1)வாழ்க்கையிலே அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயம்,
விரும்புகிறமாதிரி சிலவற்றை விட்டுக்கொடுக்கவும் வேணும் என்பது.
2)மதியால் விதியை ஆராட்சி செய்யலாம்,
ஆனால் ஆட்சி செய்ய முடியாது.
3)அன்பற்ற இடத்திலிருந்து வரும்,
மலையளவு எதிர்ப்பையும் தாங்குகிற இதயம்,
அன்புள்ள இடத்திலிருந்துவரும்,
கடுகளவு எதிர்ப்பைக்கூட ஏற்க மறுக்கிறதே.
4)விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்காக,
கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பாதே.
5)பகையாளியின் கடிதத்தைக் கொண்டுவந்து சேர்த்ததற்காக,
தபாற்காரனைத் தண்டிக்கலாமா?
6)உற்சாகமான ஒவ்வொரு "ஹலோ" விற்கும்
சோகமான ஒவ்வொரு "good bye" உண்டு.
7)உள்ளம் என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடலாம்,
அதில் கீறல்கள் ஏற்படின் திரும்ப இணைக்கவே முடியாது.
8)பாரிய மரத்தின், ஆணிவேரே தகர்ந்தால்,
புயலில் ஆடும் சிறு கொடியா அதனைத் தாங்க முடியும்?.
9)ஆறுதல் அளிக்க இன்னொருவரின் அன்பு இல்லாதபோது,
கண்ணீரின் ஈரம்தான் ஆறுதால் அளிக்கிறது.
10)நினைத்ததை எல்லாம் நடத்தி முடிப்பவன் எவன்?
நினைப்பவன்தான் நீ முடிப்பவன் அவன்(இறைவன்).
|
Tweet |
|
|||
அழகிய தேமாப்பூக்களைப் பார்க்கையில் எனக்கு மலரும் நினைவுகள்!
ReplyDeleteஅத்தனையும் நல்ல முத்துக்கள். அதில் என்னைக் கவர்ந்தது இது,
”ஆறுதல் அளிக்க இன்னொருவரின் அன்பு இல்லாதபோது,
கண்ணீரின் ஈரம்தான் ஆறுதால் அளிக்கிறது”
மிக்க நன்றி இளமதி, உண்மைதான் ஊரிலே அநேகமான வீடுகளில் இவற்றைக் காணலாம். என்னிடம் அநேகமாக இருப்பவை கவியரசு கண்ணதாசனிடம் பொறுக்கிய வசனங்கள்தான்.
ReplyDeleteகண்ணுக்கு இமை எதுக்கு
கண்ணீர் வெள்ளத்திலே
கண்ணே வெளியேறிடாமல்
பாதுகாக்கத்தான்....
ஆறாவது பாய்ண்ட் ரொம்பவும் சூப்பர் பாய்ண்ட்.
ReplyDeleteஅருமையான் தொகுப்பு.
நன்றி. வாழ்க வளமுடன்
சூப்பர் பொயிண்ட்டுக்கு நன்றி.. அது, கடைசியாக சொல்லும் Good Bye ஐக் குறிப்பிடுகிறது... வாழ்க்கையின் முடிவிலே:)..
ReplyDeleteஉங்களுடையதையும் பொறுக்கிக்கொண்டிருக்கிறேன், விரைவில் தொகுப்பாக வெளிவரும் இங்கே....
//1)வாழ்க்கையிலே அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயம்,
ReplyDeleteவிரும்புகிறமாதிரி சிலவற்றை விட்டுக்கொடுக்கவும் வேணும் என்பது.//
அதிகம் வேனாம் ஒரு ஐம்பதாயிரம் டாலர் வேனும் குடுங்களேன் போதும் .ஹி..ஹி... :-)))
//2)மதியால் விதியை ஆராட்சி செய்யலாம்,
ReplyDeleteஆனால் ஆட்சி செய்ய முடியாது.//
மேலே கேட்டது எனக்கு கிடைச்சா இதுக்கு பதில் ஓஓஓஓஒ....கே:-))))
//3)அன்பற்ற இடத்திலிருந்து வரும்,
ReplyDeleteமலையளவு எதிர்ப்பையும் தாங்குகிற இதயம்,
அன்புள்ள இடத்திலிருந்துவரும்,
கடுகளவு எதிர்ப்பைக்கூட ஏற்க மறுக்கிறதே.//
சரி..சரி....டாலர் வேனாம் பவுண்ட் போதும் :-))))))))))
//4)விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்காக,
ReplyDeleteகிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பாதே.//
அப்போ யூரோவா தரேன்னு சொல்றீங்களா... ம்ம்ம்....ம்....ம்ம்ம்... (ஒரு வழியா தலையாட்டுரேன் ) :-))))))
//5)பகையாளியின் கடிதத்தைக் கொண்டுவந்து சேர்த்ததற்காக,
ReplyDeleteதபாற்காரனைத் தண்டிக்கலாமா? //
பாதியாவது கடிச்சு வச்சாதான் அடுத்த லட்டர் வராது ...ஹி...ஹி... :-))))
//6)உற்சாகமான ஒவ்வொரு "ஹலோ" விற்கும்
ReplyDeleteசோகமான ஒவ்வொரு "good bye" உண்டு.//
நோ...கமெண்ட்ஸ் :-(
//7)உள்ளம் என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடலாம்,
ReplyDeleteஅதில் கீறல்கள் ஏற்படின் திரும்ப இணைக்கவே முடியாது.//
பைபர் ஆப்டிகலா....!!! :-)))
//8)பாரிய மரத்தின், ஆணிவேரே தகர்ந்தால்,
ReplyDeleteபுயலில் ஆடும் சிறு கொடியா அதனைத் தாங்க முடியும்?.//
வரும் புயலுக்கு முன்னே தலை சாய கற்றுக்கொள்ளும் செடி கொடிகள் தடம் புரள்வதில்லை :-))
//9)ஆறுதல் அளிக்க இன்னொருவரின் அன்பு இல்லாதபோது,
ReplyDeleteகண்ணீரின் ஈரம்தான் ஆறுதால் அளிக்கிறது.//
:-(
//
ReplyDelete10)நினைத்ததை எல்லாம் நடத்தி முடிப்பவன் எவன்?
நினைப்பவன்தான் நீ முடிப்பவன் அவன்(இறைவன்).//
சரண்டர் ...நோ கமெண்ட்ஸ்... !! :-))