நல்வரவு_()_


Thursday 26 May 2011

ஜலீலாக்காவின் தந்தைக்காக...

இன்று காலை ஜலீலாக்காவின் தந்தை காலமாகிவிட்டார் என்ற துயரச் செய்தி, ஹூசைனம்மாவின் மெயில் மூலம் அறிந்து, மிகவும் மனம் வருந்துகிறேன்.. அவரின் ஆத்மா சாந்தியடையவும், ஜலீலாக்காவும் மற்றும் ஏனைய குடும்ப உறவுகளும் மனத் தைரியத்தோடும் அமைதியோடும் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

இப்பதிவைப் படித்துப் பாருங்கள்...

========================================================

எதையும் தாங்கும் இதயம் பெற வேண்டுகிறேன்.
 “எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்”... அறிஞர் அண்ணா
=========================================================

6 comments :

 1. ஜலீலாக்கா குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அவரது அப்பாவின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்!

  ReplyDelete
 2. அம்முலு,
  நீங்க ஜலீலாக்காவின் தலைப்பிலும் அனுதாபம் தெரிவித்து இங்கேயும் தெரிவித்திருக்கிறீங்க. அவவின் தந்தை காலமாகிவிட்டதை, நேற்றுக் காலை ஹூசைனம்மாவின் மெயில்மூலம் தெரிந்து, மனம் மிகவும் வேதனையாக இருந்தது. வேலைக்குப் போய்விட்டேன், மதியம் வந்து பார்த்தேன் எங்கும் இதைப்பற்றிய தகவல் தென்படவில்லை, அப்போ தான் என் பக்கத்தில் தலைப்புப் போட்டேன், பின்னர் ஜலீலாக்காவின் பக்கத்திலே தலைப்பு போட்டார்கள்... அதுதான் மிகவும் நல்லது, விரும்பும் அனைவரும் பிரார்த்திக்க/அனுதாபம் தெரிவிக்க வசதியாக இருக்கும்.

  ஜலீலாக்கா எப்ப மெயில் அனுப்பினாலும் அப்பாவைப்பற்றியே அதிகம் கவலைப்பட்டு அனுப்புவா, ஆனா இப்போ அவர் குணமடைந்து வருகிறார் என்ற நம்பிக்கையோடுதான் இருந்தா, எதிர்பாராவிதமாக இப்படி ஆகிவிட்டது... கடவுள் மனத் தைரியத்தை அவவுக்கு கொடுக்கட்டும். நம் கையில் எதுவும் இல்லையே.

  வரவுக்கு நன்றி அம்முலு...God bless you.

  ReplyDelete
 3. அதிரா சற்று முன்னர்தான் ஜலீலாவையும் அவரது தாயார் தங்கைகளையும் பார்த்துவிட்டு வந்தேன்.

  ReplyDelete
 4. அப்படியா ஸாதிகா அக்கா... எனக்குத் தெரியும் நீங்கள் எப்படியும் அவர்களைச் சந்திப்பீங்கள் என்று. பதிலுக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 5. ஜலீலாக்கா குடும்பத்தினருக்கு நமது தமிழ்த்தோட்டத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.அவரது அப்பாவின் ஆத்மா சாந்தியடைய தோட்டத்து உறவுகளின் பிரார்த்தனைகள்!

  ReplyDelete
 6. God bless you யூஜின்.

  சிலரின் பூக்களில் என்னால் பின்னூட்டம் போடமுடியவில்லை. சந்தனா, வானதிக்கெல்லாம் பின்னூட்டம் போடமுடியாமல் இருக்கு. name/url இப்படி இருந்தால் மட்டுமே போடமுடியுது. இருவரின் புளொக்கிலும் அது இல்லை, அதனால் பின்னூட்டமிடமுடியவில்லை.

  இன்னும் எங்கெல்லாம் இப்பிரச்சனையோ... இனிமேல்தான் தெரியும்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.