நல்வரவு_()_


Tuesday 25 September 2012

எனக்குப் பிடிச்சதெல்லாம்... உங்களுக்குப் புய்க்குமோ?:):)

நான் பாருங்கோ பெரும்பாலும் எல்லாத்திலயும் டிபரண்ட்டான ஆளாகவே இருப்பேன்:). அது நான் நினைத்து நடப்பதில்லை, அது அப்படித்தான்:).. அதுபோலவே சின்ன வயதிலிருந்து சின்னச் சின்ன விஷயங்களிலும் நான் கொஞ்சம் மாறுபட்டே காணப்பட்டு வந்திருக்கிறேன்... அதுக்காக “லூஸாக்கும்” என, அவசரப்பட்டு முடிவெடுத்திடாதீங்கோ கர்ர்ர்ர்ர்:)).

எனக்கு சின்னனிலிருந்தே, கயர்த் தன்மையான உணவுகளில் நல்ல விருப்பம். அதாவது எப்படிப்பட்டதெனில்... குரும்பட்டி ....  தேங்காய் வரமுன் பூ வரும், பின்பு குட்டிக்காய் வரும் அதுதான் குரும்பட்டி.... அது பெருத்து தேங்காய் ஆகும், அந்தக் குரும்பட்டி ஒருவித கயர்த்தன்மையாக இருக்கும், அது சாப்பிடப் பிடிக்குமெனக்கு.

வாழைப்பொத்தி(பூ), வெட்டிக்கொண்டு(கெத்திடுவதெனச் சொல்வோம் எம் பாஷையில்) போகும்போது, உள்ளே வெள்ளைக் குருத்தாக வரும் அதுவும் சாப்பிடப் பிடிக்கும்(இப்பவும்தான்:)). தென்னங் குருத்து, தாமரைப் பூவில் இருக்கும் பருப்பு... இவையெல்லாம் ஒரீரு தடவை ஆரோ தந்து சாப்பிட்டிருக்கிறேன்ன் அதெல்லாம் பிடிக்குமெனக்கு.

இப்படித்தான் எனக்கு 6:) வயதாக இருந்தபோது, ஒருநாள், எங்கள் வீட்டில் சமைக்கும் மண் பாத்திரம் உடைந்துவிட்டதாம், கொஞ்ச நேரத்தில் என் சத்தம் ஏதுமில்லையாம், என்னைக் காணவில்லையாம், அம்மா பயந்திட்டா, பயத்தில எல்லா இடமும் தேடினால், நான் கிச்சின் கதவுக்குப் பின்னால், கதவு திறந்திருப்பின், சுவரோடு ஒட்டினால் ஒரு இருட்டிடம் வருமெல்லோ அந்தச் சுவரோடு மூலையில் ஒளித்து நின்று, அந்த உடைந்த மண்பாத்திரத்தின் ஒரு துண்டைக் கடித்துக் கொண்டு நின்றேனாம்:))... ஹையோ இது அதிராதானா?:).

சரி எனக்குப் பிடித்த பண்டங்கள் இங்கு கிடைப்பது குறைவு, ஆனாலும் பெரும்பாலும் எம்மிடம் வருவோர், இவற்றை வாங்கி வரத் தவறுவதில்லை.
சரி பட்டும் படாமலும், ஏன் இதை இப்போ சொல்கிறேன் என்றால்:)) என்னிடம் ஆராவது வரப்போறீங்கள் எண்டால்ல்ல்.... அதிராவுக்கு என்ன வாங்கிப் போகலாம் என யோசிக்கவே தேவையில்லை, இவற்றை வாங்கி வந்தால் போதும்...
வெள்ளை நிற மல்லிகையோ...
வேறெந்த மாமலரோ....
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது....

எனக்குப் பொன் வேண்டாம்..
பொருள் வேண்டாம்ம்ம்..
இவைதான் வேணும்:):):).

கனடாவில் வாங்கி வந்து, இங்கு அவித்தேன்.. இது பனங்கிழங்கு... 
பனாட்டு, புழுக்கொடியல் எல்லாமே பிடிக்கும். எப்பவுமே என்னிடம் புளுக்கொடியல் இருக்கும்.. இப்பவும் இருக்கு:).

இது sweet tamarind..., China விலிருந்து வருவன, புளி என்றால் எனக்கு நல்ல விருப்பம்.

இப்படியான, விதம் விதமான கத்தரிக்காய்கள், சுண்டங்காய், தும்பங்காய்.... அனைத்து வகையுமே விருப்பம்ம்ம்ம்ம்.. இது கனடாவிலிருந்து காவி வந்தேன்:)... அண்ணன் பார்த்திட்டுச் சொன்னார், சுமைகூலி தான் அதிகம் கொடுப்பாய் என:).

