“கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்..
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்:)”
வாறீங்களோ வோக் போகலாம்?:)
அது மேலே கரெக்ட்டா எனக்கு சிட்டுவேஷன் சோங் போகுது பாருங்கோ:))..பிபிசியில கர்ர்ர்ர்:)).. அதூஊஊ உங்களில் பாதிப்பேரை ஆவது ஞானி ஆக்கலாம் எனும் முயற்சியில ஆச்சிரம் ஆரம்பிச்சேன்ன், கொரோவான தற்காலிக சேவை நிறுத்தமாகிப்போச்சு:))..
சரி போனால்போகுது, அதிரா ஞானி மட்டுமில்லை ஒரு
“பயங்கர” செஃப்:) ஆக்கும் என்பதைக் காட்டி, உங்களை ஒரு சமையல் வல்லுனராக ஆக்க நினைக்கிறேன்.. அதுக்கு எனக்கு அலர்ஜி, என்னிடம் ஈஸ்ட் இல்லை, கிச்சின் தருகிறார்கள் இல்லை:) எனச் சாட்டுக்கள் வேறு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆனாலும்
அம்முலு சமைச்சுக் காட்டிப்போட்டாவாக்கும்:))..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொரோனா நேரத்தில மாஸ்க்குடன் பேசுவது எவ்ளோ கஸ்டம் தெரியுமோ.. அதனால ஸ்ரெயிட்டா விசயத்துக்கு வந்திடுறேன்.. இது என் சாத வடகப் பூமரமாக்கும் அவ்வ்வ்வ்வ்வ்:))
வடக மலரைப் பார்த்து அதிரா சொன்னதூஊஊஊஊ...
பூவைத் தொடாதீங்கோ:))
இரவே அரிசியைச் சாதமாக்கி எடுத்து வச்சுப்போட்டு, காலையில் அதனுள் உப்பும் பெருங்காயத் தூளும் சேர்த்து கூழாக அரைத்துப்போட்டு, ஒரு பொலித்தீன் பாக்கில் போட்டு, இப்பூடிப் பற்றன் போட்டு எடுத்தேன்..[ஜேகே ஐயா சொன்னார் முறுக்கு வடாமும் செய்யுங்கோ என, அதிலிருந்து பிறந்ததுதான் இந்தப் பற்றன்ஸ் எல்லாம்:))]
இதில் சிவப்பாக இருப்பது, கலருக்கு பீற்றூட் சேர்த்தேன் கலர் போதவில்லை, அதனால கொஞ்சம் மிளகாய்த்தூள் சேர்த்தேன்..
இது யும்மா, பூஸ் உம் மீனும் செய்தேன்
ஆனா காய்ந்ததும் உடைஞ்சு போச்ச்ச்:))
ஆஆஆ கலகல எனக் காய்ஞ்சு காய்ச்சு போச்சு:))
இது பொரிச்சது, வாயில அப்படியே....
சீஸ் போல்ஸ் சிப்ஸ் போல கரையுது...
இது பேப்பிள் அதிரா:)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸இடைவேளை🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இடை வேளையில் அதிராவின் பாசிப்பருப்பு இட்டலி சாப்பிடலாம் வாங்கோ..
ஒரு கப் உளுந்துக்கு மூன்று கப் பாசிப்பருப்பு/பயற்றம்பருப்பு.. இதுதான் அளவு,. ஆனா என்னிடம் பாசிப்பருப்பு இல்லாமையால முளுப்பயறில் 2 1/2 கப் போட்டேன்... என்னா சுவை தெரியுமோ.. வெந்தயம், உப்பு, அரைப்பது ஊறுவது எல்லாமே நோர்மல் இட்டலி மெதேட்தான்.. எனக்கென்னமோ அரிசி சேர்ப்பதெனில் பிடிப்பதில்லை[சோறு சாப்பிடுவதுபோலாகுமே என], அதனாலேயே இப்படி ஏதும் செய்கிறேன்..
இதில் ஒரு விசயம், நாங்கள் இட்டலி, தோசை எனில் நிறைய வெங்காயம் செத்தல் மிளகாய், கறிவேப்பிலை இப்படித் தாளிச்சுக் கொட்டியே செய்வோம்.. தாளிக்காமல் செய்வதில்லை. ஆனா நான் இப்போ தாளிப்பதை மறந்திருந்தேன்.. என் நண்பி, லண்டனில் இருக்கிறா என் பள்ளிக்காத் தோழி எனச் சொல்லியிருக்கிறேன் தானே, நாங்கள் இப்பவும் நல்ல குடும்ப நண்பர்கள்.
அப்போ போன கிழமை, நண்பி கேட்டா, அதிரா ரவ்வைத் தோசை ரெசிப்பி சொல்லுங்கோ, நீண்ட காலம் தோசை சுடவில்லை, அதனால எல்லாம் மறந்துவிட்டேன் என. நான் ரெசிப்பி சொன்னேன், ஆனா இந்த தாளிச்சுக் கொட்டுவதை சொல்ல மறந்துவிட்டேன்.
