நல்வரவு_()_


Tuesday 1 October 2019

ந்தாலும் விடமாட்டேன்...:)
Washington Capitol.. பாராளுமன்றம்.. இதில் நிறையப் படங்கள் எடுத்தேன், ஆனா போடாமல் விடுறேன் உங்கள் நன்மை கருதி:)


☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺இடைவேளை☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺
அதிராவின் விரதம் ஆரம்பமாகிவிட்டது, மீ சைவம்ம்ம்ம்ம்ம் இனிக் கந்த சஷ்டி பாறணை முடியும் வரை, அஞ்சு வீட்டிலயும் மே..மே .:) சத்தம் வரக்கூடாது ஜொள்ளிட்டேன்ன்:))

துர்க்கை அம்மனுக்கு உறைப்புத்தான் அதிகம் பிடிக்குமாமே அதனால குண்டுத்தோசை செய்து குடுத்தேனாக்கும்:))

இது பருப்பு வடை சுட்டுக் குடுத்தேன்:))[நெல்லைத்தமிழன் யூம்ம்ம்ம் பண்ணிப் பார்க்கிறார் என்ன பிழை பிடிக்கலாம் என கர்ர்ர்:))]

கோமதி அக்காவைப்போல நானும் குட்டிக் கொலு சேர்க்கிறேன்.. இப்படி நிறைய டிசைன்களில் அக்கா அண்ணா வீட்டில் வைச்சிருக்கினம் புதுசாவே, நான் எடுத்து வந்தேன், சிலது அங்கு விசேசங்களுக்குக் குடுக்கிறார்கள்..

இவ துர்க்கை அம்மன்..
@@@@@@@இடைவேளை முடிஞ்ஞ்ஞ்சு போச்ச்ச்ச்ச்ச்@@@@@@
---------------------------------------------------------------
இது நான் சொன்னேனே முன்பு, ஒருநாள் வோஷிங்டனில் நின்றபோது கடும் காத்து, மழை.. வெளியே போகவேண்டாம் என அம்பர் அலேர்ட் வந்தது என... அந்தப் பொழுதில் எடுத்தேனாக்கும்:))

இது ஹோட்டேல் முற்றத்தில் மாடப்புறாவும், சிட்டுக்குருவிகளும் ஒற்றுமையாக சாப்பிடுகிறார்கள்..

ஆங், ஹொட்டேலை விட்டுப் புறப்படுகிறோம் ரக்ஸியில்...

எயார்போர்ட் போகும் பாதையில், இது Military பில்டிங்..

இதோ எயார்போர்ட் தெரிகிறதே...
எயார்போர்ட் கார்..ப் பார்க் தெரியுதே..

ஆ பிளேனும் தெரியுது.. அழாதீங்கோ.. , அதிரா வந்திடுவேன்:)

ஆங்ங்ங் பிளேன் மேலே எழும்பி விட்டதே...
வீடியோவில் பாருங்கோ, வோஷிங்டன் இருந்து ரொரொண்டோ-கனடா போகும்வரை தரைதான், கடல் இல்லை, எவ்ளோ அழகாக அதிரா வீடியோ எடுத்திருக்கிறேன்:))[கீசாக்கா நோட் திஸ் பொயிண்ட்:)].. இதில் தெரிவது முழுக்க Toronto தான்.

நித்திரைத்தூக்கத்தில் என்னமோபோல பேசியிருக்கிறேன்:)) அஜீஸ் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்:)..
அப்பாடா வோஷிங்டன் தொல்லை இனி உங்களுக்கு இல்லை:), ஆனா கனடாவில் தொல்லைகள் இனித்தானே ஆரம்பம்:)).


ஊசி இணைப்பு:

ஊசிக்குறிப்பு:

ஆண்டவரே!! ஆரும் அதிராவைத் திட்டிடாமல் கருணை காட்டுங்கோ!!! 
🙏🙏🙏🙏💝🙏🙏🙏🙏

175 comments :

 1. பறந்தாலும் விட மாட்டீங்களா ?? எதை ?? யாரை ?? படங்கள் வெள்ளை மாளிகை அழகு ..ட்ரம்ப் அங்கிள் கிட்ட பெர்மிஷன் கேட்டிங்கதானே ??இல்லனா நீங்க எங்கே பறந்தாலும் அவர் விட மாட்டார் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. பறந்தாலும் படமெடுப்பதை விடமாட்டேனாக்கும்:))..
   ட்றம்ப் அங்கிளின் பெர்மிஷன் இல்லாமல் என்னால எங்குமே கால் வைக்க முடியாதெல்லோ:).. மீ அவரின் பேசனல் செக்:) ஆச்சே:))

   Delete
 2. /அதனால குண்டுத்தோசை செய்து குடுத்தேனாக்கும்:))//சாமீ  என்னை காப்பாற்ற யாராயாவது அனுப்புங்க .தோசைன்னாலே அது கல்லில் வட்டமா மாவை கரண்டியால் ஊற்றி சுற்றி சுடணும் /வார்க்கணும் .அப்போ த்சவ் தசோ இதுசொ அப்படின்னு  மூசிக் வரும் அதனால்தான் தோசைக்கு தோசைன்னு பெயர் வந்தது .இங்கே குண்டா உங்களமட்டகிரி எதையோ ஊற்றி உருட்டி போட்டு தோசையும் தோசை :) இது காரப்பணியாரம் :)))))))))))

  ReplyDelete
  Replies
  1. //உங்களமட்டகிரி//

   உங்களை மாதிரி 

   Delete
  2. அதானே, குழிப்பணியாரத்தை தோசைனு பெயர் வைச்சு ஏமாத்து வேலை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  3. ஹா..ஹா...ஹா..அஞ்சூசூஊ ..... ..

   Delete
  4. அல்லோ குண்டாக இருக்கும், ஆனா தோசை மா போலதான் இதுக்கும் அரைப்போம்.. அதனால குண்டுத் தோசையாக்கும் கர்ர்ர்ர்:))

   //அப்போ த்சவ் தசோ இதுசொ அப்படின்னு மூசிக் வரும் அ//
   இது எந்த ஊர் மூசிக்க்க்?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா.

   Delete
  5. ஆஆ கீசாக்காவும் அம்பேரிக்கால இருந்து லாண்டட்:)).. குழிப்பணியாரம் என தமிழ் நாட்டில் சொல்கிறார்கள், ஆனா எனக்கு தெரிஞ்சு பணியாரம் எனில் அது இனிப்பாக இருக்குமாக்கும்:)).. காரமானதை பணியாரம் எனச் சொல்வதாக தெரிவதில்லை எனக்கு.

   ஹையோ அம்முலு ஒரு அப்பாவிக்கு[என்னைச் சொன்னேன்:)] சப்போர்ட் பண்ணுவா எனப் பார்த்தால் .. சிரிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   Delete
  6. இனிப்புப் பணியாரம் வேறே! அதை அப்பம் என்போம். குழிப்பணியாரம் இஞ்சி, பச்சைமிளகாய், போட்டு வெங்காயம் எல்லாமும் வதக்கிச் சேர்த்தும் பண்ணுவோம். அதைத் தவிர்த்துச் செட்டி நாட்டுச் சிறப்பு வெள்ளைப் பணியாரம். அதுவும் உப்புப் போட்டது தான். இனிப்பில்லை.

   Delete
  7. ஓ இவ்ளோ இருக்கா கீசாக்கா.. நான் இதுக்கு வெங்காயம், செத்தல் மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் கொஞ்சம் பொட்டுக்கடலை தாளிச்சுப் போட்டேன்.

   Delete
 3. ///ஆனா போடாமல் விடுறேன் உங்கள் நன்மை கருதி:)//
  ம்க்கும் அந்த நன்மையை உண்மையா கருதி இருந்தா அந்த குழாய் சாதம் வந்திருக்குமா :)) நேற்று உங்க ரெசிப்பி ஒன்னு தேடினா முன்னாடி வந்து நிற்குது உங்க குழை சாதம் கூகிள் சர்ச்சில் 

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நான் எது செய்தாலும் அது வரலாற்றில் இடம் பிடிக்கிறதே:) என உங்கள் எல்லோருக்கும் பொறாமை:) ஹா ஹா ஹா..

   Delete
 4. இல்ல  துர்க்கையம்மனுக்கு ஒன்லி மட்டுமே  பிடிக்கும்னு சொன்னாங்க அதனால் இனிமே ஆல்வேஸ் நீங்க சைவமா மாறிடுங்க :) 

  ReplyDelete
  Replies
  1. ஒன்லி veg மட்டுமே

   Delete
  2. //அதனால் இனிமே ஆல்வேஸ் நீங்க சைவமா மாறிடுங்க :) //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னை எப்பூடியாவது மட்டின் ரோல்ஸ் உம் அ.கோ மு உம் சாப்பிட விடாமல் பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறாவே:)).. நானும் ஆரம்பம் அப்பூடி நினைச்சேன் அஞ்சு ஆனா து அம்மனே கனவில வந்து சொன்னா, விரதம் முடிஞ்சதும் உனக்குப் பிடிச்சதை எல்லாம் சாப்பிடு குழந்தாய்:) என:)).. அவவின் பேச்சை மீ எப்போ மீறியிருக்கிறேன்?:)

   Delete
 5. அந்த சைவ பூனைக்குட்டி செம கியூட் :) சமீபத்தில் இவர் அளவில் ரெண்டு பேரை பார்த்தேன் :) அது பதிவா வரும் :)

  ReplyDelete
  Replies
  1. பார்க்க ஆசையா இருக்கெல்லோ அவரை...

   இருவரோ...போடுங்கோ போடுங்கோ.

