நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Tuesday, 21 April 2020

அதிராவைத் தேடிய ஆண்குயிலும்💂
 டல்கோனாக் கோப்பியும்:))

சே சே.. வத்தல் போடுவதிலேயே நேரம் போய் விடுகிறது:)), இன்று எப்படியும் ஒரு போஸ்ட் போட்டிடோணும் எனக் களம் குதிக்கிறேன்...:).
நானும் டெய்சிப்பிள்ளையும் கிச்சினில் பிஸி:)
இதை அனுப்பி வைத்தவர் ஆரெனக் கேட்டிடக்கூடாது, 
கேட்டாலும் சொல்ல மாட்டேன் அது அஞ்சு எண்டு கர்ர்ர்ர்ர்:))

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இந்தக் காலத்தில ஒரே பக்திமயமாக இருந்தால்தானாம் கடவுள் காப்பாத்துவார்:)).. அதனாலதான் எங்கள் வீட்டுப் பாரிஜாதம் அக்காவைப் பிடுங்கிப் பிள்ளையாருக்கு குடுத்திட்டேன்....


சரி சரி இப்போ எங்கு பார்த்தாலும் டல்கோனா என எல்லோரும் பேசுவதால், அதிராவும் செய்தேனே, அதை உங்களுக்குக் காட்ட வாணாமோ?:)

2 மேசைக்கரண்டி கோப்பி, 3,4 மேசைக்கரண்டி சீனி[உங்கள் விருப்பம்], 2 மேசைக்கரண்டி சுடுதண்ணி.. இவற்றைச் சேர்த்து கரண்டியால கூட அடிக்கலாம் நேரம் ஆகும், நான் கேக் பீற்றர் பாவித்தேன்..

பாதியில இப்பூடி வந்துது..

விட்டேனா பார் என விடாமல் அடிச்சேனா.. 
இப்பூடிக் கிறீம்போல வந்து விட்டது... [சுவரில் தூக்கிப் பிடித்துக் காட்டுகிறேன்]

 அதை நம் விருப்பம்போல, பாலில் கரைத்தும், பாலின் மேற்பகுதியில் அள்ளிப்போட்டும், மற்றும் கேக்குக்கு ஐஸிங்காகவும் பாவித்தேன்.. என்..சோய்ய்ய்ய்ய்:))


$$$$$$$$$$$$$$$இடைவேளை$$$$$$$$$$$$$$$
இப்போ எல்லோரும் கவலைப்படாமல் சிரிச்சு ஆப்பியாக இருப்பது முக்கியம்.. அதனால இதை நிட்சயம் பார்த்துச் சிரிக்கோணும் என்பது அதிராவின் அன்பான வேண்டுகோள்.. இது பல வருடங்கள் முன் வெளிவந்தது, பார்த்திருப்பீங்கள், மீயும் தேன், இருப்பினும் மீண்டும் பாருங்கோ பிளீஸ்ஸ்:)..
(((((((((((((((((((((இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்)))))))))))))))))))))

களைப்புப் போக கட்லட் சாப்பிடுவோமா?:)) ஒவ்வொருத்தருக்கும் ஒண்ணொண்ணுதேன்:)).. சாப்பிட்டவர்கள் மறக்காமல் பேபாலில் பணத்தைப் போடவும்:))

சரி இப்போ டல்கோனா ஐசிங் க்காக அதிரா செய்த கேக் பார்ப்போமா?:)) 
ஏன் கேக் பச்சையாக இருக்குது என நெ தமிழன் கேட்கிறார் என எனக்குப் புரியவில்லை, பின்பு அம்முலுவின் கொமெண்ட் பார்த்தபின்பே புரிஞ்சது, ஐஸிங் போட்டது தெரியாமல், அது கேக் என்றே எல்ல்லோரும் நினைச்சிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதுதான் கேக்[பட்டர் கேக்]

கேக்கின் மேலே பச்சை ஐஸிங் போட்டு மெழுகினேன்:))

அதன் மேலே டல்கோனா அலங்கரிப்பு:))
[முக்கிய குறிப்பு: நான் இன்னும் நொசில்ஸ் வாங்கவில்லை, கையாலயே ஐஸிங் செய்தேன், அதனால அஜீஸ் பண்ணுங்கோ:)]
ஆஆஆஆஆஆவ்வ் எங்கும் ஏ.., எதிலும் ஏ... அதிராவின் பருத்தித்துறை வடை:)).. ரெசிப்பி எதுக்கும் தேவையில்லை என்பதனால, செய்ததை மட்டும் போடுகிறேன், ஏற்கனவே ரெசிப்பி இங்கு போட்டுவிட்டேன் அனைத்துக்கும்...

ரெசிப்பியை இந்த லிங்கில் பார்க்கவும்

சப்பாத்தி செய்தேனா, பக்கத்தில வடைக்கு ஊறப்போட்ட கடலைப்பருப்பு இருந்துது நன்கு ஊறி, உடனே அதிலையும் கொஞ்சம் சேர்த்தேன், நன்றாகவே வந்துது ஜப்பாத்தி:))
பூஸோ கொக்கோ:))

போன வருடம் நட்ட புரோக்கோலி வகைக்கோவா, குளிரில் தாக்குப் பிடிச்சு, இப்போ இப்படி வளர்ந்திருந்தது, சுண்டல் செய்யப்போகிறேன்:))

ஆங்ங்ங்ங் இனித்தான் மற்றருக்கு வரப்போறேன்ன்.. உங்களுக்கு ஒரு கதை தெரியுமோ.. அதிராவைத்தேடி ஒரு ஆண்குயில்ப்பிள்ளை வந்து வீட்டு ஜன்னலில் இருந்து உள்ளே எட்டி எட்டிப் பார்த்தார், நான் உடனே படம் எடுக்க கமெராவைத்தூக்கியதும், ஓடிப்போய் தூர இருந்திட்டார், அதனால் படம் தூரவாக இருக்குது... ஆனா விசயம் என்னவெனில், இந்த ஆணின் ஜோடிப்புறாப்பிள்ளை கோமதி அக்காவின் ஊரில் இருந்திருக்கிறா:)).. இருவருக்குள்ளும் ஏதோ சின்ன மனஸ்தாபம், ஆனா அதைப் பெரிசாக்கி, இவர் பறந்தடிச்சு அதிராவிடம் ஓடிவர, அந்தப் பிரிவைப் பொறுக்காமல் பெண்குயிலார் ஓடிப்போய் சூஊஊஊஊஊசைட் முயற்சியாக கோமதி அக்காவின் ஃபானில அடிபட்டு செட்டியில விழ.. மிகுதியை இங்கு போய்ப் பாருங்கோ கோமதி அக்கா வீட்டில்..

இங்கும் அங்கும் ஒரே நாளில் நடந்த சம்பவம்:))
ஊசி இணைப்பு

ஒரு தமிழ் ஆசிரியர் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்ர்...உடனே

ஆசிரியர்: ஆராவது என்னைக் காப்பாற்றுங்கோ..!

இதை ஒரு மாணவன் கவனித்துவிட்டு ஓடிச்சென்று...
மாணவன்:- ஐயா, பயப்பிடாதையுங்கோ நான் ஒடிபோய் ஏணி எடுத்து வாறேன்ன்...

ஆசிரியர்:- அப்படிச் சொல்லப்படது, அது தப்பு, “ஏணியை எடுத்து வருகிறேன்” எனத்தான் வரவேண்டும் தம்பி...

மாணவன்:- [மனதுள்] ம்ஹூம்ம் இந்த நேரத்திலும் தமிழ் படிப்பிச்சுக் கொண்டு.. கர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்கள் உள்ளேயே இருங்கோ,...:)).

ஹா ஹா ஹா.. இந்தத் தமிழ்ப் புரொபிஸரைத்தான் இங்கின:) தேடிக்கொண்டிருக்கிறேன்:)).

ஊசிக்குறிப்பு:-
 “சிரிக்காத நாட்கள், நீங்கள் வாழாத நாட்கள்”

“ஒரு ஞானி என்பவர், தாமரை இலைபோல இருப்பார்,
 உலகத்துடன் ஒட்ட மாட்டார்”
இவ்வரிய தத்துவங்களை உங்களுக்காகக் காவி வந்தவர்,
 உங்கள் அன்புக்கும், பண்புக்கும்,
 பாசத்துக்கும், மதிப்புக்கும் பாத்திரமான..
“ஞானி😻” புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்🙏
😊😊😊😊😊😊

165 comments :

 1. Replies
  1. ஆஆஆவ்வ் இந்த நேரம் கவனிக்க மாட்டீங்க என நினைச்சேன் ஹா ஹா ஹா வாங்கோ அஞ்சு வாங்கோ.. முதலாவதாக வந்த உங்களுக்கு அந்த க்ட்லட்டில ஒரு குட்டி உருண்டை, உங்களை நினைச்சே ஸ்பெசலா உருட்டினேன் அது உங்களுக்கே:)).. கடசியாக வரப்போகும்.. அல்லது வராமலே இருக்கப் போகும் ட்றுத்துக்கு:).. என்னவென்று இப்போ சொல்ல மாட்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா.

   Delete
  2. நொவ்வ் நான் மாட்டேன் என்னை கொல்ல சதீ .அதில் இருப்பது எனக்கு அலர்ஜியோ அலர்ஜி :) 

   Delete
  3. நோ நோ நான் கஷ்டப்பட்டு வந்திருக்ககேனாக்கும்...உங்க போஸ்ட் பார்த்து க்ளிக்கி 15 நிமிடத்திற்கு மேல் இறங்க லேட் ஆச்சு அத்தனை சுத்தல்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா

   ஏற்கனவே ஒவ்வொரு தளமும் இறங்க லேட் ஆகுதூ

   படங்கள் நிறைய இருந்தா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே ஆகுது ம்ம்ம் என்ன செய்ய

   கீதா

   Delete
  4. ///AngelTuesday, April 21, 2020 12:47:00 pm
   நொவ்வ் நான் மாட்டேன் என்னை கொல்ல சதீ .அதில் இருப்பது எனக்கு அலர்ஜியோ அலர்ஜி :) ///

   ஸ்ஸ்ஸ்ஸ் உப்ப்பூடி ஜத்தம் போட்டால் கொரொனா அங்கிளுக்குக் கேட்டிடப்போகுது:))

   Delete
  5. ///Thulasidharan V ThillaiakathuTuesday, April 21, 2020 12:55:00 pm
   நோ நோ நான் கஷ்டப்பட்டு வந்திருக்ககேனாக்கும்..//

   ஹா ஹா ஹா வாங்கோ கீதா வாங்கோ.. இன்று அஞ்சு கொஞ்சம் கண்ணயர்ந்திருந்திருந்தால்:)) நீங்கதேன் 1ஸ்ட்டூஊஊ.. அதனால் என்ன கீதா.., 2 வதாக வந்திருக்கும் உங்களிடம், என் புளொக் வழக்கப்படி:)), என் கண்ணே கண்ணான 99 வயசு ஆயாவை ஒப்படைக்கிறேன்ன்...:)) ஆயா பத்திரம் கீதா:)) அவவுக்கு கொரொனா வந்திடாமல் பார்த்துக் கொள்ளுங்கோ.. வாற வருசம் 100 க்கு கேக் வெட்டோணும், இப்பவே இருமத் தொடங்கிட்டா:)) ஹா ஹா ஹா..

   Delete
  6. First set பெட்டியில் நானும் இடம் பிடித்து விட்டேன்.

   Delete
  7. //ஸ்ரீராம்.Wednesday, April 22, 2020 7:36:00 am
   First set பெட்டியில் நானும் இடம் பிடித்து விட்டேன்.//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) இடம் போதுமோ ஸ்ரீராம்:)) ஆரையும் இடிக்காமல் நிற்கோணுமாக்கும்:))

   Delete
 2. நோ இது அநியாயம் அக்கிரமம் நான் ஒத்துக்கவே மாட்டேன் நீங்க ட்ரூத் தூங்குற நேரம் பார்த்து போஸ்ட் போட்டிருக்கேங்க :)ஈவ்னிங் போஸ்ட் போடுங்க நம்ம பிரண்டும் சேர்ந்து கும்மி அடிக்கனுமில்லையா :)))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) யான் பெற்ற இன்பம் அதிராவும் பெறோணும் என நினைக்கிறீங்க:)) என்னை அந்த வைரவர் காப்பாத்திட்டார்ர்.. ஹா ஹா ஹா..

