|
Tweet |
|
|||
இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நல்வரவு_()_
Sunday 26 April 2020
Tuesday 21 April 2020
அதிராவைத் தேடிய ஆண்குயிலும்💂 டல்கோனாக் கோப்பியும்:))
அதிராவைத் தேடிய ஆண்குயிலும்💂
டல்கோனாக் கோப்பியும்:))
சே சே.. வத்தல் போடுவதிலேயே நேரம் போய் விடுகிறது:)), இன்று எப்படியும் ஒரு போஸ்ட் போட்டிடோணும் எனக் களம் குதிக்கிறேன்...:).
நானும் டெய்சிப்பிள்ளையும் கிச்சினில் பிஸி:)
இதை அனுப்பி வைத்தவர் ஆரெனக் கேட்டிடக்கூடாது,
கேட்டாலும் சொல்ல மாட்டேன் அது அஞ்சு எண்டு கர்ர்ர்ர்ர்:))
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இந்தக் காலத்தில ஒரே பக்திமயமாக இருந்தால்தானாம் கடவுள் காப்பாத்துவார்:)).. அதனாலதான் எங்கள் வீட்டுப் பாரிஜாதம் அக்காவைப் பிடுங்கிப் பிள்ளையாருக்கு குடுத்திட்டேன்....
சரி சரி இப்போ எங்கு பார்த்தாலும் டல்கோனா என எல்லோரும் பேசுவதால், அதிராவும் செய்தேனே, அதை உங்களுக்குக் காட்ட வாணாமோ?:)
2 மேசைக்கரண்டி கோப்பி, 3,4 மேசைக்கரண்டி சீனி[உங்கள் விருப்பம்], 2 மேசைக்கரண்டி சுடுதண்ணி.. இவற்றைச் சேர்த்து கரண்டியால கூட அடிக்கலாம் நேரம் ஆகும், நான் கேக் பீற்றர் பாவித்தேன்..
பாதியில இப்பூடி வந்துது..
விட்டேனா பார் என விடாமல் அடிச்சேனா..
இப்பூடிக் கிறீம்போல வந்து விட்டது... [சுவரில் தூக்கிப் பிடித்துக் காட்டுகிறேன்]
அதை நம் விருப்பம்போல, பாலில் கரைத்தும், பாலின் மேற்பகுதியில் அள்ளிப்போட்டும், மற்றும் கேக்குக்கு ஐஸிங்காகவும் பாவித்தேன்.. என்..சோய்ய்ய்ய்ய்:))
$$$$$$$$$$$$$$$இடைவேளை$$$$$$$$$$$$$$$
இப்போ எல்லோரும் கவலைப்படாமல் சிரிச்சு ஆப்பியாக இருப்பது முக்கியம்.. அதனால இதை நிட்சயம் பார்த்துச் சிரிக்கோணும் என்பது அதிராவின் அன்பான வேண்டுகோள்.. இது பல வருடங்கள் முன் வெளிவந்தது, பார்த்திருப்பீங்கள், மீயும் தேன், இருப்பினும் மீண்டும் பாருங்கோ பிளீஸ்ஸ்:)..