   Delete
 6. அம்பர் அலெர்ட் டைமில் உங்க கடமையுணர்ச்சி என்னை புல்லரிக்க வைக்குது :) வீடியோ எடுக்கும்போது பெரிய பனிக்கட்டி தலைல விழுந்திருக்கணும் இல்லனா காற்று அப்படியே தூக்கி வேற கண்டத்தில் உங்களை டிரான்ஸ்பர் பண்ணியிருக்கணும் :) கர்ர்ர் :)அப்போ தெரிஞ்சிருக்கும் amber அலெர்ட்னா என்னனு 

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சுவே ஐஸ்கட்டி தூக்கிப் போட்டிடுவா போல இருக்கே:)) ஹோட்டேல் ஜன்னலால ஒரு வீடியோ எடுத்தது டப்பா?:)).. இல்லை எனில் இவ்ளோ அழகிய வீடியோ நீங்க உங்கட வாழ்க்கையில பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்பீங்க தெரியுமோ?:).. ஹா ஹா ஹா சரி சரி முறைக்கக்க்கூடா:))

   Delete
 7. அம்பர் அலெர்ட் டைமில் உங்க கடமையுணர்ச்சி என்னை புல்லரிக்க வைக்குது :) வீடியோ எடுக்கும்போது பெரிய பனிக்கட்டி தலைல விழுந்திருக்கணும் இல்லனா காற்று அப்படியே தூக்கி வேற கண்டத்தில் உங்களை டிரான்ஸ்பர் பண்ணியிருக்கணும் :) கர்ர்ர் :)அப்போ தெரிஞ்சிருக்கும் amber அலெர்ட்னா என்னனு 

  ReplyDelete
  Replies
  1. ஓ 2 தரம் வந்திருக்கு என, மெயிலில் ஒன்றை மட்டும் பப்ளிஸ் பண்ணினேன், ஆனா மற்றது, புளொக் உள்ளே கும்பலோடு கோவிந்தாவாக வெளிவந்து விட்டது ஹா ஹா ஹா..

   Delete
 8. டாக்சி ஏறுறதுலருந்து பிளேன் லாண்டிங் வரை கேப்ஷன் :) எங்கள் பிளாக்கை நினைவூட்டுது 
  வீடியோவை நாளைக்கு பார்க்கிறேன் .:) ஜெஸியும் மல்டியும் தூங்கறாங்க .குழந்தைங்க உங்க குரல் கேட்டு பயந்துறக்கூடாதில்லையா :))

  ReplyDelete
  Replies
  1. வீடியோ ஃபுல்லா பார்க்காட்டில் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்:))..

   //குழந்தைங்க உங்க குரல் கேட்டு பயந்துறக்கூடாதில்லையா :))//
   கர்ர்ர்ர்ர்:))

   Delete
 9. ஊசிகுறிப்பு ..அழகான பொய் தான் நல்லது .

  உங்களை யாரும் திட்ட முடியுமா ??? உங்க காலை வாற // ர   கலாய்க்க நெல்லைத்தமிழனும் வாலை இழுக்க நானும் இருக்கும்போது :))
  அஹயோ சாமீ இதென்ன தமிழுக்கு சோதனை எனக்கு ப்போ ர /ற டவுட்டெல்லாம் வருதே 

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் நைட்டில் இங்கு வந்தமையால இந்த ர/ற அவர் கண்ணுக்கு தெரியாமல் போச்ச்ச்ச்சே:))..

   அது ர தான் வருமாக்கும்.. அதிராவுக்கு டமில்ல டி எல்லோ:).. டவுட்ஸ் வந்தால் கூச்சப்படாமல் கேழுங்கோ.

   Delete
 10. song வீடியோவில் ஒரு பொண்ணு வருதே அது ஆரு :) அழகா இருக்கு அதான் கேட்டேன் 

  ReplyDelete
  Replies
  1. ரம்யா நம்பீசன் பெயர் அஞ்சு.

   Delete
  2. நான் படம் பார்த்தேன் நல்ல படம், ஆனா பெயர் நினைவில்லை.

   Delete
 11. அந்த புறா வுக்கும் குருவி க்கும் ட்ரெயினிங்  கொடுத்து அம்பேரிக்கா அனுப்பி வச்சதே நான்தான் :) 

  ReplyDelete
  Replies
  1. நினைச்சேன் நினைச்சேன்ன்.. புறாப்பிள்ளை ஒரு பக்கமா சரிஞ்சு சரிஞ்சு நடக்கும்போதே நினைச்சேன்ன்:)) அஞ்சுவிடம்தான் நடக்கும் பயிற்சி எடுத்திருக்கென:)) ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி அஞ்சு.

   Delete
 12. ஆமாம் வாசிங்டன்ல நீங்க நிறைய இடம் வாங்கி போட்டதாக செய்திகள் வருகிறதே ?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ...

   நீங்க என் போன போஸ்ட்டுக்கு வந்திருந்தா:) இந்த டவுட் எல்லாம் வந்திருக்குமோ:)) கர்ர்ர்ர்:))

   Delete
 13. நீங்க ட்ரம்பை பார்க்காமல் போனதால் அவர் மிக வருத்தத்தில் இருப்பதாக சீக்ரெட் துறை சொல்லுகிறது இப்படி பண்ணலாமா நீங்க

  ReplyDelete
  Replies
  1. ட்றம்ப் அங்கிளோடு கிட்ட நிண்டெல்லோ படம் எடுத்து வந்திருக்கிறேன்ன்.. இதுக்குமேலும் பொய் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த சீக்ரெட் துறைத் தலைவி அஞ்சுவாகத்தான் இருக்கும்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.

   Delete
 14. //எவ்ளோ அழகாக அதிரா வீடியோ எடுத்திருக்கிறேன்:))[கீசாக்கா நோட் திஸ் பொயிண்ட்:)]..// நான் எடுக்கும்போது நேரில் பார்த்தால் தான் நம்புவேன். இதை எல்லாம் நம்பமாட்டேனே!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. அம்பேரிக்கா என்றதால போஸ்ட் பார்த்தவுடன் லாண்ட் ஆகிட்டீங்க:))..

   ///குழந்தைங்க உங்க குரல் கேட்டு பயந்துறக்கூடாதில்லையா :))//
   ம்ஹூம்ம்ம் இப்பூடி உசுப்பேத்தினால், அதிரா டக்குப் பக்கென செல்பி வீடியோ போடப்போறா பார்க்கலாம் என எல்லோரும் பக்கோடாவும் செய்து கச்சானும் வறுத்துக் கொண்டு ரெடியாகிட்டினம்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பூஸொ கொக்கோ:)).. நான் இனி தண்ணிக் கப்பலில்தான் பயணம் போகப்போறேன்:))

   Delete
 15. அந்த துர்கை அம்மன் அழகாக இருக்கிறாள். இப்படி பொம்மைகள் சேர்த்தும் கொலு வைக்கலாம். இங்கேயும் கொலு வைச்சிருக்கு. ஆனால் குஞ்சுலு எல்லாப் பொம்மைகளையும் தூக்கிக் கொண்டு போய்விடுகிறது. அதனால் உடையாத பொம்மைகளாக சாஸ்திரத்துக்கு வைச்சிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நான் கொலு என வைக்கவில்லை கீசாக்கா.. சுவாமித் தட்ட்டில் இப்படி எப்பவும் வச்சிருக்க பிடிக்கும்.

   ஓ குஞ்சுலு எல்லாம் எடுத்து விளையாடுறாவோ ஹா ஹா ஹா.. எங்கள் வீடுகளில் எப்பவும் சுவாமித்தட்டை உயரமாகவே வைத்திருப்போம்.

   Delete
  2. இங்கே அப்படி வைக்க முடியாது. உயரே வைக்கணும்னா கஷ்டம்..

   Delete
 16. வழக்கம்போல் அருமையான படங்கள், வீடியோக்காட்சிகள், தலைப்புப் பாடல், ஊசிக்குறிப்பு, இணைப்பு எல்லாமும். இதில் அதிராவை மிஞ்ச ஆள் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி... அம்பேரிக்கா போனபின்புதான் கீசாக்கா உண்மை பேசுறா:)..

   மிக்க நன்றி கீசாக்கா வருகைக்கு.

   Delete
  2. போனால் போகுதுனு தான் சொன்னேன்.

   Delete
  3. ///Geetha SambasivamWednesday, October 02, 2019 10:27:00 pm
   போனால் போகுதுனு தான் சொன்னேன்.//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 4536785643980:)

   Delete
 17. படங்கள் நன்று.
  காணொளியை அழகாக சுழற்றி எடுத்து இருக்கின்றீர்கள் இதற்கு முக்கிய காரணம் உங்களுக்கு கப்பலில் சரியான கோணத்தில் ஸீட் கிடைத்து இருக்கிறது.

  அடுத்து கனகாவை சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

   //இதற்கு முக்கிய காரணம் உங்களுக்கு கப்பலில் சரியான கோணத்தில் ஸீட் கிடைத்து இருக்கிறது.//
   இப்பூடிப் பார்த்தால் பழமொழி பொய்த்திடப்போகுதே:)).. “ஆடத் தெரியாதவர், நிலம் கூடாதென்றாராம்” ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 18. மன்னிக்கவும்...   பாட்டு எனக்கு ரசிக்கவில்லை!   ஆனால் விசே எனக்குப்பிடிக்கும்.  ஆனால் பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு குருகுரு என்று வந்தேன்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   //பாட்டு எனக்கு ரசிக்கவில்லை//
   ஹா ஹா ஹா கர்ர்ர்:)) போடும்போது நினைச்சேன் ஸ்ரீராமுக்குப் புதுசு பிடிக்காதே என:))

   //ஆனால் பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு குருகுரு என்று வந்தேன்!//
   ஹா ஹா ஹா கமல் அங்கிளாக மாறிட்டீங்க:))

   Delete
  2. புதுப் பாடல்களில் பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். இது ரொம்பச் சுமார்!

   Delete
  3. அது உண்மைதான்... புதிசில் நிறைய நல்ல பாடல்கள் உள்ளது..ஆனா தேடும்போது நினைவு வராது:)..

   Delete
 19. படங்கள் அழகு.  நீரலைகளுக்குப் பின்னே கட்டிடம் ரொம்ப அழகு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி, அது ஒரு அழகிய இடம் ஸ்ரீராம், அங்கும் அந்த நீரோடையில் தாராக்களும் குஞ்சுகளும் சுற்றிச் சுற்றி வந்தன.

