் பார்த்து ஆரும் சட்லைட்மூலம் என்னத்தேடிடாதீங்க:), ஏனெனில் எனக்கு பொழுதுபோக்கே, மவ்ளர், தொப்பி, மணிக்கூடுகள் வாங்கிச் சேர்ப்பது, அதனால அடிக்கடி கலர் மாறிக்கொண்டிருக்கும்:)))).


===================================================
என்ன, என் பதிவு பார்த்துக் கோபம் வருதோ?:)))..


===================================================

Tuesday 1 November 2011

இசையும் பூஸும்:) (கதையும்)..முன்பு ஊரில் இருந்தபோது, இலங்கை வானொலியில் “இசையும் கதையும்” என ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும், கிழமையில் ஒருநாள். அதைக் கேட்கத் தவறுவதில்லை.


அதன் நினைவாக... அப்போ தொடக்கமே நானும் ஒன்று அப்படி எழுதோணும் என ஆசை. அதைத்தான் என் கற்பனையில் உருவாக்கி ஒரு இனிமையான கற்பனைக் கதையாக இங்கே வடித்திருக்கிறேன்:)).
=====================================================
இது தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.... நேரம் நான்ன்ன்ன்கு மணி, முப்பது நிமிடங்கள்... இசையும் கதையும்.... இன்று தொகுத்து அனுப்பியிருப்பவர்...
வடமாகாணத்திலிருந்து...  “மியாவ்” அவர்கள்:))...

 வழங்குபவர் கே.எஸ்.ரஜாஆஆஆஆஆ(அவரின் ஸ்டைலே ஸ்டைல்தான்.. அதை ஆராலும் அவரைப்போல் உச்சரிக்கவே முடியாது:))..

டொட்ட டொயிங்...............
======================================================


ம்யா... எழும்பம்மா... வெய்யில் அறைக்குள்ள வந்தது கூடத் தெரியாமல் நித்திரை கொள்கிறாய்” என்ற அம்மாவின் குரல் கேட்டு, திடுக்கிட்டு விழிக்கிறேன்...

தொடர்ந்து .... ரம்யா! அப்பா உன்னை சுவாமி அறைக்குள் வரட்டாம்.. முகம் கழுவிக்கொண்டு கெதியாப்போ.. எல்லாம் நல்ல சேதிதான்... என ஒரு புன்னகையோடு சொன்ன அம்மாவைப் பார்த்ததும், சடாரென எழுந்துவிட்டேன், நல்ல சேதி எனில் அது நிட்சயம்... என் திருமணம் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும், என எண்ணியபடி பார்த்ரூமை நோக்கி ஓடுகிறேன்...

பேஸ்ட் போட்டுத் தீட்ட பொறுமை இருக்கவில்லை, போத்தலில் இருந்த  “அண்ணாபற்பொடி” யைத் தொட்டு, ஒரு தடவை பல்துலக்கிக்கொண்டு, கொஞ்சம் தண்ணியால முகத்தையும் கழுவிக்கொண்டு, வெளியே வந்தேன், அம்மம்மா நின்றா, அவவின் சேலைத்தலைப்பை இழுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு.. சுவாமி அறை நோக்கி ஓடினேன்:).

அங்கே அப்பா கும்பிட்டுக்கொண்டு நின்றவர் என்னைப் பார்த்ததும்...  “வாம்மா... இன்றுதான் மாப்பிள்ளை வீட்டிலிருந்து தகவல் வந்துது, அவர்களுக்கு உன்னையும், நமது குடும்பத்தையும் நன்கு பிடித்துவிட்டதாம், வருகிறமாதம் மாப்பிள்ளை ஊருக்கு வருவாராம், அப்பவே திருமணத்தை வைத்திடலாம் என்றார்கள்”... என்று சொல்லி தீர்க்க சுமங்கலியாக இரம்மா.. எனத் திருநீறு பூசிவிட்டார்.

நேரே என் அறைக்கு ஓடிவந்து கட்டிலில் விழுந்தேன்...


..

இது கனவா அல்லது உண்மையில் நிஜமா...  “மாப்பிள்ளை இவர்தான், பிடிச்சிருக்கோ” எனப் படம் காட்டியபோதே... அவரை நன்கு பிடித்திருந்தது..

