நல்வரவு_()_


Friday, 1 July 2011

நெக்ஸ்ட் குவெஸ்ஷன் பிளீஸ்ஸ்ஸ்:)))கேள்வி கேட்டல்
கேள்வி கேட்கிறதெண்டால் என்ன பெரிய விஷயமோ, 2 வயது குழந்தைகூட பல கேள்விகள் கேட்குதே என நாம் நினைப்பதுண்டு. ஆனா சமீபத்தில பூஸ்:) ரேடியோவில சொன்னார்கள், கேள்வி கேட்பதென்பது சாதாரண விஷயமில்லையாம். கேள்வி கேட்பதுதானாம் மிகப் பெரிய விஷயம்.


  “ஒரு விடயம் பற்றி எடுத்துக் கொண்டால், அதில் கேள்வி கேட்கும் திறமையைப் பொறுத்துத்தானாம், பதில் சொல்பவரின் திறமை தங்கியிருக்கு”. அதாவது, கேள்வி கேட்பவர் புத்திசாலியான கேள்வியாகக் கேட்டால்தான், பதில் சொல்பவரும், குப்புறக்கிடந்து, கிட்னியை யூஸ் பண்ணி, புத்திக்கூர்மையான அறிவுபூர்வமான பதிலைச் சொல்வாராம்.

மொத்தத்தில, ஒரு பதிலின் அழகு, கேட்கப்படும் கேள்வியிலேயேதான் தங்கியுள்ளதாம்.

ஒரு ஊரில் ஒரு சாமியார் இருந்தாராம், அவரிடம் மக்கள் சென்று, பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டனராம், சாமியாரும் நல்ல நல்ல விளக்கமான பதில்கள் கூறி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தாராம். இதை அறிந்த ஒரு பொறாண்மைக்காரருக்குப் பொறுக்கவில்லையாம்:), சாமியாரை கேள்வி கேட்டே மடக்கிட வேண்டும் என எண்ணி, ஒருநாள் போனாராம்.
போனவர், சாமியாரைப் பார்த்துக் கேட்டாராம்,
“சாமி!!! நீண்ட நாளாக எனக்கிருக்கும் சந்தேகத்தை, நீங்கதான் தீர்த்து வைக்க வேண்டும், என் சந்தேகம் என்னவென்றால், இந்தப் பரந்திருக்கும் கடலெல்லாம் தீப் பிடித்தால், கடலிலுள்ள மீன்களெல்லாம் என்ன பண்ணும்?” என.

அதற்கு சாமியார், பட்டெனப் பதில் அளித்தாராம்..
“கடலெல்லாம் தீப் பிடித்தால், மீன்களெல்லாம், அருகிலுள்ள மரங்களில் ஏறிவிடும்” என.

கேள்வி கேட்டவர், மீண்டும் கேட்டாராம், “ என்ன சாமி சொல்றீங்க? மீன்களெல்லாம் எப்படி மரமேறும்? என்று.

சாமியார் சொன்னாராம்,  “கடல் தீப்பிடிக்குமேயானால், மீன்களும் மரமேறுவது உறுதி” என.(ஏனெனில் இரண்டுமே சாத்தியமில்லாத விடயங்கள்).

முடிவு என்னன்னாஆஆஆ....
புத்திசாலியான கேள்வி கேட்டால், புத்திசாலியான பதிலை எதிர்பார்க்கலாம், அதே நேரம் விகடத்தனமான கேள்வியைக் கேட்டுவிட்டு, புத்திசாலியான பதிலை எதிர்பார்க்க முடியாது...


