நல்வரவு_()_


Monday, 29 August 2011

மாயாவும் “லேடி” முதலையும்:))

மாயாவும் லேடி முதலையும் பாடீனம்:))







இத்தலைப்பு, பதிவுக்கான தலைப்பல்ல:)), மேலே பாடலுக்கான தலைப்பு:))...

கடவுளே... மேலேயிருக்கும் பாட்டை, மாயா பார்த்திடப்புடா:)))(பாட்டைப் போட்டவரைப் புடிக்கப்படா:)), பாட்டை எனக்காகத் தேடித்தந்தவரைத்தான்... பிடியுங்கோ... மீ ரொம்ப நல்ல பொ....... 6 .....:))


======================================================
மயில்: எதுக்கு பூஸ், இப்படி நடுங்கிக்கொண்டிருக்கிறீங்க? எப்பூடித் தப்பி வந்தீங்க..

பூஸ்: அது பெரிய கதை மயில்... ஒரு மாலை நேரம், ஆறு முப்பது மணியிருக்கும்... இருட்டத் தொடங்கியிருந்தது, அடர்ந்த காடு.. மரங்களின் ஊஊஊஊ என்ற சத்தம் தவிர வேறேதும் இல்லை... ஒரு நேர் பாதையாக ரோட்.. நான் வேகமாக என் ஜீப்பிலே போய்க் கொண்டிருந்தேன் தனியே. டக்கென ஒரு சத்தம்.... டிட் டக்..டிக்..டக்.. என

எங்கேயோ கேட்டதுபோல இருந்து, கிட்டக் கிட்டக் கேட்பதுபோல ஒரு உணர்வு... ஜீப்பின் உள் கண்ணாடியில் பார்த்தேன்... பின்னாலே நாலுகால் பாய்ச்சலில் ஒரு சிங்கம்... அது சிங்கமல்ல பெரிய மலைபோல ... என் ஜீப்பைவிடப் பெரிசாக.. வேகமாக வந்துகொண்டிருந்துதா...

உஸ்ஸ்ஸ் என்ன இல்ஸ்ஸ்ஸ்.... உப்பூடித் திடுக்கிடுறீங்க... காய்ச்சல் வந்திடப்போகுது நெஞ்சில தட்டுங்க...:)), நானே தைரியமாக தப்பி வந்திட்டேன்:)).

சரி தொடர்ந்து கேழுங்க.. சிங்கம் கிட்டவா(இது வேற கிட்டவா) வந்துகொண்டிருந்துது.... எனக்கு நெஞ்செல்லாம் புசுக் பூஸ்,...புசுக் பூஸ்ஸ் என அடிக்கத்தொடங்கிட்டுது... ஆக்‌ஷிலரேட்டரை, எழும்பி நின்று அமத்திக்கொண்டு நின்றேன்:)....

சிங்கம் ஜீப்பை நசுக்கிடும்போல கிட்ட வந்திட்டுது:)), அந்த நேரம் பார்த்து ஒரு நாற் சந்தி வருவது தெரிஞ்சுது.... நான் டக்கென என் கிட்னியை பலமா யூஸ் பண்ணி, வலது பக்கம் திரும்பப் போவதாக சிக்னலைப் போட்டுவிட்டு, திருப்பினேன் ஒரு திருப்பு இடது பக்கத்துக்கு, சிங்கம் பிரேக் இல்லாமல் சிக்னல் பக்கமாக திரும்பிட்டுது....  உஸ் அப்பாஆஆஆஆ... என் கிட்னியை யூஸ் பண்ணிதால நான் தப்பி வந்துட்டேன்.

===========================================


எக்ஸாமில பெயில் ஆன மகனிடம்....
தந்தை : கையெழுத்து போட மாட்டேன் . இனிமே என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன் : என்னப்பா இவ்ளோ கோவப்படறீங்க , இது என்ன DNA டெஸ்ட்ஆ ? ஒரு ஸ்கூல் டெஸ்ட் தானே

===========================================

எக்ஸாம் ஹோலில் ....
மாணவன்: சேர்!! உங்கட வேலை என்ன சேர்?
ஆசிரியர்: மேற்பார்வை பார்க்கிறது.
மாணவன்: அப்போ மேல பாருங்க சேர், ஏன் என்னையே பார்க்கிறீங்க?.

===========================================


ஸ்கூலில்......
ஆசிரியர்: தலை வலின்னு ஒருநாள் லீவு எடுத்தாய், கால் வலின்னு எதுக்கு 2 நாள் லீவு எடுத்தாய்?
மாணவன்: ஒரு தலைதானே சேர்.. அதனால ஒருநாள் லீவு, ஆனா கால் இரண்டு இல்லையா சேர், அதனாலதான் 2 நாட்கள் லீவு.
ஆசிரியர்: கவனமப்பா, பல்வலி வந்திடாமல் பார்த்துக்கோ.
===========================================



கடவுளே இதை ஆரும் பார்க்காதீங்க:
 ஹெல்த் சென்ரரில்......

பூஸ்: டொக்டர்!!! என் வெயிட் அதிகமாயிட்டே போகுதே.. என்ன செய்யலாம்?
 
டொக்டர்: யோசிக்காதீங்க, ஒரு கிட்னியை எடுத்திடலாம்:))).


பூஸ்: எஸ்ஸ்ஸ்கேப்ப்ப் முருங்கைமர உச்சிக்கு:). 


மனதை எப்பவும் ஒரே நினைவில் வைத்திருக்காமல், மனதின் நிலைமையை திசை திருப்பவே, இடைக்கிடை நகைச்சுவையும் வேண்டும்.

¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬=============¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬
-----------------------------------------------------------------------------------------

பின் இணைப்பு:
எல்லோரையும் இணைத்து மாயா பதிவு போட்டிருக்கிறார், ((((நண்பர்களே!! கண்டிப்பாகப் படியுங்கள்)))  நான் மாயாவைத் தூக்கி இங்கு போட்டிருக்கிறேன்..... அன்பான வேண்டுகோள்:::  படியுங்கோ அனைவரும்.

நோயாளி விதியாளியாகின்
பரியாரி பேராளியாம் ... ஊரில் இப்படி ஒரு பழமொழி சொல்வார்கள்.


விதி தவறாக இருக்குமேயானால் 
தெய்வம்கூட கண்களை மூடிக்கொள்ளும் ... எங்கட கண்ண.. தாசன் சொன்னவர்.

மொத்தத்தில நான்கூட விதியைத்தான் நம்புகிறேன். பிறக்கும்போதே அனைத்துமே எழுதப்பட்டுவிட்டது. அதனால் விதி, நல்ல விதியாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என நானும்  வேண்டுகிறேன்.

ஊசிக்குறிப்பு:
தலைப்பு பார்த்து ஓடிவந்து திட்டிக்கொண்டு போனாலும் போவீங்கள்... “இதெல்லாம் ஒரு பதிவோ” என:), ஆனாலும் இதெல்லாம் புதுசா உங்களுக்கு என்ன?.. கோபித்து கோபித்து ஒரு நிலைமையில் கோபிக்க முடியாமல் சகிப்புத் தன்மை வந்துவிடும்:)(எத்தனை தரம்தான் கோபித்துத் திட்ட முடியும்:)))).  அதனால ஒரு அளவில கோபம் நின்று, சகிப்புத் தன்மை உருவாகும். அப்போ... என் பக்கம் அடிக்கடி வரும் உங்களுக்கு சகிப்புத் தன்மை அதிகமாகும். இதனால நீங்கள், வீட்டில, உற்றார் உறவினர், நண்பர்களோடு எல்லாம் சகித்து நடக்கப் பழகிடுவீங்கள்:).

