என்னையும்...தேன்ன்ன்ன்ன்ன்:)))
என்னை தொடர் பதிவு எழுத அழைத்த கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சலினுக்கு மிக்க நன்றி.
அத்தோடு, நான் அழைத்து:), ஓடிவந்து எழுந்தப்போகும் “அந்த ..... க்கும்” மிக்க நன்றி. ஹா...ஹா...ஹா.... இப்போ, கீழ போய்ப் பார்த்திடாதீங்க மக்கள்ஸ்ஸ்:), முழுவதையும் படிச்சிட்டு, அப்புறமா பாருங்க ஓக்கை:)).
--------------------------------------------------------------------------------------------
முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
--------------------------------------------------------------------------------------------
1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
1. குடும்பத்தோடு நீண்டதூரம் காரில் “றைவ்” போவது.
2. நல்ல சோவெண்ட மழை அல்லது ஸ்ஸ்ஸ்னோ நாளாக இருக்க வேண்டும், ஸ்கூல், வேர்க் எதுவும் இருக்கப்படாது:), விரதம் இல்லாத நாளாகவும் இருக்க வேண்டும், நல்ல வடிவா சமைத்துச் சாப்பிட்டுப்போட்டு, படம் பார்த்து... கூத்துப்போடுவது(வீட்டுக்குள்ளேயே) ரொம்பவும் பிடிக்கும்.
3. காலையில் பரபரப்பாக எழுந்து, ரீ, உணவு கொடுத்து, வெளிக்கிடப்பண்ணி டாட்டா சொல்லி அனைவரையும் அனுப்பியபின், ஒரு மயான அமைதி வீட்டில் நிலவும்,அப்போது ஒரு கப் ரீ ஊத்திக்கொண்டு, சோபாவில் இருந்து வெளியே ஆற்றைப்பார்த்துக்கொண்டு, மெல்லமாக பாடலை சிடியில் போட்டுக் கேட்டுக்கொண்டு ஒரு 15 நிமிடமாவது இருக்கும்போது..... அதுவும் பிடிக்கும்....
இன்னும் நிறையப் பிடிக்கும்... ஆனா வாணாமாம்:)), சொல்லப்பிடாதாம்:) 3 போதுமாமே.
--------------------------------------------------------------------------------------------
ஆகாயப் பந்தலிலே.. பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
--------------------------------------------------------------------------------------------
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?1.இழப்பு(எந்த இழப்பாயினும், உயிர், பணம், பதவி, பெயர், புகழ், நல்லபெயர்...). பிறந்ததிலிருந்து எதுவும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இருந்ததை இழந்திடக்கூடாது!!!!.
2. காரணமின்றி தொட்டதுக்கெல்லாம்,கோபித்து, முகத்தை உம் என வைத்திருப்பது..... பிடிக்கவே பிடிக்காது. நேரே கதைத்துப் பேசி கிளியராகிட வேண்டும், மனதில் வைத்துக் கடைந்து, பின் சாதிப்பது.
3. “அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் தேனும்” என்பார்களே.... அப்படியானவர்களைப் பிடிக்காது, ஆனா அப்படியானவர்களை என்னால் உடனே கண்டு பிடிக்கவும் முடியாது:(. சரியோ தப்போ, நேரே வெளிப்படையாகப் பேசுவதே பிடிக்கும்.
--------------------------------------------------------------------------------------------
பறவையின் சிறகுகள் விரிந்தால்தான்
வானத்தில் அது பறக்கும்
வானத்தில் அது பறக்கும்
--------------------------------------------------------------------------------------------
3) பயப்படும் மூன்று விஷயங்கள்
1.பிறந்ததிலிருந்து இன்றுவரை முன்னுக்கு இருப்பது, “பயம்” தான். இருட்டென்றாலே பயம். இரவில் ஏதும் சத்தம் கேட்டால்.. இதயம்... புஸுக் பூஸ் என அடிக்காது:)... டொமார்:)... டொமார்:) என அடிக்கும்... காதில் அந்த ஒலி பலமாகக் கேட்கும்.