(((((((((((((((((((((இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்)))))))))))))))))))))
களைப்புப் போக கட்லட் சாப்பிடுவோமா?:)) ஒவ்வொருத்தருக்கும் ஒண்ணொண்ணுதேன்:)).. சாப்பிட்டவர்கள் மறக்காமல் பேபாலில் பணத்தைப் போடவும்:))
சரி இப்போ டல்கோனா ஐசிங் க்காக அதிரா செய்த கேக் பார்ப்போமா?:))
ஏன் கேக் பச்சையாக இருக்குது என நெ தமிழன் கேட்கிறார் என எனக்குப் புரியவில்லை, பின்பு அம்முலுவின் கொமெண்ட் பார்த்தபின்பே புரிஞ்சது, ஐஸிங் போட்டது தெரியாமல், அது கேக் என்றே எல்ல்லோரும் நினைச்சிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதுதான் கேக்[பட்டர் கேக்]
கேக்கின் மேலே பச்சை ஐஸிங் போட்டு மெழுகினேன்:))
அதன் மேலே டல்கோனா அலங்கரிப்பு:))
[முக்கிய குறிப்பு: நான் இன்னும் நொசில்ஸ் வாங்கவில்லை, கையாலயே ஐஸிங் செய்தேன், அதனால அஜீஸ் பண்ணுங்கோ:)]
ஆஆஆஆஆஆவ்வ் எங்கும் ஏ.., எதிலும் ஏ... அதிராவின் பருத்தித்துறை வடை:)).. ரெசிப்பி எதுக்கும் தேவையில்லை என்பதனால, செய்ததை மட்டும் போடுகிறேன், ஏற்கனவே ரெசிப்பி இங்கு போட்டுவிட்டேன் அனைத்துக்கும்...
ரெசிப்பியை இந்த லிங்கில் பார்க்கவும்
சப்பாத்தி செய்தேனா, பக்கத்தில வடைக்கு ஊறப்போட்ட கடலைப்பருப்பு இருந்துது நன்கு ஊறி, உடனே அதிலையும் கொஞ்சம் சேர்த்தேன், நன்றாகவே வந்துது ஜப்பாத்தி:))
பூஸோ கொக்கோ:))
போன வருடம் நட்ட புரோக்கோலி வகைக்கோவா, குளிரில் தாக்குப் பிடிச்சு, இப்போ இப்படி வளர்ந்திருந்தது, சுண்டல் செய்யப்போகிறேன்:))
ஆங்ங்ங்ங் இனித்தான் மற்றருக்கு வரப்போறேன்ன்.. உங்களுக்கு ஒரு கதை தெரியுமோ.. அதிராவைத்தேடி ஒரு ஆண்குயில்ப்பிள்ளை வந்து வீட்டு ஜன்னலில் இருந்து உள்ளே எட்டி எட்டிப் பார்த்தார், நான் உடனே படம் எடுக்க கமெராவைத்தூக்கியதும், ஓடிப்போய் தூர இருந்திட்டார், அதனால் படம் தூரவாக இருக்குது... ஆனா விசயம் என்னவெனில், இந்த ஆணின் ஜோடிப்புறாப்பிள்ளை கோமதி அக்காவின் ஊரில் இருந்திருக்கிறா:)).. இருவருக்குள்ளும் ஏதோ சின்ன மனஸ்தாபம், ஆனா அதைப் பெரிசாக்கி, இவர் பறந்தடிச்சு அதிராவிடம் ஓடிவர, அந்தப் பிரிவைப் பொறுக்காமல் பெண்குயிலார் ஓடிப்போய் சூஊஊஊஊஊசைட் முயற்சியாக கோமதி அக்காவின் ஃபானில அடிபட்டு செட்டியில விழ.. மிகுதியை இங்கு போய்ப் பாருங்கோ கோமதி அக்கா வீட்டில்..
இங்கும் அங்கும் ஒரே நாளில் நடந்த சம்பவம்:))
ஊசி இணைப்பு
ஒரு தமிழ் ஆசிரியர் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்ர்...உடனே
ஆசிரியர்: ஆராவது என்னைக் காப்பாற்றுங்கோ..!
இதை ஒரு மாணவன் கவனித்துவிட்டு ஓடிச்சென்று...
மாணவன்:- ஐயா, பயப்பிடாதையுங்கோ நான் ஒடிபோய் ஏணி எடுத்து வாறேன்ன்...
ஆசிரியர்:- அப்படிச் சொல்லப்படது, அது தப்பு, “ஏணியை எடுத்து வருகிறேன்” எனத்தான் வரவேண்டும் தம்பி...