இதை உடனே என் ஒரே ஒரு தோழி அதிராவிடம் சொல்லிட வேண்டும், அதிராவும் நானுமாகத்தான் அவரின் படம் பார்த்தோம். அதிரா சொன்னா.. உனக்கேற்ற ஜோடியாகவே சூப்பராக இருக்கிறார் என்று. இப்போ இதைக் கேட்டால், அதிரா மிகவும் சந்தோசப்படுவா. அதிராவுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை.

இப்போ அதிராவை விட்டு வெளிநாடு போகப்போவதை நினைக்க மனம் கலங்குது.

அவர் பக்கத்து ஊரவர்தான், சின்னவயதில் கோயிலில் சுவாமி காவும்போது பார்த்திருக்கிறேன் அவரை. ஆனால் பல்கலைக்கழகம் முடிந்ததும் நேரே வெளிநாடு போயிருந்தார். மிகவும் நல்லவர் என எல்லோரும் சொல்லியிருந்தார்கள். எப்படிப்பட்டவராயினும், கோபம் வராதவராக, அன்பானவராக இருந்திடவேண்டும் என மனம் வேண்டிக்கொண்டது.

காலையில் எதுவும் சாப்பிட முடியவில்லை எனக்கு. மீண்டும் அம்மா சொன்னா,  “இன்று மாலை 4 மணியுடன் ராகுகாலம் முடியுதாம், அதன்பின்னர் நல்ல நேரமாம், மாப்பிள்ளை உன்னோடு கதைக்கப்போகிறாராம் எங்கேயும் போயிடாமல் ஆயத்தமாக இரு ஃபோன் வரும்” என.

எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... என்ன கதைப்பது? எப்படிக் கதைப்பது?... எதுவும் புரியவில்லை.. காத்திருந்தேன்.... சரியாக 4.30 க்கு ஃபோன் அலறியது..

எனக்கு கை கால் எல்லாம் வெடவெடத்தது, வியர்த்துக் கொட்டியது... ஒரு சொல்ல முடியாத இன்பப் படபடப்பு.... அப்பா ஃபோனை எடுத்தார் கதைப்பது கேட்குது...

அவரேதான், பின்பு அம்மாவும் நலம் விசாரித்தா... பின்னர் “ரம்யா”... அம்மாவில் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்... எனக்கு வார்த்தை வரவில்லை, கோட்லெஸ் ஃபோனைக் கொண்டு வந்து, ரூமிலே தந்துவிட்டு கதவைச் சாத்திவிட்டு அம்மா நகர்கிறா....

பக்கத்தில் ஆராவது நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என ஒருகணம் எண்ணினேன், மெதுவாக “ஹலோ” என்றேன், நாக்குக் குழைந்தது, கை ஃபோனைப் பிடிக்க முடியாமல் நடுங்கியது.... உச்சிமுதல் உள்ளங்கால் வரை என்னவோ செய்தது.... எதிர்ப்பக்கத்திலிருந்து.. “ஹலோ ரம்யா.... நான் முகில் பேசுகிறேன்”...

அப்படியே அக்குரல்.. காதில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தது...ஆளைப் பிடித்ததுக்கு மேலாக குரலைப் பிடித்துப் போயிட்டுதெனக்கு.

என்னென்னவோ கேட்டார், சொன்னார்... நீங்கள் சிரிப்பது கேட்க இனிமையாக இருக்கிறது என்றார், எனக்கு எதுவும் பேச வரவில்லை, ஃபோனை வைத்தாயிற்று. அடிக்கடி எடுக்கிறேன், கதைக்கலாம் என்றார்.

இது என்ன பேசவே மாட்டாத பெண்ணோ, இதையெல்லாம் கட்டி நான் என்ன செய்யப்போகிறேன் என நினைத்திருப்பாரோ... நான் வாய் திறந்தால் மூட மாட்டேன் என்பது, வீட்டில் உள்ளோருக்கல்லவா தெரியும்:)).

ஃபோனிலும் மெயிலிலும் நாட்கள் நகர்ந்தன... ஊருக்கு வந்துவிட்டார். நாளை அவர் எங்கள் வீட்டுக்கு முதன் முதலில் வரப்போகிறார்.. அடுத்த கிழமை திருமணம்...  அனைத்துமே ஆரவாரமாக நடந்துகொண்டிருக்கு...