இது என்ன தெரியுமோ? புளியம்பழத்தில் இருக்கும் விதையை எடுத்து பத்திரப் படுத்தி வைத்து, அவணில் போட்டு வறுத்தெடுத்தால், இப்பூடி சூப்பராக இருக்கும், பல் உடைந்திடும் கவனமாகச் சாப்பிடோணும், இது பொழுது போகாத நேரம், படிக்கும் நேரங்களில் வாயில் போட்டிருந்தால்.. பொழுது போயிடும்:)).. எனக்கும் ரொம்பப் பிடிக்கும், ஆனா உடலுக்கு நல்லமில்லையாம், எனவே ஒளிச்சு வச்சுத்தான் சாப்பிடுவேனே:) எங்கிட்டயேவா:).


இத்தோடு அவித்த சோளன்:)))). இன்னும் நிறையவே சொல்ல இருக்கு, ஆனா இவை கொஞ்சம் வித்தியாசமானவை என்பதால சொன்னேன்.

ஊசி இணைப்பு:
வந்ததுதான் வந்தீங்க... இதையும் ருசிச்சு ட்ரை பண்ணிப்பாருங்கோ... செய்யவும் சுலம்பம், சுவையும் அதிகம். ஒரு சென்னைக் குடும்பம் வீட்டுக்குப் போயிருந்தபோது, அவ சொன்னா பாயாசம் செய்ய வெளிக்கிட்டேன், பார்த்தேன் சவ்வரிசி, சேமியா எதுவும் இல்லை, அதனால டக்கென இதைச் செய்தேன் என்று.

தே.பொ:
குஸ்குஸ் - 1 கப்
பசுப்பால் - 21/2 கப்
சுகர் - 1/2 கப்
கஜூ +பிளம்ஸ்.
                     
குஸ்குஸ் ஐ மெல்லிய நெருப்பில் 5 நிமிடங்கள்  வறுக்க வேண்டும், பின்பு பாயாசம் செய்வதுபோலவே, அடுப்பிலே பாலை சூடாக்கி, நன்கு கொதித்ததும் சுகர் போட்டு, குஸ்குஸ் ஐக் கொட்டிப் பிரட்டிக் கொண்டிருக்கவும்.  கஜூ பிளம்ஸ்  சேர்க்கவும். பொங்கலாக இப்படி வரும்..  இறுகி வந்ததும் அடுப்பால் இறக்கவும்.. குஸ்குஸ் பொங்கல் ரெடி.எனக்கு இந்த முறைதான் பிடிச்சிருக்கு, முடிஞ்சால் செய்து பாருங்கோ.

ரிப்ஸ் இணைப்பு:
*கறிவேப்பிலையை வாங்கியவுடன் ஒரு கடதாசிப் பை/என்வலப்பில் போட்டு உடனேயே பிரீஸ் பண்ணி விட்டால், அப்படியே பசுமையாக இருக்குது:)).. எனக்கொரு டவுட்டூ:) இதை முன்பும் சொல்லியிருக்கிறேனோ?:)).

*பிரிஜ்ஜில் தேசிக்காய்க் கோதுகளைப் போட்டுவிட்டால், எந்த விதமான வாசமும் வராது.
===========================================
புரிந்து கொண்டவர்களைப் பிரிந்து செல்ல முயற்சிக்காதே!!
பிரிந்து சென்றவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதே!!
===========================================

Wednesday 19 September 2012

குட்டிக் குட்டி ஆப்பூஊஊஊ:)..


Friends are the jewels of ours Hearts. - Images and gifs for social networks
பாருங்கோ நல்ல மனிஷராக இருப்பினம், வஞ்சகம் சூது இருக்காது, ஆனா அவர்களுக்குத்தான் சோதனை அதிகம். அது ஏன் என எனக்கு எப்பவுமே புரிவதில்லை... ஆரிடமாவது கேட்டால், நல்லவர்களை கடவுள் சோதிப்பாராம்ம்.... சரி இப்ப அதுவா முக்கியம்... இதைக் கேளுங்க:)..
வாகனங்களுக்கு Road Tax என இருக்குதுதானே, அது இந்நாட்டில் வருடம் ஒரு தடவை அல்லது 6 மாதங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கலாம். அப்படிப் புத்துப்பிச்சால், அதில் முடிவு திகதி போடப்பட்டு ஒரு ஸ்ரிக்கர் கொடுப்பினம், அதை நாம் வாகனத்தின் முன் கண்ணாடியில், வெளியே தெரியும்படி ஒட்டியிருக்க வேண்டும், அதில்லாமல் வெளியே போக முடியாது, போலீஸ் கண்டால் பிடிப்பார்கள்.