   Delete
 20. நீங்க விரதம் சரி...     அதற்கு அஞ்சுவும் ஏன் கட்டுப்பாடா இருக்கணும்!  அநியாயமா இருக்கே..(இந்த வரியை சதி லீலாவதி கமல் குரலில் படிக்கவும்)

  ReplyDelete
  Replies
  1. //அதற்கு அஞ்சுவும் ஏன் கட்டுப்பாடா இருக்கணும்!//

   ஹா ஹா ஹா அவ நான் அசைவம் சாப்பிடும் காலங்களில் தான் சைவமாக இருப்பா:)) இப்போ நான் விரதம் என்றதும்.. மே மே சமைக்கிறாவாம் கட்லட் செய்கிறாவாம்ம்.. கடுப்பேத்துறா மை லார்ட்:)) ஹா ஹா ஹா அதனாலதான் ஸ்ரீராம் மிரட்டி வச்சேன்:)) மிரட்டாவிடில் ஆரும் பயப்புடீனம் இல்லை:))

   Delete
  2. //பாவம் அஞ்சு...//
   ஹையோ ஆண்டவரே லூர்து மேரி மாதாவே.. இதை மட்டும் அஞ்சு பார்த்திடக்கூடாது:))

   Delete
  3. நான் பார்த்துட்டேன் பார்த்துட்டேன் .தாங்க்ஸ் ஸ்ரீராம் 

   Delete
  4. அது மியாவ் எனக்கு எப்படி தெரிஞ்சிதுன்னா ..நீங்க ஆண்டவரை கூப்டுட்டு மேரி மாதா வையும் கூப்ட்டுடீங்க ரெண்டு பெரும் எனக்கு இம்மீடியட்டா காமிச்சிட்டாங்க ஸ்ரீராம் கமெண்ட்டை 

   Delete
  5. வெல்கம் அஞ்சு... இந்த கமெண்ட் குவியலில் அதன் இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது சற்றே கடினம்தான்!

   Delete
  6. //Angel
   நான் பார்த்துட்டேன் பார்த்துட்டேன் .தாங்க்ஸ் ஸ்ரீராம்:)//

   ஆஆஆஆஆஆ இந்த ஜாமத்திலயும் இப்பூடி அசம்பாவிதம் நடந்திடுச்சே:)) ஹா ஹா ஹா..

   //நீங்க ஆண்டவரை கூப்டுட்டு மேரி மாதா வையும் கூப்ட்டுடீங்க//
   இருங்கோ இனிமேல் தனித்தனியாக் கூப்பிடுறேன் ஹா ஹா ஹா..

   Delete
  7. //ஸ்ரீராம்.Wednesday, October 02, 2019 9:40:00 pm
   வெல்கம் அஞ்சு..//

   ஆஆஆஆஆஆஆஅ இங்கின வரவேற்பும் நடக்குதே.. ஆண்டவா கொள்ளிமலைக் கந்தா... இதை எல்லாம் பார்க்கவோ என்னை இன்னும் நித்திரை கொள்ள விடாமல் வச்சிருக்கிறாயப்பா:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.. மீள்+ ஜாம வருகைக்கும்...

   Delete
 21. துர்க்கை அம்மனுக்கு உரைப்புகான் பிடிக்கும் என்று உங்களிடம் எப்போது சொன்னார் அவர்?    பருப்பு வடை பார்க்க நன்றாய் இருக்கிறது.  வெங்காயம் போட்டீர்களா என்ன? வெங்காயம் போட்டால் என் பாஸ் ஸ்வாமிக்கு அம்சி பண்ணமாட்டார்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்.... எனக்கென்னவோ இந்த செண்டிமெண்டில் அல்லது முறையில் (வெங் போட்டால் கடவுளுக்கு கண்டருளப்பண்ணுவதில்லை) அவ்வளவாக நம்பிக்கை இல்லை. (ஆனா வீட்டில் ஸ்டிரிக்ட்). பொதுவா நாம 'நல்ல நாட்களில்' வெங்காயம் உபயோகப்படுத்துவதில்லை. அதனால் உபயோகப்படுத்தும் நாட்களில் கடவுளை பட்டினி போடறோமோ

   Delete
  2. //துர்க்கை அம்மனுக்கு உரைப்புகான் பிடிக்கும் என்று உங்களிடம் எப்போது சொன்னார் அவர்?//
   ஹா ஹா ஹா அது ஸ்ரீராம், துர்க்கை அம்மன், காளி போன்ற தெய்வங்கள் கோபக்காரர்கள் எல்லோ.. அதனால அவர்கள் உறைப்பு பிடிக்குமாம், உறைப்பு அதிகம் சாப்பிடுவோருக்கு கோபம் அதிகம் வருமாமே...

   பருப்பு வடைக்கு வெங்காயம் செத்தல் மிளகாய் கறிவேப்பிலை மூன்றும் போட்டேன் ஸ்ரீராம்... ஓ வெங்காயம் சேர்த்தால் படைப்பதில்லையோ?.. ஏன் கோயில்களில் சோறும் சாம்பாறும் படைப்பினமெல்லோ..

   Delete
  3. ஆமாம் நெல்லை. அவர்களை மாற்ற முடியுமோ.. எனக்கும் நம்பிக்கை இல்லைதான் என்ன செய்ய?

   Delete
  4. //பொதுவா நாம 'நல்ல நாட்களில்' வெங்காயம் உபயோகப்படுத்துவதில்லை. அதனால் உபயோகப்படுத்தும் நாட்களில் கடவுளை பட்டினி போடறோமோ//

   இப்போ ஒன்று நினைவுக்கு வருது, இப்படி படைக்கும் உணவுக்கு, உப்பும் சேர்க்கக்கூடாது என ஊரில் சொல்லக் கேட்டிருக்கிறேன்... கடவுள், தனக்கு எது பிடிக்கும் என மெனுச் சொன்னால் நமக்கு ஏனிந்தக் கஸ்டம்:)) ஹா ஹா ஹா.

   Delete
  5. ஆஆஆஆஆ ஸ்ரீராம் முழிச்சிட்டார்ர் ஹா ஹா ஹா... ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நம்பிக்கை , மற்றும் சின்ன வயசில கடைப்பிடிச்ச சம்பிரதாயங்களை இலகுவில் விட்டிட முடியாது ஸ்ரீராம், அதனால அவரவரின் நம்பிக்கையையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேணும் எனத்தான் நான் நினைப்பேன்.

   Delete
  6. //இப்படி படைக்கும் உணவுக்கு, உப்பும் சேர்க்கக்கூடாது // - இதுக்கு அர்த்தம் என்னன்னா, நீங்க கடவுளுக்கு நீங்க செய்த உணவைப் படைத்த பிறகு, சாப்பிடும்போது அடடா சுண்டலுக்கு உப்பு இல்லையே, இதுல சர்க்கரை கம்மியாயிடுச்சே என்று கண்டுபிடித்து பிறகு நீங்க சாப்பிடும்போது அதனைச் சேர்க்கக்கூடாது. கடவுள் என்ன சாப்பிட்டாரோ அதையே பிரசாதம் என்று நீங்க சாப்பிடணும் என்பதுதான்.

   Delete
  7. //கடவுள் என்ன சாப்பிட்டாரோ அதையே பிரசாதம் என்று நீங்க சாப்பிடணும் என்பதுதான்.//
   ஹா ஹா ஹா கர்ர்ர் நெ.தமிழன்:)) அப்படி இல்லை, பிறகு நாங்கு நாக்குக்கு ருசியா உப்புப் போட்டுச் சாப்பிடலாமாம்:)) ஹா ஹா ஹா:)).. மீள் வருகைகளுக்கு மிக்க மிக்க நன்றி நெ.தமிழன்.

   Delete
  8. அதிரா சொல்லுவது சரியே. சாஸ்திர ரீதியாக வழிபாடுகள் செய்து வழிபடுகிறவர்கள் உணவில் உப்பு இல்லாமலே நிவேதனம் செய்வார்கள். வெறும் சாதம் மட்டும் அல்லது வெல்லம் போட்ட பாயசம், சர்க்கரைப் பொங்கல் என! பருப்பு வைத்தால் கூட உப்பில்லாமல் நிவேதனம் செய்து பின்னர் சாப்பாடுக்குப் போடும்போது உப்புச் சேர்ப்பதும் உண்டு. அப்படியே உப்பில்லாமல் பருப்பை வைத்தால் பாயசத்துக்குப் பக்கத்தில் வைக்கணும் என்பார்கள். உப்புப் போட்ட பருப்பெனில் இலையின் மேல்பக்கம் வைக்கணும். உப்புப் போட்ட பதார்த்தங்கள் எல்லாம் இலையின் மேல் பக்கம். உப்பில்லாத பாயசம், அன்னம், தித்திப்பு பக்ஷணங்கள் இலையின் கீழ்ப்பக்கம். இதை இன்னொரு விதமாகச் சொல்லுவதும் உண்டு. ராமனும் அனுமனும் ஒரே இலையில் உணவு உண்ணும்போது வானரங்களின் சுபாவத்திற்கு ஏற்ப அனுமன் மேல் இலையில் உள்ள காய்கள், பருப்பு என எடுத்து உண்ண, ராமன் கீழ்ப் பக்கம் உள்ள அன்னம், பக்ஷணங்கள் எனச் சாப்பிட்டார் என்பதும் உண்டு.

   Delete
  9. ஆஆஆஆஆஅ கீசாக்கா பார்த்தீங்களோ.. இன்னும் உரக்கச் சொல்லுங்கோ :)) சத்தம் கேட்ட்டு நெ.தமிழன் நித்திரையால எழும்புவார்:)) ஹா ஹா ஹா அவர் ச்சும்மா சைவம் என்கிறார் ஆனா அதிராவுக்குத் தெரிஞ்ச சாஸ்திர விதிமுறைகள்கூட அவருக்கு தெரியாதூஊஊஊ:)).. ஹா ஹா ஹா ஹையோ தெரியாமல் ஜொள்ளிட்டேன்ன் படிச்சதும் கிழிச்சு அங்கு வந்திருக்கும் மோடி அங்கிளின் பொக்கட்டுக்குள் போட்டிடுங்கோ கீசாக்கா பிளீஸ்ஸ்ஸ்:))..