   Delete
  2. நம்மை பார்த்து பயந்து போய் நம்ம இல்லாத நேரம் பார்த்து ஒருத்தர் பதிவு போட்டு இருக்காங்க போல ஹும்ம்ம்ம்ம்

   Delete
  3. வாங்கோ ட்றுத் வாங்கோ... சே..சே... பயமெல்லாம் இல்லை:) எல்லாம் ஒரு மருவாதைதேன்ன்:)).. ஹா ஹா ஹா நன்றி.

   Delete
 3. நான் என் வழக்கப்படி ரிவர்ஸ் இல் வரேன் :) ஆமா ஞானி உலகத்தோடு ஓட்ட மாட்டார் இந்த ஞாயியை உலகமே ஓட ஓட ஓட்டுதே :)

  ReplyDelete
  Replies
  1. இவர் ஓடி ஓடியும் ஜேவை:)) செய்யும் ஜானி:)) சே சே ஞானி:)) ஆக்கும்:))

   Delete
 4. ஸ்ஸ்ஸ் நானெல்லாம் சிரிக்காத நாளில்லை :) ஆனா சிரிப்பதில் தவறில்லை எதுக்கு சிரிக்கிறோம் என்பதும் முக்கியம் :)

  ஹாஹா தமிழ் ப்ரொபஸர் :) வருவார் .ஆனா என் பொண்ணும் கொஞ்சம் அப்படிதான் பொருள் கேட்டா// ப்ளீஸ் //தாங்க்யூ சொல்லியே ஆகணும் :) பிரிட்டிஷ் கலாச்சாரம் ஆம் :)

  ReplyDelete
  Replies
  1. //ஆனா சிரிப்பதில் தவறில்லை எதுக்கு சிரிக்கிறோம் என்பதும் முக்கியம் :)//

   இது கரீட்டூ.. நம் துன்பத்திலும் சிரிக்கலாம், ஆனால் அடுத்தவர் துன்பத்தின்போது சிரிக்கக்கூடாது....

   அது உண்மையேதான் அஞ்சு... ஸ்கூலில் குட்டீசுக்கு சொல்வது வழக்கம்... சொறி சொல்லவில்லை அவர்கள் எனில்.. வட் இஸ் த மஜிக் வேர்ட்? எனக் கேட்டால் புரிஞ்சுவிடும் அவர்களுக்கு.. உடனே சொறி என்பினம்..

   அதுபோல எதையாவது கெல்ப் பண்ணினால், பேசாமல் இருந்தார்களாயின்.. டு யு வாண்ட் ரு சே எனிதிங் எனக் கேட்டால்.. தங்கியூ என்பினம்.. இப்படித்தான் பழக்குவது.. தொட்டில் பழக்கம்.

   இதை நான் வீட்டிலும் ஃபலோ பண்ணுகிறேன்ன் எங்கிட்டயேவா?:)) விடமாட்டேன்.. ரீ குடுத்தவுடன் தங்கியூ எனச் சொல்லும்வரை கை விட மாட்டேன் கப் ஐ ஹா ஹா ஹா:))

   Delete
 5. ஹாஹா இந்த கரீனா வை வச்சி எவ்ளோ ஜோக்ஸ் மீம்ஸ் வருது :) நான் கரீனா த்தான் சொல்வேன் 

  ReplyDelete
  Replies
  1. //இந்த கரீனா வை வச்சி எ//

   ஹா ஹா ஹா ஒருகணம் என் குட்டிக் கிட்னியால நிறைய ஓசிச்சிட்டேன்ன்:)).. கரீனா என்றதும்.. வடிவேல் அங்கிள் கறுப்பு என்பதால, செல்லமாக அப்பூடிச் சொல்லுறீங்களோ என நினைச்சுப்புட்டேன்ன் ஹா ஹா ஹா:))

   Delete
 6. பெண்குயிலை தேடி வந்தது ஆண்குயில் :) ஆனா நீங்க பூனையாச்சே எப்படி ?? லாஜிக் இல்லையே அது ஆண்குயில் லாக்டவுனில் மாட்டி ஸ்கொட்லாண்டில் அதுக்கு தெரிஞ்சிருக்கும் கோமதி அக்கா வீட்டு ஏரியாவில் இருக்கும் பெண் குயிலுக்கு மெசேஜ் அனுப்ப உங்க வீட்டுக்கு வந்திருக்கு 

  ReplyDelete
  Replies
  1. //கோமதி அக்கா வீட்டு ஏரியாவில் இருக்கும் பெண் குயிலுக்கு மெசேஜ் அனுப்ப உங்க வீட்டுக்கு வந்திருக்கு //

   ஹா ஹா ஹா இது பொயிண்ட்டு:)).. அதாவது அதிரா எல்லோருக்கும் ஜெல்ப் பண்ணுவா என்பது ஒரு குட்டி ஆண்குசிலுக்கே:) தெரிஞ்சிருகே:)).. ஹா ஹா ஹா இப்பூடி ருவிஸ்ட் வைச்சு, நான் நல்ல பெயர் எடுப்பேன் என நீங்க எதிர்பார்க்கவில்லை.. என்ன அஞ்சு?:))

   Delete
 7. ///சப்பாத்தி செய்தேனா, பக்கத்தில வடைக்கு ஊறப்போட்ட கடலைப்பருப்பு இருந்துது நன்கு ஊறி, உடனே அதிலையும் கொஞ்சம் சேர்த்தேன், நன்றாகவே வந்துது ஜப்பாத்தி:))
  பூஸோ கொக்கோ:))//

  அவ்வ்வ் சப்பாத்தில கடலை பருப்பா .ஆமா அது சப்பாத்தி ஏன் அவ்ளோ குண்டா இருக்கு ரொட்டீ மாதிரி :)சரி சரி சாப்பிடுங்க எனக்கு வேணாம் 

  ReplyDelete
  Replies
  1. அதிராவுக்கு எப்பவும் சற்று வித்தியாசமாக இருப்பதே பிடிக்குமாக்கும்:)).. அது கடலைப்பருப்பு குறுக்கே நிற்பதால், இதைவிட மெல்லிசாக தேய்க்க முடியவில்லை இருப்பினும் இது மெல்லிசுதான், பார்க்கத்தான் குண்டாத்தெரியுது அதிராவைப்போல கர்ர்:))

   Delete
 8. நோ நோ இது அடுக்காது நான் தான் ஃபர்ஸ்ட்டாக்கும்

  இவ்வளவு நேரம் வானில் சுற்றி சுற்றி இறங்கும் இடம் இல்லாமல் இப்பதான் ஓடி வந்து லேன்ட் ஆக முடிஞ்சுச்சு

  கார்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹ

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //Thulasidharan V ThillaiakathuTuesday, April 21, 2020 12:51:00 pm
   நோ நோ இது அடுக்காது நான் தான் ஃபர்ஸ்ட்டாக்கும்//

   ஆஹா மீண்டும் மூலஸ்தானத்திலிருந்து ஒரு குரல் கேய்க்குதே:)) ஹா ஹா ஹா வாங்கோ கீதா... நீங்கதான் 1ஸ்ட்டூ அதாவது ஆயாவைக் கூட்டிப் போவதில் ஹா ஹா ஹா.... சே..சே.. நீங்க இன்றுபோல் என்றும் இவ்ளோ ஸ்பீட்டா வந்ததில்லை கீதா, இருப்பினும் விதி விளையாடி விட்டது.. இனிமேல் தினசரி இராஜிப்பலன்:)) கேட்டுவிட்டு ஓடுங்கோ:))...

   இப்போ வானத்தில இடம் இருக்கு:)). கீழேதான் இடமில்லை:))க் கீதா.

   Delete
 9. //ஆஆஆஆஆஆவ்வ் எங்கும் ஏ.., எதிலும் ஏ... அதிராவின் பருத்தித்துறை வடை:)).. ரெசிப்பி எதுக்கும் தேவையில்லை என்பதனால, செய்ததை மட்டும் போடுகிறேன், ஏற்கனவே ரெசிப்பி இங்கு போட்டுவிட்டேன் அனைத்துக்கும்..//
  யெஸ்ஸ்ஸ்ஸ் எங்கும் ஏஞ்சல் :) ஏ ஏ :)ரெசிப்பி லிங்க் இணைங்க புதுசா வரவங்களுக்கு யூஸ் ஆகும் அதுவும் unknown அப்படிங்கிற நாட்டில் எல்லாம் வராங்க அவங்களுக்கும் யூஸ் ஆகும் யாரு பெத்த புள்ளைங்களோ ஊர் பேர் தெரியாம வராங்க :)

  ReplyDelete
  Replies
  1. //யெஸ்ஸ்ஸ்ஸ் எங்கும் ஏஞ்சல் :) ஏ ஏ :)//
   கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. “பூதம் கிணறுவெட்ட, அணில் சேறைப்பூசிக்கொண்டு ஓடி ஓடிச் சொல்லிச்சுதாம், நான் தேன் கிணறு வெட்டினேன்” என:) அக்கதையாவெல்லோ இருக்குது இக்கதை:))..

   //ரெசிப்பி லிங்க் இணைங்க புதுசா வரவங்களுக்கு யூஸ் ஆகும்//
   இது கரீட்டு... குட் ஐடியா நன்றி.

   //அதுவும் unknown அப்படிங்கிற நாட்டில் எல்லாம் வராங்க அவங்களுக்கும் யூஸ் ஆகும் யாரு பெத்த புள்ளைங்களோ ஊர் பேர் தெரியாம வராங்க :)//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் மறக்கவே மாட்டாவாமே எதையும்:))

   Delete
  2. ///ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் மறக்கவே மாட்டாவாமே எதையும்:))//
   [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcTh862ccYhwygaiOQz6WgbPjMswDFAw2W-TyzCdmyHb21NiDoVW&usqp=CAU[/im]

   Delete
 10. பிடித்த பாடல் கேட்டேன் அதிரா.

  நானும் டெய்சிப்பிள்ளையும் கிச்சினில் பிஸி: படம் அஞ்சுவா கொடுத்தார் சரி சரி.

  பாரிஜாதம் அக்கா அழகு. டல்கோனா வும் அதை பாவித்து எடுத்த அழகான படங்களும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. பாடல் பழையபாடல் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

   Delete
  2. ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித்தந்தாரோ...

   அருமையான பாடல்.

   Delete
  3. ஆஆ நெல்லைத்தமிழனும் ரசித்திருக்கிறார் பாட்டை ஆனா ஜொள்ளல்லே கர்ர்:))

   Delete
 11. எண்டெ முதல் கமென்ட் வந்ததோ ஆ வைரவா...என்ன சதி பாருங்கஓ நான் நெட் கிடைச்சு வரதே கஷ்டமா இருக்கப்ப கமென்ட் போட்ட போக எவ்வளவு டைம் எடுக்குதுஊஊஒ...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கீதா, நீங்க வானில வட்டம் அடிச்சு.. பின்பு லாண்ட் ஆகி ஒரு கொமெண்ட் 1ஸ்ட்டு எனப் போட்டு, பின்பு அது கிடைச்சுதோ எனக் கேட்பதற்குள்.. பத்துக் கொமெண்ட்ஸ் வந்திடுது ஹா ஹா ஹா...

   Delete
 12. கையால் ஐசிங் செய்தாலும் சூப்பரா வந்திருக்கு கேக் :) அது ஐசிங்காகவும் யூஸ் பண்ணலாம்னு நீங்க சொல்லித்தான் தெரியுது ..சூப்பர்ப் ஐடியா .எங்க வீட்டுல செஞ்சிட்டோம் .நீங்க சொன்ன ரெசிப்பின்படி மூணு நாள் தொடர்ந்து குடிச்சிட்டு இப்போ நிறுத்தியாச்சு :)

  ReplyDelete
  Replies
  1. கோப்பிக்கு மட்டுமெனில், இப்படித்திக்காக அடிக்காவிட்டாலும் ஓகே அஞ்சு, ஆனா ஐஸிங் எனில், இப்படி நன்கு அடிச்சு கிறீம்போல எடுக்கோணும்..