எனிவே... சே..சே.. ஒரு எழுத்தால சரித்திரமே மாறிடும்போல இருக்கே:)))... எனவே, இனிமேல் நீங்கள் எப்படியான பதிலை எதிர்பார்க்கிறீங்களோ, அதுக்குத் தகுந்தமாதிரி கேள்வி கேட்கப் பழகுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:)))). <><><><><><><><><><><><><><><><><><><><><><><>
சும்மா சிரிச்சுக்கொண்டு ஓடாமல், கொஞ்சம் சீரியசாக இறுக்கி அமத்துங்கோவன் ஆக்‌ஷிலலேட்டரை:), கூட்டத்தோடு பொல்லுத் தூக்கிக்கொண்டு துரத்தி வாறமாதிரி ஒரு ஃபீலிங்ஸாக்கிடக்கு எனக்கூஊஊஊஊஊ:))))

<><><><><><><><><><><><><><><><><><><><><><><>
ஊசி இணைப்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)

இதூஊஊஊ எப்ப தொடக்கமாக்கும்?:), நான், கண் + நாடியைக் கேட்டேன்:)))

<><><><><><><><><><><><><><><><><><><><><><><>
அமைதி:
சமீபத்தில் ஒரு புத்தகம் வாசிக்கையில், பிடித்துப்போன அமைதிபற்றிய விளக்கம்.
அமைதி என்பது... அன்பு செலுத்துவது, விரும்புவது, ஆறுதல் அளிப்பது, நட்பை வளர்ப்பது என்பனவற்றுக்காகவே தவிர, வெறுப்புக்காக அல்ல.
<><><><><><><><><><><><><><><><><><><><><><><>

33 comments :

 1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! உதென்ன,ஒரு கட்டிளங்காலைக்கு,ச்சீ,ச்சீ,காளைக்கு ஒரு ஜோடாபுட்டிக் கண்+நாடி-யப்போட்டு இமேஜை டேமேஜ் பண்ணறீங்கள் அடிராக்கா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  ReplyDelete
 2. வணக்கம், அதிரா, இருங்கோ படித்து விட்டு வாறேன்.

  ReplyDelete
 3. ஒரு கிராமத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியிடம் பாமரன் ஒருவன் “என்ன சாமி செய்யறீங்க?” என்று கேட்டான்.

  தாவர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன் என்றார் அந்த விஞ்ஞானி.

  அப்படியா “அப்போ, ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாவுறீங்க .. .?” என்று மீண்டும் கேட்டான் அந்தப் பாமரன்.

  எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.

  ReplyDelete
 4. ஆனா சமீபத்தில பூஸ்:) ரேடியோவில சொன்னார்கள், கேள்வி கேட்பதென்பது சாதாரண விஷயமில்லையாம். கேள்வி கேட்பதுதானாம் மிகப் பெரிய விஷயம்//

  கேள்வி கேட்பது பெரிய விசயம் என்று சொல்லுகிறார்கள், நான் வன்னியில் கேட்ட பல கேள்விகளுக்குப் பதிலே கிடைக்கவில்லை(((;

  அதுவும் 11, 12ம் வகுப்பு படித்த காலத்திலை கூட்டம் வைக்க வாற ஆட்களிடம், எப்போது அது எங்கள் கையில் வரும் என்று கேள்வி கேட்டேன், பதில் இல்லை,

  இன்றைக்குப் பல வருடங்களாக நம்புங்கள்.............நாளை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அதற்கும் தகுந்த பதிலைக் காணவில்லை. லாஜிக் இங்கே உதைக்குதே(((;

  ReplyDelete
 5. நாங்கள்லாம் திருவிளையாடல் தருமி குடும்பம்..கேள்வி கேட்கத்தான் தெரியும்? கிகிகி!

  உந்த 2வது படம் அயகா இர்க்கூஊஊஊ!

  கடலில்தீயாம்..மரத்தில் மீனாம்..நல்லாத்தான் குப்புறக் கெடந்து டிங்
  (think) பண்ணறாங்கோ! ஹெ ஹெ ஹே!

  ReplyDelete
 6. ஆ.... ஜீஈஈஈஈஈஈஈஈஈஈ... மிச்ச வார்த்தை வெளிவராமல் தொண்டையிலே சிக்கிட்டுது.. ஜீனோவைக் கண்ட சந்தோஷத்தில:)).

