இப்போ, 8ம் திகதி முதல்... இங்கின தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆங்கிலப் படம். நேற்றுப் பார்த்தமா.. உடனேயே அதுபற்றி ஒரு விமர்சனம் எழுதோணும் எனும் ஆவல் தூண்டப்பட்டு விட்டது.
சரி படம் பற்றிய விமர்சனத்துக்கு முன்பு கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்கிறேனே.. ஏனெனில், எனக்கு படம் ஏன் பிடித்தது என்பதை நீங்க அறிய இது உதவிபண்ணுமெல்லோ:)... “இந்த விருப்பம்” உங்களுக்கு இல்லாவிடில், படம் பிடிக்காமலும் போகலாம்.. அதனாலயே முன்னறிவித்தல்..
எனக்கு விண்வெளி.. ஸ்பேஸ் புரோகிராம் எனில் கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி.[ இந்தத் தகவல் இங்கே பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும்:)] அங்கிருந்து சட்லைட்டில் படமெடுக்கும்போது, நம் உலகம் ஒரு புறம் தெரியும், சந்திரன் ஒருபக்கம் தெரியும்.. நட்சத்திரங்கள் கல்லுகள் என.. சுற்றிய வண்ணம் இருக்கும்.. அதை ரசிச்சே முடியாதெனக்கு. அவ்ளோ விருப்பம். அப்போ இப்படம் எனக்காகவே எடுக்கப் பட்டதுபோல:) என்னுள் ஒரு மகிழ்ச்சி:)..
சரி கதைக்கு வருகிறேன்ன்.. இதில் கதையே இல்லை:).. அதை விடுங்கோ.. தியேட்டருக்குள் போய் இருந்து பொப்கோனும் நச்சூஸ் சும்(nachos chips) வாங்கி சாப்பிட்டபடி, இருந்தமா.. அட்ஸ் ஓடிக்கொண்டிருந்துது. டக்கென ஸ்கிறீனை ஸ்ரொப் பண்ணி விட்டு.. தியேட்டரில் ஒருவர் வந்து எனவுன்ஸ் பண்ணினார்ர்.... அதாவது என்ன மெயினா சொன்னாரெனில்.. கொஞ்சம் பயமாக இருக்கும் காட்சிகள் எனில் கண்ணை மூடிடுங்கோ என. 3டி கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது, எல்லாமே நமக்கு கிட்ட வருவதுபோல இருக்குமெல்லோ..
அப்போ அப்படிச் சொன்னதும்.. கொஞ்சம் பயம் எனக்கு வந்திட்டுது என்றால் பாருங்கோவன்:).
சரி கண்ணாடி எல்லாம் போட்டுப் படம் பார்க்கத் தொடங்கியாச்சு...
ஸ்பேஸிலே ஒரு ஸ்பேஸ் ஷிப் நிற்கிறது.. அதில் சிலர் போயிருக்கிறார்கள்,ஒரு 6/7 பேர்தான். அவர்கள் அந்த ஷிப்பில் சில வேலைகள் செய்கிறார்கள், அதனை பூட்டி நேராக்குகிறார்கள். அந்த ஷிப் இருப்பது விண்வெளிதானே.. ஒரு பக்கம் உலகம் தெரிகிறது, சந்திரன் தெரிகிறது, கற்கள், உடைந்த சில துண்டுகள் பறந்த வண்ணமிருக்கின்றன. அதனுள் இவர்களும் பறந்து பறந்து பூட்டுகிறார்கள்.
அப்போ வெளியில் இருந்து பறந்து வந்த வேறு சில ஷிப்ஸ் இன் பகுதிகள் வந்து அடிக்கிறது, அதனால் இவர்களில் சிலர் அந்த ஷிப்பை கையால் பிடிக்க முடியாமலும், மற்றும் ஒட்ஷிசன் போதாமல் போயும் இறந்து விடுகிறார்கள். எல்லாமே பறந்து சுற்றிக் கொண்டிருக்கும், ஒன்றுமே கீழே விழாதுதானே.