   நாங்களும் 2,3 தடவை செய்து பின்னர் விட்டாச்சு, ஆனா சின்னவருக்கு இது நன்கு பிடிச்சுப் போச்சு.. அவர் கோப்பிப் பிரியர்.

   Delete
  2. ஓஒ அவர் என்னைப்போல :) ஆனா எனக்கு இன்ஸ்டன்ட் காஃபிக்கு coffee mate தான் சேர்க்க பிடிக்கும் .பில்டர்னா ஒன்லி பிளாக்.. மில்க் சேர்க்க பிடிக்காது  

   Delete
  3. சுமார் 15 வருடங்கள் முன்பு நானும் கொபி மேட் மில்க் பவுடருக்கு க்கு அடிமையாக இருந்தேன் அஞ்சு, ஆனா பின்பு வெறுத்து விட்டது.. இப்போ நிடோ தான்.

   Delete
 13. ஹையோ கமென்ட் போட்டதும் போஸ்ட் பார்க்க முஇட்யலியே கறுப்பா இருக்குதே ஏதோ வான வெளியில அண்டத்தில் இருக்காப்புல...ஓ மை கடவுளே!!!! ஹப்பா கொஞ்சம் கொஞ்சமா வெளிச்சம் வருதூஉ

  கீதா

  ReplyDelete
 14. பாரிஜாதம் அழகா இருக்கு :) அதுவும் உங்க அக்காவோ :) இது 3 /5678 மச் 

  ReplyDelete
  Replies
  1. அது ஜெள்ளமாக் கூப்பிட்டேன்:)) முன்பும் அவட படம் போட்டிருக்கிறேன் இங்கு...

   அனைத்துக்கும் மிக்க நன்றிகள் அஞ்சு..

   Delete
 15. பரம ரகசியம் முதல் செய்தியே!! ஹா ஹா ஹா ஏஞ்சல்தானே வற்றல் வடாம் எல்லாம் போட்டாங்க நீங்களும் போடுறீங்களோ..

  நான் கொஞ்சம் போட்டு காய வைத்து எடுத்தாச்சே...

  அட பாரிஜாதம் அழகா இருக்கிறதே...பார்க்க அடுக்கு நந்தியாவட்டை போலவே இருக்கும்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //ஏஞ்சல்தானே வற்றல் வடாம் எல்லாம் போட்டாங்க நீங்களும் போடுறீங்களோ..//

   அவதான் ஆரம்பிச்சா.. ஆனா என்னை எங்கே நிம்மதியாக நித்திரை கொள்ள விடுறா கர்ர்ர்ர்:)).. அதைப் போடு இதைப்போடு எனச் சொல்லச் சொல்ல இப்போ நானும் ஓடி ஓடி வடகம் போடுறேன்ன்.. அது என்னவெனில் கீதா, இப்போ இங்கெல்லாம் வெயிலோ வெயில்.. ஆனா எப்போ வானிலை மாறும் எனச் சொல்ல முடியாது.. மழை தொடங்கிச்சுதோ.. ஒரே மழையாகவே இருக்கும்.

   ஓம் கீதா.. அடுக்கு நந்தியாவட்டைபோல ஆனா இது ரொம்பப் பெரிசு ரோஜாப்பூப் போல...

   Delete
 16. //நானும் டெய்சிப்பிள்ளையும் கிச்சினில் பிஸி:)
  இதை அனுப்பி வைத்தவர் ஆரெனக் கேட்டிடக்கூடாது,
  கேட்டாலும் சொல்ல மாட்டேன் அது அஞ்சு எண்டு கர்ர்ர்ர்ர்:))//

  ஹாஹாஆ அது கியூட் இல்லையா:)ரெண்டு கிட்டிஸ் இருந்திருந்தா நான் எடுத்திருப்பேன் :)அதோட ஜெசி ரவுடி எல்லாத்தையும் தள்ளி விட்டு போவா :)பாட்டு காணொளி ரெண்டும் பிறகு பார்க்கின்றேன் 

  ReplyDelete
  Replies
  1. போயிட்டு வாங்கோ.. வேலை எல்லாம் முடிச்சுப் போட்டு:)).. அதுக்குள் இம்முறையாவது அந்த நான் முன்பு ஜொன்ன கதையை எழுதிடோணும் இங்கு, என நினைக்கிறேன்:))

   Delete
 17. ஓ உங்க டல்கோனா புகழை ஏற்கனவே உங்க செக் பரப்பியாச்சு அதுவும் இன்ஸ்டாக்ராம்ல ஆங்கிள் ஆங்கிளா போட்டுத் தள்ளினீங்களாமே!! ஹா ஹா ஹா

  அது ரொம்ப நேரம் பீட் செய்யணும் அதுவும் கையால் ...கொஞ்சம் வலி எடுக்கிறது. நாங்க சேம் அளவு இன்ஸ்டன்ட் காஃபீ ஹாட் வாட்டர் கொஞ்சம் சேம் அளவு போட்டு பீட் செய்தால் வருது....ஆனா இப்ப பீட்டர் எங்கு வைச்சுருக்கேன் என்றே தெரியலை...சில பெட்டிகள் இங்கு வந்து பிரிக்கவே இல்லை...ஸோ எனக்கு பீட்டர் இல்லாம ரொம்பக் கஷ்டமா இருக்கு..

  மேலே சொன்னதோடு .மில்க் பௌடரும் போட்டு அடிச்சா கொஞ்சம் நல்ல க்ரீமியா வருது நான் மேஜிக் புல்லட் மிஸ்சியில் போட்டு அடித்தேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //ஓ உங்க டல்கோனா புகழை ஏற்கனவே உங்க செக் பரப்பியாச்சு அதுவும் இன்ஸ்டாக்ராம்ல ஆங்கிள் ஆங்கிளா போட்டுத் தள்ளினீங்களாமே!! ஹா ஹா ஹா//

   ஹா ஹா ஹா காசா பணமோ அடிச்சு விடவேண்டியதுதேன்ன்.. இன்ஸ்டகிராம், இன்ஸ்லி இட்லி எண்டெல்லாம்:))..

   காண்ட் எக் பீட்டர் இருப்பின் அதுவும் ஈஸி கீதா, இல்லை எனில் முள்ளுக்கரண்டிதான் நல்லா அடிச்சுத் தருது...

   //மில்க் பௌடரும் போட்டு அடிச்சா கொஞ்சம் நல்ல க்ரீமியா வருது நான் மேஜிக் புல்லட் மிஸ்சியில் போட்டு அடித்தேன்...//

   ஓ ஆஆ.. நான் ஒரு கோப்பி பிளெண்டர்.. கையில வச்சு அடிப்பது குட்டியூண்டு வாங்கினேன் அது ஒழுங்காக வேலை செய்யவில்லை, இனி ஒன்று வாங்கோணும்.. இது மலிவுதான்.. இங்கு பாருங்கோ இதை வாங்குங்கோ நோர்மல் கோபி எனினும் பாலை அடிச்சுப்போட்டு சேர்க்க நன்றாக இருக்கும்.. நிறைய விலைகளில் கிடைக்கிறது...

   https://www.amazon.co.uk/FKANT-Rechargeable-Three-speed-Adjustment-Cappuccino/dp/B07PRGV6TM/ref=sr_1_57_sspa?crid=1O4IAUVEAN0EP&dchild=1&keywords=hand+coffee+maker&qid=1587481855&sprefix=hand+coffee%2Caps%2C188&sr=8-57-spons&psc=1&spLa=ZW5jcnlwdGVkUXVhbGlmaWVyPUExRTVSV0xRMTVDSVMmZW5jcnlwdGVkSWQ9QTAwODY2NjdZTVIwU0lDOVBFNDImZW5jcnlwdGVkQWRJZD1BMDIzMzY2NEs3NVA4TjhBWjJLOCZ3aWRnZXROYW1lPXNwX2J0ZiZhY3Rpb249Y2xpY2tSZWRpcmVjdCZkb05vdExvZ0NsaWNrPXRydWU=

   Delete
 18. சுகர் சொல்ல விட்டுப் போச்சு ஆமாம் காஃபி சுகர் ஈக்வல் ஹாட் வாஅட்டர் போட்டு அடிச்சா கொஞ்சமா க்ரீமியா வரும். ஆனா டல்கோனா காஃபி அவங்க போட்டது போல அத்தனை கேக் க்ரீம் போல கெட்டியா வரலை...இருந்தாலும் நல்லாத்தான் இருந்தது

  உங்களுக்கு நல்லா க்ரீமியா வந்திருக்கே அதிரா....சூப்பர்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //உங்களுக்கு நல்லா க்ரீமியா வந்திருக்கே அதிரா....சூப்பர்//

   எனக்கும் கையால அடிக்கும்போது வரவில்லை கீதா, அது அரை மணிநேரமாவது அடிக்கோணும், ஆனா இது பீற்றரால அடிக்கும்போது ஈசியா 5 நிமிடத்தில் வந்துவிட்டது, அதுவும் என் சுகர், பெரிய குண்டு உருண்டை என்பதால கரைய ரைம் எடுத்துது.

   இப்படிக் கிறீம் எனில், கோப்பிக்கு மேலே போட்டுக் குடிக்கோணும், ஆனா இப்படி இல்லாமல் கொஞ்சம் தடிப்பாக மட்டும் அடிச்சால், அப்படியே கலக்கிக் குடிக்கலாம், அதுதான் எனக்கும் பிடிக்குது.

   Delete
 19. நான் பீட்டர் இல்லாமல் மிக்சியில் அடித்ததால் இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் இன்னும் கொஞ்சம் அடித்துப் பார்க்கணும்னு நினைச்சிருக்கேன்..

  உங்கள் க்ரீம் சூப்பரோ சூப்பர்...நானும் எடுத்து படம் போடணும்..ஹா ஹா ஹா ஹா ஹா

  யும்மி கேக் பீஸ் , பால் மேல போட்டிருப்பது ரொம்ப அழகா இருக்கு அதிரா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சுகருக்கு அளவில்லை கீதா, நீங்கள் கொஞ்சம் அதிகமாகவும் சேர்க்கலாம், சுடுதண்ணியும் கோப்பித்தூளும்தான் சரிக்குச் சரி சேர்க்கோணும். படம் போடுங்கோ பார்ப்போம்.. மிக்க நன்றி நன்றி..

   Delete
 20. ஹா ஹா ஹா நாங்கல்லாம் எப்பவுமே ஹேப்பி ஹேப்பிதான்!!!

  வீடியோ ஓடலை இப்ப...ஸோ அப்புறம் கேட்கிறேன் ஓகேவா..

  ஆஹா கட்லெட் அருமையா இருக்கிறதே என்று வந்தால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் பேபால் பின் வாங்க வைக்குதே ஹா ஹா ஹா மீ கை கழுவிட்டு வாரேன்...ஹா ஹா ஆ மாஸ்க்கும் தான்!!!!

  ஆ ஆ ஆ ஆ அது என்ன ஏ இப்ப்டி சிமென்ட் பூச்சு பொல இருக்கு!!!!!!!! ஏதோ கலர் போட்டீங்களோ கேக் மேல் க்ரீம் ஐஸிங்கிற்கு?!!!!!!!!

  கையால போட்ட டல்கோனா ஐசிங்க் நல்லாவே இருக்கு அதிரா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //வீடியோ ஓடலை இப்ப...ஸோ அப்புறம் கேட்கிறேன் ஓகேவா..//

   சொன்ன சொல் மீறாமல் நிட்சயம் கேட்கோணும் கீதா..

   //ஆஹா கட்லெட் அருமையா இருக்கிறதே என்று வந்தால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் பேபால் பின் வாங்க வைக்குதே//

   ஹா ஹா ஹா பேபால் எனில் “பின்” நம்பர் வேணும்தேன் ஹா ஹா ஹா..

