|
|
Tweet |
|
|||
இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நல்வரவு_()_
Showing posts with label அரட்டைப் பகுதி:). Show all posts
Showing posts with label அரட்டைப் பகுதி:). Show all posts
Thursday, 12 March 2020
Monday, 7 January 2019
👭பிரித்தானியாப் புயல்கள்👭 , எக் இட்டலி..
👭பிரித்தானியாப் புயல்கள்👭
“எக் இட்டலி”
என்ன இது தலைப்புக்கும், போஸ்ட்டுக்கும் சம்பந்தமே இல்லையே எனத்தானே யோசிக்கிறீங்க?:).. உங்களைக் குழப்புவதில் அலாதி பிரியம் எனக்கு:).. ஆனாலும் ஆரம்பம் கரெக்ட்டாகி:), இடையில குழப்பி.. முடிவை சரியாக் கொண்டே முடிச்சுப் போடுவன்.. அதனால அவசரப்பட்டுக் குழம்பிடாமல் என் இட்டலி செய்ய ரெடியாகுங்கோ.
நீண்ட நாளாக என் கப்கேக்கரை:) பாவிக்காமல் இருக்கிறேனே என நினைச்சு, சரி ச்சும்மா ஒரு இன்ஸ்டண்ட் பிரேக்ஃபெஸ்ட் செய்யலாம் எனும் முயற்சியில் இறங்கிறேன், நன்றாக வந்துது, ஆனா ஆஹா ஓஹோ பிரமாதம் எனச் சொல்லுமளவில் இல்லை:).. அதுக்கு காரணம், இக் கலவையினுள் வெங்காயம் மிளகாய், ஏதும் கரட், கோவா இப்படிச் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. சரி எதுவாயினும்.. நான் செய்ததைச் சொல்லிடுறேன்:)..
முட்டை -5, self raising flour - 2 மே க., ரவை- 2 மே க. மற்றும் உப்பு, மிளகு, மிளகாய்த் தூள்.
மிகுதியைப் படம் பார்த்துப் புரிஞ்சுக்கோங்கோ:)
பாருங்கோ கப் கேக் மேக்கரில் இருக்கும்போது புஸ்ஸ்ஸ்ஸ் எனப் பொங்கிப் பெரிசா வந்துது பபிள்கம்போல.. பின்பு டக்கென சுருங்கிட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
ஆஆஆ................. பொயிண்டுக்கு[இடைவேளை] வந்தாச்சூஊஊஊ.. புயலடிக்குதாமே பிரித்தானியாவில:)..
காஜா:)
தேஜா:)
காஜா:)
தேஜா:)
👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭
நியூ இயர் கெட்டுக்கெதருக்குச் செய்ததில் கொஞ்சம்:).. ஆஆஆ டோண்ட் டச்சூ:).. உள்ளே என்ன இருக்கெனக் கேட்டிடாதீங்கோ:) பிறகு, மே மே எனச் சொல்லிடப் போறேன்ன்:)..
ஹா ஹா ஹா:)
ஊசி இணைப்பு:)
இம்முறை ஊசிக்குறிப்பு இல்லை:(. அதுக்குப் பதிலாக, போனமுறை கண்டு பிடிக்க முடியாமல் போன பாட்டைக் கண்டு பிடிச்சதனால இணைக்கிறேன், தனிப்பாட்டாகக் கிடைக்கவில்லை.. இதிலிருக்கும் கடசிப் பாடல்தான் நான் சொன்ன “மாலைக் கருக்கல் வந்து மனசைக் கெடுக்குதடி மயிலே மயிலே..”, நம் உறவில் ஒரு அண்ணன் .. எப்படிப் பட்ட பாட்டாயினும் தேடித்தருவார்... அவரிடம்தான் அதிகமாக பாட்டுக் கேட்டு தேடி எடுப்பேன், ஸ்ரீராம் பல வருடமாகத் தேடும் பாட்டையும் அவரிடமும் கொடுத்த்திருந்தேன்.. ஆனா அவருக்கும் ஸ்ரீராம் கேட்கும் புளொக் போஸ்ட் லிங்தான் கிடைச்சது, பாட்டுக் கிடைக்கவில்லை:(.
