பெண் எழுத்து அதுதானே “என் எழுத்து”.
முதலில் என்னை
“பெண் எழுத்து” எனும் தொடருக்கு... “ஹைலைட்ல” அழைத்த
வானதிக்கு நன்றி(கர்ர்ர்ர்ர்:)) சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.
என்னை தெரிஞ்சோ தெரியாமலோ அழைத்துவிட்டீங்க, இனி என் அலட்டலை எல்லாம் பொறுமையோடு கேளுங்க.
“பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” .. இது ஒளவையார் சொன்னது(யாரும் குறுக்க பேசிடக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:))
இதைவிட வேறென்ன வேணும் பெண்ணெழுத்திப் பற்றி பெருமையாக சொல்லுவதுக்கு.
 |
இந்த மசாஜ் போதுமா?:)))) |
ஒவ்வொரு பெண்ணின் எழுத்துக்கும் பின்னால் ஒரு ஆண்தான் உறுதுணையாக இருக்கிறார். வலைப்பூக்களை எடுத்துக்கொண்டாலே திருமணமான பெண்கள்தானே அதிகம் வலைப்பூவில் எழுதுகிறார்கள்(நானறிந்து). அவர்களின் ஊக்கத்துக்கு கணவர்தானே காரணம். என்னைப்பொறுத்து பப்ளிக்கில் கதைக்கவே எனக்கு பயம், ஒவ்வொரு விஷயத்தையும் கணவரோடு பகிர்ந்து பகிர்ந்துதான் என் தன்னம்பிக்கையை வளர்த்து.... வலைப்பூவை இதுவரை ஓட்டிவந்திருக்கிறேன். யார் என்ன பதில் போட்டாலும், என் கணவர் ஒரு வார்த்தை “நீங்கள் எழுதியிருக்கும் விதம் நன்றாக இருக்கு” எனச் சொல்லிவிட்டாலே எனக்கு போதும், மனம் சோராது.
சரி விஷயத்துக்கு வருவோம். நான் ஓடி ஓடி நிறையப் பேரிடம் கேட்டுவிட்டேன்.. அனைவரும் சொல்கிறார்கள்... பெண் எழுதினால் அது பெண் எழுத்துதானே என. அதைத்தானே நான் தினமும் எழுதிக்கொண்டிருக்கிறேன் அதையும் மீறி பெண் எழுத்துப் பற்றிக் கேட்டால் நான் எங்கே போவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.
எந்த ஒரு நல்ல விஷயத்தையும் எவர் ஒருவர் அழகாக வெளிப்படுத்துகிறாரோ.. அது பாராட்டப்படவேண்டியதே, இதில் பெண் என்ன ஆண் என்ன? எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. பெண்ணின் எழுத்துக்கு வரையறை இருக்கு என்கிறார்கள், இந்த வரையறையைக் கொண்டுவந்தது யார்? எதிலாவது சட்டம் தீட்டப்பட்டிருக்கோ?. பெண்ணுக்கு மட்டுமல்ல, பப்ளிக்கில் எழுதும் ஒவ்வொருவருக்கும் வரையறை வேண்டும், இதில் பெண்ணை மட்டும் குறிப்பிட என்ன இருக்கு.
பெண் உடைக்கு வரையறை, ஒழுக்கத்துக்கு வரையறை... இதையெல்லாம் நம்மவர்தான் கொண்டுவந்தார்கள், சரி அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பெண் எழுத்துக்கு வரையறை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
அதாவது ஒரு கதை படிக்கிறோம்.. அதை யார் எழுதியது என்பதனைத் தெரிந்துகொண்டு படிப்பதற்கும், தெரியாமல் படிப்பதற்கும் மனதளவில் நிறைய வேறுபாடு இருக்கிறது. எம் மனம்தான் அனைத்துக்கும் காரணம்.
சமீபத்திலே, ரீவியிலே ஒரு பேட்டி நிகழ்ச்சியில் ஒருவர் கலந்து கொண்டார். அவர் வலைப்பூக்கள் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார். அதில் அவர் சொன்னது. யாரும் வலைப்பூ ஆரம்பிக்கலாம், அது ஒரு பெரிய விஷயமே இல்லை, அதுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது, ஏனெனில் அது அவரவர்க்கு சொந்தமானதே. அதில் அவர் எதையும் எழுதலாம், ஆனால் ஆரம்பத்தில் எப்படி எழுதுவது எதை எழுதக்கூடாது என்றெல்லாம் புரியாது, சிலகாலம் போக, தாமாகவே புரிந்துகொண்டு, தமக்கென ஒரு வரையறையை உருவாக்கிக் கொள்வார்கள்.. அதாவது அடுத்தவரை தாக்கிடாமல், அடுத்தவர் மனம் புண்படாமல் எழுதப்பழகிடுவார்கள் என்று சொன்னார்.