   கீசாக்கா அம்பேரிக்காவில் இருப்பதால் இம்முறை அடிக்கடி இங்கு வந்திருக்கிறீங்க.. அப்போ தொடர்ந்து அங்கேயோ இருங்கோ.. இந்தியாவில மழை முடியும் வரை. மிக்க நன்றி கீசாக்கா மீள் வருகைகளுக்கு.

   Delete
  10. ஓரளவுக்கு உண்மைஅதிரடி, அங்கே முழுப்பொறுப்பும் எங்களுடையது. இங்கே அப்படி இல்லை அல்லவா? அதனாலும் நேரம் கிடைக்கிறது. மத்தியானம் அங்கே அதிகம் உட்கார முடியாது. இங்கே உட்காருகிறேன்.

   Delete
  11. நல்லது கீசாக்கா.. இப்படிப் போகும்போதுதான் ரெஸ்ட் கிடைக்கும்....

   இந்த ரெயின் புறப்பட்டுவிட்டது கீசாக்கா:).. புது ரெயின் வந்து நிக்குது இப்போ ஸ்டேசனில்:)..

   Delete
  12. https://anmikam4dumbme.blogspot.com/2012/09/blog-post_17.html இன்று தற்செயலாக இந்தப் பதிவு காணக் கிடைத்தது. யாரோ சந்தேகம் கேட்டிருப்பாங்க போல! இது நான் சொன்னதை விட இன்னமும் authenticated post. உப்புப் பற்றிய நெல்லைத் தமிழரின் சந்தேகம் தீரும் என நம்புகிறேன்.

   Delete
 22. காணொளி அழகாய் இருக்கிறது.   அருகில் ரயில்நிலையம் இருக்கிறதோ....  மெதுவாய்ச் செல்கின்றனவே...  

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ் கரெக்ட்டாக் கண்டு பிடிச்சிட்டீங்களே.. ஸ்ரேஷனுக்கு அருகில்தான் ஹொட்டேல்..

   Delete
 23. இரண்டாவது காணொளி நன்றாய் இருக்கிறது.   கார்களெல்லாம் விளையாட்டு பொம்மைகள் போல....   மிக சிறிய (விமானப்) பயணமோ....

  ReplyDelete
  Replies
  1. ஆகச் சிறிய விமானம் என்றில்லை.. சின்னதுதான்.. பொதுவா அமெரிக்கா கனடா எனில் சின்னப் பிளேன்கள்தான்.. 2..2 சீட்கள் மட்டுமே.

   Delete
  2. பஸ் மாதிரி, ஆனா கொஞ்சம் நீளம் .. அவ்ளோதேன்ன்ன்:))

   Delete
  3. புரிந்தது. நீளம் இல்லாமல் இருக்குமா என்ன!

   Delete
 24. ஊஇ ஊகு ஆகியவற்றை ரசித்தேன்.  

  ReplyDelete
  Replies
  1. இன்று கொஞ்சம் பிஸிபோல இருக்கிறீங்க:)..

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
  2. //இது ஒரு அனுபவம்!//
   எது? புதன்கிழமையோ?:)

   Delete
  3. இல்லை, இன்றைய இரவு அனுபவம். அடிக்கடி நிகழும் ஒரு சம்பவம்.. பயம் கலந்த அனுபவம். சற்று திகிலும்!

   Delete
  4. //பயம் கலந்த அனுபவம். சற்று திகிலும்!//
   என்ன இப்படிச் சொல்றீங்க சிம்பிளாக? எனக்கு இப்போ பயம்மாக் கிடக்கே... ஏதேதோ நினைவுகள் வந்து போகுதெனக்கு...

   Delete
  5. என்னாச்சு ஸ்ரீராம் என்னாச்சு மியாவ் எனக்கு ஹெட் டெயில் புரியலை !!!

   Delete
  6. தெரியவில்லை அஞ்சு, ஆனா பயப்பிடும்படி ஏதும் இல்லை என்பது மட்டும் தெரியுது, அதனால இங்கு விளக்கம் கேட்கவில்லை, ஒரு வியாழன் பதிவில் எப்படியும் சொல்லுவார் என நினைச்சு பேசாமல் இருந்தேன்.

   Delete
  7. ஸ்ரீராம் அந்தக் கனவா? முன்பு ஒரு முறை சொல்லியிருந்தீங்களே!! அந்தக் கனவா பாம்பு..க் கனவு....அதுவா...

   கீதா

   Delete
  8. ///அந்தக் கனவா பாம்பு..க் கனவு....அதுவா...///
   அவர் டொல்ல மாட்டாராம் கீதா:))..

   Delete
 25. அழகான படங்கள். அதிலும் 1,3,4 வது படங்கள் சூப்ப்ப்ப்பர். சைவபூஸார் அழகா இருக்கார். படத்தில் விளக்கு ஏன் திருப்பி வைத்து இருக்கீங்க. அல்லது படத்துக்கு போஸ் கொடுக்கவா.. அழகான விளக்கு. ம்க்கும்.. உங்களுக்கு குண்டுதோசை பிடிக்குமென்றா சொல்லவேண்டியதுதானே..அதென்ன பக்கத்து இலைக்கு பாயாசம்.....
  இந்தமாதிரி சின்ன சின்ன பொம்மைகள்,கடவுளர் உருவகுட்டிசிலைகள் கொண்டாட்டங்களில் கொடுப்பது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் உறவு வீட்டுதிருமணத்தில் நிறைய கிடைத்தது. அழகா இருக்கு துர்க்கை அம்மன். உங்க படத்தில் வலதுபக்கத்தில் இருப்பது பிள்ளையார்தானே(ஊஞ்சல் மாதிரி).என்னிடமும் இருக்கு.
  இப்ப குளிர் தொடங்கிட்டுதல்லோ சிட்டுகூருவிகள்,வேறு பறவைகள் எல்லாம் வீட்டிற்கு வருகினம். புறா இங்கு பார்ப்பது சிட்டியில்.. ரெஸ்டோரண்ட் பக்கம் நிறைய பயமில்லாமல் நிற்பினம்.
  ப்ளைட் ல் இருந்து எடுப்பது அதுவும் பச்சைபசேல் என இருந்தால் வடிவா இருக்கும் பார்க்க.. ஆ..கனடா டொல்லை தொடருமாஆஆஆ...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ.. உங்கள் நவராத்திரி எப்படிப் போகிறது? இன்று நான் கெளப்பி சுண்டல் குடுத்தேன் லக்ஸ்மிக்கு:))..

   //படத்தில் விளக்கு ஏன் திருப்பி வைத்து இருக்கீங்க//
   அது கிழக்குப் பார்க்க வேண்டுமாமே...

   //அல்லது படத்துக்கு போஸ் கொடுக்கவா.//
   சே..சே அப்படி இல்லை.

   //உங்களுக்கு குண்டுதோசை பிடிக்குமென்றா சொல்லவேண்டியதுதானே..அதென்ன பக்கத்து இலைக்கு பாயாசம்.....//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஊரில் இப்படி குண்டுத் தோசை வைத்ததில்லை அம்முலு, ஆனா இங்கு சிலர் சொன்னார்கள் புளிச்சாதம் எல்லாம் துர்க்கை அமனுக்கு குடுக்கலாம் என.. அத்துடன் ஊரில் நாம் கேசரி லட்டு முறுக்கு என நவராத்திரிக்கு செய்து படைப்பதில்லை, ஆனா அதுவும் படைக்கலாம் என்கிறார்கள்...

   Delete
  2. //இந்தமாதிரி சின்ன சின்ன பொம்மைகள்,கடவுளர் உருவகுட்டிசிலைகள் கொண்டாட்டங்களில் கொடுப்பது வழக்கமாகிவிட்டது.//

   அதேதான், பார்க்க மிகவும் அழகாக கல்லெல்லாம் ஒட்டி இருக்குது,

   போன வருடம் நான் ஊஞ்சல் பிள்ளையார் படம் போட்டெனே அப்போ நீங்க சொன்னீங்க உங்களிடமும் இருக்கென.. அதிலிருந்து அப்பிள்ளையாரைப்பார்க்கும் போது உங்கள் நினைவு வரும்:)..

   //ஆ..கனடா டொல்லை தொடருமாஆஆஆ..//
   நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஹா ஹா ஹா..

   மிக்க நன்றிகள் அம்முலு.

   Delete
  3. /கெளப்பி சுண்டல்//
   அய்யூ சாமீ :) இனிமே இந்த மாதிரி விஷயங்களை எழுதும்ப்போது ஆங்கிலத்திலும் எழுதுங்க ..15 நிமிஷமா kelappi கெளப்பி சுண்டல்னா இன்னனு மண்டை கிறுகிறுத்துச்சு :) அது cow pea சுண்டலா அவ்வ்வ் 

   Delete
  4. //15 நிமிஷமா kelappi கெளப்பி சுண்டல்னா//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுக்குத்தான் டமில்ல டி எடுத்திருக்கோணும் எனச் சொல்றது:)).. ஒளவைப் பாட்ட்டியை சிலர் ஒ..ள.. வைப் பாட்டி எனவும் வாசிப்பதுண்டு.. அப்பூடி எல்லோ வாசிச்சிருக்கிறீங்க இதை கர்ர்ர்:)).. அது கெளபி... ஒரு சொல்லுத்தான் வரும்... black eyed beans:))...
   இப்பூடி எல்லாம் நான் எழுதுவதால உங்கள் ஆராட்சி அறிவு கூடுதெல்லோ அஞ்சு:)) ஹா ஹா ஹா சரி சரி நைட் இல் சண்டை பிடிக்கக்கூடாதாம்:))..

