நல்வரவு_()_


Thursday 21 February 2019

பருத்தித்துறை வடை

லங்கையில், வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறை எனும் ஊர்தான், இந்த வடை சுடுவதில் பேமஸ், அதனாலேயே இதுக்கு ஊர்ப் பெயர் வந்தது. பலகார வகைகளில் ஊர்ப்பெயரைத்தாங்கியிருக்கும் பெருமை இந்த வடைக்கே உரியதென நினைக்கிறேன்.

Wednesday 13 February 2019

உனைப்போல நானும்.. ஒரு பிள்ளை தானே:)

குட்டிக்குட்டியாக சில சம்பவங்கள், அதனை எப்படித் தொகுத்துச் சொல்வதென்று தெரியவில்லை, இருப்பினும் சொல்லாமல் விட மாட்டேன்:).
singgggg in the skyyyyy:))

Sunday 10 February 2019

அந்நாளை நினைக்கையிலே....

லங்கையிலே கடுமையாக சண்டை நடந்துகொண்டே இருந்தது, அப்போது திடீரென சமாதான ஒப்பந்தமாகி, யுத்த நிறுத்தம் என அறிவிக்கப் பட்டு, தமிழர்களுக்காக இந்தியாவிலிருந்து இந்திய ராணுவம் “அமைதிப்படை” யாக இலங்கைக்கு வருகை தந்தார்கள். அப்பொழுது பெரிதாக கதை அடிபட்டது,, தமிழர்களுக்காகவே இந்திய ராணுவம் வருகின்றது என.

அமைதிப்படை வருகிறது என்றதும், இனி என்ன நமக்கு சுகந்திரமாக இருக்க முடியும், இலங்கை ராணுவத்தின் தொல்லை இருக்காது என ஒரே சந்தோசம், ஊரெல்லாம் மக்கள் கொஞ்சம் பயமின்றி நடமாடினர்.

எங்கள் வீட்டு மெயின் ரோட்டால்தான், அமைதிப்படையினர் வருகை தந்து, அப்படியே சென்று பிரதான இடத்தை அடைவார்கள் என அறிவிக்கப் பட்டது.

அப்போ ஒருநாள் பின்னேரம், நம்மவர்கள் எனவுன்ஸ் பண்ணிக்கொண்டு போனார்கள் “நாளை காலை அமைதிப்படையினர், இவ்வழியே வந்து Town ஐச் சென்றடைந்து அங்கு முகாம் அமைப்பார்கள், அவர்களை வரவேற்க எல்லோரும் தயாராகுங்கள், அவர்களுக்கு உங்கள் விருப்பப்படி குளிர்பானங்கள், உணவுகளைக் கொடுத்து வரவேற்றுக் கொள்ளுங்கள்”.. என அறிவித்துக் கொண்டு போனார்கள்.

அன்று என்ன கிழமை என நினைவில்லை, வீட்டில் நான் மட்டுமே நின்றேன் அப்பா அம்மாவுடன். அடுத்தநாள் வரப்போகிறார்கள், இந்தியா என்றால் தமிழர்கள்[அப்படித்தான் சின்னனில் நினைத்திருந்தேன்:)].. அப்போ நம்மவர்கள்.. நமக்காக வருகிறார்கள் என எனக்கு ஒரே குதூகலம், ஏதோ நம் உறவினர் வரப்போகிறார்கள் என்பதுபோல எனக்குள் ஃபீல் பண்ணினேன்.. அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை[எனக்குத்தான் அரசியல் தெரியாதே:)].

அடுத்த நாள் பொழுது விடிந்தது, அப்பா வேர்க்குப் போக ரெடியானார், நம்மிடம் சொன்னார்,   “நீங்கள் வீட்டில் இருக்காமல் கேற்றில் நில்லுங்கோ, ஏனெனில் வாகனத்தில்தானே வருவார்கள், அப்போ உடனே கடந்து போய் விடுவார்கள், எனவே மிஸ் பண்ணாமல் ரோட்டில் போய் நின்று பாருங்கோ” எனச் சொல்லி விட்டு அப்பா ஒபிஸ் போய் விட்டார்.

அப்போ நான் மெதுவா கேற்றுக்குப் போய் ரோட்டில் எட்டிப் பார்த்தேன், என்ன ஆச்சரியம் காலை 9 மணிக்கே, ரோட்டின் இரு மருங்கிலும் மக்கள் வெள்ளம், அதாவது உள் ரோட்டில் இருப்போரெல்லாம் வந்து விட்டார்கள், பெரும்பாலானோர், கையிலே கொடிகளோடு நின்றார்கள். அக்கொடிகளைப் பார்த்ததும் எனக்கும் ஆசை வந்துவிட்டது.

