பிறந்தநாள்.. இன்று பிறந்தநாள்.. பிள்ளைகள் போலே.. தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்..
யாருக்குப் பிறந்தநாள் எதுக்காகப் பாடுகிறேன் எனத்தானே யோசிக்கிறீங்க?.. எங்கள் பிரியசகி புளொக் உரிமையாளர், அம்முலு என என்னால் அழைக்கப்படும் பிரியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்[26/08/18]..
என்றும் நலமோடும் மகிழ்வோடும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம்..
என் ஊஞ்சல் பிள்ளையார் ஆசீர் வதிக்கிறார்ர்.. அருகினில் பிரதரின் வேலுடன்..
அம்முலுவோடு நான் அறிமுகமாகி இப்போ 10 வருடங்களாகி விட்டது, ஆனா அப்பப்ப எப்பவாவது மெயிலில் ஏதாவது வாழ்த்துச் சொல்வதோடு நட்பு நீடிக்கிறது, அதிலும் உண்மையைச் சொல்லியே ஆகோணும், என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அம்முலு பேஸ் புக்கில் இருந்த காலத்திலும், இம்முறைகூட எனக்காக வாழ்த்துப் பதிவு போடத் தவறுவதில்லை, அவவின் புளொக்கில் எனக்காக வாழ்த்துப் போட்டது மட்டும்தான் இந்த வருடம் அவ புளொக்கில் எழுதிய எழுத்து. நான் இதுவரை போஸ்ட் போட்டு எங்கேயும் வாழ்த்தும் சந்தர்ப்பம் அமையவில்லை, இம்முறையாவது எப்படியாவது போஸ்ட் போடோணும் என கங்கணம் கட்டிக் களம் இறங்கி விட்டேன்.
நான் இத்தனை வருட பழக்கத்தில் எல்லோரோடும் பப்ளிக்கிலேயே என் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இருக்கும், அதைவிட நெருங்கிப் பழகுவதில்லை, நெருங்கினால் என் எதிர்பார்ப்புகள் அதிகமாகும்:), அதிகமாகும்போது அது நிறைவேறாத சந்தர்ப்பங்களில் கவலை, மனக் கசப்பு உருவாகிடவும் வாய்ப்பிருக்கு, இதனால்கூட... அனைத்தையும் பப்ளிக்குடனேயே நிறுத்திக் கொள்வேன்.
சே..சே... என் நட்புக்களில் பெரும்பாலானோர் சைவமாகவே இருப்பதால் ஆசைக்கு ஒரு மட்டின் ரோல்:), அவிச்ச முட்டைகூடப் போட வழியில்லை:)).. சரி இம்முறையும் ஆடி வெள்ளிக் குறிப்பையே போட்டு விடுகிறேனே:)..
கோமதி அக்கா சொன்னா.. ஆடி வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்குப் போடோணும் என, அதனால ஒரு வெள்ளி மாவிளக்கும், ஒரு வெள்ளி கொழுக்கட்டையும் அவித்துக் குடுத்தேனாக்கும் அம்மனுக்கு.. மிகுதி ரெண்டு வெள்ளி என்ன பண்ணினீங்க எனத்தானே முறைக்கிறீங்க?:).. அது கோமதி அக்கா தகவல் தரும்போதே ரெண்டு முடிஞ்சிடுச்சூஊஊஊ:))
இம்முறை நான் சொக்கப்பனை எரிக்கவில்லை:) என்பதனை நெல்லைத்தமிழன் அண்ணாவுக்கும்:) அவரின் பெரிய ஆன்ரிக்கும்[5 வுக்கும்:)] சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்:)). தினையை ஊறவிட்டு அரைத்து, மாவெடுத்து, தேனில் குழைத்தேன் சக்கரை சேர்த்து...ஆனால் வாழைப்பழத்தில் குழைத்து, போதாததுக்கு தேன் சேர்த்திருக்கோணுமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என் முந்தைய மாவிளக்கு குறிப்புக் காண..இங்கு
தேனும் தினை மாவும் கலந்துனக்கு நான் தருவேன்...
சங்கத் தமிழ் இரண்டும்[ழ,ள] தாங்கோ அம்மனே_()_:)!!
இது எங்கள் ஆற்றங்கரையில் ரோஜாவின் அழகு...
எங்கள் செவ்வந்தி நிறையப் பூக்கள் வந்திருக்குது.. டெய்சிப்பிள்ளை மணந்து பார்க்கிறா:)
இந்தப் பிங்கி ஃபியூஸியாவிலும் நிறையப் பூக்கள் இப்போ..
இந்தப் பழங்கள் சாப்பிட்டதுண்டோ? இவை லைச்சி பழங்கள்....Lychee.
ஊசி இணைப்பு:
ஒரு கவிதை ஊசிக்குறிப்பு...
சொந்தக் காரர் வைரமுத்து அங்கிள்:).
எறும்புகளே!! நீங்கள் நேசிப்பது? வெறுப்பது?
வெறுப்பது..
வாசல் தெளிக்கையில்
வந்து விழும் கடல்களை
நேசிப்பது
அரிசிமாக் கோலம்போடும்
அன்ன பூரணிகளை
சேமிக்கும் தானியங்கள் முளைகொண்டால் என்ன செய்வீர்?
அவற்றைக் கவரும்போதே
கருத்தடை செய்து விடுகிறோம்
முளைகளைந்த மணிகள்
முளைப்பதில்லை மனிதா...
==========_()==========
|
Tweet |
|
|||