நல்வரவு_()_


Thursday 26 May 2011

ஜலீலாக்காவின் தந்தைக்காக...

இன்று காலை ஜலீலாக்காவின் தந்தை காலமாகிவிட்டார் என்ற துயரச் செய்தி, ஹூசைனம்மாவின் மெயில் மூலம் அறிந்து, மிகவும் மனம் வருந்துகிறேன்.. அவரின் ஆத்மா சாந்தியடையவும், ஜலீலாக்காவும் மற்றும் ஏனைய குடும்ப உறவுகளும் மனத் தைரியத்தோடும் அமைதியோடும் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

இப்பதிவைப் படித்துப் பாருங்கள்...

========================================================

எதையும் தாங்கும் இதயம் பெற வேண்டுகிறேன்.
 “எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்”... அறிஞர் அண்ணா
=========================================================

Thursday 19 May 2011

எனக்கு Double or Triple OOkai, ஆனா இது முடியாது சாமீஈஈஈஈ:)

இந்த வீடியோவில் இருப்பவர்களே வந்திருந்தார்கள்...


இங்கே ஆரம்பப் பாடசாலைகளில்(Primary Schools) 10 வயதினருக்கு சைக்கிள் ஓடும் விதிமுறைகள் சொல்லிக்கொடுத்துப் பழக்குவார்கள், முடிவில் சோதனை வைத்து சேர்டிபிகேட் கொடுப்பார்கள். அதன் பின்பு அவர்கள் ரோட்டில் சைக்கிள் ஓடலாம்.

எங்கள் மகனின் வகுப்பும் இந்த Term பழகுகிறார்கள்.  அதனால் அவர்கள் வகுப்பை இன்னொரு பாடசாலைக்கு அழைத்துச் சென்றார்கள், ஏனெனில் அங்கு பிரபல்யமான சைக்கிள் ஓட்ட வீரர்கள் வந்து சாகசங்கள் காட்டிப் பின்பு, இவர்களுக்கும் சைக்கிள்பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார்கள்.

வழமையாக இப்படியான ட்ரிப்புக்கு பெற்றோரை உதவிக்கு கேட்பார்கள், ஆசியர்களோடு ஒருசில பெற்றோரும் சேர்ந்து மாணவர்களை அழைத்துப்போய்வருவது வழக்கம். இம்முறை நானும் உதவுகிறேன் எனக் கூறிச் சென்றேன்.

இதுவரை ரீவியில் பார்த்திருக்கிறேன், இம்முறை நேரில் பார்த்தபோது மிகவும் நன்றாக இருந்தது.

=========================================================

பின்னாலே -”- 10 அடி உயரமுள்ள மேடை அமைத்து, முன்னுக்கு ஒரு 5,6 அடி உயரமுள்ள இன்னொரு மேடையமைத்து, பின் மேடையிலிருந்து கீழே மிகவும் ஸ்பீட்டாக இறங்கி, அதே வேகத்தில் முன் மேடைமேல் ஏறிக் கீழே பாய்ந்து கால் நிலத்தில் முட்டாமல் சைக்கிளிலேயே நின்றார்கள்.


பின் மேடையில் ஏறி ஆயத்தமாகிறார்கள்.

=================================================================


சைக்கிளின் பின் ரயறிலேயே
நீண்ட நேரம் மேடையில்
தூக்கித் தூக்கித் துள்ளிக்கொண்டிருந்தார்

======================================================================
பின் மேடையில் ஏறித் தயாராக நிற்கிறார்கள்,
முன் மேடையிலே மீண்டும்,
 ஒன்றரை மீற்றர் உயரத்திலே
உயரம் பாய்வதற்கு ஒரு கம்பி பொருத்தப்பட்டிருக்கு


அக் கம்பியைக் கடக்கிறார் சைக்கிளோடு,
இவர் ஒரு பெண் வீராங்கனை.


=====================================================

முன் மேடைக்கு அருகில் இன்னும் இரு மேடைகள்,
 இன்னும் உயரமானவை இருக்குதெல்லோ,
அந்த முன் மேடையில் இருந்து,
பக்கத்து உயர மேடைக்கு தாவி,
 பின் சைக்கிளாலேயே படியேறி,
 மிக உயர்ந்த மேடைக்குச் செல்கிறார்.மேலேயிருந்தும் ஒரு சில்லில் சாகசம் காட்டியபின்,
கீழ் மேடைக்குக் குதித்தார்.
 இவரிடம் இருந்தது மிகவும் குட்டிச் சைக்கிள்.அதேபோலவே இன்னொருவர்,
பெரிய சைக்கிளோடு ஏறியிருக்கிறார்.இவர் மேலேயிருந்து நேரடியாகக் கீழே குதித்து,
 விழாமல் தொடர்ந்து ஓடினார்.