அப்போ ஒருவருக்கு, அன்று முடிந்துவிட்டதாம், இவர் அதைக் கவனிக்க வில்லை, உடனே ஓடியிருக்கிறார் எடுக்க, காரை பார்க் பண்ணிவிட்டு எடுத்துக்கொண்டு வரப் போனபின், கஸ்டகாலம் அதில் போலீஸ் வந்திருகிறார்கள், டேட் முடிந்துவிட்டது, உடனே ஃபைன் பண்ணி, துண்டு வைத்து விட்டுப் போய் விட்டினம். காரின் வெளிப் புறத்திலே வைப்பினம், 30/60பவுண்டுகள் என நினைக்கிறேன்.

அந்த மனிஷன் கையில் ரோட் ரக்ஸ்டோடு வந்து பார்த்தால், ஃபைன் இருக்கு, .. மனிசன் ஏங்கி அப்ஷெட்டாகிட்டார்.... அதனால கையில கொண்டுவந்ததை ஒட்ட மறந்து, காரை எடுத்துப் போய் இன்னொரு இடத்தில் பார்க் பண்ணிப்போட்டு உள்ளே ஷொப்புக்குப் போய் வெளியே வந்து பார்த்தாராம், அங்கு திரும்பவும் இரண்டாவது ஃபைன் வைக்கப்பட்டிருக்காம், இவர் போலீஷைக் கண்டு ஓடிப்போய் நடந்ததை எல்லாம் கூறி, பொக்கட்டில் இருந்த ரோட் ரக்ஸ் சையும் எடுத்துக் காட்டினாராம், அவர்கள் சம்மதிக்கவில்லையாம், தப்புத்தப்புத்தான் என்று சொல்லிப் போய் விட்டினமாம்.. அவர் ஒரு வெள்ளைதான்.
-----------------------------------------------------------------------

டுத்த இன்னொரு அனுபவம்.. இவர் ஒரு கறுப்பு இனத்தவர், என் கணவரோடு வேலை செய்த டாக்டர், புதுசா வந்தவராம், புதுசாக் காரெடுத்து ஓடிப்போனாராம். இங்கு பிரித்தானியாவில் ரவுண்ட் எபவுட்டுகள் அதிகம்(Roundabout), அதுதான் கொஞ்சம் ஓடப் பயமாக இருக்கும். இப்போ மெல்ல மெல்ல அதனை மாற்றி வருகிறார்கள்.
roundabout  வர முன்பே இப்படி சைன் போடப்பட்டிருக்கும், 
அதைப் பார்த்து , எங்கு திரும்ப வேண்டுமோ,
நாம் சரியான லேனில் காரை ஓட வேண்டும், 
வட்டத்துள் வைத்து, லைனைக் குரொஸ் பண்ணக்கூடாது..

அப்போ ஒரு ரவுண்டெபவுட்டில் சுத்தி எடுக்கும்போது, அருகில் வந்த ஒரு கார் இவரது காரோடு மோதி விட்டதாம், பெரிய சேதம் இல்லை, ஆன இவரில தப்பில்லை, வந்து மோதிய காரில்தான் தப்பு. உடனே இவரும் இறங்கியிருக்கிறார், மற்றக் காரில் இருந்தவர்களும் இறங்கியிருக்கினம், அப்படி இடத்தில் பிரச்சனை வந்தால், ரோட் புளொக் ஆகிடுமெல்லோ...

இரு முறை இருக்கு, ஒன்று - தவறு செய்தவர் தவறை ஒத்துக் கொண்டால், அவரின் ஃபோன் நம்பர், இன்சூரன்ஸ்ஸை வாங்கிக்கொண்டு போயிடலாம், இல்லை இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை எனில், போலீஸ் வரும்வரை நிற்க வேண்டும், அது போலீஸ் கேசாகும்.

அதனால பெரும்பாலும் முடிந்தவரை தமக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்திடுவினம். அப்படித்தான், இவர் புது ஆள் எல்லோ, தடுமாறியிருக்கிறார், மோதியவர்கள் இங்கத்தைய வெள்ளைகள், உடனே சொலியிருக்கினம், போலீஸ் கேஸ் ஆக விட வேண்டாம், இந்தாங்கோ எம் ஃபோன் நம்பர், காரை எடுங்கோ இப்போ, வீட்டுக்குப் போனதும் ஃபோன் பண்ணுங்கோ இன்சூரன்ஸ் விபரம் தருகிறோம் என, இந்த அப்பாவியும், சரி என்றிட்டு காரை எடுத்திருக்கிறார், ஒரு பதட்டமாகத்தானே இருக்கும், நடு ரோட்டுமெல்லோ.