  எனக்குத் தெரியும் கண்ணாடி இல்லாததாலதான் ஜீனோ அக்காவ்:)வின் பக்கம் வர வழிதெரியாமல் இருக்கிறார் என்று, அதனாலதான் பெரீஈஈஈஈஈஈஈஈஈஈய கண்ணாடி அதுவும் பிரித்தானியாவில தயாரிச்சது.... அது போட்ட உடனேதான் கிளியராப் பாதை தெரிஞ்சிருக்கூஊஊஊஊ... நலம்தானே ஜீனோ?

  ஜீனோவுக்கு எதைப் போட்டாலும் அழகுதான்.. ஆர் சொன்னது டமேஜ் இமேஜ் ஆகிடும்.... சே..சே...சே... வார்த்தை எல்லாம் தடுமாறுதெனக்கு.. இமேஜ் டமேஜ் ஆகிடும் எண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. கண்ணாடியோட பார்க்கேக்கைதான் ஜீனோ.....ஓ....ஓஒ... இன்னும் கலக்கலா இருக்கு...:).

  ReplyDelete
 7. வாங்கோ நிரூபன்... எவ்ளோ தூரத்தில இருந்தும் உடனே ஓடிவந்திட்டீங்கள்... நான் இருக்கிறன் இருக்கிறன்.. நீங்க படிச்சு, எக்ஸாம் எல்லாம் எழுதிட்டு வந்தாலும் நான் இங்கதான் இருப்பன்:).

  ReplyDelete
 8. வாங்கோ அந்நியன் 2....

  முதல் வருகைக்கு நல்வரவு, மிக்க மகிழ்ச்சி.

  பார்த்தீங்களோ? நான் மேலயே சொல்லிட்டனே... ஒரு எழுத்துப் பிழையால சிலநேரம் சரித்திரமே மாறுது...:).. தாவர என்பது தாவுற... எனக் கேட்டதால அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

  //எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.//

  உங்களுக்கு இன்னும் விஷயமே தெரியாதோ?:)2012 டிஷம்பரோட உலகம் அழியப்போகுதாமே... அதின்ர எபெக்ட் தான் இதெல்லாம்.... இப்போ மளமளவெனத் தலைப்புக்கள் போட்டிடோணும் என ஒருவிசர் எனக்குள்ள உருவாகிக்கொண்டிருக்கு:)))).

  சரிசரி முதன்முதலா வந்திருக்கிறீங்க பயந்திடாதீங்க பிளீஸ்ஸ்ஸ்... நான் இப்பூடித்தான்:))).

  மிக்க நன்றி அயூப்.

  ReplyDelete
 9. நிரூபன்.... எனக்குப் புரியுது, என்ன செய்வது, சில விஷயங்களுக்கு கடவுளிடம்கூட விடை இருக்காதென்றே நம்புகிறேன்... விடைகூற முடியாதவற்றுக்கு விதி எனக் கூறி மனதைத் திடப்படுத்தச் சொல்கிறார்கள்.

  விதி என ஒன்றிருப்பது உண்மைதானே.....

  ஆனாலும் ஒன்று இன்றுபோல் நாளை இருக்கும் என சொல்லிட முடியாதே, ஒரு நிமிடத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படலாம்... விடைகூடக் கிடைக்கலாம்... அப்போ லாஜிக் உதைக்காது:).

  மியாவும் நன்றி நிரூபன்.

  ReplyDelete
 10. அதாவது, கேள்வி கேட்பவர் புத்திசாலியான கேள்வியாகக் கேட்டால்தான், பதில் சொல்பவரும், குப்புறக்கிடந்து, கிட்னியை யூஸ் பண்ணி, புத்திக்கூர்மையான அறிவுபூர்வமான பதிலைச் சொல்வாராம்.//

  இப்போது தான் எனக்கு ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது.
  வாத்திமாரைக் குழப்புவதற்காகவும்,
  தாங்கள் தான் படிப்பில் விண்ணர் என்று காட்டுவதற்கும் நான் உயர்தரம் படிக்கையில் ஒரு சில வித்துவசிகாமணிகள் தம் தனித்திறமையினை நிரூபிக்க
  கேள்வி மேல் கேள்வி கேட்டு ரியூசனையே நாறடிப்பாளுங்க.