2. மது அருந்தியோர்.... அவர்களுக்கு வெறி இல்லையென்றாலும், மணம் அவர்களிலிருந்து வருகிறதென்றால் பயம். இங்கெல்லாம் அப்படிக் காணவில்லை. ஆனா இலங்கையில் ஆராவது குடித்துவிட்டு கொஞ்சம் தள்ளாடிக்கொண்டு வருவதுபோல தெரிந்தாலே பாதை மாத்தி ஓடிவிடுவேன். இங்கு ரோட்டோரங்களில்அடிக்கடி barஇருக்கும். அதன் வாசலில் சிலர் நின்று கதைப்பார்கள், அவர்களைக் கடக்கும்போது நெஞ்சு பக் பக் என அடிக்கும்(ஆனா அவர்கள் குடிக்காமலும் நிற்கக்கூடும், என் மனப்பயத்தை நீக்க முடியவில்லை).
3. ஊர்வனவற்றைப் பார்த்தால் பயம், ஏன் நினைக்கவே பயம்(மண்புழு, அனைத்து நெளியும் புழுக்களும்,மசுக்குட்டி, ஸ்லக்... இப்படியானவை). ரீவியில் காட்டினாலே கண்ணை மூடிவிடுவேன். இது தெரிந்தே என் மகன், என்னிடம் கேட்பார்.. அம்மா வன் மில்லியன் பவுண்ட்ஸ் தருகிறேன் என்றால் மண்புழுவைப் பிடிப்பீங்களோ என...:))).... அதைக் கேட்டாலே உடம்பெல்லாம் கூசும்.
--------------------------------------------------------------------------------------------
கடவுள் நினைத்தான் மணநாள் தொடுத்தான் வாழ்க்கை உண்டானதே
கண்ணே நீ வாழ்கவே!!! கலைமகளே நீ வாழ்கவே!!
கண்ணே நீ வாழ்கவே!!! கலைமகளே நீ வாழ்கவே!!
--------------------------------------------------------------------------------------------
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
1. மரணம் ஏன் வரவேண்டும்? சரி ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், வயதாகி வரலாம்... சின்னச் சின்ன பிஞ்சுகளுக்கெல்லாம் ஏன் வரவேண்டும்?.
2. எம் பிறப்புக்கு முன் எப்படி இருந்தோம்? மரணித்த பின் எப்படி இருப்போம்? இப்போதுள்ள வாழ்க்கை மரணத்தின் பின்பும் எமக்குத் தெரியுமா? அங்கே என்ன நடக்கிறது?. இப்போ நடக்கும் நல்லது கெட்டதுக்கெல்லாம் விதி என்கிறோம். ஒரு தடவை இலங்கையிலே இலங்கை/இந்திய ராணுவம் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தவேளை, விசாரணை எனக் கூறி 35 ஆண்களை மட்டும் அழைத்துச் சென்று, ஒரு சுடலைக் காட்டிலே அத்தனை பேரையும் சுட்டு, எரித்தார்கள், அதில் கிட்டத்தட்ட 30 பேர் திருமணமானோராம், அப்போ ஒரே நேரத்திலே 30 குடும்பத்துக்கு தந்தை இல்லை கணவன் இல்லை.....
இதுவெல்லாம் விதியா? ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்?. (சுனாமி... இப்படியெல்லாம் பல கதைகள் இருக்குதுதானே, ஆனா சின்னனில் நான் கேட்டு ரத்தம் உறந்துபோன கதைதான் நினைவில் இருக்கு.. எங்கள் வீட்டிலிருந்து ஒரு 10 மைல் தொலைவில் நடந்த சம்பவம்தான் அது).