அப்போ இவர் அவசரமாகக் காரை ஓடியபடியே, சீட் பெல்ட்டை இழுத்திருக்கிறார் போட, கஸ்டகாலம் எதிரே போலீஸ் கார், உடனே மறிச்சு, எதுக்கு சீட் பெல்ட் போடவில்லை என ஃபைன் அடிச்சிருக்கினம், இவர் நடந்த பிரச்சனையை விளக்கியும், அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை, சரி போனால் போகுதென, அதையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து, அந்த ஃபோன் நம்பருக்கு அடித்தால், அது பொய் நம்பர் கொடுத்திருக்கினம். அப்போ பாருங்கோ.. இதுக்குத்தான் சொல்வார்களோ... சிலநேரம், ஒரு பிரச்சனை வந்தால் தொடர்ந்து வருமென.

இதனாலதான் சொல்லுவினம், எப்பவும் இப்படி பிரச்சனை நடப்பின், ஃபோன் நம்பரை வாங்கி, அதிலயே உடனேயே டயல் பண்ணி, சரியோ என செக் பண்ணிடோணுமாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஸ்பெஷல் இணைப்பு:
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!!!

அப்ப முப்பளம் அமுது செய்வித்த
தொப்பை அப்பனைத் தொழ வினை அறுமே!!!

ஆண்டவா எல்லோரையும் காப்பாத்துங்கோ.. எல்லோருக்கும் நல்ல பவஃபுல்லான கிட்னியைக் கொடுங்கோ....
சிரிக்கிறேன் சிரிக்கிறேன்.. சிரிப்பு வரல்ல:)).. தோத்துப் போயிடுறேன்ன்ன்:)).. எனக்காக ஆராவது சிரிச்சிட்டுப் போங்கோவன் பிளீஸ்ஸ்ஸ்:))))
======================================
  “சேற்றின் தொடர்பை, அடியோடு அறுத்துக்கொண்ட பின்னர்தான், தாமரை இறைவன் தாளை அடைகிறது”  
சொன்னவர்... ஒரு பெரியவர்தான்.. லைக் புலாலியூர் பூஸானந்தா:)
=======================================

Saturday 15 September 2012

இது சொந்தக் கதை:)... சோகக் கதைங்க:)..


God sends angels to watch over us. He has called them friends - Images and gifs for social networks

ல்லாருமே நம்மளமாதிரி இருந்திட்டால் சோகம் வருமா சொல்லுங்க:)).. ஆனா அடுத்தவங்க நம்மளவிட சூப்பராச் செய்யும்போது சோகம் வராமல் இருக்குமோ என்ன சொல்லுங்க?:)).. ஹா..ஹா..ஹா...இதை நம்பிடாதீங்கோ பிளீஸ்ஸ்:)) நாமதான் எல்லாத்தையும் டக்குப் பக்கென வெளிப்படையாச் சொல்லிடுவமே:).. மனதில் எதையுமே புதைச்சு வச்சிட்டுப் பேசும் பழக்கமே இல்லை.. சரி அதை விடுங்க:))..

“நாகபாம்பு படமெடுக்குதென, நாக்குழிப்புழுவும் படமெடுக்க வெளிக்கிட்டதாம்ம்”:))) ...... அப்பூடி ஆச்சு என் நிலைமை:))

சோகத்துக்கு காரணம் என்னவெனத் தெரிஞ்சு கொள்ள ஆசையா இருப்பீங்க தானே:)... இதோ பாருங்க..  இத்தனை வகை அகர் அகர் தானுங்கோ:) காரணம்:).

என் சோகத்தின் காரணம் நம்பர் வன்:).
இது மகி செய்த தேங்காய்ப்பால் கடல்பாசி:).

நானும் செய்யலாமே என முடிவெடுத்து, அனைத்தையும் ஆயத்தப் படுத்திப்போட்டுத்தான், மகியின் குறிப்பைப் படிச்சேன்ன்.. 8 மணி நேரம், கடல்பாசியை ஊறவிடுங்க என இருந்துது... ஆனா இதுக்கு முன் செய்த ஜலீலாக்கா, ஆசியா ஆருமே ஊறவிடச் சொல்லல்ல அதனால....

சரி எங்கிட்டயேவா என நினைச்சுக்கொண்டே எடுத்தேன் கடல்பாசியை, வெயிட் பண்ணிச் செய்ய மனம் கேட்காதெனக்கு, நினைச்சால் உடனே செய்து முடிக்கோணும், அப்படி ஒரு கெட்ட பழக்கம் என்னில இருக்கு:)....