   //அது என்ன ஏ இப்ப்டி சிமென்ட் பூச்சு பொல இருக்கு!!!!!!!! ஏதோ கலர் போட்டீங்களோ கேக் மேல் க்ரீம் ஐஸிங்கிற்கு?!//

   ஹா ஹா ஹா கர்ர்ர்:)) இல்ல கீதா, அது வீட்டில் இருந்த கலரிங் சேர்த்தேன், . அது நல்ல வெளிர் பச்சை நிறம், ஆனா ஐஸிங் சுகரில் போட்டதும் இப்பூடி ஆகிவிட்டது.. ஏமாத்திப் போட்டினமோ.. போத்திலின் வெளியே அழகிய கலரைப்போட்டு கர்ர்ர்ர்:))

   Delete
 21. எல்லாமே அழகாகத்தான் இருக்கிறது எடுத்து சாப்பிடத்தான் இயலவில்லை.

  ஒரிஜினல் பார்சல் டூ தேவகோட்டை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..
   ஹா ஹா ஹா கொரொனா நேரத்தில அப்பூடித்தான் யூ ரியூப் பார்க்க ஆசையாக நாவூறுகிறது, அதனாலதான் அதிகம் செய்கிறேன், வாங்கப் பயம்...

   //ஒரிஜினல் பார்சல் டூ தேவகோட்டை//
   ஹா ஹா ஹா நோ பிரெபிலம்:)).. முதலில்.., ஒரிஜினல் மணி டூ ஸ்கொட்லாந்து :)) ஹா ஹா ஹா நன்றி கில்லர்ஜி.

   Delete
 22. இன்று என்ன எல்லாத்துக்கும் ஏ....

  பருத்தித் துறை வடை, க ப முழித்துப் பார்க்கும் சப்பாத்தி எல்லாமே நல்லாருக்கு!!!!

  அப்ப லாக் டவுனில் ஒரே சாப்பாடுதான் போல!!! கைக்கும் வாய்க்கும்!! ஹா ஹா ஹாஹ் ஆ

  கீதா

  ReplyDelete
  Replies
  1. லொக்டவுன் முடியப்போகுதாமே என ஆராவது சொன்னாலே எனக்கு நடுங்குது:), ஏனெனில் நான் ஸ்கூலுக்குப் போகவேண்டி வந்திடுமோ என ஹா ஹா ஹா... சாப்பாடு விதம் விதமாக நடக்குது கீதா, லஞ், டின்னர் எல்லாம் ஸ்ரொப் பண்ணிப்போட்டு இப்படி விதம் விதமாக செய்து கொடுக்கிறேன்... இன்னும் நிறைய செய்திருக்கு.. போஸ்ட் போடத்தான் முடியுதில்லை.. இடையில கதை எழுதோணுமாக்கும் மீ:))

   Delete
 23. அதிராவின் அன்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு காணொளி பார்த்தேன், சிரித்தேன். எப்படி எல்லாம் கற்பனை செய்கிறார்கள்!

  ஈஸ்டர் முட்டை வடிவில் கட்லட். கேக் ப நல்லா இருக்கு.
  பருத்தித்துறை வடையை செய்து சூடாய் கொடுக்கவில்லிய இப்படி அலங்காரம் செய்து படம் எடுத்து ஆறி போனபின்தான் வடை கைக்கும் வாய்க்கும் கிடைத்து இருக்கும் போலவே!

  ReplyDelete
  Replies
  1. பாருங்கோ கோமதி அக்கா, எல்லோரையும் சிரிக்க வைக்கக்கூட, கெஞ்ச வேண்டி இருக்குதே ஹா ஹா ஹா..

   //செய்து சூடாய் கொடுக்கவில்லிய//

   ஹா ஹா ஹா இல்ல இது நிறையச் செய்தமையால பிரச்சனை இருக்கவில்லை கோமதி அக்கா, ஆனா சிலது செய்யச் செய்ய முடிஞ்சுபோகும், அதனால 2,3 ஐ மட்டும் வைத்துப் படமெடுப்பேன்...

   இது சுடச்சுடச் சாப்பிடுவதல்ல, ரின் ல போட்டு வச்சு சாப்பிடலாம், இழகாது.

   Delete
  2. அது நான் வெஜ் ஆக இருக்கலாம்னு கமென்ட் போடவில்லை. அழகாக இருக்கு, நல்லாவும் அடுக்கியிருக்கீங்க அதிரா. பாராட்டுகள்.

   Delete
  3. நன்றி நெல்லைத்தமிழன், உள்ளே என்ன இருந்தால் என்ன, பிரசண்டேசனுக்குத்தானே பாராட்டு புளொக்குகளில்:)) ஹா ஹா ஹா சாப்பிட முடியாதெல்லோ:)

   Delete
 24. ப்ரக்கோலி வகைக்கோவா? இது ஒரு வகைக் கீரையோ? நல்லாருக்கு

  கோமதிக்கா விட்டில் பெண்குயில் உங்க வீட்டில் ஆண் குயில் வந்ததுனு சொன்னீங்களே அங்கு அவர் இவர்தானோ? இல்லை நான் அவன் இல்லைனு சொல்லிடுவாரோ?!! ஹா ஹா ஹா

  என்னாது ஜோடிப் புறா பிள்ளையா கோமதிக்கா வீட்டில் என்ன ஜோடி கதையையே மாத்திட்டீங்களே பாவம்...குயிலக்கா..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது ஒருவகை புரோக்கோலிதான் கீதா, ஆனா மேல் முடிவிலதான் குட்டிப் பூ வரும் மற்றும்படி கபேஜ் லீவ்ஸ் போல.. இலைகளை எடுத்துச் சுண்டல் செய்வேன்.

   //என்னாது ஜோடிப் புறா பிள்ளையா //

   ஆஆஆஆவ்வ் புறாப்பிள்ளை எனப் போட்டுவிட்டேனோ ஹா ஹா ஹா...

   மிக்க நன்றிகள் கீதா.

   Delete
 25. ஊரிய கடலைப் பருப்பை போட்டு சப்பாத்தி (தட்டை முறுக்கு போல)
  அதிராவின் பல் நல்ல வலு இருக்கு என்பதால் இதெல்லாம் செய்யலாம் தான்.

  என் வீட்டுக்கு வந்த பெண்குயிலைப் பற்றி இப்படி ஒரு செய்தி இருக்கா? நல்ல வார்த்தை சொல்லி அனுப்பி வைக்க பாருங்க அதிரா.

  ReplyDelete
  Replies
  1. @கோமதி அரசு மேடம் - ///அதிராவின் பல் நல்ல வலு இருக்கு என்பதால் // - இதற்கு அதுதான் காரணமா இல்லை விருந்தினர் யாரையேனும் பழி தீர்க்கச் செய்த தந்திரமா (இப்போ யாரும் விருந்தினர் வர மாட்டார்கள் அல்லோ என்று கேட்டால்...சும்மா நல்லா இருந்ததுன்னு எழுதி, அப்பாவி நம்மை யாரையேனும் இதுபோல் செய்து பார்க்கச் சொல்லி கெட்ட பெயர் எடுப்பதற்காகச் செய்த தந்திரமோ? தெரியவில்லை)

   Delete
  2. கோமதி அக்கா, ஊறிய பருப்பு நல்ல சொஃப்ட்டாக இருக்கும், பொரித்தால்தான் ஹார்ட் ஆகும், இது வெறும் அடுப்பில் போட்டு சப்பாத்தி செய்யும்போது, பருப்பு அவிந்ததுபோல வந்துது, பருப்பு போட்டதுபோலவே தெரியவில்லை...

   //அதிராவின் பல் நல்ல வலு இருக்கு என்பதால் இதெல்லாம் செய்யலாம் தான்.//
   ஹா ஹா ஹா இப்ப கூட புளியம்கொட்டைகளைச் சேர்த்து வைத்து, வறுத்து எடுத்து வச்சிருக்கிறேன், ஒன்று ஒன்றாக சாப்பிட்டபடியே கொமெண்ட் போடுகிறேன்:))..

   // நல்ல வார்த்தை சொல்லி அனுப்பி வைக்க பாருங்க அதிரா.///

   ஹா ஹா ஹா விடுவேனோ கோமதி அக்கா நான், நம்பிய பிள்ளையை ஏமாத்தக்கூடாது உடனே ஓடுங்கோ எனச் சொல்லி அனுப்பிட்டேன்ன்.. நாளைக்குப் பாருங்கோ ஜோடியாக இருப்பினம், ஆனா ஒன்று அவர்களும் மாஸ்க் கட்டியிருந்தால் உங்களால அடையாளம் காண முடியாதே..:)) ஹா ஹா ஹா..

   Delete
  3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ தமிழன்.. இப்போ விருந்தினர் ஆரும் மாட்டுவதாக இல்லை:)).. வீட்டு எலிகளே அகப்பட்டு முழிக்கினம்:)), தப்பி ஓடவும் முடியாதே:).. விடமாட்டனெல்லோ.. மீ கஸ்டப்பட்டு செய்வதை வாணாம் எனச் சொன்னால் விட்டிடுவேனோ?:)).. ஆருகிட்ட?:)) ஹா ஹா ஹா..

   Delete
  4. நெல்லை ,அதிரா "நல்ல பிள்ளை "அப்படி நாம் கெட்ட பேர் எடுக்க எல்லாம் சொல்லி தரமாட்டார். நம்ப வேண்டும்.

   Delete
  5. //கோமதி அரசுWednesday, April 22, 2020 12:11:00 pm
   நெல்லை ,அதிரா "நல்ல பிள்ளை "அப்படி நாம் கெட்ட பேர் எடுக்க எல்லாம் சொல்லி தரமாட்டார். நம்ப வேண்டும்.//

   ஆங்ங்ங்ங் அப்பூடிச் சொல்லுங்கோ கோமதி அக்கா.. நெ.தமிழன் கேட்டுதோ?:)).. இதெல்லாம் கேய்க்காதே கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா.

   Delete
 26. ஆசிரியர்: ஆராவது என்னைக் காப்பாற்றுங்கோ...

  மாணவன் : ஐயா... யாராவது என்றுதான் விளிக்க வேண்டும். மறுபடியும் சொல்லுங்கோ..

  ஆசிரியர் : என்னிடம் தமிழ் படிக்காத ஆராவது வந்து என்னைக் காப்பாத்துங்கோ...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)).. என்ன வரவேற்பெல்லாம் அமர்க்களமாக இருக்குதெண்டு யோசிக்காதையுங்கோ:)).. எல்லாம் ஒரு வருமுன் காப்போன் தந்திரம்தேன்:))..

   //ஐயா... யாராவது என்றுதான் விளிக்க வேண்டும்//
   ஹா ஹா ஹா ஹையொ நானே தப்பாக எழுதி ஆசிரியரை மாட்டி விட்டிட்டேனோ?:)) விதி ஆரை விட்டது?:))

   Delete
  2. தமிழ்லயும் தண்ணிலயும் ஒரே நேரத்தில் மூழ்கறார் போல...!

   Delete
  3. //ஸ்ரீராம்.Wednesday, April 22, 2020 7:40:00 am
   தமிழ்லயும் தண்ணிலயும் ஒரே நேரத்தில் மூழ்கறார் போல...!///

   ஹா ஹா ஹா அச்சச்சோ அபச்சாரம்.. கிணற்றுத் தண்ணியில் மூழ்கிறார் எனச் சொல்லோணும்:))

   Delete
 27. ஆணின் ஜோடிப்புறாப்பிள்ளை// கோமதிக்கா வீட்டில் இருந்த குயிலக்காவுக்கு ஒரே கோபம்..நீ தேடும் அவள் நானில்லை என்று...எங்க வீட்டுப் புறா விடம் சேதி சொல்லி அனுப்பிருக்கா...ஜாக்கிரதை இப்ப எப்படி பஞ்சாயத்து செய்து ரெண்டு பேரையும் கூட்டி வைக்கிறதாம் நு யோசிக்கிறேன் நான் ஹா ஹா ஹா ஹா

  ஊசிக்குறிப்பு வாட்சப்பில் வந்துச்சு ..ஹா ஹா ஹா

  ஆசிரியர் ஹா ஹா ஹா இந்த ஆசிரியர் நெல்லைன்னு சொல்லவும் வேனுமோ??!!!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //ஆசிரியர் ஹா ஹா ஹா இந்த ஆசிரியர் நெல்லைன்னு சொல்லவும் வேனுமோ??!!!! ஹா ஹா ஹா ஹா//

   நான் அப்பூடின்னு ஜொள்ளவே இல்ல ஜாமீஈஈஈஈ:)), ஆனால் கீதா, நிங்க சொல்லும்போது மறுப்பேனோ?:))

   Delete
 28. சப்பாத்தியில் கடலைப் பருப்பா? வேக வைக்கும்போது திரும்பவும் கெட்டியாகிவிடுமே.. இதைச் சாப்பிடக் கொடுத்தால் ஆயா இரும மட்டுமா செய்வார்? தொண்டை அடைத்துக்கொண்டு ஐசியூவிற்கு அப்போதே சென்றிருப்பாரே.

