நல்வரவு_()_


Tuesday, 30 January 2018

வெள்ளையர்களும் வெளிநாட்டு வாழ்க்கையும்...

வ்வொரு கொமெண்ட்களிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லும்போது, இது பற்றி நிறைய சொல்ல வரும், ஆனா தொகுப்பாக எழுதலாமே என வந்து கொம்பியூட்டரை ஓன் பண்ணினால் ...ஙேஙேஙேஙே... கிட்னியில் எதுவுமில்லை, அனைத்தும் பிளாங் கா இருக்கு:).. கர்ர்ர்ர்ர்ர்ர்:).
னாலும் பாருங்கோ களம் குதிச்சிட்டால் என்னமோ பண்ணி எழுதி முடிச்சிடுவேன்:)..

வெளிநாடுகளைப் பொறுத்தவரை, பெரும்பாலான மெயின் சிட்டிகளில் அந்நாட்டு வெள்ளைகள் இப்போதெல்லாம் இல்லை, அப்படியான இடங்களில் வெளிநாட்டில் இருந்து வந்த மக்களே முட்டி வழிகின்றனர், அதனால வெள்ளையர்களின் கலாச்சாரத்தை அங்கு காண முடியாது. எல்லாம் கலந்து கட்டியே இருக்கும்.

நாம் இருப்பது கலப்படமே இல்லாத ஸ்கொட்டிஸ் வாழும் ஏரியா, இங்கு இவர்களின் உண்மையான வாழ்க்கை முறைகளைப் பார்க்க முடிகிறது. ஆனா இந்த வெள்ளையர்களையும் நம்மவர்கள் கெடுத்துப் போடுவார்கள். இங்கு, எதுக்குப் போனாலும் கியூவில் நின்றிடுவார்கள், முட்டி மோதுவதெல்லாம் இல்லவே இல்லை, ஆமி, பொலிஸ் வந்தாலும் நம் பின்னே கியூவில் நின்று பொறுமையாக பொருட்கள் வாங்கிச் செல்வர்.

ஒரு தடவை தூர இருக்கும் நம்மவர்களின் தமிழ்க் கடை ஒன்றுக்குப் போனோம், அங்கு 5,6 பேர் கியூவில் நின்றோம் பில் போட, அதன் பின்னர் ஒரு வெள்ளை பொலீஸ்காரரும் வந்து கியூவில் நின்றார், அதைப் பார்த்த கஷியர்,.... கம் சேர் கம் கம் .. என அழைத்தார், அப்பொலிஸ்காரர் மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டே முன்னால் போய் பொருளை பில் போட்டுச் சென்றார்.... இதுதான்.. நம்மவர்கள் கெடுத்துப் போடுவினம் என்றேன்.

இந்த வெள்ளையர்களில், முக்கியமாக எனக்குப் பிடிச்ச ஒரு குணம், அது என்னவெனில், ஒரே நேரத்தில் இருவரோடு வாழ்க்கை நடத்தி எங்கும் காணவில்லை. குடும்பமாக இருக்கும்போது, இருவரில் ஒருவருக்கு- வெளியே இன்னொருவரோடு தொடர்பு ஏற்பட்டு விட்டதெனில், முதல் வேலையாக பிரிந்திடுவார்கள், ஒன்றை வைத்துக் கொண்டு இன்னொன்றோடு உறவில் இருக்க மாட்டார்கள். ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருப்பர்.

அதே நேரம் இவர்கள் நினைப்பது, வாழ்க்கை என்பது ஒரு முறைதான், அதை மனதுக்கு பிடிச்சதாக வாழ்ந்திடோணும் என்பதே. அடிபிடி சண்டைப் பிடித்துக் கொண்டு இருக்க மாட்டினம், உடனே விலத்தி விடுவார்கள். இன்னொன்று எதுவாயினும் ஒளிவு மறைவின்றி வாழ்வார்கள். ஒன்றை விட்டு இன்னொருவரோடு வாழ்வதாயினும், பப்ளிக்கில் சொல்லி வாழ்வார்கள் ஒளிவு மறைவெல்லாம் இல்லை.

நம்மவர்களில்தான், ஊருக்காக பெயருக்காக, மனைவி, கணவன் எனக்கூறிக்கொண்டு பொதுக் கொண்டாட்டங்களுக்குச் சென்று சைன் வைப்பார்கள், ஆனா மறைவாக இன்னொருவரோடு தொடர்பிருக்கும்.. இது எவ்வளவு கொடுமையான, கேவலமான விசயம், மனதுக்கு பிடிக்கவில்லையாயின், பிரிந்து விட்டு, பின்பு மனம் விரும்பியவரோடு வாழலாமே ஒளிவு மறைவு எதுக்கு?.. இங்குதான் நம்மவர்களுக்கு கெளரவம் முக்கியம்..
ஆனா இதுபற்றி நான் ஒருதடவை என் பெட்டர் ஃபுல்:)[இப்பூடிச் சொல்லிட்டால் நெல்லைத்தமிழன் குரொஸ் குவெஷன் கேய்க்க மாட்டார்:)] உடன் டிஸ்கஸ் பண்ணிய இடத்தில் சொன்னார், நம் நாட்டுச் சட்டங்கள் அப்படி, அதாவது டிவோஸ் என்பது எடுக்கவே முடியாத ஒன்று, அதனாலேயே வேறு வழியின்றி கள்ளத் தொடர்புகள் அதிகமாகின்றன என.. இதுவும் ஒரு விதத்தில் சரியாக இருக்கலாம், ஆனா, நாடு மாறி, வெளிநாட்டில் வாழும் நம்மவர்களின் மைண்ட் செட்டப்பும் இப்படித்தானே இருக்கிறது.. இது எவ்வளவு தப்பானது, பிடிக்கவில்லையாயின், டிவோஸ் எடுத்துவிட்டு, மனம் விரும்பியவரோடு வாழ வேண்டும் அதை விட்டு விட்டு கெளரம், கலாச்சாரம் எனச் சொல்லி, இன்னொருவரின் வாழ்க்கையையும் சீரளிப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இந்த விசயத்தில் வெள்ளைக்காரர் வெள்ளைக்காரர்தான்.

அடுத்து பிள்ளைகள் விசயத்தில், 16 வயசு வரை மிக பத்திரமாக கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்ப்பார்கள், 16-18 க்குள் அவர்கள் தனியே போய் விடுவார்கள், சில பெற்றோர் வேலை கிடைக்கும்வரை வீட்டில் வைத்திருப்பார்கள் ஆனா, தன் தேவைகளுக்கு தானேதான் உழைக்க வேண்டும். வசதி இருப்போர் எப்பவும் சப்போர்ட்டாக இருப்பார்கள் ஆனா கட்டாயமில்லை.

அதேநேரம், பிள்ளையைப் நல்லபடி படிப்பிச்சு, பிள்ளையும் நல்ல தொழிலில் வந்திட்டால், அப்போ இருக்கும் கேள் ஃபிரெண்ட்டுக்குதான் வெள்ளி துலாவில ஏறின கதையாக இருக்கும்:), அந்நேரம் பெற்றொரைத்தான் கவனிக்கோணும் எனும் தொல்லையே இவர்களுக்கு இருக்காது, கேள் ஃபிரெண்டோடு உலகம் சுற்றி வருவார்கள். பெற்றோரும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

இன்னொரு முறையும் இங்கு இருக்கிறது, பிள்ளைகள் 16 வயசுக்கு மேல் வந்து விட்டால், பெற்றோர் இருவரும் தனியே சுற்றுலா செல்வார்கள், பின்பு தம் நட்புக்களோடு[பெரும்பாலும் கணவனை விட மனைவிமாரே தம் நண்பிகளோடு செல்வதைப் பார்த்திருக்கிறேன்] தனித்தனியே.. அல்லது சகோதரம் தாயுடன் தனித்தனியே, இடையே பிள்ளைகளோடு குடும்பமாக.. இப்படி பலவகை சுற்றுலா இவர்களுக்கிருக்கும்.

இதேபோல, இவர்கள் மனம் விட்டுப் பேசுவதாயின், அல்லது ஒரு துக்கம் நடந்த வீடாயின், அல்லது ஒரு றிலாக்ஸ் க்காக எதுவாயினும், உடனே கஃபேக்கு வா எனத்தான் அழைத்துப் போய் அங்கு மணிக்கணக்காக ஒரு கப் ரீயை வைத்து உறிஞ்சீஈஈஈ உரிஞ்சிக் குடித்து பேசி வருவார்கள்.

இதிலும் கணவனும் மனைவியும் தனியே போவது, பின்பு தனித்தனியே தம் நட்புக்களோடு போவது இப்படி உண்டு. என்னை விட்டுப்போட்டுப் போய் விட்டாயே எனும் பேதமெல்லாம் இல்லை:).

இங்கு நான் வந்த புதிதில், ஒரு மோலுக்குப் போனோம், அங்கு ஒரு ரெஸ்ரோரண்டில் ஒரு ஆணும் பெண்ணுமாக கதைத்துக் கதைத்து ரீ குடிச்சுக் கொண்டிருந்தார்கள், அதில் அப்பெண் என் கணவரோடு வேலை பார்ப்பவ, அப்போ என்னை அவவுக்கு அறிமுகப்படுத்திக் கதைத்து விட்டு வந்தோம், பின்னர் நான் கேட்டேன் அவரின் கணவர்தானே அது என, இல்லை அது ஃபிரெண்ட் உடன் வந்திருக்கிறா என்றார்.

இங்கு இருவர் ஜோடியாகப் போனால்... அது அவர்களாகச் சொன்னால் தவிர நாம் எதுவும் கேட்டு விடக் கூடாது.. தப்பாகிடும், ஏனெனில்.. இங்கே ஆணும் பெண்ணும் சேர்ந்து போவார்கள் நல்ல நட்பாக.. அது மை  “ஃபிரெண்ட்” என்பார்கள்.

காதலிக்கத் தொடங்கிட்டால், இது மை  “கேள் பிரெண்ட்”,  “போய் ஃபிரெண்ட்” என்பார்கள்.. இப்படிச் சொன்னால் லவ்வேர்ஸ் என அர்த்தமாம்:).
அதையும் தாண்டி, பாட்னேர்ஸ் என ஒரு முறை இருக்கிறது, இங்கு ரெஜிஸ்டர் பண்ணுவதைப்போல பாட்னெர் பதிவு செய்யலாம், அப்படிச் செய்தால் Tax எல்லாம் கட்ட வரும்.. கொஞ்சம் பலமான வாழ்வுக்குள் நுழைந்து விட்டார்கள் என அர்த்தம், இப்படியே குழந்தைகளையும் பெறுவார்கள்.. இம்முறையில் பிரிய நேரிட்டால், ஜீவனாம்சம் கொடுக்கும் பிரச்சனை எதுவும் இருக்காது என நினைக்கிறேன், அதனாலேயே அதிகமானோர் இப்படி முறையில் வாழ்கின்றனர்...

அடுத்ததே திருமணம் முடித்து வாழ்தல்.

இன்னொன்று நம்மவர்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது, வெள்ளையர்கள் எனில் எதுக்கும் எடுபடுவார்கள், அவர்களோடு சீண்டி விளையாடலாம் எனும் எண்ணம்... அதாவது மலிவாக எடை போட்டு வைத்தல். அது மிகப் பெரிய தவறு. இவர்களில் ஒரு பழக்கம் இருக்கு, நல்ல நட்பாக பழகும்போது, கட்டிப் பிடிப்பார்கள், தடவிப் பேசுவார்கள், தொட்டுப் பேசுவார்கள், அருகில் முட்டியபடி இருப்பார்கள்... ஆனால் மனம் சுத்தமாக இருக்கும்.

கேரளாவில் இருந்து இங்கு வந்த ஒருவர், என் பெட்டர் ஃபுல்:) உடன் வேலை பார்த்தவர், நல்லவர்தான், அவர் இங்கு வந்த புதிதில் இப்படி தப்பாக நினைச்சிட்டார் தன்னோடு வேர்க் பண்ணும் பெண்களை, அதாவது தடவிப்பேசுகிறார்களே.. தொட்டுப் பேசுகிறார்களே.. அருகில் இருக்கிறார்களே என எண்ணி... எல்லை மீறி என்னமோ பண்ணி விட்டார், உடனே அவ பொலீஸ் கேஸ் ஆக்கிப்போட்டா... ஒரு வருடமாக கோட் ..கேஸ் என அலைந்து திரிஞ்சார்.. அதனையும் இனொரு இங்கத்தைய ஸ்கொட்டிஸ் ஒருவரே தலைமை தாங்கி கேஸ் இலிருந்து விடுவித்துக் குடுத்தார். வேலை பறி போகவில்லை. ரகசியமாக முடித்து விட்டார்கள் பிரச்சனையை.
இன்னொன்று, நம் நாட்டில்தான் ஒரு முறை இருக்கு, அம்மாவின் பெண் சகோதரங்கள், மற்றும் அப்பாவின் ஆண் சகோதரர்கள் .. அவர்களின் பிள்ளைகளை நாம் திருமணம் முடிக்கக்கூடாது, அது நமக்கு சகோதரமாகும். ஆனா அம்மாவின் ஆண் சகோதரம், அப்பாவின் பெண் சகோதரத்தின் பிள்ளைகளை முடிக்கலாம் என... இந்த லொஜிக் எப்பவும் எனக்கு புரிவதே இல்லை... அனைவரும் ஒரு தாய் வயிற்றில் பிறப்போர் தானே, அப்போ ஆண் பெண் என.. என்ன வேறுபாடு... 

இங்கு வெள்ளையர்கள் அப்படித்தான், அப்பாவின் எந்தச் சகோதரமாயினும்.. [ஆண் + பெண்], அதே போல அம்மா வின் எந்தச் சகோதரமாயினும்... அவர்களின் பிள்ளைகளை கசின் என ஒரு வார்த்தையில் சொல்வார்கள்.. எல்லா கசின்ஸ் ஐயும் சகோதரமாகவே எண்ணுவார்கள்... இதுதான் எனக்கும் சரி எனவே தோணுது.. உங்களுக்கு ஏதும் பல்ப் எரியுதோ?:) இதுபற்றி?:)...

சரி சரி அடிக்கடி நெல்லைத்தமிழனும், கில்லர்ஜி யும் இதுபற்றி ஆர்வம் காட்டியதாலேயே, எனக்குத் தெரிஞ்சதை எழுதத் தொடங்கினேன்... இங்கின விடுபட்டதை இனி என் செக்:) தொடர்வா:)) என நெம்புறேன்..!.

ஊசிச்சிரிப்பு:)
“என் மனைவியை விட, அவட புடவைதான் எனக்கு அதிகம் மதிப்பு தருது:),

எப்படி?:)..

பீரோவைத் திறந்தவுடனேயே என் காலில் விழுந்திடுது:)”... ஹா ஹா ஹா..