காந்தித் தாத்தா என்ன சொன்னார்?:: என்ன சொன்னார்.... “செய் அல்லது செத்துமடி” எனச் சொன்னார்... சின்ன வயதில் இருந்தே அது மனதில பதிஞ்சிட்டுது...
சரி என் கடல்பாசியை எடுத்தேன்ன்... இது கனடாவில சைனீஷ் கடையில வாங்கினது, ஒரு எழுத்தும் புரியுதில்ல, .. படம் பார்த்து, சரி.. இதுதான் கடல்பாசி என முடிவு பண்ணி வாங்கினேன்..

எட்டு மணி நேரத்துக்கு எங்கின போவேன் நான்:), அதனால மைக்குறோ வேவில வச்சு நன்கு அவிச்சேன் .. அதுவும் குளுகுளு என வந்துது... சரியாகிட்டுது என நினைச்சு அடுப்பில போட்டால்ல்ல்.. அவியுது அவியுது ஒண்டரை மணித்தியாலத்துக்கும் மேல ஹாஸ் ல அவிச்சும் கரையவே இல்லை... சரி இதுக்கு மேல வாணாம் என இறக்கினேன்.. இப்பூடி வந்துது...
பிரிஜ்ஜில் வைத்தேன்... ஆனா கட்டியாகவில்லை, சுவை பறவாயில்லை... பிரமிக்குமளவுக்கு ஒன்றுமில்லை. அடுத்த நாள் எடுத்து வெட்டிப்பார்த்தேன்.. இப்பூடி ஆச்சு.. முழுமையாகக் கரைந்திருக்கவில்லை...
அதுக்குள் இந்திய சுகந்திர தினம் வந்துது... அப்போதான் அடுத்த சோகம்..:))

சோகம் நம்பர் ரூ:)
இது ஜலீலாக்கா மீண்டும் செய்து போட்டா...

அதே நேரம் நிகழ்ந்த அடுத்த சோகம்...

சோகம் நம்பர் த்ரீ:)
இது ஆசியாவுடையது...

சரி இதெல்லாம் தாங்கக் கூடிய சோகம் தான்:) என நினைச்சுக்கொண்டிருக்க... எனக்கொரு மெயில் வந்துது... அப்பூடியே பொயிங்கிப் போயிட்டேன்ன்ன்:).. பூஸ் இந்தாங்க இது உங்களுக்கு..:)) என்று ஒரு வசனம் வேற இருந்துது:)...

சோகம் நம்பர் ஃபோர்:)
இது அஞ்சுவுடையது...
இத்தனை சோகத்தையும் சுமந்து கொண்டு நெஞ்செல்லாம் அடைக்க... நான் இனி இருந்துதான் என்னத்தை சாதிக்கப் போகிறேன்ன்ன்ன்:)... “செய் அல்லது செத்து மடி”:) இதில முதலாவது சரி வரல்ல:)... அப்போ இரண்டாவது.. “செத்துமடி” யையாவது கடைப்பிடிப்போமே என எண்ணி:)... உசிரைக் கையில பிடிச்சுக் கொண்டு:).. தேம்ஸ்க்குப் போனேன்ன்... :) பிளாஸ் பக்கில எல்லாமே ஓடிச்சுது...

அடிக்கடி நான் சொல்லுவேனே குதிக்கிறேன்ன்.. குதிக்கிறேன் என.. அது இன்று நிறைவடையப்போகுது:).... நாளைக்கு வலையுலகம் எங்கும் ஒரு கூட்டம் நடக்கும்:) பின்பு .. ஒரு பூனைப்படம் போட்டு அஞ்சலி நடக்கும்:) அடுத்த நாளே மறந்திடுவினம்:)..

நாளைக்கும் காத்து வீசும்...
நாளைக்கும் பூ மலரும் - ஆனால்
நான் இருக்க மாட்டேன்ன்...:)

எண்டெல்லாம் எண்ணிக் கொண்டே, கண்ணைப் பிங் கலர் டிஷூவால துடைச்சபடி:).. ... தண்ணியில வலது காலை:) எடுத்து வச்சேனா:)...

ஒரு குரல்... “பூஸ் ஓடிவாங்க”.. “இது உங்க பங்கு” என ஒலிச்சுது:)..
டக்கென ஆர்வக் கோளாறாகி:) ஆர் கூப்பிட்டவை என பார்க்கும் ஆவலில்.. “மாத்தி ஓசிச்சேன்”:) சரி எதுக்கு கூப்பிட்டாங்க என முதல்ல பார்ப்பம்.. தேம்ஸ் இங்கினதானே இருக்கும், பிறகும் குதிக்கலாம் என வந்தேன்:).... அடுத்த சோகம் ... கொசு மயில்ல வந்திருந்துது:)..