இது, அந்தக் குட்டிச் சைக்கிள்காரர்,
கீழே எனவுன்ஸ் பண்ணுபவரை
படுக்கச் சொல்லிப்போட்டு பக்கத்திலே பாய்ந்தார்.


தவறாமல் அருகிலே பாய்ந்திருக்கிறார்.

============================================

இவர் குட்டி சைக்கிளோடு
உயரம் பாய ஆயத்தமாகிறார்.வெற்றிகரமாகப் பாய்ந்து கால் நிலத்தில்
ஊன்றாமல் நின்றார்.


இவர் பெரிய சைக்கிள் வைத்திருப்பவர்..
 தூர இருந்து ஓடிவந்து பாய்கிறார்.எப்படி சைக்கிள் ஸ்ரன் ஷோ பிடிச்சிருக்கா?
இவை என் மொபைலால் எடுத்தவைகளே.

================================================

பின் இணைப்பு:
இவை தம்பி ஜீனோ, என் கொசு மயிலுக்கு அனுப்பியவை....சைக்கிள் இல்லாவிட்டால் என்ன, நாங்கதான் சாகசங்கள் செய்வோமே...:), ஆராவது பிடிக்க முடியுமோ?:).


உஸ் அப்பா... சோ....ஓ.. ரயேர்ட்...
இது ச்சோஓ சுவீட்டாம் தம்பிதான் சொன்னவர்ர்ர்ர்ர்:).


  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விரும்பியது கிடைக்கவில்லையே என்பதற்காக
கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பக்கூடாது
......கண்ண..தாசன் சொன்னவர்....
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Saturday 14 May 2011

அம்மாவுக்கு ஒரு கடிதம்...

முன்பு நாம் ஒரு தொடர் கதை எழுதினோம், அதில் நான் தீபுக்குட்டி எழுதினேன், அப்போதே இதையும் தொடர்ந்து எழுதியிருந்தேன், ஆனா இன்றுதான் வெளியிட நேரம் அமைந்திருக்கு... அதே தீபுக்குட்டிதான், இப்போ வளர்ந்திட்டா... :).

இது முளுக்க முளுக்க என் கற்பனையில் உருவாக்கிய மடல்....அன்புள்ள அம்மாவுக்கு,

உன் மகள் தீபுக்குட்டி எழுதிக்கொள்வது. நான் இங்கு நலமே இருக்கிறேன், அங்கு நீங்கள், தம்பி, தங்கை அனைவரும் நலமே இருப்பீங்கள் என்றே நம்புகிறேன்.

அம்மா!!! நான் உன்னோடு கொஞ்சம் தனியே, மனம் திறந்து கதைக்கப் போகிறேன், உன் மனதைத் திடப்படுத்திக்கொள்ளம்மா.


நான் பல்கலைக்கழகம் வந்த 2ம் வருடத்திலேயே, இங்கு ஒருவரைச் சந்தித்தேன், அவர் இப்போ படிப்பை முடித்து, ஒரு பிரபல கம்பனியில் பொறியியலாளராக இருக்கிறார். அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன், ஆறடி உயரம், என்னைவிட நிறம் குறைவு, கிரிக்கெட் பிளேயரும்கூட. கிரிக்கெட்டில் பல கப்புகள் பெற்றிருக்கிறார், சமீபத்தில் ஒரு பேப்பரில் அவரின் படமும் வெளிவந்தது. அவரை நான் விரும்புகிறேனம்மா (காதலிக்கிறேன் என சொல்லவில்லை, ஏனெனில் அது உனக்குப் பிடிக்காத வார்த்தை என எனக்கு நன்கு தெரியும்).

அவரின் இப்போதைய நிலைமையும், பதவியையும் பார்த்துத்தான், நான் விரும்புகிறேன் எனத் தப்பாக நினைத்துவிடாதே. நான் உன் மகள் அம்மா...நீ எனக்கு பால்சோறோடு பண்புகளையும் பக்குவங்களையும் சேர்த்தேதானே ஊட்டி என்னை வளர்த்தாய். சின்ன வயதிலிருந்தே என்னை உனக்கு நன்கு தெரியுமே, புற அழகையும் பகட்டையும் பார்த்து மயங்குபவளில்லை என்பது.


நான் 2ம் வருடத்தில் இருந்தபோது, அவர் இறுதி ஆண்டில் இருந்தார். எங்கள் குடும்பம்போல், அவருடைய அப்பாவும் சமீபத்தில்தான் காலமானார். அவர்தான் மூத்தபிள்ளை, ஒரே ஒரு ஆண்பிள்ளையும்கூட. இரு தங்கைகள் இருக்கிறார்கள். இப்போ குடும்பப் பொறுப்பு அவரது கையில்தான் இருக்கிறது. நான் இதையெல்லாம் எழுதுவது, என் நிலைமையை உனக்குத் தெரியப்படுத்தி, உன் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ளவே. திருமணத்தைப்பற்றி இப்போ நான் கனவிலும் எண்ணவில்லையம்மா.