   நெல்லைடத்தமிழன் பிளீஸ்ஸ் பகலில வந்து இங்கு நடப்பவற்றைக் கொஞ்சம் பாருங்கோ கெ.ள..பி யாம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா:))

   Delete
  5. அடக்கடவுளே.... அஞ்சு போலவே வாசித்துவிட்டேனேஏஏஏ.... 😀 🤔 கெளப்பி சுண்டல்... நானும் நினைத்தேன் இது என்ன கெளப்பி சுண்டல் என.... அது கெளபி என வரும். ப் போடுவதில்லை..

   Delete
  6. நான் ஜொன்னனே:)) எனக்கு எதிரி வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

   ப் போட்டது ஒரு குத்தமாய்யா?:)) ஹா ஹா ஹா

   Delete
 26. இந்த பாட்டும், படமும் பிடிக்கும். இரண்டு குழந்தைகளும் , மற்றும் படத்தில் எல்லோரும் நன்றாக ந்டிப்பார்கள். பாட்டில் ஊடல், அன்பு எல்லாம் இருக்கும்.


  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. ஆ பாட்டும் படமும் பிடிகுமோ நன்றி நன்றி.. எனக்கும்தான்.. குடும்பத்தில் நடக்கும் செல்லச் சண்டைகளையும் அதைக் கையாளும் விதமும் மிக அழகாக இருக்கும் இப்படத்தில்.

   Delete
 27. படங்கள், காணொளி எல்லாம் மிக அருமை.
  சைவ பூனை அழகு, குண்டு தோசை படம் பனியாரம் போல இருக்கே!
  பருப்பு வடை, பழங்கள் வெட்டி வைத்து நிவேதனம் அழகு.
  இலங்கையில் எல்லா கோவில்களிலும் இப்படி பழத்தட்டு வெட்டி வைத்து விற்பதை முதல் முதலில் பார்த்தேன். கதிர்காமத்தில் முதன் முதலில் பார்த்தேன்., பிறகு முன்னேஸ்வரம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் குழிப்பணியாரம் தான், நாங்கள் குண்டுத்தோசை என்போம் கோமதி அக்கா.

   ஓ நீங்கள் இலங்கை போனமையால அங்குள்ள நடைமுறையையும் பார்த்திருக்கிறீங்க.

   Delete
 28. ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 29. படங்கள் எல்லாம் அழகு. காணொளி நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 30. என்னைக் கொஞ்சம் மன்னிச்சுக்கோங்கோ எல்லோரும்... வந்திருக்கும் எல்லோருக்கும் நன்றி. நைட் வருகிறேன் பதில்கள் தருவதற்கு.. அதுவரை பொறுத்துக் கொள்ளவும்...

  ReplyDelete
 31. // குண்டுத்தோசை செய்து குடுத்தேனாக்கும்:))// - ஏஞ்சலினுக்கு சாமர்த்தியம் போதாது. அஞ்சப்பம் கருப்பா கருகினபோது, ஜாமூன், காலா ஜாமூன் மாதிரி காலா அஞ்சப்பம் செய்துபார்த்தேன், ஆனா சுவை அவ்வளவு நன்றாக வரலை என்று எழுதத் தெரியாம, தான் சரியா அஞ்சப்பம் செய்யலை என்று உண்மையை ஒத்துக்கொண்டுவிட்டார்.

  இப்போ பாருங்க... அதிரா... கார அப்பம் செய்து, அது காத்துப் போன பலூனாக சவக்னு படுத்த உடனே... நம்மிடம் குண்டு தோசை செய்துகொடுத்தேனாக்கும் என்று கூசாம பொய் சொல்றாங்க. நாமும் அதைப் படித்துவிட்டு.... கண்டுக்காம போயிடமுடியுமா?

  ReplyDelete
  Replies
  1. இப்போவாது  நம்புங்க ..ஏஞ்சல் ஒரு அப்பாவி 

   Delete
  2. அப்புறம் நானா செய்தது அச்சப்பம் அச்சப்பம் அச்ச்சப்பம் .ஒரு அப்பத்துக்கே ஆடிப்பிட்டேன் இதில அஞ்சப்பமா :))))))))))

   Delete
  3. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

   //ஆனா சுவை அவ்வளவு நன்றாக வரலை என்று எழுதத் தெரியாம//
   ஹா ஹா ஹா இந்த தெக்கினிக்கு வசனத்தை எங்கோ மசால வடையில பார்த்தமாதிரி இருக்கே:))..

   //நம்மிடம் குண்டு தோசை செய்துகொடுத்தேனாக்கும் என்று கூசாம பொய் சொல்றாங்க//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) துர்க்கை அம்மனே மூன்று தோசை சாப்பிட்டாக:)) நீங்க இபூடிச் சொல்லலாமோ:)) ஹா ஹா ஹா..

   //நாமும் அதைப் படித்துவிட்டு.... கண்டுக்காம போயிடமுடியுமா//

   நான் சொன்னனே.. சுவாமி பறவாயில்லை என விட்டாலும், ஐயர் விடமாட்டராம்
   என அம்மம்மா பயமொயி:)) சொல்லுவா கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))

   Delete
  4. ///AngelWednesday, October 02, 2019 8:27:00 pm
   இப்போவாது நம்புங்க ..ஏஞ்சல் ஒரு அப்பாவி//

   ஆஆஆஆஆஆ இதுக்கு மேலயும் மீ இங்கின இருப்பேனோ:)) விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ:)).. கிடைச்ச சைக்கிள் ஹப் ல பிளேன் ஓட்ட்டுறாவே கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

   Delete
  5. ஏஞ்சலின்.. சும்மா ஓட்டினாலும், அச்சப்பம் நல்லா இருந்தது. எனக்கு அச்சப்பம் ரொம்பப் பிடிக்கும். இப்போதான் எண்ணெய் என்பதால் சாப்பிடுவதில்லை. உங்க கணவர் செய்தது ரொம்ப நல்லா வந்திருந்தது.

   இங்கயும் அதிரா செய்த குழிப் பணியாரமும் நல்லா வந்திருக்கு. அதை ஓசைனு சொன்னதால ஓட்ட வேண்டியதாப் போச்சு

   Delete
  6. அச்சு தடவை அஞ்சு (;இப்படித்தானே உங்களை சிலர் கூப்பிடறாங்க) அச்சப்பம் செஞ்சதால் அது அஞ்சப்பம். இந்த விளக்கம் போதுமா?

   Delete
  7. ஆஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் இருந்தாப்போல புகழ்றார்ர்:)) இது நாட்டுக்கு நல்லதில்லையே:)) எதுக்கும் உஷாராகவே இருக்கோணும் இப்போ ஹா ஹா ஹா... நீங்க எப்பூடி ஓட்டினாலும் நான் இம்முறையும் மாவிளக்கு செய்வேனாக்கும்:)) இது அந்த அஞ்சு வீட்டு அச்சப்பம் மீது ஜத்தியம்ம்ம்:))

   Delete
 32. //நெல்லைத்தமிழன் யூம்ம்ம்ம் பண்ணிப்// - அதுக்குத்தான் வழியில்லாம படத்தின் தரத்தைக் குறைத்து சின்னதாப் போட்டிருக்கீங்களே. பெருசா போட்டிருந்தீங்கன்னா, எந்த வடையுமே வட்டமா இல்லையே.. கம்ப்யூட்டர் டிசைனா என்று கேட்டிருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. ஓ ஏன் படம் பெரிதாகுதில்லையோ? நான் ஒண்ணும் பண்ணல்லியே.. என் கொம்பியூட்டரில் பெரிசா வருதே.. துர்க்கை அம்மன் என்னைக் காப்பாத்திப்போட்டா:)) ஹா ஹா ஹா.

   Delete
 33. குட்டி அம்மன் சிலை, சங்கு மாதிரி இருக்கும் பிள்ளையார் சிலை - மிக அருமை.

  உங்க சன்னிதியில் பிரசாதங்களோட படங்களை ரசித்தேன். நல்லா இருக்கு.

  உங்கள் விரதம், பாராயணை (நல்லா உத்துப் பாருங்க பாறாயணை என்று பிராண்டாதீங்க தமிழை) மனதுக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் உண்டுபண்ணியது. நல்லா இருங்க. உங்கள் குடும்பத்துக்கும் இந்த பக்தி நல்லவைகளைக் கொண்டுவரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நெல்லைத்தமிழன், எனக்கு இப்படி விதம் விதமாக சுவாமித் தட்டை அலங்கரிப்பது பிடிக்கும்... ஊர் எனில் இன்னும் நிறையப் பூக்களால் அலங்கரிக்கலாம்.

   நவராத்திரி ஆரம்பிச்சாலே எங்கள் வீட்டில் ஒரு குட்டித் திருவிளா போல இருக்கும்.. 9 நாட்களும் ஏதாவது செய்து படைத்து பிள்ளைகளையும் தேவாரம் சொல்ல வைப்போம்...

   Delete
 34. பொதுவா ஆப்பிளை கட் பண்ணி வைக்கமாட்டாங்க. அது காற்றுடன் வினை புரிந்து மேலே ஒரு மாதிரி ஆகிடும்.

  ReplyDelete
  Replies
  1. சுவாமிப்படத்துக்கு படைக்கும்போது, பழத்தைக் கட் பண்ணாமல் வைக்கலாமோ?.. நாங்கள் வெட்டி வைத்தே பழக்கப்பட்டு விட்டதனால், தெரியவில்லை.

   Delete
 35. //நித்திரைத்தூக்கத்தில் என்னமோபோல//

  ஏஞ்சலின்... இதைப் படித்ததும் எனக்கு செந்தில் கவுண்டமணியிடம் 'இந்த பூவும் புஷ்பமும்' என்று சொல்லும்போது, 'ஏண்டா.. பூவும் புஷ்பமும் வேற வேறயா' என்று கேட்பது நினைவுக்கு வந்தது.

