இம்முறை நான் சிரிக்கப் போறதில்லை:) சீரியசாக எழுதப்போறன்:)... ஏனெண்டால் சிரிச்சால் விஷயத்துக்கு வர நேரமெடுக்குது:).. அதனால ஸ்ஸ்ஸ்ஸ்ரெயிட்டா களமிறங்கிடோணும் எனக் கங்கணம் கட்டிட்டன்:)) அதனால மீற மாட்டன்....:).
நான் குட்டிப் பொண்ணாக:) இருந்த காலத்தில(அதுக்காக இப்ப வளர்ந்திட்டீங்களோ எனக் கேட்கப்புடா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்த்தியாம்ம்:)) சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)), இலங்கையின் வடபகுதி, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருந்த கொஞ்சக் காலத்தை அனுபவித்திருக்கிறேன். அந்தப் பாக்கியம் எல்லோருக்க்கும் கிடைக்காது, அந்நேரம் அங்கிருந்தோருக்கு மட்டுமே கிடைச்சிருக்கும். அது ஒரு அழகிய பொற்காலம்....:).
ஏன் அப்படிச் சொல்கிறேன் எனில், ஊரில் களவு என்ற சொல்லுக்கே அந்நேரம் இடமில்லை. ஒரு பொம்பிளைப் பிள்ளை எத்தனை மணிக்கும் வெளியே போய்வரக்கூடிய சுகந்திரம் இருந்தது. எந்த விதமான ஷேஸ்டைகள், தனகல்களே கிடையாது.. அவ்வளவு ஒரு கட்டுப்பாடான காலமாக அது இருந்தது.
ஆனா எந்தவித வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. தபால் தொடர்பு மட்டுமே இருந்தது. ரெலிபோன் எனில் கச்சேரியில் இருந்தது.. அது ஒன்றுதான் எனக்குத் தெரியும். போக்குவரத்துக்கூட துண்டித்திருந்தது, தரைப்பாதை இல்லை. இடையில் கடல்வழியேதான் தொடுக்கப் பட்டிருந்தது.
வெளி உணவுகள் , இங்கிலீசு மரக்கறி, சோப், இப்படியாக எதுவும் வாங்குவது கஸ்டம். ஆனாலும் கிடைக்கும்.. ஆனை விலை பூனை விலையில்:).. காசு இருப்போருக்கு பிரச்சனை பெரிதாக தெரியாது. கரண்ட் இல்லை ஆனாலும் ஜெனரேட்டர் பிடிச்சு புதுப்படங்கள் எல்லாம் பார்ப்போம்.
சைக்கிள் டைனமோவில் பாட்டுக் கேட்பார்கள், பனம்பழத்தில் சோப் உற்பத்தி நடந்துது... இப்படி பல புதுமைகள். பற்றரி வாங்கலாம் ஆனா விலைதான். மண் எண்ணெயிலயே வாகனங்கள் இயங்கின.
வீடுகளில் தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய் விளக்குகள்தான். ஆனால் ஜெனரேட்டர் பிடிச்சு, கோயில் திருவிளாக்கள், கல்யாணக் கொண்டாட்டம் எல்லாம் கோலாகலமாக நடக்கும்.. அதுக்கெல்லாம் குறையிருக்கவில்லை.
இப்படியான காலத்தில என் அளப்பரிய சொத்தாக ஒரு புது “லுமாலா லேடீஸ் பைக்” எனக்கிருந்தது.
ஓரம்போங்கோ.. ஓரம்போங்கோ அதிராட லுமாலா சைக்கிள் வருதூஊஊஊஊ:) |
அதுக்கு கரியர், முன்னால குடை எல்லாம் அழகாகப் போட்டு, என்னவெல்லாம் போட்டு அலங்கரிக்கோணுமோ அலங்கரிச்சு:), ஸ்டிக்கர் எல்லாம் அளவா+ அழகா ஒட்டி, எப்பவும் துடைச்சு துடைச்சு பளபளா என வைத்திருப்பேன். அந்நேரம் என்னைப் பார்த்தொருவர் சொன்னார், உங்களின் சைக்கிளைப் பார்த்தாலே தெரியுது, நீங்கள் எவ்வளவு சுத்தமாக இருப்பீங்களென, ஆனா இப்போ என் காரைப் பார்த்தால் அவர் என்ன சொல்லுவாரோ?:) ...ஙேஙேஙே.... சரி சரி அதெல்லாம் இப்ப எதுக்கு:).
