எத்தனையோ விஷயங்கள் என் கிட்னியில்:) சேவ் ஆகியிருக்கு, ஆனா அதை எல்லாம் தாண்டி, சுடச்சுட என்னைச்சுற்றி நடப்பனவற்றையே மீயும் அப்பப்ப சுடச்சுடப் போட்டுக்கொண்டிருக்கிறேன்.
இந்த புத்தி, மனம் பற்றி.. எனக்குத் தெரிஞ்சவற்றை எழுதோணும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
அதாவது சிலர்/பலர் நினைக்கிறார்கள் புத்தி என்பதும், நம் மனம் என்பதும் ஒன்றுதானே என. உண்மையில் அவை இரண்டும் ஒன்றல்ல. மனம் என்பது உணர்ச்சிகளுக்கு அடிமையான ஒன்று.. அதுக்கு சிந்திக்கத் தெரியாது. கண்டதையும் காதல் செய்யும்.. கண்டதையும் விரும்பும்... கண்டதையும் பேசும்.. இதனாலேயே அப்பாவியாக மாட்டிக் கொண்டு விளிக்கும்[ளி கரெக்ட்தானே?:)]
ஆனா புத்தி/மூளை என்பது அப்படியில்லை, அது நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்தே ஒரு முடிவெடுக்கும், உணர்ச்சிகளுக்கு இடமளிக்காது, நீதி நியாயப்படி நடக்கும்.
பெரும்பாலும் மனதால் முடிவெடுக்கும் விசயங்கள் தோல்வியிலேயே முடிவதற்கான வாய்ப்புக்களே அதிகம். புத்தியால் முடிவெடுக்கும் விசயங்களே வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
பல சந்தர்ப்பங்களில் புத்தி சொல்லும், இதைச் செய்யாதே.. இதை வாங்காதே.. இவரது கோரிக்கைக்கு ஒத்துப் போகாதே.. நடிக்கிறார் நம்பாதே:)... இப்படி எல்லாம் புத்தி அலேர்ட் பண்ணும், ஆனா நம் மனம் அதைக் கேட்காது.. நீ பேசாமல் இரு அதெல்லாம் எனக்குத் தெரியும் எனச் சொல்லி, புத்தியை அடக்கி விட்டு, மனம் முந்திவிடும், ஆனா அலுவல் முடிந்த பின்பே மனம் கிடந்து தவிக்கும்.. புத்தி சொல்லிச்சுதே.. ஆனா மனசுதான் கேட்க மாட்டேன் என்றிட்டுதே என.
பெரும்பாலான காதல்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்.. மனதை முன்னிலைப்படுத்தி விரும்புவதே. உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, இரக்கம் பாவம் பட்டு மனம் விரும்பிவிடும்.. ஆனா வெற்றி பெறும் காதல்கள் புத்தியால் சிந்தித்து முடிவெடுத்த காதலாகவே இருக்கும்.
மனம் சொல்வதைக் கேட்டு அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விடுகிறோம்... அதாவது மனதை வைத்துப் பேசும் வார்த்தைகள்.. நினைத்து.. அலசி ஆராய்ந்தெல்லாம் சொல்வதாக இருக்காது.. வெறும் உதட்டு வார்த்தைகளாக இருக்கும், ஆனா எதிராளி அதனால் பாதிக்கப்பட்டு மனம் வருந்தினால் நாம் என்ன சொல்கிறோம்? ஐ நெவெர் மீன்ற் 2 சே தட்... என சொல்கிறோம் தானே...
அதாவது யோசிச்சு சிந்திச்சு எல்லாம் சொல்லவில்லை, ஏதோ வாயில் வந்துது சொல்லிட்டேன்.. அது வேணுமெனச் சொல்லப்பட்ட வார்த்தை அல்ல.. மன்னிச்சுக்கொள்ளுங்கோ எனக் கஸ்டப்படுவோமே சில சமயங்களில்.. இதெல்லாம் மனசு பண்ணும் கூத்துக்கள்.
ஒரு குட்டிச் சம்பவம். ஒருநாள் எங்கட டெய்சிப் பிள்ளை ஒரு எலியைப் பிடிச்சுக் கொண்டு வந்தா கார்டினுக்குள், நான் பறிக்க ஓடினேன்.. அவ எலியாரைத்தூக்கிக் கொண்டு பக்கத்து வளவுக்குள் ஓடி ஒளிச்சிட்டா... எனக்குக் கொஞ்சம் கோபம்...:).
சரி இன்று நைட் வரை, அவவை உள்ளே எடுக்கக் கூடாது, எலி சாப்பிட்டால் அவவுக்கு பழக்கமில்லை, அதனால சத்தி எடுத்தாலும் எடுக்கலாம் என என் புத்தி சொல்லியது.. அப்படியே விட்டு விட்டு வந்து கதவை லொக் பண்ணி விட்டேன்.
கொஞ்ச நேரத்தில் அவ எலியைச் சாப்பிட்டு விட்டு வந்து, டோர் அருகில் நின்று ம்ம்ம்மாவ்வ்வ் .. ம்ம்மாவ் என, மருட்டுவதுபோல மெல்லிய குரலில், என்னைக் கூப்பிட்டா டோரைத் திறக்கச் சொல்லி:).