இப்ப சொல்லுங்கோ..... அதிராட பக்கம் வந்து படித்துப் போவதால, உங்களுக்கு நன்மைதானே?:))).... உஸ்ஸ்ஸ் நான் மர உச்சிக்கு ஏறிட்டேன்ன்ன்ன்ன்:))).

==========================-( )-========================
பூஸ் ஆர் ஏ டீ ஐயோ:))



Friday, 26 August 2011

நான் தேடும் செவ்வந்திப் பூவிதூஊ:)

உதுவல்ல தலைப்பு... இதுதான் தலைப்பூஊஊஊ

சொர்க்கம் - நரகம்

சே...சே... யோகாச் செய்யிறதால வர வர ஞாபக சக்தி அதிகமாகிட்டே வருதூஊ:)

 ஒரு பாதிரியார், தேவாலயத்திலே உரையாற்றிக் கொண்டிருந்தார். அங்கு ஒரு கடவுள் நம்பிக்கையில்லாதவர் ஒருவர் வந்திருந்தார். அவர் நாத்திகவாதியில்லை. அதே நேரம் எதையும் நம்ப மாட்டார். அவருக்கு மனதில் கேள்விகள், சந்தேகங்கள்தான் வரும்.

அவர் இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போ அந்த பாதிரியார் சொன்னார்..
“நல்லவர்கள், கடவுளை நம்புவோர் சொர்க்கத்துக்குப் போவார்கள். கெட்டவர்கள், கடவுளை நம்பாதோர், நரகத்துக்குப் போவார்கள்” என.

இதைக் கேட்ட அந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு, சந்தேகம் எழுந்துவிட்டது. உரை ஆற்றிவிட்டு பாதிரியார் போனபோது, அவர் பின்னால் போய்க் கேட்டார்..
ஃபாதர்.... நீங்கள் சொன்னதில் எனக்கொரு சந்தேகம்..

“நல்லவர்கள், கடவுளை நம்பவில்லையாயின் நரகத்துக்குப் போவார்களோ?, அதேபோல கெட்டவர்கள் கடவுளை நம்பினால், அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்குமோ” எனக் கேட்டார்.

இதற்கான பதிலை உடனடியாக அப் பாதிரியார் சொல்லவில்லை. அவர் , இன்னொருநாள் பதில் சொல்கிறேன் என்றுவிட்டுப் போய் விட்டார்.

அவரின் மனதில் இக் கேள்வி குடைந்துகொண்டிருந்தது, நியாயமான கேள்விதானே, இதற்கு என்ன பதில் சொல்லலாம் என.

இரவு, பாதிரியாருக்குக் கனவு வருகிறது. கனவிலே ஒரு ரெயினில் ஏறி, சொர்க்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார், அங்கு போனதும் பார்க்கிறார். சொர்க்கம் என நினைத்த இடம் காய்ந்து வரண்டு காடுபோல காட்சி தருகிறது.

திரும்பி நரகத்துக்குப் போகிறார்.. அங்கே, நாட்டில் நல்லவர்கள் எனப் போற்றப்பட்ட, பாதிரியாருக்குத் தெரிந்த சிலர் நின்று தோட்ட வேலைகள் செய்கிறார்கள், பூமி குளிர்மையாக பச்சைப் பசேலெனக் காட்சி தருகிறது.

அப்போ, இப் பாதிரியார் அந்த தோட்டவேலை செய்யும் நல்லவர்களைப் பார்த்துக் கேட்கிறார்,
“நீங்கள் எப்படி இங்கு நரகத்திலிருக்கிறீர்கள், நரகம் குளிர்ச்சியாக இருக்கிறது, ஆனால் சொர்க்கம் ஏன் காய்ந்துபோய் இருக்கிறது?” என.

அதற்கு அவர்கள் சொன்னார்களாம்,
“நல்லவர்கள் எங்கிருக்கிறார்களோ, அதுதான் சொர்க்கம், கெட்டவர்கள் எங்கிருக்கிறார்களோ அதுதான் நரகம்” என்று.

முடிவு என்னவென்றால்....

“நாம் எங்கே, ஆருடன் இருக்கும்போது அதிக மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருக்கிறோமோ அதுதான் சொர்க்கம்”

அதேபோல
“நாம் எங்கே, ஆருடன் இருக்கும்போது, மன வேதனையோடும், துன்பத்தோடும், சந்தோஷமின்றிக் கஸ்டப்படுகிறோமோ அதுதான் நரகம்”

இது பூஸ் ரேடியோவில் சொன்னார்கள், ஞாபகமாக்கி வைத்து இங்கே எழுதிட்டேன். 

=================================இடைவேளை================================
  
இந்த இடைவேளையிலயாவது, ஆராவது நம்மளத் தேடீனமோ பார்ப்பம்:)))


=================ஸ்ஸ்ஸ் முடிஞ்சு போச்ச்ச்ச்ச் இடைவேளை==================

பூஊஊஊஊ இணைப்பூஊஊ:)):
எங்கட ஆற்றங்கரையும் செவ்வந்திப்பூக்களும்...
படம் எடுக்க நினைத்துக்கொண்டே இருந்தேன், அதற்குள், இடையில் மழை நாட்கள் வந்து, பூக்கள் கொஞ்சம் பழுதாகிவிட்டன... அஜீஸ் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)). 

 
நிழல் தெரியுதோ பூவில?:), நாங்களெல்லாம் பூவுக்கு நிழல் கொடுக்கும் பரம்பரையாக்கும் ம்ஹூம்:))


ஜீப்பைப் பார்க் பண்ணிவிட்டு, டெண்டிஸ்ட் இடம் போய் “ஈ” க்காட்டி வந்தேன், அப்ப பார்த்து ஒரு கறுப்புப் பூஸார் என் ஜீப்பின் கீழே நுழைகிறார்:) உடனே ஒரு ஷொட்:))



கீழே போனவருக்கு என்னா தைரியம், போய்ப் படுத்துவிட்டார் கீழே:)), நான் எப்படியாம் ஜீப்பை எடுப்பது அவ்வ்வ்வ்வ்வ்:)), ரோட் என்றாலும் பறவாயில்லை என, நானும் கீழே சரிஞ்சு படுத்து படமெடுத்தேன்... கண் மட்டும் நல்ல அயகாத் தெரியுது:)).



Tuesday, 16 August 2011

வாணாம்!! வாணாம்!! விட்டிடுங்க!!!

திட்டுவதை விட்டிடுங்க:))

படம் படமாப் போட்டிருக்கே என ஆரும் திட்டப்புடா... கர்ர்ர்ர்ர்ர்:))
இப்படியான படங்களும் நேரில் பார்க்கக் கிடைக்காது.. கதைகளில் படங்களில் பார்த்த பாய் மரக் கப்பல்கள்(Tallships).... நேரில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

12 வருடங்களுக்கு முன்பு வந்த பாய் மரக் கப்பல் கொண்டாட்டம், இந்த வருடம் மீண்டும் வந்தது. பல நாடுகளில் இருந்தும் தத்தமது கொடிகளோடு 60 க்கும் மேற்பட்ட பாய் மரக் கப்பல்கள் வந்தன.