  ஹி....ஹி..
  இதுவும் ஒரு ரலண்ட் தானே((((;

  ReplyDelete
 11. வாங்கோ ஜீனோ...

  //நாங்கள்லாம் திருவிளையாடல் தருமி குடும்பம்// இதை... சொல்லிவேறு காட்டவேண்டுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஜீனோவே ஒரு திருவிளையாடல்(ஐஐஐ சரியான லை:)) அம்பிதானே?:)))).

  ஜீனோவுக்கு நாலுகால் எண்டு நாங்க நம்புறம்:), அப்போ, மரத்தில மீன் என நம்பினால் என்னவாம்?:)))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 8:))).

  எந்த 2வது படம் ஜீனோ? பூஸ் ஃபிஸ் ராங்கில மாட்டி, மீனிடம் முழிப்பதோ?:)).

  இருந்தாலும் கண்ணாடி போட்ட ஜீனோதான் சூஊப்பரூஊஊஊஊ...:)).

  உங்கட சிப்பாய் அண்ணன் வந்திட்டாராம் கேள்விப்பட்டனீங்களே ஜீனோ?:)), கண்டால் அக்கா தேடுறாவாம் எனச் சொல்லுங்கோ... வழமைபோல உங்களுக்கு கிடைச்ச ஆரியபவான் வடையில பாதியப் பிச்சுப் பிச்சுக் கொடுத்திடுங்க ஜீனோ:)))).

  மியாவும் நன்றி... இம்முறையும் மிழகாய் துடைச்ச்ச்ச்.... வாணாம் ஒண்ணுமில்ல...:)).

  ReplyDelete
 12. சாமியார் சொன்னாராம், “கடல் தீப்பிடிக்குமேயானால், மீன்களும் மரமேறுவது உறுதி” என.(ஏனெனில் இரண்டுமே சாத்தியமில்லாத விடயங்கள்)//

  அவ்....அவ்...

  கேள்வி கேட்டல் பற்றி அருமையான விளக்கங்களைத் தந்திருக்கிறீங்க.

  ஒரு எழுத்தால் எல்லாமே மாறி விடும் என்பது உண்மை தான்,

  ReplyDelete
 13. ஆ... நிரூபன்... இன்னும் நித்திரையாகல்லியோ?:).

  //உயர்தரம் படிக்கையில் ஒரு சில வித்துவசிகாமணிகள் தம் தனித்திறமையினை நிரூபிக்க
  கேள்வி மேல் கேள்வி கேட்டு ரியூசனையே நாறடிப்பாளுங்க.//
  ரொம்பத்தான் நொந்துபோயிருக்கிறீங்கபோல?:), அதுசரி எதிர்ப்பாலாரையா திட்டுறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் * அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).... என்னால இந்தவிஷயத்தில ஒண்ணும் சொல்ல முடியல்ல நிரூபன்...:)))(நம்ம பாலாச்சே.... :))).

  மியாவ்.. மியாவ் நிரூ.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. ///ஒரு எழுத்தால் எல்லாமே மாறி விடும் என்பது உண்மை தான், ///

  பார்த்தீங்களோ நிரூபன்.. இனிமேல் உங்கட பெயர் எழுத்தை ஆராவது தப்பா எழுதினால், உடனேயே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிடுங்க:))).

  ReplyDelete
 16. //இது தொடர்பாக நானும் ஒரு பதிவு முன்பு எழுதியிருக்கேன்.

  விளம்பரம் என்று நினைக்க வேண்டாம், நீங்கள் படிச்சு முடிஞ்சதும் பின்னூட்டத்தில் இருந்து லிங்கை அழித்து விடுறேன்;-))
  ஹா...ஹா...

  http://www.thamilnattu.com/2011/04/18.html ///

  வாணாம் நிரூபன் வாணாம்... நான் எதையும் தப்பா நினைக்கமாட்டேன், நீங்க அழிச்சிட்டாலும் என்றுதான் இங்கே கொப்பி பேஸ்ட் பண்ணிட்டேன்:).

