கடவுளின் சாகசங்களைக் கண்டு:) பல தடவைகள் நான் வியர்த்திருக்கிறேன்:) வெரி சோரி வியத்திருக்கிறேன்:).. முற்றும் துறந்த ஞானிகள் சொன்னார்கள்:).. ஒருவருடைய வாழ்வில் துன்பம் என்பது, அவரால் தாங்கக் கூடிய அளவுக்குத்தானாம் கடவுள் கொடுப்பார் என, ஆனா இதில் எனக்கு உடன்பாடில்லை, மனித மனத்தை சாந்தப்படுத்தவே அப்பூடிக் கடவுள் ஜொன்னார்:) என எல்லோரும் ஏமாத்துறாங்க, மீ இதுக்கெல்லாம் ஏமாற மாட்டேன்:)..
இந்த பூங்கன்று கிரிஸ்மஸ் க்கு கிவ்ட் டாக கிடைச்சது, இந்த அழகிய மலர்க்கொத்தைப் பார்த்ததும் என் மனதில் பல எண்ணங்கள் தோன்றின, அதில் ஒன்றுதான் இந்த தாங்கும் சக்தி பற்றிய ஆராச்சி.
ஒரு பெரீய அலரி மரத்திற்கு.. பாரமே இல்லாத குட்டிப் பூக்கள்... அதுபோல செம்பரத்தைக்கும் பாரமில்லாத குட்டிப் பூக்கள்... நாகலிங்கம் மரமோ பென்னாம் பெரியது ஆனா அதன் பூக்களோ மிகவும் மென்மையான பாரமில்லாத பூக்கள்...
ஆனா இச் செடியையும் பூவையும் பாருங்கோ.. பாவம், தண்டு பூவை விட மென்மையானதாக இருக்கு... பூவின் சைசோ பென்னாம் பெரிசு.. அப்போ அதனை அத்தண்டு எப்படித் தாங்கும்? ஏன் கடவுள் இப்படிப் பண்ணினார், நிலத்தில் எனில், அப்படியே பூவோடு தண்டு சரிந்துவிடுமே.

இது நான் தூண்போல வோட்டர் ஜக் ஐ தோளாகக் கொடுத்து நிமித்தியிருக்கிறேன்....
“முல்லைக்கு முட்டுக் குடுக்க தேரைத் தேடாதே, சாய்ந்த மலருக்கு உன் தண்ணி ஜக் ஐக் கொடு”:) என என் காதில் ஆரோ சொல்வதுபோல ஒலித்தது:) அதுதான் உதவினேன்:)..
பிந்தைய இணைப்பு:
========================================================
இது என்ன எனத் தெரிகிறதோ?
இங்கே பெரும்பாலும் ஆற்றங்கரை எல்லாம் இப்படி பெஞ் கள் போடப்பட்டிருக்கும், நடப்போர்.. இருந்து புறுணம்:) பார்க்க என, சிலர் ஏதும் வாங்கி வந்து ஆற்றைப் பார்த்தபடி சாப்பிடுவர் இப்படி, ஆனா சில வயதானோர், எப்பவும் தங்களுக்கென ஒரு பெஞ் செலக்ட் பண்ணி பெரும்பாலும் அதில் வந்து இருப்பர், அப்படி இருப்போருக்கு ஏதும் ஆகி விட்டால், அவர்கள் அடிக்கடி இருக்கும் அந்த பெஞ் இல்,, இப்படி மலர்க்கொத்துக்கள் கொண்டு வந்து வைத்து விட்டுப் போவார்கள்.
இப்படி சம்பவங்கள் இங்கு அடிக்கடி காணலாம்..
ஊசி இணைப்பு:
இது எனக்குத் தெரியாதே.. புதுசூஊஊ ஹா ஹா ஹா எனச் சிரிக்கோணும் ஸ்ரீராம்:) ஜொள்ளிட்டேன்ன்ன்:))..
ஊசிக்குறிப்பு:
தூரத்து மணியோசை சொல்லி விடுகிறது
தபாற்காரரின் வருகையை!!
அடுப்பங்கரையில் கொதிக்கும் கறியின் வாசம்
சொல்லி விடுகிறது உறவுகளின் வருகையை!!
தரையைத்தேய்க்கிற செருப்புச் சத்தம்
சொல்லி விடுகிறது அந்நியரின் வருகையை!!
பூனைப் பாதம் பதித்து மெல்லப் பின் வந்து
1ஸ்ட்டூஊஊ என்கையில்தான் தெரிகிறது உன் வருகையை!!
ஹா ஹா ஹா இதனை உங்களுக்காக வெற்றிகரமாகக் களவாடி எடுத்து வந்திருப்பவர்:- உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாத்திரமான புலாலியூர்ப் பூசானந்தா அவர்கள்[மருவாதை:)]
<><><><><><><><><><><><>_()_<><><><><><><><><><><>
மெயில் இணைப்பு:
இதுதான் கீழே கொமெண்ட்டில் நாங்க பேசியிருக்கும், நெல்லைத்தமிழன் சொன்ன பெரீய வாழைப்பழங்கள்... இதை அனுப்பியவர்:) எனக்கு தலைப்புக் கொடுத்திருந்தார் “நெ த உ அ சொ” என:)) இதில ஏதாவது உங்களுக்குப் புரியுதோ?:)) ஹா ஹா ஹா மீக்கும் பிரியல்லே:)) , ஆனா இப்போ கேட்டுப் புரிஞ்சிட்டேன்:), நீங்க கேட்டால் புரிய வைப்பேன்:))) ஹா ஹா ஹா
_()_ நன்றி நன்றி _()_