3 வருடங்களுக்கு முன்பே விளம்பரங்கள் வெளியிட்டு, புதிய ரோட்டுக்கள், சில இடங்கள் அதற்கென கட்டப்பட்டன. கப்பல் நின்றது என்னவோ 3 நாட்கள்தான், ஆனா எங்கள் ஊர்த் திருவிளாக் காலம் மாதிரி, இங்கு அந்த ஏரியாவே சோடனைகளும், பல கடைகள், கானிவேல்... என ஒரே கொண்டாட்டமாக இருந்தது. சில ரோட்டுக்கள் அடைக்கப்பட்டு... நடைபாதைக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. பஸ் சேர்விஸ் இலவசமாக, அத்தோடு மக்கள், பஸ் ரெயினில் இருக்க இடமில்லாமல், நின்று வந்ததையும் பார்க்க முடிந்தது.

உஸ் அப்பா ஒரு சேவ்டிக்காக இதில ஏறி இருப்பம் முதல்ல:))


......(\_/)
......( '_')
..../""""""""""""\======░ ▒▓▓█D
/"""""""""""""""""""\
\_@_@_@_@_@_@_/








இது Seagull:) கடல்நாரையாம்..... கிட்டப்போவோரை இழுத்துக் கட்டிப்பிடித்தது....  உஸ் அப்பா..தப்பிட்டேன் சாமீஈஈஈஈஈஈ:))


இதை இம்முறைதான் பார்க்கிறேன், பெரீஈஈய பலூன்... ஆளை உள்ளே விட்டு, பெரீஈய பம் ஆல் காத்தைப் புல்லாஆஆஆஆ அடிச்சதும் ஷிப்பை மூடி பலூனை தண்ணியில் உருட்டி விடுகிறார்கள்.... உள்ளே அவர்கள் துள்ளி விளையாடலாம். ((உள்ளே இருப்பவர் என்னைப்போலவே இருக்கிறாரோ? முகச் சாயலைக் கேட்டேன் கர்ர்ர்ர்ர்?:)))

அங்கும் ஆஆஆஆ....ந்... தையாம் வைத்திருந்தார்கள் பார்வைக்கு.



 இவை Fudge எனப்படும், இங்கத்தைய ஸ்பெஷல் சுவீட்ஸ்ஸ், விரும்பியதை எடுத்து, அங்கிருக்கும் bag இல் போட்டு கொடுத்தால், நிறை பார்த்து காசூஊஊஊஊ வாங்குவினம்.


  
இதில் நீட்டு நீட்டாக இருப்பது, புளிப்பு இனிப்பு... என் பேவரிட்...:))



கப்பல்கள் திரும்பிய போது இருந்த ஆற்றின் காட்சி.... அவற்றோடு ஒரு உல்லாச பயணிகள் கப்பலும் போகுது தெரியுதோஓஓஓஒ?




ஆற்றிலே குட்டிக் குட்டி வெள்ளையாகத் தெரிவதெல்லாம் கப்பலேதான்:))



 பின் இணைப்பு:

இவர் என் ஜீப்பில் இருக்கும் மக்னட் பூஸார்:))

============================================

 ===========================================
ஊசிக்குறிப்பு:
கப்பல் பார்க்க வந்த நீங்க, வடிவாப் பார்த்திட்டு “மொய்” எழுத மறந்திடாதீங்க அவ்வ்வ்வ்:)))
============================================

Tuesday, 9 August 2011

கெட்டுகெதர்:)... டிஷம்பர் -24, 2012ஊஊ, :)).

சிலருக்கு பதிவு விளங்காதுவிட்டாலும் என, ஒரு சிறு குறிப்பு:
  “2012 டிசம்பர் 23” உடன் உலகம் அழியப்போகுதென... “மாயன்” கலண்டர் சொல்லுதாம்...:), அதனால தான் இக் கெட்டுகெதர்:) 


முகவுரை

ஒரு தொடர்போல எழுதோணும் என்பதற்காக... அதற்கேற்ப பெயர்களைப் போட்டுள்ளேன்.. மற்றும்படி.. யாரையும் முன்னுக்கோ பின்னுக்கோ பெயர் போட்டிருப்பதாக குறை எடுத்திடப்படா... இது ஒரு நகைச்சுவையே..(????), குறையாக எதையும் எடுத்திடாதையுங்கோ. 

முதலில் நம் கூட்டத்தை மட்டுமே(கெட்ட கிருமிகள்:)) வைத்து எழுத யோசித்தேன், பின்பு... இன்னும் சிலரையும் இணைத்திட்டேன், என் பக்கம் வருகை தரும் அனைவரையும் இணைக்க விருப்பம், ஆனா கொஞ்சம் பயம்:), என் எழுத்து:) புரியாமல் கோபித்திட்டாலும் என்ற பயத்திலதான் விட்டுவிட்டேன்:))).
இப்படிக்கு பிரபல ஆசிரியர்:),
அதிரா(ஒரு ஆசையில சொல்லிப் பார்த்தால்.. விட்டிடோணும் ஓக்கை:))
**************************************************************************

அதிரா: .....ங்ங்ங்ங்ங்ங்ங்ஙே.... இதென்ன இது ஆரையுமே காணவில்லையே.... ஆருமே இல்லையோ...

ஹைஷ் அண்: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நான் ரொம்ப பிசி.

அ: அடக் கடவுளே!!! அங்கின இருந்தபோதும் இதைத்தான் சொன்னார்.. இப்ப இங்க வந்ததுகூடத் தெரியாமல் தான் பிசியாமே.... நித்திரையில தட்டினாலும் இதைத்தான் சொல்லுவாராக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

வான்ஸ்: அப்பாஆஆ... இங்கேயும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆ? இதைக் கேட்டுக் கேட்டே எனக்குத் தலையிடிக்குதே..

ஜெய்: என்ன வான்ஸ்? தலையிடிக்குதா? இதோ நாட்டு சூப் குறிப்பு...பத்து கொசு ரத்தம், அஞ்சு மூட்டைப்பூச்சி முட்டை, 4 நண்டுக் ....., மிக்ஸியில் நன்கு அ”றை”த்துக் குடிங்க..

அ: ஹையோ.. ஹையோ... வந்து ஒரு நாளாச்சு, பல்லில ஒரு சொட்டுத் தண்ணிகூடப் படேல்லை என நான் தவிக்கிறன், கொசு ரத்தமாமே...

இமா: ஜெய் டமில்.... டமில்... அது “றை” இல்லை, “ரை”.

அ: இமா... இமா... பிளீஸ் கூல் டவுன்..., உலகத்தை விட்டு வந்து ஒரு நாளாகுதே... இப்பவும் தமிழ் நினைப்போ? முடியல்ல சாமீஈஈ முடியல்ல....

ஸாதிகா அக்: அதீஸ்.. என்ன புலம்பல்?, நான் பூஸுக்கு அக்காவாக்கும், நான் எதுக்கும் பயப்பட மாட்டேன், உலகம் மாறி வந்தாலும் ஸ்ரெடியாத்தான் இருக்கிறேன்.

ஜலீலா அக்: என்ன அதிரா முடியல்லியா? புவஹா.... புவஹா... பூஸாரின் புலம்பல் பார்த்தா எனக்கு சிரிப்பா வருது..

அ: கடவுளே... கடவுளே... சிரிப்பு மட்டும்தான் கேட்குது, ஆளைத் தெரியேல்லையே..., எனக்குப் பயமாக்கிடக்கே...

ஜீனோ: அடிராக்கா... தம்பி சிங்கம்ல..., தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.... தம்பி வந்திட்டேன் இனி ஸ்ரெடியா இருங்கோ...