உடனே நானும் அவசர அவசரமாக ரோட்டை எட்டிப் பார்ப்பதும் செய்வதுமாக, பெரிய கொடி தயார் பண்ணி, ஒரு தடியிலே ஒட்டி, அதில் வெள்ளை எழுத்தால் “.......” எழுதி, ஒட்டி எடுத்துக் கொண்டேன்.... இராணுவத்தை வரவேற்க.

அக்கொடியைக் கையில் பிடித்தபடி கேற்றுக்கு ஓடிப்போய்ப் பார்ப்பதும், வீட்டுக்குள் வருவதுமாக திரிந்தேன்:), அம்மா அவசர அவசரமாக சமையலை முடித்துக் கொண்டிருந்தா.  “வந்து விடப்போகிறார்கள் அம்மா, பின்பு சமைக்கலாம் இப்போ கேற்றுக்கு வாங்கோ” எனக் கரச்சல் படுத்திக் கொண்டே ஓடிக்கொண்டிருந்தேன், எனக்கோ ஒரே டென்ஷன்:).. டக்கெனக் கடந்து போய் விடுவார்களோ என:).

ஒருமாதிரி, மதியம் 1-2 மணியளவில், தூரத்திலே வாகனங்கள் வருவது தெரிந்தது, அதைப் பார்த்ததும் அதிக சந்தோசத்தில், என் மேனி எல்லாம் சிலிர்த்து புல்லச்சரிதுபோலாகி, அம்மாவையும் கூட்டி வந்து நம் கேற்றில் நின்றோம்.

வாகங்கள் தெரிகிறதே தவிர, வருவதாக இல்லை, காரணம், ரோட்டோர மக்களும், கடைக்காரரும், ராணுவத்தினருக்கு இளநி, குளிர்பானங்கள் கொடுத்து கைகுலுக்கி வரவேற்றுக் கொண்டே இருந்தமையால்... வாகனம் ஓடவில்லை, ஊர்ந்த வண்ணம் வந்து கொண்டிருந்தது.

பொறுமை இழந்து தவித்துக் கொண்டிருந்தேன் நான், கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்தின் பின்னரே முதலாவது ட்ரக் நம்மிடம் ஊர்ந்தபடி வந்தது, அப்படியே தொடராக ராணுவ வாகங்கள்.. பின்னாலே ஓபின்னாக இருந்தது ட்ரக், அதிலே ராணுவத்தினர் நின்ற வண்ணம், மக்களுக்கு எட்டி எட்டிக் கை குலுக்கியும், டாட்டா காட்டியும், சிலர் கும்பிட்டபடியும் நின்று கொண்டிருந்தனர்.

இதனால், நடக்கும் வேகத்தை விடக் குறைவாகவே வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. அப்படியே தொடராக வந்த வண்ணமே இருந்தது, சில வாகனத்தில் செம்மறி ஆடுகளும் ஏற்றி வந்தார்கள்.

நானும் கொடியையும் ஆட்டி ஆட்டிக், கையையும் காட்டிக் கொண்டே நின்றேன். இப்படி நகர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு ட்ரக்கிலே இருந்த, ஒரு ராணுவ வீரர், பெரீய உயர்ந்த ட்ரக், அதிலிருந்து தலைகீழாகத் தொங்குவதுபோல, கீழே எட்டி எட்டி ரோட்டோரம் நிற்கும் சிலருக்கு, கை குலுக்கிய வண்ணம் வந்துகொண்டிருந்தார். நம் பக்கத்து வீட்டுக்காரர்களின் கேட்டுக்கு வாகனம் வந்து விட்டது, அங்கு எல்லோரும் ஆண்பிள்ளைகள், அவர்களுக்கும் எட்டிக் கை கொடுத்தார், அடுத்து நம் கேற்றுக்கு வாகனம் நகர்ந்து கொண்டிருக்குது, அவர் அப்படியே தலைகீழாக எட்டி கையை என்னைப்பார்த்து நீட்டியபடி... நம் கேற்றுக்கு வாகனம் வந்து விட்டது.