எனக்கும் தம்பி தங்கை இருக்கிறார்கள், என் குடும்பப் பொறுப்பு என் கையிலே இருக்கிறதென்பதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேனம்மா.


குளிக்கப் போவதானால்கூட உன்னிடம் சொல்லி விட்டுத்தான் போவேன், அப்படிப்பட்ட நான், இன்று உன் அனுமதி இல்லாமல் சம்மதம் சொல்லிவிட்டேனே என ஒருபோதும் தவறாக நினைத்து, மனம் வருந்திவிடாதே. அவர் என்னிடம் சம்மதம் கேட்ட அந்த ஒரு நிமிடம், என்னால் மறுப்புச் சொல்ல முடியாமல், சம்மதம் தெரிவித்து விட்டேனம்மா. என்னதான் இருந்தாலும், நானும் ஒரு சாதாரணப் பெண்தானே?, அவரின் அன்பான பேச்சும், அமைதியான சுபாவமும், எதுக்குமே கோபப்படாமல் நகைச்சுவையாகப் பேசிச் சிரிக்கவைக்கும் தன்மைகளும் என்னைக் கவர்ந்துவிட்டனவம்மா.


எந்த ஒரு விஷயமானாலும், நான் இலகுவில் கால் வைக்கமாட்டேன் என்பதும் உனக்குத் தெரியும்தானே. உன் எதிர்பார்ப்பைவிட சற்றும் குறைந்த மருமகனாக அவர் இருக்கமாட்டார். நம் நாட்டு வழக்கப்படி, தந்தைக்குப் பின், தந்தையின் பொறுப்பை ஏற்று, தந்தை ஸ்தானத்திலிருந்து குடும்பத்தைத் தாங்குவது மூத்த மருமகன் தானே? அதில் சற்றேனும் அவர் குறைந்தவராக இருக்கமாட்டார்.


நீ அடுத்தமுறை இங்கு வரும்போது, அவர் உன்னைச் சந்திக்க விரும்புகிறாரம்மா. ஒருமுறை கதைத்தாலே உனக்கும் அவரை மிகவும் பிடித்துவிடுமம்மா.


சின்ன வயதிலிருந்தே, உன்னிடம் நான், எந்தச் சின்ன விஷயத்தையும் ஒழித்ததில்லை. அதுபோலவே, என் மனதில் இருந்த பாரத்தை, இன்று, இக்கடிதம்மூலம் இறக்கி வைத்துவிட்டேன். நான் ஆசைப்பட்ட எதையுமே இதுவரை நீ மறுத்ததில்லை, ஏனெனில்.. என் ஆசையில் எப்பவும் ஒரு நியாயம் இருக்கும் என்பதில் உனக்கு நம்பிக்கை என எனக்குத் தெரியும்.


இன்று அப்பா எம்மோடில்லை என்பதற்காக, அப்பாவின் புத்திமதிகளும் இல்லாமல் போய்விடுமோ? நான் எப்பவுமே உன் பிள்ளைதானம்மா.


இப்படிக்கு உன் சம்மதத்தை எதிர்பார்த்து, நம்பிக்கையோடு காத்திருக்கும்,


அன்பு மகள்,
தீபுக்குட்டி.

==========================================================
பின் இணைப்பு:

உஸ்ஸ்ஸ்ஸ்... ஆரோ வாற மாதிரிச் சத்தம் கேட்குதே....

=========================================================
படித்ததில் பிடித்தது:
நான் வற்றிப் போனபின் தான் தெரிந்து கொண்டேன், என்னை
எத்தனைபேர் குடி நீராகப் பாவித்தார்கள் என்பதை
=========================================================

Saturday 7 May 2011

கிச்சு..கிச்சு..கிச்சு.. வருதோ?:))))

வருதோ? வருதோ? நான் சிரிப்பைக் கேட்டேன்:)...


வீட்டில... எல்லோரையும் உருட்டி உருட்டி கிச்சு கிச்சு.. காட்டிச் சிரிக்க வைப்பதென்றால் எனக்கு ரொம்ப புய்க்கும்:)..., ஆனா நான் தப்பி விடுவேன்.. சரி சரி ஆவலா கதை கேட்டது போதும்:)), இங்கே அதுக்குப் பதிலா எழுத்தில “பகிடிகளாம்” படிச்சிட்டு முடிஞ்சால் சிரிங்க மக்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே உங்களுக்குத் தெரியுமா?

இல்ல சார் எனக்கு சிகரெட்டெல்லாம் பிடிக்கும் பழக்கமில்லை.
நாம நினைப்பதெல்லாம் நடக்க வெளிக்கிட்டால் என்ன ஆகும்?