அ: கிழிஞ்சுது போங்கோ..., சிங்கமாம் சிங்கம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் அங்கயெல்லோ... இங்கயுமோ?:), ஆஆஆஆ வயிறு பசியில அழுதே....

மகி: இன்று என் வீட்டில் ஸ்ரவ் இட்லி, எல்லோரும் வாங்கோ சாப்பிட...

இலா: எனக்கொரு இட்லி பார்ஷல் பிளீஸ்ஸ்ஸ்...

கீதா: இட்லியா இலா?, நான் ஓட்ஸ்ல செய்திருக்கிறேன், வாங்க தாறேன், உடம்புக்கு ரொம்ப நல்லது.

அ:என்னாதூஊஊ உடம்புக்கு நல்லதோ? முருகா... முருகா.... இவிங்களுக்கு எப்பூடி நான் புரிய வைப்பேன், உடம்பே இல்லையென்பதை...

நிரூபன்: இது எதிர்க்கட்சியினரின் திட்டமிடப்பட்ட சதி, த.பி.க கூட்டணியினரின் அநீதி..

அ:: ஹையோ...தம்பி.. ராசா.. நிரூபன், இங்கின ஏது கட்சியும் கூட்டணியும்?, இது வேற உலகத்துக்கு வந்திட்டம் ராசா.... இது வேஏஏஏஏஏஏஏற அது வேஏஏஏஏஏஏற.. என்னால முடியேல்லை சாமி.. விடுங்க நான் குதிக்கப் போறேன்....

ஹைஷ் அண்: அன்புத் தங்கை அதிரா, மபொர எல்லாம் ஒழுங்காகப் படிச்ச.. நீங்களே இப்படிச் சோரலாமோ? பொறுமையாக இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்யுங்கோ எல்லாம் சரியாகிடும்.

அ: கடவுளே!!!! you toooooo ஹைஷ் அண்ணன்?, எங்கட மூச்சு நிண்டே ஒரு நாளாச்சுதே... இனி ஏது மூச்சுப்பயிற்சி?. ஓஓஓ அதாரது? இமாபோல இருக்கே... அசையுறமாதிரித் தெரியுது ஆனா ஒண்டும் தெரியேல்லையே? என்ன இமா பண்றீங்க?



இமா: அதொண்டுமில்லை, அதிராவின்  “என் பக்கத்தில” ஒரு “ஸ்மைலி” போடுறேன்.

அ: என்னாது புளொக்கிலயா? முடியல்ல சாமிஈஈஈஈ..
போனால் போகட்டும் போடா...
இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா..
வந்தது தெரியும் போவது ....ங்ங்ங்ங்ங்கே...
வாசல் நமக்கே தெரியாதூஊஊஊ...

அம்முலு: அதிரா சூப்பர் பாட்டு, எனக்கு ரொம்ப புடிக்கும்... ஏன் அதிரா நிறுத்திட்டீங்க.. பாடுங்க..பாடுங்க..

ஜெய்: ஆஆஆ பழைய பாட்டெல்லாம் மறக்காமல் பாடுறீங்க.. சூப்பர் கண்மூடி ரசிக்கிறேன்..

சிவா: மீ த ஃபெஸ்ட்டூஊஊஊஊஊ

அ:: ஆஆஆஆஆ அதே குரல்கள்.... இன்னும் அதே நினைப்பிலயே இருக்கினமே... கடவுளே தேம்ஸ் எங்க... விடுங்க நான் போறேன் இனியும் என்னைத் தடுத்தீங்க, நான் கொலையாளி ஆகிடுவேன்..வாணாம்..

கவிக்கா: இன்னும் நீங்க குதிக்கலயா? குதிச்சிட்டீங்களாக்கும் என நினைத்து, உங்கட புளொக்குக்கு வாறதை நிறுத்திட்டேன்... வெயார் இஸ் பப்பி:)

மகி: அதிரா..அதிரா... வன் மினிட் பிளீஸ்ஸ்.. அந்த பச்சைக்கல்லு மோதிரத்தைக் கழட்டித் தந்திட்டுக் குளிங்க சே..சே.. குதிங்க.

கிரிஜா: ஆ.... வந்துட்டேன்... என்னை விட்டுப்போட்டு, எல்லோரும் கும்மி அடிக்கிறீங்களா இங்க? பயப்புடாதீங்க மகி, பூஸ் தேம்ஸ்க்கு வரட்டும், நான் கரையில வச்சே அமுக்கிடுறேன் மோதிரத்தை, ஆனா கையைக் கடிச்சிடுமோ என்றுதான் பயம்மாக்கிடக்கு.

அ: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எப்ப அதிரா தேம்ஸ்ல குதிப்பா என, ஒரு கூட்டமே அலையினமே.., இங்க வந்தும் கூட்டுச் சேர்ந்திட்டாங்கையா... உருவமே தெரியேல்லை, எல்லாம் புகைப் புகையாத் தெரியுதே என் கண்ணுக்கு...

சந்து: அதீசூ... கண்ணை ஒருக்கா செக் பண்ணிக்கோங்க, விண்வெளில நடக்க ஆசைப் பட்டீங்க இல்ல.. இப்ப நடந்து பாருங்க..
அ:என்னப்பா இது பனையால விழுந்தவனை மாடேறி மிதிச்ச கதையாக் கிடக்கேஏஏஏ... அம்ம...அம்ம....அம்மம்மம்ம.....

ஜெய்: அதீஸ், கொஞ்ச நேரம் வந்து சிரசாசனம் செய்யுங்க, எல்லாம் சரியாகிடும்...

மேனகா: அதிரா.. சுடச்சுட செட்டிநாட்டுச் சிக்கின் பிரியாணி செய்து வைத்திருக்கிறேன், வந்து சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க...

அ:: ஆ.... தலையில்லாமல் சிரசாசனமா... முடியல்ல சாமீஈஈஈ, மேனகா நீங்க ரொம்ப நல்லவங்க, இங்கவந்ததுகூடத் தெரியாமல் என்னை விருந்துக்கு அழைக்கிறீங்க... இருக்கட்டும் இருக்கட்டும்... இன்னும் கொஞ்ச நேரத்திலயாவது உங்களுக்கெல்லாம் புரிஞ்சிடும்.

செந்தமிழ் செல்வி அக்: வந்துட்டேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன், ஆனா, இன்னும் கொஞ்சம் பெயிண்டிங் வேலை முடிக்க இருக்கு, முடிச்சுக் குடுத்ததும் முழுமையா வந்திடுவேன்...

அ:: ஆஆஆஆஆஆஆ... அதே சவுண்ட்டோட... அதே நெட்டலைவரிசை.... கடவுளே... இங்க வந்ததுக்குக் கூட அறிவிப்பா.... என்னாது பெயிண்டிங் இன்னும் பாதில இருக்கா?...  சிவனே.... சிவனே... என்னை ஏன் இன்னும் இங்க வச்சிருக்கிறாயப்பா?

மாயா: காதல் பாடல் தொடர் 3, வந்து ரசியுங்க எல்லோரும்...

அ: ஓஓஓஒ தம்பீஈஈஈஈஈஈஈ மாயாவோ.... ஐயா... என்னால இனியும் முடியேல்லை... இவரையாவது அங்கின விட்டுவச்சிருக்கலாமே... இந்தக் காதல் தொடரை முடிக்கும் வரையாவது..., முருகா... முருகா.... தேம்ஸ் ஐக்கூடக் காணேல்லையே.... தேம்ஸ்ஸ் வெயார் ஆ யூஊஊஊஊஊ?