ஊசி இணைப்பு:
________________________()_______________________

112 comments :

  1. /நாம் இருப்பது கலப்படமே இல்லாத ஸ்கொட்டிஸ் வாழும் ஏரியா/ ஸ் கோட்டிஷ் என்றவுடன் அவர்களைப்பற்றியசில ஜோக்குகளே நினைவுக்கு வருகிறது ஸ்காட் லாந்துகாரர்கள் கஞ்சத்தனம் மிக்கவர்களாம் ஒரு கதை அரபு நாட்டில் ஒருவருக்கு இதயசிகிச்சை செய்ய வேண்டி இருந்ததாம் அவருக்குண்டான ரத்தம் அபூர்வ வகையை சேர்ந்ததாம் எங்கும் கிடைக்காத போது ஒரு ஸ்காட்லாந்து கரரிடம் அந்தவகை ரத்தமிருந்தது தெரிய வந்ததாம் வேண்டுதல் வைத்தபோது அவரும் ரத்தம் தானம் செய்தாராம் சிகிச்சை வெற்றி கரமாகமுடிந்ததும் அந்த அரபி ஸ்காட்லாந்து காரருக்கு ஒரு லடசம் டாலருடன் ஒரு பிஎம் டபிள்யு காரும் பரிசாகக் கொடுத்தாராம் துரடிர்ஷ்டவசமாக அடுத்தும் ஒரு சிகிச்சையின் போது அதே ஸ்காட்லாந்துகாரரிடம் வேண்டுதல் வைக்கப் பட்டது அவரும்மிக்க எதிர்பார்ப்போடு ரத்டம் கொடுத்தாராம் இம்முறை அந்த அரபி இவருக்கு ஒரு பாக்கெட் சாக்கலேட் மட்டும் கொடுத்தாராம் ஸ்காட்லாந்துகாரருக்கு பொறுக்க முடியாமல் கேட்டு விட்டாராம் போன தடவை கொடுத்தபரிசுகள் போல் இம்முறையும் எதிர்பார்த்தேன் என்றாராம் அதற்கு அந்த அரபி இப்போது என் உடலில் ஸ்காட்டிஷ் ரத்தம் அல்லவா ஓடுகிறது என்றாராம்
    பதிவைப் போல் பின்னூட்டமும் நீளமாகி விட்டதோ

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. இம்முறை 1ஸ்ட்டாஆஆஆ வந்திட்டீங்க:)...

      கதை நல்ல நகைச்சுவையாக இருக்கு... நகைச்சுவைக்கு சொல்வதெல்லாம் உண்மை ஆகிடுமோ?:)... தெரியல்ல, அப்படி ஸ்பெஷலா ஸ்கொட்டிஸ் கஞ்சல்தனம் உடையோர் என நாம் கேள்விப்படவில்லை.

      நாம் பார்த்த, பழகிய விதத்தில் மிக ஹப்பியானவர்கள் எப்பவும் சிரிச்சுக்கொண்டு திரிவார்கள்... நட்புக்கள் எல்லாம் நன்கு பணம் செலவு செய்வார்கள். இதுக்கு மேல தெரியவில்லை,.

      மிக்க நன்றி வருகைக்கும், நகைச்சுவைக் கதையை ரைப் பண்ணிப் போட்டமைக்கும்.

      Delete
  2. அப்பாவின் பெண் சகோதரத்தின் - இந்திய வழிமுறைல, பெண் என்பவள் இன்னொரு வீட்டுக்கு உரியவள். ஆண் என்பவன், பிறந்த வீட்டுக்கே கடைசி வரை உரியவன். உதாரணமா, எங்க வீட்டு குலதெய்வம், திருப்பதி கடவுள் என்று வைத்துக்கொள்வோம். என் மனைவி வீட்டு குல தெய்வம் ஸ்ரீரங்கம் என இருந்தால், திருமணத்துக்குப் பின்பு, என் மனைவியின் குல தெய்வம் திருப்பதி ஆகிவிடும் (ஏனென்றால், அவ என் வீட்டுக்கு வந்தாகிவிட்டது). ஆனால் அவளின் சகோதரனின் குலதெய்வம் ஸ்ரீரங்கமாகத்தான் இருக்கும். இப்போ புரியுதா? பெண், திருமணமாகும்போது வேறு வீட்டைச் சேர்ந்தவளாயிடறா. அதுனால, நாம மணமுடிக்கும்போது வேறு வீட்டைச் சேர்ந்த பெண்ணைத்தான் மணக்கிறோம்.

    அம்மாவோட கூடப்பிறந்த பெண்கள்ட மட்டும் இந்த லாஜிக் கிடையாது. அவங்க நமக்கு 'பெரியம்மா'வாகவோ அல்லது சித்தியாகவோ ஆகிடறாங்க. அவங்க பசங்க, நமக்கு கூடப்பிறக்காத சகோதரர் முறை. (நாம கூப்பிடற விதத்துலயே இதைத் தெரிஞ்சுக்கலாம். மாமா/அத்தை, அக்கா, தங்கைனு யாரைக் கூப்பிடறோமோ, அவங்க பெண்ணையோ, அல்லது பையனையோ நாம (ஆணோ, பெண்ணோ) மணந்துகொள்ளமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      //பெண், திருமணமாகும்போது வேறு வீட்டைச் சேர்ந்தவளாயிடறா. அதுனால, நாம மணமுடிக்கும்போது வேறு வீட்டைச் சேர்ந்த பெண்ணைத்தான் மணக்கிறோம். ///
      ஓ இந்தக் கருத்து எனக்கு கொஞ்சம் ஓகேயாகுது, எங்கள் குடும்பத்திலும் மச்சான், மச்சாளை மணம் முடித்தோர் இருக்கிறார்கள், ஆனா இப்போதைய ஜெனரேஷன் அதை ஏற்கிறார்கள் இல்லை, சொந்தத்தில் முடிக்கக்கூடாது என்கிறார்கள்.. விஞ்ஞானத்தை வைத்துப் பேசுகின்றனர்.

      இன்னுமொன்று நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் முறைகள் மாறுபடுதே...

      நம் நாடுகளில் தாய் மாமன் எனில் அப்பாவுக்குச் சமனானவராகவே பார்க்கிறோம்... அப்பா இல்லாத குடும்பம் எனில் தாய் மாமனே தந்தையாக இருந்து பொறுப்பெடுப்பார்.

      ஆனா ரத்த உறவு எனப் பார்க்கும்போது எல்லாமே ஒரு ரத்தத்துள் வந்து விடுகுதெல்லோ.. அதுதான் என் குழப்பமே...

      மிக்க நன்றி உடன் வருகைக்கு..

      Delete
  3. நம்மில் பலரும் சமூகத்துக்கு பயந்து விலகி விடாமல் உள்ளுக்குள் அழுதே விருப்பமின்றி வாழ்வோர் உண்டு.

    வாழ்வு ஒருமுறைதான் அதை ஆங்கிலேயர் போல் வாழ்ந்து பார்ப்பதுதான் சரியோ என்று சில நேரங்களில் நானும் நினைத்ததுண்டு இருப்பினும் நமது கலாச்சாரம் நமது சந்திகளின் எதிர்கால வாழ்வையும் பிண்ணிப்பிணைத்தே வழி நடத்திச் செல்வதால் நாம் தடம் மாறத்தயங்குகின்றோம்.

    இருப்பினும் நம்மில் பலருக்கும் வாழ்ந்து விடவே விருப்பம்.
    இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாசவர்களால் கள்ளக்காதல்கள் பெறுகி விடுகிறது.

    நல்லதொரு அலசலைத் தொடங்கி வைத்து விட்டீர்கள்

    தமிழ்மணம் 7

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //நம்மில் பலரும் சமூகத்துக்கு பயந்து விலகி விடாமல் உள்ளுக்குள் அழுதே விருப்பமின்றி வாழ்வோர் உண்டு.//
      இது உண்மையேதான், ஒழுக்கம் என்பது முக்கியம் அதுக்காக, பிடிக்காத உறவிலே காலம் கழிச்சு மாழ்வது நம் சமுதாயம் ஏற்படுத்திய ஒன்றுதானே, இன்னொன்று, இதனாலேயே பல இடங்களில் பல வருத்தங்களை, பிரச்சனைகளை மறைச்சே செய்து குடுத்து விடுகின்றனர், தாலி கட்டிட்டால் அவ்ளோதான்.. இனி நீ வாழ்ந்தே ஆகோணும் என விடவே மட்டார்கள் இது எல்லாம் எவ்வளவு கொடுமையான சமுதாய அமைப்பு... வாழ்வது ஒரு வாழ்க்கை.. அதில் ஆசையா விருப்பப்பட்டு வாழோணும்.

      Delete
    2. ///இருப்பினும் நம்மில் பலருக்கும் வாழ்ந்து விடவே விருப்பம்.
      இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாசவர்களால் கள்ளக்காதல்கள் பெறுகி விடுகிறது.//

      உண்மைதான், எனக்கு இப்படி ஊருக்காக பெயருக்காக மனைவி/கணவனை வைத்துக் கொண்டு கள்ளமாக தன் தேவைகளை செய்து முடிப்போரிலதான் கோபம்... இதனால் எத்தனை பேரின் வாழ்க்கை பாழாகிறது.

      விருப்பமில்லையாயின் டிவோஸ் எடுத்துப் போட்டு இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கலாமே... ஆனா அதுக்குத்தான் சமுதாயமும், கோர்ட் உம் இடங்கொடுப்பதில்லை, சட்ட திட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.

      ///தமிழ்மணம் 7//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நானும் இப்படி ஸ்ரீராமுக்கு எழுத நினைச்சு விட்டிருந்தேன்:))...

      அக்காவுக்கு “க்” போட்டிட்டேன்:).. ஹா ஹா ஹா இதைப் பார்த்து எல்லோருக்கும் ஹெட் சுத்தட்டும்:))..

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  4. //ஆனால் மனம் சுத்தமாக இருக்கும்// - இதுக்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை. இந்திய சொசைட்டி, ஆண் பெண் பேதம் காட்டற சமூகம். இரண்டுபேரையும் சேர்ந்து இருக்கவிடாத சமூகம். அப்படி இருக்கறதுனால, பெண் நண்பர்கள் என்ற கான்சப்டே கிடையாது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா நகரங்கள்ல மாறுது.

    அப்போ ஒரு பெண், வெறும்ன சிரித்தாலே, அவன் 'இது லவ்' என்றுதான் நினைப்பான்.

    இன்னொண்ணு, 'மனம் சுத்தம்' என்பது அவங்க அவங்களைப் பொறுத்ததுன்னு நினைக்கறேன். இது கல்சுரல் வித்தியாசம். வளர்ந்த விதம் எல்லாம் இருக்கு.

    என் மனசுல, இந்த மாதிரி 'CLOSED SOCIETY'யா இந்தியா இருக்கறதுனால, ஹிப்போக்ரசி அதிகம். வெளில 'நல்லவன்'மாதிரி தோணும், 'உள்ள' எப்படின்னு நிச்சயமா சொல்லமுடியாது. அதுனாலதான், நம்பி எதுக்கும் வாய்ப்பே கொடுக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. ///இன்னொண்ணு, 'மனம் சுத்தம்' என்பது அவங்க அவங்களைப் பொறுத்ததுன்னு நினைக்கறேன். இது கல்சுரல் வித்தியாசம். வளர்ந்த விதம் எல்லாம் இருக்கு.
      ///
      இது 100 வீதம் உண்மைதான், பொத்திப் பொத்தி வெருட்டி வெருட்டி வளர்க்கப்படும் பிள்ளைதான் எங்கே இடம் என இருக்கும் ஜம் பண்ண, சின்னனிலிருந்தே, ஃபிரீயாக வளர்வொர் ஓரளவு ஸ்ரெடியாக இருப்பார்கள்.

      விளம்பரங்கள்கூட அப்படித்தானே, இங்கு ரீவியில், பேப்பரில் எல்லாம் சாதாரணமாக சிம்பிளாக கொஞ்சம் செக்ஸ்சியான சிலது ஆடையைக் குறைச்செல்லாம் விளம்பரங்கள் வரும், அப்படி பேப்பர் மகசினை எங்காவது பார்த்தால் எனக்குத்தான் நெஞ்சு பக்குப்பக்கெண்ணும் பிள்ளைகள் பார்த்டுவார்களோ என, ஆனா அவர்கள் சின்ன வயதிலிருந்தே இவற்றைப் பார்த்து வளர்வதால், அதிலென்ன இருக்கு என்பதைப்போல எந்த றியாக்‌ஷனும் காட்டாமல் போவார்கள்..

      இதுபற்றி முன்பு ட்றுத்தும் ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

      Delete
    2. //வெளில 'நல்லவன்'மாதிரி தோணும், 'உள்ள' எப்படின்னு நிச்சயமா சொல்லமுடியாது. அதுனாலதான், நம்பி எதுக்கும் வாய்ப்பே கொடுக்க முடியாது.///

      ஹா ஹா ஹா உண்மையிலும் உண்மை.. முகம் பார்த்து எதையும் சொல்லிட முடியாது இப்படி விசயங்களில். இதனாலதானோ என்னமோ எங்கட அம்மா எப்பவுமே சின்னனில் சரியான ஸ்ரிக்ட் ஆ இருப்பா, அப்பா, அம்மா, மாமா, சித்தப்பா.. இப்படி தவிர வேறு ஆரோடும் எங்கும் போக விடமாட்டா.. எரிச்சலாக இருக்கும் அப்போ, ஆனா அது நல்ல விசயம் தான் என அறிஞ்சு கொண்டேன்.

      எங்கள் அப்பா.. என்னைப்போல:)) ஆரிலும் சந்தேகப்படமாட்டார், வெளுத்ததெல்லாம் பால் என நம்பிடுவார்:))

      Delete
  5. //கஷியர்,.... கம் சேர் கம் கம் .. என அழைத்தார்,// - பொதுவா நான் கவனித்தது, இந்தியர்கள்ட கொஞ்சம் அடிமைப் புத்தி உண்டு. அதிகாரம் இருக்கற இடத்துல பணிஞ்சு போகறதும், செல்லுபடியாகும் இடத்துல, அதிகாரமா நடந்துக்கறதும். பொதுவா பெரும்பாலும் அநீதியைக் கண்டு பொங்க மாட்டாங்க. நமக்கு நடக்காதவரை சரின்னு இருந்துடுவாங்க. RULE FOLLOW பண்ணுவதும் பெரும்பாலும் அவங்க கிட்ட கிடையாது. (நானும் கியூல நிற்காம முன்னாலபோய் கேஷியர்ட போனபோது, அவர் வரிசைப்படி வரச்சொன்னார், பாரிஸ்ல. அப்புறம்தான் இதெல்லாம் பார்த்து கத்துக்கிட்டேன், ஆனால் இந்தியாவில் உபயோகப்படுத்தல :-) )

    ReplyDelete
    Replies
    1. //கொஞ்சம் அடிமைப் புத்தி உண்டு//

      அடிமைப் புத்தி என்பதைவிட.. காக்கா பிடித்தல் என்பினமே... அது நம்மவர்களிடையே அதிகம், நல்ல உத்தியோகத்தில் இருப்பவருக்கு முன்னுரிமை கொடுப்பது, இப்படி பொலிஸ் ஆமி எனில் சும்மாவே எதையாவது கொடுத்து வைப்பது[பின்னாளில் உதவும் என:)]...

