நல்வரவு_()_


Sunday 27 October 2019

பக்தி முத்தினால் என்ன ஆகும்?:)

லைப்புக்கான பதிலைச் சொல்வதாக இல்லை இப்போஸ்ட்:), நான் எப்போ போஸ்ட்டையும் தலைப்பையும் சம்பந்தப்படுத்தியிருக்கிறேன்?:).. சரி இருந்தாலும் பக்தி முத்தினால் பழமாகுமாமே:) அதாவது ஞானப்பழம்:).. சரி அதெல்லாம் இப்போ நமக்கெதுக்கு.. என் முடிக்கப்படாத கதை இன்னும் இருக்கெல்லோ:).. அதைத் தொடரலாம் வாங்கோ.
சே..சே.. ஒரு போஸ்ட் எழுதவே ஒரு மாதமாகிடுதே:))

ங்கின விட்டேன் ஜாமி.. ஆஆ ரிச்மன் ஹில் பிள்ளையாரில விட்டேன் நினைவிருக்கோ.. அப்படியே ஊருக்குள்ள வாங்கோ.. கடகடவெனப் படமெடுத்திட்டேன், இப்போ படத்தை கரெக்ட்டான பெயருடன் தான் சொல்கிறேன் என நினைக்கிறேன், அப்படி இல்லாமல் கோயிலையும் போட்டு பெயரை மாத்திச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன தெரியவோ போகுது எனும் தெகிறியம் எனக்கு:) ஹா ஹா ஹா. இன்று வரும் கோயில்கள் அனைத்தும் கனடா ரொரண்டோவில் அமைந்திருப்பவை.

======================================================
கீழே இருப்பது மிக மிக அழகிய கோயில், துர்க்கை அம்மன் கோயில், உள்ளே நுழைந்தாலே அப்படியே அனைத்தும் மேலே இருந்து கீழேவரை தகதகவென தங்கம்போல ஜொலிக்கிறது, இப்போ சமீபத்தில்தான் புனரமைச்சு முடிச்சிருக்கிறார்கள், இது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரின் சொந்தக் கோயிலாக இருக்கிறதாம். தனிநபர் கோயில் என்பதால் மிகவும் சட்டதிட்டமாக நடத்தப்படுகிறது, படம் எடுக்கப்படாது என கண்டிப்பான உத்தரவு என்பதனாலும், நாம் போனபோது திருவிழாக்காலம்.. வசந்தமண்டபப் பூஜையாகி சுவாமி உள்வீதி சுத்திய நேரம், படம் எடுக்கவே முடியவில்லை.. இருப்பினும் பின் வீதியில் மட்டும் சிலதை எடுத்தேன்.

இன்னும் கோபுர வேலைகள் முடியவில்லைப்போலும் அதனால மூடப்பட்டிருக்கிறது

இவர் மூலஸ்தானத்தின் இடப்பக்க மூலையில் இருப்பவர்..

உள்வீதி பின்புறம் முழுவதும் இப்படி அழகாக நாயன்மார்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கு.. அத்தனையும் தங்கக்கலரில் மின்னுது அதனால படம் எதிரொளியாகி கிளியராக வரவில்லை.. வெயில் வேறு மேல் கண்ணாடியூடாக அடிச்சுக்கொண்டிருந்தது, அதிலும் ஒளிச்சு ஒளிச்செல்லோ படமெடுத்தேன்:)
உள் வீதி மண்டபத்துள்ளேயே அமைந்திருப்பவை..

==================இடைவேளை====================
ஆஆஆஆஆஆஅ நான் கோயில் கோயிலாகப் போய்க் கும்பிட்ட பலன்:), கடவுள் என்னைக் கைவிடவில்லை:), என் டமில்:) டி பற்றி இங்கின பேச்சே அடிபடேல்லையே:)) ஹா ஹா ஹா..
==============😺==============

இது கந்தசாமி கோயில், இதுவும் இப்போ புனரமைக்கப்பட்டு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வசந்தமண்டபப் பூஜை நடைபெறுகிறது..


முருகன் அப்பப்ப அதிராவைக் காப்பாற்ற, இந்த வாகனத்தில் ஏறித்தான் ஸ்பீட்டாக வருவார்:))
================================================

இது அடுத்து வருவது சிவன் கோயில். இது இனித்தான் பெரிதாக்கப் பட இருக்கிறது, இன்னும் கோபுரம் எல்லாம் கட்டப்படவில்லை.. நோட்டீஸ் படிச்சால் புரியும்.

உள்ளே சிலைகள் எல்லாம் அற்புதம், இங்கு படமெடுக்க எந்தத் தடையும் இல்லை[எழுதப்பட்டிருக்கவில்லை, இருப்பவும் எடுக்கவேண்டாம் எனச் சொல்லுவினமோ எனப் பயமாக இருந்தது], கூப்பிட்டுத், தட்டில் குழைசாதம் பப்ப்டம் பொரிச்ச மிளகாய் எல்லாம் தந்தார்கள்.