தெரியல்லியே... ராஃபிக் ஜாம் ஆகிடும்:).

oo

உங்க சொந்த ஊர் எது?

அந்தளவுக்கெல்லாம் வசதி இல்ல சார், சொந்த வீடுதான் இருக்கு.

oo
Cat Funny Drives Car Driving Kitty Cats LOL Laughs Laughing icon icons emoticon emoticons animated animation animations gif gifs kitten kittens animal animals

உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிக்கிறாண்ணா என்ன அர்த்தம்?

என்ன அர்த்தம்? உன் பின்னால நான் நிற்கிறேன் என்று அர்த்தம்.

oo

கடவுள் நம்ம பாவங்களையெல்லாம் மன்னிகணும் என்றால் நாம என்ன பண்ணணும் சாமி?

பாவம் பண்ணனும்.

oo

என்னால வாயே திறக்க முடியல்ல டாக்டர்..

சரி சரி இருங்க, உங்க மனைவியை வெளியே போகச் சொல்றேன்.

oo

உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்?

வாயாலதான்.

oo

கடைக்காரர்:
"அம்மா உங்க நாய், என் கடைப் பழங்களைத் தின்னுது பாருங்க...!"

அந்தப் பெண் நாயிடம் திரும்பி:
"ஜிம்மி... பழத்தை கழுவாம சாப்பிடக் கூடாதுன்னு உனக்கு எத்தன வாட்டி சொல்லறது...?"

oo

தாத்தா!! ஏன் உங்க தலை மட்டும் வெள்ளையாவும் தாடி கருப்பாகவும் இருக்கு?

...அதுவா…அது வந்து என்னோட தாடி என் தலைமுடியை விட 20 வருஷம் இளையது.

oo

ஆசிரியர்:`காளையும் பசுவும் புல் மேய்ந்தன`, இதனைச் சரியா சொல்லு.

மாணவன்: `பசுவும் காளையும் புல் மேய்ந்தன`.

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: லேடீஸ் ஃபர்ஸ்ட் இல்லியா சார்?

oo

சர்தார் Electric கடையில்: "ஒரு ஆம்பளை Fan-ம், ஒரு பொம்பளை Fan-ம் கொடுங்க..."

கடைக்காரர்: "என்னய்யா உளர்ற? Fan-ல ஏது Ladies, Gents...?"

சர்தார்:  "அட.. Bajaj-ல ஒன்னும், Usha-ல ஒன்னும் கொடுப்பா..."

==========================================================
இடைவேளை

பேபி அதிராவும்...ம்ம்ம்..
இதுக்கு மேல ஆரும் குறுக்க கேள்வி கேய்க்கப்பிடா..:(((
==========================================================

முளைச்சு மூணு இலை விடலை.... அதுக்குள்ள என் பையன் இப்படி பண்ணிட்டானே..."

"அடடா...அப்படி என்னங்க பண்ணிட்டான்?"

"அந்த செடியை பிடுங்கிட்டான்...."

oooooooooooooooooooooooooooooooooo
இது ரொம்ப ஓவரா இல்ல????.....

கணவன் : என்னை ஒரு முட்டாள்னு எல்லார் கிட்டேயும் சொல்றதா கேள்வி பட்டேன் .

மனைவி : சாரிங்க . எனக்கு அது ஒரு ரகசியம்ன்னு தெரியாது .

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? அது மூளைக் காய்ச்சல்தான் பரவுதாம்!, அது எப்பிடி உங்களுக்கு வரும்?

oo

தாத்தாவும் பேரனும் TV பார்க்கிறார்கள்....

தாத்தா:
கரண்டைக் கண்டுபிடிச்சவன் நல்லா இருக்கோணும்.

பேரன்: ஏன் தாத்தா?

தாத்தா: கண்டுபிடிச்சிருக்காட்டில் நாங்க இப்போ இருட்டில இருந்தெல்லோ TV பார்க்கோணும்.

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
பின் இணைப்பு:
வாழ்க்கை ஒண்ணும் எம்.பி.3 பிளேயர் இல்லை,  
நமக்குப் பிடிச்சபாட்டைக் போட்டுக் கேட்கிறதுக்கு....-அது பூஸ் ரேடியோ மாதிரி, 
வாற பாட்டை நாம்தான் ரசிச்சுப்பழகோணும்..! ஓக்கை?!!!
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
 

நாங்கெல்லாம் ஆரு???
சைக்கிள் ஹப்பிலயே பிளேன் ஓட்டின ஆட்களாச்சே....
ஆர் துரத்தினாலும் ஓடித் தப்பிடுவோம்:))...


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது தத்துவம்
காரணம் இல்லாமல் யார்மீதும் அன்பு வருவதில்லை.
ஆனால், அந்தக் காரணம்தான் யாருக்கும் புரிவதில்லை...!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++