  ReplyDelete
  Replies
  1. ///வேக வைக்கும்போது திரும்பவும் கெட்டியாகிவிடுமே.//

   இல்ல நெ தமிழன், வேக வைத்தால் எப்படிக் கெட்டியாகும்? பொரித்தால்தான் ஹார்ட் ஆகும்.. இது சொஃப்ட்டாகவே இருந்தது.. பொய் எண்டால் செய்து பாருங்கோ:)).

   //இதைச் சாப்பிடக் கொடுத்தால் ஆயா இரும மட்டுமா செய்வார்? தொண்டை அடைத்துக்கொண்டு ஐசியூவிற்கு அப்போதே சென்றிருப்பாரே.
   //
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) ஆயாவுக்கு மல்லி சீரகம் எல்லாம் அவிச்சுக் குடுத்துப் பத்திரப்படுத்தி, கீதா கையில, என் கண்ணையே ஒப்படைச்சிட்டேன்:))

   Delete
 29. அதாரு ஞானி??!!! ஹா ஹா ஹா புலாலியூர் பூஸாந்தாவை

  நாங்கள் வாராத நாளில்லை
  புலாலியூர் பூசாந்தா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பழுத்தபழமரம்தானே கீதா கல்லெறி படும்:)) ஞானிகளும் அப்படித்தான்.. இதில் அதிரா மட்டும் விதிவிலக்கோ என்ன?:))

   ஹா ஹா ஹா சரி சரி கல்லைக் கீழே போடுங்கோ, பின்பு குளோயி பயந்திடப்போறா:))

   Delete
 30. இப்படி வந்து விட்டோமே என்று சிந்தனை செய்கிறதா தனிமையில் குயில் ? புல்வெளியும் மரபடிகளும் அழகு.

  ஊசி இணைப்பு சிரிக்க வைத்தது. ஊசிக்குறிப்பு தத்துவமுத்துக்களை உதிர்த்த
  “ஞானி😻” புலாலியூர்ப் பூஸானந்தா அவர்களுக்கு வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. அது கோமதி அக்கா, தனியே ஸ்ரெடியாப் பறந்து வந்திட்டார்... பின்பு நான் மிரட்டியதும் பயந்து போய் அங்கு பறக்கத் தொடங்கிட்டார்ர் ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் கோமதி அக்கா...

   Delete
 31. டல்கோனா ஐசிங்கிற்காக அதிரா செய்த கேக், சிமென்ட் வைத்தும் பூசின செங்கல் மாதிரி எனக்கு மட்டும்தான் தெரியுதா?

  ReplyDelete
  Replies
  1. முரளிமா,
   அதிரா பாவம். சிமெண்ட் கலரில் கேக் செய்துவிட்டார்.
   ஆனால் ஐசிங்க் டாப் க்ளாஸ்.
   எல்லோரும் டல்கோனா காப்பி சாப்பிட்டீங்களா.

   திண்டுக்கல் லியொனி சிரிக்க சிரிக்க தான் பேசுவார்.

   Delete
  2. கீதாதான்,ஆண்குயில் பற்றி எழுதி இருந்தார். கோமதியுமா.

   போய்ப் பார்க்கிறேன்,.

   Delete
  3. எனக்கும் தெரிந்தது (நானும் நினைத்தேன்) அப்புறம் தங்கை அலங்கரிந்து விட்டார்.

   Delete
  4. ஹஆஹாஆ :) இந்த hollow blocks இப்படித்தான் இருக்கும் 

   Delete
  5. வல்லிம்மா... டல்கோனா காபி என்னைக் கவர்கிறது. ஆனால் நாங்கள் காபி, தேநீர் குடிக்கும் வழக்கம் இல்லையே.... வீட்டுக்கு யாரேனும் வந்தால் பால் அல்லது போர்ன்விட்டாதான். ஹா ஹா.

   Delete
  6. @நெ டமிலன்:))
   //சிமென்ட் வைத்தும் பூசின செங்கல் மாதிரி எனக்கு மட்டும்தான் தெரியுதா?///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அஞ்சுவின் டுணுக்குக்கு:)) சூப்பர் அருமை.. எனக் கொமெண்ட் போட்டதால, அஞ்சு வந்து தனக்கு சப்போர்ட் பண்ணுவா என நினைச்சு தெகிறியமாகப் பேசுறார் இங்கு:))..
   நாம ஆரு.. உங்களுக்கு 38 வயசு:)) இளைய குட்டித்தங்கை எல்லோ:))... ஹா ஹா ஹா ,.. அப்போ மீ விடுவேனோ.. மீயும் ஓடிப்போய் அஞ்சுவின் டுணுக்கை:)) ஆகா ஓகோ எனப் புகழ்ந்திட்டேன் அதனால இப்போ அவவால எந்தக் கட்சியிலும் கால் வைக்க முடியாமல் தடுமாறுறா:))..

   ஊசிக்குறிப்பு:-
   எனக்கும் அப்பூடித்தான் டவுட்டூ வந்துது, ஆனா டல்கோனா அதனைக் காப்பாற்றி விட்டது:)).. லொக்டவுன் நேரத்தில, இதுவே மிகப்பெரிய விசயமெல்லோ:)) அதுக்காக அவார்ட் குடுப்பீங்க என நினைச்சால் கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. சரி சரி, திரும்ப இன்னொரு தடவை வேறு கலரில செய்திட்டால் போச்சு:))

   Delete
  7. வாங்கோ வல்லிம்மா வாங்கோ..

   //வல்லிசிம்ஹன்Tuesday, April 21, 2020 2:32:00 pm
   முரளிமா,
   அதிரா பாவம். சிமெண்ட் கலரில் கேக் செய்துவிட்டார்.
   ஆனால் ஐசிங்க் டாப் க்ளாஸ்.//

   அதானே வல்லிம்மா, விடாதீங்கோ கேளுங்கோ:)).. அதிராவுக்குக் கேய்க்க ஆளில்லை என நினைச்சிட்டார்ர்ர்ர்:)).. நான் வல்லிம்மா இன்னும் கொஞ்சம் வோஸிங்டன் படங்கள் போட்டு ஆசையைத்தூண்டி, நெ தமிழனை அம்பேரிக்கா வரப்பண்ணுறேன்:)).. அங்கு வச்சு நாலு கேள்வி கேளுங்கோ வல்லிம்மா:))... ஹா ஹா ஹா..

   நன்றி வல்லிம்மா ஐஸிங் உங்களுக்குப் பிடிச்சதில் மகிழ்ச்சி.

   டல்கோனா ஓகே.... நான் ஹொட் கொஃபிதான் செய்தேன், கோல்ட் கொஃபி பிடிக்காது.

   ஓம் கோமதி அக்காவின் லேட்டஸ்ட் போஸ்ட், லிங்கும் குடுத்திருக்கிறேன் என் போஸ்ட்டில்..

   மிக்க நன்றிகள் வல்லிம்மா.

   Delete
  8. ஏன் நெ தமிழன், உங்கள் வீட்டில் ஆருமே கோப்பி, தேனீர் குடிப்பதில்லையோ? அது எப்படி? அப்போ மோனிங் என்ன குடிப்பீங்கள்?..

   நான்/நாங்கள் சாப்பாடில்லாமலும் இருப்போம் ஆனா ரீ இல்லாமல்.. ம்ஹூம்ம்.. ரொம்ம்ம்ம்ம்ம்பக் கஸ்டம்.

   Delete
  9. டல்கோனா அழகாத்தான் இருக்கு.

   எங்க வீட்டில் சின்ன வயதிலிருந்தே காபி, தேநீர், பால்லாம் கிடையாது. குளித்து கடமைகள் முடித்தபிறகு 8 அல்லது 8 1/2 மணிக்கு முழுச் சாப்பாடு (சாதம், சாம்பார்...).

   வாய்த்த மனைவிக்கும், அவங்க வீட்டில் காப பழக்கம் இருந்தாலும், அவள் காபி சாப்பிடும் பழக்கம் இல்லவே இல்லை. இது அபூர்வமாக அமைந்துவிட்டது.

   காபி குடிப்பவர்கள் அந்த அந்த நேரத்துக்கு எங்கிருந்தாலும் காபி குடித்தே ஆகவேண்டும் என நினைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

   Delete
  10. //காபி குடிப்பவர்கள் அந்த அந்த நேரத்துக்கு எங்கிருந்தாலும் காபி குடித்தே ஆகவேண்டும் என நினைப்பதைப் பார்த்திருக்கிறேன்.//

   உண்மை நெ தமிழன், உடலோ மனமோ களைப்பாக இருந்தால் ஒரு கப் ரீ குடிச்சால் போதும்.. சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உசார் வரும் ஹா ஹா ஹா... எனக்கு வீட்டு வேலைக்கு கெல்ப் எதிர்பார்க்க மாட்டேன், ஆனா அப்பப்ப ஒரு கப் ரீ ஊத்தித்தந்தால் போதும், பம்பரம்போல செயல்படுவேன் ஹா ஹா ஹா:))

   Delete
 32. பாரிஜாதம் அழகு...

  'அன்பான வேண்டுகோள்' காணொளி முன்பே கேட்டதுண்டு...

  ஞானி ஏன் குளத்துக்குள்ளேயே இருக்க வேண்டும்...?

  எங்க ஊரில் ஞானி, "தாமரை இலை மேலுள்ள தண்ணீர் போல இருப்பாராக்கும்...!

  ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ...

   //காணொளி முன்பே கேட்டதுண்டு...//
   அதேதான், பல வருடங்கள் முன்பு நடந்த பட்டிமன்றம்தானே..

   //எங்க ஊரில் ஞானி, "தாமரை இலை மேலுள்ள தண்ணீர் போல இருப்பாராக்கும்...!//
   ஹா ஹா ஹா...அவர்தான் ஒரிஜினல் ஞானி:)) ..

   மிக்க நன்றி சகோ டிடி.

   Delete
 33. வணக்கம் அதிரா சகோதரி

  பதிவு அருமை. காஃபியில் ஆரம்பித்து காவியில் வந்து முடித்து விட்டீர்கள். அனைத்தையும் ரசித்தேன்.

  பாரிஜாத மலர் ரொம்ப அழகாக உள்ளது.செடியில் இன்னமும் மலர் அழகாக உள்ளது. அது சரி... பிள்ளையாரை எங்கும் காணவில்லை. காமாட்சி தாயார்தான் மலரின் அழகை ரசித்தபடி காட்சி தருகிறார்.

  அந்த காப்பி பவுடரை கீரீமாக அடித்து பாலில் சேர்த்து பார்க்கவே நன்றாக உள்ளது. நான் என்றால், இவ்வளவு கஸ்டபடாமல் பாலில் சேர்த்து பருகி விடுவேன். ஹா.ஹா.ஹா. அப்படி செய்தால் நன்றாக இருக்காதோ ?

  இங்கு இந்த மாதிரி நாங்கள் வெளியில் செல்லும் போது கோல்ட் காஃபி 100 ரூபாய்க்கு என என் குடும்பத்தவர்கள் குடிப்பார்கள். நானும் ஒரு தடவை குடித்துள்ளேன். ஆனால் அவ்வளவு ரூபாய்க்கு எனக்கு அடிக்கடி அவர்களோடு செல்லும் போது குடிக்க மனசு வராது. ஆனால் இந்த மாதிரி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

   //காஃபியில் ஆரம்பித்து காவியில் வந்து முடித்து விட்டீர்கள்//

   ஆஹா தத்துவம் தத்துவம்:))..

   ///அது சரி... பிள்ளையாரை எங்கும் காணவில்லை. //
   அதில் ஒரு குட்டிக் கும்பம் இருக்குதெல்லோ.. கும்பத்திலே ஒரேஞ் கலரில் ஒட்டி இருக்கிறார் பிள்ளையார்:))..