மாணவன்:- [மனதுள்] ம்ஹூம்ம் இந்த நேரத்திலும் தமிழ் படிப்பிச்சுக் கொண்டு.. கர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்கள் உள்ளேயே இருங்கோ,...:)).
ஹா ஹா ஹா.. இந்தத் தமிழ்ப் புரொபிஸரைத்தான் இங்கின:) தேடிக்கொண்டிருக்கிறேன்:)).
ஊசிக்குறிப்பு:-
“சிரிக்காத நாட்கள், நீங்கள் வாழாத நாட்கள்”
“ஒரு ஞானி என்பவர், தாமரை இலைபோல இருப்பார்,
உலகத்துடன் ஒட்ட மாட்டார்”
இவ்வரிய தத்துவங்களை உங்களுக்காகக் காவி வந்தவர்,
உங்கள் அன்புக்கும், பண்புக்கும்,
பாசத்துக்கும், மதிப்புக்கும் பாத்திரமான..
“ஞானி😻” புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்🙏
😊😊😊😊😊😊
|
Tweet |
|
|||
Labels:
இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).
Friday 10 April 2020
சாமிக் கொழுக்கட்டை
சாமிக் கொழுக்கட்டை
குண்டுப் பிள்ளையாரே, கொழுக்கட்டையைச் சப்பிட்டுப்போட்டு நித்திரை ஆகிடாமல்,
எலி வாகனத்தில் புறப்படுங்கோ எல்லோரையும் காப்பாத்த.. என்னையும்தேன்:))
பேசாமல் இருக்கவும் முடியல்ல போஸ்ட் எழுதவும் முடியுதில்ல, ஆனா கை மட்டும் துரு துரு எண்ணுதே:)).. அதனால சுடச்சுடப் போஸ்ட்:)..
கோமதி அக்கா சமீபத்திய போஸ்ட்டில், இடியப்ப மிச்ச மாவில பிடிக்கொழுக்கட்டை செய்து போட்டிருந்தா, உடனேயே நானும் ஓடிப்போய் சாமியைக் கழுவி, காய விட்டிட்டேன்... இன்றுதான் அரைச்சு செய்தேன்.
இங்கு எங்களுக்கு கிடைக்கும் சாமி, கொஞ்சம் வெளிர் நிறமாக இருக்கு, ஆனா இது அம்மா இப்போ ஊருக்குப் போனபோது, கதிர்காமம் போயிருந்தா, அங்கு இதனைக் கண்டதும், என் நினைப்பு வந்து வாங்கி அனுப்பி விட்டா:).. எங்கள் குடும்பத்தில் இப்படியான மில்லட் வகைகளுக்கு நான் தான் முன்னோடி:)).. இப்போ என்னைக் கேட்டே எல்லோரும் இவற்றை வாங்கிச் சமைக்கத் தொடங்கியிருக்கினம்.. ஹா ஹா ஹா மீக்கு ரெம்ம்ம்ம்பப் பெருமையாக இருக்கு:))..
இப்போ கொரொனாக் காலத்தில பாருங்கோ ஓவரா அலட்டப்பிடாதாம்:)) அதனால ஸ்ரெயிட்டா களம் குதிக்கிறேன்...
கழுவிக் காயவிட்ட பின், மாவாக்கி எடுத்து, கொஞ்சமாக அவித்து எடுத்த பின், உடன் திருவிய தேங்காய்ப்பூவும், சக்கரையும், வறுத்த பயற்றம் பருப்பும் சேர்த்தேன், தண்ணி தேவைப்படவில்லை, கொஞ்ச நேரத்தில் சக்கரையோடு சேர்ந்து குழைக்க ஈசியாகி விட்டது...
இப்படிப் பிடிச்சு, இடியப்பத் தட்டில் வைத்து..