      இந்தக் குணம் வெள்ளையர்களில் அடியோடு இல்லவே இல்லை...

      இன்னொன்று மேலே எழுத மறந்து விட்டேன்.

      ஸ்கூலில் ஸ்ராவ்ஸ் ரூமில்... ரீ, மீல் எடுக்கும் நேரங்களில்.. ரீச்சேர்ஸ் உடன்... கிளீனிங் பீப்பிள்... குப்பை bin கிளீன் பண்ணுவோர் எல்லோருமே சரிசமனாக இருந்து ஒன்றாக சிரிச்சு பேசி உணவு பரிமாறி மகிழ்வர்.

      ஹெட் ரீச்சர் வகுப்பறையில் வந்தால், அவவைக் கண்டவுடன், படிப்பிப்பதை நிறுத்தி, மோனிங் சொல்வதில்லை... வந்த ஹெட் ரீச்சர் ஒரு ஓரமாக வெயிட் பண்ணுவார், வகுப்பாசிரியர் தான் சொல்லிக் கொண்டிருப்பதை அப்படியே சொல்லி முடித்த பின்பே, ஹெட் ரீச்சருக்கு மோனிங் சொல்லி பேசுவார்.

      இது கிளீன் பண்ணுவோரும் இப்படியே, அப்படியே போட்டு விட்டு ஓடிவந்து கை கட்டிக்கொண்டு கேட்க மாட்டினம், அவர்கள் கையில் எடுத்ததை துடைச்சு முடிக்கும்வரை நாம் தான் வெயிட் பண்ணோனும்..

      தொழிலை வைத்து இங்கு எந்தப் பேதமும் கிடையாது... அதேபோல பார்ட்டி என வரும்போதும்... கிளீனேர்ஸ் ஆர், ஹெட் ரீச்சர் ஆர், ரீச்சேர்ஸ் ஆர் என கண்டுபிடிக்கவே முடியாது...

      Delete
    2. அதிரா.. நீங்க எழுதியிருப்பதைப் படிக்க ஆச்சரியமாவும் இருக்கு (நானும் பார்த்திருக்கேன்). நான் லிங்கன் இன்ல (லண்டன்), ஒரு பாரிஸ்டர்ட கேஸ் விஷயமா பேசிக்கிட்டிருந்தேன். அப்போ, அவரை 'சார் சார்' என்று அழைத்தேன். அதுக்கு அவர், 'சார்' என்று அழைக்காதீர்கள். அப்படி அழைக்கணும்னா, நீங்கதான் என் கிளையன்ட். நாந்தான் உங்களை 'சார்' போட்டுக் கூப்பிடணும்னு சொன்னார்.

      மற்றவர்களைனு சொல்லமாட்டேன். தமிழகத்துலயே இருந்தபோது, வேலையைப் பார்த்து ஒருவரை மதிப்பது என்ற வழக்கம் எனக்கு வர ஆரம்பித்தது. நல்லவேளை, அப்புறம் மாறிவிட்டேன். இன்னைக்கு நமக்கு நேரம் நல்லாருக்கு, நாம இப்படி இருக்கோம். நாளைக்கு அவன் நிலைக்கு வர எவ்வளவு நேரமாகும். அதனால் ஆளைத்தான் மதிக்கணுமே தவிர, அவன் வேலையை அல்ல என்று புரிந்துகொண்டேன்.

      Delete
    3. அதேதான் நெல்லைத்தமிழன், இங்கு மரியாதை என்பது கூப்பிடுவதி கொடுத்தால் அவர்களுக்கு சங்கடமாக இருக்கும்... எப்பவுமே மிஸ், மிஸிஸ் மிஸ்டர் டொக்டர் இப்படி சொல்லி பெயர் போட்டு அழைப்பதுதான் இவர்களுக்குப் பிடிக்கும், அதிலும் நட்பாகிட்டால் அல்லது ஒன்றாக வேர்க் பண்ணும்போது எப்பவும் 1ஸ்ட் நேம் ஐ மட்டுமே கூப்பிடு என்பினம், மிஸிஸ் எனச் சொன்னாலே ஏதோ அந்நியப்படுத்துவதுபோல ஒரு ஃபீலிங் இவர்களுக்கு.

      தம் சொந்தம் தவிர, அடுத்தவர் பக்கத்து வீட்டுக்காரர் ஆரையுமே.. அன்ரி, அங்கிள் இப்படி எந்த உறவு முறை சொல்லியும் கொண்டாட மாட்டினம், பெயர் மட்டும்தான்.

      நமக்கு இங்கு ஒரு மிக நெருங்கிய ஸ்கொட்டிஸ் குடும்பம் இருக்கிறார்கள்... ஆரம்பம் நம் பிள்ளைகள் சின்னவர்களாக இருந்தபோதே, தாமாக அன்ரி என அழைக்கத் தொடங்கிட்டினம்.. நாமும் விட்டு விட்டோம்.. ஆனா அது அவவுக்கு பெரிய ஹப்பி..

      ///தமிழகத்துலயே இருந்தபோது, வேலையைப் பார்த்து ஒருவரை மதிப்பது என்ற வழக்கம் எனக்கு வர ஆரம்பித்தது.///

      இதில் ஒளிச்சு மறைக்க என்ன இருக்கு, நம் நாட்டில் இது ரொம்பவும் மோசம்தானே... ஆனா இங்கு ஒரு பார்ட்டி எனில் காபேஜ் கிளீனரும் கோட் சூட்தான், பெரிய உயர் அதிகாரியும் கோட் சூட் தான்.. ஒன்றாக அமர்ந்து பேசிச் சிரிப்பார்கள்.... இது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதானே...

      Delete
  6. // வாழ்க்கை என்பது ஒரு முறைதான், அதை மனதுக்கு பிடிச்சதாக வாழ்ந்திடோணும் என்பதே//

    ஆஹாஆ சூப்பர் டஹ்த்துவம் மியாவ் :)
    நான் தூங்கிட்டிருக்கும்போது போஸ்டை போட்டதற்கு மென்மையான கண்டனங்கள் :) எனிவே வந்திட்டேன்
    பின்னூட்டங்களோட :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      உண்மைதானே அஞ்சு... வாழ்வில் சந்தோசம் இல்லை எனில் வாழ்வதில் அர்த்தம் என்ன... சிலரின் கதைகளைக் கேட்கும்போது மிக கஸ்டமாக இருக்கும்.. வெளியேயும் சொல்ல முடியாமல் வீட்டிலும் மகிழ்ச்சியில்லாமல், வெளியேறவும் முடியாமல் சிவனே எனக் காலத்தை இழுப்போர் பலர் ..

      தூங்கினீங்களா?:) தெரிஞ்சிருந்தால் ஜெஸிக்கு மெசேஜ் அனுப்பிக் கடிச்சு எழுப்பச் சொல்லியிருப்பேனே:)..

      Delete
  7. நீங்கள் சொல்லியிருக்கும் எல்லாம் இங்கே பார்த்திருக்கிறேன் :) ஜால்ரா கூஜா காக்கா எல்லாவற்றுக்கும் பெயர் போனவங்க நம்ம கூட்டமே :) ஆனால் வெள்ளைக்காரர்கள் அப்படியில்லை எதையும் எதிர்பார்ப்பதுமில்லை அதேமாதிரி சில விஷயங்கள் சொல்லவே வெக்கமாக இருக்கும் அதாவது bribe கொடுத்து பழக்கி இருக்கிறாரகலாம் சில நம் நாட்டவர்கள் .அப்புறம் ஒரே வீட்டில் கணவனும் மனைவியும் வாழ்வார்கள் ஆனால் திருமணம் ஆனதை ரெஜிஸ்டர் காட்டாமலேயே அப்போ மனைவிக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும் .

    ReplyDelete
    Replies
    1. ///ஜால்ரா கூஜா காக்கா எல்லாவற்றுக்கும் பெயர் போனவங்க நம்ம கூட்டமே :)//

      ஹா ஹா ஹா அதேதான்.. இதில் இன்னுமொரு விசயம், நம்மவர்கள் அலுவலகங்களில் பொஸ் ஆட்களுக்கு நல்ல நல்ல பிரியாணி எல்லாம் செய்து கொண்டு போய்க் குடுப்பினமாம்:).. இந்த வெள்ளைகளுக்கு ஆராவது இப்படிச் செய்தால்.. சுருண்டு விழுந்திடுவினம்.. நன்கு மரியாதை பண்ணுவார்கள்... ஹா ஹா ஹா.

      ///.அப்புறம் ஒரே வீட்டில் கணவனும் மனைவியும் வாழ்வார்கள் ஆனால் திருமணம் ஆனதை ரெஜிஸ்டர் காட்டாமலேயே அப்போ மனைவிக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும் .//

      இதில நம்மவர் குடும்பம் ஒன்று பணம் கிடைக்கும் எனும் ஒரே காரணத்துக்காகவே டிவோஸ் எடுத்து வாழ்கிறார்கள் என அறிஞ்சேன்...

      Delete
    2. இந்த அசிங்கம்புடிச்ச வேலைகளை ஆரம்பிச்சி வச்சது வட இந்தியரகள் .ஒரு கேவலத்தை சொல்லியே ஆகணும் .
      வீட்டை MORTGAGE எடுத்து 5 வருடம் லோன் கட்டி இந்தியா போறமாதிரி போய் அங்கே ஆக்சிடெண்டில் செத்தா சொல்லி அவர் வேற பாஸ்போர்ட்டில் வேற பேரில் மீண்டும் இங்கிலாந்து வந்து இருக்கான் .இங்கே வங்கி அந்த பெர்சன் செத்ததாக நினைச்சி மனைவிக்கு சலுகை இன்சூரன்ஸ் எல்லாம் கொடுத்தாச்சு இப்படி நிறைய பேர் இந்த வேலையை செய்யவும் பொலிசில் பிடிபட்டு .பணத்துக்கு இவ்ளோ கேவலமாபோவாங்களா மனுஷங்க :(


      அப்புறம் டிசேபிலிட்டி அலவன்ஸ் வாங்கிட்டு பங்கி ஜம்ப் போய் மாட்டிக்கிட்ட நம்மூர் ஜென்மங்களும் இருக்கு

      மக்களே நம்மூர் என்று சொல்வதால் சென்னை தமிழ்நாடுன்னு நினைக்க வேணாம் எல்லாம் உகண்டா நைஜீரிய விலிருந்து வந்த பஞ்சாபி குஜராத்திகள்

      Delete
    3. இது சொல்ல வெளிக்கிட்டால் இன்னொரு போஸ்ட் போடுமளவுக்கு இருக்குது அஞ்சு, இல்ல நம் தமிழர்களும்தான்.. பல அநியாய வேலைகள் செய்து பொய் சொல்லி இந்த அரசாங்கங்களை ஏமாற்றியதாலதான் இங்கு சட்ட திட்டங்களை கூட்டி விட்டார்கள் இப்போ.

      முன்பு கிரடிட் கார்ட் சும்மா சும்மா பெரிய தொகைப் பணம் கொடுப்பார்கள், நம்மவர்கள் சிலர், பெருந்தொகையை அப்படியே எடுத்துவிட்டு, என்னிடம் பணமில்லை , வேலை இல்ல என்னால கட்ட முடியாது எனச் சொல்லிடுவார்களாம், அப்போ அதனை குளோஸ் பண்ணிட்டு, 7 வருடம் அவரின் பெயரில் எந்த எக்கவுண்டும் திறக்க முடியாது என்பது சட்டமாம், அந்த 7 வருடமும் கணவன் எதுவும் திறக்காமல் மனைவி பெயரில் அனைத்தும் இயங்கும்... 7 வருடம் முடிஞ்சதும் சாதாரண நிலைக்கு அவரும் திரும்பிடலாமாம்.. இப்படிக் கொள்ளை அடித்து வீடு பூமி வாங்கியோரும் உண்டு.. எல்லாரிலும் எல்லா மனிதர்களும் இருக்கிறார்கள், ஆனா இந்தக் குறுக்குப் புத்தி, கள்ள மூளை அதிகம் இயங்குவது ஏசியன்களிடம் தான்:)..

      Delete
  8. / என்னை விட்டுப்போட்டுப் போய் விட்டாயே எனும் பேதமெல்லாம் இல்லை:).//

    ஹஆஹாஆ ஆமாம் ..போட்டி பொறாமைலாம் அவங்ககிட்ட இல்லை .

    // மனம் விரும்பியவரோடு வாழ வேண்டும் அதை விட்டு விட்டு கெளரம், கலாச்சாரம் எனச் சொல்லி, இன்னொருவரின் வாழ்க்கையையும் சீரளிப்பதைத்தான்//


    மிக சரியா சொன்னிங்க நம்மவர் குணம் dog in the manger வகை தனக்கு ஒரு கண்ணு போனாலும் எதிராளிக்கு கண்ணு காது மூக்கு எல்லாம் போனாதான் ஆவியடங்கும் :)

    ReplyDelete
    Replies
    1. அதேதான், சின்ன வயதிலிருந்தே பழக்கப்பட்டு விடுவதனால், கணவன் ஆரோடு போனாலும் மனைவி ஆரோடு போனாலும் எதுவும் தப்பாக தோணாது அவர்களுக்கு.. தப்பாகிட்டால் உடனே பிரிவுதேன் ஹா ஹா ஹா.. அந்தப் பயத்திலேயே தப்புச் செய்ய மாட்டினம் என நினைக்கிறேன்..

      நம் நாட்டிலதான், என்ன பண்ணினாலும் பிரிய மாட்டார்கள் எனும் ஓவர் தைரியத்தில் தப்புச் செய்வோர் அதிகமாக இருக்கலாம்..:)..

      Delete
    2. இது கொஞ்சம் COMFORT ZONEல இல்லாத ஃபீலிங் இருக்காதோ? எப்பவேணும்னாலும் கழட்டிவிடலாம்னு இருந்தா, பெண்களுக்குத்தானே கொஞ்சம் அதிக பிரச்சனை வரும்?

      இந்தியால, பொதுவா சகிச்சுக்கிட்டு, குழந்தைகளுக்காகன்னு வாழறவங்க அதிகம்தான். எப்படியும் நமக்கு PERFECT PARTNER கிடைக்காது. அப்படி இருக்கறச்சே கிடைச்சதை முடிந்த அளவு PERFECTஆ நினைச்சு வாழறதுல என்ன தப்பு?