3. நன்மை செய்வோர், நல்லவர்கள், கண் முன்னே துன்பம் அனுபவிக்கிறார்கள், கஸ்டப்படுகிறார்கள். ஆனால் பொல்லாதவர்கள், அடுத்தவருக்கு 5 சதம்கூட உதவி செய்யாதவர்கள், அடுத்தவர் குடும்பத்தை நாசமாக்கியோர்.. இவர்களெல்லாம் நல்லா இருக்கிறார்கள்... இது எப்படி?.
இவை எல்லாம் முற்பிறவிப் பயன் என்கிறார்கள். ஆனாமுற்பிறவி என்று ஒன்று இருந்ததென எப்படிச் சொல்ல முடியும், கொஞ்சமாவது எமக்கு முற்பிறப்பு நினைவிருக்கோ? இல்லையே?....
இதில் கொஞ்ச நஞ்சமல்ல... நிறையவே குழப்பங்கள் கேள்விகள் என்னிடம் இருக்கு. ஆராவது நல்ல பதில் சொல்லும்போது, விடை கிடைத்துவிட்டதுபோல இருக்கும்,
ஆனா மீண்டும் மனம் குழம்பிப்போய்க் கேள்விகள் கேட்கும்.
--------------------------------------------------------------------------------------------
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
--------------------------------------------------------------------------------------------
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
ஒவ்வொன்றுக்கும் என ஒவ்வொரு மேசை இருக்கிறது, அதற்குரிய பொருட்கள் தவிர்த்து, மேசையில் எதுவும் வைப்பது பிடிக்காது. கொம்பியூட்டர் மேசை எனில்,அதற்குரிய பொருட்களே இருக்க வேண்டும், ஹோலில், கிச்சினில் எனில் ஒரு அழகிய வாஸ் மட்டுமே வைப்பேன்.
எந்த வேலையாயினும், மேசையில் வைத்துச் செய்து முடித்ததும், அனைத்தையும் தூக்கி உள்ளே வைத்துவிட்டு மேசையை ஃபிரீயாக வைத்திருப்பதையே விரும்புவேன்... ஆனா அதையும் மீறி.. பென்சில் ரேசர்... கொப்பி, புத்தகம்.. etc..etc.. அப்பப்ப:) தென்படும்.
--------------------------------------------------------------------------------------------
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாயது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
--------------------------------------------------------------------------------------------
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
எனக்கு + என் குடும்பத்துக்கு நகைச்சுவை என்றாலே.. அது யார் சொன்னாலென்ன... பிடிக்கும். வீட்டிலேயே மிகவும் நகைச்சுவையாளர் என் கணவர்தான். எதையாவது சொல்லி சிரிப்புக் காட்டிக்கொண்டே இருப்பார். எம்மிடம் வருவோர் சொல்வார்கள், உங்கள் வீட்டில் இருந்தால் நேரம் போனதே தெரியாமல் சிரித்துவிட்டோம் என...
நிறைய வாசிப்பார்... கேட்பார்(மீடியாக்கள்) பின் மறக்காமல் சொல்வார். அதனால் வீட்டில் ஒரு ஆசைக்குக்கூட கோபிக்க முடியாமல் இருக்கும்:), கோபம் வந்தால் (எனக்கு:)) எதையாவது சொல்லி சிரிப்பாக்கிடுவார்.
எங்களுக்கென குடும்பப் பழமொழி இயற்றி வைத்திருக்கிறோம்:).... அது “No வெட்கம் No ரோஷம்”:). ஆருக்காவது எமக்குக் கோபம் வந்தால், குடும்பப் பழமொழியை மறந்து கோபிக்கலாமோ எனக் கேட்டே சிரித்திடுவோம்.. ரோஷம் இருந்தால்தானே கோபம் வரும்?:)))). இப்பழமொழியால் வெளியாட்களோடு எமக்கு கொஞ்சம் கோபமாக வந்தாலும், எமக்குத்தான் நோ வெட்கம், நோ ரோஷமாச்சே, பிறகெதுக்கு கோபிக்கவேண்டும் என எமக்குள் நாமே சொல்லி மனதை மாற வைத்திடுவோம்:).