வான்ஸ்: உஸ்ஸ்ஸ் அப்பா இந்தப் பூஸ் தொல்லை தாங்க முடியலப்பா.., ஒழுங்கா ஒரு கதை எழுத முடியேல்லை.... ஆராவது வாங்கப்பா, வந்து பூஸைப் பிடிச்சுத் தள்ளி விடுங்கப்பா தேம்ஸ்ல, தள்ளினால் மட்டும்தான் விழும், இது தானா விழவே விழாது:).... தள்ளுங்க டுமீல்.....டமீல்...... டொயிக்..... டொயிங்.... பொயிங்........ ..ங்ங்ங்ங்ங்... லப்...டப்.... ஸ்ஸ்ஸ்ஸ்.

==================_( )_===================

அட... இப்பூடி வியர்க்குதே... கட்டிலால கீழ விழுந்திட்டனே... ஓ இது கனவா? அப்ப இன்னும் டிஷம்பர் 23 வரேல்லையோ? அவ்வ்வ்வ்வ்வ்:)). இப்போ கனவில தள்ளிவிட்டவங்க இனி நிஜமாவே தள்ளினாலும் தள்ளுவாங்க... இனிமேல் கொஞ்சம் ஜாக்ர்ர்ர்ர்ர்தையாத்தான் இருக்கோணும் சாமீஈஈஈஈஈஈஈ. எழுதியதில் தப்பிருந்தா மன்னிச்சிடுங்க, ஆரும் குறையாக எதையும் எடுத்திடாதீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

******************************************************************
ஊசி இணைப்பு:
வார்த்தை... 
வார்த்தைதான் வாழ்க்கை.  வார்த்தைதான் ஒருவரை வாழ வைக்கும், சிலருக்கு உதட்டின் நுனிவரை நிறைய வார்த்தை வரும், ஆனால் சொல்ல மாட்டோம். சொல்லிடுங்க. வார்த்தைகளை வெளியே சொல்லிடுங்க..
                                                                                          ---பூஸ் ரேடியோ----




Friday, 5 August 2011

எங்கட செல்லங்கள்:)


ஆஆஆஆஆ... மணி கட்டின பூஸார்ர்ர்ர்... இவரின் பெயர்.. பஸல்(Bassal)


 
ரில் இருந்த காலங்களில், இவற்றின் அருமை பெரிதாகத் தெரியவில்லை, ஆனால் இங்கு, எங்கு இவற்றைக் கண்டாலும், பிள்ளைகளும் நானும் ஒருகணம் பார்வையால் அளக்கத் தவறுவதில்லை.


இங்கு கணவரோடு வேலை பார்த்தவர்(இப்போ ஓய்வு பெற்றிருக்கிறார், கணவன் மனைவி இருவரும் டொக்ரேர்ஸ்தான், ஸ்கொட்டிஸ், எம் குடும்ப நண்பர்கள்). அவர்களுக்கு எம்மைவிட பைத்தியம் பூனை, நாய், கோழியில் .

இப்போ றிரயேட் ஆகிவிட்டமையால் பெரிய காணி(Farm) வாங்க தேடுகிறார்கள். பன்றிகளும் கோழிகளும் வளர்க்கப் போகிறார்களாம்.

இப்போ இருப்பதும் பெரிய, வீடு, பெரிய காணிதான், சமீபத்தில் ஒருநாள் முளுவதும் அவர்கள் வீட்டிலேயே எமது பொழுது கழிந்தது. அப்போ எடுத்த படங்களைப் போடலாமே இங்கு என வெளியிடுகிறேன்.

இங்கு அதிகமாக கவனித்தேன், இங்குள்ளவர்களுக்கு கறுப்புப் பூனைகளே அதிகம் விருப்பம், எங்கு பார்த்தாலும் அதிகமாக கறுப்புப் பூனைகளே உண்டு. ஒருநாள் எங்கட அப்பா இங்கு நின்றபோது, விடிய எழும்பி ஜன்னலால் ரோட்டைப் பார்த்தார், கறுப்புப் பூனை ஒன்று போனது, உடனே “சிக்..சிக்...கறுப்புப் பூனை போகுது பார்:)” என்றார்...

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, “அது தன்பாட்டில போகுதப்பா, நீங்களேன் அதைப் பார்த்து ஏசுறீங்கள்” எனச் சொல்லிச் சிரிச்சேன்.

இவரை ஆசைதீரத் தடவினோம், ஆனால் முறைத்தார், தூக்க முடியவில்லை அத்தோடு சரியான குண்டூஊஊஊஊஊஊ:)).

அவருடைய ஸ்பெஷல், ரின் உணவைச் சாப்பிடுகிறார்(பொல்லாத மணமாக இருந்துது அந்த food:))

இது அவர்களின் அடுத்த செல்லங்கள் ஆணும் பெண்ணும், பெயர் லோலா, ஆணின் பெயர் மனதில் பாடமில்லை. படத்தில் உருவம் விளங்கவில்லை, 4 அடி உயரமிருப்பார்கள், ஓடிவந்த வேகத்தில் என்மேல் ஏறினார்கள்(விளையாட்டுத்தான்:)), ஆனா எனக்கு இதயம் நின்று வந்தது.... உஸ்ஸ் அப்பா... 2012 க்கு முன்பே போயிடுவனோ சாமீஈஈஈ என நினைசுட்டேன்ன்ன்ன்ன்:)).

Give me your paw.. எனச் சொல்லிக் கையை நீட்ட, தம் முன் கையைத் தருவார்கள் போட்டி போட்டு இருவரும், உடனே ஒரு பிஸ்கட் கொடுக்க வேண்டும்.

ஆஆஆஆ.... இவைதான் நான் முன்பே “அங்கு” கூறிய, சேவலில்லாமல் முட்டையிடும் கோழிகள்... இவை இப்போ 3/4 மாதக் குஞ்சுகளாம் இனும் முட்டை இடத் தொடங்கவில்லையாம், தொடங்கினால் நொன் ஸ்ரொப்பாக... தினமும் இடுவார்களாம்.

பெரிதாக , பறந்து ,ஓட மாட்டார்கள்.... ஆமை வேகம்தான்:).
 




 இது அவர்கள் வளர்க்கும் ஒருவித தாவரம், பெயர் கேட்டேன் மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)). 

 இதன் தண்டுகள் சிகப்பாக, பெரிதாக இருந்துது(செலரித் தண்டுகள்போலே), அதை உடைத்து, சீனியோடு தொட்டுச் சாப்பிடத் தந்தார்கள், கரும்பின் சுவைபோல, ஆனா புளிப்பாக இருந்துது. இத் தண்டில் ஜாம் செய்கிறார்களாம், அதுவும் ஒரு போத்தில் எமக்கு தந்தினம், சூப்பர்.
 இதுவும் அவர்கள் வளவில் இருக்கும் ஒருவித மரம், Elder tree என்று பெயர். இந்தப் பூக்களை எடுத்து ஊறவைத்து யூஸ் செய்து தந்தார்கள், லெமன் யூஸ்போல இருந்துது. (இன்னும் பல மரக்கறிகள் போட்டிருந்தார்கள்).

((     http://www.google.co.uk/imgres?q=elder+tree+scotland&hl=en&biw=1440&bih=727&tbm=isch&tbnid=g1-owht-uwyK7M:&imgrefurl=http://dancingbeastie.wordpress.com/2011/06/07/the-tuesday-tree-rowan/&docid=fXScBdmUF-MuBM&w=2576&h=1932&ei=8CQ7ToC1NY_6sgbrqcT4Dw&zoom=1&iact=rc&dur=494&page=7&tbnh=128&tbnw=168&start=183&ndsp=31&ved=1t:429,r:13,s:183&tx=67&ty=73    ).