      அப்படி கழட்டிவிட்டா, மற்றவங்க ஜீவனாம்சம் தரணுமா (ஹஸ்பண்ட் கழட்டிவிட்டா அவங்க, மனைவி கழட்டிவிட்டா அவங்க)? அதேபோல திருப்பி வேற ஆளைப் புடிச்சுக்கிட்டா இந்த ஜீவனாம்சம் தொடர்ந்து வருமா (அல்லது புதுஆள் இதைப் பார்த்துப்பானா?). குடும்பம் என்ற கமிட்மென்ட் இல்லைனா, பணம் பொதுல இருக்குமா அல்லது அவங்க அவங்க சம்பாதிக்கறது அவங்க அவங்களுக்கா? (மனைவி, கணவன் பணத்தை இஷ்டத்துக்குச் செலவழிச்சுட்டு ஒரு நாள் டாட்டா காமிச்சுட்டுப் போயிட்டா?) சொத்துல்லாம் ஒருத்தர் வாங்குவாங்களா அல்லது ரெண்டுபேரும் காசுபோட்டு வாங்குவாங்களா?

      நிறைய கேள்விகள்தான் எனக்குள் எழுகிறது.

      Delete
    3. ///இது கொஞ்சம் COMFORT ZONEல இல்லாத ஃபீலிங் இருக்காதோ? எப்பவேணும்னாலும் கழட்டிவிடலாம்னு இருந்தா, ///

      100 வீதம் நெல்லைத்தமிழன், இங்கு எந்தச் சோடியைப் பார்த்தாலும் எப்போ பிரிவார்களோ என எண்ணத் தோணும்.. ஆனா இப்போதைய தலைமுறைதான் தொட்டதும் பிரிவு என்பதுபோல மாறி வருகிறது, மற்றும்படி நிறையப்பேர் ஒரு ஜோடி அல்லது 2 வது ஜோடியுடன் நன்றாக இருக்கிறார்கள்.

      இதுக்காகத்தான், இங்கு திருமணம் முடித்தவர்களை விட, லிவிங்ருகெதர் வாழ்க்கையையே அதிகம் பேர் விரும்புகின்றனர்... பிரச்சனை வரும்போது பிரிவது எழிது என. ஆனா ச்ர்ர்ந்து வாழத் தொடங்கும்போது யாரும் பிரியும் எண்ணத்தோடு சேர்வதில்லையே.. பிடிக்காது விட்டால் பிரிந்திடுவார்கள்... அதுக்காகத்தானே திருமணம், குழந்தை என்பதை மிக காலம் தாழ்த்தியே நடத்துகின்றனர்... ஒன்றாக இருந்து பார்த்து நன்கு பிடித்து விட்டால், பார்ட்னர் ஆகின்றனர்... பின்பு குழந்தை ஆசை எனில் அதையும் பெறுகின்றனர்.. பின்பே திருமணம் முடிக்கின்றனர்.. குழந்தைகளோடுதான் பல திருமணங்கள் கிராண்ட் ஆக இங்கு நடக்கிறது.

      Delete
    4. /////பெண்களுக்குத்தானே கொஞ்சம் அதிக பிரச்சனை வரும்?///

      பெண்களுக்கு என பல சட்ட திட்டங்கள் இங்கிருக்கு, ஒன்றாக இருப்பதை விட, பிரிந்துவிட்டால்.. குழந்தைகள் எப்பவும் தாயுடன் தான் இருப்பார்கள், அப்போ சிங்கிள் மதர் எனும் பெயரில் அக்குடும்பத்துக்கு அதிக சலுகைகள் கிடைக்கும். இதைத்தானே மேலே நானும் அஞ்சுவும் பேசியிருக்கிறோம், நம்மவர் சிலர் பணம் பெறுவதற்காகவே டிவோஸ் எடுத்திட்டு, ஒளிச்சு சேர்ந்து வாழ்கின்றனர்:)..

      குழந்தைகளுக்கும் 16/18 வயதுவரை பணம் குடுக்கும் அரசாங்கம்... அத்தோடு, அவர்கள் திருமணம் முடித்தார்களா இல்லையா... என்பதை தவிர்த்து, வாரம் இரு நாட்கள் குழந்தையை தந்தை பொறுப்பெடுக்கோணும்... அந்நேரம் தாய் மார் தம் புதிய பார்ட்னர் இருப்பின் அவரோடு ஜாலியா சுத்துவார்கள்... இது இவர்களுக்கு பழக்கமான ஒன்றாகி விட்டது... ஆனா குழந்தைகளுக்கு இது கொஞ்சம் அசெளகரியம்தான்.. சில குழந்தைகள் ஸ்கூலில் வெள்ளிக்கிழமை ஆனால் அழுவார்கள்.. இன்று டடியிடம் போகோணும் என, சிலர் துள்ளிக் குதிப்பார்கள் இன்று டடியிடம் போகிறேன் என... பார்க்க கஸ்டமாகத்தான் இருக்கும்..

      ஆனா சில இடத்தில் ஆண்கள் அப்படியே விலத்திப் போய் விடுவார்கள்.. தாயுடனேயே பிள்ளை வளரும்...

      Delete
    5. ///இந்தியால, பொதுவா சகிச்சுக்கிட்டு, குழந்தைகளுக்காகன்னு வாழறவங்க அதிகம்தான். ///
      இதுதான், இதைத்தான் குறிப்பா சொன்னேன், இதில சகிச்சிட்டு வாழ்தல் என்பதற்கும் ஒரு எல்லை உண்டுதானே, சகிக்கக் கூடியதை சகிக்கலாம் மன்னிச்சு மறந்திடலாம், சகிக்க முடியாததையும் ஊருக்காக சகித்து வாழ்வதுதான் கொடுமை என்கிறேன்.

      20 வயதில் திருமணமான ஒருவர் ..22 வயதில் குழந்தை கிடைக்கிறது என வச்சுக்கொண்டால், 25 வயதில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை... அல்லது இன்னொரு வெளித் தொடர்பு உண்டாகி விட்டது எனில்.... வீட்டுக்குள் முகம் பார்த்துப் பேசமாட்டார்கள், மெஷின் போல இயங்கிக் கொண்டு, குழந்தைக்காக.. கெளரவத்துக்காக உலகுக்காக வாழ்வது இங்கு சரி எனச் சொல்ல முடியுமோ?..
      இப்பிறப்பில் வாழ்க்கை முடிந்து விடுமெல்லோ... குழதையைக் கவனிக்கலாம், படிப்பிச்சு விட்டால் பிற்காலத்தில் குழந்தை நன்கு வளர்ந்து சந்தோசத்தை அனுபவிக்கும், ஆனா அந்த காரணத்தை காட்டி.. பெற்றோரின் வாழ்வை சின்ன வயதிலேயே முடித்து விடுகிறார்களே... இது எவ்வளவு கொடுமை. அப்படி வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது... பிள்ளை வளர்ந்து பெரியவரானதும் பெருமையாகச் சொல்லும்... எவ்வளவு துன்பத்தின் மத்தியில் என்னை அம்மா/அப்பா வளர்த்து ஆளாக்கினார் தெரியுமோ என... ஆனா அத் தாயின்/தந்தையின் வாழ்கையை யாரும் யோசிப்பதில்லை... அதைத்தான் வெள்ளையர்கள், பிடிக்காவிட்டால், பிடித்த வாழ்க்கையில் நுழைந்து அல்லது தனியே நிம்மதியா வாழ்கிறார்கள்...

      இதில முக்கியமாக எனக்குப் பிடிக்காத விசயம், வீட்டில் மனைவியை/கணவனை பிடிக்கவில்லை எனில்.. கெளரவத்துக்காக அல்லது பணத்துக்காக ஊருக்காக குழந்தைகளுக்காக ஒன்றாக வாழ்வதுபோல நடிச்சுக் கொண்டு.. மறைவாக இன்னொருவரை வைத்திருக்கிறார்கள் சிலர்.. அவர்களைத்தான் சுட வேண்டும் ஹா ஹா ஹா... வீட்டு நிம்மதியையும் கெடுத்து, இன்னொருவரின் வாழ்க்கையை வெளியேயும் கெடுத்து... இப்படி வாழ்வோரை என்ன பண்ணலாம்.... இவர்களின் நினைப்பு... இப்போது சந்தோசத்தை அனுபவிப்போம், பின்னர் ஏதும் பிரச்சனை வந்திட்டால்.. இது என் மனைவி/கணவன் என வீட்டோடு வாழ்ந்திடலாம் என்பதே. இந்த கெட்ட குணம் வெள்ளையர்களில் இல்லை... இருக்கவும் மாட்டுது.

      ///எப்படியும் நமக்கு PERFECT PARTNER கிடைக்காது.//
      ஹா ஹா ஹா இதில மட்டும் நெகடிவ்வாக சிந்திக்கிறீங்கள்:))..

      எப்பவுமே திருமணம் முடித்துக் குழந்தை பெற்று வாழும் முதல் வாழ்க்கைதான் உயர்ந்தது.. அடி பட்டாலும் இடிபட்டாலும்....
      ஆனா நான் சொல்வது சேர்ந்து வாழவே முடியாது எனும் பட்சத்தில் பிரிந்து தனக்கென ஒரு வாழ்கையை வாழோணும் வெள்ளைகள்போல.. வாழ்வது ஒருமுறை தானே... கண்ணை மூடிட்டால் எல்லாம் போச்ச்ச்ச்:).. ஹா ஹா ஹா
      கூட அலட்டிட்டனோ?:)..

      Delete
    6. ////அப்படி கழட்டிவிட்டா, மற்றவங்க ஜீவனாம்சம் தரணுமா (ஹஸ்பண்ட் கழட்டிவிட்டா அவங்க, மனைவி கழட்டிவிட்டா அவங்க)?//

      ஹா ஹா ஹா நல்ல சந்தேகங்கள்தான், எனக்கும் இப்படி ஆரம்பம் பல சந்தேகங்கள் இருந்தது.. எனக்கு தெரிஞ்சவரை விளக்கம் தருகிறேன்.

      திருமணம் முடித்தபின் டிவோஸ் எடுத்தால், அது நம் நாட்டுச் சட்டம்போலவேதான்... கணவரின் உழைப்பில் ஒரு பகுதி குடுக்க வேண்டும். ஆனா திருமணம் முடிக்காமல் குழந்தை பெற்றால், ஜீவனாம்சம் குடுக்கத் தேவை இல்லை... குழந்தையின் பொறுப்பை அரசாங்கம் எடுக்கும்:).. அதாவது அம்மாவுக்கு பணம் கிடைக்கும்...குழந்தையின் பெயரில்.

      ///அதேபோல திருப்பி வேற ஆளைப் புடிச்சுக்கிட்டா இந்த ஜீவனாம்சம் தொடர்ந்து வருமா (அல்லது புதுஆள் இதைப் பார்த்துப்பானா?).///

      இதனாலதான், முதல் கணவனில் இருந்து நல்ல ஜீவனாம்சம் கிடைக்கிறது எனில், 2ம் தடவை பார்ட்னராகவே வச்ச்சிருப்பினம்.. திருமணம் முடிச்சால் அது நின்றுவிடும். பார்ட்னராக அல்ல போய் ஃபிரெண்ட்டாக என நினைக்கிறேன்.. இதில் சரியா சொல்ல தெரியவில்லை.

      இங்கு பல குடும்பங்கள், ஆணின் குழந்தையோடும் பெண்ணின் குழந்தையோடு சேர்ந்து ஒன்றாக வாழ்வோரும் உண்டு... அது அவர்களின் குணத்தைப் பொறுத்து.. தன் பிள்ளைகள்போல நன்கு பார்ப்போரும் உண்டு...

      சில இடங்களில் நல்லவர்களாக இருப்பினும், பிள்ளைகளுக்குப் பிடிக்காமல் போவதும் உண்டு.. இதில் எல்லோரும் மனிதர்கள்தானே..

      இதில இவர்களுக்கு நன்மை என்னவெனில். எல்லாக் கூத்தும் பிள்ளைகளின் 16 வயசு வரைதானே.. அதுவரை பலைக்கடிச்சு இழுத்து முடித்திட்டால் பின்பு எந்தக் கவலையும் இவர்களுக்கு இல்லையே..

      தாய் அல்லது தந்தை 2ம் தடவை மணம் முடிச்சிட்டால்.. இது என் step daddy/ step mum எனச் சொல்வார்கள் பிள்ளைகள்... அல்லது மம்மியின் போய் ஃபிரெண்ட் .. டடியின் கேள் ஃபிரென் என்பார்கள்.

      எங்கள் மகனின் நட்பில் இப்படி இரு வகையும் உண்டு, இரு பிள்ளைகளும் நம் வீட்டுக்கு வந்து போவார்கள்... ஒருவர் சொல்லுவார்.. என் மம்மியின் போய் ஃபிரெண்ட் வருவார் என்னை பிக்கப் பண்ண என... மற்றவர் சொல்லுவார் என் ஸ்ரெப் டாட் வருவார் பிக்கப் பண்ண என.. இப்போ வேறுபாடு புரியுதோ..

      Delete
    7. ///குடும்பம் என்ற கமிட்மென்ட் இல்லைனா, பணம் பொதுல இருக்குமா அல்லது அவங்க அவங்க சம்பாதிக்கறது அவங்க அவங்களுக்கா? (மனைவி, கணவன் பணத்தை இஷ்டத்துக்குச் செலவழிச்சுட்டு ஒரு நாள் டாட்டா காமிச்சுட்டுப் போயிட்டா?)///

      இதுபற்றி பெரிசா சொல்லத் தெரியவில்லை, ஆனா நம் நாடுகள்போல கணவர்தான்... திருமணம் முடிக்காட்டிலும் குடும்பத்தை பார்ப்பார். இவர்களைப்பொறுத்து. கணவன் மனைவி என சைன் பண்ணவில்லையே தவிர, நம் குடும்பங்கள்போல நல்ல அன்னொயோன்னியமான கணவன் மனைவியாகவே வாழ்வார்கள்...

      வேலைக்குப் போகாத பல மனைவிமார்கள் உண்டு... வீடு, வாகனம் என எல்லாம் வாங்குவார்கள்... பேதம் இருப்பதாகத் தெரியவில்லை.. பிரச்சனை என ஒன்று வரும்வரை:)...

      //சொத்துல்லாம் ஒருத்தர் வாங்குவாங்களா அல்லது ரெண்டுபேரும் காசுபோட்டு வாங்குவாங்களா?//

      இந்த விசயத்தில, சொத்து என்பது இங்கு வீடுகள்தானே.. இருவரும் உழைப்போராயின் சேர்ந்து செலவு செய்வார்கள்... ஒருவரின் உழைப்பெனில்.. அவரின் பெயரில் வீடு இருப்பினும் பிரிவு என வரும்போது சொத்தில் சரி பாதி வளங்கப்பட வேண்டுமாம்.. அது மனைவியுடையதாயினும் பார்ட்னருக்கு குடுக்கோணும்.. சேர்ந்திருந்த குற்றத்திற்காக ஹா ஹா ஹா:)..

      இதனால சில பணக்காரக் குடும்பங்கள் எனில், சிலர் வக்கீலை வச்சு சைன் பண்ணி எடுப்பார்களாம்.. அதாவது எப்பவாவது பிரிவு வந்தால், உன் சொத்தில் பங்கு கேட்க மாட்டேன் என... இல்லை எனில் சட்டத்தின் படி சொத்து குடுத்தே ஆக வேண்டும்...