  ஆனா நான் படிச்சதும் கிழிச்சிடுவேன் பயப்பூடாதீங்க:).

  ஊசிக்குறிப்பு:
  என்னை மாதிரி ஆட்களுக்குத்தான் விளம்பரம் தேவை என ஆரும் எண்ணலாம், உங்களுக்கெதுக்கு விளம்பரம்... பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியுதே... கலக்குறீங்க.

  ReplyDelete
 17. //ஒரு பதிலின் அழகு, கேட்கப்படும் கேள்வியிலேயேதான் தங்கியுள்ளதாம்//

  ரொம்ப உண்மை அதிரா! சில கேள்விகள் நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கும். அதன் மூலம் நமக்கே புதிய விஷயங்கள், அறிவான பதில்களாக‌ தோற்றம் பெறும்.

  அதுசரி.. இப்பல்லாம் பூஸார் என்ன அடிக்கடி பதிவிடுகிறார்..? பின்னூட்டமிடலாம் என்றிருக்கும்போது அதற்குள் அடுத்த பதிவூஊஊ...? கண்ணு போட்டாச்சுல்ல...? :)))

  ReplyDelete
 18. வாங்கோ அஸ்மா...

  //அதுசரி.. இப்பல்லாம் பூஸார் என்ன அடிக்கடி பதிவிடுகிறார்..?//

  கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணுமெல்லோ?:), அதுசரி கீரைக்கடை எது என குறுக்குக் கேள்வி எல்லாம் கேட்டிடப்பிடா கர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  //பின்னூட்டமிடலாம் என்றிருக்கும்போது அதற்குள் அடுத்த பதிவூஊஊ...? கண்ணு போட்டாச்சுல்ல...? :))) //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடியெல்லாம் சாட்டுச் சொல்லப்பிடா... நான் நாலு தோடு போட்டிருக்கிறன்:)))). இனிமேல் காலை ஒன்று, மாலை ஒருபதிவு போடலாம் எண்டொரு யோசனை இருக்கு:), 2012க்குள் என்னிடம் இருப்பவற்றை எல்லாம் போட்டிடவேணுமெல்லோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

  மியாவும் நன்றி அஸ்மா, அப்பப்ப நேரம் கிடைத்தால் எட்டிப்பாருங்க, இல்லாட்டிலும் கோபிக்கமாட்டேன், மறக்காமல் இருந்தாலே போதும்.

  ReplyDelete
 19. இப்டி..இப்டி இப்டி இப்படித்தான் இருக்கோணும்.

  ReplyDelete
 20. எப்டின்னு கேட்கறீங்களா பூஸ்.சோம்பேறித்தனத்தை காடாசி விட்டு அடிக்கடி பதிவு போடுறதைத்தான் சொல்லுறேன்.

  ReplyDelete
 21. ஒரு ஊசி ஆசை அதீஸ் இந்த மியாவ் படமெல்லாம் இல்லாமல் நீங்கள் ஒரு பதிவெழுத வேண்டும்.(ஹப்பாட..பூஸுக்கு புதுச ஒரு பதிவெழுத ஐடியா கொடுத்து விட்டேனாக்கும்.)

  ReplyDelete
 22. ஹாய் அதிரா நலமா? நல்ல ஒரு பதிவு போட்டிருக்கீங்க. எங்கள் தமிழ் ஆசிரியர் கூட அடிக்கடி சொல்வார். நிறைய நல்ல‌ புத்தகங்கள் படிக்க வேணும்,அத்தோடு நிறைய கேள்விகள் கேட்கவேணும் என.

  நீங்களும் கடைசியில நல்ல மெசேஜ் சொல்லியிருக்கிறீங்க.
  அடிக்கடி குப்புறகவிழ்ந்து கிடந்து கிட்னியை பாழாக்கிடாதேங்கோ.