என் புத்தியோ தடுத்தது.. நோ நோ திறக்காதே.. கொஞ்சம் ரைம் ஆகட்டும்.. இப்போ சத்தி எடுத்திடுவா என, ஆனா புத்தியைப் பின்னே தள்ளிப்போட்டு மனம் முந்திச் சொல்லிச்சுது.. என்ன அதிரா? உன் பிள்ளை எனில் இப்படி வெளியே நின்று கூப்பிட்டும் கதவைத்திறக்காமல் இருப்பாயோ? இது பூஸ் என்பதனால்தானே திறக்கக்கூடாது என நினைக்கிறாய்?.. அப்போ நீ டெய்சியை உன் பிள்ளைபோல நினைக்கவில்லையா? என...
உடனே மனசு சொல்வதுக்கே முக்கியத்துவம் கொடுத்து, டோரைத்திறந்து அவவை உள்ளே எடுத்தேன்... உள்ளே வந்து 5 நிமிடத்தில் காபெட்டிலேயே அப்படியே சத்தி எடுத்துப் போட்டா.. உடனே புத்தி மனதைப் பார்த்துக் கேட்டுது .. “பார்த்தியா அப்பவே சொன்னேனே நீதான் கேட்கவில்லை” என:)..
அதனால எப்பவுமே மனதுக்கு முன்னுரிமை குடுத்திடாமல், புத்திக்கு முன்னுரிமை குடுக்கப் பழகிட்டால் நல்லதே.. என்னதான் இருப்பினும் சிலசமயம் இரண்டுமே தோற்று விடுவதும் உண்டு...:)
அவனுக்குத்தான் தெரியும்... ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்!!
அட யாருக்கம்மா புரியும் ... அவன் வேடிக்கையும் அதன் விளைவும்!!...”
==================_()_=================
என்ன இது ஆரைப் பார்த்தாலும் தலைகீழாகத் தெரிகினம்:) உலகம் மாறிச் சுத்துதோ? நான் கரெக்ட்டாத்தானே நிற்கிறேன்:)
====இம்முறை இடைவேளையைக் கடைவேளை:) ஆக்கிட்டேன்:))====
டும்..டும்..டும்... நான் மெடிரேசன் போனேனே:))... என் கணவர் எப்பவும் சொல்லுவார், நமக்குத் தெரியாதென எதுவும் இருக்கக்கூடாது.. ஒரு பொருளோ.. உணவோ.. எதுவாயினும் முடிஞ்சவரை தெரிஞ்சு வச்சிருக்கோணும் என:).. அதுபோலவே எலோரும் எங்கு பார்த்தாலும் மெடிரேசன்.. யோகா வகுப்புகள் போகிறோம் என்பதைக் கேட்டு, கொஞ்சக் காலமாக எனக்கும் ஒரு ஆசை.. அது என்ன எனப் போய்ப் பார்கோணும் என:).. நம்மிடத்தில் இந்த வகுப்புக்கள் நடப்பது தெரியாது, இப்போதான் தெரிய வந்து போனேன்..
ஒரு புத்தரைப்போலவே, அதே கலரில் ஒரு ஸ்கேட் போட்டு அதுக்கு ஒரு பிளவுஸ்.. ஜீன்ஸ் க்குப் போடும் பிளவுஸ் போல போட்டு, ஒரு அரைத்தாவணியும் போட்டிருந்தா அந்த ஸ்கொட்டிஸ் லேடி:).. அடிக்கடி தாவணியை எடுத்து எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தா.. விழுகிறதாம்:) புதுப் பழக்கமெல்லோ[இத்தனைக்கும் தன் ஜீன்ஸ் ரீ சேட்டுக்கு மேலயே போட்டிருந்தா, தலை ஃபுல்லா மொட்டை அடிச்சிருந்தா. நல்ல அன்பானவவாக, சிரித்தபடியே எப்பவும் இருந்தா.
இடையில் முக்கியமாகப் பேசப்பட்ட விசயம்..
What is anger?
அது மிருகத்தனமானது, நெகடிவ் எனர்ஜி, ... இப்படிக் கொஞ்சம் சொல்லி... இப்போ உங்கள் மூச்சை வெளியே விடும்போது.. இந்த கோபத்தை எல்லாம் வெளியே விட்டு, றிலாக்ஸ் ஆகிடுங்கோ என்றா... நான் அனைத்தையும் வெளியே விட்டேன் ஆனா அஞ்சுவோடு இருக்கும் கோபத்தை மட்டும் வெளியே விட்டிடக்கூடாது என மிகவும் உசாராக இருந்தேன்:))... அதுவும் இல்லை எனில் அஞ்சுவை எப்பூடிக் கொன்றோல் பண்ணுவேன்:).
==================================================================================
படம் படமாகப் போடுகிறேன் என, கவிஞர் சீராளன் திட்டிப்போட்டார் கர்:)) அதனால இம்முறை எழுதியே கொல்கிறேன் ஹா ஹா ஹா:).
==================================================================================
ஊசி இணைப்பு
$$$$$$$$$$நன்றி வணக்கம்_()_$$$$$$$$$$$