அம்மா கேற்றுடன் சாய்தபடி நின்றிருந்தா, நான் அம்மாவுக்கு முன்னால்  ஒரு அடி தள்ளி நின்றேன். என்னதான் தமிழர்கள் என மனம் பூரித்தாலும் ஆமி உடையில் பார்க்கும்போது ஒரு பயம்தானே.. அப்போ அந்த ஆமிக்காரர் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே கையை நீட்டிக் கொண்டே இருந்தார், ட்ரக் மெதுவாக நம் கேட்டுக்கு வந்து விட்டது, டாட்டா காட்டுவதென்றால் ஓகே, ஆனா அப்போ , ஊரிலே கை குலுக்குவதென்பது பழக்கமில்லாத ஒன்றுதானே.  நான் என் இரு கைகளையும்  வயிற்றிலே கட்டிக்கொண்டு நிற்கிறேன், நான் குட்டியாக இருந்தமையால், இன்னும் தலைகீழாக கையை நீட்டி எனக்கு கை கொடுக்க எத்தனிக்கிறார், ட்றைவரோ கிட்டத்தட்ட ட்ரக்கை நிறுத்தியதுபோல பிரேக் போட்டு விட்டார்ர், சில்லு உருளவில்லை, நானோ வயிற்றிலே கட்டிய என் கையை எடுக்கவில்லை, சிரித்துக் கொண்டே நின்றேன்.

அம்மா என்னிடம், கையைக் குடு எனச் சொல்லாமல் நிற்க, எனக்கு அம்மா சொல்லாமல் செய்ய மனம் வரவில்லை, மிகவும் சங்கடமான ஒரு கட்டம் அது, மனம் துடித்தது ஆனாலும் ஏதோ ஒன்று தடுத்தது. அம்மாவை ஒரு கணம் திரும்பிப் பார்த்தேன், அம்மா சிரித்துக் கொண்டு நின்றாவே தவிர, கை கொடு எனச் சொல்லவில்லை. கிட்டத்தட்ட ஒரு 30 விநாடிகள் அந்த ஆமிக்காரரும் கையை நீட்டிக் கொண்டிருந்தார், நானோ கை கொடுக்கவில்லை, பின்னர் மெதுவாக ட்ரக் நகர்ந்தது, ஆனா எனக்கோ மிக மிகக் கவலையாகி விட்டது. யாரும் ஏதாவது விரும்பிச் செய்தால், இப்படிப் பேசாமல் இருந்து பழக்கமில்லை எனக்கு, முன்பின் தெரியாதவர் எனினும், சிரிச்சால் சிரிப்பேன், கை காட்டினால் காட்டி விடுவேன்.. இப்படியே அப்போ தொடங்கி இன்றுவரை பழக்கமாகி விட்டேன், அப்படிப்பட்ட எனக்கு, இது அம்மாவின் அனுமதி இல்லாமல் கை கொடுக்க மனம் வரவில்லை, ஆனா நெஞ்சுக்குள் ஏதோ வேதனையாகவே இருந்தது. முடிந்தபின் வருந்தி என்ன பலன்?:).. “நடந்தவை யாவும்.. நடந்தவைதானே”:).

இப்படியே ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக தொடராக வாகனங்கள் போய் முடிந்து விட்டது. வீட்டுக்குள் வந்து விட்டோம், ஆனால், அவ்ளோ தூரம் எட்டி, எனக்கு கை நீட்டினாரே, நான் பதிலுக்கு குலுக்காமல் விட்டு விட்டேனே என மனம் மிகவும் வேதனைப்பட்டது.

ஈவினிங் அப்பா வந்துவிட்டார், அப்பாவிடம் நடந்ததைச் சொன்னேன், அப்பா சொன்னார் “அதனாலென்ன நீயும் கை குடுத்திருக்கலாமே” என. இப்படி அப்பா சொன்னதும், என் மனக்கவலை இன்னும் அதிகமாகிவிட்டது, அன்று நித்திரைகூட ஒழுங்காகக் கொள்ள முடியாமல் மிகவும் கவலைப்பட்டேன்.

பின்னர் நாட்கள் நகர்ந்தது, ஆனா என் கவலையோ அப்படியே இருந்தது, திடீரென நிலைமை மாறியது, இந்திய இராணுவத்தினர் தமிழருக்கு எதிரானார்கள்,  இலங்கை ராணுவத்தை விடவும் மோசமாக நடந்து கொண்டார்கள். பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமானது. ஒருநாள் என் வகுப்புத் தோழியின் வீடு இந்திய ராணுவத்தினரால் முற்றிலும் எரிக்கப்பட்டு, உடுத்த உடை தவிர வேறேதும் இல்லா நிலைமை அவவுக்கு வந்தது.

நம் வகுப்பினரும் ஆசிரியர்களும் நம்மாலான உதவிகள் செய்தோம் அவவுக்கு, நோட்ஸ் எல்லாம் எழுதிக் கொடுத்தோம், இப்படி நிலைமை மோசமானதும், எனக்கும் மனதில் வெறுப்பு ஏற்பட்டது, அப்போதுதான் நான், “அன்று கை கொடுக்காமல் விட்டதும் நல்லதே, இன்று இப்படி மாறிவிட்டார்களே” என என் மனதுக்கு சொல்லி, என்னை நானே சமாதானப் படுத்தி, என் கவலையிலிருந்து விடுபட்டேன்:).
=============_()============

ஒரு மாறுதலுக்காக, இம்முறை ஒரு ஸ்பெஷல் இணைப்பு... என்னிடம் இருக்கும் தொகுப்பில் சில....