புளொக்குகளிலும் பல நகைச்சுவைப் பின்னூட்டங்கள், பல பதிவுகள் பார்த்து விழுந்தூஊஊஊஊஊ விழுந்தூஊஊ சிரிப்பதுண்டு... நல்லவேளை அடிகிடி எப்போதும் படவேயில்லை விழுந்ததால:))).
--------------------------------------------------------------------------------------------
காற்றினில் பிறந்தவளோ அதிலே கற்பனை வடித்தவளோ
சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ
சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ
--------------------------------------------------------------------------------------------
7)தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
1. கோடை என்பதால் கார்டினிங்..
2. பெயிண்டிங் + பூப்போடும் வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கு.(தனிப்பதிவாக பின்பு படம் போடுகிறேன்).
3. மீன் தொட்டியில் மீன்கள் வளர்ப்பது(தண்ணி மாத்துவது, லைட் போடுவது, சாப்பாடு போடுவது அனைத்தும் என் வேலைதான்:)) . நான் வீட்டில் இல்லையெனில் அவை பட்டினிதான்:)).
--------------------------------------------------------------------------------------------
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே..
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
--------------------------------------------------------------------------------------------
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
வாழ்நாள் எப்ப முடியப்போகுதெண்டே தெரியாதே..2012 இல் உலகம் அழியப்போகுதாமே:)))... அதுக்குள் மனதில்/கைவசம் இருக்கும் பொக்கிஷங்களை புளொக்கில ஆவது எழுதிடோணும் என எதிர்பார்க்கிறேன் அவ்வ்வ்வ்வ்வ்:)).
ஒரு தடவையாவது, பிளேனில பைலட் சீட்ல இருந்து பயணம் செய்யோணும்(அதொன்றுதான் பார்க்காத சீட்).
நிறைவேற முடியாத ஆசை ஒன்றிருக்கு.... விண்வெளியில போய் நடக்க ஆசை:)). எனக்கு ஸ்பேஸ் புரோகிராம் எண்டால்... நித்திரைகொள்ளாமல் பார்ப்பேன்..
-------------------------------------------------------------------------------------------
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது
பறந்தோடி இரை தேடி பிள்ளைக்குக் கொடுக்கின்றது
பறந்தோடி இரை தேடி பிள்ளைக்குக் கொடுக்கின்றது
--------------------------------------------------------------------------------------------
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
நிறையவே பயப்படுவேன், ஆனால் எந்த விஷயமாயினும் செய்து முடித்துவிடுவேன், முடியாதென பெரிதாக எதுவும் சொல்ல மாட்டேன், கண் பார்த்தால் கை செய்யும்.
சமையல், தையல், பூப் போடுதல், பெயிண்டிங், சில கைவினைப் பொருட்கள் செய்தல், பெட்டி, பின்னுதல்(இப்போ கொஞ்சம் மறந்திருக்கிறேன்)... இவை எல்லாம் வகுப்புப் போய் பழகவில்லை, எல்லாம் பார்த்துக் கேட்டு அறிந்து செய்பவையே....
இன்னுமொன்று சூஊஊஊப்பராகப் பாடுவேனே நான்:)))))))))))))))))))...
சிந்து சிந்து நான் ஒரு சிந்து....
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓஓஓஓஓஓ மைனா ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ மைனா.... கேட்குதோஒ? நான் பாடுவது? சூப்பராக இருக்கில்ல?:)))... சரி சரி முறைக்காதீங்கோ கர்ர்ர்ர்ர்:)).
--------------------------------------------------------------------------------------------
மனதாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோயிலே ஓடிவா
--------------------------------------------------------------------------------------------
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. ஆராக இருப்பினும்... சிறியவரோ பெரியவரோ ... இறந்துவிட்ட செய்தி... உடனே ஒருகணம் இதயம் டிக் என ஸ்தம்பித்து அடிக்கும்.