24:35 செக்கனில் கிடைக்கும்:).
👭👭👭👭👭👭👭👭🙏👭👭👭👭👭👭👭
|
|
Tweet |
|
|||
Tuesday, 30 January 2018
வெள்ளையர்களும் வெளிநாட்டு வாழ்க்கையும்...
வெள்ளையர்களும் வெளிநாட்டு வாழ்க்கையும்...
ஒவ்வொரு கொமெண்ட்களிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லும்போது, இது பற்றி நிறைய சொல்ல வரும், ஆனா தொகுப்பாக எழுதலாமே என வந்து கொம்பியூட்டரை ஓன் பண்ணினால் ...ஙேஙேஙேஙே... கிட்னியில் எதுவுமில்லை, அனைத்தும் பிளாங் கா இருக்கு:).. கர்ர்ர்ர்ர்ர்ர்:).
|
|
Tweet |
|
|||
Labels:
அரட்டைப் பகுதி:)
,
அனுபவம்
Monday, 25 March 2013
ஒபாமா அங்கிள் சொல்றார்:))
அதிரா முடிக்கிறா:))
எனக்கு லெக்ஸும் ஓடல்ல காண்ட்ஸும் ஆடல்ல:).. என்ன எனக் கேட்டால், உடனடியா என்னை குடும்பத்தோடு அண்டாட்டிக்கா போய்:), பனி ஏன் உருகுதென்பதை செக் பண்ணி வரட்டாம்:)... ஸ்பெஷல் பிளேன் வருகுதெண்டவர், நான் தான் வாணாம், பிஸ்னஸ் கிளாஸில ரிக்கெட் போட்டாலே போதுமெண்டிட்டன்:) எனக்கு உந்த ஆடம்பரமெல்லாம் பிடிக்காது பாருங்கோ:).
இப்பகூட, இதை உங்களுக்கு சொல்லி பெருமையடிக்கோணும்:) எனும் நோக்கத்தில எழுதேல்லை:), அதிராவைக் காணேல்லை, காசிக்குப் போனாவோ:).. தேம்ஸ்ல கால் ஸ்லிப்பாகிட்டுதோ:) எண்டெல்லாம்ம் எண்ணி, உண்ணாமல் உறங்காமல் இருந்திடப் போறீங்கள் எனும் கவலையிலதான்ன்ன்:)) இதைச் சொல்றன்:(. உஸ்ஸ் கண்கலங்கக் கூடாது:) இந்தாங்கோ டிஷ்யூ.. கண்ணைத் துடையுங்கோ:)).. நான் புதுவருடத்தோடு வந்திடுவனாக்கும்:).
அக்கா போய் வரவா?:)
அழகே போய் வரவா?:)
தேம்ஸ் ஏ போய் வரவா?:)
முருங்கமரமே போய் வரவா?:))..
சே..சே.... சிட்டுவேஷன் சோங்காப் போட்டுப், பீலிங்ஸ்சைக் கூட்டுறதே தொழிலாப் போச்ச்ச்ச் இந்த பிபிசி ...காரருக்கு:))
| தப்பா நினைச்சிடப்பூடா ஆரும்:) அது, நித்திரைத் தூக்கத்தில:), வாய்மாறி, பூஸைப்பார்த்து ”டோக்” எண்டிட்டார்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) |
என்ன இது கன காலமா காணாமல் போனமாதிரி இருந்துபோட்டு இப்போ வந்து தலைப்பே வில்லங்கமாப் போடுறாவே என ஓசிக்கிறீங்களோ?:)).. அது ஒன்றுமில்லை.. அண்டாட்டிக்காவில பனி எல்லாம், இருந்தாப்போல உருகி வடியுதாம்:)... எத்தனையோ விஞ்ஞானிகளை அனுப்பி செக் பண்ணியும் அது ஏனெனக் கண்டு பிடிக்க முடியவில்லையாம்ம்:))..