இந்த நிலை எப்படி இருக்குமெனில், இவர்களின் விண்வெளிக் கப்பலில் இருந்து சில நாடாக்கள் பெண்ணின் காலில் சுற்றப்பட்டிருக்கும், அதன் மூலம் பறந்த வண்ணமே அந்த ஆணை இழுத்துப் பிடிப்பார்...பலமான காற்றுப்போல பிச்சு அறுத்துக் கொண்டு போவது போல இருக்கும், அப்போ அந்த ஆண் சொல்வார், என்னை விடு, நான் போகிறேன், என்னை இழுத்தாயானால் அந்த நாடா அறுந்துவிடும், அப்போ இருவரும் இறந்திடுவோம், ஆருமே மிஞ்சமாட்டோம் என.
அப்போ அவ பெரிதாக கத்தி கூச்சல் எல்லாம் போட மாட்டா[வெள்ளைக்காரப் பெண்ணல்லவா:)].. ஆனா முகபாவனையில் கவலை தெரியும்... கையைப் பிடித்து இழுத்தபடி சொல்லுவா... பிளீஸ்ஸ் போயிடாதே வா.. என, ஆனா அவரோ இல்லை, நாடா அறுமுன் நான் கிளிப்பைக் கழட்டுகிறேன் என, அவ இழுக்கும் அந்த பட்டியில் இருக்கும் கிளிப்பைக் கழட்டுவார்ர்.. ஸ்லோ மோசனில்.. அவ அழுவா.. பிளீஸ்ஸ் பிளீஸ்ஸ் போகாதே என.. அவர் இல்லை நீ தப்பிப்போ என கிளிப்பைக் கழட்டுவார்ர்..
அப்படியே அவர் தூரப் பறந்து போவது தெரியும். இவவுக்கு ஒட்ஷிசன் போதாமல் வந்து விடும், பலமாக மூச்சு வாங்குவா, உடனே சிப்பின் டோரை இறுக்கித் திறப்பா, திறந்து உள்ளே வந்து கதவை மூடிவிட்டு, ரீவியின் முன்னால் வந்து இருப்பா. எல்லாமே பறந்துதான்.. நடப்பதில்லை. செயாரில் இருந்து பெல்ட்டைப் போட்டால்தான் எழும்பிப் பறக்காமல் இருக்கலாம்.
அப்போ அவவுக்கு தாங்க முடியாத கவலையாக இருக்கும்.. ஆருமே இல்லை.. ஒரு சுவிட்சைப் போடுவா... அதில் ஏதோ ஒரு ஷைனீஸ் ரேடியோ சனல் போகும்.. இவ அவரோடு கதைக்க வெளிக்கிடுவா.. அது ரேடியோத்தானே .. தன் பாட்டில் போகும்.. அதில் ஒரு குழந்தையின் மழலை மொழி எல்லாம் கேட்ட்கும்... இவ துக்கம் தாளாமல் வாய் மூடி அழுவா...
அப்போது ஒரு துளி கண்ணீர் வந்து கன்னத்தால் வழிந்து.. அது ஒரு உருண்டையாகி விழும்.. விழுந்து.. அந்த ஒரு துளியும்.. அப்படியே கீழே விழாமல்.. பறந்து சுற்றிப்போகும்... மிகவும் ஒரு கவலையான கட்டமாக இருக்குமது.
அந்நேரம் அவவுக்கு ஒட்ஷிசன் காணாமல் மூச்சு வாங்கும், ஆனா அவ கவலையால் செயலிழந்ததுபோல, மாஸ்க் கை எடுத்து மாட்டாமல் அப்படியே இருப்பா... அப்போ அந்த ஸ்பேஸ் சிப்பின் கதவை ஒருவர் தட்டுவார்ர்... தட்டி விட்டு திறந்து உள்ளே வருவார்ர்... பார்த்தால், கடசியில் என்னை விடு எனச் சொல்லி கிளிப்பைக் கழட்டிப் போன அவரேதான்... அவர் உள்ளே வந்து இவவின் பக்கத்துச் செயாரில் பெல்ட்டைப் போட்டு இருப்பார்..
உடனே அவவுக்கு ஒரு புத்துணர்வு வரும்.. டக்கென மாஸ்க்கைப் போட்டிடுவா, உடனே உஷாராகிடுவா.... பின்பு அவவை மட்டுமே காட்டுவார்கள்... அப்போ எமக்கு ஒரு குட்டி டவுட்.. வந்தவர் எங்கே????
அது அப்படி இருக்க.. மீண்டும் இவவின் ஸ்பேஸ் சிப்.. துண்டு துண்டாக வெடிக்கும்... முடிவில் அவவாவது உயிர் பிழைக்கிறாவா? இல்லை.. அவவும் இறந்து விடுவாவா????? முடிவை தியேட்டரில் பாருங்கோ...
