1)வாழ்க்கையிலே அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயம்,
விரும்புகிறமாதிரி சிலவற்றை விட்டுக்கொடுக்கவும் வேணும் என்பது.
2)மதியால் விதியை ஆராட்சி செய்யலாம்,
ஆனால் ஆட்சி செய்ய முடியாது.
3)அன்பற்ற இடத்திலிருந்து வரும்,
மலையளவு எதிர்ப்பையும் தாங்குகிற இதயம்,
அன்புள்ள இடத்திலிருந்துவரும்,
கடுகளவு எதிர்ப்பைக்கூட ஏற்க மறுக்கிறதே.
4)விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்காக,
கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பாதே.
5)பகையாளியின் கடிதத்தைக் கொண்டுவந்து சேர்த்ததற்காக,
தபாற்காரனைத் தண்டிக்கலாமா?
6)உற்சாகமான ஒவ்வொரு "ஹலோ" விற்கும்
சோகமான ஒவ்வொரு "good bye" உண்டு.
7)உள்ளம் என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடலாம்,
அதில் கீறல்கள் ஏற்படின் திரும்ப இணைக்கவே முடியாது.
8)பாரிய மரத்தின், ஆணிவேரே தகர்ந்தால்,
புயலில் ஆடும் சிறு கொடியா அதனைத் தாங்க முடியும்?.
9)ஆறுதல் அளிக்க இன்னொருவரின் அன்பு இல்லாதபோது,
கண்ணீரின் ஈரம்தான் ஆறுதால் அளிக்கிறது.
10)நினைத்ததை எல்லாம் நடத்தி முடிப்பவன் எவன்?
நினைப்பவன்தான் நீ முடிப்பவன் அவன்(இறைவன்).
|
Tweet |
|
|||