அதுதான், நேற்றுக் காலை... நடுச்சாமம் ஏழு மணிக்கு ஒரு கோல் ட்ரிங் பண்ணிச்சுது:)... நான் நல்ல ஆழ்ந்த உறக்கம்.. பதறி அடிச்சு முழிச்சு ஃபோனைத் தூக்கி ஹலோ எண்டதும்தான்.. மற்ற பக்கம் ஒபாமா அங்கிள் அமெரிக்காவில இருந்து மோனிங் சொல்றார்:))..
இப்பகூட, இதை உங்களுக்கு சொல்லி பெருமையடிக்கோணும்:) எனும் நோக்கத்தில எழுதேல்லை:), அதிராவைக் காணேல்லை, காசிக்குப் போனாவோ:).. தேம்ஸ்ல கால் ஸ்லிப்பாகிட்டுதோ:) எண்டெல்லாம்ம் எண்ணி, உண்ணாமல் உறங்காமல் இருந்திடப் போறீங்கள் எனும் கவலையிலதான்ன்ன்:)) இதைச் சொல்றன்:(. உஸ்ஸ் கண்கலங்கக் கூடாது:) இந்தாங்கோ டிஷ்யூ.. கண்ணைத் துடையுங்கோ:)).. நான் புதுவருடத்தோடு வந்திடுவனாக்கும்:).
அக்கா போய் வரவா?:)
அழகே போய் வரவா?:)
தேம்ஸ் ஏ போய் வரவா?:)
முருங்கமரமே போய் வரவா?:))..
சே..சே.... சிட்டுவேஷன் சோங்காப் போட்டுப், பீலிங்ஸ்சைக் கூட்டுறதே தொழிலாப் போச்ச்ச்ச் இந்த பிபிசி ...காரருக்கு:))
===============================================
|
|
Tweet |
|
|||
Labels:
அரட்டைப் பகுதி:)
Friday, 20 January 2012
எங்கிட்டயேவா?:)
நாங்களும் செய்திட்டமில்ல...:)
![]() |
| எதுக்கும், ஒரு சேஃப்ரிக்கு இங்கின இருப்பம்:) |
பொறுமையோடு ஒவ்வொன்றாக உற்றுப் பாருங்கோ... விரும்பினால் கொஞ்சம் மோர்க் கப், கையில எடுத்துக்கொள்ளவும்:)).
ஆர்வமுள்ளவர்கள்,ஒவ்வொரு படத்துக்கு மேலும் கேர்ஸரை வைத்து கிளிக் பணிப் பெரிதாக்கிப் பாருங்கோ, அப்போதான் அதன் உண்மை அழகு தெரியும்.
![]() |
| சே..சே... பேபி அதிரா கையை எடுங்கோ, குழப்படி விடப்பூடாது:) |
(1)

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(2)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(3)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(4)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(5)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(6)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(7)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(8)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(9)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(10)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
HAPPY BIRTHDAY FOR ALL “எலீஸ்ஸ்ஸ்”:)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நானேதான் கார்ட்ஸ் எல்லாம் செய்தேன் எப்பூடி? சூப்பராக இருக்கோ?:))..
சரி சரி இனித்தான் நீங்கள் கொஞ்சம் அதிகம் பொறுமையைக் கடைப்பிடிக்கோணும்... சொந்தக் கதை உண்மைக்கதையைப் பொறுமையாக் கேட்கோணும், முழுவதையும் படிச்சால், கோபமே வராது உங்களுக்கு OKAY?:).
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் முன்பும் சொல்லியிருக்கிறேன், இங்கு ஒரு வயதான லேடி இருக்கிறா, அவவின் பொழுது போக்கே, இப்படி கார்ட்ஸ் செய்து, Charity க்கு கொடுப்பா.. அப்போ அதை எல்லாம் ஒரு நாளைக்குப் படமெடுத்துப் போட வேண்டும் என நீண்ட நாள் ஆசை, நேற்றுத்தான் படமெடுக்க முடிஞ்சுது.. அஞ்சுவின் கார்ட்ஸ் பார்த்ததிலிருந்து, எப்படியாவது இவற்றையும் படம் எடுத்துப் போட வேண்டும் எனும் ஆவல் அதிகமாயிட்டுது.
