பரிசு கிடைக்கும்வரை ஓயமாட்டேன்:)
 |
நான் செய்து எப்பத்தான் அளவு பிழைச்சிருக்கு?:) எங்கிட்டயேவா?:) |
TOAD IN THE HOLE
தேவையான பொருட்கள்: மினி சொசேஜ் - 8/10 கோதுமை மா - 100 கிராம் முட்டை - 2 பசுப் பால் - 250 ml வெங்காயம் -பெரிது 1 உப்பு -1/4 தே.கரண்டி + கொஞ்சம் மிளகுபவுடர். எண்ணெய் .
செய்முறை:
முதலில் சொசேஜ்ஜை சிறிது எண்ணெயில் பொரித்து எடுக்கவும், வெங்காயத்தை குட்டியாக நறுக்கி வதக்கி எடுக்கவும். மாவில் முட்டை, ஒருமேசைக்கரண்டி எண்ணெய், பால், உப்பு, மிளகு செர்த்து நன்கு அடித்து எடுக்கவும்.. பின்பு வெங்காயத்தைக் கலக்கவும்.
அடுப்பில் ஒரு நொன் ஸ்ரிக் பானை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சொசேஜை.. பரப்பி வைக்கவும், அதனுள் இவ் மாக்கலவையை ஊத்தி மிகவும் குறைந்த நெருப்பில், அவிய விடவும், கொஞ்ச நேரம் மூடி விட்டுத் திறப்பது நல்லது. மேல் பகுதி அவியக் கஸ்டப்பட்டால், ஒருதடவை அழகாகப் பிரட்டி விட்டு இறக்கவும்..
இது ஒரு ஆங்கிலேய உணவு.
=====================================================
இரண்டாவதாக இங்கு போட்ட குறிப்பை நீக்கி விட்டேன்ன்ன்ன்
ஹையோ மக்கள்ஸ்ஸ் ஒரு குறிப்பு குறைஞ்சுபோச்ச்ச்சே.. அப்போ நேக்குப் பரிசு கிடைக்காதோ?:)))
==========================================================
Enjoy:)
இது ஜல் அக்காவின் போட்டிக்கு அனுப்புறேன்ன்ன்.. நீங்க மொய் எழுதாட்டிலும் பறவால்ல:) எனக்குப் பரிசு கிடைக்கோணும் என நேர்த்தி வையுங்கோ மக்கள்ஸ்ஸ்:))
சிறுஊசிக்குறிப்பு:) நேர்த்தியை நீங்கதான் நிறைவேத்தோணும்.. இப்பவே சொல்லிட்டேன்ன் எங்கிட்டயேவா?:))..
========================================================
கடிகார முள் சுத்தாமலிருக்கலாம்
ஆனால் - காலம் கடந்துகொண்டுதானிருக்கும்
========================================================