இப் பூக்களையும் வைட் கிரேப்ஸ் ஐயும் சேர்த்துச் செய்யும் யூஸ், கடைகளில் கிடைக்குது .

======================================================

பின் இணைப்பூஊஊ:)).
இது என்னவெனத் தெரியுதோ? 2009 இல, இமா “அங்கின” சொன்னா, அவக்காடோவை நடுங்கோ அதிரா, அழகான மரம் வரும் என்று. 2009 ஆகஸ்ட்டில் நட்டதாக நினைவு. இது நேற்று எடுத்த படம். அம்மா ஒருநாள் ஏசினா, வீட்டுக்குள் இந்த மரமெல்லாம் வைத்திருக்கலாமோ தெரியேல்லை, வெளியில நடு என்று. மாட்டேன், வெளியில நட்டால் பட்டுவிடும் எனச் சொல்லிட்டேன்:)).
 இதுதான் அவகாடோ பயம்:)))

====================================================
 ஊஸி:))க்குறிப்பு:
இம்முறை நான் ஆரையும் தேடேல்லை:))).

சிட்டுவேஷன் சோங் போகுது பிபிசி ல:
தேடாத இடமெல்லாம் தேடினேன்... பாடாத பாட்டெல்லாம் பாடினேன், போடாத படமெல்லாம் போட்டேன் ஆனாலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
====================================================

Tuesday, 2 August 2011

பொம்பிளை பார்க்கப் போவோமா?:)

பேபி அதிரா!!! உப்பூடி டான்ஸ் ஆடிக்கொண்டு நிக்கப்படா... நேரா நிக்கோணும்:))
ருக்குப் பொண்ணு பார்க்கப் போறீங்க? நானும்... நானும்... நானு:) வும் வரட்டோ எண்டெல்லாம் அவதிப்படப்புடா.. கொஞ்சம் பொறுமையாகப் படிங்க ஓக்கை?:).

எங்கட நாட்டில், பொம்பிளை பார்த்தல், பொம்பிளை வீடு... மாப்பிள்ளை வீடு இப்படித்தான் கதைப்பது வழக்கம். பெண் பார்க்கிறது என்று கதைப்பதில்லை. சரி இப்போ எதுக்கு இதைச் சொல்ல வருகிறேன் என்றால், எங்கட இளையதளபதி பக்கத்தில:), பேச்சு அடிபட்டுது, கல்யாண வயசு வந்திட்டுதாம் அவருக்கு:),(அது எத்தனை வயது  என, ஆரும் குறுக்க கேள்வி கேட்கப்பிடா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

அதே நேரம் டெய்லி பதிவிடுபவர், இடையில் சில நாட்கள் டமால்:) எனக் காணாமல் போய் விடுகிறார், அந் நேரங்களில் எனக்கொரு ஐடியா கிட்னியில் வரும், ஓஓஓ ஒருவேளை பொம்பிளை பார்க்கும் படலம் ஆரம்பமாகிட்டுதோ எண்டு:).(இது நமக்குள்ள இருக்கட்டும்:)).

அதை நினைச்சதும், பழைய ஒரு உண்மைச் சம்பவம் நினைவுக்கு வந்துது.. அதனாலே இப்பதிவூஊஊஊஊஊ:).

எங்கட ஊரில்... அடுத்தடுத்த ஊர்களிலும் நான் கேள்விப்பட்டிருக்கும் பழக்கவழக்கங்களை கொஞ்சம் முதலில் சொல்கிறேன். பெரியோர்களால் நிட்சயிக்கப்படும் திருமணங்களில், குடும்பம்... etc..etc.. எல்லாம் பொருந்தி வருகின்ற, மனதுக்குப் பிடித்த இடமாக இருப்பின், முதலில் குறிப்புப் பொருத்தம் பார்ப்பார்கள், பொருந்திவிட்டால்,....

பொம்பிளை, மாப்பிள்ளையின் படங்கள் பரிமாறப்படும், படம் இருவருக்கும் பிடித்துக் கொண்டால், மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடக்கும்..  அனைத்தும் ஓக்கேயாக வருவதுபோல கிட்டத்தட்ட பாதிக்கு மேல், திருமணம் பொருந்தி வருவதுபோல இருப்பின், பெண்ணை நேரில் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் புறப்படுவார்கள், இந்தப் புறப்படுதலில் மாப்பிள்ளையைச் சேர்க்க மாட்டார்கள்.

ஊரில்  ஒரு வழக்கம் இருக்கிறது, பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை போய், நேரிலே பெண் பார்த்துவிட்டால், 95 வீதமும், திருமணத்தைக் குழம்ப விடமாட்டார்கள்/ விரும்ப மாட்டார்கள். அதனால் கிட்டத்தட்ட திருமணம் பொருந்தியே விட்டது என்ற நிலையிலேயே... பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை போவார். அதுவரை, நேரில் பார்ப்பதாயின்,....

எங்காவது பொது இடங்களில் வைத்தேதான்(பெரும்பாலும் கோயில்கள்தான்).  இதெல்லாம் இப்போ நிறையவே மலை ஏறிவிட்டது... இவை இப்போதைய கதைகளல்ல, ஆனால் குடும்பமுறை என்று ஒன்று, பரம்பரை பரம்பரையாக இருக்குதுதானே.. அது தொடருது ஊர்களில்.

எங்கள் அக்காவின் மகன்.. 18 வயது, அவர் கேட்கிறாராம்  “வட்  இஸ் பொம்பிளை பார்க்கிறது?”:)).. என்று, அப்படி இருக்கு இப்போதைய தலைமுறை.

ஒரே ஊர் அல்லது அடுத்த ஊராயின் பிரச்சினை இல்லை, எப்படியாவது(பெண்ணைப்) பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்துவிடும், இல்லையெனில் கொஞ்சம் கஸ்டம்தான்:). அதே நேரம் எல்லாம் சரியாகி, பெண்ணை, மாப்பிள்ளை நேரில் பார்த்துப் பேசிவிட்டால்... 99 வீதமும் குழம்புவதில்லை, ஆனால் உடனே திருமணம் வைப்பதில்லை, எப்படியும் 6 மாத இடைவெளியாவது இருக்கும், அதுக்குள் இருவரும் பேசிப் பழகிடுவார்கள், பிடிக்காதுபோனாலும் சொல்லலாம் திருமணத்துக்கு முன்பே.

............. குட்டி பிரேக்க்க்க்க் இல், வேறு ஒரு குட்டிச் சம்பவம்............
என்னதான் இருந்தாலும், எல்லா முறையிலும், எல்லா ஊரிலும், எல்லா நாட்டிலும், எல்லாமும் நடக்கிறது. இது சரி, இது பிழை எனச் சொல்ல முடியாதுதானே.

இப்படியான ஒரு முறையில் பொருந்திய திருமணம், எல்லாமே முற்றான பின்னர், பெண்ணையும், மாப்பிள்ளையையும் நேரில் சந்திக்க வைத்து, பெண் வீட்டிலேயே, அறையில் தனியே கதைக்க அனுமதித்தனராம். உள்ளே போய்க் கதைக்கத் தொடங்கியவர்கள் இரவு 2 மணிவரை கதைத்து முடியவில்லையாம், அவ்வளவுதூரம் இருவருக்கும் பிடித்து விட்டதாம், அப்போ அவர்களோடு சேர்ந்து எல்லோருமாக, உடனேயே நாள் குறித்து திருமணத்தை முடித்து வைத்தார்கள்.