இவற்றை எல்லாம் ஏன் போட்டுக் காட்டுகிறேன் எனில், நம் நாட்டில் வயதானோருக்கு, இப்படிப் பொழுதைப் போக்கும் ஆர்வம் குறைவு, இப்போ அனைத்துமே கடுகதியாகிவிட்ட காலத்தில், எம் நாட்டில் வயதானோர்..புலம்புகிறார்கள், பிள்ளைகள் தம்மோடிருந்து கதைப்பதில்லை, பேரப்பிள்ளைகள் வந்து கதைகள் கேட்பதில்லை, காவோலை ஆகிவிட்டமையால் யாரும் தேடுவதில்லை, வயசானால் ஒரு மரியாதையே இல்லை இப்படியெல்லாம். அதில் தப்பில்லை, ஆனா எந்நேரமும் எல்லோரும் சுற்றிவர இருந்து கதைத்துத்தான் பொழுதைப் போக்காட்ட வேண்டும் என நினைப்பது தவறுதானே.
வெளி நாடுகளில், வயதானோர் தனியேதான் இருக்கிறார்கள், அப்போ தமக்கு உடம்பு முடியும்வரை, இப்படியான கை வேலைகள், நிட்டிங், தையல்.. இப்படிச் செய்து, விற்க முடியாதுவிட்டாலும், இப்படி இலவசமாகக் கொடுத்து, புண்ணியமும் தேடுகிறார்கள், பொழுதும் இனிமையாகக் கழிகிறது.
அதனால, நான் சொல்ல வருவது என்னவென்றால், போன காலம் போகட்டும், நம் சந்ததியாவது, இப்படியானவற்றை தெரிந்து வைத்திருந்தால், வயதான காலத்தில் பொழுதைப் போக்கலாமெல்லொ?... இப்போ கோபம் தணிஞ்சிருக்குமே..
======================================================
குட்டி இணைப்பு:
உஸ்ஸ்ஸ் எல்லோரும் கூஊஊஊஊஊஊலாயிட்டினம்:)
========================================================
|
|
Tweet |
|
|||
Labels:
அரட்டைப் பகுதி:)
Thursday, 17 November 2011
நாஆஆஆன் உன்னை அழைக்கவில்லை:)
இன்று ஒரு பகிடி ...:)) என் சொந்தக்கதை சோகக்கதையைக் கேளுங்கோ:))).
பார்ஷல் போஸ்ட் பண்ண வேண்டியிருந்தது. ஸ்கூலுக்குப் போகும்போது போஸ்ட் பண்ணிடலாம் என இருந்தேன். வேலை முடித்து வெளிக்கிட, நேரம் மட்டுமட்டாக இருந்துது. 25 நிமிடங்களே இருந்தன ஸ்கூல் முடிய.
கொஞ்சம் விரைவாகப் போனால் நேரம் போதும், ஸ்கூலுக்கு கொஞ்சம் தள்ளி போஸ்ட் ஓபிஸ், அங்குபோய் மீண்டும் திரும்பி வர வேண்டும் ஸ்கூலுக்கு.
சரி இன்று எப்படியாவது பார்ஷலை அனுப்பிடோணும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டேன்:) (நான் தான் சொன்னேனே, எதையாவது நினைத்தால், அதை உடனே முடிக்காதுவிட்டால், எனக்கு ஏதோபோல் இருக்கும்).
வழியில் ரோட் வேலை நடக்கிறது. அப்போ ஒரு பக்கம் கார்கள் பார்க் பண்ணியிருக்கு, மறுபக்கம் ரோட் திருத்தும் மெஷின்கள் பார்க் பண்ணி வேலை நடக்குது...