ஊசிக் குறிப்பு
========================================================
ஒரு ஹப்பி நியூஸ் சொல்லுவேன் எனச் சொன்னேன் எல்லோ:), எங்களுக்கு வன் வீக் ஸ்கூல் ஹொலிடே.. ஸ்பிறிங் பிரேக்:)).. அஞ்சு ஏரியாவில் இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா
========================================================

Thursday 7 February 2019

மோர் மிளகாய் - அதிரா Style:)💧

ஜம்ப் பண்ணிட வேண்டியதுதேன்ன்:)
டந்துவிட்ட summer இல், நல்ல வெயில் , அதனால 2,3 தடவைகள் மோர் மிளகாய் செய்து காயப்போட்டு எடுத்தேன். கடையில் வாங்கினால் படு உப்பாக இருக்கு, இப்படி செய்யும்போது அளவோடு உப்பு சேர்த்தால் போதும்.  

ஒரு கிலோ அளவில் மிளகாய் வாங்கி வந்து,  நன்கு கழுவி, தண்ணி இல்லாமல் துடைத்து எடுத்துக் கொண்டேன். பின்னர், அதன் வண்டிப்பகுதியில் ஒரு அகலமான கீறல் , கத்தி இருபக்கமும் வருவதுபோல போட வேண்டும்[படத்தில் காட்டியிருப்பதைப்போல], வால் பகுதியை குட்டியாக வெட்டி விட்டிடலாம் அல்லது வாலிலும் இரண்டாக சிறிய பிளவு பண்ணி விட்டிடோணும்.. அப்போதானே தயிர் உள்ளே போய் ஊறும்.


இப்பொழுது, தயிருக்குக் கொஞ்சமாகத் தண்ணி விட்டு[மோர் போல அல்ல, கொஞ்சம் தளர்வான தயிர்போல கரைத்தால் போதும்], கறிக்குப் போடும் அளவுபோல, உப்புப் போட்டுக் கரைத்தெடுத்து மிளகாயில் ஊற்றி, நன்கு, அனைத்திலும் படுமளவு குலுக்கி விட்டு...

இப்படி ஒரு போத்தலில் போட்டு...

மூடி, வெயில் படும் இடமாக வைத்து விட வேண்டும், டெய்லி மூடியைத் திறந்துவிட்டு, நன்கு குலுக்கித், திரும்ப மூடி வைத்து விட வேண்டும்... இப்படி 3 அல்லது 4 நாட்கள் ஊறவிட்டபின்பு... 

காலையில் ஒரு தட்டில் மிளகாயை மட்டும் கவனமாக எடுத்துப் பரவி வெய்யிலில் வைக்க வேண்டும், மோரை அப்படியே போத்திலோடு வைக்கோணும், நைட் திரும்ப மிளகாயை போத்தலில் கொட்டிக் குலுக்கி மூடி விட வேண்டும்..

நல்ல வெயில் எனில் 2,3 நாட்களில் மோர் முழுவதும் மிளகாயில் ஒட்டி, வற்றி காய்ந்துவிடும், பின்பு போத்தலில் போடாமல், வெயிலிலேயே நன்கு முறுகும்வரை காய விட்டு எடுக்க வேண்டும். 

எவ்ளோ அழகாக முறுகிக் காய்ந்திருக்குது பாருங்கோ...

இதனைப் பொரிக்கும்போது கமகம என நெய் வாசனை மூக்கைத் துளைக்கும்... புட்டுடன் சாப்பிட்டால்ல் ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஅ என்னா சுசி:) தெரியுமோ?:). 

மிளகாய் வாங்கும்போது கேரளாவில் இருந்துவரும் உறைப்புக் குறைந்த பெரிய மிளகாய்தான் நான் வாங்குவேன், காரமான குட்டி மிளகாய் எனில், கொஞ்சம் அதிக நாட்கள் ஊற விடோணும், இல்லை எனில் படு காரமாக இருக்கும் பொரியல்.
⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪
ஊசி இணைப்பு:)

ஊசிக் குறிப்பு:-
⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪
 “ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்தை விடக் குறைந்ததல்ல,
 ஒரு தீக்குச்சியின் மரணம்”
 இவ்வரிய தத்துவம்போன்ற பொன்மொழியை, உங்களுக்காக வழங்கியிருப்பவர்.. உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் பாத்திரமான:) 
புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்.
⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