2. வாய் கூசாமல், தேவையில்லாமல் சொல்லும் பொய்கள், சடாரென முகத்திலடிப்பதுபோல, அன்பில்லாதமாதிரி, அன்பாக இருப்போர் கூறினால் ..
3. தேவையில்லாத:)))), நமக்கு உபயோகமே இல்லாத அடுத்தோரைப் பற்றிய விடுப்ஸ்:) செய்திகள்.
--------------------------------------------------------------------------------------------
சிறிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும்
பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன
பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன
--------------------------------------------------------------------------------------------
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
கற்றுக்கொள்ள நிறையவே இருக்கு, கற்றது கை மண் அளவுகூட இல்லையே, ஆனால் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை.
--------------------------------------------------------------------------------------------
மடியில் பிறந்த நதியை மலைகள்
மறைத்து வைப்பதும் இல்லை
செடியில் பிறந்த மலரைச் செடிகள்
சிறையில் வைப்பதும் இல்லை
மறைத்து வைப்பதும் இல்லை
செடியில் பிறந்த மலரைச் செடிகள்
சிறையில் வைப்பதும் இல்லை
--------------------------------------------------------------------------------------------
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
1. சைனீஸ் உணவுகளே முதலிடத்தில் பிடிக்கும்.
2. KFC சிக்கின்:)
3. அவித்த கோழி முட்டை(ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ:))). சைவ உணவுகள் பிடிப்பது குறைவு:(, ஆனா நிறைய நாட்கள் சைவமாக இருப்போம்(கோயில்கள்,விரதங்கள்).
அசைவ உணவுகள்தான் பிடிக்கும் அதிலும் மட்டின்தான் அதிகம் பிடிக்கும்...
--------------------------------------------------------------------------------------------
கங்கைக் கரைக் கோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே கண் திறந்து பார்த்தேன்
கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே
கண்ணன் நடுவினிலே கண் திறந்து பார்த்தேன்
கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே
--------------------------------------------------------------------------------------------
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
அப்படியெல்லாம் முணுமுணுக்கமாட்டேன்:))). பிடித்த பாடல்கள் பல உண்டு.. குறிப்பிட்டு எதைச் சொல்வேன் எதை விடுவேன்....
10 வயதாக இருந்தபோது கேட்ட பாடல்கள்... சூப்பராக இருந்தன... இப்பவும்தான், அதேபோல 20 வயதாக இருந்தபோது வெளிவந்த பாடல்கள் அவையும் சூப்பரே... அதேஏஏஏஏஏபோல இப்போ சுவீட்16:) இல் இருக்கும்போது பல அருமையான பாடல்கள்.. பிடிச்சிருக்கு ... குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை... சில சம்பவங்களைப் பார்க்கும்போது என்னையறியாமலே, அதுக்குப் பொருத்தமான பாடல்வரிகள் என் வாயில் வந்துவிடுவதுண்டு.
--------------------------------------------------------------------------------------------
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்துப் பூமி சொன்னது என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்துப் பூமி சொன்னது என்னைத் தொடாதே
--------------------------------------------------------------------------------------------
14) பிடித்த மூன்று படங்கள்?
1. ஆங்கிலம், 2.தமிழ் தவிர வேறு எந்த மொழிப்படமும் பார்த்ததில்லை. வாழ்க்கையிலே முதலும் கடைசியுமாக முழுவதுமாகப் பார்த்த 3.ஹிந்திப்படம் “அபிமான்”. பலபேர் பார்க்கச் சொல்லி வற்புறுத்தியமையால் பார்த்தேன்.
வீட்டிலும் பார்ப்போம், தியேட்டருக்கு வரும் ஆங்கிலப் படங்கள், நான் மறுத்தாலும் கணவர் விடமாட்டார், கழுத்திலே கயிறு போடாத குறையாக:)) என்னையும் கூட்டிப்போய் இருத்தினால்தான் நிம்மதி:). ரிவியூ பார்த்து, நல்லகதை எனில் போய்ப் பார்ப்போம். பல நல்ல படங்கள் பிடிச்சிருக்கு.. (Geisha..., மம்மா மியா, ........,).