திருமணமாகி ஒரு வருடத்தில் இருவரும் பிரிந்து விவாகரத்தும் நடந்துவிட்டது. கணவர் பிஸ்னஸ்மான், அதனால் பல நாடுகளுக்குச் சென்று வருபவர். அதிக நேரம் நெட்டிலே இருப்பாராம். ஒருநாள் கஸ்டகாலம்:), சைன் அவுட் பண்ண மறந்து, எழுந்து போய் விட்டார், ஏற்கனவே பெண்ணுக்கு சந்தேகம் தொடங்கியிருந்தது, அதனால் ஓடிச் சென்று மெயில் செக் பண்ணியிருக்கிறார். 

அப்போ வேறு நாட்டில் இருக்கும் பெண்ணுடன் மெயிலில் பல கதைகள் நடந்திருக்கு, அதுவும் இவர் போய் அங்கு தங்கி வந்ததாக. இப் பெண் கேட்ட இடத்தில், அப்படியேதுமில்லை என மறுத்துவிட்டார். ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகச் சொல்லியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கலாம்?,

ஆனால் அவர் எதுவுமில்லை, எல்லாம் பிஸ்னஸ் மெயில்களே என்றிட்டாராம்.... இப்படிப் பலநாள் பிரச்சனைப்பட்டு, அத்தோடு பொறுக்க மாட்டாமல் பெண், வீட்டால் வெளியேறிப் பெற்றோரிடம் வந்திட்டார்.

கணவருக்கு கோபமாம், போனனீ  போ எனச் சொல்லிப்போட்டு வேறு திருமணம் முடிச்சிட்டார், இப்போ பெண்ணும் வேறு முடித்து நன்றாக இருக்கிறா. . சரி அது போகட்டும்.
¬¬¬¬¬¬ இடைவேளை முடிஞ்சு, லைட் ஓவ் பண்ணாச்சூஊஊஊஊஉ¬¬¬¬¬


ஆஆஆஆஆ எங்கின விட்டேன்?:)), ஓக்கே!!! சொல்ல வந்ததை மறந்திடுவேன்போல இருக்கே அவ்வ்வ்:).
இப்படித்தான் எங்கட மாமியின் மகனுக்கும்(அவரின் பெயரை ஏ, பீ, சீ, டீ வாணாம்,  “மைக்” என வைப்போம்) கல்யாணப் பேச்சு நடந்தது, அவரைப் பார்த்தால், கிட்டத்தட்ட மம்முட்டியைப் பார்ப்பதுபோல, கமலைப் பார்ப்பதுபோல இருப்பார்.

அவருக்கு புரோக்கர்(நன்கு தெரிந்தவர்) மூலம் ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்தி வந்துவிட்டது. பக்கத்து ஊருமல்ல கொஞ்சம் தூர இடம்.  நான் அப்போ சின்னப்பிள்ளை (இப்பவும்தேன்ன்ன்) என்பதால் எனக்கு முளுக்கதையும் தெரியாது:(, தெரிந்ததைப் பகிர்கிறேன்.

அப்போ படங்கள் பரிமாறப்பட்டன. மைக் க்கு பெரிதாக படத்தில் பெண்ணைப் பிடிக்கவில்லை, அவர் கடுமையாக அழகை எதிர்பார்க்கவில்லை, ஆனா என்னவோ அவருக்கு ஹப்பி இல்லை. ஆனால் ஏனைய எல்லாம் நல்ல பொருத்தமாகி வந்துவிட்டது. அதே நேரம் பொம்பிளை வீட்டுக்கும் இவரை நன்கு பிடித்துவிட்டது.

மைக் வீட்டினர் சொன்னார்கள் மைக்குக்கு, நாம் போய், பெண்ணை நேரிலே பார்த்துவிட்டு வந்தபின்பு ஒரு முடிவுக்கு வரலாம் என. எங்காவது படிக்க அல்லது வேலைக்குப் போகும் பெண்ணாக இருப்பின், நண்பர்களோடு போய் வழியிலே ஒளித்து நின்று பார்த்திடலாம், இவ எங்கும் போவதில்லை. அதே நேரம் தூரம் என்பதால், மைக் க்கு ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.

மைக் வீட்டினருக்கும் பெண் குடும்பத்தை நன்கு பிடித்துக்கொண்டது, மனதில், இது நிறைவேறிவிடும் என எண்ணிவிட்டார்கள். ஆனாலும் மைக் வீட்டினர், பெண் வீட்டுக்குப் போக விரும்பவில்லை, மைக் குழப்பத்தில் இருக்கிறார், ஒரு முற்றுக்கு வராமல் எப்படி வீட்டுக்குப் போவது, போய் வந்து பிடிக்கவில்லை எனச் சொன்னால் பெண் பாவமெல்லோ, அதனால வேறு எங்காவது இடத்தில்வைத்துப் பெண்ணைப் பார்ப்போம் எனக் கேட்ட இடத்தில், பெண்ணின் பெற்றோர் சொன்னார்கள், பிரச்சனை இல்லை வீட்டுக்கே வாங்கோ என.

ஓக்கே என இவர்களும் 2 கார்களில், மைக் கின் அம்மம்மா தொடங்கி, அப்பா, அம்மா.. பெரியம்மா .. இப்படி பெரியாட்களாக எல்லோரும் புறப்பட ஆயத்தமானார்கள். மைக்கின் தங்கைமார் சிறியவர்கள். அதனால் அவருக்கு அப்போதைய நிலைமையில், நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆளாக இருந்தவர் எங்கள் அண்ணன்:). அண்ணனுக்கு அப்போ 15,16 வயதாக இருக்கோணும்.

மைக், அண்ணனைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார், உன் வேலை, இவர்களோடு போய், பெண்ணை நன்கு பார்த்து வந்து எனக்குச் சொல் என. பெரியவர்களுக்கும் சொல்லியாச்சு, இவரும் வரப்போகிறாராம் அழைத்துப் போங்கோ என்று.  அனைவரும் போய் பெண்பார்த்து, கதைச்சு, ரீ குடித்து வந்தாச்சு.

பெரியோருக்கு நன்கு பிடித்துவிட்டது, அது பெண் அழகுதான் பிரச்சனை இல்லை, எனக் கதைத்தார்கள். மைக், அண்ணனை அழைத்துப்போய்க் கேட்டிருக்கிறார், பார்த்தியா? பெண் எப்படி என.

அண்ணனுக்கு அப்போ அழகை மட்டும் பார்க்கும் வயசு:) தானே... அண்ணன் சொல்லியிருக்கிறார், எனக்கு பெண்ணைப் பிடிக்கவில்லை, நிறமும் குறைவாக இருக்கிறார், உங்களுக்கும் பிடிக்காது என்றுதான் நினைக்கிறேன் என.

இதைக் கேட்டதும் மைக், முற்றிலும் குழப்பமாகிவிட்டார். மைக்குக்கு பெண் பிடிக்கவில்லைப்போலும் என்ற கதை, பொம்பிளை வீட்டுக்கு புரோக்கர்மூலம் போய்விட்டது. 