   //காமாட்சி தாயார்தான்//
   அவ விளக்கிலே இருக்கிறா...

   //அப்படி செய்தால் நன்றாக இருக்காதோ ?//
   ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை, இடைக்கிடை இப்படியும் செய்து குடிக்கும்போது ஒரு வித்தியாசமான உணர்வு வரும்...

   //கோல்ட் காஃபி//
   அதேதான் ஆனால் நான் ஹொட் கோப்பிதான் செய்தேன், கோல்ட் வீட்டில் பெரிசாக பிடிக்காது எங்களுக்கு..

   மிக்க நன்றிகள் கமலாக்கா.

   Delete
 34. பாரிஜாத பூஜைத் தட்டு, விளக்குடன் அழகோ அழகு.

  மனைவி பெயரை கோவிட்-19 என்றா அவர் save செய்து வைத்திருக்கிறார்? இது அநியாயம் இல்லையோ? கோவிட்-19 பெரும்பாலும் குணமாக வாய்ப்பு இருக்கே. ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. //பாரிஜாத பூஜைத் தட்டு, விளக்குடன் அழகோ அழகு//
   நன்றி நன்றி... இப்பூடிச் சொல்லிப்போட்டு முடிவில கவிழ்க்க மாட்டீங்களே?:)) டவுட்டாகவே இருக்கெனக்கு ஹா ஹா ஹா:))..

   //கோவிட்-19 பெரும்பாலும் குணமாக வாய்ப்பு இருக்கே.//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  2. "பாரிஜாதம்... பகலில் பூத்தது". என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது. கேட்டிருக்கீங்களோ?

   Delete
  3. https://www.youtube.com/watch?v=OMydidXLHNw

   ஆஆவ்வ்வ் ஸ்ரீராம் இப்போதான் தேடிக் கேட்கிறேன்.. ஜேசுதாஸ் அங்கிள் பாடல்... அருமையாக இருக்குது...

   Delete
 35. பருத்தித்துறை வடையும் அழகா இருக்கு. வத்தல் போட்டேன், வத்தல் போடறேன் என்றெல்லாம் சொல்றீங்க. வத்தல் படங்களைக் காணோமே.... சரியா வரவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. அது தலை இருக்க வால் ஆடப்பிடாதெல்லோ:)) முதல்ல அஞ்சு தன்ர வத்தல்களைப் போடோணும்:)).. பின்புதான் நான் போடுவேன் படம்:)).. ஏனெனில் அவதான் வத்தல் போடு போடு என எனக்கு ஆசையைத் தூண்டி விட்டவ.. அதாவது நான் ஊறுகாய், மோர் மிளகாய் இப்படித்தான் போட நினைச்சிருந்தேன், ஆனா இந்த வடாம் வகைகள் போடும் நினைப்பிருக்கவில்லை...

   இப்போ அஞ்சு சொல்லித்தான், உருளை வத்தல், சவ்வரிசி வத்தல் போட்டிட்டேன், நாளைக்கு வெஜ் வத்தல் ரெடியாகுது:)).. மற்றும் தேசிக்காய் ஊறுகாயும் கொஞ்சமாக போட்டிட்டேன்ன்..

   ஆனா இன்னொன்று நெ தமிழன், சரியாக வந்தால்.. அது அதிராவின் கெட்டித்தனம்+கைவண்ணம்:),
   பிழைச்சால்.. அது அஞ்சு சரியாக சொல்லித்தரவில்லை:)) என எடுக்கோணும்:)) படங்கள் பின்பு வரும்.. சரியா வராட்டிலும் போடுவேன்.. அப்போதான் நாலுபேர் சரிபிழை சொல்லும்போது இன்னொரு தடவை சரியாகச் செய்ய முடியும்...

   மிக்க நன்றிகள் நெ தமிழன்.. அனைத்துக்கும்.. ஹா ஹா ஹா.

   Delete
 36. உண்மைதான் சகோதரி
  சிரிக்காத நாட்களெல்லாம் வாழாத நாட்கள்தான்
  அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ..

   மிக்க நன்றிகள்.

   Delete
 37. வணக்கம் அதிரா சகோதரி

  சிரித்து வாழ வேண்டும். உண்மைதான்..சிரிக்காத வாழ்வு ஜீவனற்றதாகி விடும்.

  கட்லெட், கேக், பருத்தித்துறை வடை என ஜாமாயித்து விட்டீர்கள். எல்லாமே பார்க்க மட்டுமில்லாமல் சாப்பிடும் ஆசையை தூண்டுகிறது. வெங்காயம். உ.கி காரட் பட்டாணி வைத்து கட்லெட்டா? கடலை பருப்பு போட்டு சப்பாத்தியும் பிரமாதம். நான் கடித்தால் கடலை பருப்பு உடைபடுகிறதோ இல்லையோ என் பல் உட்பட்டு விடும்.

  ஜோடிக்குயில் அங்குதான் உள்ளதா? இன்று நாளைக்குள் சகோதரி கோமதி அரசு அவர்எள் நன்றாக கவனித்து அனுப்பிய குயிலக்கா அங்கு தன் இணைத் தேடி வந்து விடும். இரண்டையும் ஒன்றாக் சேர்த்து படமெடுத்து பதிவில் போடவும்

  ஊசி இனைப்பு, ஊசிக்குறிப்பு இரண்டுமே அருமை. அத்தனை பகிர்வினுக்கும், மனம் நிறைந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ம்ீண்டும் வருக கமலாக்கா..

   //சிரித்து வாழ வேண்டும். உண்மைதான்//
   ஹா ஹா ஹா இதுக்காகவே இக்கொமெண்ட் படிக்கும்போதும் இன்னொருக்கால் சிரிக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்:))..

   //கட்லெட், கேக், பருத்தித்துறை வடை என ஜாமாயித்து விட்டீர்கள்.//
   ஹா ஹா ஹா இன்னும் இருக்கினம் கியூ வரிசையில்.. பிட்ஷா, பற்றிஸ், கறிபன்...இப்படிக் கொஞ்சப்பேர்:)) ஹா ஹா ஹா..

   ஏன் எல்லோரும் கடலைப் பருப்பைப் பார்த்துப் பயப்படுறீங்க.. இது கிட்டத்தட்ட 6,7 மணித்தியாலங்கள் ஊறிய பருப்பு.. சப்பாத்தியில், மாப்போல வாயில் கரைஞ்சு போச்சு...பருப்புப் போட்டதென்றே தெரியவில்லை.

   //ஜோடிக்குயில் அங்குதான் உள்ளதா?
   இரண்டையும் ஒன்றாக் சேர்த்து படமெடுத்து பதிவில் போடவும்///

   ம்ஹூம்ம்:)) இப்பூடி எல்லாம் என்னை வம்பில மாட்டி விட்டிடுவீங்கள் எண்டுதான் நான் குயிலாரை உடனேயே திருப்பி அனுப்பிட்டேன் கோமதி அககவிடம் மதுரைக்கு... இனி எனக்காக கோமதி அக்கா ஜோடிப் படம் எடுத்துப் போடுவா விரைவில்:)) ஹா ஹா ஹா..

   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா தப்பித்தேன் ஜாமீஈஈஈஈஈஈ:))..

   ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கமலாக்கா.

   Delete
 38. //உங்கள் அன்புக்கும், பண்புக்கும்,
  பாசத்துக்கும், மதிப்புக்கும் பாத்திரமான..//

  எச்சூஸ்மீ ..கொஞ்சம் அந்த பாத்திரம் மண்ணா /நொன்ஸ்டிக்கா அலுமினியமா னு சொன்னா வஸந்தியா,வதந்தியா  இருக்கும் சேசே டங் ஸ்லிப்பிங் வசதியா இருக்கும் 

  ReplyDelete
  Replies
  1. அய்ய்ய்ய்ய் அஞ்சு ரீ என்றி குடுத்திருக்கிறா:))..

   //எச்சூஸ்மீ ..கொஞ்சம் அந்த பாத்திரம் மண்ணா /நொன்ஸ்டிக்கா அலுமினியமா னு//
   இதுக்குத்தான்.. இதுக்குத்தான் ஜாமத்தில போஸ்ட் போடாதீங்கோ எனச் சொன்னா ஆரு கேய்க்கிறா:) இப்ப பாருங்கோ.. இது ட்றுத் ஆ இல்ல அஞ்சுவோ என எனக்கு டவுட்டா இருக்கே:)) ஹா ஹா ஹா..

   //வஸந்தியா,வதந்தியா இருக்கும் சேசே டங் ஸ்லிப்பிங் வசதியா இருக்கும் //

   ஹையோ மெதுவாப் பேசுங்கோ.. நெ தமிழன் இப்போ நைஸாத் தமனாக்காவைக் கழட்டப் பார்க்கிறார்ர்:)).. இதைப் பார்த்தால் வசந்தியக்காவைத் தேடப்போகிறார் ஹா ஹா ஹா...

   Delete
  2. அஞ்சூஊஊ ஹா..ஹா..ஹா..

   Delete
  3. @priyasaki

   [im]https://media1.tenor.com/images/a1705a7e2e6ad09f8c6f801b0af080a8/tenor.gif?itemid=7525573[/im]

   Delete
 39. ஒருநாள் யாரோ பாட்டு சூப்பர் ரசித்தேன் .குரல் இசை  எல்லாம் அருமை ஆனா எல்லாவற்றையும் தாண்டி மம்மி தான் ஈர்க்கின்றார் ..செம்ம அழகு 

  ReplyDelete
  Replies
  1. //தாண்டி மம்மி தான் ஈர்க்கின்றார் .//

   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அம்மா எண்டு ஜொள்ளோணும்:))... ஹா ஹா ஹா நல்ல அழகாகத்தான் இருக்கிறா என்ன... நன்றி அஞ்சு.

   Delete
 40. Replies
  1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. மிக்க நன்றி.

   Delete
 41. இன்று ஏதாவது பாடல் போட்டிருக்கிறீர்களா என்று மொபைலில் தெரியவில்லை. கமெண்ட்ஸ் படிச்சா தெரியும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... ஒருநாள் யாரொ பாட்டு.. நெ.தமிழன் சொல்லிட்டார்.

   எப்போ கொம்பியூட்டர் திருத்தப்படும் ஸ்ரீராம்?

   Delete
 42. இந்த டல்கோனா காபி ஊர் முழுவதும் சுற்றியதில் என் இளையவனும் முயற்சித்தான். பாதி(தான்) வெற்றி.

  ReplyDelete
  Replies
  1. பறவாயில்லையே.. பாதிவெற்றி.. முழு வெற்றியின் ஆரம்பம்:))

   Delete
 43. அந்தப் பட்டிமன்றப் பேச்சாளரின் சமத்கார சாமர்த்தியத்தை ரசித்தாலும், எனக்கு தி லி யைப் பிடிக்காது.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு அவரைப் பிடித்திருந்தது, ஆனால் ரொம்பவும் பிறர் மனம் நோகப் பேசுவார் (மற்ற மதங்களை). அப்புறம் கருணாநிதியிடம் விலை போனதும் மற்ற கட்சிகளை.. ஹா ஹா

   Delete
  2. உண்மைதான் அவரும் அவரின் ப.மன்றத்தில் பேசுவோரும் ஓவராக அம்மா பகுதியை ஓட விடுவார்கள்.. ஆனால் அதுபற்றிக் கவனிக்காமல் பார்த்தால் நகைச்சுவைதான்...

   Delete
 44. சப்பாத்தியில் கடலைப் பருப்பு.. வித்தியாசமாத்தான் இருக்கும் போல..

  தமிழ் வாத்யார் ஜோக் எதற்காக, யாருக.காக என்று படித்துக் கொண்டு வரும்போதே புரிந்தது.

  ReplyDelete
  Replies
  1. சப்பாத்தியில் கடலைப்பருப்பு.. புது முயற்சி ஸ்ரீராம், நன்றாக இருக்கும்.. இன்னும் கூடப் போடலாம், ஆனா மெல்லிசாக உருட்டி எடுப்பது கொஞ்சம் கஸ்டமாகிவிடும்... டமில் வாத்தியார் அது வந்து..... ஹா ஹா ஹா...