இது சோகம் நம்பர் ஃபைஃவ்:)
கீரி எனும் என் சமையல் கிரிஜா அனுப்பியிருந்தா:)

இதையும் பார்த்ததும்.. எனக்குள் இருந்த மிருகம்.. வெளில வந்துது...:))..  

அதிரா பொறுத்தது போதும் பொயிங்கி எழு”:).. என ஒரு உற்சாகக் குரல் கொடுத்துது:))..
ஓடிப்போய் ரேடியோவைப் போட்டேன்ன்(சந்தோசம் வந்தால் டக்கெனப் பாட்டைப் பலமாப் போட்டுக் கேட்பது வழமைதானே:)) அது பிபிசில எனக்காகவே சிட்டுவேஷன் சோங்:) சொறி சிட்டு:) வேஷன்:) சோங் போய்ச்சுது:)....

உன்னால் முடியும் டம்பி டம்பிஈஈஈ...:))..

உடனே ஓடிப்போய் மீண்டும் தூக்கினேன்....... கடல் பாசியைத்தான்:).. எங்கிட்டயேவா?:) இம்முறை முதலில் ஊறப்போட்டேன்ன்.. கிட்டத்தட்ட 24 மணித்தியாலங்கள் ஊறவிட்டேன்ன்ன்.. கரையல்ல.. 20 நிமிடம் மைக்குறோ வேவ்ல வச்சேன்.. அப்பவும் கரையல்ல... சரி போனால் போகட்டும்.. பூஸே.... எனப் பாடிக்கொண்டே பத்திரமாச் செய்தேன்...

முந்தியதை விட பறவாயில்லை... ஆனாலும் சோகம் சோகம்தானுங்கோ:))

ஊசி இணைப்பூ:)
வாழும் வரை போஓஓஓராஆஆடூஊஊஊஊஊ.. வழி உண்டு என்றே பாடூஊஊஊஊ:)..
========================================================
புள்ளிகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் கோலங்கள் ஆகின்றன, எண்ணங்கள் பூர்த்தி அடையும்போது அதற்கு நிம்மதி எனப் பெயர் வருகின்றது, நமக்கு எது தேவையோ, அதைப் பெற முயற்சி செய்வோம், இல்லையேல் விட்டுவிடத் தயாராவோம், ஏனெனில் நமக்குத் தேவை  “நிம்மதி” ........கவியரசு வைரமுத்து..
========================================================

Tuesday 11 September 2012

“நான் அவரிட்டைப்(அவரிடம்) போறேன்”



எனக்கு அப்பொழுது ஆறு வயசு, நிஜமாத்தான்:). அப்பா வேலை பார்த்த ஊரில் வீடு கட்டிக் குடிபுகுதல் செய்தோம். அது கிட்டத்தட்ட ஒரு திருமண வைபவம்போல நடாத்தப்பட்டது.

ஊரிலிருந்து உறவினர்கள் முதல் நாளே வந்தார்கள். எம்மிடம் வந்திறங்கியது இரவு ரெயினில், அவர்கள் எம் வீட்டுக்கு வந்தபோது சாமம் 12 மணி தாண்டிவிட்டது. எனக்கு இப்பவும் நினைவிருக்கு, வரப்போகிறார்கள் என, நான் நித்திரை கொள்ளாமல் விழித்திருந்தது. பின்பு கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தார்கள். ஒரு கொம்பாட்மெண்ட் முழுவதும், கிட்டத்தட்ட தாமே இருந்து வந்ததாகக் கூறினர்... எனக்கோ சந்தோசம் எனில் சொல்லி வேலையில்லை.

அங்காங்கு, ஒரு தலையணையில் 4,5 பேர் வட்டமாகத் தலை வைத்துப் படுத்திருந்ததும் இப்பவும் கண்ணில தெரியுது:). குடிபுகுதல் அன்று, முழுப்பாவாடை - சட்டை போட்டுக் கொண்டு கோயிலுக்குப் போய் வீட்டுப்படங்கள் எடுத்து வந்ததும், பின்பு கிச்சினில் நின்று, சித்தியாட்களும் மாமியின் மகள்மாரும், ஐஸ் போட்டுப் போட்டு யூஸ் கரைச்சுத் தரத்தர, நான் ட்ரேயிலே வைத்து மிகவும் பத்திரமாக கொண்டுபோய் வந்திருந்தோருக்குக் கொடுத்ததும் நினைவிருக்கு. ஆனா அன்றைய சாப்பாடு நினைவுக்கு வருகுதில்லை.