ரோட்டின் நடுவிலே உள்ள இடைவெளியால் போக வேண்டும். அது போதும் போகலாம். ஆனா எதிரே ஒரு பெரிய கார்.. அதில் ஒரு நல்ல வயதானவதான் ரைவர்.. அவ அந்த இடைவெளியால் எடுக்க முற்பட்டுவிட்டு, பயத்தில போலும், முன் பக்கத்தை மட்டும் கரைக்கு திருப்பி விட்டு, பின் பகுதி நடு ரோட்டிலே நிற்குது கார். எதிரே வந்து, கரையில் நின்ற என்னை, வா..வா.. என லைட் போட்டா, அவவின் பின்னாலும் பல கார்கள், என் பின்னாலும் பல கார்கள்.
இங்கே ஒரு முறை இருக்கிறது, கார் லைட்டை அடித்தால், நீங்கள் முதலில் காரை எடுங்கள், அல்லது வழி விடுகிறேன் போங்கள் என அர்த்தம்.
ஆனா அவதான் வர முடியும் நான் போக முடியாது, அப்போ நான் லைட் அடித்தேன் நீ வா என... அவ கையைக் காட்டினா நீ வா என.. கிழிஞ்சுது போ என எண்ணிக்கொண்டு, சரி அவ கூப்பிடுறா, வயதானவ, நான் கிட்டப்போவம் என, ஒரு மாதிரி வெட்டி எடுத்தேன், ஆனா அங்கால போக முடியாது....
அவவின் கார் பின்பக்கம் புளொக் பண்ணிச்சுது, அவவோ அசையாமல் நிற்கிறா, அப்போ நான் விண்டோவைத் திறந்து மரியாதையாகச் சொன்னேன், பிளீஸ் கொஞ்சம் முன்னுக்கு எடுங்கோ என, அப்போ அவ சொன்னா, நான் பேவ்மண்ட்டில எல்லாம் ஏத்த மாட்டேன் என.... வேலில போன ஓணானை, வீட்டுக்குள் எடுத்துவிட்ட கதையாக என்னைக் கூப்பிட்டுப்போட்டு, இப்படிச் சொன்னால்... நான் என்ன பண்ணுவது..
நானோ என் கணவரோ, கார் ரயர் எல்லாம் பார்க்க மாட்டோம், பேவ்மண்டில் ஏத்தோணும் என்றாலும், கல்லோ முள்ளோ ரயர் போனால் மாத்தலாம், முதலில் பிரச்சனை தீரட்டும் என்றுதான் முடிவெடுப்போம்.... ஆனா இது எப்படியும் 70 வயதிருக்கும், சரியான மேக்கப்பும் போட்டிருக்கிறா, காரும் நல்ல புதுக்கார், இங்குள்ள வயசானோருக்கு, நல்ல பெரிய ரோட்டில் நேராக போய் பார்க் பண்ணித் திரும்புவினம், ஆனா இப்படி ஏதும் இடக்கு முடக்கென்றால், அவர்களால முடியாது, ரிவேசும் பண்ணக் கஸ்டப்படுவார்கள்... அதனால அப்படியே அசையாமல் நிற்பார்கள், நாம்தான் வெட்டி எடுக்க வேண்டும்.... அதுதான் பிரச்சனையே..
என்னாலும் கோபிக்க முடியவில்லை, ஆனா ஒருவித விசராகிட்டேன், என் பக்கம் பேவ்மண்டும் இல்லை, இருந்திருந்தால் ஏத்தியிருப்பேன்..பின்பு மீண்டும் விண்டோவைத் திறந்து சொன்னேன், பிளீஸ் கொஞ்சம் அப்போ, பின்னால எடுக்கிறீங்களோ என, பின்னால் நின்ற காரெல்லாம் ரிவேஸ் எடுத்து, இடம் விட்டுவிட்டார்கள், இவவின் கார் boot மட்டும் நடு ரோட்டில், அப்போ அவ சொன்னா.. என்ன ஜோக் பண்ணுகிறாயா? என்னால் பின்னுக்குப் போக முடியாது என்று...., சும்மா நிண்ட என்னை அவதானே வா வா எனக் கூப்பிட்டா, நான் நம்பியெல்லோ வந்தனான்... என மனதில எண்ணினேன், அதன்பின் மெதுமெதுவாக வெட்டி வெட்டிப் பின்னுக்கு எடுத்தா.... நான் கடந்து போய் விட்டேன்...