குண்டு,வண்டிப் பிள்ளையாருக்குக் குடுத்திட்டேன்:)).. நாளைக்கு எங்களுக்கு சங்கடஹர சதுர்த்தி, ஆனா இன்று கனடாவில ச..சதுர்த்தியாம்.. இரண்டுக்கும் பொதுவா இன்று வெள்ளியில குடுத்திட்டேன், நன்கு சாப்பிட்டுப் போட்டு மக்களைக் காப்பாற்றுவாருக்கும்.. நித்திரையாகிடாமல் கர்ர்ர்ர்ர்:))
அதிராவின் சட்டி பானை போல படம் போடுவோர்[அம்முலுவைச் சொல்லல்லே:)) ஹா ஹா ஹா], இப்பூடி வீட்டில பூத்த பூ வச்சு, இப்பூடி சாமியில பிடிக்கொழுக்கட்டையும் செய்து போடோணும் ஜொள்ளிட்டேன்ன்:))..
ஃஃஃஃ================இடைவேளை==============ஃஃஃஃ
போனமுறை கஸ்டப்பட்டீங்க, இம்முறை ஈசியாக.. கண்டு பிடியுங்கோ..
===================================
கொஞ்சம் என் பெருமைகளையும் ஜொள்ள வாணாமோ?:)) இட்டலிக்கு அரைத்த உழுந்தில், கொஞ்சம் எடுத்து, வெங்காயம் சேர்த்து வடகமாக்கிட்டேன்:)) சூப்பர் வெயிலைப் பார்த்ததும் வந்த ஐடியா, அஞ்சுவும் வடகம் போட்டிருக்கிறாவாம் ஆனா காட்ட மாட்டாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
கொரொனா ஹொலிடே உணவுகள்..
சமோசா, கறிரொட்டி
ஊசி இணைப்பு
4 அடி தள்ளியே நிற்கோணுமாக்கும்:))
ஊசிக்குறிப்பு
மன்னிக்கவும், தடங்கலுக்கு வருந்துகிறோம்:), இன்று ஊசிக்குறிப்பு இல்லை:))
இது எங்கட வீட்டில பூத்திருக்கும் 2 வது மலர்:).. அதென்னமோ தெரியவில்லை, ஒரே பிங்காகவே மலருது:))
அஞ்சு, பாதிக் கிறிஸ்தவரான ட்றுத்:), மற்றும் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள், ஜேசு கிறிஸ்து இந்நன்நாளில் அனைவரையும் காத்தருள வேண்டிக் கொள்கிறேன், இப்போ சில சேர்ஜ் களில், ஓன் லைன் சேர்விஸ் நடத்துகிறார்களாம் ஈஸ்டருக்கு..
நெல்லைத்தமிழனின் இராஜிக்கு:)).. மே 13 க்குள், நிட்சயம் ஒரு நல்லசேதி வருமாம்:)), ஒளிச்சு மறைக்காமல் எங்களுக்கும் ஜொள்ளிடுங்கோ அந்தச் சேதி கிடைச்சதும்:))
======_()_======
|
Tweet |
|
|||
Labels:
இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).
Thursday 2 April 2020
கண் விழித்ததும் என்ன செய்யோணும்?:)💁
கண் விழித்ததும் என்ன செய்யோணும்?:)💁
எங்களில் எத்தனை பேருக்குத் தெரியும், நம் கண்ணுக்குள் இருக்கும் சக்தி?.., ஒருவரின் கண்ணை வைத்தே சொல்லிவிடலாம் பாதி சாஸ்திரம். கண்ணைப் பார்த்தால் தெரியும், அவர் ஹப்பியாக இருக்கிறார், சோகமாக இருக்கிறார், ரயேட்டாக இருக்கிறார்.., அன்பாக இருக்கிறார், கோபமாக இருக்கிறார்... இப்படி அனைத்தையும் கண் காட்டிக் கொடுத்துவிடும், அவர்கள் எவ்வளவுதான், எதுவுமே இல்லாததுபோல சிரிச்சுப் பேசினாலும், உள்மனதைக் கண் காட்டிக் கொடுத்திடும்.