  "அமைதி" பற்றிய பதிவு மிகவும் உண்மைதான் அதிரா.
  அதுசரி அந்த ஆக்‌ஷிலேட்டரை உப்படி அமத்துவது யாருஊஊஊஊ??
  படங்கள் எல்லாம் சூப்பர். நன்றி.

  ReplyDelete
 23. வாங்கோ ஸாதிகா அக்கா...

  //எப்டின்னு கேட்கறீங்களா பூஸ்.சோம்பேறித்தனத்தை காடாசி விட்டு அடிக்கடி பதிவு போடுறதைத்தான் சொல்லுறேன்.//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்... சோம்பேறித்தனமில்லை,நேரம் கிடைக்கும்போது அதிக பதிவூஊஊஊ:), இப்போ நேரமில்லாமல் இருக்கு ஸாதிகா அக்கா, ஸ்கூல் ஹொலிடே இப்போ:). எனக்கு தலைப்புப் போட்டுவிட்டு காணாமல் போவது பிடிக்காது, தலைப்பைப் போட்டால் பின்னூட்டம் போடுவோருக்கும் பதில் போட நேரம் இருப்பின் மட்டுமே தலைப்புப் போடுவது என் வழக்கம்.

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:( உப்பூடியெல்லாமோ ஊசி ஆசை வரும்...:).. சரி ஒருபதிவு அப்பூடியும் போடுறேன் ஓக்கை.

  மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 24. வாங்கோ அம்முலூ..

  அங்கும் இப்போ ஸ்கூல் ஹொலிடேதானே...

  //அடிக்கடி குப்புறகவிழ்ந்து கிடந்து கிட்னியை பாழாக்கிடாதேங்கோ.//
  தங்கியூ.. தங்கியூ...உங்களுக்கு என்னில எவ்ளோ அக்கறை..:)))... கிட்னியை யூஸ் பண்ணாட்டில்தான் அது கறள் பிடிச்சிடுமாம், நான் அடிக்கடி யூஸ் பண்ணுறதால பாழாகிடாது:)))).

  //அதுசரி அந்த ஆக்‌ஷிலேட்டரை உப்படி அமத்துவது யாருஊஊஊஊ??// கிக்..கிக்..கீஈஈஈ வர வர அம்முலுவுக்கும் குசும்பு அதிகமாகுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).

  மியாவும் நன்றி அம்முலு.

  பின் குறிப்பு:
  வலைப்பூ ஓனேர்ஸ்ஸ்ஸ்:))) எல்லோரும் இங்குதான் இருக்கிறாங்க ஆனா இல்ல:)))).

  ReplyDelete
 25. // நீண்ட நாளாக எனக்கிருக்கும் சந்தேகத்தை, நீங்கதான் தீர்த்து வைக்க வேண்டும், என் சந்தேகம் என்னவென்றால், //

  சரி... ஈஈஈஈ இந்த சந்தேகம் உங்களுக்கு வந்ததா,,, இல்ல அங்க கடலுக்கு அடியில் தியானம் செய்பவர் சொல்லிக் கேட்டீங்களா?? நான் கேட்பது சந்தேகமாய் அல்ல? ஒரு டவுட்டுக்கு கேட்டேன் அவ்வ்வ்வவ்....

  ReplyDelete
 26. // உங்களுக்கு இன்னும் விஷயமே தெரியாதோ?:)2012 டிஷம்பரோட உலகம் அழியப்போகுதாமே... //

  அந்த அழி ராப்பர எடுத்து ஒழிச்சு வைங்கப்பா. தாங்க முடியல!! கர்ர்ர்ர் அவ்வவ்...

  ReplyDelete
 27. வாங்க அப்துல் காதர்...
  அடிக்கடி காணாமல் போயிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்...:))).