அந்த வந்தவர் எங்கே???? பின்புதான் நாம் உணர்வோம்ம்.. அது உண்மையல்ல... அவவை உஷார் பண்ண, ஒரு ட்ரீம் வந்தது அப்படி...
என்னைப் பொறுத்து படம் சூப்பர். நல்ல 3டி தியேட்டரில் பாருங்கோ.. அப்படியே நாமும் உள்ளே போவதுபோல, ஸ்பேஷில் சுற்றுவது போல இருக்கும்... படம் முடிந்த பின்னும்.. இன்னும் தொடராதா.. அதுக்குள் முடிந்து விட்டதா எனும் உணர்வை உருவாக்கிய படம்... தியேட்டரைக் கண்டாலே நித்திரையாகும் என்னையே.. சொக்க வைத்திருந்தது...
அதிகமான ஆங்கிலப் படங்கள்.. டொமார்ர்.. டும்.. எனச் சத்தமாக இருக்கும்.. பளீச் பளீச்ச் என வெளிச்சம் வரும்... இதனால் எனக்கு தலையிடி வந்திடும்.. ஆனா இதில் பெரிதாக அப்படி எதுவுமே இருக்கவில்லை.. எல்லாமே அளவாக இருந்துது. ஆரம்பம் ஒரு 20 நிமிடம் தவிர்த்து, படம் முழுவதும் இருவரே நடிக்கின்றனர்.. விண்வெளியல்லவா மருந்துக்கும் ஆட்கள் இல்லை.
சிறியவர்களையும்(குட்டீஸ்) கூட்டிப் போய்ப் பார்க்கலாம். திரும்பவும் சொல்கிறேன், ஸ்பேஸ் புரோகிராம் பிடித்தவர்களுகு இப்படம் 100 வீதமும் பிடிக்கும்.
சரி படம் பற்றிய விமர்சனத்துக்கு முன்பு கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்கிறேனே.. ஏனெனில், எனக்கு படம் ஏன் பிடித்தது என்பதை நீங்க அறிய இது உதவிபண்ணுமெல்லோ:)... “இந்த விருப்பம்” உங்களுக்கு இல்லாவிடில், படம் பிடிக்காமலும் போகலாம்.. அதனாலயே முன்னறிவித்தல்..
எனக்கு விண்வெளி.. ஸ்பேஸ் புரோகிராம் எனில் கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி.[ இந்தத் தகவல் இங்கே பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும்:)] அங்கிருந்து சட்லைட்டில் படமெடுக்கும்போது, நம் உலகம் ஒரு புறம் தெரியும், சந்திரன் ஒருபக்கம் தெரியும்.. நட்சத்திரங்கள் கல்லுகள் என.. சுற்றிய வண்ணம் இருக்கும்.. அதை ரசிச்சே முடியாதெனக்கு. அவ்ளோ விருப்பம். அப்போ இப்படம் எனக்காகவே எடுக்கப் பட்டதுபோல:) என்னுள் ஒரு மகிழ்ச்சி:)..
சரி கதைக்கு வருகிறேன்ன்.. இதில் கதையே இல்லை:).. அதை விடுங்கோ.. தியேட்டருக்குள் போய் இருந்து பொப்கோனும் நச்சூஸ் சும்(nachos chips) வாங்கி சாப்பிட்டபடி, இருந்தமா.. அட்ஸ் ஓடிக்கொண்டிருந்துது. டக்கென ஸ்கிறீனை ஸ்ரொப் பண்ணி விட்டு.. தியேட்டரில் ஒருவர் வந்து எனவுன்ஸ் பண்ணினார்ர்.... அதாவது என்ன மெயினா சொன்னாரெனில்.. கொஞ்சம் பயமாக இருக்கும் காட்சிகள் எனில் கண்ணை மூடிடுங்கோ என. 3டி கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது, எல்லாமே நமக்கு கிட்ட வருவதுபோல இருக்குமெல்லோ..
அப்போ அப்படிச் சொன்னதும்.. கொஞ்சம் பயம் எனக்கு வந்திட்டுது என்றால் பாருங்கோவன்:).
சரி கண்ணாடி எல்லாம் போட்டுப் படம் பார்க்கத் தொடங்கியாச்சு...