இப்படிப் பல பெருமைகள் வாய்ந்த கண்ணில் இன்னொரு சக்தியும் இருக்குது தெரியுமோ. நாம் படங்களில்தான் பார்த்திருக்கிறோம், முக்கியமாக சின்னத்தம்பி படக் காட்சி இன்னும் என் கண்ணிலே நிக்குது, குஸ்புவின் அண்ணன், காலை எழுந்ததும், கண்ணைத் திறக்காமல், குஸ்பு றூமுக்கு வந்து, தங்கை முகத்திலேயே முழிப்பார்..
இப்படி முழிப்பதை, முழிவியளம் என ஒரு விசயமும் நம் மக்களிடையே இருக்குதெல்லோ.. அப்படி எனத்தான் நான் அப்போ நினைச்சேன். ஆனா அந்த முழிவியளத்தில் எனக்கு எப்பவுமே நம்பிக்கை இல்லை.. அது நம் அன்றைய நாளைப்பொறுத்து நமக்கு அமைவது, அதிலும் முழிவியளம் பார்ப்பது தப்பென்பதே என் வாதம்.. சரி அது போகட்டும்..
இப்போ இன்னொரு உண்மை என்ன எனில், நாம் கன நேரம் கண்ணை மூடி நித்திரை கொண்டபின், கண்ணைத் திறக்கும்போது, நம் உடலிலுள்ள பல சக்திகளும் கண்ணூடாக வெளியேறுமாம், அச் சக்தியை ச்சும்மா வெளியேத்திடாமல் இருக்கவே, கண் திறக்கும்போது, நம் உள்ளங்கைகளைப் பார்த்தால் நல்லது, அச்சக்தி மீண்டும் நமக்குள் இறங்கி, நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்...
ஓகே இப்போ கொஞ்சம் மகாபாரதம் படிப்போமா?:)). கொரோனாவால நீங்கள் எல்லாத்தையும் மறந்திருப்பீங்கள், ஆனா அதிரா மறக்க விட மாட்டேனாக்கும்:))..
+++====💪💪💪💪💪💪இடைவேளை💪💪💪💪💪💪====+++
இந்தக் கொடுமையைப் பாருங்கோ:). அதிரா மூணூஊஊ மாசத்துக்கொருக்கால் கே எஃப் சி போனாலே:)) நீ உயிரைக் கொல்றாய் எனக் குதிக்கீனம்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் 3 மாதத்துக்கொருக்கால் தான் அதுவும் ஒண்ணே ஒண்ணு:)), ஆனா இப்பூடி டெய்லி எத்தனை உயிர்கள் கொல்லப்படுது தெரியுமோ?:)).. இவை தான் இப்போ கொரொனாவாக மாறியிருக்குதூஊஊஊ:)).. ஹா ஹா ஹா இனிமேலும் அதிராட கே எஃப் சி பற்றி ஆரும் பேசுவினமோ:)).. உயிரில சின்னன் பெரிசெல்லாம் இல்லையாக்கும்:))
+++++++இடைவேளை முடிஞ்ஞ்..போச்ச்ச்ச்ச்:)+++++++
ஆங்ங்ங் நான் முன்னர் சொன்ன கதையில வந்த மச்சக்கன்னிக்கும் அந்த அரசருக்கும் பிறந்த மகனில ஒருவர்தானே திருதராஸ்டிரன், அவரைத் திருமணம் செய்தவ காந்தாரி, தான் மணம்முடிக்கப் போபவருக்குப் பார்வை இல்லை எனத் தெரிஞ்ச அடுத்த கணமே, தன் கண்களையும் ஒரு துணி கொண்டு சுற்றி விட்டாராம், தான் மட்டும் பார்வையுடன் இருப்பது சரியில்லை என... இப்படியான இவர்களின் மணவாழ்க்கையில் வந்துதித்தவர்களில், ஒருவர்தான் துரியோதனன்.