      எங்கள் ஸ்கூல் அஸிஸ்ரண்ட் ஹெட் ரீச்சர்.. 4,5 மாதத்தில் துரும்பால மெலிஞ்சிட்டா, விசாரித்த இடத்தில் சொன்னார்கள்.. அவர்கள் டிவோஸ் எடுக்கிறார்களாம், இவவுக்கு விருப்பமில்லையாம் ஆனா கணவர் டிவோஸ் க்கு போயிட்டார் என... காரணம் இவவுக்கு ஏதோ ஒரு வெளித்தொடர்பு ஏற்பட்டு விட்டதாம்.. அதனை கணவனால் ஜீரணிக்க முடியவில்லை. இவவின் வயது 55 க்கு மேல் இருக்கும்.

      அவர்களுக்கு 2 வீடுகளாம், அதில் ஒன்றை இவவுக்கே கொடுக்கிறாராம் கணவர்.. அது சிறிய வீடாம், மற்றது நல்ல பெரிய வீடாம், அதை விற்று பாதி எனக்கு எடுக்கிறேன் எனச் சொல்லிட்டாராம், இவவுக்கு இந்த பெரிய வீட்டை விற்பது விருப்பமில்லையாம், ஏனெனில் பெரிசிலதான் இப்போ இருக்கிறார்கள்... அதனால ஒரே ரெலிபோனில் நொய் நொய் என அடிபட்டு சண்டை பிடிப்பா ஒபிஸ் ல இருந்து கொண்டு.... தவறு செய்துபோட்டு, நம்பிக்கை துரோகம் இளைச்சுப் போட்டு வெள்ளையர்களிடம் மன்னிப்பை எதிர்பார்ப்பது கடினமே...

      ஹா ஹா ஹா எனக்குத் தெரிஞ்சவரை தெளிவு படுத்திட்டேன்.. இன்னும் ஏதும் கேள்விகள் இருப்பின் தயங்காமல் கேழுங்கோ... குட்டிக் குட்டிக் கேள்வியா ஒவ்வொரு கொமெண்ட்டாக் கேட்டால்.. பதில் போடும்போது படிப்போருக்கு இலேசாக இருக்கும் என நினைக்கிறேன்.. எதுவாயினும் உங்கள் விருப்பம். நன்றி.

      Delete
    8. நன்றி அதிரா. இந்தியா கல்சரும் அவங்க கல்சரும் இரு வேறு துருவங்கள்னு நினைக்கறேன். பொதுவா (நான் யோசிக்கும்போது), நம்ம கல்சர்ல, குழந்தை, குடும்பம், குழந்தையின் குடும்பம்னு ஓய்வே இல்லாம, தனக்குன்னு எஞ்சாய் பண்ண நேரமே இல்லை. அப்படி ஒரு நேரம் இருக்குன்னா, திருமணம் ஆகி குழந்தை உருவாகும் வரையில்தான்.

      அவங்க கல்சர்ல, 'வாழ்க்கையை வாழ்ந்துடறாங்க'ன்னு எனக்குத் தோணுது. அப்போ, 46 வயசு ஆயிடுச்சுன்னா, 60+ வரைக்கும் அவங்க வாழ்க்கைய வாழமுடியும் (வெளியூர் போறது, சுற்றுலா போன்ற எல்லாம். அப்புறம் திருமணம் என்பதே நட்பைவிட கொஞ்சம் மேல் என்று ஆகிவிடுகிறது, அதனால யாருக்கும் யாரும் (நம்ம ஊரைப் போல) அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துடறதில்லை.

      ஆனா டைஜஸ்ட் பண்ணிக்கறதுதான் கஷ்டம்.

      Delete
    9. உண்மையில் நம் நாட்டில் குடும்ப வாழ்க்கை என்பது குழந்தைகள் கிடைக்கும்வரைதானே.. அது எவ்வளவு தப்பான வாழ்க்கை.. இது பற்றிப் பட்டி மன்றமே நடத்தலாம், ஆனா இப்போ வசதிகள் கூடக் கூட நிலைமை மாறி வருகிறதென நினைக்கிறேன்.

      இன்னொன்று கீழே பிரியசகி சொல்லியிருக்கிறா, பார்ட்னராக பிரிந்தால் குழந்தைக்கு பணம் கொடுக்கோணுமாம்...

      நான் ஒன்றை சொல்ல மறந்திட்டேன், பெற்ரோரின் இன்கம் குறையும் பட்சத்திலதான் அரசாங்கம் உதவி செய்யும்... இன்கம் கூடியோர் எனில்... அரசாங்கம் உதவாது:)).

      உண்மைதான், இப்படி நிலைமை இருந்தாலும் எல்லா வெள்ளைகளும் இப்படியே பிரிந்து பிரிந்து ஓடிக்கொண்டிருப்பினம் என, மலிவாகவும் எண்ணிடக்கூடாது... பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள் அதுவே உண்மை..

      Delete
    10. டிரெயின் போயிட்டுதுனாலும் எழுதணும்னு நினைக்கறேன்.

      எனக்கு நெதர்லாண்டில் (ஹாலந்த்) இருந்து ஒரு மெயில் நண்பி கிடைத்தார் (2000ல்). அவரும் இலங்கைத் தமிழர்தான். அங்கு புலம் பெயர்ந்து வாழ்ந்தார்கள். அவருக்கு ரெண்டு குழந்தைகள்னு நினைக்கறேன். அவள் கணவர் petty விஷயத்துக்கு கோபப்பட்டு டைவர்ஸ் பண்ணிவிட்டார். அந்தப் பெண் பசங்களை வளத்துக்கிட்டிருக்கேன்னு எழுதுனாங்க. அப்புறம் அவங்க வேலையை மாத்தினதாலயோ அல்லது நாங்க யாஹூ, ஹாட்மெயிலை எங்க serverல Block பண்ணினதாலயோ அவங்க தொடர்பு விட்டுப்போச்சு. ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் முகம் கண்டதில்லை.

      நம்மவர்கள், எது சுலபமோ அதை அந்த கல்சர்ல இருந்து (புலம் பெயர்ந்தவங்க) எடுத்துக்கறாங்க, எதை எடுத்துக்கணுமோ அதை எடுத்துக்கறதில்லை.

      Delete
  9. சுருக்கமா சொல்லனும்னா பெருந்தன்மை என்ற குணத்தை நம் மக்கள் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை நாடுவிட்டு வந்தாலும் மனம் விசாலமாகலை .குறுகிய மனப்பான்மை மேலோங்கி நிற்கிறது இந்த பிரிட்டிஷ்க்காரர்கள் அப்படி குறுகிய மனப்பாங்குடன் இருந்திருந்தால் நாமெல்லாம் வெளிநாட்டுக்கு வந்திருக்க முடியுமா ? அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றை நாம் கற்றுக்கொள்வதில்லை சும்மா சட்டை பொருட்களை மட்டுமே பார்க்கிறோம் நம் நாட்டில் இவர்களின் நல்ல குணங்களை நாலுபேரை மதிக்கும் மனோபாவத்தை நம் மக்கள் கட்டாயம் தொடரனும்

    ReplyDelete
    Replies
    1. ///.குறுகிய மனப்பான்மை மேலோங்கி நிற்கிறது இந்த பிரிட்டிஷ்க்காரர்கள் அப்படி குறுகிய மனப்பாங்குடன் இருந்திருந்தால் நாமெல்லாம் வெளிநாட்டுக்கு வந்திருக்க முடியுமா ? ///

      இது மிகப்பெரிய பொயிண்ட்:)... இங்கு நாம் வீடு வாங்கி வந்தபோது அயலவர்கள் எல்லாம் கார்ட் தந்து வெல்கம் பண்ணினார்கள்... ஆனா ஒரு வெள்ளைக்காரர் எங்கள் ஊரில் வந்து ஒரு காணித்துண்டு வாங்கிட முடியுமோ?:).. வேறு ஜாதி, வேறு மதத்துக்கே விற்க முடியாது.. இதில வெள்ளை மட்டும் வாங்கிட விட்டிடுவமோ ஹையோ ஹையோ.. ஏதோ இழிவானவர்கள், நம் பிள்ளைகளுக்கும் கெட்ட பழக்கம் பழக்கிடுவார்கள் என்பதைப்போல பார்ப்பார்கள் ஊரில்.

      இங்கு நம் பிள்ளைகளை காரில் வந்து அழைத்துச் செல்கிறார்கள்... தம் வீட்டுக்கு கூப்பிட்டு விளையாட விடுகிறார்கள்.. அவர்களும் வந்து போகிறார்கள்... எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.. போஸ்ட் போடுங்கோ அஞ்சு இது பற்றி தொடராக...

      மிக்க நன்றி.

      Delete
    2. எழுதறேன் மியாவ் கொஞ்சம் பேப்பர் உருட்டும் வேலை இருக்கு முடிச்சதும் எழுதறேன்

      Delete
    3. [im] https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRUbt12qU2JRUsI0f9Wchk15tXDrbqq8hOMrG_aK3ELd6XVby-h [/im]

      Delete
  10. கட்டி வச்சுக்கோ என் அன்பு மனசை பாடல் ஆரம்ப இசை நன்றாக இருக்கும். சுமாரான பாடல் என்வரையில்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வங்கோ...

      ஓ.. நான் எப்பவுமே பாடல் வரிகளைத்தான் ரசிப்பேன்.. ஆனா இதில் எனக்கு மியூசிக் ரொம்பப் பிடிச்சுப் போச்சு... தற்செயலா யூ ரியூப்பில் ஓட்டோ பிளேல ஒடிச்சுது.. முதல்முறை கேட்டேன்... நன்கு பிடிச்சது மியூசிக்...

      Delete
  11. தமிழ்க் கடைக்காரர் வெண்போலீஸை முன்னால் அழைத்து உதவி செய்வது எனக்கு தமிழக அரசு அலுவலகங்களை நினைவு படுத்துகிறது. நம் அலுவலகத்தில், நம் பணத்தை நாம் எடுக்க அந்த ஊழியருக்கு நாம் பணம் கொடுத்துப் பழக்கப்படுத்துவோம். பணம் கொடுக்காத ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் தந்து பழக்கப்படுத்தி விட்ட காரணத்தினால் அவருக்கு தாமதம் செய்வார்கள், இடைஞ்சல் செய்வார்கள். எனக்கே நேர்ந்திருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பன்றியோடு சேர்ந்த பசுவின் கதைபோல ஆக்கிடுவினம்...

      //எனக்கே நேர்ந்திருக்கிறது!// சொல்லியிருக்கிறீங்க ஒரு வியாளன் போஸ்ட்டில் என நினைக்கிறேன்.

      இன்னொன்று பலமுறை நினைச்சு.. இப்போதான் மனதில வந்துது.. நீங்க ட்றுத் இன் பக்கம் சொன்னீங்களே, ஒரு நண்பர் உங்களிடம் சொல்லிக்கொண்டே சூசைட் பண்ணினார், அதுபற்றி போஸ்ட் போட்டிருக்கிறேன் என... அந்த லிங் கொஞ்சம் இங்கு போட்டு விடுங்கோ பிளீஸ்..

      Delete
    2. //இன்னொன்று பலமுறை நினைச்சு.. இப்போதான் மனதில வந்துது.. நீங்க ட்றுத் இன் பக்கம் சொன்னீங்களே, ஒரு நண்பர் உங்களிடம் சொல்லிக்கொண்டே சூசைட் பண்ணினார், அதுபற்றி போஸ்ட் போட்டிருக்கிறேன் என... அந்த லிங் கொஞ்சம் இங்கு போட்டு விடுங்கோ பிளீஸ்..//


      ஆ...... அது ஏன்?

      Delete
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எதுக்கு இந்தப் பதட்டம்?:) இங்கு என்றில்லை எப்படியாவது லிங் தந்தால் படிக்க ஆசை.. எனக்கு உண்மைச் சம்பவங்கள் படிப்பது ரொம்பப் பிடிக்கும்.. இங்கும் அதுக்காகவே சில மகசின்கள் வாங்குவதுண்டு..

      Delete
    4. தற்கொலை 1
      http://engalblog.blogspot.com/2014/06/blog-post_11.html

      தற்கொலை 2 (தொடர்ச்சி)
      http://engalblog.blogspot.com/2014/06/2.html

      Delete
    5. OMG இதில தொடர்ச்சியும் இருக்கோ...:(,

      என் செக் அதுக்குள் தேடி எடுத்திட்டாவாம் தெரியுமோ ஹா ஹா ஹா நாங்க கூட்டுக் களவாணிகளாக்கும்:)...

      மியாவும் நன்றி லிங் க்கு.. வந்து படிக்கிறேன்.

      Delete
  12. இரு தார வாழ்க்கை மட்டுமல்ல, தமிழகத்தில் பெரிய தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் பல தார வாழ்க்கையே பழகி இருக்கிறார்களே..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது வாழ்க்கையே அல்ல.. கேட்டால் சொல்வார்கள் மகாபாரத்தத்திலே திருதராஷ்டிரனுக்கு 100 மனைவி மாராமே .. அந்த வழி வந்தோர்தானே நாம்:).. இதிலென்ன தப்பிருக்குது என:).. எல்லாம் பணமும் பதவியும் செய்யும் வேலை சில இடங்களில்..

      வெள்ளைகளில் ஒரு குணமிருக்கு, இது இவர்களின் நெகடிவ்வான பகுதி:0..

      எப்படி எனில் இங்குள்ள பெண்கள் பணம் இருக்கும் ஆண்களாகப் பார்த்தே அதிகம் மயக்குவார்கள், ஏனெனில் இவர்களுக்கு எது இல்லாவிடினும் சுற்றுலா இல்லாமல் இருக்க மாட்டார்கள்.. இதனால மாண்டவர்கள் குடும்பத்தை சீர் குலைத்தவர்களும் இருக்கிறார்கள்.

      ஒருவர் 50 வயதை தாண்டியவர், நல்ல குடும்பமாக வாழ்ந்தபோது, பணக்காரர், அவரின் ஒபிஸ் ல ஒரு 25 வயதுப் பெண்... கூடவே ஒட்டி உறவாடி பணம் பறிச்சிருக்கிறா... இவருக்கும் சின்னப்பெண் என மயங்கியிருந்திட்டார்.. இது தெரிய வந்து உசாரான பொழுது, மனைவி டிவோஸ் கேட்டிட்டா.... அப்பெண்ணும் கிடைச்ச வரையில் ஓகே என தப்பி ஓடிட்டா.. இவர் நடு வழியில்... என் கணவரிடம் சொல்லிக் கவலைப்பட்டாராம்.. கவனமாக இருக்கோணும் என .. கண் போனபின் சூரிய நமஸ்காரம்:)) ஹா ஹா ஹா..

      Delete
  13. இந்த உறவுமுறைத் திருமணங்களே வேண்டாம் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், செய்யாதே எனத்தானே மருத்துவம் சொல்லுது, அதே நேரம் இப்போதைய பிள்ளைகளும் இதுக்கு ரெடி இல்லை... இப்படிப் பேச்சு எடுத்தாலே வட்ட்ட்ட்ட்? என்கிறார்கள்... வெள்ளைக் கலாச்சாரத்துக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள்.. மறுப்பதோ தடுப்பதோ கஸ்டம்தான்.