நான் அழகான சந்தனக் கலர் சேலை உடுத்து அவர் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.. அதோ கார் வந்து எம் கேட்டில் நிற்பது தெரிகிறது... முதலாவதாக அவர்தான் இறங்குகிறார்....

இதுதான் பாட்டு, கேட்டுப் பாருங்கோ

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), இதில ஒரு பூஸைப் போட்டுத் தந்திருக்கலாம், அதை விட்டுப்போட்டு பச்சை ரோசாவைப்போட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இருப்பினும் ஊஊஊ ரியூப்பில போட்டமைக்கு டாங்ஸ்ஸூஊஊ:))... விடமாட்டமில்ல:))).

ராஜாத்தி என்ன தேடி வருவாரே ராஜா ராஜா
ரோஜாப்பூ மாலை சூடி தொடுவாரே லேசா லேசா
ராஜாத்தி என்ன தேடி வருவாரே ராஜா ராஜா
ரோஜாப்பூ மாலை சூடி தொடுவாரே லேசா லேசா
முதல் சந்திப்பு..... வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பு... நிறையப் பேசினோம், உணவுண்டோம்... நாட்கள் கடுகதி வேகத்தில் பறந்தது... திருமணம் முடித்தாயிற்று. 


அவர் எனக்கு கணவராகிட்டார்... என் கழுத்திலே தாலி, அதைத் தொட்டுப் பார்க்கிறேன்... சொல்ல முடியாத ஒரு பூரிப்பு..., நாணம்...,  பெரீய பதவி உயர்வு கிடைத்ததைப் போன்ற பரவசம்...

அனைத்தும் நிறைவாகி... மாப்பிள்ளை வீட்டுக்குப் போக கார் தயாராக சோடனையோடு வாசலில் வந்து நிற்கிறது, அப்பா ஓடிவந்து கட்டியணைத்து அழுகிறார்.... 


வாழ்க்கையில் முதல் தடவையாக அப்பாவின் கண்ணிலே கண்ணீரைப் பார்க்கிறேன்... அம்மா என்னைப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி நிற்கிறா... தங்கை மெளனமாக அழுவது தெரிகிறது... அண்ணன் கண்கள் இரண்டும் சிகப்பாகி காரோடு நிற்கிறார்.... உறவுகள் எல்லோரும் வழியனுப்ப தயாராகி நிற்கிறார்கள்.. நான் அழுகிறேன்... 


புதுமணப் பெண் அழக்கூடாது... சந்தோசமாகப் புறப்பட்டுப் போகவேணும் எனச் சொல்கிறார்கள்.... என்னால் முடியவில்லை தேம்பித் தேம்பி அழுகிறேன்..... காரில் ஏற வரும்போது பார்க்கிறேன், பந்தலின் ஓரத்திலே அதிரா... மீண்டும் ஓடுகிறேன் அதிராவைக் கட்டியணைத்து ஓவென அழுதுவிட்டேன்... 


தன் கண்களைத்துடைத்தபடி, அதிரா... “எதற்காக அழுகிறாய், சந்தோஷமாகப் போய் வா” என வழியனுப்புகிறா... கார் புறப்பட்டுவிட்டது மாப்பிள்ளை வீடு நோக்கி...... 

======================================================
பின் இணைப்பு:

======================================================


குட்டி ஆசை இணைப்பு:
எனக்கு இதை தொடர் பதிவாக்கினால் என்ன என ஒரு குட்டி ஆசை, அதனால இமா, ஸாதிகா அக்கா, ஆசியா, இளைய தளபதி நிரூபன், எங்கட நகைச்சுவை மன்னன் மாயா... ஆகியோரை அன்போடு அழைக்கிறேன், உங்களால முடியும், நேரம் கிடைக்கும்போது, உங்களுக்கு பிடித்த தலைப்பில் எழுதுங்கோ, முடியாவிட்டாலும் ஓக்கை, கோபமில்லை.