“இதுவும் கடந்து போகும்” என மனதில் எண்ணிக்கொண்டேன்... ஆனாலும் உடம்பு ஒருவித டென்ஷனாகிவிட்டது, மனதில் ஒரு அரியண்டமான உணர்வு ஏற்பட்டது, கோபமல்ல. அதில் பத்து நிமிடம் போய் விட்டது.
பறவாயில்லை, போஸ்ட் ஓபிஷில் பார்க்கிங் இருக்கோணும் ஆண்டவா.. என எண்ணியவாறு விரைந்து போனேன், அங்கு பக்கத்திலே பொலீஸ் ஸ்டேஷன் இருக்கு, அதன் முன்னால்தான் சில நேரம் பார்க்கிங் கிடைக்கும் . அதில் சில பார்க்கிங் போலீசுக்கென ரிசேவ் பண்ணப்பட்டிருக்கும். அப்போ நினைத்தேன் பார்க்கிங் கிடைத்தால் இன்று, கிடைக்காதுவிட்டால், இன்று போய் நாளை வருவோம்.... இனி என்ன செய்வது என. ஆனா அங்கு ஒரு பார்க்கிங் இருந்துது. அப்பாடா என பார்க் பண்ணினேன்.
நல்ல மழை ஊஊ எனக் காத்தோடு பெய்து கொண்டிருந்தது. தொப்பியெல்லாம் போட்டு, கீழே இறங்கி பார்ஷல்களையும் நனைந்திடாமல் நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக்கொண்டு, விறுவிறு என போஸ்ட் ஒபீஷை நோக்கி நடந்தேன்... அப்போ பின்னாலிருந்து பீம்...பீஈஈஈஈஈம் என கார்க் கோன் சத்தம் கேட்டுது.
இங்கு யாருமே கோன் பண்ணுவதில்லை, அப்படிப் பண்ணுவதாயின், ஆரையும் அவசரமாகக் கூப்பிட, அல்லது ஆராவது தவறு செய்தால் மட்டுமே. அப்போ கோன் சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன், என் ஜீப்பின் பக்கத்திலே போலீஸ் கார், அவர்கள்தான் கோன் பண்ணினார்கள்... எனக்கு ஏற்கனவே இருந்த டென்ஷனோடு, இன்னும் டென்ஷனாகிட்டேன். தொட்டில் பழக்கம்:), இப்பவும் போலீஸ், ஆமியைக் கண்டால் மனம் பதட்டமாகிவிடுது.
அப்போ, நான் அவர்களிடத்தில் பார்க் பண்ணிவிட்டேனோ, இல்லையே, சரியாகத்தானே பார்க்பண்ணினேன்... என்னில் எந்தப் பிழையும் இல்லையே, அப்போ ஏன் கூப்பிடுகிறார்கள், சரி புதுசாக ஏதும் சட்டம் வந்திட்டுதோ, அதில் பார்க் பண்ணப்படாதென, எனக்குத் தெரியாதுதானே, தெரிந்து செய்தால்தான் பயப்பட வேணும்.. என எண்ணியபடி திரும்ப நடந்து கிட்டப் போனேன், போலீஸ்காரர்கள், வானம் பார்ப்பவர்கள்போல இருந்தார்கள்.... கிட்டப் போய்க் கேட்டேன்... என்னையோ கூப்பிட்டீங்கள் என...