ஸ்பேஸிலே ஒரு ஸ்பேஸ் ஷிப் நிற்கிறது.. அதில் சிலர் போயிருக்கிறார்கள்,ஒரு 6/7 பேர்தான். அவர்கள் அந்த ஷிப்பில் சில வேலைகள் செய்கிறார்கள், அதனை பூட்டி நேராக்குகிறார்கள். அந்த ஷிப் இருப்பது விண்வெளிதானே.. ஒரு பக்கம் உலகம் தெரிகிறது, சந்திரன் தெரிகிறது, கற்கள், உடைந்த சில துண்டுகள் பறந்த வண்ணமிருக்கின்றன. அதனுள் இவர்களும் பறந்து பறந்து பூட்டுகிறார்கள்.
அப்போ வெளியில் இருந்து பறந்து வந்த வேறு சில ஷிப்ஸ் இன் பகுதிகள் வந்து அடிக்கிறது, அதனால் இவர்களில் சிலர் அந்த ஷிப்பை கையால் பிடிக்க முடியாமலும், மற்றும் ஒட்ஷிசன் போதாமல் போயும் இறந்து விடுகிறார்கள். எல்லாமே பறந்து சுற்றிக் கொண்டிருக்கும், ஒன்றுமே கீழே விழாதுதானே.
=============================INTERVAL==============================
========================================================================
கடசியாக ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மட்டுமே எஞ்சுகிறார்கள். இருவரும் வெளியே பறந்து மீண்டும் பூட்ட முயலும் போது, பெண் தவறிப்போக.. அந்த ஆண்தான் காப்பாற்றுகிறார். இப்படி நடந்து பின்னர் ஒரு கட்டத்தில், அந்த ஆண் இந்த விண்வெளிக் கப்பலைப் பிடிக்க முடியாமல் தூரமாக எட்டித் தவிப்பார்.... அப்போ பெண் என்ன செய்வார், அவரைக் காப்பாற்ற, எட்டிப் பிடிப்பார்...இந்த நிலை எப்படி இருக்குமெனில், இவர்களின் விண்வெளிக் கப்பலில் இருந்து சில நாடாக்கள் பெண்ணின் காலில் சுற்றப்பட்டிருக்கும், அதன் மூலம் பறந்த வண்ணமே அந்த ஆணை இழுத்துப் பிடிப்பார்...பலமான காற்றுப்போல பிச்சு அறுத்துக் கொண்டு போவது போல இருக்கும், அப்போ அந்த ஆண் சொல்வார், என்னை விடு, நான் போகிறேன், என்னை இழுத்தாயானால் அந்த நாடா அறுந்துவிடும், அப்போ இருவரும் இறந்திடுவோம், ஆருமே மிஞ்சமாட்டோம் என.
அப்போ அவ பெரிதாக கத்தி கூச்சல் எல்லாம் போட மாட்டா[வெள்ளைக்காரப் பெண்ணல்லவா:)].. ஆனா முகபாவனையில் கவலை தெரியும்... கையைப் பிடித்து இழுத்தபடி சொல்லுவா... பிளீஸ்ஸ் போயிடாதே வா.. என, ஆனா அவரோ இல்லை, நாடா அறுமுன் நான் கிளிப்பைக் கழட்டுகிறேன் என, அவ இழுக்கும் அந்த பட்டியில் இருக்கும் கிளிப்பைக் கழட்டுவார்ர்.. ஸ்லோ மோசனில்.. அவ அழுவா.. பிளீஸ்ஸ் பிளீஸ்ஸ் போகாதே என.. அவர் இல்லை நீ தப்பிப்போ என கிளிப்பைக் கழட்டுவார்ர்..
அப்படியே அவர் தூரப் பறந்து போவது தெரியும். இவவுக்கு ஒட்ஷிசன் போதாமல் வந்து விடும், பலமாக மூச்சு வாங்குவா, உடனே சிப்பின் டோரை இறுக்கித் திறப்பா, திறந்து உள்ளே வந்து கதவை மூடிவிட்டு, ரீவியின் முன்னால் வந்து இருப்பா. எல்லாமே பறந்துதான்.. நடப்பதில்லை. செயாரில் இருந்து பெல்ட்டைப் போட்டால்தான் எழும்பிப் பறக்காமல் இருக்கலாம்.