இது உங்களுக்கு இல்லை:
கிரிஸ் அங்கிள்... பிளீஸ்ஸ், இமா சொல்லச் சொல்ல ரைப் பண்ணிக்கொடுங்கோ, உங்களுக்கு நான் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும், பைலட் அண்ணனிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறேன்:))

Thursday 27 October 2011

பெற்றால் மட்டும் போதுமோ?

என்னவோ மனதுக்குள் ஒரு பல்லி சொல்லிக்கொண்டே இருக்குது.... 2012 இல ஏதோ நடக்கப்போகுதென:))) (ஆரும் சிரிக்கப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அதுக்குள் மனதில் இருப்பதை எல்லாம் எழுதிடோணும் என ஒரு தவிப்பு இருந்தாலும்... அவசரமாக பதிவுகள் போட நேரம் இடங்கொடுப்பதில்லை.

ஒரு குழந்தையை எவ்வளவு கஸ்டப்பட்டுப் பெறுகிறோமோ... அந்தளவுக்கு அவர்களை வளர்த்து ஆளாக்குவதும் பெரும் பொறுப்புத்தான். ஒவ்வொரு குழந்தை ஒவ்வொருவிதமாக இருக்கும்.

பிள்ளைகளின் குறும்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

எங்கள் மூத்தமகனில் ஒரு பழக்கம், கீழே என்ன இருந்தாலும் உடனே எடுத்து ஒரு செக்கனும் தாமதமில்லாமல் வாயில் வைப்பார். இதனால் அவரின் பின்னால் எப்பவுமே நாம் ஒருவர் திரிவது வழக்கம். 10 மாதத்திலேயே குடுகுடு என ஓடத் தொடங்கிட்டார். எங்கள் அப்பா அம்மாவும் அந்நேரம் எம்மோடு இருந்தமையால், சரியான செல்லம்.

ஒரு தடவை என் கணவரும் நானும் மகனுமாக ரெயினில் போய்க்கொண்டிருந்தோம். அப்போ மகனுக்கு 12,13 மாதங்கள் என நினைக்கிறேன். நான் கோனர் சீட்டில் இருந்து, மகனை மடியில் இருபக்கமும் கால்களைப் போட்டபடி, என்னைப்பார்கும்பக்கமாக, என் நெஞ்சிலே சாய்ந்து வைத்திருந்தேன். நான் நெஞ்சில் பட்டன்கள் போட்ட ரீ ஷேட் போட்டிருந்தேன். துடினமாக இருக்கும் மகன், மிகவும் அமைதியாக படுத்திருந்தார். அப்போ நான் குழப்பினால் பிழை என பேசாமல் விட்டிருந்தேன்.

ஏனெனில் என்னில் ஒரு பழக்கம், மகனை நித்திரையாக்கிப்போட்டு, பின்பு பக்கத்தில் இருந்து... காலைத்தொட்டு கையைத்தொட்டு பார்த்துக்கொண்டிருப்பேன், அப்போ என் கணவர் சொல்வார், கஸ்டப்பட்டு நித்திரையாக்கிப்போட்டு, உடனேயே தட்டி எழுப்பிடாமல், நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கோ என:)).

அதை எண்ணியே, அமைதியாக இருக்கிறார் என விட்டிருந்தேன்.  திடீரென ஒருவிதமாக மூச்சுத் திணறி, விக்கல் எடுத்து அவதிப்பட்டார். எனக்கு என்ன என்றே புரியவில்லை, பக்கத்தில் இருந்த கணவருக்குப் புரிந்துவிட்டது, உடனே சரித்துப் பிடித்துக்கொண்டு முதுகிலே ஒரு தட்டுத்தட்டினார், என் ரீ ஷேட்டில் இருந்த பட்டின், தொண்டையிலிருந்து கீழே விழுந்தது. இப்போ நினைத்தாலும் கைகால் எல்லாம் கூசுது எனக்கு. அந்நேரம் நான் தனியே என்றால் என்ன செய்திருப்பேனோ தெரியாது.

உடனே அழ மட்டும்தான் தெரியுமெனக்கு, கையும் ஓடாது காலும் ஓடாது.

எப்பவுமே, துடினமாக இருக்கும் குழந்தைகள், அமைதியாக இருக்கிறார்கள் எனில் கவனிக்க வேண்டும்.... எனும் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.