      எங்கள் அக்காவின் மகன் கேட்டாராம் .. வட் இஸ் தட் பொம்பிளை பார்க்கிறது?.. என.. ஹா ஹா ஹா..

      Delete
  14. ஒரு கணவன் சுகவீனமாயிருந்த நேரத்தில் அந்த இளம் மனைவிக்கு வேறொரு நட்பு ஆண் உதவி செய்வதாக குடும்பத்தில் நுழைந்து தவறான உறவுமுறை ஏற்பட்டது அதில் கெட்ட சம்பவமும் மரணத்தில் முடிந்தது .அப்போ ஒரு வெள்ளைக்காரர் அதைப்பற்றி என்னிடம் சொன்னார் விருப்பமில்லாமல் வாழ்க்கையை தொடர்வதை விட பிரிவதே மேல் யாரையும்வற்புறுத்தி ஒரு ரிலேஷன்ஷிப்பில் வைப்பது இயலாத காரியம் எதற்கு இத்தனை வன்முறை என்று சொன்னார் .கவுரவம் மண்ணாங்கட்டி எங்கே கொண்டுபோய் விட்டது மண்ணில் தானே .உண்மையில் வெளிநாட்டினரின் வாழ்வுமுறை மிகவும் சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. இங்கு சாப்பிடுவதையே ஃபோஸ் பண்ண மாட்டினம் ஹா ஹா ஹா.. ந்பம்ள்ளை ப்ள்ிள்லைகளே சொல்கிறார்களே.. எதுக்கு ஃபோஸ் பண்ணுறீங்க என விரும்பினால் சாப்பிடட்டும் இல்லை கொட்டட்டும் என போட்டுக் குடுப்பார்கள்.. மிகுதியை அப்படியே கொட்டுவார்கள்...

      இதில் இன்னொன்றும் சொல்லலாம், நம்மவர்கள்தான் அதிகம் சமைச்சு அல்லது மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என, ஃபிரிஜ் ல வச்சு பழசா சாப்பிட்டு வருத்தம் தேடுவது.. வெள்ளைகள் சமைச்ச உணவை பிரிஜ்ஜில வச்சதா கேள்விப்பட்டிருக்கிறீங்களோ? இல்லவே இல்லை...

      ரேக் எவே ஃபூட் .. பிட்சா, கே எஃப் சி, மக்டொனால்ட் எதுவாயினும் மிஞ்சினால் கண்ணை மூடிக்கொண்டு காபேஜ் ல கொட்டுவார்கள்... வைத்து எடுக்கும் பழக்கமே இல்லை..

      எங்கள் பிள்ளைகளிலும் இப்பழக்கம் தொற்ரி வருகிறது.. என்ன அமிர்தம் எனினும் நேற்றையது எனில் வேண்டாம் என்று சொல்லப் பழகிட்டினம்.. புத்தி வந்திட்டுது எல்லோ:) இனி பேய்க்காட்ட முடியாது ஹா ஹா ஹா..

      Delete
  15. ஊசிச் சிரிப்பு ஊசியளவு சிரிப்பு தந்தது. மாற்றங்கள் நம்மிலிருந்து தொடங்குவதே நல்லதுதான். ஆனால் அறிவுரை கொடுப்பதில் இருக்குமின்பம் வாங்குவதிலில்லை!

    ReplyDelete
    Replies
    1. ///ஊசிச் சிரிப்பு ஊசியளவு சிரிப்பு தந்தது.//
      ஹா ஹா ஹா இதைப் படிச்சு நான் பெரிசா சிரிச்சிட்டேன்..

      நம்மை மாற்றப் பழக வேண்டும், ஆனா அது ரெம்ம்ம்ம்ம்ம்பக் கஸ்டம்தான்:))..

      ///ஆனால் அறிவுரை கொடுப்பதில் இருக்குமின்பம் வாங்குவதிலில்லை//

      ஹா ஹா ஹா 200 வீதம் கரெக்ட்டூஊஊஊஊஊ:)).. கொடுக்கும்போது நாம் பெரியவர்கள் எனும் எண்ணம் வருமாக்கும்:))

      மிக்க நன்றி ஸ்ரீராம்.. அப்போ அந்த லிங்?:)) ஹா ஹா ஹா.. என் செக்:) நினைச்சால் இப்போ தேடி எடுப்பா:)) அவவுக்கு சேர்ஜ் பண்ணுவது ரொம்பப் பிடிக்கும்:) எனக்குத்தான் தேடுவதே பிடிக்காது:))..

      Delete
    2. நான் தேடி எடுத்திட்டேன் :)

      Delete
    3. அஞ்சூஊஊஊஊஊஊ ஓடி வாங்கோ தேம்ஸ்ல குதிப்போம்ம்ம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா:)..

      Delete
  16. ஹாஹாஹா உங்க பெட்டர் FULL கூட வேலை செய்த வர போல பலர் முட்டாள்தனம் செஞ்சி மாட்டீஇருக்குங்க இங்கே ..வெளிநாட்டுமக்கள் மனசில் வஞ்சகம் இல்லாம பழகுவாங்க இதை அட்வாண்டேஜா எடுத்துக்கங்க நம் நாட்டு ஜொள்ளர்கள் :)
    அதேபோல சிலர் ஓவர் ஆக்டிங் பில்டப்பும் கொடுப்பாய்ங்க
    இங்கே சூப்பர் மார்க்கெட்டில் கேஷியர் தேங்க்ஸ் டியர் தாங்க்ஸ் லவ் / என்று தான் பேசுவாங்க அதேபோலத்தான் போனில் பேசும்போதும் ஒருமுறை இப்படி ஒரு பிரித்தானிய பெண்மணி தொலைபேசியில் எஸ் லவ் வாட் கான் ஐ டூ என்று வினவ நம்ம நாட்டு அறிவுஜீவி போனிலேயே அவர்கிட்ட இப்படி நெளிந்து ஒருமாதிரி பேச வேணாம் என்று சொல்லியிருக்கு .அதை அந்த மனிதரின் மனைவி பெருமையாக என்னிடம் சொன்னார் நான் தலையில் அடித்துக்கொண்டேன் கடவுளே இத்தூண்களையெல்லாம் மார்ஸில் தூக்கி போட்டிருக்கணும் னு ..

    ReplyDelete
    Replies
    1. ///பிரித்தானிய பெண்மணி தொலைபேசியில் எஸ் லவ் வாட் கான் ஐ டூ என்று வினவ நம்ம நாட்டு அறிவுஜீவி போனிலேயே அவர்கிட்ட இப்படி நெளிந்து ஒருமாதிரி பேச வேணாம் என்று சொல்லியிருக்கு .அதை அந்த மனிதரின் மனைவி பெருமையாக என்னிடம் சொன்னார் நான் தலையில் அடித்துக்கொண்டேன்///

      ஹா ஹா ஹா அஞ்சு.. எனக்கு இக் கொமெண்ட் படிச்ச நேரம் தொடங்கி சிரிச்சு முடியுதில்ல:)) உருண்டு பிரண்டு சிரிக்கிறேன்... அதிலும் அந்த மனைவிக்கு எவ்ளோ பெருமை ஹா ஹா ஹா முடியல்ல முருகா...:)..

      Delete
  17. ஊசி சிரிப்பு :) ஹாஹாஆ :) ஆனா இப்போ புடவையை விட சல்வார் தான் பொருத்தம்

    ReplyDelete
    Replies
    1. ஆமா அதனால் தான் ரங்கநாதன் தெருவில் ஆடித்தள்ளுபடியே அதிகமாக நடக்குது)))

      Delete
    2. புடவை நீளம் காலில் விழும் சின்னத்திரை நாடகம் போல சல்வார் வெள்ளித்திரை போல டக்கென்று முடிந்துவிடும் .)))

      Delete
    3. ஹா ஹா ஹா அதுசரி இப்போ புடவை எங்கே இருக்கு:))..

      அடடா நேசன்.. இவ்ளோ அழகான ரெண்டு வரிக் கவிதை:)) .. அப்போ சேலை காலில் விழுந்தால் மனைவி அதிகநேரம் மன்னியுங்கோ மன்னியுங்கோ..:) எனக் காலில் தடவிக்கொண்டிருக்கிறா என அர்த்தம்:) .. சல்வார் எனில்.. ஓகே இவ்ளோதான் மன்னிப்பு கேட்டாச்சு என அர்த்தமா.. ஹா ஹா ஹா..

      Delete
  18. மற்றவர்களை அவமானப்படுத்தி மகிழ்ச்சியடைவது மனநோய் //உண்மை அப்படிப்பட்டதுங்க இப்போல்லாம் நிறைய இருக்குங்க அல்ப ஜந்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான் அஞ்சு.. துன்பப்படுத்தி இன்பம் காண்போர்..

      Delete
  19. நம் சமூகமும் இப்போது மாறி வருகின்றது எனலாம். என்றாலும் வெள்ளைக்காரன் போல வாழ நினைத்து இரண்டும் கெட்டான் வாழ்க்கையும் சிலர் வாழ்கின்றனர்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ..

      சரியாகச் சொன்னீங்க.. சிலருக்கு வெள்ளைகள்போல வாழவும் ஆசை, நம்மவர்போல இருக்கவும் ஆசை:) இதனால பிள்ளைகளின் கலாச்சாரம்தான் சீரழியும்..

      Delete
  20. இப்போதைய பெருவாரி நகரங்களில் வெள்ளையர்கள் கிராமம் நோக்கி போய்விட்டார்கள் வந்தேறுகுடிகள் தான் ஆளுகின்றார்கள் நகரங்களையும் அதன் சீரழிவுகளையும் நேரடியாக பார்த்துவிட்டு இதுதான் வெளிநாடு என்று தப்பாக நினைப்பதும் நம்மவர்களே .

    ReplyDelete
    Replies
    1. ///நகரங்களையும் அதன் சீரழிவுகளையும் நேரடியாக பார்த்துவிட்டு இதுதான் வெளிநாடு என்று தப்பாக நினைப்பதும் நம்மவர்களே .//

      ஹா ஹா ஹா.. ஆரம்பம் நான் நினைத்தேன் வெள்ளைத்தோல் எல்லாம் வெள்ளையர்கள் என.. பின்புதானே தெரியும்.. அவர்கள் எல்லாம் எங்கெங்கோ இருந்து வந்தவர்கள் என... பழக்கவழக்கமே பலரிடம் இருக்காது...

      Delete
  21. ஒரு காப்பி என்பது அவர்களின் பேச்சின் அளவைப்பொறுத்து இருக்கும்))) நம்மை மாதிரி டக்கென்று குடித்து முடிப்பதில்லை)))

    ReplyDelete
    Replies
    1. இதை மிஸ் பண்ணிட்டனே:) கரெக்ட்டாச் சொன்னீங்க... இங்கு வெள்ளைகளோடு கஃபே க்கு போவதில்லை இதுதான் எனக்குப் பயம்.. என்னால நீண்ட நேரம் வைத்தெல்லாம் குடிக்க முடியாது:)..

      Delete
  22. மனநோய்கள் இப்போது பலருக்கு அதிகரித்துவிட்டது )))

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்னைச் சொல்லலியே:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி நேசன்..

      Delete
  23. // பெரும்பாலான மெயின் சிட்டிகளில் அந்நாட்டு வெள்ளைகள் இப்போதெல்லாம் இல்லை, அப்படியான இடங்களில் வெளிநாட்டில் இருந்து வந்த மக்களே முட்டி வழிகின்றனர்,///..true athira.முதன்முதலா லண்டன் வந்தபோது அதிர்ச்சிதான். ஒரிஜனல் பிரிட்டிஷ்காரரை காணமுடியவில்லை. இங்கும் அப்படித்தான்.

    /ஆனா இந்த வெள்ளையர்களையும் நம்மவர்கள் கெடுத்துப் போடுவார்கள்.// ஒம் அதிரா.உண்மைதான். இங்கு ஹம் எனும் இடத்தில் திருவிழா நடக்கும்போது பார்க்கவேணும். சிலபேர் மனசாட்சியின்படி, அவர்கள் பழகியபழக்கத்தின்படி நடப்பார்கள். ஆனா அதையுமே எங்கட சனம் விடாயினம். உதுல நிண்டீங்களெண்டால் அன்னதானம் கிடைக்காது. முன்னுக்கு போங்கோ என. இது போனவருஷம் எங்களுக்கு முன்னால நிண்ட வெள்ளைக்கு சொல்லப்பட்டது. அவையளும் நல்லா பழகியிருக்கினம். இங்கு இப்படி இருந்தால்தான் கிடைக்கும்,நடக்குமென. நீங்க சொன்னமாதிரிதான் எல்லாமே.

    /இந்த வெள்ளையர்களில், முக்கியமாக எனக்குப் பிடிச்ச ஒரு குணம், அது என்னவெனில், ஒரே நேரத்தில் இருவரோடு வாழ்க்கை நடத்தி எங்கும் காணவில்லை///..மிகச்சரி. எங்க இடத்தில் சுற்றவர இருப்பது ஒரிஜனல் ஜேர்மன்காரர்கள். எங்க வீட்டுக்கு நேர் எதிர் வீட்டில் இருக்கும் தம்பதியினர் கடந்தவருடம்தான் பிரிந்தனர்.திருமணமாகி 5வருடம். அவா இந்தியா,இலங்கை என ஆசியா நாட்டுக்கு போனவாவாம். எங்கட வாழ்க்கை முறை பிடித்து அப்படி கல்யாணம் செய்ய ஆசைப்பட்டு அதற்கேற்ப ஒரு ஆள் (இருவரும் ஜேர்மன்)கிடைக்க செய்து ,இப்ப அவா டிவோஸ். காரணம் அவர் பொய் சொல்லிபோட்டாராம். அந்த ஆண்மகன் நல்லவர். பலமுறை மன்னிப்பு கேட்டும் இவா மன்னிக்கவில்லை.
    அப்படி பார்த்தால் எங்கட ஆட்களில் முக்கால்வாசி பேரும் டிவோஸ்தான் எடுக்கோனும்..ஹா..ஹா.. போலி வாழ்க்கைதான் இங்கு நிறையபேர் வாழ்கிறார்கள். ஒவ்வொருவர்தும் பிரச்சனை கேட்க...

    எங்கட நாட்டில டிவோஸ் எடுக்க கஷ்டம் என்பதை விட ,(அங்கு எடுக்கலாம்) என்னைப்பொறுத்தவரை நாங்க கலாச்சாரம்,கட்டுப்பாடு என கட்டுண்டு இருப்பதாலும்,வளர்ப்புமுறை,சமுதாய அமைப்பு, பயம், தன்னம்பிக்கையின்மை, ஒருவரை சார்ந்து இருத்தல் போன்ற முறைகளால் நாம் இதனை எடுக்கமுடியவில்லை.(முயல்வதில்லை.)
    இங்கு அதற்குரிய வசதி,வாய்ப்பு இருந்தாலும் அதே பிற்பாட்டுதான் தொடருது. அதனால் பிரச்சனைகள். ஆனா இங்கு வளரும் பிள்ளைகள் அதனை தொடராயினம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...