சரி, தலைப்பிலே என்னவோ சொல்லிவிட்டு “பொயிண்ட்டுக்கு” வராமல் ஏன் சுத்திக் கொண்டிருக்கிறா அதிரா:) எனக் கேட்பது காதில விழுகுது. எடுத்த எடுப்பிலேயே பொயிண்ட்டுக்கு வந்தால் படிக்கும் உங்களுக்கு ஹிக் இருக்காது, கொஞ்சம் பூசி மெழுகி கடைசியா தலைப்புக்கான பொயிண்ட்டுக்கு வந்தால்தான் ஒரு ஹிக் இருக்கும், சில சினிமாப் பார்க்கும்போது, கதிரையின் நுனிவரை நாம் வந்தபின்பே விஷயத்தை அவிழ்த்து விடுவினம்... அப்படித்தான் இதையும் “மாத்தி ஓசிக்கோணும்”:).... ஆனா மாத்தி ஓசிக்கிறேன் எனச் சொல்லிக்கொண்டு, சின்னப்பாம்புக்கு பெரிய பொல்லெடுத்து அடிக்கிறேன் பார், என மாத்தி ஓசிக்கப்பூடா சொல்லிட்டேன்ன்:).

நல்ல விஷயம் நடக்க அல்லது நன்மைக்கு மட்டுமே மாத்தி ஓசிக்கோணும்.  ச்சோஓஓ.. நல்லவை நடக்கோணும் என நினைக்கும்போது மட்டும் மாத்தி ஓசியுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:)). என்னைப்போல:)) ஆவ்வ்வ்வ்வ் ஏன் எல்லோரும் முறைக்கிறீங்க?:)..

ஆஆஆஆ இன்னும் நான் பொயிண்ட்டுக்கு வரேல்லையோ.. சரி அதிக நேரம் அலட்டாமல் பொயிண்டுக்கு வந்திடோணும், இல்லையெனில் படிப்போர் தூங்கிடுவினம் என அம்மம்மா சொல்லியிருக்கிறா.

சரி எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈஈ:), ஓ குடிபுகுதல் அன்று அனைத்தும் இனிதே முடிந்தது. அடுத்த நாள் தான், அப்பாவோடு வேர்க் பண்ணிய ஒபீஸ் ஆட்கள் வந்தார்கள். ஒரு 25/30 பேர் இருக்கும்.

அப்போ வந்தோரில், ஆண்களை வெளியே போடப்பட்டிருந்த கதிரைகளிலும், பெண்களை உள்ளே போடப்பட்ட பாய்களில் என நினைக்கிறேன், அமர வைத்தாயிற்று.

வந்தவர்களில், ஒரு ஜோடி, காதலித்து, அந்த மாதம்தான் திருமணமான புதுத் தம்பதியினர். அப்போ கணவர் வெளியே, மனைவி உள்ளே இருந்தாயிற்றெல்லோ. மனைவிக்கோ உள்ளே இருக்கப் பிடிக்கவில்லை:), தானும் சேர்ந்து கணவரோடு வெளியே போய் இருக்கத்தான் ஆசை.

விடுங்கோ, நான் அவரிட்டைப் போறேன்:)
இருங்கோ இப்ப என்ன அவசரம்:)
அப்போ, வந்தமர்ந்த 5 நிமிடங்களில், அவ சொன்னா “நான் அவரிட்டைப் போறேன்” என கை ஊன்றி எழும்ப, அவவோடு வந்த ஏனையோர், இருங்கோ இருங்கோ போகலாம் எனத் தோளில் பிடித்து அமத்தினார்கள். அவ இருப்பா, மீண்டும் 10 நிமிடத்தில்... “நான் அவரிட்டைப் போறேன்” என எழும்ப எத்தனிப்பா, மீண்டும் ஏனையோர் இருங்கோ போகலாம் என அமத்துவார்கள்.

ஹா...ஹா...ஹா.. இப்பூடி போகும் வரை பலதடவைகள் நடந்து, கடைசியில், அது ஒரு ஹேம்போல:) அவவைப் போகவே விடாமல், எல்லோரும் ஒன்றாகவே எழுந்து போனார்கள்.

இதன் பின் பலநாட்களுக்கு, அம்மா இக்கதையை, அப்பாவிடம் சொல்லிச் சொல்லிச் சிரித்தது, எனக்கு நன்கு மனதில் பதிந்துவிட்டது.
சரி இதெல்லாம் ஒரு பதிவோ என நீங்கள் பொல்லெடுத்துக் கலைக்கு முன், “நானும் அவரிட்டைப் போறேன்ன்ன்”.. பூஸ் எஸ்கேப்ப்ப்ப்ப்:)).