பின்பொருநாள், ஒரு திருமணவீட்டுக்குப் போய் வந்து, எம்மை வீட்டிலே விட்டுவிட்டு கணவர் டியூட்டிக்குப் போய்விட்டார். திருமணத்தில் இருந்து ஒரு அம்மம்மாக்குழல் கொண்டு வந்திருந்தார் மகன். அவருக்கு 1 1/2 வயதிருக்கலாம். அதை பலூனைக் கழட்டிப்போட்டு விழுங்கிவிட்டார் குழலை. அம்மா நின்றமையால் ஓடிவந்து கைவிட்டு இழுத்தெடுத்திட்டா.

ஒரு இரண்டரை வயதானபோது, ஒருநாள். கணவர் ஹோலில் இருந்து பேப்பர் வேர்க்ஸ் செய்துகொண்டிருந்தார். நானும் அதிலிருந்து ரீவி பார்த்துக்கொண்டிருந்தேன், மகன் விளையாடிக்கொண்டிருந்தார். நாம் கவனிக்கவில்லை, தானே சொன்னார்...  “அப்பா கிளிப் வச்சிட்டேன்” என....  ஏதோ பெரிய சாதனையாளர்போல:)). எமக்குப் புரியவில்லை. பின் தானே மூக்கைக் காட்டினார், உள்ளே வெள்ளைக்கப்பி தெரிந்தது. பேப்பர் கிளிப். ஒருமாதிரி எடுத்துவிட்டார் கணவர்.

உடனே தான் ஏதோ சாதனையை நிலைநாட்டிவிட்டேன் என்பதுபோல, அப்பப்பாவுக்கு ஃபோன் பண்ணுங்கோ, அம்மப்பாவுக்கு ஃபோன் பண்ணுங்கோ.. மாமாவுக்கு... என இப்படி ஒவ்வொருவராக கேட்க கேட்க நாமும் ஃபோன் பண்ணிக் கொடுத்தோம். உடனே.. “நான் கிளிப் வச்சேன், அப்பா எடுத்திட்டார்” என எல்லோருக்கும் தன் சாதனையைச் சொன்னார். ஒரு வயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக நன்கு கதைக்கத் தொடங்கிட்டார்.

இப்படி அவரை வளர்க்க சரியான கஸ்டப்பட்டோம். ஆனா இப்போ அதற்கு எதிர்... அமைதியான பிள்ளையாக மாறியிருக்கிறார்:)))(என்னைப்போலவே ஹா..ஹா..ஹா..:)).

சின்னவர் அதுக்கு எதிர்.. குழப்படி குறைவு. வாயில் எதுவும் வைக்கமாட்டார். நம்பி எதையும் கொடுக்கலாம் விளையாடுவார். ஆனால் மூத்தவரால் பயந்திருந்தமையால், நாம் மிகவும் கவனம்.

நான் ஏதும் கொண்டுபோய் வாயில் தீத்தினால், என் கணவரும் மூத்தவரும் என்ன ஏதெனக் கேட்காமல் ஆஆஆ...வென வாங்கிச் சாப்பிடுவார்கள் (அவ்ளோ நம்பிக்கை என்னில்:))), ஆனா சின்னன் மட்டும் கடசிவரை வாய் திறக்க மாட்டார்... வட் இஸ் தட்? ஷோ மீ.... எனக் கேட்டு, காட்டிய பின்பே வாய் திறப்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

ஒரு தடவை கனடா போயிருந்தபோது, ஒரு வேலைநாளில், எங்கட ஆன்ரி லஞ்க்கு வரும்படி சொல்லியிருந்தா. வேலை நாள் என்பதால் காரில் ஏற்றிப்போக யாரும் இருக்கவில்லை. ஆனால் அங்கு நல்ல பஸ், ரெயின் வசதி இருக்கிறது... வீட்டு முன்னாலே ஏறி, வீட்டு வாசலிலே இறங்கிடலாம். ஆனால் என் கணவருக்கு பொது வாகனங்களில் ஏறப் பிடிக்காது. எவ்வளவு செலவானாலும் ரக்‌ஷி பிடிப்பாரே தவிர. லோக்கல் பஸ், ரெயினில் ஏறியதே கிடையாது.