அவர்களுக்கு இந்த மாப்பிள்ளையை கைவிட மனமில்லைப்போலும்.  அதனால் அவர்கள் சொன்னார்கள், படத்தில் சரியாக தெரியாதுதானே, எதுக்கும் மாப்பிள்ளையை நேரில் வந்து, ஒரு கோயிலில் வைத்துப் பெண்ணைப் பார்க்கும்படி. அதற்கு உடன்பட்டு, மைக், இன்னொருவரோடு மட்டும்(வேறு யாரும் போகவில்லை) போய், கோயிலில் கும்பிடுவதுபோல பெண்ணைப் பார்த்திட்டு வந்தாச்சு. வந்ததும் மைக் இன்னும் அதிகம் குழம்பிட்டார்.

காரணம், பெண் அழகாகவும் நிறமாகவும் இருந்திருக்கிறார். அப்போ மைக்குக்கு குழப்பம் வந்துவிட்டது, எங்கள் அண்ணன் பொய் சொல்லியிருக்க மாட்டாரே, ஆனா பெண் அழகாகத்தானே இருக்கிறார் என. அண்ணனை அழைத்து மீண்டும் கேட்டிருக்கிறார், அண்ணன் சொல்லியிருக்கிறார், இல்லை பெண் நிறம் குறைவுதான் என்று.

இதை வைத்தே கலவரம் தொடங்கி, ஆர் ஆரையோ பிடித்து விசாரித்துக் கொண்டு போனால்.... அவர்கள் இரட்டையர்களாம். படம் கொடுத்ததும், வீட்டில் காட்டியதும் நிறம் குறைவான பெண்ணாம், பின்பு மாப்பிள்ளை குழம்பி கைவிடப்போகிறார் என நினைத்து, மற்றப் பெண்ணை கோயிலில் காட்டியிருக்கிறார்கள். இதன்பின்பும் அந்தத் திருமணம் தொடருமோ? அத்தோடு ஸ்ரொப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.... கிட்டத்தட்ட திருமணம் முக்கால்வாசியும் முற்றுக்கு வந்து, நின்றுபோனமையால் இரு பகுதியினருக்கும் மனப் பாதிப்பு இருக்கும்தானே.

நான் சொல்ல வருவதென்ன வென்றால், எந்த விஷயமாகட்டும், எழிதில் நம்பிடாதீங்கோ.. தீர விசாரியுங்கோ.

கோடியின் குரல் என ஒரு ரீவி புரோகிராம் நடக்கிறது தமிழ்நாட்டில். அதில் வருவோர் பொய் சொல்லக்கூடாது, உண்மை சொன்னால் மட்டுமே தொடர்ந்து விளையாட அனுமதி உண்டு. அதில் வந்த ஒருவர், 25 வயதாம் திருமணமாகி குழந்தையும் கிடைத்திருக்காம். ஆனா அவரது பொழுதுபோக்கு, ஆர்குட், பேஸ்புக், புளொக் இவற்றில் புகுந்து, பெண்களை வசியப்படுத்தி ஏமாத்துவதாம். இது திருமணத்தின் பின்பும் தொடருதாம்.

புரோகிராம் முடிவிலே, நடத்தியவர் சொன்னார்...”தயவுசெய்து, இனிமேல், இன்ரநெட் மூலம் பெண்களை ஏமாத்தும் வேலை செய்யவேண்டாம்” என, செய்யமாட்டேன் இனி... என்று சொல்லிப்போனார்..???.
.....==================================================.....

ஊசிக்குறிப்பு:
பூஸ் ரேடியோவில் சொன்னார்கள், எப்பவும் ஒருவர் சொன்னதை வைத்துக் குறை காணக்கூடாது, அவர் சொல்ல வந்ததைத்தான் புரிந்துகொள்ள வேண்டும் என. உ-ம்: ஒரு தனியிடத்தில் தனிவீடு, கைக்குழந்தையோடு மனைவி, கணவன் வேறு ஊருக்கு வேலை காரணமாகப் புறப்படுகிறார், “கவனமாக இருந்துகொள்” என மனைவிக்குச் சொல்கிறார், மனைவி சொல்கிறார் “ஒரு நாய்கூட இல்லையே, பயமாக இருக்கெனக்கு” என....


அதற்கு கணவன், “என்னையும் சேர்த்தா நாய் என்கிறாய்?” எனக் கேட்டு சண்டைக்குப் போகக்கூடாது, அதாவது மனைவி சொன்னதைக் கவனிக்கப்படாது, சொல்ல வந்ததைத்தான்(கருத்தை) கவனிக்க வேண்டும்.

இதைக் கேட்டதும், இலங்கையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது எனக்கு.

ஒரு மினிவானில் யாழ்ப்பாணம் போய்க்கொண்டிருந்தோம், இடையில் ஆனையிறவு ஆமி காம்ப். அங்கு வாகனங்கள் போனதும், றைவரின் உதவியாளர் ஓடிப்போய் பெயர் விபரம்(van) பதிவார். ரைவர் , அங்கு நிற்கும் ஆமி என்ன சொல்கிறாரோ, அதன்படி வானை நகர்த்த வேண்டும்.

முன்னாலே உயர்ந்த கறுத்த ஒரு ஆமி நின்றுகொண்டிருந்தார், சைகை ஏதும் செய்யவில்லை, அதனால் ரைவர் மெதுவாக வானை நகர்த்தினார்.... ஆமிக்குக் கோபம் வந்துவிட்டது, கையைக் காட்டி நிறுத்தச் சொல்லிவிட்டு, வந்த வேகத்தில், ரைவரின் வலது கையைப் பிடித்து இறுக்கி முறுக்கிவிட்டுப் போய் விட்டார். நான் நடுங்கியபடி ரைவர் சீட்டின் பின் சீட்டில் இருந்தேன்.

கை முறுக்கும்போது, பதியப்போன உதவியாளர் வந்து கண்டுவிட்டார்... அவருக்கு மிகவும் மன வருத்தமாகிவிட்டது, உடனே ரைவரைப் பார்த்துக் கேட்டார் மிகவும் கவலையாக....
“அவன் மலைபோல முன்னால நிண்டானேடா, நீ ஏண்டா அவனைக் கவனிக்காமல் “எருமைபோல” வானைக் கொண்டு வந்தாய்?” என்று.

இதைத்தான் நான் யோசிக்கிறேன்,  என்னை எருமை என்கிறாயா என சண்டைக்குப் போகலாமோ?.... அதாவது அவர் சொன்னதைக் கவனிக்கப்படாது, அவர் சொல்ல வந்ததைத்தான் கவனிக்க வேண்டும்....

இதை நாமும் கடைப்பிடிக்கலாமே... உஸ் அப்பாடா... பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊ, இனிமேல் மக்கள்ஸ்ஸ், அதிரா திட்டினால்:), திட்டினதைப் பொறுக்கப்படா, ஏன் திட்டினா என்பதையே யோசிகோணும் ஓக்கை?:).

பின் இணைப்பு:
இது “நியூ” விலிருந்து எனக்கு வந்த படம், இதைப் பார்த்ததும் எனக்குப் புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்.... தம்பி காணாமல் போனதன் ரகசியம் இதுதான்ன்ன்... ஆனாலும் அக்காவை எப்பூடி மறக்கலாம்ம்ம்ம்ம்ம்?:). தம்பியின் முகத்தில தெரிவது, மகிழ்ச்சியா? மாட்டிவிட்டோமே என்கிற கவலையோ? அவ்வ்வ்வ்:)).
உஸ் அப்பாடா, இம்முறை பதிவு நீண்டதால, ஸாதிகா அக்காவின் ஆசையை நிறைவேத்திட்டேன்... பூஸ் படமேதுமில்லை:(((.
00000000000============000000000000