ஊசி இணைப்பூ:)
இம்முறை ஜாடியில் பூத்த பூஊஊஊ இணைப்பூஊஊஊ:))

குட்டி இணைப்பூ:)


==============================================
 “உருவம் கண்டு பழகாதே, உள்ளம் கண்டு பழகு..
பருவம் கண்டு பழகாதே, பண்பு கண்டு பழகு..
முகம் கண்டு பழகாதே, அகம் கண்டு பழகு..
வாழ்க்கையில் நீ வெற்றி பெறுவாய்!!”
........ இதனை வெற்றிகரமாக சுட்டுக்கொண்டு வந்தவர்:).. 
புலாலியூர் பூஸானந்தா:).....
==============================================

Wednesday 5 September 2012

நான் ஒரு கொலை செய்யோணும்:)


ணவருக்குத் தெரியாமல்..
பிள்ளைகளுக்குப் புரியாமல்..
போலீசில் மாட்டாமல்...’
கொலை ஒன்று செய்யோணும்..

து கொலைதான்!!!
ஆனா உருவமில்லாதது..
எப்பவுமே கண்ணுக்குத் தெரியாது..
ஆனா அப்பப்ப எட்டிப்பார்க்கும்..

து ஆருக்காகவும் அல்ல..
எனக்காக  நான் செய்யப்போகும்
கொலை - ஏனெனில்
என் உயிர் நண்பி!!!

கொஞ்சம் தொலைவில் இருப்பவ..
அதிரா என்றால் அவவுக்கு உயிர்..
அன்பென்றால் அப்படியொரு அன்பு..
அக்கறை எனில் அதை,
அவவிடமே கற்றுக்கொண்டேன்ன்..

வவின் அறிவுத் திறமை பார்த்து
நான் வியந்த தருணங்கள் பல..
அவ என்னோடு, மனம் திறந்து
பாசம் காட்டிக் கதைச்சால்..நான்
பத்து நாள் உறக்கமின்றித் தவிப்பேன்..

திலுமே குறைந்தவ அல்ல
ஆனாலும், அவவிடம் ஒரு குறை
கோபம் வந்தால் - தான்
என்ன கதைக்கிறேன் என்பது
அவவுக்கே புரியாது!!

கோபம் அடங்கியதும்
கேட்டால் சொல்கிறா
 “நான் கோபிக்கவில்லை
என்னுள் உறங்கிக்கொண்டிருக்கும் 
மிருகம் தான், விழித்துத் திட்டியது
என்னை உனக்குத் தெரியாதா” என...

==================== இடைவேளை==================
நீயா ஏசியது:) என் அன்பே...  நீயா ஏசியது...:))... 
அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஊ:)) என்னைக் கரெக்ட்டாப் புரிஞ்சு:) அப்பப்ப சிட்டுவேஷன் சோங் போடுவது இந்த பிபிசி வானலை உறவுகள் மட்டும்தேன்ன்ன்:))
================கவிதை:) தொடர்கிறது===============

னக்கோ பயம், கோபம் அதிகமாகி
இப்படி நிதானமிழந்து,
கொலை வரை போய்விட்டால்???..
என் நண்பியைக் கொலைகாரியாக
விடமாட்டேன்ன், அதுக்கு முன்
நான் ஆகிறேன்  “கொலையாளியாக”!!!

னக்கு என் நண்பி வேணும்
அந்த மிருகம் வேண்டவே வேண்டாம்
அது "buy one get one free" போல
கூடவே வருது நண்பியோடு!!!

தனால் நான் ஒரு 
கொலை செய்யோணும்”
அந்த மிருகத்தைக்
கொல்லோணும்!!!..
                ....... இப்படிக்கு கவிஞர் பூஸானந்தா:)

ஊசிக்குறிப்பு:
இதுக்கு “லேபல்” கவிதை என்றுதான்:))... போடுவேன்:)) அதைப் பார்த்திட்டு கவிஞர்கள் ஆரும் அடிக்க வரப்பூடா:)))... இது சாதாரண கவிதை அல்ல
அதையும் தாண்டிப்.. புனிதமானது!... புனிதமானது!... அதுதாங்க “பூஸ் கவிதை”:).

ஊசி இணைப்பூஊ:):
படிச்சதில் பிடிச்சது....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு பெண் தன் அழுத்தமான பொறுமையினால் 
ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம், 
அடங்காப்பிடாரித்தனத்தாலே, அதை அழித்து 
வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டி ஏற்படும்.. 
எங்கட கண்ணதாசன்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@