கூகிள் கூகிள் பண்ணிப் பார்த்தேன்ன் .. உலகத்தில.. இப்படி ஒரு காரைக் காணவில்ல:) |
ஆனாலும் என் வயிற்றெரிச்சலைச் சொல்லியே ஆகணும். அப்படிப்பட்ட என் ஆசைச் சைக்கிளை இடம் பெயர்வின்போது, நாவற்குழி என்னுமிடத்தில் வைத்து களவெடுத்திட்டினம்... பிறகுதானே அறிஞ்சன் அது வேறு ஆருமில்லை.. இப்போ ரேடியோ ஜக்கியாக இருக்கும்.. நி.... வில்:) ஆரம்பிக்கும் பெயர் கொண்டவர்தான் எடுத்ததென:)).. சரி சரி பழசெல்லாம் இப்ப எதுக்கு:)?. விஷயத்துக்கு வாறன்.
இப்படியான காலப்பகுதியில், அப்பா வடபகுதிக்கு வெளியேதான் வேலை பார்த்தவர்... அதனால் அவர் 3,4 மாதங்களுக்கொரு முறைதான் ஊருக்கு வந்து போவார். அப்போ அம்மாவும் நானும்தான். அப்பாவின் ஊர் பக்கத்து ஊர்தான் என் சைக்கிளில் 15, 20 நிமிடத்தில், நான் மாமி வீட்டில் நிற்பேன். அப்பாவின் ஊரில்தான் அந்நேரம் என் வயதொத்த மச்சாள்மார் நிறைய இருந்தவை. எங்களிடத்தில் பெரிதாக எனக்கு குரூப் இல்லை..
அதனால நான் எப்பவும் அங்குதான் ஓடுவேன். அதிலும் ஒரு மாமிக்கு இரு மகள்மார். அவர்களோடுதான் நான் அதிகம் ஒட்டு. தினமும் அவர்களை மீட் பண்ணுவேன், இல்லையெனில் சாப்பிடாததுபோல இருக்கும்.
அம்மாவின் சட்டம், நீ போய்வா, ஆனா 3 மணிக்கு முன் போகக்கூடாது, 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடோணும்... இதை எப்பவும் மீறமாட்டேன் நான், ஆனா எப்படியும் 6 மணிக்கு 10, 15 நிமிடம் தாமதமாகிடும் வந்து சேர.. ஏனெனில் என்னைக் காணவில்லை எனில், இன்னொரு ஆள் அனுப்பித்தான் தேடோணும், ஃபோன் வசதி இல்லையெல்லோ. அதுதான் பிரச்சனையே. அங்கு மாமி வீட்டு Gate இல் 5.45 க்கு சைக்கிளோடு வெளியே வருவேன், ஆனால் விடமாட்டினம், கேட்டில் நின்று கதைக்கவே நேரம் போயிடும்.. கதைச்சு முடியாது, பிறகு மின்னல் வேகத்தில் வீட்டுக்கு வந்திடுவேன்.
மாமி சுகமில்லாமல் இருந்தவ. அதனால் மகள்மாரால் வெளியே பெரிசாக வெளிக்கிட முடியாது. ஆனாலும் நான் 3 மணிக்கு அங்கு போகவில்லையாயின், 3.30 க்கு மாமியின் மகளின் சைக்கிள் எங்கட வீட்டில இருக்கும், ஏன் வரவில்லை எனக் கேட்டபடி.