அப்போ அவவுக்கு தாங்க முடியாத கவலையாக இருக்கும்.. ஆருமே இல்லை.. ஒரு சுவிட்சைப் போடுவா... அதில் ஏதோ ஒரு ஷைனீஸ் ரேடியோ சனல் போகும்.. இவ அவரோடு கதைக்க வெளிக்கிடுவா.. அது ரேடியோத்தானே .. தன் பாட்டில் போகும்.. அதில் ஒரு குழந்தையின் மழலை மொழி எல்லாம் கேட்ட்கும்... இவ துக்கம் தாளாமல் வாய் மூடி அழுவா...
அப்போது ஒரு துளி கண்ணீர் வந்து கன்னத்தால் வழிந்து.. அது ஒரு உருண்டையாகி விழும்.. விழுந்து.. அந்த ஒரு துளியும்.. அப்படியே கீழே விழாமல்.. பறந்து சுற்றிப்போகும்... மிகவும் ஒரு கவலையான கட்டமாக இருக்குமது.
அந்நேரம் அவவுக்கு ஒட்ஷிசன் காணாமல் மூச்சு வாங்கும், ஆனா அவ கவலையால் செயலிழந்ததுபோல, மாஸ்க் கை எடுத்து மாட்டாமல் அப்படியே இருப்பா... அப்போ அந்த ஸ்பேஸ் சிப்பின் கதவை ஒருவர் தட்டுவார்ர்... தட்டி விட்டு திறந்து உள்ளே வருவார்ர்... பார்த்தால், கடசியில் என்னை விடு எனச் சொல்லி கிளிப்பைக் கழட்டிப் போன அவரேதான்... அவர் உள்ளே வந்து இவவின் பக்கத்துச் செயாரில் பெல்ட்டைப் போட்டு இருப்பார்..
உடனே அவவுக்கு ஒரு புத்துணர்வு வரும்.. டக்கென மாஸ்க்கைப் போட்டிடுவா, உடனே உஷாராகிடுவா.... பின்பு அவவை மட்டுமே காட்டுவார்கள்... அப்போ எமக்கு ஒரு குட்டி டவுட்.. வந்தவர் எங்கே????
அது அப்படி இருக்க.. மீண்டும் இவவின் ஸ்பேஸ் சிப்.. துண்டு துண்டாக வெடிக்கும்... முடிவில் அவவாவது உயிர் பிழைக்கிறாவா? இல்லை.. அவவும் இறந்து விடுவாவா????? முடிவை தியேட்டரில் பாருங்கோ...
அந்த வந்தவர் எங்கே???? பின்புதான் நாம் உணர்வோம்ம்.. அது உண்மையல்ல... அவவை உஷார் பண்ண, ஒரு ட்ரீம் வந்தது அப்படி...
என்னைப் பொறுத்து படம் சூப்பர். நல்ல 3டி தியேட்டரில் பாருங்கோ.. அப்படியே நாமும் உள்ளே போவதுபோல, ஸ்பேஷில் சுற்றுவது போல இருக்கும்... படம் முடிந்த பின்னும்.. இன்னும் தொடராதா.. அதுக்குள் முடிந்து விட்டதா எனும் உணர்வை உருவாக்கிய படம்... தியேட்டரைக் கண்டாலே நித்திரையாகும் என்னையே.. சொக்க வைத்திருந்தது...
அதிகமான ஆங்கிலப் படங்கள்.. டொமார்ர்.. டும்.. எனச் சத்தமாக இருக்கும்.. பளீச் பளீச்ச் என வெளிச்சம் வரும்... இதனால் எனக்கு தலையிடி வந்திடும்.. ஆனா இதில் பெரிதாக அப்படி எதுவுமே இருக்கவில்லை.. எல்லாமே அளவாக இருந்துது. ஆரம்பம் ஒரு 20 நிமிடம் தவிர்த்து, படம் முழுவதும் இருவரே நடிக்கின்றனர்.. விண்வெளியல்லவா மருந்துக்கும் ஆட்கள் இல்லை.
சிறியவர்களையும்(குட்டீஸ்) கூட்டிப் போய்ப் பார்க்கலாம். திரும்பவும் சொல்கிறேன், ஸ்பேஸ் புரோகிராம் பிடித்தவர்களுகு இப்படம் 100 வீதமும் பிடிக்கும்.
=========================================================================
ஊசி இணைப்பு:
|
Tweet |
|
|||