அந்தத் துரியோதனன், பாண்டவர்களோடு போர் தொடுக்கப் போகிறார் என அறிஞ்சதும், தாய் காந்தாரி சொன்னாவாம், “மகனே, எனக்குப் பயமாக இருக்கிறது, அதனால நான் என் கண்களைத் திறந்து உன்னை ஒருதடவை பார்க்கப் போகிறேன், நீ நீராடிவிட்டு, ஆடையில்லாமல் பிறந்த மேனியுடன் வந்து என் முன்னால் நில்” என.
தாயின் கட்டளைக்குப் பணிந்து, துரியோதனன் குளத்தில் இறங்கி நீராடிவிட்டு, ஆடையில்லாமல் வெளியே வந்தாராம் தாயிடம் போக.. இதனை அறிஞ்ச கிருஸ்ணருக்குப் பயம் வந்துவிட்டது, அதாவது, தாய் துரியோதனைப் பார்த்திட்டால், தாயின் கண்களிலிருக்கும் பலம் வந்து, பின்னர் துரியோதனனை ஒருவராலும் கொல்ல முடியாமல் போய் விடும், எனவே இதைத் தடுக்க வேண்டும் என...
உடனே கிருஸ்ணன் குளக்கரைக்கு வந்து கேட்டாராம் “எங்கே போகிறாய் இந்தக் கோலத்தில்” என துரியோதனனிடம், அவர் சொன்னார் “அம்மாவைப்பார்க்கப் போகிறேன்” என, உடனே சொன்னாராம், இந்த வயதில போய் எப்படி ஆடை ஏதும் இல்லாமல் அம்மாவைப் பார்ப்பாய், அது அசிங்கமில்லையா? அப்படிப் போகாதே, இடையில் ஏதாவது உடுத்திக் கொண்டுபோ என..
துரியோதனனுக்கும் அப்போதான் கூச்சம் வந்து, அதுவும் சரிதான் என நினைச்சு, அருகில் இருந்த வாழை மரத்தின் இலையை அறுத்து, இடையிலே சுற்றிக் கொண்டு போனாராம்..
காந்தாரி, வந்துவிட்டாயா மகனே எனக் கேட்டபடி, திருமணமாகி இத்தனை வருடமாகத் திறக்காமல் இருந்த கண்களைத் திறந்து, பார்த்தாவாம், இடையில் வாழை இலை கட்டியிருக்கவே.. “தப்புப் பண்ணி விட்டாயே மகனே, எதற்கு இடையை மறைத்தாய்”.. எனக் கேட்டுப்போட்டு விட்டு விட்டா.
ஆனால் போரிலே, அந்த வாழை இலையால மறைக்கப் பட்ட தொடையிலேயே அம்பு பாய்ந்ததனாலதான் துரியோதனன் இறந்தார், இல்லை எனில் அவரைக் கொன்றிருக்கவே முடியாது.
இப்போ புரியுதோ, கண்ணை மூடித் திறக்கும் போது எவ்வளவு பவர் வெளியேறுகிறது என, அதனால இனிமேல் எல்லோரும் “துயிலெழும்போது” அதிரா சொன்னதை நினைவில வச்சு, உள்ளங் கைகளைப் பார்த்தபடி எழும்புங்கோ:)).. இப்பூடிச் செய்தால்.... எந்தக் கொரொனாவும் நம்மைத் தாக்காது:)) ஹா ஹா ஹா.
எதுக்கும் குடையைப் பிடிச்சுக்கொண்டு நிற்பம்:))
எல்லாம் ஒரு சேஃப்டிக்காகத்தான்:)))
ஊசிக்குறிப்பு
ஊசி இணைப்பு
=======_()_=======
|
Tweet |
|
|||
Labels:
Poosh Radio
Subscribe to:
Posts
(
Atom
)