      அதேதான், லண்டன் மற்றும் பரிஸ் இல் ஃபிரெஞ்காரரையே காணவில்லை அங்கு..

      அன்னதானம் ஹா ஹா ஹா.. பாவம் வெள்ளைகளுக்கு எதுவும் புரியாது, நாம் சொல்வதை, நம் கல்ச்சர் என நினைச்சுப் பின்பற்றுவினம்:)..

      //அப்படி பார்த்தால் எங்கட ஆட்களில் முக்கால்வாசி பேரும் டிவோஸ்தான் எடுக்கோனும்..ஹா..ஹா///

      சில வெள்ளைகளின் கதை மோசமானதுதான், அப்படி வாழத்தேவையில்லை நம்மவர்கள்.. அஜஸ்ட் பண்ண முடியாத நிலைமையிலும்.. கலியாணம் கட்டியாச்சே இனி என்ன பண்ணுவது.. அடுத்த ஜென்மத்தில பார்க்கலாம் என வாழ்ந்து முடிப்பதைத்தான் ஏற்க முடிவதில்லை... எல்லோரும் மனிதர்கள்தானே.. எல்லோருக்கும் ஆசை விருப்பங்கள் இருக்கும் தானே.. அதை விடுத்து.. கட்டியாச்சு இழுத்து முடிப்போம் என வாழ்வதுதான் தப்பு என்கிறேன்.

      ///எங்கட நாட்டில டிவோஸ் எடுக்க கஷ்டம் என்பதை விட ,(அங்கு எடுக்கலாம்) //

      ஓ அப்படியா? ஈசியா கிடைக்குமோ? பல வருடங்கள் இழுபடும் எண்டெல்லோ கேள்விப்பட்டேன்.... அதிலும் இந்தியா எனில்.. பொல்லூன்றும் காலத்திலதானே கிடைச்சாலும் கிடைக்குமாம் என அறிஞ்சேன் ஹா ஹா ஹா... அப்போ என்ன பண்ணுவார்கள்.

      Delete
  24. /இங்கு ரெஜிஸ்டர் பண்ணுவதைப்போல பாட்னெர் பதிவு செய்யலாம், அப்படிச் செய்தால் Tax எல்லாம் கட்ட வரும்.// நீங்க சொன்னமாதிரி பிரிந்தால் ஜீவனாம்சம் கட்டத்தேவையில்லை. திருமணம் செய்தால் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும்.
    இவர்களின் வாழ்க்கை முறையில் இருந்துதானே நிறைய விடயங்கள் கற்றிருக்கோம்.
    ஆனா நான் ஊருக்கு சென்று இங்குள்ள பழக்கங்களை செய்ய ஒருமாதிரியே பார்த்தார்கள். நன்றி , குட்மார்னிங் சொல்வது இருக்குதான்.ஆனா சில பேர் அக்செப்ட் செய்யாமல் அப்செப்ட் ஆயிட்டினம் நான் சொல்ல.. அதுபோல கியூவில நிற்கவும் ஒருமாதிரி பார்க்கினம்.. சில இடத்தில விதிமுறையை மீறவேண்டி இருந்தது.

    மனம்விட்டுபேசுவது, குடும்பத்துக்காக செலவளிப்பது, பிள்ளைகளோடு பெற்றார் சேர்ந்து விளையாடுவது, சின்னபிள்ளைகளுக்கு புத்தகம் வாசிக்க, இரவில கதை சொல்ல, ஏன் குட்நைட் சொல்லி கட்டிபிடித்து முத்தமிட்டு நித்திரைக்கு அனுப்புவது என எத்தனை நல்ல விடயங்களை செய்கிறார்கள். நான் அறிந்தவரையில் இவைகளில் ஒருசிலர்தான் விதிவிலக்காக இருக்கிறார்கள்.
    நீங்க எல்லாவற்றையும் அருமையா சொல்லியிருக்கிறீங்க இங்குள்ள நடைமுறை வாழ்க்கையை.
    அந்த தத்துவத்தை (மனதால் நேசிக்கும் எந்த பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும் இந்த நியதி யாருக்கும் விதிவிலக்கல்ல.) புரிந்தால் நல்லவிதமாக நடக்கலாம்.
    ஊசி சிரிப்பு க்க் அஞ்சு சொன்ன மாதிரியும் இல்லையெனில் இங்கு ஜீன்ஸ்தானே அதிகம். ஊசி இணைப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. ///..அதையும் தாண்டி, பாட்னேர்ஸ் என ஒரு முறை இருக்கிறது, இங்கு ரெஜிஸ்டர் பண்ணுவதைப்போல பாட்னெர் பதிவு செய்யலாம், அப்படிச் செய்தால் Tax எல்லாம் கட்ட வரும்.. கொஞ்சம் பலமான வாழ்வுக்குள் நுழைந்து விட்டார்கள் என அர்த்தம், இப்படியே குழந்தைகளையும் பெறுவார்கள்.. இம்முறையில் பிரிய நேரிட்டால், ஜீவனாம்சம் கொடுக்கும் பிரச்சனை எதுவும் இருக்காது என நினைக்கிறேன், /// பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் (அவர்களிற்கு பிறந்த பிள்ளைகளாயின்) பணம் கட்டவேண்டும். சொல்ல நினைத்து விடுபட்டுவிட்டது அதிரா.

      Delete
    2. ///அதுபோல கியூவில நிற்கவும் ஒருமாதிரி பார்க்கினம்.. சில இடத்தில விதிமுறையை மீறவேண்டி இருந்தது. //

      ஹா ஹா ஹா உண்மைதான், வீட்டில் செருப்பு போட்டாலே ... ஏதோ புதினமா வெளிநாட்டில இருந்து வந்தவர்கள்போல இருக்கே என்பார்களாம்:)..

      ஒரு பழமொழி நினைவுக்கு வருது... கோவணாண்டிகளின் ஊரில் வேஷ்டி கட்டுபவர் பைத்தியக்காரர் என...

      அது உண்மைதானே.. இடத்துக்கு தகுந்தபடி நாம் தான் மாறோணும்.. புதினமா ஏதும் சொன்னால் வியப்பாகத்தான் பார்ப்பினம்.. நமக்குத்தான் கொஞ்சம் அந்தரமாக இருக்கும்.

      ஹா ஹா ஹா நீங்களும் நிறையச் சொல்லியிருக்கிறீங்க.. இன்னும் இருப்பின் போஸ்ட்டாகப் போடுங்கோவன்..

      Delete
    3. ///பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் (அவர்களிற்கு பிறந்த பிள்ளைகளாயின்) பணம் கட்டவேண்டும். சொல்ல நினைத்து விடுபட்டுவிட்டது அதிரா.//

      ஓ நன்றி, இதனை மேலே நெல்லைத்தமிழனுக்குச் சொல்லிட்டேன்..

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
  25. வணக்கம் பூஸ் !

    வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான் நம்ம அகராதியில்தான் இருக்கே வஞ்சகம் பொறாமை கள்ளத் தொடர்பு மொள்ளத்தொடர்பு சாதி சங்கு என்றெல்லாம் அப்போ எப்படி எம்மை வெள்ளையோடு ஒப்பிடுவது ஆக வெள்ளை வெள்ளைதான் ............


    கதையும் குறிப்பும் கவரும் போதும்
    கவிதை எழுதத் தோணல - ஏனோ
    அதையும் மீறி எழுத வந்தேன்
    அறிவு மதியைக் காணல ..!

    பாவடக்கி நிற்கும் பயன்போலும்! பண்புடையார்
    நாவடக்கி நிற்கும் நயம் !


    நம்ம வாய் எப்போதும் எதையாவது சொல்லத் துணிந்தால் அது முடிவிலியாகப் போய் முட்டி மோதுவது வழக்கம் அதனால இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

    வாழ்க நலம் பூஸ் எப்போதும் உங்கள் ஊசிக்குறிப்புகள் உள்ளம் தொடுகின்றன நன்றி

    ReplyDelete
    Replies
    1. சீராளன்... 'கதையும் குறிப்பும்....' - ரொம்ப நல்லா இருக்கு. 'அறிவுச் சந்திரனா' அல்லது நீங்கள் 'இளமதியைச்' சொன்னீங்களான்னு டக்குனு சந்தேகம் வந்தது.

      You are talented.

      Delete
    2. //சீராளன்... 'கதையும் குறிப்பும்....' - ரொம்ப நல்லா இருக்கு.
      ///'அறிவுச் சந்திரனா' அல்லது நீங்கள் 'இளமதியைச்' சொன்னீங்களான்னு ///டக்குனு சந்தேகம் வந்தது.//

      ஆங்ங்..:)))

      Delete
    3. ஹா ஹா ஹா வாங்கோ மேஜர் வாங்கோ.. அப்பொ நீங்களும் வெள்ளைகளை ஆதரிக்கிறீங்க என்பது புரியுது.. உண்மைதான் நம் நாட்டில் சிலர் ஏழனமாகப் பேசுவார்கள்.. வெள்ளைகள் ரெண்டு மூண்டென வச்சிருப்பினமாமே என... ஆனா கள்ளத்தொடர்பு என்பது நம் மக்களில்தான் பெயர்போனது என்பதை அறியாமல்..:).

      //கதையும் குறிப்பும் கவரும் போதும்
      கவிதை எழுதத் தோணல - ஏனோ
      அதையும் மீறி எழுத வந்தேன்
      அறிவு மதியைக் காணல ..!//

      கவிதை எழுதவில்லை என ஒரு கவிதையா சூப்பர்ர்:)..

      மிக்க நன்றி சீராளன்.

      Delete
    4. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. இளமதிக்கு மீ வச்ச பெயர் யங்மூன்:)..

      அது அறிவுமதி என மாறிச் சொல்லிட்டார்:) சந்திர கிரகணம் என்பதால மதி ஆக்கிட்டார்ர்.. அதிராவை அறிவுச் சூரியன் எனத்தான் சொல்ல வந்தார் சீராளன்:).. ஹையோ.. என் வாய் அடங்காதாமே:))

      Delete
  26. வணக்கம் அதிரா!

    அரிய கருத்தினை அள்ளி வழங்கிப்
    பெரிய மகிழ்வால் பிணைத்தீர்! - உரியநல்
    ஆற்றல் மிகுந்த அதிரா! வலையுலகு
    போற்றுமென்றும் உம்மைப் புகழ்ந்து!

    வெள்ளையர் உள்ளமும் வெள்ளை! அவர்குணமும்
    உள்ளங்கை நெல்லிக் கனி!

    அதிரா!.. நல்ல தலைப்பும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய பல விடயங்களைத் தொகுத்துத்தந்திருக்கிறீங்கள்!
    அருமை!

    ReplyDelete
    Replies
    1. குறளும் நல்லா இருக்கு. வெண்பால என்னவோ பிரச்சனை தெரியுதே.

      ஆற்றல் மிகுந்த அதிரா! வலையுலகு
      போற்றுமென்றும் உம்மைப் புகழ்ந்து - போற்றுமென்றும்ல தான் என்னவோ பிரச்சனை.

      Delete
    2. வணக்கம் சகோ நெல்லைத் தமிழன்!..:)

      //நெல்லைத் தமிழன்Wednesday, January 31, 2018 7:22:00 am
      குறளும் நல்லா இருக்கு. வெண்பால என்னவோ பிரச்சனை தெரியுதே.//

      அப்படியா சகோ!.. :))

      இதோ இப்படியெனில்…

      அரிய கருத்தினை அள்ளி வழங்கிப்
      பெரிய மகிழ்வால் பிணைத்தீர்! - உரியநல்
      ஆற்றல் மிகுந்த அதிரா! வலையுலகு
      போற்றுமென்று(ம்) உம்மைப் புகழ்ந்து! இப்போ சரியாக இருக்கிறதா…:))

      (ம்) மை அடைக்காது விட்டேன். சிலநேரம் வாசிப்போருக்கு அது இலகு என்று!
      அடைக்காததினால் அங்கொன்றும் மரபு வழுவடையவில்லை.

      அதற்கு மாற்றாக இப்படிப் /போற்றுமென்று மும்மைப் புகழ்ந்து!/ போட்டிருக்கோணும்.
      அதைப் படிக்கும்போது இனிமை போய்விடுமே… அதனால் ‘ம்’ மை அடைக்கவில்லை..:))

      உங்களின் அன்பான அக்கறையான இனிய ரசனைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல சகோ!

      Delete
    3. வாங்கோ இளமதி வாங்கோ..

      ///அரிய கருத்தினை அள்ளி வழங்கிப்
      பெரிய மகிழ்வால் பிணைத்தீர்! - உரியநல்
      ஆற்றல் மிகுந்த அதிரா! வலையுலகு
      போற்றுமென்றும் உம்மைப் புகழ்ந்து!

      வெள்ளையர் உள்ளமும் வெள்ளை! அவர்குணமும்
      உள்ளங்கை நெல்லிக் கனி!///

      ஆவ்வ்வ்வ்வ் புல்லாஆஆஆஆ அரிச்ச்சிட்டேன்ன்ன்ன் மிக்க நன்றி:).. இப்போ ஊரெல்லாம் புகைப் போகுமே:))) ஹா ஹா ஹா...

      Delete
    4. @ நெல்லைத்தமிழன்
      ///ஆற்றல் மிகுந்த அதிரா! வலையுலகு
      போற்றுமென்றும் உம்மைப் புகழ்ந்து - போற்றுமென்றும்ல தான் என்னவோ பிரச்சனை.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிராவை ஆரும் போற்றினால் பிடிக்காதே:)) நல்லவேளை இங்கின என் செக் இல்லை:) அதனால கொஞ்சம் சேஃப் ஆ இருக்கிறேன் இப்போதைக்கு:)..

      Delete
  27. உண்மைதான் அதிரா… வெள்ளையர்களிடம் நாம் கற்றுக் கடைப்பிடிக்க நிறைய விசயங்கள் உண்டு.
    முக்கியமாகக் கண்டவுடன் காலையோ மதியமோ மாலையோ அதற்கேற்றாப் போல் வணக்கம் சொல்லிப் பேசத் தொடங்குதல், நன்றி கூறுதல், மாற்றுக்கருத்தாயினும் மிகப் பதமையாக அன்பாகச் சொல்லுதல், உதவி செய்யும் மனப்பாங்கு இப்படி நிறையச் சொல்லலாம்.

    நான் அவர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அடுத்தவரை ஏமாற்றுதலோ, பணம்பிடுங்கும் புத்தியையோ, அவதூறு சொல்வதையோ கண்டதில்லை. வேலை முடிந்து பஸ் பிடித்து வீடு வர நேரமாகும் சமயத்தில் என்னுடன் வேலை செய்பவர்களில் சிலர் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களாகவே தமது காரில் வீட்டுக்குக் கூட்டிவந்து விட்டுப் போவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதுவரை வெள்ளையர்களை நம்மவர்கள் ஆரும் குறை சொல்லி நான் கண்டதிலை, தானுண்டு தம்பாடுண்டு எனத்தான் இருப்பார்கள்..