அது உண்மையே, வரையறை என்பது இருபாலாருக்கும் பொதுவான ஒன்றென்பதுதான் என் கருத்து. ஒவ்வொருவருக்கும் என ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது, ஒரு நிகழ்வை வெளிப்படுத்தும் விதம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.
உதாரணமாக ஒரு பூனை மரத்திலே இருந்ததைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பார்த்த விதத்தை ஒருவர் கையை அசைத்துக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் கண்ணையும் விரித்து கையையும் ஆட்டிக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் உடல் அங்கம் அனைத்தையுமே அசைத்துச் சொல்வார், இன்னொருவர் ஆடாமல் அசையாமல் சொல்வார்... இப்படிப் பலவகை உண்டு. இப்படித்தான் பெண் எழுத்தும்... ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்....
அதேபோல, அதை ரசிப்பவர்களுக்கும் தம் ரசனைக்கேற்ப ஒவ்வொருவிதம் பிடிக்கும். ஒவ்வொரு பெண்ணின் எழுத்து நடையும் ஒவ்வொரு விதமாக(ஸ்டைலாக) இருக்கும், அதனை மாற்ற முடியாது.... முடிவு என்னவென்றால்.....
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.
நான் எப்பவுமே எதையுமே தப்பான கண்ணோட்டத்தில் படிப்பது மிக மிகக் குறைவு, எதுவாயினும் எனக்கு சாதகமாக மாத்திப் படிப்பதுதான் வழக்கம். அதிலும் சமீபத்திலே ஒரு பதிவில் ஜெய்... சொன்னார்
“மாத்தி யோசியுங்க” என, அதுவும் ஆழமாக மனதில் பதிஞ்சுபோச்ச்ச்ச்ச்.. இப்போ பலதையும் மாத்திமாத்தி யோசிக்கிறேன். (தப்பாக அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
யாம் பெற்ற இன்பம் பெறவேண்டாமோ இவ் வையகம்.... அதுக்காகத்தானே நான் அழைக்கிறேன்....
ஜலீலாக்கா, இமா, இலா, சந்தனா.
ஃபோர் எ சேஞ்..... ஜெய்...(100 உடன் 101 ஆக உங்கட எழுதாமவிட்ட லிஸ்ட்ல இதையும் சேர்த்திடுங்க அவ்வ்வ்வ்வ்வ்).
ஐவரையும் அழைத்திருக்கிறேன்.....
எழுதினால் சந்தோஷம், எழுதாதுவிட்டால் அதைவிட சந்தோஷமா?:)) எனக் கேட்டிடாதீங்க கர்ர்ர்ர்ர்ர்.... நான் எதுக்கும் கோபிக்கப்போறதில்லை.
இதென்ன பணத்துக்காகவா தொடர்ப்பதிவு நடத்துகிறோம்.... ஒரு மகிழ்ச்சி, பொழுது போக்கிற்காகத்தானே.... இதில் கோபித்து முகம் சுழிக்க என்ன இருக்கிறது, தலைப்பு பிடித்திருந்தால், உங்களால் எழுதமுடிந்தால் எழுதுங்கோ.
=========================================================
இது அன்புத் தம்பி ஜீனோ, அக்கா அடிக்கடி கர்ர்ர்ர்ர் சொல்லிச்சொல்லி பல்லுப் பழுதாகியிருக்குமாம் என புதிதாக ஒரு பல்செட் அனுப்பியிருக்கிறார்.... வைரம் பதித்தது.... இப்ப நான் இதோடுதான் திரிகிறேன்....:) (தம்பிக்கு அக்காவில் இருக்கும் அக்கறை, வேற ஆருக்குமே இல்ல:)).
============================================================================
இல்ஸ் உம் ஒரு பெரிய கயிறு அமெரிக்காவில இருந்து அனுப்பியிருக்கிறா, ஏதும் பிரித்தானியாவில நிலநடுக்கமென்றால்.... இதைப் பிடிச்சு ஏறி அங்கின வந்திடட்டாம்... நுனியை(கயிற்றின்) அவ இறுக்கமாகப் பிடிச்சிருக்கிறா....
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ஊசி இணைப்பு:
TODAY A READER TOMORROW A LEADER