பின்னர் அவ செய்துபோட்டு, நன்றாக வந்தது, ஆனா எங்கட வீட்டிலும் பெரிதாக ஆருக்கும் பிடிப்பதில்லை தோசை என்றா.. பேசிக்கொண்டிருக்கும்போது, அவவின் கணவர் வந்து டக்கெனப் ஃபோனை வாங்கி, “அதிரா, தோசை எனில் அம்மா ஊரில் சுட்டுத்தந்ததுதான் தோசை தெரியுமோ?”.. என்றார் கர்ர்ர்ர்:)), “ஏன் நண்பி செய்தது நல்லாயில்லையோ?” என்றேன்... “தோசை நன்றாக இருந்தது, ஆனா அம்மா எனில் நிறையத் தாளிச்சுக் கொட்டிச் செய்வா, அதுதான் சுவை, சும்மாவே சாப்பிடலாம் அதை” என்றார்.. ஹா ஹா ஹா அப்போதான் எனக்கும் பொறித்தட்டியது ஆஹா தாளிப்பதைச் சொல்ல மறந்துவிட்டேனே என..:)..
அதனால இன்று தாளிச்சு அசத்தி விட்டேனே:))
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் நானும் வாடினேன்.....
நல்ல வெய்யிலைக் கண்டபோதெல்லாம் வடகம் செய்தேன்:))...
ஹா ஹா ஹா நம்ப மாட்டீங்கள், கொஞ்சம் எல்லாம் எனக்குச் செய்ய வராது, நிறையவே செய்து பெரிய ரின்களில் அடைச்சு வச்சிருக்கிறேன், ஆட்களுக்கு கொடுக்க ஆசை, ஆனா இங்கு வெள்ளைகளுக்கெனில் பொரிச்சுத்தான் கொடுக்கோணும்.. இப்போ கொரோனா என்பதால எதுவும் முடியாது.
ஆங் இது அதிராஸ் பப்படம்:))... உளுந்தை அரைச்சுப் பவுடராக்கி, நன்கு அரித்தெடுத்து, உப்பும் பெருங்காயமும் கொஞ்சம் பேக்கிங் சோடாவும் சேர்த்தேன்... நான் அடிச்சுக் குழைச்சது போதாது, அதனால கடும் சொஃப்ட்டாக வரவில்லை, இருப்பினும் ஹார்ட் ஆகவும் இல்லை. இதுவும் 2 தரமாகச் செய்து எடுத்து வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா. இதில் கடசிப்படத்தில் இருப்பது, எண்ணெய் எடுத்து பொரிச்சு, பின்னர் எண்ணெயை கொட்ட வேண்டும், இது மைக்குரோவேவ் இல் வச்சு எடுத்தேன்.. பொயிங்கி இருக்குது பாருங்கோ.
அவசரத்துக்கு பப்படத்தை மை.வேவ் இல் நான் வைப்பேனாக்கும்:))
இது எண்ணெயில் பொரிச்சது...
இடது பக்கம் இருக்கும் பூ பொயிங்கி வந்திருக்குது
இது அடுத்து வர இருப்பது...:)
ஊசிக்குறிப்பு
இம்முறை ஊசிக்குறிப்பு சற்று மாறுதலாக:)
எங்கள் வீட்டின் எதிர்ப்புறமாக, வீடுகளுக்கு நடுவே படிகள் இறங்குகின்றன.. அதால இறங்கி கொஞ்சம் நடந்தால், நேரே ஆற்றங்கரைதான்.. இது படியால இறங்க முன் மேலிருந்து எடுத்த படம்...
இது இறங்கும்போது மலைச் சரிவில பாருங்கோ பூத்திருக்குது அழகாக, இப்படி நிறைய மலர்கள் விதம் விதமாக காட்டுக்குள் இருப்பதைப்போல படர்ந்திருக்கும்..
இப்போதான் எங்களுக்கு எல்லா இடமும் ரோஜா தன் மொட்டை விரிச்சிருக்குது, இவற்றைப் பாருங்கோ ஆற்றங்கரையில எவ்ளோ அழகாக சிவப்பு அண்ட் பிங்கி ரோஜாக்கள்..
அம்முலு பாருங்கோ, இந்த இன ஃபியூசியா இப்படி வளர்வினம்
பென்னாம் பெரிதாக...
ஆஆஆ பாருங்கோ.., மீ ஒரு அப்பாவியை அஞ்சு இடிக்கிறா கர்ர்ர்ர்ர்:)) வீடியோக் கேட்டால் புரியுமாக்கும்:))
இது அதிரா ஓவியமாக்கும்.. சே சே டங்கு ஸ்லிப்பாகுதே.. அஜந்தா ஓவியம்போல டிசைன் பண்ணியிருக்கும் கற்கள் ஆற்றங்கரையில்...
ஊசி இணைப்பு
🌼🌼🌼🌼🌼🌼🙏🌼🌼🌼🌼🌼🌼