ஆன்ரி வீடு ஒரு மணிநேரம் ஹைவேயில் ஓட வேண்டும். ரக்‌ஷி பிடித்து ஏறிவிட்டோம். பின்னால் நான், பக்கத்திலே மூத்தவர், (பக்கத்தில்)அடுத்த கோனரிலே... எங்கட அப்பா மடியிலே சின்னவரை இருத்தி, பெல்ட்டும் போட்டபடி வைத்திருந்தார். சின்னவர் அப்பாவின் நெஞ்சிலே சாய்ந்து படுத்திருந்துகொண்டு, கதவின் லொக்கிலே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

ஹைவேயில் ஓடிக்கொண்டிருக்கும்போது படார் என கார் டோர் திறந்துவிட்டது.... எனக்கு ஒருகணம் என்ன நடந்ததென்றே தெரியாது.... நல்லவேளை, ரைவர் காரை நிறுத்திவிட்டார்.

அன்று தப்பியது என்னவோ புண்ணியம்தான், இல்லையெனில் வெளியே தூக்கி வீசியிருக்கும் அந்த வேகம்.

இதுக்காகத்தான் நாம் நெடுகவும் காருக்கு child lock என இருக்கிறது அதை எப்பவுமே போட்டிருப்போம். மூத்தவருக்கு 8 வயதானபோதுகூட சொன்னார், நான் வளர்ந்துவிட்டேன், என்பக்க லொக்கை எடுத்துவிடுங்கோ என:)). ஆனால் பல பேருக்கு இப்படி ஒரு லொக் இருப்பதே தெரியாது. இந்த லொக் அனைத்து வாகனங்களுக்கும் உண்டு, இதன் கொன்ரோல் ரைவரிடம் இருக்கும். இதை எப்பவுமே போட்டிருந்தால் பயம் குறைவு.

இதைப் படிக்கும் உங்களுக்கும்... பழைய ஞாபகங்கள் வருமே?:).

***********************************************************************

பின் இணைப்பு:


ஆருமே எனக்குப் பயப்புடுறமாதிரித் தெரியேல்லை.... கலவீன் வேஷம் போட்டுப் பார்ப்பம்:)))...

***********************************************************************

உஸ்ஸ்ஸ்..... ஆரோ வருகினம்... பின்னூட்டம்போடப்போல:))).. சத்தம்போட்டுக் குழப்பிடப்புடா:))

************************************************************************
மீனின்றி நீர் வாழும், ஆனால் நீரின்றி மீன் வாழாது
************************************************************************

Sunday 23 October 2011

இதில ஒண்டுமே இல்லை:))

ஆண்டவா எல்லோரையும் காப்பாத்தூஊஊ... என்னையும்....தேன்ன்ன்:)))
ஹா..ஹா..ஹா.... அதுதான் தலைப்பிலேயே சொல்லிட்டனே இதில ஒண்டுமே இல்லை:) என்று, பிறகேன் ஓடிவந்து முறைக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:)))).

சரி வந்திட்டீங்கள்... நான் கேட்ட பூஸ் ரேடியோவிலிருந்து ஒரு நெயில்சுவை... அதுதான் நக(கை)ச்சுவை:)))....

ஒரு ஊரில் பிரபலமான ஒரு பிக்பொக்கட் காரர் இருந்தார். அந்த ஊரில் அவரைப்போல் ஆராலேயுமே அவரை வெல்ல முடியாது, அவ்வளவு திறமைசாலி.

ஒருமுறை அவர் பக்கத்து ஊருக்குப் போயிருக்கிறார், அங்கு போய்க் கொஞ்ச நேரத்தில் பார்க்கிறார், அவரது பொக்கட்டில் இருந்த பேர்ஸைக் காணவில்லை, அதை ஆரோ களவெடுத்திட்டினம்.

அப்போ அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தன்னிடமே களவெடுத்தவரென்றால் அவர் எவ்வளவு திறமைசாலியாக இருக்க வேண்டும் என நினைத்து, அங்கிருந்தோரை விசாரித்திருக்கிறார்.

அவர்கள் சொன்னார்கள், அது அந்த ஊரில் இருக்கும் ஒரு பெண் தான், இதில் அவ மிகவும் கெட்டிக்காரி என்று.