  நித்திரை, தூக்கம் இரண்டுக்கும் வித்தியாசம் அதிராக்கு மட்டும்தான் தெரியும் போலிருக்கு

  ReplyDelete
  Replies
  1. இது off ஆகுது அணையுது :) ஹாஹாஹா 

   Delete
  2. ஹா ஹா ஹா.. நடு செண்டர் மாதிரி:))..

   சரியான விளக்கம் சொல்லட்டோ.. என்னைபொறுத்து நித்திரை எனில் டீப் ஸ்லீப்...
   தூக்கம் எனில்.. பஸ்ல காரில போகும்போது தூங்கி விழுவது... இது டப்பா?:)...

   /AngelWednesday, October 02, 2019 8:25:00 pm
   இது off ஆகுது அணையுது :) ஹாஹாஹா//
   நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது இப்படி ஒருநாள் அப்பா என்னிடம் ஒரு விடுகதைபோல கேட்டார்... ஹா ஹா ஹா.

   Delete
 36. தசாங்கம் ஏற்றி வைக்க ஆஷ்டிரேயைப் பயன்படுத்திய முதல் ஆள் நீங்கதான் அதிரா.

  ஏன் துர்க்கையையும் சிரிக்கும் புத்தரையும் பிளாஸ்டிக் கவரில் சிறைப்படுத்தி வச்சிருக்கீங்க?

  குழிப்பணியாரம் அழகா இருக்கு. தைரியமா நீங்க சொல்லியிருக்கலாம். ஏன் பயந்துக்கிட்டு அதை தோசை என்று சொன்னனீங்க?

  ReplyDelete
  Replies
  1. என்னதூஉ பூஸ் தம்மெல்லாம் அடிக்கிறதா :)  அய்யயோ ஹஅய்யய்யயோ  ash tray ??? எனக்கு இதெல்லாம் தெரியாது .நல்லவேளை நெல்லைத்தமிழன் ஹெல்ப்பால் தெரிஞ்சுக்கிட்டோம் .

   Delete
  2. //தசாங்கம் ஏற்றி வைக்க ஆஷ்டிரேயைப் பயன்படுத்திய முதல் ஆள் நீங்கதான் அதிரா.//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் சொன்னேனே நெல்லைத்தமிழன் யூம்ம்ம்ம் பண்ணி எதையாவது கண்டு பிடிப்பார் என ஹா ஹா ஹா... அது எப்பவோ கிரிஸ்மஸ்க்கு.. ஒரு சோடி ஆஷ் ட்ரே கிடைச்சுது.. அப்போ சும்மா இருக்கே என இப்படி பாவிக்கிறேன், கையில் எடுத்துக்கொண்டு திரிஞ்சு வீடெல்லாம் காட்டலாம் சுடாது.. அத்தோடு பெரிய இடமும் பிடிக்காது..

   Delete
  3. //தசாங்கம் ஏற்றி வைக்க ஆஷ்டிரேயைப் பயன்படுத்திய முதல் ஆள் நீங்கதான் அதிரா.//

   அது துர்க்கையைக் கழட்டி விட்டேன் பின்னர்:).. இபோதானே கனடாவிலிருந்து கொண்டு வந்தோம். லாபிங் புத்தா வுக்க்கு கவர் இல்லையே, ட்ரேயில வச்சிருக்கிறோம். ஆனாலும் நீங்க ஒன்றைக் கவனிக்கவிலை:)).. புத்தருக்குப் பின்னால் ஓம் இருக்கு.. அதன் பின்னால் ஒரு செம்பு கவிட்டிருக்கே:)).

   //ஏன் பயந்துக்கிட்டு அதை தோசை என்று சொன்னனீங்க?//
   ஹா ஹா ஹா கர்ர்ர்:) அதை நாங்க அப்பூடித்தான் சொல்லுவோமாக்கும் .. ரெசிப்பி ஒன்றுதானே... ஹா ஹா ஹா.

   Delete
  4. //AngelWednesday, October 02, 2019 8:24:00 pm
   என்னதூஉ பூஸ் தம்மெல்லாம் அடிக்கிறதா :)//

   ஆஆஆஆஆஆஆஆஅ எது தெரியொணும் என நினைப்பேனோ அது தெரியாமல் போயிடும்:)) எது தெரியக்கூடாதென நேர்த்தி வைப்பேனோ அது கரீட்டாத் தெரிஞ்சிடுதே அஞ்சுவுக்கு:)).. இனிமேல் மேரி மாதாவுகுத்தான் நேர்த்தி வைக்கப் போறேன்:)).. ஹா ஹா ஹா...

   //நல்லவேளை நெல்லைத்தமிழன் ஹெல்ப்பால் தெரிஞ்சுக்கிட்டோம் .//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதில கெல்ப்பாமே:))

   Delete
 37. கொஞ்சிப் பேசிட வேணாம் பாடல் நல்லா இருக்கு. பாவம் .... ரம்யா நம்பீசன்(னும்) குண்டாயிட்டாங்க. ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆஅ அதிசயம் நெல்லைத்தமிழனுக்கும் பாட்டுப் பிடிச்சுப் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்..:).

   //பாவம் .... ரம்யா நம்பீசன்(னும்) குண்டாயிட்டாங்க. ஹா ஹா//
   ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம்:)) ஹா ஹா ஹா

   அனைத்துக்கும் மிக்க நன்றிகள் நெ.தமிழன்.

   Delete
 38. ஹலோ  மியாவ் நீங்க தூக்கத்திலே பேசினாலும் முழிச்சி பேசினாலும் ஒரே மாதிரிதான் இருக்கு :) cn டவர் ப்புறம் எறும்பு மாதிரி ஊரும் கார் எல்லாம் தெரியுது :)அந்த பிளேனை லேண்ட் ஆக விடுங்களேன் :) உங்க குரல் கேட்டு பிளேன் மேலேறப்போகுது :))ஹாஹ்ஈஈ

  ReplyDelete
 39. //ஹலோ மியாவ் நீங்க தூக்கத்திலே பேசினாலும் முழிச்சி பேசினாலும் ஒரே மாதிரிதான் இருக்கு :)//
  [im]http://www.likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg[/im]..


  //அந்த பிளேனை லேண்ட் ஆக விடுங்களேன் :) உங்க குரல் கேட்டு பிளேன் மேலேறப்போகுது :)//
  karrrrrrrrrrrrrrr:)) ஹா ஹா ஹா என் சத்தம் கேட்டுத்தான் பிளேனை லாண்ட் பண்ணினார் பைலட்:)) இல்லை எனில் ஐஸ்லாண்டுக்கு விட்டிருப்பார் மறந்து போய்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அஞ்சு.

  ReplyDelete
 40. இனிய காலை வணக்கம் அதிரா....இதனை நீங்கள் நித்திரையிலிருந்து வந்தப்புறம் தானே பார்ப்பீங்க அதான்..

  விரிவா அடிக்க அப்புறம் வரேன்...எப்படியும் லேட்டாகிப் போச்சு....படங்கள் பார்த்தேன் செமையா இருக்கு...இப்ப ஆஜர் வைச்சாச்சு

  இங்கு இப்ப காலையில் வரும் போஸ்டுக்கு ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊ சொல்ல வேண்டுமல்லோ அதான் ஓடுகிறேன்....ஹிஹிஹிஹிஹி....துளசியின் கமெண்டையும் போட்டுட்டு போறேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ.. கை நலமானபின் நீங்கள் போடும் முதல் கொமெண்ட் இது:)).. இனிமேல் கை நலமாக இருக்கோணும் என மேல்மருவத்தூர் வைரவை வேண்டிக் கொள்கிறேன்:))..

   நேற்று நீங்க என்பக்கம் வரமுடியவிலை என தேம்ஸ்கரையிலிருந்து பேசியதை, மீ ஒட்டுக் கேட்ட்டுவிட்டேன்:)) ஹா ஹா ஹா அதனாலென்ன கீதா, ஸ்ரீராம் பக்கம் மட்டும்தான் உடனுக்குடன் ஓடும் வேலை, டெய்லி போடுவதால், இங்கெல்லாம் அப்படி இல்லைத்தானே.. அதனால உடனே வராவிட்டாலும் ரெயின் நிற்கும்:)..

   ஆனா இம்முறை ரெயினை டக்கென ஸ்ராட் பண்ணலாம் எனும் ஆசை இருக்கு:) பார்ப்போம் விதி என்ன சொல்லப்போகிறது என்பதை:).

   //இங்கு இப்ப காலையில் வரும் போஸ்டுக்கு ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊ சொல்ல வேண்டுமல்லோ அதான் ஓடுகிறேன்.//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் எப்பவாவது ஜம்ப் ஆவேன் அங்கு:)) அதனால ஜாக்க்ர்ர்த்தையா இருங்கோ ஹா ஹா ஹா.

   Delete
  2. Trainஐ டக்கென ஸ்டார்ட் பண்ணிட்டு வேஷ்டி கட்டுன பசங்க, கணவர் படங்களை போட மறக்காதீங்க, விருப்பம் இல்லைனா முகத்தை டிஜிடைஸ் பண்ணிக்கோங்க

   Delete
  3. ///rainஐ டக்கென ஸ்டார்ட் பண்ணிட்டு வேஷ்டி கட்டுன பசங்க, கணவர் படங்களை போட மறக்காதீங்க,//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க முதலில் கோபு அண்ணனோடு எடுத்த செல்பியை எங்களுக்குக் காட்டுங்கோ:))[[[முகத்தை மறைச்சுப்போட்டு:)) ஹா ஹா ஹா:), முகத்தை கோபு அண்ணன் மெயிலில் அனுப்புவார் என்பது வேறு விஷயம்:))]].. உசுப்பேத்தி உசுப்பேத்தியே அதிராவின் சுயசரிதம் அறிஞ்சிடுறார் ஹா ஹா ஹா:))..

   ரெயின் இம்முறை உலக வரலாற்றில் முதல் தடவையாக இப்பவே ஸ்பீட் எடுக்கப் போகுது:))..