  ஆஆஆஆ.... மறந்துபோய் இருந்தனே, நியாஆஆஆபகப் படுத்திட்டீங்களே கடலுக்கடியில இருக்கிற ஆட்களை.... நான் தேடிட்டேஏஏஏ இருக்கிறேன் மாட்டினா அவ்ளோதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))(முதல்ல பிளேன் லாண்ட் பண்ணட்டும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.. இது வேற பிளேன்ன்ன்ன்:)).

  ///அந்த அழி ராப்பர எடுத்து ஒழிச்சு வைங்கப்பா. தாங்க முடியல!! கர்ர்ர்ர் அவ்வவ்...//

  ஹா...ஹா.....ஹா.... சிரிச்சு முடியுதில்ல... புரக்கேறிட்டுதெனக்கு:)))). ஒளிச்சு வைக்கக்கூடிய ரப்பரா அது?:))... 2012 வெயார் ஆ யூ? கனபேர் தேடீனம் 2012 ஐ... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)).

  மியாவ் மியாவ் அப்துல் காதர்.

  ReplyDelete
 28. ஹா....ஹா...ஹா.... அப்துல் காதர் அதுவோ சங்கதி:)))... இப்பத்தானே புரியுது... “லேடீஸ் ஸ்பெஷல்” தலைப்பு ஏன் வெளிவந்ததென அவ்வ்வ்வ்வ்வ்:))).

  கிச்சின் ஓனர் திரும்பி வரும்வரைக்கும் மகளையும் ஸ்ரியறிங் வீலையும் பத்திரமா பார்த்துக்கொள்ளுங்க....

  நல்ல தேவைக்காகத்தான் காணாமல் போயிருக்கிறீங்க... சோ நோ கர்ர்ர்ர்ர்:))).

  உஸ்ஸ்ஸ்ஸ்.... ரகசியம் எண்டு சொல்லிட்டீங்க.. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் படிச்சதும் கிழிச்சிடுங்க... இங்க பாம்புக் காது, எலிக்கண்ணோட எல்லாம் ஆட்கள் திரிகினம்:)))).

  மிக்க நன்றி அப்துல் காதர்.

  ReplyDelete
 29. கேள்வி கேட்பது ஈஸியா யார் சொன்னது ..? நான் கேட்டா பதிலே வராம எல்லாருமே எஸ் ஆகிறாங்களே..!! அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 30. கேள்விய நான் கேட்கட்டுமா..இல்லை நீங்கள் கேட்கிறீர்களா?

  ReplyDelete
 31. வாங்க ஜெய்.. ஆர் சொன்னது கேள்வி கேட்பது ஈசியென... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))). கேள்வியின் தரத்தைப் பொறுத்தே பதிலும் தரமும் அமைந்திருக்குமென்னேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))).

  உங்கட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் மக்கள்ஸ்ஸ், பின் கதவைத் திறந்து தப்பி ஓடியிருப்பினம்ம்ம்ம்ம்:)).

  மியாவ் மியாவ் ஜெய்.

  அப்துல் காதருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ஏன் எதுக்கென ஆரும் கேட்கப்பிடா..:)). அது அவருக்கும் எனக்கும் மட்டும்தேன் புய்யும்ம்ம்ம்:).

  ReplyDelete
 32. வாங்க மாயா(உலகம்),... முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு, மிக்க மகிழ்ச்சி.

  அத்தோடு உங்கட ஃபிரெண்ட்சிப் கிடைச்சது இரட்டிப்பு மகிழ்ச்சி:), ஏன் தெரியுமோ? 2012 உடன் உலகம் அழிஞ்சால் எங்க போகலாம் என ஒரே யோசனை:)... இப்பத்தான் மாய உலகம் இருக்கே.. இனி அங்க வந்து தப்பிடலாம்:)).. எல்லோருக்கும் அங்கு இடமிருக்குதுதானே?:).

  //கேள்விய நான் கேட்கட்டுமா..இல்லை நீங்கள் கேட்கிறீர்களா? //

  வாணாம் வாணாம்.... நான்தான் கேட்பேன்..:)).

  மியாவும் நன்றி மாயா.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.