இவருக்கு உடனே யோசனை தோன்றிட்டு, அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, அவவையே திருமணம் செய்துகொண்டால்... எவ்வளவு நல்லது என எண்ணி, அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, திருமணம் முடித்து விட்டாராம்.

அவர்களுக்கு ஒரு குழந்தை கிடைத்தது, ஹொஸ்பிஸ்டலில் குழந்தை கையை இறுக்கிப் பொத்திப்பிடித்தபடி இருந்ததாம்.... எல்லோரும் அதைப் பார்த்து, கஸ்டப்பட்டு கையை திறந்தார்களாம்.... அங்கே பிரசவம் பார்த்த ஒரு நேர்ஸின் மோதிரம் குழந்தையின் கைகளில் இருந்ததாம்:)))))(பிறக்கும்போதே பிக்பொக்கட்:))))....  

ஹா..ஹா..ஹா... இது எப்பூடி????..  இரு திறமைசாலிக்குப் பிறந்த, திறமைசாலி:))))).

குட்டியூண்டு இணைப்பு:)).
இதுவும் ஒருவிதப் புய்ப்பம்:). இங்கு ஓகஸ்ட் மாதம் தொடங்கி... அநேகமாக எல்லா வீட்டிலும் ரோட்டிலும் நிற்குது, நிறையப் பூக்கும் அழகாக இருக்கு. 2,3 நிறங்களில் கண்டேன்... அதிகம் பிங்தான்... குட்டியாகவும் இருக்கு, பெரியதாகவும் இருக்கு, அழகான புய்ப்பம்:)).

இவை குட்டி...இவை பெரியவை..
பின் இணைப்பு::
ஆசைகுப் படம் படமாப் போட்டு, ஆசை தீர வெளயாடியாச்சு:)))... அதனால இம்முறை படம் போடும் பசளிக்குட்டியை:)) நீக்கியிருக்கிறேன்(அதுதாங்க. ..facility:)). என்னாது... ஜெய்!!! வாயில கைவச்சுச் சிரிக்கிறமாதிரித் தெரியுது:)))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

 என் கணவர் சொல்வார், ஆராவது எம் இடத்தில் ஏதும் புதுசா ரெஸ்ரோரண்ட், ரேக் எவே ஷொப் ஓபின் பண்ணியிருக்கு... அதில் அந்தச் சாப்பாடு ரேஸ்ட் இந்தச் சாப்பாடு ரேஸ்ட்... எனச் சொன்னால்... அப்பூடியா..... தெரியாதே என விளிக்கப்படாது:))... கேள்விப்படுவதெல்லாம் சாப்பிட்டுப் பார்க்கோணும் என(எல்லாம் ஒரு சாட்டுத்தான்:))... புதிதாக என்ன உணவுப்பெயர் கேள்விப்பட்டாலும் விடமாட்டார்... பெரும்பாலும் நாம் போகாத ரெஸ்ரோரண்ட், புஃபே இல்லை எனலாம்... இங்கு:)).

அதுபோலத்தான்... புளொக்கில் படம் போடலாமே என்றால்...ஙேஙேஙேஙேஙேஙேஙே...:)) என விளிக்காமல், மாயா புண்ணியத்தில் போட்டு, அஞ்சுவின்  உதவியோடு  ருசிச்சு,ருசிச்சு.. அனுபவித்திட்டோம்.... அலுத்தே விட்டது,  இனியும் ஆசை மீண்டும் வரும்போது, மீண்டும் போடுகிறேன்.

ஊசி இணைப்பு:
ஆரைப் பார்த்தாலும் அடிக்க வருகினம்:))).. இதுதான் இப்போதைக்குப் பாதுகாப்பான இடம்.
பட்டப் படிப்பு படிக்க வந்தேன், பரம்பரையை உயர்த்த வந்தேன் மியாவ்வ்வ்:)))
இது.... மாயாவுக்காக.. ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்ஸ்ஸ் உடன், நானே படம் பிடித்த  ரோஜாக்கூட்டம்..
============================================
 “உண்மையான வீரன் யார் என்றால், 
எதிரிகளை அதிகமாகத்தாக்கும்
 உடல் வலிமை பெற்றவர் அல்ல, 
தனக்கு வரும் கோபத்தை
 அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”
============================================