மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை.. அது என்னமோ கொஞ்சக்காலமாக ஒரு வெறுப்பு, புளொக்கே வேண்டாம் என ஒரு எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது, வேலையும் முழுநேரமானதும், எதுவும் வேண்டாம் என மனம் சொல்லியது, அப்படி இருந்தும் விடக்கூடாது என இடைக்கிடை ஃபோஸ் பண்ணி புளொக் வந்தாலும் ஏதோ ஒன்று மனம் வெறுக்க வைத்து, ஓஃப் ஆக்கிக் கொண்டே இருந்தது, அது என் ராசி அப்படித்தான், எப்பவும் எதிலும் நிலையாக இருக்க விடாது:))..
அப்படி இருக்கையில்தான், போன வருட மார்ச் லொக்டவுனில் ஆரம்பித்த யோசனை, ஒரு யூ ரியூப் சனல் திறக்கோணும் என்பது, எங்கள் ஆட்களும் எல்லோரும் அப்பப்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஒரு சனல் திறக்கலாமே என... பொறுத்திருந்தேன், 2021 வந்ததும் டமால் எனக் குதித்து விட்டேன்.
ஆனா இங்கு சொல்ல ஒரே ஷை ஷையா இருந்துதா:)).. அதனால கொஞ்ச நாள் போகட்டும் என இருந்தேன், ஆனா என் செக் அதுக்குள் போஸ்ட் போட்டு விட்டா:)), அதனால எனக்கும் கொஞ்சம் ஷை குறைஞ்சு போச்ச்ச்:)).
உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் அஞ்சு மூலம் என் சனல் முகவரி[நன்றி அஞ்சு].. இருப்பினும் நானும் நினைவு படுத்தோணும் எல்லோ:))..
இதுதான் என் சனல்... “athees palace”
ஆரம்ப காலம் பலரும் என்னை அதீஸ் எனவே அழைப்பினம், அப்போ அந்தப் பெயரிலேயே ஆரம்பித்தேன், அதிராவாக இல்லையாக்கும்:)).
இதுவரை பார்க்காதோர், subscribe பண்ணாதோர், ஒரு தடவை பண்ண முடிஞ்சால் பண்ணி விடுங்கோ பிளீஸ். அஞ்சு மூலம் அறிந்து, வந்து பண்ணிய அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்_()_.
என்னில எப்பவும் ஒரு பழக்கம், ஒரு அலுவல் எனில், ஒழுங்காகச் செய்யோணும், இல்லை எனில் செய்யாமலே இருக்கலாம் என எப்பவும் நினைப்பேன்.. அதாவது “செய் அல்லது செத்துப்போ” என.
இது காந்தித்தாத்தா சொன்ன வசனம். நான் குட்டியாக இருந்தபோது, எங்கட அண்ணன், அவர் படிக்கும் மேசை, ஒரு கோனரில் இருந்தது, அந்தக் கோனர் சுவரில பென்சிலால சில வசனங்கள் அழகாக எழுதியிருப்பார். அதில இந்த வசனம் இருந்தது, அப்பவே எழுத்துக் கூட்டிப் படிச்சு மனதில பதிச்சுக் கொண்டேன், விளக்கமே தெரியாமல்:)).. அதனால நிறைய நேரத்தை எடுக்கிறது சனல் இப்போ:))
|
Tweet |
|
|||