   என்னா ஸ்பீட்டு என நீங்களெல்லாம் வேர்க்க விறுவிறுக்க:) வெலவெலத்துப் பார்த்துக் கொண்டு நிக்கப்போறீங்க.. ரெடியாகுங்கோ:)) ஹா ஹா ஹா:))

   Delete
  4. அதிரா... நான் என் படத்தை எ.பிக்கு கொடுத்து ஸ்ரீராம் வெளியிட்டுட்டார் (கடலுக்கு அடில எடுத்த போட்டோ. லிங்க் ஸ்ரீராம்ட கேளுங்க இல்லை நீங்களே பார்த்துக்கோங்க). அவ்ளோதான். கோபு சாரோட எடுத்த போட்டோல இருவரின் மனைவிகளும் இருக்காங்க. அதுனால வெளியிட சாத்தியம் இல்லை. ஹா ஹா.

   Delete
  5. ~நெ.தமிழன்..

   வெளியில எடுத்த போட்டோவையே போட முடியல்லியாம் இதில கடலுக்கடியில எடுத்ததாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. வடிவேல் அங்கிளின் கொமெடிதான் கண்ணுக்குள் வருது:)) ஆனா ஜொள்ள மாட்டனே:))

   Delete
 41. வெகுநாட்களாயிற்று பக்கம் வந்து. கீதாவினால் கருத்துகள் இங்கு அடிக்க முடியாமல் போனதால் என் கருத்துகளும் இல்லை.

  படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. முந்தைய போஸ்டும் பார்த்தேன் உங்கள் சுற்றுப் பயண படங்கள் எல்லாம். நான் இங்கெல்ல்லாம் செல்ல முடியாது உங்கள் வழியாக எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டேன்.

  மசால்வடை மிகவும் பிடிக்கும். எனக்குத் தானே அத்தனையும்? மசால் வடைதானே அது?

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. நீண்ட நாட்களின் பின்பு இங்கு இருவரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி.. உங்கள் போஸ்ட்ட்டும் தூசு தட்டி நீண்ட நாட்களாகின்றன, நாம் மறந்திடப்போறோம்:)) ஹா ஹா ஹா..

   பருப்பு வடை..
   மிக்க நன்றிகள் துளசி அண்ணன்.

   Delete
 42. யாரு பறக்கறாங்க நீங்க விட மாட்டேன்னு சொல்றீங்க ஹிஹிஹிஹி...சரி சரி தலைப்பு நல்லாத்தான் இருக்கு!! ஏதேனும் பாட்டோ...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்தப்பாட்டுத் தெரியாதோ கீதா..பேமஸ் படமாச்சே.. குரு படத்தில் வரும் பாட்டு..
   கம்ல்+ஸ்ரீதேவி
   பறந்தாலும் விடமாட்டேன்..
   பிறர் கையில் தரமாட்டேன்ன்ன்...

   .....
   அன்று நான் உன்னிடம் கைதி ஆனேன்..
   இன்றுநான் உன்னையே கைது செய்வேன்ன்...

   Delete
  2. தலைப்பு வச்சுட்டு ஶ்ரீதேவி படம் போடாம விட்டுட்டீங்களே as a tribute

   Delete
  3. ஹையோ அதிரா மீ பாட்டு பலதும் தெரியாது. அது காரணங்கள் பல...

   நேற்று போட்டிருந்த பாட்டு அப்போ கேட்க முடியவில்லை என்று இப்ப கேட்கலாம்னு வந்தா அந்தப் பாட்டை மாற்றிப் போட்டீங்க...

   இந்தப் பாட்டு மிகவும் பிடிக்கும் சித்திரைச் செவ்வானம் பாட்டு செம மிகவும் ரசிக்கும் பாடல்...

   ஹப்பா நான் எங்கு சென்றாலும் பிடித்துவிடுவீங்கனு தெரிஞ்சுருச்சு!! வராமல் பொனாலும் பிடிச்சுருவீங்கனு தெரிஞ்சுச்சு...ரொம்ப சந்தோஷம் அதிரா...நான் மீண்டும் இங்கு வந்து பதில் சொல்ல வேண்டும் என்ற அன்பிற்கு....இனி கண்டிப்பாக வந்திடுவேன்...பாருங்கோ...ஏஞ்சலை கண்டு பிடித்துப் போடுவது போல என்னையும் கண்டு கட்டி இழுத்திடுங்க பிரச்சனையே இல்லை. என்னோடு சண்டை போட்டாலும் அது அன்பன்றோ எனக்கு மிகவும் பிடிக்கும்!!! ஸோ இனி வந்திடுவேன் அதிரா...

   முன்பு ஓரிரு முறை வ்னதிருக்கும் நினைவு ஆனால் அடிக்கடி அல்ல. இனி வந்திடுகிறேன் அதிரா...நன்றி நன்றி உங்கள் அன்பிற்கு

   கீதா

   Delete
  4. என்ன நெல்லைத்தமிழன் டமால் என ஸ்ரீதேவியிடம் தாவிட்டாரே:)).. இப்போ போட்டிட்டால் போச்சு:)) ஆனா முந்தின ஸ்ரீதேவி அழகோ அழகு.. பின்னர் இப்ப்போ திரும்ப சினிமாவுக்குள் வந்தபோது.. அழகு போய் விட்டது.. தமிங்கிலிஸ் விங்கிலிஸ் என ஒரு படத்தோடுதானே ரி என்றி கொடுத்தா.. அதில் பார்க்க ஏதோ டயபட்டிக் பேசண்ட் போல இருந்தா...

   [im] http://1.bp.blogspot.com/-5HOb_SoNFRs/UNElBKQyBWI/AAAAAAAAaDE/sNFRwDI_DYU/s1600/tumblr_m15fomy4sj1r00jw4o1_r1_500.png[/im]

   Delete
  5. //நேற்று போட்டிருந்த பாட்டு அப்போ கேட்க முடியவில்லை என்று இப்ப கேட்கலாம்னு வந்தா அந்தப் பாட்டை மாற்றிப் போட்டீங்க...//

   ஹா ஹா ஹா அது கீதா, நான் புதுப்போஸ்ட் போட ரெடியாகி, பாட்டையும் மாற்றி விட்டேன், ஆனா பின்பு பப்ளிஸ் பட்டினை தட்ட நேரம் கிடைக்காமல் பிசியாகிட்டேன் ஹா ஹா ஹா...

   ஹையோ கீதா, நீங்க தப்பா புரிஞ்சிட்டீஇங்க கர்:)).. நான் சொன்னது, உங்கள் கொமெண்ட்ஸ் க்கு நான் குடுக்கும் பதில்களை நீங்கள் படிக்கோணும் என்பது மட்டுமே:)). ஏனெனில் நீங்களும் பல கேள்விகள் கேட்பீங்க, அதுக்கு நான் பதில் சொல்லுவேன், அப்போ அதை நீங்கள் படிக்காமல் போயிடுவதுபோல உள்ளுணர்வு சொல்லியது... அதனாலேயே சொன்னேன், மற்றும்படி நீங்கள் உங்கள் வசதிப்படி வாங்கோ அதில் எக்குறையும் இல்லை...

   Delete
 43. ஓ விரதம் தொடங்கிவிட்டது இல்லையா உங்களுக்கு....அப்ப நெல்லையை ஒரு வழி பண்ணிடுவீங்கனு சொல்லுங்க....கூடவே நாங்களும் அல்லோ ஹா ஹா ஹா ஹா ஹா

  பாராளுமன்றப் பகுதிப் படங்கள் அருமை முன்னரே கொஞ்சம் போட்டீங்களே...அது ஏரியா குளமா ? ரொம்ப அழகாக இருக்கிறது. அங்கெல்லாம் நீர் நிலைகள் எல்லாமே கொஞ்சம் சுத்தமாகத்தான் பராமரிக்கறாங்க..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //அப்ப நெல்லையை ஒரு வழி பண்ணிடுவீங்கனு சொல்லுங்க..//
   ஹா ஹா ஹா நீங்க மாத்தி எழுதிட்டீங்க:)) அவர்தான் என் படங்களை யூம் பண்ணிப் பண்ணி ஒரு வழி பண்ணிடுவார்ர்:)) இப்போ எல்லாம் அந்தர அவசரத்துகு ஒரு படம் பொட முடியுதோ?:)).. ஹா ஹா ஹா..

   அது ஒரு ஏரிபோல அழகாக கட்டியிருக்கினம்.. தலைநகரம் எல்லோ.. ரொம்ப சுத்தமாக இருந்தது.

   Delete
 44. பூஸார் கர்ம சிரத்தையாக விரதம் இருந்து பக்தி சிரத்தையாக வேஷம் ஹா ஹா ஹா செம க்யூட்!!!!!!!!!

  நம்ம பூஸார் ரொம்ப சமர்த்து பூஸாராக்கும் இந்த பூஸாரிடம் சொல்லி வையுங்கோ...அதிரா பூஸார் வேஷம் எல்லாம் போடமாட்டாரென்று!!!! ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அதிரா உண்மையைச் சொல்லட்டா இந்தப் பூஸாரைப் போல எங்க அதிரா நெற்றியில் பட்டை, ருத்ராட்ஷ மாலை என்று போட்டால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்து சிரித்துவிட்டேனாக்கும்....

   கீதா

   Delete
  2. //எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்து // - கே.பி. சுந்தராம்பாள் உங்க மனசுல வந்திருக்கும். அதுக்கு எதுக்கு சிரிக்கணும்? நியாயமா பார்த்தா 'ஞானப் பழத்தைப் பிழிந்து' என்ற பாட்டுதானே நினைவில் வந்திருக்கணும்?

   Delete
  3. ///அதுக்கு எதுக்கு சிரிக்கணும்? நியாயமா பார்த்தா 'ஞானப் பழத்தைப் பிழிந்து' என்ற பாட்டுதானே நினைவில் வந்திருக்கணும்?//

   இது பொருந்தும்:)) ஏன் தெரியுமோ.. ஞானி ஆகிட்டேன் எல்லோ அதிரா:)) ஹா ஹா ஹா.. ஞானி=ஞானப்பயம் சே..சே பழம்:))

   Delete
 45. ஹலோ பூஸார் நம்ம ஏஞ்சல் மே மே என்று கத்தவே மாட்டாரே!!! அவர் அதை மேய்த்து மேய்ப்பாரல்லோ!! கருணை கொண்டவர்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. Yeah geethaa. Even though I don't consume I had to cook for family .

