இது எங்கட முற்றத்து மலர்கள்.. டெய்சிப்பிள்ளையைக் கண்டு பிடிங்கோ:))
தொடர்ந்து சுற்றுலாவைப்பற்றியே போட்டால் எல்லோருக்கும் போரடிக்கும் எனும் காரணத்தால இடையில மானே தேனே போட்டால், அது எங்கின விட்டேன் என மறந்து போயிடுதே எனக்கு:), இருப்பினும் பூஸோ கொக்கோ தேடிப்பிடிச்சு தொடர்கிறேன்... இதைத் தொடுங்கோ தொடர் புரியும்.
இம்முறை கொஞ்சம் வீடியோவாகத்தான் போடப் போகிறேன், ஏனெனில் ட்றம்ப் அங்கிளின் பேசனல் செக்கரட்டரி எல்லோ அதிரா:), அதனால வெள்ளை மாளிகையில் வீடியோ எடுத்தேனாக்கும்:)..
இந்த வைட் ஹவுஸ் ஐ எங்காவது தனியே எடுத்த படம் இருக்குமோ எனத் தேடினால்.. ம்ஹூம்ம் எல்லாத்திலும் விட்டேனா பார் என நாம் நிற்கிறோம்.. அதனாலதான் பெட்டி போட்டு மறைச்சிட்டேன்ன் அதிராவோ கொக்கோ?:)..
இந்த வேலியைப் பாருங்கோ, மாளிகையில் இருந்து வெகு தூரத்தில் இருக்கு, இந்த வேலிவரைதான் மக்கள் போக அனுமதி உண்டு, இங்கால தெரிவது ரோட்.
|
Tweet |
|
|||