   Delete
 45. உங்க வீட்டுக் குயிலையும், கோமதி அக்கா வீட்டுக்கு வந்த குயிலையும் இணைத்து எழுதப்பட்ட கிசுகிசுவை ரசித்தேன். நல்ல டைமிங்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஸ்ரீராம்.. ஸ்கொட்லாந்துக் குயிலையும் மதுரைக் குயிலையும் இணைச்சு வச்ச பெருமை எனக்கும் கோமதி அக்காவுக்கும் ஹா ஹா ஹா..

   இம்முறை கொஞ்சம் முடியாமல் போச்சு. அதனால பதில்கள் லேட்..மன்னிக்கவும்.

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
 46. ஹலோ பிஞ்சு அனானி. ஆ...சொறி.. ஹலோ பிஞ்சு அஞ்ஞானி எனக்கு அந்த சப்பாத்தி வேணும். நல்லாயிருக்கு. பொட்டு வைச்சமாதிரி க.பருப்பு. அழகா இருக்கு. ஊறவைச்ச பருப்பெல்லோ அப்ப நைசா இருக்கும்.
  பாட்டு நல்லபாட்டு. அந்த கால நடிகையில் மம்மி நல்ல அழகு. பிடிக்கும் எனக்கு.
  அது என்ன கட்லெட் உ..கி போட்டதா? அல்லது க. மீ போட்டதா.? சேப் வடிவா இருக்கு. நான் இங்கு பற்றிஸ்,போண்டாதான் செய்தேன். பருத்தித்துறை வடை செய்து சரிவரேல்லை. திரும்பியும் செய்யோனும்.
  ஆ..பாரிஜாதம் பெரிய செடியா(மரமா? ) இருக்கு. இப்படி வளருமா. நான் சாடியில் வைத்திருந்தேன். 2,3 பூ பூத்தது பின் வாடிவதங்கிவிட்டது. நல்ல வாசமா இருக்குமே. கார்டினில் நிக்குதா? அதன் வாசம் எனக்கு பிடிக்கும். எங்கள் மல்லிஅக்கா பூக்கிறாவேஏஏ....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ..

   //ஹலோ பிஞ்சு அனானி. ஆ...சொறி.. ஹலோ பிஞ்சு அஞ்ஞானி//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) லொக்டவுனில ஓவராச் சாப்பிடுறீங்க போல இருக்கே:) டங்கூஊஊஊஊஊ தடுமாறுது:)) ஹா ஹா ஹ..

   சப்பாத்தி.. இன்று பிரை:) டேக்கு செய்யுங்கோ அம்முலு... ஆனா ஒன்று.. இது அதிராட ரெசிப்பி எனச் சொல்லியே செய்யோணும் ஜொள்ளிட்டேன்ன்:)).. யேஸ் நான் பெரும்பாலும் கடலைப்பருப்பு வடைக்கு.. 7,8 மணி நேரம்கூட ஊற விடுவேன், அப்படி ஓவர் நைட் ஊறியதே இப்பருப்பு.

   இப்படி ஊறப்போட்டு, பின்பு அரைக்காமல் ஒன்றும்பாதியுமாக பருப்பை உடைத்துக் குழைத்து வடை சுட்டால்ல் கிரிஸ்பியாக சூப்பராக இருக்கும்..

   கட்லெட் உருளைக்கிழங்கு லீக்ஸ் எல்லாம் சேர்த்தது அம்முலு... கிழங்கை 90 வீதமளவு அவித்த பின்பு, கொஞ்ச நேரம் கிரில் பண்ணி எடுத்து கறி செய்தால், பொரித்த கிழங்கில் செய்வதைப்போல சுவையாக இருக்கும், நீர்த்தன்மையாக இருக்காது.

   Delete
  2. என் பற்றிஸ், கறிபன் ரெசிப்பீஸ் கியூவரிசையில:) நிக்கினம் இங்கு வர ஹா ஹா ஹா.

   பருத்தித்துறை வடை ஏன் சரி வரவில்லை? எனகு நன்றாக வருகிறது.

   பாரிஜாதம், கிட்டத்தட்ட செம்பரத்தம் மரம்போல பெரிசா வளர்ந்து நிக்குது.. இது எங்கள் முந்தி இருந்த வீட்டுக்காரர் நட்ட மரம், இடையில வேர் வெட்டுப்பட்டு, பூக்காமல் இருந்துது, இப்போ மீண்டும் பூக்கத் தொடங்கிட்டா.

   பின் கார்டினில் வேலியுடன் நிற்கிறது...

   Delete
  3. இல்ல அம்முலு பற்றிஸ் நினைப்பில் லீக்ஸ் சேர்த்தேன் எனச் சொல்லிட்டேன்ன்.. கட்லட்டுக்கு லீக்ஸ் சேர்க்கவில்லை

   Delete
 47. இந்த டல்கோனா கோப்பி இங்கு குடித்திருக்கிறேன். நான் கோப்பி பிரியை. இங்கு விதவிதமா கோப்பி இருக்கு. ஜேர்மன்காரர்கள் கோப்பிக்கு அடிமைகள். அதனால் கோப்பி சொப் நிறைய இருக்கு. ரீ குடிப்பதுதான். ஆனா நல்ல ஸ்ரோங் ரீ க்கு காய்ச்சிய பால் விட்டு குடிக்க விருப்பம்.ஆனா இங்குள்ளவங்க வீட்டுக்கு போய் அவங்க ரீ என்ற பெயரில் தாற தை குடித்து வெறுப்புதான். இடையில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்தால் ரீ தான்.
  நான் இதுவரை செய்யேல்லை. நீங்க செய்த டல்கோனா நல்லாயிருக்கு. பிரசண்டேஷன் (கோப்பி) அழகயிருக்கு. கேக் என்ன பார்க்க சாணி பச்சை கலர்ல இருக்கு. இதற்கு நோ கொமண்ட்ஸ். நீங்க கஷ்டப்பட்டு செய்திருக்கிறீங்க. எல்லோ அதுதான்.
  ஆனா டெகரேஷன் செய்தபின் வடிவா இருக்கு. க்ரீம் ஏன் சுவரில காட்டினீங்க. கப்பை கவிழ்த்து காட்டியிருக்கோனும் க்ரீம் விழுதோ என்று பார்க்க ஹா..ஹா.. நெஸ்கபேல தான் செய்யனுமா.?
  பருத்தித்துறை வடையை பார்க்க எனக்கு மலிபன் மாரி பிஸ்கட் தான் ஞாபகம் வருது. சின்னதா தட்டினீங்களா. நல்லாயிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. //பார்க்க சாணி பச்சை கலர்ல இருக்கு. இதற்கு நோ கொமண்ட்ஸ். நீங்க கஷ்டப்பட்டு செய்திருக்கிறீங்க. எல்லோ அதுதான்// - ஹா ஹா ஹா... நிறம்தான் கவிட்டுப்போட்டுது போலிருக்கு. ருசியாவது நல்லா இருந்ததா?

   Delete
  2. //நான் கோப்பி பிரியை//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் திருமணமாகும்வரை, கோப்பி கிச்சினில் மணத்தாலே ஓடி விடுவேன், கோப்பி வீட்டில் மணத்தால், ரீ யே குடிக்க மாட்டேன் அப்படி ஒரு அலர்ஜி கோபியில் எனக்கு...

   ஆனா திருமணத்தின் பின்பு, மாமா மாமி கோப்பிப் பிரியர்கள், ஆனாலும் என் கணவர் என்னைப்போல ரீ பிரியர்:)).. மாமி இடைக்கிடை ஒரு குட்டிக் கப்பில் பாதிக் கோப்பி நல்ல சூப்பராக ஊத்தித்தந்து, குடியுங்கோடா நல்லாயிருக்கும் என கெஞ்சுவா.. அப்படிப் பழகியே.. கொஞ்சம் கொஞ்சம் இப்போ குடிக்கிறேன், அதுவும் காலையில் குடிக்கவே மாட்டேன், காலையில் ரீ தான் வேணும்.. மற்றும்படி குடிப்பேன்.

   எனக்கும் ரீ ஸ்ரோங்காக இருக்கோணும், வீட்டிலும் பழக்கி விட்டேன், இங்கு எல்லோரும் நல்ல ரீ ஊத்துவினம். ஆனா பலருக்கு ரீ ஊத்தவே தெரியாது, கழுநீர்போல ஊத்துவார்கள் கர்ர்ர்:))..

   //கேக் என்ன பார்க்க சாணி பச்சை கலர்ல இருக்கு. இதற்கு நோ கொமண்ட்ஸ்//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது கேக்கின் மேலே பச்சை நிறட்த்ஹில ஐஸிங் போட்டு, பின்னர்தான் டல்கோனா ஐஸிங் போட்டிருக்கிறேன்... இது புரியாமல்தான் பலரும், கேக் ஏன் சாணிக்கலரில இருக்குது எனக் கேட்டார்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்போதான் இது புரியுது எனக்கு.. அப்போ படத்தின் மேலே தெளிவா எழுதோணும் போல.. பட்டர் கேக்குக்கு மேலே போட்ட பச்சை ஐஸிங் அது.

   //நெஸ்கபேல தான் செய்யனுமா.?//

   எனக்கு கோப்பியே பிடிக்காது என்பதனால, வாங்குவது இப்படி கோல்ட் கோப்பி தான், நெஸ்கஃபே இல்லை எனில் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் கிடைக்கும் கோல்ட் கொபி இவை இரண்டும்தான் வீட்டில் பாவிப்போம்... ஆனா எந்தக் கோப்பியிலும் செய்ய்யலாம், நாம் வீட்டில் அரைத்தெடுக்கும் கோப்பியில் செய்யலாமோ தெரியவில்லை:)..

   Delete
  3. @ நெ தமிழன்
   //ஹா ஹா ஹா... நிறம்தான் கவிட்டுப்போட்டுது போலிருக்கு. ருசியாவது நல்லா இருந்ததா?//

   ஆவ்வ்வ்வ் அம்முலுவின் கொமெண்ட் பார்த்த பின்னர்தான் எனக்க்குப் புரியுது என்ன பிரச்சனை உங்கள் எல்லோருக்கும் என்பது, ஹா ஹா ஹா.. அது கேக் அல்ல நெ தமிழன், கேக் உள்ளே இருக்கு, கேக்கின் மேலே பச்சையில் ஐஸிங் போட்டு மெழுகி விட்டுப் பின்புதான் டல்கோனாவால் டெகரேட் பண்ணினேன்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்கு முன்னபின்ன கேக் செய்யாததால புரியவில்லை:)).. ஓக்கே இப்போ படம் இணைக்கிறேன் திரும்ப போஸ்ட் பாருங்கோ.. இனிப் புரியும்.. ஆவ்வ்வ்வ்வ்வ்

   Delete
  4. ஹாலோ பிஞ்சு.... கேக் பற்றி சொல்லேல்லை.அதன் மேல் போட்ட ஐஸிங் ஐ பற்றிதான் ,அதாவது அதன் கலர் (ஐசிங் கலர்) பற்றிதான் சொன்னவை. எனக்கு சாணி பச்சை கலரா தெரிகிறது. சிலருக்கு சிமெண்ட் கலரா தெரிகிறது. கேக் பற்றி நான் சொல்லவில்லை. ஐஸிங் கலர் பற்றி தான் என் கருத்து. விளங்கிச்சுதோ....

   Delete
  5. @ அம்முலு

   [im] https://media.giphy.com/media/XUdEJ9v5I446Y/giphy.gif [/im]

   Delete
 48. ஊசிகுறிப்பு, ஊசி இணைப்பு நகைச்சுவை நல்லாயிருக்கு. இந்த நகைச்சுவைகளும் இல்லாட்டி பைத்தியமே பிடிச்சிடும்.
  வீடியோவும் சூப்பர். முக்கியமா அந்த வீடியோவை நீங்க நல்லா பாருங்கோ. அதில பார்த்தீங்களோ மகாபாரதம்,இராமாயணம் பற்றி தெளீஈஈஈஈவா சொல்லுறார். விளங்கி கதை எழுதுங்கோ. பிறகு எங்கட தலையை உருட்டுறேல்லை. சமையலிலும் நாங்கதான் பலிகடா. எதுஎதுவோ போட்டு ஒரு சமையல் செய்யிறது.பிறகு அதை இங்கு போஸ்ட் போட்டு வயித்துவலி வரவைக்கிறது. சரியாதான் அஞ்சு innovativ cooking படம் அனுப்பியிருக்கிறா. அதுமாதிரிதான் கதை என்று மகாபாரதம்,இராமாயணம் போட்டு குழப்பியடிக்கிறது. நல்லா கேளுங்கோ,பாருங்கோ வீடியோவை..
  //இடையில கதை எழுதோணுமாக்கும் மீ:))/// கடவுளே சந்நிதி முருகா காப்பாத்து...