எனக்கோ தியேட்டரைப் பார்த்தாலே நித்திரை வந்துவிடும், பறவாயில்லை வாங்கோ எனக் கூட்டிப்போவார்கள்,(சின்னவர்களின் படங்களுக்கும்) பெரியவர் சொல்வார் நான் பில்லோ கொண்டு வாறேன், நீங்கள் படுங்கோ என, சின்னவர் சொன்னார், காலை என் மடிமீது போட்டு நீங்க நித்திரை கொள்ளுங்கோ, அங்கு அவர்கள் ஏசமாட்டார்கள்:) என்று...இப்படியே தொடரும் என் தியேட்டர் கதை:).
ரஜனியின் “சிவாஜி” வெளிவந்தபோது, கனடாவில் நின்றோம், கணவருக்கு ரஜனி என்றால் பிடிக்கும். சரி இதை நிட்சயம் பார்க்கவேண்டும் தியேட்டரில் என, ரொறொன்ரோவில் ஒரு பெரீஈஈய ஸ்கிரீன் உள்ளதாக ஒன்றுக்குப் போனோம்.... இருவரும் மட்டுமே போனோம், மெட்னிக்கு. போகப்போக எனக்கு காதில் ஒரே ஓதல்:)... நித்திரை கொண்டிடாதையுங்கோ நல்ல படமாம், முளுவதும் பார்க்கவேண்டும் எண்டெல்லாம்.. நான் நித்திரையாகாமலிருக்க, பேகர், பொப்கோர்ன்.... யூஸ் எல்லாம் வாங்கித்தந்து... உள்ளே போய் இருந்தோம், சூப்பரான புதுத் தியேட்டர்... படமும் சூப்பராகப் போனது.
இடையில் “இடைவேளை” வந்ததாக நினைவு, ரஜனியின் முகம் சிங்கம்போல மாறுவதாகப் பார்த்த நினைவு, அதன்பின் சண்டைப்படம்போல மாறியதுபோல ஒரு உணர்வு..... இடையிடையே ஆரோ:) தட்டிஎழுப்பியதாக:) கனவு...
கண்விழித்தேன் படம் முடிந்திருந்தது.... எவ்வ்ளோ ஹப்பியாக இருந்துது தெரியுமோ.... அப்பாடா படம் முடிஞ்சுபோச்ச்ச்ச்ச் எண்டு.
இதுக்கு மேலும் என்னிடம் படம் பற்றிக் கேட்க ஆசைப் படுறீங்களோ?:)))).
--------------------------------------------------------------------------------------------
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள்
நீரினிலே நெஞ்சிரண்டில் நினைவலைகள்
நீரினிலே நெஞ்சிரண்டில் நினைவலைகள்
--------------------------------------------------------------------------------------------
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
1. அன்பு
2. அரவணைப்பு
3. ஆறுதல்
(இவை இல்லையெனில் என்னால் தாக்குப் பிடிக்கவே முடியாது, துவண்டு போய்விடுவேன்) ஒரு மனிதனுடைய அடிப்படைத் தேவைகளை அடுத்து, இவை மூன்றும் கிடைத்தால் மட்டுமே(அது குடும்பத்திடமிருந்து, சொந்த பந்தத்திடமிருந்து, நட்புகளிடமிருந்து) என்னால் ஒரு மனிதனாக இருக்க முடியும்.
பணம், பதவி இல்லாமல்கூட இருந்திடலாம், ஆனா இந்த அன்பு, பாசம், ஆறுதல் கிடைக்கவில்லையெனில், எழுந்து நிற்கவே முடியாது, துவண்டு போகும் நேரத்தில் ஒருவரை தூக்கி நிறுத்துவது பணம் அல்ல, இவை மூன்றும்தான். இன்றுகூட ரீவியில் சொன்னார்கள், குழந்தைகள் இல்லத்துக்கு பணம் கொடுப்பது பெரிய உதவியல்ல...