   Delete
  2. ///அவர் அதை மேய்த்து மேய்ப்பாரல்லோ!! கருணை கொண்டவர்!!!//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பொறுங்கோ இண்டைக்கு அஞ்சுவை தேம்ஸ் கரைக்கு வாங்கோ வோக் போகலாம் என அன்பாக்:) கூட்டிக்கொண்டுபோய் புஸ்பா அங்கிள் கடையில மிதிவெடி வாங்கித் தீத்தாமல் ஓயமாட்டேன்:)) ஹா ஹா ஹா... அவ இப்போ என்னையும் சாப்பிட விடாமல் பண்ணும் சதிவேலையில் இறங்கிட்டா கீதா:)) மீ பாவம் எல்லோ ரொம்ப அப்பாவி:)) மட்டின்ரோல் சாப்பிடாமல் வயக்கெட்ட்டுப் போயிட மாட்டேன்ன்ன்?:)) ஹா ஹா ஹா.

   Delete
  3. யெஸ் ஏஞ்சல் தெரியும்....ஆனால் நம்ம பூசாரை ஓட்ட வேண்டமா?!!! அவர் வாலைப் பிடித்து இழுக்க கொஞ்சம் கையைப் பலப்படுத்திக் கொண்டு வந்திருக்கேனாக்கும்!!! ஹா ஹா ஹா

   அதிரா இப்ப நிஜமாவே ஏஞ்சலை நீங்க எப்படிக் கூட்டிக் கொண்டு போறீங்க தெரியுமா இந்த சேரனின் ஒரு படம் உண்டே அதுல பார்த்திபன் வடிவேலுவை கூட்டிக் கொண்டு போகும் போது வடிவேலு நினைத்துப் பார்ப்பாரே மே மே என்று ஹிஹிஹி...

   //அவ இப்போ என்னையும் சாப்பிட விடாமல் பண்ணும் சதிவேலையில் இறங்கிட்டா கீதா:))//

   ஹா ஹா ஹா அது!!!!!

   கீதா

   கீதா

   Delete
  4. //இந்த சேரனின் ஒரு படம் உண்டே அதுல பார்த்திபன் வடிவேலுவை கூட்டிக் கொண்டு போகும் போது வடிவேலு நினைத்துப் பார்ப்பாரே மே மே என்று ஹிஹிஹி...//

   ஹா ஹா ஹா குண்டக்க மண்டக்க:)) பல தடவை பார்த்தபடம்:)) ஹா ஹா ஹா..

   Delete
 46. ஊத்தப்பம் தானே அது?!!! அல்லது இலுப்பச் சட்டி தோசை!!! உங்கள் மொழியில் அது குண்டு தோசை!!!

  மசால் வடை/பருப்பு வடை? சின்ன வெங்காயம் போட்டீங்கதானே? இல்லை அதுவும் விரதமோ?!!!!

  நல்லாருக்கு. எனக்கு மிகவும் பிடிக்கும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது ஊத்தப்பம் இல்லை கீதா:)).. வெங்காயம் இல்லாமல் வடை சுடமாட்டேன், :)..

   Delete
  2. ஏஞ்சல் அது ஊத்தப்பா இல்லையாமே குண்டு தோசைக்கும் ஊத்தப்பத்துக்கும் என்ன வித்தியாசம் ஏஞ்சல் ஹையோ மீக்கு விளங்கலையே!!!

   வெனா இல்லாமல் வடை சுட மாட்டீங்க ஹைஃபைவ்!!! மீயும்...ஆனால் வீட்டில் வெ நா சாப்பிடாதோர் வந்தால் மட்டும்...போட மாட்டேன்...

   கீதா

   Delete
 47. குண்டு தோசையா அது? க்ளோசப்பில பார்த்தா வடிவேலு ஏதோ ஒரு படத்துல உச்சிக் கொண்டையோடு வருவாரே அப்படி கொண்டையோடு பர்கர் போல இருக்கு ஹீஹீஹீ....ஏஞ்சல் கரீக்டுதானே!!!

  கீதா

  ReplyDelete
 48. மிலிட்டரி பில்டிங்க், ஏர்போர்ட், ப்ளேன் பறத்தல் அப்புறம் ரயில் வீடியோ ப்ளேன் பறந்து கனடா நிலம் எல்லாம் செம அதிரா...நல்லாருக்கு ரசித்தேன்...

  அதுவும் ஃப்ளைட் லேன்ட் ஆகும் சமயம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்குவது லேன்ட் தெரிவது அப்புறம் டிங்க் டிங்க் சத்தம் அறிவிப்பு வருதுன்னு நினைக்கிரேன் அப்புரம் இறம்கும் போதும் ஸ்பீட் எடுத்து சக்கரம் தரையில் இறங்கும் சத்தம் எல்லாம் செம....ப்ளென் ரன்வேயில் ஓடுவது எல்லாம் செம....நானும் அப்படி ஒன்று எடுத்திருந்தேன் அதிரா புனாவுக்கு சென்ற போது....ஆனால் அந்த வீடியோ எங்கு போயிற்று என்று தெரியவில்லை...கேமராவில்.

  எல்லாமே ரசித்தேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ் நீங்க வீடியோவை முடிவுவரை பார்த்து ரசித்த விதம் அழகு கீதா....

   Delete
  2. அதிரா உங்கள் வீடியோ எல்லாமே முழுவதும் பார்த்து விடுவேன்...கணினி கோஆப்பரேட் செய்தால்!!!!!!!!!!!!!!!! 99% எப்படியேனும் பார்த்துவிடுவேன் அதிரா...இப்போது கூட அந்த வாஷிங்க்டன் புயல் வீடியோவும்....

   ரயில் பற்றி பேசியது அங்கு ஒரு ஏதோ ஒரு பில்டிங்க் என்று சொன்னது எல்லாமே...

   நன்றி அதிரா...

   கீதா

   Delete
  3. மீள் வருகைகளுக்கு நன்றி கீதா...

   Delete
 49. கடைசி குறிப்புகள் வரை எல்லாமே அருமை அதிரா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க நன்றிகள் கீதா.. துளசி அண்ணனுக்கும்.

   Delete
 50. வணக்கம் அதிரா சகோதரி

  (பழக்க தோஷம் சகோதரியை வெட்ட இயலவில்லை. கொஞ்ச நாட்களில் வெட்டி விட முயற்சிக்கிறேன்.)

  படங்கள், இடங்கள் என பதிவு மிகவும் நன்றாக உள்ளது. கொஞ்ச கொஞ்சமாக பிளைனில் ஏறி உங்களுடன் எல்லா இடத்தையும் பார்த்து விட்ட திருப்தி அந்த காணொளியில் முழுமையாக வந்தது.

  கடவுள்களுக்கு செய்து வைக்கப்பட்ட பிற(ரர்)சாதங்கள் நன்றாக இருந்தன. தோசைகளைப் பார்க்கும் போது சாப்பிடும் ஆசை வந்தது. எனக்கு இப்படித்தான் சற்று குண்டான தோசை என்றால் விருப்டம்.
  வடைகளும் நன்றாகவே இருக்கிறது. கொலு வைப்பதற்கு வாழ்த்துக்கள்.

  ஊசி இணைப்பு. ஊசிக்குறிப்பு அருமை. பாடல் எளிமை. அதை விட தங்கள் குரல் இனிமை.

  இந்த தடவை செம லேட். இருப்பினும் எனக்காக ஒரு பெட்டியுடன் ரயிலை காத்திருக்க அன்றே உத்தரவாதம் தந்து விட்ட தைரியத்தில் ஓடி வந்து ஏறியும் விட்டேன். இருப்பினும், ஆண்டவரே! இந்த கமலாக்காவை அதிரா லேட்டா வந்ததுக்காக திட்டிடாமல் கருணை காட்டுங்கோ..!!

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 51. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

  ரெயின் ஸ்பீட் எடுக்க முன் ஓடிவந்து ஏறிவிட்டீங்க, இல்லை எனில் ரெயின் புறப்பட்டிருக்கும்.. ஆஆஆ இதோ பச்சை சிக்னல் விழுந்து விட்டது:).. ரெயின் புறப்பட்டுவிட்டதே:)).... முழுக்க ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி கமலாக்கா.

  ரெயின் ஸ்பீட் எடுக்கிறது:).. அனைவருக்கும் நன்றி....

  ReplyDelete
 52. ஆஹா ...எல்லாமே வழமை போல அழகு அட்டகாசம் ...

  பாராளுமன்றம் படம் வெகு அழகு ...நீர் , மரம் , பசுமை , வெள்ளை ஆகாய நீலம் என ...


  சைவ பூனையார் ...சூப்பர் ..

  குட்டி கொலு ...வாவ் ...துர்க்கை அம்மன் cute ...
  அனுவுக்கும் ஆசை வருதே ..வைரவா இப்படி சேர்க்க ..


  வீடியோ ரசித்து பார்த்தேன் ....அதிரா..


  எப்படியோ கமலாக்கா பின்னாடி நானும் ஓடி வந்து ஏறிட்டேன் ...

  ReplyDelete
 53. படங்கள் அனைத்துமே அழகு. வாஷிங்டனிலிருந்து டொரண்டோ... கனடா பயணம் பற்றி படிக்க இதோ வந்து கொண்டிருக்கிறேன்.

  இரண்டு மூன்று வாரங்களாக இணையம் பக்கம் மிகக் குறைவாகவே வருகிறேன். பதிவுகளும் எழுதுவதில்லை. இன்று கொஞ்சம் ஓய்வு கிடைக்க, படிக்க விட்டுப்போன உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்துக் கொண்டிருக்கிறேன்.

  தொடரட்டும் பயணம். தொடரட்டும் பதிவுகள்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.