அதிகமான நாட்கள் திரும்பிவர விடாயினம், நில்லுங்கோ என மறிப்பினம், அப்படியெனில்... ஆரும் தம்பிமாரை கெஞ்சி, ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லிப்போட்டு வரும்படி அனுப்பி வைப்போம்.. இப்படியெல்லாம் செட்டப்புக்கள் நடக்கும்.
அப்படியான காலநேரத்தில் ஒரு தடவை, அப்பா லீவில் வந்து நிண்டவர். ஒருநாள் இரவு, என் ரூமில் நான் படுத்திருக்கிறேன், வெளியே ஹோலில் அப்பாவும் அம்மாவும் கதைச்சுக் கொண்டிருக்கினம், நான் நித்திரையாகவில்லை, அது அவர்களுக்கும் தெரியும் என்பது அப்போ எனக்கு புரியவில்லை:).
அப்போ அம்மா சொல்கிறா அப்பாவுக்கு.... “இஞ்ச பாருங்கோ, என்னால அதிராவைப் பார்க்க முடியாது, 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடும்படி சொன்னால், நேரத்துக்கு வருவதில்லை, நானும் எத்தனை நாளைக்குத்தான் இப்படிப் பயப்பிடுவது தனியே, நீங்கள் நிண்டு கவனியுங்கோ” என. இதைக் கேட்டதும் எனக்கோ அப்பா ஏசுவாரோ என நெஞ்சு திக்கு திக்கு எண்ணுது...
ஆனா பாருங்கோ உடனே அப்பா என்ன சொன்னார் தெரியுமோ?:).. “அதிராவைப் பற்றியா சொல்றீங்க? என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியாதோ? சும்மா எல்லாம் சொல்லாதீங்க, அதிரா சொன்ன சொல் மீறாத பிள்ளை, அவள் நேரத்துக்குத்தான் வந்திருப்பாள், நீங்கதான் சும்மா சொல்றீங்க” என்றார்....
இதைக் கேட்ட எனக்கு நெஞ்செல்லாம் அடைக்கத் தொடங்கிட்டுது, கடவுளே அப்பா என்னில எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறார், இந்த நம்பிக்கையை எண்டைக்கும் நான் வீணடிச்சிடக்கூடாது, என மனதில் சபதம் எடுத்தேன். ஏனெனில் அப்போதிருந்த வயது சபலமான வயது, பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நேரம்:).. நாட்டிலும் பிரச்சனையான நேரம்..ஆனால் அப்பாவின் அந்த ஒரு வசனம், என்னை உறுதியான ஒரு பெண்ணாக வளர வழிவகுத்தது.
பின்னர்தான் நான் ஓசிச்சுக் கண்டு பிடிச்சேன், எனக்குக் கேட்கட்டும் என்றுதான் அப்பா அப்படிச் சொல்லியிருப்பார் என. ஏனெனில் எப்பவுமே பிள்ளைகளை ஏசுவதை விட, இப்படிச் சொன்னால் அவர்கள் நல்லபடி வளர இதுவும் ஒரு முறையாம்.
சின்ன வயதிலிருந்தே ஒரே அட்வைஸ் நடக்கும், அப்போ சொல்லித் தருவார், ஆரும் ஏதும் சொன்னாலோ, கிண்டல் பண்ணினாலோ பயந்திடாதே.. உன்னைப் பார்த்து குரங்குபோல இருக்கே என ஒருவர் சொன்னால்கூட... கலங்கிடாதே.. நீ சொன்னால் சொல்லிட்டுப்போ எனக்குத் தெரியும் என்னைப்பற்றி என மனதில நினை... இப்படியான பிரச்சனைகள் வரும்போது மனதில் போட்டுக் குழம்பிடாதே, தூசுபோல தட்டிப்போட்டு உன் வேலையைக் கவனிக்கப்பழகு...