ஒரு இரண்டு மணித்தியாலம் அங்குபோய் அக்குழந்தைகளைத் தடவிக் கொடுத்து கதை சொல்லி வாருங்கள், அதில்தான் அவர்களின் எதிர்காலமே மிளிரும் என.
ஒன்றைக் கொடுத்தால் பத்து மடங்காகத் திரும்பிக் கிடைப்பது.... இந்த அன்பு பாசம்தான். காசா பணமா? எதுக்கு யோசிக்க வேண்டும், தாராளமாகக் கொடுக்கலாமே.
--------------------------------------------------------------------------------------------
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
--------------------------------------------------------------------------------------------
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
ஆஆஆஆஆஆஆஆ பொயிண்டுக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்:))).
எனக்கு மயிலுக்கு மேல மயில்கள்:)))) வந்து என் உள்பெட்டியே:)))(அதுதாங்க inbox:)) முட்டி வழியுது:). என்னவென்று கேட்கிறீங்களோ?:))). இனிமேலும் என்னைத் தொடர்ப்பதிவுக்கு அழைப்பீங்களோ?:))).. அழைத்தால் கொலை பண்ணிடுவேன்.. புளொக்கை டிலீட் :) பண்ணிடுவேன்... அப்பூடி இப்பூடியெண்டு அப்பப்பா சொல்லமுடியாத கடிதங்கள்:))).. என்னை மிரட்டீஈஈஈஈஈஈஈஈனம்:))).... அதால நான் இம்முறை அழைக்கப்போவது....
இ..... இல்லை இல்ல... நான் ஒண்ணுமே சொல்லல்ல்லலலலலலல:), ஸா .அ ..கடவுளே... சும்மா உச்சரிக்கிறேன்..., வா... ஆஆஆஆஆஆ வாயில வந்திட்டுதூஊஊஊ..., ம..... ஹையோ நான் என்ன பண்ணுவேன்...., ஜல்.அ.. என்னை விட்டிடுங்கோ நான் ஓடிடுன்ன்ன் ஜெ..... ஆஆஆ... சும்மா ஒரு ஆசையில சொல்லிப்பார்த்தேன் மீண்டும் தண்ணிக்குள்ள போயிட வாணாம்....
வெரி வெரி சொறி... நான் ஆரையுமே அழைக்கவில்லையே இம்முறை:), அதிரா ரொம்ப நல்ல பொண்ணு:) ஆறு வயசிலிருந்தே:))))) அவ்வ்வ்வ்வ்வ்.
--------------------------------------------------------------------------------------------
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
--------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
பதிவுக்கும் பாடல் வரிகளுக்கும் சம்பந்தம் இல்லை... மனதுக்குப் பிடித்த வரிகளை அங்கின இணைத்திருக்கிறேன். முணுமுணுக்கும் பாடல் பற்றிக் கேட்டிருப்பதால் இப்பூடியெல்லாம் ஐடியா கிட்னியில் வந்துச்சா... எழுதிட்டேன். சே..சே.. சம்பந்தம் பற்றிப் பேசவைக்கிறாங்களே என்னை அடிக்கடி அவ்வ்வ்வ்வ்:))).
ஊசி இணைப்பு:
நீங்களே சொல்லுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:)) அன்பாக் கூப்பிட்டாச்சு:), பாசமாக் கூப்பிட்டாச்சு:), மிரட்டியும் கூப்பிட்டாச்சு:)).... இனி அதிரடித் தாக்குதல்தான்:)))... இனியாவது வருவினமோ பார்ப்பம்:)))
==========================================================
பெளணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போலே
முன்னால் போனாள் பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்குப் புதுசோ என்றேன்
காலில் உள்ளது புதுசூஊஊஊ என்றாள்
ஓ மேலே கேட்காதே..
==========================================================
|
Tweet |
|
|||