அங்கு இப்படி தண்ணி வைக்கப் பட்டிருந்தது, எனக்கு மிகமிகப் பிடிச்ச சிவலிங்கத்துக்கு இப்படி நீர் ஊற்றிக் கும்பிடலாம்.. ஆசையாக இருந்தது..
=============================================

இவர் வரசித்திவிநாயகர்... அன்று சின்னவரின் பிறந்ததினம், அவசரமாக வெளிக்கிட்டு ஓடினோம் பூஜை எல்லாம் முடிஞ்சு திரைச் சீலை இழுத்து மூடமுன் போயிட்டோம், அதனால அழகாக அர்ச்சனை பண்ணியவுடன் திரைச்சீலை போட்டார் ஐயா. 

அப்போதான் தேர் தீர்த்தம் நிறைவுற்று, பூங்காவனம்/வைரவர் மடை  என நினைக்கிறேன், அதனால மூலஸ்தான பிள்ளையாரை இப்படி மரக்கறிகள் பழங்களால் அலங்கரிச்சிருந்தார்கள். கொஞ்சம் பிந்தியிருந்தால் பார்த்திருக்க முடியாது திரை போட்டிருப்பார்கள்.. 

===============🙏===============

ஊசிக்குறிப்பு:)

ஊசி இணைப்பு

அதிரா ரெடியாகிட்டேன்ன்ன்ன் நீங்களும் ரெடியாகுங்கோ.. எதுக்கோ?.. ராஜேஸ்வரி அம்மனைப் போய்ப் பார்க்கத்தான்:)... அடுத்த தொடரில்...
😹😺😻😺😹

Sunday 13 October 2019

ஒரு வாவில்லும் நவ ராத்திரியும்..

ன் இனிய தமிழ் புளொக் உறவுகளே, உங்கள் அன்பிற்கும் பண்பிற்கும், பாசத்துக்கும் உரிய, “அடக்க ஒடுக்கமான அதிரா” பேசுகிறேன்... ஆஆஆஆஆஆ ஹையோ இப்போ எதுக்குக் குனிஞ்சு எதையோ தேடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் அப்பூடி என்ன ஜொள்ளிட்டேன்ன்:)).. சரி விடுங்கோ, நான் ஸ்ரெயிட்டாவே மட்டருக்கு வந்திடுறேன்:))..

Wednesday 9 October 2019

ரோகரா!! அரோகரா!!!🙏


ஸ்ஸ்ஸ் அதிரா.. ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கிறேனாக்கும்:))

ங்ங்ங் “விடாது கருப்பு” என ஒரு மர்மத் தொடர் போனதெல்லோ ஒருகாலத்தில் ரிவியில்:), இப்போ யூ ரியூப்பில் கிடைக்கிறது:).. அது போல “விடாது அதிராவின் தொல்லைகள்”:) எனப்:) படம் படமாப் போட்டுக் காட்டுவேன்:)).. எங்கே மூச்சை நல்லாஆஆஆஆ உள்ளே இழுங்கோ:)).. ஆஅ இப்போ மெதுவாஆஆஆ வெளியே விடுங்கோ:)).. ஆங் இனிக் கோபம் வராது உங்களுக்கு:) இப்போ போஸ்ட்டினுள் நுழைவோமா?:)).

கோமதி அக்காவோ கீசாக்காவோ அதிராவோ கொக்கோ?:)).. மீயும் கோயில் படம் போடுவனே போட்டிக்கு:)).. ஸ்கொட்லாண்டில் கோயில் இல்லை எனில், ரிக்கெட் போட்டு பிளேனேறிப்போய்ப் படமெடுத்து வருவேனாக்கும் ம்ஹூம்ம்:)) ஹா ஹா ஹா.

இது கனடா- ரொரண்டோ வில் இருக்கும் றிச்மன்ஹில்[ஊர் பெயர்] பிள்ளையார்.

இந்தக் கோபுரத்தில் எனக்கொரு சந்தேகம், ஆராவது தீர்த்து வையுங்கோ பிளீஸ்.. அதாவது இது பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகிறது.. மூலஸ்தான அதிபதி பிள்ளையார், ஆனா உள்ளே மூன்று மூலஸ்தானங்கள் போல அமைக்கப்பட்டு மூன்று வாசல் இருக்கு... உள்மண்டபம் ஒன்றாக அமைக்கப்பட்டிருகுது.

என் சந்தேகம், பிள்ளையார் கோயில் எனில், பிள்ளையாரின் கோபுரம்தானே பெரிதாக இருக்கோணும், ஆனா இங்கு அப்படி இல்லையே அது ஏன்?

கோயில் உள்ளே கால் கழுவும் வசதி இருக்கு, கழுவியபின் உள்ளே நுழையும்போது இவர்தான் நம்மை அழகாக வரவேற்கிறார். பார்க்க சூப்பராக இருந்தார்.. என் கண்ணே பட்டுவிடும் அளவுக்கு.