இப்படி அட்வைஸ்கள் நீளும். அப்போ எழுந்து போக முடியாமல் பல்லைக் கடித்தபடி கேட்டுக்கொண்டிருப்போம், ஆனால் அவைகள்தான் எனக்கு மனதில் பல உறுதியையும் எல்லோரோடும் தயங்காமல் பழகும் தன்மையையும் கொடுத்ததெனலாம். ஆண்பிள்ளைகளோடு எப்படிப் பழகுவது என்றெல்லாம் கூச்சப்படாதே, ஆரோடும், பேசினால் பேசு, ஆனா பழகும்போது உனக்கு தெரியவரும், எப்படிப் பட்டவர்கள் என, உன் மனதுக்கு ஏதும் வித்தியாசமாகத் தோன்றினால் உடனேயே கட் பண்ணிடு தொடர்பை, அப்படிக் கற்றுக்கொள், அதை விடுத்து கதைக்காமல் ஒதுங்கிப் போகாதே என்றெல்லாம் சொல்லுவார்ர்...
இப்பவும் தொடருது அட்வைஸ் எனில் பாருங்களன்:)).. இப்போ பிள்ளை வளர்ப்பு பற்றியும், உணவுமுறை பற்றியும் நடக்கும்:).. இன்று கூட சொன்னார், தினமும் 3 மிளகு சப்பிச் சாப்பி்ட்டு தண்ணி குடிச்சால், இருமல், தடிமன் போன்ற வருத்தங்கள் வராதாம், எல்லோரும் அப்படி செய்யுங்கோ என்றார்:).
ஊசிக்குறிப்பு:
தனிப் பதிவுகள் போட்டும், எனக்காக நேரம் ஒதுக்கி கார்ட்ஸ்கள் செய்தும், “எண்ணம் அழகானால்..” குரூப்பிலும் தனிப்பதிவுகள் போட்டும், மற்றும் மனதார என் பிறந்தநாளுக்கு(ஹையோ மீக்கு ஷை ஷையா வருதே:)).. வாழ்த்துக்கள் சொல்லிய அனிவருக்கும்... இதயத்திலிருந்து நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன்ன்ன்...
ஊசிக்குறிப்பு:
தனிப் பதிவுகள் போட்டும், எனக்காக நேரம் ஒதுக்கி கார்ட்ஸ்கள் செய்தும், “எண்ணம் அழகானால்..” குரூப்பிலும் தனிப்பதிவுகள் போட்டும், மற்றும் மனதார என் பிறந்தநாளுக்கு(ஹையோ மீக்கு ஷை ஷையா வருதே:)).. வாழ்த்துக்கள் சொல்லிய அனிவருக்கும்... இதயத்திலிருந்து நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன்ன்ன்...
=============================================
நிழல் பிரிவதில்லைத் தன் உடலை விட்டு,
அது அழிவதில்லைக் கால் அடிகள் பட்டு...
நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்,
இங்கு நடப்பது நலமாய் நடந்துவிடும்...
உருக்கத்தோடு சொல்பவர்:) புலாலியூர்ப் பூஸானந்தா:)
=============================================
எனக்கு இன்னும் தமிழ்மணத்தில் வோட் பண்ணக் “கை” வருகுதில்லை, அதனால அதிராவுக்கு வோட் பண்ணோனும் என “பெரியமனசு” பண்ணி முன் வந்தீங்கன்னா:).. இந்த லிங்கில் போய் வோட் பண்ணுங்கோ.. வோட் பண்ணினால்.. “அகரகர்” கலர்கலரா செய்து தருவனாக்கும்:)
இங்கே கிளிக் செய்யுங்கோ மக்கள்ஸ்
==============================================
எனக்கு இன்னும் தமிழ்மணத்தில் வோட் பண்ணக் “கை” வருகுதில்லை, அதனால அதிராவுக்கு வோட் பண்ணோனும் என “பெரியமனசு” பண்ணி முன் வந்தீங்கன்னா:).. இந்த லிங்கில் போய் வோட் பண்ணுங்கோ.. வோட் பண்ணினால்.. “அகரகர்” கலர்கலரா செய்து தருவனாக்கும்:)
இங்கே கிளிக் செய்யுங்கோ மக்கள்ஸ்
==============================================
|
Tweet |
|
|||