  என்னது கோமதி அக்காவீட்டுக்கு வந்த கேர்ள் குயிலின் ப்ரெண்டோ. இதை பார்த்தால் குயில் மாதிரி தெரியேல்லை. ஏமாத்தகூடாது. எதுக்கோ முடிச்சு போடுறீங்க.. சரி இனி என்ன போஸ்ட் வத்தலோ, வடகமோ.... வர இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. //அதில பார்த்தீங்களோ மகாபாரதம்,இராமாயணம் பற்றி தெளீஈஈஈஈவா சொல்லுறார். விளங்கி கதை எழுதுங்கோ. பிறகு எங்கட தலையை உருட்டுறேல்லை//

   ஹா ஹா ஹா இதைவிடத் தெளிவா ஒரு பழைய படத்திலல சொல்லப்படுது:)) ஹையோ படப்பெயர் மறந்துபோனேன்.. சமீபத்திலதான் பார்த்து சிரித்து உருண்டேன்:))..

   //கடவுளே சந்நிதி முருகா காப்பாத்து...//

   சந்நிதிக் கதவு பூட்டியாச்சாம்:)) அதனால முருகன் ஸ்கொட்லாந்துக்கு வந்திட்டார்ர்:)) இனிமேல் “ஸ்கொட்லாந்து முருகா” எனக் கூப்பிடுங்கோ:))..

   அது குயிலோ மைனாவோ என எல்லோரும் என்னைக் குழப்புறீங்க.. மீ இப்போ என்ன பண்ணட்டும்:)).. கலப்புத்திருமணம் பண்ணிட வேண்டியதுதான்:))..

   ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு.. தொடர்ந்து சமையல் குறிபுப் போடக்கூடாது என நினைப்பேன்.. அதனால இடையில கதை ஜொள்ளட்டே?:))

   Delete
  2. கதை யை ஜொள்ளுங்கோ... அப்ப தானே இந்த லொக்டவுன் எங்களுக்கு பொழுது போகும்..
   அப்ப வடகம் என்னவாயிற்று......

   Delete
  3. //
   priyasakiFriday, April 24, 2020 9:29:00 pm
   கதை யை ஜொள்ளுங்கோ...//

   அதுக்கு முதல் இன்னொரு மற்றர் எல்லோ ஜொள்ளப்போறேன்ன்.. தோஓஓஓஓஓ வந்து கொண்டிருக்குது ஹா ஹா ஹா...

   வடகம் யூப்பரூஊஊஊஊஊஊஊ அது அடுத்து வர இருக்கிறது:)) ஹா ஹா ஹா.. இன்றும் செய்து காயப்போட்டிருக்கிறேன் கூழ் வடகம்..

   Delete
 49. பாரிஜாதம் அழகாய் தான் இருக்கு யார் வீட்டில் சுட்டது என்பதையும் சொல்லி இருக்கலாம்![[[[

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ.. நலம்தானே..

   //யார் வீட்டில் சுட்டது என்பதையும் சொல்லி இருக்கலாம்![[[[//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நிட்சயமாக ஸ்னேகா வீட்டில் அல்ல:) ஹா ஹா ஹா

   Delete
 50. சப்பாத்தியில் கடலையைப்போட்டு அடுத்தமுறை செய்து பார்க்கின்றேன். கவனமாக இருங்கோ வைரஸ் தாக்கம் எங்கும் அதிகமாக இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. செய்யுங்கோ நேசன்.

   உண்மைதான், உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறதென்றே தெரியவில்லை.....

   Delete
 51. பாவம் அந்த தமிழ் வாத்தியார்!

  ReplyDelete
 52. படத்தில் காண்பது மைனா என்று தோன்றுகிறது. மஞ்சள் மூக்கு. வால் சிறிது. கண் வித்யாசம். குயில் கண் சிவப்பாக இருக்கும். பருத்தி துறை வடைக்கு உபயோகித்தது என்ன மாவு? மாவு ஆல் பர்பஸ் அல்லது கொடுமை (கோதுமை) மாவு அல்லது அரிசி மாவு? 

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

   ஓ அது மைனா போலவோ இருக்குது? எனக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை, நான் குயில் என நினைச்சேன், ஆனா கீழே கீசாக்கா அது குயில்தான் என்கிறா, கிட்டத்தட்ட இருவரும் ஒருவர்போலவே இருப்பினம் என நினைக்கிறேன்..

   பருத்தித்துறை வடை ரெசிப்பி இந்த லிங்கில் பாருங்கோ.. பிளேன் பிளவர்/ஓல் பேபஸ் பிளவர்...

   https://gokisha.blogspot.com/2019/02/blog-post_21.html

   மிக்க நன்றி ஜேகே ஐயா.

   Delete
 53. அடடா? நான் தான் கடைசியா? என்றாலும் இந்த டல்கோனாக் காஃபி ஒரு நாள் செய்து பார்க்கணும். குடிக்க ஆரைக்கூப்பிடுவேன்? அதான் தெரியலை! பருத்தித்துறை வடை அன்னிக்குச் செய்தது இன்னமுமா மிச்சம்? ஹையோ! ஊசிப் போயிருக்காதோ? :))))))))

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. நீங்கள் வருவீங்கள் எண்டுதான் ரெயினுக்கு இன்னும் பச்சைக் கொடி காட்டாமல் வச்சிருந்தேன்.. ஓடிவந்து கார்ட்:) பெட்டியில ஏறிட்டீங்கள்:))..

   //பருத்தித்துறை வடை அன்னிக்குச் செய்தது இன்னமுமா மிச்சம்? ஹையோ! ஊசிப் போயிருக்காதோ? :)//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்தப் ப.துறை வடை என்பது வருடக்கணக்காக வைத்துச் சாப்பிடும் ஒன்றுதானே.. அது எப்படி ஊசும் கர்ர்ர்:)).. கடைகளில்கூட மொறு மொறு எனப் பக்கட்டுக்களில் கிடைக்குது. செய்முறை பிழைச்சால்தான், மொறுமொறுப்பு வராது, இழகலானால்... பழுதாகிவிடும்.

   Delete
 54. இந்தப் பாரிஜாதம் அம்பத்தூர் வீட்டை நினைவூட்டுகிறது. அங்கே நிறையப் பூக்கும். http://gsambasivam.blogspot.com/2011/07/blog-post.html முன்னால் போட்ட படம் சுட்டி இங்கே. கொஞ்சம் நந்தியாவட்டை சாயல் இருந்தாலும் இது வேறே அது வேறே. எங்க வீட்டில் நந்தியாவட்டையும் ஒற்றை, அடுக்கு இரண்டும் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் உங்கள் அம்பத்தூர் வீடு பற்றி விபரமாக எழுதி, தொடர்போல போடலாமே கீசாக்கா... நீங்கள் நெடுகலும் சொல்லச் சொல்ல எனக்கும் அந்த வீடு பிடிச்சுப் போச்சு:))..

   ஓ.. லிங்கில் வந்து பார்க்கிறேன்.

   Delete
 55. காணொளியைப் பின்னர் பார்த்துக்கறேன். ஐஸிங்கா அது? ஏதோ வீடுகட்ட சிமென்ட் கலந்திருப்பதாய் இல்லையோ நினைச்சேன். குயிலைக் கிட்டப் பார்த்தேன். குயிலப்பாவே தான் அது. இங்கே எங்கே வந்தார்?

  ReplyDelete
  Replies
  1. //ஏதோ வீடுகட்ட சிமென்ட் கலந்திருப்பதாய் இல்லையோ நினைச்சேன். //

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உங்களுக்கும் நெ தமிழனுக்கும் இனி ஸ்பெஷல் கண்ணாடி போட்டுத்தான் என் பக்கம் இறங்க விடப்போறேன்ன்:))..

   அப்போ அது குயில் தானோ? ஆஆஅ நேற்றும் இருவர் வந்து மரட்த்ஹில் இருந்தபோது படம் எடுத்தேன்.. ஆனா குயில் கூவி நான் கேட்டதில்லை இங்கு:))..

   மிக்க நன்றி கீசாக்கா.

   Delete
 56. //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இந்தக் காலத்தில ஒரே பக்திமயமாக இருந்தால்தானாம் கடவுள் காப்பாத்துவார்:)).. அதனாலதான் எங்கள் வீட்டுப் பாரிஜாதம் அக்காவைப் பிடுங்கிப் பிள்ளையாருக்கு குடுத்திட்டேன்....//

  பாரிஜாதம் குடுத்தது சரி, அணைஞ்ச விளக்கை எரியவிட்டு மனம் உருக ஒரு பக்திப் பாடலும் பாடியிருக்க வேண்டாமோ?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ...

   //அணைஞ்ச விளக்கை எரியவிட்டு மனம் உருக ஒரு பக்திப் பாடலும் பாடியிருக்க வேண்டாமோ?//

   ஹா ஹா ஹா உப்பூடி உசுப்பேத்தினால் பின்பு அதிரா, ஐந்து கரத்தனையையும், பொன்னார் மேனியனே யையும் பாடி இங்கு போட்டு விடுவேன் ஜாக்ர்தை:)) என் குரல் கேட்டு எத்தனைபேர்........ ஆங் மேலே வீடியோவில சொன்ன நகைச்சுவைதான் ஹா ஹா ஹா

   மிக்க நன்றி அ.ப.ஜி:)

   Delete
 57. அனைத்தும் சிறப்பு.

  டல்கோனா - ஆஹா... இங்கே இப்படி காஃபி பௌடரில் செய்து தருவார்கள் அலுவலக உணவகத்தில்!

  நகைச்சுவை - அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

   ஓ டல்கோனா பவுடரும் இருக்குதோ ஆவ்வ்வ்வ்...

   மிக்க நன்றி.

   Delete
 58. சுவை. பாரிஜாதம் எங்கள் கிராமத்து வீட்டில் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மாதேவி வாங்கோ.. ஓ அப்படியோ? எங்கள் ஊர் வீட்டில் சில தடவைகள் நட்டுப் பார்த்தோம் ஆனா ஏனோ வளரவில்லை அது.

   மிக்க நன்றி.

   Delete
 59. ஒரு நாள் யாரோ பாடல், காட்சியில் இடம் பெற்றிருப்பவர் எல்லாமே சூப்பர். எதனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். டல்கோனா காபி... It is not my cup of tea sorry coffee.(ஒரு முறை முயற்சித்துப் பார்க்கலாமா என்றும் தோன்றுகிறது).நகைச்சுவை துணுக்குகள் அட்டகாசம். அது சரி ஊசிக்கு குறிப்புகளை மறந்ததேனோ?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பானு அக்கா வாங்கோ.. தெரியாது என்றிருக்காமல் எதையும் செய்து பார்த்திடோணும் எனத்தான் நாங்கள் நினைப்பது.. அப்படித்தான் நீங்களும் ஒரு தடவை முயற்சிக்கலாமே...

   மிக்க நன்றி பானு அக்கா.

   Delete
 60. காபி சூடா குடிக்கணும் அதனால் டால்கோனா பிடிக்கலை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ எல்க்கே வாங்கோ.. முதன் முதலாக வந்திருக்கிறீங்க நல்வரவு, மிக்க மகிழ்ச்சி..

   இல்லை நான் சூடாகத்தான் செய்தேன், கட்டாயம் குளிராகத்தான் குடிக்கோணும் என ஏதும் இருக்கோ என்ன:).. நல்ல ஹொட் கோப்பியாகத்தான் செய்தேன்..

   மிக்க நன்றி.

   Delete
 61. படங்கள் தான்
  படிப்பிக்குது என்றால் - அந்த
  கிணற்றில் விழுந்த தமிழாசிரியரும்
  ஏறித் தப்ப முயலாமல்
  தமிழல்லவா படிப்பிக்கிறார்!

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.