 நீங்கள் நினைக்கக்கூடும்.. இது என்ன சிதம்பர ரகசியமோ:) நாங்களும் படமெடுப்போமே என:), ஆனா அதிராவுக்குத்தான் தெரியும் அதன் கஸ்டம்:), ஏன் தெரியுமோ, ஒவ்வொரு இடத்திலும் தமிழிலும் இங்கிலிஸ் இலும் எழுதி பெரிதாக அச்சடிக்கப்பட்டிருக்கு, படம் எடுக்கக் கூடாது என.. அப்போ அதையும் மீறி, இனி ஆட்கள் இல்லாததாகவும் எடுக்கோணும், என் ஃபோனின் கிளிக் சவுண்டை ஓவ் பண்ணி, பிளாஸ் லைட்டை ஓவ் பண்ணி, வேர்க்க விறுவிறுக்க:) ஏதோ மெசேஜ் படிப்பதைப்போல ஆக்டிங் குடுத்து இப்பூடி எடுப்பதெனில் எவ்ளோ கஸ்டம் சொல்லுங்கோ:)) எல்லாம் உங்களுக்காகத்தான்:)..., ஆனா அதனால நான் மூலஸ்தானக் கடவுள் எவரையும் எடுக்கவில்லை...
இது பின் வீதி சுற்றி வந்தபோது.. நல்ல உச்சி வெயில், நேரம் 12-1 மணி.

ஆழ்வார்கள்...ஆங்ங்ங் இவ ஆரெனத் தெரியுதோ?:) இவதான் வள்ளி அம்மை.. நான் என் வைர அட்டியல் நேர்த்தியை நிறைவேற்ற அளவெடுக்கலாம் எனப் போனேன்ன்:).. அவவிடம் ஓல்ரெடி அட்டியல் இருக்குதே:)) அதனால அளவெடுக்காமல் வந்துட்டேன்ன்:)).. அப்போ இனி வைர அட்டியல் குடுக்கத் தேவையில்லைத்தானே?:).

ஆவ்வ்வ் ஏ அண்ணனை நினைச்சு:) இந்த ஆனைப்பிள்ளையைத் தொட்டேனே:)).. அவர்தானே கீதாவையும் என்னையும் கேட்டார்ர்.. எதுக்கு வாகனங்களைத் தொடும் ஆசை உங்களுக்கு என ஹா ஹா ஹா.. தொடுவதிலும் ஒரு மகிழ்ச்சி:)... முகத்தில் தெரியும் சிவப்பு நிறம், நிலத்தின் கலரின் எதிரொளி..

கனடாவில் பொதுவா அனைத்துக் கோயில்களிலும் யூன், யூலை மாதத்தில்தான் திருவிழா உற்சவம் நடக்கின்றது, அதனால இப்படி தேர் எல்லாம் வெளியே நிற்கிறது, இல்லை எனில் உள்ளே வைத்து மூடி விடுவார்கள், இது திருவிழா முடிஞ்சுவிட்ட நேரம்.

ஓகே அந்தக் கோயில் ட்றிப் முடிஞ்சது.
இது ரொரண்டோவில் இருக்கும் ஷீரடி பாபா, ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் இப்படி அதிகம் மக்கள் வருவார்கள்..


 இது அங்கு சீரடி பாபா கோயிலில் கிடைச்சது, அழகிய மஞ்சள் றோஸ்.. இது அஞ்சுவுக்குக் குடுக்கிறேன்.. இதை இப்படியே வாடாமல் வச்சிருக்கோணும், நான் அடுத்த வருசம் கேட்பேன், இப்படியே இதே பூவாகக் காட்டோணும் ஜொள்ளிட்டேன்:) இல்லை எனில் தேம்ஸ் ல தள்ளுவேன்ன்:)).. இது அந்த நெல்லைத்தமிழனின் மாங்காய் சட்னி மேல் இருக்கும் கடுகின் மீது ஜத்தியம்:))

எனக்கு சின்ன வயசிலிருந்தே பிரான்ஸ் லூர்த் மாதாவைப் பிடிக்கும், அதேபோல நேரில் சென்று தரிசித்ததிலிருந்து அதிக நம்பிகையும் ஏற்பட்டது, அதனால மேரி மாதாவிலும் எனக்கொரு லவ். இது அங்கு ரொரண்டோ மோனிங் சைட் எனும் ரோட்டருகில் இருக்கும் ஒரு மேரி மாதா, எப்போ அங்கு போனாலும் இவவைத் தரிசிக்கத் தவறுவதில்லை.

இதேபோல மேரி மாதா இங்கும் ஒரு சேர்ஜ்ஜில் இருக்கிறா, விரைவில் படமெடுத்துப் போடுகிறேன் அவவையும் அடிக்கடி போய் வணங்குவேன்.

ஊசி இணைப்பு:)

 ஊசிக்குறிப்பு:-
🙏

Thursday 3 October 2019

 “பாம்”, இப்படியும் நம்மை வந்தடையுமோ?👧

திரா, ஞானி ஆகிட்டதை நீங்கள் எல்லோரும், இப்போ பல நாட்களாக மறந்துவிட்டதைப்போல எனக்கொரு ஃபீலிங்காகவேஏஏஏ இருக்கு:)). அதை நினைவுபடுத்தவே இந்த அவசர போஸ்ட்:)).

Tuesday 1 October 2019