அப்போதுதான் திடுக்கிட்டவர்களாக... நான் உன்னை அழைக்கவில்லை....... என்றார்கள்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))). (பயந்திடாதீங்க... வெள்ளையர்கள்தான்:)) இவ்வளாத்துக்கும் 20 நிமிடம் செலவாகியிருக்கும், துன்பம் வரும்போது சிரிங்க... என அடிக்கடி நான் மனதில் எண்ணுவதுண்டு, அப்படித்தான் நினைத்து மனதில் ஹா..ஹா..ஹா.. என சிரித்துக்கொண்டே...
மீண்டும் போஸ்ட் ஓபிஷை நோக்கி ஓடினேன்.... நல்லவேளை அங்கு கியூ இருக்கவில்லை. பார்ஷல்களைப் போஸ்ட் பண்ணிவிட்டு, ஸ்கூல் வாசலுக்கு வரவும் பெல் அடிக்கவும் நேரம் சரியாக இருந்தது.
இவ்ளோ சிரமப்பட்டு அனுப்பிய பார்ஷல்கள் நேர காலத்தோடு, உரிய இடத்தில் கிடைத்திட வேண்டுமென, வேண்டச்சொல்லி நீங்களையும்:) கேட்டுக்கொள்கிறேன்.
இதைப் பின்னூட்டமாகப் போட நினைத்தே ரைப் பண்ணினேன்... ஆனா நீஈஈஈஈஈண்டு விட்டதால்... இதுக்கடிச்சது யோகம்... ஒரு தலைப்புப்போடக் கொடுத்து வச்சிருக்கு:))).
ஊசி இணைப்பு:
இதுதான் வழி எனத் தெரிந்தால்,
முள்ளிலேயும் நடந்துவிட முடியும் - ஆனால்
எது வழி எனத் தெரியாதபோது,
என்ன செய்ய முடியும்?..
.....கண்ண......தாசன்.
(((((((((((((((((((((((((((((((((*******************)))))))))))))))))))))))))))))))))
|
|
Tweet |
|
|||
Labels:
அரட்டைப் பகுதி:)
Thursday, 8 September 2011
அதிராவைக் காப்பாத்துங்கோ:)))
நடு ரோட்டில நிற்கிறா... லொறி கிறி அடிச்சிடப்போகுது மக்கள்ஸ்ஸ்ஸ்... ஓடிவாங்கோ வந்து காப்பாத்துங்கோ...:)))
காப்பாத்தினால் சந்தோஷம், காப்பாத்தாட்டில் அதைவிடச் சந்தோஷம்...:)))).
முன் பதிவு நீண்டு விட்டதாலதான் இது, அரட்டைப் பதிவு, எனக்கு வீட்டில் உறவினர் என்பதால் நேரமில்லை பதிவெழுத. அதனால இது விரும்புபவர்கள் வந்து கதைத்து, திட்டிப் போகலாமே:).... நானும் நேரம் கிடைக்கும்போது வந்து ரிலாக்ஸ் பண்ணுவேன்.
இல்ல உங்களுக்கும் ரைம் இல்லையென்றால் ஓக்கே, கடிக்கவெல்லாம் மாட்டேன், நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)), பார்த்தால் தெரியல்ல?:)))))).
இது இம்முறைதான் ஒரு வீட்டில் பார்த்தேன் பேப்பிள் ரோஜா..... இப்படி கலரில் எங்காவது கண்டனீங்களோ? இங்கு ரோஜா என்றால் தேடுவாரில்லாமல் பல வர்ணக் கலர்களில், வடிவங்களில் பூத்துக் குலுங்குது, ஆனால் இக்கலரை நான் எங்கேயும் கண்டதேயில்லை... பார்த்தவுடன் படம் எடுத்திட்டேன்... நீங்களும் என்சோய்ய்ய்ய்ய்:)).
=====================================================
=====================================================
|
|
Tweet |
|
|||
Labels:
அரட்டைப் பகுதி:)
Subscribe to:
Posts
(
Atom
)










