      Delete
  28. நம்பிக்கைக்கு அவர்கள்தான் என்பதற்கு இன்னுமொன்று சொல்லுறேன்...
    எம் வீட்டுக்குச் சுற்றவர இருப்போர் எல்லோரும் ஜேர்மன்காரர். எங்காவது தூரதேசம் போகும் சமயத்தில் நாம் பக்கத்துவீட்டு ஜேர்மன்காரரிடம் எம் வீட்டுத்துறப்பினைக் கொடுத்துவிட்டுப் போயுள்ளோம். வீட்டில் கூட்டில் வளர்த்த லவ்பேர்ட்ஸ் பராமரிப்புக்காகவும், வைத்திருந்த சில பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் விடவும் தேவை இருந்தது. சொன்ன வேலையை மட்டும் வந்து பார்த்துச் செல்வார்கள். அதைவிட வைத்த பொருள் வைத்த இடத்திலேயே இருக்கும். அத்தனை நம்பிக்கைக்கு உரியவர்கள் அவர்கள்!
    நல்ல மனத்தோடு எங்களையும் அவர்களில் ஒருவராக மதித்து வைத்திருப்பதால்தான் இன்று,
    நாமும் ஜேர்மனியர், நாமும் சுவிஸ் பிரஜைகள், நாமும் பிரிட்டிஷ்காரர் என்று பெருமை கொள்கின்றோம்.
    உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யாமலும் எங்கள் மதிப்பை நாமே இழக்கும் செயல்களைச் செய்யாமலும் இருத்தலே எதிர்காலச் சந்ததிகளுக்குப் சிறப்பைத் தரும்.
    சிந்தித்துச் செயலாற்றுவோம்!

    ஊசி இணைப்புக்கள் மிக அருமை! நல்ல பதிவும் பகிர்வும் அதிரா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா.. ஹா ஹா ஹா எங்கள் வீட்டுக் கீயையும் இப்பவும் ஸ்கொட்டிஸ் குடும்பத்திடம் தான் குடுத்து விட்டுப் போய் வருவோம்...

      நிறைய நினைவுகள் பகிர்ந்திருக்கிறீங்க மிக்க நன்றி.

      Delete
  29. ஊசிக்குறிப்பை விட ஊசிச்சிரிப்பு அருமை! நல்ல அவதானிப்பு! எப்போவானும் ஸ்காட்டுக்கு வந்தால் பயன்படும்! :)) உங்க பெட்டர்ஃபுல் நல்லாவே அட்வைஸ் பண்ணுகிறார். பொதுவா நம் நாட்டில் கொஞ்சம் வெள்ளைத் தோலைப் பார்த்து மயங்கும் குணம் உண்டு! அதான் அங்கே வந்தும் அப்படி நடக்கிறார்கள். இன்னமும் பிரிட்டிஷாருக்கு அடிமையாக இருந்த நினைப்புப் போகலையோனு தோணும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      //எப்போவானும் ஸ்காட்டுக்கு வந்தால் பயன்படும்! :))//

      ஹா ஹா ஹா இவர்கள் மட்டுமென்றில்லை பொதுவா ஒரிஜினல் வெள்ளைகள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்கள்..

      //இன்னமும் பிரிட்டிஷாருக்கு அடிமையாக இருந்த நினைப்புப் போகலையோனு தோணும்!//

      ஓ இதைத்தான் மேலே நெல்லைத்தமிழன், அடிமைக்குணம் அதிகம் எனக் குறிப்பிட்டவரோ.. இப்போதான் புரிகிறது..

      மிக்க நன்றி கீதாக்கா.

      Delete
  30. ஆகா..

    நன்றாகத் துவைத்து அலசி காய வைத்திருக்கின்றீர்கள்..

    பொதுவாக எப்படி என்று தெரியவில்லை...

    எங்கள் சமூகத்தில் ஐயனாரை வழிபடுபவர் முன்பின் அறியாதவர்களாக இருந்தால் கூட அனைவரும் பங்காளிகள்..

    ஐயனாருக்கு மாற்றுப்பெயர்கள் அடைமொழிகள் இருந்தாலும் கூட வேறு படுத்திக் கொள்வதில்லை..

    ஐயனாரை வணங்குபவர்கள் சகோதரர்கள்..
    சகோதரத்தின் வம்சாவழிகள் உடன்பிறப்புகள் ஆயிற்றே...

    மாற்றாக வேறு தெய்வங்கள் எனில் கொண்டாட்டம் தான்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..

      ஓ தெரிஞ்சு வைத்திருப்பது நல்லதாப்போச்சு.. உங்களூருக்கு வந்தா இனி நாங்களும் ஐயனாரைத்தான் வழிபடுவோம் எனச் சொல்லிட வேண்டியதுதான் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  31. லேட்டாக வந்தாலும் படித்துவிட்டேன் ஆனால் நேரமில்லாததால் நிறைய பதில் கருத்து எழுத முடியாமல் ஒடுகிறேன் மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ..

      பறவாயில்லை படிச்சேன் எனச் சொல்லிட்டீங்க அதுவே மகிழ்ச்சி.. மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  32. ஊசிச்சிரிப்பு அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமெட் வாங்கோ.. ஓ ஊசிச்சிரிப்புக்கு சிரிச்சிருக்கிறீங்க ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  33. இங்குள்ளவர்களின் நல்ல பழக்கம் இன்னுமொன்று punctually. நம்மவர்கள் கடைப்பிடிக்க தவறும் விடயமாகும். ஒரு விசேஷமென்றால் நேரத்துக்கு செய்கிறார்களா...???

    ReplyDelete
    Replies
    1. ஓம் பிரியா நான் சொல்ல நினைச்சுமறந்திட்டேன். நீங்கள் சொல்லீட்டீங்க... நன்றி!
      இந்த நேரத்திற்கு போறது, செயல்களைச் செய்யுறது எதுவும் நம்மவர்களிடம் எதிர்பார்க்கேலாது.
      பல கோயில்களில் பூசை நேரத்துக்கு நடக்கும் ஆனா உபயகாரர் வரப்பிந்தினா கும்பிட வந்தவையோடு சாமியும் காவல் இருக்கோணும்..:))

      Delete
    2. ஹா ஹா ஹா அம்முலு, இளமதி.. நினைச்சு நினைச்சு எழுதியிருக்கிறீங்க.. படிப்போருக்கு அனைத்தும் இன்றஸ்ட்டா இருக்கும்.. மிக்க நன்றி.

      Delete
  34. அறியாத பல செய்திகளை அறிந்து கொண்டேன்
    ந்ன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன்.. மிக்க நன்றி.

      Delete
  35. Replies
    1. வாங்கோ வாங்கோ.. இம்முறை புதுப்பெயரில் வந்திருக்கிறீங்க.. இது யார் புதியவர் என ஒரு கணம் திடுக்கிட்டுத் தெளிஞ்சேன்:).. மிக்க நன்றி.

      Delete
  36. நீங்கள் சொல்லியிருக்கும் பல விஷயங்களுக்கு நான் ஹை5 தருகிறேன். செல் மூலம் அனுப்புவதால் நீண்ட பின்னூட்டம் அனுப்ப முடியவில்லை. வெளி நாடுகளில் வசித்து விட்டு இந்தியா திரும்பும் பலர் தொடர முடியாமல் மீண்டும் வெளி நாட்டிற்கே செல்வதற்கு அங்கிருக்கும் வசதிகள் மட்டுமல்ல, வாழ்க்கை முறையும் காரணம் என்று நினைக்கிறேன். இந்தியர்களுக்கு எல்லாவற்றிலும் டபுள் ஸ்டாண்டர்ட்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ...

      //வெளி நாடுகளில் வசித்து விட்டு இந்தியா திரும்பும் பலர் தொடர முடியாமல் மீண்டும் வெளி நாட்டிற்கே செல்வதற்கு அங்கிருக்கும் வசதிகள் மட்டுமல்ல, வாழ்க்கை முறையும் காரணம் என்று நினைக்கிறேன்.//

      இது சத்தியமான உண்மை... இங்கு வந்த ஒருவர் சொன்னா, நான் இனி உயிர்போனாலும் இந்தியாவில் போய் வாழ மாட்டேன், அங்கு கூட்டுக் குடும்பமாக இருந்தோம்.. இப்போதான் நிம்மதியா இருக்கிறோம் என...

      அடுத்து மாமியார்.. நாத்தனார் தொல்லைகளௌம் இல்லையெல்லோ:)).. ஹையோ எல்லோரையும் சொல்லவில்லை:) தொல்லை கொடுப்போரை மட்டும் சொன்னேன்:)..

      என்னை ஆரும் திட்டுவார்களோ தெரியவில்லை, என் அறிவுக்கெட்டியபடி, இந்தியாவில் பெண் சிசுக்கொலை, பெண் அடிமை, மறுமணம் முடிக்கத்தடை இப்படிப் பல அடக்கு முறைகள் ஓவராக இருந்தமையாலயே இப்போ பெண்கள் .. மற்றத் தொங்கலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்களோ என எண்ணத் தோணுது... இப்போ பெண்கள் அங்கு அதிகம் குமுறுவதற்குக் காரணம்.. ஆரம்பத்தில் இருந்த ஓவர் அடக்கு முறையோ எனத்தான் எண்ணத் தோணுது எனக்கு.

      மிக்க நன்றி.

      Delete
  37. அதிரா அருமையாக வெளிநாட்டினர் குணநலங்களை குறிப்பிட்டீர்கள்.
    அந்தகாலம் போல் பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து மடிய விரும்பாதவர்கள் இப்போது அதிகம் ஆகி விட்டனர்.

    உங்கள் ஊசிக்குறிப்பு, ஊசி சிரிப்பு, தத்துவம் எல்லாம் அருமை.
    உங்கள் பழைய பதிவுகளை எல்லாம் படித்துக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ, உங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு இப்போ வலை உலகில் மீண்டும் வரத் தொடங்கியிருக்கிறீங்க மகிழ்ச்சி.

      //அந்தகாலம் போல் பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து மடிய விரும்பாதவர்கள் இப்போது அதிகம் ஆகி விட்டனர்.//

      உண்மைதான், இப்போ கூட சென்னையில் திருமணமாகி 5 மாதங்களே முடிந்திருக்கிறதாம், முதல் மாதமே குழந்தை தங்கவில்லை என மாமியார் ஒரே ஏச்சாம் பெண்ணிற்கு... 2ம் மாதமும் தங்க வில்லை என்றதும், கூட்டி வந்து தாய் வீட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்...மருத்துவம் பார்த்து பிரச்சனை என்ன எனக் கண்டுபிடித்து வா என.

      தாய் தந்தை டொக்டரிடம் அழிச்சுப் போன இடத்தில் குழந்தை தங்கியிருக்கிறது எனக் கன்ஃபோம் ஆச்சு... ஆனா அதன் பின் பெண் மாப்பிள்ளை வீட்டுக்குப் போக மறுக்கிறாவாம்.. இப்போ டிவோஸ் எடுக்கலாம் எனும் பேச்சு அடிபடுகிறதாம்.. மாப்பிள்ளை வீட்டாரும் ஒத்துப் போவதுபோல பேசாமல் இருக்கின்றனராம்...

      ஆனா இப்படிப் பட்ட குடும்பத்தில் வாழ்வதை விட பிரிந்து விடுவது மேல் தானே.. இக்காலத்தில் நிலைமை மாறிக் கொண்டுதான் வருகிறது.

      Delete
  38. பாடலும், ஊசி இணைப்பும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஓ உங்களுக்குப் பாட்டுப் பிடிச்சிருக்கு...

      மிக்க நன்றி .

      Delete
  39. ஓ!!!! அதி.............................ரா...................எப்படியோ இந்தப் பதிவை மிஸ் பண்ணிட்டோம்.....இணையமு சரியா வேலை செய்யலை...ராத்திரி அதிகாலை மட்டும்தான் அதாவது அமெரிக்க நேரத்தில்தான் வேலை செய்யுது...ஹா ஹா ஹா....நான் திங்கள் இரவு வந்து நெட் வேலை செய்தால் துளசி அனுப்பும் கருத்துகளை வெளியிடுவேன்...

    திங்கள் வந்து வாசிக்கிறோம்...அதிரா...ஓகேயா...
    இப்ப எல்லாம் கும்மி கோலாட்டம் எல்லாம் அடிக்க முடியலை...நெட் பிரச்சனையால்...

    கீதா

    ReplyDelete
  40. //இன்னொன்று, நம் நாட்டில்தான் ஒரு முறை இருக்கு// :-)

    எங்கட‌ பக்கம் மாமாவைக் கட்டவே நினைக்க‌ மாட்டோம். அது போலதான் பிரதேசத்துக்குப் பிரதேசம் பழக்கங்கங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக‌ இருக்கிறது. எல்லாவற்றுக்கும் பின்னால் வலுவான‌ ஒரு காரணம் இருக்கும்.

    வேறு எங்கோ ஒரு நாட்டில் (ஆபிரிக்கப் பகுதி ஒன்று, பெயர் நினைவிலில்லை.) எங்கட‌ முறைக்கு வித்தியாசமாக‌ ஒன்றுவிட்ட‌ சகோதர்களை (சித்தப்பா, சித்தி. பெரியப்பா, பெரியம்மா பிள்ளைகளை) மணக்கும் முறை இருக்கிறது. இங்கு ஏழாம் ஆண்டு மாணவர்களது, 'நொவல் ஸ்டடி' புத்தகம் ஒன்றிலிருந்த‌ உண்மைக் கதையொன்றில் படித்திருக்கிறேன். 'Jane Eyre' புத்தகத்திலும் சகோதர்கள் திருமணம் செய்யும் வழக்கம் இருந்திருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. வெள்ளை, கறுப்பு, மீடியம் எல்லோர் மத்தியிலும் இந்த‌ வழக்கம் இருந்தேதான் இருக்கிறது. :‍)

    எங்கள் வெள்ளிவிழாவின் போது பாடசாலையின் பூசை வைத்தார்கள். அப்போது என் திருமணம் பற்றி சின்னவர்கள் கேட்ட‌ கேள்விகளுக்குப் பதில் சொல்ல‌... அவர்களுக்கு ஆச்சரியம், 'எப்படி கசினை மணக்கலாம்!' என்று. ஒரு ஆசிரியை அசூயையோடு முகத்தைச் சுளித்தார். :‍) (பிறகு அவ‌ தான் அந்த 7ம் ஆண்டுக்கு நொவல் ஸ்டடி எடுத்தவ‌.)

    சிங்களப் பெண்கள் லவ் பண்ணுற‌ ஆளையும், 'அய்யா' (அண்ணா) எண்டுதான் கூப்பிடுவினம். :‍)

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.